இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி  56-1, 56-2

பகுதி  56-2

வேதப்படி கணபதி கடவுள் இல்லை? மிருகங்களை வழிபடுதல் 

இவர் வேதத்திலேயே வருகிறார். இவர்தான் உலகத்தின் தொடக்கம், என்றெல்லாம் பின்னர் ‘பிள்ளையார் சுழி’ போட்டார்கள்.

அதெல்லாம் கிடையாது. வேதத்தில் கணபதி… என்ற சொல் வருகிறது. அவர் யாரென்றால்…?

வேதப்படி கணபதி கடவுள் இல்லை?

மிருகங்களை வழிபடுதல்.

வரலாற்று ரீதியாக பார்த்தோம் என்றால், நான் முன்பே சொல்லியிருக்கிறேன். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவியிருந்த வழிபாட்டு முறைகளில் முக்கியமான இரண்டாவது வழிபாட்டு முறை Totamism Worhip அதாவது மிருகங்களை வழிபடுதல்.

அப்படியாகத்தான் ‘ஒரு காலத்தில் காட்டுக்குள் வாழ்ந்த மக்கள் வித்தியாசமான, பெரிய உருவம் கொண்ட யானைகளை பயந்து வழிபடத் தொடங்கினார்கள்.

நாம் மனித உடலில் யானைகளை வைத்ததுபோல்… எகிப்தில் பல மிருகங்களை வழிபட்டு வருகின்றனர். இதுதான் கணபதியின் வரலாற்றுக் கதை.

கணபதி என்றவுடன்… இவர் வேதத்திலேயே வருகிறார். இவர்தான் உலகத்தின் தொடக்கம், என்றெல்லாம் பின்னர் ‘பிள்ளையார் சுழி’ போட்டார்கள்.

அதெல்லாம் கிடையாது. வேதத்தில் கணபதி… என்ற சொல் வருகிறது. அவர் யாரென்றால்…? ரிக்வேதத்தின் இந்த மந்த்ரத்தைப் பாருங்கள்.

“கணானந்தவா கணபதிஹிம் ஷவாமஹேகவிகம் கவினாம் உபமஸ் ஸ்ரவஸ்தமம்தேஷ்டராஜம் ப்ரம்மனாம் ப்ரம்மனாஸ்பதி”

வேதத்தில், வேதகாலத்தில் மக்கள், ரிஷிகள் எல்லாம் கூட்டம் கூட்டமாய் போவார்கள்.

அப்போது அவர்கள் தங்களுக்குள் ஒரு தலைவனை தேர்ந்தெடுத்துக் கொண்டு அவன் சொல்படி நடப்பார்கள். அதாவது Leader of the Group. கணபதி என்றால் இதுதான் அர்த்தம். அந்த சிறுசிறு கூட்டங்களின் தலைவர்கள்தான் கணபதிகள்.

இதுபோல் வேதம் நிறைய கணபதிகளைக் காட்டுகிறது.

‘ஏ… தலைவா… உன் தலைமையில் நாங்கள் நடந்தால் எங்களுக்கு எல்லாம் கிடைக்கும். செல்வம் பெருகும்…’ என தங்கள் தலைவனை போற்றிப் புகழ்வதுதான் இந்த மந்த்ரம். இந்த Leader of the Group- அய்த்தான் பிற்காலங்களில் கணபதி என்ற கடவுள் ஆக்கிவிட்டார்கள்.

வேதப்படி கணபதி கடவுள் இல்லை.

பெண்கள் விஷயத்தில் நமது கடவுளர்களின் கண்ணியத் தன்மையையும் இந்த கண்ணியத் தன்மையாலேயே இன்னொரு கடவுள் உதித்ததையும் கண்டோம்.

இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால்… நமக்கெல்லாம் ஒழுக்கத்தையும் சத் நெறிகளையும் வழங்க வேண்டிய தெய்வங்கள் எப்படி சித்தரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை உணரத்தான்… உணர்ந்து விட்டீர்களானால்… அடுத்து.– அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்(தொடரும்)


இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 56 – 1

பார்வதி குளிப்பதை மறைந்து பார்த்த சிவன். விநாயகன் பரமசிவன் தான்

குறும்பு, லீலைகள் என்பவையெல்லாம் மனிதர்களுக்கு கற்றுக்கொடுத்ததே தெய்வங்கள் தானோ என நினைக்கும் அளவுக்கு பகவத் சிலுவிஷமங்கள் புராணங்களில் நிறைந்து கிடக்கின்றன.

விநாயகன் வேறு யாரும் அல்ல. பரமசிவன் தான்.

‘டேய்… குளிப்பது உன் பத்தினியாக இருந்தாலும் எட்டிப் பார்க்காதே. பார்த்தால் என் கதிதான் உனக்கும்’ என்று பரமசிவன் ஆண்களிடம் சொல்வதற்குத்தான். இது கதை.

முருகன் என்ற பேருக்கும் ஸ்கந்தன், சரவணன் என்ற பேர்களுக்கும் இடையே நிலவும் மொழி, கலாச்சார வேறுபாட்டைப் பார்த்தோம்.

அப்படியென்றால் முருகனின் அண்ணான விநாயகர், கணபதி யார் என்கிறீர்களா? அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, மச்சினன் என தெய்வங்களுக்கிடையே உறவு வைத்ததெல்லாம் Humanistic Worship -ஆல் வந்தது.சரி… கணபதிக்கு வருவோம்.

