எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம் இந்தியாவுக்குத் தமிழரசு அறிவிப்பு

“அரசமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்யவேண்டும் என்று கேட்பதிலே சைக்கிள் கட்சியைத் தவிர நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்
தானே இருக்கின்றோம். பிறகு ஏன் இந்தியத் தரப்பினர் எங்களைப் பார்த்து ஒற்றுமையாக வாங்கோ ஒற்றுமையாக வாங்கோ என்கின்றனர். அதுவும் இதற்குச் சைக்கிள் கட்சி வராது என்று தெரிந்து கொண்டும் நாங்கள் ஒற்றுமையில்லைன்று அவர்கள் கதைக்க முடியாது.”- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று ஊடக சந்திப்பை நடத்திய போதே சி.வி.கே.சிவஞானம் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்
“ஈழத் தமிழர் விடயத்தில் சர்வதேசம் அதீத அக்கறை எடுக்க வேண்டும் என்று
சொன்னாலும் அதில் மிக முக்கியமான பணி இந்தியாவுக்கு உண்டு. இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஊடாக அந்தப் பொறுப்புக் கூட இந்தியாவுக்கு இருக்கின்றது.
ஆனால் பொதுவாகவே இந்தியத் தரப்பு ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்ப
சொல்லி வருகின்றது. அது என்னவென்றால் ஒற்றுமைப்பட வேண்டும் என்பது
தான். அண்மையில் கூட இலங்கைக்கான இந்தியத் தூதுவருடனான சந்திப்பின்
போது கூட நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்றுதான் அவர் சொல்லியிருக்கின்
றார்.

உண்மையில் நாங்கள் ஒருமித்துதான் இருக்கின்றோம். உதாரணத்துக்கு 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தானே இருக்கின்றோம். பிறகு ஏன் ஒற்றுமையாக வாருங்
கள் என்று இந்தியா சொல்கின்றது? ஆக நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம். அதைவிடுத்து விசுவாமித்திரருக்கு வரம் கொடுத்தது போல் கேட்கத்
தேவையில்லை.

நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தாலும் ஆக அந்தச் சைக்கிள் கட்சியினர்
தான் இதற்கு உடன்படவில்லை. அவர்கள் உடன்படாமல் இருக்கட்டும். உலகத்தில் எங்கும் எல்லோரும் முழுஒற்றுமை என்று கிடையாதே. அவர்களை விட்டால் நாங்கள் தமிழரசுக் கட்சிமட்டுமல்லாமல் ஏனைய எல்லாக் கட்சிகளும் ஒருமித்துத்தான் இருக்கின்றன.

ஆனபடியால் இந்தியா எங்களுடைய நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு செயலாற்ற வேண்டும். நாங்கள் 13ஆவதுதிருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் எனக் கேட்கின்றோம். ஆனாலும் அது எங்களுடைய தீர்வல்ல என்று சொல்லி
யும் இருக்கின்றோம். இந்த 13 ஆவது திருத்தம் எங்களுக்கான தீர்வல்ல என்
பதை இப்போதும் நாங்கள் சொல்லிக் கொள்கின்றோம்.

ஆனால் இப்போது இருக்கின்ற அதுவும் அரசமைப்பில் இருக்கும் 13 ஆவது
திருத்தத்தை அமுல் செய்ய வேண்டும் என்று கேட்பதிலே சைக்கிள் கட்சியைத்
தவிர நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தானே இருக்கின்றோம்.
பிறகு ஏன் இந்தியத் தரப்பினர் எங்களைப் பார்த்து ஒற்றுமையாக வாங்கோ
ஒற்றுமையாக வாங்கோ என்கின்றனர்.

அதுவும் இதற்குச் சைக்கிள் கட்சி வராது என்று தெரிந்து கொண்டும் நாங்கள் ஒற்றுமையில்லை என்று அவர்கள் கதைக்க முடியாது.

நாங்கள் இந்தியாவைத்தான் கூடுதலாக நம்பியிருக்கின்றோம். ஆகவே இதை
மாற்றம் செய்யக்கூடிய வலு சக்தி இந்தியாவுக்குத்தான் இருக்கின்றது. நாங்கள்
அதை நம்புகின்றோம். இந்தியா செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
இந்தியா செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.” – என்றார்

(காலைக்கதிர் – 04-09-2025)

About nakkeran 202 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply