நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
என்னை அடிக்கடி தொந்தரவு செய்வது அல்லது அதிகமாக எனது ஆவலைக்கிளறுவது சமய நம்பிக்கையை கேள்வி கேட்கும் போது ஏன் இந்த மத பக்திமார்கள் அதை அவமதிப்பாக கருது கிறார்கள் என்பதே!
நீங்கள் எடுத்துக் காட்டியது போல, எமது தமிழ் சித்தர்கள் இதைத் தான் செய்தார்கள். உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்களே இந்த சித்தர்கள் ஆவார். சாதி, சமய சடங்குகளை கடந்து; சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன மாச்சரியங்களை [பகைமைகளை] மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும் இவர்கள் வாழ்ந்தார்கள்.
இவர்கள் இந்த மத பக்தியாளர்களை வெளிப்படையாக கேள்வி கேட்டு எதிர்த்த தார்கள். கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம்.
‘உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான், உருவம் இல்லா உண்மை அவன். இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை’ என்று உறுதியாக கூறினான். இன்னும் ஒரு சித்தர் ‘சாஸ்திரங்களை எரித்தவனே’ சித்தர் என்கிறார்.
இந்த எல்லா சாஸ்தி ரங்களும், வேதங்களும், புராணங்களும் மற்றும் பல்வேறு மத தரப்பினரும் மனித இனத்தை ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மிருகம் போல் மாற்று கிறார்கள். பொதுவாக, அதிகமான சமயம் மனிதனை சிந்திக்க விடாமல் கட்டுப் படுத்துகிறது. பல தெய்வ வழிபாடு நம்பிக்கைகள் இருந்த ஒரு காலத்தில், அதை எதிர்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் கொடுத்த சித்தர் சிவவாக்கியர் ஆகும்.
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சுவை மிகுந்த கறியை வாணலில் போட்டு வதக்கும் பொழுது அதற்கு பயன்படும் சட்டுவம் என்கிற கரண்டியை எத்தனை முறை கறியுடன் சேர்த்துபோட்டு கிண்டினாலும் அந்த கரண்டிக்கு அந்த கறியின் சுவை தெரியப்போவதில்லை .
அதுபோல இறைவன் தனக்குள்ளேயே இருப்பதை உணராத மனிதனுக்கு.
எதிரே இருக்கின்ற கல்லே கடவுளாக தெரியும் பொழுது.
அதற்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து உடைஅணிவித்து அழகிய பூமாலைகளை அணிவித்து தூப தீபங்கள் காட்டி ஒருவன் உருக்கமாக வழிபாடு செய்த போது.
அந்தக் கற்சிலை எழுந்து வந்து நான் தன் கடவுள் என்று எப்போதும் சொல்லப்போவதில்லை.அந்த உபச்சாரங்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை..
ஒருவன்கடவுள் தனக்குள் இருப்பதை உணராத வரையில் கறியில் கிடந்தும் சுவை உணராத கரண்டியைப் போல மனிதன் வெளியே கடவுளைத் தேடிப் பயனில்லை.
. தனக்குள் இருக்கும் இறைவனை தேடும் அறிவு வரும் வரை நாமும் இந்தசட்டு வம் என்கிற கரண்டியைப் போன்றவர்களே.
இதுதான் சிவவாக்கியரின் தாங்கள் குறிப்பிட்ட பாடலுக்கான .சுருக்கமான விளக்கம்.. வாழ்த்துக்கள்.
பிராமணர்களின் அர்த்தமற்ற சடங்குகளை எதிர்த்து குரல் கொடுத்தவர்.
‘வேதம் ஓதுபவர்கள் திருவடி ஞானம் அடைந்ததுண்டோ? பெறவில்லையெனின் பாலில் நெய் இருப்பது பொய்யாகிப் போகுமே. கோயில் ஏது? குளம் ஏது? கண்ட இடமெல்லாம் குழம்பி திரியும் மூடர்காள்!’ என்று சிவவாக்கியர் உரத்துப் பேசும் போது நாத்தி கத்தின் குரலாகவே அவரது பாடல்கள் ஒலிக்கிறது.
எம்முள்ளேயே அவன் குடிகொள்ளும் பொழுது, ஏன் நாம் புனித நீராட வேண்டும்? ஆலயம் போகவேண்டும்? புனித மலை எற வேண்டும்? இப்படி பல முக்கிய கேள்விகளை வினவுகிறார்.கடவுளின் பெயரால் சிலை உருவங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத் தினசரி பூசைகள், நைவேத்தியங்கள், திருவிழாக்கள் செய்வதும் என்று தொன்று தொட்டு நடந்து வரும் வழமைகளை மூடப் பழக்கங்கள் என்று இவர் சாடுகிறார்.
‘எல்லாம் வல்லவனை எப்படி நீ அடைவாய்? போகும் வழி யெல்லாம் ஆலயம், போகும் வழியெல்லாம் மசூதி, போகும் வழியெல்லாம் குருக்கள், எல்லா பாதையும் மூடி விட் டனவே?? [the road to the Absolute is blocked by temples, mosques and the teachers ‘] என்கிறது
மற்றும் ஒரு பவுல் பாடல்: “இவ்வுலகில் உன் மதம் என்ன? ஒவ்வொரு வனும் லாலனை கேட் டனர். லாலன் சொன்னான்: ‘எப்படி மதம் இருக்கும்? நான் அதன் மேல் கண் வைக்கவில்லை. சிலர் கழுத்தை சுற்றி பூ மாலை அணிகிறார்கள், சிலர் தஸ்பீஹ் [tasbis] என்ற பிரார்த்தனை மணிகள் வைத்திருக்கிறார்கள் . எனவே மக்கள் சொல்கிறார்கள் இவர்கள் வேறு வேறு மதத்தினர் என, ஆனால் நான் கேட் கிறேன் , நீங்கள் பிறக்கும் போதும் உங்கள் மதத்தின் சின்னம் அணிந்த பிறந்தீர்களா? இல்லை சாகும் போது தானும் அதை அணிந்து போகிறீர்களா ? ‘ [Everyone asks: “Lalan, what’s your religion in this world?”Lalan answers: “How does religion look?”,I’ve never laid eyes on it.Some wear malas [Hindu rosaries] around their necks,some tasbis [Muslim rosaries], and so people say they’ve got different religions.But do you bear the sign of your religion when you come or when you go? “] என்று சித்தர்கள் மாதிரி வினாவுகிறது.
சித்தர்கள் எந்த சமயத்துடனும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. மேலும் அவர்களின் சில சித்தாந்தங்கள் சங்க காலத்திலேயே ஆரம்பிக்கப் பட்டதாக கருதப் படுகிறது [கி மு 700 to கி பி 300], எனினும் அவை ஏழாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டுவரை வளர்ச்சி அடைந்து பண்ணிரெண்டாம் ஆண்டில் முழுமையடைந்த தாக கருதப் படுகிறது.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
Leave a Reply
You must be logged in to post a comment.