திமுக தலைவர் திருமிகு ஸ்டாலின் அவர்களை எச்சரித்து பேராசிரியர் மருதமுத்து அவர்கள் எழுதியுள்ள சமூக வலைதள கட்டுரை…..

பேராசிரியர் மருதமுத்து எழுதுகிறார்…

___________________________________________________

6/11/26

———-

நண்பர்களே,

இது ஸ்டாலின் அவர்களுக்கு நான் எழுதும் எச்சரிக்கை

மடல் ஆகும்.

பெருமதிப்பிற்குரிய அன்பர் ஸ்டாலின் அவர்களே,

துரை முருகன் மட்டுமல்ல நீங்கள் உடனடியாகக் களையெடுக்க வேண்டிய துரோகி.

முக்கியமாக இன்னொரு நபரும் இருக்கிறார்.

இவர் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கும் இன்னொரு ஆபத்தான விபீடணன் ஆவார்.

இவர் காசுக்காக எதையும் செய்வார், சமயம் வரும்போது காட்டியும் கொடுப்பார்.

இது குறித்து உங்கள் பார்வைக்கு ஓர் அற்புதமான தமிழ்ப் பாடலை சமர்ப்பிக்கிறேன்.

பிரமிக்க வைக்கும் இனிய, எளிய தமிழில் நம் போற்றுதற்குரிய ஔவை பிராட்டியார் பாடுகிறார்—

“உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா!

உடன்பிறந்தே கொல்லும் வியாதி!—உடன்பிறவா

மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்!

அம்மருந்து போல்வாரும் உண்டு!”

ஸ்டாலின் அவர்களே,

இனி தொடரவிருக்கும் காலகட்டம் திமுகவின் விதியையே தீர்மானிக்கக் கூடியதாகும்.

கட்சிக்கு “வாழ்வா, சாவா,” என்பதை முடிவு செய்யவிருக்கும் கால கட்டம் இது.

இந்நிலையில் கலைஞரின் கருத்தியல், அரசியல் வாரிசான தாங்கள் “கடவுள் துணை” என்றிருந்துவிட முடியாது.

மாறாக,

****வள்ளுவர் வாக்கின் படி, “பெரியார் துணை” (ஈ.வெ.ரா பெரியார் துணை) என்று பகுத்தறிவுப் பாதையில் சமூக நீதிக் கொள்கையைக் கடைப்பிடிப்பதே நம் தமிழ்நாட்டிற்கு நன்மை தரும்.

****நீங்கள் வளர்த்தெடுத்த திராவிட மாடலையும் அதுவே அழியாமல் பாதுகாக்கும்.****

“அரியவற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரைப் பேணித் தமராக் கொளல்!”

இவ்வாறு பெரியார் வழியில் நடக்கத் தவறினால் அடுத்து தலை தூக்கிப் படமெடுத்து வரும் இன்னொரு “துரை முருகன்” உங்கள் கட்சியை அடியோடு மாற்றியமைக்கும் திட்டத்தை விரைவில் நிறைவேற்றி விடுவார்.

அவர் தான் கலாநிதி மாறன். அதாவது 26,000 கோடி சொத்துக்கு அதிபரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன்.

இன்னும் சில நாட்களில் இவரது ஒரே மகளும், அனைத்து சொத்துகளுக்கும் ஒரே வாரிசுமான காவ்யா மாறன் ஒரு ஐயங்காரை (லதா ரஜினிகாந்தின் தம்பி மகனை) மணக்கவுள்ளார்.

இவர்களது திருமணம் விளம்பர வெளிச்சம் ஏதுமின்றி கிரேக்க நாட்டில் நடைபெறவுள்ளது. எனவே வைதிக முறைப்படி சடங்குகள் செய்யப்படுவது ரகசியமாகவே இருக்கப் போகிறது என்பது நிச்சயம்.

ஆனால், ஏதோ ஒரு வகையில் அது நடந்தே தீரும் என்பது உறுதி. ஒருவேளை உண்மை கசிந்துவிட்டால் கூட ஸ்டாலின் அவர்களே, நீங்கள் இனி என்ன செய்ய முடியும்?

ஏற்கெனவே உங்கள் தலைமையில் நடந்தேறியுள்ள துரைமுருகனின் குடும்பத் திருமணத்தில் கட்சியின் பொதுச் செயலாளரே பார்ப்பனப் புரோகிதர்கள் மூலம் வேத மந்திரங்களை சமஸ்கிருதத்தில் ஓத வைத்துக் கதையை முடித்து விட்டாரே?

ஒருவேளை இந்த விஷயத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் அதே சினிமாத் துறையைச் சேர்ந்த அவரது மாப்பிள்ளை அனிருத் முதலியோர் கூட்டாகச் சேர்ந்து ஏதாவது முற்போக்கு சினிமாப்படம் காட்டினால் அதை இனி யாரேனும் நம்ப முடியுமா?

திருமணம் நடக்கவுள்ள கிரேக்க நாட்டில் ரகசியமாக எதுவும் நடந்தேறலாம். அதன் பின் சென்னையில் அம்பானி மற்றும் துரை முருகன்/கண்ணன் ரவி பாணியில் ஒரு ஆபாசமான ஆடம்பர வரவேற்பு விழா நடைபெறவுள்ளது.

****இதில் கலந்து கொள்ளுமாறு அரசியலில் மோடி முதல், கார்ப்பரேட் உலகில் அம்பானி, அதானி உள்ளிட்ட பல அனைத்திந்திய ஆதிக்க சக்திகளுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.****

இதன் பொருள் என்ன?

எளிய முறையில் சுயமரியாதைத் திருமணம் நடத்த மறுத்து அனைத்திந்திய பார்ப்பன பனியாக் கொள்ளையர்களைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு இப்படி ஆட்டம் போட்டால் பிறகு திராவிடமாவது, வெங்காயமாவது?

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே,

உங்களைக் கடுமையாக எச்சரிக்கிறேன்—

உங்கள் கண் முன்னாலேயே கருப்பு,சிவப்பைக் காவியாக மாற்றிவருகிறார்கள்!!

உடனே உரிய நடவடிக்கைகளை எடுங்கள்!

கட்சியில் களையெடுங்கள்!

தவறினால், பிறகு “திராவிடம்” என்ற சொல் பெயருக்கு மட்டும் தான் உங்கள் கட்சியில் இருக்கும்!

“ஜன கண மன” பாடலில் வருவது போல அது வெறும் நிலப்பரப்பை மட்டுமே குறிப்பதாகி விடும்!!!

அன்புடன், மருதமுத்து

About nakkeran 330 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply