விதவைகளுக்கு மொட்டையடி. விதவைகளின் மறுமணம் விபசாரம்? பகுதி 49
கணவனை இழந்த பெண் என்றால்… அவளை இறந்த கணவனது சிதையிலேயே வைத்து தீர்த்துக்கட்டு என உத்தரவிடுகிறது மநு ஸ்மிருதி.
விதவைகளாகி மறுமணம் முடிக்க நினைத்தால்? இதை விபச்சாரம் என்னும் அடைமொழிக்குள் வைத்துப்பார்க்கிறது மநு.
கணவனை இழந்த பெண்கள், மிகச்சிறு வயதிலேயே விதவைகளாகி விடும்போது… சிதைக்கு போகாமல் தப்பித்த பெண்களும் உண்டு.
கணவனை இழந்த அவள் மேல் வேறெந்த ஆணுக்கும் ஆசை வரக்கூடாது என்பதற்காக உடனடியாக அவளுக்கு மொட்டையடிக்கப்பட்டது.
(மொட்டை பாப்பாத்தி என கேள்விப்பட்டிருப்பீர்களே. இப்பொழுது விளங்குகிறதா?)
கல்வியும் கிடையாது… மந்த்ரங்கள் வழியே கூட அதை பெறக்கூடாது. 8 வயசிலேயே கல்யாணம் பண்ணிக்கொண்டு நான்கு சுவர்களுக்குள் நன்கு குடித்தனம் நடத்து.
“இதுதான் மநு தர்மம் பெண்களுக்கு சொன்னது.
வேதத்தில் ‘சதி’ பற்றி பார்த்தோமே… வேதமே அப்படி சொல்கிறதென்றால் மநு சும்மா விடுமா?… வேதத்தை விட இன்னும் தெளிவாக சொல்கிறது.
“சிதா வாரோஹணம் பிரம்மச்சர்யம்…”
கணவனை இழந்த பெண் என்றால்… அவளை அவனது சிதையிலேயே வைத்து தீர்த்துக்கட்டு என உத்தரவிடுகிறது மநு ஸ்மிருதி மநு மணம் முடித்து இதுபோல் கணவனை இழந்த பெண்கள், மிகச்சிறு வயதிலேயே விதவைகளாகி விடும்போது… சிதைக்கு போகாமல் தப்பித்த பெண்களும் உண்டு.
ஆனால்… அவர்களது வாழ்க்கையிலும் பயங்கர கட்டுப்பாடுகள் பின்னப்பட்டன. கணவனை இழந்த அவள் மேல் வேறெந்த ஆணுக்கும் ஆசை வரக்கூடாது என்பதற்காக உடனடியாக அவளுக்கு மொட்டையடிக்கப்பட்டது.
‘உலகை ஆற்றுப்படுத்தும் அழகுதான் பெண்’ என்றது வேதம். அந்த அழகை மொட்டையடித்து அவலட்சணமாக்கி அழுவதை வேடிக்கை பார்த்தது மநு.
விர… அந்த விதவைப்பெண் வேறெந்த ஆணிடமும் பேசக்கூடாது, பழகக்கூடாது அவளது கண்களை கட்டுப்பாட்டால் கட்டிப் போட்டனர்.
இதையும் மீறி… வயதின் ஆட்சியால் வாலிபத்தின் தூண்டுதலால் மிக இளமையான வயதில் கணவனை இழந்த பெண்களுக்கு ஆண் துணை வேண்டுவது இயற்கையின் விதி. இதை இப்போது மறுமணம் என்கிறோம்.
ஆனால் மநு மணத்தில் மறுமணம் ஏது? ஒரு பெண், கணவனை இழந்த பின்பு… ஆறுதலுக்காகவும், வாழ்க்கை நடத்திட வழி வேண்டியும் இன்னொரு ஆணை அணுகினால் அது கிட்டத்தட்ட விபச்சாரம் ஆகி விடுகிறது என்கிறது மநு. இதற்கும் தண்டனை உள்ளது. அதற்கு முன் விதவைகளுக்கு மொட்டை போடுதல் என்ற தண்டனை பற்றி இன்னும் சில விளக்கங்களை சொல்லி விடுகிறேன்.
விதவைகளுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்று வடகலை வைணவர்கள் வலியுறுத்தினார்கள். அதெல்லாம் இல்லை மொட்டையடித்தே ஆக வேண்டும் என்பது தென்கலைக்காரர்களின் தரப்பு வாதம்.
இந்த இடத்தில் வடகலை, தென்கலை என இரண்டு பிரிவுகள் பற்றி உங்களுக்கு கேள்வி வரலாம். அப்படி என்றால் என்ன?
பிரம்மத்துவம் எனப்படும் கடவுள்தன்மை பெருமாளின் துணைவியான பிராட்டி அதாவது தாயாருக்கு உண்டா என்ற பிரச்சினை விவாதமாக எழுந்தது.
அப்போது… பெருமாளுக்கு துணையாக இருக்கிறாரே தவிர பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் பங்கு கிடையாது. உதவும் சக்தி கிடையாது. வெறும் சிபாரிசு மட்டும்தான் செய்யமுடியும் என்பது தென்கலைகாரர்களின் வாதம். பெருமாளின் துணைவிக்கே சக்தி இல்லை என்றவர்கள் சாதாரண ஸ்த்ரீ… அதுவும் கணவனை இழந்த ஸ்த்ரீக்கு என்ன சொல்வார்கள். மொட்டையடிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
வடகலைக்காரர்களோ… பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் குறிப்பிட்ட பங்கு இருக்கிறது என்று நம்பினார்கள். அதனால் பெண்மைக்கு முக்யத்துவம் கொடுத்து… விதவைகளுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்றார்கள். இந்த ஒரு விஷயத்தின் அடிப்படையில் மட்டுமல்ல… பல விஷயங்களின் அடிப்படையில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் தான் வடகலை, தென்கலை என்று பிரிந்தார்கள்.
அது இருக்கட்டும்… மநு மணம் முடித்த பெண்கள், விதவைகளாகி மறுமணம் முடிக்க நினைத்தால்?… இதை விபச்சாரம் என்னும் அடைமொழிக்குள் வைத்துப்பார்க்கிறது மநு.
அவளுக்கு ஒழுக்கம்தான் முக்யம். ஒரு ஆணுக்கு வாழ்க்கைப்பட்டவள் இன்னொரு ஆணோடு வாழ்வதா?… பிடி அவளை… அவளது படுக்கையோடு சேர்த்து அவளை சுற்று ஆமாம் அப்படியே தீ வை. எந்த படுக்கையில் விபச்சாரம் என்னும் அபச்சாரத்தை செய்தாளோ… அதிலேயே வைத்து அவள் எரிக்கப்பட வேண்டும் என மநு தன் கட்டளைகளில் கொள்ளிக்கட்டைகளை கொண்டு வருகிறார்.
வேதம் பெண்களை எப்படிப்பார்த்தது… மநு பெண்களை எப்படிப் பார்த்தது?… என்று இதுவரை பார்த்துவிட்டோம். சாதாரண மனித பெண்களை இப்படி நடத்தியிருக்கிறார்கள். அப்படியென்றால் தெய்வப்பெண்களை?… அதாவது பெண் தெய்வங்களை எப்படி பார்த்தார்கள்?
இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. சற்று முன்புதான் மோட்சம் வழங்குவதில் பிராட்டி அதாவது பெண் தெய்வத்தின் பங்கு பற்றி சில விஷயங்களை பார்த்தோம்.
கோவில்களில் பெருமாளை பார்த்திருப்பீர்கள். பெருமாளுக்கு வலது பக்கமும், இடது பக்கமும் பூதேவி, நீளாதேவி என இரண்டு பெண் தெய்வங்கள் இருப்பார்கள். ஆனால்… பிராட்டி எனப்படும் தாயார் தனிக்கோவில் நாச்சியாராகத்தான் இருப்பார். அதாவது அவருக்கென்று தனி சன்னதி இருக்கும். அங்கே தான் இருப்பார்.
கோவில்களில் உற்சவம் நடப்பதை பார்த்திருப்பீர்கள். பெருமாள் வாகனங்கள் புடைசூழ வெளியே வருவார்.
முதலில் அன்னபட்சி வாகனத்தில் வெளியே வருவார். கருடன் மீதேறி ஊர் சுற்றுவார். சூரியபிரபை என்னும் வாகனத்தில் புறப்பட்டு கடைத்தெருக்களை பார்வையிடுவார். பிறகு குதிரை வாகனம்… கடைசியில் தேர், ஊர்கூடி இழுக்க உள்ளே படாடோபமாக அமர்ந்திருப்பார் பெருமாள்.
ஆண் தெய்வமான பெருமாள் இப்படி ஊர் சுற்றி உலகம் சுற்றிவிட்டு வர… பெண் தெய்வமான பிராட்டியார்?… அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
பகுதி 48 – 2 பூணூல், உபநயனம் என்றால் என்ன? மந்த்ரங்கள்ஓதி பணம் பண்ணுவதற்காகத்தான்.
பகுதி 50.வருடாவருடம் தாசிகளுடன் இரவு முழுதும் தங்கியிருந்துவிட்டு திரும்பும் கடவுள் பெருமாள்..
அதாவது …. ரங்கநாதனின் ஆனந்த நாடி… (ஆண் குறி )அதாவது தேக சம்பந்தம் வைத்துக்கொள்வதற்கு உபயோகப்படுகிற அங்கம். நள்ளிரவிலும் பிராட்டியை சேரவேண்டும் என்ற ஆசை ரங்கநாதனுக்கு வந்தது. உடனே தன் அங்கத்தை (ஆண் குறி)அனுப்பி ரங்கநாயகி சன்னதிக்குள் சென்று இச்சையை தீர்த்துக்கொண்டு விடுகிறார்’
பூணூலை மையமாகவைத்து கயிறுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பூணூல் போட்டவன்தான் பார்ப்பனன் என்றும் இந்த நூலை மையமாக வைத்து கயிறு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் சடங்காக்கி மந்த்ரங்கள் ஓதி பணம் பண்ணுவதற்காகத்தான்
உபநயனம் என்பது பிராமண ஆண்களுக்கு நடக்கும் முக்கியமான சடங்கு என்றும், பூணூல் போட்டவன்தான் பார்ப்பனன் என்றும் இந்த நூலை மையமாக வைத்து கயிறு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் பூணூல் என்ற பழக்கமே கிடையாது. முற்காலங்களில் யாகம் பண்ணும்போது வஸ்திரத்தை குறுக்காக அணியவேண்டும் என்ற விதி இருந்தது. வஸ்திரம் சரியாக வரவில்லை என்பதால் அதை சிறிய அளவில் நூலாக்கி போட்டுக் கொண்டார்கள்.
இதை நான் முன்பே கூறியிருக்கிறேன். அப்படியும் யாகம் பண்ணும்போதுதான் அதற்கு வேலையே தவிர மற்ற சமயங்களில் கிடையாது.
பிறகு… இந்த உபநயன சடங்கு எப்படி வந்தது? உபநயனம் என்றால் என்ன? என்னடா இவர்… பெண்களைப்பற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையில் ஏன் ஆண்களைப்பற்றி பேசுகிறார் என்று நினைக்காதீர்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம்தான்.
சந்தர்ப்பம் வாய்க்கும்போதே சில விஷயங்களை தெளிவுபடுத்திட வேண்டும். உபநயனம் உள்ளிட்ட எதுவும் பெண்களுக்கு கிடையாது என மநு சொல்லியிருக்கும்போது…
உபநயனம் என்றால் என்ன என்று தெரிந்தால் தானே மநு சொல்வதை புரிந்துகொள்ள முடியும். சரி! உபநயனம் என்றால் என்ன?
இப்போது உபநயன சுபமுகூர்த்தம் என்று ஆண் மகனுக்கு முதல் கல்யாணம்போல பெரியதாக விழா நடத்துகிறார்கள்.
உண்மையில் உபநயனம் என்றால்… பிராமணப்பையனை பள்ளிக் கூடத்துக்கு அனுப்புதல் என்று அர்த்தம். என்னது…?
இப்போது இருப்பதைப்போல அப்போதெல்லாம் பள்ளிக்கூடங்கள் கிடையாது. அதனால் வேத பாண்டித்யம் பெற்ற ஒரு ஆச்சாரியரிடம் அதாவது ஆசிரியரிடம் பையனை அனுப்பி வைப்பார்கள். வேதக் கல்வி கற்பதற்காக.
அந்த ஆச்சாரியர் அச்சின்னப்பையனை கையைப் பிடித்து அழைத்துச் செல்வார். இதற்குப் பெயர்தான் உபநயனம்.
அதாவது ஆசிரியர் மாணவனை கையைப்பிடித்து அழைத்துச் செல்வதுதான்.
இந்த சமயத்தில் அந்தக் குழந்தைப் பயலுக்கு நன்றாக ஸ்நானம் பண்ணி வைத்து, புது வஸ்திரம் கட்டிவிட்டு, இடுப்பில் `பெல்ட்’ (அந்த காலத்தில் துணியாலேயே) கட்டிவிட்டு குருகுலத்தில் சேர்த்துவிடுவார்கள்.
அப்போது அவனது அப்பா… “பயலே… இனிமே நீ இந்தப் பக்கம் வரக்கூடாது. எல்லா கல்வியையும் கற்கும்வரை உனக்கு இந்த வீட்டு ஞாபகம் வரக்கூடாது. திரும்பிப் பார்க்காமல் ஆச்சாரியரோடு போ…’’ என்று பையனை வழியனுப்பி வைப்பார்.
அந்தச் சின்னப்பையனும் வீட்டை மறந்து கல்விக்காக ஆசிரியர் கையை பற்றிக்கொண்டு நடப்பான்.
இதுதானப்பா ஒரிஜினல் உபநயனம். இப்போது என்ன நடக்கிறது?
பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிற பையனை லீவு போடச் சொல்லி வீட்டுக்கு வரவழைத்து உபநயனம் பண்ணுகிறார்கள். உபநயனம் என்றாலே வீட்டுப் பக்கம் வராதே என்று பையனை பாடசாலைக்கு அனுப்புவதுதான். ஆனால்… நடைமுறையில் அப்படியே முரண்பாடாகி விட்டது.
காரணம்…? இதையும் சடங்காக்கி மந்த்ரங்கள் ஓதி பணம் பண்ணுவதற்காகத்தான்.
இப்போது இங்கே பெண்ணை அழைத்து வருகிறேன் பாருங்கள். உபநயனம் உள்பட எந்த மந்த்ர சடங்கும் பெண்ணுக்குக் கிடையாது என்றால் என்ன அர்த்தம்?
பெண்களை பள்ளிக்கு அனுப்பக்கூடாது. உபநயனம் என்றால் பள்ளிக்குப் போவதுதானே?
ஆனால்… இன்று எல்லா ஜாதி பையன்களும், பெண்களும் உபநயனம் பண்ணிக் கொள்கிறார்கள். ஆமாம்… பள்ளிக்குப் போய் பாடம் படிக்கிறார்களே!
பெண்கள் வாழ்வில் அடுத்த கட்டமாய்… அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
48 – 1. பெண்களுக்கு கல்வி கூடாது. வெளியில் செல்லவும் கூடாது.
பகுதி 49. விதவைகளுக்கு மொட்டையடி. விதவைகளின் மறுமணம் விபசாரம்?
பிராமணபெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். கல்யாணத்தின்போது சீதைக்கு வயது ஆறேதான்- பகுதி 47
பெண்களும் சூத்திரர்களும் ஒன்றுதான். பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அதனால் அவளுக்கு வேதத்தை படிக்கும் அருகதை கிடையாது. வேதத்தை அவள் தொடக்கூடாது. அவள் கண்படக்கூடாது. வேதம் ஓதும் ஓசைகூட அவள் காதில் படக்கூடாது.
அதனால் பெண்களுக்காகவும், சூத்ரர்களுக்காகவும் புராணங்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதை கேளுங்கள். வேதத்தின் பக்கம் வராதீர்கள்.
கல்யாணத்தின்போது சீதைக்கு வயது ஆறேதான்.
மநு தர்மப்படி எட்டு வயசுக்கு முன்பே கல்யாணம் செய்து கொண்ட ஒரே ஒரு ஜோடியையாவது காட்ட முடியுமா?
என் காலத்தில் என் கண்ணெதிரே எத்தனையோ பெண்களுக்கு மநு மணங்கள் நடந்திருக்கின்றன.
அவர்களை எனக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியுமோ? தெரிந்திருக்க வாய்ப்பில்லையே?
அப்படியென்றால் எல்லோருக்கும் தெரிந்த மிகப் பிரமாண்டமான ஒரு ஜோடியை பிடித்து உங்களுக்கு காட்டவேண்டும். அதுவும் மநுமணம் செய்துகொண்டதாக , அதாவது பால்ய திருமணம் செய்துகொண்ட ஜோடியாக இருக்கவேண்டும். அல்லவா?
சரி, இதோ உதாரணம். ராமர் சீதா தெரியுமா? அவர்கள்தான்.சற்று முன்பே சொன்னேனே. பெண் குழந்தை மரப்பாச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். கூப்பிட்டு… கல்யாணம் பண்ணி வைத்துவிடுகிறார்கள் என்று. அதேபோல்தான் ஜனக மகாராஜனின் புத்திரியான சீதாதேவி விளையாடிக் கொண்டிருந்த பருவத்திலேயே கல்யாணத்தை முடித்துவிட்டார்கள்.
கல்யாணத்தின்போது சீதாவுக்கு 6 வயது. ராமனுக்கு 12 வயது.என்ன சொல்கிறார் இவர். கம்பராமாயணத்தலே கம்பர் வேறு மாதிரியல்லவா சொல்லியிருக்கிறார்.
“ராமரை சீதை பார்த்த போது, சீதையின் தேகம் வெட்கத்தாலும் வெப்பத்தாலும் சூடேறியது. அவள் படுத்திருந்த பஞ்சு மஞ்சம் இந்த சூடு தாங்கமுடியாமல் எரிய ஆரம்பித்தது. விரகச் சூடு தாங்காமல் அவளது பொங்கிய மார்பகம் அனல் கக்கியது.
சீதை தன் கழுத்தில் போட்டிருந்த கருகமணி மாலைகள் இந்த சூடு தாங்க முடியாமல் அறுந்து உதிர்ந்து, கீழே உருண்டோடுகின்றன. ராமனை… இப்படியாக சீதையை பாதித்தாள். அவனது கனவுகளை சோதித்தாள்” என்றல்லவா கம்பர் எழுதியிருக்கிறார்.
அப்படிப் பார்த்தால் சீதைக்கு கல்யாண பயத்தில் வயதுக்கு வந்த வயதாகத்தானே இருக்க முடியும் என்று நமக்கு நியாமான சந்தேகம் எழலாம்.
கம்பர்.. தமிழ்ச் சூழலில் கல்யாண பருவத்தில் சீதையை குழந்தையாக காட்டவேண்டாம் என நினைத்திருக்கலாம்.
ஆனால், வால்மீகி ராமாயணத்தில்,
தோஷாத் தாரக்தியாம்பதி
சிந்தையா மான தர்மாத்மா
சோபாத்யாய சபாந்த்த வஹா
என்கிறார் ராமன். சின்னப் பிள்ளையாக இருக்கும்போது அவனுக்கு 12 வயது ஆகும்போதே அவனது கல்யாணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார் தசரத சக்கரவர்த்தி.
விஸ்வாமித்ரரோடு ராமன் ஜனகராஜனின் அரண்மனைக்கு வரும்போது தனுஸ் அதாவது வில்லை ஒடிப்பவர்களுக்கு சீதையை திருமணம் செய்து தருவேன் என்கிறான் ஜனகன். ராமன் வில்லை ஒடித்தான். ஒடித்துவிட்டு நான் சீதையை கல்யாணம் செய்வதற்காக வில்லை ஒடிக்கவில்லை என் பலத்தை நிறுவுவதற்காகவே ஒடித்தேன் என சொல்கிறான். அதன்பிறகு தசரதன் சொல்லி பிறகு ராம சீதா கல்யாணம் நடக்கிறது.
கல்யாணம் எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால், கல்யாணத்தின்போது ராமனுக்கு 12 தான். சீதைக்கு வயது ஆறேதான். இதுதான் வால்மீகி காட்டும் வயது.
வனவாசத்தின்போது சீதாதேவி ஆஞ்சநேயரிடம் சொல்கிறாள்.
“அஷ்டாதஸ வருஷானி மம ஜென்மணி கன்யதே
நான் என் 18-ஆவது வயதில் வனவாசம் செய்ய வேண்டியதாயிற்று. எனது 6-ஆவது வயதில் கல்யாணமாகி 12 வருடம் ராமரோடு வாழ்ந்தேன். அதன்பிறகுதான் காடு புகும்படி விதி விளையாடிவிட்டது.” என சீதாதேவி ஆஞ்சநேயரிடத்திலே சொல்கிறார்.
இன்னொரு இடம் சீதா அக்னிப் பிரவேசம் தீக்குளிக்கும் முன்பு ராமனைப் பார்த்து கேட்கிறாள்.
‘நப்ரமாணி கிரதப்மாணி
பால்யே பாலேன பீடிதஹ்”
ராமா என்னையே நீ சந்தேகப்படுகிறாயே?
குழந்தைப் பருவத்திலேயே என் கையை இறுக்கமாக பிடித்தவனாயிற்றே. அப்படியிருந்துமா என்னை நீ புரிந்துகொள்ள வில்லை… என்கிறாள். இதிலிருந்து சீதாதேவியின் கல்யாணம் அவளது 6 வயதில் அதாவது மநு ஸ்மிருதிக்கு கட்டுப்பட்ட கல்யாணமாகவே நடந்திருக்கிறது என்பது புரிகிறது. உதாரணம் சொல்லியாகிவிட்டது.
கல்யாணம் என்றதுமே இக்காலத்தில்
“மாங்கல்யம் தந்து நானே நவஜீவன கேது நாம்”
என்ற Trade Mark மந்த்ரம்தான் பலருக்கு ஞாபகம் வரும். இதற்கு என்ன அர்த்தம்?
“அடியே இந்த புனிதமான நூலை உன்னுடைய கழுத்தில் கட்டுகிறேன். இது இருந்தால்தான் உன்னை என் மனைவி என்று இந்த ஊர் – உலகம் நம்பும். அதற்காகத்தானே தவிர வேறெதற்காகவும் இல்லை.” இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.
நான் சில பல அத்யாயங்களுக்கு முன்னரே சொல்லியிருந்தேனே. பனை ஓலையில் பெண்ணின் பெயரை எழுதி இவள் இவனுக்கு அடிமை என எழுதி அதை நூலில் கோர்த்து கழுத்தில் கட்டுவார்கள். பனை – தாள் அதனால்தான் அதற்கு தாலி என்று பெயர் வந்தது என சொல்லியிருந்தேன்.
அப்படிப்பட்ட Symbol தான் தாலி. அதாவது ஊருக்கு தெரியவேண்டும். நீதான் என் மனைவி என்று. அதற்காக கட்டுகிறேன் என்பதுதான் அதன் அர்த்தம். இப்பழக்கம் பிற்காலத்தில் வந்தது. இந்த மந்த்ரமும் பின்னால் சேர்ந்ததுதான்.
மநு-ப்படி கல்யாணம் ஆன பெண்களும், இப்போது கல்யாணம் ஆகாத பெண்களும் ஒன்றுதான். அடுத்ததாக பொதுவாகவே பெண்களுக்கு வித்யா ரீதியாக என்ன வாய்ப்புகளை கொடுத்தது மநு?….
வேதத்தில் பெண்கள் அத்யயனம் செய்ததையும் சம்ஸாதம் நடத்தியதையும் பார்த்தோம். ஆனால், மநு உறுதியாக உரத்துச் சொன்னது.
பெண்களும் சூத்திரர்களும் ஒன்றுதான். பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அதனால் அவளுக்கு வேதத்தை படிக்கும் அருகதை கிடையாது. வேதத்தை அவள் தொடக்கூடாது. அவள் கண்படக்கூடாது. வேதம் ஓதும் ஓசைகூட அவள் காதில் படக்கூடாது.
அதனால் பெண்களுக்காகவும், சூத்ரர்களுக்காகவும் புராணங்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதை கேளுங்கள். வேதத்தின் பக்கம் வராதீர்கள்.- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
பகுதி 48-1 பெண்களுக்கு கல்வி கூடாது. வெளியில் செல்லவும் கூடாது.

Leave a Reply
You must be logged in to post a comment.