பிரபாகரனின் அர்ப்பணிப்புக்கு நாங்கள் தலை சாய்க்கின்றோம்!

பிரபாகரனின் அர்ப்பணிப்புக்கு நாங்கள் தலை சாய்க்கின்றோம்!


தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் – ஒரு குறித்த கால கட்டத்தில் தமிழர் விடுதலை பெறவேண்டும் என்பதற்காக தன்னையே அர்ப்பணித்து செய லாற்றிப் போராடிய ஒருவர் பிர பாகரன். அவரது முறைமைகள் எனக்கு ஒவ்வாததாக இருந் தாலும் அவருடைய அர்ப்ப ணிப்பு என்னுடைய அர்ப்பணிப் பையும் வேறு பலருடைய அர்ப் பணிப்பையும் விடக் கூடுதலாகவே இருந்திருக்கின்றது. அதற்கு நாம் தலை சாய்க்கின்றோம். எங்கள் மரியாதையை நாங்கள் செலுத்துகின்றோம். – இவ்வாறு தெரிவித்திருக் கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன்.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தவறு என்ற நிலைப்பாட்டை நான் எப்போதுமே எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடகம் ஒன்றில் நேற்றிரவு இடம் பெற்ற அரசியல் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து வெளியிடும்போதே அவரஇப்படிக் கூறினா். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

புலிகள் செய்த ஆயுதப் போராட்டம் தவறு என்று நான் எப்போதுமே சொன்னதில்லை. இது குறித்து பல தடவைகள் பல விளக்கங்களை நான் சொல்லியுள்ளேன். அந்த விளக்கங்கள் எல்லாம் ஒரேவிதமான விளக்கங்கள்தான்.

அன்றைய நேரத்தில் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக அவர்கள் எடுத்த முடிவை இன்றைக்கு நாங்கள் விமர்சிக்க முடியாது. நான் முன்னர் தெளிவாகச் சொல்லியுள்ளேன். புலிகளின் தியாகங்களை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது – கொச்சைப்படுத்த முடியாது என்று. ஏனென்றால் அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். தங்களுக்காக அல்ல. எங்களுக்காக. அவர்களின் வழிமுறை என்னுடைய வழிமுறையாக இல்லாவிட்டாலும் அவர்களின் தியாகங்கள் போற்றப்படவேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு. அந்தத் தியாகங்களை வாக்குச் சேகரிப்பதற்காக நான் பயன்படுத்தவே மாட்டேன்.

இம்முறை தேர்தலில் நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன். அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. கூட்டமைப்பின் தலைமையுடன் மோதல் போக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக எனக்குத்  தெரியவில்லை. நான் சொன்ன கருத்து குறித்து என்னிடம் விளக்கம் கோருவதற்குக் கூட நியாய மில்லை. கேட்டால் நான் விளக்கத்தைக் கொடுப் பேன். இதுவரை எவரும் விளக்கம் கேட்கவில்லை.

கட்சியின் பொதுச் செயலர் துரைராஜசிங்கம் என்னுடன் தொடர்பு கொண்டு என்ன நடந்தது என வினவினார். நான் நேர்காணலில் உள்ள விடயங்களைச் சொன்னேன். 21 நிமிட நேர்காணலில் – சிங்கள மொழியில் நடந்த அந்த நேர்காணலை சரியாக – முழுமையாக விளங்கிக் கொண்டு – அதன் பின்னணியையும் கேள்விகளுக்குப் பின்னால் உள்ள சங்கதிகளையும் விளங்கி அதனை உள்வாங்கி அவர்கள் இந்த அறிக்கைகளை விடுகிறார்களா என்பது எனக்குச் சந்தேகம்.

செல்வம் அடைக்கலநாதன் பகிரங்கமாக அறிக்கை விட்டிருக்கிறார். நான் இப்படிச் சொன்னது மன்னிக்கமுடியாத குற்றம் என்று சொல்லி உள்ளார். நான் அஹிம்சைவாதி. எனக்கு ஆயுதத்திலும் வன்முறையிலும் நம்பிக்கை இல்லை என்று சொல்வது எப்படி மன்னிக்கமுடியாத குற்றம் என்று எனக்கு விளங்கவில்லை.

இந்தத் தீவில் தமிழ்த் தேசம் ஒன்று இருக்கின்றது. அதனை இல்லாமல் பண்ணிவிட முடியாது.

பிரதமர் மஹிந்தவைச் சந்திப்பதற்கு நாங்கள் ஒன்றாகப் பேசித்தான் தீர்மானம் எடுத்தோம். நாங்கள் அதில் பங்கேற்றமைக்குக் காரணம், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை இங்கே எடுத்துச் சொல்வதற்கு சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்தன. கூட்டறிக்கையிலே நாடாளுமன்றம் கூட்டப்படவேண்டும் என நாங்கள் சொல்லி இருந்தாலும் இந்தச் சந்தர்ப்பத் திலே அரசுக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம் என்பதையும் திடமாகச் சொல்லியிருக்கிறோம். ஆகவே இது நாடாளுமன்றம் அல்ல. நாடாளு மன்றத்துக்கான மாற்றீடும் அல்ல. நாடாளுமன்றம் கூட்டப்படவேண்டும். அதிலே செய்யப்பட வேண்டிய விடயங்கள் அங்கேதான் செய்யப்பட முடியும். இங்கே செய்யப்பட முடியாது என்பதை எங்கள் அறிக்கையிலே தெளிவாகச் சொல்லி – இந்த கொரோனா விடயத்தில் நாங்கள் ஆதரவைக் கொடுக்கத் தயார் என்று கூறியிருந்தோம். எங்கள் மக்களின் பிரச்சினைகளையும் சொல்வதற்குத் தயாராக இருக்கிறோம் என்று அவர்களிடம் கூறினோம்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சியில் இருப்பவர்களுடந்தான் பேசவேண்டும். ஆகவே மஹிந்த இராஜபக்ச தரப்பு ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் பேச நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

அரசியல் ஏமாளி சுமந்திரன்

இன்றைய தமிழ் அரசியலில் பரிதாபத்துக்குரிய நபர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் – அல்லது தமிழரசுக் கட்சியின் – பேச்சாளர் சுமந்திரன்தான். போகிற போக்கில் அதுவும் கூட – “பேச்சாளர் பதவியும்’ கூட – இப்போது அவருக்கு இருக்கும் “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்’ என்ற பட்டம் போல “முன்னாள் பேச்சாளர்’ என்று ஆகிவிடுமோ, என்னவோ? அப்படித்தான் இருக்கின்றது நிலைமை.

அரசியலில் வெளிப்படையாகப் பேசி, அதற்காக வாங்கிக் கட்டும் நபராக அவர் தென்படுகின்றார்.

அரசியலுக்கு முதலில் தேவை நடிப்பு. நடிக்கத் தெரியாமல் – பாவனை பண்ண அறியாமல் – மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசி, அதற்காகத் கடித்துக் குதறப்படும் நிலைக்குக் தள்ளப்பட்டிருக்கின்றார் அவர். புளொட் தலைவர் சித்தார்த்தன் கூறியமை போல சிறுவயது முதல் கொழும்பில் வாழ்ந்து வந்தமையால் வரலாற்று ஓட்டத்தை அறியாமல் சுமந்திரன் அப்படிக் கருத்துக் கூறினார் என்றே வைத்துக் கொள்வோம்.

சரி, அறியாமல்தான் அப்படி சுமந்திரன் என்ன கூறியிருக் கின்றார்?

அவரது அரசியல் எதிரிகளான நீதியரசர் விக்னேஸ்வரன், சுரேஷ் பிறேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதற் கொண்டு, பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோரால் மட்டுமல்லாமல், அவரது கட்சியைப் சேர்ந்த சார்ள்ஸ் நிமலநாதன், சரவணபவன், அரியநேத்திரன் போன்றவர்களுடன் கடைசியாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் வரையிலும் எல்லோராலுமே இந்த விடயத்தில் “தீண்டத்தகாதவராக’ நோக்கப்படும் நிலைமைக்கு சுமந்திரன் தள்ளப்பட்டிருக்கின்றாரா?

சுமந்திரனின் சிங்களச் செல்வி இவர்களில் சிலருக்கு குருடன் யானை பார்த்த கதை போன்றது என்றே தோன்றுகின்றது.

ஆயதப் போராட்டத்தோடு பயணித்து வந்தவர்களின் கதை வேறுமாதிரியானது.

நீதியரசர் விக்னேஸ்வரன் அரச நீதித்துறைப் பதவியோடு பாதுகாப்பாக இருந்து கொண்டு தூரத்திலிருந்தபடி போராட்டத்தை நோட்டமிட்டவர். அதனால்தான் இன்று வரை அவருக்கு பிரபாகரன் “தம்பி பிரபாகரன்’ ஆகத் தெரிகிறார். இதுவரை ஒரு நாளுமே அவருக்குப் பிரபாகரன் “தலைவர் பிரபாகரன்’ ஆகத் தெரியவேயில்லை.

 மாவை சேனாதிராஜா அந்தப் போராட்டத்துக்கான ஆரம்பத் தில் மண்வெட்டி போட்டு கொத்தி, வயலைப் பண்படுத்திக், போராட்டக் களத்தை வளப்படுத்திய பிதாமகர்களுள் ஒருவர். அதற்காக வருடக்கணக்கில் சிறைவாசமும் அனுபவித்தவர். ஏதோ காரணங்களினால் நேரடி ஆயுதப் போராட்டத்திலிருந்து சற்றுத் தள்ளி நிற்க வேண்டியவரானார். ஆனாலும் உணர்வும் உயிரு மாகப் போராட்டத்துடன் நின்றவர். அதற்காகத் தலைவர் பிரபா கரனால் மெச்சப்பட்டவர்.

கஜேந்திரகுமார் போன்றோர் ஆயுதம் தூக்காவிட்டாலும் அந்தப் போராளிகளுக்கு நிகரான நிலைப்பாட்டில் நின்றவர்கள்; இன்னும் நிற்கின்றவர்கள்.

வேறு சிலர் – பெயர் குறிப்பிட விரும்பவில்லை – யாருடைய போராட்டத் தியாகத்திலும் பாடுகளிலும் தமது அரசியலை விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வியாபார அரசியலாக்கிக் கொண்டு தொடர்பவர்கள்.

இன்னும் இரு தரப்பினர் உள்ளனர். ஒரு தரப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், செல்வம் போன்றோர். மற்றவர்கள் சித்தார்த்தனின் புளொட் அணி சார்ந்தோர். இந்தத் தரப்பினர் எல்லோ ருமே ஆயுதப் போராட்டத்தை வரித்தவர்கள்தாம். தலைவர் பிரபாகரனுடன் சேர்ந்து ஆயுதம் தூக்கியவர்கள்தாம்.

இந்தியப் படையின் வருகையுடன் ஆயுதங்களைக் கைவிட்ட னர் என்று கூறினார்கள். அதன் பின்னர், அதுவரை காலமும் நடந்தவற்றுக்குப் பிராயச்சித்தம் செய்யும் தரப்பில் இணைந்து முழுமையாகப் புலிகளின் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்புலமான அரசியல் சக்தியாகினர் – சுரேஷ், செல்வம் தரப்பினர். இன்னும் அந்நிலை நீடிக்கின்றது எனலாம்.

அடுத்தது – புளொட். 2009 முள்ளிவாய்க்கால் பேரவலம் வரையிலும், ஏன் அதற்குப் பின்னர் 2010 ஜனாதிபதித் தேர்தல் கடந்தும், தமிழினத்துக்குப் பேரழிவை ஏற்படுத்திய மஹிந்த – கோட்டா தரப்புடன் நின்றவர்கள். புலிகளுடன் இணைந்துதான் அதைச் செய்தோம் என்பது அவர்களின் இப்போதைய வாதம்.

இவர்கள் எல்லோரும் ஏறி நின்று “கடித்துக்குதறும்’ நிலைக்கு சுமந்திரன் சென்றமைக்கு அவர் என்ன தவறு செய்திருக்கின்றார் என்று தேடிப் பார்த்தோம்.

“நான் ஆயுதம் தூக்கிப் போராடுவதை வரவேற்பவன் அல்லன். அதனால் ஆயுதப் போராட்டத்தை ஏற்று அங்கீகரிக்க வில்லை” – இதுதான் அவர் கூறிய விடயங்கள்.

இப்படிக் கூறுவது ஆயுதப் போராட்டத்துக்கு எதிரானதா? ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா?

பிரபாகரன் களத்தில் இருக்கும் வரை புலிகளுக்கு எதிராக ஆயுதம் தூக்கி அவர்களை அழித்தவர்களை எல்லாம் இன்னும் பெரும் வீரர்களாகப் பேற்றும் தமிழினத்துக்கு அந்த வகைய றாக்களுக்குள் அடங்காத – அவர்களைப் போல அரசியல் அரிதார நடிப்பு பண்ணாத – புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தனது வாக்கு வங்கிக்கான அரசியல் பிரசார உத்திக்குரிய மூலதன மாகப் பயன்படுத்தத் தெரியாத – சுமந்திரன் உண்மையில் அரசியல் ஏமாளிதான்!

Be the first to comment

Leave a Reply