கஸ்தூரி சொன்னது யாரைத் தெரியுமா? – டாக்டர் காந்தராஜ் விளக்கம்!
06/11/2024
‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் டாக்டர் காந்தராஜ், இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கஸ்தூரி பேசியது குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
பிராமணர்களின் கொள்கைகளை எதிர்ப்பதற்குக் காரணம், அவர்கள் மற்றவர்களைக் கீழ் சாதி என்றும் சூத்திரன் என்றும் சொல்வதால் தான். அதே போல் கோயில்லுக்குள் வரக்கூடாது என்றும் அவர்கள் முன்பு துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு நடக்க வேண்டும் என்று சொல்வதால் தான். திருஞான சம்பந்தம் தொடங்கிய இந்த போராட்டம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. சனாதனம் வந்த பிறகு, சமணர்களைக் கழுவேற்றி கொலை செய்தததில் ஆரம்பித்த சண்டை இது. பிராமணர்கள் மற்றவர்களை பட்டியிலத்தனவர்கள் என்று கூறி, பூநூல் அணிந்து பெருமைகொண்டவர்கள். கல்விக்காகப் பிராமணர்கள் உதவினார்கள் என்று கூறுகிறார்கள், பாம்பு விஷயத்தில் புற்றுநோய்க்கு மருந்து கிடைக்கிறது என்பதற்காக விஷத்தைக் குடிக்க முடியுமா? இங்குள்ள கோயில்களில் பிராமணர்கள் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று பதாகை வைத்திருப்பார்கள். இதற்கு என்ன அர்த்தம்? சமஸ்கிருதத்தில் செய்வதைத்தான் நியாயம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோயிலுக்குள் இருக்கும் எலக்ட்ரிக்கல் ஏர் கண்டிசனரை கண்டுபிடித்தது கிறிஸ்தவர்கள். அவர்கள் செய்ததை உள்ளே வைத்துக்கொண்டு பூஜை அறை ரெடி ஆனதும் வசூலுக்காகப் பிராமணர்கள் உள்ளே சென்று விடுவார்கள். ஆனால் மற்ற சாதியினரை உள்ளே விடமாட்டார்கள். இன்றுவரை அப்படிதான் நடந்து வருகிறது. ராஜாக்களுக்குச் சேவை செய்ய தெலுங்கர்கள் வந்தார்கள் என்று கஸ்தூரி பேசியிருக்கிறார். யாருக்குத் தெரியும் ஒருவேளை ஆந்திராவிலுள்ள தெலுங்கு பேசக்கூடிய பிராமணர்கள்கூட வந்திருக்கலாம். அவர்களையும் தமிழர்கள் என்று ஏற்றுக்கொண்டோம். திராவிடம் இல்லை என்று சொல்லுபவர்களுக்கு அதைப் பற்றித் தெரியவில்லை என்பதுதான் உண்மை. இன்றைக்கு தமிழ் மொழியைப் பேசுகிறவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாது உலகநாடுகள் முழுக்க இருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் பாஷ்டோ என்ற மொழி இருக்கிறது அது தமிழ் மொழி. அதே போல் ஆஸ்திரேலியாவில் மூரா என்ற இனம் இருக்கிறது அவர்களின் நடனக்கலை பரதநாட்டியத்திலிருந்து பிரிந்தது. தென் அமெரிக்காவில் பெரு என்ற பகுதிக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள மியூசியத்தில் சோழர்களைப் பற்றி இருக்கிறது. ஆந்திராவில் எ.டி.ஆர். ஆரம்பித்த திராவிடப் பல்கலைக்கழகம் இருக்கிறது. பிராமணர்களை விமர்சிக்க அவர்களின் சாதிப் பெயரைத்தான் உபயோகிக்கிறோம். ஆனால் கஸ்தூரி, திராடத்தை தவறாக உச்சரித்து கெட்ட வார்த்தைபோல் பேசுகிறார். அவரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்.
கடவுளை வைத்து ஏமாற்றுபவர்களின் கூட்டத்தில்தான் கஸ்தூரி இருக்கின்றார். கஸ்தூரி அந்த மேடையில் திருடக் கூடாது, பொய் சொல்லக்கூடாது, பிறர் மனைவிக்கு ஆசைப்படக்கூடாது என்று பிராமணர்கள் சொல்வதால் பிராமணர்களைப் பிறருக்கு பிடிக்கவில்லையென்று பேசியிருக்கிறார். அவர் சொன்ன எல்லாவற்றையும் கிருஷ்ணர் செய்திருக்கிறார். அவர் பாமா மற்றும் ருக்மணி ஆகியோரை திருமணம் செய்துகொண்டு ராதா என்ற திருமணமாகியிருந்த பெண்ணை தன்னுடன் வைத்துக்கொண்டார். அதே போல் வெண்ணெய் திருடியது கிருஷ்ணன். அஸ்வத்தமா யானை இறந்ததை அஸ்வத்தமாவே இறந்ததாகப் பொய் சொல்லி துரோணாச்சாரியாரை கொன்றது கிருஷ்ணன். இவரைத்தான் கடவுளாக கஸ்தூரி வழிபட்டு வருகிறார்.
இன்றைக்கு பிராமண எதிர்ப்பில் ஏன் இவ்வளவு தீவிரமாக இருக்கிறார்களென்றால், முன்பு ஒரு பட்டியலின பெண் பிரசவ வேதனைப்பட்டு அக்ரகாரம் வழியாக சென்றபோது வாஞ்சிநாதர் என்ற ஐயர் சுட்டுக் கொன்றார். அவரை தியாகி என்று சொன்னார்கள். இதுபோல பல விஷயங்களில் பிராமணர்கள் பெருமை பேசி வந்ததால்தான் அவர்களைத் தீவிரமாக எதிர்க்கிறார்கள். தி.மு.க.விற்கு எதிராக கஸ்தூரியைப் போல நிறைய பேரை பேசவிட்டுப் பார்த்தார்கள். இப்படிதான் முதலில் எடப்பாடி பழனிசாமியை கொண்டுவந்தார்கள் அவர் ஏமாற்றத்தைக் கொடுத்துவிட்டார்.
ரஜினியை தி.மு.க.விற்கு எதிராக கொண்டுவரப் பார்த்தார்கள். அவர் நழுவும் மீன் போல் அரசியலுக்கு வரவில்லை. இப்போது விஜய் வந்திருக்கிறார். இவர் தி.மு.க. கொள்கைகளை காப்பியடித்திருக்கிறார். இவ்வளவு நாள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் பட்டியலினத்தவரையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்த பிராமணர்கள் இன்றைக்கு வெளியில் வந்து பேசுவது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. கஸ்தூரி போல் கடைசி ஆள் இருக்கிற வரை ஆரியர்களை எதிர்த்துக்கொண்டுதான் இருப்போம்.
https://www.nakkheeran.in/special-articles/special-article/doctor-kantharaj-interview
“பிராமணர்கள் தமிழர் இல்லையென்றால், வேறு யார் தமிழர்கள்?” – நடிகை கஸ்தூரி ஆவேசம்
Published on 03/11/2024 | Edited on 03/11/2024
சென்னை எழும்பூர் பகுதியில், பிராமணர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்தார். மேலும், இதில் ஆடிட்டர் குருமூர்த்தி உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, “தமிழ்நாட்டில் அந்த இனப்படுகொலை நடக்கிறது. காஷ்மீரில் நடந்தது மட்டும் இனப்படுகொலை கிடையாது. அங்கு மொத்தமா வெட்டுனாங்க.. உயிருக்கு பயந்து எல்லோரும் வெளியே வந்தார்கள். தமிழ்நாட்டில், பல பத்தாண்டுகளாக அறுபது ஆண்டுகாலங்களுக்கு மேலாக நடப்பதற்கு பெயரும் இனப்படுகொலை தான். பிராமணர்களின் உணர்வை அழிப்பதும் இனப்படுகொலை தான். ஒருவரின் உணர்வை அழிப்பதும், அடையாளத்தை அழிப்பதும் அந்த இனத்தை அழிப்பதற்கான சமம் தான். எனக்கு அதில் ரொம்ப பயமாக இருக்கிறது.
ஆளுங்கட்சியினருக்கு நாளைக்கு கல்யாணம் செய்வதற்கு பிராமண பெண்கள் எப்படி கிடைப்பார்கள்?. நீங்கள் எங்கள் இனத்தை அழித்து, அடையாளத்தை அழித்தால் எப்படி பிராமண பெண்கள் இருப்பார்கள்?. யார் இறந்தாலும், கருமாதி செய்வதற்கு பிராமணர்கள் இருப்பார்களா? என்ற கவலை வந்திருக்கிறது. இந்த கவலை, இந்து சமுதாயத்தின் கவலை. பிறப்பதில் இருந்து இறப்பது வரை ஒவ்வொரு இடத்திலும் இன்றியமையாது அங்கமாக வகிக்க வேண்டிய ஒரு குலத்தை அழிக்கிறார்கள். திராவிடம் பேசுபவர்களுக்கு கடவுள் மறுப்பு தான் முதல் கொள்கையாக இருக்கிறது. அதற்கான சார்ந்த கொள்கை தான் பிராமண எதிர்ப்பு. கடவுள் இருக்கிறது என்று சொன்னால், இந்து சமுதாயம் ஒன்றுபட்டே இருக்குமே என்ற காரணத்தினால் தான் கடவுள் மறுப்பு பேசுகிறார்கள்.
ஒருவன், மற்றவனை ஒடுக்கினான், இழிவுப்படுத்தினான், என ஒவ்வொரு இடத்திலும் பொய்யான கதைகளை புணைந்து பேசுகிறார்கள். ஆரியர்களை, வந்தேறிகள் என்று சொல்கிறார்கள். யார் வந்தேறிகள்?. எப்பொழுதோ வந்த பிராமணர்களை, தமிழர்கள் இல்லை என்று சொல்ல, நீங்கள் யார்?. நீங்கள் யார் தமிழர்கள்?. பிராமணர்கள் தமிழர்கள் இல்லையென்றால், வேறு யார் தமிழர்கள்?. அதனால், தானே ஒருத்தர் கூட தமிழர் முன்னேற்றக் கழகம் என்று வைக்க முடியவில்லை. நான் ஹைதராபாத்தில் தான் நான்கு வருடமாக இருக்கிறேன். நீங்கள் திராவிடர்களா என்று அவர்களை கேட்கும்போது, என்னது என்று கேட்கிறார்கள். உங்களை விட அதிகமாக தெலுங்கு பேசுகிறவர்கள் எங்க ஊர்ல தான் அமைச்சரவையில் இருக்கிறார்கள் என்று அவர்களிடம் சொன்னபோது, அப்படியா என்று பெருமையா கேட்கிறார்கள். அப்படி இங்கு ஐந்து பேர் அமைச்சரவையில் இருக்கிறார்கள்.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று திருமா சார் கேட்டார். அவர் தெரிந்து சொன்னாரோ, தெரியாமல் சொன்னாரோ தெரியவில்லை. ஆதிக்குடிகளான பறையர்களுக்கு தான் பங்கு கிடையாது. தெலுங்கு பேசினால், பங்கு நிறைய கொடுக்கிறார்கள்” என்று பேசினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.