அரச சுவடிக்கூடம் சுதந்திரன் பத்திரிகைகளையும் அழித்து விட்டதா?
1947 பொதுத்தேர்தலுக்கு முன்னரே யூன் மாதம் நடேசய்யரை ஆசிரியராகக் கொண்டு சுதந்திரன் பத்திரிகையை தந்தை செல்வா ஆரம்பித்திருக்கிறார். தேர்தல் செப்டம்பரில் நடந்திருக்கிறது. நடேசய்யர் 07.11.1947 இலேயே இறந்து விடுகிறார். ஆகவே அவர் ஆசிரியராக கடமையாற்றியது அந்த ஐந்து மாதங்கள் என்று கணிக்க முடிகிறது.
ஆனால் பிற்காலத்தில் மாதமிருமுறை வெளிவந்த பத்திரிகை எனும்போது சுமார் 98 பத்திரிகைகள் ஆண்டொன்றுக்கு வந்திருக்கின்றன.
நடேசய்யர் தினசரி பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த அந்த ஐந்து மாதங்களையும் சேர்த்து பார்த்தால் அவர் சுமார் 150 நாட்களாக வெளிவந்த பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்திருக்க வேண்டும் என்று கணிக்கலாம்.

இந்தப் பத்திரிகைகள் இன்று இல்லை. இலங்கையின் பிரதான ஆவணக் காப்பகமான தேசிய சுவடிகூடத்திற்கு எனது ஆய்வு உதவியாளரை அனுப்பி எடுக்க முயற்சி செய்த போது அங்கே சரியாக 1947 யூன் தொடக்கம் செப்டம்பர் வரையான சுதந்திரன் இதழ்கள் மாத்திரம் இல்லை என்று கூறிவிட்டார்கள்.

இலங்கையில் அரச நிறுவனங்களில் காணப்படுகிற இனத்துவ பாரபட்சம் காரணமாக தமிழ் வெளியீடுகள் பல பேணப்படுவதில்லை. கூடவே திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன என்கிற சந்தேகம் நிச்சயம் எழுகின்றன.
கொழும்பு சுவடிகள் கூடத் திணைக்களத்திடம் சுதந்திரன் பத்திரிகையின் குறிப்பிட்ட இதழ்கள் இல்லாமல் போனதெப்படி என்கிற வினா எழுகிறது. சரி அங்கே உள்ளவற்றின் பிரதிகள் கொழும்பு மியூசியம் நூலகத்தில் இருக்கும் என்கிற நம்பிக்கையில் அங்கு சென்று கேட்டால். முதலில் இல்லை என்றார்கள். அதெப்படி இங்கேயும் இல்லாமல் போகும் எனக் கேட்டதற்கு திரும்பவும் சென்று பார்த்துவிட்டு வந்து எங்களிடம் தமிழ் ஆவணங்களின் பட்டியல் இல்லை என்று கூறுகிறார்கள்.
ஆக அங்கே இருக்க வாய்ப்புண்டு. ஆனால் அங்குள்ளவர்கள் தமது சேவையை செய்வதைவிட அலட்சியப்படுத்தி எப்போதும் திருப்பி அனுப்பி வைப்பதில் குறியாக இருப்பவர்கள். இல்லை என்று கூறியதன் பின்னர் என்னவென்று மேலும் அழுத்துவது. இதை கேட்பார் இல்லாமல் அங்கே உள்ளவை பூஞ்சணம் பிடித்து இத்துப்போய் ஈற்றில் பாவனைக்கு உதவாதவை என்று அழிக்கும் நிலை உருவாகிறது.
தமிழ்த் தேசியம் பேசும் எந்த ஒருவரும் இதுவரை இந்த சிக்கல்களைப் பற்றி அக்கறை கொண்டதில்லை என்பதை கவனிக்குக.
இனி எங்கே செல்வோம். யார் கேட்பார்…?
odSteporsna42at4allu590u083t71ct32h22062309c0u3458u00hii1u6l ·
Leave a Reply
You must be logged in to post a comment.