உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 220 வருட கடூழியச் சிறை

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்ததுடன், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பேருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், 15 பேர் குற்றவாளிகள் என நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 பேர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நிரந்தர “ட்ரயல் அட் பார்” அமர்வு வழங்கிய தீர்ப்பின்படி, 15 குற்றவாளிகளுக்கும் தலா 220 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்களுக்கு சதி செய்தமை, அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. 23,270-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், 24 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் 8,900 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About nakkeran 280 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply