தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கும் பெரியார் மீதுதான் அன்றைய காலம் தொட்டு இன்றுவரை அவதூறுகளும் தொடர்கின்றன. எந்த தலைவரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் கிடையாது. விமர்சனங்கள் உரையாடல்களை நிகழ்த்தி எது சரி என்று இருதரப்பையும் யோசிக்க வைக்கும்.

அது வெறும் அவதூறுகளாக மாறும் போது, ஆளுமைகளை அவதூறுகளால் சிதைக்கும் போக்கு ஆபத்தானதாக மாறுகிறது. திராவிட இயக்கங்கள் அவரது கருத்துகளை முழுமையாக விளக்கத் தவறுவதால்தான் இத்தகைய அவதூறுகள் பரவுகின்றன என்று ஒரு கருத்து உண்டு. பெரியாரின் கருத்துகளை நேரடியாகப் படிக்காமல், அவதூறுகளை நம்புவது பிரச்னைகளை உருவாக்குகிறது. பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளை புரிந்து கொள்ளும் முயற்சிகள் தேவை.

தமிழ்நாடு பல்வேறு தனித்தன்மைகளுடன் பொருளாதார வளர்ச்சியிலும், சிந்தனை வளர்ச்சியிலும் முன்னோக்கிய பயணத்தில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் இன்றைய முன்னேற்றத்திற்கு பல்வேறு ஆளுமைகள் தங்களது பங்களிப்பை வரலாற்றில் செய்திருக்கிறார்கள்.

அத்தகைய ஆளுமைகளில் தமிழ்நாடு உச்சி முகர்ந்து இன்றளவும் கொண்டாடி வரும் முக்கிய ஆளுமை தந்தை பெரியார். எந்த அளவிற்கு பெரியார் கொண்டாடப்படுகிறாரோ அதே நேரத்தில் காலம் தோறும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். அதாவது பெரியாரைப் போல் போற்றப்படுபவரும் இல்லை, தூற்றப்படுபவரும் இல்லை.

ஏனெனில், பெரியார் முன்வைத்த கருத்துகள் பலவும் மிகவும் காரத்தன்மை வாய்ந்தவை. எத்தகைய நெளிவு சுழிவுகளும் இல்லாமல் நேரடியாக அழுத்தம் திருத்தமாக முன்வைக்கப்பட்டவை. அதனால், பலருக்கும் அதை உள்வாங்கிக் கொள்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, மூட நம்பிக்கை எதிர்ப்பு என பல்வேறு கருத்துகளை ஓங்கி முழங்கியவர், செயல்படுத்திக் காட்டியவர் பெரியார்.

“தமிழைக் கொச்சைப்படுத்தினார்”, “திருக்குறளை மலம்” என்று விமர்சித்தார், “பெண்ணுரிமையை மதிக்காதவர்”, “தமிழின் உணர்வை மழுங்கடித்தவர்” என்று பல்வேறு விமர்சனங்கள் எழுவதும், அதற்கு திராவிட இயக்க சிந்தனையாளர்கள் விளக்கங்கள் கொடுப்பதும் தொடர்கதையாகிவிட்டது. தற்போது பெரியார் மீதான விமர்சனத்தை முன் வைப்பது நாம் தமிழர் இயக்கத்தினரும் அக்கட்சியின் தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமானும்.

எல்லா காலத்திலும் விமர்சனங்கள் இருந்தாலும் தற்போது மிகவும் மோசமான அவதூறுகளையும் பெரியார் சந்திக்க வேண்டியிருக்கிறது. குத்தூசி குருசாமி, பாரதிதாசன், வ.உ.சி. என பெரியார் காலத்தில் பெரியாரோடு பயணித்து அவர் மீது மதிப்பு கொண்டவர்களை தங்களுக்கானவர்களாகக் காட்டிக்கொண்டு பெரியார் மீது அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.

பெரியார் இருந்தவரை காமராசர், அண்ணா, கலைஞர் என யாரும் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து விமர்சித்ததில்லை. உரிமையோடு விமர்சனங்களை வைத்தார்கள். அவதூறுகளாக அது மாறவில்லை. ஆனால், தற்போது நிலைமை சற்றே மாறியிருக்கிறது.

இப்படியாக பெரியார் நினைவு நாளான இன்று பெரியார் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து பெரியாரிய ஆய்வாளர்கள் பல்வேறு விதமான விளக்கங்களை வழங்குகிறார்கள். அவர்கள் முதலில் சொல்வது பெரியாரை அவருடைய எழுத்துகளில் இருந்து புரிந்துகொள்ளுங்கள் என்பதுதான்.

மகாத்மா காந்தி, பெரியார், அண்ணா, டாக்டர் அம்பேத்கர் போன்றோரெல்லாம் காலம் முழுக்க எழுதியும் பேசியும் இருந்திருக்கிறார்கள்.

அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவர்களை நேரடியாகப் படிப்பதுதான் சரியானது. ஆனால், அப்படி நடப்பதில்லை என்கிறார் பெரியாரிய ஆளுமை பசு கவுதமன்.

1967: ஓர் பார்வை | காமராசர் மட்டும் அந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால்… உடைக்க முடியாத வியூகத்தை அமைத்த அண்ணா!!

“பெரியாரை மேற்கோள்களால் அல்ல; நேரடியான எழுத்துகளால் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

விமர்சனங்கள் வைக்கப்படுவது பெரியாருக்கு புதியது இல்லை. பெரியார் பொதுவாழ்வை தொடங்கிய காலத்திலிருந்தே எதிர்வினைகள் இருந்துகொண்டேதான் இருந்தன. இந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டித்தான் பெரியார் நிலைத்து நின்றுகொண்டிருக்கிறார்.

பெரியாரைப் புரிந்துகொள்ளும் அளவிற்கான படிப்பினையை முறையாக யாரும் செய்யவில்லை. அது ஒரு பெரிய குறை. பெரியாரை பெரியாரின் எழுத்துகளில் இருந்து நேரடியாகப் படிப்பதில் இருந்துதான் புரிந்துகொள்ள முடியும். பெரியாருக்கான வியாக்கியானங்களில் இருந்து புரிந்துகொள்ள முயற்சிப்பதால்தான் இவ்வளவு பிரச்னைகள் வருகின்றன” என்கிறார்.

காலம் பெரும்பாலும் மாறிக்கொண்டே இருக்கிறது. மன்னர்கள் காலத்தில் போருக்கு சென்று எதிரிகளை வீழ்த்துவது ‘அறம்’ என்றால், தற்காலத்தில் போர் என்பதே தடுக்கப்பட வேண்டியது.

போருக்கான நடைமுறைகள்கூட காலம் முழுவதும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. ஒரு நாட்டில் சட்டப்படி சரியான ஒரு விஷயம் இன்னொரு நாட்டில் சட்டப்படி தவறானது. ஒருகாலத்தில் அனைவருக்கும் சரியெனப் பட்ட ஒரு விஷயம், தற்காலத்தில் தவறாகப்படுகிறது.

அப்படியிருக்கும்போது, ஒரு தலைவரின் கருத்து எந்த காலக்கட்டத்தில், எப்படிப்பட்ட சூழ்நிலையில் முன்வைக்கப்பட்டது என்பதை ஆராய வேண்டியது அவசியம் என்கிறார் பசு கவுதமன்.

“பெரியார் எதையுமே எதற்கு சொன்னார், ஏன் சொன்னார், எந்த காலக்கட்டத்தில் சொன்னார் என்பதையெல்லாம் யாரும் யோசிப்பதில்லை. முழுமையாக எதையும் படிக்காமல், முழுமையாக எதையும் உள்வாங்காமல், முன்னையும் விட்டுவிட்டு பின்னையும் விட்டுவிட்டு நடுவே இருப்பதைப் பிடித்துக் கொள்கிறார்கள்.” (7ஆம் பக்கம் பார்க்க..)தமிழ்நாடு பல்வேறு தனித்தன்மைகளுடன் பொருளாதார வளர்ச்சியிலும், சிந்தனை வளர்ச்சியிலும் முன்னோக்கிய பயணத்தில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் இன்றைய முன்னேற்றத்திற்கு பல்வேறு ஆளுமைகள் தங்களது பங்களிப்பை வரலாற்றில் செய்திருக்கிறார்கள்.

அத்தகைய ஆளுமைகளில் தமிழ்நாடு உச்சி முகர்ந்து இன்றளவும் கொண்டாடி வரும் முக்கிய ஆளுமை தந்தை பெரியார். எந்த அளவிற்கு பெரியார் கொண்டாடப்படுகிறாரோ அதே நேரத்தில் காலம் தோறும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். அதாவது பெரியாரைப் போல் போற்றப்படுபவரும் இல்லை, தூற்றப்படுபவரும் இல்லை.

ஏனெனில், பெரியார் முன்வைத்த கருத்துகள் பலவும் மிகவும் காரத்தன்மை வாய்ந்தவை. எத்தகைய நெளிவு சுழிவுகளும் இல்லாமல் நேரடியாக அழுத்தம் திருத்தமாக முன்வைக்கப்பட்டவை. அதனால், பலருக்கும் அதை உள்வாங்கிக் கொள்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, மூட நம்பிக்கை எதிர்ப்பு என பல்வேறு கருத்துகளை ஓங்கி முழங்கியவர், செயல்படுத்திக் காட்டியவர் பெரியார்.

“தமிழைக் கொச்சைப்படுத்தினார்”, “திருக்குறளை மலம்” என்று விமர்சித்தார், “பெண்ணுரிமையை மதிக்காதவர்”, “தமிழின் உணர்வை மழுங்கடித்தவர்” என்று பல்வேறு விமர்சனங்கள் எழுவதும், அதற்கு திராவிட இயக்க சிந்தனையாளர்கள் விளக்கங்கள் கொடுப்பதும் தொடர்கதையாகிவிட்டது. தற்போது பெரியார் மீதான விமர்சனத்தை முன் வைப்பது நாம் தமிழர் இயக்கத்தினரும் அக்கட்சியின் தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமானும்.

எல்லா காலத்திலும் விமர்சனங்கள் இருந்தாலும் தற்போது மிகவும் மோசமான அவதூறுகளையும் பெரியார் சந்திக்க வேண்டியிருக்கிறது. குத்தூசி குருசாமி, பாரதிதாசன், வ.உ.சி. என பெரியார் காலத்தில் பெரியாரோடு பயணித்து அவர் மீது மதிப்பு கொண்டவர்களை தங்களுக்கானவர்களாகக் காட்டிக்கொண்டு பெரியார் மீது அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.

பெரியார் இருந்தவரை காமராசர், அண்ணா, கலைஞர் என யாரும் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து விமர்சித்ததில்லை. உரிமையோடு விமர்சனங்களை வைத்தார்கள். அவதூறுகளாக அது மாறவில்லை. ஆனால், தற்போது நிலைமை சற்றே மாறியிருக்கிறது.

இப்படியாக பெரியார் நினைவு நாளான இன்று பெரியார் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து பெரியாரிய ஆய்வாளர்கள் பல்வேறு விதமான விளக்கங்களை வழங்குகிறார்கள். அவர்கள் முதலில் சொல்வது, “பெரியாரை அவருடைய எழுத்துகளில் இருந்து புரிந்துகொள்ளுங்கள்” என்பதுதான்.

மகாத்மா காந்தி, பெரியார், அண்ணா, டாக்டர் அம்பேத்கர் போன்றோரெல்லாம் காலம் முழுக்க எழுதியும் பேசியும் இருந்திருக்கிறார்கள்.

அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவர்களை நேரடியாகப் படிப்பதுதான் சரியானது. ஆனால், அப்படி நடப்பதில்லை என்கிறார் பெரியாரிய ஆளுமை பசு கவுதமன். கொண்டேதான் இருக்கும்” என்றார்.

இப்படியாக பெரியார் நினைவு நாளான இன்று பெரியார் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து பெரியாரிய ஆய்வாளர்கள் பல்வேறு விதமான விளக்கங்களை வழங்குகிறார்கள். அவர்கள் முதலில் சொல்வது பெரியாரை அவருடைய எழுத்துகளில் இருந்து புரிந்துகொள்ளுங்கள் என்பதுதான். மகாத்மா காந்தி, பெரியார், அண்ணா, டாக்டர் அம்பேத்கர் போன்றோரெல்லாம் காலம் முழுக்க எழுதியும் பேசியும் இருந்திருக்கிறார்கள்.

அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவர்களை நேரடியாகப் படிப்பதுதான் சரியானது. ஆனால், அப்படி நடப்பதில்லை என்கிறார் பெரியாரிய ஆளுமை பசு கவுதமன்.

1967: ஓர் பார்வை | காமராசர் மட்டும் அந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால்… உடைக்க முடியாத வியூகத்தை அமைத்த அண்ணா!!

“பெரியாரை மேற்கோள்களால் அல்ல; நேரடியான எழுத்துகளால் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

விமர்சனங்கள் வைக்கப்படுவது பெரியாருக்கு புதியது இல்லை. பெரியார் பொதுவாழ்வை தொடங்கிய காலத்திலிருந்தே எதிர்வினைகள் இருந்துகொண்டேதான் இருந்தன. இந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டித்தான் பெரியார் நிலைத்து நின்றுகொண்டிருக்கிறார்.

பெரியாரைப் புரிந்துகொள்ளும் அளவிற்கான படிப்பினையை முறையாக யாரும் செய்யவில்லை. அது ஒரு பெரிய குறை. பெரியாரை பெரியாரின் எழுத்துகளில் இருந்து நேரடியாகப் படிப்பதில் இருந்துதான் புரிந்துகொள்ள முடியும். பெரியாருக்கான வியாக்கியானங்களில் இருந்து புரிந்துகொள்ள முயற்சிப்பதால்தான் இவ்வளவு பிரச்னைகள் வருகின்றன” என்கிறார்.

காலம் பெரும்பாலும் மாறிக்கொண்டே இருக்கிறது. மன்னர்கள் காலத்தில் போருக்கு சென்று எதிரிகளை வீழ்த்துவது ‘அறம்’ என்றால், தற்காலத்தில் போர் என்பதே தடுக்கப்பட வேண்டியது.

போருக்கான நடைமுறைகள்கூட காலம் முழுவதும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. ஒரு நாட்டில் சட்டப்படி சரியான ஒரு விஷயம் இன்னொரு நாட்டில் சட்டப்படி தவறானது. ஒருகாலத்தில் அனைவருக்கும் சரியெனப் பட்ட ஒரு விஷயம், தற்காலத்தில் தவறாகப்படுகிறது.

அப்படியிருக்கும்போது, ஒரு தலைவரின் கருத்து எந்த காலக்கட்டத்தில், எப்படிப்பட்ட சூழ்நிலையில் முன்வைக்கப்பட்டது என்பதை ஆராய வேண்டியது அவசியம் என்கிறார் பசு கவுதமன்.

“பெரியார் எதையுமே எதற்கு சொன்னார், ஏன் சொன்னார், எந்த காலக்கட்டத்தில் சொன்னார் என்பதையெல்லாம் யாரும் யோசிப்பதில்லை. முழுமையாக எதையும் படிக்காமல், முழுமையாக எதையும் உள்வாங்காமல், முன்னையும் விட்டுவிட்டு பின்னையும் விட்டுவிட்டு நடுவே இருப்பதைப் பிடித்துக் கொள்கிறார்கள்.” (7ஆம் பக்கம் பார்க்க..)

தான் தற்போது நடந்துக் கொண்டிருக்கிறது. பெண்ணியம் குறித்து அவர் பேசிய கருத்துக்களைப் புரிந்து கொள்ள சிரமமாக இருப்பதே வெறும் வார்த்தைகளை மட்டும் பார்ப்பது.

பெரியாரை பெரியாராகப் படிப்பதற்கு உண்டான பணிகளை திராவிட இயக்க பெரியாரிய அமைப்புகளே தீவிரமாகவும், செறிவாகவும் செய்யவில்லை. இப்பொழுது நிறைய பேர் பெரியாரை தேடுகிறார்கள், படிக்கிறார்கள். பெரியார் இயக்கங்களுக்கு வெளியே இருப்பவர்கள்தான் பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முழுமையாகக் கற்க நினைக்கிறார்கள். அவரது கருத்துகளை செயல்படுத்த நினைக்கிறார்கள்” என்றார்.

விமர்சனங்கள் எப்போதும் கொள்கை ரீதியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், பெரும் ஆளுமைகள் பற்றி ஒரு பக்கம்கூட படிக்காமல் அல்லது அரைகுறையாக படித்துவிட்டு, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒருவர்மீது எளிதாக விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.

அப்படித்தான் பெரியாருக்கும் நடந்துக் கொண்டிருக்கிறது. சில விஷயங்கள் எத்தனை புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் மூலமாக மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தாலும், அவதூறுகள் வேகமாகப் பரவுகின்றன.

பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் “அவர் அப்படித்தானே போல?” என்ற கேள்விகளையும் எழுப்புகின்றன. இதைத் தடுக்க வேண்டுமென்றால் மீண்டும் மீண்டும் பேச வேண்டிய தேவை இருக்கிறது.

சாதி ஒழிப்பு எப்படி தொடர்ந்து பேசப்பட வேண்டியதோ, பெண் விடுதலை மற்றும் பெண் சுதந்திரம் எப்படி தொடர்ந்து பேசப்பட வேண்டியதோ அப்படியே, தலைவர்கள் மேல் வைக்கப்படும் அவதூறுகள் குறித்தும் தொடர்ந்து பேசப்பட வேண்டியதன் தேவை இருக்கிறது. இதைத்தான் பெரியாரிய ஆய்வாளர் இக்லாஸ் உசேன் விளக்குகிறார்.

“பெரியார் மீதான விமர்சனங்கள் கருத்தியல் அடிப்படையில் அல்லாது கொள்கை சார்ந்து அல்லாது அவரின் இலக்கு சார்ந்து வைக்கப்படமாட்டார்கள். விமர்சனத்தை அவதூறுகளாகத்தான் கட்டமைத்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக எழுத்தாளர் ஜெயமோகனை சொல்லலாம். பெரியார் வைக்கம் வீரர் என்றோ அல்லது வைக்கத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்றோ சொல்ல முடியாது என்று அவதூறு பரப்பினார்.

அவர் கருத்துக்கு மறுப்பாகவும் அதனுடன் பல்வேறு ஆதாரங்களை ஒன்றுதிரட்டி ஆய்வாளர் பழ. அதியமான் ‘வைக்கம் போராட்டம்’ பற்றிக் கட்டுரையும் முக்கியமான ஆய்வுநூலையும் வெளியிட்டார். வைக்கத்தில் பெரியார் செய்த பணி என்னென்ன என்பதையும், வைக்கம் போராட்டத்தின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் பெரியாரின் கருத்தையும் பதிவு செய்தார்.

கிட்டத்தட்ட பெரியார் வைக்கம் வீரர் அல்ல; வைக்கம் போராட்டத்தின் தளபதியாகத் திகழ்ந்தார் என்று சொல்லும் அளவுக்கு அதியமான் அவர்கள் தகவல் தந்தார். அவதூறு சொன்ன ஜெயமோகன் மறுப்பு செய்ததோடு சரி; “பெரியார் பற்றி அவதூறாகச் சொல்லிவிட்டேன்” என்று ஒப்புக்கொள்ளவில்லை.

அது ஜெயமோகன் மட்டுமல்ல, பெரியாரை அவதூறாகப் பேசுபவர்கள் பெரும்பாலும் அறிவு நேர்மை அற்றவர்களாக தங்களை அடையாளப்படுத்துகிறார்கள்.

பெரியார் ஒரு கட்சியை நிர்வகித்து தேர்தலில் வாக்கு வாங்கி ஆட்சி செய்து, அந்த ஆட்சி நிர்வாகத்தில் ஒழுங்கின்மை — நிர்வாகம் சரியில்லை என்று சொல்லி அவரை விமர்சனம் செய்தால், அதை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் பெரியார் செய்தது சமூக சீர்திருத்தம். அந்த சீர்திருத்தத்தை எப்படி யாரைக் கொண்டு செய்ய முடியும் என்றுதான் அவரது அரசியல் இருந்தது. பெரியாரின் அரசியல் இரண்டு வகையில் செயல்படுகிறது. ஒன்று நேரடியாக சமூகத் தளத்தில் கருத்துருவாக்கத்தை மாற்றத்தை முன்னெடுப்பது. அதாவது, பிறவி இழிவாகத் தொடரும் அனைத்து இழிவுத்தன்மையையும் ஒழிப்பது.

அடுத்து ஆட்சியில் இருப்பவர்கள் மூலம் வகுப்புவாரி இடஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு கிடைக்கச் செய்வது. இதுதான் பெரியாரின் செயல்திட்டமாக இருந்தது.

1925இல் பெரியார் நீதிக்கட்சியை ஆதரித்த காரணம், பெரியாரின் சீர்திருத்தக் கருத்தை தன் கொள்கையாக அது ஏற்றுக்கொண்டது. அதனால் நீதிக்கட்சியை ஆதரித்தார்.

பின்னர் நீதிக்கட்சியின் தலைமைப் பதவிக்கு பெரியார் வந்த பிறகு, தேர்தல் அரசியலைவிட சமூகச் சீர்திருத்த அரசியலை முன்னெடுக்க நீதிக் கட்சியை 1944இல் திராவிடர் கழகமாக மாற்றினார்.

இடையில் ‘மதராஸ் மாகாண பிரதமர்’ பதவியை ஆங்கிலேய அரசு கொடுக்க முன் வந்தபோதுகூட அதை ஏற்றுக்கொள்ள மறுத்தவர் பெரியார். பிறகு தனது சீர்திருத்தக் கருத்துக்கு ஏற்ற வகையில் உதவும் அரசியல் நடவடிக்கைகளை எப்போதும் பெரியார் ஆதரித்தார். அதில் காமராஜரை பெரியார் ஆதரித்தார் என்று சொல்வதைவிட, காமராஜருக்கு பக்க பலமாகவே இருந்தார்.

காமராஜர் ஆட்சி காலத்தில்தான் பிராமணாள் கஃபே பெயர் ஒழிப்பு போராட்டம், அரசியல் சட்ட எரிப்பு போராட்டம், தேசியக் கொடி எரிப்பு போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்பு போன்ற சமூகச் சீர்திருத்தப் போராட்டங்களை முன்னெடுத்தது. இன்னொரு பக்கம் காமராஜர் ஆட்சியை ஆதரித்தது.

அதுவரையில்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்கத் திட்டம் வகுத்தது மற்றும் அரசு வேலை என்பது பார்ப்பனர்களுக்கு மட்டுமே இருந்ததை பாமரர்களுக்கும் கிடைக்க வழி செய்த வகையில் காமராஜர் ஆட்சியை பெரியார் கொண்டாடினார்.

பெரியாரின் சமூகப் பணியோடு ஆட்சியில் இருப்பவர்களிடம் ஒரு வேண்டுகோள் அல்லது ஒப்பந்தம் செய்துகொண்டுதான் இணைந்து செயல்படுவார். இது நீதிக்கட்சி தொடங்கி காமராஜர் ஆட்சி காலம் வரை அப்படித்தான் இருந்தது.

1967இல் திமுக ஆட்சிக்கு வந்த பின் “இந்த ஆட்சியை பெரியாருக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று அறிஞர் அண்ணா சொன்ன பிறகு, 1967 முதல் 1973ஆம் ஆண்டு பெரியார் மறையும் வரை பெரியாரின் கோரிக்கை என்பதற்கு பதில் பெரியார் சொல்வதை உத்தரவாக — கட்டளையாக அண்ணாவும் கலைஞரும் மாற்றினார்கள்.

ஆட்சி வந்துவிட்டது என்று போராட்டத்தையும் சீர்திருத்தத்தையும் பெரியார் என்றைக்கும் கைவிடவில்லை. தான் இறக்கப் போவதற்கு முன்புகூட சூத்திர இழிவு ஒழிப்பு போராட்டத்தை முன்னெடுத்தார். தேர்தல் அரசியல் வெற்றி என்பதோடு தனது பணி முடிந்துபோய்விடும் என்று கருதி இருந்தாரானால், பார்ப்பனியம் கால ஓட்டத்தில் பெரியாரையும் தனதாக்கிக் கொண்டிருக்கும்.

பெரியார் தனது அரசியலை ஒரு ‘கருவியாக’ — பார்ப்பன மேலாண்மையை ஒழிக்கும் கருவியாக வாழ்ந்து காட்டியுள்ளார். அது பார்ப்பனியத்தை தொடர்ந்து எதிர்த்துக்கொண்டேதான் இருக்கும்” என்றார்.

About nakkeran 224 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply