சங்க இலக்கியத்தில் மாட்டிறைச்சியும் ஆட்டிறைச்சியும் பற்றி

சங்கப்பாடல்களில் இறைச்சி உண்ணும் வழக்கம் தமிழகத்தில் பரவலாக இருந்ததாக தெரிகிறது. பலவகை மிருகங்கள் பன்றி, மான், ஆடு உட்பட மக்களால் உண்ணபட்டுள்ளன .அவ்வையார் போன்ற தமிழ்புலவர்கள் புலால் உணவு உண்டுள்ளதை சங்கபாடல்கள் சுட்டுகின்றன.

புலவர்களுக்கு மன்னர்கள் புலால் உனவை வயிராற உண்ணகொடுத்துள்லார்கள். அவ்வைக்கு அதியமான் புலால் உணவளித்தார். கோப்பெருநற்கிள்ளி புலவர்களுக்கு சுட்ட மான்கறியை வயிராற பரிமாறினார்

இழுதினன்ன வானினக் கொழுங்குறை
அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி (புறநானூறு 150)

புலால் உணவை பிராமணர்களும் உண்டார்கள் என ஒரு சங்கபாடல் கூறுகிறது

கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் – தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு.

இறைச்சிகளில் சுவையுள்ள இறைச்சியான உடும்பின்கறியை அதன் உயர்வைப்பொருட்டு அதை நாய் கவ்வியிருந்தாலும் அதைப்பொருட்படுத்தாது பார்ப்பனரும் உடும்பு உண்பார்கள் என்கிறது இப்பாடல்

அதுபோக சங்ககால தமிழகத்தில் யாகங்கள், வேள்விகள் நடந்தன. வேள்விகளில் பசுவைப்பலியிடுதலும், அப்பசுவின் இறைச்சியை யாகங்கள் நடத்தும் பிராமனர்கள் உண்பது மரபு. சங்க இலக்கியங்களில் அப்படி அவர்கள் உண்டார்கள் எனக்குறிப்பு இல்லை. ஆனால் வேள்விகளை நடத்தும் மரபு அதுவே. பசுவை வேள்விகளில் பலியிடம் நின்றது எக்காலம், சங்ககாலம் என்பது எக்காலம் என்பது போன்ற ஆராய்ச்சிகளில் பலனில்லை. 

பாணர், மழவர் போன்றோர் பீஃப் உண்டதை காட்டும் பாடல்களைக்கண்டோம். அது தவிர்த்து ஏறுதழுவுதலில் இறங்கின மாடுகளும் கொல்லபட்டு அவற்றின் தோல் முரசடிக்க பயன்பட்டதை புறநானூறு சுட்டிகாட்டுகிறது

மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்
அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து,
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க,
ஆர்அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர,
நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து,
அருகுகை .. .. .. .. .. .. மன்ற
குருதியொடு துயல்வரும் மார்பின்
முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே. (288)

ஆக பண்டைய தமிழகத்தில் புலால் உணவு பிரதான உனவாக இருந்தது, புலவர்கள், மன்னர்களும், பிராமணர்கள், பாணர்கள், மழவர்கள், பொதுமக்கள் என அனைவரும் விரும்பி உன்ட உணவாக புலால் இருந்தது. பசுவின் இறைச்சியும் யாகங்களிலும், பொதுவாக (ஆனால் அரிதாக) உண்னப்பட்டது. தெய்வங்களுக்கு மழவர்களால் பசு பலியிடபட்டது. முரசடிக்க, தோலுக்கு என பசுக்கள் கொல்லபட்டுகொண்டுதான் இருந்தன. அப்பசுக்களின் இறைச்சியை பாணர்கள் உண்பதும் வழக்கம்.இறைச்சி உண்ட புலவர்கள், மன்னர்கள், பார்ப்பனர்கள் தீன்டதகாதவர்களாக எப்படி கருதப் பட்டிருக்க முடியும்? பொதுவான சமூகமே இறைச்சியை விரும்பி உண்டது. ஆக இறைச்சி அன்று தீன்டாமையை தீர்மானிக்கவில்லை.

புலவர்களுக்கு மன்னர்கள் புலால் உனவை வயிராற உண்ணகொடுத்துள்லார்கள். அவ்வைக்கு அதியமான் புலால் உணவளித்தார். கோப்பெருநற்கிள்ளி புலவர்களுக்கு சுட்ட மான்கறியை வயிராற பரிமாறினார்

இழுதினன்ன வானினக் கொழுங்குறை
அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி (புறநானூறு 150)
புலால் உணவை பிராமணர்களும் உண்டார்கள் என ஒரு சங்கபாடல் கூறுகிறது
கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் – தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு.

இறைச்சிகளில் சுவையுள்ள இறைச்சியான உடும்பின்கறியை அதன் உயர்வைப்பொருட்டு அதை நாய்கவ்வியிருந்தாலும் அதைப்பொருட்படுத்தாது பார்ப்பனரும் உடும்பு உண்பார்கள் என்கிறது இப்பாடல்

அதுபோக சங்ககால தமிழகத்தில் யாகங்கள், வேள்விகள் நடந்தன.

ஏறுதழுவுதலில் இறங்கின மாடுகளும் கொல்லபட்டு அவற்றின் தோல் முரசடிக்க பயன்பட்டதை புறநானூறு சுட்டிகாட்டுகிறது

மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்
அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து,
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க,
ஆர்அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர,
நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து,
அருகுகை .. .. .. .. .. .. மன்ற
குருதியொடு துயல்வரும் மார்பின்
முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே. (288)

ஆக பண்டைய தமிழகத்தில் புலால் உணவு பிரதான உனவாக இருந்தது, புலவர்கள், மன்னர்களும், பிராமணர்கள், பாணர்கள், மழவர்கள், பொதுமக்கள் என அனைவரும் விரும்பி உன்ட உணவாக புலால் இருந்தது.

என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ,

காடு என்றா நாடு என்று ஆங்கு
நீர்-ஏழின இடம் முட்டாது
நீர் நாண நெய் வழங்கியும்
எண் நாணப் பலவேட்டும்
மண் நாணப் புகழ் பரப்பியும்…புறநானூறு (384: 15)

தமிழ்பல்கலைகழக விரிவிருரை

காட்டுள் எழுவகைப்பட்டபசுவானும் நாட்டுள் எழுவகைப்பட்ட பசுவானும் முட்டாதுநீர் நாணும் பரிசு நெய்யை வழங்கியும் எண்ணிறப்பப்பலவேள்விகளை வேட்டும் மண்பொறாமற் புகழைப் பரப்பியும்அவ்வாறு பெறுதற்கரிய விளக்கமுற்ற வேள்விமுடிபாகியபெரிய காலத்து விருந்தினரைப் பொருந்திய நினதுதிருந்திய மேம்பட்ட நிலைமையை எந்நாளும் காண்பேமாக,யாங்கள்

அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த
தீயொடு விளங்கும் நாடன் (புறம் 397:20-21)

வேதங்களில் கூறப்படும் வேள்விகளில் மூன்றுவகை தீக்கள் உண்டு (ஆகவனீயம், காருகபத்தியம், தட்சினாக்கினி). மூவேந்தரும் கூடியிருப்பதை கண்டு மகிழ்ந்த அவ்வையார் அவர்களை அந்த மூன்று வேள்வித்தீக்கு ஒப்பிட்டுப் பாடுகிறார்

ஒன்றுபுரிந்தடங்கிய விருபிறப்பாளர்
முத்தீப்புரையக் காண்டக விருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர் (புறம்: 367: 12-14)

வயவாள் எறிந்து வில்லின் நீக்கிப்
பயநிரை தழீஇய கடுங்கண் 1மழவர்
அம்புசேட் படுத்து வன்புலத் துய்த்தெனத்
தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்

5.    கொழுப்பா எறிந்து குருதி துஉய்ப்
புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறைக்
களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து
அரலை வெண்காழ் ஆலியில் தாஅம்
காடுமிக நெடிய என்னார் கோடியர்

தமிழ் பல்கலைகழக உரைதெய்வம் சேர்ந்த பரு அறை வேம்பின் – தெய்வம் தங்கிய பரிய அரையினையுடைய வேப்ப மரத்தடியில், கொழுப்பு ஆ எறிந்து – கொழுப்பினையுடைய பசுவினைத் தடிந்து, குருதி துஉய் – உதிரத்தைத் தூவிப் பலியிட்டு, புலவுப் புழுக்கு உண்ட – அதன் புலாலைப் புழுக்கி உண்ட இடமாய்.

தமிழ்நாட்டில் ஐந்திணைகளுக்கும் ஐவகைப்பிரிவில் அழைக்கப்பட்ட மக்கள் வாழ்ந்ததையும், தொழில் அடிப்படையில் அமைந்த பிரிவுகளில் ஏற்ற தாழ்வு இருந்ததில்லை என்பதையும் பாணர்கள் என்று சாதி அடிப்படையிலும் விறலியர் என்று விள்ம்புநிலைப் பெண்டிராகவும் அழைக்கப்படாத நிலையில் சூத்திரர்கள் என்று இல்லாத ஒரு பிரிவை வலியுறுத்தி புலையர் என்பவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற கோணத்தில் பார்ப்பது காமாலைக் கண்ணோடு பார்ப்பவனுக்கு எல்லாம் மஞ்சளாகத் தெரிவதுபோல் தெரியும்.

பாணர்கள் என்போர் பேரரசர் குறுநில மன்னர்களுடன் அனுக்காமக இருந்து அவர்களின் விருந்தோம்பலில் கள்ளும் இறைச்சியும் உண்பது தமிழர்களின் உயர் பண்பான விருந்தோம்பலின் வெளிப்பாடு.  இந்நிலையில் பாணர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று எடைபோடுவது நகைமுரண்
இசைக்கருவிகளுக்கான தோல் மட்டுமன்றி இறந்த மாடுகளின் தோலை எடுத்து வணிகம் செய்வதும் ஒரு வாழ்வியல் மரபு.  அந்த மரபின் அடிப்படையில் தோலை எடுத்துப் பதனிட்டுப் பயன்படுத்த ஏற்றுக்கொண்ட வாழ்வு தாழ்வானது என்று பழந்தமிழர்கள் கருதவில்லை.

புலையர்கள் என்ற பிரிவு தமிழகத்தில் தொழில் அடிப்படையில் அமைந்த பிரிவு.  பானர்கள் என்போர் தங்களின் கல்வி மற்றும் கவித்திறனால் அரசர்களால் அரசவையில் போற்றப்பட்டவர்கள்.  இதில் புலையர்கள் என்பவர் தீண்டத்தகாதவர் என்று மொழிவது இட்டுக்கட்டுவதன்றோ.

சங்க கால மக்கள் மாட்டிறைச்சி உண்டதைப் பற்றிய மற்றுமொரு செய்தி. அவ்வளவுதான்.

ஒரு காளையை அடித்து ஊர்முழுக்கக் கூடிக் கூட்டாஞ்சோறாக்கி உண்ட கதையைப் பெரும்பாணாற்றுப்படை விவரிக்கிறது.

வாள் குடியில் பிறந்த ஒரு மறவர் குடியிருப்பில், பகைவன் நாட்டு மன்னனின் ஆநிரை கவர்ந்து, அவற்றில் வலிமையான ஒரு காளையை மன்றத்தில் அடித்துத் துண்டாக்கி கூட்டுணவு ஆக்கி உண்ட செய்தி இது.

யானை தாக்கினும் அரவு மேல் செலினும்

135 நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும்
      சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை     
     வலிக் கூட்டுணவின் வாள் குடிப் பிறந்த        
     புலிப் போத்து அன்ன புல் அணல் காளை
     செல்நாய் அன்ன கரு வில் சுற்றமொடு

140   கேளா மன்னர் கடி புலம் புக்கு
      நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி
      இல் அடு கள் இன் தோப்பி பருகி
      மல்லல் மன்றத்து மத விடை கெண்டி
      மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப

145   சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ
      பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை

இதன் பொருள்:

யானை (தன்னைத்)தாக்க வந்தாலும், பாம்பு (தன்)மேல் (ஊர்ந்து)சென்றாலும், நீல நிற மேகத்தில் வலிய உருமேறு இடித்தாலும்,                          135

சூல்கொண்ட மகளும் (அவற்றிற்கு அஞ்சிப்)பின்வாங்காத மறத்தைப் பூண்ட வாழ்க்கையினையும்,(தமது)வலிமையால் கொண்ட கூட்டாஞ்சோற்றை உடைய, வாள்(தொழிலே செய்யும்) குடியில் பிறந்த,புலியின் போத்தை ஒத்த, குறுந்தாடியினையுடைய (அந்நிலத்துத்)தலைவன்,

வேட்டை நாயைப் போன்ற கொடிய வில்லையுடைய காவலாளருடன்,(தன் சொல்)கேளாத மன்னருடைய காவலமைந்த நிலத்தே சென்று,            140

விடியற்காலத்து (அவர்கள்)பசுக்களைப் பற்றிக் கொணர்ந்து, (அவற்றைக்)கள்ளுக்கு விலையாகப் போக்கி,(தமது)இல்லில் சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு,வளப்பத்தினையுடைய மன்றில் வலியையுடைய ஏற்றை அறுத்துத் தின்ற தோலை)மடித்துப் போர்த்த வாயையுடைய மத்தளம் (தங்களுக்கு)நடுவில் முழங்க,
வில்லுப்பயின்ற வலியையுடைய இடத்தோளை எடுத்து வலப்பக்கத்திலே வளைத்து,    145
பகலில் மகிழ்ச்சியுடனே ஆடுகின்ற தூங்காத குடியிருப்பினையுடைய

இது மட்டுமல்ல, அன்றைய மக்கள் துருவை என்ற செம்மறியாடு, மான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, வீட்டில் வளர்த்த பன்றி, உடும்பு, மனை வாழ் கோழி, நண்டு, இறால், ஆமை, வாளைமீன், விரால் மீன் ஆகியவற்றின் இறைச்சியையும் விரும்பி உண்டார்கள். அரசன் தந்த உணவில் சோற்றைத் தொட்டுக்கொண்டு, இறைச்சியாக எடுத்தெடுத்துத் தின்று பல்லே மழுங்கிப்போய்விட்டதாகப் பாணன் ஒருவன் கூறுகிறான்.

About editor 3244 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply