ஆயிரம் பொன்னாச்சே, ஆயிரம் பொன்னாச்சே சொக்கா!
சிந்து சம வெளிப் புதிரை விடுவிப்பவர்களுக்கு (deciphering Indus Valley script) 1 மில்லியன் அமெரிக்க டொலர் (INR 8.6 கோடி) பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.- செய்தி
முக்கியமான நான்கு பண்டைய நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரிகம் (IVC) இந்தியாவின் தொல்பொருள் திணைக்கள தலைவராக விளங்கிய ஆங்கிலேயரான ஜோன் மார்ஷல் என்பவரால் வெளி உலகுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. அதே நேரம் தமிழ்நாட்டில் கடந்த சில தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த பானையோட்டு எழுத்துருக்களை தமிழ்நாடு தொல்லியல்துறை கவனமாக ஆய்வு செய்ததில், அவற்றில் 42 அடிப்படைக் குறியீடுகளும் அவற்றின் வேறுபாடுகளும் கண்டறியப்பட்டு அவற்றினைச் சிந்துவெளிக் குறியீடுகளோடு ஒப்பிட்டதில் 60% ஆன கீறல்களும் 90 % ஆன அடையாளங்களும் சிந்துவெளியில் கிடைத்தவற்றுடன் ஒத்துப் போகின்றன என்று கண்டறிந்துள்ளது.

கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சிந்து சமவெளி புதிரை விடுவிக்க
பல ஆய்வாளர்கள் பலவிதமாக முயற்சித்துக்கொண்டிருந்தாலும் பாரத் ராவ் என்னும் ஒரு கணினி பொறியியலாளர் தனது ஆய்வில் இவ்வெழுத்துக்கள் வேதகாலத்திற்கு பிந்திய சமஸ்கிருத எழுத்துக்களின் ஆரம்ப வடிவம் என்று நிறுவியுள்ளார் (edited). இவருடைய இவ்வாய்வு கடந்த சில வருடங்களாக பேசப்பட்டாலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவர் அந்த 100 பக்க கட்டுரையை ஒரு விஞ்ஞான சஞ்சிகையில் பிரசுரித்துள்ளார். Cryptogram என்னும் இரகசிய குறியீட்டு முறையை விடுவிக்க உபயோகிக்கும் உபாயத்தை இவர் இவ்வாய்வுக்கு பயன்படுத்தியுள்ளார்.
இது தான் வேதகால சமஸ்கிருதத்திற்கும் சங்க கால தமிழிற்கும் மூலமான எழுத்துருவாக இருக்கலாம். இதை தமிழ் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
இவரின் சில காணொளிகளையும், அவரின் 100 பக்க ஆய்வுக்கட்டுரையையும் பின்னூட்டத்தில் தந்துள்ளேன்.
“A cryptanalytic decipherment of the Indus script” By Yajnadevam https://drive.google.com/…/140l…/view…
Leave a Reply
You must be logged in to post a comment.