கணபதி முருகனின் அண்ணன், சிவனின் மூத்த மகன் என்றுதான் பரவலாக நம்மவர்கள் பேசி வருகிறோம். நம்பி வருகிறோம்.

ஆனால்… சமஸ்கிருதக் கதைகள் இதற்கும் வேட்டு வைக்கின்றன. என்ன கதை? பரமசிவனின் மனைவியாகிய பார்வதி, ஒருநாள் ஸ்நானம் பண்ணிக் கொண்டிருக்கிறாள்.

குறும்பு, லீலைகள் என்பவையெல்லாம் மனிதர்களுக்கு கற்றுக்கொடுத்ததே தெய்வங்கள்தானோ என நினைக்கும் அளவுக்கு பகவத் சிலுவிஷமங்கள் புராணங்களில் நிறைந்து கிடக்கின்றன

சரி… சிவன் இங்கு என்ன செய்கிறார்? பார்வதி தேவி தண்ணீர் கொட்டிக் கொட்டி குளித்துக் கொண்டிருக்கிறாள். சிவனுக்கு ஒரு நப்பாசை. நம் தேவி எப்படி குளிக்கிறாள் என்பதை அவள் அறியாமல் பார்க்கவேண்டும். அதாவது… ஒருபெண் குளிப்பதை அவளுக்குத் தெரியாமல் இன்னொரு ஆண் (கணவனே என்றாலும் தெரியாமல் பார்க்கிறானல்லவா?) பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டார் சிவன்.

அதுபோலவே பார்வதி தேவி ஜலக்கிரீடை செய்யும்போது மறைந்து மறைந்து நின்று தேவியின் தரிசனத்தை அவருக்கே தெரியாமல் பெற்றுக் கொண்டிருந்தான் பரமசிவன்.

‘சகல லோகங்களையும் கண்காணிக்கும் சக்தி பெற்ற’ பராசக்திக்கு தான் குளிப்பதை இரண்டு கண்கள் திருட்டுத்தனமாக பார்ப்பது தெரிந்திருக்காதா என்ன?உணர்ந்தாள்.

தான் தன்னந்தனியாக குளித்துக் கொண்டிருப்பதை யாரோ ரசம் சொட்ட பார்த்துக் கொண்டிருப்பதை தன் சக்தியால் தெரிந்துகொண்ட பார்வதி திடுக்கிட்டாள். பெண் தெய்வம் என்றாலும் பெண் தானே?

உடனே… அவசரமாக தனது கச்சைகளையும், வஸ்திரங்களையும் பதறியபடியே உடுத்திக்கொண்ட பார்வதி, தன்னைப் பார்த்தவனை தேடினாள். டேய்… யாரங்கே? பராசக்தியின் ஸ்நானத்தை ஒளிந்து பார்க்கும் அளவுக்கு துணிச்சல்காரன் யார்?

என கோபத்தில் பார்வதிதேவி சத்தம்போட… பட்டென்று வெளியே வந்த சிவன்… ‘தேவி… யாம்தான் ஒரு சின்ன திருவிளையாடல்… அதற்குப் போய் ஏன் இப்படி கோபப்படுகிறாய்? சாந்தம்… சாந்தம்…’ என்கிறார்.

எது ஸ்வாமி திருவிளையாடல் ஒரு பெண் குளிப்பதை இன்னொரு ஆண் மறைந்து நின்று கண்களால் சுகிப்பது உங்கள் திருவிளையாடல் என்றால்… என் திருவிளையாடலையும் கொஞ்சம் பாருங்கள்.

சக்தியும் தன் திருவிளையாடலை அரங்கேற்றினாள். “மனைவியென்றும் ‘பாராமல்’ நான் குளித்ததைப் பார்த்த நீர்… யானைத் தலையனாகவும், மனித உடம்பாகவும் மாறக் கடவுவது…” என கோபத்தால் சாபமிட்டாள்.

அந்த க்ஷணத்திலேயே பரமசிவன் அவ்வாறே ஆனார். அதாவது யானை முகத்துடனும் மனித உடம்பாகவும் புது வடிவம் பெற்றார். அதாவது… விநாயகன் வேறு யாரும் அல்ல. பரமசிவன்தான் என்கிறது இக்கதை.

இன்றும் ஆற்றங்கரை, குளத்தங்கரைகளில் எல்லாம் விநாயகர்கள் நிறைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.அது எதற்கு என்றால்…?

‘டேய்… குளிப்பது உன் பத்தினியாக இருந்தாலும் எட்டிப் பார்க்காதே. பார்த்தால் என் கதிதான் உனக்கும்’ என்று பரமசிவன் ஆண்களிடம் சொல்வதற்குத்தான். இது கதை.

அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 55 சிவனின் சிந்திய‌ இந்திரியம். முருகன் யார்? முருகன் பரமசிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்தவர் இல்லை.

பகுதி 56-2. வேதப்படி கணபதி கடவுள் இல்லை.?? மிருகங்களை வழிபடுதல்.


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 56-1  பார்வதி குளிப்பதை மறைந்து பார்த்த சிவன். விநாயகன் வேறு யாரும் அல்ல. பரமசிவன் தான் 

பகுதி 57 – 58. இதுதானப்பா நவராத்திரி–நதிமூலம், ரிஷிமூலம், உண்மையான மூலம்.

About VELUPPILLAI 3405 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply