ela Piriyan

S͏d͏t͏o͏n͏p͏r͏o͏s͏e͏P͏ ͏4͏0͏2͏2͏1͏5͏t͏9͏3͏m͏1͏2͏ ͏h͏a͏1͏h͏o͏1͏8͏e͏0͏2͏l͏a͏ ͏6͏9͏f͏r͏i͏1͏4͏a͏1͏c͏1͏g͏i͏b͏4͏M͏v͏m͏u͏ ͏N͏4͏e͏5͏:͏ ·

மரணம் ஒருவரைப் புனிதப்படுத்திவிடாது.

ஒரு கவிஞராகவோ, எழுத்தாளராகவோ இருப்பவர் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய முதன்மையான கடமை என்னவென்றால் ஒடுக்கப்படும் மக்களின் குரலாகத் தனது படைப்புகள் மட்டுமன்றி, தனது சொந்தக் குரலும் ஒலிக்கச் செய்வதாகும். படைப்பாளியின் சமூகப் பொறுப்பு என்பது வெறுமனே எழுதுவதோடு முடிந்துவிடுவதில்லை. ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் விடுதலைக்காகவும் குரல் கொடுப்பதிலும் அது வெளிப்பட வேண்டும்.

ஆனால், கவிஞர் சேரன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்து தம்மை விதையாக்கிய மக்கள் இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்ததுடன், அந்த இயக்கம் ஒருபோதும் ஜனநாயக வழியில் பயணிக்காது என்ற கருத்துக்களையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆணித்தரமாக முன்வைத்துள்ளார். தேவைப்படும்போதெல்லாம் புலி எதிர்ப்புவாதத்தை அவர் கக்கத் தவறியதில்லை.

ஒரு படைப்பு என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அது ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளையும் உரிமைப் போராட்டங்களையும் பிரதிபலிக்க வேண்டும். மாறாக, ஒடுக்குமுறை சக்திகளுக்குக் கவசமாகவோ, ஒடுக்க நினைக்கும் சக்திகளின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கும் கருவியாகவோ ஒரு படைப்பு அமைந்துவிடக் கூடாது.

அந்த வகையில், சேரன் அவர்களைக் ‘கவிஞர்’ என்று அடைமொழியிட்டு அழைப்பதுகூட கவித்துவத்திற்கே இழுக்கானது என நாம் கருதுகிறோம், அல்லது அவரை “தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிரான கவிஞர்” என்று அழைக்கலாம்.

அதுமட்டுமன்றி, ஒரு சில ஊடகவியலாளரும்,

சில படைப்பாளிகளும், ஒடுக்குமுறை சக்திகளும் சிறிலங்கா அரசின் ஒத்தோடிகளும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கின்றனர் என்றால், சேரன் உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்களின் அரசியல், சமூக வலிகளையும் உரிமைப் போராட்டங்களையும் பிரதிபலிக்கும் படைப்புகளை முன்வைத்தாரா என்ற கேள்வி எழுவது இயல்பானது.

ஒருவரது மரணம் என்பது அவரது வாழ்நாள் அரசியல் நிலைப்பாடுகளையும் செயல்பாடுகளையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக மாற்றிவிடக்கூடாது.

எனவே, ஒரு மரணத்தின் ஊடாக ஒருவரைப் புனிதப்படுத்துவதை நிறுத்துவோம்.

இத்தகைய விமர்சனங்களைத் தவிர்த்து, மரணத்தைப் புனிதப்படுத்தும் கலாசாரம் நமது சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வுக்கும் அறிவுசார் வளர்ச்சிக்கும் எதிரானதாகவே அமையும்.

காணொளி – விடுதலைப்புலிகளுக்கு எதிராக தனது வக்கிரத்தை சேரன் கொட்டிய போது…!!

See less

About nakkeran 341 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply