வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு

இரு மொழிகள் கலக்கும்போது , எது செல்வாக்கு உடையதாக இருக்கும் எனக் கூறுவது அரிது. இரண்டும் பேச்சு மொழியாக ஒத்த நிலையில் இருப்பின், நெடுங்காலம் வரையில் படிப்படியாகக் கலப்பு நிகழ்ந்தவாறே இருக்கும். எழுத்து வழக்கற்ற பேச்சு மொழியாக ஒன்றும், மற்றொன்று பேச்சு வழக்கற்ற எழுத்து மொழியாகவும், இருப்பின், முன்னது விரைவில் மாறும் புதுமொழியாக உருப்பெறும்.

ஒன்று எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் உடைய மொழியாகவும், மற்றொன்று பேச்சு வழக்கு அற்ற மொழியாகவும் இருப்பின், முன்னது பல சொற்களைக் கடன் வாங்கிக் கொள்ளும். பின்னது ஒரு சில சொற்களையே கடன் வாங்கும். வடமொழியில் தமிழ்ச் சொற்கள் ஒரு சில மட்டும் இருத்தற்கும், தமிழில் வட சொற்கள் பல புகுந்தமைக்கும் காரணம் இதுவே.

இவ்வாறு படிப்படியாக நிகழும் மொழிக்கலப்பு, எழுத்து மொழியில் இடம்பெற நீண்ட காலமாகும். பேச்சு மொழியிலோ விரைவில் இடம் பற்றி வழக்கில் இருக்கும்.

இவ்வாறு பேச்சுமொழி வழக்கில் இருக்கும்போதே, தாய்மொழியில் தோன்றிய சொல்லாக்கத்தின் எதிர்ப்பால் பிறமொழிகள் மறைந்தும் போகும்.

‘ஜனம்’ – மக்கள், ‘ராஜா’ – அரசன், ‘அபேட்சகர்’ – வேட்பாளர், ‘ஓட்டு’ – வாக்கு, ‘ஓட்டர்’ – வாக்காளர், ‘விருக்ஷம்’ – மரம், ‘கேசம்’ – முடி.

மேற்குறிப்பிட்ட சொற்களில் வடமொழிச் சொற்கள், பழைய தமிழ்ச் சொற்களை மீண்டும் பயன்படுத்தியதாலும், புதிய சொல்லாக்கங்களாலும் வழக்கொழிந்து விட்டதை அறியலாம்.

மொழிக்கலப்பு நிகழும் போது மக்களின் நம்பிக்கையின் வழியாகச் சென்று கலக்கும் பிற மொழிச் சொற்கள் நீண்ட காலம் உயிர்வாழ நேரிடுகிறது. இதே போன்று வாணிக வழியில், அறிவியல் வழியில் நுழையும் சொற்களையும் அகற்றுவது ஒரு மொழிக்குக் கடினமாகும். மொழிக் கலப்பு நிகழ்ந்த தமிழ் மொழியிலும், இவ்வாறே எழுத்து வழக்கிலும், பேச்சு வழக்கிலும் பிற மொழிச் சொற்கள் கலக்க நேர்ந்துள்ளது.

இவை எழுத்து வழக்கில் குறைவாக இருப்பினும், பேச்சு வழக்கில் இன்றும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வழங்கப்பட்டு வரும் பிறமொழிச் சொற்களை இவ்வியலில் ஆய்ந்தறியலாம்.

வடமொழி வழக்கு

——————————

வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைச் செய்திகள் பலவற்றையும் தத்தம் தாய்மொழிகளில் எழுதிய சான்றோர்கள், ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகவும், விரிவாகவும் குறிப்பிட வேண்டிய செய்திகள். இந்திய எல்லையில் அனைவருக்கும் பயன்படல் வேண்டுமென்ற கருத்தால் அவற்றை வடமொழியில் வரைந்தனர்.

மேலும் வானியல், சிற்பம் போன்றவற்றின் கலைச்சொற்கள் பலவும் வடமொழியிலேயே கொள்ளப்பட்டுத் தத்தம் மொழிகளுக்கு ஏற்பச் சில திரிபுகளுடன், இந்திய நாட்டில் பன்மொழி பேசும் பல்வேறு பகுதியினரின் தாய்மொழிகளிலும் ஏற்கப்பட்டன. இம்முறையில் வடமொழிச் சொற்கள் பல அப்படியேயும், சிறிது திரிந்தும், தமிழிலும் வழங்கப்பட்டன.

இன்று வழங்கும் விண்மீன்களின் பெயர்களும், மாதங்களின் பெயர்களும், வடமொழியிலிருந்து தமிழொலிக்கேற்பச் சிறிது திரித்தும், திரிக்காமலும் கொள்ளப்பட்டன.

