சுமந்திரனின் பணிகள்
திரு. சுமந்திரன் அவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக; ஆட்புலம், ஆதாரம், ஆளுகை என மேலே விழிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழ்த்தேசிய களத்திலும் தனது முழுமையான பங்களிப்பை செய்தது மல்லாமல், ஊழலிற்கெதிராக பல காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.
- இனப்பிரச்சனை தீர்வுக்கான முன்னெடுப்புஇணைந்த வடக்கு-கிழக்கில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சி முறைமை நோக்கிய தொடர்சியான முன்னெடுப்புக்கள்.
- புதிய அரசியல் அமைப்பு வரைபு2015 – 2019 வரையான நல்லாட்சி காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான வரைபு. சுமந்திரனது தலைமையில் 2015-2017 வரை வரையப்பட்ட அரசியலமைப்பை தாம் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசானாயக்க அண்மையில் சொல்லியிருப்பது மிக முக்கியமானது. அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த வரைபு தமிழர் மட்டில் முக்கிய விடயங்களான காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்கள் மாகாணங்களிற்குப் பகிர்ந்தளிக்கிறது. இந்த விடயத்தில் பெரும்பான்மைக் கட்சிகளது சம்மதத்தைப் பெற சுமந்திரன் கடுமையாக முயற்சியெடுத்து வெற்றியும் கண்டார்.
- மனித உரிமைப்பேரவையும் பொறுப்புக்கூறலும்தொடர்ச்சியான ஐ.நா மனித உரிமை பேரவைத் தீர்மானங்களூடாக; பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள், இனவழிப்பு மற்றும் போர்க்குற்ற விசாரணை என்பவற்றிற்கான சர்வதேச அழுத்தங்களை, யுத்த வெற்றி மனப்பாங்கில் இருக்கும் அரசின் மீது பிரயோகித்தல். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையை அறிவதற்கான கட்டமைப்பை உருவாக்குதல். 2009 இல் இலங்கை அரசை பயங்கரவாதத்தை முறியடித்ததாகப் பாராட்டிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிலைப்பாட்டை ஜெனீவாவில் சுமந்திரன் தன் பாரிய உழைப்பால் மாற்றினார். குறிப்பாக 2012 முதல் 2014 வரை அடுத்தடுத்து அவரது முயற்சியால் நிறைவேற்றப்பட்ட ஜெனீவாத் தீர்மானங்கள் மூலம் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களை பதிவு செய்த உறுதியான உத்தியோக பூர்வ சர்வதேச ஆவணத்தை வெளியிட முடிந்தது.
- ஊழல் மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு எதிரான தொடர்ச்சியான பல சட்ட நடவடிக்கைகள் அண்மைய விசா மோசடி, EFP கொடுப்பனவு உட்பட பல ஊழல்களுக்கும்; மீன்பிடி மற்றும் கடல்வளம், மேச்சல்நிலம், பயிர்ச்செய்கை, வியாபாரம் என மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் எதிரான பொதுநல நீதிமன்ற நடவடிக்கைகளூடான தீர்வுகள்.
- அரசியல் கைதிகளின் விடுவிப்புபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிருந்த 219 தமிழ் அரசியல் கைதிகளில் 109 பேர், தமிழரசுக் கட்சி அரசோடு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து 2015 நவம்பர் முதல் விடுவிக்கப்பட்டனர்.
- உயர்பாதுகாப்பு வலய காணி விடுவிப்புஇலங்கை இராணுவம் கையகப்படுத்தியிருந்த 118,000 ஏக்கர் தமிழர் நிலங்களில், 89,000 ஏக்கரிலும் (75%) அதிகமானவை விடுவிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் அணுகுமுறை மற்றும் நீதிமன்ற வழக்குகள் ஊடாக, குறிப்பாக 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் பல ஏக்கர் காணிகள் பொதுமக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டது. வலிவடக்கில் மட்டும் 3495.8 ஏக்கர் காணி (53.4%) இக்காலப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.
- பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) மற்றும் அரச சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள்பயங்கரவாத தடைச்சட்டம் (PTA), பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் (ATA) உட்பட பல மனித உரிமை மீறல் சட்டமூலங்களுக்கு எதிரான உச்சநீதிமன்ற நடவடிக்கையும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களூடான நடவடிக்கைகளும் எடுத்திருந்தமை. இவற்றிற்கு எதிரான மக்கள் விழிர்ப்புணர்வு நிகழ்வுகளை சிங்கள சமூகத்தினர் மத்தியிலும் கொண்டு சென்றிருந்தார். மிருசுவில் படுகொலை குற்றவாளி உட்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைள்.
- தமிழர் தாயகத்தின் சமய மற்றம் கலாச்சார அடையாளங்களை பாதுகாத்தல்தொல்பொருள் தினைக்களத்தின் சட்ட விரோத செயற்பாடுகளை உடனடியான தகுந்த சட்ட நடவடிக்கைகள் மூலம் நிறுத்தியமை, சவாலுக்குட்படுத்தியமை.
- தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்ப்பதற்க்கான முயற்சிகள்இலங்கையில் நாம் சம அந்தஸ்தோடு வாழ்வதற்கு சமவுரிமைச் சிந்தனைகள் சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெற்கில் சிங்கள மக்களிடம் தமிழர் தரப்பு நியாயங்களைச் சொல்ல சிறப்பு முயற்சி எடுத்து குறிப்பிடத்தக்களவு வெற்றியும் கண்டார் சுமந்திரன். கிராம மட்டங்களில் சிறு கூட்டங்களையும், தொடர்ச்சியாக முக்கிய சிங்கள ஊடகங்களில் நேர்காணல்களும் மற்றும் விவாதங்களும் சுமந்திரனால் முன்னெடுக்கப்பட்டது. கணிசமான சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் இணங்காத எந்த அரசியல் தீர்வும் நிலை நிற்காது என்பதை உணர்ந்து செய்த முன்னெடுப்பே இது.
- வட-கிழக்கில் சிறப்புப் பொருளாதாரத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டமைநல்லாட்சி அரசின் காலத்தில் இருந்த சாதக நிலையைப் பயன்படுத்தி, தமிழரசுக் கட்சி 2015-2019 வரையான ஐந்தாண்டு காலப் பகுதியில் சிறப்புப் பொருளாதாரத் திட்டங்கள் பலவற்றை வட-கிழக்கில் ஆரம்பித்தது. குறிப்பாக வடக்கில் மடிந்து போயிருந்த கூட்டுறவுச் சங்களுக்கு ரூபா 450 மில்லியன் புத்துயிர் கொடுக்கப்பட்டது.
- சுமந்திரனின் மடிவலை மீன்பிடி முறையைத் தடைசெய்யும் தனி நபர் சட்டமூலம்வடக்குக் கடல் எல்லையில் தமிழக மீனவர்களின் அத்து மீறல்கள் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதித்திருந்தது. சுமந்திரன் இதை எதிர்க்க மடிவலை மீன்பிடி முறையைத் தடைசெய்யும் சட்டத்தை தனி நபர் சட்ட வரைபாகப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதுடன் இந்திய வட்டங்களில் தொடர் அழுத்தங்களைப் பிரயோகித்ததன் விளைவாக இப் பிரச்சினையில் பாரியளவு முன்னேற்றகரமான நிலை ஏற்பட்டிருக்கிறது.
- மயிலிட்டித் துறைமுகம் விடுவிப்பு மற்றும் தமிழ் நாட்டிற்கிடையிலான கப்பற் பயணம்நல்லாட்சிக் காலத்தில் இலங்கையின் மீன்பிடித் துறையில் முக்கியம் பெற்ற மயிலிட்டித் துறைமுகம் விடுவிக்கப்பட்டது. 500 படகுகளை நிறுத்தக் கூடிய வகையில் பருத்தித்துறை துறைமுகம் விருத்தி செய்யப்பட்டது. காங்கேசன்துறைத் துறைமுகத்திற்கும் தமிழ் நாட்டிற்குமிடையேயான கப்பற் பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய முனைப்புக்களை தமிழரசுக் கட்சி நல்லாட்சி அரசில் ஆரம்பித்தது. அது பின்னர் சென்ற வருடத்திலிருந்து நடைமுறைக்கு வந்திருக்கிறது.
- பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக உருவானதுபாழடைந்து போயிருந்த பலாலி விமான நிலையத்தைத் தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முதலில் 2014 இல் யாழ்ப்பாணத் திலிருக்கும் இந்தியத் தூதுவரிடம் தமிழரசுக் கட்சியால் முன்வைக்கப்பட்டது. இந்தியத் தூதுவரின் ஊடாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இக் கோரிக்கை தெரிவிக்கப்பட்ட பின் – இந்திய அரசிற்கும், இலங்கை அரசிற்குமிடையில் 2015 இல் இது தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. சீ. வி. விக்கினேஸ்வரன் முதலியோரின் உள்வீட்டு எதிர்ப்புக்களையும் தாண்டி நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும், இந்தியத் தூதுவர் மீதும் சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர் தொடர் அழுத்தத்தைப் பிரயோகித்தே பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக உருவானது.
2015 வட-கிழக்கில் இராணுவ ஒடுக்குமுறையின் கெடுபிடிகளும் வெகுவாக நல்லாட்சி காலம் முதல் குறைக்கப்பட்டிருக்கிறது.
2015 இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களை பதிவு செய்த உறுதியான உத்தியோக பூர்வ சர்வதேச ஆவணத்தை வெளியீடு.
Leave a Reply
You must be logged in to post a comment.