உடைத்து எறியப்பட்ட பிள்ளையார் கோவில்

ostnprdoSe8cu58lc0c9c0l17tm9f8u9l4280hg6t0l31260c7c9m64hf5h3 ·

இந்திய உபகண்டத்தின் தெற்கே இந்துமா சமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவான இலங்கையில், இன்றைக்கு ஏறக்குறைய நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் யாழ்ப்பாண அரசு, கோட்டை அரசு, கண்டி அரசு என அழைக்கப்பட்ட மூன்று அரசுகளும் பல வன்னிச் சிற்றரசுகளும் இருந்தன. யாழ்ப்பாண அரசின் கீழும் வன்னிச் சிற்றரசுகளின் கீழும் இருந்து வந்த நிலப்பகுதியானது தற்போதைய வடக்கு, கிழக்கு மாகாணங்களையும் வடமேற்கு மாகாணத்தின் சில பகுதிகளையும் (புத்தளம் மாவட்டம்) உள்ளடக்கியதாக இருந்தது.

பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்த்துக்கீசரின் வருகையைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட ஐரோப்பியரின் ஆதிக்கத்தின் விளைவாக, இந்த அரசுகள் தமது தனித்துவங்களை இழக்கலாயின. 16ஆம் நூற்றாண்டின் இறுதியில்- அதாவது 1597 ஆம் ஆண்டு-சிங்களவரின் இராச்சியமாகிய கோட்டை அரசு போர்த்துக்கீசர் வசமாகியது 1619 ஆம் ஆண்டு, தமிழரின் இராச்சியமாகிய யாழ்ப்பாண அரசு போர்த்துக்கீசரால் கைப்பற்றப்பட்டது. கண்டி அரசுதான் இறுதிவரை போர்த்துக்கீசரால் வெல்லப்பட முடியாத அரசாக இருந்தது. போர்த்துக்கீசரின் ஆட்சிக்காலம் (1505 – 1658) 1658 ஆம் ஆண்டு டச்சுக்காரரின் வருகையைத் தொடர்ந்து முடிவுற்றது.

அவர்கள் 1658ஆம் ஆண்டு மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களை போர்த்துக்கீசரிடமிருந்து டச்சுக்காரர் கைப்பற்றினர். போர்த்துக்கீசர், டச்சுக்காரர் ஆகியோர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைத் தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தபோதிலும் கூட, தமிழ்ப் பிரதேசங்களையும் சிங்களப் பிரதேசங்களையும் ஒன்றாக இணைக்கவில்லை. டச்சுக்காரர் தமது ஆட்சிக்காலத்தில் தமது ஆதிக்கத்தின் கீழிருந்த இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை மூன்று நீதி மாவட்டங்களாகப் பிரித்தனர்.

1. யாழ்ப்பாண நீதி மாவட்டம்.

2. கொழும்பு நீதி மாவட்டம்.

3. காலி நீதி மாவட்டம்.

இதன்படி தற்போதைய வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தமிழர் பிரதேசங் கள் முழுவதும் யாழ்ப்பாண நீதி மாவட்டம் என்ற பெயரில் ஒரே பிரதேசமாகவே டச்சுக் காரரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது (படம்-1).

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் டச்சுக்காரரின் ஆட்சிக்காலம் (1658-1796) முடிவடைந்து, ஆங்கிலேயரின் ஆதிக்கம் இத்தீவில் உதயமாகியது. ஆரம்பத்தில் இலங்கைத் தீவின் கரையோரப் பிரதேசங்களே

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்தன.

எனினும் 1815ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கைத் தீவு முழுவதும் ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்குட்பட்டது. இவ்வாறு இலங்கைத் தீவு முழுவதையும் தமது ஆட்சி யின் கீழ் கொண்டுவந்த ஆங்கிலேய ஆட்சியாளர் கூட ஆரம்பத்தில் தமிழ்ப் பிரதேசங்களையும் சிங்களப் பிரதேசங்களையும் ஒன்றாக இணைக்கவில்லை. கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் என்பன தனித்தனி நிர்வாகப் பிரிவுகளாக ஒரு பிரதேசத்துடன் இன்னொன்று இணைக்கப்படாமலேயே இருந்தன.

1831 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின் போது இலங்கையில் மூன்று நிர்வாகப் பிரதேசங்கள் இருந்தன என்பதனை, அக்குடிசன மதிப்பீட்டுத் தகவல்கள் காட்டுகின்றன.

1831 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட் டுத் தரவுகளின் சுருக்கம் பின்வருமாறு உள்ளது.

1. தமிழ் மாவட்டங்கள் :

213641

அ) யாழ்ப்பாணம் 146528

ஆ) திருகோணமலை 16335

இ) மட்டக்களப்பு 27574

ஈ) மன்னார் 20257 “

உ) நெடுந்தீவு 2947

2. சிங்கள மாவட்டங்கள் : 448361

அ) கொழும்பு 234791 ..

ஆ) காலி 88242

இ) தங்காலை 95582

ஈ) சிலாபம் 29746

3. கண்டிய மாகாணங்கள் :

288486

மொத்தம் :950488

இதன்படி 1831 ஆம் ஆண்டளவில் இலங் கையில் மூன்று தனி நிர்வாகப் பிரதேசங்கள் இருந்தன என்பதும், தமிழர் பிரதேசங்கள் அனைத்தும் ஒரே பிரதேசமாக இணைந்திருந்தன என்பதும் புலனாகின்றது. 1834 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சிலோன் கெசட்டீர் (Ceylon Gazetteer) என்ற நூலில், தமிழர் பிரதேசங்களும் சிங்களவர் பிரதேசங்களும் தெளிவாக வரையறுத்துக் காட்டப்பட்டுள்ளன.

“தமிழர்கள் இலங்கையின் வடக்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் வாழ்கின்றனர். இவர்களது மாவட்டங்கள் குமுக்கன் ஆறு தொடக்கம்

யாழ்ப்பாணத்தைச் சுற்றி புத்தளம் வரையில் பரந்துள்ளது.”

(குறிப்பு:- குமுக்கன் ஆறு என்பது தற்போதைய கிழக்கு மாகாணத்தினதும் தென்மாகாணத்தினதும் எல்லையில் அமைந்துள்ளது.)

“சிங்களவர்கள் இலங்கையின் உட்பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களிலும் குமுக்கன் ஆறு தொடக்கம் வடக்கே சிலாபம் வரையுள்ள கரை யோரப் பிரதேசங்களிலும் வாழ்கின்றனர்.’

1796 ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானியர் ஆட்சிக்கு உட்பட்ட போதிலும், 1833ஆம் ஆண்டு வரை தமிழர் பிரதேசங்கள் ஒரு தனி நிர்வாகப் பிரதேசமாகவே இருந்து வந்தது. 1833ஆம் ஆண்டு கோல்புறூக் – கமரன் அரசியல் திட்ட அறிக்கையினைத் தொடர்ந்தே, இலங்கைத்தீவின் மாகாண – மாவட்ட எல்லைகள் ஆட்சியாளரால் நிர்ணயிக்கப்பட்டவையாகும். சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, வருமான சேகரிப்பு, செலவினைக் குறைத்தல் போன்ற நோக்கங்கள் கருதி காலனித்துவ ஆட்சியில் இந்நிர்வாக எல்லைகள் தீர்மானிக்கப்பட்டன.

இவற்றிற்கும் மேலாக கண்டிய மாகாணங்களின் தனித்துவத்தினை அழிப்பதும் ஆங்கிலேய அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக இருந் தது . 1818ஆம் ஆண்டுக் கண்டிக் கலவரமும் அதனைத் தொடர்ந்த மக்கள் எழுச்சியும், ஆங்கிலேய ஆட்சியாளர்களின் மனதில் பாதுகாப்பற்ற உணர்வு ஒன்றினை ஏற்படுத்திற்று. இதனால் கரந்தடிப் போர்முறையில் ஆற்றல் கொண்டிருந்த விடுதலை வீரர்களின் புகலிடமாக இருந்த மத்திய மலைநாட்டை, இலங்கையின் கரையோரப் பிரதேசங்களோடு இணைப் பது என அரசாங்கம் தீர்மானித்தது. இதன் மூலம் கண்டி மாகாணங்களில் காணப்பட்ட விடுதலைப் போராளிகளின் கிராமிய பொருளாதாரத்தினைச் சிதைக்க முடியும் என ஆங்கி லேய அரசாங்கம் கருதியது

கோல்புறூக் – கமரன் ஆணைக்குழுவின் சிபா ரிசுக்கமைய 1. 10. 1833 இல், இலங்கையில் ஐந்து மாகாணங்கள் (படம் 2). உருவாக்கப்பட்டன.

1. வடமாகாணம்

2. கிழக்கு மாகாணம்

3. மேல்மாகாணம்.

4. தென்மாகாணம்

5. மத்திய மாகாணம்

வடமாகாணம் பின்வரும் பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது.

1. யாழ்ப்பாணம்

2. நெடுந்தீவு

3. மன்னார்

4. வன்னி

5. நுவரகலாவிய ( அனுராதபுரம்)

கிழக்கு மாகாணம் பின்வரும் பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது.

1. மட்டக்களப்பு

2. திருகோணமலை

3. பிந்தன

4. தமன்கடுவ (பொலநறுவை) 1.9. 1873 இல் வடமாகாணத்திலிருந்த

நுவரகலாவிய மாவட்டமும் ( தற்போது அநுராதபுரம் மாவட்டம் ) கிழக்கு மாகாணத்திலிருந்த தமன்கடுவ மாவட்டமும் (தற்போது பொலநறுவை மாவட்டம் ) ஒன்றிணைக்கப்பட்டு, வடமத்திய மாகாணம் உருவாக்கப்பட்டது. 5.2.1886இல் ஊவா மாகாணம் உருவாக்கப் பட்டபோது, கிழக்கு மாகாணத்திலிருந்த பிந்தன பிரதேசம் ஊவா மாகாணத்தோடு சேர்க்கப்பட் டது. இதனைத் தொடர்ந்து தற்போதைய வட மாகாண, கிழக்கு மாகாண எல்லைகள் உருவாகின.

-C வரதராஜன் BA

-விடுதலைப்புலிகள் இதழ்.

வைகாசி 1994.

About nakkeran 199 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply