தமிழரசுக் கட்சியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட வேண்டும்!
திரு திருஞானசோதி
வணக்கம். நா.உ சிறிதரன் விடிந்தால் பொழுது பட்டால் தனக்கு எதிராகக் கட்சிக்குள் சதி நடப்பதாக உளறிக் கொண்டிருக்கிறார். கட்சியில் இருந்து தன்னை வெளியேற்ற சதி நடப்பதாகவும் குறைபடுகிறார். அவருக்கு எதிராக எந்தச் சதியும் நடைபெறவில்லை.
சனாதிபதி தேர்தலில் இதஅக நீண்ட கருத்தாடலுக்குப் பிறகு – ஒன்றுக்கு நான்குமுறை கூடிப் பேசிய பிறகு – சனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிப்பது என இதஅக இன் மத்திய குழுவில் – ஏறக்குறைய ஒரு மனதாக – தீர்மானிக்கப்பட்டது.
அந்தத் தீர்மானம் சுமந்திரன் எடுத்த தீர்மானம் அல்ல. கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானம். ஆனால் கட்சி எடுத்த தீர்மானத்துக்கு – தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்டு வென்ற – சிறிதரன் எந்த வெட்கமோ துக்கமோ இன்றிக் கட்டுப்பட மறுத்தார். இதஅக வரலாற்றுத் தவறு செய்து விட்டதாக கொக்கரித்தார். சரி. அது வரலாற்றுத் தவறாகவே இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் கட்சி ஒரு முடிவு எடுத்த பின்னர் அதற்குக் கட்டுப்படுவதுதான் கண்ணியம். கடமை. நாகரிகம். கட்சிக்கு சவால் விடுவது நாகரிகம் அல்ல.
1981 இல் அன்றைய ஜேஆர் ஜெயவர்த்தன அரசு கொண்டு வந்த மாவட்ட சபை சட்டத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த சி.கதிரவேற்பிள்ளை தீவிரமாக எதிர்த்தார். மேடைகளில் பேசினார். ஆனால் அந்தச் சட்டத்தை ஆதரிப்பது என இதஅக இன் மத்தியகுழு முடிவு எடுத்த பின்னர் அந்தச் சட்டத்தை ஆதரித்து அதே கதிரவேற்பிள்ளை தீவிரமாக மேடைளில் பேசினார். அதற்குப் பெயர்தான் கட்சிக் கட்டுப்பாடு. ஆனால் சிறிதரனின் நிலைமை என்ன?
இதஅக எடுத்த முடிவு வரலாற்றுத் தவறு என்று சொன்னதோடு நில்லாமல் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தேர்தலில் வெற்றிபெற வாழ்த்தினார். நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ் பொது வேட்பாளருக்கு கூட்டம் போட்டு – ஆதரவு தெரிவித்து – பேசினார். அதனை ஊடக முதலாளி கந்தையா பாஸ்கரனின் கட்டுப்பாட்டில் உள்ள ஐபிசி நிறுவனம் வெளியிட்டு அற்ப மகிழ்ச்சியடைந்தது.
இதஅக ஆதிரத்த சஜித் பிரேமதாசா வட கிழக்கில் உள்ள 6 தேர்தல் மாவட்டங்களிலும் 676,861 (43.09) அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

அதே சமயம் சிறிதரன் ஆதரித்த தமிழ் பொது வேட்பாளர் படுதோல்வி அடைந்தார்.

சிறிதரனின் சொந்தத் தொகுதியான கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் பொது வேட்பாளரைவிட சஜித் பிரேமதாசா அதிக வாக்குகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
சஜித் பிரேமதாசா – 30,571 (47.33)
அரியநேத்திரன் – 20, 348 (31.51)
தமிழ் பொது வேட்பாளர் அரிய நேத்திரனின் சொந்த மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் 4 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.


அதாவது மட்டக்களப்பு தேர்தல் மாவட்ட மக்கள் (தமிழ் வாக்காளர் 75 விழுக்காடு) அரியநேத்திரனை முற்றாக நிராகரித்துள்ளார்கள். மொத்தம் 36,905 (11.58) வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.. அரியநேத்திரனின் தோல்வியில் சிறிதரனுக்கும் பங்குண்டு.
சிறிதரன் இன்றல்ல. எப்போதுமே தனக்கு இரண்டு கொம்பு முளைத்து இருப்பதாக நினைத்துக் கொண்டு கட்சிக் கொள்கைக்கு மாறாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டு வருகிறார். “எனது தலைவர் பிரபாகரன், எனது அரசியல் வழிகாட்டி மோடி” எனப் பேசிவருகிறார். இதஅக இன் தலைவர் இரா.சம்பந்தன். கல்லுப்போல இருக்க பிரபாகரன் எப்படி சிறிதரனுக்கு தலைவராக இருக்க முடியும்? தேசியத் தலைவர் பிரபாகரன் வரலாற்றில் இடம்பிடித்த தலைவர். அதில் மாறுபட்ட கருத்து இல்லை. தமிழ்மக்களுக்கு எதிராக கட்டவுழ்க்கப்பட்ட இன, மத ஒடுக்குமுறைக்கு எதிராக 30 ஆண்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடியவர். ஆனால் இதஅக இல் இருக்கும் ஒருவர் -அதே கட்சியின் தலைவரை ஒதுக்கிவிட்டு – பிரபாகரன்தான் தனது தலைவர் – என்று எப்படிச் சொல்ல முடியும்?
உண்மையைச் சொன்னால் சிறிதரன் தேர்தல் மழைக்கு இதஅக இல் ஒதுங்கியவர். இபிஆர்எல்எவ் இன் தலைமை அலுவலகத்தில்தான் முதலில் வேட்பு மனுக் கேட்டுத் தவம் இருந்தவர். அது கிடைக்காத பட்சத்தில்தான் இதஅக இல் வேட்பு மனு கேட்டவர். 2024 சனவரியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்ற சிறிதரன் நேரே திருக்கோணேச்சுவரம் சென்று அங்கு வீற்றிருக்கும் சிவனை வழிபட்டார். நல்ல காரியம்.
ஆனால் திருகோணமலை நகரப் பகுதியில் – பக்கத்தி்ல் – உள்ள இதஅக இன் நிறுவனர் தந்தை செல்வநாயகம் அவர்களின் நினைவிடம் சென்று மரியாதை செய்யவில்லை. கேட்டால் தந்தை செல்வநாயகம் அவர்களின் நினைவிடம் இருப்பது தனக்குத் தெரியாது எனச் சொன்னார். தந்தை செல்வநாயகம் மீது அவர் வைத்திருக்கும் “பக்தி”க்கு இது நல்ல எடுத்துக்காட்டு.
சிறிதரன் வாய்க்கு வந்தபடி எல்லாம் கதைக்கக் கூடாது. கட்சிக்கு சவால் விடக் கூடாது. கட்சியாவது, கட்டுப்பாடாவது – மத்தியகுழு எடுத்த முடிவு வராற்றுத் தவறானது – எனச் சண்டித்தனம் செய்யக் கூடாது. கட்சிக் கட்டுப்பாட்டை கொஞ்சமும் மதிக்க மறுத்து விட்டு கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முன்வந்தால் அது தனக்கு எதிராக சுமந்திரன் மேற்கொள்ளும் சதி என்று சதிராட்டம் போடக் கூடாது. உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். இது நாலாவது நியூட்டன் விதி.
நக்கீரன்
——————————————————————————————————————-
நா.உ சிறிதரன் விடிந்தால் பொழுது பட்டால் தனக்கு எதிராகக் கட்சிக்குள் சதி நடப்பதாக உளறிக் கொண்டிருக்கிறார். கட்சியில் இருந்து தன்னை வெளியேற்ற சதி நடப்பதாகவும் குறைபடுகிறார்.
அவருக்கு எதிராக எந்தச் சதியும் நடைபெறவில்லை. சனாதிபதி தேர்தலில் இதஅக நீண்ட கருத்தாடலுக்குப் பிறகு – ஒன்றுக்கு நான்குமுறை கூடிப் பேசிய பிறகு – சனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிப்பது என இதஅக இன் மத்திய குழுவில் – ஏறக்குறைய ஒரு மனதாக – தீர்மானிக்கப்பட்டது.
அந்தத் தீர்மானம் சுமந்திரன் எடுத்த தீர்மானம் அல்ல. கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானம். ஆனால் கட்சி எடுத்த தீர்மானத்துக்கு – தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்டு வென்ற – சிறிதரன் எந்த வெட்கமோ துக்கமோ இன்றிக் கட்டுப்பட மறுத்தார். இதஅக வரலாற்றுத் தவறு செய்து விட்டதாக கொக்கரித்தார்.
சரி. அது வரலாற்றுத் தவறாகவே இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் கட்சி ஒரு முடிவு எடுத்த பின்னர் அதற்குக் கட்டுப்படுவதுதான் கண்ணியம். கடமை. நாகரிகம். கட்சிக்கு சவால் விடுவது நாகரிகம் அல்ல.
1981 இல் அன்றைய ஜேஆர் ஜெயவர்த்தன அரசு கொண்டு வந்த மாவட்ட சபை சட்டத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த சி.கதிரவேற்பிள்ளை தீவிரமாக எதிர்த்தார். மேடைகளில் பேசினார். ஆனால் அந்தச் சட்டத்தை ஆதரிப்பது என இதஅக இன் மத்தியகுழு முடிவு எடுத்த பின்னர் அந்தச் சட்டத்தை ஆதரித்து அதே கதிரவேற்பிள்ளை தீவிரமாக மேடைளில் பேசினார். அதற்குப் பெயர்தான் கட்சிக் கட்டுப்பாடு. ஆனால் சிறிதரனின் நிலைமை என்ன?
இதஅக எடுத்த முடிவு வரலாற்றுத் தவறு என்று சொன்னதோடு நில்லாமல் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தேர்தலில் வெற்றிபெற நேரில் சென்று வாழ்த்தினார். நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ் பொது வேட்பாளருக்கு கூட்டம் போட்டு – ஆதரவு தெரிவித்து – பேசினார். அதனை ஊடக முதலாளி கந்தையா பாஸ்கரனின் கட்டுப்பாட்டில் உள்ள ஐபிசி நிறுவனம் வெளியிட்டு அற்ப மகிழ்ச்சியடைந்தது.
சிறிதரன் இன்றல்ல. எப்போதுமே தனக்கு இரண்டு கொம்பு முளைத்து இருப்பதாக நினைத்துக் கொண்டு கட்சிக் கொள்கைக்கு மாறாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டு வருகிறார். “எனது தலைவர் பிரபாகரன், எனது அரசியல் வழிகாட்டி மோடி” எனப் பேசிவருகிறார். இதஅக இன் தலைவர் இரா.சம்பந்தன். கல்லுப்போல இருக்க பிரபாகரன் எப்படி சிறிதரனுக்கு தலைவராக இருக்க முடியும்?
தேசியத் தலைவர் பிரபாகரன் வரலாற்றில் இடம்பிடித்த தலைவர். அதில் மாறுபட்ட கருத்து இல்லை. தமிழ்மக்களுக்கு எதிராக கட்டவுழ்க்கப்பட்ட இன, மத ஒடுக்குமுறைக்கு எதிராக 30 ஆண்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடியவர். ஆனால் இதஅக இல் இருக்கும் ஒருவர் -அதே கட்சியின் தலைவரை ஒதுக்கிவிட்டு – பிரபாகரன்தான் தனது தலைவர் – என்று எப்படிச் சொல்ல முடியும்?
உண்மையைச் சொன்னால் சிறிதரன் தேர்தல் மழைக்கு இதஅக இல் ஒதுங்கியவர். இபிஆர்எல்எவ் இன் தலைமை அலுவலகத்தில்தான் 2010 இல் வேட்பு மனுக் கேட்டுத் தவம் இருந்தவர். அது கிடைக்காத பட்சத்தில்தான் இதஅக இல் வேட்பு மனு கேட்டவர்.
2024 சனவரியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்ற சிறிதரன் நேரே திருக்கோணேச்சுவரம் சென்று அங்கு வீற்றிருக்கும் சிவனை வழிபட்டார். ஆனால் பக்கத்தி்ல் உள்ள இதஅக இன் நிறுவனர் தந்தை செல்வநாயகம் அவர்களின் நினைவிடம் சென்று மரியாதை செய்யவில்லை. கேட்டால் தந்தை செல்வநாயகம் அவர்களின் நினைவிடம் இருப்பது தனக்குத் தெரியாது எனச் சொன்னார். தந்தை செல்வநாயகம் மீது அவர் வைத்திருக்கும் “பக்தி”க்கு இந்த நல்ல எடுத்துக்காட்டு.
சிறிதரன் வாய்க்கு வந்தபடி எல்லாம் கதைக்கக் கூடாது. கட்சிக்கு சவால் விடக் கூடாது. கட்சியாவது, கட்டுப்பாடாவது – மத்தியகுழு எடுத்த முடிவு வராற்றுத் தவறானது – எனச் சண்டித்தனம் செய்யக் கூடாது. கட்சிக் கட்டுப்பாட்டை கொஞ்சமும் மதிக்காது விட்டு விட்டு கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முன்வந்தால் அது தனக்கு எதிராக சுமந்திரன் மேற்கொள்ளும் சதி என்று சதிராட்டம் போடக் கூடாது.
உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். இது நியூட்டனின் நான்காவது விதி.
——————————————————————————————————————-
Leave a Reply
You must be logged in to post a comment.