புலிகளையும் குற்றவாளிகளாக்கும் ஐநா விசாரணைப் பொறிமுறையை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

(1) ஐநா விசாரணைக்குழுவின் பின் இழுபடுபவர்கள் அதன் ஆபத்தான இன்னொரு பக்கத்தை பார்க்கவில்லை. சிங்கள அரசின் குற்றங்களுக்கு நிகராக புலிகளின் குற்றங்களை ஆராயும் வாய்ப்புள்ளதையும் அதை தடுக்கும் வல்லமையோ அதற்கான பொறிமுறையோ அல்லாமல் எந்தவிதமான முன்நிபந்தனையுமின்றி இதன்பின் இழுபடுகிறார்கள்.
புலிகளின் குற்றங்களாக வரையறுக்கப்பட்டவை அடிப்படையில் குற்றங்களேயல்ல. இதை நாம் புரிந்து கொள்வதும் ஐநா விசாரணைக்குழுவில் இதற்கான வாதங்களை முன்வைப்பதும்தான் எமது முதல் பணியாக இருக்க வேண்டும்.
உங்களை ஒரு புலி எதிர்ப்பாளன் என்றே எண்ணியிருந்தேன். அது தவறான கணிப்பு என்பது இந்தக் கட்டுரையைப் படித்த போது தெரிகிறது. மகிழ்ச்சி.
போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் அரசுக்கும் ஆயுதம் எடுத்துப் போராடுபவர்களுக்கும் பொருந்தும். வி.புலிகள் போர் பற்றிய ஐநா விதிகளை தாம் பின்பற்றுவோம் என எழுத்தில் கொடுத்தவர்கள்.
(2) போலி ஆவணங்களின், பொய்க்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் புலிகளும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டால், எமக்கான நீதி தடம் புரண்டுவிடும்.
போலி ஆவணங்கள், பொய்க் குற்றச்சாட்டுகள் என எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்? சிறாரைப் படையில் சேர்த்ததை ஒப்புக் கொண்ட புலிகள் அவர்களை அமைப்பில் இருந்து நீக்கிவிட்டதாகச் சொன்னார்கள். பின்னர் போரின் இறுதிப் பகுதியில் புலிகள் மறுபடியும் அகவை குறைந்தவர்களை இயக்கத்தில் சேர்த்தார்கள். இதுதான் உண்மை. சேர்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது என்பது வேறு விடயம். அதேபோல் முஸ்லிம்களின் வெளியேற்றம், கிழக்கில் அப்பாவி முஸ்லிம்களை கொன்றது, அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன், சிவபாலன், கதிர்காமர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது. இவர்கள் இராணுவ இலக்கல்ல.
(3) விளைவாக மேற்குலக நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் ஒரு ஆட்சிமாற்றத்துடன் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும்.
விளைவாக இனஅழிப்பு வேறொரு வடிவில் எம்மை அழிப்பது மட்டும் தொடர்கதையாக இருக்கும். இதை நாம் எப்படி முறியடிக்கப்போகிறோம்? இனியாவது நமது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இதற்கான பொறிமுறையை உருவாக்கி புலிகளின் போராட்டத்தின் நியாயத்தை நிறுவுவார்களா?

எங்களது கண்ணோட்டத்தில் புலிகளது ஆயுதப் போராட்டத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால் சர்வதேச சட்டவாக்கத்தில் அப்படிப் பார்க்கவில்லை. பயங்கரவாத அமைப்பாகவே பார்த்தன. போரில் புலிகள் வென்றிருந்தால் அது ஒரு விடுதலை இயக்கமாக உலகம் பார்த்திருக்கும்.
குறைந்தபட்சம் இனஅழிப்பு அரசினதும் புலிகளினது குற்றங்களையும் சமப்படுத்தி ஆராயும் போக்கையாவது எம்மால் தடுத்து நிறுத்த முடியுமா?
நாம் உடனயாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம் இது.
மற்றவர்களுக்கு புரிய வைக்க முன்பாக எமக்காக போராடியவர்களின் நியாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
யதார்த்தம் என்ன வென்றால் 9/11 க்குப் பின்னர் நல்ல பயங்கரவாதிகள் கெட்ட பயங்கரவாதிகள் என்ற வேறுபாடு நீக்கப்பட்டு விட்டது.
இதனால் 32 நாடுகள் வி.புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்தன. இந்த புவியியல் அரசியல் மாற்றத்தை கணக்கில் எடுக்க புலிகள் தவறிவிட்டார்கள். தமிழீழ தனியரசுக் கோரிக்கையை முற்றாகக் கைவிட்டு ஒரு இணைப்பாட்சிக்கு இணங்கியிருக்கலாம்.
(4) எங்கெல்லாம் நாம் போய் நடந்த இன அழிப்பை பேசுகிறோமோ அங்கு எம்மிடம் இறுதியாக கேட்கப்படும் கேள்விகள், “புலிகள்கட்டாய ஆட்சேர்ப்பு செய்யவில்லையா? மக்களை பணய கைதிகளாக வைத்திருக்கவில்லையா? தப்பியோடிய மக்களை புலிகள் சுடவில்லையா?” என்பவைதான்.

