இலங்கையின் கட்சி அரசியல் என்னும் சாபம்

78 Years of Demagoguery, Not Democracy

By Brigadier Ranjan de Silva – rpcdesilva@gmail.com

On the 4th of February every year, we raise the lion flag and speak of democracy. We speak of 78 years of “self-rule.” But honesty demands we ask: what kind of rule have we actually had? It was not democracy. Democracy is government for the common good, constrained by law, informed by reason, and accountable to truth.

What Sri Lanka has had for 78 years is demagoguery — government by manipulation, by party, and by passion.

Defining the Curse: The dictionary defines demagoguery as “political activity that seeks support by appealing to the desires and prejudices of ordinary people rather than by rational argument.” Its tools are simple: divide the people, promise the impossible, demonize the opponent, and govern for the next election, not the next generation. That is the political culture we inherited in 1948 and perfected since.

78 Years of Evidence: The record is not ambiguous. Policy by Pendulum – 1948–2024. Instead of a national development plan, we got a partisan wrecking ball. 1956: The “Sinhala Only Act” was passed not after linguistic study, but as an election mobilization tool. 1970-77: The SLFP nationalized private enterprise and imposed import controls. 1977: The UNP reversed course with an open economy overnight. 2005-2014: Mega infrastructure was built on Chinese loans with no feasibility transparency. 2015-2019: Those same projects were called “white elephants” and stalled. 2020-2021: The organic fertilizer ban was announced as a populist “green” policy, reversed 6 months later after it collapsed agriculture and food prices. The Colombo Port City, Hambantota Port, and the Central Expressway all followed the same pattern: started, stopped, rebranded. The country pays twice. The party takes credit once. Economics as Election Candy. Demagoguery is expensive. 1960s: Subsidized rice to win rural votes, leading to the 1971 food crisis. 2005-2014: Fuel subsidies and public sector hiring sprees that doubled the wage bill. 2019: Unfunded tax cuts that removed Rs. 500 billion in annual revenue with no offset. By April 2022, external debt hit $51 Billion and we defaulted for the first time. The party that cut taxes was not in power to manage the IMF program. The party that inherited it was blamed for the austerity. This is the cycle. Institutions captured. A democracy needs referees. We turned them into party cadres. The 17th Amendment 2001 created independent commissions. The 18th Amendment 2010 abolished them. The 19th 2015 restored them. The 20th Amendment (2020)gutted them again. Police transfers, university vice-chancellors, and state bank chairmen have all been decided by party headquarters, not merit.

When the institution serves the party, the citizen gets leftovers.

Identity over Ideas: From 1956 to 1983 to 2009 to 2022, our elections have been won on fear, not spreadsheets. “They will erase your language.” “They will sell the country.” “Only we can protect Buddhism/the minorities/the nation.” Rational debate on debt, productivity, or climate adaptation never wins a rally. Prejudice does. That is demagoguery by definition.

Party Interest subverted the National Interest. The core damage of 78 years of partisan politics is this: the nation became secondary to the party. Need power sector reform? Impossible, because our unions will strike. Need to cut 300,000 ghost employees? Impossible, because our voters will defect. Need a 20-year education and export plan? Impossible, because it won’t show results before the next election. So we borrowed. We patched. We lied. The result: a railway system that still runs on 1950s engines, hospitals without paracetamol in 2022, and a brain drain of 300,000+ skilled workers since the crisis. The parties rotated. The country declined.

The Opposition’s Original Sin and here, all parties share guilt equally. In opposition, the job is not to govern. It is to destroy. The UNP in the 60s called the SLFP “communist.” The SLFP in the 70s called the UNP “imperialist.” The JVP called both “traitors.” The SJB, SLPP, and NPP today use the same script with new logos. Every tax is “anti-people.” Every reform is “a sell-out.” Every crisis is proof the other side is evil and must be removed at any cost. Then they win. And implement 80% of what they opposed. Because demagoguery has no principles, only positions. 78 years of unmerciful, bad-faith criticism has not produced accountability. It has produced cynicism. The public now believes all politicians are the same — because for 78 years, they have behaved the same.

Breaking the Curse: Changing the party in power will not end this. We must change the incentives that reward demagoguery. Three reforms are non-negotiable: Bind future Parliaments to national policy. Pass 10-year frameworks for energy, education, and public debt with 2/3 majority protection. Infrastructure and fiscal rules should outlast one government, as they do in Chile and New Zealand. Depoliticize the state. Independent commissions for police, elections, public service, and bribery must have constitutional budgets and appointment panels that exclude MPs. No more 18th/20th Amendment style rollbacks. Demand better from voters We must stop rewarding the best slogan and start demanding the best spreadsheet. Town halls over rallies. Costings over promises. A 5-year plan over a 5-minute speech.

Conclusion

In 1948 we did not inherit democracy. We inherited an election. For 78 years we have used that election to choose our favourite demagogue. The prize has been debt, division, and decay. The curse of partisan politics will only end when citizens and leaders agree on one principle: Party second. Country first. Until then, February 4th will remain a ceremony, not a celebration.

——————————————————————————————————————–

இலங்கையின் கட்சி அரசியல் என்னும் சாபம்

78 ஆண்டுகள் — மக்களாட்சி அல்ல, மக்களை மயக்கும் அரசியல்

ஒவ்வோர் ஆண்டும் பெப்ரவரி 4 ஆம் திகதி நாம் சிங்கக் கொடியை ஏற்றி, மக்களாட்சியைப் பற்றிப் பேசுகிறோம். 78 ஆண்டுகால “சுயாட்சி” பற்றிப் பெருமை பேசுகிறோம். ஆனால், நேர்மையாக நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி ஒன்று இருக்கிறது: உண்மையில் இந்த 78 ஆண்டுகளில் நாம் எத்தகைய ஆட்சியை அனுபவித்திருக்கிறோம்?

அது உண்மையான மக்களாட்சி அல்ல.

மக்களாட்சி என்பது பொதுநலனை நோக்கமாகக் கொண்ட ஆட்சியாக இருக்க வேண்டும். அது சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்; பகுத்தறிவின் அடிப்படையில் இயங்க வேண்டும்; உண்மைக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.

ஆனால், கடந்த 78 ஆண்டுகளாக இலங்கையில் நிலவியது மக்களாட்சியல்ல; மக்களின் உணர்ச்சிகளையும் விருப்பு வெறுப்புகளையும் தூண்டி அவர்களை மயக்கும் அரசியலே. கட்சி நலன், உணர்ச்சித் தூண்டல், அரசியல் சூழ்ச்சி ஆகியவற்றால் நடத்தப்பட்ட ஆட்சியே அது.

இந்தச் சாபம் என்றால் என்ன?

அகராதியின் வரைவிலக்கணத்தின்படி Demagoguery என்பது, “பகுத்தறிவுபூர்வமான வாதங்களின் மூலம் அல்லாமல், சாதாரண மக்களின் ஆசைகளையும் முன்முடிவுகளையும் விருப்பு வெறுப்புகளையும் தூண்டுவதன் மூலம் அவர்களின் ஆதரவைப் பெற முயலும் அரசியல் செயற்பாடு” என்பதாகும்.

அதன் கருவிகள் மிகவும் எளிமையானவை:

மக்களைப் பிரித்தல்;
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்குதல்;
அரசியல் எதிரியைப் பூதமாகச் சித்தரித்தல்;
அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்காமல் அடுத்த தேர்தலை மட்டுமே குறிவைத்து ஆட்சி செய்தல்.

1948 இல் நாம் பெற்றுக்கொண்ட அரசியல் கலாசாரம் இதுதான். அதனை அதன் பின்னர் மேலும் மேலும் வளர்த்து இன்று உச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம்.

78 ஆண்டுகால சான்றுகள்

இதற்கான வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக இருக்கின்றன.

ஊசலாடிய கொள்கைகள் — 1948–2024

நாட்டிற்கென தொடர்ச்சியான தேசிய அபிவிருத்தித் திட்டம் ஒன்றை வகுப்பதற்குப் பதிலாக, ஒரு கட்சி செய்ததை அடுத்த கட்சி இடித்தழிக்கும் அரசியலையே நாம் கண்டோம்.

1956: மொழியியல் ஆய்வுகளின் அடிப்படையில் அல்லாமல், தேர்தலில் மக்களை அணிதிரட்டுவதற்கான அரசியல் ஆயுதமாக “சிங்களம் மட்டும்” சட்டம் கொண்டுவரப்பட்டது.

1970–1977: சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் தனியார் நிறுவனங்களை தேசியமயமாக்கியதுடன், இறக்குமதிக் கட்டுப்பாடுகளையும் விதித்தது.

1977: ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததும், முந்தைய பொருளாதாரக் கொள்கை ஒரே இரவில் தலைகீழாக மாற்றப்பட்டு திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2005–2014: வெளிப்படையான சாத்தியக்கூறு ஆய்வுகள் இல்லாமல் சீனக் கடன்களின் உதவியுடன் பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

2015–2019: அதே திட்டங்கள் “வெள்ளை யானைகள்” என்று விமர்சிக்கப்பட்டு முடக்கப்பட்டன.

2020–2021: இயற்கை உரத்தை மட்டும் பயன்படுத்தும் கொள்கை மக்களைக் கவரும் “பசுமைக் கொள்கை” என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது விவசாய உற்பத்தியையும் உணவுப் பொருட்களின் விலைகளையும் கடுமையாகப் பாதித்ததைத் தொடர்ந்து ஆறு மாதங்களுக்குள் அந்தக் கொள்கை மாற்றப்பட்டது.

கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவையும் இதே கதியையே சந்தித்தன.

திட்டங்கள் தொடங்கப்பட்டன. பின்னர் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் வேறு பெயர்களில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

நாடு இரண்டு முறை விலை செலுத்துகிறது; ஆனால் அரசியல் கட்சி ஒருமுறை புகழைத் தட்டிச் செல்கிறது.

தேர்தல் இனிப்பாகப் பொருளாதாரம்

மக்களைக் கவரும் அரசியல் மிகவும் செலவு மிக்கது.

1960கள்: கிராமப்புற வாக்குகளைப் பெறுவதற்காக மானிய விலையில் அரிசி வழங்கப்பட்டது. அது 1971 உணவு நெருக்கடிக்கு வழிவகுத்தது.

2005–2014: எரிபொருள் மானியங்களும் அரச துறையில் பெருமளவிலான ஆட்சேர்ப்புகளும் அரச ஊதியச் செலவை இரட்டிப்பாக்கின.

2019: மாற்று வருமான ஏற்பாடுகள் எதுவுமின்றி வரிக் குறைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் ஆண்டுக்கு சுமார் 500 பில்லியன் ரூபா அரச வருமானம் இழக்கப்பட்டது.

2022 ஏப்ரல் மாதமளவில் வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது. இலங்கை தனது வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

வரிகளைக் குறைத்த கட்சி, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நேரத்தில் ஆட்சியில் இருக்கவில்லை. அந்த நெருக்கடியைப் பொறுப்பேற்ற அரசாங்கமே சிக்கன நடவடிக்கைகளுக்காக மக்களின் குற்றச்சாட்டுக்கு ஆளானது.

இதுதான் தொடர்ந்து நடைபெறும் அரசியல் சுழற்சி.

அரசியல்மயமாக்கப்பட்ட நிறுவனங்கள்

மக்களாட்சி முறையாக இயங்க வேண்டுமானால் சுயாதீனமான நடுவர்கள் தேவை. ஆனால் நாம் அந்த நிறுவனங்களையே கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம்.

17 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் — 2001: சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.

18 ஆவது திருத்தம் — 2010: அவற்றின் சுயாதீனம் இல்லாதொழிக்கப்பட்டது.

19 ஆவது திருத்தம் — 2015: அவை மீண்டும் வலுப்படுத்தப்பட்டன.

20 ஆவது திருத்தம் — 2020: அவற்றின் அதிகாரங்கள் மீண்டும் பலவீனப்படுத்தப்பட்டன.

காவல்துறை இடமாற்றங்கள், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள், அரச வங்கிகளின் தலைவர்கள் நியமனம் போன்றவை தகுதியின் அடிப்படையில் அல்லாமல் கட்சி அரசியலின் செல்வாக்குக்கு உட்பட்டதாக மாறின.

அரச நிறுவனங்கள் கட்சிகளுக்குச் சேவை செய்யத் தொடங்கும்போது, குடிமக்களுக்குக் கிடைப்பது எஞ்சிய துணுக்குகள் மட்டுமே.

கொள்கைகளைவிட அடையாள அரசியல்

1956 முதல் 1983, 2009, 2022 வரை நமது தேர்தல்களில் அச்ச உணர்வே முக்கிய அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

“அவர்கள் உங்கள் மொழியை அழித்துவிடுவார்கள்.”

“அவர்கள் நாட்டை விற்றுவிடுவார்கள்.”

“பௌத்தத்தை / சிறுபான்மையினரை / தேசத்தை எங்களால் மட்டுமே பாதுகாக்க முடியும்.”

கடன், உற்பத்தித் திறன் அல்லது காலநிலை மாற்றத்திற்கான முன்னேற்பாடுகள் பற்றிய பகுத்தறிவுபூர்வமான விவாதங்கள் தேர்தல் மேடைகளில் வெற்றி பெறுவதில்லை.

மக்களின் அச்சமும் விருப்பு வெறுப்புகளுமே வெற்றி பெறுகின்றன.

இதுதான் மக்களை மயக்கும் அரசியலின் வரைவிலக்கணம்.

தேசிய நலனை வீழ்த்திய கட்சி நலன்

78 ஆண்டுகால கட்சி அரசியல் ஏற்படுத்திய மிகப் பெரிய சேதம் இதுதான்:

நாட்டின் நலன் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு, கட்சியின் நலன் முதலிடத்தைப் பிடித்தது.

மின்சாரத் துறையைச் சீர்திருத்த வேண்டுமா?

முடியாது — எமது தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்யும்.

300,000 தேவையற்ற அல்லது போலியான அரச ஊழியர் பதவிகளைக் குறைக்க வேண்டுமா?

முடியாது — எமது வாக்காளர்கள் வேறு கட்சிக்குச் சென்றுவிடுவார்கள்.

20 ஆண்டுகளுக்கான கல்வி மற்றும் ஏற்றுமதித் திட்டத்தை உருவாக்க வேண்டுமா?

முடியாது — அடுத்த தேர்தலுக்கு முன்னர் அதன் பலன் தெரியாது.

எனவே நாம் கடன் வாங்கினோம். தற்காலிகத் தீர்வுகளைச் செய்தோம். மக்களிடம் பொய் சொன்னோம்.

அதன் விளைவு என்ன?

1950களின் இயந்திரங்களுடன் இன்னமும் இயங்கும் ரயில்வே அமைப்பு;
2022 இல் பராசிட்டமோல் கூட இல்லாமல் தவித்த மருத்துவமனைகள்;
பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறிய 300,000க்கும் அதிகமான திறமைமிக்க தொழிலாளர்கள்.

கட்சிகள் மாறிமாறி ஆட்சி செய்தன.

ஆனால் நாடு தொடர்ந்து பின்னடைந்தது.

எதிர்க்கட்சிகளின் மூலப் பாவம்

இந்த விடயத்தில் அனைத்துக் கட்சிகளும் சமமான குற்றவாளிகளே.

இலங்கையில் எதிர்க்கட்சியாக இருப்பதன் நோக்கம் நல்லாட்சி ஏற்பட உதவுவது அல்ல. ஆளும் கட்சியை எப்படியாவது அழிப்பதே நோக்கமாகிவிட்டது.

1960களில் ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை “கம்யூனிஸ்ட்” என்று அழைத்தது.

1970களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியை “ஏகாதிபத்தியவாதிகள்” என்று குற்றஞ்சாட்டியது.

மக்கள் விடுதலை முன்னணி இரு கட்சிகளையும் “துரோகிகள்” என்று அழைத்தது.

இன்று ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளும் புதிய சின்னங்களுடன் அதே பழைய அரசியல் வசனங்களையே பயன்படுத்துகின்றன.

ஒவ்வொரு வரியும் “மக்கள் விரோதமானது.”

ஒவ்வொரு சீர்திருத்தமும் “நாட்டை விற்பது.”

ஒவ்வொரு நெருக்கடியும் எதிர்த்தரப்பு தீய சக்தி என்பதற்கான சான்றாகச் சித்தரிக்கப்படுகிறது; எனவே அவர்களை எப்படியாவது ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது.

பின்னர் இவர்களே ஆட்சிக்கு வருகிறார்கள்.

தாங்கள் எதிர்த்த கொள்கைகளில் 80 விழுக்காட்டை நடைமுறைப்படுத்துகிறார்கள்.

ஏனெனில் மக்களை மயக்கும் அரசியலுக்கு நிலையான கொள்கைகள் கிடையாது. அதற்கு இருப்பது அந்தந்த நேரத்திற்கேற்ற அரசியல் நிலைப்பாடுகள் மட்டுமே.

78 ஆண்டுகால இரக்கமற்ற, நேர்மையற்ற அரசியல் விமர்சனங்கள் பொறுப்புக்கூறலை உருவாக்கவில்லை.

அவை மக்களிடையே அரசியல் மீதான நம்பிக்கையின்மையையே உருவாக்கியுள்ளன.

“எல்லா அரசியல்வாதிகளும் ஒரே மாதிரியானவர்கள்” என்று இன்று மக்கள் நம்புகிறார்கள்.

ஏனெனில் கடந்த 78 ஆண்டுகளாக அவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே நடந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சாபத்தை முறியடிப்பது எப்படி?

ஆட்சியில் இருக்கும் கட்சியை மாற்றுவதால் மட்டும் இந்தப் பிரச்சினை தீராது.

மக்களை மயக்கும் அரசியலுக்கு வெகுமதி அளிக்கும் அரசியல் கட்டமைப்பையே நாம் மாற்ற வேண்டும்.

மூன்று சீர்திருத்தங்கள் தவிர்க்க முடியாதவை.

1. எதிர்கால நாடாளுமன்றங்களையும் தேசியக் கொள்கைகளுக்குக் கட்டுப்படுத்துதல்

எரிசக்தி, கல்வி, அரச கடன் போன்ற துறைகளுக்குக் குறைந்தது 10 ஆண்டுகளுக்கான தேசியக் கொள்கைக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அவற்றை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படும் வகையில் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

சிலி, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருப்பதுபோல உட்கட்டமைப்பு மற்றும் நிதிக் கொள்கைகள் ஒரு அரசாங்கத்தின் பதவிக்காலத்தைத் தாண்டியும் தொடர வேண்டும்.

2. அரச நிர்வாகத்தை கட்சி அரசியலிலிருந்து விடுவித்தல்

காவல்துறை, தேர்தல்கள், அரச சேவை, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியவற்றுக்கான சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அரசியலமைப்பினால் பாதுகாக்கப்பட்ட வரவு–செலவுத் திட்டங்கள் இருக்க வேண்டும்.

அவற்றுக்கான நியமனங்களைச் செய்யும் குழுக்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறக்கூடாது.

18 ஆவது, 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தங்களைப் போன்ற பின்னோக்கிய நடவடிக்கைகளுக்கு இனி இடமளிக்கக்கூடாது.

3. வாக்காளர்களிடமிருந்தும் உயர்ந்த தரத்தை எதிர்பார்த்தல்

சிறந்த முழக்கத்துக்கு வாக்களிப்பதை நிறுத்தி, சிறந்த திட்டத்தைக் கேட்கத் தொடங்க வேண்டும்.

பிரமாண்டமான தேர்தல் பேரணிகளுக்குப் பதிலாக மக்களுடனான நேரடி கலந்துரையாடல்கள் வேண்டும்.

வெறும் வாக்குறுதிகளுக்குப் பதிலாக அவற்றுக்கான செலவுக் கணக்குகள் வேண்டும்.

ஐந்து நிமிட மேடைப் பேச்சுக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளுக்கான செயற்றிட்டம் வேண்டும்.

முடிவுரை

1948 இல் நாம் உண்மையான மக்களாட்சியைப் பெற்றுக்கொள்ளவில்லை.

நாம் பெற்றது ஒரு தேர்தல் முறையையே.

கடந்த 78 ஆண்டுகளாக அந்தத் தேர்தல் முறையைப் பயன்படுத்தி நமக்குப் பிடித்த மக்களை மயக்கும் அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்து வந்திருக்கிறோம்.

அதற்காக நாம் பெற்ற பரிசு என்ன?

கடன்.
பிளவு.
வீழ்ச்சி.

கட்சி அரசியல் என்னும் இந்தச் சாபம் முடிவுக்கு வர வேண்டுமானால், குடிமக்களும் அரசியல் தலைவர்களும் ஒரே ஒரு அடிப்படைக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்:

“கட்சி இரண்டாவது — நாடு முதலாவது.”

அது நடைபெறாதவரை,

பெப்ரவரி 4 ஒரு சடங்காகவே இருக்கும்; உண்மையான கொண்டாட்டமாக இருக்காது.

About nakkeran 273 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply