சட்டமூலம் சி-49 ஏதிலிகளுக்குப் பெரிதும் நியாயமற்றது!
சட்டமூலம் சி-49 ஏதிலிகளுக்குப் பெரிதும் நியாயமற்றது, இந்தச் சட்டம் பன்னாட்டு மற்றும் கனடிய சட்டங்களின் கீழ் காணப்படும் கடப்பாடுகளை மதிக்கத் தவறுகிறது, தனிப்பட்ட ஏதிலிகளின் வழக்குகள் சுதந்திரமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்ற நீதியைப் பிடுங்குகிறது, தேவையற்ற முறையில் தடுத்து வைப்பது பெருமளவு செலவுக்கு வழிவகுக்கும்.
சட்டமூலம் சி-49 ஆட்கடத்தலை ஒரு போதும் தடுக்காது. மேலதிகமான சட்டங்கள் கடத்தல்காரர்களைப் பிடிக்காது. அவர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். கட்டாய சிறைத் தண்டனைகள் அவர்களைத் தடுக்கப் போவதில்லை. குடிவரவு மற்றும் ஏதிலிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆட்கடத்தல் ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய குறைந்த தண்டனைகளும் தடுப்புகளாகச் செயல்படுவதாக இல்லை. அரசியல் அடைக்கலம் கோரி வரும் ஏதிலிகள் ஒரு நாட்டுக்கு வருமுன் அந்த நாட்டின் சட்டங்கள் பற்றி அவர்களுக்கு சிறிதாகவோ அல்லது முற்றாகவோ தெரியாது, அப்படித் தெரிந்திருந்தாலும், தங்கள் உயிர் பற்றிய நம்பிக்கையற்ற பயம் எதைச் செய்தும் துன்புறுதலில் இருந்து தப்ப அவர்களைக் கட்டாயப்படுத்துகிறது. அவுஸ்ரேலியா ஏதிலிகளைத் தடுக்க அவர்களுக்குத் தண்டனை வழங்க முயற்சி செய்தது. ஆனால் அது பயனளிக்கவில்லை.
சட்டமூலம் சி-49 கட்டாயமாகத் தோற்கடிக்கப்பட வேண்டும். அரசு ஏதிலிகளைத் தண்டிக்காத வகையில் ஆட்கடத்தல் சிக்கலைக் கையாள வேண்டும். .
சட்டமூலம் சி-49 ஏதிலிகளைத் தண்டிக்கிறது
இந்தச் சட்டமூலம் ஆட்கடத்தல்காரர்களை இலக்குவைக்கும் ஒரு சட்டமாக முன்வைக்கப்பட்டுள்ளது, ஆனால் பெரும்பாலான விதிகள் ஆட்கடத்தல்காரர்களைத் தண்டிக்காமல் ஏதிலிகளைத் தண்டிக்கிறது. சட்டமூலம் சி-49 இன் கீழ், ஏதிலிகள், ஏதிலிச் சிறார்கள் உட்பட, ஒரு ஆண்டுக்குக் கட்டாயமாகத் தடுத்து வைக்கப்படுவர். இவர்களுக்குச் சுதந்திரமான மறு ஆய்வு இருக்கும் சாத்தியம் இல்லை. மேலும் அவர்களது குடும்ப மீள்இணைவுக்கும் 5 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்கும் உரிமையும் இல்லை. சட்டமூலம் சி-49 இன் கீழ் ஏதிலிகள் மூன்று முறை தண்டிக்கப்படுவார்கள்: முதல்முறையாக அவர்களது துன்புறுத்தாளர்களால், இரண்டாவது முறையாக ஆட்கடத்தல்காரர்களால், இறுதியாகக் கனடாவால்.
சட்டமூலம் சி-49 கனடாவின் பட்டயம் மற்றும் பன்னாட்டு மனிதவுரிமைகள் பற்றிய கடப்பாடுகளை மீறுகிறது
இந்தச் சட்டமூலம் கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான பட்டயம் பாதுகாக்கும் எண்ணற்ற உரிமைகளையும் மேலும் கனடா கைச்சாத்திட்ட ஏதிலிகளது தகுதி (ஏதிலிகள் மரபு) மற்றும் குழந்தைகளது உரிமை மரபு உட்பட மற்றும் பன்னாட்டு மரபுகளை (கனடா) மீறுகிறது.
சட்டமூலம் சி-49 பாரபட்சமானது
இந்தச் சட்டமூலம் இரண்டுவித வகுப்பு ஏதிலிகளை உருவாக்குகிறது. ஒரு வகுப்பினர் ( எப்படிவந்தார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு “சுட்டப்பட்ட” ) மற்றவகுப்பார்களைவிட மட்டமாக நடத்தப்படுவர். இது பாரபட்சம் காட்டுவதோடு எல்லோரும் சட்டத்தின் முன் சமம் எனப் பொறுப்புறுதி செய்யும் கனடிய பட்டயத்துக்கும் பாரபட்சமானது. (பகுதி 15)
சட்டமூலம் சி-49 ஏதிலிகள் எப்படி வந்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களைத் தண்டிக்கிறது
இந்தச் சட்டமூலம் ஏதிலிகள் மரபுக்கு மாறாக “சுட்டப்பட்ட” ஆட்கள் மீது தொடர் தண்டனைகளைத் திணிக்கிறது. ஏதிலிகள் மரபு சட்டத்துக்கு முரணாக வருபவர்கள் மீது தண்டனை விதிப்பதைத் துலாம்பரமாகத் தடைசெய்கிறது. (விதி 31)
சட்டமூலம் சி-49 நியாயமற்ற தடுப்புக்காவலைத் திணிக்கிறது
இந்தச் சட்டமூலம் சுதந்திரமான மீளாய்வு இல்லாது சுட்டப்பட்ட ஏதிலிகளுக்குக் கட்டாய தடுப்புக் காவலை விதிக்கிறது. இது தான்தோன்றித்தனமான தடுப்புக்காவல். இது கனடிய பட்டயத்துக்கும் பன்னாட்டு சட்டத்துக்கும் எதிரானது.
அப்படித் தடுப்புக் காவலுக்கு உட்படுத்தப்படுபவர்களில் சிறார்களும் அடங்கவார்கள். அமைச்சர் அவர்களால் “அசாதாரண சூழ்நிலை” என்ற அடிப்படையில் அந்தச் சிறார்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அல்லது தன்விருப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்டால் ஒழிய சுட்டப்பட்ட ஆள்கள் தங்களது தடுப்புக்காவல் மீளாய்வுக்கு வழி செய்வதற்கு முன்னர் ஓர் ஆண்டு தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள்
கனடிய உச்ச நீதிமன்றம் அண்மையில் நீண்ட காலத்துக்கு மீளாய்வு செய்யத் தவறுவது கனடிய பட்டயத்துக்கு எதிரானது எனத் தெளிவாகக் கூறியுள்ளது. இருந்தும் சட்டமூலம் சி-49 இதையேதான் முன்மொழிகிறது.
தான்தோன்றித்தனமான தடுப்புக்காவல் பன்னாட்டு சட்டங்களின், குறிப்பாக குடிமக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட மூலம் அமைச்சர், ஏதிலிகள் தங்கள் அடையாளத்தை எண்பிக்கத் தவறிவிட்டார்கள் என்ற எண்ணம் உடையவராக இருப்பின். ஏதிலிகள் விடுவிக்கப்படும் போது கட்டாய நிபந்தனைகளைத் திணிக்கவும் அவர்கள் வெளியில் வரும் சாத்தியம் இல்லாதவாறு காலவரையின்றி 12 மாதங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கவும் வழிசெய்கிறது.
சட்டமூலம் சி-49 சம நீதி பெறுவதற்கான உரிமையை மறுக்கிறது
இந்தச் சட்டமூலம் குறிப்பிட்ட ஒருவர் தனக்கு எதிர்மறையான தீர்ப்புக்கு எதிராக ஏதிலிகள் வாரியத்தின் ஏதிலிகள் மேன்முறையீடுப் பிரிவுக்கு மேன்முறையீடு செய்யும் உரிமையை மறுக்கிறது. ஒருவரது உயிர் மற்றும் சுதந்திரம் கேள்விக்குறியாகும் போது மேன்முறையீடு என்பது ஏதிலிகள் தொடர்பான முடிவுக்கு எதிராக அடிப்படைப் பாதுகாப்பு ஆகும். முதல் மட்டத்தில் பிழைகளைத் திருத்தும் வாய்ப்பை நீக்குவதன் மூலம் இந்தச் சட்ட மூலம் ஏதிலிகள் தொடர்பாக கனடா அதன் முக்கிய அடிப்படைக் கடப்பாடுகளை மீறும் இடர்பாட்டில் உள்ளது. அதாவது அவர்களை துன்புறுத்தலுக்கு மீண்டும் அனுப்பக் கூடாது என்பதாகும். (ஏதிலிகள் மரபு, விதி 33)
சட்டமூலம் சி-49 குடும்ப மீள் இணைவை முட்டுக்கட்டை போடுகிறது
இந்த சட்ட மூலம் 5 ஆண்டுகளில் நிரந்தர வாழ்விடத்துக்கு விண்ணப்பம் செய்யும் சில ஏதிலிகளது உரிமையை அபகரிக்கிறது. அதாவது சிறார்கள் உட்படத் தங்கள் குடும்பங்களோடு மீள் இணைதலை இந்தச் சட்ட மூலம் தடுக்கிறது. இது சிறார்கள் பற்றிய மரபு, குடிமக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் மற்றும் பன்னாட்டுப் பொருளியல், சமூகம் மற்றும் பண்பாடு பற்றிய உடன்படிக்கை ஆகியவற்றால் பொறுப்புறுதி கொடுக்கப்பட்ட குடும்ப வாழ்க்கைக்குரிய உரிமையை மீறுகிறது.
சட்டமூலம் சி-49 ஏதிலிகளது பயண உரிமையை மறுக்கிறது
இந்தச் சட்டமூலம் பயண ஆவணத்தைப் பெறும் ஏதிலிகளது உரிமையை, ஏதிலிகள் மரபு சுட்டப்பட்ட ஏதிலிகளுக்கு நல்கும் பாதுகாப்பை (விதி 28) மறுக்கிறது. இந்தச் சட்ட மூலம் மரபை முறைகேடாகவும் தன்னிச்சையாகவும் மொழிபெயர்ப்பதன் மூலம் சுட்டப்பட்ட ஏதிலிகளது உரிமையை மறுக்கிறது.
