புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்
ஆர்.ராம்
December 23, 2016
16 ஆம் நூற்றாண்டிலிருந்து போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்ற அந்நியர் ஆட்சிக்கு இலங்கைத்தீவு உட்பட்டிருந்தது. 1802 ஆம் ஆண்டு முதல் இலங்கை முடிக்குரிய ஒரு குடியேற்ற நாடாக மாறியது. இதிலிருந்து இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் சிவில் நிர்வாகம், நீதிப்பரிபாலனம், நிர்வாக விடயங்கள் பிரித்தானிய அரசினால் இலங்கையில் நியமிக்கப்பட்டிருந்த தேசாதிபதியால் நிறைவேற்றப்பட்டன.
அதனைத்தொடர்ந்து 1833இல் பிரித்தானியரால் கோல்புறுக் கமரன் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது நாட்டின் அரசியலமைப்பு துறையில் அடித்தளத்தினை வேரூன்ற ஏதுவாக அமைந்தது. அதனையடுத்து 1912இல் குறு மக்கலம் சீர்திருத்தங்கள் 1922இல் மனிங் சீர்திருத்தங்கள், 1924இல் மனிங் டிவன்சயர் சீர்திருத்தங்கள் இடம்பெற்றன. தொடர்ந்து 1931ஆம் ஆண்டில் டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதற்குப்பின்னரான காலகட்டத்தில் இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் 1944 இல் பிரித்தானிய அரசாங்கம் சோல்பரி பிரபுவின் தலைமையில் ஆணைக்குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பியது. இலங்கை அமைச்சர்களால் வரையப்பட்ட யாப்பில் காணப்பட்ட சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு 1947 ஆம் ஆண்டு சோல்பரி யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. சோல்பரி அரசியல் யாப்பின்படி இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயக முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கொண்டு முதலாவது குடியரசு யாப்பொன்று 1972ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தினைத் தொடர்ந்து அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றி கலந்துரையாடும் தீர்மானம் அனைத்து அரசியல் தலைவர்களினாலும் முன்வைக்கப்பட்டது. முதலாவது குடியரசு யாப்பின் திருத்தமாக அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அறிமுகத்தோடு 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு முறை கொண்டு வரப்பட்டு அதுவே இரண்டாவது குடியரசு யாப்பாக கொள்ளப்பட்டது.
அடிப்படை உரிமைகள், நீதித்துறை எனப் பலவற்றை உள்ளடக்கிய விரிவான முறையில் இவ்வரசியல் யாப்பு தற்போது வரையில் 19 தடவைகள் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆறாவது, பதின்மூன்றாவது, பதினேழாவது, பதினெட்டாவது மற்றும் பத்தொன்பதாவது திருத்தங்கள் அரசியல் முக்கியத்துவத்தினை பெற்று நிற்கின்றன.
2000 ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்த யோசனை பாராளுமன்றில் வரைபாக முன்வைக்கப்பட்ட போதும் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முடியாது தோல்வியைக் கண்டது. இந்நிலையில் 1972, 1978ஆகிய குடியரசு யாப்புக்களில் தமிழ் மற்றும் தமிழ் பேசும் சிறுபான்மை தேசிய இனங்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருந்தன.
2015 ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஒன்றிணைந்து அமைத்த தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இலங்கை புதிய அரசியலமைப்பு ஒன்றினை இயற்றும் பணிகள் அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏகமனதாக நிறைவேறிய பிரேரணை
அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்கான பிரேரணையொன்று ஜனவரி ஒன்பதாம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த பிரேரணையில் இலங்கைக்கு அரசியலமைப்பொன்றை வகுத்தல் அவசியமென இலங்கை மக்கள் மத்தியில் பரந்தளவில் இணக்கப்பாடு காணப்படுகின்றது என்பது குறிப்பிடப்பட்டு 23வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
முதலாம், இரண்டாம் வாசகங்களில், இலங்கையின் அரசியலமைப்பு பற்றிய மக்களின் கருத்துக்களையும் ஆலோசனை களையும் பெற்று அவற்றைப் பற்றிக் கலந்தாராய்ந்து அரசியலமைப்பின் 75ஆவது உறுப்புரையின் கீழ் பாராளுமன்றத்தின் தத்துவங்களைப் பிரயோகிப்பதில் அதன் பரிசீலனைக்காக அரசியலமைப்பு சட்டமூலத்தின் வரைபைத் தயாரிக்கும் நோக்கத்துக்காக இதன் பின்னர் அரசியலமைப்புச் சபை என அழைக்கப்படும். எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய பாராளுமன்றக் குழு ஒன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இந்தச் சபை தீர்மானிக்கின்றது. பாராளுமன்றத்தின் சபாநாயகர் அரசியலமைப்பு சபையின் தவிசாளராக இருப்பார். அரசியலமைப்பு சபை ஏழு பிரதித் தவிசாளர்களைக் கொண்டதாக இருக்கும் என்பதுடன் அவர்கள் அரசியலமைப்பு சபையினால் தெரிவு செய்யப்படவேண்டும். சபாநாயகர் இல்லாத சந்தர்ப்பங்களில், சபைக்கூட்டங்களின் அமர்வுக்குத் தலைமை வகிப்பதற்கு அரசியலமைப்பு சபையின் பிரதித் தவிசாளர்களுக்கிடையே ஒருவரைத் தெரிவு செய்தல் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக 5ஆவது வாசகத்தில், அரசியலமைப்பு சபை பின்வரும் உப குழுக்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
(அ) அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்படுகின்ற இருபத்தொரு பேரை விஞ்சாத எண்ணிக்கையாகக் கொண்டதும் அவர்களில் ஒருவர் தவிசாளராகவும் கொண்டதொரு வழிப்படுத்தும் குழு.
வழிப்படுத்தும் குழு அரசியலமைப்பு சபையின் அலுவல்கள் மற்றும் இலங்கையின் அரசியலமைப்பை வரையும் பணி ஆகியவற்றுக்கான பொறுப்புக்களை கொண்டிருத்தல் வேண்டும்.
(ஆ) அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்படக்கூடிய அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களைக் கொண்ட அத்தகைய ஏனைய உபகுழுக்கள்.
ஆயின், ஒவ்வொரு உப குழுவும் பதினொரு பேரை விஞ்சாதவாறு உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு உப குழுவினதும் தவிசாளர் வழிப்படுத்தும் குழுவினால் நியமிக்கப்படுதல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் குறித்த தீர்மானத்தில் அரசியலமைப்பு வரைபு நிறைவேற்றப்படும் முறைமை மற்றும் உருவாக்கப்பட்ட குழுக்கள் கலைக்கப்படுதல் தொடர்பிலும் 20ஆம் 21ஆம் 22ஆம் 23ஆம் வாசகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
20 ஆவது வாசகத்தில், அரசியலமைப்பு சபையினால் சாதாரண பெரும்பான்மையினால் மாத்திரம் அரசியலமைப்பு சட்டமூலத்தில் உள்ள பிரேரணைகள் அங்கீகரிக்கப்படுமிடத்து.
பிரேரணைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டுமென்பதுடன் அறிக்கையையும் அரசியலமைப்பு சட்டமூலத்தையும் ஒரு மாதத்திற்குள் சமுகமளிக்காத உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக முழுப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்படுமிடத்து. அரசியலமைப்பு சட்டமூலம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டுமென்பதுடன் இதற்குப் பின்னர் இதன் 21 ஆவது பிரிவின் ஏற்பாடுகள் ஏற்புடையதாகும் என்பதுடன் அரசியலமைப்பு சபை மற்றும் பிரேர ணையை முன்வைத்த குழு கலைந்ததாக கருதுதல் வேண்டும்.
21 ஆவது வாசகத்தில், அரசியலமைப்புச் சபை அரசியலமைப்பு வரைபு பற்றிய தீர்மானத்தை மூன்றில்இரண்டு பெரும்பான்மையினால் அங்கீகரிக்குமிடத்து அறிக்கை மற்றும்அரசியலமைப்பு வரைவும் வழிப்படுத்தும் குழுவினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியலமைப்பு சபையும் உப குழுக்களும் கலைக்கப்பட்டதாகக் கருதப்படல் வேண்டும்.
22ஆவது வாசகத்தில், அரசியலமைப்புச் சபை மற்றும் 5ஆம் வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உபகுழுக்கள் மற்றும் இந்த தீர்மானத்துக்கு அமைவாக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர் மற்றும் ஆலோசகர்களுக்கான செலவினங்கள் திரட்டு நிதியத்தில் இருந்து மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்பதுடன் அரசியலமைப்பி 150ஆவது உறுப்புரையின் பிரகாரம் அவ்விடயம் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளைப் பாராளுமன்றம் மேற்கொள்ளுதல் வேண்டும்.
இறுதியாக 23ஆவது வாசகத்தில், சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக, சமூகமளிக்காத உறுப்பினர்கள் உட்பட பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் மூன்றிரண்டு பெரும்பான்மையினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, பின்னர் அரசியலமைப்பின் 83ஆவது உறுப்புரையில் தேவைபடுத்தப்பட்டவாறு மக்கள் தீர்ப்பொன்றின் போது மக்களினால் அங்கீகரிக்கப்படுமிடத்து மாத்திரம் அரசியலமைப்பு சட்ட மூலம் சட்டமாக்கப்படுதல் வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பிரேரணையானது மார்ச் மாதம் 09ஆம் திகதி வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வழிநடத்தும் குழு
அதனையடுத்து அரசியலமைப்பு சபையை நியமிப்பதற்கான கட்டமைப்பு தீர்மானத்தின் 05 (அ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு 2016 ஏப்ரல் 05 ஆம் திகதி நடைபெற்றபோது அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவுக்கான 21 அங்கத்தவர்களும் நியமிக்கப்பட்டனர்.
வழிப்படுத்தும் குழுவுக்கு தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். அமைச்சர்களான லக் ஷ்மன் கிரியெல்ல, நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம்,கலாநிதி.விஜேதாஸ ராஜபக் ஷ, ஏ.டீ.சுசில் பிரேமஜயந்த, ரிஷாட் பதியுதீன், பாட்டலி சம்பிக ரணவக்க, டி.எம். சுவாமிநாதன், மனோ கணேசன், மலிக் சமரவிக்ரம, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, ஆகியோரும் எதிர்க்கட்சித்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், ஜே.வி.பி.தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, எம்.ஏ. சுமந்திரன், டாக்டர் திருமதி துஸிதா விஜேமான்ன, பிமல் ரத்நாயக்க, பிரசன்ன ரணதுங்க, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
வழிநடத்தல் குழுவின் அடிப்படை குறிப்புக்கள்
சிலோன் அரசியலமைப்பு ஆணைக்குழு ஆணை (1946 சோல்பரி அரசியல்யாப்பு), 1972 இல் இயற்றப்பட்ட முதலாவது குடியரசு யாப்பு, 1978ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பு, 2000 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு வரைபு, புதிய அரசியலமைப்பினை அடிப்படை ரீதியில் வடிவமைக்க அனைத்து கட்சி பிரதிநிதித்துவ குழுவின் பிரேரணைகள் ஆகியவற்றை அடிப்படை குறிப்பு பொருளாக வழிநடத்தல் குழு எடுத்துள்ளதோடு அடிப்படை உரிமைகள் மீதான புதிய அத்தியாயங்கள் தொடர்பான குழு அறிக்கை, மற்றும் மக்கள் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பொது பிரதிநிதித்துவ குழு அறிக்கை ஆகியவை தொடர்பாகவும் ஆழமான கவனம் செலுத்துகின்றது.
நேரடியாக கையாளப்படும் விடயங்கள்
புதிய அரசியலமைப்பின் கணிசமான பல்வேறு அம்சங்களில், சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ளல், திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றினை பரிசீலித்து திருத்தியமைத்தல், அரசியலமைப்பு பிரேரணை வரைபு செய்தல் ஆகிய பணிகளை வழிநடத்தும் குழு மேற்கொள்கின்றது.
தற்போதய அரசியல் யாப்பின் முதலாவது மற்றும் இரண்டாவது அத்தியாயம் தொடர்பில் கலந்துரையாடல், நாட்டின் தன்மை, இறையாண்மை, மதம், அரசாங்கத்தின் கட்டமைப்பு, தேர்தல் சீர்திருத்தங்கள், அதிகாரப் பகிர்வுக்கான கோட்பாடுகள், காணி ஆகிய தலைப்புக்களின் கீழான கலந்துரையாடல்களை மேற்கொண்டு தீர்மானம் மேற்கொள்வதென வழிப்படுத்தல் குழுவினரால் தன்னகத்தே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொடரும்…
December 24, 2016
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்
நேற்றைய தொடர்ச்சி…
அதேநேரம் அடிப்படை உரிமைகள், நீதித்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி, பொதுச் சேவை, மற்றும் மத்திய அரசாங்கம் – மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பு ஆகிய விடயங்களுக்காக வழிநடத்தல் குழுவால் தனித்தனியாக ஆறு உபகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
வழிநடத்தல் குழுவின் நிர்வாகம்
பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் தலைமை அதிகாரியுமான நீல் இத்தவல அரசியலமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவின் செயலாளராக விளங்கி அதற்கான சேவையை ஆற்றுவதோடு, நடைபெறும் வழிப்படுத்தும் குழுவின் கூட்டங்களில் பேச்சாளராகவும் உள்ளார்.
வழிநடத்தும் குழுவின் பணிகளை விரிவாக்கவும், ஒழுங்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அவற்றினை முகாமை செய்யும் வகையில் முகாமைத்துவ குழுவொன்று வழிநடத்தும் குழுவின் இரண்டாவது கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற போது நியமனம் செய்யப்பட்டது.
இந்த முகாமைத்துவ குழுவானது வழிப்படுத்தும் குழு, உப குழுக்கள், மற்றும் அலுவலகர்கள் தேவைகள் உட்பட்ட பணிகளையும் கவனத்தில் கொண்டு சேவையாற்ற வேண்டியுள்ளது. குறித்த முகாமைத்துவ குழுவுக்கான அங்கத்தவர்களில் இணைத்தலைவர்களாக டாக்டர் ஜயம்பதி விக்கிரமரத்ன (இணைத் தலைமை) எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இருக்கின்றனர்.
தலைமை அலுவலராக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் வழிநடத்தும் குழுவின் செயலாளருமான நீல் இத்தவல, பாராளுமன்ற சபைத் தலைவரின் செயலாளர் அப்துல் நௌபர் ரஹ்மான், பிரதமரின் மேலதிக செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திருமதி பிம்பா திலகரத்ன ஆகியோர் காணப்படுகின்றனர்.
அரசியலமைப்புச் சபையின் செயலகம்
அரசியலமைப்புச் செயற்பாட்டுக்கென வழிநடத்தல் குழுவினரால் உருவாக்கப்பட்ட நிர்வாக அலகாக அரசியலமைப்புச் சபையின் செயலகம் விளங்குகின்றது. அரசியலமைப்பு செயலகமானது பாராளுமன்ற செயலகத்தினுள் செயற்பட்டு வருவதுடன் பாராளுமன்ற செயலாளர் நாயகமாக தம்மிக்க தஸநாயக்க விளங்குவதுடன் பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக நீல் இத்தவல விளங்குகின்றார்.
அரசியலமைப்புச் சபையின் இரண்டாவது அமர்வின் போது கடந்த மே மாதம் 5ஆம் திகதி அரசியலமைப்புச் சபைச் செயலகத்துக்கான மேலதிக செயலாளராக திருமதி யுரேஷா பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார். வழிநடத்தும் குழுவின் ஒழுங்கான அமர்வுகளை திட்டமிடுதல், ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல், குறிப்பிட்ட குழுக்களுக்கு தேவையான வளபொருட்களை வழங்குதல், நிபுணர்களின் பங்களிப்புக்களை ஒருங்கிணைத்தல் மற்றும் ஆய்வுகளுக்கு தேவையான அனுசரணைகளை வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளை செயலகம் மேற்கொள்கின்றது.
அத்தோடு வழிநடத்தல் குழுவுக்கு நிபுணர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கல்வி ஆய்வுகள் மற்றும் நிபுணர்களது வாய்மூலமான கருத்துக்கள் உள்ளிட்ட உள்ளீட்டு மூலவளங்களை வழங்குவதும் ஒழுங்குபடுத்துவதும் அரசியலமைப்புச் செயலகத்தின் பணியாகின்றது. மேலும் வழிநடத்தும் குழுவுக்கும் உப குழுக்களுக்கும் இடையிலான பாலமாகவும் அரசியலமைப்புச்சபை செயலகம் செயற்பட்டு வருகின்றது.
அரசியலமைப்புச் சபை மற்றும் வழிநடத்தல் குழுவால் பேராசிரியர் சுரி ரத்னபால, பேராசிரியர் ஒஸ்டின் புள்ளே, பேராசிரியர் ஏ.ம்.நவரத்ன பண்டார, என்.செல்வக்குமாரன், கலாநிதி கமேனா குணரத்ன கலாநிதி.கபில பெரேரா, சுரேன் பெர்னாண்டோ, நிரான் அன்கிற்றெல், அசோக குணவர்த்தன ஆகியோரடங்கிய நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு மேலதிக சந்தர்ப்பம்
நாட்டு மக்களின் தற்போதைய அபிலாஷைகள் மற்றும் எதிர்கால விருப்பங்களையும் உள்ளடக்கியதாக புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்பதற்காக வழிநடத்தும் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினைத் தொடர்ந்து, பொது பிரதிநிதித்துவ குழுவிற்கு பிரதிநிதித்துவம் செய்யாத பொதுமக்களுக்கு, அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றிய தங்களது கருத்துக்களை எழுத்து மூலம் நேரடியாக வழிப்படுத்தும் குழுவினருக்கு சமர்ப்பிப்பதற்கு மேலதிகமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
குறிப்பாக வழிநடத்தும் குழுவின் பிரதிநிதிகள் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றிய கருத்துக்களை எழுத்து மூலம் சமர்ப்பிப்பதற்காக பத்திரிகை விளம்பரமொன்று கடந்த மே மாதம் 10 ஆம் திகதி எழுத்துமூல பிரதிநிதித்துவங்கள், வழிப்படுத்தும் குழு உப குழுக்களினால் தீர்மானிக்கப்பட்ட தலைப்புக்களின் கீழ் அனுப்பப்படல் வேண்டும் என்ற வகையில் விபரங்கள் அடங்கலாக பிரசுரிக்கப்பட்டது. அவ்வகையில் எழுத்துமூல சமர்ப்பணங்களைச் சமர்ப்பிக்கும் கால எல்லை கடந்த மே மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.
பலதரப்பினருக்கும் வழங்கப்பட்ட சந்தர்ப்பம்
அனைத்து அரசியல் கட்சிகள், தொழில் ரீதியான நிறுவனங்கள், அனைத்துக்கும் தத்தமது எழுத்து மூல பிரதிநிதித்துவங்களை சமர்ப்பிக்கும் படி வேண்டுகோள் விடுக்கும் நடவடிக்கையையும் வழிநடத்தல் குழு செய்திருந்தது. அதுமட்டுமன்றி வழிநடத்தும் குழு ஆரம்ப ஆய்வுகளின் போது, அரசியல் கட்சி மற்றும் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள் குழுவின் முன்னிலையாகி தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் சிறந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
அதுமட்டுமன்றி அந்தந்த துறைகளின் உப குழுக்களுக்கு முன்னிலையில் தமது வாய்மூல சமர்ப்பிப்புக்களை வழங்கும் வகையில் அவர்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்குமான வாய்மூல மற்றும் எழுத்து மூல சமர்ப்பிப்புக்களை வழங்குவதற்கான கால எல்லை வழங்கப்பட்டு பின்னர் அவர்களுக்கான தேவைகளின் பொருட்டு கால எல்லை நீடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு துறை ரீதியிலும் அரசியல் கட்சி பிரதிநிதித்துவங்கள் தமது சமர்ப்பிப்புக்களை அரசியலமைப்பு சபை செயலகத்திடம் சமர்ப்பித்தனர்.
உபகுழுக்கள் விபரம்
ஆறு உப குழுக்களும் அக்குழுவின் தலைவர்களை உள்ளடக்கிய வகையில் 11 அங்கத்தவர்களைக் கொண்ட வகையில், அரசியலமைப்புச் சபையின் அங்கீகரிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவினரால் நியமிக்கப்பட்டன.
அரசியலமைப்புச் சபையின் அங்கீகரிக்கப்பட்ட வழிநடத்தும் குழுவினரால் பாராளுமன்றத்தினுள் காணப்படும் கட்சி பிரதிநிதித்துவங்கள் மற்றும் அரசியல் கட்சிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு சமத்துவமான முறையில் இவ் உப குழுக்களுக்கான அங்கத்தவர்களின் நியமனம் அமைந்திருந்தது.
ஆறு உப குழுக்களுக்குமான ஆறு தலைவர்களும் உப குழுவின் அங்கத்தவர்களிலிருந்து பதவியின் சிரேஷ்ட பரிசீலனையின் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அத்துடன் உப குழுக்களுக்கான நிர்வாக ஆதரவுகளை வழங்கும் வகையில் பாராளுமன்றத்தின் மூத்த அதிகாரிகள் சிலரும் உப குழுக்களுக்கான செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
‘அடிப்படை உரிமைகள்’ தொடர்பான உபகுழுவில் அடிப்படை உரிமைகள், மொழி உரிமைகள், அரச கொள்கையின் வழிகாட்டும் நெறிகள், குடியுரிமை மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இக்குழுவின் உறுப்பினர்களாக மஹிந்த சமரசிங்க(தலைவர்), அநுராத ஜயரத்ன திருமதி பவித்ராதேவி வன்னியாரச்சி, விஜித ஹேரத், வாசுதேவ நாணயக்கார வணக்கத்துக்குரிய அத்துரலிய ரத்ன தேரர், எஸ்.ஸ்ரீதரன், அ.அரவிந்த் குமார் டாக்டர் ஜயம்பதி விக்கிரமரத்ன, டாக்டர் திருமதி துஷித விஜேமன்ன, எம்.எச்.எம்.சல்மான் உள்ளனர்.
‘நீதித்துறை’ தொடர்பான உபகுழுவில் நீதித்துறை, நீதிமன்றங்களின் அமைப்பு, நீதிமன்ற பரிசீலனை, அடிப்படை உரிமைகள் சட்ட அதிகாரம் உள்ளடங்கலாக நீதித்துறையின் செயலாட்சி, அரசியலமைப்பு, நீதிமன்றம் மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இக்குழுவின் உறுப்பினர்களாக ரவூப் ஹக்கீம் (தலைவர்) அநுர பிரியதர்ஷன யாப்பா, நவீன் திஸாநாயக்க, திருமதி தலதா அதுகோரள, சந்திம வீரக்கொடி, சுஜீவ சேனசிங்க, திருமதி ஸ்ரீயாணி விஜேவிக்கிரம, எம்.ஏ.சுமந்திரன், உதய பிரபாத் கம்மன்பில, டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் உள்ளனர்.
‘சட்டம் மற்றும் ஒழுங்கு’ தொடர்பான உபகுழுவில் சட்டம் மற்றும் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, அவசர தேவை மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். இக்குழுவின் உறுப்பினர்களாக சாகல ரத்நாயக்க (தலைவர்) டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, பழனி திகாம்பரம், அமீர் அலி சிஹாப்தீன், அஜித் பி.பெரேரா, டக்ளஸ் தேவானந்தா, அநுர திஸாநாயக்க, எம்.எஸ். தௌபீக், மாவை எஸ்.சேனாதிராஜா, நாமல் ராஜபக் ஷ, செஹான் சேமசிங்க ஆகியோர் உள்ளனர்.
‘பொது நிதி’ தொடர்பான உபகுழுவில் பொதுநிதி, மாகாண மட்டத்திலான நிதி, பொது நிறுவனங்கள், மத்திய வங்கி மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இக்குழுவின் உறுப்பினர்களாக பந்துல குணவர்த்தன (தலைவர்), டாக்டர் சரத் அமுனுகம, வி.எஸ். இராதாகிருஷ்ணன், டாக்டர் திருமதி அனோமா கமகே, டாக்டர் ஹர்ஷ த சில்வா, இரான் விக்கிரமரத்ன, முத்து சிவலிங்கம், கெஹெலிய ரம்புக்வெல்ல, சுனில் ஹந்துன்னெத்தி, ஈ.சரவணபவன், தாரக்க பாலசூரிய ஆகியோர் உள்ளனர்.
‘பொதுச் சேவை’ தொடர்பான உபகுழுவில் பொதுச் சேவை, பொதுச் சேவை ஆணைக்குழு, மாகாண அரச சேவை, உள்ளூராட்சி சேவை, மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளடங்கலாக சுதந்திர ஆணைக்குழுக்கள், குறைகேள் அலுவல் மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இக்குழுவின் உறுப்பினர்களாக ஏ.டீ.சுசில் பிரேமஜயந்த (தலைவர்), கருணாரத்ன பரணவிதான, சந்திரசிறி கஜதீர, நிஹால் கலப்பத்தி, ஜே.சீ. அலவத்துவல, அப்துல்லா மஹ்ரூப், டாக்டர் ரமேஷ் பதிரண, வேலுகுமார், ஹர்ஷன ராஜகருணா, முஜிபுர் ரஹ்மான், ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோர் உள்ளனர்.
‘மத்திய அரசாங்கம் – மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பு’ குறித்த உபகுழுவில் மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபை ஆணைக்குழுக்களுக்கும் இடையிலான தொடர்பு, உள்ளூர் அதிகார சபைகள், மாகாணசபை நிறைவேற்று அதிகார சபை, மத்திய நிலையங்களுக்கான தகுதிகள், மாகாணங்கள் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள், நிர்வாக அமைப்பு (மாவட்ட செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள்) மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன இக்குழுவில் தர்மலிங்கம் சித்தார்த்தன் (தலைவர்), டிலான் பெரேரா, எச்.எம்.எம். ஹரீஸ், டலஸ் அழகப்பெரும, பிமல் ரத்னாயக்க, விதுர விக்கிரமநாயக்க, மயில்வாகனம் திலகராஜா, சனத் நிஷாந்த பெரேரா, எஸ்.எம்.மரிக்கார், திருமதி ரோஹினி குமாரி விஜேரத்ன, விஜேபால ஹெட்டியாராய்ச்சி ஆகியோர் உள்ளனர்.
வழிப்படுத்தும் குழுவினரால் நேரத்துக்கு நேரம் வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் அனைத்தும் ஆழ்ந்த அவதானிப்பின் பொருட்டு உப குழுக்களுக்கு முன்னிலையாக சமர்ப்பிக்கப்பட்டன. சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அவை அனைத்தும் உப குழுக்களின் தலைவர்களுக்கு உரிய முறையில் பரிமாறப்பட்டு ஆராயப்பட்டன. அவ்வகையில் பரிமாறப்பட்ட அனைத்து அறிக்கைகளும் உப குழுக்களின் தலைவர்களால் ஆழ்ந்து ஆராயப்பட்டன.
இந்த உபகுழுக்கள் பல்வேறு கலந்தாய்வுகளை மேற்கொண்டு தமது இறுதி அறிக்கைகளை வழிநடத்தும் குழுவிற்கு சமர்ப்பித்துள்ளன. வழிநடத்தல் குழுவின் தலைவர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அந்த அறிக்கைகள் ஆறும் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 9,10,11ஆம் திகதிகளில் அவ்வறிக்கைகள் மீதான விவாதங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளன.
இவ்வாறான நிலையில் அரசிய லமைப்பை உருவாக்கும் கடினமான பயணத்தில் பங்கேற்றுள்ள வழிநடத்தல் குழுவின் பிரதிநிதிகளின் கருத்து பதிவுகள் அடுத்து….
வெள்ளியன்று தொடரும்
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-24#page-5
December 30, 2016
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (03)
(ஆர்.ராம்)
புதிய அரசியல் சாசன உருவாக்கத்திற்காக அரசியலமைப்புச் சபையால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான வழிநடத்தல் குழுவின் அங்கத்தவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய அரசியலமைப்பின் விடயதானங்கள், விட்டுக்கொடுப்பற்ற மனநிலையில் உள்ள தென்னிலங்கை தலைவர்களிடமிருந்து தேசிய பிரச்சினைக்கான தீர்வு புதிய சாசனத்தினூடாக கிடைக்குமா என இயல்பாக எழுகின்ற வினாக்கள், பொதுமக்களின் சந்தேகங்கள் தொடர் பில் கருத்துக்களை பதிவு செய்தார்.
கேள்வி: -அரசியலமைப்பு பணிகள் இடம்பெற்று வரும் இத்தருணத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றதா? தற்போதைய அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற் கொள்ளப்படுகின்றதா?
பதில்:- இந்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக செயற்படுவது தொடர்பான தீர்மானத்தின் பிரகாரம் இந்த நாட்டுக்கு முழுமையான அரசியலமைப்பு வரைபொன்றை வரையப்படவேண்டுமென்றே கூறப்பட்டுள்ளது. ஆகவே அது தொடர்பான சந்தேகங்கள் யாருக்கும் இருக்க வேண்டிய அவசியமில்லை.
அத்தோடு முழுமையான அரசியலமைப்பு வரைபு வரையப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அந்த வரைபு அமைச்சரவைக்கு அனுப்பப்படும். அமைச்சரவை சாதாரணமாக சட்டமொன்றை இயற்றுவதற்கான படிமுறைகளை கையாண்டு அதனை வர்த்தமானியில் பிரசுரிக்கும். அதன்
பின்னர் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கப்பெற்றதையடுத்து மக்களின் அனுமதிக்காக பொதுஜன வாக்கெடுப்பிற்கு விடப்படுமென அத்தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.
கேள்வி:- தற்போதைய சூழலில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் எந்த மட்டத்தில் உள்ளது?
பதில்:- அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டு வழிநடத்தல் குழுவொன்றை நியமித்தது. வழிநடத்தும் குழு தான் அரசியலமைப்பு வரைபை உருவாக்கி அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றது.
வழிநடத்தல் குழுவானது 12விடயங்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கொண்டது. அதில் அடிப்படை உரிமைகள், நீதித்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி, பொதுச் சேவை, மத்திய அரசாங்கத்துக்கும் – மாகாண சபைகளுக்கும் இடையிலான உறவு ஆகிய ஆறு விடயங்களை அடையாளம் கண்டு அவற்றை ஆறு உபகுழுக்களிடத்தில் பாரப்படுத்தியிருந்தது. அந்த உபகுழுக்கள் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.
எஞ்சியுள்ள ஆறு விடயங்கள் தொடர்பாகவும் வழிநடத்தும் குழு தானாகவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவை நிறைவடைந்த பின்னர் இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதாக இருந்தது. டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதாக இருந்தாலும் கூட சில கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம், 10ஆம் திகதிகளில் விவாதங்கள் நடைபெறுவதற்கு முன்னதாக அந்த அறிக்கைகள் வெளியிடப்படுமென நாம் நம்புகின்றோம். அனைத்து விடயங்களும் பேசப்பட்டு தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக கூறமுடியாது. சில முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக தீர்மானங்கள் இதுவரையில் மேற்கொள் ளப்படாதிருக்கின்றபோதும் அவ்விடயங் கள் சம்பந்தமாக நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருகின்றது.
அந்த பேச்சுக்களின் அடிப்படையில் வெவ்வேறு தெரிவுகள் மக்கள் முன்பாக சமர்ப்பிக்கப்படலாம் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே இடைக்கால அறிக்கையை வெளியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் இணங்கும் பட்சத்தில் எந்த மாதிரியான அரசியலமைப்பு சட்டத்தை அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றோம் என்பது தெரியவரும்.
கேள்வி:- புதிய அரசியலமைப்பு தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கும் என எந்த அடிப்படையில் எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருக்கின்றீர்கள்?
பதில்:- இந்த நாட்டில் உருவாக்கப்பட்ட குடியரசு அரசியல் யாப்புக்கள் இரண்டும் தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்களை புறந்தள்ளியே உருவாக்கப்பட்டுள்ளன. இனப் பிரச்சினை இவ்வளவு பூதாகரமாக எழுவ தற்கு அவைஅடிப்படையாக இருந்தன. அவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பானது தேசிய பிரச்சினைக்கு தீர்வை அளிப்பதையே பிரதான இலக்காக கொண்டு உருவாக்கப்படுகின்றது. உருவாக்கப்படும் அரசியலமைப்புச் சட்டமானது தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்காது ஏனைய விடயங்களை கொண்டிருக்குமாயின் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
கேள்வி:- உபகுழுக்களில் முரண்பாடான விடயங்கள் முன்மொழியப்பட்டனவா? அவை உள்வாங்கப்பட்டுள்ளனவா?
பதில்:- அனைத்துக் கட்சிகளும் உபகுழுக்களில் அங்கம் வகிக்கின்றன. சில உபகுழுக்களில் பொது எதிரணியினர் தங்களுடைய மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்தனர். அவை அந்தந்த அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ளன. சில உபகுழுக்களில் பொது எதிரணியினர் வழிநடத்தல் குழுவிற்கு நேரடியாக அறிக்கையை சமர்ப்பிப்பதாக கூறியிருந்தனர்.
உபகுழுக்களின் அறிக்கைகள் கிடைத்ததன் பின்னர் வழிநடத்தும் குழுவானது மாறுபட்ட கருத்துக்களை நேரடியாக அழைத்து அவர்களிடத்தில் கருத்துக்களை கேட்டறிந்தது. அதன்போதும் அறிக்கையொன்றின் மூலமாக தமது கருத்துக்களை வழங்குவோம் எனக் கூறியிருக்கின்ற போதும்
தற்போது வரையில் அவர்கள் அறிக்கையை கையளித்திருக்கவில்லை.
ஆகவே உபகுழுக்களின் அறிக்கைகள் அனைத்து கட்சிகளின் கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் அதேநேரம் வழிநடத்தல் குழுவில் அந்த அறிக்கைகளுக்கு எதிர்ப்புக்கள் இல்லாத நிலையிலே தான் அந்த அறிக்கைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
கேள்வி:- தேர்தல் முறைமை தொடர்பாக எவ்வாறான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருக்கின்றன?
பதில்:- தேர்தல் முறைமையை வழிநடத்தும் குழுவே கையாளுகின்றது. அந்த விடயம் சம்பந்தமாகத் தான் முதலாவதாக பேசப்பட்டது. தேர்தல் முறைமை சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றாலும்கூட தேர்தல்முறைமை சம்பந்தமாக உள்ள அடிப்படைக் கொள்கைகள் சார்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோட்பாட்டளவில் ஒரு கலப்பு தேர்தல் முறைமைக்கு சகல அரசியல் கட்சிகளும் இணங்கியுள்ளன.
எந்தெந்த விகிதாசாரத்தில் தொகுதி முறையும், பிரதிநிதித்துவ முறையும் அமையவேண்டும் என்பதில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு இரண்டாவது சபையை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது சபையை ஸ்தாபித்தல் என்ற விடயத்தில் குறிப்பாக மாகாண சபை பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: -இரண்டாவது சபையானது எவ்வாறு ஸ்தாபிக்கப்படும்?
பதில்:-இரண்டாவது சபை எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து இதுவரையில் முடிவான தீர்மானம் எடுக்கப்படவில்லை. இருப்பினும் ஒவ்வொரு மாகாண சபையிலிருந்தும் தலா ஐவர் தெரிவு செய் யப்படுவார்கள். அந்த ஐவரில் முதலமைச் சர் நிச்சயமாக இருக்க வேண்டும். அவர் உள்ளடங்கலாக மாகாண அமைச்சரவை அந்தஸ்து இல்லாதவர்களும் இக்குழுவில் இருக்க முடியும் என சிபாரிசு செய்யப்பட் டுள்ளது. அந்த அடிப்படையில் முதலமைச் சர் உட்பட தலா ஐவர் கொண்ட குழுவினர் இரண்டாவது சபைக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.
அதனைவிட பாராளுமன்ற தீர்மானத்திற்கு அமைவாக பத்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் அவ்வாறு தெரிவு
செய்யப்படுபவர்கள், பல்வேறு துறைகளில் தமது திறமைகளை காட்டியவர்கள், கட்சி அல்லது தேர்தல் அரசியலுக்குள் வர விரும்பாதவர்கள் ஆகியோரின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்ளும் விதமாக தெரிவுகள் இடம்பெறுவதற்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது.
கேள்வி:- புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என கூறப்பட்டாலும் அவ்வாறான அதிகாரங்கள் அனைத்தையும் பாராளுமன்றத்திற்கு வழங்குவதன் ஊடாக பிரதமர் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டவராகின்றாரே?
பதில்:- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படவேண்டும் என்ற கருத்துக்கு அனைத்துக் கட்சிகளும் இணங்கியுள்ளன. அதன்பிரகாரம் நிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு அதற்கு மாற்றீடாக உள்ளீர்க்கப்படவுள்ள முறைமைக்காக மூன்று யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
முதலாவதாக பிரித்தானியாவில் பின்பற்றப்படும் வெஸ்மினிஸ்டர் முறைமை காணப்படுகின்றது. இரண்டாவதாக பிரதமரை நேரடியாக மக்கள் தெரிவு செய்கின்ற முறை காணப்படுகின்றது. இந்த முறைமையை தொடர்பில் தான் அச்சமடைகின்றார்கள். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டாலும் அதற்கு ஈடாக பிரதமர் நிறைவேற்று அதிகாரத்தை கொள்கின்றார் என அச்சம் வெளியிடுகின்றார்கள். அது நியாயமானதொரு அச்சமடையக் கூடிய விடயம்.
மூன்றாவதாக முழுமையாக வெஸ்மினிஸ்டர் முறைமையும் இல்லாத இடைப்பட்ட முறையொன்று சிபார்சு செய்யப்பட்டுள்ளது. ஆதாவது பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும். இம்முறைமைகள் தொடர்பில் அரசியலமைப்பு பேரவையில் விரிவாக ஆராயப்படும்.
கேள்வி:- அரசியலமைப்பு நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கான சிபார்சு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான சாத்தியப்பாடுகள் எவ்வாறிருக்கின்றன?
பதில்:- இலங்கையில் அரசியலமைப்பு நீதிமன்றம் காணப்பட்டிருக்கின்றது. 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் அரசியலமைப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை சாத்தியமற்ற விடயமாக சொல்ல முடியாது.
என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாட் டின் பிரகாரம், உச்ச நீதிமன்றம் வழக்குகளினுடைய இறுதி நீதிமன்றமாக இறுதி மேன்முறையீடுகளை கையாளுகின்ற நீதிமன்றமாக இருக்கும்.
அரசியலமைப்பு சம்பந்தமான விடயங்களை, சட்ட மூலங்கள் சம்பந்தமான விடயங்களை வியாக்கியானப்படுத்துவதற்கு, பொருள்கோடல்களை கொடுப்பதற்கு மத்திக்கும் மாகாணத்திற்கும் அல்லது மாகாணங்களுக்கிடையில் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் தீர்ப்பதற்காக உயர் நீதிமன்றம் செயற்படுவதை விடவும் அதற்கென விசேட நீதிமன்றம் இருப்பது சிறந்தது.
http://www.virakesari.lk/article/14928
Posted December 31, 2016
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (04)
தொடர்ச்சி……
( ஆர். ராம்)
குறித்த நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை தவிரவும் அரசியலமைப்பு நிபுணத்துவம் வாய்ந்தவர்களை குறித்த அந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளாக ஐந்து வருடகாலத்திற்கு மாத்திரம் உள்ளடக்கியதாக ஏற்பாடுகளை செய்வது சிறந்ததாகும்.
கேள்வி:- அரசியலமைப்பு நீதிமன்றம் உருவாக்கப்படும் பட்சத்தில் உயர் நீதிமன்றத்தின் மீயுயர் தன்மை இழக்கப்படுகின்றதல்லவா?
பதில்:- ஆம். மீயுயர் தன்மை சிறிது வலுவிழக்கப்படும். ஆனாலும் தற்போதிருக்கின்ற நீதிமன்றக்கட்டமைப்பின் பிரகாரம் உயர்நீதிமன்றமே உயர்ந்தது. அரசியலமைப்பு பற்றிய பொருள்கோடலுக்கான அவசியம் ஏற்பட்டால் அதனை சீர் செய்யும் நீதிமன்ற நியாயாதிக்கம் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு மட்டுமே இருக்கும்.
ஆரம்பத்தில் அரசியலமைப்பு நீதிமன்றம் தொடர்பில் முன்மொழிகின்றபோது நீதிபதிகள் கூட விரும்பியிருக்கவில்லை. இருப்பினும் அது தொடர்பாக உபகுழுவில் கலந்துரையாடப்பட்டதையடுத்து அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆகவே இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வருகின்றபோது ஏனைய நாடுகளின் அனுபவங்களையும் கருத்திற்கொண்டே நடைமுறைப்படுத்துவோம்.
கேள்வி:- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மாற்றப்பட்டு பாராளுமன்றத்திற்கான அதிகாரம் ஏற்படுத்தப்படுகின்றபோது ஜனாதிபதி பதவி வெறுமனே கௌரவப்பதவியாகிவிடுமே?
பதில்:-ஆம்.பெயரளவிலேயே ஜனாதிபதி என்கின்ற நிலைமை தான் ஏற்படும். எமது நாட்டில் 1978ஆம் ஆண்டு வரையில் இருந்த நிலைமைக்கே மீண்டும் செல்வதாக இருக்கும்.
வரலாற்றை எடுத்துப்பார்க்கையில் நிறை வேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது இந்த நாட்டில் எதேச்சாதிகாரத்திற்கு தான் வழிகோலியிருக்கின்றது. முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன முதல் இறுதியாக மஹிந்த ராஜபக் ஷ வரையில் அதிகார துஷ்பிரயோகத்தை தான் மேற்கொண்டிருக்கின்றார்கள். இதில் விதிவிலக்காக சந்திரிகா பண்டாரநாயக்கவை சொல்ல முடியும்.
அதன் பிரகாரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மாற்றப்பட்டு பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறக்கூடிய நாட்டின் தலைவர் இருக்கவேண்டுமென்பதே பலரின் கருத்தாகின்றது.
அதுவொருபுறமிருக்கையில், எமக்குள்ள பிரதான பிரச்சினை மாகாண ஆளுநர்களின் அதிகாரங்கள். தற்போது இருக்கின்ற அரசியலமைப்பின் பிரகாரம் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு காணப்படும் நிறைவேற்று அதிகாரத்தினால் அவர் தன்னுடைய முகவராக உள்ள மாகாண ஆளுநர்களுக்கு அதிகளவான அதிகாரங்களை வழங்க முடியும் என 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு வழங்கப்பட்ட பொருள்கோடலில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படுகின்றபோது மாகாண ஆளுநர்களுக்கான அதிகாரம் நீக்கப்படுவதற்கும் வழியேற்படும். மாகாணங்களைப் பொறுத்தவரையில் ஆளுநர்கள் பெயரளவிலே இருப்பதோடு மக்களால் தெரிவு செய்யப்படுபவர்களிடத்தில் தான் மாகாண நிறைவேற்று அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். அவ்வாறு செய்கின்றபோது தான் அதிகாரங்கள் மக்கள் கையிலே பகிரப்பட்டதாக இருக்கும்.
கேள்வி:மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை உறுதி செய்வதற்காக செய்யப்பட்டுள்ள முன்மொழிவுகளின் பிரகாரம் அரசியல் பிரதிநிதியொருவரிடத்தில்(மாகாண முதலமைச்சரிடத்தில்) பொலிஸ் தரப்பை கையாளும் அதிகாரம் நேரடியாக கையளிக்கப்படுகின்றதே?
பதில்:- அரசியலமைப்பில் 13ஆவது திருத் தம் செய்யப்பட்டபோது இருந்த நிலைமை 17ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் மாறியிருந்தது. பொலிஸாரின் சுயாதீன தன்மை உறுதிப்படுத்தப்பட்டது. 18ஆம் திருத்தத்தின் ஊடாக மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இருப்பினும் 19ஆம் திருத்தத்தின் ஊடாக மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
பொலிஸ் பிரிவு சுயாதீனமாக இயங்க வேண்டுமென்பது நாடு பூராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் மாகாணத்தில் பொலிஸ் அதிகாரத்தை கொடுக்கின்றபோது அங்கே அரசியல் தலையீடுகள் ஏற்படுவதை யாரும் விரும்பாத விடயம்.
மத்தியில் எவ்வாறு சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு செயற்படுகின்றதோ அதேபோன்று மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களுக்கும் சுயாதீன தன்மை வழங்கப்பட்டு அதன் கீழே தான் பொலிஸ் தரப்பும் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முன்மொழிவே உபகுழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது 13ஆவது சரத் தில் காணப்படாததும் அதேநேரம் பொலிஸின் சுயாதீனத்தையும் உறுதிசெய்வது புதிய விடயமாகின்றது.
கேள்வி:-காணி அதிகாரங்கள் வழங்கப்படுவது குறித்து எவ்வாறான முன்னேற்றம் காணப்படுகின்றது?
பதில்:- காணி அதிகாரங்கள் சம்பந்தமான விடயங்களை நேரடியாக வழிநடத்தல் குழுவே கையாளுகின்றது. அது குறித்து ஆராயப்பட்டுள்ளபோதும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. 2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரால் புதிய அரசியலமைப்புக்கான நகல் வரைபொன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
அந்த வரைபில் எவ்வாறு காணி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு பகிரப்படலாம் என்பது கூறப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் சர்வ கட்சிகளின் திஸ்ஸ விதாரண அறிக்கையிலும் காணி அதிகாரங்கள் பற்றி அறிக்கை உண்டு. ஆகவே அவற்றையொட்டியதாகவே காணி அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான இறுதி வடிவம் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக மாகாணத்தின் அனுமதியின்றி காணிகளை மத்தி எவருக்கும் வழங்கலாம் என்ற தற்போதுள்ள முறைமை நிச்சயமாக தடுக்கப்படும்.
கேள்வி:- தற்போதைய சூழலில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் எந்த மட்டத்தில் உள்ளது?
பதில்:- அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டு வழிநடத்தல் குழுவொன்றை நியமித்தது. வழிநடத்தும் குழு தான் அரசியலமைப்பு வரைபை உருவாக்கி அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றது.
வழிநடத்தல் குழுவானது 12விடயங்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கொண்டது. அதில் அடிப்படை உரிமைகள், நீதித்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி, பொதுச் சேவை, மத்திய அரசாங்கத்துக்கும் – மாகாண சபைகளுக்கும் இடையிலான உறவு ஆகிய ஆறு விடயங்களை அடையாளம் கண்டு அவற்றை ஆறு உபகுழுக்களிடத்தில் பாரப்படுத்தியிருந்தது. அந்த உபகுழுக்கள் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.
எஞ்சியுள்ள ஆறு விடயங்கள் தொடர்பாகவும் வழிநடத்தும் குழு தானாகவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவை நிறைவடைந்த பின்னர் இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதாக இருந்தது. டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதாக இருந்தாலும் கூட சில கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம், 10ஆம் திகதிகளில் விவாதங்கள் நடைபெறுவதற்கு முன்னதாக அந்த அறிக்கைகள் வெளியிடப்படுமென நாம் நம்புகின்றோம். அனைத்து விடயங்களும் பேசப்பட்டு தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக கூறமுடியாது. சில முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக தீர்மானங்கள் இதுவரையில் மேற்கொள் ளப்படாதிருக்கின்றபோதும் அவ்விடயங் கள் சம்பந்தமாக நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருகின்றது.
அந்த பேச்சுக்களின் அடிப்படையில் வெவ்வேறு தெரிவுகள் மக்கள் முன்பாக சமர்ப்பிக்கப்படலாம் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே இடைக்கால அறிக்கையை வெளியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் இணங்கும் பட்சத்தில் எந்த மாதிரியான அரசியலமைப்பு சட்டத்தை அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றோம் என்பது தெரியவரும்.
கேள்வி:- புதிய அரசியலமைப்பு தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கும் என எந்த அடிப்படையில் எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருக்கின்றீர்கள்?
பதில்:- இந்த நாட்டில் உருவாக்கப்பட்ட குடியரசு அரசியல் யாப்புக்கள் இரண்டும் தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்களை புறந்தள்ளியே உருவாக்கப்பட்டுள்ளன. இனப் பிரச்சினை இவ்வளவு பூதாகரமாக எழுவ தற்கு அவைஅடிப்படையாக இருந்தன. அவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பானது தேசிய பிரச்சினைக்கு தீர்வை அளிப்பதையே பிரதான இலக்காக கொண்டு உருவாக்கப்படுகின்றது. உருவாக்கப்படும் அரசியலமைப்புச் சட்டமானது தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்காது ஏனைய விடயங்களை கொண்டிருக்குமாயின் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
கேள்வி:- உபகுழுக்களில் முரண்பாடான விடயங்கள் முன்மொழியப்பட்டனவா? அவை உள்வாங்கப்பட்டுள்ளனவா?
பதில்:- அனைத்துக் கட்சிகளும் உபகுழுக்களில் அங்கம் வகிக்கின்றன. சில உபகுழுக்களில் பொது எதிரணியினர் தங்களுடைய மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்தனர். அவை அந்தந்த அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ளன. சில உபகுழுக்களில் பொது எதிரணியினர் வழிநடத்தல் குழுவிற்கு நேரடியாக அறிக்கையை சமர்ப்பிப்பதாக கூறியிருந்தனர்.
உபகுழுக்களின் அறிக்கைகள் கிடைத்ததன் பின்னர் வழிநடத்தும் குழுவானது மாறுபட்ட கருத்துக்களை நேரடியாக அழைத்து அவர்களிடத்தில் கருத்துக்களை கேட்டறிந்தது. அதன்போதும் அறிக்கையொன்றின் மூலமாக தமது கருத்துக்களை வழங்குவோம் எனக் கூறியிருக்கின்ற போதும்
தற்போது வரையில் அவர்கள் அறிக்கையை கையளித்திருக்கவில்லை.
ஆகவே உபகுழுக்களின் அறிக்கைகள் அனைத்து கட்சிகளின் கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் அதேநேரம் வழிநடத்தல் குழுவில் அந்த அறிக்கைகளுக்கு எதிர்ப்புக்கள் இல்லாத நிலையிலே தான் அந்த அறிக்கைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
கேள்வி:- தேர்தல் முறைமை தொடர்பாக எவ்வாறான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருக்கின்றன?
பதில்:- தேர்தல் முறைமையை வழிநடத்தும் குழுவே கையாளுகின்றது. அந்த விடயம் சம்பந்தமாகத் தான் முதலாவதாக பேசப்பட்டது. தேர்தல் முறைமை சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றாலும்கூட தேர்தல்முறைமை சம்பந்தமாக உள்ள அடிப்படைக் கொள்கைகள் சார்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோட்பாட்டளவில் ஒரு கலப்பு தேர்தல் முறைமைக்கு சகல அரசியல் கட்சிகளும் இணங்கியுள்ளன.
எந்தெந்த விகிதாசாரத்தில் தொகுதி முறையும், பிரதிநிதித்துவ முறையும் அமையவேண்டும் என்பதில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு இரண்டாவது சபையை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது சபையை ஸ்தாபித்தல் என்ற விடயத்தில் குறிப்பாக மாகாண சபை பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: -இரண்டாவது சபையானது எவ்வாறு ஸ்தாபிக்கப்படும்?
பதில்:-இரண்டாவது சபை எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து இதுவரையில் முடிவான தீர்மானம் எடுக்கப்படவில்லை. இருப்பினும் ஒவ்வொரு மாகாண சபையிலிருந்தும் தலா ஐவர் தெரிவு செய் யப்படுவார்கள். அந்த ஐவரில் முதலமைச் சர் நிச்சயமாக இருக்க வேண்டும். அவர் உள்ளடங்கலாக மாகாண அமைச்சரவை அந்தஸ்து இல்லாதவர்களும் இக்குழுவில் இருக்க முடியும் என சிபாரிசு செய்யப்பட் டுள்ளது. அந்த அடிப்படையில் முதலமைச் சர் உட்பட தலா ஐவர் கொண்ட குழுவினர் இரண்டாவது சபைக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.
அதனைவிட பாராளுமன்ற தீர்மானத்திற்கு அமைவாக பத்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் அவ்வாறு தெரிவு
செய்யப்படுபவர்கள், பல்வேறு துறைகளில் தமது திறமைகளை காட்டியவர்கள், கட்சி அல்லது தேர்தல் அரசியலுக்குள் வர விரும்பாதவர்கள் ஆகியோரின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்ளும் விதமாக தெரிவுகள் இடம்பெறுவதற்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது.
கேள்வி:- புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என கூறப்பட்டாலும் அவ்வாறான அதிகாரங்கள் அனைத்தையும் பாராளுமன்றத்திற்கு வழங்குவதன் ஊடாக பிரதமர் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டவராகின்றாரே?
பதில்:- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படவேண்டும் என்ற கருத்துக்கு அனைத்துக் கட்சிகளும் இணங்கியுள்ளன. அதன்பிரகாரம் நிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு அதற்கு மாற்றீடாக உள்ளீர்க்கப்படவுள்ள முறைமைக்காக மூன்று யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
முதலாவதாக பிரித்தானியாவில் பின்பற்றப்படும் வெஸ்மினிஸ்டர் முறைமை காணப்படுகின்றது. இரண்டாவதாக பிரதமரை நேரடியாக மக்கள் தெரிவு செய்கின்ற முறை காணப்படுகின்றது. இந்த முறைமையை தொடர்பில் தான் அச்சமடைகின்றார்கள். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டாலும் அதற்கு ஈடாக பிரதமர் நிறைவேற்று அதிகாரத்தை கொள்கின்றார் என அச்சம் வெளியிடுகின்றார்கள். அது நியாயமானதொரு அச்சமடையக் கூடிய விடயம்.
மூன்றாவதாக முழுமையாக வெஸ்மினிஸ்டர் முறைமையும் இல்லாத இடைப்பட்ட முறையொன்று சிபார்சு செய்யப்பட்டுள்ளது. ஆதாவது பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும். இம்முறைமைகள் தொடர்பில் அரசியலமைப்பு பேரவையில் விரிவாக ஆராயப்படும்.
கேள்வி:- அரசியலமைப்பு நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கான சிபார்சு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான சாத்தியப்பாடுகள் எவ்வாறிருக்கின்றன?
பதில்:- இலங்கையில் அரசியலமைப்பு நீதிமன்றம் காணப்பட்டிருக்கின்றது. 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் அரசியலமைப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை சாத்தியமற்ற விடயமாக சொல்ல முடியாது.
என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாட் டின் பிரகாரம், உச்ச நீதிமன்றம் வழக்குகளினுடைய இறுதி நீதிமன்றமாக இறுதி மேன்முறையீடுகளை கையாளுகின்ற நீதிமன்றமாக இருக்கும்.
அரசியலமைப்பு சம்பந்தமான விடயங்களை, சட்ட மூலங்கள் சம்பந்தமான விடயங்களை வியாக்கியானப்படுத்துவதற்கு, பொருள்கோடல்களை கொடுப்பதற்கு மத்திக்கும் மாகாணத்திற்கும் அல்லது மாகாணங்களுக்கிடையில் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் தீர்ப்பதற்காக உயர் நீதிமன்றம் செயற்படுவதை விடவும் அதற்கென விசேட நீதிமன்றம் இருப்பது சிறந்தது.
http://www.virakesari.lk/article/14928
கேள்வி:- அரசியலமைப்பு நீதிமன்றம் உருவாக்கப்படும் பட்சத்தில் உயர் நீதிமன்றத்தின் மீயுயர் தன்மை இழக்கப்படுகின்றதல்லவா?
பதில்:- ஆம். மீயுயர் தன்மை சிறிது வலுவிழக்கப்படும். ஆனாலும் தற்போதிருக்கின்ற நீதிமன்றக்கட்டமைப்பின் பிரகாரம் உயர்நீதிமன்றமே உயர்ந்தது. அரசியலமைப்பு பற்றிய பொருள்கோடலுக்கான அவசியம் ஏற்பட்டால் அதனை சீர் செய்யும் நீதிமன்ற நியாயாதிக்கம் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு மட்டுமே இருக்கும்.
ஆரம்பத்தில் அரசியலமைப்பு நீதிமன்றம் தொடர்பில் முன்மொழிகின்றபோது நீதிபதிகள் கூட விரும்பியிருக்கவில்லை. இருப்பினும் அது தொடர்பாக உபகுழுவில் கலந்துரையாடப்பட்டதையடுத்து அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆகவே இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வருகின்றபோது ஏனைய நாடுகளின் அனுபவங்களையும் கருத்திற்கொண்டே நடைமுறைப்படுத்துவோம்.
கேள்வி:- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மாற்றப்பட்டு பாராளுமன்றத்திற்கான அதிகாரம் ஏற்படுத்தப்படுகின்றபோது ஜனாதிபதி பதவி வெறுமனே கௌரவப்பதவியாகிவிடுமே?
பதில்:-ஆம்.பெயரளவிலேயே ஜனாதிபதி என்கின்ற நிலைமை தான் ஏற்படும். எமது நாட்டில் 1978ஆம் ஆண்டு வரையில் இருந்த நிலைமைக்கே மீண்டும் செல்வதாக இருக்கும்.
வரலாற்றை எடுத்துப்பார்க்கையில் நிறை வேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது இந்த நாட்டில் எதேச்சாதிகாரத்திற்கு தான் வழிகோலியிருக்கின்றது. முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன முதல் இறுதியாக மஹிந்த ராஜபக் ஷ வரையில் அதிகார துஷ்பிரயோகத்தை தான் மேற்கொண்டிருக்கின்றார்கள். இதில் விதிவிலக்காக சந்திரிகா பண்டாரநாயக்கவை சொல்ல முடியும்.
அதன் பிரகாரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மாற்றப்பட்டு பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறக்கூடிய நாட்டின் தலைவர் இருக்கவேண்டுமென்பதே பலரின் கருத்தாகின்றது.
அதுவொருபுறமிருக்கையில், எமக்குள்ள பிரதான பிரச்சினை மாகாண ஆளுநர்களின் அதிகாரங்கள். தற்போது இருக்கின்ற அரசியலமைப்பின் பிரகாரம் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு காணப்படும் நிறைவேற்று அதிகாரத்தினால் அவர் தன்னுடைய முகவராக உள்ள மாகாண ஆளுநர்களுக்கு அதிகளவான அதிகாரங்களை வழங்க முடியும் என 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு வழங்கப்பட்ட பொருள்கோடலில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படுகின்றபோது மாகாண ஆளுநர்களுக்கான அதிகாரம் நீக்கப்படுவதற்கும் வழியேற்படும். மாகாணங்களைப் பொறுத்தவரையில் ஆளுநர்கள் பெயரளவிலே இருப்பதோடு மக்களால் தெரிவு செய்யப்படுபவர்களிடத்தில் தான் மாகாண நிறைவேற்று அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். அவ்வாறு செய்கின்றபோது தான் அதிகாரங்கள் மக்கள் கையிலே பகிரப்பட்டதாக இருக்கும்.
கேள்வி:மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை உறுதி செய்வதற்காக செய்யப்பட்டுள்ள முன்மொழிவுகளின் பிரகாரம் அரசியல் பிரதிநிதியொருவரிடத்தில்(மாகாண முதலமைச்சரிடத்தில்) பொலிஸ் தரப்பை கையாளும் அதிகாரம் நேரடியாக கையளிக்கப்படுகின்றதே?
பதில்:- அரசியலமைப்பில் 13ஆவது திருத் தம் செய்யப்பட்டபோது இருந்த நிலைமை 17ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் மாறியிருந்தது. பொலிஸாரின் சுயாதீன தன்மை உறுதிப்படுத்தப்பட்டது. 18ஆம் திருத்தத்தின் ஊடாக மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இருப்பினும் 19ஆம் திருத்தத்தின் ஊடாக மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
பொலிஸ் பிரிவு சுயாதீனமாக இயங்க வேண்டுமென்பது நாடு பூராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் மாகாணத்தில் பொலிஸ் அதிகாரத்தை கொடுக்கின்றபோது அங்கே அரசியல் தலையீடுகள் ஏற்படுவதை யாரும் விரும்பாத விடயம்.
மத்தியில் எவ்வாறு சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு செயற்படுகின்றதோ அதேபோன்று மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களுக்கும் சுயாதீன தன்மை வழங்கப்பட்டு அதன் கீழே தான் பொலிஸ் தரப்பும் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முன்மொழிவே உபகுழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது 13ஆவது சரத் தில் காணப்படாததும் அதேநேரம் பொலிஸின் சுயாதீனத்தையும் உறுதிசெய்வது புதிய விடயமாகின்றது.
கேள்வி:-காணி அதிகாரங்கள் வழங்கப்படுவது குறித்து எவ்வாறான முன்னேற்றம் காணப்படுகின்றது?
பதில்:- காணி அதிகாரங்கள் சம்பந்தமான விடயங்களை நேரடியாக வழிநடத்தல் குழுவே கையாளுகின்றது. அது குறித்து ஆராயப்பட்டுள்ளபோதும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. 2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரால் புதிய அரசியலமைப்புக்கான நகல் வரைபொன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
அந்த வரைபில் எவ்வாறு காணி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு பகிரப்படலாம் என்பது கூறப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் சர்வ கட்சிகளின் திஸ்ஸ விதாரண அறிக்கையிலும் காணி அதிகாரங்கள் பற்றி அறிக்கை உண்டு. ஆகவே அவற்றையொட்டியதாகவே காணி அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான இறுதி வடிவம் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக மாகாணத்தின் அனுமதியின்றி காணிகளை மத்தி எவருக்கும் வழங்கலாம் என்ற தற்போதுள்ள முறைமை நிச்சயமாக தடுக்கப்படும்.
கேள்வி:- மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் அதிகார எல்லை தொடர்பாக குழப்பங்கள் ஏற்படுவதற்கு காரணமாகவிருக்கும் ஒத்திசைவு பட்டியல் நீக்கப்படுமா?
பதில்:- ஒத்திசைவுப்பட்டியல் நீக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் ஏகோபித்த நிலைப்பாடாக இருக்கின்றது. குறிப்பாக பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல கூட தனது அறிக்கையில் ஒத்திசைவுப்பட்டியல் நீக்கப்படவேண்டுமென கோரியிருந்தார். இருப்பினும் அந்த அறிக்கையை அவர் மீளப்பெற்றுவிட்டார். சந்திரிகாவின் வரைவு, திஸ்ஸ விதாரண அறிக்கை, தற்போதைய உபகுழுக்களின் பரிந்துரை அறிக்கைகள் என எதிலும் ஒத்திசைவு பட்டியல் பற்றி குறிப்பிடப்படவில்லை.
தேசிய கொள்கை என்பது அதிகாரப்பகிர்வுக்கு தடங்கலான விடயமாக உள்ளது என்பதை எமது அனுபவத்தில் கண்டிருக்கின்றோம். இருப்பினும் சில விடயங்களில் தேசிய கொள்கை அவசியமாகின்றது. தேசிய கொள்கையானது துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தாலும் கூட அத்தியாவசியமாக இருக்கின்றது. ஜேர்மனி போன்ற நாடுகளில் ஒத்திசைவு பட்டியலில் இருக்கின்ற விடயங்கள் தொடர்பாகத் தான் தேசியக் கொள்கை இயற்றப்பட முடியும் என்றொரு ஒழுங்கு முறைமை உள்ளது.
அவ்வாறான சில தேவைப்பாடுகளுக்காக ஒரு ஒத்திசைவு பட்டியலை ஏற்படுத்தினால் அது பாதகமில்லை என்ற சிந்தனை களும் உள்ளன. ஆகவே ஒத்திசைவு பட்டியல் முழுமையாக நீக்கப்படுமா இல்லையா என்பதை தற்போது கூறமுடியாது. ஆனால் ஒத்திசைவு பட்டியல் உருவாக்கப்படுமாக இருந்தால் நாடு பூராகவும் தேசிய கொள்கை ஒன்று காணப்படவேண்டும் என்ற அவசியம் காணப்படும் பட்சத்திலேயே அதனை இணைத்துக்கொள்வதற்கு இணங்குவோம்.
கேள்வி:- ஒற்றையாட்சிக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு த.தே.கூ இணங்கிவிட்டதா? ஒற்றையாட்சி சொற்பதம் புதிய சாசனத்திலும் இருக்குமா?
பதில்:- ஒற்றையாட்சிக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கி விட்டதாக சில அமைச்சர்கள் கூறியபோது அதனை உடனடியாக நாம் மறுத்திருக்கின்றோம். அதன் பின்னர் அந்த அமைச்சர்கள் இல்லை நீங்கள் எவ்வாறு இணங்கினீர்கள் என வாதிடவும் இல்லை. நிரூபிக்கவும் இல்லை.
வழிநடத்தல் குழுவில் ஒற்றையாட்சி விடயம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. அதன்போது பிரதமரே தான் ஒற்றையாட்சிக்கு எதிரானவர் எனக் கூறியிருக்கின்றார். பிரதமரின் அவ்வாறான கூற்றை முன்வைப்பதற்கான காரணங்கள் வேறாக இருக்கின்றன.
ஒற்றையாட்சி முறைமை உள்ள நாடொன்றில் சாதாரண சட்டமொன்றினாலேயே நாட்டை பிரித்துக்கொடுக்க முடியும். கூட்டாட்சியால் அவ்வாறு முடியாது எனபதே பிரதமரின் கூற்றுக்கான காரணமாகும்.
நாட்டை பிளவுபடுத்தும் ஒற்றையாட்சியையா நீடிக்க வேண்டுமென கோருகின்றீர்கள் எனவும் பிரதமர் வழிநடத்தல் குழுவில் கேள்வியெழுப்பியிருந்தார். இதே கருத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதும் பிரதமர் கூறியிருந்தார்.
அச்சமயத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், நீங்கள் ஒற்றையாட்சியை எதிர்ப்பதற்கான காரணம் வேறு. நாங்கள் எதிர்ப்பதற்கான காரணம் வேறு எனச் சுட்டிக்காட்டினார்.
அச்சமயத்தில் பிரதமர், நீங்கள் என்ன காரணத்திற்காக எதிர்த்தாலும், நான் என்ன காரணத்திற்காக எதிர்த்தாலும் நாங்கள் ஒற்றையாட்சிக்கு எதிரானவர்கள் என்று பதிலளித்திருந்தார்.
இவ்வாறிருக்கையில் ஒற்றையாட்சி என்ற சொற்பிரயோகம் குறித்து நாங்கள் தீர்க்கமாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். ஏனென்றால் சிங்கள மக்கள் மத்தியில் இதுவரையில் நடத்தப்பட்ட பல்வேறு கருத்து அறியும் செயல்வடிவங்களில் பெரும்பான்மையானவர்கள் ஒற்றையாட்சி இருக்கவேண்டும் என்று கூறியிருக்கின்றார்கள்.
அவர்களிடத்தில் நீங்கள் எதற்காக ஒற்றையாட்சியை எதிர்க்கின்றீர்கள் எனக் கேள்வியெழுப்புகின்றபோது, நாடு பிரிவடைந்துவிடும் என்பதால் தான் அவ்வாறு கூறுகின்றோம் எனவும் அந்த மக்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
சிங்கள மொழியில் ஒற்றையாட்சி என்பதற்கு ‘ஏக்கிய ரஜய’ என்ற சொல்லே பயன் படுத்தப்படுகிறது. அந்த சொல் ஆட்சி முறையைக் குறிக்கும் சொற்பிரயோகம் அல்ல. அது நாடு ஒன்றாக இருக்கின்றது என்பதைக் குறிக்கும் சொற்பிரயோகமாகும்.
http://www.virakesari.lk/article/15020
January 7, 2017
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்
(நேற்றைய தொடர்ச்சி)
புதிய அரசியல் சாசன உருவாக்கத்திற்காக அரசியலமைப்புச் சபையால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான வழிநடத்தல் குழுவின் அங்கத்தவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய அரசியலமைப்பின் விடயதானங்கள், விட்டுக்கொடுப்பற்ற மனநிலையில் உள்ள தென்னிலங்கை தலைவர்களிடமிருந்து தேசிய பிரச்சினைக்கான தீர்வு புதிய சாசனத்தினூடாக கிடைக்குமா என இயல்பாக எழுகின்ற வினாக்கள், பொதுமக்களின் சந்தேகங்கள் தொடர்பில் கருத்துக்களை பதிவு செய்தார்.
தமிழ் மொழியில் ஒற்றை ஆட்சி எனக் கூறப்படுகின்றது. அதன் பிரகாரம் அதிகாரங்கள் அனைத்தும் ஒரு இடத்திலே குவிக்கப்பட்டிருப்பவை அதாவது ஆங்கிலத்தில் யுனிற்றரி (unitary) என்ற சொற்பிரயோகத்திற்கு ஒவ்வான சொல்லாகவே காணப்படுகின்றது.
ஏக்கிய ரஜய என்பதன் அர்த்தத்தின் பிரகாரம் அதனை பயன்படுத்துவதில் எமக்கு எதிர்ப்பிருக்கமுடியாது. ஆனால் தமிழில் ஒற்றையாட்சி எனவும், ஆங்கிலத்தில் யுனிற்றரி (unitary) எனவும் பயன்படுத்த முடியாது என்பதே எமது நிலைப்பாடு.
இருப்பினும் ஏக்கிய ரஜய என்பதன் உண்மையான அர்த்தத்திற்கு அப்பால் 1972ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரைக்கும் unitary state என்பதற்கு இணையாக அச்சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதன் காரணத்தால் அச்சொற்பதத்தின் வரைவிலக்கணமும் அதற்கருகிலேயே சொல்லப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
அதாவது ஏகிய ரஜய என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதால் அதன் அர்த்தம் ஒரு பிரிக்க முடியாத நாட்டை குறிப்பதாக இருக்கும் என்பது உறுப்புரையில் கூறப்பட வேண்டும். ஆட்சி முறை பற்றி கூறுவதாக அச்சொற்பதம் இருக்கக்கூடாது. ஆட்சிமுறை என்பது ஒற்றையாட்சி என வரக்கூடாது என்பதே என்பதே எமது நிலைப்பாடு.
ஆனால் சொற்பிரயோகத்தால் மட்டும் அதனை அடைந்துவிடமுடியாது. ஓஸ்ரியா நாட்டின் அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என கூறப்பட்டிருந்தாலும் அங்கு சமஷ்டி ஆட்சியே நடைபெறுகின்றது. ஸ்பெயினில் ஒற்றையாட்சி என எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் சமஷ்டி ஆட்சிமுறையே நடைபெறுகின்றது.
ஆகவே வெறுமனே பெயர்ப் பலகையைப்போட்டுவிட்டு திருப்தி அடைய முடியாது. உள்ளடக்கம் சரியாக அமையவேண்டும். அதற்காக உபயோகிக்கப்படும் சொற்பிரயோகங்களில் நாம் கவனம் செலுத்தாமலில்லை. விசேடமாக உள்ளடக்கப்படும் சொற்பிரயோகங்கள் குறித்து நீதிமன்றங்கள் பொருள்கோடல் செய்யும்போது ஒற்றையாட்சி முறை என நியாயாதிக்கம் செய்யாத வகையிலேயே அமையவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகின்றோம்.
கேள்வி:- சமஷ்டி தீர்வை முன்வைத்து ஆணைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அச்சொற்பதத்தை புதிய அரசியலமைப்பில் நேரடியாக பயன்படுத்துமாறு அழுத்தமளிக்கின்றதா?
பதில்:– சமஷ்டி என்ற சொற்பதத்தை பிரயோகிக்க வேண்டும் என்று நாங்கள் அழுத்தமளிக்கவில்லை. நாம் தற்போது எடுத்துக்கொண்டது திடீர் நிலைப்பாடு அல்ல. பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே நான் பகிரங்கமாக கூறியிருந்திருக்கின்றேன்.
யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமாருடன் நடைபெற்ற விவாதமொன்றிலும் பெயர்ப்பலகைகளால் மட்டும் நம்பிக்கை வைக்கவில்லை. உள்ளடக்கம் சரியாக இருக்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றேன்.
சமஷ்டி என்பதில் இரண்டு முக்கியமான அம்சங்கள் உண்டு. ஓரு விடயம் சம்பந்தமாக மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டால் அந்த விடயம் சம்பந்தமாக மத்தி அதற்கு பின்னர் தலையிடக்கூடாது. அவ்வாறு கொடுக்கப்பட்ட மாகாணத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்தி தானாகவே திரும்பி பெற்றுக்கொள்ளாதவாறு இருக்க வேண்டும்.
இந்த இரண்டு அம்சங்களும் காணப்படுமாயின் அது சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி முறையே. இந்த இரண்டு முக்கிய அம்சங்களும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவதுதான் எமது பிரதான நோக்கமாகவுள்ளது. சமஷ்டி என்ற பெயர்ப் பலகையை மட்டும் எழுதி ஒட்டப்படவேண் டும் என்பது நோக்கமல்ல.
கேள்வி:- புதிய அரசியலமைப்பு உருவாக் கப்படும் பயணத்தில் வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா?
பதில்:- இந்தப் பயணத்தில் சாத்தியமாகும். ஆனால் உடனடியாக சாத்தியமாகாது. இந்த வருடத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமாகவிருந்தால் உடனடியாக வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமாகாது. அதற்கான சாத்தியக் கூறுகளும் அரிதாகவே உள்ளது என்பது தான் உண்மையான எனது பதிலாகும்.
அதற்கு காரணம் முஸ்லிம்களின் நிலைப்பாடு அதற்கு எதிராக இருக்கின்றது. முஸ்லிம் மக்கள் எடுக்கும் நிலைப்பாடு தொடர்பில் நாம் சரியாக அணுகவேண்டும். அவ்வாறு சரியாக அணுகும் பட்சத்திலேயே தான் சிறிது காலம் தள்ளியேனும் வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமாகும்.
ஆகவே நாம் முஸ்லிம்களின் கருத்தை நிராகரித்து வடக்கு, கிழக்கு இணைக்கப்படவேண்டும் என முரண்டு பிடிப்போமாகவிருந்தால் தமிழ், முஸ்லிம் உறவு மேலும் விரிசலடைந்து விடும்.
போர்க்கால சூழலில் தமிழ், முஸ்லிம் உறவு பாதிக்கப்பட்டமையால் தான் தற்போது வடக்கு, கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமாகாதுள்ளது. ஆகையினால் யாரையும் குறை கூறிக்கொண்டிருக்காது அடுத்து எவ்வாறு நகரமுடியும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து முஸ்லிம் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். அவர்களுடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்பது, இணைப்புக்கு எதிரானது அல்ல. ஆனால் முஸ்லிம் மக்களுக்கு காணப்படும் பலவிதமான பயங்கள், சந்தேகங்களின் அடிப்படையில் உடனடியாக இணங்க மறுக்கின்றார்கள்.
ஆகவே குறைந்த காலத்தினுள் வடக்கு, கிழக்கு இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை வைத்துக்கொண்டு அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். தமிழ், முஸ்லிம் உறவு பாதிக்கப்படாத நிலையிருந்த 1987ஆம் ஆண்டில் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டபோது கூட ஒரு வருடத்தினுள் கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. ஆகவே முஸ்லிம்களின் அங்கீகாரம் இல்லாது அதனை சாத்தியப்படுத்த முடியாது.
தமிழ், முஸ்லிம் உறவை சீர்செய்யும் நோக்கில் தான் கிழக்கு மாகாண சபையில் எமக்கு பதினொரு உறுப்பினர்கள் இருந்தபோதும் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்து ஒரு கூட்டாட்சியை நடத்திக்கொண்டிருக்கின்றோம். இவை எல்லாம் இழந்து விட்ட நம்பிக்கையை மீளப்பெறுவதற்கான சில வழிமுறைகள். ஆகவே இந்த அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதும் வடக்கு, கிழக்கு உடனடியாக வந்துவிடும் என்று பொய்கூறுவதற்கு நான் விரும்பவில்லை.
கேள்வி:- வடக்கு, கிழக்கு இணைந்திருக்கின்ற பட்சத்தில் முஸ்லிம்களுக்கு கரையோர நிர்வாக அலகொன்று உருவாக்கப்பட்டு வழங்கப்படவேண்டும் என்பதை தந்தை செல்வா உட்பட அனைத்து தமிழ்த் தலைவர்களும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அந்த நிலைப்பாட்டிலிந்து நீங்கள் விலகி நிற்கின்றீர்களா?
பதில்:- நாங்கள் அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. முஸ்லிம் பிரதிநிதிகளும் மாறவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் உடன்பாடுகள் எட்டப்பட்டன. அந்த உடன்பாடுகளை நாம் தற்போதும் ஏற்றுக்கொள்கின்றதாக காணப்படுகின்றது.
இருப்பினும் சிலர் தற்போது இணைப்பு இல்லாத நிலையில் அதனைப் பற்றி ஏன் பேசவேண்டும் எனக் கருதுகின்றார்கள். எவ்வாறாயினும் வடக்கு, கிழக்கு இணைக்கப்படுகின்றபோது தனியான முஸ்லிம் அலகு வழங்கப்படுவதை எதிர்க்கவில்லை. அதற்கு முழுமையான இணக்கம் தெரிவிப்போம். இருப்பினும் அதற்கான உடனடிச் சூழல் இல்லை.
கேள்வி:- தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக திம்பு முதல் ஒஸ்லோ வரையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஒன்று காணப்பட்டது. தற்போது உள்ளக, சர்வதேச அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்துக்கும், கூட்டமைப்பிற்கும் இடையிலான நேரடிப்பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியமா? தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா?
பதில்:- தற்போது அனைத்துக் கட்சியினரும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தைகளை வழிநடத்தல் குழுவில் நடத்துகின்றோம். இந்த பேச்சுவார்த்தைகள் மிகவும் பகிரங்கமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
சில சமயங்களில் வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களுடன் நாங்கள் பேச்சு நடத்தியுள்ளோம். அவ்வாறான பேச்சுக்கள் தான் இடம்பெறுகின்றன. அதனைவிடுத்து அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான நேரடியான பேச்சொன்று ஆரம்பிக்கப்படவில்லை.
தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில் மூன்றாவது தரப்பு இருக்கின்றது என்ற தேவை இல்லாத நிலையில் தான் இருக்கின்றோம். ஏனென்றால் நேரடியாகவே நாம் ஒருவரோடு ஒருவர் பகிரங்கமாக பேசக்கூடிய சூழல் இருக்கின்றது.
சர்வதேச சமூகத்திற்கு தமிழ் மக்களுக்கு எவ்வாறான விடயங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது நன்கு தெரிந்தவிடயம். அதேநேரம் நாம் சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம். அவர்கள் அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம். அவர்கள் அரசாங் கத்துடனும் பேசுகின்றனர்.
ஆகவே வெளிநாட்டுத்தலையீடு அர சாங்க, கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் இருக்கின்றது என்று சிங்கள மக்களுக்கு பயம் காட்ட வேண்டிய தேவை தற்போதைக்கு இல்லை. எங்களுக்குள்ளே பேசித் தீர்க்க கூடிய நிலைமை இருக்கின்றது என்பது தான் சிறப்பு. ஆனால் சர்வதேசத்தின் முழுமையான ஈடுபாடும் இப்பணிகளில் இருக்கின்றது.
தொடரும்
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-07#page-4
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-14#page-5
July 8, 2017
புதிய அரசியல்சாசனத்திற்கான சரித்திர பயணம்….08
புதிய அரசியலமைப்பிற்கான சரித்திரப்பயணம் என்ற இப்பகுதி வாராவாரம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தொடர்ச்சியாக பிரசுரமாகும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக இந்த நாட்டின் புதியதொரு அரசியலமைப்பிற்கான செயற்பாடுகள் எவ்வாறான நிலைமைகளில் உள்ளன என்பதை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதை பிரதான நோக்காக கொண்டே இத்தொடர் உருவாகியிருந்தது.
புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக அரசியலமைப்பு பேரவையினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான வழிநடத்தல் குழுவின் 21அங்கத்தவர்களின் கருத்துக்களை மையப்படுத்தியதாக இப்பகுதி முன்னெடுக்கப்பட்டது.
இருப்பினும் வழிநடத்தல் குழுவில் கலந்துரையாடப்படும் விடயங்கள் உட்பட புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதில் பல்வேறு தரப்பினரிடத்திலிருந்தும் கிடைக்கப்பெறும் முன்மொழிவுகள், ஆலோசனைகளை உடனடியாக வெளிப்படுத்துவதில்லை என்ற ஏக முடிவுக்கு வழிநடத்தல் குழு உறுப்பினர்கள் வந்திருந்தமையின் காரணத்தால் வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் கருத்துப்பதிவுகளின் பின்னர் ஏனைய வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களை அணுகியபோது அவர்கள் தமது கூட்டுப்பொறுப்பை விட்டு விலக முடியாது என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டதன் காரணத்தால் இப்பகுதியை தொடர்ந்தும் முன்னகர்த்த முடியாதவொரு நிலைமை ஏற்பட்டிருந்தது.
எனினும் தற்போதைய நிலைமையில் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு கருத்துப்பரிமாற்றங்கள் நடைபெற்று இந்த நாட்டின் சங்கைக்குரிய தேரர்களே களமிறங்கியுள்ளனர். இந்த நிலைமையில்தான் மீண்டும் இப்பகுதியை தொடரவேண்டி ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் உண்மையில் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டதிலிருந்து கடந்த வியாழக்கிழமையுடன் 65அமர்வுகளை மேற்கொண்டுள்ள அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவில் நடைபெற்றது என்ன?
வழிநடத்தல் குழுவிற்கு உதவிகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமைகள், நீதித்துறை, சட்டம் ஒழுங்கு, பொதுநிதி, பொதுச்சேவை, மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைக்கும் இடையிலான உறவு ஆகிய தலைப்புக்களின் கீழாக அமைக்கப்பட்ட உபகுழுக்கள் வழங்கிய இறுதி அறிக்கைகளுக்கு நடந்தது என்ன? போன்ற பல கேள்விகள் எழுந்திருக்கின்றன.
நாட்டின் பிரதான பௌத்த பீடங்களான மல்வத்த, அஸ்கிரிய, ராமாஞ்ய நிக்காய, அமரபுர நிக்காய ஆகிய நான்கு பீடங்களும் புதிய அரசியலமைப்போ அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பில் சீர்திருத்தங்களோ அவசியமில்லை என கூட்டாக தீர்மானித்து திடீர் அறிவிப்பொன்றையும் 05.-07-.2016 புதன்கிழமை அன்று விடுத்திருந்தன.
ஒன்றரை வருடங்களாக இடம்பெற்று வரும் அரசியலமைப்புச் செயற்பாடுகள் தொடர்பில் மௌனமாக இருந்த மகாசங்கத்தினரின் திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்ன?
27-.06-.2017 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தென்னாபிரிக்கவின் அரசியலமைப்பு செயற்பாடுகளில் ஈடுபட்ட தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதித் தலைமை நீதிபதி மொசெனேகோ பிரதம அதிதியாக கலந்துகொண்ட அரசியலமைப்பு மறுசீரமைப்பு குறித்து நடத்தப்பட்ட மாநாட்டுக்கு பௌத்த மகாசங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை என வெளியான தகவல்களா? இல்லை வேறேதும் பின்னணிகள் இருக்கின்றனவா? என்ற கேள்விகள் மேலெழுகின்றன.
குறிப்பாக புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் கூட்டம் 05-.07-.2017 புதன்கிழமை பிற்பகல் 2.30 க்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு குறித்து நடத்தப்பட்ட மாநாட்டுக்கு பௌத்த மகாசங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை என்பது பொய்யான விடயம் என்பது தெளிவுபடுத்தப்பட்டு வழிநடத்தல் குழுவின் செயலாளர் நீல் இத்தவெல்ல அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
ஆக மகாசங்கத்தினரின் இத்திடீர் அறிவிப்பில் நிச்சயமாக வேறொரு பின்னணி இருக்கின்றது என்பது தெட்டத்தெளிவாக புலனாகின்றது. அவை அரசியல் காரணங்களாக இருந்தால் நிச்சயமாக மிகவும் பாரதூரமான விடயமொன்றாகவே பார்க்கப்பட வேண்டியதொன்றாகின்றது.
இந்த நிகழ்வுகளுக்கு அடுத்த தினமான 06-.07-.2017 வியாழக்கிழமை அன்று இரண்டு நிகழ்வுகள் சமாந்தரமாக நிகழ்ந்தன. முதலாவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அமைச்சர் விஜயதாஸ, மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க சகிதம் சியம் மகா நிக்காயவின் மல்வத்து பிரிவின் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரர், அஸ்கிரிய பிரிவின் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரர், ராமஞ்ஞ நிக்காயவின் நாபான பேமசிறி மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரைச் சந்தித்தனர்.
இச்சமயத்தில், புதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை தயாரிப்பதாயினும் அது தொடர்பாக மதிப்பிற்குரிய மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தி அவர்களது கருத்துக்களும் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படும்.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக எந்தவொரு இறுதி ஆவணமும் இதுவரை தயாரிக்கப்படவில்லை.புதிய அரசியலமைப்பு பற்றிய கலந்துரையாடல் தற்போது நாட்டில் நடைபெறுகிறது. அரசினால் அத்தகைய சட்டமூலமொன்று தயாரிக்கப்படுமாயின் நாட்டின் எதிர்கால நன்மை மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பாக ஆழமாக ஆய்வுசெய்யப்பட்டதன் பின்னரே அது தயாரிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தொடரும்...
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-08#page-4
Posted July 15, 2017
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்
நேற்றைய தொடர்ச்சி…
நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித்தலைவர் போன்ற பதவிகள் பல்லினம் வாழும் ஒரு நாட்டில் ஒரு சமூகத்தினை மட்டுமே மையப்படுத்தியதாக இருக்க முடியாது. அந்த பதவிகளில் உள்ளவர்கள் தம்மை சமூகம், மதம், மொழி சார்ந்து வரையறை செய்துகொள்ளவும் முடியாது. அவர்கள் நாட்டில் உள்ள அனைத்து தேசிய இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள். ஆகவே பிரதமர் வெளிப்படுத்தி நிற்கும் கருத்தானது ஒரு சமூகத்தினை, மதத்தினை மையப்படுத்தியதாக இருக்கின்றமையானது புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டில் அவரின் பக்கச்சார்பற்ற, சுயாதீன செயற்பாடுகள் குறித்தும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.
மக்களால் ஆணை வழங்கப்பட்டவர்கள் தமது மக்களுக்கான அபிலாஷைகளை மையமாக வைத்தே செயற்படுகின்றார்கள். அதனடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பினை உருவாக்குகின்றார்கள். அதற்கு அப்பால் மக்களின் கருத்துக்களும் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட குழுவால் உள்வாங்கப்பட்டு கருத்திற்கொள்ளப்படுகின்றது. ஆகவே தற்போது உருவாக்கப்பட்டு வரும் அரசியலமைப்பு என்பது முழுமையாகவே மக்களால் தமக்காக உருவாக்கப்படும் அரசியலமைப்பு என்று நியாயாதிக்கம் கற்பிக்கப்படுகின்றது.
ஆனால் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் வழிநடத்தல் குழுவின் தலைவரின் மேற்படி கருத்துக்கள் அந்த நியாயாதிக்கத்திற்கு நேரெதிராகவே அமைகின்றன. அதேநேரம் இக்கருத்துக்கள் மக்கள் பிரதிநிதிகள் உருவாக்கப்படும் அரசியலமைப்பு என்பது மக்களால் உருவாக்கும் அரசியலமைப்பு என்ற கோட்பாட்டிற்கு அப்பால் அதற்கு மாற்றான சிந்தனையையும் முன்மொழிவை செய்வதற்கு வழிவகுத்திருக்கின்றது.
அதாவது, நாட்டின் மீது உண்மையான பற்றுள்ள அரசியல் சாயமற்ற முழுக்க முழுக்க நாடு, பிரஜைகள் சார்ந்து அரசியல், பொருளாதாரம், சமூகம் குறித்து சிந்திக்கவல்ல புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். இக்குழுவில் தமது அரசியலுக்கு அப்பால் சிந்திக்கும் முற்போக்கான மக்கள் பிரதிநிதிகள் பங்குபற்றுவார்களாயின் அதனை ஏற்றுக்கொள்ளொள்ளமுடியும்.
மேற்படி குழுவானது மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய தரப்பினரால் முன்மொழியப்படும் கருத்துக்கள், மக்களினால் முன்மொழியப்படும் கருத்துக்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி ஆராய்ந்தறிந்து வரைபொன்றை தயாரித்து மக்கள் அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு முன்னுதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொள்ள முடியும்.
இந்தியாவில் அரசியலமைப்பு உருவாக்கச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோது, அரசியலமைப்பு சபையின் தலைமையை சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான டாக்டர் ராம்ஜி அம்பேத்கர் ஏற்றுக்கொண்டிருந்தாலும் அரசியலமைப்பிற்கான ஆறு பேர் கொண்ட வரைவுக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அக்குழுவில் தமது அரசியல் நலனையோ அல்லது மீண்டும் அரசியலுக்கு வரவேண்டுமென்ற சிந்தனையையோ கொண்டிருக்காத புத்திஜீவிகள், நிபுணர்கள் காணப்பட்டிருந்தனர்.
ஆகவே நாட்டின் பிரஜைகள், எதிர்காலம் ஆகியவற்றை மையமாக கொண்டு புதிய அரசியலமைப்பொன்றுஉருவாக்கப்படுகின்றது என்றால் அமெரிக்கா, பிரித்தானியா, தென்னாபிரிக்கா, ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து என பலதரப்பட்ட நாடுகளின் அரசியலமைப்பு விடயங்களை ஆராய்வதற்கு முன்னதாக அயல் நாடான இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அடித்தளத்தினை சரியாக இட்டுக்கொள்வது அவசியமானது.
தற்போது காலம் கடந்து விட்டது என்றாலும் சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர் என்ற அம்பேத்கரின் சிந்தனையின் பால் அரசியலமைப்புசபையின் உறுப்பினர்கள் செயற்படுவார்களா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.
இதேநேரம் பாராளுமன்றத்தில் கடற்தொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் திருத்த சட்டமூலம் மற்றும் வணிக கப்பற் தொழில் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாவதங்கள் இடம்பெற்ற தினத்தன்று புதிய அரசியலமைப்பு குறித்து பிரதமர் ரணில், எதிர்க்கட்சி பிரதம கொறடா அநுரகுமார திஸாநாயக்க எம்.பி., தினேஷ் குணவர்த்தன எம்.பி. ஆகியோருக்கிடையிலான வாதப்பிரதிவாதங்களை அடுத்து உரையாற்ற ஆரம்பித்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி., மீண்டும் தினேஷ் குணவர்த்தன எம்.பி. ஆரம்பித்த இடத்திலிருந்து தொடர்ந்தார்.
அவர், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதிய அரசியலமைப்புக்காக இடைக்கால அறிக்கை வரைவு கலந்துரையாடப்பட்டுள்ளது. இதோ என் கையில் அந்த ஆவணம் இருக்கின்றது என்று மீண்டும் கருத்துக்களை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.
இச்சமயத்தில் சபையிலிருந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் அதற்கு பதிலளித்து விட்டார். ஆந்த விடயம் முடிந்து விட்டது எனக் கூறினார். இருப்பினும் மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி அந்த விடயத்தினை விடுவதாக இல்லை.
அச்சமயத்தில் புதிய அரசியலமைப்புக்காக இன்னமும் ஒரு சரத்துக் கூட எழுதவில்லை. இடைக்கால வரைவு கூட எழுதப்படவில்லை. இதனை வழிநடத்தல் குழுவின் அங்கத்தவர் என்ற அடிப்படையில் பொறுப்புடன் பதிலளிக்கின்றேன் என்றார்.
இச்சமயத்தில், நீங்கள் சபையிலேயே நித்திரை கொள்கின்றீர்கள். அப்படித்தான் வழிநடத்தல் குழுவிலும் நித்திரையில் இருந்த நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கலாம் என நகைச்சுவையாக கூறிய மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி. தனது உரையை தொடர்ந்திருந்தார். சபை முதல்வரும், அமைச்சரும், வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான லக் ஷ்மன் கிரியெல்லவின் கூற்றின் பிரகாரம் எந்தவொரு வரைவும் தயாரிக்கப்படவில்லை. ஓரு வாசகம் கூட எழுதப்படவில்லை என்றால் வழிநடத்தல் குழுவின் 65 அமர்வுகள் எதற்காக செய்யப்பட்டன. வழிநடத்தல் குழுவினால் நியமிக்கப்பட்ட ஆறு உபகுழுக்களினதும் அறிக்கைகளுக்கும் மக்கள் கருத்தறியும் நிபுணர் குழுவினால் சமர்ப்பிக்கும் அறிக்கைக்கும் என்ன நடந்தது என்பது முதலாவதாக எழும் கேள்வியாகின்றது.
இரண்டாவதாக, 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி இடைக்கால அறிக்கையின் வரைவு பாராளுமன்றத்தில் விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஜே.வி.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன காலஅவகாசத்தினை கோரியமையாலேயே இடைக்கால அறிக்கை வரைவு சமர்ப்பிக்கப்படுவதில் காலதாமதப்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் மார்ச் மாதத்தில் இடைக்கால அறிக்கை வரைவு பாராளுமன்றத்திற்கு வரும் எனவும் பின்னர் ஜுன் மாதம் அறிக்கை வரும் எனவும் அடுத்தடுத்து எதிர்பார்ப்புக்கள் அளிக்கப்பட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி புதிய அரசியலமைப்பு குறித்து தமது கட்சி ரீதியான ஏகோபித்த நிலைப்பாடொன்றை எடுப்பதற்காக கால அவகாசத்தினை கோரியதன் காரணமாக இடைக்கால அறிக்கை வரைவு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதில் காலதாமதங்கள் காணப்படுவதாக கூறப்பட்டது.
எனவே இடைக்கால அறிக்கை வரைவு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதில் காணப்பட்ட தாமதத்திற்கு இவ்வாறு காரணங்கள் அடுத்தடுத்து கூறப்பட்டு வந்திருக்க நிலையில் லக் ஷ்மன் கிரியெல்ல கூறுவதைப்போன்று எந்தவாசகமும் எழுதப்படவில்லை என்றால் இடைக்கால அறிக்கை வரைவு சமர்ப்பணம் சம்பந்தமாக டிசம்பர் 10ஆம் திகதியிலிருந்து பொய்யான தகவலாக வெளியிடப்பட்டு வந்திருக்கின்றதா என்றொரு கேள்வி எழுக்கின்றது.
அதேநேரம் இடைக்கால அறிக்கை வரைவினை முழுமையாக இறுதி செய்வதற்காக வழிநடத்தல் உறுப்பினர்களிடத்தில் அதுகுறித்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களின் கருத்துக்களை கூறுமாறு கோரப்பட்டுள்ளதென்றும் அதன்பின்னரே சுதந்திரக்கட்சி ஐ.தே.க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தது என்றும் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அப்படியென்றால் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல பொய்யான தகவலை வெளியிடுகின்றாரா என்ற பிறிதொரு கேள்வியும் எழுகின்றது. இவை எல்லாவற்றுக்கும் அப்பால் இடைக்கால அறிக்கை வரைவினை மன்றுக்கு சமர்ப்பிப்பதற்கான தாமதத்திற்கு அரசியல் காரணங்களும் பின்னணியில் இருக்கின்றன.
தொடரும்…
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-15#page-10
http://content.epaper.virakesari.lk/
July 22, 2017
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்
ஆர். ராம்
தற்போதுள்ள நடைமுறையில் உள்ள 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் இரண்டாம் அத்தியாயத்தின் ஒன்பதாம் சரத்தில் பௌத்த மதம் சம்பந்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், இலங்கை குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மை ஸ்தானம் வழங்கப்படுத்தல் வேண்டும் என்பதோடு, அதற்கிணங்க, 10ஆம், 14(1)(உ)ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களும் காப்புறுதி செய்யும் அதேவேளையில் பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணிவளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும் என்றுள்ளது.
இந்நிலையில் தற்போது புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாட்டில் மத விடயத்தினை வழிநடத்தல் குழுவே நேரடியாக கையாளுகின்றது. அக்குழுவில் பௌத்த மதத்திற்கான முதன்மைத் தன்மை மாற்றப்பட்டுள்ளது என்பதே பிரதான குற்றச்சாட்டாக காணப்படுகின்றது.
குறிப்பாக பௌத்த சமயத்திற்கு வழங்கப்பட்ட முதன்மைத் தன்மைக்கு மாற்றாக எவ்விதமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்கின்றது என்பதை பார்க்கையில்,
இலங்கை குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மைஸ்தானம் வழங்கப்படல் வேண்டும். என்ற வாசகத்தில் எவ்விதமான மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் அந்த ஏற்பாட்டோடு இந்த நாட்டில் காணப்படுகின்ற ஏனைய சமயங்களுக்கும் கௌரவம் அளிக்கப்பட வேண்டும். பாரபட்சம் காட்டப்படமாட்டாது என்ற உறுதிப்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும். பௌத்த சமயத்துக்கு உள்ளதைப் போன்று ஏனைய சமயங்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்ற தொனிப்படவே உள்ளது.
எனவே இங்கு பௌத்த மதத்திற்கான முதன்மைத்தன்மை இழக்கப்படுகின்றது என்று கொள்ள முடியாது. அதேநேரம் வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் பௌத்த சிறுபான்மை பிரதிநிதித்துவங்களாகவுள்ள எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆகியோர் எந்தவிதமான மறுப்புக்களையும் முன்வைக்கவில்லை.
அதேபோன்று 19 இனங்கள், நான்கு மதங்கள், மூன்று மொழிகள் இந்த நாட்டில் உள்ளன என்பதை அடிக்கடி கூறும் மனோகணேசனும் பௌத்த மதத்திற்கான முதன்மைத்தன்மையை எதிர்ப்பதற்கு வாய்ப்பில்லை. பெரும்பான்மை கட்சியில் இணைந்து பணியாற்றும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் எதிர்க்கவில்லை. சிலுவை போடாத கிறிஸ்தவன், காவி தரிக்காத பௌத்தன், திருநீறு பூசாத இந்து, தொப்பி தரிக்காத இஸ்லாமியன் என்று கூறும் டக்ளஸ் தேவானந்தாவும் எதிர்த்திருக்கமாட்டார்.
இன, மொழி, மத, சாதி ரீதியான பிளவுகளுக்கு அப்பால் சமத்துவம் நிலை நாட்டப்படவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிக்கும் ஜே.வி.பியினரும் எதிர்த்திருக்கவில்லை. அதேபோன்று பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவதால் எமக்கு பிரச்சினையில்லை என்றும் அவர்கள் பகிரங்கமாகவே தெரிவித்தும் உள்ளார்கள்.
மேற்படியான நிலைமையே வழிநடத்தல் குழுவின் இதுவரையில் நடைபெற்ற அமர்வுகளில் இடம்பெற்றுள்ளது என்பதே யதார்த்தமாகின்றது.
இவற்றுக்கெல்லாம் மேலாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு முதன்மைத் தன்மை வழங்குவதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றார். ஏனைய கிறிஸ்தவ சபைகள் கூட எதிர்க்கவில்லை. இந்து மதகுருமார் ஒன்றியம், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை ஆகியனவும் பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை நிராகரிக்கும் வகையில் எவ்விதமான மாற்றுக்கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இவ்வாறு புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முதன்மைத் தன்மையை யாரும் எதிர்க்காத நிலையில் வழிநடத்தல் குழுவில் உள்ள தினேஷ் குணவர்த்தன பிரசன்ன ரணதுங்க போன்ற எம்.பி.க்களும் கூட்டு எதிர்க்கட்சியினரும் பௌத்தத்திற்கான முதன்மைத் தன்மை நீக்கப்படுகின்றது தற்போதுள்ள அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்து மாற்றப்படுகின்றது என்ற பிரசாரத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.
அந்த பிரசாரம் தான் புரியாத புதிராக உள்ளது. ஒட்டு மொத்தமாக பார்க்கையில் பௌத்த மதம் சார்ந்து இவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் பௌத்தமதத்தினை பின்பற்றும் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்திருக்கின்றது என்பதை தெட்டத்தெளிவாக வெளிப்படுத்துகின்றது. மறுபக்கத்தில் பௌத்த மதத்தலைவர்களை பயன்படுத்தி புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டினை தடுக்க முனைகின்றார்களோ என்ற ஐயப்பாடும் எழாமலில்லை.
புதிய அரசியலமைப்பினை கூட்டு எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை என்றால் அரசியலமைப்பு பேரவையாக பாராளுமன்றத்தினை செயற்படுத்துவதற்கு எதிர்ப்பினை தெரிவிக்காது ஏகோபித்த ஆதரவை வழங்கி பிரேரணையை நிறைவேற்றும் போது அமைதியாக இருந்தமைக்காக காரணம் என்ன என்பது பிரதானமான கேள்வியாகின்றது. அவ்வாறாயின் கூட்டு எதிர்க்கட்சி மக்கள் மத்தியில் இரட்டை வேடம் போடுகின்றதா என்ற சந்தேகமும் இயல்பாகவே எழுகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரையில் சமய ரீதியாக பாரிய பிரச்சினைகள் எவையும் இருக்கவில்லை. ஆனால் இங்குள்ள நான்கு சமயங்களுக்கும் உரிய கௌரவம் அளிக்கப்பட்டு அவற்றுக்கான அடிப்படைத் தன்மைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே பொதுவான நிலைப்பாடாகவுள்ளது.
அதற்காக திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் மதப்பிரசாரங்களை, அல்லது மத திணிப்புக்களை அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தின் பூர்வீகத்தினை, வரலாற்றினை மாற்றியமைக்க முயல்வது அல்லது இன விகிதாசாரத்தினை மாற்றும் வகையில் மதத்தினை பயன்படுத்த முயல்வது போன்றவற்றுக்கு சிறுபான்மை தேசிய இனங்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு இருக்கின்றது.
அதாவது மதத்தின் பெயரால் நடைபெறும் எந்தவொரு இன அடக்குமுறையையோ அல்லது முரண்பாடுகளை ஏற்படுத்தும் விடயத்தினையோ ஏற்றுக்கொள்வதற்கு சிறுபான்மை தேசிய இனங்கள் ஒருபோதும் தயாராகவில்லை. அநகாரிக தர்மபாலவின் இலங்கை சிங்கள–பௌத்த நாடு என்ற கருத்தியல் உருவாக்கத்திலிருந்து தற்போது வரையில் மதத்தின் பெயரால் சிறுபான்மை தேசிய இனங்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன.
வடக்கு, கிழக்கில் கூட தங்கியிருக்கும் இராணுவத்தினர் வழிபடுவதற்காக தற்காலிகமாக அரச மரங்களில் உருவாக்கப்படும் தற்காலிக வழிபாட்டு இடங்கள் பின்னர் நிரந்தரமாக்கப்பட்டு, நில உரித்துக் கோரி நிற்கின்ற சூழலே தற்போது உள்ளது. ஆகவே எந்தவொரு நபரும் எந்தவொரு மதத்திற்கும் எதிராக இல்லாத நிலையில் மேற்குறித்த நிலைமைகள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையிலான அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடொன்றினையே மக்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள் என்பது வெளிப்படை.
(தொடரும்…)
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-22#page-8
Posted July 29, 2017
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்
ஆர். ராம்
புதிய அரசியல் அமைப்பில் ‘நாட்டின் தன்மை’ சிங்களத்தில் ‘ஏகிய ராஜ்ய’ தமிழில் ”ஒருமித்த நாடு” ஆங்கிலத்தில் ‘Aekiya Rajaya/Ourmitha nadu’ என்றே அமையவுள்ளது.
அதேபோன்று தான் ”ஒற்றை ஆட்சி அரசு” விடயத்தில் மாற்றம் ஏற்படுத்தியே ஆக வேண்டும். அதில் ”சமஷ்டி” என்ற பதம் இருக்க வேண்டும். இந்த விடயத்தில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களுக்கும் செல்ல முடியாது என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் போன்ற தரப்புக்களும் இறுக்கமாக இருக்கின்றன. அதனைத் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வருகின்றன.
அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் என்றால் விட்டுக்கொடுப்புக்கள் செய்யப்பட்டிருக்கின்றதா? அதனைச் செய்தது யார் என்றொரு கேள்வி இங்கு எழுகின்றது. உண்மையில் ஒரு சிறு விட்டுக்கொடுப்பு செய்யப்பட்டிருக்கின்றது. அதாவது, ”பெயர்ப்பலகைகள்” தொடர்பில் தான் அந்த விட்டுக்கொடுப்பு நடைபெற்றிருக்கின்றது.
முன்னரே குறிப்பிட்டதைப் போன்று தென்னிலங்கை மக்களின் மாறாத மனோநிலை, அங்குள்ள அரசியல் சக்திகள் ஆகியவற்றின் உச்ச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டுமானால் இவ்வாறான ஒரு சிறு விட்டுக்கொடுப்பு அவசியம் என்ற அடிப்படையில் தான் தமிழ்த் தலைமை இப்படியொரு முடிவை எடுத்திருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது.
மேலும் இப்படியொரு சின்ன விட்டுக்கொடுப்பால் பாரியளவில் எவ்வித இழப்புக்களும் ஏற்பட்டு விடப்போவதில்லை என்றும் தலைமையும், அரசியலமைப்பு செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் பிரதிநிதியும் அழுத்தமாக கூறுகின்றார்கள்.
அவர்களின் மொழியில் இவ்வாறு தான் கூறுகின்றார்கள். அதாவது, “70ஆண்டுகளாக பல்வேறு வழிமுறைகளை கையாண்டுள்ள போதும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நீடித்து நிலைத்திருக்க கூடிய, நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று கிடைக்கவில்லை. தற்போது பிரிக்க முடியாத, பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம்.
பிரதான பெரும்பான்மை கட்சிகள் இரண்டும் தேசிய அரசாங்கமாக இருக்கின்ற நிலையில் அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்த வேண்டும். கிடைத்த சந்தர்ப்பத்தினை நழுவிட்டவர்கள் என்ற வரலாற்றுப்பழிக்கு ஆளாக கூடாது. ஆகவே தொடர்ந்தும் “பெயர்ப்பலகைகளை” முன்னிலைப்படுத்திக்கொண்டு நாம் இறுக்கமான போக்கை கடைப்பிடிப்போமாயின் அது பிரதான கட்சிகளுக்கே சாதகமாக போய்விடும்.
எதிர்கால சமுதாயத்தின் நன்மை கருதி “பெயர்ப்பலகைகளுக்கு” மட்டும் முக்கியத்துவம் அளிக்காது உள்ளடக்கம் என்ன இருக்கின்றது என்பதனையே பார்க்க வேண்டும்.
ஆகவே உள்ளடக்கத்தில் நிச்சயமாக “சமஷ்டி” க்கு உண்டான அங்க இலட்சணங்கள் இருக்கும். மிக முக்கியமாக பகிரப்படும் அதிகாரங்கள் மீளவும் மத்திய அரசாங்கத்தினால் பறிக்கப்பட்டு விடாத வகையிலான ஏற்பாடுகள் இருக்கும் என்பதாகும்.
இந்த விடயத்தில் கூட்டமைப்பிற்குள் இருக்கும் பங்காளிக்கட்சிகளிடையே வாதப்பிரதிவாதங்கள் காணப்பட்டுக்கொண்டிருக்கின்றன. வெளியிலும் கடுமையான விமர்சனங்கள் காணப்படுகின்றன. எவ்வாறு இருந்போதும் பெயர்ப்பலகைகளுக்கு முக்கியத்துவம் இல்லாத முன்மொழிவு ஒன்றுதான் இடைக்கால அறிக்கை வரைவில் நிச்சயமாக வரப்போகின்றது.
காரணம், வழிநடத்தல் குழுவின் தலைவராக இருக்கின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்தியிருந்த சந்திப்பு ஏறக்குறைய அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாம் திகதி சனிக்கிழமை (2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இறுதி நாள்) புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையின் வரைவு அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தபோதும் பின்னர் அந்த நிகழ்வு நடைபெறவில்லை.
இவ்வாறானதொரு சூழலில் அன்றையதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் தான் பெயர்ப்பலகைகளை களைவது என்ற இணக்கம் ஏற்பட்டது. அது எவ்வாறு என்று சற்றே விளக்கமாகவும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு ஆரம்பமானவுடன் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு, அடுத்து பிரதான விடயமான இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த விடயம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது ஒற்றை ஆட்சி அரசு என்ற கட்டமைப்பிற்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வினை ஒருபோதும் எட்டிவிடமுடியாது என்ற உறுதியான கருத்தொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்தது.
அச்சமயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளித்த பதில் இது தான், பிரித்தானியா போன்ற நாடுகளில் ஒற்றை ஆட்சியே நிலவுகின்றது. அங்கு உச்சபட்ச ஜனநாயகம் உள்ளது. எனினும் நீங்கள் ஒற்றை ஆட்சி அரசை ஏற்க முடியாது என்கின்றீர்கள். நானும் அதற்கு எதிரானவன் தான். ஒற்றை ஆட்சி அரசை நீக்க வேண்டும். இங்கு தவறான புரிதலொன்று ஏற்பட்டிருக்கின்றது.
அதாவது, தமிழில் ஒற்றை ஆட்சி அரசு என்பதற்கு சிங்கள மொழியில் ஏகிய ராஜ்ய என்று கூறப்பட்டிருக்கின்றது. ஏகிய ராஜ்ய என்பது உண்மையிலேயே ஒருமித்த நாடு என்று தான் பொருள்படவேண்டும். ஆங்கில மொழியில் உள்ள யுனிற்றரி ஸ்டேட் என்ற சொற்பதம் தான் ஒற்றை ஆட்சியை நேரடியாக குறிப்பதாக உள்ளது. ஆகவே நாங்கள் புதிய அரசியலமைப்பில் அந்த விடயத்தினை கருத்தில் கொள்வோம் என்றொரு கருத்தினை முன்வைத்திருக்கின்றார்.
ஆக, பிரதமர் ரணிலின் கருத்தின் பிரகாரம் ஒரு விடயம் வெளிப்படையாக கூறப்பட்டிருக்கின்றது, சிங்கள மொழியில் ஏகிய ராஜ்ய என்ற பதம் நீக்கப்பட முடியாது. அதற்கான சரியான அர்த்தப்படுத்தலை குறிப்பிடுவதோடு தமிழிலும், ஆங்கிலத்திலும் அதற்குரிய பதங்ளை மேற்கொள்வோம் என்பதாகும்.
அதன் பின்னர் நடைபெற்ற வழிநடத்தல் குழுவின் அமர்வுகளில் ஏறக்குறை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்களை ஒத்தவொரு முன்மொழிவொன்று தான் நாட்டின் தன்மை குறித்து பிரேரிக்கப்பட்டிருக்கின்றது.
அந்த முன்மொழிவு இதுதான், சிங்கள மொழியில் ஏகிய ராஜ்ய என்ற வாசனம் அப்படியே இருக்கும். அதில் எவ்விதமான மாற்றமும் இடம்பெறப்போவதில்லை. அதற்கான முன்மொழிவுகள் எவையும் இல்லை. ஆனால் அது நாட்டின் ஆட்சித்தன்மையை குறிக்காது என்பதோடு பிரிக்கமுடியாத பிளவுபடாத நாடு என்ற அடிப்படையிலான விளக்கம் இணைக்கப்பட்டிருக்கும்
ஆனால் தமிழ் மொழியில் நாட்டின் தன்மை என்பது ஒருமித்த நாடு என்றே காணப்படப்போகின்றது. அச்சந்தர்ப்பத்திலும் அதற்குரிய விளக்கம் அருகிலேயே வழங்கப்படவுள்ளது. ஆங்கில மொழியில் ஒற்றை ஆட்சியை நேரடியாக குறிப்பிடும் ‘யுனிற்றரி ஸ்டேட்’ (Unitary State) என்ற சொற்பிரயோகத்திற்கு பதிலாக மாற்றுச் சொல்லைப் பயன்படுத்துவதா இல்லையா என்றொரு நிலைமை நீடித்திருந்தது.
அதனடிப்படையில் மாற்றுச்சொல்லாக (Undivided Country) பயன்படுத்த முடியுமா என்பது இன்னமும் முன்மொழிவாகவும் பரிசீலனையும் செய்யப்பட்டது. அத்துடன் நேரடியாக (Unitary State)சொல்லைப் பயன்படுத்திவிட்டு அந்த சொல்லானது நாட்டின் தன்மையை குறிக்காது என்ற வகையில் சிங்கள பதத்திற்கு வழங்கப்படும் விளக்கத்தினை போன்று அடிக்குறிப்பொன்றை இடுவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.
ஈற்றில் ஆங்கில மொழியில் ‘Aekiya Rajaya/Ourmitha nadu’ என்றே புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கையில் முன்மொழிவதென்ற முடிவு எடுக்கப்பட்டதோடு அதன் அர்த்தப்படுத்தலையும் அருகில் வழங்குவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியனவும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் இதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றன.
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-29#page-9
Posted August 5, 2017
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்
ஆனாலும் சமஷ்டி என்ற சொற்பதம் அரசியலமைப்பில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பங்காளிக்கட்சிகள், வடக்கு முதல்வர், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அணியினர். அதற்காக எவ்வாறான முன்னெடுப்புக்களை இதுவரையில் செய்யதிருக்கின்றனர். எதிர்காலத்தில் எவ்வாறான முன்னெடுப்புக்களை செய்யப்போகின்றார்கள். வெறுமனே ஊடகங்களிலும் பொது மேடைகளிலும் கருத்துக்களை முன்வைப்பதால் எவ்விதமான பயனும் ஏற்பட்டு விடப்போவதில்லை என்பதே யதார்த்தம்.
நாங்கள் வழிநடத்தல் குழுவில் அங்கத்தவர்கள் இல்லை. பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லை. நாங்கள் என்ன செய்வது. ஊடகங்கள் ஊடாகவே உண்மைக்கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் என்று இத்தரப்புகளில் சிலர் இலகுவாக பதிலுரைக்கலாம். ஆனால் சமஷ்டி என்ற சொற்பதம் வந்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவிருக்கும் அனைத்து தரப்புக்களுக்கும் அது ஏற்புடையதாகாதல்லவா!
இந்த விடயம் குறித்து பங்காளிக்கட்சிகள் தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பினுள் இத்தனை காலத்திற்குள் கலந்துரையாடியிருக்க வேண்டும். அதற்கு தடைகள் காணப்பட்டிருப்பின் அவற்றை பகிரங்கப்படுத்தியிருக்கலாம். அதன் ஊடாகவே இந்த விடயத்தில் அக்கட்சிகளின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் வெளிப்பட்டிருக்கும். புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவில் சமஷ்டியுடனான உரிய முன்மொழிவைச் செய்திருக்க வேண்டும். மக்கள் ஆணை மீறப்படுகின்றதென்றால் ஆணை வழங்கிய மக்களை தெளிவு படுத்தி விழிப்புணர்வு செயற்பட்டை ஆரம்பித்திருக்க வேண்டும்.
இவை எதனையுமே முன்னெடுத்ததாக காணமுடியவில்லை. அறியவும் முடியவில்லை. எண்பதுகளில் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களுக்கான விடிவு நோக்கி பயணித்த பாதையிலிருந்து முற்றுமுழுதாக விலகி பயணிக்க வேண்டுமென்று இளைஞர்கள் இயக்கங்களை ஆரம்பித்த போது அந்த இயக்கங்கள் குறித்து மக்கள் மத்தியில் பிரசாரங்களை செய்தமை மட்டுமன்றி தமது கொள்கைகளின் பின்னால் மக்கள் அணிதிரளவும் உறுதுணையாக இருக்கவும் வழி ஏற்படுத்தினார்கள்.
அவ்வாறிருந்தவர்கள் தற்போது அதனையொத்த செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதிருக்கின்றமைக்கான காரணம் என்ன? மக்கள் களத்தில் தடம்பதித்து கருத்துக்களை பகிராது ஊடங்களிலும் மேடைகளிலும் இருவரின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டி கருத்துக்களை மட்டுமே வெளியிடும் செயற்பாடுகள் தொடர்வதானது அரசியல் காழ்ப்புணர்வு என்றே பொருட்படுத்தப்பட்டு விடும் அபாயமே உள்ளது.
இதுவொருபுறமிருக்கையில் புதிய அரசியல் அமைப்பில் நாட்டின் தன்மை சிங்களத்தில் ஏகிய ராஜ்ய, தமிழில் ஒருமித்த நாடு, ஆங்கிலத்தில் ‘Aekiya Rajaya/Ourmitha nadu’ என குறிப்பிடப்படவுள்ள நிலையில் சிங்கள மொழியில் காணப்படும் ஏகிய ராஜ்ய என்ற சொற்பதம் மாற்றப்பட்டேயாகவேண்டும். அது ஒற்றை ஆட்சி அரசு என்றே பொருள்படுகின்றது என்பதில் இறுக்கமாகவிருக்கும் தரப்புக்கள் பிறிதொரு வாதமொன்றினையும் முன்வைக்கின்றன.
தற்போது செய்யப்பட்டுள்ள முன்மொழிவின் அடிப்படையில் நாட்டின் தன்மை சிங்களத்தில் ஏகிய ராஜ்ய, தமிழில் ஒருமித்த நாடு, ஆங்கிலத்தில் ‘Aekiya Rajaya/Ourmitha nadu’ குறிப்பிடப்பட்டு இருக்கையில் இந்த நாடு, ஒற்றை ஆட்சி அரசு நாடா இல்லையா என்ற கேள்வியொன்று பொதுமகனொருவருக்கு எழுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அவர் அதற்காக உயர் நீதிமன்றத்தினை நாடுகின்ற போது தமிழ், மற்றும் ஆங்கில மொழிகளில் கூறப்பட்டுள்ள விடயங்கள் நீதிமன்ற வியாக்கியானத்திற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. நாட்டின் தன்மை குறித்து சிங்கள மொழியில் என்ன வரைவிலக்கணம் காணப்படுகின்றதோ அந்த வரைவிலக்கணமே கருத்திற்கொள்ளப்படும்.
அதில் ஏகிய ராஜ்ய என்பது தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றபடியால் ஒற்றை ஆட்சி அரசு என்பது தான் முடிந்த முடிவாகும். எனவே இந்த நாடு நிச்சயமாக ஒற்றை ஆட்சி அரசு என்றே நீதிமன்றம் வியாக்கியானம் அளித்து தீர்ப்பளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என்பதே அந்த வாதமாகும்.
இவ்விதமாக முன்வைக்கப்படும் வாதம் தொடர்பில் கருத்துரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வழிநடத்தல் குழு உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில்,
புதிய அரசியலமைப்பில் நாட்டின் தன்மை குறித்த விடயத்தில் உயர்நீதிமன்றம் சிங்கள மொழியிலான வியாக்கியானத்தினை ஏற்குமென்றும் ஏனையவற்றை ஏற்காது என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
உண்மையில் இந்த விடயத்தில் முழுமையான புரிதலின்மையே காரணமாகின்றது. புதிதாக அமையப்போகின்ற அரசியலமைப்பில் நாட்டை தன்மை தொடர்பிலான முன்மொழிவில் சிங்களத்தில் ஏகிய ராஜ்ய, தமிழில் ஒருமித்த நாடு, ஆங்கிலத்தில் ‘Aekiya Rajaya/Ourmitha nadu’ என குறிப்பிடப்பட்டு அதற்கான வரைவிலக்கணங்களும் அரசியலமைப்புச் சட்டத்திலேயே குறிப்பிடப்படவுள்ளது.
குறிப்பாக மூன்று மொழிகளிலும் மேற்குறித்த சொற்றொடர்களுக்கு அருகிலேயே அந்த சொற்றொடரானது, ஒரு பிளவுபடாத, பிரிக்கமுடியாத நாடு என்ற பொருளை மையப்படுத்தியாகவும் அதிகாரப்பகிர்வுக்கு உட்பட அரசு என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் அவ் வரைவிலக்கணம் அமையப்போகின்றது.
அரசியலமைப்புச் சட்டத்தில் நாட்டின் தன்மைக்கான வரைவிலக்கணம் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தினை நாடவேண்டிய நிலைமை ஏற்படாது. அவ்வாறு ஏற்படாலும் வரைவிலக்கணத்தினை சான்றுப்பொருளாக நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும்.
ஆகவே புதிய அரசியலமைப்பில் நாட்டின் தன்மை குறித்து செய்யப்பட்டுள்ள முன்மொழிவுக்கான வரைவிலக்கணம் வழங்கப்படுவதன் காரணமாக வேண்டாத சந்தேகங்களை கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றார்.
ஆக, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கும் ஒரு அரசியல் கட்டமைப்பினை மையப்படுத்திய தரப்புக்களிடையே புகைவண்டி தண்டவாளங்கள் போன்று சமாந்தரமாக இருவேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. தற்போதைய நிலைமையில் இவை ஒருபுள்ளியில் சந்திக்கும் என்று கருதமுடியாத சூழலே காணப்படுகின்றது. இதன் விளைவு எவ்வாறு அமையும் என்பதற்கான பதிலை எதிர்காலம் தான் வழங்கவுள்ளது.
எனினும் உலகின் மகத்தான புரட்சி எனக் கூறப்படுகின்ற ரஷ்ய புரட்சி ஆரம்பமாகி நிறைவடைந்த காலத்திற்குள் நடைபெற்ற ஒரு விடயத்தினை இந்த சந்தர்ப்பத்தில் மீட்டிப்பார்க்க வேண்டியது பொருத்தமானதாகவிருக்கும்.
1898ஆம் ஆண்டு ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி உருவாகிறது. 1903 இல் இக்கட்சியில் போல்ஸ்விக்குகள் மற்றும் மென்ஸ்விக்குகள் என இரண்டு போக்குகள் உருவாகின்றன.
ரஷ்ய பொருளாதார வீழ்ச்சி இடம்பெற்று அதைத் தொடர்ந்து உள்நாட்டுக் கலகங்கள் அதிகரிக்கின்றன. 1905 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புனித பீட்டர் பெர்க் என்று அழைக்கப்படும் பகுதியில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் இராணுவம் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றது.
இந்த நிகழ்வு இரத்த ஞாயிறு என அழைக்கப்படுகிறது. ஏற்கனவே மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகியிருந்த ரஷ்ய மக்கள் அரசாங்கத்தின் அடக்குமுறைப் போக்குக்கு எதிராக கூர்மையடைகின்றனர். விவசாயிகளின் எதிர்ப்புணர்வும் அதிகரிக்கிறது.
இத்தருணத்தில் தலைமறைவு வாழ்க்கையிலிருந்து 1917இல் நாடு திரும்பிய லெனின் ரயில் நிலையத்தில் இருந்த போல்ஸ்விக்குகள் இடத்தில் அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்கே என்ற பிரசாரத்தினை செய்து மீண்டும் தனது ஜனநாயகப்போராட்டத்தை முன்னெடுகின்றார்.
இத்தருணத்தில் போல்ஸ்விக்குகளின் மத்திய குழு கூட்டத்தில் ஆயுதப்புரட்சியை தவிர்க்க முடியாது என்ற முடிவு மென்ஸ்விக்குகளின் ஆதிக்கத்தினை தாண்டி எடுக்கப்படுகின்றது. அதனையடுத்தே போல்ஸ்விக்குகளுடன் பொதுமக்கள், பெண்களின் இராணுவ படைப்பிரிவு விவசாயிகள், தொழிற்படையினரின் இணைவு அதிகரித்து ஈற்றில் 1922 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சோவியத் சோஷலிச குடியரசு ஒன்றியம் உருவாகின்றது.
இதன் பிரகாரம் சிறு தரப்பாக இருந்த போல்ஸ்விக்குகளின் முடிவை ஏற்றுக்கொள்ளாத மென்ஸ்விக்குகளின் போக்கை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பால் போல்ஸ்விக்குகளின் கொள்கையின் பின்னால் அனைவரும் அணி திரண்டனர்.
ஆகவே சிறுதரப்பு ஒன்று எடுக்கும் அனைத்து முடிவுகளும் தவறென்றோ அல்லது பெரும்பான்மை தரப்பு ஒன்று எடுக்கும் முடிவு மிகவும் சரியானதென்றோ கொள்ளமுடியாது என்ற படிப்பினையை இந்த வரலாறு உணர்த்தியிருக்கின்றது. அதன் தாத்பரியத்தினை தற்போதுள்ள தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ளவேண்டிய பெருத்தமான கால கட்டமே இதுவாகும்.
தொடரும்...
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-05#page-8
Posted August 19, 2017
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்
ஆர் .ராம்
அத்தோடு 1972 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்தும் இலங்கை பிரஜைகளுக்கு மட்டுமே ஏற்புடையன எனக் குறிப்பிடப்பட்டிருந்தமையினால் இலங்கையில் வாழ்ந்த பிரஜாவுரிமை அற்றவர்கள் அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கு பெருந்தடையாக இருந்தது.
மேலும் அடிப்படை உரிமைகள் சம்பந்தமாகக் கூறப்பட்டுள்ள அனைத்து ஏற்பாடுகளும் நீண்ட வாக்கியங்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தமையையும் அரசியல், சிவில் செயற்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். அமெரிக்கா, சோவியத்யூனியன் போன்ற நாடுகளின் அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் சம்பந்தமான வாக்கியங்கள் சிறிதாகவும் அதிகளவு விடயப்பொருளடங்கியதாகவும் அமைந்திருக்கின்றமையைப் போன்று அமையவேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
அதேநேரம் பிரஜைகளுக்கான உரிமைகள் என்ற பொருள்படும் வகையில் சில அடிப்படை உரிமைகளே நேரடியாக கூறப்பட்டிருந்ததால் அடிப்படை உரிமைகளாக குறிப்பிட்டிருந்த ஏனைய உரிமைகள் யாருக்கானவை என்ற வினாவும் பொது மக்கள் மத்தியில் வெகுவாக எழுந்திருந்தன. அத்தோடு பொதுமக்களுக்கு தமக்கான தனிப்பட்ட சொத்துக்களை சேர்த்துக்கொள்வதற்கான அனுமதியும் அடிப்படை உரிமைகளில் மறுக்கப்பட்டிருந்தது.
மேலும் குறிப்பிட்ட பொருளாதார கோட்பாட்டினை அரசியல் திட்டமாக்கும் ஒரு முயற்சியாகவே முதலாவது அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் உள்வாங்கப்பட்டுள்ளன என்ற கடும் விமர்சனத்தினையும் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்திருந்தது. இது அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்பட்ட கடுமையான விமர்சனமாக இருந்தாலும் அக்காலத்தில் காணப்பட்ட பொருளாதார நிலைமைகளின் காரணமாக இவ்விமர்சனம் பொது மக்கள் மத்தியிலும் வெகுவாகச் சென்றடைந்திருந்தது.
இவ்வாறான நிலையில் 1977ஆம் ஆண்டு தேர்தலில் பெரு வெற்றி பெற்று ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிப்பீடமேறியது. இக்கட்சி இரண்டாவது குடியரசு அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு பெருமுனைப்பு காட்டியிருந்தது.
ஏற்கனவே உள்ள அரசியலமைப்பில் குறைபாடுகள் பல காணப்பட்டமையினை சுட்டிக்காட்டியதன் காரணமாகவும் பெரும்பான்மை பலம் காணப்பட்டமையின் காரணமாகவும் அக்கட்சிக்கு அரசியலமைப்பொன்றினை உருவாக்குவதற்கான ஏதுநிலைகள் அதிகமிருந்தன.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியானது தனது ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியதற்காகவும், தனது கொள்கைகளை சட்டரீதியானதாக்கும் நோக்கத்தில் அரசியலமைப்பினை உருவாக்கும் முயற்சியில் அப்போதைய ஆட்சியாளர்கள் இறங்கியிருந்தனர்.
1978ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்த இரண்டாவது குடியரசு அரசிய லமைப்பில் 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்தும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளில் சிலவாகும்.
உறுப்புரை 10 முதல் உறுப்புரை14 வரையில் அடிப்படை உரிமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும் வெளிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் உறுப்புரை 10, 11 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவையே பூரணத்துவமானவையாக காணப்படுகின்றன.
உறுப்புரை 10இல் சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியினை பின்பற்றும் சுதந்திரம்,
மத சுதந்திரம் என்பனவும் உறுப்புரை 11இல் சித்திரவதைக்குள்ளாகாமல் இருப்பதற்குரிய சுதந்திரம் ஆகியவை தொடர்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
இவை பூரணமான உரிமைகளாக காணப்படுகின்றன எனக் கருதப்படுகின்றமைக்கான காரணம் என்னவெனில் அரசியலமைப்பில் வெளிப்படையாக எந்த மட்டுப்பாடுகளும்
விதிக்கப்படவில்லை. இதன் விளைவாக எச்சந்தர்ப்பத்திலும் இவற்றை மீறவும் முடியாது என்பது பொதுவான நிலைப்பாடாகும்.
அடுத்து, உறுப்புரை 12 ஆனது சமத்துவத்துக்கான உரிமையினைக் கூறுகின்றது. உறுப்புரை 12(1) ஏற்பாடானது, சட்டத்தின் முன் சகலரும் சமமானவர்கள். அத்துடன் சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு உரித்துடையவர்கள் உறுப்புரை12(2) இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் கொள்கை, பிறப்பிடம் ஆகியவற்றின் பால் வேறுபாட்டைக் காட்டக்கூடாது எனக் கூறுகின்றது.
உறுப்புரை 12(1), 12(2) ஆகியவற்றுக்கிடையில் பிரதான வேறுபாடொன்றும் காணப்படுகின்றது. 12(1) வெளிநாட்டு பிரஜைகளிற்கும் உரித்துடையதாக உள்ளபோது 12(2) இலங்கைப் பிரஜைக்கு மட்டுமே உரித்துடையதாக உள்ளது. எனவே வெளிநாட்டவர் ஒருவருக்கு மேற்கூறப்பட்ட ஏற்பாடுகளில் ஒன்றின் மீது ஓரம் கட்டப்பட்டுள்ளது என்பது அடிப்படை உரிமை மீறல் ஆகாது.
அடுத்து உறுப்புரை 13ஆனது பல உரிமைகளைக் கூறுகின்றது. எதேச்சையாகக் கைது செய்யப்படாமலும் தடுத்து வைக்கப்படாமலும் அத்துடன் தண்டிக்கப்படாமலும் இருப்பதற்கான சுதந்திரம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கைதிற்கான காரணம் கூறப்பட வேண்டும் மற்றும் கடந்தகாலத்தை உள்ளடக்கும் தண்டனைச் சட்டவாக்கங்களைத் தடைசெய்தல் பற்றிக் கூறுகின்றது. இவ்வுறுப்புரையானது தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு, பொதுமக்கள் சுகாதாரம், ஒழுக்கம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்படலாம் என்பது அடுத்த உறுப்புரைகளில் கூறப்பட்டுள்ளது.
உறுப்புரை 14(1)(அ)இல் பேச்சு சதந்திரம், கருத்து தெரிவித்தல் சுதந்திரம் ஆகிய உரிமைகளானவை இனச்சுமூக வாழ்வு, மதச் சுமூக வாழ்வு போன்றவற்றின் நலன்கருதி அல்லது பாராளுமன்ற சிறப்புரிமை, நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தவறுபுரிய தூண்டுதல் என்பன தொடர்பில் மட்டுப்படுத்தப்படலாம் என உறுப்புரை 15(2) குறிப்பிடுகின்றது.
உறுப்புரை 14(ஆ)ஒன்றுகூடுவதற்கான சுதந்திரமானது, இனச்சுமூக வாழ்வு, மதச் சுமூகவாழ்வு போன்றவற்றின் நலன்கருதி மட்டுப்படுத்தப்படலாம் என உறுப்புரை 15(3) குறிப்பிடுகின்றது.
உறுப்புரை(14)(இ)ஒருங்கு சேருவதற்கான சுதந்திரமானது, இனச்சுமுகவாழ்வு, மதச் சுமுகவாழ்வு, தேசிய பொருளாதார நலன்கருதியும் மட்டுப்படுத்தப்படலாம் என உறுப்புரை 15(4) குறிப்பிடுகின்றது.
உறுப்புரை(14)(ஈ)தொழிற்சங்கத்தை அமைக்கவும் அதில் சேரவுமான உரிமையானது, தேசிய பொருளாதார நலன்கருதியும் மட்டுப்படுத்தப்படலாம்.
உறுப்புரை14 (உ)மதவழிபாட்டினை செய்வதற்கான சுதந்திரம் காணப்படுகின்றது. அதற்கு எவ்விதமான மட்டுப்பாடுகளும் இல்லை.
உறுப்புரை 14(ஊ) சொந்த கலாசாரத்தையும் மொழியையும் பயன்படுத்துவதற்கான உரிமை காணப்படுகின்றது. அதற்கும் எவ்விதமான மட்டுப்பாடுகளும் இல்லை.
உறுப்புரை 14(எ)சட்டமுறையான தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமை ஆகியன தேசிய பொருளாதார நலன்கருதி மட்டுப்படுத்தப்படலாம் என உறுப்புரை 15(5) குறிப்பிடுகின்றது.
உறுப்புரை14(ஏ) இலங்கை முழுவதும் நடமாடுவதற்கும் வசிப்பதற்குமான உரிமை. உறுப்புரை14(ஐ) இலங்கைக்கு திரும்பி வருவதற்கான உரிமை என்பவற்றிலும் எவ்விதமான மட்டுப்பாடுகளும் இல்லை.
இதேநேரம் உறுப்புரை 16இல் இப்போதுள்ள எழுத்திலான சட்டங்கள், எழுத்திலில்லாச் சட்டங்கள் எல்லாம் தொடர்ந்தும் வலுவிலிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளதோடு உறுப்புரை 17 ஆனது அடிப்படை உரிமைகளை மீறுவதற்கெதிரான பரிகாரங்களைக் கூறுகின்றது.
அதில் “ஆளொவ்வொருவரும், இந்த அத்தியாயத்தின் ஏற்பாடுகளின் கீழ் அவருக்குரித்தாகவுள்ள அடிப்படை உரிமையானது ஆட்சித்துறை நடவடிக்கை மூலம் அல்லது நிருவாக நடவடிக்கை மூலம் மீறப்பட்டமை தொடர்பில் அல்லது உடனடியாக மீறப்படவுள்ளமை தொடர்பில் 126ஆம் உறுப்புரையினால் ஏற்பாடு செய்யப்பட்டவாறாக உயர் நீதிமன்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கு உரித்துடையவராதல் வேண்டும்” என்றுள்ளது.
தொடரும்….
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-19#page-5
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-02#page-8
September 16, 2017
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் 24
ஆர் . ராம்
அடிப்படை உரிமைகள் தொடர்பான விடயங்களை கடந்த தொடர்களில் கூடியளவு ஆராய்ந்ததையடுத்து தற்போது நடைமுறையில் உள்ள 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் அத்தியாயம் நான்கில் காணப்படும் மொழி சம்பந்தமான விடயத்தில் எவ்வாறான புதிய முன்மொழிவுகள் இடம்பெற்றிருக்கின்றன என்பது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
சுதந்திர இலங்கையின் வரலாற்றினை எடுத்துக்கொண்டால் 1948 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்று டொமினியன் அந்தஸ்து பெற்றது. 1936ஆம் ஆண்டில் அரசாங்க சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரிகளான என். எம். பெரேரா, பிலிப் குணவர்த்தன போன்றவர்கள் ஆங்கிலத்திற்குப் பதிலாக சிங்களம், மற்றும் தமிழ் ஆகியவற்றை ஆட்சிமொழிகளாக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
1936 நவம்பரில், இலங்கைத் தீவு முழுவதும் உள்ள உள்ளுராட்சி மன்றங்கள், பொலிஸ்துறை, நீதித்துறை, ஆகியன உள்ளூர் மொழிகளிலேயே வழக்குகள் நடத்தப்பட வேண்டும் பொலிஸ் நிலையங்களில் சாட்சிகளின் மொழிகளிலேயே வழக்குகள் பதியப்பட வேண்டும் போன்ற சட்டமூலங்கள் அரசாங்க சபையில் கொண்டுவரப்பட்டு சட்டச் செயலாளருக்கு மேலதிக ஆணைக்காக அனுப்பப்பட்டன.
இவ்வாறிருக்கையில் 1944 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெயவர்த்தன ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களத்தை அதிகாரபூர்வ மொழியாக்க வேண்டும் என அரசாங்க சபையில் கோரினார். ஆனாலும் ஆங்கிலம் தொடர்ந்து 1956 வரை ஆட்சி மொழியாக இருந்து வந்தது. 1951ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார்.
இவ்வாறிருக்கையில் தமிழ் மொழிக்கும், சிங்கள மொழிக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி என்.எம். பெரேரா 1955 அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவந்தார். துரதிஷ்டவசமாக அது சாத்தியமாகாத நிலைக்குச் சென்றது.
இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி 1956 இல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. பண்டாரநாயக்காவின் அமைச்சரவை பதவியேற்று 53 நாட்களுக்குள் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டது.
தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது கலாநிதி கொல்வின் ஆர்.டீ. சில்வா ஒரு மொழியென்றால் இரு நாடுகள் இரு மொழியென்றால் ஒரு நாடு என்று தமிழ் மொழிப் புறக்கணிப்பால் பின்னாளில் பிரிவினைவாதம் தலைதூக்கும் என்பதை பாராளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்து எச்சரித்திருந்தார்.
எனினும் 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரசகரும மொழிகள் சட்டமாக கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டமூலம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்ட மூலத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்தது. தமிழ்க் கட்சிகள், மற்றும் சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்டுகள் எதிர்த்து வாக்களித்தன. ஜுன் 6ஆம் திகதி செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட போது 19 பேர் ஆதரவாகவும், 6 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர்
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதால் சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி என்பது சட்டமானது. இலங்கையின் ஆட்சிமொழியான ஆங்கில மொழி அகற்றப்பட்டு 70சதவீத பெரும்பான்மை சிங்களவர்கள் பேசும் சிங்கள மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது. தமிழ் மொழி அரச கரும மொழி என்பதிலிருந்தும் ஆட்சிமொழி என்பதிலிருந்தும் புறக்கணிக்கப்பட்டது.
இதனையடுத்து அரச பணியில் உள்ள தமிழர்களும் சிங்களம் கற்றாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். சுதந்திர கட்சி ஒரு இடதுசாரி கட்சியாக இருந்தாலும் இச்சட்டத்தினை சில தமிழ், மற்றும் சிங்கள இடதுசாரி உறுப்பினர்கள் கூட எதிர்த்தனர்.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் பல போராட்டங்கள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் அரசின் செயற்பாடுகள் இயங்க விடாது செய்யப்பட்டன.
இவ்வாறு தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் 1958 செப்டெம்பர் 3ஆம் திகதி அரச மொழிகள் சட்டத்தில் 1958(28) என்ற திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி நியாயமான தமிழ் மொழிப் பயன்பாட்டை அங்கீகரித்தது.
குறித்த திருத்தத்தின் பிரகாரம், தமிழ்ப் பாடசாலைகளில் போதனா மொழியாகத் தமிழ் காணப்படும், தமிழர்கள் அரச சேவையில் சேர்வதற்கான போட்டிச் சோதனைகள் தமிழில் நடத்தப்படும், அரச நிறுவன தொடர்பு மொழியாக தமிழ் காணப்படும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச நடவடிக்கைகள் தமிழில் இடம்பெறும் என்பனவே அவ்விதந்துரைப்புக்களாகும்.
இவ்வாறு தமிழர் வாழ் பகுதிகளில் தமிழும் பயன்படுத்தப்படலாம் எனும் திருத்தம் ஏற்படுத்தப்பட்டாலும் சுதந்திர இலங்கையில் இனங்களுக்கிடையே பகையை உருவாக்கிய முதலாவது சட்டமாக இதுவே காணப்படுவதோடு மட்டுமன்றி அகிம்சைவழியில் ஆரம்பித்த போராட்டம் பின்னர் ஆயுதப்போராட்டமாக மாறுவதற்கும் இச்சட்டமும் ஒரு காரணமாயிற்று.
இந்நிலையில் 1956ஆம் ஆண்டு முதல் சிங்களம் அரச கரும மொழியாக இருந்தாலும் கூட 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பில் தான் முதற்தடவையாக உள்ளீர்க்கப்பட்டு சுதேச மொழியொன்றுக்கான கௌரவம் வழங்கப்பட்டிருந்து. அத்துடன் பெரும்பான்மை சிங்கள மக்களின் தாய்மொழியான சிங்களத்திற்கு அரசியல் யாப்பு உத்தரவாதம் கிடைக்கப்பெற்றமை பெரும்பான்மை இனத்தவர்களின் பெருவரவேற்புக்கும் காரணமாக அமைந்தது. இருப்பினும் பலமொழி பேசும் ஒரு நாட்டில் ஒரு மொழிக்கு யாப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டமை ஏனைய தேசிய இனங்களை குறிப்பாக தமிழ் தேசிய இனத்தினை புறக்கணிப்பதாகவே இருந்தது. வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அப்பால் அதற்கு வெளியில் வாழும் மக்கள் தமது கடமைகளை தமிழில் நிறைவேற்றமுடியாத நெருக்கடியான நிலைமைகள் எழுந்தன.
இந்நிலையில் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பில் தன்னை நீண்டகாலத்திற்கு நிலைப்படுத்த தயாராகிவரும் ஜே.ஆர். தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமானது மொழி சார்ந்து ஒரு நியாயத்தினை வழங்குமா என தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்த்தனர்.
அந்த அரசாங்கமும் தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்பில் மண் அள்ளிப்போடும் வகையிலேயே அரசியலப்பில் மொழிசார்ந்த விடயத்தினை உள்ளீர்த்தது. ஆனாலும் மொழிசார்ந்த விடயத்தில் கடந்த காலத்தில் காணப்பட்ட சிங்கள மொழி திணிப்பினை சற்றே குறைக்கும் வகையில் ஒரு சில விடயங்கள் அமைந்திருந்தன. ஆனாலும் அது நடைமுறையில் சாத்தியமாகாத நிலைமை தற்போது வரையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
தொடரும்
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-16#page-4
Posted September 23, 2017
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் 25
குறிப்பாக 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் “சிங்கள மொழி” அரச கரும மொழியாகவும் “சிங்களமும், தமிழும்” இலங்கையின் “தேசிய மொழியாக” இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் 16ஆவது திருத்தச்சட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இத்திருத்தத்தின் பிரகாரம் சிங்களமும் – தமிழும் இலங்கையின் அரசகரும மொழியாகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் இருக்கும் என குறிப்பிடப்பட்டது. அத்துடன் ஏதாவது ஒரு மொழியில் கல்வியைத் தொடர முடியும் எனவும் குறிப்பிடப்பட்டது. எனினும் தேசிய மொழிகள் அல்லாத ஒருமொழியை கல்வி மொழியாக கொண்டிருக்கின்ற ஓர் உயர்கல்வி நிறுவனத்திற்கு இது ஏற்புடையதாகாது எனவும் கூறப்பட்டது.
நிர்வாக மொழியைப் பொறுத்தவரையில் சிங்களமும் தமிழும் நாடுமுழுவதும் நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும். வடகிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் சிங்கள மொழி நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும். எனினும் பிரஜைகள் அங்குள்ள அரச நிறுவனங்களில் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருத்தல் வேண்டும்.
விசேடமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும். ஆனால் குறிப்பிட்ட சில இடங்களில் குறிப்பாக ஒரு மொழி பேசுவோர் செறிவாக உள்ள இடங்களில் இரண்டு மொழிகளையும் பேசுவதற்கான நிர்வாகம் இருத்தல் வேண்டும்.
சட்டவாக்க மொழியைப் பொறுத்தவரையில் சிங்களமும், தமிழும் இலங்கையின் சட்டவாக்க மொழியாக இருத்தல் வேண்டும். அதேவேளை உருவாக்கப்படும் ஒவ்வொரு சட்டத்திற்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று இருத்தல் வேண்டும். நீதிமன்ற மொழியைப் பொறுத்தவரை சிங்களமும் தமிழும் நீதிமன்ற மொழியாக இருத்தல் வேண்டும். தமிழ்மொழி இல்லாத இடப்பரப்புக்களில் சிங்கள மொழி இருத்தல் வேண்டும். அத்துடன் நீதிமன்ற பதிவேடுகள் அனைத்தும் சிங்கள மொழியில் இருத்தல் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஏற்பாடுகள் மூலம் தமிழ்மொழியும் அரச கருமமொழியாக மாற்றப்பட்டதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றி வைக்கப்பட்டது எனலாம். வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ் பேசும் மக்களும் தமது சொந்த மொழியில் கருமங்களை ஆற்றக்கூடிய சூழல் எழுந்தது. அத்துடன் உயர்கல்வியைப் பொறுத்தவரையில் கூட தமிழ்மொழியில் கற்கைத் துறைகளை உருவாக்குவதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இவை முன்னேற்றகரமான விடயங்களாக பார்க்கப்படுகின்ற போதும் ஏதாவது ஒரு தேசிய மொழியில் கல்வி கற்கலாம் என்னும் ஏற்பாடு தமிழ்மொழி பேசுவோருக்கு பாதகமானதாகவே உள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வாழும் தமிழ் மக்களுக்கு தனித்துவ அடையாளத்தினை சிதைப்பதாகவே உள்ளது.
தமிழ் மொழியின் பிரயோகம் அரசியலமைப்பு ரீதியாக கூறப்பட்டுள்ள போதும் அது நடைமுறையில் கடைப்பிடிக்கப்படாத போக்கே நீடித்துக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக கூறுவதாயின் ஒரு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் ஒரு தேசிய மொழியை பேசுவோர் அதிகளவு இருக்கும்போது அத்தேசிய மொழியிலேயே நிர்வாகம் நடைபெறுதல் வேண்டும். இரு தேசிய மொழிகளைப் பேசுபவர்கள் கணிசமாகக் காணப்படுவார்களாயின் இரு தேசிய மொழிகளிலும் நிர்வாகம் நடத்தப்படவேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும் கிழக்கு மாகாணத்தில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களை காரணம் காட்டி கடைப்பிடிக்கப்படும் முறைமையானது மலையகம் மற்று வடக்கு, கிழக்கிற்கு வெளியில் உள்ள தமிழர்கள் வாழும் பகுதிகளில் அவ்வாறான நிலைமைகள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலைமையில் அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழுவின் அறிக்கையில், இலங்கை குடியரசின் தேசிய மற்றும் அரச கரும மொழிகளாக சிங்களமும் தமிழும் அங்கீகரிக்கப்படவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேசிய மொழிகளைப் பயன்படுத்தும் பிரஜைகள் அவர்களின் மொழியைக் கற்பதிலும் பயன்படுத்துவதிலும் மேம்படுத்துவதிலும் சமமான உரிமைகளைக் கொண்டுள்ளனர். குடியரசின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும்
ஒவ்வொரு பிரஜையும் தேசிய மொழிகளில் இரண்டில் எந்த மொழியிலுமோ அல்லது இணைப்பு மொழியிலோ இலாப நோக்கற்ற நிறுவனங்களில் இருந்து பொது முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களைக் கோருவதற்கு உரிமையினைக் கொண்டிருக்கின்றார்.
பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் அல்லது உள்ளூராட்சி அதிகார சபை உறுப்பினர் ஒருவர் தேசிய மொழிகளில் எவற்றிலும் அல்லது இணைப்பு மொழியிலும் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கான மேலும் தனது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான உரித்தினைக் கொண்டிருக்கின்றார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் நிர்வாக மொழியாக குடியரசு முழுவதிலும் தமிழும் சிங்களமும் இருக்கும் என்பதோடு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய சகல மாகாணங்களிலுமுள்ள தேசிய மற்றும் மாகாண அரச நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகளின் அரச பதிவுகளைப் பேணுவதற்கு சிங்கள மொழி பயன்படுத்தப்படும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படும்.
எந்தவொரு பிரதேச செயலக பிரிவிலும் வாழும் சிங்கள அல்லது தமிழ்மொழிச் சிறுபான்மையினர் மொத்த சனத்தொகையின் எட்டில் ஒன்றினை மிகைத்து ஜனாதிபதியினால் அவ்வாறாக பிரகடனப்படுத்தப்படுகையில் அப்பிரதேச செயலகப்பிரிவின் அரச பதிவுகளினைப் பேணுவதற்கு சிங்களமும் தமிழும் பயன்படுத்தப்படும்.
எந்தவொரு உத்தியோகத்தருடனும் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எவற்றிலாவது ஒருவர் தொடர்பாட அல்லது அலுவல்களை நிறைவேற்ற உரித்தினை கொண்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாண சபை நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகளின் உரிமைகள், அரச சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான பரீட்சை மொழி, சட்டவாக்க மொழி, நீதிமன்றங்களின் மொழி, போதனா மொழி, அங்கவீனமுற்ற அல்லது விசேட தேவைகளை உடைய ஆட்களுக்கான தொடர்பாடல், மொழியியல் சமூகங்களின் மொழிகளைப் பாதுகாத்தல் ஆகிய தலைப்புக்களின் கீழாக பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக நீதிமன்றங்களின் மொழி என்ற தலைப்பின் கீழ், குடியரசு முழுவதும் சிங்களமும் தமிழும் நீதிமன்றங்களின் மொழியாக இருத்தல் வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த குடியரசின் ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் அமைந்துள்ள நீதிமன்றங்களில் பதிவுக்காகவும் வழக்கு நடவடிக்கைகளுக்காகவும் சிங்கள மொழி பயன்படுத்தப்படல் வேண்டும். அவ்வாறே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியை பயன்படுத்தல் வேண்டும்.
குறித்த நீதிமன்றமொழியல்லாத தேசிய மொழியொன்றிலும் ஏதேனும் நீதிமன்றத்தின் பதிவேடுகள் பேணப்பட வேண்டும். சிங்களத்தில், தமிழில் அல்லது ஆங்கிலத்தில் வழக்கு நடவடிக்கைகள் தொடுக்கப்படலாம் என்பதுடன் சிங்களத்தில், தமிழில் அல்லது ஆங்கிலத்தில் வழங்குரைகளும் ஏனைய ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் இந்த விடயங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன. கடந்த கால அரசியலமைப்புக்களில் இருந்து வேறுபட்டதாகவும் முதல் தடவையாக சிங்களமும் தமிழும் தேசிய மற்றும் அரச கரும மொழி என ஒரே வரியில் உள்ளடக்கியுள்ளமையை வரவேற்க முடியும்.
அதேநேரம் பிரயோக ரீதியாக, அல்லது நடைமுறைரீதியாக அதனை மேற்கொள்வதென்பதே மிகப்பாரிய இலக்காக இருக்கின்றது. நாட்டிலுள்ள பிரச்சினைகளில் 50 சதவீதமான பிரச்சினைகளுக்கான தீர்வினை மும்மொழி அமுலாக்கம் மூலமாக மேற்கொள்ள முடியுமென தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிடுகின்றார்.
மொழி அமுலாக்கம் சரியாக இடம்பெறாமையினால் ஏற்பட்ட விபரீதமான நிலைமைகளை நன்குணர்ந்தவர் என்ற வகையில் புதிய அரசியலமைப்பில் குறித்துரைக்கப்படும் மொழி அமுலாக்கத்தினை செவ்வனே செய்து முடிக்கும் பாரிய கடப்பாட்டினை அவர் கொண்டிருக்கின்றார். எவ்வாறாயினும் அடுத்து நடக்கப்போவதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.
(தொடரும்….)
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-23#page-7
- Posted September 30, 2017
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் 27
ஆர் . ராம்
அந்தவகையில், 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பிலுள்ள அரச கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகளும் அடிப்படைக்கடமைகளும் எனும் தலைப்பின் கீழ் காணப்படும் விதந்துரைப்புக்களில் காணப்படும் நன்மைகளை பார்க்கின்றபோது,
பிரஜைகளின் கடமைகளுக்கும் இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் அரசு தொடர்பான தங்களுடைய கடமைகளை உணரக்கூடிய நிலை ஏற்படுகிறது.
தனியார்துறை பொருளாதாரத்திற்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமையினால் உள்ளூர், வெளியூர் தனியார்களின் முதலீடுகள் வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புக்கள் உருவாகின்றது.
இலங்கைப் பிரஜைகளுக்கு இனம், மொழி, மதம், சாதி, பால் அரசியல் அபிப்பிராயம் என்பவற்றை கவனிக்காது சமவாய்ப்புக்களை வழங்குதல் வேண்டும் எனக் கூறப்பட்டு இருக்கின்றமையானது அது தொடர்பான பாரபட்சங்களை தவிர்க்கிறது.
அரசானது குடும்பத்தை சமூகத்தின் அடிப்படைக் கூறாக ஏற்றுக்கொள்ளுதலும் பாதுகாத்தலும் வேண்டும் எனக் கூறப்படுவதன் மூலம் குடும்பங்கள் சிதைவடையாமல் இருப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
அத்துடன் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை எதிர்காலத்தினை நோக்கிய தூரநோக்கு சிந்தனை எனக் கூற முடியும். இத்தகைய நன்மைகள் காணப்படுகின்ற அதேநேரம் சில குறைபாடுகளும் காணப்படுகின்றன.
குறிப்பாக கூறுவதானால் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரான டாக்டர் என்.எம்.பெரேரா அரச கொள்கையின் தத்துவங்கள் தொடர்பாக, குறிப்பிடுகையில், அரசின் கொள்கைகளை அவதானிக்கும் போது ஒரு கலப்பு பொருளாதாரமே தொடர்ந்தும் நிலவும் நிலை உள்ளது. ஆட்சிமாற்றங்களின் அடிப்படையில் கலப்புப்பொருளாதாரத்தின் விகிதாசாரங்கள் மாற்றமடையும்.
ஆனால் முதலாளித்துவக் கொள்கையின் அடிப்படைக் கட்டமைப்பு தொடர்ந்தும் காணப்படும் என்று குறிப்பிட்டதோடு முதலாளித்துவ கொள்கையை வலிந்து நிற்கும் முதலாளித்துவ சமூகத்தின் சொத்து தொடர்பான சட்டங்களிலும் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு ஏற்படப்போவதில்லை என்று விமர்சன ரீதியான சுட்டிக்காட்டலைச் செய்திருந்தார்.
மேலும் தேசிய கொள்கைகளுக்கு சட்ட அந்தஸ்தில்லை. இதனால் அரசாங்கம் அவற்றை அமுல்படுத்தாத போது மக்கள் நீதிமன்றத்தின் முன் இவற்றைப் பற்றி முறையிட முடியாது என்பது பிரதான குற்றச்சாட்டாகவும் காணப்பட்டது.
அத்துடன் அரசானது இன, மத, மொழி, சாதி, பால், ரீதியான பாகுபாடு காட்டக்கூடாது எனக்கூறியுள்ள போதும் நடைமுறையில் அவ்வாறான பாரபட்சங்கள் அரசியல் பின்னணியுடன் திட்ட முறையில் இருந்தமைக்கான பல உதாரணங்கள் உள்ளன.
கலப்பு பொருளாதார கொள்கை காணப்படுவதனால் சுதந்திர வர்த்தக வலயம் போன்றன உருவாகின்றபோது தனியார் துறையின் வளர்ச்சியின் காரணமாக தொழிலாளர்கள் இதுவரையில் அனுபவித்து வந்த சலுகைகள் உரிமைகள் போன்றவற்றில் பாதிப்புக்களே ஏற்படும் நிலைமைகளே அதிகமுண்டு.
அத்துடன் பிரதான பிரச்சினையாக காணப்படும் இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள விரிசலை தீர்க்கக்கூடிய வகையில் வழிகாட்டிக் கோட்பாடுகள் எவையும் அமையவில்லை போன்ற குறைபாட்டு விடயங்கள் விமர்சன ரீதியிலும் முன்வைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறிருக்கையில் புதிய அரசியலமைப்புக்கான அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழுவின் அறிக்கையில் அரச கொள்கையின் பணிப்புத் தத்துவங்களும் அடிப்படை கடமைகளும் எனும் தலைப்பில் முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.
அதில் உள்ளடக்கப்பட்டுள்ள பணிப்புத் தத்துவங்களானவை நாட்டின் ஆட்சியின் அடிப்படையாக உள்ளன. அத்துடன் நீதியானதும் ஜனநாயகமானதுமான சமூகத்தை நிறுவுவதற்காக அவைகளைப் பின்பற்றுவது அரசின் கடமையாக இருக்கும்.
இந்தப்பணிப்புத் தத்துவங்களானவை அரசாங்கத்தின் எல்லா அங்கங்களையும் வழிநடத்துவதுடன் தேசிய, மாகாண, உள்ளூராட்சி மட்டங்களிலுள்ள எல்லா உத்தியோகத்தர்களையும் அவர்களினால் யாதும் ஒருவர்
(அ) அரசியலமைப்பை பிரயோகிக்கையில் அல்லது பொருள்கோடலில்
(ஆ) ஏதும் சட்டத்தை செயற்படுத்துகையில் பிரயோகிப்பதில் அல்லது பொருள்கோடலில் அல்லது
(இ) அரச கொள்கைத் தீர்மானங்களைச் செய்கையில் அல்லது அமுல்படுத்துகையில் எல்லா ஆட்களையும் வழிநடத்தும் என்றுள்ளது.
அதேநேரம், ஆட்புலமும் இறைமையும் எனும் தலைப்பில்,
(1) அரசானது இலங்கையின் சுயாதீனம், இறைமை, ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றைப் பாதுகாக்கும் என்றுள்ளது.
மேலும் அமைதியும் ஜனநாயகமும் எனும் தலைப்பில்,
(1) இலங்கையின் பன்மைத்தன்மை அம்சத்தை பேணும் அதேவேளையில் எல்லா, இன, மத, சமூக, குழுக்களிடையேயும் அமைதியான சகவாழ்வையும் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்துவது அரசினதும் எல்லா ஆட்களினதும் கடமையாக இருக்கும்.
(2) அரசானது அரசாங்கத்தின் ஜனநாயக் கட்டமைப்பையும் மக்களின் ஜனநாயக கட்டமைப்பையும் மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து பலப்படுத்துவதுடன் அமைதியான, நியாயமான, அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்தை ஊக்குவிக்கும்.
பொருளாதார விடயங்களும் சமூக ஒழுங்கும் எனும் தலைப்பில்
(1) ஒரு நீதியானதும் சமத்துவமானதும், அறநெறியுடையதுமான சமூக ஒழுங்கை உருவாக்கும் அரசின் இலக்குகளில் உள்ளடங்குவனவாவன.
(அ) எல்லா ஆட்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை முழுமையாக அடையச் செய்தல்.
(ஆ) சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் நீதி எல்லா நிறுவனங்களையும் தேசிய வாழ்வையும் வழிநடத்தும் ஒரு சமூக ஒழுங்கில் வினைத்திறனாக இருக்கக்கூடிய வகையில் பாதுகாப்பதன் மூலமாக மக்களின் நலனோம்பலை மேம்படுத்தல் ஆகிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சுற்றாடலும் அபிவிருத்தியும் எனும் தலைப்பில் முன்மொழியப்பட்டுள்ள விடயங்களாவன,
(1) மக்கள் மயப்படுத்தப்பட்ட நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தியின் முகவர்களாகவும் பயன்பெறுநர்களாகவும் ஆண்களின் பெண்களின் முழுமையானதும் சம அளவினதானதுமான பங்கு பற்றுதலை அரசு உறுதிப்படுத்தும். அதில் உள்ளடங்குவனவாவன,
(அ) உள்ளடக்கிய மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தல், அனைவருக்கும் தொழில், கண்ணியமான வேலை,
(ஆ )வறுமை, படிப்பறிவின்மை ஆகியவற்றை இல்லாதொழித்தல், சமத்தவமின்மைகளைக் குறைத்தல்
(இ) தாங்கத்தகுந்த, நம்பகமான, நிலைபேறான சக்தியை அனைவரும் அணுகிப்பெறுவதை உறுதி செயதல்
(ஈ) நிலைபேறான உணவு உற்பத்தி முறையை உறுதிசெய்தல் மற்றும் சிறிய விவசாயிகளுக்கு உதவுதல்
(உ) பொதுநலன் தொடர்பில் சிறப்பாகச் சேவையாற்றும் முகமாக இயற்கை பொருள் சார்ந்த வளங்கள், சமூக உற்பத்தி ஆகியன நியாயமான முறையில் பகிரப்பட்டுள்ளதை உறுதி செய்தல்.
(2) இலங்கையின் இயற்கை மரபுடைமை அதன் செழிப்பான உயிர்ப்பல்வகைமை ஆகியவற்றைப் பொதுநலன் தொடர்பில் பரிசீலித்தல் மற்றும் இது பாதுகாக்கப்பட்டு நிலைபேறான முறையில் பயன்படுத்தப்படுவதை அரசு மற்றும் சகல பிரஜைகளும் உறுதி செய்தல்.
(3) காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான சகல சாத்தியப்பாடுள்ள நடவடிக்கைகளையும் அரசு மற்றும் அனைத்துப் பிரஜைகளும் மேற்கொள்ளல் மற்றும் மக்கள் சகல உயிரின முறைகள் ஆகியவற்றின் மீது இதன் பாதகமான தாக்கம் தொடர்பில் செயற்படல்
(4) தேவையற்ற வலி, துன்பங்கள், ஆகியவற்றிலிருந்து மனிதனல்லாத உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்யும் முகமாக மனித சுகாதாரம், நலனோம்புகை, பாதுகாப்பு ஆகிய நலன்களைக் கருத்திற்கொண்டு சகலவிதமான மனிதனல்லாத உயிரினங்களையும் கருணையுடன் நடத்துவது, அரசு மற்றும் ஒவ்வொரு நபர் ஆகியோரின் கடமையாகும்.
(5) தற்போதைய எதிர்காலச் சந்ததியினருக்காக இலங்கையின் கலாசாரம் தொல்பொருளியல் மரபுடமை, ஆகியவற்றை அரசு ஒவ்வொரு நபர் ஆகியோர் பேணிப்பாதுகாத்தல் வேண்டும்.
(6) இலங்கையின் சுதேச அறிவைப் பேணிப்பாதுகாத்து, அது பிழையாகப் பயன்படுத்துவதை அரசு, ஒவ்வொரு நபர் ஆகியோர் தடுத்தல் வேண்டும்.
தொடரும்….
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-30#page-7
- October 6, 2017
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் 28
October 13, 2017
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் 29
http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-13#page-23
Posted October 27, 2017
Leave a Reply
You must be logged in to post a comment.