நாத்திகம்
மதம், கடவுள் ஆகியவை மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கருவி.மக்களை மானமற்றவர்களாக ,சிந்தனை அற்றவர்களாக வைத்து ஒரு குறிப்பிட்ட மக்களின் உயர்வுக்காக ஏற்படுத்தப்பட்டவை.

- ► 2019 (1)
- ► 2014 (1)
- ► 2013 (11)
- ► 2012 (21)
- ▼ 2011 (168)
- ► October (3)
- ► September (3)
- ► August (10)
- ▼ July (12)
- தோழர்களே! சாகத் துணிவு கொள்ளுங்கள்
- கருமாதி(தினமலம்) பத்திரிகை ஜாக்கிரதை
- பக்தர்களே, பக்தர்களே இதைக் கொஞ்சம் படியுங்கள்!
- வேதம் ஓத மறுத்தவர்களை வீட்டுக்கு அனுப்பிய மகாராஜா!
- துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (4)
- உச்சிக் குடுமியிலிருந்து ஒரே ஒரு உரோமம் உதிர்ந்திர…
- துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! வெள்ளைக்காரர்களை…
- வரலாறு காட்டும் ஆரியர் நம்பிக்கைகள், சமயச் சடங்குக…
- துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! போயும் போயும் ம….
- காமராசர் எனும் பெருமகன்
- ஜொள் கூட்டமே! விளையாடாதே! தினமலதுக்கு பதிலடி
- பார்ப்பனர்களுக்குப்(துக்ளக்)பதிலடி! பிரித்தாளும் ந…
- ► June (1)
- ► May (7)
- ► April (15)
- ► March (26)
- ► February (70)
- ► January (21)
- ► 2010 (308)
பிள்ளையார் ஆபாசமும் அதன் புராணமும் படிக்க(Read), தரவிறக்க(Download) இந்த சுட்டியை அழுத்துங்கள்
July 31, 2011
தோழர்களே! சாகத் துணிவு கொள்ளுங்கள்
இந்த திராவிட வாலிபர் சங்க ஆண்டு விழாவுக் குத் தலைமை வகித்து தலைமை முன்னுரை நிகழ்த்துவது என்கின்ற சம்பிரதாய நிகழ்ச்சிப்படி நான் ஏதாவது பேசவேண்டும். அப்படிப் பேசுவதில் திராவிடர் என்பதுபற்றியும், நீங்கள் பெரிதும் இளைஞர்கள் ஆனதால் நானும் முதியோனாய் இருப்பதால் உங்களுக்குச் சிறிது அறிவுரை வழங் குவது என்கின்ற தன்மையிலும் சில வாக்கியங்கள் சொல்வது பொருந்துமெனக் கருதுகிறேன்.
நாம் திராவிடர்
நாம் நம்மைத் திராவிடர் என்று ஏன் சொல்லுகிறோம்?
இந்தநாடு திராவிட நாடு, நாம் இந்நாட்டு மக்கள், இந்நாட்டுப் பழங்குடி மக்கள், இந்நாட்டில் மேன்மையாய் நாகரிகத்தில் சிறந்து மானிகளாய் வீரர்களாய் வாழ்ந்தவர்கள், வீரத் திராவிடர்கள் என்ற பெயரைச் சரித்திர காலத்திற்கு முன்னிருந்து உடைய்த்தாய் இருந்தவர்கள், ஆதலால் திராவிடர்கள் என்கிறோம், இதை நானாக அல்லது நானே சொல்லவில்லை. இது இன்று மாத்திரம் சொல்லப்படவில்லை. இந்த நாட்டுச் சரித்திரம் , ஏன்? உலகச் சரித்திரம் தெரிந்த காலம் முதலாய் ஆராய்ச்சி நிபுணர்களான பல அறிவாளிகளால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையும் இன்றும் பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கும் சரித்திர நூல்கள் முதல் புராணங்களில் குறிப்பிட்டு இருக்கும் கற்பனை, பழிச்சொற்கள் என்பவைகள் வரையில் காணப்படும் சேதிகளுமாகும்.
பழமைகள், பழமை சம்பவங்கள், காட்சி சாலைகளுக்கும், நேரப் போக்குப் பரிகாசத்துக்கும் சென்று கொண்டிருக்கும் இந்தப் புத்துலகில் பழங்காலச் சரித்திரத்தையும் பரிகசிக்கும் புராணத்தைப் பற்றியும் கூட ஏன் சொல்லுகிறேன் என்று கேட்பீர்கள். அந்தமாதிரி அதாவது, நம்மைப் பற்றி நம் முன்னைய நிலையைப் பற்றி மேலே நான் சொன்னமாதிரியாய் இருந்து நாம் இன்று எந்தமாதிரியில் இருக்கிறோம்? பழமை நிலைமை யும் இயற்கையும் முற்போக்கில் மாற்றப்பட்டு இருக்கிறதா பிற்போக்கில் பின்னும் மோசமான நிலைமையில் கொண்டுபோய்த் தள்ளி இருக்கிறதா என்பதை சிந்திக்கவும், நாம் அதைவிடச் சிறிதாவது மேன்மையும், மனிதத்தன்மையும் அடைந்திருக் கிறோமா அல்லது கீழ்மையும், இழிநிலையும், மானமற்ற தன்மையும் அடைந்திருக்கிறோமா என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து மேலால் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதற்கும் ஆகவேயாகும்.
நாம் சூத்திரர்களா?
நாம் பிறவியிலோ, தன்மையிலோ, தகுதியிலோ சூத்திரர்களாக இருந்தவர்கள் அல்ல; உண்மையில் அல்ல. பின் நாம் யார்? என்றால் வீரத்திராவிடர்கள் ஆவோம். எப்பொழுது முதல் என்றால் முன் நான் சொன்னபடி உலக சரித்திரம் மனிதநூல் ஆகியவை எட்டியகாலம் முதல் என்பேன். இவை வெறும் வார்த்தையால் மாத்திரம் அல்ல. நாடு, இனம், பண்பு, நடைமுறை ஆகியவைகளால் இயற்கையைத் தழுவி திராவிடர்களானவர்கள். நமது இந்த முடிவு இதுவரை யாராலும் மறுக்கப் படவில்லை, நம் எதிரிகளாலும் மறுக்கப்பட வில்லை. இந்த உணர்ச்சி நமக்குக் கூடாது என்று சொல்லும் சுயநல சமயசஞ்சீவிகளாலும் கூட மறுக்கப்படவில்லை. ஆனால் நாம்தான் நாம் திராவிடர் என்று சொல்லிக்கொள்ள, நம்நாடு திராவிடம் என்று சொல்லிக்கொள்ள, நாம் சூத் திரர்கள் அல்ல என்று சொல்லிக்கொள்ள வெட்கப் படுகிறோம்.
எப்படி மானமும், சுதந்திர உணர்ச்சியும் அற்ற ஒர் பெண் மற்றொரு ஆண்மகனைக் கண்ணால் பார்ப்பதால் கற்புப் போய்விடுமென்று கருதிப் பயப்படுகிறாளோ, பார்க்க வெட்கப்படுகிறாளோ அதுபோல் நாம் திராவிடர் என்று சொல்லிக் கொண்டால் நமது மதம் போய்விடும், தேசியம் போய்விடும், செல்வாக்குப் போய்விடும் என்று பயப்படுகிறோம், வெட்கப்படுகிறோம். எந்தக் காரணத்தாலேயோ நாம் சூத்திரர்கள் என்பதாக ஆக்கப்பட்டிருந்தாலும் இன்றும் சூத்திரர்களாக அதுவும் நாம் மாத்திரமல்லாமல் நம் இன்றைய ராஜாக்களும், மகாராஜாக்களும், பண்டார சன்னதிகளும், ஜமீன்தாரர்களும், ஆயிரக்கணக் கான வேலி நிலமுள்ள மிராசுதாரர்களும், பல கோடி ரூபாய் செல்வமுள்ள ராஜா, சர் முதலியவர்களும் சூத்திரர்களாக இருக்கவும் நடத்தப்படவும் இதுதான் (நாம் திராவிடர் என்று உணராததும், உணர்ந்தாலும் சொல்லிக்கொள்ளப் பயப்படுவதும்) காரணமாகும். ஆனால் இந்த இழிவு அவர்களுக்கு (அப்படிப்பட்ட பெரியவர்களுக்கு) மிக சகஜமாகி விட்டது. எப்படியோ அவர்களை அவர்களது ஆசாபாசம் அவர்களுக்குச் சகிப்புத்தன்மையை உண்டாக்கிவிட்டது. நமக்குப் பட்டம் இல்லை, பதவி இல்லை, செல்வம் இல்லை இவை பற்றிய மானமற்ற பேராசை இல்லை. எனவே நாம் ஏன் திராவிடன் என்பதை மறந்து மறைத்துக்கொண்டு நம்மைச் சூத்திரன் என்பதாகக் காரியத்தில் ஆதாரத்தில் ஒப்புக்கொள்ள வேண்டும்?
சூத்திரன் என்றால் என்ன?
சூத்திரன் என்பது தாசிமகன், ஆரியர்களின் அடிமை; ஆரியநலத்துக்கு ஆக, ஆரியர்களின் மேன்மை வாழ்வுக்காக இருப்பவன், இருக்க வேண்டியவன், இருந்தும் வருகிறவன் என்பதாகும். இதுதான் அந்த வார்த்தையின் அருத்தம். சாஸ்திரம் கடவுள் என்பவற்றின் வாக்குமாகும். ஆனால் உண்மையில் நாம் அப்படிப்பட்டவர்கள் அல்லாதவர் களாக இருக்கும்போது அந்தப் பெயரை ஏன் நமக்கு இருக்கவிடவேண்டும்? என்று கேட்கிறேன்.
தோழர்களே, இக்காலத்தில் உண்மையான ஒரு தாசிமகனையே பாருங்கள். தனது தாய் தாசி என்றும், தனது வீடு, வாசல், செல்வம் தாசித்தனத்தால் வந்த தென்றும் தெரிந்தவன்கூட அவனது சுயமரியாதைக் கொதிப்பால் தாசியே உலகில் இருக்கக்கூடாது சட்டத்தில் இருக்கக் கூடாது, தன் தாய் வீட்டிற்குள்ளும் வேறொரு பயல் அவன் ஜமீன்தாரரானாலும், அவன் குருவானாலும், ஆச்சாரியானாலும், கோடீஸ்வரன் ஆனாலும் வரக்கூடாது என்று தன் தாயைச் சகோதரியைக் கண்டிக்கிறான். வருகிறவனையும், ஏன்? வந்து கொண்டிருக்கிறவனையும் விரட்டி அடிக்கிறான், அநேகமாய் அடித்துத் துரத்தியே விட்டான். இத்தனைக்கும் அவர்களுக்குத் தேவ அடியார்கள், தேவதாசிகள் என்று பெயர் இருந்தும் கூட. ஆனால் நம் சுயமரியாதை என்ன என்று பாருங்கள், நாம் வேசி மக்கள், அடிமை (சூத்திரர்) என்று அழைக்கப்படுகிறோம். அப்படி நம்மை அழைப்பவர்களைச் சாமி என்கிறோம். அப்படிப்பட்ட வர்களை நம்மிலும் மேலானவர்களாகக் கருதி வைதிகக் கருமங்களை (முட்டாள்தனமான, இழிவு தரும்படியான காரியங்களை) அவர்களைக்கொண்டு செய்வித்துக் கொள்கிறோம்.
அதையே வலியுறுத்தும் மார்க்கத்தை, சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்மை சொல்லிக் கொள்ளு கிறோம் வாயால் சொல்லிக்கொள்ளுவது மாத்திரமல் லாமல் மற்றவர்களுக்கும் தெரியும் படியான குறிகளையும் (ஏதாவது ஒரு அடையாளத் தையும்) அணிந்துகொள்ளுகிறோம். இந்த பேதத்தையும், இழிவையும் மானமற்ற உணர்ச்சி யையும் நிலைநிறுத்துவதும், பெருக்கிக் கொள்வது மான காரியங்களை நமது ஆத்மீக, லவுகீக காரியமாய்க் கருதிச் செய்து வருகிறோம். இது நியாயமா? நமக்கு இது தகுதியா? அதுவும் இந்த 20ஆம் நூற்றாண்டில் தகுமா? இதைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழலாமா? என்று யோசித்துப் பாருங்கள்.
உன் சொந்த இழிவை, ஈனத்தை நீக்கிக்கொள்ளாத நீ நாட்டுக்குச் சுதந்திரம், மனித சமுதாயத்திற்கு விடுதலை ஏழைகளுக்குச் செல்வம், உண்டாக்கப் பாடுபடுகிறேன் என்றால் உன்னைவிட மடையனோ அல்லாவிட்டால் அயோக்கியனோ அல்லாவிட்டால் பித்தலாட்டக்காரனோ வேறு யார் இருக்கமுடியும். திராவிடனுடைய சரித்திரத்தில் இந்த இழி தன்மை என்றும் இருந்ததாகக் காணப்படவில்லையே!
எது தேசியம்? எது விடுதலை?
ஆயிரக்கணக்கான எச்சிலிலை கழியும் ஓட்டலுக்குள் சென்று சமமாய் இருக்க அனுமதி யில்லை. நீ பத்து லட்சக்கணக்காக செலவழித்துக் கட்டி வருஷம் லட்சக்கணக்கான செலவு செய்து பூஜை உற்சவம் செய்துவரும் கோவிலுக்குள் சென்று பிச்சை எடுத்துப் பிழைக்கும் உச்சிக்குடுமி மக்களுடன் சரிசமமாய் நின்று பிரார்த்திக்க உரிமை இல்லை என்பதாக இருந்துவரும், நடத்தப்பட்டு வரும் மக்களுக்கு தேசியமா? சுயராஜ்ஜியமா?
உண்மைத் திராவிடன் இப்படிப்பட்ட எச்சிலிலை மண்டபங்களையும், கோவில்களையும் நிர்துளியாக்கு வதையல்லவா தேசியம் சுயராஜ்ஜியம் என்று எண்ண வேண்டும்?
இன்றைய தினம் இந்த நிலையைப் பொறுத்துக் கொண்டு, இதை மாற்ற வேலை செய்பவர்களையும் எதிர்த்துத் தொல்லை விளைவித்துக்கொண்டு தேசியம், சுயராஜ்ஜியம், விடுதலை, சுதந்திரம் பேசும் திராவிடன் எவனானாலும், தம்மைச் சிறிதாவது திராவிட ரத்தம் ஊசலாடும் திராவிடன் என்று கருதுகிற எவனானாலும் அவன் எல்லாம் நம் எதிரிகளின் அதாவது வெள்ளை ஆரியர், தவிட்டு நிற ஆரியர் ஆகிய இரு கூட்டத்தினரின் லைசென்சு பெற்ற அடிமைகள் அல்லது நம்மைக் காட்டிக்கொடுக்கும் ஒற்றர்கள் என்று தூக்குமேடையில் இருந்துகொண்டு கூறுவேன்.
எது பொதுவுடைமை இன்றைய பொது உடைமைக்காரர்கள் என்பவர்களின் யோக்கியதைதான் என்ன? வெங்கடா சலபதிக்கு (ஒரு கருங்கல் பொம்மைக்கு) பத்து லட்ச (10,00,000) ரூபாயில் கிரீடமா? மற்றும் பல குழவிக்கல், தாமிர பொம்மை ஆகியவைகளின் பேரால் நடக்கும் அட்டூழியங்களைப் பாருங்கள். ஊர்தோறும் கோவில், மணிதோறும் பூஜை, மாதந்தோறும் உற்சவம், வருஷந்தோறும் சாமி திருமணமா? இவைகளுக்குப் பண்டு எவ்வளவு? பண்டம் எவ்வளவு? பூசாரி பண்டார சன்னதி எவ்வளவு? எனவே நம் நாட்டு, இனத்தின் அறிவு, செல்வம், முயற்சி எதில் மண்டிக் கிடக்கின்றன? நம்மவர்களே ஆன கிருபானந்த வாரிகள், திருநாவுக்கரசுகள் ஆகியவர்கள் காலட் சேபமும், இசை அரசுகள் சங்கீதங்களும், நாடக மணிகள் நாடகங்களும், சினிமாக்களும், பண்டித மணிகள் வித்துவத் தன்மைகளும் இன்று எதற்காகப் பயன்படுகின்றன? இவைகள் பொதுவுடைமையின் எதிரிகள் அல்லவா? இவர்கள் எல்லோரும் தனி உடைமைக்காரர்களின் நிபந்தனை இல்லாத அடிமைகள் அல்லவா? இவைகளை அச்சுக் குலை யாமல் அசைய விடாமல் காப்பாற்ற இடம் கொடுத் துக்கொண்டு பணக்காரனைப் பார்த்து ஆத்திரப் பட்டால், குரைத்தால், பாமரத் தொழிலாளிகளை ஏமாற்றினால் பொது உடைமை ஆகிவிடுமா?
காங்கிரஸ்
காங்கிரஸ், தேசிய விடுதலைக்காரன் யோக்கி யதைதான் என்ன இதைவிட மேலானதாகிவிட்டது. எந்தத் தேசியவாதி இந்தப்பக்கம் திரும்பினான், எந்தப் பொதுஉடைமை மாநாட்டில் எந்த தேசிய மாநாட்டில் இந்த தன்மைகளை பொசுக்கிப் பொங்கல் வைக்கவேண்டுமென்று பேசப்பட்டது? தீர்மானங்கள் செய்யப்பட்டது? நினைக்கப்பட்டது? இந்த மகா உத்தமர்கள் எங்களை குறை சொல்லுவதெதற்கு? அரசாங்கத்தைத்தான் குறை சொல்லுவதெதற்கு? அரசாங்கம் இப்படியெல்லாம் செய்யச் சொல் லுகிறதா? அல்லது இவைகளைப் பற்றிப் பேசுவது ராஜத்துரோகமா? காப்பிக் கடைக்குள், கோவிலுக் குள் முன் மண்டபத்தில் பறையனை, சூத்திரனை விடக்கூடாது என்று எந்த அந்நிய ஆட்சி சட்டம் செலுத்தியது? கோவிலுக்குக் கூத்தியை வைக்கச் சொல்லி, கடவுளைத் தாசிவீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்லி, கல்லுக்குத் தங்கத்தில் கவசம் போட்டு வைரத்தில் கிரீடம் வைக்கச் சொல்லி எந்த அடக்குமுறை, சுரண்டல் அந்நிய ஆட்சி சொல்லிற்று?
எங்கள் கோபம்
இன்று எது ஒழிய வேண்டும்,யார் வெளியேற வேண்டும், எது மாற வேண்டும்? இவை அறியாத மக்களும், சுயநலவாதிகளும், சமயசஞ்சீவிகளும், வயிற்றுப்பிழைப்பு, பொதுஉடைமை, தேசபக்தர் குழாங்களும் எங்களை ஏன் கடிய வேண்டும். எங்களுக்கு எந்தப் பார்ப்பான் மீது கோபம்? எந்தக் கடவுள் மீது கோபம்? எந்தத் தலைவன் மீது கோபம்? எந்த ஜாதி மீது கோபம்? எந்த வெள்ளை யனிடம் அன்பு? தோழர்களே! பித்தலாட்டத்தின் மீது கோபம், முட்டாள்தனத்தின் மீது கோபம், ஏமாற்றுகிறதன்மை மீது கோபம், எங்களை இழிவுபடுத்தியும், முன்னேற வொட்டாமலும் செய்து வைத்து இருக்கும் சகலத்தின் மீதும் கோபம், இவைகளுக்கு ஆதரவளிப்பதால் வெள்ளையன் மீதும் கோபம்.
ஆகவே, எங்களை காங்கிரஸ்காரர்களும், பொதுஉடைமைக்காரர்களும் மற்றவர்களும் ஏன் கோபிக்க வேண்டும். ஏன் தொல்லை கொடுக்க வேண்டும்?
எங்களைத் தொல்லை கொடுப்பவர்கள் சுரண் டல்கார எங்கள் எதிரிகள் அல்லது அவர்களது நிபந்தனை அற்ற அடிமைகள் என்பவர்கள் அல்லாமல் வேறு யாராய் இருக்க முடியும்?
இளைஞர்களே! நடப்பது நடக்கட்டும் என்று நீங்கள் எதற்கும் துணிவு பெற்றுத் தொண் டாற்றவேண்டிய காலம் இது. நீங்கள் அடிபட வேண்டும். காயப்பட வேண்டும். கும்பல் கும்ப லாகச் சிறைப்பட நேரிட்டாலும் மனம் கலங்கா மல் நிற்கும் துணிவு பெற வேண்டும். இதற்குத் தான் திராவிட இளைஞர் கழகம் இருக்க வேண்டும்.
நாடானது விடுதலை, சமதர்மம், முன்னேற்றம், சீர்திருத்தம், கலை, கல்வி, தேசியம் என்னும் பேர்களால் மிக்க அடிமைத்தனத்திற்கும், காட்டு மிராண்டிதனத்துக்கும் போய்க்கொண்டு இருக்கிறது. வேசிக்கும் விபசாரிக்கும் தேவர் அடியாள் என்று பெயர் இருப்பதுபோல் நாட்டின் மனித சமுதாயத்தின் இழிவுக்கும், கீழ்மைக்கும், ஏழ்மைக்கும், அடிமைக்கும் அயோக்கியர்கள் ஆதிக்கத்திற்கும் மேற்கண்ட விடுதலை முதலிய பெயர்கள், ஸ்தாபனங்கள் இருந்து வருகின்றன.
தோழர்களே! துணிவு கொள்ளுங்கள், சாகத் துணிவு கொள்ளுங்கள். உங்கள் சொந்த வாழ்வு நலத்தையும், மானத்தையும் விட்டுத் தொண் டாற்றத் துணிவு கொள்ளுங்கள். இதுதான் இன்றைய திராவிட வாலிபர் கழக ஆண்டு விழாவில், இனி வெகுகாலம் வாழப்போகும் மக்களாகிய உங்களுக்குச் சாகப்போகும் கிழவனாகிய நான் வைத்துவிட்டு போகும் செல்வமாகும்.
உன் சொந்த மானத்தை விட்டாகிலும், உன் இன ஈனத்தை ஒழிப்பதற்குத் தொண்டு ஆற்று. உன் இனத்தின் இழிவை, ஈனத்தைப் போக்க உன் சொந்த மானத்தையும் பலிகொடு. இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற் றத்தக்க குடிமகன் இல்லாத இனம் வேர்ப்பற் றில்லாத மரம்போல், கோடரிகொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல் தானாகவே விழுந்துவிடும்
தன் இனத்திற்கு உண்மையான தொண்டாற்று பவனுக்கு அடையாளம் என்னவென்றால் அத் தொண்டால் ஏற்படும் இன்னலுக்கும், துன்பத்திற் குமே அவனது வாழ்வையும், உடலையும் ஒப்புவித்துவிட்டவனாக இருக்க வேண்டும். இது நான் சொல்வதல்ல, குறள் வாக்கியமாகும்.
(23.08.1945 அன்று திருச்சி டவுன் ஹாலில், திராவிட வாலிபர்கள் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தலைமை ஏற்று பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு – சொற்பொழிவு – 01.09.1945
Posted by அசுரன் திராவிடன் at 5:25 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
கருமாதி(தினமலம்) பத்திரிகை ஜாக்கிரதை
பாம்புக்கு விறுவிறுத்தால் பொந்துக் குள் தங்காது என்பது நாட்டில் ஒரு பழமொழி உண்டு. தினமலரும் அந்தப் பாம்புப் பட்டியலில் இடம் பெறக்கூடியது தான்.
வாரம் ஒரு முறையோ, இரு முறையோ திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களைச் சீண்டாவிட்டால் எஜமான் படி அளக்க மாட்டார் போல் தெரிகிறது.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அரசு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்பது எங்களைப் போன்றவர்களுடைய வேண்டுகோள்.
டவுட் தனபாலு: அப்படின்னா என்ன அர்த்தம் . . . ? இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு அவரைக் கைது பண்ணா சரியா இருக்கும் கிறீங்களா? உங்களுக்கு ஸ்டாலின் மேலே அப்படி என்ன கோபம் . . .?
(தினமலர் 31-7-2011 பக்கம் 8)
இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அரசு தேவையற்ற பிரச்சினை களை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் அரசுக்குச் சொன்ன அறிவுரையின் பொருள் என்ன?
ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவர் களுக்கு உடனடியாகக் கவனிக்க வேண்டிய பிரச்சினைகள் ஏராளம் உண்டு. ஆக்க ரீதியான சிந்தனை யும், செயல்பாடுகளும் தேவைப்படும்.
அதையெல்லாம் விட்டு விட்டு, அவசர அவசரமாக எதிர்க்கட்சிக்காரர்களைப் பழி வாங்குவது, கடந்த ஆட்சியில் செயல் படுத்தப்பட்ட நல்ல திட்டங்களுக்குக் குழி வெட் டுவது என்பது போன்ற அடாவடித்தனங்களில் ஓர் ஆட்சி ஈடுபடுவது எளிதில் கெட்ட பெயரைத்தான் சம்பாதிக்க இடம் கொடுக்கும் என்ற பொருளில் சொல்லப்படும் கருத்தைக்கூட, ஆட்சிக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு துக்ளக் தினமலர் போன்ற ஏடுகள், ஏற்கெனவே போதை ஏறியவனுக்கு மேலும் மேலும் ஊத்திக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன.
இவர்களிடத்தில் இந்த ஆட்சி எச்சரிக்கை யாக இல்லை என்றால் நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு நட்டாற்றில் விட்டு விடுவார்கள் என்பதில் அய்யமில்லை. ஏற்கெனவே தினமலருக்கு கருமாதி பத்திரிகை என்ற ஒரு பெயர் உண்டு. அந்த வேலையைச் செய்ய ஆட்சி இடம் கொடுத்தால், நாம் என்னதான் செய்யமுடியும்?
எருமை மாடுகூட ஏரோப்பிளேன் ஓட்டும்!
தி.மு.க. பொருளாளர், தி.மு.க. சட்டமன்றத் தலைவர், முன்னாள் துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட வில்லையாம். தானாகவே காவல்துறையினரின் வேனில் ஏறிக்கொண்டாராம்.
தினமலர் வண்ணமிட்டு தலைப்பு கொடுத்து செய்தியை வெளியிட்டுள்ளது. காவல்துறை அதிகாரி அப்படி சொன்னாராம். சரி, அப்படியே இருக்கட்டும். அவரை வேனில் அழைத்துச் சென்று திருவாரூர் திருமண மண்டபத்தில் மூன்று மணி நேரம் எதற்கு அடைத்து வைத்திருக்க வேண்டும்?
பாதுகாப்பு நோக்கத்துக்காகவே அழைத்துச் சென்றதாகக்கூட இருக்கட்டும். திருவாரூர் சென்ற உடனேயே அவரை வெளியில் விட்டுவிட வேண்டி யதுதானே? கேட்பவர் கேனையனாக இருந்தால் எருமை மாடு கூட ஏரோப்பிளேன் ஓட்டும் என்று சொல்வானாம். அப்படி இருக்கிறது கதை.
Posted by அசுரன் திராவிடன் at 5:21 AM 1 comment: abels: தினமலர்
Saturday, July 30, 2011
பக்தர்களே, பக்தர்களே இதைக் கொஞ்சம் படியுங்கள்!
மறைந்த சாயிபாபாவுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள், சீடர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளதோடு, பல லட்சக்கணக் கான பொருள்களைக் கொட்டியும் கொடுக்கிறார்கள்!
ஆன்மீகம் என்றால் லவு கீகம் – உலக வாழ்வு – பொருள் உள்ளிட்ட எல்லா ஆசைகளை யும் துறந்து, மோட்ச உலகத் திற்கு வழிகாட்டுவதற்காக இவரை நாடுகிறோம், நாடினோம் என்று கூறும் பக்தர்களே!
அவரது ஆசிரமத்தில் (?) அவரது அறைகளிலிருந்து கண்டு எடுக்கப்பட்ட பண கத்தைகளை- அவரது சீடகோடி கள் லாரியில், வேன்களில் ஏற்றியதை கையும் மெய்யு மாகப் பிடித்துள்ள நிலையில் – அரசு தலையிட்ட நிலைக்குப் பின், அதன் அறக்கட்டளையின் முக்கியஸ்தர் ஆன ஒரு தமிழ் நாட்டுப் பார்ப்பனர் தொழில் அதிபர் ஏதோ ஒரு நொண்டிச் சமாதானத்தைக் (பலநாள்கள் கழித்து) கூறினார்;
அவரது சமா தியைக் கட்ட அந்த ஒப்பந்தக் காரருக்குக் கொடுக்க எடுத்துச் செல்லப்பட்டது என்று ஏதோ ஒன்றைச் சொன்னார். தென்னை மரத்தில் ஏறிப் புல் பிடுங்கப் போனேன் என்று – மாட்டிக் கொண்ட பிறகு – சொன்ன பொய் சொல்லான் போல சொன்னார்கள்.
அவரது பல அறைகளிலிருந்தும் பொன், தங்கம், வெள்ளி, வைர நகைகள், பல்வேறு அறைகளிலி ருந்து ஏராளமான ரொக்கத்தொகை இவை எல்லாம் மூன்று ரவுண்டுகள் வேட்டையாடியபின், சாய்பாபாவின் தனித்த குடியிருப்பான யஜுர் மந்திர் (நல்ல பெயர்தான்) உள் சென்று (பிரசாந்தி நிலையத்தில்!) சோதனை நடத்தி அதிகாரிகள் எடுத்தவைகளைக் கண்டு அதி காரிகள் மயக்கம் போட்டு விழாத குறைதான்!
(1) இறக்குமதி செய்யப்பட்ட முகச் சவர செட்டுகள்
(2) வாசனைத் திரவியங்கள் – சென்ட்டுகள்
(3) சுத்தி, ஆடையலங்காரத்துக் கான பொருள்கள் (Toiletries)
(4) ஷாம்பு (Shampoo) பாட்டில்கள்
(5) சோப்புகள், கைதுடைக்கும் சிறு கைத் துண்டுகள்
(6) விலை உயர்ந்த கை கடி காரங்கள் (Expensive Watches) (சர்வதேச புகழ் வாய்ந்த பிராண்ட் வாட்சுகள்).
(7) பதப்படுத்தப்பட்ட உலர்ந்த பழங்கள்
பக்தர்களைச் சந்திக்க அந்த அறையிலிருந்து வரும் போது மிக விலை உயர்ந்த ரக செண்ட் அடித் துக் கொண்டு வந்துதான் பக்தர், பக்தைகளுக்குக் காட்சி தந்து, ஆன்மீக குரு ஆசி வழங் குவார் என்று உடன் இருப்பவர் கூறினார் என்று கூறுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு (24-7-2011).
காற்று நிரப்பப்பட்ட வசதியான எளிமையான படுக்கையே சாய்பாபா பயன்படுத்தும் படுக்கை.
8) வாழும் கடவுளான இந்த சாய்பாபா அறையில் கண்டெடுக்கப் பட்ட தங்க மாலைகள் இரண்டு – 6 முதல் 7 கிலோ எடை உடையவை. (இது மேஜைக்குக் கீழே வைக்கப் பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டு எடுத்தார்கள்!)
75 வெள்ளி டம்ளர்கள் – ஒரு பக்தர் 75 ஆம் ஆண்டு பிறந்த நாளுக்குத் தந்தவை என்கிறார்கள்! (ஒவ்வொன்றும் 700 கிராம் எடை)
9) பல்லாயிரக்கணக்கில் மோதி ரங்கள் (அவர் வரவழைத்துத் தர இவை தேவைப்பட்டிருக்கலாமோ?)
10) 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டுப் புடவைகள் (விலை உயர்ந் தவை)
(11) வேட்டிகளும் சட்டைகளும் நிறைய.
ஆன்மிகத் தேடலுக்கும் பரப்புத லுக்கும் எவ்வளவு முக்கியமான முற்றும் துறந்த முனிபுங்கவருக்கு கடவுள் அவதாரத்திற்கு இவை ஏன் தேவைப்பட்டன?
பட்டுப் புடவைகள், சட்டைகள், துணிக் கடைகளில் கூட இவ்வளவு (ஸ்டாக்) இருப்பு இருக்குமா என்பது சந்தேகமே என்கிறார் நாளேட்டைப் படித்த நமது நண்பர் ஒருவர்.
அவரது தனி மனித ஒழுக்கம் பற்றி அமெரிக்க சீடர் ஒருவர் எழுதிய Avatar of Night அவதார் ஆஃப் நைட்- இரவில் எடுக்கும் அவதாரம் என்ற தலைப்பில் ஒரு நூலே எழுதியுள்ளார்!
அவர் பெயர் Tal Brooke என்பதாகும். Tal Brooke – The Hidden Side of the Sai Baba Avatar of Night – (Tarang paperbacks – a division of Vikas Publishing House Pvt.Ltd.1982)
அவரது குற்றச்சாட்டு உண்மை யாகவே இருக்கலாம் என்பதற்கு மற்றொரு ஆதாரம் மலேசியா விலிருந்து அவரது ஆசிரமத் திற்கு (?) ஆன்மிகம் கற்றுக் கொள்ள அனுப்பப்பட்ட மாணவ இளைஞர் களிடையே அதே மாதிரி ஓரினச் சேர்க்கை கையாண்டதைக் கண்டு பதறிய பக்தர்கள் – வெறுத்து, திராவிடர் கழகத் தலைவருக் குக் கடிதம் எழுதி அம்பலப் படுத்தினார்கள்.
இதற்குப் பிறகும் விளக்கை நோக்கிய விட்டில் பூச்சிகளாகச் சென்று வீழ்வதற்குத் தயாராக இருக்கும் பக்தர்களே, நீங்கள் விழிப்புணர்வு பெறவேண்டாமா?
பிரேமானந்தாவின் லீலை கள் இரட்டை ஆயுள் தண்டனை பெற வைத்த பிறகும் பக்திப் போதை தீரவில்லையே!
வெட்கப்பட வேண்டாமா?
இன்னொரு ஆனந்தா வந்து துணிச்சலுடன் மீண்டும் ஒரு ரவுண்ட் அடிக்கிறார்! உலகப் பணக்காரனாக – ஒழுக்கக் கேட னாக வந்து உலா வருகிறார்.
ஏமாறும் மக்களின் பக்தியின் மீது மய்யம் கொண்டு ஏற்றங் கொண்டு அலைகிறார்களே!
பக்தி வந்தால் புத்தி போகும் என்ற பெரியார் பொன்மொழி எவ்வளவு அருமையான அனுபவ மொழி!
யோசியுங்கள்! திருந்துங்கள்! உங்கள் ஒழுக்கத்தை, அறிவைச் சேதாரப்படாமல் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!
Posted by அசுரன் திராவிடன் at 8:47 PM No comments:
வேதம் ஓத மறுத்தவர்களை வீட்டுக்கு அனுப்பிய மகாராஜா!
மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் ஆட்சி செய்த மன்னர் சாகுமகாராஜா (1874-1922) அந்த மண்டலத்தில் அதிகாரப்புரி அனைத்தும் அக்கிரகாரத்தில் பிறந்த பூணூல்களிடத்தில்தான்.
மண்ணின் மைந்தர்களான மராத்திய மக்களோ வெறும் எடுபிடிகள்தாம்.
1884 இல் மன்னராக பொறுப்பேற்றதும் அதிரடியாக அவர் பிறப்பித்த ஆணை – அனைவரும் ஜாதி வேறுபாடு இல்லாமல் வேதம் கற்பிக்கப் பாடசாலைகளைத் திறந்ததுதான்!
ஒவ்வொரு நாளும் பஞ்ச கங்கை நதிக்குக் குளிக்கச் செல்வார் மன்னர். அப்பொழுது பார்ப்பனர்கள் தோத்திரங்களைப் பாடுவார்கள் – அவை எல்லாம் புராணங்களிலிருந்துதான் -வேதங்களிலிருந்து அல்ல; காரணம் சூத்திரனான சாகு மகாராஜாவுக்குப் புராணங்களில் இருந்துதான் தோத்திரங்களைப் பாடுவார்களாம் – வேதங்களை ஓதக்கூடாதாம்!
அரண்மனைக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளில்கூட வேதங்கள் இடம் பெறாது – புராணங்கள்தான்! மன்னருக்கு மகா சினம் வந்தது. நம்மிடம் கூலி வாங்குகிறவர்களுக்கு இவ்வளவு திமிரா – இனி அரண்மனைகளிலும், மற்ற காரியங்களிலும் வேதங்கள்தான் ஓதப்பட வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்தார். அவ்வாறு செய்யாதவர்களின் வேலை சீட்டுக் கிழிக்கப்படும் என்பதுதான் அந்த ஆணை.
மன்னரின் உத்தரவுக்குப் பார்ப்பனர்கள் பணியவில்லை.
விளைவு!
பார்ப்பனர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் எல்லாம் பறி முதல் செய்யப்பட்டன. மகாராஷ்டிரம் முழுவதும் அதிகார வர்க்கத்தில் இருந்த பார்ப்பனர்களை எல்லாம் ஒன்று சேர்த்து எதிர்த்துப் பார்த்தனர் பார்ப்பனர்கள். ஒன்றும் நடக்கவில்லை.
சிவாஜியின் பரம்பரையைச் சேர்ந்தவர்தான் சாகு மகராஜ். ஆனால் சிவாஜியை சூத்திரன் என்று கூறி தர்ப்பைப் புல் முன் தலை குனிய வைத்தது போல் சாகு மகராஜாவிடத்தில் பருப்பு வேகவில்லை.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன் பார்ப்பனர்களின் மண்டையில் மரண அடி கொடுத்தது என்பது சாதாரணமா?
1902 ஆம் ஆண்டு இதே நாளில் முதன் முதலில் (ஜூலை 26) ஆணை ஒன்றைப் பிறப்பித்தார் அரசர் சாகுமகராஜ்.
தனது பரிபாலனத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அரசுப் பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆணை!
பார்ப்பனர் அல்லாதார் வரலாற்றில் இது ஒரு திருப்பம் தரும் சமூக நீதி ஆணை என்பதில் அய்யமில்லை.
1891 ஆம் ஆண்டில் கோலாப்பூரில் 71 அலுவலர்களில் 60 பேர் பார்ப்பனர்கள். இந்த உத்தரவுக்குப் பிறகு 1912 இல் 95 அலுவலர்களில் 60 பேர் பார்ப்பனர் அல்லாதார் என்றால், அதன் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.
சாகு சாதாரணமானவர் அல்லர். சமூக நீதிக்கு வித்திட்ட மகாராஜாதான்!
Posted by அசுரன் திராவிடன் at 8:46 PM No comments:
துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (4)
எல்லாவற்றிலும் பார்ப்பனமயம் என்ற கொடி ஆணவத்தோடு பறந்து கொண்டிருந்தது. நூற்றுக்குத் தொண்ணூற்றேழு சதவிகிதமான பார்ப்பனர் அல்லாத மக்கள் – மண்ணுக்குரிய மக்கள் கை பிசைந்து நின்றனர். எடுத்துக்காட்டாக ஒரு புள்ளி விவரம் (1912) நூற்றுக்கு மூன்று பேர்களாக இருந்த பார்ப் பனர்கள் டிப்டி கலெக்டர்களில் 55% சப் ஜட்ஜ்களில் 83%
மாவட்ட முன்சீப்புகளில் 72% என்ற நிலை.
அதே ஆண்டில் சென்னை மாநில சட்ட மன்றத்தில் இடம் பெற்றிருந்த வர்கள் யார் யார் தெரியுமா?
உள்ளாட்சித் துறைகளிலிருந்து வந்தவர்கள்
(1) தென் ஆர்க்காடு – செங்கற் பட்டுத் தொகுதி – வழக்கறிஞர் ஆர். சீனிவாச அய்யங்கார்.
(2) தஞ்சாவூர் _ திருச்சிராப்பள்ளி தொகுதி _ வி.கே. இராமானுஜ ஆச்சாரியார்
(3) மதுரை இராமநாதபுரம் தொகுதி _ கே. இராமையங்கார்.
(4) கோவை _ நீலகிரி தொகுதி _ சி. வெங்கட்ரமண அய்யங்கார்.
(5) சேலம் _ வடாற்காடு தொகுதி _ பி.வி. நரசிம்மய்யர்
(6) சென்னை நகரம் _ சி.பி. இராமசாமி அய்யர்
டில்லி மத்திய சட்டசபையில் இடம் பெற்றவர்கள் செங்கற்பட்டு மாவட்டம் எம்.கே.ஆச்சாரியார்! சென்னை: திவான் பகதூர் டி. ரங்காச்சாரி.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். சுப்பிரமணிய அய்யர்! வி. கிருஷ்ண சாமி அய்யர், டி.வி. சேஷகிரி அய்யர், பி.ஆர். சுந்தரம் அய்யர்.
இத்தகு இறுக்கமான பார்ப்பன ஆதிபத்திய சூழலில்தான் நீதிக்கட்சி உதயமாயிற்று என்பதை மறக்கக் கூடாது.
துக்ளக் பார்ப்பன வகையறாக் களுக்கு மூக்கின்மேல் புடைத்துக் கொண்டு வருகிற ஆத்திரம் – இவ்வளவுப் பெரிய அக்கிரகார ஆதிக்கக் கோட்டையை உடைத்து விட்டார்களே இந்தப் ஜஸ்டீஸ் கட்சிப் பாவிகள் என்பதுதான்!
அந்தக் காலத்தில் கல்லூரிகள் சென்னை போன்ற இடங்களில்தான். வெளியூர்களிலிருந்து சென்னைக்குப் படிக்கவரும் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதி கள் கிடையாது. இருந்த விடுதிகள் எல்லாம் பார்ப்பனர்களுடையது. பார்ப்பனர் அல்லாதாருக்கு அங்கு இடம் கிடையாது. வேண்டுமானால் எடுப்புச் சாப்பாடு எடுத்துக் கொண்டு வரலாம். அங்கு தங்கி உணவருந்த முடியாது என்ற கொடுமை.
அந்தக் கால கட்டத்தில் பார்ப் பனர் அல்லாதார் தங்கிப் படிக்க சென்னையில் விடுதி ஒன்றை ஒருவர் (டாக்டர் சி. நடேசனார்) ஏற்படுத் தினார் என்றால் அது என்ன சாதார ணமானதுதானா? பாலைவனத்தில் கிடைக்கப் பெற்ற சோலையல்லவா!
பார்ப்பனர் அல்லாதார் அரசியல் உள்பட எல்லா நிலைகளிலும் உரிய இடம் பெற்றாக வேண்டும் என்று கருதியது காலத்தின் கட்டாயம் தானே!
நீதிக்கட்சி தோன்றியதும், செயல் பட்டதும் இந்த அடிப்படையில்தான்!
நீதிக்கட்சி தோன்றி 95 ஆண்டு களுக்குப் பிறகும்கூட வரலாற்றின் நேர்மையான மய்ய ஓட்டத்தைப் புறந்தள்ள, கொச்சைப்படுத்த ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது என்றால் அதனைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்யும்வரை நாம் ஓய்ந்து விட முடியுமா?
வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களால் 1916 டிசம்பர் 16ஆம் நாள் வெளியிடப் பட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையில் அங்கொன் றும் இங்கொன்றுமாக வார்த்தை களைப் பிடுங்கி தம் வசதிக்கு ஏற்ப சேற்றைவாரி இறைக்கிறார் திருவா ளர் லட்சுமி நாராயண அய்யர்.
பார்ப்பனர்களின் உத்தியோக ஆதிக்க நிலை, கல்விநிலை, சமுதாய நிலை, பார்ப்பனர் அல்லாதார் பெற வேண்டிய சுயமரியாதை உணர்வை எல்லாம் விவரித்துள்ளார் அவ்வறிக் கையில். பார்ப்பனர் அல்லாதாருக்கு ஓரியக்கம் தேவைப்படுவதன் அவசி யத்தையும் தெரிவித்துள்ளார்.
சமுதாயத்தில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற வேற்றுமைகள் மறையத் தொடங்கினால் மட்டுமே சுயாட்சி பெறுவதற்கான தகுதியை நாம் பெற்றவர் ஆவோம் என்ப தையும் பதிவு செய்துள்ளார்.
இறுதியாக அந்த அறிக்கையில் பின்வருமாறு முடித்துள்ளார்.
எங்களுடைய உறுதியான நம்பிக்கை என்னவென்றால், இன்னும் சிறிது காலத்திற்காவது ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுடைய வளர்ச் சியை முதன்மையாகக் கருத வேண் டும். பிற வகுப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பொழுது தான் தாழ்ந் தவன் என்று கருதாது சுயமரியாதை யுடன் சம உரிமை பெற்றவன் என்று எண்ண வேண்டும். சுயமரியாதை யுடன் சம நிலையிலிருந்து மற்றவர் களுடன் பணியாற்றுவதையே ஒவ் வொருவரும் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்? என்று கூறி அறிக்கையினை நிறைவு செய் துள்ளார்.
இத்தகைய சமத்துவமும், சகோ தரத்துவமும், சமூகநீதியும் பொங்கி மணம் வீசும் ஓர் அறிக்கையைப் பார்ப்பனீயத்துக்கே உரித்தான குறுக்குப் புத்தியுடன் – குதறுவது – அவர்களுக்கே உரித்தான கோணல் புத்தியைத்தான். நிர்வாணமாக வெளிப்படுத்தும் பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக் கையைப் படித்து அந்தக் கால கட்டத்திலேயே இந்து ஏட்டுக்கு உதறல் எடுத்ததுண்டு. It is With Much Pain and Surprise that we persued the document என்று எழுதியதே! மிகுந்த வலியுடனும், திகைப்புடனும் அந்த அறிக்கையைக் கவனித்ததாம்! இருக் காதா? அதுதானே அவாள் ஆதிக்கத் துக்கான ஆரம்ப அணுகுண்டு. இன்றுவரை அந்த உதறலைக் காண முடிகிறதே!
முதல் உலகப் போருக்குப் பிறகு இந்தியர்களுக்கும் ஆட்சி அமைப்பு முறையில் போதிய இடம் அளிப்பது என்ற முடிவினை பிரிட்டிஷ் அரசு சிறப்புக் கெசட்டில் வெளியிட்டது.
இதன்மீது மக்கள் கருத்து அறிய மாண்டேகு – செம்ஸ்போர்டு ஆகிய இருவர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவிடம் நீதிக்கட்சித் தலைவர் பிட்டி தியாகராயர், டாக்டர் நாயர் உள்ளிட்டோர் அறிக்கை ஒன்றினை அளித்தனர். வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் அளிக்கப்பட்டாலொழிய பார்ப்பனர் அல்லாதார் கடைத்தேறு வது கடினம் என்பதை உறுதியாகத் தெரிவித்திருந்தனர்.
இந்திய மக்களின் கருத்துகளைத் தொகுத்துக் கொண்டு குழுவினர் லண்டன் சென்றனர்.
இதுகுறித்து நேரில் சாட்சியம் அளிக்க இந்தியத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். பார்ப்பனர் அல்லாதார் அமைப்பின் சார்பில் டாக்டர் டி.எம். நாயர் லண்டன் சென்றார்.
மாண்டேகு – செம்ஸ்போர்டு அறிக்கை 1918 ஜூலை 2இல் லண்டனில் வெளியிடப்பட்டது. அதில் முசுலிம்களுக்கும், சீக்கியருக் கும் மட்டுமே பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அமைந்திருந்தது. பார்ப்பனர் அல்லாதாருக்கும் தாழ்த் தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக் கும் பிரதிநிதித்துவம் அளிக்கப் படவில்லை.
டாக்டர் நாயர் அப்பொழுது லண்டனில்தான் இருந்தார். இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் அவர் முயற்சியைக் கைவிடவில்லை. நண்பர்கள் மூல மாகவும், ஏற்கெனவே இந்தியாவில் பணியாற்றியிருந்த ஆங்கிலேய அதிகாரிகள் மூலமும் கடுமையாக முயற்சித்தார். அதன் விளைவு – பிரபுக்கள் சபையில் நாயருக்கு ஆதரவாக வாதிட்டனர். முயற்சிக்கு வெற்றி கிட்டியது. பிரபுக்கள் சபை, காமன் சபை உறுப்பினர்கள் அடங் கிய கூட்டத்தில் டாக்டர் டி.எம். நாயர் ஆங்கிலேயர்களே சொக்கக் கூடிய ஆங்கிலத்தில் புள்ளி விவரங் களை எடுத்து வைத்துப் பிளந்து தள்ளினார். பார்ப்பனர் அல்லாதா ருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் சட்டமன்றத்தில் தனித் தொகுதியின் தேவையை வெகுவாக வலியுறுத் தினார்.
இதுகுறித்துக் கருத்துகளைக் கூற இருவரைக் கொண்ட குழு ஒன்றை வெள்ளை அரசு நியமித்தது. அதற்கு சவுத்பரோ கமிட்டி (South Borough Franchise Committee என்று பெயர்.
என்ன அநியாயம் என்றால். அந்தக் குழு உறுப்பினர்கள் இருவருமே பார்ப்பனர்கள்! வி.எஸ். சீனிவாச சாஸ்திரி, எஸ்.என். பானர்ஜி என்ற இரு நபர்கள்தான் அவர்கள். நண்டை சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாகி விட்டது. எதிர் பார்த்தபடியே அந்த இரு பார்ப் பனர்களும் வகுப்புரிமைக்கு எதி ராகக் கருத்துகளைத் தெரிவித்து விட்டனர்.
இந்தக் கமிட்டியை புறக்கணிக்கு மாறு மதுரையில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் மாநாடு (1918 அக்டோபர் 13) வேண்டுகோள் விடுத்தது.
நல்ல வாய்ப்பாக ஆங்கிலேயர் அரசு அந்த இரு நபர் குழுவின் அறிக் கையை ஏற்றுக் கொள்ளாமல் இரண் டாவது முறையாக ஒரு வாய்ப்பினை அளித்தது. அதற்கென நியமிக்கப் பட்ட நாடாளுமன்ற பொறுக்குக் குழு முன் தங்கள் வாக்கு மூலங்களை அளிக்க இங்கிலாந்துக்கு வர அழைப்புக் கொடுக்கப்பட்டது.
நீரிழிவு நோயாளியான டாக்டர் டி.எம். நாயர் லண்டன் சென்றார். அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டார். கே.வி. ரெட்டி நாயுடு, ஆற்காடு இராமசாமி முதலியார் ஆகியோரும் லண்டன் சென்றிருந் தனர்.
மருத்துவமனையிலேயே அறிக்கை தயாரிக்கப்பட்டது. மருத்துவ மனையிலிருந்து குழுவைச் சந்திக்க நாயரால் முடியாத உடல் நிலையில், அந்தக் கமிஷன் உறுப்பினர்களே மருத்துவமனைக்குச் சென்று நாயரின் சாட்சியத்தைப் பெறுவதாக முடிவு செய்தனர். ஆனாலும் அந்தச் சாட்சி யத்தை அளிப்பதற்கு முன்பாகவே டாக்டர் நாயர் – தந்தை பெரியார் அவர்களால் தென்னாட்டு லெனின் என்று அழைக்கப்பட்ட அந்த வீரத் திருமகன் இறுதி மூச்சைத் துறந்தார். நாயர் மறைவு செய்தியைக் கேட்டு அக்ரகாரம் ஆனந்தக் கூத்தாடியது. சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெரு பிள்ளையார் கோயிலில் ஆயிரக் கணக்கான தேங்காய்களை உடைத் தனராம் அக்ரகாரத் திருமேனிகள்.
அதைவிட கொடுமை என்ன தெரி யுமா? பண்பாட்டுக்கே பிறந்தவர்கள் போல ஆனந்தப் பல்லவி பாடும் இந்தப் பார்ப்பனர்களின் யோக் கியதை என்ன? காங்கிரஸ் சார்பில் சாட்சியம் அளிக்க அப்பொழுது அங்குச் சென்றிருந்த சர். சி.பி. ராமசாமி அய்யர், சுரேந்திர நாத் பானர்ஜி, திலகர், கோகலே, சத்ய மூர்த்தி அய்யர், ஆகிய பார்ப்பனர்கள் ஒரு மனிதாபிமான அடிப்படை யில்கூட, பண்பாட்டின் அடிப் படையில்கூட மரண மடைந்த நாயர் உடலுக்கு மரியாதை தெரிவிக்கச் செல்லவில்லை.
இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள்தான் மல்லுக்கட்டி பேனா பிடிக்க முன் வந்துள்ளனர். பார்ப்பனர்கள் தம் தலைவர்களின் யோக்கியதையே இந்தத் தரத்தில் இருக்கிறது என்றால் சோ போன்ற வர்களின் தரம் தகரடப்பாவாகத் தானே இருக்கும்!
வீரமகன் டாக்டர் டி.எம். நாயர் மறைந்து விட்டாலும், அங்கு சென்றி ருந்த கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் டாக்டர் நாயர் நாள்குறிப்பிலிருந்து தகவல்களை தொகுத்து, பத்து நாட்கள் இரவு பகலாக உழைத்து 18 பக்கங்கள் கொண்ட அரிய அறிக் கையினைத் தயாரித்து நாடாளு மன்றக் குழுவின்முன் மெச்சத் தகுந்த முறையில் சாட்சியம் அளித்தார்.
இந்தியா என்பதை ஒரு நாடாகக் கருத இயலாது. குறிப்பாக தென்னிந்தியாவில் பார்ப்பனருக்கும், பார்ப்பனர் அல்லாதாருக்கும் அடிப்படையிலே இன வேறுபாடு உண்டு. முன்னவர் ஆரியர் இனத்தைச் சேர்ந்தவர்; பின்னவர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.
மதத்தின் பெயராலும், வர்ணா சிரம தர்மத்தின் பெயராலும் சிதறுண்டு திணறும் பார்ப்பனர் அல்லாத மாபெரும் சமுதாயமானது யானைப் பாகனிடம் அடங்கிப் போகப் பழக்கப்பட்ட யானைக்குச் சமமானது; சின்னஞ்சிறு குட்டிச் சமுதாயமான பார்ப்பனர் யானைப் பாகனைப் போல் பார்ப்பனர் அல்லாத பெரிய சமுதாயத்தைப் பன்னெடுங்காலமாக அடக்கி வைத்திருப்பதில் வல்லவர்கள், வஞ்சகர்கள். ஆனால், என்றெனும் ஒரு நாள் எதிர்த்து பாகனை விரட் டும் யானைபோல, பார்ப்பனர் அல் லாதார் எழுச்சிக்குப் பார்ப்பனர் கூடிப் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றும், முடிவு ஏற்படா விட்டால் நடுவர் குழுவின் தீர்ப்புக்கு விட வேண்டும் என்றும் அந்த அறிக் கையிலே குறிப்பிட்டிருந்தார் கே.வி. ரெட்டி நாயுடு என்னதான் பிரிட் டீஷார் நல்லாட்சி நடத்தினாலும், அது எவ்வாறு இந்தியர்கள் தங் களைத் தாங்களே ஆண்டு கொள் ளும் சுயாட்சிக்குத் தகுந்த மாற்று ஆகாதோ, அதுபோலவே பிராம ணர்கள் என்னதான் நல்லாட்சி கொடுத்தாலும் அது பிராமண ரல்லாதாரின் சுயாட்சிக்குத் தகுந்த மாற்றாகாது என்னும் வைர வரிகளை அதில் பதித்திருந்தார்.
அதற்குப் பலனும் கிடைத்தது. சென்னை மாநில சட்டமன்றத்தில் ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி கள் 132; அதில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட வேண்டிய தொகுதிகள் 98; இதில் 65 பொதுத் தொகுதிகள், 33 தொகுதிகள் சிறப்புத் தொகுதிகள்; இதில் 28 தொகுதிகள் பார்ப்பனர் அல்லாதாருக்கு என்று ஒதுக்கப் பட்டன. ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தவிர மீதித் தொகுதிகளிலும் பார்ப் பனர் அல்லாதார் போட்டியிடலாம் என்று நிருணயிக்கப்பட்டது.
1920 நவம்பர் 20இல் தேர்தல் நடைபெற்றது. நீதிக்கட்சிக்கும் ஹோம் ரூல் கட்சிக்கும்தான் போட்டி காங்கிரஸ் போட்டியிடவில்லையென் றாலும் காலித்தனத்தைக் கட்ட விழ்த்து விடும் பணியை மட்டும் தவறாமல் செய்தது.
கழுதைகளின் கழுத்தில் எனக்கு ஓட்டுப் போடு என்று எழுதிய அட் டைகளைக் கட்டி, அதன் வாலில் காலி டின்களைக் கட்டிக், கலாட்டா செய்வதிலும், காலித்தனத்தில் ஈடுபடுவதிலும் அலாதியான ஆனந்தம் அதற்கு.
சென்னை மாகாண சட்ட சபைக்கான 127 இடங்களில் நீதிக்கட்சி 63 இடங்களில் மகத்தான வெற்றியை ஈட்டியது. நியமன உறுப்பினர்கள் 18 பேர்களும் நீதிக்கட்சியின் ஆதரவாளர்களாகவே இருந்தனர்.
1920 முதல் கிட்டத்தட்ட 17 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சியின் சாதனைகள் சாதாரணமானவைகளா?
வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று அக்கிரகார வாசிகள் பேனா பிடிக்கிறார்களே அவர்களுக்குப் பதில் சொல்லுவ தற்காக அல்ல _ பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள் பட்டியலைத் தெரிவிப் பது அவசியம்தானே!
பல்வேறு போதைகளில் சிக்கிச் சீரழிந்து வரும் பார்ப்பனர் அல்லாத இளைஞர் சமூகம் -_ தெரிந்து கொள்ள வேண்டியவை மிகப்பல.
பெயருக்குப் பின்னால் ஜாதிவால் ஒழிந்து, அதற்குப் பதிலாக படிப்புப் பட்டங்கள் பவனி வருகின்றனவே – இதற்கெல்லாம் அஸ்திவாரம் போட்டவர்கள் யார்? ஆணி வேராக இருந்து உழைத்தவர்கள் யார்?
எந்தச் சமூகநீதி நம்மை உயர்த்தியது? இவற்றைத் தெரிந்து கொண்டால் பல போதைகள் நம்மை விட்டு ஒழிந்துத் தொலையும், அவற்றையும் அடுத்துப் பார்ப்போம்.http://viduthalai.in/new/page7/14770.html
Posted by அசுரன் திராவிடன் at 8:33 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
உச்சிக் குடுமியிலிருந்து ஒரே ஒரு உரோமம் உதிர்ந்திருந்தால்
லண்டன் – தொலைக் காட்சி 4 – ஒளிபரப்பு உலக மக்களின் மனசாட் சியை உலுக்கியது! பார்த்தவர்கள் குமுறினர் – வாய்விட்டுக் கதறினர்.
இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமார துங்காவே இதுபற்றிக் கூற முன்வந்தபோது துக்கம் தொண்டையை அடைக்க கண்ணீர் மல்கி யுள்ளனர்.
தனது மகன் அந்தத் தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு, சிங்கள வன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுவ தாகக் கூறியுள்ளான். மகளும் தன் வேதனையைப் புலப்படுத்தியுள்ளார். இந்தத் தகவல்களை சந் திரிகா அம்மையாரே ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
இலங்கைத் தீவின் முன்னாள் அதிபரின் இந் தப் பேச்சு தமிழ் ஆங்கில ஏடுகளில் வெளிவந் துள்ளது.
அதே நேரத்தில் தினமலர் குடும்பத்தைச் சேர்ந்த காலைக்கதிர் (சேலம் பதிப்பு 26.7.2011) ஏட்டில் எப்படி செய்தியும் தலைப்பும் வெளிவந்துள் ளது தெரியுமா?
தலைப்பு: தமிழர் களுக்கு ஆட்சியில் பங்கு இலங்கை மாஜி அதிபர் கோரிக்கை – இதுதான் தலைப்பு உள்ளுக்குள் வெளி வந்துள்ள செய்தியில் எந்த ஒரு இடத்திலும் லண்டன் தொலைக்காட்சியில் இடம் பெற்ற தமிழர்கள் படு கொலைக் காட்சியை சந்திரிகா அம்மையார் பார்த்துக் கண் கலங்கிய தாகக் கூறியது பற்றியோ, அவரது மகனும், மகளும் துயரப்பட்டது குறித்தோ ஒருவரிகூட இடம் பெறாமல் முற்றிலுமாக இருட்டடிப்புச் செய்து செய்தியை வெளி யிட்டுள்ளது தினமலர் குடும்பத்தின் காலைக் கதிர்
தமிழன் மாமிசம் இங்குக் கிடக்கும் என்று போர்டு போட்ட சிங்களக் காடையர்களுக்கும் இந்தத் தினமலர், காலைக்கதிர் பார்ப்பனப் பாசிசக் கும்ப லுக்கும் இதே பாணியில் செயல்படும் துக்ளக், கல்கி வகையறாக்களுக் கும் என்ன வேறுபாடு?
தமிழ் ஈழத்தில் கொல் லப்பட்டவர்கள் எல்லாம் தமிழர்களாயிற்றே – தமி ழினப் பச்சிளம் பாலகர்களாயிற்றே!
ஒரே ஒரு பார்ப்பானின் உச்சிக் குடுமியிலிருந்து ஒரே ஒரு உரோமம் உதிர்ந் திருந்தால் அடேயப்பா, எத்தனைப் பத்திகளில், எத்தனைக் கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு, நிர்வாண நர்த்தனம் ஆடித் தீர்த்திருப்பார்கள்?
சேலம் காலைக்கதிர் இப்படி தலைப்பிட்டு செய் தியை இருட்டடித்து வெளியிட்டு இருக்க, சேலம் பதிப்பு தினத்தந்தி எப்படி செய்தியை வெளியிட்டுள்ளது?
இலங்கைப் போரில் நடைபெற்ற தமிழர்கள் படுகொலை காட்சி களைச் சொல்லி கண் கலங்கிய சந்திரிகா என்று தலைப்பிட்டும், லண்டன் வீடியோ காட்சியைப் பார்த்து தாமும் தம் பிள்ளைகளும் கலங்கியது குறித்தும் சந்திரிகா கூறியதை தினத்தந்தி விரிவாகவே செய்தியை வெளி யிட்டுள்ளது.
காரணம் – தினத் தந்தி தமிழன் நடத்தும் பத்திரிகை – காலைக் கதிர்களோ பார்ப்பனர் களால் நடத்தப்படும் பத்திரிகை.
பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று அப்பாவித்தனமாக நம்பும் ஏமாறும் ஏமாளித் தமிழர் கள் இதற்குப் பிறகாவது சுத்த ரத்தத்துடன் சிந்திப் பார்களாக!
(குறிப்பு: காலைக்கதிர் செய்திக் கத்தரிப்பை அனுப்பி உதவியவர் – சேலம் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு சி. பூபதி).http://viduthalai.in/new/page7/14637-2011-07-28-09-48-52.html
Posted by அசுரன் திராவிடன் at 8:25 PM No comments:
Saturday, July 23, 2011
துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! வெள்ளைக்காரர்களை அண்டிப் பிழைத்த கூட்டம் எது?
இந்தியாவின் சுதந்திரத்துக்காக காங்கிரஸ் பாடு பட்டதாகவும், ஆனால் அதற்கு மாறாக ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கட்டளைப்படி நீதிக்கட்சி தொடங்கப் பட்டது என்றும் அவதூறு செய்கிறார் துக்ளக் கில் திரு.கே.சி. லட்சுமி நாராயணன்.
இதற்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. எதற்கெடுத்தாலும் ம.பொ.சி.யைத்தானே சாட்சிக்கு அழைக்கிறார்கள்? அவர் எழுதிய விடுதலைப் போரில் தமிழகம் என்ற நூலைத்தானே என்ற சாட்சிக்குக் கூப்பிடுகின்றனர்?
அந்த ம.பொ.சி.யே அந்த நூலிலே என்ன எழுதுகிறார்? அவர்கள் கொண்டு வந்த ஆயுதத்தைப் பறிமுதல் செய்து, அவர்களைத் தாக்குவது தானே சுவாரசியமானது.
காங்கிரசைத் தோற்றுவித்தவனே ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்ற வெள்ளைக்காரன்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.
முதல் மாநாடு 1885 டிசம்பர் 28,29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை யின் முதல் மாநாட்டை ஹ்யூம் கூட்டினார். அதற்காக விடுத்த சுற்றறிக்கையில், வங்காளம், பம்பாய், சென்னை ஆகிய மாநிலங்களிலிருந்து ஆங்கில மொழியில் ஞானமுள்ள அரசியல் பிரமுகர்களைக் கொண்ட தாக மாநாடு இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆம், இந்திய தேசியத்தின் பெயரால் முதன் முதலாக ஒரு மாநாடு, இங்கிலீஷ்காரர் ஒருவரால், இங்கிலீஷ் படித்துப் பட்டம் பெற்ற வர்களைக் கொண்டதாகக் கூட்டப் பெற்றது. பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில் மாநாடு நடந்தது என்று ம.பொ.சி. அதே நூலில் குறிப்பிட்டுள்ளாரே -இதற்கு என்ன பதில்?
வெள்ளைக்காரன் ஹ்யூமால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு ஓராண்டல்ல, ஈராண்டல்ல, 22 ஆண்டுகள் அகில இந்தியப் பொதுச் செயலாளராக இருந்திருக்கிறார் அவர். அடுத்தடுத்து வெள்ளையர்கள் தலைமை வகித்தும் மகாசபை கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ராஜவாழ்த்துப் பாடப்பட்டதும், பிரிட்டீஷ் அரசுக்கு விசுவாசம் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் ஹ்யூம் காலத்தில்தான்.
சுருக்கமாகச் சொன்னால் எவ்வித எதிர்ப்புமின்றி படித்த இந்தியர்களுக்கு உயர் உத்தியோகங்களும் சலுகைகளும் தேடித் தரும் ஸ்தாபனமாகக் காங்கிரஸ் செயல்பட்டது ஹ்யூம் சகாப்தத்திலேயே! இது ஒன்றும் அவர்களுக்குக் குறைபாடோ, குற்றமோ அல்ல. காங்கிரசை அவர் தோற்றுவித்ததே இந்தக் காரியங்களுக்குத்தான். இவை எல்லாம் நமது சரக்கல்ல; அதே ம.பொ.சி. – அதே நூலில் காணக்கிடப்பவைதான்.
வெள்ளைக்காரனால் தொடங்கப்பட்டது
பதவிகளைப் பெறுவதற்காகத் தொடங்கப்பட்டது
அந்தப் பதவிகள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கே! என் பதை இந்நூலில் ம.பொ.சி. வெளிப்படையாகவே கூறுகிறார்.
இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள் நீதிக் கட்சி வெள்ளைக்காரர்கள் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தது – பதவிகளைத் தேடி அலைந்தது என்று சொல்லுகிறார்கள் என்றால் அவர்களின் யோக்கியதையை எடை போட்டுப் பார்க்க வேண்டும்.
மேலும் ம.பொ.சி. எழுதுகிறார் கேளுங்கள், கேளுங்கள்.
சென்னையில் கூடிய காங்கிரஸ் மகா சபையிலே பிரிட்டிஷ் அரசுக்கு வாழ்த்து பாடப்பட்டது. வெள்ளையரான சென்னை கவர்னர் கன்னிமரா விட மிருந்து வாழ்த்துச் செய்தியைப் பெற்று , அதை மிகுந்த பக்தி விசுவாசத்துடன் படித்த பிறகே நடவடிக்கை தொடங் கப்பட்டது. பிரிட்டிஷ் அரசியார், இந்தியாவின் சக்கரவர்த்தினியுமாகிய விக்டோரியாவுக்கு, அவர் அய்ம்பதாண்டு காலம் வெற்றிகரமாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நடத்தியதற்காகப் பாராட்டு தெரிவித்து, அவரது ஆட்சி மேலும் நீடிக்க வேண்டும் எனவும் பிரார்த் தித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பெற்று, பேசியவர்கள் எல்லோரும் பிரிட்டிஷ் ஆட்சியைப் புகழ்ந்தனர்.
(ம.பொ.சி. அதே நூல் பக்கம் 133,134)
வெள்ளையர்களுக்கு சாதாரண விசு வாசத்தோடு அல்ல; பக்தி விசவாசத்தோடு பிரார்த்தித்து வாழ்த்துப் பாடியதாக ம.பொ.சி. எழுதி இருக்கிறாரே. இதற்கு என்ன பதில் லட்சுமி நாராயணரே?
திருவாளர் கே.வி. லட்சுமி நாராயணன் துணைக் கழைத்த ம.பொ.சி.தான் பிறழ் சாட்சியாகிவிட்டார். அவாளின் சுதேசமித்திரனாவது அவாளுக்குத் துணை போகிறாதா என்று பார்க்கலாம்.
காங்கிரஸ் தோற்றமே பிரிட்டிஷாருக்கு பல்லக்கு தூக்கவே
இதோ ஆதாரம்: 1855 ம் வருடம் டிசம் பர் 28 ஆம் தேதி பகல் 12 மணிக்கு காங் கிரஸ் மாநாடு துவங்கப்பட்டது.
வங்கத்துக் கீர்த்தி மிகுந்த பாரிஸ்டர் உமேசசந்திர பானர்ஜி அந்த சபையிலே அக்கிராசனம் வகிக்க வேண்டும் என்று ஏ.ஓ. ஹியூம் பிரேரணை செய்ய, அதை காசிநாத தெலங்கரும் நீதிபதி மணி அய்யரும் ஆமோதித்தனர்.
நம்மை பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு விரோ தமாகச் சூழ்ச்சிகள் செய்யும் ராஜ விரோதிகளின் கூட்டம் என்று சில கனவான்கள் ஞானக் குறைவினால் சொல்லி விட்டார்கள். பிரிட்டன் அரசு நமக்கு அனுகூலமாக எவ் வளவோ காரியங்களைச் செய்தி ருக்கிறது. அதன் பொருட்டு அதற்கு நாம் நன்றி செலுத்துவோம். அய்ரோப்பாவில் உள்ள ஜனங்கள் ஆட்சி முறையைப்பற்றி எவ்வித மான கொள்கைகள் உடையாரோ அதே விதமான கொள்கைப்படி இங்கும் ஆட்சி நடத்த விரும்பு கிறோம். இந்த விருப்பத்துக்கும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தினிடமுள்ள பூர்ண விசுவாசத்திற்கும் விரோதமே யில்லை.
(1835_ம் ஆண்டு டிசம்பர் 28 ம் தேதி நடைபெற்ற முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் உமேசசந்திர பானர்ஜி தலைமை வகித்துப் பேசியது.)
இங்கிலீஷ் ராஜ்யத்திடம் நாம் பூர்ணமான அன்பும் ஆதரவும் கொண்டிருக்கிறோம். அவர்கள் நமக்குச் செய்த நன்றிகளை எல்லாம் மறக்கமாட்டோம். அவர்கள் நமக்குக் கொடுத்த கல்வியினால் புதிய ஒளி பெற்றோம். ஆசியாவின் கொடுங் கோன்மையாகிய இருளுக்கிடையே ஆங்கிலேய நாகரீகத்தின் விடுதலை ஒளி நமக்குக் கிடைத்தது (கரகோஷம்)
– 1906 ம் வருடத்தில் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் தாதாபாய் நவ்ரோஜி தலைமை வகித்துப் பேசியது.
மகாராணியின் அனுகூலமான, என்றும் மறப்பரிய கீர்த்தி மிக்க ஆட்சியில் அய்ம்பது வருஷம் முடிவு பெற்றதைக் குறித்து சக்ரவர்த்தினி யிடம் கடமைப்படி உண்மையான மகிழ்ச்சிகளைத் தெரிவிப்பதுடன் பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளினின்றும் பிரதிநிதிகள் வந்து கூடிய இந்த ஜனசபை பிரிட்டிஷ் ராஜ்யத்தின் மீது அம்மகாராணி இன்னும் பல வருடம் ஆளவேண்டும் என்று வாழ்த்துகிறது.
– 1906 ம் வருடம் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம்.
இந்த ஜனசபையை ஏற்படுத்தினோர் பிரிட்டிஷ் ராஜ்யத்திடம் மிகுந்த பற்றுதலுடையவர்கள். இதை விட்டு ருஷ்யாவினுடைய ஆட்சியின் கீழ்ப் புகுவதை அவர்கள் ஒரு நாளும் விரும்பமாட்டார்கள். இங்கி லீஷ் ராஜ்யம் நாகரீகமானது; ருஷ்ய ஆட்சியோ கொடுங் கோன்மை.
– 1889 டிசம்பர் 26 இல் பம்பாயில் நடைபெற்ற 5ஆவது காங்கிரஸ் மகா சபையில், வில்லியம் வெட்டர்பர்ன் என்ற ஆங்கிலேயர் தலைமை வகித்துப் பேசியது.
கருணை தங்கிய சக்கரவர்த்தினி யின் ஆட்சி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத் தின் சரித்திரத்தில் நீண்டதும், மிக உபகாரமானதும், மனித சந்தோஷத் தாலும், நாகரீகத்தாலும் மிக முக் கியமான அபிவிருத்திகளுடன் பிணைக்கப்பட்டது மாதலால், இந்த ஆட்சியில் அறுபதாண்டு முடிவு பெற்றமை கருதி அவருக்கு இந்த ஜன சபை வணக்கத்துடன் நன்றி தெரிவிக்கிறது.
– 1896ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி நடைபெற்ற 12 வது காங்கிரஸ் மகாசபையில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம். சுதேசமித்திரன் வெளியிட்ட காங்கிரஸ் வரலாறு முதல் பாகத்திலிருந்து.
இதற்குப் பதவுரை, பொழிப்புரை தேவைப்படாதே! வெள்ளைக்காரர் களிடம் வேலைகள் பெறுவதற்காக மனு போட்டு அவர்களுக்கு ராஜ வாழ்த்துப்பாடி மண்டியிட்டுக் கிடந்த பரம்பரையா பெரியார் இயக்கம் பற்றிப் புழுதி வாரித் தூற்றுவது?
பெரியார் ஈரோட்டில் நடத்திய (10-5-1930) இளைஞர் மாநாட்டின் தீர்மானம் என்ன தெரியுமா?
எந்தப் பொதுக் கூட்டங்களிலும் ஆரம்பத்திலாவது, முடிவிலாவது ராஜவணக்கம், கடவுள் வணக்கம், தலைவர்கள் வணக்கம் ஆகியவைகள் செய்யும் காரியத்தை விட்டுவிட வேண்டும் என்று இம்மாநாடு தீர் மானிக்கிறது.
இந்த வரலாற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் வெத்து வேட்டு வாணங்களை விட்டு வேடிக்கை காட்ட ஆசைப்பட வேண்டாம் அக்ரஹாரமே என்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம்.
சுதந்திரம் கேட்கவா காங்கிரஸ் தொடங்கப்பட்டது?
At that time was the foundation of the Indian National Congress laid not for Swaraj, nor Swadesh, no Swadhinta or Swadharma but for few crumbs that may fall from the table of the British – whose power in India had been established on firm foundation.
அந்த நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் சுயராஜ்யத்திற்காகவோ, சுதேசிக்காகவோ, சுவாதீனத்திற்கா கவோ, சுயதர்மத்துக்காகவோ அமை யப் பட்டதல்ல. ஆனால் பிரிட்டி ஷார் மேஜையிலிருந்து விழுகிற எலும்புத் துண்டுகளுக்காகவும், அவர்களு(From sixty Years of Congress by Sajyapal and Praboth Chandra M.A.) போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?
1885-இல் வெள்ளைக்காரரால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் பூர்ண சுதந்திரம் கேட்டது 1929 லாகூர் மாநாட்டில்தானே!
1916 இல் நீதிக்கட்சி தோற்றுவிக் கப்பட்டது. அதன் முதல் குறிக்கோள் பார்ப்பன ஆதிக்கப் பிடியிலிருந்து பார்ப்பனர் அல்லாதார் விடுதலை பெறுவதே அதுவும் காங்கிரஸ்காரராக இருந்த பிட்டி தியாகராயர் டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் டாக்டர் சி. நடே சனார் துணையோடு நீதிக் கட்சியை நிறுவினார்கள். 1925இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் இருந்து வெளியேறிய தந்தை பெரியர் 1932 டிசம்பரில் வெளியிட்ட சுயமரியாதை இயக்கத் தின் அடிப்படை இலட்சியங்களும், சுயமரியாதை இயக்க சமதர்மக் கட்சியாரின் வேலைத் திட்டமும் என்பதில் முதல் திட்டமாகக் குறிப் பிடப்பட்டுள்ளது என்ன தெரியுமா?
பிரிட்டிஷ் முதலிய எவ்வித முதலாளித் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்து இந்தியாவைப் பூரண விடுதலை அடையச் செய்வது என்று திட்டம் கொடுத்தவர் அல்லவா ஈரோட்டுச் சிங்கம்.
1942 ஆம் ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு (Quit India) தீர்மானத்தை நிறைவேற்றியது காங்கிரஸ்.
(பார்ப்பனர்களின் குலதர்ம வீரரான சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் எதிர்த்தார் – பின் வாங்கி னார். ஆகஸ்டு துரோகி என்று தூற் றப்பட்டார் என்பதையும் துக்ளக் கூட்டத்துக்கு இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.)
அதனைத் தொடர்ந்து தலைவர் கள் கைது செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் அரசு அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது. எங்கும் கலவரம், கொலை, கொள்ளை, தீ வைப்பு இத்தியாதி, இத்தியாதி!
காந்தியார் கைது செய்யப்பட்டார். பின் விடுதலையானார். வெளி வந்த வேகத்தில் அவசரம் அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
சட்டமறுப்பு ஆரம்பிக்கும் நோக் கம் எனக்கில்லை. முன் நிகழ்ந்தது இனி நிகழாது. 1942 ஆம் வருடத்து நிலைமைக்கு இனிமேல் இட்டுச் செல்லமாட்டேன். சிவில் நிர்வாகத் தில் உள்ள தேசிய சர்க்கார் போதும். (சுதேசமித்திரன் 14_-7_-1944) என்று கூறிடவில்லையா?
அதே நேரத்தில் தந்தை பெரியார் அவர்களை ஒரு கணம் எண்ணிப் பார்க்கட்டும்.
இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண் டும்? என்று குடி அரசில் (29-12-1933) தலையங்கம் எழுதியதற்காக. வெள்ளைக்கார பிரிட்டிஷ் அரசாங்கம் 124 ஆ. அரசு வெறுப்புக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு (30-_12_1933) சிறையில் அடைக்கப் பட்டாரே.
எதிர் வழக்குக் கூட ஆடாமல் வரலாற்று சிறப்பு மிக்க அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவர் அல்லவா பெரியார்? 9 மாத சிறைத் தண்டனை 300 ரூபாய் அபராதம். அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு மாதம் தண்டனை என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் தண்டனை அளித்ததே – சிரித்த முகத்துடன் தண்டனைகளை ஏற்றுச் சிறை சென்றவர் அல்லவா வெண்தாடி வேந்தர்? தந்தை பெரி யாரின் தங்கை எஸ்.ஆர்.கண்ணம் மாளும் தண்டனைக்குள்ளானாரே?
ஆச்சாரியார் போல அண்டர் கிரவுண்ட் ஆனாரா? அப்படி அண் டர் கிரவுண்ட் ஆனவருக்குத்தானே இந்தியாவின் முதல் கவர்னர் ஜென ரல் என்ற லாட்டரி பரிசு அடித்தது _ பார்ப்பனர் சூழ்ச்சியாலும், ஆதிக்கத்தாலும்
துக்ளக் கூட்டமே! கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்!
–கலி.பூங்குன்றன்–
http://viduthalai.in/new/page-1/14303.html
(இன்னும் இருக்கிறது)
Posted by அசுரன் திராவிடன் at 8:28 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
வரலாறு காட்டும் ஆரியர் நம்பிக்கைகள், சமயச் சடங்குகள், வழிபாட்டு முறைகள்
ஆரியர்கள்தாம் யாகங்கள், வேள்விகள் செய்தல், பலியிடுதல் முதலிய வழிபாட்டு முறைகளைத் தென்னாட்டில் சிறிது சிறிதாகப் புகுத்தியவர்கள்.
அந்தணர், முனிவர் எனப்பட்ட வர்களின் வாழ்க்கை முறை, கடமை முதலியவற்றைப் பற்றிய செய்திகள் திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, புறநானூறு முதலிய சங்க நூல்களில் உள்ளன.
அந்தணர் காலையிலே வேதம் ஓதுவர். அவர்கள் வேதம் ஓதி எழுப் புகின்ற ஓசை தாது உண் தும்பி போதைச் (மலர்) சுற்றியிருக்கும் ரீங் காரத்தை ஒத்திருக்கும் என்கிறது மதுரைக் காஞ்சி இவ்வாறு:
தாதுண்டும்பி போது முரன்றாய்
கோத அந்தணர் வேதம்பாட
(மது. 655_65)
என்கிறது மதுரைக் காஞ்சி. அவர் கள் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளைத் தவறாது செய்து ஒழுகுவர் என்பதை மந்திர விதியின் மரபுளி வழாக்அ
வந்தணர் வேள்வி வேரார்க்கும்மே! என்கிறது திருமுருகாற்றுப்படை.
இவ்வாறு அவர்கள் தாம் வேதம் ஓதினர் என்பதையும், யாகங்கள் செய் தனர் என்பதையும் மதுரைக் காஞ்சி கூறுகிறது. அந்தணர் வேதத்தை நன்கு பயின்றவர் ஆதலால், அறம்புரி கொள்கை நான் மறை முதல்வர் (புறம் 93) அறுதொழிலந்தணர் (புறம் 397) என்று புறநானூறு கூறும். அந் தணர் அந்திக் காலத்திலே செய்தற் குரிய கடனாகிய முத்தீவளர்ப்பர் என்பதனை அந்தியந்தணரருங் கடனிறுக்கும் முத்தீ என்றும் கூறும். வேள்வி செய்ததற்கு அன்றைய நாளில் அரசர்கள் ஏமாந்திருக்கின்றனர். பார்ப்பனருக்கு அவர்களுடைய நனைந்த கை நிறையும்படியாக பொற்காசு, பொற்பூ ஆகியவற்றை நீரோடு அட்டிக் கொடுத்துள்ளனர். அதாவது தாரை வார்த்துக் கொடுத் துள்ளனர்.
இதையும் புறநானூறு ஆதாரங் காட்டுகிறது.
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
அருங்கல நீரோடு சிதறி (361)
ஏற்ற பார்ப்பார்க்கீர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து
ஆரியர் யார், தமிழர் யார் என்பதனைத் திருமுருகாற்றுப்படைப் பாடல் கூறும் ஆதாரம் வழியாகவே அன்றே அறிந்து இருந்தனர்.
திருமுருகாற்றுப்படை
அந்தணர் என்றால் ஆறுதொழில் உடையவர். அந்தணர் என்றால் முப்புரி நூல் அணிபவர். அந்தணர் என்றால் முத்தீ வளர்ப்பவர். நாற்பத்து எட்டு ஆண்டுகள் நிறைந்த நல்லிளமையை விதிமுறையில் கழித்தவர், வேதங்களைத் தவறாமல் ஓதுபவர்.
நான்கிரட்டியளமை நல்லியாண்
டாறிளிர் கழிப்பில் வறளவி கொள்கை
மூன்று வகை குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப்பாளர்
பொழுதறிந்து நுவல ஒன்பது
கொண்ட மூன்று புரிநூண்ஞாண்
(திருமுருகாற்றுப்படை 176-187)
குறுந்தொகை,
செம்மையாகிய பூவையுடைய முருக்கின் நல்ல பட்டையை நீக்கி விட்டு அதன் தண்டோடு ஏந்திய தாழ்கின்ற கரகத்தையும், விரத உணவையுமுடைய பார்ப்பான்
எனும் பொருளில்
செம்பூமுருக்கினைன்னார் களைந்து
தண்டோடு பீடித்த தாழ் கமண்டலத்து படிவ உண்டிப் பார்ப்பன மகளே
(குறுந் 956) என்று கூறும்.
இந்தப் பார்ப்பனர்கள் இன்று அக்கிரகாரம் என்று தனித்து வாழ்கின்றார்களே அது போல் அன்றும் வாழ்ந்து இருக்கின்றனர் என்பதைக் குறுந்தொகை, பெரும் பாணாற்றுப்படை ஆகிய நூல்கள் வாயிலாக அறிகிறோம். குறுந்தொகை அந்தணர் வீடுகளில் நாய் இல்லாது அகன்ற வாயில் இருக்கும். அங்கே செந்நற்சோற்று அமலையும் மிளவெள்ளிய நெய்யும் கிடைக்கும் என்கிறது. (குறுந் 277)
பெரும்பாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப் படை அந்தணர் குடியிருந்த ஊர் ஒன்றைப் பாடல் வாயிலாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. சிறிய மரத் தூண் களைக் கொண்ட குடில்களில் பசுக் கள் கட்டுப்பட்டுள்ளன. அவ்வூரி லுள்ள வீடுகள் சாணத்தினால் மெழு கப்பட்டுள்ளன. அவ்வீடுகளில் பல உருவங்கள் உண்டு. அவற்றைச் சுற்றியுள்ள இடங்களில் கோழிகளும், நாய்களும் காணப்பட்டன. வளைந்த வாய்களையுடைய கிளிகளும் மறை பயிற்றும் மரையவர் அவ்வீடுகளில் வாழ்வர் (பெரும்பாண் 297)
பார்ப்பனர்களின் ஆதிக்கம் நகரங்களில்தான் ஓங்கியிருந்துள்ளது. பட்டினப்பாலை காவிரிப் பூம்பட் டினத்து வணிகர், தெய்வங்களுக்கு அவி வழங்குவது, அமரரைப் பேணு வது, பகடு ஓம்புவது, பார்ப்பனர் பெருமை கூறுவது ஆகியன செய் தனர் என்று கூறுகிறது.
உலகத்தைக் குறித்த ஆரியத் தத்துவக் கருத்துகள் தமிழ்நாட்டில் புகுந்ததற்குப் பெரும் பாணாற்றுப் படையில் சான்று இருக்கிறது. உலகத்தைப் பெரும்பாணாற்றுப் படை நாவலந் தண்பொழில் என்று கூறுகிறது. அரசர்களில் சிலர் ஆரியர்க்கு அவர்தம் வேள்விக்கு அடிமையாகி விட்டுள்ளனர்.
எரிக்காட்டூர்த் தாயங்கண்ணனார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை,
அறுதொழில் அறம்புரிந்தெடுத்த
தீயொடு விளங்குநாடன் (புறம் 397)
அதாவது அவனுடைய நாட்டில் எங்கும் வேள்வி நிகழ்ந்தது எனக் கூறுகிறார். நெட்டிளமையார் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் பல வேள்விகள் செய்தவன் எனக் கூறுகிறார். சோழன் கரிகால் பெருவளத்தான் பார்ப்பன வேள்விச் சடங்கிற்கு அடிமை யானதைக் கருங்குழலாதனார் என்ற புலவர் கூறும் புறநானூற்றுப்பாடல் வழி அறிகிறோம்.
வேள்விகள் எப்படி நடைபெற்றன?
அந்நாளில் வேள்விகள் எவ்வாறு நடைபெற்றன என்பதற்கு, அது தமிழர் சடங்கல்ல, ஆரியர் சடங்கு, ஆரியர் அதனைப் புகுத்தி முறைப்படுத்தினர் என்பதற்கும், சங்க காலப் பாடல்களில் புறநானுறு சான்றாக விளங்குகிறது. பூஞ்சாற்றுப் பார்ப்பான் கௌணியன் விண்ணத் தாயன் என்பவன் எவ்வாறு வேள்வி செய்தான் என்பதை ஆவூர் மூலங் கிழார் என்பவர் பாடிய பாடல் வழி யாக நன்கு அறிகிறோம். (புறம் 224)
விண்ணத்தாயன் தோல் உடையை அணிந்து அவன் தன் மனைவி யரோடு அவர்கள் துணை புரிய வேள்வி செய் தானாம். அவ்வேள்வி யில் நீர் நாணும்படி நெய்யை ஊற்றி னானாம். வேள்வியின் இறுதியில் பெரு விருந்து நிகழ்ந்துள்ளது. இவ் வாறு அவன் செய்த வேள்விகள் எண்ணில் அடங்காதவை.
இவ்வாறு ஆரியர் அங்கே தம் ஆதிக்கத்தைப் பரப்பிட அன்றும் அரசாள்வோர் ஆரியத்திற்கு அடிமை யாகி வேள்வி செய்தால் பெருமை என்று இறங்கியுள்ளனர்.
வேள்விக்கு அடிமையான சேரர்கள்
பாண்டியர், சோழர் போல் சேரரும் வேள்விக்கு அடிமையாயினர். பெருஞ்சேரல் இரும்பொறை யாகம் (வேள்வி) செய்வதற்குரிய விதிகளைக் கேட்டு, விரதம் மேற்கொண்டு தன் கற்புக்கரசியோடு வேள்வி செய்த தாகவும் இதன் பயனாக அவள் வயிற் றிலிருந்த குழந்தை கருவிலிருந்தே அரசுத் துறைக்கு வேண்டுவன எல்லாவற்றையும் பெற்ற நல்லறிவுடன் விளங்கியது என்றும் பதிற்றுப் பத்து கூறுகிறது.
ஆக வேள்விகள் பெருகப் பெருக அந்தணர் செல்வாக்கும் பெருகியது. அரசர்கள் அந்தணர் சொல்படி அரசாளத் தலைப்பட்டனர். ஆரிய ஆதிக்கம் பெருகியது. அந்தணருக்குப் பணிதலை அல்லாமல் பிறருக்குப் பணிதலை அறியாதவர்கள் ஆயினர் அரசர்கள் என்பதைப் பதிற்றுப் பத்து
பார்ப்பனர்க்கல்லது பணிவறியவையே என்றும் ஆறு புரிந்தொழுகும்
அறம் புரியந்தணர் வழி மொழித்
தொழுகி என்று கூறும்
நீடுழி வாழ்க எனப் பார்ப்பனர் வாழ்த்திடும் கையின் முன்னேயே அரசரின் முடி வணங்கியது என்று புறநானூறு கூறுகின்ற அளவிற்கு ஆரியச் செல்வாக்கு தலையெடுத்து விட்டது. காரி என்ற மன்னனுடைய நாடு வேள்வித் தீயைப் பாதுகாக்கும் அந்தணர்க்குரியது என்ற கொள்கை பரவியது.
இப்படி வேள்விகளின் பெருக்கம் மிகுதி மிகுதியாகப் பூணூல் அந் தணர் ஆதிக்கம் பரவியதோடு நின்று விடாமல் ஆரியக் கொள்கையான நிலையாமை என்னும் கொள்கை பரவியது.
இதனால் இயற்கை வாழ்வு வாழ்ந்த தமிழர் நிலையாமைக் கொள்கைக்கு ஆட்பட்டனர்.
இளந்திரையன் என்னும் அரசன் தன் வாழ்வு என்றும் நிலை பெற்று நில்லாது என்பதனை உட்கொண்டு தன் புகழை நிறுத்த விரும்பினான். மதுரைக் காஞ்சி என்ற புகழ் பெற்ற சங்க நூலே பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நிலையாமையை உணர்த்த எழுந்த நூல். இந்நிலை யாமையை புலவர் நூலில் பல இடங் களில் அறிவுறுத்திச் செல்கிறார்.
மதுரைக்காஞ்சியில் ஓரிடத்தில் (205_-204) புலவர் இவ்வாறு கூறு கிறார்.
நல்வினை இயற்றுவதினால் வரும் புகழை நீ விரும்புகிறாய். புலன்களி னால் நுகரப்படும் பொருள்களிலே உனக்குப் பற்றுதல் இல்லை. போரைப் புரியச் செய்யும் உன் பொய் உணர்வு கெடுவதாக என்று அவனுடைய வீரத்தையே மழுங்கச் செய்கிறார்.
நிலவினைப் பார்க்கிறோம். நிலவின் அழகில் மயங்குகிறோம். நில வின் தன்மை நம்மைக் குளிர்விக் கிறது. இதெல்லாம் இயல்பாக எவருக்கும் ஏற்படும் உணர்வு. சோழன் நலங்கிள்ளியைப் பாடிய உரையூர் முதுக்கண்ணன் சாத்தனார் என்ற புலவருக்கு நிலவு நிலை யாமையை உணர்த்துகிறதாம்.
நிலவையும் விட்டுவைக்காத ஆரியம்
நிலவு கல்வியறிவில்லாத மட வோருக்குக் கூட நிலையாமையை அறிவுறுத்துகின்றது என்கிறார். உலகம் பொய், மனிதன் வாழ்வு பொய், எல்லாம் பொய் என்று போதிக்கும் ஆரியம் நிலவையும் விட்டு வைக்கவில்லை.
வளர்ந்த தொன்று பின் குறைதலும்
குறைந்ததொன்று பின் வளர்தலும்,
பிறந்ததொன்று பின் இறத்தலும்,
இறந்ததொன்று பின் பிறத்தலும்
உண்டு என்பதைக் கல்வி அறி வில்லாத மடையனும் அறியும்படி நிலவு காட்டுகிறது என்று கூறும் புலவர் பாடல் வரிகள் இவை:
தேய்தலுண்மையும் பெருகலுண்மையும்
மாய்தலுண்மையும் பிறத்தலுண்மையும்
அறியாதோரையு மறியக் காட்டித்
திங்கட புத்தேடிரி தருமுலகத்து (புறம் 27)
பிரமளார் என்ற புலவர் மற்றொரு புறநானூற்றுப் பாடலில் (357)
குன்றுகளோடு கூடிய மலை களைத் தன்னிடத்துப் பிணைத்துக் கட்டி நிற்கும் மண்ணுலகத்திலே, பொது வெனக் கருதப்பட்ட மூவேந் தருடைய நாடு மூன்றையும் பொது வாகக் கருதாது தமக்கே உரியன எனக் கொண்டு ஆண்ட வேந் தருக்கும் வாழ்நாட்கள் கழிந்தன. அவர் சேர்த்து வைத்த செல்வமும் அவருடைய உயிருக்குத் துணையாக விளங்கவில்லை என்று கூறுகிறார். விழாக் காலங்களில் ஆடும் கூத்தரது வேறுபட்ட கோலம் போல, முறை முறை தோன்றி இயங்கி மறை யும் தன்மையை உடையது உலகம் என்கிறது மற்றொரு புறநானூற்றுப் பாடல் (29)
இப்படி உலக வாழ்வு மாயை -_ மனை வாழ்க்கை பொய், மனைவி பொய், _ தவம்தான் சிறந்தது, வீடு பேறு அடைவதுதான் சிறந்தது என்று போதித்தனர். ஆரியர்.
தவம்தான் உயர்ந்ததாம்!
தவம்தான் உயர்ந்தது என்று கூடப் போதிக்கும் அளவிற்கு ஆரியச் செல்வாக்கு பரவிய நிலையைப் பார்க்கிறோம். துறவு, தவம்தான் நிலையானது எனும் ஆரியக் கருத்து பின்வரும் பாடலில் தலை தூக்கி நிற்கிறது.
பருதி சூழ்ந்த விதப் பயங்கெழு மாநிலம்
ஒரு பகலெழுவரெய்தியற்றே
வையமுந்தவமுந்தூக்கிற்ற வைத்துக்
கையவியனைத்துமாற்றாதாகலிந்
கைவிட்டனரே காதலரதனால்
விட்டோரை விடா அடிருவே
விடாதோரி வள்விடப்பட்டோரே (புறம்)
இப்பாடலின் பொருள் இது.
ஞாயிற்றினால் சூழப்பட்ட இப்பெரிய உலகம் ஒரு நாளில் ஏழு அரசர் தலைவராக வருவதற்குரிய அத்தகைய நிலையாமையை உடை யது. அதனால் உலகியலாகிய இல் லறத்தையும், அருட் பயிற்சியாகிய துறவறத்தையும் சீர்தூக்கிப் பார்த்தால், தவத்திற்கு உலகம் சிறு கடுகு அளவு கூட நிகர் உள்ளதாகத் தெரியவில்லை. அதனைத் தெரிந்தே வீடு பேற்றை அடைய விரும்பி யவர்கள் இல்வாழ்வில் பற்று விட் டனர். அவ்வாறு அவர்கள் கைவிட்டு நீங்கிய போதும் திரு அவர்களைக் கைவிடுவதில்லை. தன்னிடம் பற்று டையோரைத் திரு அதாவது செல்வமகள் இலட்சுமி நீங்குவார். ஆதலால் தவமே சிறந்தது, செய்யத் தக்கது எனச் சான்றோர் கண்டனர்.
தலைவிதி, ஊழ் என்னும் ஆரியக் கருத்துகள்
தலைவிதி, தலையெழுத்து, விதி, ஊழ்வினை ஆகியன எல்லாம் ஆரியக் கருத்துக்கள். கன்மம் என்பது வடசொல். சங்க நூல்கள் கன்மம் என்ற வட சொல்லை, ஊழ் என்னும் தமிழ்ச் சொல்லால் உணர்த்துகின்றன. ஊழ் போலவே மறு பிறப்பு நம்பிக்கையையும் ஆரியர் தமிழ்ச் சமுதாயத்தில் புகுத்திவிட் டனர் எனலாம்.
பொருநராற்றுப் படையில் பொருநனைப் பார்த்துப் புலவர் உன்னை நான் காணும்படி செய்தது உன்னுடைய நல்வினைப்பயனாகும் (ஆற்றெதிர்ப் படுதலு நோற்றதன் பயனே) என்று கூறுகிறார்.
குறிஞ்சிப் பாட்டில் தலைவ னுடன் ஏனையுலகத்தில் இயைவது தனக்கு உண்டெனத் தலைவி, தன்னைத் தேற்றிக் கொள்வதிலிருந்து அக்காலத்தில் மறு பிறப்பில் நம்பிக்கை இருந்ததென அறியலாம்.
இவ்வுலகில் வாழ்வதற்கென வரை யறுக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் நன்றாக வாழ்தலே வேண்டப்படுவது, வாழ்வதற்கு ஏதுவாகிய நல்வினை யன்றி இறக்கும்பொழுது உயிர்க்குத் துணையாவது வேறு ஏதும் இல்லை என்ற கொள்கை பரவியது. உயிர்கள் அனைத்தும் தாம் தாம் செய்த வினைக்கேற்ப இன்பமும் துன்பமும் உயர்வும் தாழ்வும் செல்வமும் வறுமையும் எய்தும் என்ற கருத்துப் பரவியது.
உயர்ந்த விருப்பத்தை உடைய உயர்ந்தோக்குத் தாம் செய்த நல் வினையிடத்து அதனை அனுபவித் தல் உண்டாம். ஆதலால், அவர்க்கு இரு வினையும் செய்யப் படாத தேவ ருலகத்தின் கண் இன்பம் அனுபவித் தலும் கூடும். அவ்வுலகத்தின் கண் நுகர்ச்சி இல்லையாயின் மாறிப் பிறத் தலை உடைய பிறப்பின்கண் இன்மை எதுவும் கூடும் என்று புறநானூறு கூறும்.
போரைச் செய்யும் வலியினை யுடையோர் நீண்ட இலையை உடைய வேலாற் புண்ணுற்று வடுப்பட்ட உடம்போடு மேலுலகும் புகுவர் என்று பரணர் கூறுகிறார். சங்க நூல்களில் இவ்வாறு ஆரிய நம்பிக்கைகளும், சமயக் கோட்பாடு களும் கூறப்பட்டிருந்தாலும், மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவை இடம் பெறவில்லை. ஆனால் நகர வாழ்க்கையில் அவற்றின் செல்வாக்கு சிறிது சிறிதாகப் பெருகிக் கொண்டே வந்தது.
ஆரிய, தமிழ்ப் பண்பாடுகள்
முதலில் சங்க காலத் தமிழர் பண்பாடு குறித்துக் கண்ட நாம் இப் போது ஆரிய வழிபாட்டு முறை களைக் கண்டோம். எனவே இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்றும்கூட நம்மால் ஆரியப்பண்பாடு எது என்று சுட்டிக் காட்ட முடிகிறது. ஆரியச் செல்வாக்கு உயர உயரத் தமிழ்ப் பண்பாடு பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஆரியம் உயர்ந்தது என்ற தவறான சிந்தனை, கருத்து ஆகியன புகுந்து விட்டன.
http://viduthalai.in/new/page2/14307.html
Posted by அசுரன் திராவிடன் at 8:24 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Sunday, July 17, 2011
துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! போயும் போயும் ம.பொ.சி.தான் கிடைத்தாரா?
வடபுலத்தில் தேசிய காங்கிரஸ் மகாசபைக்கு எதிராக முஸ்லிம் லீக்கைத் தோற்றுவிப்பதிலே வெற்றி கண்டது போல, தென்புலத்தில் பிராமணரல்லாதார் கட்சியைத் தோற்றுவிப்பதிலே, இந்திய வைஸ் ராயும், சென்னை மாகாண கவர்ன ரும் வெற்றி கண்டனர் என்று சிலம் புச் செல்வர் ம.பொ.சிவஞானம் எழுதியுள்ளார். (துக்ளக் 6-7-2011) என்று திருவாளர் கே.சி. லட்சுமி நாராயண அய்யர்வாள் எடுத்துக் காட்டியுள்ளார்!
இவர்களுக்குப் போயும் போயும் ம.பொ.சி. தான் கைக் கருவியாகக் கிடைத்துள்ளாரா?
திராவிட இயக்கத்தைத் தேசத் துரோக அமைப்பு என்று குற்றம் சாட்டும்போது, திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திய ம.பொ.சி.யைத்தானே தேடிப் பிடிப்பார்கள்?
இதில் ஒரு பரிதாபம் என்ன தெரியுமா? காலம் பூராவும் திராவிட இக்கத்தைத் திட்டிக் காலம் கழித்த ம.பொ.சி. அவர்கள் கடைசிக் காலத்தில் திராவிட இயக்கத்தினி டத்தில் தான் சரண் அடைந்தார் என்பதுதான் அந்தப் பரிதாபம்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு பெற்றவராக தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நின்றுதான் வெற்றி பெற்றார்!
காலம் காலமாக காங்கிரஸ்காரன் என்று தன்னைச் சொல்லிக் கொண்ட அவருக்குக் காங்கிரசில் எந்தப் பதவியும் கிட்டவில்லை. திராவிட இயக்க ஆட்சிக் காலத் தில்தான் எம்.எல்.ஏ. பதவியும், மேலவை உறுப்பினர் பதவியும், அதன் பின் மேலவைத் துணைத் தலைவர் பதவியும், கடைசிக் காலத் தில் மேலவைத் தலைவர் பதவியும் மேலவை கலைக்கப்பட்ட நிலையில் தமிழ் உயர் மட்டக் குழுத் தலைவர் பதவியும் கிடைத்தன என்பது சரித்திர உண்மை.
திராவிட இயக்கத்தைப் பற்றி அவர் என்ன சொல்லியிருந்தாலும், கொச்சைப்படுத்தியிருந்தாலும், ம.பொ.சி. நம்பும் வைதிக மொழியில் சொல்ல வேண்டுமானால் கடைசிக் காலத்தில் அதற்கான பாவ மன் னிப்பையும், பிராயச் சித்தத்தையும் திராவிட இயக்கத்தினிடம்தான் பெற்றார்.
அண்ணா முதல் அமைச்சர் ஆன நிலையில் எப்படியாவது ஓர் அமைச்சராக வேண்டும் என்பதற்காக அவர் பட்ட பாடு நகைப்புக்குரியது.
அமைச்சரவையில் இடம் கொடுத்தால் தனது தமிழரசுக் கழகத்தையே கலைத்துவிடுவதாகச் சொன்ன கட்சிக்காரர் அவர்.
மந்திரி பதவிக்காக அவர் ஆலாய்ப் பறந்த நேரத்தில் விடுதலை யில் தந்தை பெரியார் மூன்று அறிக்கைகளை வெளியிட்டார்.
எந்தக் கட்சியானாலும் தமிழர் கள் எல்லாம் ஒன்று சேரவேண்டும் என்கிற சமயத்தில் பார்ப்பன அடிமைகளை, பார்ப்பனீயத் தொண் டர்களை தமிழர்களுக்கு மந்திரி யாக்கி, தமிழர்களின் மூக்கை அறுப் பதா? என்ற வினாவை எழுப்பினார் தந்தை பெரியார். இது எதற்காக? இன்று மந்திரி சபையில் ராஜாஜி அவர்களுக்கு ஒரு ஒற்றர் வேண்டும். தி.மு.க. மந்திரி சபையில் ராஜாஜியின் குரல் ஒலிக் கப்படுவதற்கும் அவரது உதடுகள் வேண்டுமா? என்றும் கேட்ட தந்தை பெரியார், வேலியில் போகிற சுக்குட் டியை காதில் விட்டுக் கொண்டு குடையது குடையுது என்கிற கதை (விடுதலை 24.8.1967) என்று தந்தை பெரியார் எழுதியதன் விளைவாக அந்தக் கால கட்டத்தில் அவருக்குக் கிடைக்கவிருந்த அமைச்சர் பதவி பறி போனது.
ஆனந்தவிகடன் ஏடு (3-_9_-1967) அப்பொழுது ஒரு கார்ட்டூன் போட்டது. நாற்காலியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ம.பொ.சி. அவர்கள் அண்ணா, அண்ணா! தம்பி வந்திருக்கேன்! என்று கேலி செய்யப் பட்டதே –_ துக்ளக் பார்ப்பன ஏட்டுக்கு ஆனந்தவிகடன் பார்ப்பன ஏட்டின் கார்ட்டூன்தான் பொருத்தமானது.
அதே ம.பொ.சி. பின்னொரு கால கட்டத்தில் பார்ப்பனர் மீது பாய்ந்து விழுந்த நிலையும் உண்டு; தனக்கென்று வந்தால்தானே தெரியும் தலைவலியும், வயிற்றுவலியும்!
1971 ஆம் ஆண்டு தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளராக உதய சூரியன் சின்னத்தில் ம.பொ.சி. நின்றார். அவரை எதிர்த்து ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் திருமதி அனந்தநாயகி போட்டியிட்டார்.
பரமபக்தரான ம.பொ.சி. மயிலை கபாலீசுவரர் கோயிலுக்குச் சென்று தன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு அர்ச்சகரை வேண்டினார்.
அந்த அர்ச்சகப் பார்ப்பான் என்ன செய்தான் தெரியுமா? ம.பொ.சி.யிடம் அர்ச்சனைக்கான துட்டை வாங்கிக் கொண்டு அவரை எதிர்த்து நின்ற அனந்தநாயகி அம்மையார் பெயருக்கே அர்ச்சனை செய்துவிட்டார். அந்த அளவு 1971 ஆம் ஆண்டு தேர்தல் பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார் போராட் டமாக உச்ச நிலையில் விளங்கியது.
அன்று மயிலாப்பூர் தொகுதி 97 ஆவது வட்டத்தில் பேசியபோது ம.பொ.சி. தனக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதையைக் குறித்து ஆவேசமாக அவருக்கே உரித்தான தொனியில், மீசையை இடது கையால் ஒரு தடவி தடவி ஆக்ரோஷமாக கர்சித்தார்.
பார்ப்பனர்களின் ஓட்டு மட்டும் சிண்டிகேட்டுக்குப் போதுமா? மயிலாப்பூரில் ஒரு லட்சத்துப் பதினாயிரம் ஓட்டுகள் இருக்கின்றன. இதில் பிராமணர்கள் ஓட்டு 17 ஆயிரத்து அய்நூற்றுச் சொச்சம்; இந்த ஓட்டுகள் மட்டும் கிடைக்கும் என்று வைத்துக் கொண்டாலும், அனந்தநாயகி அம்மையார் வெற்றி பெறுவாரா? என்று மூச்சு முட்ட முழங்கினார்.
துக்ளக் பார்ப்பனக் கூட்டமும், திராவிட இயக்கத்தைக் கொச்சைப் படுத்தி பார்ப்பன அம்சமாக பேனா பிடித்த எழுத்தாளரும், ம.பொ.சி.யை துணைக்கழைத்து கடைசியில் தங்கள் உள்ளி மூக்குகளை உடைத் துக் கொண்டதுதானே மிச்சம்!
இந்தியாவில் அடிமைத் தளையை நீக்குவதற்காக விடுதலைப் போரை காங்கிரஸ் மகாசபை முனைப்புடன் நடத்தியபோது, தங்களது பிரித் தாளும் கொள்கையை ஆங்கிலே யர்கள் இந்தியாவிலும் செயல்படுத் தினார்கள். அந்த வகையில் சிக்கிய வர்கள்தான் நீதிக்கட்சிக்காரர்கள், உண்டாக்கப்பட்டதுதான் பார்ப் பனர் அல்லாதார் கட்சி என்ற அபாண்ட பழியைப் போடுகிறார் லட்சுமி நாராயணன்.
அப்படியா சங்கதி? அவர்கள் சாட்சிக்கழைத்த அந்த ம.பொ.சி யையே அவர்கள் ஆதாரம் காட்டிய ம.பொ.சி. அவர்களின் அந்த ஆதார நூலான, விடுதலைப் போரில் தமி ழகம் எனும் நூலையே சாட்சிக் கூண்டில் ஏற்றலாமா? இதோ, சிலம் புச் செல்வர் ம.பொ.சி. எழுதுகிறார்:
சென்னை மாகாணத்தைப் பொருத்தவரையிலே மிதவாதிகளைக் கொண்ட பழைய கட்சியாரில் வக்கீல்களே அதிகம். ஆண்டுதோறும் கூடும் காங்கிரஸ் மகா சபைகளிலே, வைஸ்ராயின் நிர்வாக சபைக்கும், சென்னை மாநில கவர்னரின் நிர்வாக சபைக்கும் இந்தியர்களை நியமிக்க வேண்டுமென்றும்; உயர்நீதிமன்ற நியமனங்களிலே இந்தியர்களைக் கூடுதலாக நியமிக்க வேண்டு மென்றும் கோரித் தீர்மானம் கொண்டு வந்ததே இந்த மிதவாதக் கூட்டம்தான். இத்தகைய பதவி களைத் தாங்கள் அடைய முடியு மென்ற நம்பிக்கையின் பேரிலேயே சென்னை மாகாண வக்கீல்கள் காங் கிரஸ் கூடாரத்துக்குள்ளேயே குடி யிருந்தனர். காங்கிரஸ் மகாசபையில் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களே சேர முடியுமென்ற நிலை இருந்ததும், இந்த மிதவாதக் கூட்டம் அந்த மகாசபையிலே செல்வாக்குப் பெறு வதற்குச் சாதகமாக இருந்தது.
ஆங் கிலம் படித்தவர்களிலே பள்ளிகளி லும், கல்லூரிகளிலும் ஆசிரியர்களாக இருப்பவர்களும், அரசாங்க உயர் அலுவலர்களும் காங்கிரசில் ஈடுபட இயலாதவர்களாக இருந்தனர். ஈடுபட்டாலும், பிரிட்டீஷ் பொருள் களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற அளவுக்குச் செயல்பட முடியாதவர் களாகவும் இருந்தனர். இதனால், ஆங்கிலம் படித்தவர்களிலே சுதந்திர மாக செயல்படுவதற்கு அதிக அள வில் சந்தர்ப்பம் பெற்றிருந்தது வக்கீல் கூட்டம்தான்.
பிற்காலத்தில் சென்னை மாகாணத்திலே ஜஸ்டிஸ் கட்சி தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது இந்த வக்கீல்களின் ஆதிக்கம்தான். இவர்களிலே மிகப் பெரும்பாலோர் பிராமணர்களாக இருந்தாலும் அரசாங்க நீதித்துறை, நிர்வாகத்துறை, பார்லிமெண்டரித் துறை ஆகியவற்றில் எல்லாம் இந்த பிராமண வக்கீல்களே நியமனம் பெற்றதாலும், இவர்களுடைய ஆதிக்கத்துக்கு வகுப்புவாத வண்ணம் பூச ஜஸ்டிஸ் கட்சியால் முடிந்தது. அந்நாளில் சட்டம் படித்த வக்கீல்களில் நூற்றுக்குத் தொண் ணூறு பேருக்கு அதிகமானோர் பிராமணர்களாகவே இருந்தனர். ஆகவே, அவர்கள் இந்தியன் என்ற பெயரால் அரசாங்கத் துறைகள் அனைத்திலும் நியமனம் பெறுவது இயற்கையாக இருந்தது என்று எழுதியுள்ளாரே.
(விடுதலைப் போரில் தமிழகம்- _ ம.பொ.சி. பக்கம் 173_-174)
ம.பொ.சி.யை துணைக்கழைத்தார் திருவாளர் கே.சி. லட்சுமிநாராயண; அந்த ம.பொ.சி.யே காங்கிரஸ் என்பது பார்ப்பனர்கள் பதவி தேடும் கூடாரம் ஆனதால், ஜஸ்டிஸ் கட்சி தோன்ற வேண்டிய அவசியம் ஏற் பட்டது என்று ஜஸ்டிஸ் கட்சியின் தோற்றத்திற்கு நியாயம் கற்பித்து விட்டாரே – துக்ளக் கூட்டம் எங்கே போய் முட்டிக் கொள்ளப் போகிறது?
அத்துடன் விட்டாரா ம.பொ.சி?.
இவர்கள் மயிலாப்பூர் வக்கீல்கள் என்றும் எழும்பூர் வக்கீல்கள் என்றும் இருவேறு பிரிவுகளாகப் பிரிந்து செயல் பட்டனர். முன்னவர் அனேகமாக பிராமணர்களாகவும், பின்னவர் அனேகமாக பிராமணரல் லதாராகவும் இருந்தனர். மயிலாப்பூர் வக்கீல்களுக்கு திரு.வி.கிருஷ்ணசாமி அய்யர் தலைவர் என்றால், எழும்பூர் வக்கீல்களுக்கு சர்சி.சங்கரன் நாயர் தலைவராக இருந்தார். டி.எம்.நாயரும் எழும்பூர் கூட்டத்தாருடன் சேர்ந் திருந்தார். (நூல் பக்கம் 222)
*****
காங்கிரசைப் பயன்படுத்தி சகலமும் பார்ப்பனர் மயம்; பதவிகள் எல்லாம் அவர்கள் மயம் என்றிருந்த நிலையில், பார்ப்பனர் அல்லாதார் களின் உரிமைக்காகக் குரல் கொடுக்க ஜஸ்டிஸ் கட்சி முன்வந்ததில் என்ன குற்றம்?
பார்ப்பனர்கள் திட்டமிட்டு பதவிகளை அபகரித்தால் அது தேச சேவை; நாட்டுப் பற்று – சுதந்திர தாகம்; – பார்ப்பனர் அல்லாதார் தங்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தால் , பாடுபட்டால் அதற்கு உள் நோக்கமா? தேசத் துரோகமா?
பார்ப்பனர்கள் எந்தெந்தப் பதவிகளை எல்லாம் எப்படி எப்படி பெற்றார்கள் என்பதை – தங்களுக்குத் துணைக்கு அழைத்த ம.பொ.சி.யே வேறு வழியின்றிப் பட்டியல் போட்டுக் கொடுத்திருக்கிறாரே!
கொலைக் குற்றவாளியான ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி வழக்கில் ஏற்பட்ட பிறழ் சாட்சியாக ம.பொ.சியை கருதுவார்களோ?
மும்பையில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாடு பற்றி க.சுப்பிரமணிய அய்யர் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார் (1888). அந்நூலின் பெயர் ஆரியஜன அய்க்கியம் அல்லது காங்கிரஸ் ஜன சபை என்பதே.
இப்படி காங்கிரஸ் என்றாலே ஆரிய ஜனத்திற்கானதே என்று ஆகி விட்ட பிறகு ஆரியரல்லாதாருக் கென்று ஒரு அமைப்பு வேண்டாமா? அதுதான் ஜஸ்டிஸ் கட்சி – காலத்தின் கட்டாயமாகத் தோன்றியது.
எல்லாம் எங்களுக்கே யென்று தங்கள் வயிற்றில் அறுத்துக் கட்டிக் கொண்ட கும்பல் அதற்கெதிரான பூகம்பம் புறப்படும்போது லாலி பாடியா வரவேற்பர்? அந்த ஆத்திரத்தை நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் லட்சுமி நாராயணர்கள் உருவில் உறுமிக் காட்டுகிறார்கள்.
ஏதோ தென்னிந்திய நல உரிமைச் சங்கமான ஜஸ்டிஸ் கட்சிதான் பார்ப்பன எதிர்ப்பைத் தூக்கிப் பிடித்தது என்று கருதவேண்டாம்.
சென்னை மாகாணத்தில் காங்கிரசுக்குள்ளேயே பார்ப்பனர் அல்லாதாருக்கு அமைப்பு ஒன்றைத் தொடங்கும் நிலைக்குத் துரத்தப்பட் டதே! அதன் பெயர் சென்னை மாகாண சங்கம், தலைவர் கேசவப் பிள்ளை. துணைத் தலைவர்களில் ஒருவர் ஈ.வெ.ரா. பார்ப்பனர் அல்லா தாருக்கு அனைத்துத் துறைகளிலும் 50 விழுக்காடு தருவது என்ற தீர் மானம் செய்யப்பட்டது. இவ்வமைப் பில் இடம் பெற்றவர்கள் அனை வரும் பார்ப்பனர் அல்லாதாரே! இதனைக் கண்டு வெகுண்ட சத்திய மூர்த்தி அய்யர் மாதவராவ் போன்ற பார்ப்பனர்கள் தேசிய வாதிகள் சங்கம் என்று காங்கிரசுக்குள்ளேயே இன்னொரு அமைப்பினை ஏற் படுத்தினர்.
விஜயராகவாச்சாரியார் தலைவ ராகத் தேர்வு செய்யப்பட்டார். கஸ்தூரி ரெங்க அய்யங்காரைத் துணைத் தலைவர் என்று ராஜாஜி முன்மொழிந்தார். ஈ.வெ.ரா. திரு.வி.க., டாக்டர் வரதராஜுலு நாயுடு ஆகியோர் வ.உ.சியைத் துணைத் தலைவராகக் கொண்டு வர வேண்டும் என்று வற்புறுத்தினர். கடைசியாக வ.உ.சி.யோடு கஸ்தூரி ரெங்க அய்யங்காரும் துணைத் தலைவர் களாக ஆக்கப்பட்டனர்.
பார்ப்பனர் அல்லாதாருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அனைத் துத் துறைகளிலும் அளிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை தேசியவாதிகள் சங்கத்திலும் நிறைவேற்றுமாறு ஈ.வெ.ரா. உள்ளிட்ட மூன்று தலை வர்களும் செய்துவிட்டனர். அதனைக் கண்ட ராஜாஜி அவர்கள் உங்களை விட தியாகராயச் செட்டி யாரே மேல் என்று கூறும் நிலை ஏற்பட்டதே!
பார்ப்பனர் அல்லாதாரின் உரி மைக்காக ஒரு அமைப்புத் தோன்று வதற்கு இவ்வளவு அழுத்தமான வரலாற்றுப் பின்னணிகள் இருக்க, இவற்றை எல்லாம் தார் கொண்டு அழித்துவிட்டு, பார்ப்பனர் அல் லாதார் இயக்கத்தைத் தேச துரோக அமைப்பு என்று பழி சுமத்துகின் றனர் பார்ப்பனர்கள் என்றால் அவர் களை ஆபேடூபே சொன்ன அந்த அடை மொழிகளால் தான் அர்ச் சனை செய்ய வேண்டும்.
Avarice, Ambition, Cunning, Wily, Doube tongued, Servile, Insinuating, Injustice, Fraud, Dishonest, Oppression intrigue..
இதனை அறிஞர் அண்ணா பின்வருமாறு மொழி பெயர்க்கிறார்:
பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேசநா இரண்டுடையாய்ப் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
வன்கணநாதா போற்றி!
கொடுமைக் குணாளா போற்றி!
கோழையே, போற்றி, போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படு மோசம் புரிவாய் போற்றி!
சிண்டு முடிந்திடுவாய் போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஓட்டு வித்தை கற்றோய் போற்றி!
உயர் அநீதி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தோய் போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இறை, இதோ, போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!
இதுதான் அண்ணாவின் படப்பிடிப்பு!
குறிப்பு: இறந்து போன வரை பார்ப் பனர்கள் சாட்சிக்கு அழைத்ததால் ம.பொ.சி. யைப் பற்றி நாமும் எழுத நேரிட்டு விட்டது!
(மீண்டும் சந்திப்போம்.)http://viduthalai.in/new/page-1/13859.html
Posted by அசுரன் திராவிடன் at 8:13 AM 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
காமராசர் எனும் பெருமகன்
காமராசர் என்ற பெயர் இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தையும், தமிழக வரலாற்றில்; தன்னேரில்லா பெருமையையும் பெற்ற பெயராகும். விருதுப்பட்டி தந்த வீரர். தந்தை பெரியாரை பெற்றதால் ஈரோடு பேர் பெற்றது. அண்ணா பிறந்ததால் காஞ்சி சிறந்தது. காமராசர் பிறந்ததால் விருதுப்பட்டி சீர்பெற்றது என்பது மிகையான வார்த்தை அல்ல.
பொதுவாழ்வில் ஈடுபட, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மக்கள் தொண்டாற்ற, நாட்டு விடுதலையில் நாட்டம் கொள்ள காமராசருக்கு – இளமைக்கால ஈர்ப்புக் குக் காரணமாய் அமைந்தவர்கள் காந்தியும், பெரியாரும்.
வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் ஈடுபட்ட போது, இளைஞராய் பங்கேற்றவர் காமராசர். சத்தியமூர்த்தி யின் சீடராக அடையாளப்படுத்தப் பட்டாலும் அரசியலில் இராசகோபாலாச் சாரியின் ஆதிக்கத்தை அகற்றி அணிய மானவர் காமராசர்.
ஆரிய ஆதிக்கத்தை வீழ்த்திட வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் சிறப்பாக செயலாற்றியவர். காங்கிரசில் இருந்தாலும், காங்கிரஸ் முதலமைச் சரான இராசகோபாலாச்சாரி குலக் கல்வித் திட்டத்தைச் செயலாக்க முனைந்தபோது எதிர்த்தவர். அத்திட்டம் ஒழிய காங்கிரசாரை அணிதிரட்டியவரும் கூட. தேவை என மக்கள் கருதியபோது, அவசியம் என அவர் உணர்ந்தபோது இராசகோபாலாச்சாரியை வீட்டுக்கு அனுப்பி தமிழக முதல்வராக பொறுப் பினை ஏற்றவர்.
பெரியாரின் கருத்தினை ஏற்று ஆட்சித் தேரினை செலுத்தியவர் காமராசர். தகுதி-திறமை பேசிய கூட்டத் தினருக்கு உன் தகுதியும் தெரியும், உனக்கு சொல்லிக் கொடுத்தவன் தகுதியும் தெரியும் என்றவர். இந்திய பிரதமர்களை உருவாக்கிடும் ஆற்றல் பெற்ற கிங் மேக்கர் அவர். சோசலிச சமுதாயம் அமைவதை லட்சியமாகக் கொண்டவர். ஜாதிய ஒடுக்கு முறைக்கு எதிரானவர். அவரின் சாதனைகளை, சிறப்புகளை, செயல் திறனைப் பார்ப்போம்.
எத்தனை எத்தனை திட்டங்கள்
மணிமுத்தாறு அணை, அமராவதி அணை, வாலையார் அணை, ஆரணி யாறு அணை, மங்கலம் அணை, வீடூர் அணை, கிருட்டிணகிரி அணை, மேல்கட்டளைக் கால்வாய், புள்ளம்பாடி கால்வாய், சாத்தனூர் அணை, கோமுகி அணை, பரம்பிக்குளம் – ஆளியாறு அணை, கீழ் பவானித் திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம் இப்படியாய் எத்தனை எத்தனை அணைகள் காமராசர் ஆட்சியில் அமைக்கப்பட்டன. எத்தனை ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றன. வேளாண்மை செழித்திட காமராசர் ஆற்றிய பணிகள்.
திருச்சி பெல் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில் பெட்டி உற்பத்தி சாலை, மேட்டூர் காகித ஆலை, ஆவடி ராணுவ டாங்கித் தொழிற்சாலை, இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, குன்னூர், கிண்டி இந்துஸ்தான் டெலி பிரின்டர்ஸ், நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம், திருச்சி துப்பாக்கித் தொழிற் சாலை, இப்படியாய் இன்னும் ஏராளமான சர்க்கரை ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், பல்வேறு தொழிற்சாலைகள் தலைவர் காமராசரின் ஆட்சியின் சாதனைகளாக மலர்ந்தன.
நீர்மின்திட்டங்கள், அனல்மின் திட்டங்கள், அணு மின் திட்டங்கள் பல காமராசர் ஆட்சிக் காலத்தில் செயல் படுத்தப் பட்டு கிராமப்புற மக்கள் மின் னொளி பெற காரணமானவர் காமராசர். மின்வாரியம் அமைத்து மின் உற்பத்தி, விநியோகம், பராமரிப்பு என செயல்படுத்தி மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட வைத்தார்.
மக்கள் பங்களிப்புடன் கல்வி . . .
ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைந்திட மாணவர்களாகிய பிஞ்சு உள்ளங்களில் ஜாதி, பொருளியல் ஏற்றத் தாழ்வு எனும் நஞ்சு கலந்துவிடக் கூடாது என எண்ணிய காமராசரின் உள்ளத்தில் உதித்திட்ட திட்டம்தான் மதிய உணவுத் திட்டம் – சீருடைத் திட்டம். ஒடுக்கப்பட்ட சமுதாய பிள்ளைகள் படிக்கவும், படித்து சிறக்கவும், மதிய உணவுத் திட்டம் மகத்தான வழி வகுத்தது என்றால் மிகையல்ல. அனை வரும் சமம் என்ற உணர்ச்சி, ஒன்றாக அனைத்து மாணவர்களும் ஒரே இடத்தில் உட்கார்ந்து சாப்பிடவும், ஒரே மாதிரியான உடைஅணிந்து வருவதும் ஆன நிலை ஏற்பட வழி வகுத்தது. மக்கள் பங்களிப் போடு இத்திட்டங்களை நிறைவேற்றினார்.
அரை நேரம் படிப்பு – அரை நேரம் குடும்பத் தொழில் என்று குல்லுகபட்டர் இராசகோபாலாச்சாரி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து – கல்விச் சோலை மலர காமராசரும் காரணமானார். உள்ளம் கொதித்து அவர் கொட்டிய வார்த் தைகள் இதோ, இது ஒரு பைத்தியக் காரத் திட்டம். இதை ஒழித்து விட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன் என்றார்.
நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை . . .
கடையர் எனப்படுவோர் எவ்விதம் கடைத்தேற முடியும்? கல்வி பெற்றுச் சிறந்தால்தான் தேறுவார்கள். படிக்கிற கல்வி மூலம் நல்ல அறிவும் திறமையும் வளர்ந்தால் நிச்சயமாகப் பிழைத்துக் கொள்வார்கள். ஆம்., அவர்கள் சிறந்த மனிதர்களாக மாறுவார்கள். ஆனால் பலருக்கு எழுத்தறிவே கிடையாது. ஊர்களில் பள்ளிக் கூடம் இல்லாத போது எப்படி எழுத்தறிவைப் பெற முடியும்? ஆகவே முதல் வேலையாக எல்லா ஊர்களிலும் பள்ளிக் கூடங்களைத் திறக்க வேண்டும். கல்வியை எல்லார்க்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். கல்வியை இலவசமாகப் பெற வேண்டும். இன்னொன்று நிலம் ஈரமாக இருந்தால் தான் பயிரிட முடியும்; காய்ந்து கிடந்தால் விதை எப்படி முளைக்கும்? பிள்ளைகளின் வயிறு எந்தக் காரணம் கொண்டும் காயவே கூடாது. அவர்களின் வயிறு காய்ந்திருந்தால் அவர்களுக்கு எவ்விதம் படிப்பு ஏறும்? இந்த நாட்டில் ஏழைகள் மலிந்திருப்பது எல்லோருக்கும் தெரியும். எனவே பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு அங்கேயே, பள்ளிக் கூடத்திலேயே சோறிட வேண்டும். இதுதான் நாட்டுக்கு நன்மை பயப்பதாகும். நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை, இனிமேல் வரும் தலைமுறையினராவது பெற்றுப் படித்து வளர்ந்து வாழட்டும் . . . எல்லாருடைய கண்களையும் திறக்கும் பள்ளிகளைத் திறப்பதை விடவும் முக்கிய வேலை இப் போதைக்கு இல்லை. எனவே மற்ற வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஊர் ஊராக வந்து பகலுணவுத் திட்டத்திற்குப்பிச்சை எடுப்பதற்கும் சித்தமாக உள்ளேன் – காமராசரின் எட்டையபுரம் பேச்சு இது. படிப்பை மக்கள் – குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் நுகரச் செய்ய தலைவரின் எண்ணம் எப்படி இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது.
ஜாதி ஒடுக்கு முறைக்கு எதிராக . . .
தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப் பில் இருந்தபோது பெரியாரின் எண்ணக் கனவை ஈடேற்றும் வண்ணம் பெருந் தலைவர் காமராசர் அற்புத சாதனைகளை நிகழ்த்தினார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோயில் கதவுகள் திறக்க மறுத்தன – திமிர்வாதம் பேசினர் ஆதிக்க வாதிகள். பரமேசுவரன் என்ற தாழ்த்தப்பட்டவரை இந்து அறநிலையத் துறை அமைச்சராக் கியதன் மூலம் பூரணகும்ப மரியாதை கொடுத்து அழைக்க வேண்டிய உரிமைப் பிரகடனமாயிற்று. போலீஸ்துறை அமைச் சராக கக்கன் அவர்களை நியமனம் செய்ததன் மூலம் தாழ்த்தப்பட்ட மக் களுக்கு பாதுகாப்பு உணர்ச்சி ஏற்பட வழியாயிற்று.
ஏழை எளிய மக்கள் வாழ்வில் மாற்றமும், ஏற்றமும் பெற கல்வி வள்ளல் காமராசர் தமது ஆட்சியைப் பயன்படுத் தினார். எளிமையாக, நேர்மையாளராக தம் வாழ்வை அமைத்துக் கொண்டார்.
எல்லாம் பெரியார் அய்யாவாலேதான் நடக்குது. அவர் சொல்றார் – நாம் செய்கிறோம்! இது 1952லே துவங்கின சிக்கல் இல்லை. அய்யாயிரம் ஆண்டு களாக இருக்கிறதாச்சே!
தெய்வத்தின் பேராலேயும், மதத்தின் பேராலேயும் நம்மை ஒதுக்கி வைச்சுட் டானுங்க! இதை தலையெழுத்துன்னு சொல்லிட்டானே! யார் கவலைப்பட்டா?
பெரியார் ஒருவர்தானே தலையில் எடுத்துப் போட்டுக் கிட்டுப் பண்ணிக் கிட்டிருக்கார். அவரில்லேன்னா, நம்ம பிள்ளைங்க கதி என்னவாயிருக்கும்? அத்தனை பேரும் கோவணத்டே வய லிலே ஏரோட்டிக்கிட்டிருப்பான்! இன் னைக்கு டெபுடி கலெக்டராகவும், ஜாயிண்ட் செகரெட்டிரியாகவும் உட்கார்ந்திருக்கான். நம்ப கிட்ட அதிகாரம் இருக்கிறதாலே பெரியார் நினைச்சதிலே ஏதோ கொஞ்சம் பண்ணிக்கிட்டிருக்கோம்.
அவர் எந்த அதிகாரமும் இல்லாமே, நமக்காக ஊர் ஊரா அலைஞ்சு சத்தம் போட்டுக்கிட்டே வர்ராரு! அவராலேதான் நமக்கெல்லாம் பெருமை.
தந்தை பெரியாரை – அவர்தம் உழைப்பை – அதனால் விளைந்த பயனை நன்றி உணர்வோடு பெருந்தலைவர் காமராசர் பகன்றுள்ளதைப் பார்க்கும் ஒவ்வொருவரும் அய்யாவின்மீது காம ராசர் வைத்திருந்த மதிப்பை உணர முடியும்.
குலக்கல்வித் திட்டம் என்ற பேரால் – தமிழினத்தின் எதிர்காலத்தையே சூனிய மாக்கிடவும், ஒரு இனத்தின்அறிவுக் கண்ணை ஊனப்படுத்தவும், இராச கோபாலாச்சாரியார் கொண்டு வந்த கல்வித் திட்டத்தைப் பெரியார் எதிர்த்து முறியடித்தது ஒரு புறம் – அதனால் இராசகோபாலாச்சாரியார் முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண் டது இன்னொரு புறம் – பெருமைக்குரிய காமராசர் தமிழ்நாட்டின் ரட்சகராக – முதல் அமைச்சராக அரியணை ஏறியது என்பது மற்றொரு புறம் தமிழ்ச் சமுதா யத்திற்குக் கிடைத்திட்ட பெருவாய்ப்பு. இவற்றிற்கெல்லாம் தந்தை பெரியார் தான் காரணம்.
இராசாசியால் மூடப்பெற்ற 6000 பள்ளிகளை மீண்டும் காமராசர் திறந் தார்- மேலும் 14000 பள்ளிகள் என ஆக் கினார். 300 பேர் கொண்ட கிராமத்தில் எல்லாம் பள்ளிகள் திறப்பு. 14 வயதுக் குட்பட்ட அனைவரும் படித்திட வேண்டும் என்ற கட்டாய இலவசக் கல்வி. 1954 இல் தமிழகத்திலிருந்த தொடக்கப்பள்ளிகள் 30,000 இதர உயர் நிலைப் பள்ளிகள் 2,200. தமிழக வரலாற்றில் காமராசர் காலம் கல்வி வளர்ச்சியில் பொற்காலம்.
இருக்கு இல்லைங்கறது பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையா துன்னேன். நாம் செய்யறது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கிறதை விட யோக்கியனா இருக் கனும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண் ணிக்கிட்டுக் கோயிலுக்குக் கும்பா பிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா?
மேல்சாதி, கீழ்சாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுகப் பண்ணின ஏற்பாடுன்னேன். சுரண்டித் திங்கறதுக்காகச் செய்ததுன்னேன். எல்லாரும் ஆயா வவுத்திலே பத்துமாதம் இருந்துதானே பிறக்குறோம். அதுவே என்ன பிராமணன்-சூத்திரன், ரொம்ப அயோக்கியத்தனம்.
நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி, ஆத்திகவாதி எல்லோ ருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்ரவனை மனுஷன்னுதான் பார்க்குறேன். பிராமணன்- சூத்திரன்னு பார்க்குறதில்லை.
தனிப்பட்ட முறையிலே நான் கோயில், பூசை, புனஸ்காரமுன்னு பைத்தியம் பிடிச்சி அலையறதில்லே. மனிதனோடே அன்றாடக் கடமைதான் முக்கியமுன்னு நினைக்கிறவன் நான்.
மனிதனை மதிக்க வேண்டும். மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை களை சரிவர செய்ய வேண்டும். மக்களைப் பிரித்து வைக்கும் ஜாதியின் மீது நம்பிக்கை வைக்கக் கூடாது. யோக்கியப் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பதிலே அழுத்தமான நம்பிக்கை உள்ளவராக தலைவர் காமராசர் வாழ்ந்தார் என்பது மேலே அவன் பதில்கள் பறைசாற்றுகின்றன.
காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களின் ஒருவரும் முன்னாள் மேலவை உறுப்பினரும், சீரிய பகுத்தறி வாளருமான சீர்காழி பெ.எத்திராஜ் எழுப்பிய வினாக்களுக்கு தலைவர் காமராசர் அளித்திட்ட பதில்கள்தான் இவை. இவற்றுக்கும் மேலாக நம்மை சிலிர்க்க வைக்கும் சிந்தனை பதில்களைத் தொடர்ந்து பாருங்கள்.
நீங்க பூசையெல்லாம் செய்யறதில்லையா? இது கேள்வி.
அதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவன் பண்ற துன்னேன். அடுத்த வேளைக்குச் சோறு இல்லாதவன் கடன் வாங்கி, ஷேத்ராடனம் போறான். எந்தக் கடவுள் இவன் கிட்டேவந்து, நீ ஏண்டா, என்னைப் பார்க்க வரலேன்னு கோவிச்சுக்கிட்டான். அபிஷேகம் பண்றதுக் குக் குடம் குடமா பாலை வாங்கி வீணாக்குகிறானே மடையன். அந்தப் பாலை நாலுப் பிள்ளைக் கிட்டே கொடுத்தா அதுங்க வலிமையா வளருமில்லியா?
பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக்கு பி.எச்டி யா கொடுக்குறாங்க.பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த்தம்! பக்தி வேஷம் போடுறது நாலு பேர் பாராட்டணுமிங்கறத்துக்காகத்தான்.ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுக்கலா மில்லையா?
ஊருக்கு நூறு சாமி; வேளைக்கு நூறு பூசைன்னா, மனுஷன் என்னைக்கு உருப்படறது? நாட்டிலே வேலை யில்லாத் திண்டாட்டம், வறுமை, சுகாதாரக்கேடு, ஏற்றத் தாழ்வு இத்தனையும் வச்சுக்கிட்டு, பூசை என்ன வேண்டிக் கிடக்கு பூசைன்னேன்? ஆயிரக்கணக்கான இந்த சாமி கள் இதப் பாத்துக்கிட்டு ஏன் பேசாமே இருக்குன்னேன்?
பட்டறிவாளரான காமராசரின் பதில்கள் பேர் பெற்ற பகுத்தறிவாளனின் பதிலைப் போலல்லவா அமைந் துள்ளது. தலைவர் காமராசர் வீசிய வீரியமுள்ள அறிவுக் குண்டுகள் இவை. தொடர்ந்து பகுத்தறிவுக் கணை பாய்வதைப் பாருங்கள். . .
லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்தியெல்லாம் ஓவியர்கள் வரைஞ்சு வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்ம ஆளு கும்பிட ஆரம்பிச்சுட்டான்.
சுடலைமாடன், காத்தவராயன் பேர்ல அந்தந்த வட்டாரத்துல பிரபலமானஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்ம ஆளு. கடவுள் கண்ணை உருட்டிக்கிட்டு, நாக்கை நீட்டிக்கிட்டுதான் இருப்பாரா? அரேபியாவிலே இருக்கிறவன் அல்லான் னான். செருசலத்திலே இருக்கிறவன் கர்த்தர்ன்னான், இதிலேயும் சில பேர் மேரியை கும்பிடாதேன்னான். கிறித்துவ மதத்திலேயே ஏழெட்டு டெனாமினேஷன் உண்டாக்கிட்டான்.
மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன் அக்னி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமிகளைச் சொன்னான். நம்மநாட்டு பூர்வீகக் குடிமக்களான திராவிடர்கள் காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் இவன் கிட்டே வந்து என் பேரு இதுதான்னு சொன்னது?
மதம் மக்களுக்குச் சோறு போடுமா? அவன் கஷ்டங்களைப் போக்குமா? இந்தக் குறைஞ்சபட்ச அறிவு கூட வேணாமா மனுஷனுக்கு?
உலகத்திலே இருக்கிற ஒவ்வொரு மதமும் நான் பெரிசா நீ பெரிசான்னு மோதிக்கிட்டு ரத்தம் சிந்துதே! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே! இப்படியெல்லாம் அடிச்சிக்கிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்? பச்சைத் தமிழரின் நியாயமான கேள்விக்கு எந்த பக்த பிரசங்கி பதில் சொல்லுவார்?
தீபாவளி கொண்டாடுவதில்லை . . .
நரகாசூரன் கதையை வச்சுத் தீபாவளி கொண்டாடு றான். நவராத்திரிக் கதையைச் செல்லி சரசுவதி பூசை பண்றான். விக்னேசுவரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை படைக்கிறான். இது மாதிரி செய்து பாமர மக்களைத் தம் மதத்தின் பிடிக்குள்ளே வச்சுப் பொழப்பு நடத்துறான்.
நான் தீபாவளி கொண்டாடுனதுமில்லே. எண்ணைத் தேய்ச்சுக் குளிச்சதுமில்லே. புதுசு கட்டனதுமில்லே. பொங்கல் மட்டும்தான் நம்மக் கலாச்சாரத்தோடு ஒட்டுன விழான்னேன்.
நான் தீ மிதி, பால் காவடி அப்படீன்னு போனதில்லே. மனிதனைச் சிந்திக்காத எந்த விஷயமும் தேவையில்லே. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக் குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்லே. இவன் லட்சக்கணக்கான ரூவாயிலே வைர ஒட்டியாணம் செய்து காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடுறான்.
தீர்க்கமான மானுட நேயச் சிந்தனையை மக்கள் தலைவரான காமராசர் எவ்வளவு நியாயமாக முன் வைக்கிறார். வரால் மறுத்துரைக்க முடியும் காமராசரின் கருத்தை?
திருப்பதி உண்டியலில் கருப்புப் பணம்!
கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டிய லில்லே கொண்டு போய்க் கொட்டுறான். அந்தக் காசிலே ரோடு போட்டுக் கொடுக்கலாம். ரெண்டு பள்ளிக் கூடம் கட்டிக் கொடுக்கலாம். அதையெல்லாம் செய்ய மாட்டான். சாமிக்குத்தம் வந்திடுமுன்னு பயந்துகிட்டுச் செய்வான்.
மதம் மனிதனைப் பயமுறுத்தி வைக்கிறதேத் தவிர தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித் தான் இருக்கான்னேன்!
கோயில், பிரார்த்தனை, நேர்த்திக் கடன் கழிக்கிறது. இதிலே உங்களுக்கு அனுபவமுண்டா? என்று தலை வரிடம் கேட்டதற்கு, பெருந் தலைவர் சொன்ன பதில் வியக்க வைக்கிறது – விலா நோக சிரிக்க வைக்கிறது.
சின்னப்பையனா இருந்தப்போ பத்ரகாளியம்மன் திருவிழா நடக்கும். அந்தச் சிலைக்கு நாடாரே பூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930க்கு முன்னாலே சஞ்சீவிரெட்டியோடு திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுக்கிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுக்கிட்டேன். அப்புறம்தான் நினைச்சுப் பார்த்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணுச்சு. போயும் போயும் தலை முடியைத்தானா கடவுள் கேட்கிறாரு. எல்லாம் செட்டப் அப்படின்னு சிந்திச்சேன். விட்டுட்டேன் . . . தலையிலே இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆனா, ஆண்டவனுக்காக தலையையே கேட்டாக் கொடுப்பானா? எவ்வளவு ஆழமான கேள்வி. அறிவில் ஆர்வமுள்ளோர் சிந்திக்க வேண்டும்.
காமராசரை நமது நாட்டு முதல் மந்திரியாக அடை வற்கு ஓர் அளவுக்குக் காரணமானவன் என்று சொல் வேன். இத்தனை நாள்களுக்குள் குலக்கல்வித் திட்டம் பற்றிய முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால், பலாத்காரத் தில் ஈடுபடுவோம் என்று முதல் அமைச்சர் சி.இராசகோ பாலாச்சாரிக்கு எச்சரிக்கை செய்தோம். அதன் காரண மாக உடம்புக்குச் சவுகரியம் இல்லை என்று சாக்குக் கூறிப் பதவியை விட்டு விலகினார். அவர் விலகாமல் இருந்தால் காமராசர் பதவிக்கு வரமுடியாது!
இந்தியாவிலேயே எந்தப் பகுதியும் அடையாத நன்மைகளை தமிழர்களாகிய நாம் அடைந்திருக்கிறோம். ஏனெனில், தமிழர்களாகிய நமக்குக் கல்விக் கண் கொடுத்தவர் காமராசர் ஆவார்! காமராசர் பதவிக்கு வராத வரைக்கும் நாம் 100 க்கு பத்துபேர்தான் படித்திருந் தோம். இந்த நிலையை மாற்றி 100க்கு 40 பேருக்கு மேல் படிக்கும் நிலையைக் காமராசர்தான் ஏற்படுத்தினார்.
இன்றைக்குப் பிள்ளைகள் பாஸ் செய்து, என்ஜினீரிங், மெடிகல் கல்லூரிகளில் சேரப் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றதை நாம் காண்கிறோம்.
– (பெரியார் : 18.7.1965)
இது மட்டுமா? இதோ இன்னும் பெரியார் பேசுவதைக் கேளுங்கள். பெருந்தலைவரின் ஆட்சிக் காலம் தமிழர் வாழ்வில் பொற்காலம். அப்படிப்பட்ட காமராசரை பயன் படுத்திக் கொள்வது தமிழர் கடன் என்பதை 18.7.1961 விடுதலை வெளிப்படுத்துகிறது.
தோழர்களே! எனக்கு 82 வயது ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறக்க நேரலாம். உங்களையும் விட பெரிய வனான நான் என் மரண வாக்கு மூலம் போல இதைக் கூறுகிறேன். நாம் யாருக்கும் பயப்படவேண்டியதில்லை.
இன்றைய நமது காமராசர் ஆட்சியில் நாடு அடைந்த முன்னேற்றம் இரண்டாயிரம் மூன்றாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்தில் ஆகட்டும், அடுத்த நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முகலாய மன்னர்கள், அதன் பின்னர் வந்த வெள்ளைக்காரர்கள் ஆகிய இவர்களின் ஆட்சிகளி லாகட்டும் நமது கல்விக்கோ, முன்னேற்றத் துக்கோ வழி செய்யவில்லை!
தோழர்களே! நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உண்மையில் உருப்பட வேண்டுமானால் இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் நம்மை அடையுங்கள்!
தமிழர்கள் – குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற காமராசர் பல்வேறு வகை யிலே பாடுபட்டு ஆட்சியின் மூலம் செயல்படுத்தி உள்ளார். அவற்றிற்கு அடிப்படையாக, மூலகாரணமாக இருந்தவர் அய்யா பெரியாரே! ஓங்கட்டும் காமராசர் புகழ்!
Posted by அசுரன் திராவிடன் at 8:09 AM No comments:
Saturday, July 9, 2011
ஜொள் கூட்டமே! விளையாடாதே! தினமலதுக்கு பதிலடி
தினமலர், துக்ளக், தினமணி உள்ளிட்ட வகையறாக்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சமூக நீதிக்காவலர் வி.பி.சிங், முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்ற பெயர்களைக் கேட்ட மாத்திரத்திலேயே ரத்தக் கொதிப்பு இருநூறைத் தாண்டிவிடும்.
ஆனால் தினமலர் திராவிடர் கழகத் தலைவரை அர்ச்சனை செய்யாவிட்டால் அன்று இரவு தூக்கம் காணாமற்போய்விடும், அவ்வளவு ஆத்திரம்!
ராமசாமி நாயக்கரோடு கதை முடியும் என்று நினைத்து நிலாச்சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தோமே, இந்த ராட்சசன் வீரமணி இருந்து தொலைக்கிறானே! என்ற ஆத்திரம் அனல் பறக்கிறது அவாள் வட்டாரத்தில். இந்த ஒரு வார காலத்துக்குள் இரண்டாவது அர்ச்சனை தினமலரில்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருவனந்தபுரம் பத்மநாபசாமி எனும் கல் முதலாளியின் கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மக்கள் பணம் மக்களுக்கே என்ற அடிப்படையில், அந்தப் பணம் மக்களுக்குத் திருப்பி அளிக்கப்படவேண்டும்.
டவுட் தனபாலு: வருமானம் போயிடும்னு பயந்து, இவங்களோட இனமானத் தலைவர் ஈ.வெ.ரா.வின் புத்தகங்களைக் கூட பொதுவுடைமை ஆக்காது, லொள் முதலாளி பேசுற பேச்சைப் பாருங்க.
(தினலர் 9-7-2011 பக்கம் 8)
கல் முதலாளி என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்னால், அவருக்கு லொள் முதலாளி என்று பட்டம் கொடுக்கிறது தினமலர்.
ஜொள் முதலாளிதானே அவாளின் ஜெகத்குரு!
திராவிட இயக்கம் என்றாலே வல் வல் என்று குரைக்கும் கூட்டம்தானே இது என்று எங்களுக்கு எழுதத் தெரியாதா?
கறுப்புக்கு மறுப்பு என்று எத்தர்கள் எழுதியபோது மறுப்புக்குச் செருப்பு என்று அடி கொடுத்தவர்கள் நாங்கள்! வார்த்தை விளையாட்டு எங்களிடம் வேண்டாம்! எச்சரிக்கை!
திராவிடர் கழகம் வெளியிடும் நூல்கள் வியாபார நோக்கம் கொண்டவையல்ல! திராவிடர் கழகம் வெளியிடும் நூல்கள் அளவுக்கு மலிவு விலையில் கொடுப்பவர் எவர்? என்று சவால் விட்டுக் கேட்கிறோம். சவாலை ஏற்குமா தினமலர் வகையறாக்கள்…?
அரை நிர்வாண நடிகைப் படங்களையும், ஜோதிடக் குப்பைகளையும், மூட முடை நாற்றம் வீசும் ராசி பலன்களையும், அருவருக்கத் தக்க ஆன்மிக இணைப்புகளையும் வெளியிட்டுக் காசாக்கும் பார்ப்பன ஊடகங்களா இலட்சியம் சார்ந்த கழகத்தின் வெளியீடுகளை லாப நோக்குப் பட்டியலில் சேர்ப்பது?
பெரியார் நூல்கள் வெளியீடு என்பது வருமானத்துக்காக அல்ல. தமிழர்களிடம் தன்மானம் ஊட்டுவதற்காக.
பெரியார் படைப்புகளை அட்சரம் பிறழாமல், கால் புள்ளி, அரைப் புள்ளி மாறாமல் வெளியிடுவதாக உத்தரவாதம் கொடுத்தால் அவற்றை நாட்டுடைமையாக்க எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் எத்தனை முறை ஓங்கி அடித்துக் கூறியிருப்பார். செவிட்டுக் காதுகளுக்கு எங்கே கேட்கப்போகிறது?
இறுதி உரையில் ஈரோட்டுச் சிங்கம் கர்ஜித்ததே – நினைவிருக்கிறதா?
பார்ப்பனர்களைக் கண்டால், வாப்பா, தேவடியாள் மகனே! எப்ப வந்தே? என்று கேட்கவேண்டும். ஏண்டா அப்படி கேட்கிறாய்? என்றால், நீ எழுதி வைத்ததடா – என்னைத் தேவடியாள் மகன் என்று! எனவே உன்னைத் தேவடியாள் மகன் என்று கூப்பிடுகிறேன் என்று சொல்ல வேண்டும்! என்ன தப்பு?
என்று பேசினாரே (19-12-1973 – சென்னை தியாகராயநகர்) இன இழிவு ஒழிப்பு ஏந்தல் தந்தை பெரியார்.
நாட்டுடமை ஆக்க வேண்டும் பெரியார் நூல்களை என்று மாரிக் காலத் தவளைகளாக இரைபவர்கள் இந்த உரையை அப்படியே அட்சரம் மாறாமல் அச்சிடுவார்களா? அரசுதான் முன் வருமா?
மற்றவை போன்றதல்ல மண்பொதுத் தந்தை பெரியார் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் – எழுத்தும்!
பல்லாயிரம் ஆண்டுகால இன இழிவைத் தீர்த்துக் கட்ட எரியீட்டியாகப் பாயக் கூடியவை அவை!
அவற்றோடு விளையாடிப் பார்க்க ஆசைப்படக்கூடாது. திரிபுவாதத் திருடர்கள் களவாட இடம் கொடுக்க முடியாது. திரிபுவாதம் செய்ய நாக்கை நீட்டிக் கொண்டிருக்கும் மலைப் பாம்புகளின் தந்திரம் எங்களுக்குத் தெரியும்.
காலைக்கதிர் (தினமலர் குரூப்) வெளியாகும் அதே ஆசிரியர் கடிதங்களை (இது உங்கள் இடம் பகுதியில்) கால்புள்ளி, அரைப்புள்ளி வித்தியாசம் கூட இல்லாமல் அப்படியே வேறு பெயரில் தினமலரில் வெளியிடும் தகடுதத்த திருட்டுக் கூட்டமா, திராவிடர் கழகத்தை விமர்சிப்பது?
வெட்கம்! வெட்கம்!! மகாவெட்கம்!!!
Posted by அசுரன் திராவிடன் at 8:48 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
பார்ப்பனர்களுக்குப்(துக்ளக்)பதிலடி! பிரித்தாளும் நரியே,போற்றி!
பார்ப்பனர்களுக்கு அதிகாரப் பூர்வமற்ற சதிகாரத் தலைவர் இப்பொழுது திருவாளர் சோ ராமசாமி அய்யர்தான். அவருடைய துக்ளக் இதழும் பார்ப்பன சங்கத்தின் அதிகார பூர்வமற்ற வார இதழாக வெளி வந்து கொண்டிருக்கிறது.
தமிழக அந்தணர் வரலாறு என்னும் நூலை எழுதிய கே.சி. இலட்சுமிநாரா யணன் என்ற பார்ப்பனர், தேசத் துரோக அமைப்பு எனும் தலைப்பில் நீதிக்கட்சியையும் திராவிட இயக்கத் தையும், அதன் ஒப்புயர்வற்ற தலைவர் களையும் கொச்சைப்படுத்தி எழுதும் தொடர் ஒன்றை துக்ளக்கில் (6.7.2011) தொடங்கியுள்ளார். எடுத்த எடுப் பிலேயே பார்ப்பனர்களுக்கே உரித்தான பிரித்தாளும் நரித் தந்திரம்!
திராவிட இயக்கத்தைப் பற்றித் தாக்க ஆரம்பித்தால், அண்ணா என்ற பெயரையும், திராவிட என்ற சொல்லை யும் தாங்கியுள்ள அண்ணா தி.மு.வையும் சேர்த்துத் தாக்குவதாக ஆகிவிடுமே -அது கூடாதே, – தங்கள் இனத்தைச் சேர்ந்த ஜெயலலிதா அம்மையாரைக் காப்பாற்ற வேண்டுமே, தூசு ஒன்று அவர் மேனியில் விழுந்துவிடலாமா என்பதில் சர்வ ஜாக்கிரதையாக இருக் கக் கூடியவர்களாயிற்றே! அதற்காக என்ன ஜாலம் தெரியுமா?
எம்.ஜி.ஆர்.நிறுவிய அ.இ.அ.தி.மு.க. வைத் திராவிடக் கட்சிகளில் ஒன்றாகக் கருதுவது சரியல்லவாம்.
ஹிட்லர் ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கொலை செய்தைப் போல் குற்றமற்ற பிராமணர்களைத் துவேஷிப் பது திராவிடக் கட்சிகளின் தலையாய தீய குணாம்சங்களில் ஒன்று. இந்தக் குணம் எம்.ஜி.ஆரிடம் சிறிதுகூடக் கிடையாது.
தனித்திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுவதாக 1963 ஆம் ஆண்டில் அறிவித்த பிறகும் இன்று வரையில் தமிழ்நாட்டில் பிரிவினை இயக்கங் களுக்கு நேரிடையாகவும், மறைமுக மாகவும் ஆதரவு அளித்து வருவது திராவிடக் கட்சிகளின் மற்றொரு குணாம்சம். இந்தக் குணாம்சம் எம்.ஜி.ஆரிடம் காணப்பட்டதில்லை.
இவர்களின் பகுத்தறிவுக்குப் பொருந்தாதவை என்று சொல்லப்படும் இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற மதங்களின் பண்டிகைகளையும், சம்பிர தாயங்களையும் தயக்கம் இல்லாமல் ஏற்றுக் கொண்டு, ஹிந்து சமயத்தின் சடங்குகள், விழாக்கள் போன்றவற்றை மட்டும் இகழ்வது திராவிடக் கட்சிகளின் இன்னொரு தீய குணாம்சம். இதனையும் எம்.ஜி.ஆர். ஒருபோதும் ஏற்றுக் கொண்டவர் அல்லர்.
எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசான ஜெயலலிதாவும், இந்தத் தீய குணங் களில் ஒன்று கூட இல்லாதவர். எனவேதான் அ.இ.அ.தி.மு.க.வை ஒரு திராவிடக் கட்சியாகக் கருதுவது பிழையானது என்று இந்தத் தொடரில் முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன் என்ற பீடி கையுடன் தொடரைத் தொடங்கியுள்ளார்.
இதில் அ.இ.அ.தி.மு.கவை புகழ் கிறாரா? இகழ்கிறாரா? அ.இ.அ.தி.மு.க திராவிடக் கட்சி அல்ல என்று அய்யர்வாள் எழுதுவதை அ.இ.அ.தி.மு.க தலைமை ஏற்றுக் கொள்கிறதா?
ஏற்றுக் கொள்கிறது என்றால் முதலில் அண்ணாவின் பெயரையும், உருவத்தையும், திராவிட என்ற இனச் சுட்டுப் பெயரையும் கட்சியிலிருந்தும், கொடியிலிருந்தும் தூக்கி எறிய வேண்டுமே, செய்வார்களா?
இல்லை – இல்லை. அ.இ.அ.தி.மு.க. அசல் திராவிட இயக்கம்தான்; அண்ணா எங்கள் வழிகாட்டிதான் என்று சொல்லுவார்களேயானால், துக்ளக்கில் வெளி வந்திருக்கும் இந்தத் தொடரை எதிர்த்து முதல் குரல் கொடுத்திருக்க வேண்டும் – அவர்களின் அதிகாரபூர்வ நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் மறுப்பும் தெரிவித்திருக்க வேண்டுமே -_ இதுவரை செய்ய வில்லையே -ஏன்?
அ.இ.அ.தி.மு.க.வில் கொள்கை உள்ள ஒரே ஒரு தோழர் கூட இல்லாதபடி அற்றுப் போய்விட்டனர் என்பதுதான் பரிதாபகரமான பெரும் உண்மை!
சட்டமன்றத்திலேயே தன்னை ஒரு பாப்பாத்தி என்று பிரகடனப்படுத் தியவர் எப்படி திராவிட முத்திரையைக் குத்திக் கொள்ள ஆசைப்படுவார்?
எம்.ஜி.ஆரைப் புகழ்வது போல இகழும் இடக்கரடக்கலையும் காணத் தவறக்கூடாது. தமிழ்நாட்டில் பிரிவினை இயக்கங்களுக்கு நேரடியாகவும், மறைமுக மாகவும் ஆதரவு அளித்து வருவது திராவிடக் கட்சிகளின் மற்றொரு குணாம்சம். இந்தக் குணாம்சமும் எம்.ஜி.ஆரிடம் காணப்பட்டதில்லை என்று பேனா பிடிக்கிறாரே – அது உண்மைதானா?
மாநில சுயாட்சிக்காக இந்தியாவின் இராணுவத்தையும் சந்திக்கத் தயார் என்று சொன்னவர் எம்.ஜி.ஆர். அல்லவா? இதில் நேரிடையாக பிரி வினை வாதம் இருக்கிறதா அல்லது மறைமுகமாகப் பிரிவினை வாதம் கமழ்கிறதா என்பதை திருவாளர் லட்சுமி நாராயண அய்யர்வாளுக்கே விட்டுவிடுவோம். தன் கருத்தை இன்னொருவர் மீது சுமத்துவது என்பது நாலாந்தரமான குணாம்சமாகும்.
பெரும்பாலானவர்கள் தீர்ப்புப்படி மக்களாட்சி அமைகிறது. ஆனாலும் வடபுலம் அளிக்கிற ஒரு தீர்ப்புக்குத் தான் தென்னாடு கட்டுப்பட வேண்டி யிருக்கும் என்று அண்ணா கூறியது உண்மை என்று இப்பொழுது நிரூபிக்கப் பட்டுவிட்டது என்று பாளையங் கோட்டையில் பேசியவரும் இதே எம்.ஜி.ஆர்.தான் (9-_6_-1977).
இதில் நேர்முகமாக பிரிவினை வாடை வீசுகிறதா என்பதை முடிவு செய்வதையும் இந்த அய்யர்வாளுக்கே விட்டுவிடுவோமாக. இதே துக்ளக் இதழை வம்பில் இழுத்துவிடும் ஒரு வேலையை விவரம் தெரியாமல் லட்சுமி நாராயணன் செய்துள்ளார்.
ஹிந்து மதத்தின் சடங்குகள், விழாக்கள் போன்றவற்றை மட்டும் இகழ்வது திராவிடக் கட்சிகளின் இன் னொரு தீய குணாம்சம். இதனையும் எம்.ஜி.ஆர். ஒரு போதும் ஏற்றுக் கொண்டவர் அல்லர் என்று நீட்டி முழங்குகிறாரே _ அதற்கும் ஒரு ஆப்பு!
சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மாண்பு மிகு எம்.ஜி.ஆர். ஒரு சூடு கொடுத்தார் பாருங்கள்.
மருத்துவத்தால் குணமாகாத நோய்களைஅய்யப்பன் கோயில் திருநீறு குணமாக்கிவிடும் என்ற நம்பிக்கையை சிலர் பரப்பி வருகின்றனர். இந்த எண்ணம் வலுப் பெறுமானால், பிறகு மருத்துவமனைகளை இழுத்து மூடிவிட்டு, டாக்டர்களை விபூதி விற்பனையாளர்களாக நியமிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
கடவுள் நம்பிக்கை அறிவியல் துறையில் தலையிட்டு பாமர மக்களைக் கெடுத்துவிடக் கூடாது. படித்தவர்களே இப்படி நடந்து கொள்கிறார்கள் . இப்படி கோவிலுக்குச் செலவழிக்கும் பணத்தை மருத்துவமனைகளுக்குக் கொடுத்துதவினால் எத்தனையோ ஏழை நோயாளிகள் குணம் அடை வார்கள்.
டாக்டர்களின் திறமைக்கு உத்தர வாதம் வேண்டும்; அவர்களின் திற மையைக் கேவலப்படுத்தும் வகையில் திருநீறு குணமாக்கிவிடும் என்று சொல்பவர்களை என்ன சொல்லுவது? என்று பேசினாரே.
இது இந்துமதக் கடவுள் அய்யப் பனைப் பற்றியும், இந்து மதத்தின் திருநீறு குறித்தும் எம்.ஜி.ஆர். கேலி செய்வதாக ஆகாதா? என்ற கேள்வியும் அய்யர்வாளுக்கே அர்ப்பணம்!
இன்றைக்குத் துக்ளக்கில் எம்.ஜி.ஆரைத் தூக்கிப் பிடித்து, திராவிட இயக்கத்திலிருந்து அவரைத் தனிமைப்படுத்தி, இந்து மத சம்பிர தாயங்களை ஏற்றுக் கொண்டவர் என்று ஜிகினா வேலை செய்ய, படாத பாடு படுகிறாரே; இதே துக்ளக் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தெரிவித்த கருத்து குறித்து எவ்வளவு துள்ளு துள்ளியது தெரியுமா? ஒரு முதல்வர் இப்படிப் பேசலாமா? என்று எகிறிக் குதித்ததே. ஒரு படி மேலே போய் (துக்ளக் 1_2_-1979) எம்.ஜி.ஆர். தெரிவித்த கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துக்ளக் சிறப்புக் கட்டுரையும் எழுதியதே!
மக்கள் மறந்தாலும், கருஞ்சட்டைக் காரன் மறக்க மாட்டானே!
குற்றமற்ற பிராமணர்களைத் துவேஷிப்பது திராவிடக் கட்சிகளின் தலையாய தீயகுணங்களில் ஒன்று. இந்தக் குணம் எம்.ஜி.ஆரிடம் சிறிது கூடக் கிடையாது என்றும் கதைக்கிறார்.
பிராமணன் என்று சொல்லுவதே அடுத்தவர்களைத் துவேஷிப்பதுதானே! பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிரா மணன்,காலில் பிறந்தவன் சூத்திரன்! சூத்திரன் என்றால் வேசி மகன் என்பது (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) அடுத்தவர்களை இழிவுபடுத்துவது தானே!
உலகத்தின் எந்த நாட்டிலாவது, எந்த மதத்திலாவது தங்களைத் தவிர மற்றவர்களைப் பார்த்து பிறவியிலேயே வேசி மக்கள் என்று கூறுவதுண்டா? இந்த யோக்கியதை உள்ளவர்கள் குற்றமற்ற பிராமணர்களாம். இந்த இழிவைப் பொறுக்காது எதிர்த்துக் கேட்டால் அதற்குப் பெயர் துவேஷிப்பதாம்.
தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து துவேஷிகள் என்று சொல்லுவார்கள் என்று லாலா லஜபதிராய் சொன் னாரே, அதுதான் நினைவுக்கு வருகிறது.
சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்னும் தன்மான இயக்கப் புயல் மய்யம் கொண்ட பிறகுதானே சூத்திரச்சி வேலைக்கு வந்தாளா? என்று கேட்கும் ஆணவத்தின் முது கெலும்பு முறிக்கப்பட்டது.
இன்றைக்குக் கூட தாழ்த்தப்பட்ட வர்கள் உட்பட இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து ஜாதியினரும் உரிய பயிற்சி பெற்று அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் செய்தால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை பார்ப்பனர்கள் சென்று தடை வாங்குகிறார்கள் என்றால் அவர்கள் உள்ளத்தில் தேக்கி வைத்திருக்கும் அந்தத் துவேஷ நஞ்சுதானே காரணம்?
இந்த வெட்கக்கேட்டில் குற்றமற்ற பிராமணர்கள் என்ற அடைமொழி வேறு. கண்ணற்றவருக்குக் கண்ணாயி ரம் என்று பெயர் வைப்பதில்லையா -_ அதுபோல்தான் இதுவும்.
கடவுளுக்கு மேலே பிராமணர்கள் என்று மார்தட்டும் அவர்களின் லோகக் குருகூட ஒழுக்கவாதியாக இருக்க முடியவில்லையே! கொலைக்குற்றம் – அத்து மீறிய பாலியல் குரூரம் என்ற கொச்சைத் தனத்தை மூட்டை கட்டிக் கொண்டு தோளில் போட்டுக் கொண்டு அல்லவா வெட்கமில்லாமல் திரிகிறார். ஜெயேந்திரர்! இவ்வளவு நடந்துள்ள போதிலும் இன்னும் அவர் சுவாமிகள் தானாம்!
இந்த யோக்கியதை உள்ளவர்களுக் குப் பேனா பிடிப்பு ஒரு கேடா?
சென்னை பாலர் அரங்கில் ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் (28-_6_-1970 ஞாயிறு). நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த எல். ஆறுமுகம் சிங் மகளுக்கும், வீரசைவ குடும்பத்தைச் சேர்ந்த ஏ.கே. ரகுபதிக்கும் ஜாதிமறுப்புத் திருமணம் எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற்றது. பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்.வி.நடராசன் அவர்களும் அவ் விழாவில் கலந்து கொண்டார்.
அப்பொழுது எம்.ஜி.ஆர்.பேசினார்.
இந்த மணவிழா அய்யா முன்னி லையில், அண்ணா வாழ்த்து வழங்கி நடைபெற வேண்டியதாகும். எவ்வளவு தான் சட்டம், கண்டிப்பு வந்தாலும் உள்ளத்தில் மாறுதல் ஏற்பட்டால்தான் அது பயன்படும். தந்தை பெரியார் அவர்கள் இந்த சமுதாய சீர்திருத்தப் பணியை துவக்கிய காலம். பலத்த எதிர்ப்பும், ஏளனமும் மிகுந்த காலம். இன்று அவர்கள் வாழ் நாளிலேயே அவரது கொள்கைளின் வெற்றிகளைக் காணும் பெருமித நிலையில் உள்ளார் கள். சமூகத்தில் ஒரு சிலர் ஆதிக்கம் பெறத்தான் ஜாதி புகுத்தப்பட்டது.
ஆதிக்கக்காரர்கள் எதிர்ப்பை சமா ளித்து இன்று அய்யா வெற்றி பெற்று இருக்கிறார். உள்ளத்தில் மாறுதல் ஏற் படுத்துவது என்பது பெருஞ்சாதனை யாகும். உயர்ஜாதிக்காரர்கள் என்றால் அவர்கள் ஒழுக்கவாதிகள் என்பதல்ல பொருள். வாழ்க்கையை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதே முக்கியம்.
இந்த மணமக்கள் சமுதாய மாறுதலுக்குத் தக்க அடை யாளமாகத் திகழ்கிறார்கள். அய்யா அவர்களது தியாகத்திற்குத் தலை வணங்குவதுதான், மரியாதை செலுத்து வதுதான் இத்தகைய விழாவில் நம் கடமையாகும் என்று பேசியவர் எம்.ஜி.ஆர். இதில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை, கோட் பாடுகளை எந்த அளவு உள்ளத்தில் தாங்கி இருந்தார் என்பது விளங்க வில்லையா?
உயர்ஜாதி ஆதிக்கம்பற்றியும், ஒழுக்கத்திற்கும் உயர் ஜாதிக்கும் சம்பந் தம் இல்லை என்றும் சொல்கிறாரே – அந்த உயர்ஜாதி என்று யாரைக் குறிப்பிடுகிறார். உயர்ஜாதி ஆதிக்கம் என்று அழுத்திச் சொல்லுகிறாரே – இதற்கு என்ன பொருள் என்று முடிவு கட்டுவதையும் திருவாளர் லட்சுமி நாராயண் அய்யர் வாளுக்கே சமர்ப் பணம்!
எம்.ஜி.ஆர். அவர்களை, திராவிட இயக்கத்திலிருந்து பிரித்து, நம்மோடு மோதவிடப் பார்க்கிறது அக்கிரகாரம். அதன் நிலை என்ன? அவர்கள் மனித உருவில் திரியும் நரிகள் என்று இப் பொழுது அம்பலப்பட்டதுதான் மிச்சம்.
கலி.பூங்குன்றன்
விடுதலை ஞாயிறு மலர்
http://viduthalai.in/new/page-1/13406.html
(தொடரும்)
Posted by அசுரன் திராவிடன் at 8:39 AM 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
https://geoloc6.geovisite.com/private/geocounter_iframe_css_64.php?compte=653375703189&anim=1&b=1&ca=990000&cbg=FFFFFF&dn=0&f=Verdana&fc=000000&onl=OnLine&p=_total&s=10&skin=1&tp=Click%20for%20detail&ts=150×170&ttot=Total
weather counter
Popular Posts
- திருஞான சம்பந்தர் அற்புதங்களும் சேக்கிழாரின் பெரிய புராணமும் வரலாறும், உண்மையும் இடறுகிறதுமுனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் சமயக்குரவர்கள் என்று போற்றப்படும் நால்வர் – அப்பர் எனும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தர…
- திருஞானசம்பந்தர் அற்புதங்கள் செய்தது உண்மையா?திருஞானசம்பந்தர் அற்புதங்கள் செய்தது உண்மையா? சேக்கிழார் புகுத்தியவையே! தெய்வப் புலவர் எனப் புகழப்பட்ட சேக்கிழார் சமணர்கள்பால் கொண்ட வெறுப…
- இந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு எம்.சி. ராஜா – உண்மையான வரலாற்றுப் பின்னணிமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்ற பெயர்தான் எம்.சி. ராஜா என்று அறியப்பட்டிர…
- சமூக சீர்திருத்த வரலாற்றில் நாராயணகுருவின் பங்களிப்புஇந்தியாவின் எந்த ஒரு பகுதியில் அது வடக்கில் ஆனாலும் தெற்கில் ஆனாலும் சமூக சீர்திருத்தம், சமூக சீர்திருத்த இயக்கம் ஆகியவை பிறப்பில் உயர்வுற த…
- கருஞ்சட்டைக் கடலே, கை வரிசையைக் காட்ட வருக! வருக!! பட்டுக்கோட்டையாம் பாடி வீடு அழைக்கிறது! அழைக்கிறது!!அஞ்சா நெஞ்சன் அழகிரி பட்டுக்கோட்டை என்றாலே சுயமரியாதை இயக்கத்தின் கோட்டை என்று பொருள். இந்தக் கோட்டையிலிருந்து கிளம்பிய சுயமரியாதை இயக்கத…
- புலவர் – பேராசிரியர் கா. நமச்சிவாயர் (1876-1937)தமிழர்களின் நெஞ்சில் என்றும் நிற்கக்கூடிய மாபெரும் புலவர் – பேராசிரி யர் கா. நமச்சிவாயர் ஆவார். அவருடைய பிறந்தநாள் இந்நாள் (10-02-1876). வ…
- தந்தை பெரியார் பிறந்த நாள் – தமிழினத்தின் தேசியத் திருநாள். அந்நாளில் நம் வீட்டுக் குழந்தை களை உற்சாகப்படுத்தும் வகையில் குடும்பத் தலைவர்கள் பல முயற்சிகளை செய்வது நல்லது.இரு நூல்கள் தந்தை பெரியார் பிறந்த நாள் – தமிழினத்தின் தேசியத் திருநாள். அந்நாளில் நம் வீட்டுக் குழந்தை களை உற்சாகப்படுத்தும் வகையில் குடும…
- பாவேந்தர் செய்த பாவம் என்ன ?பெங்குயின் வெளியீட்டகம் உலகளாவிய அளவிலும், இந்திய அளவிலும் மிக முக்கியப் பங்களிப்பைச் செய்து வருகிறது. அறிவார்ந்த வாசகர் உலகம் அதற்கு உரிய ந…
- துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (5)புளுகுணி சித்தர்களின் புராணம்! நீதிக் கட்சியைப் பற்றி நிதான மின்றித் தூற்றித் திரியும் கும்பலுக்குத் தீர்க்கமான பதில்கள் நிச்சயம் உண்டு. …
- சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரும் – புரட்சிகர மனிதநேயர் எம்.என்.ராயும்(எம்.என்.ராய் 125ஆம் ஆண்டு: பிறந்தநாள் நினைவுகள் – மார்ச் 21) – தொகுப்பு: நீட்சே புரட்சிகர மனிதநேயர் எம்.என்.ராய் அவர்களின் 125ஆவது ஆண்…
My Headlines
குறி சொற்கள்
- 132ஆம் ஆண்டு பிறந்த நாள் (2)
- 2 ஜி அலைகற்றை (1)
- 2ஜி அலைக்கற்றை (3)
- 2ஜி ஸ்பெக்ட்ரம் (4)
- 69 சதவிகித இட ஒதுக்கீடு (1)
- Astrology (1)
- ayuth (1)
- ayutha pooja (1)
- bhramins terrorism (1)
- hindu terrorism (1)
- reservation (1)
- RSS (1)
- thinamalar (1)
- VHP (1)
- அ.இ.அ.தி.மு.க (1)
- அசுரர்கள் – திராவிடர்கள்-ஆரியர்கள்-கலைஞர் (1)
- அசுரன் (1)
- அசோக்சிங்கால் (1)
- அஞ்ச நெஞ்சன் அழகிரி (1)
- அணுஆயுதப் போர் (1)
- அண்ணல் அம்பேத்கர் thiraippadam (1)
- அண்ணா (1)
- அண்ணா பேசுகிறேன் (1)
- அத்வானி (1)
- அம்பேத்கர் புத்த நெறியை தழுவியது ஏன்-கி வீரமணி (1)
- அயோத்தி (3)
- அயோத்தி தீர்ப்பு (3)
- அய்யப்பப் பக்தர் (1)
- அய்யப்பன் (2)
- அரக்கர்கள் (1)
- அரசியல் (1)
- அரசியல் வாதிகள் (1)
- அரசியல் தரகர் (6)
- அர்ச்சகர் பயிற்சி (1)
- அறிஞர் அண்ணா (1)
- அனைத்து சாதியினரும் அர்ச்சகர் (1)
- அஜ்மீர் குண்டுவெடிப்பு (1)
- ஆ. இராசா பேட்டி (1)
- ஆ.இராசா (2)
- ஆ.இராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)
- ஆ.இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை – ஏன் (1)
- ஆ.ராசா (3)
- ஆ.ராசா உரை (1)
- ஆ.ராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)
- ஆ.ராசா விளக்கம் (1)
- ஆசிரியர் கேள்வி பதில்கள் (4)
- ஆதிக்கம் (1)
- ஆத்மா (2)
- ஆயுத பூஜை (1)
- ஆயுதபூசை (2)
- ஆரியம் (2)
- ஆரியர் சூழ்ச்சியே (1)
- ஆரியர் திராவிடர் போராட்டம் (1)
- ஆரியர்கள் (1)
- ஆர் (1)
- ஆர்.எஸ்.எஸின் பொய்ப்பிரச்சாரம் முறியடிப்பு (1)
- ஆர்.எஸ்.எஸ் (6)
- ஆர்.எஸ்.எஸ். (1)
- இங்கர்சால் (1)
- இட ஒதுக்கீடு (1)
- இட ஒதுக்கேட்டு (1)
- இடஒதுக்கீடு (1)
- இடதுசாரி (1)
- இந்திய டுடே (2)
- இந்திய பெண்கள் (1)
- இந்திரன் (1)
- இந்து (1)
- இந்து தீவிரவாதம் (3)
- இந்து நாளிதழ் கட்டுரை (1)
- இந்து பண்டிகைகள் (3)
- இந்து மதம் (2)
- இந்து முன்னணி (2)
- இராமாயணம் பித்தலாட்டம் (1)
- இழிவு (1)
- இளைஞரணி கலந்துரையாடல் (1)
- இன கலவரம் (1)
- உ.வே சாமிநாதய்யர் (1)
- உ.வே.சா (1)
- உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி (1)
- உச்சநீதிமன்றம் கண்டிப்பு (1)
- உடுமலை நாராயணகவி (1)
- உலக மகளிர் தினம் (3)
- உலகக் கோப்பை கிரிக்கெட் (1)
- ஊடகத்துறை அறிஞர்கள் உரை வீச்சு (1)
- ஊழல் (1)
- எடியூரப்பா (2)
- எடைக்கு எடை நாணயம் (1)
- எடைக்கு எடை ரூபாய் நோட்டுகள் (1)
- எம்.என்.ராய் (1)
- ஏ.டி. பன்னீர்செல்வம் (1)
- ஏங்கல்சு (1)
- ஏழுமலையான் (1)
- ஏழுமலையான் சர்ச்சையில் (1)
- ஏழைகள் (1)
- ஐயப்பன் (4)
- ஐன்ஸ்டீன் (1)
- ஒரு பகுத்தறிவுவாதி (1)
- ஒருங்குறி (1)
- ஒழுக்க கேடு (1)
- கடவுளின் ஆலோசனை (1)
- கடவுள் (2)
- கடவுள் விமர்சனம் (1)
- கப்பலோட்டிய தமிழன் (1)
- கம்யுனிஸ்டுகள் (1)
- கருத்துக்களம் (1)
- கர்நாடகம் (1)
- கர்நாடகா (1)
- கலவரம் (1)
- கலாசாரம் (1)
- கலி. பூங்குன்றன் (1)
- கலைஞர் (6)
- கலைஞர் அறிக்கை (1)
- கலைஞர் கடிதம் (1)
- கலைஞர் பேச்சு (1)
- கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (1)
- கல்கி (2)
- கல்கி கேள்வி பதில் (2)
- கல்கிக்கு வந்த எரிச்சல் (2) (1)
- கவிஞர் கண்ணதாசன் (1)
- கவிஞர் வாலி (1)
- கறுப்புச் சட்டை (1)
- கன்னியாஸ்திரி கற்பழிப்பு (3)
- கா. நமச்சிவாயர் (1)
- காதலர் தினம் (1)
- காந்தியார் (1)
- காமராசர் (1)
- காமராசர் பல்கலைக் கழகம் (1)
- காமன் வெல்த் (1)
- கார்ட்டூன் (1)
- கார்த்திகை தீபம் (1)
- கார்த்திகைத் தீபத்தின் யோக்கியதை (1)
- கால்டுவெல் (1)
- காவலர்கள் பரிசுத்த சேனை ஜெபக்குழு (1)
- காவிரி நீர்ப் பிரச்சினை (1)
- கி வீரமணி (1)
- கி. வீரமணி (9)
- கி. வீரமணி 78 வது பிறந்தநாள் (1)
- கி. வீரமணி உரை (3)
- கி.வீரமணி (8)
- கி.வீரமணி அறிக்கை (5)
- கி.வீரமணி உரை (1)
- கி.வீரமணி கண்டனம் (1)
- கி.வீரமணி ஸ்பெக்ட்ரம் அறிக்கை (1)
- கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் (1)
- கிறிஸ்தவம் (1)
- கு.வெ.கி. ஆசான் மறைவு (1)
- குசேலர் (1)
- குடி அரசு (1)
- குழந்தைகள் கடத்தல் (1)
- குஜராத் (4)
- குஜராத் கலவரம் (6)
- குஜராத் படுகொலைகள் (2)
- குஜராத் மதக்கலவரப் படுகொலை (1)
- கெட்ட வார்த்தை சாமியார் (1)
- கேரளா (2)
- கேலி (1)
- கேள்வி பதில்கள் (1)
- கொலை (1)
- கொள்ளை (1)
- கோடிக்கணக்கில் மோசடி (1)
- கோத்ரா தீர்ப்பு (1)
- கோயிலில் கொலைகள் (1)
- கோயில்கள் (1)
- கோவில் இடிப்பு (1)
- கோவில்கள் உச்ச நீதிமன்ற ஆணை (2)
- சங் பரிவார்க் கும்பல். (1)
- சங்கராச்சாரியார் (1)
- சத்துணவு முட்டை (1)
- சந்தனம் (1)
- சபரிமலை (3)
- சபரிமலை மகர சோதி (1)
- சபரிமலை மகர சோதி மர்மங்கள் (2)
- சமஸ்கிரதம் (1)
- சமஸ்கிருத எழுத்துகளை தடுக்க நடவடிக்கை (1)
- சமுக நீதி (1)
- சரத் பொன்சேகா (2)
- சரஸ்வதி பூஜை (1)
- சர் ஏடி பன்னீர்செல்வம் (1)
- சறுக்கல்கள் (1)
- சாதி (1)
- சாய்பாபா (1)
- சிங்காரவேலர் (1)
- சிதம்பரம் நடராசர் (1)
- சித்திரபுத்திரன் (1)
- சிந்தனைச் சிற்பி (1)
- சிறீரங்கம் (1)
- சீரடி பாபா (1)
- சீர்காழி (3)
- சீர்காழி மண்டல மாநாடு (5)
- சு.சாமி (7)
- சுண்டெலிகள் (1)
- சுருட்டு சாமியார் (1)
- சுவாமி சிவானந்த சரஸ்வதி (1)
- செருப்படி (1)
- செவ்வாய் தோஷம் (1)
- சேக்கிழார் (1)
- சோ (1)
- சோ ராமசாமிக்கு பதிலடி (1)
- சோதிடம் (2)
- சோனியா கருத்து (1)
- ஞானசூரியன் (4)
- டார்வின் (1)
- தங்க ரதம் (1)
- தஞ்சை கலந்துரையாடல் (1)
- தந்தை பெரியார் (7)
- தந்தை பெரியார் கவிதை (1)
- தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் (1)
- தமிழ சட்டமன்ற விவாதங்கள் (1)
- தமிழக அரசியல் (1)
- தமிழக அரசு நினைவு சின்னம் அமைப்பு (1)
- தமிழக மீனவர் பிரச்சினை (1)
- தமிழர் (1)
- தமிழர் தலைவர் கி.வீரமணி (1)
- தமிழீழ பிரதமர் (1)
- தமிழீழம் (3)
- தமிழ் மொழியில் கலப்பு (1)
- தமிழ் தொண்டு (1)
- தமிழ்த் தாத்தா (1)
- தமிழ்த் தொண்டு (1)
- தமிழ்நாடு அரசு (1)
- தாம்ப்ராஸ் (1)
- தி.மு.க போராட்டம் (1)
- திக்விஜய்சிங் (1)
- திண்டுக்கல் பொது கூட்டம் (1)
- திமுக பொதுக் குழு தீர்
- மானங்கள் (1)
- திரவிடர் கழக மண்டல மாநாடு அடுத்து சீரங்கம் (1)
- திராவிடம் (1)
- திராவிடர் (3)
- திராவிடர் கழகம் (8)
- திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் (1)
- திராவிடர் – தமிழர் – தந்தை பெரியார் (1)
- திராவிடர் எழுச்சி மாநாடு (2)
- திராவிடர் கழக மண்டல மாநாடு (5)
- திராவிடர் கழக மண்டல மாநாடு தீர்மானம் (2)
- திராவிடர் கழகம் (12)
- திராவிடர் மாணவர் எழுச்சி மாநாடு (1)
- திராவிடர்கள் (1)
- திராவிடர்கள் ஆரியர்கள் (1)
- திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி (1)
- திருஞான சம்பந்தர் (1)
- திருநீறு (1)
- திருப்பதி (1)
- திருப்பதி ஊழல் (1)
- திருப்பதி கோயில் (1)
- திருப்பத்தூர் (1)
- திருப்பத்தூர் திராவிடர் கழக மண்டல மாநாடு (3)
- திருப்பத்தூர் திராவிடர் கழக தீர்மானம் (1)
- திருப்பத்தூர் தீர்மானங்கள் (1)
- திருவரங்கம் (1)
- திருவரங்கம் கோவில் (1)
- திருவரங்கம் திராவிடர் எழுச்சி மாநாடு (1)
- தினமணி (1)
- தினமணி ஆசிரியர் (1)
- தினமணி கட்டுரை (2)
- தினமணி கட்டுரைக்கு பதில் (2)
- தினமலர் (3)
- தினமலர் கார்ட்டூன் (1)
- தீண்டாமை (1)
- தீபாவளி (7)
- தீபாவளி பற்றி தந்தை பெரியார் (1)
- தீர்ப்பு (1)
- துக்ளக் (2)
- துக்ளக் பதிலடி (2)
- துணை வேந்தர் மீனா (1)
- துரை.சந்திரசேகரன் (1)
- துர்வாசர்களும் – மணியன்களும் (1)
- தெகல்கா (8)
- நடைபாதை கோவில்கள் (2)
- நம்பிக்கை (1)
- நரகாசுரன் (1)
- நரகாசுரன் மலர் (1)
- நரேந்திர மோடி (13)
- நவராத்திரி (4)
- நாடாளுமன்றம் முடக்கம் (1)
- நாடு கடந்த அரசு (1)
- நாமம் திருநீறு (2)
- நாராயணகுரு (1)
- நித்யானந்தா (1)
- நினைவு நாள் (1)
- நீதிபதி (1)
- நீதிமன்ற தீர்ப்பு (1)
- நுழைவு தேர்வு (1)
- நுழைவுப் நுழையப் போராட்ட (1)
- ப சிதம்பரம் (1)
- ப.ஜ.க (1)
- பகுத்தறிவு (1)
- பக்தர்கள் சிந்தனைக்கு (1)
- பசுவதை (1)
- பட்டுகோட்டை (1)
- பண்டிகைகள் (1)
- பம்பை (1)
- பழனி முருகன் (1)
- பா.ஜ.க. (1)
- பா.ஜ.க.அருண்ஷோரி (2)
- பாகவதம் (1)
- பாதிரியார் (3)
- பாதிரியார் ராஜரத்தினம் (1)
- பாபர் மசூதி (2)
- பாபர் மசூதி இடிப்பு (2)
- பாரதிதாசன் பல்கலை கழகம் (1)
- பாரதிதாசன் பல்கலைகழகம் (1)
- பார்பனிய ஆதிக்கம் (3)
- பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல் (1)
- பார்ப்பன துணைவேந்தர் மீனாவின் அத்து மீறல் (1)
- பார்ப்பனரல்லாதார் (1)
- பார்ப்பனர் (2)
- பார்ப்பனர்கள் (3)
- பார்ப்பனிய இந்துத்துவா (3)
- பார்ப்பனியம்.பார்பனர் (2)
- பார்ப்பனீயம் (8)
- பார்ப்பான் (2)
- பாலுறவு (1)
- பாஜ.க. (1)
- பி.ஜே.பி. (1)
- பிடல் காஸ்ட்ரோ (1)
- பிரகாஷ் காரத் பேட்டி (1)
- பிரணாப் முகர்ஜி (1)
- பிரபாகரன் (1)
- பிளாரன்ஸ் மேரி (1)
- பிள்ளையார் ஆபாச துண்டறிக்கை (1)
- பிள்ளையார் ஊர்வலம் (1)
- பிள்ளையார் கலவரம் (1)
- பிஜேபி (1)
- பீடி சாமியார் (1)
- பீர் சாமியார் (1)
- புத்தர் விகார் (1)
- புத்தன் (1)
- புராணக் கதை (1)
- புராணங்கள் (2)
- புராணம்.மோசடி (1)
- புலவர் (1)
- பூணூல் (1)
- பூணூல் பாசம் (1)
- பூணூல் ஜாக்கெட் (1)
- பெண்கள் (2)
- பெண்கள் திருமணம் (1)
- பெண்ணியம் (1)
- பெண்ணுரிமை (1)
- பெண்ணுலகம் பெரியார் (1)
- பெரிய புராணம் (1)
- பெரிய புராணம் மாநாடு (1)
- பெரியாரின் அறிவு சார் சொத்துகள். (1)
- பெரியாரின் இலக்கியப் பார்வை (1)
- பெரியாரின் சொத்துகள் (1)
- பெரியாரின் நூல்கள் (1)
- பெரியார் (7)
- பெரியார் உயராய்வு மையம் (1)
- பெரியார் பேருரையாளர் (1)
- பேராசிரியர் (1)
- பொட்டு அம்மான் (1)
- பொய் நம்பிக்கை (1)
- பொறியியல் பட்டதாரிகள் (1)
- போலி ஜாதி சான்றிதழ்கள் (1)
- போலீஸ் சங்கம் (1)
- மகரசோதி (1)
- மகரஜோதி (2)
- மகளிர் முன்னேற்றம் (1)
- மண்டல மாநாடு (1)
- மத கலவரம் (2)
- மதவாதம் (2)
- மதுரை படைத்த மாநாடு (1)
- மதுரையில் எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள் (1)
- மயிலாடன் (4)
- மயில்சாமி அண்ணாதுரை (1)
- மரண தண்டனை (1)
- மருத்துவ கவுன்சில் (1)
- மறுப்பு கட்டுரை (2)
- மறைமலை அடிகள் (1)
- மனுதர்மம் (2)
- மாணவர் நீக்கம் (1)
- மாமா மாமி உரையாடல் (1)
- மார்க்சு (1)
- மின்சாரம் (6)
- முதல் அமைச்சர் கலைஞர் சூளுரை (1)
- முத்தமிழ் அறிஞர் கலைஞர் (1)
- முரசொலி (2)
- முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் (2)
- முஸ்லிம் (1)
- மூடநம்பிக்கை (8)
- மேற்கு வங்கம் (2)
- யஜுர் (1)
- யாகம் (1)
- ரங்கநாதர் ஆலயம் (1)
- ராகிங் (1)
- ராசாவுக்கு மதிய அரசு முழு ஆதரவு (1)
- ராமகோபாலன் (1)
- ராமதாஸ் (2)
- ராமதாஸ் பேட்டி (1)
- ராமன் (2)
- ராமன் கோவில் (1)
- ராஜபக்சே (1)
- ராஜபக்சே வருகை (1)
- ராஜஸ்தான் (1)
- லக்னோ பயணம் (1)
- லிங்கக் கட்டி (1)
- வ.ஊ.சி (1)
- வரதட்சணைக் கொலை (1)
- வரலாற்று திரிபு (1)
- வள்ளலார் (1)
- வாசகர் பராராட்டு (1)
- வாழ்வியல் சிந்தனைகள் (7)
- வி.இ.ப. (1)
- விசுவ ஹிந்து பரிஷத் (1)
- விடுதலை (12)
- விடுதலை ஒற்றை பத்தி (1)
- விடுதலை தலையங்கம் (8)
- விடுதலை நாளிதழ் (1)
- விடுதலை புலிகள் (1)
- விடுதலை வாசகர் (1)
- விடுதலைபுலிகள் (1)
- விடுதலையின் சாதனை துபாய் தமிழரின் திறந்த மடல் (1)
- விபச்சாரம் (1)
- விவாதங்கள் (1)
- வீட்டு மனைப் பட்டாக்கள் (1)
- வீரமணி அறிக்கை (1)
- வீரமணி உரை (2)
- வெங்கடேச பெருமாள் (1)
- வேலூர் மண்டல திராவிடர் கழக மாநாடு (1)
- வைத்தியநாதன் (1)
- ஜாதிக் கணக்கெடுப்பு (1)
- ஜார்ஜ் புஷ் (1)
- ஜார்ஜ் பெர்னாட்சா (1)
- ஜி.யு. போப் (1)
- ஜீவா (1)
- ஜெயலலிதா vs கலைஞர் (1)
- ஜெயலலிதாவிற்கு சில கேள்விகள் (1)
- ஜெயேந்திரர் (1)
- ஜோதிபாசு (1)
- ஸ்பெக்ட்ரம் (5)
- ஸ்ரீரங்கம் (1)
- ஸ்ரீஹரிகோட்டா (1)
Leave a Reply
You must be logged in to post a comment.