இற்றைக்கு ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகத் திகழும் தொல்காப்பியத்திலும், மாதப் பெயர்களும் விண்மீன்பெயர்களும் ஏற்கப்பட்டன என்று கருதுவாரும் உளர்.

சொல்லமைப்பிலும், சொற்றொடர் அமைவிலும் வடமொழியைப் பின்பற்றிய முறைகளும் உண்டென்றும் சிலர் எழுதினர். இவ்வாறு தொன்று தொட்டே வடமொழி தமிழின் மீது வல்லாண்மை செலுத்திக் கலப்பு நிகழ்த்தும் மொழியாக இருந்து வந்துள்ளது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் தமிழை ஆட்சி மொழியாக ஏற்றிருந்த போதிலும், வடமொழியின் வரவுக்கு வழிவகுத்தனர். வட மொழியின் வழியாகப் புகுத்தப்பட்ட சமயம், சோதிடம் போன்ற நம்பிக்கைகள் மன்னர்களுக்கு மகிழ்வூட்டும் கலைகளாக இருந்தன.

இத்துறைகளில் வல்ல பல வடமொழியாளர்களைத் தமிழ் மன்னர்கள் காத்து, அவர்கள் மொழி தமிழகத்தில் பரவிடவும் வழி வகுத்தனர். ஆழ்வார்கள், நாயன்மார்கள் காலத்தில் நிகழ்ந்த தமிழ்க் காப்புப் போராட்டம் வடமொழிக்கலப்பைத் தடுக்க முயன்றது. இருப்பினும் மணிப்பிரவாள உருவில் வடமொழிக் கலப்பு நிகழ்ந்து கொண்டே இருந்தது.

இந்நூற்றாண்டில் தோன்றிய திராவிட இயக்கம், தமிழ்மொழி, இனம், பண்பாடு, கலை ஆகியவை பிறமொழித் தாக்குதலிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் எனப் பொங்கி எழுந்தது’.

இதன் விளைவாக மேலும் பிறமொழிக் கலப்பு நிலை தடுக்கப்பட்டது. இருப்பினும், அன்றாட வழக்கில் கலந்துவிட்ட வடமொழிச் சொற்கள் கடவுள் நம்பிக்கை வழிவந்தவையாகவும், சோதிடக்கலை வழிவந்தனவாகவும் இருந்தமையால், அவற்றை எளிதில் நீக்க இயலாத நிலை உள்ளது.

இவற்றை நல்லன எனக்கருதி மக்கள் ஏற்றுக் கொண்டதும் ஒரு காரணமாக உள்ளது. மக்கள் ஏற்றுக் கொண்டமைக்கான காரணத்தைப் பேராசிரியர் இரா. இராகவையங்கார் ‘தமிழ்மொழியுள் ஆரியச் சொற்கள் நேரேயும் திரிந்தும் சிதைந்தும் மற்றைத் திசைச் சொற்களினும் மிகுதியாக வழங்கியதற்குக் காரணங்கள் அடுத்துப் பயின்ற திசைத் தொடர்பு மட்டுமல்லாது, அறிவு ஒற்றுமையும், மனக்கோட்பாட்டிற்குப் பெரிதும் ஏற்றது பற்றியும், எம்மொழியிலும் அதன் கண்ணுள்ள நல்லனவற்றையும் கொள்ளும் சிறந்த பெருநோக்கமும் ஆகுமென்று துணிவது தகும்’ எனக் குறிப்பிடுவதைக் கருத்தில் கொள்ளலாம்.

கடவுள், கோயில் தொடர்பாக இன்றும் தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் வடமொழிச் சொற்களைக் காண்போம்.

‘பிரகாரம்’, ‘பார்வதி’, ‘பூஜை’, ‘தீபாராதனை’, ‘புனஸ்காரம்’, ‘அங்கப் பிரதட்சணம்’, ‘புஷ்பம்’, ‘எதேஷ்டம்’, ‘உற்சவம்’, ‘மூலவர்’, ‘பிரபை’, ‘ஞானம்’, ‘நைவேத்தியம்’, ‘பிரசாதம்’, ‘ஈசுவரன்’, ‘பிரதிஷ்டை’, ‘பிரம்மா’, ‘பஞ்சலோகம்’, ‘விஷ்ணு’, ‘விக்ரகம்’, ‘லக்ஷ்மி’, ‘ஆத்மா’, ‘சரஸ்வதி’, ‘விபூதி’, ‘குங்குமம்’, ‘திதி’, ‘கலசம்’, ‘மகோத்ஸவம்’, ‘பஞ்சாமிர்தம்’, ‘கும்பாபிஷேகம்’, ‘சுபம்’, ‘விரதம்’, ‘கும்பம்’, ‘நவக்கிரகம்’, ‘பிரதிமை’, ‘சனீஸ்வரன்’, ‘சாஷ்டாங்கம்’, ‘தீர்த்தம்’, ‘நவலோகம்’, ‘ஜலம்’, ‘அலங்காரம்’, ‘அஷ்டம்’, ‘அர்த்தஜாம பூஜை’, ‘தூபம்’, ‘அந்திம பூஜை’, ‘தூப தீபம்’, ‘தீட்சிதர்’, ‘அர்ச்சகர்’, ‘பாகவதர்’, ‘அர்ச்சனை’, ‘தேவன்’, ‘அஷ்டமி’, ‘நவமி’ என மிகப்பல வடமொழிச் சொற்கள் இன்றும் அன்றாட வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றன.

இவை மக்களின் இறை நம்பிக்கையைக் கால்கோளாகக் கொண்டு புகுத்தப்பட்டமையால், இன்னும் நீங்கா நிலையில் உள்ளன. சோதிடம் என்பது காலக்கணக்காகக் கருதப்பட்டாலும், இதனால் புகுத்தப்பட்ட வடமொழிச் சொற்கள் மிகப்பலவாகும்.

‘ஜோசியம்’, ‘கிரகப்பிரவேசம்’, ‘ராகு’, ‘புத்தி’, ‘ஓரை’, ‘சகுனம்’, ‘சுக்கிரன்’, ‘அமாவாசை’, ‘கிருத்திகை’, ‘ஜென்மநட்சத்திரம்’, ‘பூராடம்’, ‘விருச்சிகம்’, ‘யோகம்’, ‘அபிஷேகம்’, ‘கஷ்டகாலம்’, ‘நட்சத்திரம்’, ‘திசை’, ‘லக்னம்’, ‘நிமித்தம்’, ‘திவசம்’, ‘பாட்டிமை’, ‘பஞ்சாங்கம்’, ‘போகம்’, ‘மகம்’, ‘தனுசு’, ‘சித்தம்’, ‘துலாம்’, ‘பஞ்சமிதிதி’, ‘ஜாதகம்’, ‘கிரகணம்’, ‘கேது’, ‘பலன்’, ‘விவாஹம்’, ‘ராசி’, ‘கேட்டை’, ‘அனுகூலம்’, ‘ஆயில்யம்’, ‘உத்திராடம்’, ‘மீனம்’, ‘துவாதசி’ இவ்வாறு சோதிடத் துறையால் புகுத்தப்பட்ட வடமொழிச் சொற்கள் பலவாகும்.

இவையனைத்தும் மக்களின் சோதிட ஆர்வத்தைக் கால்கோளாகக் கொண்டு தமிழில் நுழைந்தவை.

திருமணத் தொடர்பாக வடசொற்கள் வருமாறு:-

‘கரணம்’, ‘சேவித்தல்’, ‘கங்கணம்’, ‘ஓமம்’, ‘அட்சதை’, ‘அருந்ததி’, ‘ஜானவாசம்’, ‘ஆசீர்வாதம்’, ‘மாங்கல்யம்’, ‘பிரகாரம்’, ‘விவாக சுபமுகூர்த்தம்’.

தமிழ் ஆண்டுகள் என்று பெருவழக்காகச் சொல்லப்படும் அறுபது ஆண்டுகளும், ஆண்டில் பன்னிரு மாதங்களும் வடமொழிச் சொற்களே. கிழமைகளாக வழங்கப்படுபவற்றுள்ளும் பெரும்பான்மையின வடமொழிச் சொற்களே.

அன்றாட வாழ்வில் இவற்றை வழங்காமல் நீக்குவது எளிதானதல்ல. நம்பிக்கை வழியாக மட்டுமின்றி, வடமொழியாளர் தொடர்பால் புகுந்த ஏராளமான சொற்கள் இன்றும் வழக்கில் உள்ளன.

நகர்ப்புறங்களில் ஆங்கிலக் கலப்பு இருந்து வருவதால், வடமொழிக் கலப்புக் குறைகிறது. ஆங்கிலத்தின் வரவால் வடமொழி மறைவதில் தமிழுக்குப் பயன் விளையாது.

பிறமொழிகள் இரண்டும் கலப்பு நிகழ்த்தும் நிலையில்தான் தமிழின் அன்றாட வழக்கு இயங்கி வருகிறது என்பதைக் கருத வேண்டும்.

‘அக்ரகாரம்’, ‘அகடவிகடம்’, ‘அகந்தை’, ‘அகிம்ஸை’, ‘அங்கஹீனம்’, ‘அங்கீகாரம்’, ‘அசந்தர்ப்பம்’, ‘அசாதாரணம்’, ‘அசுரன்’, ‘அசெளக்கியம்’, ‘அட்டகாசம்’, ‘அத்தியாவசியம்’, ‘அதிசயம்’, ‘அதிபர்’, ‘அதோகதி’, ‘அந்திமம்’, ‘நாமம்’, ‘அநியாயம்’, ‘அப்பிராணி’, ‘அபத்தம்’, ‘அபிப்பிராயம்’, ‘அம்சம்’, ‘அமங்கலம்’, ‘அயோக்கியன்’, ‘அரிதாரம்’, ‘அவகாசம்’, ‘அவதாரம்’, ‘அவஸ்தை’, ‘அக்ரமம்’, ‘அகதி’, ‘அகஸ்மாத்து’, ‘அகிலம்’, ‘சேஷ்டை’, ‘அசடு’, ‘அனந்தகோடி’, ‘அசிங்கம்’, ‘அசுத்தம்’, ‘நமஸ்காரம்’, ‘அத்தாட்சி’, ‘தர்மம்’, ‘அதிபதி’, ‘அதிர்ஷ்டம்’, ‘அந்தரங்கம்’, ‘அந்நியன்’, ‘அநாமதேயன்’, ‘அநீதி’, ‘அபகரித்தல்’, ‘அபயம்’, ‘அபாண்டம்’, ‘அபிவிருத்தி’, ‘அம்பிகை’, ‘அமிர்தம்’, ‘அர்த்தபுஷ்டி’, ‘அலங்காரம்’, ‘அவசரம்’, ‘அவதானம்’, ‘அக்கினி’, ‘அக்கினிப் பிரவேசம்’, ‘அகாலம்’, ‘அகோரம்’, ‘வஸ்திரம்’, ‘சந்தர்ப்பம்’, ‘அசம்பாவிதம்’, ‘அஜீரணம்’, ‘செளக்கியம்’, ‘அட்சதை’, ‘அத்தியாயம்’, ‘அதர்மம்’, ‘சதிபதி’, ‘அதிருப்தி’, ‘அந்தஸ்து’, ‘அநாதை’, ‘அபிஷ்டு’, ‘அப்பாவி’, ‘அபசாரம்’, ‘அபராதம்’, ‘அபாயம்’, ‘அபூர்வம்’, ‘அம்புஜம்’, ‘அமோகம்’, ‘அர்த்தம்’, ‘அலட்சியம்’, ‘அவசியம்’, ‘அவலட்சணம்’ எனப்பல வடமொழிச் சொற்கள் அன்றாட வழக்கில் மக்களின் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப வருதலை அறியலாம்.

எனவே, தமிழில் கலந்த பிறமொழிச் சொற்களில் வடமொழியே முதன்முதலில் மிகுதியான சொற்களைக் கலந்தது . வடமொழியோடு நெருங்கிய தொடர்புடையன பிராகிருத மொழிகளாகும்.

தமிழும்,பிராகிருதமும் என்ற கட்டுரையில் ‘அக்கி’, ‘அத்தம்’, ‘இசை’, ‘உவச்சன்’, ‘ஊராண்மை’, ‘ஐயர்’, ‘ஓமாலிகை’, ‘கப்பம்’, ‘கண்ணன்’, ‘கலுழன்’, ‘காமம்’, ‘கோட்டி’, ‘சதுக்கம்’, ‘சிட்டன்’, ‘சுண்ணம்’, ‘தக்கினம்’, ‘தம்பலம்’, ‘தயிர்’, ‘தலைவர்’, ‘தானம்’, ‘திட்டி’, ‘துவை’, ‘தூசு’, ‘தொடி’, ‘நேயம்’, ‘படிமை’, ‘பள்ளி’, ‘பளிங்கு’, ‘பாயிரம்’, ‘பிசைமட்டம்’, ‘மயானம்’, ‘முத்து’, ‘மையம்’, ‘வயிரம்’, ‘விஞ்சை’ முதலிய சொற்களைப் பேராசிரியர் வையாபுரியார் பிராகிருதம் எனப் பட்டியலிட்டுள்ளார்.

வைதிக சமயத்தால் வடசொற்களும், சமண சமயத்தால் பிராகிருதச் சொற்களும், பெளத்த சமயத்தால் பாலி மொழிச் சொற்களும் பல கலந்தன என்றும் கூறினார்.


அருந்தமிழில் கலந்துள்ள வடமொழி / ஆங்கிலச் சொற்கள்

என் அம்மாவின் ஆருயிர் தந்தையார் திரு.மாசிலாமணி பிள்ளையவர்களின் 50-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, அவரைப் பற்றி, என்அப்பா எழுதிய நினைவுக் குறிப்பை என் தாயாரிடம் படித்துக் காண்பித்தேன். அப்போது உடனே என் அம்மா கேட்டார்கள், ‘உனக்கு என் அப்பாவை நினைவிருக்கிறதா?’ என்று. எனக்குத் தாத்தாவை மிக நன்றாக நினைவிருக்கிறது என்று நான் கூறினேன். அவர் எனக்குப் பால் கலந்து தந்த காட்சிகளெல்லாம் என் நினைவில் இன்றும் பதிந்திருக்கிறது என்றேன். அவர் மறையும்போது உனக்கு என்ன வயது என்று என்னிடம் என் அம்மா மீண்டும் கேட்டார்கள். எனக்கு மூன்று வயது என்றேன். மூன்று வயதில் நடைபெற்றது உனக்கு நினைவிருக்கிறதா என்று கேட்டு வியந்தார்கள். 

எங்கள் மூவரின் வளர்ச்சியில் நாள்தவறாமல் கண்ணூன்றிக் கண்டு நெகிழ்ந்த பெறற்கரியவர் என் அன்னையார். என் நினைவுகளின் நீளத்தை நான் எடை போட்டுப் பார்க்க விரும்பினேன். நான் சிறுவனாக இருந்தபோதே விருந்தினர்கள் எங்கள் வீட்டிற்கு வரும்போது என் அண்ணன் கண்ணனுக்கு நிறையத் தின்பண்டங்கள் வாங்கி வந்து தருவார்கள் என்று என் பெற்றோர்கள் சொல்வார்கள். ஆனால் ஒன்றைக்கூட அவன் எடுத்து உண்டதேயில்லை. வைத்த இடத்தில் அப்படியே இருக்கும் என்பார்கள். ஆனால், நான் இரண்டாம் மழலையாகப் பிறந்தபோது, அண்ணனுக்கும் எனக்கும் இரண்டாண்டுகள் இடைவெளி. நான் பிறந்து சில மாதங்கள் கழித்துத் தின்பண்டங்கள் அனைத்தையும் நான் ஆர்வமாக உண்பேன் என்று என் அண்ணன் கூறியதாக என் பெற்றோர்கள் மகிழ்ந்து வியப்பார்கள்.

நான் வளர்ந்த பெசன்ட் ரோடு அழகான இடமாகும். அந்தக் காலத்தில் ‘கிருஷ்ணாயில்’ என்று வண்டியில் மண்ணெண்ணெய் விற்பார்கள். ‘கெரோசின்’ எண்ணெயைத் தான் கிருஷ்ணாயில் என்று சொல்கிறார்கள் என்று ஒருமுறை அப்பா கூறினார். பெசன்ட் ரோட்டில் திரு. நாராயண பிள்ளை, கதையாசிரியர் பாலசுப்பிரமணியம், நகைச்சுவைத்திலகம் டி.எஸ். துரைராஜ், டி.என். சிவதாணு இல்லங்கள் இருந்தன. மேலும், பாலசுப்பிரமணிய பக்தஜனசபை என்ற மண்டபத்தில் பல்வேறு கூட்டங்களில் எங்கள் தந்தை உரையாற்றும்போது பார்வையாளராகக் கலந்து கொண்டதையும் நான் நினைந்து பார்க்கிறேன். எங்கள் பெசன்ட்ரோடு இல்லத்திற்கு வராத பெரியவர்கள் இல்லை. பாவேந்தர் பாரதிதாசன், சிலம்புச் செல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தம்பிதுரை, சட்டமன்ற உறுப்பினர் திரு. துரைமுருகன், முத்தமிழ்க் காவலர், தவத்திரு ஊரனடிகள், புலவர் புலமைப் பித்தன், பல தலைசிறந்த பேச்சாளர்கள், கவிஞர்கள் என்று பட்டியல் நீளும்.

அப்போது நான் பயன்படுத்திய கருப்பு நிறப் பையில், என் வியர்வை படர்ந்து என் கைகளில் கருப்பு நிறம் படிந்ததை நான் பலமுறை கண்டிருக்கிறேன். என் அம்மா என்மேல் தூசி படிய விடமாட்டார்கள். சின்ன அண்ணா என்னை அடிக்கடி துடைத்துவிடுவார். அம்மாவுக்கு சிறுகறை, தூசி எங்கும் பிடிக்காது. அண்ணாநகரிலுள்ள வள்ளியம்மாள் மேனிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும்போது, முதன்முறையாக நான் ஒரு பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு, ‘சித்தார்த்தா மீண்டும் மனக்குழப்பமா’ என்ற வரிகளையே மீண்டும் மீண்டும் சொல்லி, அதற்கு மேல் பேச முடியாமல் திணறி நின்றேன்.

அப்பள்ளியில் ‘பீயுஷ்’ என்ற நண்பர் முத்து முத்தாக எழுதுவார். என்னுடன் இரண்டாம் வகுப்பிலிருந்து தொடர்ந்து படித்து வந்தவர் வெங்கடேஷ் பாபா, அரவிந்து என்பவராவர். இவர்கள் இருவரும் என்னுடன் பன்னிரண்டாவது வரை படித்து வந்தனர். 

என்னுடன் படித்த திரு. அரவிந்து (லால்குடி ஜெயராமன் மாணவர்) அற்புதமாக வயலின் வாசிப்பவராவார். இன்றைக்கு அவரும் அமெரிக்காவில் இருக்கிறார். நண்பர் வெங்கடேஷ் பாபா தனியார் விமான நிறுவனத்தில் பெரிய பதவியில் உள்ளார். இவரும் ஆங்கிலக் கருவியான ‘Band’ வாசிப்பதில் வல்லவராக பல இன்னிசை நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். அவர்களைப் போலவே என்னுடன் 2-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயின்ற ஸ்ரீராம் எங்கள் வீட்டிற்கு அருகிலேயே வளர்ந்தவர். அவருடைய அண்ணன் இராமசாமி, தம்பிகள் இராமநாதன், சங்கர், தங்கைகள் சித்ரா, சுதா போன்றோர் எங்கள் குடும்பத்துடன் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். இவர்கள் படிப்பதற்காகவும், ஐ.ஐ.டி.யில் சேர்வதற்காகவுமே படித்து அமெரிக்காவில் குடியிருக்கப் போகிறார்கள் என்ற நோக்கத்திலேயே அவர்களின் பெற்றோர் வளர்த்தார்கள் என்பதை நாங்கள் அறிவோம். 

இவர்கள் ஆறு பேரும் பின்னர் பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து, பின்னர் ஐ.ஐ.டி-யில் சேர்ந்து படித்து, இன்று அமெரிக்காவில் புகழோடு வாழ்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களின் பெற்றோர்கள் என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். அவர்கள் அப்பா புகழ்பெற்ற ‘டன்லப்’ நிறுவனத்தில் பெரிய பதவியில் இருந்தவர். என்மீது அதிகம் பரிவுகாட்டி நீயொருவன்தான் உன் தந்தையைப் போலத் தமிழ்பேசி, தமிழிலக்கியம் பயின்று மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராகவே உன் அப்பாவைப் போல வருவாய்” என்று சொல்லிச் சொல்லிப் பெருமைப்படுத்துவார். அவர் சொன்னது உண்மையாகவே மாறிவிட்டது. அவர் இன்று அமெரிக்காவில் தன் குடும்பத்தாருடன் பெருவாழ்வு வாழ்வதைக் கண்டு நான் பூரிப்படைகிறேன். என்னுடன் 5-ஆம் வகுப்புவரை பயின்ற திரு. இராஜ்மோகன் வீட்டிலுள்ள Weston TV-யில் வரும் ‘ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு வாரந்தோறும் சென்று வருவேன். 

இந்த பள்ளியின் சிறப்பு இன்றைக்கு எங்கும் சிறந்து இருப்பதால் என்னுடன் பயின்ற திருமதி அமுதா இன்றைக்கு வள்ளியம்மாள் பள்ளி மாணவ-மாணவியர்களையெல்லாம் ஒன்று திரட்டி அவர்களுக்காக ஒருமுறை விருந்து நிகழ்ச்சி நடத்தி என்னை அழைத்ததையும் நான் நினைவுகூர்கிறேன். அண்மையில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் திருவுருவச் சிலைக்கு அரசு சார்பாக மாலை அணிவிக்கும்போது, அப்பள்ளியின் முதல்வர் திருமதி பத்மினி அவர்களை நான் பார்த்து, நான் உங்கள் பள்ளியில் படிக்கும்போது, நீங்கள் எனக்கு நான்கு வயது மூத்தவர்கள் என்று நினைவுப்படுத்தியதை அறிந்து அவர் வியந்தார். 

எப்படி என்னை நினைவிருக்கிறது என்றவுடன், என் வீட்டின் அடுத்த வீட்டில் Indian Fertilizers Limited- நிறுவனத்தில் பணியாற்றிய திரு. சீனிவாசன் அவர்களின் மகள் பிரேமா தங்கள் வகுப்புத்தோழி. அவர்களும், அவர் தம்பி ராம்கியும் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். அவர்கள் இன்னொரு அக்கா சுதா அக்காலத்தில் மருத்துவக் கல்லூரியில் பயின்றதும் நினைவு கூர்ந்து, இன்று பிரேமா மருத்துவராக அமெரிக்காவிலும், ராம்கி, சீனாவிலுள்ள ஃபோர்டு நிறுவனத்தில் பணியாற்றி வருவதையும் குறிப்பிட்டேன். ஆக, வள்ளியம்மாள் பள்ளியில்தான் என்னுடைய தொடக்கக்கல்வி உரம் அமையத்தொடங்கியது என்று நான் நினைத்து  மகிழ்கிறேன்.

———————————————————

தமிழில் கலந்துள்ள வடமொழிச் சொற்களின் பொதுப் பட்டியல் தொ. எண் தமிழ் வடமொழி 

1. இலக்கு – லக்ஷ்ய 

2. உலகம் – லோக 

3. கலை – கலா 

4. கோட்டம் – கோஷ்ட 

5. சாலை – சாலா 

6. தயிர் ததி 

7. திறம் – ஸ்திர 

8. தூண் – தூணம் ஸ்தாணு 

9. படி – பரதி 

10. பதம் – பத 

11. பலம் – பல 

12. பாதை – பாதா 

13. மது – மட்டு மது 

14. மயிர் – ஸ்மஸ்ரு 

15. மாகம் – நாகம் 

16. மாதம் – மாஸம் 

17. மீன் – மீந 

18. வட்டம் – விருத்த 

19. விதை – பீஜ 

20. விந்து – பிந்து 

21. குட்டம் – குஷ்ட 

22. மடி – மிரு 

23. சடலம் – சரீரம் 

24. தாமரை – தாமரஸ 

25. மானம் அனுமானம், உபமானம், சமானம், பிரமாணம்

26. கமுகு – கரமுக 

27. விதை – வருஷ 

28. வித்து – விந்து 

29. வேட்டி – வேஷ்டி 

30. சலம் – ஜலம் 

31. நாழி – நாடி 

32. ஆகாயம் – ஆகாசம் 

33. பூதி – பூழ்தி விபூதி 

34. புடவி – ப்ருத்வீ 

35. மதங்கம் –  மிருதங் 

36. பவளம்  – பிரவாளம் 

37. மெது  – ம்ருது 

38. செவியுறு –  ஸ்ரு 

தமிழில் கலந்துள்ள ஆங்கிச் சொற்களின் பொதுப் பட்டியல்: 

அங்கிள், அட்வெர்டைசர், அட்டாக், அடிஷனல், அண்டர்கிரவுண்டு, அண்டர்வேர் அப்ளாஸ், அபார்ஷன், அம்ப்பயர், அயர்ன் பாக்ஸ், அர்ஜென்டு, அரேஞ்ச்மென்ட், அலர்ஜி, அவுட்சைட், அசிஸ்டெண்ட், அலர்ஜி, அவுட்சைட், அசிஸ்டெண்ட், ஆக்டர், ஆக்ஷன், ஆட்டம்பாம், ஆட்டோகிராப், ஆட்டோமொபைல்ஸ், ஆஃப், ஆப்பரேஷன், ஆடியோசென்ட்டர், ஆம்லெட், ஆப்செட்பிரஸ், ஆர்ட்பிரிண்டர்ஸ், ஆல்ரைட், ஆர்ட்ஸ் காலேஜ், ஆஷ்டிரே, ஆன் பண்ணுதல், இங்க்பாட்டில், இன்சூரன்ஸ், இன்ச்டேப், இன்ஜெக்ஷன், இன்ஜினியர், இன்ஸ்டிடியூட், ஈவினிங், ஈஸி, உல்லன், எக்கோ, எக்ஸ்கியூஸ், எக்ஸ்பர்ட், எஞ்சின், எடிட்டர், எம்.எல்.ஏ., எம்பிராய்டரி, எம்ப்ளாய்மெண்ட் எக்சேன்ஜ், எம்போரியம், எம்.பி., எமெர்ஜென்சி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக் – ட்ரெயின், எலாஸ்டிக், எலெக்ஷன், எவர்சில்வர், என்.ஜி.ஓ., என்.சி.சி, எனாமல், எஸ்டிமேட், எஸ்டேட், ஏர்கண்டிஷண்டு, ஏர்லைன், ஏரியா, ஏஜென்ட், ஐ.ஏ.எஸ்., ஐகோர்ட், ஐட்டம், ஐடியா, ஐரோடு, ஐ.ஜி, ஐஸ், ஐஸ்கிரீம், ஒய்ப், ஒயர், ஒரிஜினல், ஓ.கே, ஓல்டேஜ், ஓவர் ஆயிலிங், ஓவர்டேக், ஓவர்லுக், க்யூ, க்ராக், க்ராப், க்ராஸ், க்ரீம், கிரீஸ், க்ரைண்டர், க்லாஸ், க்ளிப், க்ளீன், க்ளைமாக்ஸ், கசின், கட்டிங்பிளேயர், கட்பீஸ், கண்டிஷன், கம் (பிசின்), கம்ப்ளெய்ண்ட், கம்பவுண்டர், கம்யூனிஸ்ட், கமெண்ட்டரி, கர்ச்சிப், கரண்ட், கலர், கலெக்டர், கவர்னர், கண்ட்ரோல், கன்ஸ்யூமர், கஸ்டம்ஸ், காட்டன், காம்பவுண்டு, கார், காலண்டர், காலிஃப்ளவர், கான்ட்ராக்டர், கான்வென்ட், காஸ்ட்லி, கிக், கிரிக்கெட், கிலோகிராம், கிலோமீட்டர், கீ, குருடாயில், குவார்ட்டர்ஸ், கூல்ட்ரிங்க்ஸ், கூலிங்கிளாஸ், கேக், கேன்ட்டின், கேமிரா, கேரம்போர்டு, கேஸ், கைடு, கொக்கோ, சப்ளை, சம்திங், சர்க்கஸ், சர்ட், சர்வேயர், சலூன், சவுண்டு, சாக்லேட், சார், சாலரி, சான்ஸ், சிக்னல். சிகரெட், சிட்பண்ட், சில்க், சிலிண்டர், சீசன், சீல், சீன், சூட்கேஸ், சூப்பர் மார்க்கெட், செக், செட்டில்மெண்டு, செயின், செஸ்ட், செஸ், சைடு பிசினஸ், சோபா, ட்யூப்லைட், ட்ரம், ட்ரா, ட்ராபிக், ட்ராமா, ட்ரிம், ட்ரை, டம்ளர், டவல், டாக்ஸி, டாப், டாய்லெட், டார்ச், டயல், டான்ஸ் , டிப்ஸ், டிபன்பாக்ஸ், டிமாண்ட், டிலே, டெய்லர், டெய்லி, டென்னிஸ், டேபிள், டொனேஷன், டோக்கன், டெளட், திக், நம்பர், நர்ஸ், நர்ஸரி, நர்சிங் ஹோம், நார்மல், நியூஸ், நெக்லஸ், நெய்ல்பாலீஷ், ப்ரெசன்ட், ப்ரஷர் குக்கர், பிரெட், ப்ரேயர், ப்ரோக்கர், ப்ளக், ப்ளாட், ப்ளாக், ப்ளாஸ்டிக், ப்ளேடு, கஃப்ராடு, பட்டன், பர்ஸ், பவுஃபுல், பவுடர், பாண்டு, பாத்ரூம், பாய்லர், பார், பால்பென், பாலிடெக்னிக், பாலித்தீன், பாலிஷ், பிசி, பில், பிஸ்கட், பீட்ரூட், பீன்ஸ், பீஸ், பெயிண்ட், பென்ஷன், பேஷண்ட், பைப், போட்டோ, போலீஸ், போன், மக், மஃப்ளர், மாடல், மிக்சர், மிக்ஸி, மிஸ்டர், மூட், மெடிக்கல் ஷாப், மெயின்ரோடு, மெஸ், மேடம், மைக், மொசேயிக், யூ.கே.ஜி, யூஸ்லெஸ், ரசீது, ரப்பர், ரவுடி, ரவுண்டு, ரஷ், ராஸ்கல், ரிசப்ஷன், ரிசர்வேஷன், ரிப்பேர், ரியல் எஸ்டேட், ரிலீஸ், ரூம், ரெடி, ரெஸ்ட், ரேட், ரேஷன், ரைட், ரைஸ்மில், ரோஸ்மில்க், லக், லாட்ஜ், லாரி, லிட்டர், லிப்ஸ்டிக், லிஃப்ட், லிஸ்ட், லூப், லூஸ், லெட்டர், லேட், லைசென்ஸ், லோன், வயரிங், வாட்ச், வாலிபால், விக், விசா, விசில், விட்டமின், வில்லன், வீக், வெராந்தா, வெரிகுட், வேன், வேஸ்ட், ஜாம், ஜாலி, ஜீன்ஸ், ஜூஸ், ஜெயில், ஷட் அப், ஷட்டர், ஷாம்பு, ஷிப்ட், ஷூ, ஷோரூம், ஸ்கிரீன், ஸ்டவ், ஸ்டுடியோ, ஸ்டோர், ஸ்பீக்கர், ஸ்பீடு, ஸ்லிப்பர்ஸ், ஸ்லோ, ஸ்வெட்டர், ஸுப்பர், ஹலோ, ஹால்டிக்கட், ஜெயில்.

https://groups.google.com/g/mintamil/c/V3aH05BBtLU

About VELUPPILLAI 3316 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply