கந்த புராணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:01
கந்த புராணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:01 ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன் February 01, 2014 2014 commentகந்தபுராணம் மற்றும் இராமாயணம் கதைகளைப் படித்தவர்களில், இவை இரண்டுமே ஒரு கதைதான், பாத்திரங்களின் பெயர்கள்தான் வேறு என்ற உண்மையை ஊகித்திருப்போர் ஒரு சிலராகத்தான் இருந்திருக்க வேண்டும். நமது தமிழ் சினிமாப் படங்களின் கதை எல்லாமே ஒன்றாய் இருந்தாலும், நடிப்பவர்களையும், பெயர்களையும் மாற்றி, மாற்றிப் போட்டு எத்தனையோ வித்தியாசமான(?) படங்கள் தயாரிப்பது போல, வால்மீகியின் ராமாயணத்தை அப்படியே பிரதி செய்து,வேறு பாத்திரப் பெயர்களை இட்டு, வித்தியாசமான கதையாக்கிக் கந்தபுராணம் என்ற ஒரு பெயரில் கச்சியப்பர் தந்திருக்கின்றார்.இதைத் தெளிவுபடுத்த, ஒரு சில முக்கிய எடுத்துக்காட்டுகளை இவற்றின் கதை ஓட்டத்திலிருந்து பொறுக்கி எடுத்து விளக்க முனைவோம். ஆன்மீகப் பேரறிவுடையோர் மன்னிப்பார்களாக!1.தெய்வம் தந்த ஏடு:கந்தபுராணம்: முருகனின் வேண்டுதலில், அவர் அடி எடுத்துக் கொடுக்க, கச்சியப்பர் தினமும் எழுதி ஒப்புவிக்க, அதை முருகன் தினமும் தனது கரத்தால் திருத்தி வழங்கியது.இராமாயணம் :நாரதர் கூறிய கதைக் கருவுடன், பிரம்மதேவரின் வேண்டுதலில், இவர் விளக்கிக் கூறிய காட்சிகளையும் உள்ளடக்கி, வால்மீகியால் பாடப்பட்டது 2.கர்ம வினை யாரை விட்டது!:கந்தபுராணம்::தக்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை மீறித் தேவர்கள் போனதால், கர்மவினைப்படி தேவர்கள் சூரன் பிடியில் அகப்பட்டுச் சித்திரவதை அடைய வேண்டும் என்று இருந்தது.இராமாயணம் :(அறியாத காரணத்தின்) கர்மவினைப்படி தேவர்கள் இராவணன் பிடியில் அகப்பட்டுச் சித்திரவதை அடைய வேண்டும் என்று இருந்தது.3. கோட்டை விட்டீரோ!:கந்தபுராணம்:சூரன் தன் சிவ தவத்தினால் உலகில் யாராலும், எவராலும் வெல்லமுடியாத, கொல்லப்படமுடியாத வரத்தினைப் பெற்றான். ‘தேவர்களினாலும்’ என்று கேட்காது கோட்டைவிட்டு விட்டான். இராமாயணம் :இராவணன் தன் தவ வலிமையால் பெற்ற வரங்களினால், பெரும் வீரனானான். அவன் பலத்தின் முன், உலகில் உள்ள மனிதரோ, விலங்குகளோ முன்னே நிற்கவே இயலாத காரியம். அவன் பிரமாவின்பால் கடும் தவம் புரிந்து , தனக்கு ஒருகாலமும் தேவர்களால் மரணம் நிகழக் கூடாது என்ற வரத்தையும் பெற்றான். ‘மனிதர்களாலும்’ என்று வரம் […]