‘இராஜிநாமா’ முடிவு கஸ்டமானது; மனம் திறந்த சத்தியலிங்கம் வடமாகாண சுகாதர அமைச்சராக பணியாற்றி வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் இராஜினாமச் செய்த பின்னர் மனம் திறந்து கருத்துக்களை முன்வைத்தார். அவை வருமாறு, கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாசபைத் தேர்தலிலே, நான் வவுனியா மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடாக போட்டியிட்டு. மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்ததையடுத்து, வடக்கு மாகாண சபையின் முதலாவது சுகாதார அமைச்சர் என்ற பதவி எனக்கு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு வருட காலப்பகுதியிலே, ஓர் அமைச்சராக இந்த மாகாணத்தின் மக்களால் தெரிவுசெய்யப்பட்;டவன் என்ற அடிப்படையிலே, சுகாதார அமைச்சுக்குரிய எல்லா வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருந்தேன். நாங்கள் வடக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்றபோது, அமைச்சர்கள்; இருப்பதற்குக் கூட ஓர் அலுவலகம் இல்லாத நிலையிலே நாங்கள் இருந்து செயற்படுவதற்குரிய அலுவலகத்தைத் தெரிந்தெடுத்ததில் இருந்து, இன்று வரை, எங்களை இந்த மாகாண சபையின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்த, நீண்டகால யுத்தத்தினால் துன்பப்பட்ட எங்கள் மக்களுடைய அடிப்படை தேவைகளை இனங்கண்டு. அவற்றைப் பூர்த்தி செய்வதற்குரிய […]