நாலடியார் பாடல் வரிகள் மற்றும் விளக்கம்!
by Sathya Priya
May 17, 2024
18. நல்லினம் சேர்தல்
19. பெருமை
20. தாளாண்மை
நட்பியல்
21. சுற்றம் தழால்
22. நட்பாராய்தல்
23. நட்பிற் பிழை பொறுத்தல்
24. கூடா நட்பு
இன்பவியல்
25. அறிவுடைமை
26. அறிவின்மை
27. நன்றியில் செல்வம்
துன்பியல்
28. ஈயாமை
29. இன்மை
30. மானம்
31. இரவச்சம்
பொதுவியல்
32. அவையறிதல்
33. புல்லறிவாண்மை
34. பேதைமை
35. கீழ்மை
36. கயமை
பன்னெறியியல்
37. பன்னெறி
காமத்துப்பால்
இன்ப துன்ப வியல்
38. பொது மகளிர்
இன்ப வியல்
39. கற்புடை மகளிர்
40. காம நுதலியல்
நாலடியார் – 1. செல்வம் நிலையாமை
கடவுள் வாழ்த்து
வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை – யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.
வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்கா¢து; அதுபோலவே, பிறப்பு இறப்பு கியவற்றின் இயல்புகளை அறிதலும் அரிதாம். இ·து உண்மையாதலால், பாதம் பூமியில் படியாத (பூ மேல் நடந்த) அருகக் கடவுளை, ‘எமது மனத்திலே நினைத்தவை நிறைவேற வேண்டும்’ என்று பக்தியுடன் தரையில் தலை பொருந்துமாறு தாழ்ந்து பணிந்து தொழுவோமாக! (வானவில் இன்னவாறு தோன்றும் என்பதனை யாரும் அறியார். அதுபோலவே வாழ்க்கையில் துன்பங்கள் இன்னவாறு தோன்றும் என்பதனையும் யாராலும் அறிய இயலாது. இந்த உடம்பு எப்போது அழியும் என்பதும் அறிதற்கு அரிது. யின் அழிவு உறுதி. அப்படி அது அழிவதற்குள் நல்ல செயல்கள் கைகூடும்படி கடவுளைத் தொழுவோம் என்பது கருத்து)
நாலடியார் பாடல் 1
அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் – வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று. 1
விளக்கம்:
ஆறு வகைச் சுவை உணவை அன்புடன் மனைவி உண்பிக்க, ஒரு கவளமே கொண்டு, மற்றவற்றை நீக்கியுண்ட செல்வர்களும் வறியராகி, வேறோர் இடம் போய், எளிய கூழ் உணவை இரந்து உண்பர். ஆதலால் செல்வம் நிலையானது என்று கருதத்தக்கதன்று.
நாலடியார் பாடல் 2
துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும். 2
விளக்கம்:
குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ்செல்வம் உண்டான காலம் தொடங்கி, எருமைக் கடாக்களைப் பூட்டி உழவு செய்து பெற்ற அப்பொருளைப் பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யாரிடத்தும் நிலையாக நிற்காமல் வண்டிச் சக்கரம்போல் (மேல்கீழாகவும், கீழ் மேலாகவும்) மாறிவரும்.
நாலடியார் பாடல் 3
யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் – ஏனை
வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள. 3
விளக்கம்:
யானையின் பிடா¢யிலே அமர்ந்து எல்லாரும் காணுமாறு குடைநிழலில் படைகளுக்கெல்லாம் தலைவராகச் சென்ற அரசர்களும், தீவினை கெடுப்பதனால், முன்னிருந்த நிலையினின்றும் வேறுபட்டு, தம் மனைவியையும் பகைவர் கவர்ந்துகொண்டு போக, வறுமையில் வீழ்வர். (நல்வினை போய், தீவினை வருமானால் அரசரும் தாழ்வடைவர். எனவே, செல்வம் உள்ளபோதே அறம் செய்க என்பதாம்.)
நாலடியார் பாடல் 4
நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று. 4
விளக்கம்:
நிலைபெற்றன நிலைபெற்றன என்று நினைக்கப்பட்ட பொருள்கள் நிலைத்திராது அழியும் என்று உணர்ந்து உங்களால் செய்யக்கூடிய அறங்களைச் செய்ய நினைத்தால் விரைந்து செய்க! (ஏனெனில்) வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டேயிருக்கின்றன. எமன் கோபித்து வந்துகொண்டே யிருக்கிறான்.
நாலடியார் பாடல் 5
என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா – முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
கொடுத்தாறு செல்லும் சுரம். 5
விளக்கம்:
ஏதாகிலும் ஒரு பொருள் தமது கையில் சேரப் பெற்றால், முதுமைக் காலத்தில் பயன்படும் என்று அதனைப் பிடித்து வைத்திராமல் அப்பொருள் அழிவதற்கு முன்பே அறம் செய்தவர்கள் தனது தொழிலில் தவறாத கொடிய எமன், பாசக் கயிற்றால் கட்டியிழுத்துச் செல்லும் பாலை வழியினின்றும், தப்பிச் செல்வர். (அறம் செய்பவர் நரகம் புகார்; துறக்கம் எய்துவர் என்பது கருத்து.)
நாலடியார் பாடல் 6
இழைத்தநாள் எல்லை இகவா; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; – ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர், வழங்குமின் நாளைத்
தழீஇம்தழீஇம் தண்ணம் படும். 6
விளக்கம்:
ஆயுட் காலத்தின் எல்லையைக் கடந்து எமனிடமிருந்து தப்பிக் குதித்து ஓடிப் பிழைத்தவர் இல்லை! பெரும் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவர்களே! அதைப் பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்! நாளைக்கே (விரைவில்) உங்களது பிணப்பறை ‘தழீம் தழீம்’ என்னும் ஓசையுடன் எழும்
நாலடியார் பாடல் 7
தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்; – ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்
பிறந்தும் பிறவாதார் இல். 7
விளக்கம்:
எமன், ஒளி மிக்க சூரியனை, ‘நாழி’ என்னும் அளவு கருவியாகக் கொண்டு, உமது வாழ்நாள்தோறும் அளந்து ஆயுள் இறுதியில் உயிரை உண்ணும்! ஆதலால் மிகுதியாக அறம் செய்து உயிர்களிடத்தில் அருளுடையவராக ஆகுங்கள்! அப்படி காதவர் மக்களாகப் பிறந்தும் பிறவாதவரே வர்!
நாலடியார் பாடல் 8
செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் – எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும். 8
விளக்கம்:
நாம் செல்வம் உடையயோம்!’ என்ற கர்வம் கொண்டு மறுமையைப் பற்றி எண்ணாத சிற்றறிவினா¢ன் பெரும் செல்வம், இரவில் கருமையான மேகம் வாய் திறப்பதால் உண்டான மின்னலைப் போலத் தோன்றி, இருந்த இடம் தொ¢யாமல் அழிந்துவிடும்
நாலடியார் பாடல் 9
உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் – கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆ
இழந்தான்என் றெண்ணப் படும். 9
விளக்கம்:
ஒருவன் தான் உண்ணாதவனாய், மதிப்பை நிலை நிறுத்தாதவனாய், மிக்க புகழுக்குரிய செயல்களைச் செய்யாதவனாய், நெருங்கிய உறவினா¢ன் துன்பங்களைக் களையாதவனாய், இரப்பார்க்குக் கொடாதவனாய், வீணாகப் பொருளைக் காத்திருப்பானாயின், ஐயகோ! அவன் அந்தப் பொருளை இழந்து விட்டான் என்றே கருதப்படுவான்! (செல்வம் நிலையில்லாதது. ஆதலின் இருக்கும்போதே அதனை நன்கு பயன்படுத்தாவிடின் அந்தப் பொருள் இழந்த பொருளாகக் கருதப்படும்.)
நாலடியார் பாடல் 10
உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் – கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி. 10
விளக்கம்:
வானளாவிய மலைகளையுடைய நாட்டுக்குத் தலைவனே! உடுக்காமலும் உண்ணாமலும், உடம்பு நலிவுற்ற போதும் கெடாத நல்லறம் செய்யாராகி இரவலர்க்குக் கொடாது பொருளைச் சேர்ப்பவர், அதனை இழப்பர். பல மலா¢னின்றும் கொண்டு வந்து சேர்த்து வைக்கும் தேனை இழக்கும் தேனீயானது இதற்குச் சான்றாகும்.
நாலடியார் பாடல்கள் மற்றும் விளக்கம் PDF |
நாலடியார் (14) கல்வி
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம்
அறத்துப்பால் – இல்லறவியல்
14. கல்வி
செய்யுள் – 01
“குஞ்சி அழகும் கொடுந் தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகும் அல்ல – நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு”
விளக்கம்
தலை மயிரை சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானை கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்மையான அழகல்ல மனதளவில் உண்மையாக நடந்து கொளகிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்க்கையைதரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம்.
செய்யுள் – 02
“இம்மை பயக்குமால் ஈயக் குறைவு இன்றால்
தம்மை விளக்குமால் தாம் உளராக் கேடு இன்றால்
எம்மை உலகத்து யாம் காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து”
விளக்கம்
கல்வி இவ்வுலக இன்பத்தை தரும். பிறருக்கு தருவதால் குறையாது புகழை எங்கும் பரவச் செய்யும் உயிரோடு இருக்கும் வரை அழியாது ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியை போல அறியாமையை போக்கும் மருந்து யாம் கண்டதில்லை.
செய்யுள் – 03
“களர் நிலத்து பிறந்த உப்பினை சான்றோர்
விளை நிலத்து நெல்லின் விழுமியதாக கொள்வர்
கடை நிலத்தோர் ஆயினும் கற்று அறிந்தோரைத்
தலை நிலத்து வைக்கப்படும்”
விளக்கம்
களர் நிலத்தில் உப்பை சான்றோர் நல்ல நஞ்சை நிலத்தில் விளைந்த நெல்லைவிட மேன்மையாக கருதுவர். அதுபோல கீழ்க்குடியிற் பிறந்தவர்கள் ஆனாலும் கற்றறிந்தவராயின் அவர்களை மேலான குடியினும் உயர்ந்த இடத்தில் வைத்து மதித்தல் வேண்டும்.
செய்யுள் – 04
“வைப்புழிக் கோட்படா வாய்த்து ஈயின் கேடு இல்லை
மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்
எச்சம் என ஒருவன் மக்கட்கு செய்வன
விச்சை மற்ற அல்ல பிற”
விளக்கம்
வைத்த இடத்திலிருந்து பிறரால் கவர்ந்து கொள்ள முடியாது நமக்கு கிடைத்து பிறருக்கு கொடுத்தால் அழிவதில்லை. மேலான படை வலிமையுடைய மன்னர் சினந்தாலும் கவர்ந்து கொள்ள முடியாது. ஆதலால் ஒருவன் தன் மக்கட்கு ‘செல்வம்’ எனச் சேர்த்து வைக்க தக்கது கல்வியே; பிற அல்ல!
செய்யுள் – 05
“கல்வி கரை இல் கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர் ஒழியப்
பால் உண் குருகின் தெரிந்து”
விளக்கம்
கல்விகள் முடிவில்லாதன; ஆனால் கற்பவருடைய வாழ்நாட்கள் சில! சற்று பொறுமையாக நினைத்து பார்த்தால் அந்த சில நாட்களிலும் பிணிகள் பலவாக இருக்கின்றன. ஆதலால் நீரை நீக்கி பாலைப் பருகும் அன்னப் பறவைப் போல அறிவுடையார் நூலின் தன்மை அறிந்து நல்ல நூல்களையே கற்பர்.
செய்யுள் – 06
“தோணி இயக்குவான் தொல்லை வருணத்து
காணின் கடைப்பட்டாள் என்று இகழார் – காணாய்
அவன் துணையா? அது போயற்றே நூல் கற்ற
மகன் துணையா நல்ல கொளல்”
விளக்கம்
படகு செலுத்துபவனை பழமையான சாதிகளில் கீழ்சாதியைச் சார்ந்தவன் என இகலமாட்டார்கள் மேலோர். அப்படகு ஓட்டுபவனின் துணை கொண்டு ஆற்றைக் கடப்பது போலாகும், நல்ல சாத்திரங்களை கற்ற கீழ்மகனின் துணை கொண்டு நூல் பொருள்களை கற்றல்.
செய்யுள் – 07
“நவல் அருந் தொல் கேள்வி தன்மை உடையார்
இகல் இலர் எஃகு உடையார் தம்முள் தழீஇ
நகலின் இனிது ஆயின் காண்பாம் அசல் வானத்து
உம்பர் உறைவார் பதி”
விளக்கம்
குற்றமற்ற பழமையான நூற்கேள்வி உடையவராய், பகைமை இல்லாதவராய், கூர்மையான அறிவுள்ளவராய் விளங்கும் கற்றோர் குழுவில் சேர்ந்து அளவளாவி மகிழ்வதைவிட இன்பம் உடையதாயின், அகன்ற வானத்தின் மேல் தேவர்கள் வாழும் திருநகரை காண முயல்வோம். மற்றோருடன் சேர்ந்து பெறும் இன்பத்தை விட துறக்க இன்பம் சிறந்ததன்று.
செய்யுள் – 08
“கனை கடல் தண் சேர்ப்ப கற்று அறிந்தார் கேண்மை
நுனியின் கரும்பு தின்றற்றே – நுனி நீக்கி
தூரின் நின்றன்ன தகைத்துஅரோ பண்பு இலர்
ஈரம் இலாளர் தொடர்பு”
விளக்கம்
ஒலிக்கும் கடலினது குளிர்ச்சி பொருந்திய துறையையுடைய வேந்தனே! கற்றறிந்தவரின் நட்பு, நுனியிலிருந்து கரும்பை தின்பது போலாம். அதன் அடிப்பகுதியிலிருந்து தின்பது போலாம் நற்பண்பும் அன்பும் இல்லாதார் நட்பு.
செய்யுள் – 09
“கல்லாரே ஆயினும் கற்றாரை சேர்ந்து ஒழுகின்
அறிவு நாளும் தலைப்படுவர் தொல் சிறப்பின்
ஒள் நிறப் பாதிரிப்பூ சேர்ந்தலால் புத்தோடு
தண்ணீர்க்கு தான் பயந்தாங்கு”
விளக்கம்
பழமையான சிறப்பினையுடைய அழகிய பாதிரி பூவை சேர்ந்திருப்பதால் புதிய மண்பானையானது தன்னிடத்தில் உள்ள தண்ணீருக்கு தான் நறுமணத்தைக் கொடுத்து, அத்தண்ணீரை நறுமணம் உள்ளதாக்கும். அதுபோல, நடந்தால் நல்லறிவு நாளும் உண்டாகப் பெறுவர்.
செய்யுள் – 10
“அலகு சால் கற்பின் அறிவன் நூல் கல்லாது
உலக நூல் ஓதுவது எல்லாம் – கலகல
கூஉம் துணைஅல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒம் துணை அறிவார் இல்”
விளக்கம்
எல்லையற்ற கல்விகளுக்குள்ளே மெய்ஞான நூல்களை கற்காமல் விட்டுவிட்டு, வெறும் உலக அறிவை மட்டும் தரும் நூல்களை கற்ப்பதெல்லாம் ‘கலகல’ என்னும் வீணான சலசலப்பேயாகும். இத்தகைய இவ்வுலக அறிய நூல்களை கொண்டு பிறவியாகிய தடுமாற்றத்தை, துன்பத்தை போக்கும் வழியை அறிபவர் எங்கும் இல்லை.
Leave a Reply
You must be logged in to post a comment.