“கடவுள்” பற்றிய பந்தயம்!
————————————————-
அருமை நண்பர்களே!…
உலகம் முழுமையும் கடவுள் என்கிற பெயரில் இருக்கும் மரியாதையைப் பயன் படுத்தி நடத்தப்படுகின்ற ஏமாற்றுத்தனங்கள் ஏராளம். ஒரே ஒரு கடவுள் என்றார்கள், பிறகு தூதர்கள் என்றார்கள், பிறகு கடவுளுக்கு உறவு முறை வைத்தார்கள், உறவு முறையிலும் மனித வாழ்வின் நடைமுறை போன்ற சடங்குகள் வைத்தார். இது மாதிரியான பலவீனத்தைப் பார்த்த சில கபட நோக்கம் கொண்டவர்கள் ; இதை வியாபாரம் செய்யலாமே என்கிற, சில தந்திரங்களை காட்டி நானே சாமியார்., என்கிற பசப்பு வார்த்தைகளைக் கொட்டி, பெரிய அளவில் வருமானம் ஈட்டும் தொழிலாக செய்ய ஆரம்பித்தனர். ஏறத்தாழ அரசு வருமானத்தை விட பெரிய அளவில் வருமானம் ஈட்டும் தொழிலாக நடந்த ஆரம்பித்தனர். பகுத்தறிவு பரப்பினர்களும் ஏதோ கடலில் காயம் உரைத்ததைப்போன்று ஆங்காங்கே பேசி வந்தனர். இந்நிலையில், இலங்கை நாட்டைச் சேர்ந்த, கோவூர் என்கிற பகுத்தறிவுவாதி, ஓர் அதிரடியான சவால் விட்டார்.
கடவளை காண்பிப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் தருகிறேன்; என்று அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பே சவால் விடுத்தார். அந்தப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து விட்டார். இன்றளவும் அந்தப் பணம் வங்கியில் தான் உறங்கிக்கொண்டு இருக்கிறது.
இதைக் கேட்டவர்கள் ஏதோ கடவுளை கக்கத்திலே இடுக்கிக்கொண்டு இருப்பதுபோல் திரண்டனர். இதில், மதுரை ஆதீனம் ரொம்பவும் மார்தட்டிக் கொண்டு, இதோ நான் கடவுளைக் காட்டுகிறேன் என்று வீர வசனம் பேசி, ( நம்ம வடிவேலு மாதிரியே) வாருங்கள் சென்னை கடற்கரைக்கு கடவுளைக் காட்டுகிறேன் என்று முழங்கினார். இவரின் முழக்கத்தைக் கேட்ட திருவாளர் கோவூர் இலங்கையில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்து, குறித்த நேரத்தில் கடற்கரைக்கும் வந்து விட்டார், சவால் விட்ட ஆதீனம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. கடற்கரை முழுவதும் மக்கள் வெள்ளம். ஆதீனத்திற்காக காத்திருந்த கோவூர், ஆதீனத்தின் நழுவலை மக்களிடம் கூறிவிட்டுச் சென்று விட்டார்.
என்றினும் கடவுள் என்கிற வார்த்தை, மக்களின் பலவீனம் என்பதைப் புரிந்து கொண்ட கபடதாரிகள் இன்றளவும் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருப்பதற்கு அரசும் துணை போய்க்கொண்டு இருபதுதான்
வேதனையான சங்கதி. திருந்துங்கள்.
நன்றி வணக்கம்
— கவிஞர் சிற்பி பாமாவின் அறிவியல் களம்

Leave a Reply
You must be logged in to post a comment.