புதிய அரசியல் யாப்பு வரைபு- அதில் என்னதான் இருக்கிறது?
இலங்கையின் 30 வருட யுத்தத்திற்கு காரணமாக இருக்கின்ற ஒரு முக்கியமான விடயம் எது என்ற கேள்விக்கு, ‘இலங்கையின் அரசியல் யாப்பு’ என்கின்றதான பதிலை வழங்குகின்ற புத்திஜீவிகள் நிறையப்பேர் இருக்கின்றார்கள்.
ஆம். 1978ம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனாவினால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பே இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகின்றது.
இந்த அரசியல் யாப்பில் 19 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோதும், ஜே.ஆர் ஜெயவர்த்தன உருவாக்கிய 78ம் ஆண்டு அரசியல் யாப்பு இதுவரை நடைமுறையில் இருந்து, இலங்கையே தீப்பற்றி எரியக் காரணமாக இருந்துவருகின்றது
1994ல் சந்திரிக்கா முன்மொழிந்த தீர்வுப்பொதி பல புதிய வரப்பிரசாத்தை சுமந்துவந்ததாகக் கூறப்பட்ட போதிலும், பல காரணங்களால் இந்த தீர்வுப்பொதி இலங்கை மக்கள் வாழ்வில் வரம்தராமலேயே போனது யாவரும் அறிந்ததே.
இப்போது இலங்கை அரசியலில் புதிய அரசியல் யாப்பு ‘வரைவு’ முன்மொழியப்பட்டு வருகின்றது.
அந்த அரசியல் யாப்பு ஊரிளுள்ள தடைகளையெல்லாம் தாண்டி மக்களை வந்து சேருமா என்பதைக் கடந்து, அந்த அரசியல் யாப்பிற்கான முன்மொழிவில் என்னதான் உள்ளது என்று பார்ப்பது, அவசியமாகின்றது.
புதிதாக பிரேரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள்
1. ஏக்கிய இராச்சிய / ஒருமித்த நாடு. பிரிக்க முடியாத ஒரு நாடு, மத்திய அரசிற்கும் மாகாண அரசிற்கும் அதிகாரங்கள்.
2 சிங்களமும் தமிழும் ஆட்சி மொழி, ஆங்கிலம் இணைப்பு மொழி
3.பெளத்தத்திற்கு முதன்மை அதேவேளை மற்ற சமயத்திற்கும் சம முக்கியத்துவம்.
4. சனாதிபதி தெரிவிற்காக ஒரு தேர்தல் இல்லை . நாடாளுமன்றம் மற்றும் மேலவையால் ஜனாதிபதி நியமிக்கப்படுவார். அவரிடமே பாதுகாப்பு அமைச்சு இருக்கும்.
5. மத்திய சட்ட மன்றமானது நாடாளுமன்றத்தையும் மேலவையையும் கொண்டிருக்கும்.
6. பாராளுமன்றம் 233 உறுப்பினரை கொண்டிருக்கும் (இப்போது 225)
7. தேர்தல் தொகுதிகள் 140 ஆக பிரிக்கப்படும் ( 9 மாகாணத்திலும்) . அதில் இருந்து 140 பேர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர். மிகுதி 76 பேரையும் மாகாணசபைகள் மூலமாக தெரிவு செய்வார். மிகுதி 17 பேரும் தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக இருப்பர்.
8. சட்ட மன்றில் மேலவை என்று புது அமைப்பு இருக்கும். அதன் உறுப்பினர் எண்ணிக்ககை 35. இவர்களை மாகாணசபையில் இருந்து பெயர் குறித்து நியமனம் செய்யப்படுவர்.
8.1. மேலவைக்கும் சபாநாயகர், பிரதி சபாநாயகர் அகியோர் இருப்பார்
9. 30 பேர் கொண்ட அமைசச்சரவை, மேலும் 30 பேர் கொண்ட பிரதியமைசர், அந்தஸ்தற்ற அமைசர்கள் பிரதான அரசில் அங்கம் வகிப்பார்கள். அதாவது ஆககூடியது 60 அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் ஆவர்.
10. நீதித்துறையில் மாற்றங்கள் உள்ளன . அவை பற்றி பின்பு தரப்படும்.
11. மகாண சபை மாகாணத்தின் அதிகார வரம்பை கொண்டிருக்கும்.
12. மாகாணங்களுக்கிடையே காணப்படும் பிணக்குகள் மாகாண மாநாட்டின் மூலம் தீர்க்கப்படும்.
13. போலீஸ் திணைக்களம் 2 வகைப்படும்
13.1 தேசிய பொலிஸ்
13.2 மாகாண பொலிஸ்
14. மாகாண சபைக்கு காணி அதிகாரம் உள்ளது
இவை வரைவாக காணப்படுவதாலும், இவை குறித்து அரசியமைப்புப் பேரவையில் வாத பிரதிவாதங்கள் நடைபெறுவதாலும் இதில் மாற்றங்கள் இடம்பெறலாம் என்பதும், இந்த வரைவு அரசியல் யாப்பாக மலர்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை மற்றும் நாடுமுழுவதும் சர்வஜன வாக்கெடுப்பு போன்றன மேற்கொள்ளப்படவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: செ.குமரன்
Leave a Reply
You must be logged in to post a comment.