சட்டமூலம் சி-49 ஏதிலிகள் ஒன்றுபடுத்தலைத் தடுக்கிறது
இந்தச் சட்டமூலம் சுட்டப்பட்ட ஏதிலிகள் 5 ஆண்டுகளில் நிரந்தர வாழ்விடத்துக்கு விண்ணப்பம் செய்யும் உரிமையை மறுப்பதன் மூலம் அவர்கள் கனடிய சமூகத்தோடு ஒன்றுபடுவதைக் குறிப்பிடத்தக்கவாறு தாமதம்செய்வதோடு குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்வதையும் தாமதிக்கிறது. இது ஏதிலி்கள் மரபின் கீழ் உள்ள கடப்பாட்டுக்கு எதிரிடையானது. ஏதிலிகள் மரபு “தன்மயப்படுத்தல் மற்றும் குடியுரிமை பெறுதலை” எளிதாக்குகிறது (விதி 34). கனடாவுக்கு ஏற்கனவே ஏதிலிகளை நீண்ட காலத்துக்குக் கிடப்பில் வைத்திருக்கும் பட்டறிவு உண்டு: ஆயிரக்கணக்கானோருக்கு ஆண்டுக்கணக்கில் நிரந்தரவாழ்விட உரிமை மறுக்கப்பட்ட போது 1990 களில் சோமாலிய ஏதிலிகள் தொடர்பாக முயற்சி செய்யப்பட்டது. இந்தக் கோட்பாடு பேரிடராக அமைந்தது. தனிப்பட்டவர்களையும் சமூகத்தையும் பாரிய அல்லலுக்கு உள்ளாக்கியது. இறுதியாக அரசு தனது கொள்கையை மாற்றியதன் மூலம் நீதிமன்ற அறைகூறுதலை முடிவுக்குக் கொண்டு வந்தது.
சட்டமூலம் சி-49 சிறார்களின் உயர்வான நன்மைகளைக் கணக்கில் கொள்வதைத் தடைசெய்கிறது
இந்தச் சட்டமூலம் சிறார்கள் உட்பட சுட்டப்பட்ட ஆள்களின் மனிதநேயம் மற்றும் கருணை அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு விண்ணப்பம் செய்வதைத் தடுக்கிறது. இந்த விண்ணப்பமே சிறார்களின் உயர்வான நன்மைகளை கணக்கில் கொள்ளும் ஒரே வழியாகும். இந்தச் சட்டமூலத்தின் கீழ் சிறார்களது உயர்வான நன்மைகளைக் கருத்தில் கொள்ளாது, சிறார்களின் உரிமை மரபை மீறிக் கனடாவில் இருந்து அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.
சட்டமூலம் சி-49 இல் காணப்படும் தடுப்புகளை அவுஸ்திரேலியா முயற்சித்துப் பார்த்துத் தோல்வி கண்டது
அவுஸ்திரேலியா ஏதிலிகள் படகுகள் மூலம் வரவதைத் தடுக்க முகமாக அவர்களைச் சிறையில் அதிக காலம் அடைத்து அவர்களுக்கு நிரந்தர வாழ்விடத் தகுதியை, ஏதிலி தகைமை வழங்கப்பட்டிருந்தாலும், மறுத்தது. இந்தக் கோட்பாடு சிறை பட்டறிவு காரணமாக ஏதிலிகள், பல குழந்தைகள் உட்பட, மன அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட அவுஸ்திரேலிய மனித உரிமை ஆணையம் குடிவரவு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சிறார்கள் பற்றி ஒரு தேசிய விசாரணையை மேற்கொண்டது. இந்த விசாரணையில் அவுஸ்திரேலிய தடுப்பு மையங்களில் இருந்த சிறார்களது மனித உரிமைகள் எண்ணற்ற அளவிலும் அத்துமீறல் மீளவும் மீளவும் இடம்பெற்றதைக் கண்டு பிடித்தது. ஏதிலிகளது குடும்ப மீள் இணைப்பை பிடுங்கிக் கொண்டது ஏதிலிகளைத் தடுப்பதற்குப் பதில் பலரைப் படகுகள் மூலம் வரச் செய்தது. பின்னர் வந்த படகுகள் சட்ட வழிமுறைகள் மூலம் தங்கள் குடும்பங்களை கொண்டுவர முடியாத போது அவர்களது மனைவி பிள்ளைகளை ஏதிலிகளாகக் கொண்டு வந்தன. அவுஸ்திரேலிய பொதுமக்கள் இது தொடர்பாக ஆழமாகப் பிளவுபட்டுக் காணப்பட்டனர். முன்னர் தொடர்பில்லாத குடிமக்கள் தங்கள் நாடு ஏதிலிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தவதை எதிர்க்கும் அடிமட்ட மக்களோடு சேர்ந்து கொண்டார்கள். கடந்த 3 ஆண்டு காலமாக அவுஸ்திரேலியா ஏதிலிகளைத் தடுத்து வைத்தல் மற்றும் தற்காலிக தகைமை கொடுத்தல் ஆகியவற்றில் இருந்து விலகிச் சென்றுள்ளது.
சட்டமூலம் சி-49 ஏதிலிகளை அநேகமாகத் தடுக்காது
அய்க்கிய இராச்சியத்தில் மேற்கொண்ட ஆய்வு ஏதிலிகள் ஒரு நாட்டின் குடிவரவுக் கொள்கையின் அடிப்படையில் நாடுகளைத் தெரிவு செய்வதில்லை என்பதைக் காட்டியது. அண்மையில் மேற்கொண்ட ஒரு ஆய்வில் கலந்து கொண்ட ஏதிலிகள் தாங்கள் குறிப்பாக அய்க்கிய இராச்சியத்துக்குப் போகவேண்டும் என்று சொல்லவில்லை. அநேகமானோருக்குத் தாங்கள் எங்கே போகவேண்டும் என்பது அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. “மிகப் பெரும்பான்மையோருக்கு (பதில் அளித்த பத்தில் ஒன்பது பேருக்கு) அய்க்கிய இராச்சியத்துக்கு வரு முன்னர் அந்த நாட்டின் அரசியல் அடைக்கலக் கொள்கைபற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. ”
சட்டமூலம் சி – 49 அய்யத்தின் பேரில் குடியுரிமை இல்லாதவர்களைத் தடுத்து வைப்பதற்கு பரந்துபட்ட புதிய அதிகாரங்களை வழங்குகிறது
இந்த சட்டமூலம் குற்றம் இழைத்தார் என்ற வெறும் அய்யத்தின் அடிப்படையில் நிரந்தர வாழ்விட உரிமையாளர் உட்பட, குடியுரிமை இல்லாதவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்திருக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குகிறது. இந்த விதி சுட்டப்பட்ட ஆட்களை அல்லது ஏதிலி கோரிக்கையாளர்களை மட்டும் மட்டுப்படுத்தவில்லை, இது குடிமக்கள் அல்லாத அனைவரையும் மட்டுப்படுத்துகிறது.
முடிவு
சட்டமூலம் சி – 49 இரண்டாவது வாசிப்பின் போது தோற்கடிக்கப் படவேண்டும். அரசு ஆட்கடத்தல் சிக்கலை தீர்ப்பதற்கு ஏதிலிகளைத் தண்டிக்காமல் வேறுவழிகளை கருத்தில் கொள்ளவேண்டும்.
http://ccrweb.ca/en/c49-key-concerns
Bill C-49 is deeply unfair to refugees; it fails to honour obligations under Canadian and international law; it deprives individual cases from the independent review that justice requires; it will involve huge costs in unnecessary detention.
சட்டமூலம் சி-49 ஏதிலிகளுக்குப் பெரிதும் நியாயமற்றது, இந்தச் சட்டம் பன்னாட்டு மற்றும் கனடிய சட்டங்களின் கீழ் காணப்படும் கடப்பாடுகளை மதிக்கத் தவறுகிறது, தனிப்பட்ட ஏதிலிகளின் வழக்குகள் சுதந்திரமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்ற நீதியைப் பிடுங்குகிறது, தேவையற்ற முறையில் தடுத்து வைப்பது பெருமளவு செலவுக்கு வழிவகுக்கும்.
Bill C-49 will do nothing to prevent human smuggling. More laws will not catch the smugglers, who are overseas. Mandatory minimum sentences will not deter: under the Immigration and Refugee Protection Act smuggling is already punishable by life imprisonment and mandatory minimums have been shown not to work as deterrents. Refugees know little or nothing about the laws before they arrive in a country of asylum, and even if they know, desperate fear for their lives forces them to do whatever they must to flee persecution. Australia tried punishing refugees to deter them: it didn’t work.
சட்டமூலம் சி-49 ஆட்கடத்தலை ஒரு போதும் தடுக்காது. மேலதிகமான சட்டங்கள் கடத்தல்காரர்களைப் பிடிக்காது. அவர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். கட்டாய சிறைத் தண்டனைகள் அவர்களைத் தடுக்கப் போவதில்லை. குடிவரவு மற்றும் ஏதிலிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆட்கடத்தல் ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய குறைந்த தண்டனைகளும் தடுப்புகளாகச் செயல்படுவதாக இல்லை. அரசியல் அடைக்கலம் கோரி வரும் ஏதிலிகள் ஒரு நாட்டுக்கு வருமுன் அந்த நாட்டின் சட்டங்கள் பற்றி அவர்களுக்கு சிறிதாகவோ அல்லது முற்றாகவோ தெரியாது, அப்படித் தெரிந்திருந்தாலும், தங்கள் உயிர் பற்றிய நம்பிக்கையற்ற பயம் எதைச் செய்தும் துன்புறுதலில் இருந்து தப்ப அவர்களைக் கட்டாயப்படுத்துகிறது. அவுஸ்ரேலியா ஏதிலிகளைத் தடுக்க அவர்களுக்குத் தண்டனை வழங்க முயற்சி செய்தது. ஆனால் அது பயனளிக்கவில்லை.
Bill C-49 must be defeated. The government should address the problem of smuggling in ways that do not punish refugees.
சட்டமூலம் சி-49 கட்டாயமாகத் தோற்கடிக்கப்பட வேண்டும். அரசு ஏதிலிகளைத் தண்டிக்காத வகையில் ஆட்கடத்தல் சிக்கலைக் கையாள வேண்டும். .
Bill C-49 punishes refugees
சட்டமூலம் சி-49 ஏதிலிகளைத் தண்டிக்கிறது
The bill has been presented as legislation targeting smugglers, but in fact most of the provisions punish not smugglers, but refugees. Under Bill C-49, refugees, including refugee children, will be mandatorily detained for a year, without possibility of independent review, and denied family reunification and the right to travel abroad for over 5 years. Under Bill C-49, refugees will be victimized three times: first by their persecutors, secondly by the smugglers and finally by Canada.
இந்தச் சட்டமூலம் ஆட்கடத்தல்காரர்களை இலக்குவைக்கும் ஒரு சட்டமாக முன்வைக்கப்பட்டுள்ளது, ஆனால் பெரும்பாலான விதிகள் ஆட்கடத்தல்காரர்களைத் தண்டிக்காமல் ஏதிலிகளைத் தண்டிக்கிறது. சட்டமூலம் சி-49 இன் கீழ், ஏதிலிகள், ஏதிலிச் சிறார்கள் உட்பட, ஒரு ஆண்டுக்குக் கட்டாயமாகத் தடுத்து வைக்கப்படுவர். இவர்களுக்குச் சுதந்திரமான மறு ஆய்வு இருக்கும் சாத்தியம் இல்லை. மேலும் அவர்களது குடும்ப மீள்இணைவுக்கும் 5 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்கும் உரிமையும் இல்லை. சட்டமூலம் சி-49 இன் கீழ் ஏதிலிகள் மூன்று முறை தண்டிக்கப்படுவார்கள்: முதல்முறையாக அவர்களது துன்புறுத்தாளர்களால், இரண்டாவது முறையாக ஆட்கடத்தல்காரர்களால், இறுதியாகக் கனடாவால்.
Bill C-49 violates the Charter and Canada’s international human rights obligations
சட்டமூலம் சி-49 கனடாவின் பட்டயம் மற்றும் பன்னாட்டு மனிதவுரிமைகள் பற்றிய கடப்பாடுகளை மீறுகிறது
The bill violates numerous rights protected by the Canadian Charter of Rights and Freedoms and by international conventions to which Canada is signatory, including the Convention relating to the Status of Refugees (Refugee Convention) and the Convention on the Rights of the Child.
இந்தச் சட்டமூலம் கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான பட்டயம் பாதுகாக்கும் எண்ணற்ற உரிமைகளையும் மேலும் கனடா கைச்சாத்திட்ட ஏதிலிகளது தகுதி (ஏதிலிகள் மரபு) மற்றும் குழந்தைகளது உரிமை மரபு உட்பட மற்றும் பன்னாட்டு மரபுகளை (கனடா) மீறுகிறது.
Bill C-49 is discriminatory
சட்டமூலம் சி-49 பாரபட்சமானது
The bill creates two classes of refugees, with one class (those “designated” based on mode of arrival) treated worse than the other. This is discriminatory and contrary to the Charter, which guarantees equality before the law (section 15).
இந்தச் சட்டமூலம் இரண்டுவித வகுப்பு ஏதிலிகளை உருவாக்குகிறது. ஒரு வகுப்பினர் ( எப்படிவந்தார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு “சுட்டப்பட்ட” ) மற்றவகுப்பார்களைவிட மட்டமாக நடத்தப்படுவர். இது பாரபட்சம் காட்டுவதோடு எல்லோரும் சட்டத்தின் முன் சமம் எனப் பொறுப்புறுதி செய்யும் கனடிய பட்டயத்துக்கும் பாரபட்சமானது. (பகுதி 15)
Bill C-49 penalizes refugees based on mode of arrival
சட்டமூலம் சி-49 ஏதிலிகள் எப்படி வந்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களைத் தண்டிக்கிறது
The bill imposes a series of penalties on “designated” persons, in violation of the Refugee Convention, which explicitly prohibits States from imposing penalties on refugees for illegal entry (article 31).
இந்தச் சட்டமூலம் ஏதிலிகள் மரபுக்கு மாறாக “சுட்டப்பட்ட” ஆட்கள் மீது தொடர் தண்டனைகளைத் திணிக்கிறது. ஏதிலிகள் மரபு சட்டத்துக்கு முரணாக வருபவர்கள் மீது தண்டனை விதிப்பதைத் துலாம்பரமாகத் தடைசெய்கிறது. (விதி 31)
Bill C-49 imposes arbitrary detention
சட்டமூலம் சி-49 நியாயமற்ற தடுப்புக்காவலைத் திணிக்கிறது
The bill requires the mandatory detention of designated persons, without independent review. This is arbitrary detention, which is contrary to the Charter and to international law.
இந்தச் சட்டமூலம் சுதந்திரமான மீளாய்வு இல்லாது சுட்டப்பட்ட ஏதிலிகளுக்குக் கட்டாய தடுப்புக் காவலை விதிக்கிறது. இது தான்தோன்றித்தனமான தடுப்புக்காவல். இது கனடிய பட்டயத்துக்கும் பன்னாட்டு சட்டத்துக்கும் எதிரானது.
Among those detained will be children. Unless they are accepted as refugees or released on discretionary grounds by the Minister, based on “exceptional circumstances”, designated persons will remain in detention for one year before having access to review of their detention.
அப்படித் தடுப்புக் காவலுக்கு உட்படுத்தப்படுபவர்களில் சிறார்களும் அடங்கவார்கள். அமைச்சர் அவர்களால் “அசாதாரண சூழ்நிலை” என்ற அடிப்படையில் அந்தச் சிறார்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அல்லது தன்விருப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்டால் ஒழிய சுட்டப்பட்ட ஆள்கள் தங்களது தடுப்புக்காவல் மீளாய்வுக்கு வழி செய்வதற்கு முன்னர் ஓர் ஆண்டு தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள்
The Supreme Court of Canada has recently clearly stated that unreviewed detention for lengthy periods is contrary to the Charter (section 7).[1] Yet this is exactly what Bill C-49 proposes.
கனடிய உச்ச நீதிமன்றம் அண்மையில் நீண்ட காலத்துக்கு மீளாய்வு செய்யத் தவறுவது கனடிய பட்டயத்துக்கு எதிரானது எனத் தெளிவாகக் கூறியுள்ளது. இருந்தும் சட்டமூலம் சி-49 இதையேதான் முன்மொழிகிறது.
Arbitrary detention is also prohibited by international law, notably by the International Covenant on Civil and Political Rights.
தான்தோன்றித்தனமான தடுப்புக்காவல் பன்னாட்டு சட்டங்களின், குறிப்பாக குடிமக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது.
The bill also provides for mandatory conditions imposed on release, and for persons to be indefinitely detained, beyond 12 months, without possibility of release, if the Minister is of the opinion that their identity has not been established. Both these additional measures deprive persons of liberty, without the opportunity for an independent tribunal to review whether they are necessary in the individual case, contrary to the Charter and international law.
இந்தச் சட்ட மூலம் அமைச்சர், ஏதிலிகள் தங்கள் அடையாளத்தை எண்பிக்கத் தவறிவிட்டார்கள் என்ற எண்ணம் உடையவராக இருப்பின். ஏதிலிகள் விடுவிக்கப்படும் போது கட்டாய நிபந்தனைகளைத் திணிக்கவும் அவர்கள் வெளியில் வரும் சாத்தியம் இல்லாதவாறு காலவரையின்றி 12 மாதங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கவும் வழிசெய்கிறது.
Bill C-49 denies the right to equal access to justice
சட்டமூலம் சி-49 சம நீதி பெறுவதற்கான உரிமையை மறுக்கிறது
The bill denies designated persons the right to appeal a negative refugee decision to the Immigration and Refugee Board’s Refugee Appeal Division. An appeal is a fundamental safeguard in refugee decision-making, where a person’s life and liberty may be at stake. By eliminating the opportunity to correct errors at the first level, the bill puts Canada at risk of violating its most fundamental obligation towards refugees: not to send them back to persecution (Refugee Convention, article 33).
இந்தச் சட்டமூலம் குறிப்பிட்ட ஒருவர் தனக்கு எதிர்மறையான தீர்ப்புக்கு எதிராக ஏதிலிகள் வாரியத்தின் ஏதிலிகள் மேன்முறையீடுப் பிரிவுக்கு மேன்முறையீடு செய்யும் உரிமையை மறுக்கிறது. ஒருவரது உயிர் மற்றும் சுதந்திரம் கேள்விக்குறியாகும் போது மேன்முறையீடு என்பது ஏதிலிகள் தொடர்பான முடிவுக்கு எதிராக அடிப்படைப் பாதுகாப்பு ஆகும். முதல் மட்டத்தில் பிழைகளைத் திருத்தும் வாய்ப்பை நீக்குவதன் மூலம் இந்தச் சட்ட மூலம் ஏதிலிகள் தொடர்பாக கனடா அதன் முக்கிய அடிப்படைக் கடப்பாடுகளை மீறும் இடர்பாட்டில் உள்ளது. அதாவது அவர்களை துன்புறுத்தலுக்கு மீண்டும் அனுப்பக் கூடாது என்பதாகும். (ஏதிலிகள் மரபு, விதி 33)
Bill C-49 blocks family reunification
சட்டமூலம் சி-49 குடும்ப மீள் இணைவை முட்டுக்கட்டை போடுகிறது
The bill deprives some refugees of the right for 5 years to apply for permanent residence, and therefore for reunification with their families, including their children. This is a violation of the right to family life, guaranteed by the Convention on the Rights of the Child, the International Covenant on Civil and Political Rights and the International Covenant on Economic, Social and Cultural Rights.
இந்த சட்ட மூலம் 5 ஆண்டுகளில் நிரந்தர வாழ்விடத்துக்கு விண்ணப்பம் செய்யும் சில ஏதிலிகளது உரிமையை அபகரிக்கிறது. அதாவது சிறார்கள் உட்படத் தங்கள் குடும்பங்களோடு மீள் இணைதலை இந்தச் சட்ட மூலம் தடுக்கிறது. இது சிறார்கள் பற்றிய மரபு, குடிமக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் மற்றும் பன்னாட்டுப் பொருளியல், சமூகம் மற்றும் பண்பாடு பற்றிய உடன்படிக்கை ஆகியவற்றால் பொறுப்புறுதி கொடுக்கப்பட்ட குடும்ப வாழ்க்கைக்குரிய உரிமையை மீறுகிறது.
Bill C-49 denies refugees the right to travel
சட்டமூலம் சி-49 ஏதிலிகளது பயண உரிமையை மறுக்கிறது
The bill denies designated refugees the right, protected by the Refugee Convention, to a refugee travel document (article 28). The bill proposes to legislate away the right by improperly and arbitrarily interpreting the Convention not to apply to designated refugees. This would prevent, for example, a refugee from visiting a sick family member in a third country.
