அருங்கலச்‌ செப்பு

அருங்கலச்‌ செப்பு

(சிராவகாசார ஸம்ஸ்கார்‌

வழிகாட்டுதலும்‌ ஆசியும்‌ : பூஜ்ய ஸ்ரீ ஆர்ஜவசாகர முனிவர்‌.
இவ்வாகம நூல்‌ அச்சிட நிதியுதவி வழங்கியவர்‌ :
அமர்சந்த்‌ சேனாதேவி ஜைன்‌ டோலியா
பாண்டிச்சேரி.
வெளியிடுதல்‌ :
ஸ்ரீ சுரூதகேவலி பத்திரபாகு சுவாமி சேவாதளம்‌.
(ஸ்ரீ விசாகாசாரியர்‌ தவ நீலைய வளாகம்‌,
கீழ்நந்தியம்படி சாலை,
குந்த குந்தர்‌ நகர்‌ : 604505.

அருங்கவச்செப்பு
அருங்கலச்‌ செப்பு

(சிராவகாசார ஸம்ஸ்கார்‌
வழிகாட்டுதலும்‌ ஆசியும்‌ : பூஜ்ய ஸ்ரீ ஆர்ஜவசாகர முனிவர்‌.
இவ்வாகம நூல்‌ அச்சிட நிதியுதவி வழங்கியவர்‌ :
அமர்சந்த்‌ சேனாதேவி ஜைன்‌ டோலியா
பாண்டிச்சேரி.
வெளியிடுதல்‌ :
ஸ்ரீ சுரூதகேவலி பத்திரபாகு சுவாமி சேவாதளம்‌.
(ஸ்ரீ விசாகாசாரியர்‌ தவ நீலைய வளாகம்‌,
கீழ்நந்தியம்படி சாலை,
குந்த குந்தர்‌ நகர்‌ : 604505.


  1. அருங்கலச்செப்பு J
    பதிப்புரை
    “அருங்கலச்‌ செப்பு’ இல்லறத்தார்‌ ஒழுக்கத்தை விளக்கும்‌ சரணானுயோக
    நூலாகும்‌. இல்லறத்தார்‌ ஒழுக்கத்தை விளக்கும்‌ நூல்கள்‌ பல – ஏறக்குறைய
    35 நூல்கள்‌ – வடமொழியில்‌ வெளிவந்துள்ளன. ஆனால்‌ தமிழில்‌ ‘அருங்கலச்‌
    செப்ப ஒன்றே கிடைத்துள்ளது. இந்த நூலுக்கு முதல்‌ நூல்‌ ஆசாரியர்‌
    ஸமந்தபத்திரர்‌ அருளிய ‘ரத்ன கரண்டகம்‌” ஆகும்‌. “ரத்ன கரண்டகம்‌”
    என்பதற்கு அருங்கலச்செப்பு என்றே பொருள்‌. இந்நூலை யாத்த ஆசிரியர்‌ தம்‌
    நூலுக்கும்‌ அந்தப்‌ பெயரையே வைத்துள்ளார்‌. நூலின்‌ அமைப்பு பெரும்பாலும்‌
    ரத்னகரண்டகத்தை ஒட்டியே செல்கிறது. இந்‌ நூலாசிரியர்‌ தமிழோடு
    வடமொழியிலும்‌ சிறந்த புலமையோடு விளங்கி இருக்கிறார்‌ என உய்த்துணர
    முடிகிறது. இங்கும்‌ அங்குமாக சமஸ்கிருத பாகதச்‌ சொற்களை ஆண்டு
    இருந்தாலும்‌ பல சொற்களை இனிய தமிழில்‌ மொழி பெயர்த்துள்ளார்‌. ஆப்தன்‌
  • தலைமகன்‌, நிச்சங்கா – ஐயமின்மை, நிஷ்காங்க்ஷை – அவா இன்மை,
    நிர்விசிகித்ஸை – உவர்ப்பு இன்மை, உபகூஹனம்‌ – அறப்பழி நீக்கல்‌,
    ஸ்திதிகரணம்‌ – அழிந்தாரைத்‌ தாங்கல்‌, வாத்ஸல்ய – அளவளாவல்‌. இவை:
    சில எடுத்துக்காட்டுகள்‌.
    இந்த நாலை குறள்‌ வெண்பாவில்‌ யாத்துள்ளார்‌. யாப்பு அமைதி மிக.
    நன்கு அமைந்துள்ளது. மனப்பாடம்‌ செய்ய எளிதாக உள்ளது. இந்‌ நூலுள்‌ சில.
    குறள்கள்‌ இடைச்‌ செருகலாகக்‌ கருதப்படுகின்றன. நூலின்‌ சிறப்பில்‌
    ஆழ்ந்துபோன அன்பர்கள்‌ தம்‌ உணர்வை இக்குறள்கள்‌ வழியாக
    வெளிப்படுத்தியுள்ளனர்‌ என்று கருதலாம்‌. நூல்‌ பெரு வழக்காக ஓதப்பட்டு
    வந்துள்ளது என்பதனையே இவை காட்டுகின்றன.
    பூஜ்ய ஆர்ஜவசாகர்‌ முனி சங்கம்‌ தமிழகச்‌ சமண ஊர்களில்‌ அறப்பயணம்‌
    செய்து அற விதையை இள நெஞ்சங்களில்‌ ஊன்றி வருகிறார்‌. அவர்‌
    நல்லாசியுடன்‌ 18 ஊர்களில்‌ தற்போது ஸ்ரீ மகாவீரர்‌ பாடசாலை நடைபெறுகிறது.
    அப்பாடசாலை மாணவர்களுக்கு நான்கு ஆண்டு கால பாடத்திட்டம்‌
    வகுக்கப்பட்டுள்ளது. அதில்‌ மூன்றாம்‌ ஆண்டுக்கு “அருங்கலச்செப்பு’
    (சிராவகாசார ஸம்ஸ்கார்‌) பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. எனவே ம்‌
    மாணவர்களுக்காகவும்‌ உண்மையான இல்லறத்தாராக வாழ ஆர்வம்‌ காட்டும்‌
    அன்பர்களுக்காகவும்‌ புதிய உரையுடன்‌ “அருங்கலச்‌ செப்பு இப்போது
    வெளியிடப்படுகிறது.
    அருங்கலச்செப்பு ச்‌
    இந்நூலுக்கு அரிய ஆசிய உரையை பூஜ்ய முனிவர்‌ எழுதித்தந்துள்ளார்‌.
    இல்வாழ்வில்‌ உண்மையான பக்தி எப்படி அமைய வேண்டும்‌ என்று மிக விரிவாக
    விளக்கியுள்ளார்‌. இல்‌ வாழ்வார்‌ அருகன்‌ தவிர பிறரையும்‌ வணங்கலாம்‌ என்பது
    போல ஒரு கருத்துப்‌ பரவலாகப்‌ பரப்பப்பட்டு வருகிறது. அக்கருத்துடையவர்கள்‌
    அருங்கலச்‌ செப்பினை மீண்டும்‌ மீண்டும்‌ படித்தால்‌ ஒரு சிராவகன்‌ யாரை
    வணங்க வேண்டும்‌, அவன்‌ நாள்‌ ஒழுக்கம்‌ எப்படி அமைய வேண்டும்‌ என்பதனைப்‌
    புரிந்து கொள்ள முடியும்‌. உண்மை அறியாது அல்லது அறிந்து கொள்ள
    முயற்சிக்காமல்‌ தான்‌ கண்டதே உண்மை எனப்‌ பேசுவதால்‌ தாமும்‌ பிறவிச்‌
    சூழலில்‌ சிக்கிக்‌ கொள்வதோடு பிறரையும்‌ சிக்க வைக்கிறார்கள்‌. உண்மை தேடும்‌
    ஆர்வலர்கள்‌ இந்‌ நூலைத்‌ தேடி பயன்‌ கொள்வார்கள்‌ என எதிர்‌ பார்க்கிறோம்‌.
    இந்நூலின்‌ புதிய உரை ‘சுருத கேவலியில்‌’ தொடராக வெளி
    வந்துகொண்டு இருந்தது. இப்போது தனி நூலாக வெளிவருகிறது.
    இந்நால்‌ அச்சிட ஆகும்‌ முழுச்‌ செலவினையும்‌ பாண்டிச்சேரி திரு.
    அமர்சந்த்‌ – சேனாதேவி ஜைன்‌ டோலியா ஏற்றுக்‌ கொண்டனர்‌. அவரும்‌ அவர்‌
    குடும்பத்தாரும்‌ சிறந்த ஜிந அற பக்தர்கள்‌. முனிசங்க சேவையில்‌ மிகுந்த ஈடுபாடு
    உடையவர்கள்‌. அவர்கள்‌ மகிழ்ச்சியுடன்‌ பொருள்‌ உதவி செய்து இந்நூல்‌
    வெளியீட்டை எனிமை ஆக்கினர்‌. மகாவீரர்‌ பாடசாலை மாணவர்களிடம்‌ மிகுந்த
    -அன்புடையவர்கள்‌. அவர்களுக்கு அறம்‌ போதிக்க தக்கவாறு எல்லாம்‌ உதவி
    வருகின்றனர்‌. அவர்களுடைய அறவுணர்வைப்‌ பாராட்டி மகிழ்கிறோம்‌.
    பூஜ்ய முனிவருடைய நல்லாசியுடன்‌ குந்த குந்தர்‌ திருவடிக்‌ கருகில்‌ சிந்தாமணி மகாவீரர்‌ பிரபு படிமம்‌ நிறுவப்பட்டுள்ளது. அந்த நினைவை ஆண்டுதோறும்‌ கொண்டாடி வருகின்றோம்‌. இரண்டாம்‌ ஆண்டு நினைவு நாளில்‌ இந்த நூலை வெளியிடுவதில்‌ பெருமகிழ்ச்சி அடைகிறோம்‌. புண்ணியமுடையவர்‌ பெற்று பயன்‌ அடைவார்‌ எனும்‌ நம்பிக்கையுடையோம்‌.
    2-11-87 ஸ்ரீ சுருதகேவலி பத்திரபாகு சுவாமி சேவாதளம்‌. குந்தகுந்தர்‌,
    அருங்கலச்செப்பு க
    பக்தியும்‌ முத்தியும்‌

( – பூஜ்ய ஸ்ரீ ஆர்ஜவசாகர்‌ முனிவர்‌.
“ஸம்யக்‌ தர்ஸன ஞான சாரித்ராணி மோக்ஷ மார்க” (த.சூ) ஆகமத்தின்‌
இந்தச்‌ சூத்திரம்‌ பவ்வியர்களுக்கு முத்தி நெறியை விளக்குகிறது. முத்தி அடைய
மும்மணி இன்றியமையாதது என்பதனை இந்தச்சூத்திரம்‌ உறுதிச்‌ செய்கிறது.
மும்மணியில்‌ ஜைன ஒழுக்கம்‌ முழுதும்‌ அடங்கிப்‌ போகிறது -ஒடுங்கிப்‌ போகிறது…
மும்மணியை அறிந்து கொள்ள தத்துவார்த்த சூத்திரத்திற்கும்‌ முற்பட்டதாக:
நிற்கிறது ரத்ன கரண்டக சிராலகாசரம்‌ நூல்‌. அதில்‌ முதன்மையாக
சிராவகர்களுக்கும்‌ பொதுவாக முனிவர்களுக்கும்‌ ஜைன ஆகமங்களின்‌ பிழிவு
நிறைக்கப்பட்டுள்ளது. அந்த ரத்ன கரண்டக சிராவகாசாரத்தை ஆக்கியவர்‌ பெரும்‌
தர்க்க ஞானி பாவலிங்க முனிவர்‌ சுவாமி ஸமந்தபத்திரர்‌ ஆவார்‌. அவர்‌ பிறந்த
நிலம்‌ தமிழ்நாடு; அவருடைய தவ நிலமாக வட இந்தியாவில்‌ உள்ள வாரணாசிப்‌
பருதி இருந்துள்ளது.
தமிழ்‌ நாட்டில்‌ சிராவக ஆசாரத்தின்‌ சிறந்த நாலாக ‘அருங்கலச்‌ செப்பு
கிடைத்துள்ளது. ‘அருங்கலம்‌’ எனில்‌ ரத்னம்‌ ; ‘செப்பு’ எனில்‌ கரண்டகம்‌ (பெட்டி)
ஆகும்‌. அதாவது இரண்டு நூலுக்கும்‌ இடையே பெயர்‌ ஒப்புமை காணப்படுகிறது.
இரண்டிலும்‌ பொருள்‌ வருணனையும்‌ ஒன்றாகக்‌ காணப்படுகிறது – வேறுபாடு
இல்லை. ஆனால்‌ ரத்ன கரண்ட சுத்தில்‌ 150 சுலோகங்கள்‌ உள்ளன. அருங்கலச்‌
செப்பில்‌ 180 குறள்கள்‌ உள்ளன. இதற்குக்‌ காரணம்‌ என்னவெனில்‌, சமஸ்கிருத
ரத்ன கரண்டகத்திலிருந்து தமிழ்‌ அருங்கலச்‌ செப்பை ஆக்கிய மகா யதி ரத்ன
கரண்டகத்தின்‌ குணத்தைப்‌ போற்றும்‌ போது சாமாயிகம்‌ முதலானவற்றின்‌ மறை-
பொருளை விளக்க கூடுதலான குறள்களை ஆக்கியுள்ளார்‌. இதுவும்‌ சமந்தபத்திர
ஆசாரியரிடம்‌ அவருக்குள்ள சிறந்த பக்தியைக்‌ காட்டுவதாக உள்ளது. எப்படி
ரத்ன்‌ கரண்டக சிராவக ஆசாரத்தைச்‌ சந்தத்தோடு பாடும்‌ போது உயிர்‌ அதில்‌
ஆழ்ந்து பாவனையில்‌ விளக்கம்‌ பெறுகிறதோ அதே போல அருங்கலச்‌ சப்பினை
சந்தத்தோடு பாடும்‌ போது பாவனை விளக்கம்‌ பெறுகிறது. அது அந்த நூலின்‌
சிறப்பாகும்‌.
அந்த ஆசாரிய பெருந்தகை தர்மாத்மாக்களுக்கு மிகச்‌ சிறந்த செய்தியை
அல்லது உபதேசத்தைத்‌ தந்துள்ளார்‌. “பாபத்தினிடம்‌ அருவருப்பு கொள்‌; பாபியிடம்‌
அன்று” ஏனெனில்‌ ‘தர்மம்‌ இல்லாமல்‌ தர்மி இல்லை’ (ர.க. 26) அதாவது
மும்மணியுடைய தர்மாத்மா இல்லாமல்‌ தர்மம்‌ இல்லை. ஒரு ஆதிமா தன்‌ பாபங்களை
விட்டு, எல்லா வினைகளையும்‌ அழித்து, மூவுலகம்‌ போற்றும்‌ தீர்த்தங்கரர்‌ ஆக
முடியும்‌.
அருங்கலச்செப்பு 6
ஆசாரியர்‌ ஸமந்த பத்திரசுவாமி 2000 ஆண்டுகளுக்கு முன்பே அனேகாந்த

  • சியாத்வாத உண்மையான அற முரசை முழங்கி, பாரதம்‌ முழுதும்‌ அகிம்சை சிங்க
    நாதம்‌ செய்து, ஜிந அறத்திற்கு அற்புதமான பிரபாவனை செய்தார்‌. அவருடைய
    திருவடியில்‌ வாரணாசி அரசர்‌ சிவகோட்டி நிர்கிரந்த திகம்பர தீக்ஷை ஏற்றார்‌.
    ஆசாரியர்‌ ஸமந்தபத்திரர்‌ பெரும்பாலான தம்‌ நூல்களை சமஸ்கிருத
    மொழியிலேயே ஆக்கினார்‌. 1 ‘ஸ்வயம்பூஸ்தோத்ரம்‌’ (பிருஹத்‌) 2 ஆப்த மீமாம்ஸா’,
    (தேவாகம ஸ்தோத்ரம்‌), 3 ‘யுக்தானுசாசனம்‌’ 4 ஸ்துதி வித்யா (ஜிந சதகம்‌),
    5 ரத்ன கரண்டக சிராவகா சாரம்‌, மற்றும்‌ கிடைக்காத நூல்களான ‘கந்த ஹஸ்தி
    மஹாபாஷ்யம்‌’, ‘ஜீவ ஸித்தி, ‘தத்தவானுசாஸனம்‌,, ‘பிராக்ருத வியாகரணம்‌’ ,
    “பிரமாண பதார்த்தம்‌, ‘கர்ம ப்ராப்ருத’ உரை முதலியன.
    ஆசாரியர்‌ ஸமந்தபத்திர சுவாமி பெரும்பாலான தம்‌ நூல்களைத்‌ துதி
    நூல்களாகவே அமைத்துள்ளரர்‌. , அவற்றுள்‌ அனேகாந்த வடிவ கர்ம
    சித்தாந்தங்களின்‌ மறைபொருளை விளக்கியுள்ளார்‌. அவருடைய உண்மையான
    உரை பவ்வியர்களைப்‌ புலனாசையிலிருந்து தடுத்து, உயிர்களின்‌ கடமையை
    நினைவுபடுத்தி, தாமே வீதராகியின்‌ திருவடிகளில்‌ பணிய ஊக்குவிக்கிறது.
    மேலும்‌ உண்மையான பக்தியின்‌ வழி முக்தி நெறியைக்‌ காட்டுகிறது. அவர்‌ ஓர்‌
    இடத்தில்‌ வீதராகியின்‌ இயல்பையும்‌ பக்தியின்‌ பெருமையையும்‌ பேசும்‌ போது,
    ந பூஜ்யார்த்தஸ்த்வபி வீதராகே ந நிந்த்யா நாத விவாந்த வைரே | ததாபி தே புண்ய குணஸ்ம்ருதிர்‌ ந: புனாது சித்தம்‌ துரிதாஞ்ஜனேப்ய :1|
    (ஸவய்ம்பூஸ்தோத்ரம்‌, 57) என்று கூறியுள்ளார்‌. “ஏ! பகவன்‌! பூஜை, வந்தனையால்‌ உமக்கு எந்தப்‌ பயனும்‌ இல்லை; ஏனெனில்‌, நீர்‌ வீதராகி! இதே போல நிந்தனையாலும்‌ உமக்கு எந்தப்‌ பயனும்‌ இல்லை; ஏனெனில்‌, உமது உயிரிலிருந்து பகை உணர்வு (துவேஷம்‌) முற்றுமாக நீங்கி விட்டது. என்றாலும்‌, உம்முடைய புண்ணிய குணங்களை நினைவு மக்களுடைய மனத்திலிருந்து பாப அழுக்கை நீக்கி பவித்திரமாக்குகிறது’.
    ஆசாரியர்‌ ஸமந்த பத்திரர்‌ தவிர நம்முடைய வேறு ஆசாரியர்களும்‌ பவ்வியர்களுக்குக்‌ கடமையை நினைவுபடுத்தி பக்தி, பூஜைக்கு ஈர்த்துள்ளனர்‌. ஓர்‌ இடத்தில்‌ சொல்லப்பட்டுள்ளது:
    யே ஜினேந்த்ர ந பச்யந்தி பூஜயந்தி ஸ்துவந்தி ந | நிஷ்பலம்‌ ஜீவிதம்‌ தேஷாம்‌ திக்‌ ச க்ருஹாச்ரமம்‌ 1| (15)
    அருங்கலச்செப்பு 7
    ப்ராத ருத்யாய கர்த்தவ்யம்‌ தேவதா குரு தர்சனம்‌. 1 . பக்த்யா தத்வந்தனா கார்யா தர்ம ச்ருதி ரூபா ஸகை : (| (16)
  • பத்ம நந்தி பஞ்சவிம்‌ சதிகா.
    “யார்‌ பக்தியோடு ஜினேந்திர பகவானைத்‌ தரிசிக்க வில்லையோ பூஜிக்க வில்லையோ துதிக்க வில்லையோ அவருடைய வாழ்வு வீணானது; அவர்‌ இல்லறத்தில்‌ இருப்பது இகழத்‌ தக்கது”.
    “சிராவகர்‌ காலையில்‌ எழுந்து பக்தியுடன்‌ ஜினேந்திர தேவனையும்‌ பற்றற்ற குருவையும்‌ தரிசித்து வந்தித்து தருமம்‌ கேட்க வேண்டும்‌. (பிறகு வேறு செயல்களைப்‌ பார்க்க வேண்டும்‌)”
    டேப்ரிக்கார்டில்‌ டேப்பில்‌ பதிவாகும்‌ ஒலி நம்‌ கண்களுக்குக்‌
    காணப்படவில்லை – அது மென்மையானாலும்‌ வன்மையானாலும்‌ அழகானாலும்‌
    அழகற்றதானாலும்‌ கேட்ச்‌ ஆகி டேப்‌ ஆகிறது. அதைத்‌ திருப்பிப்‌ போட்டுப்‌
    (ரிவர்ஸ்‌) பார்க்கும்‌ போது அந்த ஒலி சுக துக்க அனுபவத்தைத்‌ தருகிறது,
    சுவைப்போனுக்கு! அதே போல ஆன்மாவும்‌ ஒரு டேப்ரிகார்டு. அதில்‌ கார்மணசரீரம்‌
    என்னும்‌ கேசட்டு இருக்கும்‌ வரை தர்ம அதர்ம மய பாவனைக்கு ஏற்ப கண்ணுக்குப்‌
    புலப்படாமல்‌ ஆகாய பிரதேசத்தில்கிடக்கும்‌ ஞான மறைப்பு முதலான வினைகள்‌
    டேப்பில்‌ பதிவாகிக்‌ கொண்டே இருக்கின்றன. ஆன்மாவில்‌ எந்த நேரமும்‌
    வினைகள்‌ சேர்ந்து கொண்டே இருக்கின்றன. சில நேரங்களில்‌ சுப மாக, சில
    நேரங்களில்‌ அசுபமாக! எந்த நேரத்தில்‌ ஆன்மாவில்‌ தர்ம உபயோகம்‌
    உண்டாகிறதோ அந்த நேரத்தில்‌ ஆன்மாவில்‌ சுபம்‌ அல்லது புண்ணிய வினை
    சேர்கிறது. எந்த நேரத்தில்‌ அதர்மம்‌ அல்லது ஜந்து பாபங்களில்‌ உபயோகம்‌
    உண்டாகிறதோ அப்போது பாப வினை பந்தமாகிறது. சுப வினையின்‌ விளைவு
    சுகம்‌, சாந்தி யாகும்‌. அசுப வினையின்‌ விளைவு துக்கம்‌, அசாந்தி ஆகும்‌.
    “எதை விதைக்கிறானோ அதை அறுக்கிறான்‌’ என்னும்‌ பழமொழி
    மெய்யானதே. ஆன்ம நிலத்தில்‌ உண்மையான சிரத்தையுடன்‌ நம்பிக்கையுடன்‌ அற
    விதை நடப்படுமானால்‌ ஆன்மா எந்தக்‌ கதியில்‌ சென்றாலும்‌ சுகத்தோடு
    காணப்படும்‌.
    முனிவர்‌ ஒழுக்கத்தில்‌ எப்படி ஆறு இன்றியமையாதன முதலான
    வெவ்வேறான அறச்‌ செயல்கள்‌ சொல்லப்பட்டுள்ளனவோ அதே போல
    சிராவகர்களுக்காகவும்‌ ஐய தவளா சித்தாந்த நூலில்‌ ஆசாரியர்‌ வீரசேன சுவாமி
    அருங்கலச்செப்பு 8
    “தானம்‌ பூஜாம்‌ சீலமுபவாஸோ சேதி சவுத்விஹோ ஸாவய தம்மோ” என்று
    கூறியுள்ளார்‌. தானம்‌, பூஜை, சீலம்‌, உபவாசம்‌ முதலான அறச்‌ செயல்கள்‌
    சொல்லப்பட்டுள்ளன. அதற்குக்‌ காரணம்‌ என்னவெனில்‌ ஏதேனும்‌
    ஒன்றிலாவது அவருடைய மனம்‌ ஈடுபட்டுக்‌ கொண்டிருக்கும்‌ என்பதுதான்‌.
    ஆன்மா பாப வினை தொடர்பிலிருந்து விலகி இருக்கும்‌.
    ஐம்புல நெருப்பில்‌ எரிந்து கொண்டிருக்கும்‌ உயிர்களுக்கு இன்று
    பகவான்‌ அல்லது பஞ்ச பரமேட்டி குணங்களைப்‌ போற்றுதலான பக்தி, துதி,
    பூஜை இவையே சாந்தி தரும்‌ அமிழ்துக்கு ஒப்பாக நிறைவு தரக்கூடியது.
    ஏனெனில்‌, மனிதனுடைய வாழ்வு எனும்‌ படகில்‌ பாபங்கள்‌ எனும்‌ பல ஓட்டைகள்‌
    வழியாக பிறவி எனும்‌ கடலில்‌ அழுத்த நீர்‌ வந்து கொண்டே இருக்கிறது.
    அதனை தடுக்க வீதராக தருமத்தையே சாரவேண்டியுள்ளது. அதுவே பிறவிக்‌
    கடலைக்‌ கடக்க தக்க சாதனமாகும்‌.
    இல்வாழ்வார்‌ ஆன்மா எப்போதும்‌ ஐந்து பாபங்களால்‌ அழுக்காகிக்‌
    கொண்டே இருக்கிறது. அந்தப்‌ பாப அழுக்கைக்‌ சுழுவாத தால்‌ அது துன்பக்‌
    கடலில்‌ அழுந்திப்போகிறது. அதனால்‌ அறிவுடையோர்‌ துணியைத்‌ துவைப்பது
    போல தானம்‌ பூஜை முதலான உத்தம அறங்களால்‌ நாள்தோறும்‌ தம்‌
    ஆன்மாவின்‌ அழுக்கை நீக்குகின்றனர்‌. அதனால்‌ அசுப (பாப வினை
    பெருகாததால்‌ தரும தியானத்தால்‌ ஈட்டிய புண்ணியத்தால்‌ மோக்ஷத்திற்குச்‌
    சாதனமான உத்தம குலம்‌, உடல்‌ நலம்‌ மற்றும்‌ ஆயத்தனங்களைப்‌
    பெறுகின்றனர்‌.
    அறம்‌ பொருள்‌ இன்பம்‌ வீடு எனும்‌ நான்கு புருஷார்த்தங்களில்‌ மனிதர்‌
    அறம்‌, வீடு புருஷார்த்தங்களை விட்டுவிட்டு மீதி புருஷாரத்தங்களில்‌ தம்‌ முழு
    காலத்தையும்‌ கழிக்கின்றனர்‌. ஆனால்‌ அறத்தின்‌ பக்கம்‌ பார்வை செலுத்துவதில்லை. இதற்குக்‌ காரணம்‌ முன்‌ பிறவி பண்பாடு இல்லாமையோடு இப்‌ பிறவியில்‌ குடும்பச்‌ சூழல்‌ மற்றும்‌ தன்‌ முயற்சிக்‌ குறைவு என அறியலாம்‌. பசி மந்தமாக இருப்பவர்‌ உணவு உள்ள இடத்திற்கு செல்லும்‌ போது உணவின்‌ வாசனை அல்லது அதன்‌ காட்சியால்‌ பசி தூண்டப்படுகிறார்‌. அதே போன்று ஜன்மம்‌ ஐன்மமாக அறத்திலிருந்து விலகி இருப்பவருக்கு அறப்‌ பசி மந்தமாக அல்லது இல்லாதது போலக்‌ காணப்படுகிறது. அவர்‌ அற இடத்திற்கு வருவாரானால்‌ பஞ்ச கல்யாண பூஜை, சமவசரண சிறப்பு, நல்பக்தி, துதி முதலான பார்த்து, கேட்டு, துன்பத்திற்குக்‌ காரணமான புலனாசைகளைத்‌ தாமே துறந்துவிடுவார்‌.
    அருங்கலச்செப்பு 9
    நம்முடைய ஜைன ஆசாரியர்கள்‌, வித்வான்‌௧கள்‌ துதி, பூஜை, பக்தியில்‌
    எல்லா அனேகாந்த மய சித்தாந்தங்களை நிறைத்துள்ளனர்‌. ஸமந்தபத்திர
    ஆசாரியர்‌ எழுதிய சுயர்பு ஸ்தோத்திரம்‌, ஜின சதகம்‌, முதலியன, மானதுங்க
    ஆசாரியர்‌ எழுதிய பக்தாமர ஸ்தோத்திரம்‌, குமுதசந்திர ஆசாரியர்‌ எழுதிய
    கல்யாணமந்திர ஸ்தோத்திரம்‌, வாதிராஜசூரி எழுதிய ஏகி பாவஸ்தோத்திரம்‌, இது
    போன்ற அதிசயத்தோடு கூடியவை நல்ல எடுத்துக்காட்டுகளாகும்‌. இவற்றைப்‌
    படித்து பவ்வியர்‌ வீதராகியின்‌ பக்தியில்‌ ஜைன தருமத்தின்‌ இருதயத்தைத்‌
    தொட்டு, ஐம்புல நினைவே இல்லாதது போல, ஒன்றிப்‌ போகின்றனர்‌. நிதத்தி,
    நிகாசித போன்ற பெருந்தவத்தால்‌ அழியக்‌ கூடிய வினைகளை க்ஷண நேரத்தில்‌
    கெடுத்து விடுகின்றனர்‌. “ஜின பிம்ப தம்ஸனேன நிதத்த நிகாசிதஸ்ஸ வி
    மிச்சாத்தாதி கம்ம கலாவஸ்ஸ கய தம்ஸணாதோ” என தவளா நூலில்‌ ஆறாவது
    தொகுதியில்‌ வீரசேன ஆசாரியர்‌ கூறியுள்ளார்‌. பக்தியினால்‌ பல வகையான
    பாபங்கள்‌ இடையூறுகள்‌ தாமே விலகிப்‌ போகின்றன.
    ஆசாரியர்‌ பூஜ்யபாத சுவாமியும்‌ பக்தி, பூஜையின்‌ பெருமையைப்‌ பேசும்‌
    போது அருளுகிறார்‌ :
    ஜன்ம ஜன்ம க்ருதம்‌ பாபம்‌ ஜன்ம கோடி முபார்ஜிதம்‌ |
    ஜன்ம ம்ருத்யு ஜரா ரோகம்‌ ஹன்யதே ஜிந வந்தனாத்‌ (( (5)
    விக்நெளகா: ப்ரளயம்‌ யாந்தி, சாகினீ பூத பன்னகா: |
    விஷம்‌ நிர்விஷதாம்‌ யாதி ஸ்தூயமானே ஜினேச்வரே 1! (19)
    (சமாதி பக்தி)
    “ஜன்மம்‌ ஜன்மமாக செய்த பாபம்‌, கோடி ஜன்மங்களால்‌ ஈட்டிய பாபம்‌, பிறப்பி,
    இறப்பு, முதுமை, பிணி ஜினேந்திர பகவானைத்‌ தொழுவதால்‌ (துதி, பூஜை) அழிந்து
    போகின்றன”.
    “இதே போல , சாகீனி, பூதம்‌, பாம்பு முதலானவற்றால்‌ தரப்பட்ட
    இடையூறுகள்‌ பகவானை குதிப்பதால்‌ விலகிப்‌ போகின்றன. அந்த பகவானுடைய
    பக்தியால்‌ நஞ்சும்‌ நீங்கிப்‌ போகிறது”.
    நம்முடைய ஆசாரியர்கள்‌ பக்தி செய்யும்‌ ஜினதர்மி பக்தர்‌ தம்‌ அடி புரளாமல்‌
    நிற்க அதாவது மித்யா பக்தி அல்லது மித்யாத்வத்தில்‌ இருந்து தப்பும்‌ பொருட்டுக்‌
    குறிப்புக்காட்டுகின்றனர்‌ – அந்த பக்தன்‌ தேவ மூடத்தில்‌ அல்லது விநய
    அருங்கலச்செப்பூ 10
    மித்யாத்வத்தில்‌ சிக்கி ஆசையுடையவானாகி தன்‌ ஸம்யக்த்வ வைபவத்தை
    இழக்கக்‌ கூடாது என்று!
    ஆசாரியர்‌ குந்த குந்தர்‌ அருளுகிறார்‌:
    “அஸம்ஜமோ நவந்தே…………. * (தர்சன பாகுடம்‌, 26) அதாவது,
    “ஒழுக்கம்‌ (புலனடக்கம்‌) இல்லாதவர்‌ வணங்கத்‌ தக்கவர்‌ அல்லர்‌’. (ஆகமப்படி
    எல்லாவகையான தேவப்‌ பிறவியினர்‌ (நால்வகைதேவர்‌), அணுவிரதம்‌ முதலாள
    விரதம்‌ இல்லாதார்‌ முதலானோர்‌ ஒழுக்கம்‌ (புலனடக்கம்‌) இல்லாதவராகக்‌
    கூறப்படுகின்றனர்‌) மேலும்‌ கூறுகிறார்‌.
    ஸபராவேக்கம்‌ லிங்கம்‌ ராயி தேவம்‌ அஸஞ்ஜதம்‌ வந்தம்‌ |
    மண்ணயி மிச்சாதிட்டி ண ஹு மண்ணயி எத்த ஸம்மத்தி 1!
    (மோக்ஷ பாகுடம்‌, 93)
    பற்று முதலான (தனம்‌ ஆடை முதலான) விஷயங்களை நோக்கும்‌ குலிங்க
    குரு, விருப்பு முதலியன உடைய தேவர்‌, புலனடக்கம்‌ இல்லாதவர்‌ (அவிரதி)
    இவர்களை வணங்கத்‌ தக்கவராக நம்புபவர்‌ மித்யா திருஷ்டி யாவார்‌; தூய
    நற்காட்சி இல்லாதவர்‌. தூய நற்காட்சியாளர்‌ குகுரு, ராகிதேவன்‌, துஸயம்மிகளை
    வணக்கத்திற்கு உரியவர்களாக ஏற்பதில்லை.
    இதே போல ஆசாரியர்‌ கார்திகேய சுவாமியும்‌ கூறியுள்ளார்‌:
    ஐயி தேவோ விய ரக்கமி, மந்தோ தந்தோ ய கேத்த பாளோய | மிய மாணம்‌ பி மணுஸ்ஸம்‌ தோ மணுயா அக்கயா ஹோந்தி | (25)
    ஏவம்‌ பேச்சந்தோ விஹு கஹ பூய பிஸாய ஜோயிணீ ஜக்கம்‌ | ஸரணம்‌ மண்ணயி மூடோ ஸுகாட மிச்சத்த பாவாதோ [| (27)
    (சுவாமி கார்த்திகேயா னுபிரேக்ஷை)
    க்ஷேத்திரபாலகர்‌ முதலான தேவர்‌, மந்திரம்‌, தந்திரம்‌, மரணத்திலிருந்து காப்பாற்றுமானால்‌ மனிதர்‌ பிறகு இறப்பு இல்லாமல்‌ போவர்‌, பிறவியில்‌ எங்கும்‌ அடைக்கலம்‌ இல்லாமையைப்‌ பரர்த்தும்‌ மூடர்‌ தீவிர மித்யாத்வ பாவனையால்‌ கிரஹம்‌, பூதம்‌, பிசாசு, யோகினி, யக்ஷயக்ஷ்ூனியை அடைக்கலமாகக்‌ கருதுகின்றனர்‌. மேலும்‌, கிரகம்‌, யக்ஷாதிகளை அடைக்கலமாகக்‌ கருதுதல்‌ தீவிர மித்யாத்வ பாவனை ஆகும்‌ |
    அருங்கவச்செப்பு n
    ஆகமத்தின்‌ இந்த (மேலே கூநிய) வாக்கியங்களை ஏற்காது பகவானுக்கு
    சேவை செய்யும்‌ தேவர்களை பகவானுக்கு சமமாக அமர்த்தி வைத்தல்‌,
    வணங்குதல்‌, அவர்களுக்கு எட்டுப்பொருள்‌ கொண்டு பூஜை, அருச்சனை
    அபிஷேகம்‌ செய்தல்‌, ஆரதி முதலாயின எடுத்தல்‌ இவை எல்லாம்‌ செய்பவர்‌
    பகவானுக்கும்‌ அவருடைய வாணிக்கும்‌ அவிநயம்‌ செய்கின்றனர்‌. அவர்கள்‌ என்ன
    கதியை அடைவர்‌ என்று கூறும்போது ஆசாரியர்‌ சோமதேவர்‌ கூறுகிறார்‌.
    தேவம்‌ ஜகத்ரமீ நேத்ரம்‌ வ்யந்தராத்யாச்ச தேவதா: |
    ஸமம்‌ பூஜா விதானேஊு பச்யன்‌ தூரம்‌ வ்ரஜே தத: 1!
    மூவுலகையும்‌ அறிவதில்‌ கண்ணாக விளங்கும்‌ அரஹந்தரையும்‌ வியந்தார்‌
    முதலான தேவ உலகத்தாரையும்‌ சமமாக பூஜைக்கு உரிய வராகக்‌ கருதுபவர்‌ மிகக்‌
    கீழே செல்வர்‌ – அதாவது கீழ்‌ கதியை அடைவர்‌. (மிக கீழ்‌ செல்வர்‌’ கீழ்‌ என்பதற்கு
    பண்டிதர்‌ பன்னாலால்‌ சாகித்ய ஆசாரியர்‌ ரத்ன கரண்டக உரையில்‌ “நரகம்‌
    செல்வர்‌’ என உரை எழுதியுள்ளார்‌.)
    மோக்ஷை பாதையில்‌ செல்வோர்‌ அதாவது மும்மணியுடைய
    புலனடக்கத்தார்களுக்கு லக்ஷியமாக விளங்கும்‌ ஆசாரியர்‌ குந்த குந்தர்‌ ஜைன
    தோற்றத்தை (லிங்கம்‌)ப்‌ பேசும்‌ போது கூறியுள்ளார்‌:
    ஏகம்‌ ஜிநஸ்ஸ ரூவம்‌ பீயம்‌ உக்கிட்ட ஸுவயாணம்‌ து 1
    அவரட்யான தயியம்‌ சவுத்த புண லிங்க தம்ஸணம்‌ ணத்தி 1!
    (தர்சன பாகுடம்‌, 18)
    “முதலாவது தோற்றம்‌ ஜிநர்‌ உருவான நிர்கிரந்த தோற்றம்‌ ; இரண்டாவது
    தலை சிராவகர்கள்‌ அதாவது ஐலகர்‌ சுல்லகர்‌ தோற்றம்‌ ; கடைசியில ஆர்யிகை,
    சுல்லகியர்‌ தோற்றம்‌; இவை தவிர நான்காவது ஏதும்‌ ஜிந மதத்தில்‌ அல்லது ஜிந
    தரிசனத்தில்‌ கூறப்படவில்லை”.
    மேலே கூறப்பட்ட மூன்று வடிவங்களுடையவர்களே ஜைனர்கள்‌ வணங்கும்‌
    தகுதி உடையவர்கள்‌. ஏதோ ஒரு சூழ்நிலையில்‌ வந்துவிட்ட ஒரு வேஷத்தை,
    சூழ்நிலை மாறிவிட்ட நிலையில்‌, சுகபோக வேஷமான அதனை – கைவிட்டு,
    நல்ஞான பகவான்‌ தோன்றிவிட்ட நிலையில்‌ தானே விழித்தெழுந்து, உண்மையான
    பற்றில்லாத, தபம்‌, தியாக மய மோக்ஷ நெறியில்‌ சென்று தன்‌ புருஷார்த்தத்தை
    அறிமுகப்‌ படுத்தலே நல்ல ஞானியர்‌ என்பதற்கு அடையாளமாகும்‌. அதுவே சிறந்த
    அருங்கலச்செப்பு 2
    தாகும்‌. ஏனெனில்‌ நம்முடைய வாழ்வு சத்திய மயம்‌ ஆகாத வரை எதிரே
    உள்ளவருக்கு சத்திய நெறியைத்‌ திறந்துவைக்க இயலாது. கீசகனைக்‌ கொல்ல
    பீமன்‌ பெண்‌ வேஷம்‌ கொண்டு சேலை உடுத்திக்கொண்டான்‌. பிறகு அதனைக்‌
    கலைத்துவிட்டு தன்‌ உண்மை வேஷத்தை ஏற்றான்‌. தவிர சேலையை உடுத்து
    உடுத்துப்‌ பெண்ணாகிவிடவில்லை. இந்த எடுத்துக்காட்டினை சூழ்நிலையால்‌
    பிறழ்ந்து அல்லது மாறிப்போனவர்கள்‌ தம்‌ வாழ்வில்‌ பொருத்திப்‌
    பார்த்துக்கொள்ள வேண்டுமே தவிர மாயாவி வேஷ பரம்பரையைத்‌
    தொடரவைத்தல்‌ கூடாது. எப்படி ஒழுக்கமோ அப்படித்தான்‌ புகழ்‌, சிறப்பு, பயன்‌
    முதலியன. தவறான பாவனையை விட்டு விட்டு ஜைன தோற்றத்தை ஏற்றலே
    ஜிந ஆகமம்‌; அதுவே ஸம்யக்த்வம்‌ ! அதுவே நற்கதிக்குக்‌ காரணம்‌ !
    ஜிநாலயம்‌ சமவசரணத்தின்‌ நினைவுச்‌ சின்னமாகும்‌. சமவசரணத்தில்‌
    அறம்‌ கேட்பதற்காக முனிவர்கள்‌, அரசர்கள்‌ தேவ, தேவியர்கள்‌, விலங்குகள்‌
    முதலானோருடைய சபைகள்‌ உள்ளன. ஆனால்‌, பகவானுக்கு அருகில்‌ சாமரை
    வீசும்‌ 64 யக்ஷர்கள்‌ மட்டுமே உள்ளனர்‌. அவர்களுடைய தோற்றத்தை
    ஆகமத்தில்‌ பூஜ்யபாத ஆசாரியர்‌ கீழ்‌ வருமாறு வருணிக்கிறார்‌:
    கடக கடிசூத்ர குண்டல கேயூர ப்ரப்ருதி பூஷிதாங்கெள ஸ்வாங்கெள (
    யக்ஷ) கமல தளாக்ஷ/ள பரிநிக்ஷிபத: ஸளீல சாமர யுகளம்‌ |! (நந்தீஸ்வர்‌ பக்தி, 17)
    “கடகம்‌ முதலான பல வகையான அணிகளால்‌ புனைவுடைய அழகிய
    உடலையுடைய, தாமரை பூ இதழ்போல மலர்ந்த கண்களையுடைய இரண்டு
    யக்ஷர்கள்‌ பகவானுக்கு இரண்டு பக்கத்தில்‌ சாமரை வீசுகிறார்கள்‌”
    ஜிநாலயத்தில்‌ பகவானைத்‌ தவிர அரசர்‌, விலங்குகள்‌ முதலானவர்‌ சபை
    இல்லை என்றால்‌ சாமரை வீசும்‌ யக்ஷ உருவம்‌ போது மானதே; வேறு தேவ
    தேவியரை நிறுவத்‌ தேவைஇல்லை. நிறுவ விரும்பினால்‌ முழு சமவசரணத்தை
    அமைத்துப்‌ பன்னிரண்டு சபையினரையும்‌ நிறுவுதல்‌ மிக உத்தமம்‌. சமவசரணத்தில்‌ தேவ தேவியர்‌ தம்‌ தரும சபையில்‌ பகவானைத்‌ தரிசிக்க அல்லது திவ்ய த்வனியைக்‌ கேட்க பணிவுடன்‌ அமர்ந்துள்ளனர்‌. ஆசீர்வாத முத்திரையில்‌ அமர்ந்து இல்லை. அதனால்‌, ஞானிகள்‌ 500 – 1000 ஆண்டு பழக்கத்தை நினைவில்‌ கொள்ளாமல்‌ நான்காம்‌ காலத்தில்‌ இருந்த அந்த சமவசரண அமைப்பை ஆகமத்தில்‌ கூறியபடி நினைவுகூருதல்‌ வேண்டும்‌.
    அருங்கலச்செப்பு 13
    கர்ம சித்தாந்தத்தை அறியாத சில ஐந்தாம்‌ கால வாசிகள்‌ பாதுகாப்புக்காக
    வகை வகையான தேவர்கள்‌ அடைக்கலம்‌ தேடுகின்றனர்‌. அவர்களை நினைவில்‌
    கொண்டு பூஜ்யபாத சுவாமி கூறியுள்ளார்‌ :
    நஹி த்ராதா நஹி த்ராதா நஹி த்ராதா ஜகத்‌ த்ரயே | வீதராகாத்‌ பரோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி |!
    (ஸமாதி பக்தி, 16)
    “மூன்று உலகத்திலும்‌ உயிர்களைப்‌ பாதுகாக்க வீதராக தேவனைக்‌
    காட்டிலும்‌ உயர்ந்த தேவர்‌ யாரும்‌ உண்டானதும்‌ இல்லை; உண்டாகப்‌
    போவதுமில்லை”.
    மூவா முதலா ணமோகார மகா மந்திரத்தில்‌ அரஹந்தர்‌, ஸித்தர்‌, ஆசாரியர்‌,
    உபாத்தியாயர்‌ பற்றற்ற துறவியர்‌ இவ்‌ ஐவருக்கு வணக்கம்‌ கூறப்பட்டுள்ளது;
    ஆறாவதாக வேறு யாருக்கும்‌ கூறப்படவில்லை. இதே போல சத்தாரி மங்கலத்திலும்‌
    அரஹந்தர்‌, ஸித்தர்‌, ஸாது, மற்றும்‌ கேவலியால்‌ சொல்லப்பட்ட தருமம்‌ அதாவது
    ஜிநவாணி என்னும்‌ இந்த நான்குமே மங்கல மாக கூறப்பட்டுள்ளன. இந்த நான்கே
    உத்தம மாகச்‌ சொல்லப்பட்டுள்ளன; இந்த நான்கே அடைக்கல மாகச்‌
    சொல்லப்பட்டுள்ளன. இது தவிர ‘வேறு சரணம்‌ இல்லை’ (அன்யதா சரணம்‌
    நாஸ்தி) என அருளி, ஆசாரியர்கள்‌ நம்மை மித்யா அடைக்கலத்திலிருந்து தப்பிக்க
    வைத்துள்ளனர்‌. இதை நினைவில்‌ கொண்டு நாம்‌ அனைவரும்‌ தொழுதல்‌, பணிவு,
    பூஜை முதலான செயல்களில்‌ உண்மையானதை ஏற்க வேண்டும்‌. இதுவே
    நம்முடைய முதன்மையான கடமையும்‌ ஆகும்‌.
    நற்காட்சியோடு கூடி வீதராகிக்குச்‌ செய்மப்படும்‌ பக்தி, பூஜை,
    நியமங்களாலேயே பிறவியைக்‌ கெடுக்கும்‌ காரணம்‌ அமைகிறது. அந்த
    நற்காட்சியாலேயே நம்முடைய ஞானமும்‌ ஒழுக்கமும்‌ உண்மையானவை என்று
    கூறப்படுகின்றன. மேலும்‌ இந்த நற்காட்சி ஞான ஒழுக்கங்களின்‌ கூட்டே மோக்ஷ
    நெறி.
    இல்வாழ்வோர்‌ நாள்தோறும்‌ பூஜை, பக்தி செய்வதுடன்‌, ஷோடஸ காரணம்‌,
    தச லக்ஷணம்‌, ஆஷ்டானிகம்‌ முதலான சிறப்பான பருவங்களில்‌ தம்‌ தொழில்‌
    முதலான செயல்களைச்‌ சுருக்கி, புலனிச்சையை அடக்கி, சிறந்த தரும
    தியானத்தில்‌ ஈடுபாடு கொள்கின்றனர்‌. இந்தப்‌ புனிதச்‌ சூழலில்‌ பாப வினைகளை
    அழிப்பதுடன்‌ தீர்த்தங்கரர்‌ பிரகிருதி போன்ற புண்ணியத்தையும்‌ அடைகின்றனர்‌.
    அருங்கலச்செப்பு 14.
    பூஜை இரண்டு வகையில்‌ செய்யப்படுகின்றது. ஒன்று திரவிய பூஜை
    மற்றொன்று பாவபூஜை! வீடு துறந்த பற்றற்ற முனி, பக்தி, துதிகளான பாவ பூஜை
    செய்கிறார்‌. இல்வாழ்வோர்‌ பாவனையோடு கூடிய திரவிய பூஜை செய்கின்றனர்‌.
    இங்கே திரவியம்‌ எனில்‌ நன்கு தூய்மை செய்யப்பட்ட நீர்‌ முதலான பொருள்களாம்‌
    என்று அறிதல்‌ வேண்டும்‌.
    ஐந்து பாபங்களை அல்லது உலகைத்‌ துறந்த முனிவருக்கு எப்படி
    இல்வாழ்வார்‌ நன்கு தூய்மை செய்யப்பட்ட (திரச, தாவர உயிர்கள்‌ இல்லாத)
    பொருள்களால்‌ சேவை செய்கின்றனரோ அதே போல அந்த முனிவர்களாலும்‌
    வணங்கப்படுகிற, சிறந்த அந்த வீதராக பகவானுக்கும்‌ பூஜை சேவையும்‌
    தூய்மையான பொருளால்‌ அமிழ்து உண்ணுதல்‌ முதலான குற்றங்களை நீக்கிச்‌
    செய்கின்றனர்‌. வீதராகி பிரபுவுக்கு ஜன்ம கலியாணத்தில்‌ குழந்தை போல கருதி
    சசித்த பொருளால்‌ பூஜை செய்யப்படுதல்‌ போல செய்வதில்லை.
    என்‌ சிற்றறிவு கொண்டு மூவுலகமும்‌ தொழும்‌ வீதராகி தேவ சாஸ்திர
    குருக்களின்‌ உண்மையான இயல்பைப்‌ பவ்வியர்களுடைய நன்மைக்காக
    ‘தீர்த்தங்கர பாவனை காவியத்தில்‌ எழுதியுள்ள சில பாடல்களை இங்குத்‌ தொடர்பு
    கருதி தருவதை மிகப்‌ பெரும்‌ பேறாகக்‌ கருதுகிறேன்‌.
    அலிப்த ப்ரபுவர ஜக விஷயோ ஸே, நஹீ ராக ஜக வைபவமே |
    அதர விராஜே ஸமவஸரண மே, ஜித இந்த்ரிய ஹைம்‌ ஜிந பவ மே 11 கணதர முனிவர்‌ தேவேந்த்ரோ ஸே, பூஜித ஜிநவா ௭௩ கீ சரம்‌ | அரஹந்தோ கீ ஸதா பக்திஸே, முஜே மிலே வஹ மோக்ஷ பரம்‌ [1 ஐக ஆசாஸே விரஹித ப்ரபுவர, நாசாக்ர த்ருஷ்டி தாரி ஹைம்‌ | சந்தன புஷ்போம்‌ ச்ருங்காரோம்‌ வா, ஆஹாரோம்‌ கே த்யாகீ ஹைம்‌ (| ஜக விஷயோம்‌ ஸே உதாஸீன பன, ஹம்‌ பாயேம்‌ ப்ரபு பாத வரம்‌ | அரஹந்தோம்‌ கி ஸதா பக்திஸே, முஜே மிலே வஹ மோக்ஷ பரம்‌ 1|
    திர்த்தங்கர ஜிந ஸே நிகலீஜோ, ஸம்யக்‌ மங்கல மய வாணீ | கணதர ப்ரபு நே கிரந்த்‌ ரூபஸே, கூந்தீ ஹை ஜோ ஜிநவாணீ II உத்தம ஜிநவாணீ கோ பட்கர்‌, ஜிநவர ஸம ஹம்‌ பன ஜாயேம்‌ | ஜிநவாணீமாம்‌ ப்ரவசன கீ ஹம்‌ கரேம்‌ பக்தி சுப குண காயேம்‌ (| ரஹீ பாரதீ ஸரஸ்வதீ ஜோ, ததா சாரதா மாதா ஹை | நஹி தாரதீ ச்ருங்காரரோங்கோ, வீ தராக சிவதாதா ஹை !] மாத்ர வஹ ஸ்த்ரீ லிங்க சப்த ஹை, திவ்ய த்வனி ஜோ ஜிந காயேம்‌ | ஜிநவாணீ மாம்‌ ப்ரவசன கீ ஹம்‌, கரேம்‌ பக்தி, சுபகுண காயேம்‌ 11
    அருங்கலச்செப்பு 15
    மாத்ர பிச்சிகா ஒளர்‌ கமண்டல்‌, ததா ஜ்ஞான உபகரண ரஹே |
    நா வாஹன நா தன வைபவ வஹ்‌ நஹீ வஸ்த்ர ஆபரண ரஹே |!
    நக்ன திகம்பர வீதராக பன்‌, கர்ம சத்ரு கா கரேம்‌ சமன்‌ |
    ஐஸே முனி ஆசார்ய தேவ்கோ, ஸதா பக்திஸேகரேம்‌ நமன்‌ [!
    பரமாத்தம்கே ஸதா த்யானஸே, ப்ரவசன கே சுபசாகர்‌ ஸே |
    பனீ ஆத்ம ஹை ஜிநகீ நிர்மல்‌, ததா தூர பவ ஸாகர ஸே [|
    மஹா விராகீ ஸய்யம தாரீ, சுப த்பானோமே ஜின்கா மன்‌|
    ஐஸேமுனி ஆசாரீய தேவகோ, ஸதா பக்தி ஸே கரே நமன்‌ ||
  • (தீர்த்தங்கர பாவனா காவியம்‌)
    நற்காட்சியாளன்‌ எந்த விதமான ஆசையையோடும்‌ பகவானுக்கு பூஜை,
    அர்ச்சனை செய்வது இல்லை. பிறவித்‌ துன்பத்திலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை
    அடைவதே அவனுடைய பாவனை யாகும்‌. இது தவிர அவன்‌ தனமீ, வைபவம்‌
    பாராட்டுகள்‌ வேண்டி சுய நல பாவனையை எப்போதும்‌ வைப்பதில்லை. ஏனெனில்‌,
    புண்ணிய பாப வினைக்‌ கொள்கையை அவன்‌ அறிந்தவன்‌.
    வீதராக பகவான்‌ யாருக்கும்‌ ஏதும்‌ தருவதில்லை; எதனையும்‌
    எடுப்பதுமில்லை; பக்தனுடைய பாப வினை உதிர்வுக்கும்‌ புண்ணிய ஈட்டத்துக்கும்‌
    பகவான்‌ நிமித்த மாத்திரமே. பக்தன்‌ எப்படிப்‌ பாவனை செய்கிறானோ
    அப்பாவனைக்கு ஏற்ப அவன்‌ (சுப அசுப) வினைகளைக்‌ கட்டிக்‌ கொள்கிறான்‌.
    பஞ்ச பரமேஷ்டியினுடைய உத்தம வீதராக மய குணங்களைப்‌ பாடுவதால்‌
    அயங்கியம்‌ பாப வினைகளைக்‌ கெடுப்பதுடன்‌ அதிசய புண்ணியத்தை அவன்‌
    ஈட்டுகிறான்‌. அதனால்‌ மோக்ஷ பாதையில்‌ இடை இடையே களை தோன்றுதல்‌
    போல, பிறவிச்‌ சுகப்‌ பொருள்களை அடைந்து, ஒரு நாள்‌ மோக்ஷ சுகத்திற்குப்‌
    பாத்திரமாகிறான்‌.
    இவ்வுலகில்‌ மிகுந்து கிடக்கும்‌ புலன்களால்‌ சஞ்சல மனத்தைய உடைய
    மனிதர்‌ எப்போதும்‌ புலன்களுக்கு அடிமையாகி பாப வினையை ஈட்டிக்‌
    கொள்கிறார்‌. அப்‌ பாப வினைகளின்‌ வருகை கட்டுகளைத்‌ தடுப்பதற்கு மும்மணி
    அல்லது மும்மணியை உடைய வீதாரகியின்‌ பக்தி சிறந்த கருவியாகும்‌. அந்த
    பக்தியால்‌ மனிதர்‌ செருக்கு அழிகிறது; உண்மையான நம்பிக்கை பாவனை
    தோன்றுகிறது. அப்படித்‌ துன்பம்‌ வறுமை நரக முதலான துர்கதிகளிலிருந்து தப்பிக்‌
    செய்யும்‌, மனத்தை தூய்மை – புனிதம்‌ செய்யும்‌, பக்தியினால்‌ முக்தியைத்‌ தரும்‌,
    அத்தகையை ஆராதனை சேவையை ஒவ்வொரு நாளும்‌ சிராவகர்கள்‌ தவறாது
    அருங்கலச்செப்பு
    செய்தல்‌ வேண்டும்‌. இதனோடு தொடர்புடைய ஒரு பாடல்‌ :
    பனே உதாஸோஸம்‌ ஜப்‌ மானவ, பிர்‌ தாஸோஹம்‌ பன்‌ ஜாதா |
    முனி பன்‌ காதி கர்ம நசாகர்‌, ஸோஹம்‌ ஜிநவர ஸம பாதா iJ
    தூர கர்மவா தன்ஸே ஹோஜப்‌ அஹம்‌ ஏக்‌ மேம்‌ லீன்ரஹே |
    தர்ம மார்க கீ மஹிமா ந்யாரீ ஸதா ஸ்வயம்‌ ஸ்வாதீன்‌ ரஹே ||
    (-தீர்த்தங்கர பாவனா காவ்யம்‌)
    மும்மணி அறிமுகத்தோடு மும்மணி மற்றும்‌ மும்மணியுடையாரிடம்‌
    உண்மையான பக்தியுடன்‌ உற்சாகத்தில்‌ எப்போதும்‌ வளர்ச்சி வேண்டும்‌. அதனால்‌
    மும்மணரி வடிவ மோக்ஷ நெறியைக்‌ கூறும்‌ இந்த அருங்கலச்‌ செப்பு ஸ்வாத்யாயம்‌
    (படித்தல்‌, படிப்பித்தல்‌) ஆலயங்களில்‌, பாடசாலைகளில்‌, ஒவ்வொரு வீட்டிலும்‌
    தவறாது நடைபெற வேண்டும்‌. அதுவேபாப அழிவுக்கும்‌ புண்ணிய வளர்ச்சிக்கும்‌,
    ஒழுக்க விளக்கத்திற்கும்‌ உவமை இல்லாத உபாயம்‌ ஆகும்‌.
    பாபத்திற்குக்‌ காரணமான உலக ரத்னங்கள்‌ இந்த அருங்கலச்‌ செப்புக்கு
    முன்னே மதிப்பற்றுப்‌ போகின்றன. தன்‌ ஆன்மப்‌ பெட்டியில்‌ பாதுகாக்கப்பட்டுள்ள
    அந்த நற்காட்சி – ஞான – ஒழுக்க வடிவ மும்மனரியின்‌ நல்‌ அறிமுகம்‌ ஆகிறது.
    ஆன்மா தன்‌ தார்மீக, ஆன்மீக சுகத்தில்‌ ஆழ்ந்து போகிறது. இந்த நூல்‌ பற்றி
    எழுத எனக்குத்‌ தேவை இல்லை. ஏனெனில்‌ இந்த நூல்‌ தூய நெய்போல, தானே
    மணத்தைப்‌ பரப்பவல்லது. என்றாலும்‌ இந்த நூலுக்குப்‌ புதிய உரை (சிராவகாசார
    ஸம்ஸ்கார்‌) எழுதியுள்ள விரதி பிரமசாரி ஆதிநாதன்‌ (சென்னை) உண்மையான
    அறத்தின்‌ பெருமைபற்றி எழுத வேண்டினார்‌. அதனால்‌ என்‌ சிற்றறிவு கொண்டு
    பக்தி முக்தி பற்றி எழுதியுள்ளது எல்லா பவ்வியர்களுக்கும்‌ உத்தம கதிக்கு
    காரணம்‌ ஆகுக! வேறு ஏதும்‌ இல்லை ! ்‌
    சுபமஸ்தூ.
    சரத்பூர்ணிமா
    வீ. நி. ஆ. 2 23
    கன்னலம்‌ வருஷாயோகம்‌.
    16-10-97.

அருங்கலச்‌ செப்பு – பிழை திருத்தங்கள்‌
பக்கம்‌ வரி பிழை திருத்தம்‌
4 1 ஆசிய ஆசி
6 24 குணங்களை குணங்களின்‌
15 கீழிருந்து 3 தப்பிக்‌ தப்பிக்கச்‌
23 கீழிருந்து 3 காள்க கொள்க
91 கீழிருந்து? ஆயு ஆயுள்‌
57 12 செய்த செய்து
60 கடைசி என்றுமிடத்தில்‌ என்னுமிடத்தில்‌
62 5 சேர்ந்தாள்‌ சேர்ந்தால்‌
65 4 மன்‌ மண்‌
65 தலைப்பு உறுப்பிகளின்‌ உறுப்புகளின்‌
65 (வி-ரை) 3 ப ஆகும்‌ ஆகும்‌
90 72 வாசதேவர்‌ வாசுதேவர்‌
105 6 மீறியை மீறிய
117 4 மூலம்மாக மூலமாக
120 3 சாரித்ரயோகனியம்‌ சாரித்ர மோகனீயம்‌.
124 கீழிருந்து 11 கொல்லுதால்‌ கொல்லுதல்‌
133 கீழிருந்து 7 சமாயிகம்‌ சாமாயிகம்‌
137 (வி-ரை) 8 கொள்ளிறேன்‌ கொள்கிறேன்‌
139 8 உண்ணையும்‌ உன்னையும்‌
143 3 இப்பதால்‌ இருப்பதால்‌
145 11 விசவயம்‌ விசயம்‌
145 கீழிருந்து 7 உபவசம்‌ உபவாசம்‌
159 கீழிருந்து 27 ஒளஷததித்தியுடைய ஒளஷதரித்தியுடைய
161 5 இன்றும்‌ இன்னும்‌
170 10 அதிகாரங்கள்‌ அதிசாரங்கள்‌
173 கடைசி கூட்டவா கூட்டவோ
175 2 ஏறறாறபோல ஏற்றாற்போல
177 தலைப்பு பேசாத உபவாசன்‌ போசத உபவாசன்‌
177 கடைசி அசித்தன அசித்தன்‌
180 1 ஆராம்பம்‌ ஆரம்பம்‌
181 11 பிறவற்று பிறவற்றின்‌ –
184 குறள்‌ 176 கேட்பினம்‌ கேட்பினும்‌
185 குறள்‌ 177 தரப்பினில்‌ தப்பினில்‌
186 $ பாராய பாராய்‌.
அருங்கலச்செப்பு
அச்சி, 45
அஞ்சன, 25
அணுவதம்‌, 65
அரசர்‌, 53
அருங்கல, 175
அவ்விநய, 39
அறத்தின்‌, 22
அறத்தின்‌ பெருமை, 24
அறத்துக்கு, 21
அறத்துப்‌, 154
அறத்தை, 16
அறப்பழி, 15
அறமுண்டேல்‌, 36
அறவுரை, 124
அறுத்தல்‌, 68
அனங்க, 75
ஆண்டொடு, 191
ஆர்வமொடு, 91
ஆலோசனை, 145
ஆறும்‌ மலையும்‌, 84
இடம்‌, 88
இடர்களைதல்‌, 196
இடையூறு, 145
இந்தியத்தை, 11
இயக்கம்‌, 78
இயங்குயிர்‌, 67
செய்யுள்‌ முதற்குறிப்பு
| (எண்‌ : பாடல்‌ எண்‌)
இயமங்கள்‌, 102
இருதொடர்‌, 170
இருளின்‌, 167
இரேவதை, 26
இல்லறம்‌, 60
இவற்றால்‌, 35
இவ்வாறு, 42
இழிகுலத்து, 50
இறந்ததன்‌, 113 *
இறுவாய்‌, 145
இன்று, 105
உடம்பினை, 168
உடுப்பன, 103
உண்டி மருந்து, 134
உண்டி மறுத்‌, 125
உத்தம தானம்‌, 138
உத்தமற்கு, 137
உலகம்‌, 159
உலகின்‌, 59
உவா, 122
உள்ள, 121
உறுப்பிற்குறை, 28
உறுப்பிற்‌ பிறர்‌, 54
ஊணொடு, 150
எட்டுவகை, 13 :
எல்லியும்‌, 164
17
எல்லைப்புறத்து, 85
எல்லையகத்து, 89
எல்லையில்‌, 158
என்றும்‌, 9
ஏற்றவகை, 23
ஐந்தனத்த தண்ட, 90
ஐந்தனத்த தண்ட, 97
ஐம்பாவம்‌, 123
ஐயமவண்வே, 14″
ஜயைந்து, 79
ஒருசிறை, 109
ஒரு திங்கள்‌, 155
ஒன்றியும்‌, 115
கசிவு, 149
கடையில்‌, 7
கட்டு, 107
கட்டொடு, 61
கலங்கலின்‌, 46
கள்ளரொடு, 73
கள்ளொடு, 82
காட்சியில்‌, 162
காட்சியுடையார்‌, 62
காட்சியோ, 46
காட்சி விசேட, 43
காமம்‌, 178
கிட்டமும்‌, 157
அருங்கலச்செப்பு
கிரியை, 126
குறளை, 70
குறுவாழ்க்கை, 52
குறைந்ததூம்‌, 63
குறைவு, 72 குற்றம்‌, 5
கூடியவை, 19
கூறல்‌, 133
கூறை, 108
கொடாதது, 71
கொலைமுதலா, 67.
கொலைவரு, 169
கோலமிலை, 104
சட்டி, 60
சரிதம்‌, 56
சாவொடு, 152
சிரிசேன்‌, 141
சிறியகொலை, 96
சேதியம்‌, 110
சேவாள்‌, 92
தடுமாற்ற, 19
தத்துவஞான, 12
தப்பினின்‌, 177
தலைமகனும்‌, 4
தனக்கும்‌, 16
தனசிரி, 81
தனிய, 1
தானஞ்செயல்‌, 135
தானவிடய 140
திருந்தார்‌, 18 தீக்கருவி, 94
தீயவை, 14
தீராவினை, 180
துய்த்து, 99
தெய்வ, 144
தெறித்தபறை, 8
தேசம்‌, 129
தேவனும்‌, 38
தேவாதிதேவன்‌, 143
நகையே, 96
நல்லறச்‌, 120
நல்லறத்தின்‌, 40
நற்காட்சி, 2
நற்காட்சியில்லா, 44
நிதானத்தோடு, 153
நிறைந்தது, 64
நோக்கி, 127
பசியதன்‌, 142
பசிவேர்ப்பு, 6
பதினோர்‌, 161
பயமின்‌, 93
பரிவு, 156
பழமிலை, 186
பழிப்பில்‌, 19
பறையன்‌, 37
பற்றொடு, 147
18
பாவநெறி, 20
பாவம்பகை, 174
பாவம்பொரு, 69
பிறப்புக்குலம்‌, 34
பிறப்புப்பிணி, 155
பிறர்க்கண்‌, 117
பிறர்மனை, 76
பெண்டிர்‌, 49
பெரியகொலை, 96
பெற்றவகை, 111
பொருளின்ற 57
பொருள்வரைந்து, 77
போகோபபோக, 98
போசதுபவாசம்‌, 126
மந்திரங்களை, 151
மயக்கம்‌, 100
மயக்கார்வம்‌, 32
மன்னச்சேரி, 130
மனைதுறந்து, 172
மனைவாழ்க்கை, 138
மாசுண்ட, 33
மிச்சை, 41
முச்சச்சாம்‌, 56
முத்திநெறி, 179
முற்றஉணர்ந்தானை, 1
அருங்கலச்செப்பு : 19
ஓம்‌
ஸ்ரீ ஜிநாய நம :
அருங்கலச்செப்பு
(சிராவகாசரஸம்ஸ்கார உரையுடன்‌

