சூரன் கதை வைணவரின் இராமாயணத்தின் மடைமாற்று
சூரன் & தமிழ் :-வால்மீகி இராமயணத்தை மாற்றி, கம்பர் தமிழ்ச் சூழலுடன் பொருத்தி கம்ப ராமாயணம்
படைக்கின்றார்; அத்தகைய கம்ப ராமாயணப் போர் நடைபெற்ற இடமாகக் காட்டப்பட்டது இலங்கையே. கம்ப இராமாயணம் வைணவப் பெருமை பேசியதால், அதற்குப் போட்டியாக, சைவம் சார்ந்து கச்சையப்பரால் இயற்றப்பட்டதே கந்த புராணம்
. ஸ்கந்த புராணத்திலிருந்து, குறிப்பாக சங்கர சங்கிதை என்பதிலிருந்து கந்த புராணம் படைக்கப்பட்டது. கம்பராமயணத்துக்கும் கந்த புராணத்துக்குமான ஒற்றுமைகள்.
வால்மீகி இராமயணம்> கம்ப இராமயணம் = ஸ்கந்த புராணம்> கந்த புராணம், இராவணனால் கடத்தப்பட்ட சீதை மீட்பு =சூரனால் கடத்தப்பட்ட ஜெயந்தன் மீட்பு
அனுமான்=வீரபாகுதேவர்
இராவணன் தம்பிகள்= சூரன் தம்பிகள்தேவர்களைக் காப்பாற்றுதல்இலங்கையில் போர்…………… ஆம், சூரன் போர் நடைபெற்ற இடமான ஏம கூடம், கடலுக்கு நடுவே மாமரமாக நிற்றல், வெற்றிவிழா நடைபெறும் திருச்செந்தூர் அமைவிடம் என்பவற்றினைத் தொடர்புபடுத்திப் பார்த்தால்; சூரன் போர் நடைபெற்ற இடம் ஈழமே என்பதனை அறிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில்தான் இந்தாண்டு இடுப்பளவு வெள்ளத்துக்குள்ளும் சூரன் போர் ஈழத்தில் நடைபெற்றிருந்தது (படம்1).
ஒரு வகையில் இது பொருத்தமாகவே உள்ளது; அதாவது கந்த புராணத்தில் ஒரிடத்தில் (படம் 2),
தூங்கும் குழந்தைகள் உட்பட மொத்த ஈழ ஊரையே கடலுள் மூழ்கடித்த கதை யினை கந்தபுராணப் பாடலான “முஞ்சு தானை களார்ப்பொடு குழீ …” எடுத்துக்காட்டும். (படம் 2 காண்க). { தூங்கும் குழந்தைகளை ஊருடன் சேர்த்து கொன்றதாக உருவகப்படுத்தும் கதை கடவுள் கதையாயின், மகிந்த ராசபக்சவின் முள்ளிவாய்க்கால் துன்பியலும் ஒரு நாள் தமிழராலேயே கொண்டாடப்படலாம்}. சரி, சங்க இலக்கியத்தில் முருகன் பற்றிய பல தரவுகள் உள்ளன, அங்கு சூரன் போர் உண்டா? இல்லை. சங்கப் பாடல்களில் குறிஞ்சி நிலத் தலைவன், நடுகல் வழிபாடு போன்ற இயற்கையே போற்றப்படும். முருகனின் ஊர்தி கூட யானையே (பின்னூட்டம் 1 காண்க).
சூரனைக் கொன்று மயிலாக்குதல், அதற்கு முன்பே முருகன் குழந்தையாக இருக்கும் போதே மாம்பழத்துக்குச் சண்டையிட்டு மயிலேறி உலகு சுற்றல் { இடிக்குதே},ஆறு தலை, பன்னிரண்டு கை எல்லாமில்லை. சூரன் போருமில்லை. சூர்
உண்டு; அது துன்பம், அச்சம், தெய்வ மகளிர் எனப் பலவாறு பொருள் பெறும்.
சூர்
துன்பம் எனில், துன்பத்தினைப் போக்குபவன் சூரன். கம்பர் சூரரைப் போற்றுவதனை இன்னொரு பதிவில் முன்னர் பார்த்தோம். இன்றும் மக்கள் வழக்கில் கணக்கில் அவன் சூரன்
, விளையாட்டில் அவன் சூரன்
எனத் தமது பிள்ளைகளை அழைப்பது பழந் தமிழ் மரபின் தொடர்ச்சியே. மற்றும் படி சூர சம்காரம்
எல்லாம் இடையில் எம்மிடம் திணிக்கப்பட்ட புனைவுகளே. பழந் தமிழ் மரபுகளை ஈழத்தில் பார்ப்பனியம் அழித்தொழித்த ஒரு உருவகப் படுத்தலே, இந்தச் சூரன் போர்.
சூரனுடன் சண்டையிட்டது #ஸ்கந்தனே , தமிழின் இயற்கை சார் முருகன் அல்ல {இன்று ஸ்கந்தனும் முருகனையும் கலந்து பார்ப்பதால் ஏற்பட்ட குழப்பம் வேறு}.சூரன் போரின் மற்றொரு திணிப்பு- ஆரியப் பெண்ணான தேவஸேனா (தெய்வயானை) இனை முருகனின் முதல் மனைவியாக்கித் தமிழ்த் தொன்மமான வள்ளியினை சின்னவீடு
அளவுக்கு இழிவுபடுத்துதல். தெய்வானை/ தெய்வயானை என்ற பெயரே திருமுருகாற்றுப்படை (11வது திருமுறை ) இல் கூட கிடையாது.
வள்ளிதான் தமிழ்த் தொன்மம், அவளே முருகனின் இணை. இன்றைய திருவிழா ஒழுங்கில் கூட நீங்கள் ஒரு முரணைக் காணலாம். தேர்த் திருவிழா, சப்பறத் திருவிழா என்பனவற்றுக்கு முதல் நாள் வேட்டைத் திருவிழா நடைபெறும் { முருகன் வேட்டைக்குப் போனால் எப்படி அவர் சைவராக ( Vegetarian ) இருக்க முடியும் என்பது வேறு} . வேட்டைத் திருவிழாவில் வள்ளியினை இணையராக ஏற்றுத் திரும்பும் போது , தெய்வயானை கதவைத் திறக்காமல் அடம் பிடிப்பது போல ஒரு சடங்கு (நாடகம் போல) யாழ் மாவிட்டபுரம் கோயிலில் நடைபெறும்.
பின்னர் வேட்டை, தேர், தீர்த்தம் எல்லாம் முடிவடைந்த பின், பூங்காவனத்துக்கு முன்னர் திருக்கல்யாணம்
என்று ஒரு திருவிழா நடைபெறும்; அதில்தான் ஸ்கந்தனுக்கும் தெய்வானைக்கும் திருமணமே நடக்கும் : அப்ப, எப்படி முதலே வள்ளியுடன் திரும்பிய முருகனுக்கு முன்னர் ஒரு நாளில் கதவினைச் சாத்த முடியும்? இப்ப இந்தத் திருவிழா ஒழுங்கில் முதல் மனைவி யார்? இதை எல்லாம் யாரும் சிந்திப்பதில்லை. இப்படியாக, தமிழர்களை, அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் உருவகப்படுத்தலினை; பெரும் எடுப்பில் ஈழத்தில் மட்டுமல்லாமல், புலம் பெயர் நாடுகளிலும் கொண்டாடும் ஈழத் தமிழரை என்ன சொல்வது! …குறிப்பு- வடமொழி ஸ்கந்த புராணமானது பழங்குடி இனக்குழிக்களை பார்ப்பன ஆரியர்கள் இனப்படுகொலை செய்த உண்மையான நிகழ்வினையே தொடக்க காலத்தில் எதிரொலித்திருந்தது (சேவல்,மயில் எல்லாம் அந்த இனக்குழுக்களின் குலக்குறிகளே). பின்னர் கச்சியப்பரின் கந்தபுராணமே இதனை ஈழத்துடன் தொடர்புபடுத்துகின்றது
Leave a Reply
You must be logged in to post a comment.