நாடெங்கும் கூலிக்கு மாரடிப்பவர்கள் இருக்கிறார்கள். கருணா அதில் ஒருவர். எந்த துக்கமோ வெட்கமோ இன்றி கருணா இராசபக்சா அணி நடாத்திய மே தினத்தில் கலந்து கொண்டு ” எவ் றாயினும் எமது ஜனாதிபதியை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்” கேட்டிருக்கிறார். இராசபக்சா தேர்தலில் தோற்ற பின்னர் கருணாவை சிறிலங்கா சுதந்ததிரக் க்ட்சியில் .இருந்து தூக்கி எறிந்துவிட்டார். அவரது துணைத் தலைவர் பதவியையும் ப றித்து விட்டு ஆளை நடுத்தெருவில் விட்டு விட்டார்கள். இப்போது இராசபக்சா போற்றி பாடுகிறார். நல்லாட்சி அரசு தமிழ்மக்களுக்கு ஒன்றையும் செய்யவில்லையாம். இராசபச்சா ஆட்சியில் இவர்தான் மீள்குடியிருப்பு அமைச்சின் துணை அமைச்சர். சம்பூரில் தமிழ்மக்களுக்கு சொந்தமான 816 ஏக்கர் காணியை இராசபக்சா தனது உறவினர் ஒருவருக்கு பாரிய தொழிற்கூடங்கள் அமைக்க 99 ஆண்டு குத்தகைக்கு கொடுத்துவிட்டார். கருணா அப்போது காணி கொடுத்தது கொடுத்ததுதான். அந்தக் காணியை திருப்பி எடுத்துத் தருவோம் என்று ததேகூ ஏமாற்றுகிறது. அவர்களை நம்பாதீர்கள் என்று சொன்னார். இந்த ஆட்சியில் அந்த 818 ஏக்கர் காணி மட்டுமல்ல அருகில் கடற்படை பறித்து வைத்திருந்த 237 ஏக்கர் காணியையும் ததேகூ மீட்டெடுத்து மக்கள் கையில் கொடுத்துள்ளது. இதனால் 500 க்கும் மேலான குடும்பங்கள் மீள் குடியேறியுள்ளனர். கருணா போன்றவர்கள் தமிழினத்தின் சாபக்கேடுகள்.
இராமனுஜர் பற்றிய கதைகள் பாதி உண்மை பாதி பொய் என்று எடுத்துக் கொண்டாலும் அவர் சாதி பாராட்டவில்லை என்பதுதான் முக்கியம். அவரை எடை போட வேண்டும் என்றால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த சமூகத்தை நாம் கணக்கில் எடுக்க வேண்டும். பிராமணனாக பிறந்தவன் சாதி எதிர்ப்பாளனாக இருக்க முடியும். சென்ற நூற்றாண்டில் பிறந்து வாழ்ந்து மடிந்த பாரதியார் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. பிராமணன் என்றால் ஒருவர் தவறாமல் அவர்கள் எல்லோரும் சாதிமான்கள் என்பது தவறு. கீற்று கட்டுரையாளர் கார்க்கி பிராமணர்களை எதிர்க்கிறார் போல் படுகிறது. பிராமணர் வேறு பிராமணியம் வேறு அல்லது அது இரண்டும் ஒன்றா? உயர்சாதி வெள்ளாளரிடம் காணப்படும் சாதியம் எந்த வகையைச் சார்ந்தது?
கொள்கை கோட்பாடு வேறு, யதார்த்த அரசியல் வேறு. இலங்கையில் இரண்டாயிரத்து நூற்று ஒன்பதாம் ஆண்டு இலங்கையில் நடந்த போருக்கு அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருந்தது. புலிகளைத் தோற்கடித்து இரஜீவ் காந்தி படுகொலைக்கு காங்கிரஸ் அரசு பழிதீர்த்துக் கொண்டது. அதற்கு திமுக, பாமக துணை போயின. மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை எனக்கு திருப்தி அளிக்கிறது என்று கருணாநிதி சொன்னார். இது பச்சைத் துரோகம். ஈழப் போர் பற்றிய தெளிவான பார்வை கருணாநிதிக்கு எப்போதும் இருந்ததில்லை. ஆட்சியில் இருக்கும் போது ஈழச் சிக்கலை கிடப்பில் போடுவதும் ஆட்சியை இழந்தால் தெசோவை கையில் எடுப்பதும் கருணாநிதியின் அரசதந்திரமா இருந்தது. உண்மையில் தமிழ்நாட்டு வாக்காளர்களைத்தான் குறை சொல்ல வேண்டும். ௨௦௦௯ இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது ஈழச் சிக்கல் முக்கியத்துவம் பெறவில்லை என்பதைத் துலாம்பரமாகக் காட்டியது.
புலம்பெயர் மக்கள் மீதும், தாயகத்தில் உள்ள கட்சிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது. அது சரியென்றால் எப்படி 75 விழுக்காடு மக்கள் தேர்தல்களில் வாக்களிக்கிறார்கள்? அப்படி வாக்களிப்பவர்களில் எப்படி 75 விழுக்காட்டினர் ததேகூ க்கு வாக்களிக்கிறார்கள்? போர்க்காலத்திலும் மூன்றில் ஒரு பகுதியினரே பங்களிப்புச் செய்தார்கள். இப்போது ஒரு பத்து விழுக்காட்டினரே பங்களிப்புச் செய்கிறார்கள். புலம்பெயர் தமிழர்கள் அங்குள்ள மாவீரர் குடும்பங்கள், போராளி குடும்பங்கள் இவற்றில் ஒரு குடும்பத்துக்க ரூபா 100,000 – ருபா 200,000 கொடுக்க முன்வந்தால் அந்த மக்களது வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும். 2010 இல் தென்னமரவடி கிராமத்தில் மீள் குடியமர்ந்த 12 குடும்பங்களுக்கு தலைக்கு ரூபா 100,000 நல்லின மாடு வளர்ப்புக்கு கொடுத்தோம். ஏழு ஆண்டு கழிந்து அந்தக் குடும்பங்கள் தலா 5-6 மாடுகள் வை த்திருக்கிறார்கள். ஒரு குடும்பம் மட்டும் தங்களது மாடுகள் திருட்டுப் போய்விட்டன என்றார்கள். இதேபோல் கொக்கிளாய், கருநாட்டுக் கேணி, மட்டக்களப்பில் உள்ள 36 குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் கொடுத்தோம். நான் ஒரு முன்னாள் போராளி – சிறையில் இருந்து வெளிவந்தவருக்கு இதுவரை ரூபா 190,000 வரை கொடுத்து உதவியிருக்கிறேன். தனக்குச் சொந்தமன 3 ஏக்கர் காணியில் வாழை, பப்பாசி, ஆடு, கோழி வளர்க்கிறார். இப்போது கிணறு வெட்ட உதவி கேட்கிறார். அதற்கு ரூபா 425,000 மதிப்பீடு கிடைத்திருக்கிறது. யோசனை செய்ய வேண்டியிருக்கிறது.

Leave a Reply
You must be logged in to post a comment.