மாற்றம் நிகழுமா?
உலகத்தில் மாற்றங்கள் தொடர்கின்றன. தென்னிலங்கை மக்களும் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். ஈழத் தமிழர் மட்டும் தேங்கிவிட்ட நாற்றமடிக்கும் குட்டையா? எப்படி மாற்றத்தை உருவாக்கலாம்?
உலகத்திலேயே அதி உன்னதமான தியாகம் அற்பணிப்பு, வீரம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கொண்ட
எமது ஆயுதப் போராட்டத்தை புலம்பெயர் தமிழரே தாங்கி நின்றனர். பாரியையும் மிஞ்சி வாரி வாரி வழங்கினர்.
புலம்பெயர் தமிழ் மக்களின் இனம்சார்ந்த செயற்பாடுகளான தமிழ்ப் பாடசாலைகள், இசை நடன கல்லூரிகள்,
விளையாட்டுக் கழகங்கள், தமிழ்ச்சங்கங்கள்ää மிகக் குறிப்பாக ஒட்டுமொத்தத் தமிழ் ஊடகங்கள் எல்லாமே
போராளிகளின் புலம்பெயர் முகவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன, இப்போதும் இருக்கின்றன. அவர்களின்
ஏகபோக ஊடக பலத்தால் மக்களுக்காகத் தம்மையே அர்ப்பணித்த அந்தத் தியாகிகளின் முகவர்களாக
இவர்கள்தான் இன்னமும் இருப்பதாக பலரையும் நம்பவைக்கிறார்கள். போராளிகள் தம்மையே மக்களுக்காகத்
தியாகம் செய்தனர்.ஆனால் அவர்களின் வெளிநாட்டு முகவர்கள் சுகபோக வாழ்க்கையில் ஊறி தமது சுகபோக
வாழ்வுக்காக, ஆதிக்கத்திற்காக, செல்வாக்கு, புகழுக்காக அந்த மக்களையே தமக்காகப் பலிகொடுக்கிறார்கள்.
தியாகிகளுக்கும் இந்த நயவஞ்சகப் போலிகளுக்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவி மக்களை தமது ஊடக
பலத்தால் இன்னமும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
மாவீரனாகிவிட்ட தலைவனுக்கு, இதய தெய்வத்திற்கு அஞ்சலி செய்ய விடாமல் உயிரோடு இருப்பதாகப்
பொய்கூறித் தமது சுயநல வியாபாரத்திற்காகத் தடுத்துக்கொண்டு பல்லாயிரம்கோடி செலவில் வெளிநாடுகளில் மாவீரர் அஞ்சலி நிகழ்வு செய்கிறார்கள். இங்கே இலங்கையில் போராளிக் குடும்பங்கள் வாழவழியின்றித் தற்கொலை செய்கிறார்கள். “ஈழத்தமிழரின் அரசியலுக்கு நாமே உரித்தாளர், சொந்தக்காரர், எமக்காக நீங்கள் வெறும் முகாமையாளராகச் செயற்படுங்கள்” என்று 2010ம் ஆண்டு தேர்தலின் போது இந்த முகவர்கள் பேரம் பேசியபோது சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு அதற்கு மறுத்து “நாம் இருபகுதியும் சேர்ந்து மக்களுக்கான சேவைகளை ஆற்றுவோம்” என்று விநயமாக வேண்டியும் அதை ஏற்காது திமிரோடு அப்படியானால் உங்களை நாம் அழித்து விடுவோம் என்று இன்றுவரை அந்தப் பணியையே தொடர்கிறார்கள். தமது நிதிபலத்தால் முதலில் பொன்னம்பலம் தலைமையில் சிலரையும் தொடர்ந்து சுரேஷ், விக்கி, அனந்தி என்று பலரையும் ஒவ்வொருவராக உடைத்தெடுத்து பின்னர் டெலோ, புளொட்டையும் உடைத்து எஞ்சிநின்ற தமிழரசுக்கட்சியிலும் சிலரை உடைத்து எடுத்து விட்டார்கள். இவர்களின் இந்த இனவிரோதச் செயல்களுக்கு தென்னிலங்கை இனவாதிகளும் தாராளமாக உதவுகிறார்கள். பண பலத்தால் வாக்குகளைச் சிதறடிக்க சுயேச்சைக் குழுக்களையும் உதிரிக் கட்சிகளையும் தாராளமாகக் களமிறங்கியுள்ளனர்.
தம்மை எதிர்த்துப் போரிட்டவர்களைக்கூட மக்களின் நன்மைக்காக ஒன்றுசேர்த்து 22 உறுப்பினரை ஒரேஅணியில் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய போராளிகள் அங்கே? தமது சுயநலத்திற்காக ஒன்றாய் இருந்தோரை சிதறு தேங்காயாகச் சிதைத்து அவர்களை தமது பொம்மைகளாகப் பயன்படுத்தும் வெளிநாட்டு பணநாயக முதலாளிகள் இங்கே? பணத்திற்கு விலைபோனது அந்தச் சுயநல அரசியல்வாதிகளது தவறுதான். ஆனால் அந்த விலையைக் கொடுத்து அவர்களை வாங்கியோர் எவ்வளவு கொடியவர்கள்?. தேசியம், தேசியம் என்றும் ஒற்றுமை ஒற்றுமை என்றும் வாய்கிளியக் கத்தும் இவர்கள் அந்த இரண்டையுமே தமது நலனுக்காக விற்றுவிட்டு பின்கதவால் தென் னிலங்கை அரசியல்வாதிகளோடு கைகோர்த்து இலங்கையில் தமது முதலீடுகளை தாராளமாக முன்னெடுக் கிறார்கள். அது தவறு என்று நாம் சொல்லவில்லை. தமது சுய நலனுக்காக அப்படிச் செய்யலாம்; ஆனால் மக்கள் நலனுக்காக அப்படி எதுவும் செய்யக்கூடாது. மக்கள் சிங்கள அரசியல் வாதிகளோடு மட்டுமல்ல சிங்கள மக்களோடு கூட பேசவே கூடாதுää அவர்களை மக்களாக மதிக்கவே கூடாதுää அவர்களை வெறுக்கவே வேண்டும் என்று பச்சை இனவாதத்தால் சுயலாபப் பிழைப்பு நடத்துவதையே தவறு என்கிறோம்.
தமது நிதிபலத்தால் விலைக்கு வாங்க முடியாத சம்பந்தரையும் சுமந்திரனையும் ஒழித்துக் கட்டுவதையே குறியாகக் கொண்டு கடந்த 16 வருடங்களாக தமது ஊடக பலத்தால் ஒட்டுமொத்தத் தமிழரையும் ஏமாற்றி தமது மாயைக்குள் வைத்திருக்கிறார்கள். தென்னிலங்கையில்ää சுயநலத்திற்காக இனவாதத்தால் தம்மை இதுவரை ஏமாற்றி நாட்டையே குட்டிச்சுவராக்கிய சிங்கள அரசியல் அயோக்கியரை இனம்கண்டு சிங்கள மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள். ஆனால் எம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கும் இந்த பணநாயக
இனவாத முதலாளிகளை இனம்கண்டு அவர்களுக்கு இதுவரை விலைபோன அனைவரையும் அகற்றி ஒரு
நேர்மையான ஒளிவுமறைவற்றää சுயநலமாகச் சிந்திக்காமல் மக்களுக்காகச் சிந்திக்கும் ஒரு அரசியற்
கலாச்சாரத்தை உருவாக்கும் அந்த மாற்றம் தமிழர் மத்தியில் ஏற்படுமா?. அந்த மாற்றம் நடக்குமா?.
தனது வெற்றிக்காக இனவாதம் பேசாதää வெற்றுக் கோஷங்களை எழுப்பி மக்களை உணர்ச்சி வசப்படுத்தி
அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனையை மழுங்கடிக்காதää பழைய புண்ணைக் கிளறிக்கிளறி அதைக் காட்டியே
பிச்சை எடுக்காதää யதார்த்தபூர்வமான நடைமுறைச் சாத்தியமானவற்றை கூறுகின்றää தமிழரின் விடிவிற்கான
அரசியல் வழித்தடத்தை முழுமையாக முன்வைக்கின்றää மதி நுட்பமும் தீர்க்கதரிசனமுமுள்ள ஒரு தமிழ்
அரசியல்வாதி சுமந்திரன் மட்டுமே. கட்சி பேதமின்றி அனைத்து தென்னிலங்கை அரசியல்வாதிகளும் மதிக்கின்ற
பயப்படுகின்ற, சர்வதேச இராசதந்திரிகள் கவுரவமாக அழைத்து ஆலோசனைகளைக் கேட்கின்ற ஒரே தமிழ்த்
தலைவர் அவர் மட்டுமே. சர்வதேசம் பிடுங்கித் தரும் என்று பொய்கூறி ஏமாற்றாமல் சர்வதேச உதவிகள் அழுத்தங்களோடு; முற்போக்கான பேசி சிங்கள மக்களின் பங்களிப்போடு தென்னிலங்கை அரசியல்வாதிகளோடு
பேரம் உரிமைகளையோ அபிவிருத்தியையோ பெறவேண்டியவற்றைப் பெற்றுத்தரும் வல்லமை கொண்ட ஒரே தமிழ் அரசியல்வாதி சுமந்திரன் மட்டுமே. கொள்கைவாதியென்று கூறிக்கொண்டு அதற்காக அனைத்தையும் கோட்டைவிடும் கோமாளியும் அல்ல. புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் சமபங்காற்றக்கூடிய ஆளுமைää
சட்டவல்லமை கொண்டவர் சுமந்திரன்தான்.
அத்தனை போலித் தமிழ் அரசியல்வாதிகளும் சுற்றிநின்று போரிட்டாலும் மக்களுக்காகத் தனியொருவனாக நின்று களமாடும் தானைத்தளபதி.தமிழரின் பல்வேறுபட்ட அன்றாடப் பிரச்சனைகள் சிலவற்றுக்காவது தன்
சட்டவாதத் திறமையாலும் பெற்றுக்கொடுத்தவர். இராசதந்திரத்தாலும் தீர்வு தமிழரசுக் கட்சியையும் சுத்தப்படுத்தி புத்துயிர் ஊட்டி புதியவர்களை இழையவர்களைää பெண்களை, யதார்த்தமான செயல்வீரர்களை உள்வாங்கி தந்தை செல்வா வழியில் தமிழர் அரசியலிலும் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முயலும் தலைவன், மக்கள்
தோழன்தான் சுமந்திரன். ஈழத்தமிழினமாகிய நாமும் மாற்றத்தை ஏற்படுத்துவோம். சுதந்திரக் காற்றைச் சுவாசிப்போம். வளமான வாழ்ந்திடுவோம். வீட்டோடு வீட்டிற்கு வாக்களிப்போம்.
யாழ் மாவட்ட இளையோர் அமைப்பு
Leave a Reply
You must be logged in to post a comment.