மகாவம்சத்தி்ல் புதைந்துள்ள …. 01-06 Monday, August 01, 2022 ‘உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்’ இலங்கை அரசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன், சிவனை வழிபாடும் [Siva worshipping] தீசன் [Tissa / தேவநம்பிய தீசன்], கி.மு. 307 இலிருந்து கி.மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த பொழுது, மகிந்த [Mahinda] துறவியின் தலைமையில், பேரரசன் அசோகனின் தூதர்கள் அவரையும் அவரின் குடி மக்களையும் புத்த மதத்திற்கு மாற்ற முன், இலங்கையில் எந்த பகுதியிலும் புத்த சமயம் என்று ஒன்றும் இருக்கவில்லை. அதே போல, மகா விகாரை துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவ்வேறு இனக் குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், [creating the Sinhala race by integrating all the Buddhists […]