ஒரே இரவில் இடிக்கப்பட்ட 30 ஆண்டுகள் பழமையான கோவில்

ஒரே இரவில் இடிக்கப்பட்ட 30 ஆண்டுகள் பழமையான கோவில்

30 ஆண்டுகள் பழமையான வரலாற்றை கொண்டிருந்த தம்புள்ள நகரிலிருந்து பத்ரகாளி அம்மன் கோவில் 2013 ஆம் ஆண்டு முற்றிலுமாக இடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக பௌத்த பிக்குகள் முறைப்பாடுகள் செய்த நிலையில் ஒரே இரவில் ஆலயம் முழுமையாக இடிக்கப்பட்டது

கோவிலை மூடுவதற்கு முன்னர் சில மதச் சடங்குகள் செய்ய முயற்சித்த ஆலய நிர்வாகம் கால அவகாசம் கேட்ட போதும் அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு ஆலயம் இடிக்கப்பட்டிருந்தது

அதே நாட்டில் உயர் பாதுகாப்பு வலயம் என்கின்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் திருட்டுத்தனமாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரையை சட்டபூர்வமாக முயலுகின்றார்கள்

அதாவது கோட்டாபய ராஜபக்சே அதிகாரத்திலுருந்த போது ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் கட்டப்பட்ட 100 அடி உயரமான தூபி (Stupa) மற்றும் மைத்திரி-ரணில் காலத்தில் ஆளுநராகவிருந்த ரெஜினோல்ட் குரே தலைமையில் கட்டப்பட்ட விகாரை (Vihara) ஆகிய இரு சட்டவிரோத கட்டுமானங்களையும் நியாயம் செய்கின்றார்கள்

ஒரே இரவில் இடிக்கப்பட்ட 30 ஆண்டுகள் பழமையான கோவில் | 30 Year Old Temple Demolished Overnight

குறிப்பாக சிங்கள நிலபரப்புகளில் நிறுவப்பட்டுள்ள ருவன்வெலிசாய (338 அடி), ஜெதவனாராமய (400 அடி) அபயகிரி (246 அடி), மிரிசவெட்டி (197 அடி), தூபாராமய (66 அடி) ஆகிவற்றுக்கு இணையாக தமிழ் நிலப்பரப்பில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு சின்னமாக 100 அடியில் தூபியை நிறுவி உரிமை கோருகின்றார்கள்

இது போதாதென்று தனியாருக்கு சொந்தமான காணிகளில் சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள மேற்படி கட்டுமானங்களுக்கு பௌத்த சாசன அமைச்சு ஊடக நிதி உதவி பெற்று பெற்று இருக்கின்றார்கள்

இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த விகாரை அமைந்துள்ள பகுதியில் 406 சிங்களக் குடும்பங்கள் வசித்ததாகவும் அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களுடைய காணி என்று உரிமை கோருவதை ஏற்க முடியாது என இராணுவத்தினர் நாடாளுமன்ற மேற்பார்வை குழுவில் நியாப்படுத்துகின்றார்கள்

இது போதாதென்று பௌத்த சாசன அமைச்சு அந்த நிலம் முழுமையாக விகாரைக்குரியது என வாதிடுகின்றது ஆனால் நியத்தில் எந்தக் காலத்திலும் அங்கு பௌத்த கட்டுமானங்கள் இருந்தற்குரிய எந்தவித ஆவணங்களும் கிடையாது.

அதே நேரம் அந்த பகுதி தமிழ் மக்களின் நிலம் என உறுதிப்படுத்தி அதற்குரிய ஆதன உறுதிகளை கூட திரு கஜேந்திரகுமார் பாராளமன்றத்தில் முன்வைத்து இருக்கின்றார் இந்த நிலையில் தற்போது தமிழ் ஆளுநர் திரு வேதநாயகன் ஊடாக சட்டவிரோத ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக முயலுகின்றார்கள்

சில வாரங்களுக்கு முன் சட்டபூர்வமற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு இருப்பதாக அறிவித்த திரு வேதநாயகன் தற்போது சட்டவிரோத விகாரையை நியாயம் செய்கின்றார் தனது அதிகாரத்தை தக்க வைக்க பௌத்த சிங்கள அதிகாரத்திற்கு துணை போகின்றார்

சட்டவிரோதமான முறையில் ஒரு மதில் காட்டினாலே அகற்ற அப்பாவி பொது சனம் மீது சட்டங்களை ஏவி விடும் இவர்கள் சட்டவிரோத விகாரையை எப்படி நியாயப்படுத்துகின்றார்கள் என தெரியவில்லை

சட்டவிரோத கட்டுமானங்களை நியாயப்படுத்தி ஒருபோதும் இன நல்லிணக்கத்தையோ மாற்றத்தையோ ஏற்படுத்த முடியாது அதே நேரம் சட்டவிரோத விகாரையை ஏற்றுக்கொண்டால் தையிட்டியில் மற்றுமொரு சிங்கள குடியேற்றத்தை தவிர்க்க முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்

நாவற்குழியில் நிர்மாணிக்கப்பட்ட சட்டவிரோத விகாரையை தேச வீடமைப்பு அதிகார சபையூடாக சட்டபூர்வமாக்கி அந்த சூழலில் குடியேற்றப்பட்ட சிங்கள குடியேற்றத்தை காணி உரிமம் பெற்று கொடுத்து சட்டபூர்வமாக்கி இருப்பது போல தையிட்டியில் இராணுவம் வாதிடுவது போல சிங்களவர்களை குடியேற்றுவார்கள் அதாவது தையிட்டி ஒரு போதும் முடிவாக இருக்க போவதில்லை தொல்லியல் திணைக்களம் பௌத்த ஆலயங்கள் இருப்பதாக உரிமை கோரும் காங்கேசன்துறை , பலாலி , நயினாதீவு, நாவற்குழி, நெடுந்தீவு, வல்லிபுரம் ஊர்காவத்துறை, வலிகாமம், மட்டுவில், நிலாவரை, சுன்னாகம்,உடுவில், புலோலி கந்தரோடை,உட்பட்ட பகுதிகள் தோறும் நிறுவ முயற்சிக்கும் பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கான ஆரம்பமாக தையிட்டி இருக்கும்.

ஒரே இரவில் இடிக்கப்பட்ட 30 ஆண்டுகள் பழமையான கோவில் – ஜே.வி.பி நியூஸ்

About VELUPPILLAI 3397 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply