Ketheeswaran Kanapathipillai recently commented.
Kandiah Arunthavabalan
ஜே.வி.பி தோழர்களை நினைவு கூரும் அனுர விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்கள் நினைவுகூரத் தடை விதிப்பதேன்?
இம்மாதம் 13 ஆந் திகதி ஜனாதிபதி அனுரகுமார தலைமையில் மறைந்த ஜே.வி.உறுப்பினர்களை நினைவுகூரும் கார்த்திகை வீரர் நாள் வெகு சிறப்பாக நினைவுகூரப்பட்டது. அதேபோல ஒவ்வொரு ஆண்டும் மே 19 ஆந்திகதி தேசிய போர் வீரர் நாள் அரச நிகழ்வாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முன்னது பயங்கரவாதிகள் எனக்கூறிக் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து பயங்கரவாதிகள் என ஒரு காலத்தில் சொல்லப்பட்டவர்களால் நினைவுகூரப்படுகிறது. மற்றது பயங்கரவாதிகள் எனச் சொல்லி அவர்களைக் கொன்ற படைவீரர்களின் வெற்றிவிழாவாக அரசாங்கத்தினால் கொண்டாடப்படுகிறது. அந்த விழாவையும் பயங்கரவாதியாக சொல்லப்பட்டவர்களின் தற்போதைய தலைவரே தலைமை தாங்குகிறார். இந்த இரண்டு தரப்புகளையும் பயங்கரவாதிகளாகச் சித்தரித்துக் கொன்றவர்கள் இலங்கை அரச படையினர். அந்த படைகளின் தற்போதைய தலைவர் முன்னர் பயங்கரவாதிகளாகச் சொல்லப்பட்டவர். அதேபோல இரண்டிலும் பயங்கரவாதிகள் என ஒருதரப்பால் சொல்லப்பட்டவர்கள் மறுதரப்பால் விடுதலைப்போராளிகள் எனக் கருதப்படுபவர்கள். பயங்கரவாதிகளாகக் கருதப்பட்ட ஒரு தரப்பினர் இன்று நாட்டுப் பற்றாளர்களாக நாட்டின் ஜனாதிபதி தலைமையில் நினைவுகூரப்படுகிறார்கள். ஆனால் இன்னொரு தரப்பினரை அவர்களது மக்கள் நினைவுகூருவதற்கு அதே ஜனாதிபதி தடைவிதிக்கிறார். இந்த முரண்பாடுகளுக்கு பின்னாலுள்ள அரசியலை தமிழ்மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும்.( முழுமையான கட்டுரை~>தினக்குரல்-ஞாயிறு,22/11)
See less

Leave a Reply
You must be logged in to post a comment.