ஆறு இலட்சம் வாக்குகள் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு கிடைக்குமா?

வடக்கு கிழக்கில் 22 லட்சம் வாக்குகள் பதிவில் உள்ள நிலையில் 6 லட்சம் வாக்குகளை இலக்காக்கொண்ட தமிழ்ப் பொது வேட்பாளர் அந்த 6 லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொள்வாரா என்பது தொடர்பில் தமிழர் தரப்பில் பெரிதும் ஆவலாக எதிர் பார்க்கப்படுகின்றது.

வடக்கு கிழக்கில் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி உள் அடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 5 லட்சத்து 93 ஆயிரத்து 187 வாக்குகளும், வவுனியா, முல்லைத்தீவு, மன்னாரை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 81 வாக்குகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 லட்சத்து 49 ஆயிரத்து 685 வாக்குகளும், திருகோணமலை மாவட்டத்திலே 3 லட்சத்து 15 ஆயிரத்து 925 வாக்குகளும் பதிவில் உள்ளன.

இதேபோன்று அம்பாறைமாவட்டத்தில் 5 லட்சத்து 55 ஆயிரத்து 432 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்தே தமிழ் பொது வேட்பாளர் 6 லட்சம் வாக்குகளை இலக்காக நிர்ணயிந்துள்ளார். வடக்கு கிழக்குற்கு வெளியிலும் தமிழர்கள் வாழ்ந்தாலும் பொது வேட்பாளரே அவர்களை ஒதுக்கிய தன்மையே காணப்படுவதனால் அதாவது வடக்கு கிழக்கிற்கு வெளியே சென்று இவர்கள் வாக்கு கோராதமை பெருத் குறைபாடாக காணப் படுவதனால் அவர்களின் வாக்குகளை எதிர்பார்க்க முடியாது. இனி அவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் எந்தச் சந்தர்ப்பமும் இல்லை.

இந்த நிலையிலேயே பொது வேண்பாளரின் 6 லட்சம் வாக்குகளை பெறும் திட்டம் அல்லது எண்ணம் என்பது இலங்கை வாழ் தமிழர்களை விடவும் இன்று அதிகமாக புலம்பெயர் தமிழர்களாலேயே ஆவலாக பார்க்கப் படுகின்றது. ஏனெல் அவர்களே இந்த முயற்சிக்கு இன்று அதிக பங்களிப்பைச் செலுத்தி நிற்கின்றனர்.

வடக்கு கிழக்கில் வாக்களிப்பு என்பது எவ்வாறு அமையும் என்பதனை புரிந்துகொண்டாலே இந்த 6 லட்சம் வாக்குகளை பெற முடியுமா என்பதற்கு விடையளிக்க முடியும். அதிலும் குறிப்பாக ஓர் அரசியல் கட்சி தமிழர்களை வாக்களிக்க வேண்டாம் எனக் கூறிவரும் நிலையில் அவர்களின் கருத்தை சொந்தக் கட்சியைச் சேர்ந்த பலரே ஏற்கவில்லை என்ற நிலை காணப்படுகின்றது. இதற்கு அப்பால் தமிழர்களை அதிகமாக்கொண்ட மாவட்டமான யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 5 லட்சத்து 93 ஆயிரத்து 187 வாக்குகளில் 4 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டாத வாக்குகளே அளிக்கும் நிலையே காணப்படுகின்றது. இதில் ஒரு லட்சம் வாக்குகளை மிஞ்சி பொது வேட்பாளர் பெறுவதற்கான சந்தர்ப்பம் காணப்படவில்லை. ஏனெனில் இங்கே தற்போது வரையில் ரணில் விக்கிரமசிங்காவே முதலிடம் பெறும் கள நிலைமை காணப்படுகின்றது. அதற்கு காரணம் ஈ.பி.டி.பி, அங்கஜன் இராமநாதன், விஜயகலா போன்றோரின் வாக்குகளுடன் பொருளாதார நெருக்கடியில் எம்மை மீட்டார் என சிலர் இன்னமும் நம்புகின்றனர்.

அடுத்தபடியாக இரண்டாம் இடத்திற்கே சஜித் பிரேமதாசா மற்றும் அரயநேந்திரன் இடையே போட்டி நிலவுகின்றது. இதில் சஜித் பிரேமதாசாவிற்கு தமிழ் அரசுக் கட்சியின் ஒரு பகுதி வாக்கும், கிளிநொச்சியில் சந்திரகுமாரின் வாக்கும், ரணிலை எதிர்ப்பவர்களுடன், வீடு தந்தார் அல்லது தருவார் என்ற எண்ணம் கொண்டவர்களின் வாக்கும் உள்ளது. இதனால் இரண்டாம் இடம் யாருக்கு என்பதே போட்டியாகவுள்ளது. இதேநேரம் இம்முறை யாழ்ப் பாணத்தில் அநுரா குமரதிசநாயக்காகூட பல ஆயிரம் வாக்குகளைப் பெறுவார் என்பதும் திண்ணம்.

வன்னி மாவட்டத்தைப் பொறுத்தமட்டிலே 3 லட்சத்து 6 ஆயிரத்து 81 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கே 2 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டிய வாக்களிப்பு காணப்பட மாட்டாது. அதிலே முஸ்லீம்கள், சிங்கள மக்களின் வாக்குகளும் காணப்படுகின்றன. இதனால் வன்னியில் இம்முறை முதல் இடத்தை சஜித் பிரேமதாசாவே பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு காணப்படுகின்றது. இங்கே ததிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உள்ள நிலையில் இருவரைக்கொண்ட கட்சி பொது வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்தாலும் அதுவும் நேர்மையாக காணப் படாதமையால் இங்கு இரண்டாம் இடத்திற்கும் போட்டி நிலை காணப்படவில்லை அது நிச்சயமாக ரணில் விக்கிரமசிங்கவிற்கே சென்றடையும் என்பதோடு 3வது இடமே அரியநேந்திரனை சென்றடைந்தாலும் அநுரா குமரதிசநாயக்க இங்கும் பல ஆயிரம் வாக்குகளை பெற்றுக்கொள்வார். அவ்வாறானால் இங்கே 40 ஆயிரம் வாக்கை அரியநேந்திரன் பெறுவது என்பதே இயலாத காரியமாகவே காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலே அதாவது அரிய நேந்திரனின் சொந்த மாவட்டத்தில் 4 லட்சத்து 49 ஆயிரத்து 685 வாக்குகள் பதிவில் இருந்தாலும் 3 லட்சத்து 75 ஆயிரத்தை தாண்டிய வாக்களிப்பு இடம்பெற மாட்டாது. இங்கே முதலிடம் ரணிலா அல்லது சஜித்தா என்கின்ற போட்டியே காணப்படுகின்றது. ரணிலிற்கு பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் உட்பட பலரின் ஆதரவு காணப்படுகின்றமையினால் முதலிடம் பிடித்தாலும் ஆச்சரியம் இல்லை இருந்தபோதும் சாணக்கியன் தரப்பு மற்றும் முஸ்லீம் தரப்புக்களுடன் சஜித்தின் சொந்தக் கட்சியின் நிலை யினால் போன்றவற்றால் ரணில் முதலிடம் பிடித்தால் சஜித் பிரேமதாசாவே இரண்டாவது இடத்தையும் பிடிப்பார் என்பது உறுதியான நிலையில் சொந்த மாவட்டத்திலேயே 50 ஆயிரம் வாக்குகளை பெற முடியாத நிலைக்கே அரியநேந்திரன் தள்ளப்படுவார்.

திருகோணமலை மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 925 வாக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இங்கே 35 வீதமான வாக்குகள் மட்டுமே தமிழ் வாக்குகள். இங்கேயும் 2 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பதிவு இடம்பெற்றாலும் நிச்சயமாக சிங்களம் மற்றும் முஸ்லீம் வாக்குகள் அதிகம் என்பதனால் முதல் இரு இடங்களையல்ல 3 ஆவது இடத்தைப் பிடிப்பதே கடினமாகவே காணப்படுகின்றது. ஏனெனில் இங்கே அரியநேந்திரனை விடவும் அநுர குமார திசநாயக்கா முன்னிலை வகிக்கின்றார். அரியநேந்திரன் வெறுமனே குகதாசனை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில் பொதுக் கட்டமைப்பில் உள்ள ஓருவரின் உதவி கிட்டினாலும் இங்கே 25 ஆயிரம் வாக்குகளைப் பெற்றால் மாபெரும் வெற்றிதான்.

அடுத்த நிலையில் உள்ளது அம்பாறை மாவட்டம் மட்டுதேயாகும் அது தேர்தலைப் பொறுத்த மட்டில் திகாமடுல்ல மாவட்டமாக பதிவிடப்படும் இங்கே 5 லட்சத்து 55 ஆயிரத்து 432 வாக்குகள் பதிவில் உள்ளபோதும் வாக்களிப்பில் 50 ஆயிரம் தமிழ் வாக்குகள் அளிக்கப்படுவதே இம்முறை பெருமையாகவுள்ளது. இதனால் இங்கேயும் கருணா, பிள்ளையானின் ஓரளவு செல்வாக்கும் உள்ளது இங்கும் 25 ஆயிரம் வாக்கையேனும் அரியநேந்திரன் பெறுவாரா என்பது கடினமான விடயதாகவே இன்றுவரை காணப்படுகின்றது.

அவ்வாறானால் யாழில் 100000, வன்னி மட்டக்களப்பில் தலா 50 ஆயிரம், திருகோணமலை, அம்பாறையில் தலா 25 ஆயிரம் எனில் 2 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் அதாவது வடக்கு கிழக்கில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளல் 1/4 ஐ இலக்கு வைத்தபோதும் 1/8 ஐ பெறுவதே கடினமான நிலை என்ற கள யதார்த்தமே காணப்படுகின்றது. இந்த 1/8 வாக்குகள் பெற்று இதனை சர்வதேசத்திற்கு தமிழர்களின் விருப்பாக காட்ட முடியுமா என்ற வினாவை போட்டியாளர்களிடமே விட்டுவிடுவோம்.

இந்த வாக்கைப் பெறுவதற்கும் பல கோடி ரூபா செலவு செய்தே சேகரிக்க வேண்டிய அவலம் காணப்பட்டது. புலம்பெயர் பணம் அதற்கு உதவனாலும் தேசிய கட்சிகள் வழங்கிய அளவு மதுபானம், காசு வழங்கி போட்டிக்கி நிற்க முடியவில்லை. அதேநேரம் இவர்களும் இவை இரண்டையும் வழங்கவும் தவறவில்லை.

இது ஒருபுறமிருக்க தெற்கிலே ரணில் முன்னிலை வகிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இந்த நேரம் வரையில் காணப்படவில்லை. மாறாக அநுரா மற்றும் சஜித் இடையிலேயே போட்டி நிலவுகின்றமை அனைவராலும் அவதானிக்கப்பட்டாலும் எவராவது முதல் சுற்றிலேயே வெற்றியீட்டுவாரா என்பது பெரும் கேள்விக் குறியாக உள்ளதனால் 9வது ஜனாதிபதி இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணிக்கையில்தான் தீர்மானிக்கப்படுவார் என்றே பலராலும் ஆருடம் கூறப்படுகின்றது.

About editor 3124 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply