கடவுள் வழிபாடு அவசியமா ?

வெளியில் இருந்து ஒருவர் நம்மை கண்காணிக்கிறார் ..

எனவே தவறு செய்யக்கூடாது என்றே நமக்கு கற்பிக்கப்பட்டது.

பழைய சமூகங்களில்,

❣️காவல்துறை இல்லை

❣️CCTV இல்லை

❣️சட்ட அமைப்பு பலவீனமாக இருந்தது

அப்போது,

“யாரும் பார்க்கவில்லை என்றாலும் கடவுள் பார்க்கிறார்”

என்ற நம்பிக்கை:

❣️ திருட்டை தடுக்க

❣️பொய் சொல்லாமலிருக்க

❣️கொலை போன்றவற்றை தவிர்க்க

ஒரு உள் பயத்தை உருவாக்கியது.

✅👌ஆனால் — ஒழுக்கம் கடவுளால் மட்டுமா வருகிறது?

இங்கே தான் முக்கிய திருப்பம் ஏற்படுகிறது.

மனிதனிடம்,

♦️இரக்கம் (Empathy)

♦️பரஸ்பர நலன் (Reciprocity)

♦️கூட்டாக வாழும் உயிரியல் தேவை என்பன (Social survival instinct)

பரிணாம வளர்ச்சியால் வந்தவை.

உதாரணம்,

♦️குரங்குகள் உணவை பகிர்கின்றன.

♦️டால்பின்கள் காயமடைந்தவற்றை காப்பாற்றுகின்றன.

இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை

ஆனால் ஒத்துழைப்பு இருக்கிறது.

அதாவது

ஒழுக்கத்தின் விதை மதத்திற்கு முன்பே உயிரியல் ரீதியாக இருந்தது.

🟢👌கடவுள் இல்லாமல் சமூகங்கள் சிதறிவிட்டனவா?

இன்றைய உலகில்

ஜப்பான்

ஸ்வீடன்

டென்மார்க்

நோர்வே

போன்ற நாடுகளில்

மத நம்பிக்கை குறைவு

ஆனால் குற்றச் செயல்கள் மிகக் குறைவு.

சமூக நம்பிக்கை அதிகம்

ஏன்?

அவர்களின் கட்டுப்பாடு,

சட்டம்

கல்வி

மனித உரிமை மதிப்பு

சமூக ஒப்பந்தம் (Social Contract)

மூலம் வருகிறது.

✅1)கடவுள் தண்டிப்பார் என்பது வெளிபயத்தால் வருவது. அதாவது அவர் பயத்தால் நல்லவர்.

✅2)ஆனால் குறிப்பிட்ட செயல் பிறருக்கு தீங்கு விளைவிக்கும் என்பது சுயபுரிதலால் வருவது.

அவர் தனது புரிதலால் நல்லவர்.

முதலாவது வெளிக்கட்டுப்பாடு,

இரண்டாவது உள்விழிப்புணர்வால் வருவது.

கடவுள் நம்பிக்கை,

❣️ஆரம்ப சமூகங்களில் ஒழுக்கத்தை காக்க உதவியிருக்கலாம்.

ஆனால்,

ஒழுக்கம் = கடவுள் மட்டுமே அல்ல

அது உயிரியல் + சமூக + அறிவு வளர்ச்சியின் கலவையாகவும் இருக்கிறது.

✅பயம் சார்ந்த ஒழுக்கம் நிலையற்றது.

மற்றவர் பார்த்தால், பிடிபட்டால் மட்டுமே தண்டிக்கப்படுவார்.

பிடிபடாவதார்கள் தப்பலாம்.

🟢அங்கே நடத்தை மாறுகிறது,

ஆனால் மனிதன் மாறவில்லை.

அதனால் தான்,

தனியாக இருக்கும் போது வேறு

சமூகத்தில் இருக்கும் போது வேறு

என்ற இரட்டை நிலை உருவாகிறது.

🟢ஆனால் விழிப்புணர்வால் வரும் ஒழுக்கம்

ஓர் திறந்த புத்தகம் தான்..

எதையுமே மறைக்க தேவையில்லை.

மற்றவர்களுக்காக செயலாற்றமாட்டார்கள்.

✅🟢செய்தால், மறைத்தால் பிடிபடுவோம்.

பிழையான விடயங்களை செய்யாவிட்டால்

பிடிபடவே மாட்டோம் எனும் உறுதி கொண்டது.

பிடபடக்கூடாது என்றால் பிழையான விடயங்களை செய்யவே கூடாது என்றாகிறது.

👌🟢நல்லது செய்வது கடமை இல்லை என்றாகி அது நமது இயல்பாகி விடுகிறது.

இது உள் புரிதல் மூலம் வரும் ஒழுக்கம்.

இங்கே,

சட்டம் தேவையில்லை

பயம் தேவையில்லை

கண்காணிப்பும் தேவையில்லை.

ஏனெனில் மனச்சாட்சி விழித்திருக்கிறது.

✅எனவே பயத்திலிருந்து அல்ல

புரிதலிலிருந்து சரியான ஒழுக்கம் பிறக்கிறது.

✅🟢நாம் துன்பம் விரும்பவில்லை →

எனவே மற்றவரும் விரும்ப மாட்டார்”

இது தான் Golden Rule.

“நீ விரும்பாததை பிறருக்கு செய்யாதே”

✅இதற்கு கடவுள் தேவையில்லை.

உணர்வு போதும்.

🟢✅கல்வி கற்பிக்க வேண்டியது.

தேர்வு பதில்கள் அல்ல

தன்னுணர்வு

விமர்சன சிந்தனை

உணர்ச்சி நுண்ணறிவு

(Emotional intelligence)

பொறுப்புணர்வு

🙏👌இதை குழந்தை புரிந்துகொண்டால்

“என் செயல் பிறரின் வாழ்க்கையை பாதிக்கிறது”

அப்போது குழந்தை கண்காணிப்பு இல்லாமலும் ஒழுக்கமாக இருப்பான்.

அவ்வளவு தான் ….

Be the first to comment

Leave a Reply