அது குற்றங்கள் அல்ல. அது ஒரு சூழலின் விளைவுகள். அதிலிருக்கும் தர்க்கங்கள் தெளிவற்றவை. ஒரு இன அழிப்பு நோக்குடன் ஆக்கிரமிக்கும் அந்நிய படையின் செயல்களையும் அந்த மக்களை காக்க அந்த அந்நிய படைகளை எதிர்த்து ஆயுதம் எந்திய பிரதிநிதிகளையும் சமப்படுத்தி ஆராய்வதே அடிப்படை தவறு.
இந்த வாதங்கள் எடுபடாது. சிறிலங்கா படை அந்தியப்படை அல்ல. அது உள்நாட்டுப் படை.
(5) எமது பின்னடைவு எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் நடந்த நிகழ்வுகளை திரிப்பதற்கு வசதியாக மாறிவிட்டிருக்கிறது.
எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் மத்தியில் சிறீலங்கா, இநதியா அமெரிக்கா உட்பட பெரும் இராணுவ – அரசியல் வலையமைப்புக்கு எதிராக போராட வேண்டியிருப்பதை உணர்ந்து யாரும் தமக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் என்பதை கண்டறிந்து எதிரிகளை மக்களின் பலத்துடன் தமது மண்ணில் வைத்து அழித்தொழிப்பு செய்து ஒரு இராணுவ வெற்றியை அடைவதுதான் ஒரே தீர்வு என்பதை உணர்ந்து முன்பு கிளிநொச்சியையும் பின்பு அனந்தபுரத்தையும் ஒரு ஸ்ராலின்கிராட்டாக மாற்ற புலிகள் முயன்றார்கள்.

கிளிநொச்சியில் சண்டையே நடக்கவில்லை. எல்லாவற்றையும் கைவிட்டு அதைக் காலி செய்து விட்டார்கள். அனந்தபுரம் எதிர்த்தாக்குதல் வெற்றிபெறவில்லை. எப்போது புலிகளின் மன்னார்- மடுப் பிரதேச முன்னரங்கங்களை உடைத்துக் கொண்டு இராணுவம் முன்னேறியதோ அதன் பின்னர் இராணுவத்தை எதிர்கொள்ளக் கூடிய ஆட்பலம், ஆயுத பலம் புலிகளுக்கு இல்லாமல் போய்விட்டது. குறிப்பாக விமானத்தாக்குதல்களை எதிர்கொள்ள புலிகளிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை. இன்னும் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் ஒரு போரில் ஆட்பலமும், ஆயுதபலமும் உள்ள தரப்பே இறுதியில் வெற்றி பெறும். கிழக்கை 2006 -2007 இல் இழந்த பின்னர் புலிகள் பலவீனப்பட்டுப் போனார்கள். எதிரி பலம் அடைந்து போனான். கிழக்கில் இருந்த படையணிகளை வடக்குக்கு மாற்றினான்.
(6) அதன் பின்புலம்தான் காலத்தின் தேவை கருதி கட்டாய ஆட்சேர்ப்புக்களாகவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய குறைவான பயிற்சிகளுடன் களமுனைக்கு ஆட்கள் அனுப்பட்டதும் அதில் சில அசம்பாவிதங்களும் இதன் வழியேதான் நிறைவேறியது.
ஆனால் உள்ளிருந்து வேரறுத்த துரோகங்களும் சர்வதேச படைவலு கட்டமைப்புக்களின் இராணுவ- ராஜதந்திர- தொழில்நுட்ப உதவிகளும் சிறீலங்கா படுகொலை அரசிற்கு பெரும் பக்கபலமாக ஒன்றிணைந்து நின்று தமிழர் சேனையை எதிர்த்து போரிட்டன.. அந்த சின்னஞ்சிறிய படை இதற்கு மேல் என்ன செய்ய முடியும்.?

இது சரியானால் நேரகாலத்தோடு ஆயுதங்களை மவுனிக்கும் அறிவிப்பை புலிகள் விட்டிருக்கலாம். பெப்ரவரி – மார்ச்சு மாதத்தில் நோர்வே தயாரித்த போர் நிறுத்த உடன்பாட்டை புலிகள் நிராகரித்து விட்டார்கள். அதனை அப்போது ஏற்றுக் கொண்டிருந்தால் மனித அழிவுகளை தவிர்த்திருக்கலாம்.
(7)விளைவாக “செய் அல்லது செத்துமடி” என்ற ஓர்மத்துடன் இறுதிவரை போராடி வீழ்ந்தார்கள் புலிகள் அந்த மண்ணில.
இது படிக்க நன்றாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் போரை வெல்ல உதவாது.
இது படிக்க நன்றாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் போரை வெல்ல உதவாது.
(8) ஆனால் மனித உரிமை, போர்க்குற்றம் தொடர்பான இடங்களில் இதை பேச முடியாது. அதற்கு வேறு மொழியும் வேறு வகையான தர்க்கங்களும் வைக்கப்பட வேண்டும். நாம் அதை வைப்போம் ௲ பேசுவோம். நீதி கிடைக்கும் வரை பேசிக் கொண்டேயிருப்போம். ஏனென்றால் ஒரு மக்கள் விடுதலை அமைப்பையும் ஒரு இன அழிப்பு அரசையும் ஒரே தராசில் வைத்து மதிப்பிட முடியாது.
அரசையும் விடுதலைப் புலிகளையும் ஒரே தராசில் நிறுப்பதில்லை. சில விட்டுக் கொடுப்புக்களை ஐநா சபை செய்கிறது.
அரசையும் விடுதலைப் புலிகளையும் ஒரே தராசில் நிறுப்பதில்லை. சில விட்டுக் கொடுப்புக்களை ஐநா சபை செய்கிறது.
(9) புலிகள் போராட்டத்தின் தேவையையும் நீதியையும் நிலைநிறுத்துவதுதன் மறுவளமான உண்மை என்பது அங்கு நடந்தது ஒரு இனஅழிப்பு என்பதாகவே இருக்கும். அதைவிடுத்து புலிகளின் குற்றங்களையும் இன அழிப்பு அரசின் குற்றங்களையும் சமப்படுத்தினால் அது எமக்கு பாரிய பின்னடைவை தரும். சில தமிழர்கள் இந்த அயோக்கியத்தனத்தை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
உலகளாவிய அளவில் ஏற்பட்ட புவிசார் மாற்றங்களின் (சோவியத் ஒன்றியத்தின் மறைவு) பின்னர் உலகம் வி.புலிகளை பயங்கரவாதிகளாகவே பார்த்தது.
உலகளாவிய அளவில் ஏற்பட்ட புவிசார் மாற்றங்களின் (சோவியத் ஒன்றியத்தின் மறைவு) பின்னர் உலகம் வி.புலிகளை பயங்கரவாதிகளாகவே பார்த்தது.
(10) மற்றவர்களுக்கு புரிய வைக்க முன்பாக நாம் எமக்காக போராடியவர்களின் நியாயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
இது குறித்து முகநூலில் முன்பு Enemy at the Gates படத்தை முன்வைத்து ஒரு பதிவை எழுதியிருக்கிறேன்.
இது குறித்து முகநூலில் முன்பு Enemy at the Gates படத்தை முன்வைத்து ஒரு பதிவை எழுதியிருக்கிறேன்.
உலக சரித்திரத்தையே மாற்றியமைத்த வரலாறு Stalingrad நிலத்தில் வைத்து எழுதப்பட்டது நாம் அறிந்ததே. இந்த பின்புலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் அது. என்ன செய்வது சினிமாவை உதாரணமாகக் காட்டினால்தான் சிலருக்கு விளக்கமே கிடைக்கிறது.
ஆக்கிரமிப்பாளர்களை என்ன விலை கொடுத்தாவது துரத்தியடிக்க வேண்டும் என்பதற்காக பெரும் அழிவுக்கு மத்தியிலும் போராட முற்படும் ரஸ்யா தனது நாடு முழுவதிலிருந்தும் ஆட்களை வலுக்கட்டாயமாக போர் முனைக்கு கொண்டுவருவதும் எந்த பயிற்சியுமில்லாமல் போதிய ஆயுதங்கள் கூட இல்லாமல் அவர்களை கள முனையில் இறக்குவதும் மிகவும் தத்ருபமாக காட்சிப்படுத்தப்ட்டடுள்ளது. மீறி தப்பி ஓடுபவர்களை ரஸ்ய வீரர்கள் “தாய்நாட்டை காக்காமல் ஓடும் நீ வாழத் தகுதியற்றவன்” என்று சுட்டுக்கொல்லும் காட்சிகளும் நேர்மையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி சோர்க்கப்பட்ட ஒரு இளைஞன் காலத்தின் தேவை கருதி போர் முனையில் ஆக்கிரமிப்பாளர்களை துரத்தியடிக்க துணிச்சலுடனும் அhப்பணிப்புடனும் செயற்படுவதை விபரிப்பதே இத் திரைப்படத்தின் மையக்கதை.. வெற்றியின் பின்னால் இத்தகைய கதைகள் ஏராளமாக இருப்பதை உணர முடிகிறது.

வன்னி இறுதிப்போரிலும் புலிகள் குறித்து இங்கு வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் “stalingrad” இல் ரஸ்ய வீரர்களின் செயற்பாட்டிற்கு ஒப்பானது. வெற்றி பெற்றதால் அது வரலாறாகியது. இங்கு தோற்றுப்போனதால் குற்றங்களாக மாற்றப்பட்டுள்ளன.
உண்மை. வெற்றிபெற்றவன் வரலாற்றை எழுதுகிறான். எல்லைக் கோடுகளையும் அவன் கீறுகிறான். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் இதுதான் நடந்தது. நடக்கிறது!
உண்மை. வெற்றிபெற்றவன் வரலாற்றை எழுதுகிறான். எல்லைக் கோடுகளையும் அவன் கீறுகிறான். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் இதுதான் நடந்தது. நடக்கிறது!
(11) இறுதிக்காலத்தில் புலிகள் மீது வைக்கப்படும் குற்றங்களின் உளவியல் இந்த பின்புலத்திலேயே ஆராயப்பட வேண்டும். நாம் ஏற்கனவே தெளிவாக இந்த உளவியலை ஆய்வு செய்திருக்கிறோம். அதை வரலாற்றில் பதிவாக்குவோம். எமக்காக போராடியவர்கள் மீதான குற்றங்களை களைய வேண்டியது நமது கடமை. நிச்சயம் அதைச் செய்வோம்.
இது புலிகளைப் புனிதப்படுத்துவதற்காக அல்ல ௲ எமக்கான நீதியை பெற நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய தார்மீக கடமை இது.
புலிகள் தங்களது அர்ப்பணிப்பால் ஒரேயொரு காரியத்தை சாதித்துள்ளார்கள். அதுதான் எமது சிக்கலை சர்வதேச மயப்படுத்தியது. இதன் காரணமாகவே அமெரிக்கா, ஐக்கிய இராஜ்சியம், கனடா போன்ற நாடுகள் இலங்கையில் ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன.

எமது போராட்டம் ஏன் தோற்றது? அதற்கான புறக்காரணிகள் என்ன? அகக் காரணிகள் என்ன? என்பவை பற்றி ஒரு நீண்ட ஆய்வை நாம் மேற்கொள்ள வேண்டும்.
நக்கீரன்.
Related
விடுதலை புலிகள் இயக்கத்தின் மேல் உள்ள தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியதை இட்டு ஒரு ஈழத்தமிழனின் கருத்து!July 31, 2017In “கதம்பம்”
இலங்கை குடும்பத்தை பிரித்தது அவுஸ்திரேலியா- ஐநா அமைப்பு கடும் கண்டனம்.July 18, 2018In “இலங்கை”
அணுவாயுதத் தடை ஒப்பந்தம்: 120 நாடுகள் ஆதரவு! அமெரிக்கா, இந்தியா நிராகரிப்பு!July 9, 2017In “உலகம்”