இந்தச் சட்டமூலம் பயண ஆவணத்தைப் பெறும் ஏதிலிகளது உரிமையை, ஏதிலிகள் மரபு சுட்டப்பட்ட ஏதிலிகளுக்கு நல்கும் பாதுகாப்பை (விதி 28) மறுக்கிறது. இந்தச் சட்ட மூலம் மரபை முறைகேடாகவும் தன்னிச்சையாகவும் மொழிபெயர்ப்பதன் மூலம் சுட்டப்பட்ட ஏதிலிகளது உரிமையை மறுக்கிறது.
Bill C-49 blocks refugees’ integration
சட்டமூலம் சி-49 ஏதிலிகள் ஒன்றுபடுத்தலைத் தடுக்கிறது
By denying designated refugees the right for five years to apply for permanent residence, the bill significantly delays refugees’ integration into Canadian society and their eventual application for citizenship, contrary to the obligation under the Refugee Convention to facilitate “the assimilation and naturalization of refugees” (article 34). Canada has already had an experience of refugees kept in long-term limbo: this was tried with Somali refugees in the 1990s, when thousands were denied permanent residence for years. The policy was a disaster, causing huge suffering to the individuals affected and the community. The government eventually settled a court challenge by changing the policy.
இந்தச் சட்டமூலம் சுட்டப்பட்ட ஏதிலிகள் 5 ஆண்டுகளில் நிரந்தர வாழ்விடத்துக்கு விண்ணப்பம் செய்யும் உரிமையை மறுப்பதன் மூலம் அவர்கள் கனடிய சமூகத்தோடு ஒன்றுபடுவதைக் குறிப்பிடத்தக்கவாறு தாமதம்செய்வதோடு குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்வதையும் தாமதிக்கிறது. இது ஏதிலி்கள் மரபின் கீழ் உள்ள கடப்பாட்டுக்கு எதிரிடையானது. ஏதிலிகள் மரபு “தன்மயப்படுத்தல் மற்றும் குடியுரிமை பெறுதலை” எளிதாக்குகிறது (விதி 34). கனடாவுக்கு ஏற்கனவே ஏதிலிகளை நீண்ட காலத்துக்குக் கிடப்பில் வைத்திருக்கும் பட்டறிவு உண்டு: ஆயிரக்கணக்கானோருக்கு ஆண்டுக்கணக்கில் நிரந்தரவாழ்விட உரிமை மறுக்கப்பட்ட போது 1990 களில் சோமாலிய ஏதிலிகள் தொடர்பாக முயற்சி செய்யப்பட்டது. இந்தக் கோட்பாடு பேரிடராக அமைந்தது. தனிப்பட்டவர்களையும் சமூகத்தையும் பாரிய அல்லலுக்கு உள்ளாக்கியது. இறுதியாக அரசு தனது கொள்கையை மாற்றியதன் மூலம் நீதிமன்ற அறைகூறுதலை முடிவுக்குக் கொண்டு வந்தது.
Bill C49 prevents consideration of the best interests of the child
சட்டமூலம் சி-49 சிறார்களின் உயர்வான நன்மைகளைக் கணக்கில் கொள்வதைத் தடைசெய்கிறது
The bill denies designated persons, including children, the opportunity for five years to make an application on humanitarian and compassionate grounds. This application is the only avenue for consideration of best interests of the child. Under the terms of the bill, children will therefore be deported from Canada without consideration of their best interests, in violation of the Convention on the Rights of the Child.
இந்தச் சட்டமூலம் சிறார்கள் உட்பட சுட்டப்பட்ட ஆள்களின் மனிதநேயம் மற்றும் கருணை அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு விண்ணப்பம் செய்வதைத் தடுக்கிறது. இந்த விண்ணப்பமே சிறார்களின் உயர்வான நன்மைகளை கணக்கில் கொள்ளும் ஒரே வழியாகும். இந்தச் சட்டமூலத்தின் கீழ் சிறார்களது உயர்வான நன்மைகளைக் கருத்தில் கொள்ளாது, சிறார்களின் உரிமை மரபை மீறிக் கனடாவில் இருந்து அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.
The deterrence measures in Bill C-49 have been tried by Australia – and they failed
சட்டமூலம் சி-49 இல் காணப்படும் தடுப்புகளை அவுஸ்திரேலியா முயற்சித்துப் பார்த்துத் தோல்வி கண்டது
Australia had policies to lock up refugee claimants long term and deny them permanent status even when granted refugee status, in an effort to stop refugees coming by boat. The policies resulted in refugees, including many children, being traumatized by their experiences in detention. The Australian Human Rights Commission, an organization created by Parliament, conducted a National Inquiry into Children in Immigration Detention and found that children in Australian immigration detention centres had suffered numerous and repeated breaches of their human rights. Far from deterring people, depriving refugees of their right to family reunification appears to have caused some people to arrive by boat, as later boats brought the wives and children of refugees in Australia unable to bring their families through legal channels.[2] The Australian public was deeply divided, with many previously unengaged citizens joining a grass-roots network to protest at their country’s inhumane treatment of refugees. In the past three years, Australia has moved away from the policies of detention and temporary status for refugees.
அவுஸ்திரேலியா ஏதிலிகள் படகுகள் மூலம் வரவதைத் தடுக்க முகமாக அவர்களைச் சிறையில் அதிக காலம் அடைத்து அவர்களுக்கு நிரந்தர வாழ்விடத் தகுதியை, ஏதிலி தகைமை வழங்கப்பட்டிருந்தாலும், மறுத்தது. இந்தக் கோட்பாடு சிறை பட்டறிவு காரணமாக ஏதிலிகள், பல குழந்தைகள் உட்பட, மன அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட அவுஸ்திரேலிய மனித உரிமை ஆணையம் குடிவரவு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சிறார்கள் பற்றி ஒரு தேசிய விசாரணையை மேற்கொண்டது. இந்த விசாரணையில் அவுஸ்திரேலிய தடுப்பு மையங்களில் இருந்த சிறார்களது மனித உரிமைகள் எண்ணற்ற அளவிலும் அத்துமீறல் மீளவும் மீளவும் இடம்பெற்றதைக் கண்டு பிடித்தது. ஏதிலிகளது குடும்ப மீள் இணைப்பை பிடுங்கிக் கொண்டது ஏதிலிகளைத் தடுப்பதற்குப் பதில் பலரைப் படகுகள் மூலம் வரச் செய்தது. பின்னர் வந்த படகுகள் சட்ட வழிமுறைகள் மூலம் தங்கள் குடும்பங்களை கொண்டுவர முடியாத போது அவர்களது மனைவி பிள்ளைகளை ஏதிலிகளாகக் கொண்டு வந்தன. அவுஸ்திரேலிய பொதுமக்கள் இது தொடர்பாக ஆழமாகப் பிளவுபட்டுக் காணப்பட்டனர். முன்னர் தொடர்பில்லாத குடிமக்கள் தங்கள் நாடு ஏதிலிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தவதை எதிர்க்கும் அடிமட்ட மக்களோடு சேர்ந்து கொண்டார்கள். கடந்த 3 ஆண்டு காலமாக அவுஸ்திரேலியா ஏதிலிகளைத் தடுத்து வைத்தல் மற்றும் தற்காலிக தகைமை கொடுத்தல் ஆகியவற்றில் இருந்து விலகிச் சென்றுள்ளது.
Bill C-49 is not likely to deter refugees
சட்டமூலம் சி-49 ஏதிலிகளை அநேகமாகத் தடுக்காது
Research in the UK has shown that refugees don’t choose their destination based on the policies in place. Of refugees participating in a recent study, few wanted specifically to go to the UK and many did not have control over where they ended up. “The overwhelming majority (around nine out of ten of all respondents) said that they did not know anything about asylum policies in the UK before they arrived.”[3]
அய்க்கிய இராச்சியத்தில் மேற்கொண்ட ஆய்வு ஏதிலிகள் ஒரு நாட்டின் குடிவரவுக் கொள்கையின் அடிப்படையில் நாடுகளைத் தெரிவு செய்வதில்லை என்பதைக் காட்டியது. அண்மையில் மேற்கொண்ட ஒரு ஆய்வில் கலந்து கொண்ட ஏதிலிகள் தாங்கள் குறிப்பாக அய்க்கிய இராச்சியத்துக்குப் போகவேண்டும் என்று சொல்லவில்லை. அநேகமானோருக்குத் தாங்கள் எங்கே போகவேண்டும் என்பது அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. “மிகப் பெரும்பான்மையோருக்கு (பதில் அளித்த பத்தில் ஒன்பது பேருக்கு) அய்க்கிய இராச்சியத்துக்கு வரு முன்னர் அந்த நாட்டின் அரசியல் அடைக்கலக் கொள்கைபற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. ”
Bill C-49 gives vast new powers to detain non-citizens based on mere suspicion
சட்டமூலம் சி – 49 அய்யத்தின் பேரில் குடியுரிமை இல்லாதவர்களைத் தடுத்து வைப்பதற்கு பரந்துபட்ட புதிய அதிகாரங்களை வழங்குகிறது
The bill gives the government the power to arrest and detain any non-citizen, including a permanent resident, based on a mere suspicion of criminality. This provision is not limited to designated persons, nor to refugee claimants: it applies to all non-citizens. This is a dramatic attack on the rights of newcomers – and long-term residents.
இந்த சட்டமூலம் குற்றம் இழைத்தார் என்ற வெறும் அய்யத்தின் அடிப்படையில் நிரந்தர வாழ்விட உரிமையாளர் உட்பட, குடியுரிமை இல்லாதவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்திருக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குகிறது. இந்த விதி சுட்டப்பட்ட ஆட்களை அல்லது ஏதிலி கோரிக்கையாளர்களை மட்டும் மட்டுப்படுத்தவில்லை, இது குடிமக்கள் அல்லாத அனைவரையும் மட்டுப்படுத்துகிறது.
Conclusion
முடிவு
Bill C-49 should be defeated at second reading. The government should address the problem of smuggling in ways that do not punish refugees.
சட்டமூலம் சி – 49 இரண்டாவது வாசிப்பின் போது தோற்கடிக்கப் படவேண்டும். அரசு ஆட்கடத்தல் சிக்கலை தீர்ப்பதற்கு ஏதிலிகளைத் தண்டிக்காமல் வேறுவழிகளை கருத்தில் கொள்ளவேண்டும்.

Leave a Reply
You must be logged in to post a comment.