![No Picture](https://nakkeran.com/wp-content/themes/mh-magazine-lite/images/placeholder-medium.png)
புலம் பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? அல்லது மெல்லச் செத்துவிடுமா?
புலம் பெயர் நாடுகளில் தமிழ்வாழுமா? அல்லது மெல்லச் செத்துவிடுமா? நக்கீரன் தங்கவேலு (தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடா) மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிறந்து, வளர்ந்து, மறைந்தவர். ஆங்கிலேயர்ஆட்சியில் ஆங்கிலமொழி கோலோச்சியது. அதற்கு அடுத்ததாக சமற்கிருதம் போற்றப்பட்டது. தமிழ் ஆதீனங்களிலும்தமிழ்ப் பண்டிதர்களது வீடுகளிலும் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. பாரதியார் ஆங்கிலம், சமற்கிருதம் உடபட பல மொழிகள் படித்தவர். ஆனால் பாரதியாரது காதல் தமிழ்மொழி மீதுதான்இருந்தது. அதனை அவர் பல பாடல்களில் வெளிக்கொணர்ந்திருக்கிறார். நாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே என்று பிறந்தனள் என்றறியாத இயல்பினள் எனத் தமிழை ஏற்றிப் போற்றிப் பாடிய பாரதியாருக்கு உள்ளுர ஓர் அச்சம் இருந்தது. எதிர்காலத்தில் தமிழ் மெல்லச்சாகும் மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் என்ற அச்சம் அவரிடம் இருந்தது. அதனைத் தமிழ்த் தாய் சொல்வது போல் பாரதியார் பாடியிருக்கிறார். புத்தம் புதிய கலைகள் – பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே – அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவும் கூடுவதில்லை – அவை சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை என்ற கருத்து பாரதியார் காலத்தில் உரம் பெற்றிருந்தது. இன்றும் அப்படியான கருத்து ஆங்கிலம் கற்ற பல தமிழ்அறிவாளிகள், கல்விமான்கள் இடையே உள்ளது. இன்று உலகில் வாழுகின்ற 600 கோடி மக்கள் மொத்தம் 6,000 மொழிகளைப் பேசுகின்றார்கள் எனக் கூறப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 6,000 மொழிகளிலே வெறுமனே 600 மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்குமாம். எஞ்சிய 5,400 மொழிகளும் அழிந்து விடும் என்று மொழியியலாளர்கள் எதிர்கூறுகிறார்கள். மேலும் இன்றைக்குப்பேசப்படுகின்ற 6,000 மொழிகளில் 3,000 மொழிகளை 1,000 க்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய1,500 மொழிகளை 100 பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். அய்ந்நூறு மொழிகளை வெறும் 10 துப் பேர்தான்பேசுகிறார்கள். ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களை சமூகவியலாளர்கள் பட்டியல் போட்டிருக்கிறார்கள். (அ) பிற மொழி ஊடுருவல் மற்றும் அதன் ஆதிக்கம். (ஆ) வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக உருவாவது. எடுத்துக்காட்டு மலையாள மொழி. (இ) தாய்மொழிக்குப் பதில் வேற்றுமொழி கற்கை மொழியாக, முதல்மொழியாக மாறிவிடுவது. (ஈ) […]