  1. நற்காட்டு அதிகாரம்‌
    மங்கல வாழ்த்து
    1 முற்ற உணர்ந்தானை ஏத்தி மொழிகுவன்‌
    குற்றம்‌ ஒன்று இல்லா அறம்‌.
    (பதவுரை! முற்ற-குறையின்றி முழுவதுமாக, உணர்ந்தானை-உயிர்‌
    முதலான மெய்ப்பொருள்களை அறிந்தானை, ஏத்தி-மனம்‌, மொழி மெய்களால்‌ போற்றித்‌ தொழுது, குற்றம்‌ ஒன்று-குற்றம்‌ எனச்‌ சொல்லப்படுகின்ற ஒன்று, இல்லா-இல்லாத, அறம்‌-அறத்தை, மொழிகுவன்‌-
    சொல்லுவன்‌ என்றவாறு.
    கருத்துரை முழுதுணர்ந்தவனாகிய அருக பரமேட்டியைத்‌ தொழுது
    அவர்‌ அருளிய குற்றம்‌ இல்லாத அறத்தை எடுத்துச்‌ சொல்லுகிறேன்‌
    என்பதாம்‌.
    (விரிவுரை) நூலாசிரியர்‌ தான்‌ கூறத்தொடங்கும்‌ நூலுக்குத்‌
    தோற்றுவாயாக முற்ற உணர்ந்தானைத்‌ துதித்து நூல்‌ உரைப்பன்‌ என்று கூறி
    இம்‌ மங்கல வாழ்த்துக்‌ குறளில்‌ அறம்‌ உரைக்க உறுதி கொள்கிறார்‌. இதனை
    “மங்கலாசரணம்‌’ என்பர்‌ வடமொழி நூலார்‌. எந்த ஒரு நற்செயலும்‌ மங்கல
    வாழ்த்தோடு தொடங்க வேண்டும்‌ என்பது நூலறிந்தார்‌ மரபு. ஏனெனில்‌,
    இடையூறுகள்‌ இல்லாமல்‌ எடுத்த செயல்‌ இனிது முடிய வேண்டும்‌ என்று
    மங்கல வடிவினனான சினேந்திரன்‌ குணங்களைப்‌ போற்றுதல்‌ வேண்டும்‌.
    பகவான்‌ குணங்களைப்‌ பாடுதல்‌ சுப பரிணாமம்‌ ஆதலால்‌ புண்ணிய
    பந்தமாகும்‌. அது போல எண்ணிலா மடங்கு பாபவினை கழிகிறது என்பது
    ஆகம

உரை !

  1. ஆலாப்‌ பத்ததி, ப. 38.
    அருங்கலச்செப்பு 20
    அரஹந்த ணமோகாரம்‌ பாவேணய ஜோ கரேதி பயடிமத்‌ |
    ஸோ ஸவ்வ துக்க மோக்கம்‌ பாவஇ அசிரேண காலேண (|
    “பாவனையுடன்‌ அருகனைத்‌ தொழுகிறவர்‌ வெகுவிரைவில்‌ எல்லாத்‌
    துன்பங்களிலிருந்தும்‌ விடுதலைப்‌ பெறுகிறார்‌’ என்பதும்‌ காண்க, ‘
    முற்ற உணர்தல்‌-அனைத்தையும்‌’ குறையின்றி அறிதல்‌; முழுதும்‌
    என்றது உலகத்தையும்‌ அலோகத்தையும்‌ உள்ளடக்கியதாம்‌. உலகம்‌
    என்றது உயிர்‌, புற்கலம்‌, தன்மம்‌, அதன்மம்‌, காலம்‌ என ஐந்தும்‌
    அடங்கிய ஆகாயத்‌ தொகுதியாகும்‌; அலோகம்‌-உலகுக்குப்புறம்பே
    பரந்து கிடக்கும்‌ எல்லையற்ற ஆகாயப்‌ பகுதியாகும்‌. அவ்‌ வெல்லாப்‌
    பொருள்களையும்‌ அவை ஒவ்வொன்றின்‌ அனந்த குணங்களையும்‌
    அவற்றின்‌ அனந்த பரியாயங்களையும்‌ (மாறுதல்களையும்‌) சமயம்‌
  • சமயம்‌ ‘தோறும்‌- ஒரு சேர அறிதல்‌ முற்ற அறிதலாகும்‌. ‘கறையறு
    சுடர்மணி கரதலம்‌ நடுவணது என முழுதுணரும்‌ நின்மதி’, ‘என்றும்‌
    எண்ணாது அகிலமும்‌ உடனே கண்டு அருள்கின்றாய்‌’ என்பார்‌
    உதீசிதேவர்‌. *
    ய ஸர்வானி சராசராணி விதிவத்‌ த்ரவ்யாணி தேஷாம்‌ குணான்‌
    பர்யாயனபி பூதபாவி பவத : ஸர்வான்‌ ஸதா ஸர்வதா |
    ஜானீதே யுகபத்‌ ப்ரதிக்ஷ்ணமத : ஸர்வக்ஞ இத்யுச்யதே
    ஸர்வக்ஞாய ஜினேச்வராய மகதே வீராய தஸ்மை நம |
    “அனைத்து இயங்கு, நிலைபொருள்களது அனைத்து குணங்களையும்‌
    அவற்றின்‌ மூன்று கால பரியாயங்கள்‌ முறைமைகளையும்‌ எப்போதும்‌ கணம்‌
    கணம்‌ தோறும்‌ ஒரு சேர அறிவதால்‌ முற்றுணர்ந்தானாம்‌ (ஸர்வக்ஞனாம்‌!.
    பெருமை மிக்க அம்‌ முற்றுணரும்‌ மகாவீரர்‌ பிரபுவத்‌ தொழுகிறேன்‌
    என்பதாம்‌. *
    இதனைக்‌ *கேவல ஞானம்‌’ என்பர்‌. ஞானத்தை மறைக்கும்‌ வினை முற்றுமாக நீங்கிவிட்ட நிலையிலேயே-தூய நிலையிலேயே இது அமைவதால்‌

இதனை ‘வாலறிவு! என்றும்‌ குறிப்பர்‌. *

  1. மூலாசாரம்‌, 506, 2, திருக்கலம்பகம்‌, 2, 10, 3. பத்தி சங்க்ரஹம்‌, 145, 4. திருக்குறள்‌, 2.
    அருங்கலச்செப்பு 4
    ஏத்துதல்‌-இடைவிடாது, புகழ்தல்‌, போற்றுதல்‌. அறத்திற்குக்‌
    குற்றமாவது தன்னைச்‌ சார்ந்தாரை உண்மை நெறியல்லா நெறியில்‌ செலுத்திப்‌
    பிறவித்‌ துன்பத்தில்‌ ஆழ்த்தும்‌ கொடுமை ஆகும்‌. அத்தகு கொடுமை
    அருகன்‌ அறத்தில்‌ இல்லை என்பார்‌ “குற்றம்‌ ஒன்று’ இல்லா அறம்‌ என்றார்‌.
    குற்றம்‌ என ஒன்று என விரித்து, ஒன்று’ என்பது குற்றத்தின்‌ கொடுமையை
    விளக்கி நின்றதாகக்‌ கொள்க. “நனீவு என ஒன்று” என்றார்‌ குறள்‌ ஆசிரியரும்‌.
    அது போல்‌ கொள்க. “பல்‌ நெறி மேல்‌ ஓடுவனே நின்‌ ஒரு நெறி கண்டு’ என்ற
    இடத்துப்‌ பல நெறி மேல்‌ சென்றதனால்‌ விளைந்த கொடுமையைப்‌ பெற
    வைத்திருப்பதைக்‌ காண்க. *
    அறம்‌ என்றது ஈண்டு மும்மணியை. அடுத்த குறளில்‌ அதனை
    விளக்குவார்‌. .
    2 நற்காட்சி நன்ஞானம்‌ நல்லொழுக்கம்‌ இம்மூன்றும்‌
    தொக்க அறச்சொல்‌ பொருள்‌.
    நிறுத்த முறையில்‌ இது அறம்‌ இன்னது என்று கூறுகிறது:
    (ப-றை அறம்‌ – அறமென, சொல்‌ – சொல்லப்படுவது, நற்காட்சி – நல்ல
    நம்பிக்கையும்‌, நன்ஞானம்‌ – நல்ல”அறிவும்‌, நல்லொழுக்கம்‌ – நல்ல
    ஒழுக்கமும்‌, தொக்க – கூடிய, பொருள்‌ – பொருள்‌ ஆகும்‌. – எ-று
    (க-றை நல்ல நம்பிக்கையும்‌, நல்ல அறிவும்‌, நல்ல ஒழுக்கமும்‌ கூடிய
    நிலைதான்‌ உயிரது அறம்‌ ஆகும்‌.
    (வி-ரை அறம்‌ எனில்‌ பொருளின்‌ இயல்பாகும்‌. இங்கே உயிர்‌ இயல்பு
    அறம்‌ எனப்படுகிறது. ‘அறவினை யாதெனில்‌ கொல்லாமை ்‌ என்று உயிர்‌
    காத்தலை அறமாகவும்‌, ‘அறம்‌ பத்தும்‌ ஆன்ற குணம்‌”. என்று
    பொறையுடைமை முதலான பத்தினை அறமாகவும்‌, “மனத்துக்கண்‌ மாசிலன்‌
    ஆதல்‌ அறம்‌”. என்று மனத்‌ தூய்மையை அற்மாகவும்‌ இன்னும்‌

பலவாறாகவும்‌ அறம்‌ ஜைன நூல்களில்‌ விளக்கப்படுகிறது.

  1. திருக்குறள்‌, 1216, 2. திருநூற்றந்தாகி, 56, 3, திருக்குறள்‌, 221
  2. அறநெறிச்சாரம்‌, 77, 5, திருக்குறள£4்‌.
    அருங்கலச்செப்பு 22
    தம்மோ வத்து ஸஹாவோ கமாதிபாவோ ய தசவிஹோ தம்மோ!
    சாரித்தம்‌ களுதம்மோ ஜீவானம்‌ ரக்கனம்‌ தம்மோ.
    “பொருளின்‌ இயல்பு அறம்‌, பொறையுடைமை முதலான பத்தும்‌
    அறம்‌, ஒழுக்கம்‌ அறம்‌, உயிர்‌ காத்தல்‌ அறம்‌”, எனச்‌ சுவாமி கார்த்திகேயர்‌
    முதன்மையான அற விளக்கங்களைத்‌ தொகுத்துச்‌ கட்டுவார்‌.” இங்கே
    மும்மணியை அறம்‌ என்கிறார்‌. ஆசாரியர்‌ ஸமந்தபத்திரர்‌ இதையே
    ஸ்த்த்ருஷ்டி ஜ்ஞான வ்ருத்தானி தர்மம்‌” என்று கூறியுள்ளார்‌. இவ்விளக்கங்கள்‌ எல்லாம்‌ வேறுபட்டுத்‌ தோன்றினும்‌ உண்மையில்‌ சொல்‌ முறையில்‌ வேறுபாடே தவிர கருத்தில்‌ வேறுபாடு இல்லை. அறம்‌ என்ற சொல்‌ ‘அறு’ பகுதியிலிருந்து அமைகிறது. அறு 2 அறம்‌. அம்‌ பண்புப்பெயர்‌ விகுதி. அறு எனில்‌ அறுதல்‌ / நீங்குதல்‌ என்று பொருள்‌. அறுபட்ட / நீங்கிய நிலை அற நிலை. அதாவது பொருள்‌ பிற தொடர்பிலிருந்து அறுபட்டுத்‌ தன்‌ நிலையில்‌ / இயல்பில்‌ நிற்கும்‌ நிலை அறநிலை ஆகும்‌. கொல்லாமை, பொறையுடைமை முதலான பத்து, தூய்மை, மும்மணி, -இவை போன்றன எல்லாம்‌ உயிரின்‌ இயல்புகளே. எனவே இவற்றை அறம்‌ என்று குறிப்பிட்டுள்ளார்‌ என்று கருதுதல்‌ வேண்டும்‌. இப்பண்புகளை அடைய உயிர்‌ மேற்கொள்ளும்‌ ஒழுகலாறுகளையும்‌, துணைக்கொள்ளும்‌ கருவிகளையும்‌ கூட உபசாரமாக அறம்‌ என்று கூறுவர்‌. அங்கெல்லாம்‌ நய நோக்கில்‌ பொருள்‌ காண வேண்டும்‌. நல்‌ “ நன்‌மை. தீமைக்கு எதிரானது. உள்ளவாறு பொருளை நம்புதல்‌ வேண்டும்‌. திரிபாக அன்று என்பதைக்‌ காட்ட நல்‌ காட்சி என்றார்‌. காட்சி எனில்‌ நம்புதல்‌. கண்ணால்‌ காணப்படுவது காட்சி ஆகும்‌. பிறகு நம்புதல்‌ என்று எப்படிப்‌ பொருள்‌ கூறப்படுகிறது? காண்‌ பகுதிக்குப்பல

பொருள்கள்‌ உள்ளன. இங்கே நம்புதல்‌ பொருள்‌ கொள்ளப்பட்டது.

  1. சுவாமி கார்த்திகேய அனுப்பிரேக்ஷா, 478 2. ரத்ன கரண்டக சிராவகாசாரம்‌, 8
    அருங்கலச்செப்பு 23
    ‘நடுக்கற்ற காட்சியவர்‌” என்று குறளாசிரியர்‌ ஆண்டுள்ளமையை
    ஒப்பு நோக்குக.
    நம்பிக்கை என்பது நல்‌ உயிரின்‌ பரிணாமம்‌ ஆகும்‌. இங்கு மோக்ஷ
    நெறி பேசப்படுகிறது அதில்‌ உயிர்‌ முதலான தத்துவங்களை
    நம்புவதாலேயே மோக்ஷ நெறி அமைய முடியும்‌. அந்த நம்பிக்கை
    பவ்வியர்களிடம்‌ மட்டுமே உண்டாக முடியும்‌. ஆனால்‌ கண்‌ முதலான
    பொறிகள்‌ நிமித்தமாகத்‌ தோன்றும்‌ காணுதல்‌ எல்லா உயிர்களிடமும்‌
    காணப்படுகிறது அதனால்‌, இங்கு – மோக்ஷ நெறியில்‌ காட்சிக்குக்‌
    காணுதல்‌ என்று பொருள்‌ காணல்‌ சரி அன்று. வட மொழியில்‌
    நம்பிக்கையை ‘ஸிரத்தானம்‌’ என்பர்‌. ‘காட்சி என்பது ஆப்தன்‌
    (இருகன்‌) முதலான பொருள்கள்மீது மீளாது பரந்து சென்ற ஆனந்த
    வடிவமான தெளிவு (நம்பிக்கை!* என்பார்‌ நீலகேசி உரைகாரர்‌.
    அறிவில்‌ ஐயம்‌. திரிபு, மயக்கம்‌ இல்லாமையைச்‌ சுட்ட நன்‌ ஞானம்‌
    என்றார்‌. பிறவிக்கு ஏதுவான காரணங்களை விலக்கும்‌ முயற்சியுடைய
    சாதகன்‌ வினைக்கட்டுக்கு நிமித்தமான காரியங்களைக்‌ கைவிடுதல்‌
    நல்லொழுக்கம்‌ ஆகும்‌. அதாவது அறியாமையுடன்‌ கூடிய காரியங்களை
    நீக்க நல்லொழுக்கம்‌ என்றார்‌.
    மோக்ஷி நெறியில்‌ முதலில்‌ நல்‌ நம்பிக்கை தோன்றுகிறது. நல்‌
    நம்பிக்கை காரணமாக அறிவு நல்லறிவாகிறது. நல்லறிவின்‌ விளைவாக
    நல்லொழுக்கம்‌ அமைகிறது. அதனால்‌ அந்த வைப்பு முறையைக்‌ குறளில்‌
    ஆண்டுள்ளார்‌. இம்‌ மூன்றையும்‌ ‘மும்மணி’ என்றும்‌ ‘திரியோக மருந்து’
    என்றும்‌ ‘அருங்கல மும்மை’ என்றும்‌ ‘ரத்ன த்ரயம்‌’ என்று குறிப்பர்‌.
    தொக்க என்பது கூடிய என்ற பொருளில்‌ வந்த பெயரெச்சம்‌. அது
    பொருள்‌ என்னும்‌ சொல்லைத்‌ தழுவியது. “தொக்க உடம்பும்‌ பொருளும்‌
    உடையான்‌’ என்பது போலக்‌ காள்க. *
    பொருள்‌ என்றது பொருண்மை. அது உயிர்ப்பொருளின்‌ பொருண்மை

நிலையைச்‌ சுட்டி நின்றது. பொருண்மை நிலை – பொருளின்‌ பண்பு நிலை.
1, திருக்குறள்‌, 654, 2. நீலகேசி, 121, 3. அறநெறிச்சாரம்‌, 75.
அருங்கலச்செப்பு 24

  1. மெய்ப்பொருள்‌ தேறுதல்‌ நற்காட்சி என்றுரைப்பர்‌
    எப்பொருளும்‌ கண்டுணா்ந்‌ தார்‌.
    இது நற்காட்சி இலக்கணம்‌ கூறுகிறது.
    (ப-ரை எப்பொருளும்‌ – எல்லாப்பொருள்சளையும்‌, கண்டுணர்ந்தர்‌ –
    காணுதலையும்‌ அறிதலையும்‌ ஒன்றாகவுடைய முழுதுணர்‌ ஞானியராகிய
    அருக தேவர்‌, மெய்ப்பொருள்‌-நிலையான பொருளை, தேறுதல்‌-நம்புதல்‌,
    நற்காட்சி-நல்ல நம்பிக்கை என்றுரைப்பர்‌ – என்று சொல்லுவார்‌. எ-று.
    (க-ரை நிலையான பொருளைத்‌ தெளிதல்‌ / நம்புதல்‌ நற்காட்சி என்று
    எல்லாப்‌ பொருள்களையும்‌ அறியும்‌ மூழுதுணர்ஞானி சொல்லுவார்‌
    என்பதாம்‌.
    (வி-றை முன்‌ குறளில்‌ அருங்கல மும்மை இவை எனக்‌ கூறினார்‌. இனி
    அவற்றை முறையே விளக்க வேண்டி அவற்றுள்‌ முதலாவதான நற்காட்சியின்‌ இலக்கணத்தை இக்‌ குறளில்‌ வரையறுக்கிறார்‌. மெய்யாதல்‌ – நிலை பெறுதல்‌, மெய்ப்பொருள்‌-றிலைத்த பொருள்‌. நிலைத்த பொருள்‌ எவை என்று அடுத்த குறளில்‌ கூறுகிறார்‌. தேறுதல்‌-தெளிதல்‌ / நம்புதல்‌. ‘பொய்வகை இன்றித்‌ தேறல்‌ காட்சி’ ! என்றார்‌ திருத்தக்கதேவர்‌. ‘நாணுடையான்‌ கட்டே தெளிவு” என்றும்‌ ‘அறிவு அறியார்த்‌ தேறுதல்‌ என்றும்‌ குறளாசிரியர்‌ இப்பொருளில்‌ ஆண்டுள்ளமை காண்க. எப்பொருளும்‌ – எல்லாப்‌ பொருள்களும்‌, எப்பொருள்‌ எக்‌ குணத்தாலும்‌’ என்று நீலகேசி ஆண்டுள்ளமை காண்க*. எல்லாப்‌ பொருளும்‌ என்றது லோக அலோகப்‌ பொருள்களையும்‌ அவற்றின்‌ குண பர்யாயங்களையும்‌ ஆகும்‌. கண்டுணர்தல்‌-காணுதலையும்‌ அறிதலையும்‌ ஒரே சமயத்தில்‌ உடைமை. பிறவி உயிர்கள்‌ கண்டு பிறகு அறியும்‌. அங்குக்‌ கால இடைவெளி உண்டு’. ஆனால்‌ முழுதுணர்‌ ஞானியான நிலையில்‌ காணுதலிலும்‌ அறிதலிலும்‌ கால இடைவெளி இல்லை. இரண்டும்‌ ஒரே சமயத்தில்‌ நிகழ்கின்றன. அச்சிறப்பு நோக்கி ‘கண்டுணர்ந்தார்‌’ என்றார்‌.
  2. சீவக சிந்தாமணி, 1436, 2, ்‌ ர்‌, 502, 3. த்‌ ர்‌, 507, 1 Sodan 799 திருக்குறள்‌, 502, 2, திருக்குறள்‌, 507,
    அருங்கலச்செப்பு 25
    4 தலைமகனும்‌ நூலும்‌ முனியும்‌ இம்மூன்றும்‌
    நிலைமைய தாகும்‌ பொருள்‌.
    இது நிறுத்த முறையில்‌ மெய்ப்பொருளை விளக்குகிறது.
    (ப-ரை நிலைமையது – நிலைபெறுதலை உடையது, பொருள்‌ – (என்று
    முன்‌ சொல்லப்பட்ட) மெய்ப்‌ பொருள்தான்‌, தலைமகனும்‌ – இறைவனும்‌,
    நூலும்‌ – பரம ஆகமமும்‌, முனியும்‌ – அகப்‌ புற பற்று அற்ற மெய்த்‌
    துறவியரும்‌ (என, இம்‌ மூன்றும்‌ – இம்‌ மூன்று வகையினையும்‌, ஆகும்‌ –
    உள்ளடக்கியது ஆகும்‌, எ-று.
    (க-ரை இறைவனும்‌ நூலும்‌ முனியும்‌ என மூவகையும்‌ உள்ளடக்கியது
    முன்‌ கூறப்பட்ட மெய்ப்பொருள்‌ என்பதாம்‌.
    (வி-ரை! நிலையான பொருளை நம்புதல்‌ நற்காட்சி என்றவர்‌ அந்‌
    நிலையான பொருள்‌ மூவகைப்‌ பாகுபாடு உடையது என இக்குறளில்‌
    வரையறை செய்தார்‌.
    இறைவனை தலைமகன்‌ என்றார்‌. மகன்‌ எனில்‌ மனிதன்‌. ‘செய்ந்‌ நன்றி
    கொன்ற மகற்கு” எனவும்‌, மகன்‌ எனல்‌ மக்கட்‌ பதடி எனல்‌” எனவும்‌
    குறளாசிரியர்‌ அப்பொருளில்‌ ஆண்டுள்ளமை காண்க. மக்களுள்‌ தலைமைப்‌
    பெற்றானைத்‌ தலைமகன்‌ என்றார்‌. இங்குத்‌ தலைமை பெறுதலாவது தன்‌
    அறிவு முதலான உயிர்ப்‌ பண்புகளின்‌ தலை வரம்பில்‌ நிலைபெறுதலாம்‌.
    இதனை இறைநிலை என்பர்‌. மனிதன்‌ தன்‌ அறிவு, காட்சி முதலான உயிர்ப்‌
    பண்புகளில்‌ தூய்மை பெற்றுத்‌ தலை வரம்பில்‌ நிலைபெறுதலே தலைமகன்‌
    நிலையாகும்‌ – இறை நிலை ஆகும்‌. மனிதனே இறைநிலை எய்தி இறைவன்‌
    ஆகிறான்‌ என்பதனைத்‌ ‘தலை மகன்‌’ என்ற சொல்லால்‌ உய்த்துணர
    வைத்தார்‌. அதன்‌ வழி அனாதியாக உள்ளவர்‌ இறைவர்‌ என்ற பிறர்‌
    கருத்தையும்‌ குறிப்பாக மறுத்து விடுகிறார்‌, நூலாசிரியர்‌. ஆசாரியர்‌ ஸமந்த
    பத்திரரும்‌ “ஆப்த’ என்ற சொல்லை ஆண்டுள்ளார்‌.” அச்‌ சொல்லும்‌ இக்‌

கருத்தினதே. “புருஷரில்‌ சிறந்தோன்‌’ என்பது பழைய உரைக்‌ குறிப்பு.

  1. திருக்குறள்‌ 110, 2. திருக்குறள்‌ 196, 3. ரத்ன கரண்டக சிராவகாசாரம்‌ 5.
    அருங்கலச்செப்பு 26
    நூல்‌ என்றது தலைமகன்‌ அருளிய பரம ஆகமம்‌. நூல்‌ குறித்து
    ஆசிரியர்‌ தாமே பின்னர்‌ விளக்குகிறார்‌.
    முனி என்றது பிறவி நிலையை வெறுத்துத்‌ தன்‌ தூய ஆன்ம நிலையில்‌
    ஆழும்‌ பற்றுகள்‌ இல்லாத அருந்‌ துறவியர்‌ ஆவார்‌. அவர்‌ இயல்பினையும்‌
    ஆசிரியரே பின்னர்‌ விளக்குகிறார்‌.
    ஆறு பொருள்‌, ஏழு தத்துவம்‌, ஒன்பது பதார்த்தம்‌ முதலானனவற்றை
    நம்புதல்‌ நற்காட்சி என்றும்‌, தன்‌ ஆன்ம இயல்பை நம்புதல்‌ நற்காட்சி என்றும்‌
    வெவ்வேறு வகையாகவும்‌ நற்காட்சி நூல்களுள்‌ விளக்கப்பட்டுள்ளனவே
    என இங்கு ஐயம்‌ தோன்றலாம்‌.
    ஜிந ஆகமங்களில்‌ வருணனைகள்‌ நய நோக்கில்‌ கூறப்படுகின்றன.
    எனவே நயம்‌ நோக்கிப்‌ பொருளை அறிதல்‌ வேண்டும்‌. எடுத்துக்‌ காட்டாகப்‌
    பிரதமானுயோகமும்‌ சரணானு யோகமும்‌ ஒழுக்கத்தை முதன்மைப்‌ படுத்திப்‌
    பேசும்‌. கரணானு யோகம்‌ ஆன்ம பரிணாமத்தை முதன்மையாகப்‌ பேசும்‌.
    திரவியானுயோகம்‌ தத்துவச்‌ சிந்தனையை முதன்மையாகப்‌ பேசும்‌.
    அதனால்தான்‌ நற்காட்சியை விளக்கும்‌ போது அனுயோகங்களின்‌
    நோக்குக்கு.ஏற்ப வேறு வேறு வருணகைள்‌ கூறப்படுகின்றன.
    அருங்கலச்‌ செப்பு சிராவகர்‌ ஒழுக்கத்தை விளக்கும்‌ நூல்‌. அதனால்‌,
    ஒழுக்கத்தை முதன்மையாக வைத்துத்‌ தலைமகன்‌ நூல்‌ முனியை நம்புதல்‌
    நற்காட்சி எனக்‌ கூறியுள்ளார்‌.
    மித்யாத்துவம்‌, ஸம்யக்‌ மித்யாத்துவம்‌, ஸம்யக்த்துவம்‌ பிரகிருதிகள்‌
    (வினைகள்‌, குரோதம்‌, மானம்‌, மாயை, லோப பிரகிருதிகள்‌ என இந்த ஏழு
    பிரகிருதிகளும்‌ (வினைகளும்‌) தணிந்து இருப்பதால்‌, தணிவும்‌ அழிவும்‌
    பெற்றிருப்பதால்‌, அழிவதால்‌ உயிரில்‌ தோன்றும்‌ நம்பிக்கை பரியாயம்‌
    நற்காட்சி என்று கரணானு யோகம்‌ கூறுகிறது.
    உயிர்‌ முதலான ஆறு மெய்ப்பொருள்கள்‌, ஏழு தத்துவங்கள்‌, ஒன்பது பதார்த்தங்களைத்‌ தம்தம்‌ உண்மை இயல்போடு உள்ளவாறு நம்புதல்‌ நற்காட்சி என்று திரவியானுயோகம்‌ கூறுகிறது ஆன்ம தத்துவத்தை உள்ளவாறு நம்புதல்‌ நற்காட்சி என்று ஆன்மீய நூல்கள்‌ கூறுகின்றன இப்படி நயம்‌ நோக்கி வருணனைகள்‌ வேறுபடும்‌. என்றாலும்‌ இவை எல்லாம ஒன்றுக்கொன்று துணை தருவனவே: வேறுபடுத்துவன அல்ல,
    அருங்கலச்செப்பு 27
    நம்புதல்‌ உண்ர்வு உயிரில்‌ தோன்றும்‌ மாறுகை (பரியாயம்‌) ஆகும்‌.
    அதற்கான நிமித்தங்கள்‌ வேறு வேறாக அமைகின்றன எனலாம்‌. என்றாலும்‌
    ஒன்றைப்‌ பெறும்போது பிறவும்‌ அடையப்படும்‌ என்று அறிதல்‌ வேண்டும்‌.
    ஆனால்‌, இவை எல்லாம்‌ உரைமூறை வேறுபாடே தவிர இலக்கண (லக்ஷண।
    வேறுபாடு அன்று எனக்‌ கொள்க.
    “தலைமகனும்‌ நூலும்‌ முனியும்‌” என்று அறநெறிச்‌ சாரமும்‌
    கூறியுள்ளது ஒப்பு நோக்கத்‌ தக்கது.
  2. குற்றமொன்று இன்றிக்‌ குறையின்று உணர்ந்துஅறம்‌
    பற்ற உரைத்தான்‌ இறை.
    நிறுத்த முறையில்‌ இது தலைமகன்‌ இயல்பு கூறுகிறது.
    (ப-றை குற்றம்‌ ஒன்று – குற்றம்‌ என ஒன்று, இன்றி – இல்லாமலும்‌, குறை
    இன்று – குறைவு இல்லாதும்‌, உணர்ந்து – நேரே அனைத்தையும்‌ அறிந்து, அறம்‌ – அறத்தை, பற்ற – உயிர்கள்‌ பற்றி நிற்குமாறு, உரைத்தான்‌ – உரைத்தவன்‌, இறை – தலைமகளாம்‌, ௭-று.
    (க-ரை அனைத்துப்‌ பொருள்களையும்‌ அநிதலில்‌ குற்றமும்‌ குறைவும்‌
    இல்லாமல்‌ ஒரு சேர அறிந்து உயிர்‌ பற்றி நிற்குமாறு அறத்தை உரைத்தவன்‌ இறை என்பதாம்‌. ்‌
    (வி-ரை! அறிதலில்‌ குற்றமாவது ஐயம்‌, திரிபு, மயக்கங்களோடு
    அறிதலாம்‌. அத்தகை குறைபாடு அருகனது அறிதலில்‌ இல்லை என்பார்‌
    ‘குற்றம்‌ ஒன்று இன்றி’ என்றார்‌. குற்றம்‌ என ஒன்று என்று விரித்து ஒன்று
    என்பது குற்றத்தின்‌ கொடுமையை விளக்கி நின்றதாகக்‌ கொள்க. முதல்‌
    குறளில்‌ தந்துள்ள விளக்கத்தை இங்கும்‌ கொள்க. பிற கடவுளர்தம்‌ அறிதலில்‌
    இக்‌ குற்றங்கள்‌ காணப்படுவதால்‌ அருகனது அறிதலில்‌ அக்‌ குற்றங்கள்‌
    இல்லை என்பார்‌ ‘குற்றம்‌ ஒன்று இன்றி’ என்றார்‌. பொருள்கள்‌ அனந்தம்‌
    (வரம்பற்றன!;: அவற்றின்‌ குண பரியாயங்களும்‌ வரம்பற்றன. அவற்றை
    எல்லாம்‌ ஒருங்கே கணம்‌ கணம்‌ தோறும்‌ அறியும்‌ ஆற்றல்‌ பிற
    கடவுளரிடத்துக்‌ காணப்படவில்லை; அதனால்‌ அவர்கள்‌ அறிவு முழுதுணர்‌
  3. அறநெறிச்சாரம்‌

  4. அருங்கலச்செப்பு 28
    அறிவு அன்று. அது போன்ற குறை அறிவு அருகனது அறிதலில்‌
    இல்லைஎன்பார்‌ ‘குறை இன்று உணர்ந்து’ என்றார்‌. இதனால்‌ அறிதல்‌
    செயலிலும்‌ குற்றம்‌ இல்லை; டொருளை அறிதல்‌ அளவிலும்‌ குறைவு இல்லை
    என இறைவனது அறிவுச்‌ சிறப்பைக்‌ கூறினார்‌. குற்றம்‌ இல்லாமையை
    இறைவனுக்கும்‌ குறைவு இல்லாமையை அவன்‌ அறிவுக்கும்‌
    அடைமொழியாக்கி உரை கூறுவாரும்‌ உளர்‌.
    ஞான மறைப்பு, காட்சி மறைப்பு, மோஹம்‌, அந்தராயம்‌ எனப்படும்‌
    நான்கு காதி வினைகள்‌ அழிவதால்‌ அனந்த ஞானம்‌, அனந்த காட்சி, அனந்த
    சுகம்‌, அனந்த ஆற்றல்‌ என நான்கும்‌ வெளிப்படும்‌. இந்‌ நான்கும்‌ யாருக்கு
    வெளிப்படுகிறதோ அவர்‌ இறை ஆவார்‌ என்பது கருத்து. தலை மகனை
    இறை என்றார்‌. ‘
    இறை என்ற சொல்‌ ‘இறு’ பகுதியிலிருந்து அமைகிறது. இறு ₹ இறை.
    இறு எனும்‌ பகுதி முரிதல்‌, முடிதல்‌ என்னும்‌ பொருளது. பிறவித்‌
    தொடர்பிலிருந்து முரிந்து தன்‌ தூய நிலையில்‌ முடிந்து நிற்பதால்‌ தலைமகன்‌
    இறை எனப்படுகிறார்‌. வினை முதலான பிறத்‌ தொடர்பிலிருந்து விடுபட்டுத்‌
    தன்‌ தூய நிலையில்‌ முழுமை பெற்ற உயிரே இறை ஆகும்‌ என்பது கருத்து.
    ” இங்கேஇறை என்பது தலைமகனாள தீர்த்தங்கரரைக்‌ குறித்து நின்றது.
    ஏன்‌ எனில்‌ அவருக்கே திவ்விய துவனி தோன்றுகிறது. அந்தத்‌ திவ்விய
    துவனியை ஆதாரமாகக்‌ கொண்டே கணதரர்‌ பன்னிரண்டு அங்கங்கள்‌
    வடிவான பரம ஆகமத்தை அருளுகிறார்‌. அருக நிலை எய்தும்‌
    அனைவருக்கும்‌ திவ்விய துவனி தோன்றும்‌ எனும்‌ முறைமை இல்லை.
    ஊமை (பேசாத கேவலி, அந்தக்ருத கேவலிகளுக்குத்‌ திவ்விய துவனி
    தோன்றுதல்‌ இல்லை. அதனால்‌ இங்கே இறை என்றது தீர்த்தங்கர கேவலியை
    எனக்‌ கொள்க. அவரே அறத்தை நியமமாக உரைக்கிறார்‌.
    பற்றி நிற்றலாவது மனத்துள்‌ கொண்டு ஒழுகுதல்‌. உயிர்கள்‌ உய்ய வேண்டி அறம்‌ உரைக்கப்படுவதால்‌ ‘பந்ற உரைத்தான்‌’ என்றார்‌ “உயிர்கள்‌’ எனச்‌ சொல்‌ வருவிக்க. அறம்‌ என்றது ஈண்டு முத்தி நெறி. அதுவே உயிர்களுக்கு நன்மை செய்வதாம்‌. அறம்‌ வழி அடையப்படுவதனை அறம்‌ என்றார்‌. காரணத்தைக்‌ காரியமாக உபசரித்தார்‌.
    _ விளக்கத்திற்குத்‌ தலைவரம்பாய்‌ நிற்கும்‌ இறைவனது அறிவு நிலையும்‌ உயிர்கள்‌ முக்தி நெறிச்‌ செல்ல உரைத்து அருளும்‌ அவன்‌ அருள்‌ நிலையும்‌ இக்‌ குறளில்‌ கூறப்பட்டுள்ளன.
    அருங்கலச்செப்பு 29
    8 : பசிவேர்ப்பு நீர்வேட்கை பற்றுஆர்வம்‌ செற்றம்‌

கசிவினோடு இல்லான்‌ இறை.
இதுவும்‌ அது.
(ப-ரை பசி – பசியும்‌, வேர்ப்பு – வியர்வையும்‌, நீர்‌ வேட்கை – தாகமும்‌
பற்று – மோகமும்‌, ஆர்வம்‌ – ஆசையும்‌, செற்றம்‌ – வெறுப்பும்‌, கசிவினோடு

  • வருத்தத்தோடு பதினெட்டு குற்றங்களும்‌, இல்லான்‌ – இல்லாதவனே, இறை
    “ தலைமகன்‌ ஆவான்‌, எ -று.
    (க-ரை பசி முதலாகக்‌ கூறப்பட்ட பதினெட்டு குற்றங்களும்‌ இல்லாத
    நிலை அடைந்தவனே இறை ஆவாள்‌ என்பதாம்‌.
    (வி-ரை! அறம்‌ உரைப்பவனை இறை என்றவர்‌ அவ்‌ விறை
    எக்குற்றங்களிலிருந்து நீங்கி உயர்ந்து தலைமகன்‌ ஆனார்‌ என்று இங்குச்‌
    கூறுகிறார்‌. மனிதனே இறைநிலை எய்துகிறான்‌ என்பது ஜிநர்‌ அருளிய
    தத்துவம்‌. மனித நிலையில்‌ காணப்படும்‌ குறைபாடுகள்‌ தலைமகன்‌ ஆன
    நிலையிலும்‌ காணப்படுமோ என்னும்‌ ஐயத்தை நீக்க இக்குறளை
    அமைத்துள்ளார்‌, ஆசிரியர்‌.
    ஆசாரியர்‌ ஸமந்தபத்திரர்‌ தம்‌ ‘ரத்ன கரண்டகத்தில்‌’
    க்ஷுத்பியாஸாஜரா தங்க ஜன்மாந்தக பயல்மயா: |
    ந ராகத்வேஷ மோஹாச்‌ ச யஸ்யாப்த: ஸ ப்ரகீர்த்யதே !!
    என்று பதினோரு குற்றங்களைக்‌ கூறியுள்ளார்‌. ‘
    “பசி, தாகம்‌, முதுமை, நோய்‌, பிறப்பு, இறப்பு, அச்சம்‌, செருக்கு, விருப்ட
    வெறுப்பு, மோகம்‌, சிந்தை, வருத்தம்‌, தூக்கம்‌, வியத்தல்‌, மயக்கம்‌, வேர்வை
    இளைப்பு எனும்‌ பதினெட்டு குற்றங்களும்‌ இல்லாதவரே உண்மையா
    ஆப்தன்‌” என்பதாம்‌. பதினொன்று கூறி பிறவற்றைத்‌ “தழுவிக்‌ கொண்டார்‌
    அருங்கலச்‌ செப்புடையார்‌ ஏழு கூறி எண்‌ ஒடு கொடுத்து பிறவற்றையும்‌
    தழுவிக்‌ கொண்டார்‌. கசிவினோடு என்பதில்‌ ஒடு நீண்டது
    “ஆள்வினையோடு’ எனப்‌ பிறரும்‌ ஆளுதல்‌ காண்க:
    பசி – உண்ணுதல்‌ வேட்கை, தாகம்‌ – நீர்‌ வேட்கை, முதுமை – கிழ
    நிலை,

நோய்‌ – வாத பித்த கபத்து மாறுதலால்‌ தோன்றும்‌ பிணி நிலை. பிறப்ட,

  1. ரத்ன கரண்டக சிராவகாசாரம்‌ 6, 4 திருக்குறள்‌ 622,
    அருங்கலச்செப்பு 30
  • விளை வயத்தால்‌ நான்கு கதிகளிலும்‌ சென்று தோன்றுதல்‌, இறப்பு – பிறப்பு
    முடிதல்‌, ௮ச்சம்‌ – இவ்வுலகு, எதிர்‌ உலகு, காப்பின்மை, திறந்த பெரு வெளி,
    மரணம்‌, வேதனை, தற்செயல்‌ இவை ஏழு காரணமாகத்‌ தோன்றும்‌ பயம்‌,
    செருக்கு – சாதி, குலம்‌ மூதலான காரணமாகப்‌ பிறரைத்‌ தாழ்வாக கருதும்‌
    உணர்வு, விருப்பு (ராகம்‌) – வேண்டிய பொருள்மேல்‌ செல்லும்‌ உணர்வு,
    வெறுப்பு (தவேஷமி – வேண்டாப்‌ பொருள்‌ மேல்‌ செல்லும்‌ உணர்வு, மோகம்‌
  • உடல்‌ முதலான பிற பொருள்மேல்‌ கொள்ளும்‌ தான்‌ என்னும்‌ உணர்வு,
    சிந்தை – விரும்பும்‌ பொருள்‌ நீங்கியபோது அதனை மீண்டும்‌ பெறவும்‌,
    வேண்டாத பொருள்‌ சேர்ந்த போது அதனை நீக்கவும்‌ தோன்றும்‌ மன நிலை,
    கசிவு – வருத்தம்‌; ‘கசிவெனும்‌ கடல்‌ நீந்தி’ – என்று ஆண்டுள்ளமை காண்க.
    வருத்தம்‌ – வேண்டாத பொருள்‌ வந்து சேரும்போது தோன்றும்‌
    மகிழ்ச்சி இன்மை, தூக்கம்‌ – உறக்கம்‌, இது ஐந்து வகைப்படும்‌: நித்ரா, நித்ரா
    நித்ரா, ப்ரசலா, ப்ரசலா ப்ரசலா, ஸ்த்யானக்ருத்தி என; வியத்தல்‌ – வியப்பு
    அடைதல்‌, மயக்கம்‌ – தடுமாறுதல்‌. இப்‌ பதினெட்டுக்‌ குற்றங்களும்‌
    இல்லாதவரே இறை ஆவார்‌.
    இறை நிலை எய்திய நிலையில்‌ பகவான்‌ உடலோடு விளங்குகிறார்‌.
    உடல்‌ இருப்பதால்‌ அவருக்குப்‌ பசி இருக்க வேண்டும்‌ என்று ஐயம்‌
    தோன்றலாம்‌. ஏனெனில்‌ உடல்‌ இருக்க வேண்டும்‌ எனில்‌ அதற்கு உணவு
    இட வேண்டும்‌. உணவு இட வேண்டுமெனில்‌ பசி இருத்தல்‌ வேண்டும்‌.
    இந்த ஐயத்தை இரண்டு நோக்கில்‌ பார்க்கலாம்‌. உணவு என்பது வாய்‌
    வழி உண்ணுதல்‌ மட்டுமா அல்லது வேறு வகையும்‌ உண்டா? வாய்‌ வழி
    உண்ணுதல்‌ மட்டும்‌ என்றால்‌ தேவப்‌ பிறவியர்‌ வாய்வழி உண்பதில்லை;
    என்றாலும்‌ அவர்கள்‌ உடல்‌ கடல்‌ காலங்கள்‌ நிலைபெற்று காணப்படுகிறது. , அதனால்‌ உடல்‌ நிலைபெற்று இருக்க வாய்வழி உண்ணுதல்‌ வேண்டும்‌
    என்பது தேவை இல்லை.
    வேறு வகை இல்லை என்றால்‌, உயிர்‌ ஸயோக கேவலி நிலை வரை ‘ஆஹாரக்‌’ என்ற நூல்‌ முடிவு மாறுபட்டுப்‌ போகும்‌. அதனால்‌ வேறு வகை உண்டு என்று கொள்ள வேண்டும்‌.
    தேவர்களுக்கு ‘மானசிக’ (அமிழ்து) உண்டு எனலாம்‌. அதுபோல கேவலிக்கும்‌ கர்ம, நோகர்ம ஆஹாரம்‌ உண்டு எனக்‌ கொள்ளலாமே. அதனால்‌ உடல்‌ நிலைபெற்று இருக்க முடியுமே.
    அருங்கலச்செப்பு a
    பகவானுடைய உடல்‌ நம்‌ உடல்‌ போன்றது. நம்‌ உடல்‌ உணவு
    இல்லாமல்‌ இருக்க முடியாதது போல அவர்‌ உடலும்‌ இருக்க முடியாது
    அல்லவா? என்று கேட்கலாம்‌.
    உணவு நோக்கில்‌ இரண்டு உடலையும்‌ ஒப்பிட்டால்‌, பகவான்‌ உடலில்‌
    வேர்வை முதலியன இல்லை. அதே போன்று நம்‌ உடலிலும்‌ அவை இருத்தல்‌
    கூடாது என்று ஒப்பிடலாம்‌ அல்லவா?
    வேர்வை முதலானவை இல்லாமை அவ்வுடலின்‌ அதிசயம்‌ என்றால்‌
    உணவு உட்கொள்ளாமையும்‌ அதன்‌ அதிசயம்‌ என்று கொள்ளலாமே. உடல்‌
    ஒப்புமை கொண்டு பகவான்‌ உணவு உண்ணுதல்‌ வேண்டும்‌ எனறால்‌ பல
    குறைபாடுகள்‌ வரும்‌.
    நம்முடைய ஞானம்‌ பொறி வழிப்பட்டது. பிறகு பகவானுடைய
    ஞானமும்‌ பொறி வழிப்பட்டது என்று கொள்ள வேண்டி வரும்‌. அப்படிக்‌
    கொண்டால்‌ பகவானுக்கு கேவல ஞானம்‌ இருக்க முடியாது. அதனைக்‌ கை
    கழுவ வேண்டியதுதான்‌. அதனால்‌ ஞானத்தில்‌ வேறுபாடு காணப்படுதல்‌
    போல உடல்‌ நிலையிலும்‌ வேறுபாடு காண வேண்டும்‌.
    அதனால்‌, அரஹந்த பகவான்‌ பசி முதலான குற்றங்கள்‌
    இல்லாதவராகவே உள்ளார்‌ என்று கொள்ள வேண்டும்‌. அப்போதுதான்‌ அவர்‌
    வீதராகி எனப்படுவார்‌. கேவல ஞானம்‌ தோன்றியவுடன்‌ ஒளதாரிக உடல்‌ பரம
    ஒளதாரிக உடலாக மாறிப்போகிறது. அவ்வுடலிலிருந்து திரச, பாதர நிகோத
    உயிர்கள்‌ விலகிப்‌ போகின்றன. அதில்‌ முதுமை தோன்றுவதில்லை. அஸாதா
    வேதனீய வினையின்‌ தீவிர உதயம்‌ இல்லாமையால்‌ பசி முதலாள துன்பம்‌
    தோன்றுவதில்லை. மோகனீய வினை இல்லாமையால்‌ விருப்பு வெறுப்பு
    மோகம்‌ அச்சம்‌ முதலானவை இல்லை. காட்சி மறைப்பு வினை அழிவதால்‌
    தூக்கம்‌ வருவதில்லை. எதிர்‌ பிறவி ஆயு கட்டாமையால்‌ பிறப்பு இல்லை;
    இறப்பும்‌ இல்லை – நிர்வாணம்‌ ஏற்படுகிறது. அவருக்குப்‌ பசி முதலாயின
    இல்லாமையால்‌ வாயால்‌ உணவு உட்கொள்ளல்‌ தேவை இல்லை. வாய்‌ உணவு
    இல்லை என்றாலும்‌, லாப அந்தராய விளை அழிந்து விட்டதால்‌
    சமயந்தோறும்‌ சுப, நுண்ணிய அனந்த புற்கல பரமாணுக்கள்‌ கிடைத்துக்‌ .
    கொண்டே இருக்கின்றன. அதனால்‌ அவருடைய பரம்‌ ஒளதாரிக உடல்‌
    கொஞ்சம்‌ குறைந்த கோடி ஆண்டுகள்‌ கூட இருக்க முடியும்‌.
    அருங்கலச்செப்பு 32
    உணவு ஆறு வகைப்படும்‌ என்று ஆகமங்கள்‌ கூறுகின்றன. அவை:
  1. நோகர்ம உணவு, 2. கர்ம உணவு, 3. வாய்‌ உணவு, 4. பூசுதல்‌ உணவு,
  2. வெப்ப உணவு, 6. மானசிக உணவு.
    அருக பரமேட்டிக்கு நோகர்ம உணவு, நாரகியருக்கு கர்ம உணவு,
    தேவர்களுக்கு மாளசிக உணவு, மனிதர்‌ விலங்குகளுக்கு வாய்‌ உணவு,
    மூட்டை இடும்‌ பறவைக்கு வெப்ப உணவு துடைகாத்தல்‌, மரம்‌ முதலான
    தாவரங்களுக்குப்‌ பூச்சுணவு அமைகின்றன என்பர்‌.
  3. கடையில்நுறிவு இன்பம்‌ வீரியம்‌ காட்சி
    உடையான்‌ உலகுக்கு இறை.
    இதுவும்‌ அது.
    (ப-ரை கடையில்‌ – வரம்பு இல்லாத, அறிவு – அறிவும்‌, இன்பம்‌ –
    ஆனந்தமும்‌, வீரியம்‌ – வீரியமும்‌, காட்சி – தரிசனமும்‌, உடையான்‌ –
    உடையவன்‌ ஆயினான்‌, உலகுக்கு – உலகத்திற்கு, இறை – தலைமகன்‌
    ஆவான்‌, எ-று.
    க-ரை அனந்த ஞானம்‌, அனந்த ஆனந்தம்‌, அனந்த வீரியம்‌, அனந்த தரிசனம்‌ எய்தி நின்றவன்‌ உலகுக்குத்‌ தலைமகன்‌ என்பதாம்‌.
    (வி-றை ‘கடையில்‌’ என்பதனை இன்பம்‌, வீரியம்‌, காட்சியோடும்‌ கூட்டுக. அறம்‌ உரைப்பவன்‌ இறை எனறவர்‌ அவ்‌ அறம்‌ உரைத்தற்கு உள்ள தகுதிப்பாட்டை இக்குறளில்‌ கூறியுள்ளார்‌. எட்டு வினைகளில்‌ ஞான மறைப்பு வினை, காட்சி மறைப்பு வினை, மோகனீய விளை. அந்தராய வினை எனும்‌ நான்கு காதி வினைகளைக்‌ கெடுத்து அனந்த ஞானம்‌ முதலான நான்கையும்‌ அடைகிறார்‌. இந்‌ நான்கையும்‌ ‘அனந்த நான்மை’, ‘அனந்த சதுஷ்டயம்‌’ என்பர்‌.
  4. தெறித்த பறையின்‌ இராகாதி இன்றி
    உரைத்தான்‌ இறைவன்‌ அறம்‌.
    இதுவும்‌ அது.
    (ப-ரை தெறித்த – அடிக்கப்பட்ட, பறையின்‌ – ; ; Uenpuiler பறைபோல, இராகாதி இன்றி – விருப்பு முதலானவை இல்லாமல்‌, அறம்‌ – அறத்தை, உரைத்தான்‌ –
    அருங்கலச்செப்பு 33 அருளினவள்‌, இறைவன்‌ – தலைமகனாம்‌.
    எ- று.
    (க-றை பறை ஒலித்தல்‌ போல விருப்பு முதலான உணர்வு ஏதுமின்றி அறம்‌ உரைத்தவன்‌ இறைவன்‌ என்பதாம்‌.
    (வி-ரை! அறம்‌ உரைப்பவன்‌ இறை என்றவர்‌ அவ்‌ அறம்‌ எப்படி உரைக்கப்படுகிறது என்று இங்கே கூறியுள்ளார்‌. இறைவன்‌ அறம்‌ உரைத்தலில்‌ சொல்ல வேண்டும்‌ என்ற விருப்பம்‌ முதலாயின இல்லாமல்‌
    சொன்னான்‌ என்பதற்குப்‌ பறை ஒலித்தலை உவமை காட்டியுள்ளார்‌.
    விருப்பம்‌ இன்றி மொழி தோன்றாது என்பார்க்கு நீலகேசி உரை காரர்‌ கூறும்‌
    விளக்கம்‌ இங்கு எண்ணத்‌ தக்கது.
    “நெருப்பினால்‌ ஆவதான புகையும்‌, மழையினால்‌ ஆவதான
    வெள்ளமும்‌, நெருப்பும்‌ மழையும்‌ பெருகின வழிப்‌ பெருகி அவை சுருங்கின வழிச்‌ சுருங்குமாறு போல, ராகாதி மிகவுடையார்‌ பக்கம்‌ வசனம்‌
    வெளிப்படுதல்‌ மிக்கும்‌, குறையுடையார்‌ பக்கம்‌ வசனம்‌ வெளிப்படுதல்‌
    குறையவும்‌ வேண்டும்‌: ஆதற்கண்‌ வியாசாதியும்‌ சாலி புத்திராதிகளும்‌
    ஊமையாகளலும்‌ தூர்த்தரான வீதி புருஷர்‌ ஸகல சாஸ்திர உரையாசிரியர்கள்‌
    ஆதலும்‌ வேண்டும்‌. ஆதலால்‌ ராகம்‌ முதலானவை வசன
    வெளிப்பாட்டுக்குக்‌ காரணம்‌ அன்று என்பது. அன்று எனினும்‌, சொல்வேன்‌
    என்னும்‌ இச்சை ஒழிய சொல்‌ நிகழ்ச்சி கூடாமையின்‌ பகவானுக்கு இச்சை
    உண்டு எனின்‌, சொல்லுவேன்‌ என்னும்‌ இச்சை ஒழிய கால்தவறி வீழ்தல்‌
    முதலியவைகளில்‌ சொல்‌ நிகழ்வும்‌, ஸகல சாஸ்திரங்கட்கும்‌ பொருள்‌
    சொல்லுவேன்‌ என்னும்‌ இச்சை உண்டாய வழியும்‌ வீதி புருஷர்‌ பக்கல்‌ சொல்‌
    நிகழ்ச்சி இன்மையும்‌ காண்டலின்‌ சொல்வேன்‌ என்னும்‌ இச்சை ஒழியவும்‌
    சொல்‌ நிகழ்ச்சி கூடும்‌ என்பது”
    பவ்வியர்களுடைய புண்ணியத்தாலும்‌ தன்‌ வசன யோகத்தின்‌
    காரணத்தாலும்‌ இறைவனிடம்‌ திவ்யத்வனி தோன்றுகிறது. அதன்‌
    அடிப்படையில்‌ கணதர தேவர்‌ நூல்களை ஆக்குகிறார்‌. இதனால்‌
    பகவானுக்கு எந்தப்‌ பயனும்‌ இல்லை: அவருக்கு ராகமும்‌ இல்லை. ராகமும்‌
    பயன்பாட்டின்‌ இச்சையும்‌ மோகனீய கர்ம உதயத்தால்‌ தோன்றுவன. பத்தாம்‌
    குண ஸ்தானத்தில்‌ மோகனீயம்‌ அழிந்து போகிறது; திவ்யத்வனி 13-ம்‌ குண
  5. நீலகேசி கடவுள்‌ வாழ்த்து ௦.7.
    அருங்கலச்செப்பு 34

ஸ்தானத்தில்‌ தோன்றுகிறது. அதனால்‌ திவ்யத்வனி தோன்றுவதில்‌ ராகமும்‌
இல்லை, பயன்பாட்டின்‌ இச்சையும்‌ இல்லை என்று அறிதல்‌ வேண்டும்‌.

  1. என்றும்‌உண்‌ டாகி இறையால்‌ வெளிப்பட்டு
    நின்றது நூலென்று உணர்‌.
    இது நிறுத்த முறையில்‌ பரம ஆகமத்தின்‌ இயல்பைக்‌ கூறுகிறது.
    (ப-றை என்றும்‌ உண்டாகி – எக்காலத்தும்‌ உளதாகி, இறையால்‌ –
    தலைமகனால்‌, வெளிப்பட்டு-வெளிப்படுத்தப்பட்டு, நின்றது-இருந்தது, நூல்‌
    என்று-பரம்‌ ஆகமம்‌ என்று, உணர்‌-அறிதல்‌ வேண்டும்‌
    (குரை அனாதி அனந்தமாக விளங்கி அவ்வப்போது தலைமகனால்‌
    வெளிப்படுத்தப்படுவது நூல்‌ என்பதாம்‌.
    (வி-ரை பரம ஆகமத்தின்‌ இயல்பைக்‌ கூறத்‌ தொடங்கிய ஆ சிறியர்‌
    முதலில்‌ நூல்‌ ஒரு காலத்தில்‌ தோன்றி ஒரு காலத்தில்‌ அழிவது அன்று என
    அதன்‌ காலம்‌ கடந்து நிற்கும்‌ தன்மையை ‘என்றும்‌ உண்டாகி’ என்பதனால்‌
    பெற வைத்தார்‌. நூல்‌ என்றது பொருளை விளக்கும்‌ பரம ஆகமங்களே
    ஆகும்‌. ஜிநர்‌ அருளியபடி உலகத்துப்‌ பொருள்கள்‌ என்றும்‌ உள்ளனவாகும்‌.
    அவற்றுக்குத்‌ தொடக்கமும்‌ இல்லை; முடிவும்‌ இல்லை: அவை என்றும்‌ இருப்பன ஆகும்‌. பொருள்கள்‌ என்றும்‌ இருப்பன ஆதலால்‌ அவை பற்றிய நூலும்‌ என்றும்‌ இருப்பனவேயாம்‌. அதனால்தான்‌ ‘என்றும்‌ உண்டாகி! ்‌ என்றார்‌.
    இளி அப்பொருள்‌ இயல்பை வெளிப்படுத்துவோன்‌ தலைமகன்‌ ஆவான்‌ என்பார்‌ ‘இறையால்‌’ என்றார்‌. வினையின்‌ நீங்கி விளங்கிய அறிவின்‌, முனைவன்‌ கண்டது முதல்‌ நூல்‌ ஆகும்‌” என்றார்‌ பிறரும்‌. வெளிப்படுத்துதல்‌-கண்டு சொல்லுதல்‌,
    ._. பரதம்‌ ஐராவதம்‌ எனும்‌ இரண்டு நிலப்‌ பிரிவுகளில்‌ கால மாற்றம்‌ உண்டு. அதனால்‌ ஒரு போது போக பூமியாக மறுபோது கரும பூமியுமாக மாறி மாறி நிற்கும்‌ இந்‌ நிலங்கள்‌. கரும பூமியாக மாறி நிற்கும்‌ போது, தீ நல்‌ காலத்தில்‌ தீர்த்தங்கரர்கள்‌ தோன்றி அறம்‌ உரைப்பர்‌,
  2. தொல்காப்பியம்‌
    அருங்கலச்செப்பு 35
    ஆனால்‌ விதேக நிலத்தில்‌ எப்போதும்‌ தீர்த்தங்கரர்‌ அறம்‌ உரைத்துக்‌ கொண்டு இருப்பர்‌. ஏனெனில்‌ அது எப்போதும்‌ கருமபூமி யாகும்‌. காலம்‌ ஆறு வகைப்படும்‌. அவை நன்னற்காலம்‌, நற்காலம்‌, நல்தீக்காலம்‌, தீ நற்காலம்‌, தீக்காலம்‌, தீத்தீக்காலம்‌சமய மாறுடையதாம்‌ பரத ரேவதம்‌’ என்பர்‌
    பரம ஆகமம்‌ மூவகைப்படும்‌ – அங்க ஆகமம்‌, பூர்வ ஆகமம்‌,
    பிரகீர்ணகம்‌ என. அவற்றுள்‌ அங்க ஆகமம்‌ என்பது பன்னிரண்டு பிரிவு
    உடையது. ஆசாரம்‌, சூத்திர கிருதம்‌, ஸ்தானம்‌, ஸமவாயம்‌, வியாக்கியா
    பிரஜ்ஞப்தி, ஞாத்ரு தர்ம கதை, உபாஸக அத்தியயனம்‌, அந்தகிருத தசகம்‌, அநுத்தர உபபாதிக தசகம்‌, பிரச்சன வியாகரணம்‌, விபாக சூத்திரம்‌,
    திருஷ்டிவாதம்‌ எனப்பன்னிரண்டு.
    பூர்வ ஆகமம்‌ பதினான்கு பிரிவுடையது. அவை : உத்பாத பூர்வம்‌,
    அக்ராயணீயம்‌, வீர்யானு பிரவாதம்‌, அஸ்தி நாஸ்தி பிரவாதம்‌,
    ஞானபிரவாதம்‌, ஸத்ய பிரவாதம்‌, ஆத்ம பிரவாதம்‌, கர்ம பிரவாதம்‌,
    பிரத்தியாக்கியான நாம தேயம்‌, வித்யானு பிரவாதம்‌, கல்யாண நாமதேயம்‌,,
    பிராணாவாயம்‌, கிரியா விசாலம்‌, லோகபிந்து சாரம்‌ என:
    பிரகீர்ணகம்‌ பதினாலு பிரிவுடையது. அவை: ஸாமாயிகம்‌ சதுர்விம்சதி
    ஸ்தவம்‌, வந்தனை, பிரதிக்கிரமணம்‌, வைநயிகம்‌, கிருதிகர்மம்‌,
    தசவைகாளிகம்‌, அறுத்தராத்தியயனம்‌, கல்ப்பிய வியவகாரம்‌, கல்ப்யா
    கல்பியம்‌, மஹா கல்ப்பியம்‌, புண்டரீகம்‌, மஹா புண்டரீகம்‌, அசீதிகை,
    இந்‌ நூல்களுள்‌ கூறப்படும்‌ சபாருள்‌:
    ஆசாராங்கம்‌: ஒழுக்கம்‌ கூறும்‌ நூல்‌ இதில்‌ எண்வகை தூய்மை, ஐந்து
    சமிதி, மூன்று குப்தி முதலியன கூறப்பட்டுள்ளன. சூத்திர கிருதம்‌: இதில்‌
    ஞான விநயம்‌, வியவகார ஒழுக்க நடைமுறைகள்‌, முதலிய கூறப்பட்டுள்ளன.
    ஸ்தானம்‌: இதில்‌ ஒன்று-ஒன்று. இரண்டு-இரண்டு என எண்‌ அடிப்படையில்‌
    பொருளை விளக்குதல்‌ கூறப்பட்டுள்ளது. ஸமவாயம்‌ : இதில்‌ எல்லாப்‌
    , பொருள்களையும்‌ பொதுக்‌ கூறு நோக்கில்‌ பொதுமை ஆயமப்பட்டுள்ளது.
    தன்மம்‌, அதன்மம்‌, உலக ஆகாயம்‌, ஓர்‌ உயிர்‌ இவை ஒவ்வொன்றும்‌
    அயங்கியம்‌ பிரதேசம்‌ உடையது என்பதால்‌ பிரதேச பொதுமை உடையன
    என்பது போல வருணனை கூறப்பட்டுள்ளது. வியாக்கியா பிரஜ்ஞப்தி: இதில்‌

உயிர்‌ உண்டா? இல்லையா? என்பது போன்ற 60,000 வினாக்களுக்கு “டை

  1. மேருமந்தர புராணம்‌ 1229.
    அருங்கலச்செப்பு 3
    கூறப்பட்டுள்ளன. ஞாத்ரு தர்ம கதை: இதில்‌ கதைகள்‌ கிளைகதைகள்‌
    கூறப்பட்டுள்ளன. அறம்‌ தொடர்பான கதைகள்‌ இவை. உபாஸக
    அத்தியயனம்‌: இதில்‌ இல்லறத்தார்‌ ஒழுக்கம்‌ சிறப்பாகக்‌ கூறப்பட்டுள்ளது.
    அந்த கிருத தசமம்‌: இதில்‌ ஒவ்வொரு தீர்த்தங்கரர்‌ காலத்திலும்‌ தோன்றும்‌
    பத்து- பத்து அந்த கிருத கேவலிகள்‌ (மிகுந்த உபஸர்கங்களைத்‌ தாங்கி முத்தி
    அடைபவர்‌) வருணனை கூறப்பட்டுள்ளது. அனுத்தர உபபாதிக தசகம்‌:
    இதில்‌ ஒவ்வொரு தீர்த்தங்கரர்‌ காலத்திலும்‌ கொடிய உபஸர்கங்களைப்‌
    பொறுத்து ஐந்து அனுத்தர விமானங்களில்‌ சென்று பிறக்கும்‌ பத்து-பத்து
    முனிவர்கள்‌ வரலாறு கூறப்பட்டுள்ளது. பிரச்சன வியாகரணம்‌ : இதில்‌ யுக்தி
    மற்றும்‌ நய அடிப்படையில்‌ எதிர்‌ வினாக்களுக்கு விடை கூறப்பட்டுள்ளன.
    விபாக சூத்திரம்‌: இதில்‌ புண்ணிய பாப வினைகளின்‌ வருணணை
    கூறப்பட்டுள்ளது திருஷ்டி வாதம்‌: இதில்‌ 363 மதங்களின்‌ கண்டனம்‌
    கூறப்பட்டுள்ளது.
    திருஷ்டிவாதம்‌ பரிகர்மம்‌, சூத்திரம்‌, பிரதமானுயோகம்‌, பூர்வம்‌,
    சூளிகை என ஐந்து பகுப்புகளை உடையது. அதில்‌ பூர்வம்‌ 14 பிரிவுகளை
    “உடையது. அவற்றுள்‌ கூறப்படும்‌ பொருள்‌:
    உத்பாத பூர்வம்‌: இதில்‌ உயிர்‌, புற்கலம்‌ எங்கே எப்போது எப்படித்‌ தோன்றுகின்றன என்ற வருணனை கூறப்பட்டுள்ளது. அக்ராயணியம்‌: இதில்‌
    கிரியா வாதம்‌ முதலானவற்றின்‌ முறைமை மற்றும்‌ தன்‌ சமய நிறுவுதல்‌ கூறப்பட்டுள்ளன. வீர்யானு பிரவாதம்‌: தாழ்‌ நிலையர்‌ மற்றும்‌ கேவலியர்‌ ஆற்றல்‌, சுரேந்திரர்‌ அசுரேந்திரர்‌ முதலானோர்‌ ரித்தி, பேரரசர்‌, பலதேவர்‌, முதலானோர்‌ ஆற்றல்‌ முதலான வருணனை இதில்‌ கூறப்பட்டுள்ளன. அஸ்தி நாஸ்தி பிரவாதம்‌: இதில்‌ நயங்களின்‌ உண்டு இல்லை நோக்கில்‌ ஐந்து அத்தியாயங்களின்‌ வருணனை கூறப்பட்டுள்ளது. ஞான பிரவாதம்‌: இதில்‌ ஐந்து ஞானம்‌ மற்றும்‌ பொறிகளின்‌ வருணனை கூறப்பட்டுள்ளது. ஸத்ய பிரவாதம்‌: இதில்‌ வசன குப்தி, மொழி அமைவு காரணம்‌, மொழி ஆளுதல்‌, பன்னிரண்டு வகை மொழி, பத்து வகை சத்தியம்‌, உரைப்போர்‌ வகை முதலியன கூறப்பட்டுள்ளன. ஆத்ம பிரவாதம்‌: இதில்‌ ஆன்மா மற்றும்‌ ஆறுவகை உயிர்கள்‌ வருணனை உண்டு-இல்லை முதலான பங்கங்களின்‌ அடிப்படையில்‌ கூறப்பட்டுள்ளது. கர்ம பிரவாதம்‌: இதில்‌ வினைகளின்‌ கட்டு உதயம்‌ உபஸமம்‌ முதலான பத்து மற்றும்‌ ஸ்திதி முதலானவற்றின்‌ வருணனை கூறப்பட்டுள்ளது. பிரத்தியாக்கியான நாம தேயம்‌: இதில்‌ விரதம்‌-நியமம்‌, பிரதிகிரமணம்‌, தபம்‌, முதலான மற்றும்‌ முனித்தன்மைக்கான தியாகம்‌ முதலான வருணனை கூறப்பட்டுள்ளது. வித்யானு பிரவாதம்‌: இதில்‌ எல்லா
    அருங்கலச்செப்பு 7
    வித்தைகள்‌, எட்டு பெரு நிமித்தங்கள்‌, ஸமுத்காதம்‌ முதலான வருணனை
    கூறப்பட்டுள்ளது. கல்யாண நாமதேயம்‌: இதில்‌ சூரியன்‌, சந்திரன்‌, கிரஹம்‌,
    நக்ஷத்திரம்‌, தாரகைகளின்‌ இயக்கம்‌, உபபாதஸ்தானம்‌, கதி, வக்ர கதி,
    பறவைகளின்‌ ஒலிகள்‌, தீர்த்தங்கரர்‌, பலதேவர்‌, வாசுதேவர்‌ சக்கரவர்த்தி
    முதலானோர்‌ கர்பத்திற்கு வருதல்‌ முதலான சிறப்புகள்‌ வருணனை
    கூறப்பட்டுள்ளது. பிராணாவாயம்‌: இதில்‌ உடல்‌ மருத்துவம்‌ முதலான எட்டு
    பிரிவுடைய ஆயுர்வேதம்‌, விஷ வித்தை, பிராணாயாம வகை வேறுபாடுகள்‌
    வருணனை கூறப்பட்டுள்ளது. கிரியாவிசாலம்‌: இதில்‌ வரைதல்‌ முதலான 72
    கலைகள்‌, பெண்களின்‌ 64 குணங்கள்‌, சில்பகலை, காவியங்களின்‌ நிறை
    குறைகள்‌, சந்த அமைப்பு முதலான வருணனை கூறப்பட்டுள்ளது. லோக
    பிந்து சாரம்‌: இதில்‌ கணிதக்‌ குறிப்புகள்‌ வருணனை உள்ளது.
    பிரகீர்ணகம்‌ “அங்க பாஹ்யம்‌’ எனப்படும்‌. அவற்றுள்‌ கூறப்படும்‌
    பொருள்‌: ஸாமாயிகம்‌ : இதில்‌ நடுநிலை உணர்வு வருணனை உள்ளது.
    சதுர்விம்ஸதி ஸ்தவம்‌: 24 தீர்த்தங்கரரை வந்திக்கும்‌ முறை, அவர்கள்‌ பெயர்‌,
    உடல்‌ அமைப்பு, உயரம்‌, ஐந்து கல்யாணங்கள்‌, 34 அதிசயங்கள்‌.
    தீர்த்தங்கரரைத்‌ துதிப்பதால்‌ வரும்‌ பயன்‌ முதலான வருணனை உள்ளது.
    வந்தனை: ஒரு ஜிநர்‌ தொடர்பான வந்தனை, அவர்‌ தொடர்பான ஜிநாலய’
    வந்தனை வருணனை இதில்‌ உள்ளது. பிரதிக்கிரமணம்‌: ஏழு வகைப்படும்‌
    பிரதிக்கிரமண விளக்கம்‌ இதில்‌ கூறப்பட்டுள்ளது. பிரதிக்கிரமணம்‌
    நடந்துபோன குறைக்கு நொந்து கழுவாய்‌ தேடுதல்‌,
    வைநயிகம்‌: இதில்‌ ஐந்து வகைப்படும்‌ விநயம்‌
    வருணிக்கப்பட்டுள்ளது. கிருதிகர்மம்‌: அருகர்‌, சித்தர்‌, ஆசாரியர்‌, சாதுகள்‌”
    பூஜை விதிமுறைகள்‌ இதில்‌ கூறப்பட்டுள்ளன. தசவைகாளிகம்‌: இதில்‌
    முனிகளது ஒழுக்கங்கள்‌. ஆஹார ஏற்பு முறை விதிகள்‌ முதலாயின.
    கூறப்பட்டுள்ளன. அனுத்தராத்தியயனம்‌: நான்கு வகை உபஸர்கங்களைப்‌
    பொறுத்தல்‌ எப்படி? 22 பரீஷசங்களைப்‌ பொறுத்தல்‌ எப்படி? இது போன்ற
    பலவகை வினாக்களுக்கு விடை கூறும்‌ நூல்‌ இது. கல்ப்பிய வியவஹாரம்‌:
    இதில்‌ சாதுக்கள்‌ ஒழுக்கம்‌ மற்றும்‌ஒழுக்க குறைபாட்டுக்கான கழுவாய்‌
    கூறப்பட்டுள்ளன. கல்பியாசல்ப்பியம்‌: பெர்ருள்‌, இடம்‌, கால, பாவனை
    நோக்கில்‌ சாதுக்கள்‌ ஏற்கத்தக்கது இது ஏற்கத்தகாதது இது என இதில்‌
    வருணனை உள்ளது. மஹா கல்ப்பியம்‌: காலம்‌ மற்றும்‌ உடல்‌ அமைவு
    நோக்கில்‌ சாதுக்களுக்குத்‌ தக்க பொருள்‌, இடம்‌ பற்றி கூறும்‌ நூல்‌ இது.
    புண்டரீகம்‌: பவனர்‌ முதலான நால்வகை தேவராகப்‌ பிறக்க காரணமான
    அருங்கலச்செப்பு 38
    தானம்‌, பூஜை, தபம்‌ முதலான அனுட்டானங்களை விளக்கும்‌ நூல்‌ இது. மஹா
    புண்டரீகம்‌: எல்லா தேவேந்திரர்‌ பிரதி இந்திரராகப்‌ பிறக்க காரணமான சிறந்த
    ஒழுக்கங்களைக்‌ கூறும்‌ நூல்‌ இது. அசீதிகை: இதில்‌ மனிதர்‌ ஆயுள்‌
    ஆற்றலுக்கு ஏற்ப தோஷங்களுக்கு கழுவாய்‌ வகைகள்‌ கூறப்பட்டுள்ளன.
    இவற்றோடு பத்மம்‌, மஹாபத்மம்‌ இரண்டு சேர்த்து பிரகீர்ணகம்‌ 16
    என்றும்‌ கூறுவர்‌.
  2. மெய்ப்பொருள்‌ காட்டி உயிர்கட்கு அரணாகி
    துக்கம்‌ கெடுப்பது நூல்‌.
    இது ஆகமத்தின்‌ பயன்‌ கூறுகிறது.
    (ப-ரை மெய்ப்பொருள்‌-நிலையான பொருள்கள்‌, காட்டி-இவை என
    அவற்றின்‌ இயல்பைத்‌ தெளியச்‌ செய்து, உயிர்கட்கு-எல்லா உயிர்களுக்கும்‌,
    அரணாகி-நன்மை செய்யும்‌ பாதுகாவலாகி, துக்கம்‌-பிறவியை, கெடுப்பது
    அழியச்‌ செய்வது, நூல்‌-ஆகமம்‌ ஆகும்‌, ௪-று
    (க-ரை! நிலையான பொருள்கள்‌ இயல்பைத்‌ தெளியச்‌ செய்து
    உயிர்களுக்கு நலம்‌ செய்யும்‌ பாதுகாவலாகி, பிறவியை அழியச்‌ செய்வது
    நூல்‌-அதாவது பரம ஆகமம்‌ என்பதாம்‌.
    (வி-ரை ஓரு நூல்‌ ஏற்புடையது என்று உறுதி கொள்ள வேண்டும்‌ என்றால்‌ அந்த நூலை அருளியவர்‌ யார்‌ என்று அறிதல்‌ வேண்டும்‌. ஏனெனில்‌, நூலாசிரியனை ஏற்றால்தான்‌ நூலை ஏற்புடையதாகக்‌ கருத முடியும்‌. நூலுரைப்டோன்‌ எத்தகு இயல்புகள்‌ உடையவன்‌ என்று மூன்னே 5 மூதல்‌ 8 வரையிலான குறள்களில்‌ தெளிவு செய்தார்‌. அத்தகு இயல்புடைய தலைமகனால்‌ அருளப்பட்டது பரம ஆகமம்‌ என்று 9ம்‌ குறளில்‌ கூறினார்‌. இவற்றால்‌ நூல்‌ அருளியவன்‌ ஏற்புடைமையைத்‌ தெளிவு செய்தார்‌. அவனால்‌ அருளுப்படும்‌ நூலே பொருள்களின்‌ உண்மை இயல்பைச்‌ சுட்ட முடியும்‌. அதனால்‌, ‘மெய்ப்பொருள்‌ காட்டி” என்றார்‌. பிற கடவுளர்‌ அவ்வியல்புகளை எய்தாமையால்‌ அவர்‌ கூறுவன நூலாகா எனக்‌ குறிப்பாக உணர்த்தினார்‌. அரண்‌-பாதுகாவல்‌. இங்கே உயிர்க்குப்‌ பாதுகாவல்‌ என்றது உயிர்க்கு நலம்‌ செய்தலை. துக்கம்‌ – பிறவி. பிறவியில்‌ பெறுவது எல்லாம்‌ துக்கம்‌ தவிர வேறொன்றுமில்லை அதனால்‌ பிறவியைத்‌ துக்கம்‌ என்றார்‌.
    அருங்கலவச்செப்பு 39
    i. இந்தியத்தை வென்றான்‌ தொடர்ப்பாட்டோடு ஆரம்பம்‌
    முந்து துறந்தான்‌ முனி.
    நிறுத்த முறையில்‌ இது முனிவர்‌ இயல்பு கூறுகிறது.
    (ப-ரை இந்தியத்தை – புலன்‌ இச்சையை, முந்து – முந்துற,வென்றான்‌
  • வென்று, தொடர்ப்பாட்டோடு – பற்றுகளோடு, ஆரம்பம்‌ – உழவு முதலான
    தொழில்களை, துறந்தான்‌ – துறந்தவன்‌, மூனி -முனி ஆவான்‌, எ-று.
    (க-ரை) புலன்‌ இச்சையை முன்னதாகத்‌ துறந்து பற்றுகளோடு
    தொழிலையும்‌ துறந்தவன்‌ முனி ஆவான்‌ என்பதாம்‌.
    (வி-ரை! தொடர்ப்பாடு – பற்று ‘பற்றே மிகப்‌ பெருக்கிப்‌
    பல்தொடர்ப்பாடே யாக்கி’ என்றார்‌ நீலகேசி நூலுடையார்‌.’ பற்று
    இருவகைப்படும்‌ அகப்பற்று, புறப்பற்று என. மித்யாத்வம்‌, ஸ்த்ரீ வேதம்‌,
    பும்வேதம்‌, நபும்ஸக வேதம்‌, ஹாஸ்யை, ரதி, அரதி, பயம்‌, சோகம்‌,
    ஜுகுப்ஸை, குரோதம்‌, மானம்‌, மாயை, லோபம்‌ எனப்‌ பதினான்கு அகப்பற்று
    ஆகும்‌. க்ஷேத்திரம்‌, வாஸ்து, ஹிரண்யம்‌, ஸ்வர்ணம்‌, தனம்‌. தான்யம்‌, தாசி
    (பெண்‌ ஆள்‌, தாசன்‌ ஆண்‌ ஆள்‌, குப்யம்‌, பாண்டம்‌ எனப்‌ பத்தும்‌ புறப்பற்று
    ஆகும்‌. தனது அல்லாத ஒன்றைத்‌ தனது என்று கற்பனை செய்யும்‌ இச்சை
    பற்றாகும்‌. வெகுளி முதலானவை வினை உதயத்தால்‌ தோன்றுவன. அவை
    ஆன்மாவின்‌ இயல்புகள்‌ அல்ல. அதனால்‌ அவை பற்றி எழும்‌ ‘எனது’
    எனும்‌ இச்சை கற்பனைகள்‌ பற்றாகும்‌. அவை தோன்றுவதற்கு நிமித்தமாக
    அமையும்‌ இடம்‌ முதலான பொருள்களையும்‌ பற்று என்றது உபசாரமாகும்‌.
    பற்றை மிகுவிக்கும்‌ உழவு, வாணிகம்‌ முதலான தொழில்களை
    விடாதவரை பற்றற்ற நிலை தோன்றாது. அதனால்‌ தொழிலை விட வேண்டும்‌.
    புலனாசையை விடாதவரை தொழிலையும்‌ விடமுடியாது அதனால்‌
    புலனாசையை விட வேண்டும்‌ புலனாசை இருக்கும்‌ வரை பொருளாசை
    (தொழிலாசை விடாது: பொருளாசை இருக்கும்‌ வரை பற்றுவிடாது. அதனால்‌,
    முதலில்‌ புலனாசையை விடவேண்டும்‌” முந்து என்ற சொல்‌ முன்னதாக
    விடவேண்டும்‌ என்று கருத்துப்பட நிற்கிறது. அதனால்‌ அதனை
    இந்தியத்தோடு கூட்டி பொருள்‌ காண்க. வென்றான்‌ முற்று எச்சப்‌ பொருளில்‌
    வந்தது.

வென்றான்‌-வென்று எனப்பொருள்‌ கொள்ளப்பட்டது.
1, நீலகேசி, 258. 2. ரத்னகரண்டக சிராவக ஆசாரம்‌ (உரை)/0.
அருங்கலச்செப்ப 40
ஆரம்பம்‌ எனில்‌ தொடங்குதல்‌. இங்கே இம்சைக்கு ஏதுவான உழவு
முதலான தொழில்‌ ஈடுபாடு ஆரம்பம்‌ எனப்பட்டது.

  1. தத்துவ ஞான நிகழ்ச்சியும்‌ சிந்தையும்‌
    உய்த்தல்‌ இருடிகள்‌ மாண்பு.
    இதுவும்‌ அது.
    (ப-றை இருடிகள்‌-முனிவர்கள்‌, மாண்பு-சிறப்பு, தத்துவ ஞானம்‌-
    மெய்ப்பொருள்‌ அறிவும்‌, நிகழ்ச்சியும்‌-தபமும்‌, சிந்தையும்‌-தியானமும்‌,
    உய்த்தல்‌-பெற்று நிற்றலாம்‌ எ-று.
    (க-ரை முனிவர்கள்‌ சிறப்பு மெய்ப்பொருள்‌ ஞானமும்‌, தபமும்‌,
    தியானமும்‌ பெற்று இருத்தல்‌ என்பதாம்‌.
    (வி-ரை முனிவருக்கு முதன்மையான செயல்கள்‌ ஆகமங்களைக்‌
    கொண்டு மெய்ப்பொருள்‌ பற்றிய அறிவை வளர்த்தலும்‌, உபவாசம்‌ முதலான
    பன்னிரண்டு தபங்களலில்‌ நிகழ்தலும்‌, கசாயங்களால்‌ விளையும்‌
    தடுமாற்றங்களை விலக்கித்‌ தரும, சுக்கில தியானங்களில்‌ ஆழ்தலும்‌ ஆகும்‌.
    ஜைன ஆகமத்தில்‌ ஐந்து மகாவிரதம்‌, ஐந்து சமிதி, ஐம்புல அடக்கம்‌, ஆறு
    இன்நியமையாமை, தரையில்‌ படுத்தல்‌ முதலான ஏழு குணம்‌ ஆகிய 28 மூல
    குணங்களோடு விளங்குபவரே நற்‌ குருவாகக்‌ கருதப்படுகிறார்‌. அவரை
    நம்புதலே நற்காட்சியாகும்‌. ‘சேதியின்‌ நெறியின்‌ வேறு சிறந்தது சிந்தை
    செய்யாச்‌ சாதுவர்‌’ என்பார்‌ யசோதர காவிய ஆசிரியர்‌.
    நற்காட்சி என்பது மெய்ப்பொருள்‌ தெளிதல்‌ (3 என்று கூறி, இதுவரை
    அந்த நற்காட்சிக்குப்‌ பொருளான உண்மையான தேவ நூல்‌, முனி இயல்பைப்‌ பொதுவாகக்‌ கூறினார்‌.
    நற்காட்டு உறுப்புகள்‌
  2. எட்டு வகைஉறுப்பிற்‌ றாகி இயன்றது
    சுட்டிய நற்காட்சி தான்‌.
    இது நற்காட்சியின்‌ உறுப்புகள்‌ இத்தனை எனக்‌ கூறுகிறது.
    ல. யசோதர காவியம்‌, 56
    அருங்கலச்செப்பு 4
    (ப-றை! சுட்டிய-மேலே எடுத்துக்‌ காட்டப்பட்ட, நற்காட்சிதான்‌-
    நற்காட்சி, எட்டுவகை-எட்டு கூறுபடும்‌, உறுப்பிற்றாகி-உறுப்புகளை
    உடையதாகி, இயன்றது-அமைந்தது ஆகும்‌ எ-று.
    (க-ரை மேலே எடுத்துக்‌ கூறப்பட்ட நற்காட்சி எட்டு உறுப்புகளோடு
    கூடி. அமைந்துள்ளது என்பதாம்‌.
  3. ஐயம்‌ அவாவே உவர்ப்பு மயக்கின்மை
    பெய்பெற இன்னவை நான்கு
    இது நற்காட்சி உறுப்புகள்‌ பெயரைக்‌ கூறுகிறது.
    (ப-ரை ஐயம்‌-ஐயப்பாடும்‌, அவா-விருப்பும்‌, உவர்ப்பு-அருவருப்பும்‌,
    மயக்கம்‌-மயக்கமும்‌, இன்மை-இல்லாமை, இன்னவை-ஆகிய இவை,
    மெய்பெற – உண்மையாக, நான்கு-நான்கு ஆகும்‌. எ-று.
    (க-ரை! ஐயம்‌ இல்லாமை, விருப்பம்‌ இல்லாமை, அருவருப்பு
    இல்லாமை, மயக்கம்‌ இல்லாமை-இவை நான்கு உறுப்புகள்‌
  4. அறப்பழி நீக்கல்‌, அழிந்தாரைத்‌ தாங்கல்‌
    அறத்துக்கு அளவளா மூன்று.
    இதுவும்‌ அது.
    (ப-ரை! அறப்பழி நீக்கல்‌-அறத்துளாருக்கு ஏற்பட்ட பதியை நீக்குதல்‌,
    அழிந்தாரை-அறத்தின்‌ வழுவினாரை, தாங்கல்‌ – மீண்டும்‌ நிலைபெறச்‌
    செய்தல்‌, அறத்துக்கு அளவளா-அறவழிப்படுவோரிடத்து அன்பு கூர்தல்‌,
    மூன்று-என மூன்றாகும்‌ எ-று.
    (க-றை அறத்துளார்‌ பழியை நீக்குதல்‌, அறத்தின்‌ இழிந்தாரை மீண்டும்‌
    நிறுத்துதல்‌. அறவழிப்படுவோரிடத்து அன்புமிக கொள்ளல்‌ என இவை
    மூன்று உறுப்புகள்‌.
    16 அறத்தை விளக்கலோடு எட்டாகும்‌ என்ப
    திறம்பட உள்ள உறுப்பு.
    அருங்கலச்செம்பு 42
    இதுவும்‌ அது.
    (ப-ரை! அறத்தை-ஜிந அறத்தின்‌ சிறப்பை, விளக்கலோடு-விளங்கச்‌
    செய்தலோடு, திறம்பட-நற்காட்சி வலிவுபெற, உள்ள-இருக்கின்ற, உறுப்பு-
    உறுப்புகள்‌, எட்டாகும்‌-எட்டு ஆகும்‌, என்ப-என்று சொல்லுவர்‌ நூலறிந்தார்‌
    எ-று.
    (க-ரை ஜிந அறச்‌ சிறப்பை விளங்கச்‌ செய்தலோடு நற்காட்சி
    வலிவுபெற உள்ள உறுப்புகள்‌ எட்டாகும்‌ என்பர்‌ என்பதாம்‌.
    (வி-ரை) இம்‌ மூன்று (04,1516) குறளில்‌ எட்டு உறுப்புகளின்‌
    பெயர்களைக்‌ கூறினார்‌. இவற்றின்‌ விளக்கத்தை மேலே கூறுவார்‌. ‘ரத்ன
    கரண்டக சிராவக ஆசாரத்தில்‌ இப்படிப்‌ பெயர்களைச்‌ சுட்டும்‌ சுலோகங்கள்‌
    இல்லை. இந்‌ நூலின்‌ தனிப்‌ போக்கினை இது காட்டுகிறது.
    ஐயற்றல்‌ வேட்கை உவர்ப்பே மயக்‌ கியாது மின்மை
    செய்குற்ற நீக்க திரிந்தாரை நிறுத்த லின்றிப்‌
    பொய்யற்ற காதல்‌ பொருவில்லறம்‌ காட்டல்‌ எட்டும்‌
    கையுற்ற வாயில்‌ லதுகாட்சியின்‌ மாட்சி யாமே.
    என்பார்‌ நீலகேசி நூலுடையார்‌.’ (ex
    17 மெய்ந்நெறிக்கண்‌ உள்ளம்‌ துளக்கின்மை காட்சிக்கண்‌
    ஐயம்‌ இலாத உறுப்பு.
    இது ஐயம்‌ இன்மை உறுப்பு இலக்கணம்‌ கூறுகிறது.
    1ப-றை காட்சிக்கண்‌ – நற்காட்சியது, ஐயம்‌ இலாத – ஐயம்‌ இலாத உறுப்பு – உறுப்பாவது, மெய்ந்நெறிக்கண்‌ – உண்மை நெறியிடத்து உள்ளம்‌ – மனம்‌, துளக்கு – சலிப்பு, இன்மை – இல்லாமை ஆகும்‌.௪-று.
    (க-ரை நற்காட்சியது ஐயம்‌ இலாத உறுப்பு என்பது உண்மை நெறியிடத்து மனம்‌ சலியாது நிலைத்து இருத்தல்‌ என்பதாம்‌.
    4.நீலகேசி, 123.
    அருங்கலச்செப்பு 43
    (வி-ரை மெய்ந்நெறி – உண்மை நெறி, அதாவது பிறவிக்‌ கடலைக்‌
    கடப்பதற்கு நல்லோரால்‌ நாடப்பட்ட வழி, ‘நல்லோர்கள்‌ போய வழி’ என்ற
    ஆட்சி காண்க.’ இந்‌ நூலாசிரியர்‌ தலைமகன்‌ நூல்‌ முனியை மெய்ப்பொருள்‌
    என்றமையால்‌ (அ.செ.3 அவர்கள்‌ வழி மெய்ந்நெறி எனலாம்‌. அல்லது
    நற்காட்சி நல்‌ ஞானம்‌, நல்லொழுக்கம்‌ கூடிய முத்தி நெறி மெய்ந்நெறி
    எனலாம்‌ *. இந்நெறியில்‌ நம்பிக்கை வைத்து உள்ளம்‌ சலியாது-
    தளர்ச்சியடையாது நிற்றல்‌ வேண்டும்‌. அந்த நிலையே ஐயம்‌ இல்லாத
    நிலையாகும்‌. துளக்கு இன்மை- சலிப்பு இல்லாமை அதாவது உறுதியாக
    இருத்தல்‌. ‘துளக்கற்ற காட்சியவர்‌’ £ ‘துளக்கற வென்றுயர்ந்தோயை * எனப்‌
    பிறரும்‌ ஆளுதல்‌ காண்க…
    நேரே காணக்கூடிய, உய்த்துணரக்‌ கூடிய பொருள்களில்‌ ஐயம்‌
    தோன்ற வாய்ப்பில்லை. ஆனால்‌, நுட்பமான, காலத்தாலும்‌ இடத்தாலும்‌
    தொலைவான, மறைவான பொருள்கள்‌ பற்றி ஐயம்‌ தோன்றக்கூடும்‌. ஆனால்‌
    நற்காட்சியாளன்‌ அப்‌ பொருள்கள்‌ பற்றி ஐயம்‌ கொள்ளுதல்‌ இல்லை. அவை
    ஆகமத்தில்‌ கூறப்பட்டவை-வீதராக பகவான்‌ ஆணை என்று நம்பி
    இருப்பான்‌. இந்த உறுதியான நம்பிக்கைதான்‌ ஐயம்‌ இலாத உறுப்பு.
    துளக்கு-துளங்கு என்னும்‌ முதனிலை திரிந்த தொழிற்பெயர்‌.
    துளங்குதல்‌-சலித்தல்‌. ‘துளங்காது தூக்கம்‌ கடிந்து செயல்‌’ என்பது காண்க.
  5. தடுமாற்ற இன்பக்கு இவறாமை ஆகும்‌
    வடுமாற்று அவா இன்மை நற்கு.
    இது அவா இன்மை உறுப்பு இலக்கணம்‌ கூறுகிறது.
    (பொ-ள்‌! வடு-நற்காட்சியது வடுவை, மாற்று-மாற்றும்‌, அவா இன்மை-
    ஆசை இன்மையாவது, நற்கு-நன்றாக, தடுமாற்றம்‌ – பிறவியது, இன்பக்கு-
    சுகத்திற்கு, இவறாமை-பற்றுள்ளம்‌ கொள்ளாமை,

ஆகும்‌-ஆகும்‌, எ-று,

  1. மேருமந்தர புராணம்‌, 4; 2, தத்வார்த்த சூத்திரம்‌, ௬4 4. திருக்குறள்‌, 699;
    4, மேருமந்தர புராணம்‌, 69; 5, திருக்குறள்‌, 668.
    அருங்கலச்செப்பு

44
(க-ரை நற்காட்சியது அவாஇன்மை உறுப்பாவது பிறவி சுகத்திற்கு
பற்றுள்ளம்‌ கொள்ளாமை என்பதாம்‌.
(வி-ரை! வடு-பழி. ஆசை நற்காட்சிக்குப்‌ பழி ஆகும்‌.
அப்பழியை மாற்றுவது ஆசை இன்மை என்பதால்‌ அதனை வடு மாற்று
என்றார்‌. நற்காட்சி அதிகார முறைமையால்‌ கொள்ளப்பட்டது.
தடுமாற்றம்‌-மயக்கத்தால்‌ தள்ளாடுதல்‌. உயிர்கள்‌ மயக்கத்தால்‌
பிறவிகளில்‌ தடுமாறுகின்றன. அதனால்‌ பிறவியைத்‌ தடுமாற்றம்‌
என்றார்‌. ‘வீட்டது மாற்றது’ என்பார்‌ மேருமந்தர புராணத்தார்‌.’
இவறுதல்‌-உலோபம்‌: அதனை பற்றுள்ளம்‌ என்பர்‌. ‘ஈயாது இவறும்‌’
என்ற இடத்து அப்பொருள்‌ கூறுதல்‌ காண்க” பொருள்களைப்‌ பெற
வேண்டும்‌ என்று மேன்மேல்‌ நிகழும்‌ ஆசையை அவா என்பர்‌.
நற்காட்சியுடையார்‌ எந்த உலகியல்‌ சுகத்திற்கும்‌ ஆசைகொள்ளுதல்‌
கூடாது. ஏனெனில்‌, நற்காட்சியாளன்‌, ‘விரும்பப்படும்‌ இச்சுகங்கள்‌ என்‌
கட்டுப்பாட்டில்‌ இல்லை; இவை வினையின்‌ விளைவாகும்‌. வினையின்‌
உதயத்திற்கு ஏற்ப இவை மிகுகின்றன, குறைகின்றன; இவை அழியக்‌ கூடியன; மாமன்னர்களின்‌ சுகமும்‌ இந்திரர்களின்‌ சுகமும்‌ சிறப்பாகப்‌
பேசப்படுகின்றன. அவையும்‌ ஒரு காலத்தில்‌ அழிந்து போகின்றன. இந்தப்‌
பிறவிச்‌ சுகத்தின்‌ அடியில்‌ உடல்‌, மனத்‌ துன்பங்கள்‌ கலந்துள்ளன. மேலும்‌
பாப வினை கட்குக்குக்‌ காரணமாகின்றன.” அதனால்‌ இவற்றை
நிலையற்றதாகக்‌ கருதி ஆசை கொள்ளாது இருத்தல்‌ வேண்டும்‌. என்‌
கட்டுப்பாட்டில்‌ இல்லாததை விரும்புதல்‌ எங்கே? என்‌ குறி நிலையான முக்தி
இன்பமாகும்‌. அதனால்‌ பிறவிச்‌ சுக பேராசையிலிருந்து விலதி இருத்தல்‌
வேண்டும்‌.” என்று எண்ணி தன்‌ அவா இன்மை குணத்தை விளங்கச்‌
செய்கிறான்‌.
19 பழிப்பில்‌ அருங்கலம்‌ பெய்த உடம்புஎன்று
இழிப்பு இன்மை மூன்றாம்‌ உறுப்பு.

இது உவர்ப்பு இன்மை உறுப்பின்‌ இலக்கணம்‌ கூறுகிறது.

  1. ‘மேருமந்தர புராணம்‌; 69, 2. திருக்குறள்‌, 1002;
    ல. பிரவசன சாரம்‌, 76; 4. புருஷார்த்த சித்தி, 24.
    அருங்கலச்செப்பு 45
    (பொ-ள்‌! அருங்கலம்‌-மும்மணி, பெய்த-பெய்யப்பெற்ற, பழிப்பில்‌-
    பழித்தல்‌ இல்லாத, உடம்பு-உடம்பாகும்‌, என்று-என்று, இழிப்பு இன்மை-
    அருவருப்பு இல்லாமை, மூன்றாம்‌ உறுப்பு-நற்காட்சியது மூன்றாம்‌ உறுப்பு
    ஆகும்‌, எ-று.
    (க-ரை! மும்மணி பெய்த பழிப்பு இல்லாத உடம்பு என்று அதன்மீது
    அருவருப்பு இல்லாமை மூன்றாம்‌ உறுப்பு ஆகும்‌ என்பதாம்‌.
    (வி-ரை! அருங்கலம்‌-அரிய அணிகள்‌, இங்கே உயிருக்கு அரிய
    அணிகளாக விளங்கும்‌ நற்காட்சி, நல்ஞானம்‌, நல்லொழுக்கங்களைக்‌ குறித்து
    நின்றது. ‘அருங்கல மும்மை’ என்றார்‌ யசோதர காவிய நூலாசிரியர்‌. |
    மனித உடம்பு இயல்பாகவே அழுக்குடையது; பெற்றோருடைய
    விந்து-சூலில்‌ தோன்றியது. ஆனால்‌, அந்த அழுக்கு உடல்‌ உள்ளே உள்ள
    மும்மணி வடிவ உயிரால்‌ புனித மாகிறது; பூசைக்கு உரியதாகிறது.
    “இந்த மனித உடல்‌ மும்மணிக்கு ஆதாரமாக மோக்ஷத்திற்குக்‌
    கருவியாக உள்ளது. தேவர்‌ முதலான பிறர்‌ உடல்‌ மோக்ஷத்திற்குக்‌ கருவியாக
    இல்லை “ என்று போற்றும்‌ போது அருவருப்பு தோன்றுவதில்லை.
    அருவருப்பு ஒன்பது நோகசாயங்களில்‌ ஒன்றாகும்‌. இதன்‌ உதயத்தால்‌
    அருவருப்புத்‌ தோன்றுகிறது. நற்காட்சியாளன்‌ புறத்‌ தோற்றத்தைப்‌
    பார்க்காமல்‌ உள்‌ தோற்றத்தையே பார்ப்பதால்‌ அருவருப்பிலிருந்து
    விடுபட்டு உவர்ப்பின்மை குணம்‌ உடையவன்‌ ஆகிறான்‌
    தன்னைத்‌ தானே குணங்களால்‌ புகழுக்குரியவனாகக்‌ கருதிக்கொண்டு
    பிறர்‌ குணங்களில்‌ தாழ்ச்சி காண்பவனுக்கு அருவருப்பு தோன்றுகிறது.
    அத்தகைய புத்தி இல்லாதவனுக்கு உவர்ப்பு இன்மை குணம்‌ அமைகிறது. ‘நான்‌
    செல்வ செழிப்புடையவன்‌ ; இவன்‌ ஏழை: எனக்கு நேர்‌ அன்று முதலானவற்றை
    நற்காட்சியாளன்‌ கருதுவதில்லை. மாறாக வினை உதயத்தால்‌ தோன்றும்‌ ஸ்தாவர
    திரஸ உயிர்கள்‌ எல்லாம்‌ ஒத்தனவே என்று கருதுகிறான்‌”
  2. பாவ நெறியாரைச்‌ சேர்ந்த மதிப்பின்மை
    மோவம்‌ இலாத உறுப்பு.
  3. யசோதர காவியம்‌, 209; 2. புருஷார்த்த சித்தி 55, 3. வாட்டி ஸம்ஹிதா, அதி. 4
    00-105.
    அருங்கலச்செப்பு 46
    இது மயக்கின்மை உறுப்பு இலக்கணம்‌ கூறுகிறது.
    (பொ-ள்‌! மோவம்‌ இலாத-நற்காட்சியது மயக்கு இல்லாத, உறுப்பு-
    உறுப்பாவது, பாவ-பாபத்திற்குக்‌ காரணமான, நெறியாரை-நெறிவழிச்‌
    செல்பவரை, சேர்ந்த – சேர்ந்த, மதிப்பின்மை – மதித்தல்‌ இல்லாமை ஆகும்‌.
    எ-று.
    (க-ரை நற்காட்சியது மயக்கு இன்மை உறுப்பு என்பது பாபத்திற்குக்‌
    காரணமான நெறிவழிச்‌ செல்பவரை மதித்தல்‌ செய்யாமை என்பதாம்‌.
    (வி-ரை பாவ நெறி உயிரைப்‌ பிறவியில்‌ உழலச்செய்யும்‌ ‘மித்யா’ நெறி,
    மதிப்பின்மை-அந்‌ நெறியில்‌ உள்ளாரை நன்கு மதித்தலும்‌ கலத்தலும்‌
    புகழ்தலும்‌ செய்தல்‌ என்னும்‌ மயக்கம்‌ இல்லாமை. மோவம்‌-மோஹம்‌
    என்பதின்‌ திரிபு, ‘மோழை மோவத்தினுக்கு’ என்பது மேருமந்தரம்‌.’ கள்‌
    குடித்தவன்‌ போதைத்‌ தெளியாது மயங்கி இருத்தல்‌ போல தத்துவம்‌
    அதத்துவம்‌ பற்றிய தெளிவு இல்லாத மூடம்‌ மோவம்‌ ஆகும்‌.”
    உலகத்தில்‌ வியப்படையத்தக்க நிகழ்வுகளைக்‌ காட்டும்‌ பாப
    நெறியாரது செழுமை அல்லது ஜாலம்‌ கண்டு இந்த நெறி நல்லது, இந்த
    நெறியுடையார்‌ நல்லர்‌ என்று அவரோடு உறவாடுதலும்‌ அவரைப்‌ புகழ்தலும்‌,
    மனத்தில்‌ நன்கு மதித்தலும்‌ மயக்கம்‌ ஆகும்‌. நற்காட்சியாளர்‌ அப்படிச்‌
    செய்யார்‌. அவர்‌ ஒவ்வொன்றையும்‌ விழிப்போடும்‌ விவேகத்தோடும்‌
    அணுகுவர்‌.
    பாப நெறியில்‌ இருப்பவர்‌ செழுமையோடு பூரித்தலைப்‌ பார்க்கும்‌
    போது “இது முள்‌ செய்த புண்ணிய வினையின்‌ பயன்‌; இப்போது உள்ள பாப நெறியின்‌ விளைவு அன்று; தற்கால பாவ நெறியின்‌ பயன்‌ எதிர்‌ காலத்தில்‌ வரும்போது துன்புறுவார்‌ என்றும்‌; நல்ல நெறியில்‌ செல்பவர்‌ துன்பம்‌ அடைந்தால்‌ நல்ல நெறியில்‌ செல்லுதல்‌ வீண்‌ என்று எண்ணாது முன்‌ செய்த பாப வினையின்‌ விளைவு இது’ என்றும்‌ நற்காட்சியாளன்‌ எண்ணுவான்‌.

உண்மை நெறி சுக வடிவமாகும்‌,

துன்பம்‌ தருவது அன்று”

  1. மேருமந்தர புராணம்‌ 103; 2. திரவ்ய சங்கிரகம்‌ உரை, 48; 4. புருஷார்த்த சித்தி, 26.
    அருங்கலச்செப்பு 47
    21 அறத்துக்கு அலர்களைதல்‌ எவ்வகை யானும்‌
    திறத்தின்‌ உவகூ வனம்‌.

இது அறப்பழி நீக்கல்‌ உறுப்பு இலக்கணம்‌ கூறுகிறது.
(ப-ரை) அறத்துக்கு – மெய்ந்நெறிக்கு, அலர்‌-வரும்‌ பழியை,
எவ்வகையானும்‌-ஏதேனும்‌ ஒரு வகையானும்‌, களைதல்‌-நீக்குதல்‌,
திறத்தின்‌-நற்காட்சியது கூறுபாடாகிய, உவகூவனம்‌-அறப்பழி நீக்கல்‌
உறுப்பாம்‌. எ-று.
(க-ரை மெய்ந்நெறிக்கு வரும்‌ பழியை ஏதேனும்‌ ஒரு வகையில்‌
நீக்குதல்‌ நற்காட்சியது உவகூவனம்‌ எனும்‌ உறுப்பு என்பதாம்‌.
(வி-ரை! ‘மெய்ந்நெறி’ என ஆசிரியரே ஆண்டுள்ளமையால்‌
(அ.செ.17) இங்கு அறம்‌ என்பதற்கு அதுவே பொருளாகக்‌
கொள்ளப்பட்டது. அறியாமையுடையோர்‌ அல்லது நோற்க ஆற்றல்‌
குறைந்தோர்‌ முதலானவர்களால்‌ மெய்ந்நெறிக்குக்‌ குறை நேரலாம்‌. அந்த
நிலையில்‌ நற்காட்சியாளன்‌ அந்தக்‌ குறையை ஏதேனும்‌ ஒரு வழியில்‌
நீக்குவான்‌. நீக்க இயலாத போது அக்‌ குறையைப்‌ பிறரிடம்‌ பேசாது
ஒழிவான்‌. அதனை உவகூவனம்‌ என்பர்‌. உவகூவனம்‌ “ உபகூஹனம்‌.
ஈண்டு ஆசிரியர்‌ ‘அலர்‌’ என்ற சொல்லை ஆண்டுள்ளார்‌. அலர்‌
எனில்‌ பலர்‌ அறிய பழி கூறுதல்‌-புறம்‌ கூறுதல்‌, ‘அலர்‌ மன்னும்‌
திங்களைப்‌ பாம்பு கொண்டற்று’ எனத்‌ தேவர்‌ ஆண்டுள்ளமை காண்க.
அறம்‌ மற்றும்‌ அறமுடையாரைப்‌ பழிக்காது விலகி இருப்பான்‌
நற்காட்சியாளன்‌. எந்தச்‌ சூழ்நிலையிலும்‌ பிறரைப்‌ பிறவியில்‌ ஆழ்த்தும்‌
கருத்தை அவன்‌ கூறான்‌. நெறியில்‌ குறை காணப்பட்டால்‌ அக்‌
குறையைத்‌ தனியாக அன்போடு சுட்டிக்‌ காட்டி நீக்க முயல்வான்‌
அப்படிக்‌ கூறியும்‌ குறை செய்வார்‌ திருந்த முற்படவில்லை எனில்‌

அக்குறையைப்‌ பலர்‌ அறிய கூறமாட்டான்‌. *

  1. திருக்குறள்‌, 1145; 2, புருஷார்த்த சித்தி, 27.
    அருங்கவச்செப்பு 48
    ர அழிந்தாரைத்‌ தாங்கல்‌ ]
    22 அறத்தின்‌ தளர்ந்தாரை ஆற்றின்‌ நிறுத்தல்‌
    சிறப்புடை ஆறாம்‌ உறுப்பு.

இது அழிந்தாரைத்‌ தாங்கல்‌ உறுப்பு இலக்கணம்‌ கூறுகிறது.
(ப-ரை! சிறப்புடை-மோக்ஷத்தையுடைய, அறத்தின்‌-மெய்ந்நெறியில்‌,
தளர்ந்தாரை-சோர்ந்தாரை, ஆற்றின்‌-மீண்டும்‌ அற நெறியில்‌, நிறுத்தல்‌-
நிலைபெறச்‌ செய்தல்‌, ஆறாம்‌ உறுப்பு. நற்காட்சியது ஆறாம்‌ உறுப்பு ஆகும்‌.
எ-று.
(க-ரை! நற்காட்சியது ஆறாம்‌ உறுப்பாவது மெய்ந்நெறியில்‌
சோர்ந்தாரை மீண்டும்‌ அந்நெறியில்‌ நிலைபெறச்‌ செய்யும்‌ அழிந்தாரை
தாங்கல்‌ உறுப்பு என்பதாம்‌.
(வி-ரை அழிதல்‌-நிலைகெடுதல்‌; தாங்குதல்‌-நிறுத்துதல்‌, அழிந்தாரைத்‌
தாங்கல்‌-நிலைகெட்டாரை மீண்டும்‌ நிலையில்‌ நிறுத்துதல்‌.
“சிறப்புடை அறத்துக்கு’ எனக்‌ கூட்டுக. அறத்துக்குச்‌ சிறப்பாவது
தன்னை ஏற்றாரை மோக்ஷம்‌ உடையவர்‌ ஆக்குதல்‌. “சிறப்பீனும்‌
செல்வமுமீனும்‌’ எனத்‌ தேவர்‌ ஆண்டுள்ளமை காண்க. தளர்தல்‌ – சோர்தல்‌,
நெகிழ்தல்‌.
புற ஒழுக்கம்‌ கைவிடாது நற்காட்சியில்‌ குறைந்து இருக்கலாம்‌; நற்காட்சியில்‌ உறுதியாக நின்று உடல்நலக்‌ குறைவு, விழிப்பின்மை காரணமாகப்‌ புற ஒழுக்கத்தில்‌ இழியலாம்‌; தீவிர வினை உதயம்‌ காரணமாக நம்பிக்கையிலும்‌ ஒழுக்கத்திலும்‌ இழியலாம்‌. இப்படி மூவகையான சோர்வுகள்‌? அற நெறியில்‌ தோன்றக்கூடும்‌. அப்போது நெறியில்‌ இழிந்தாரைத்‌ தக்க உபாயங்களால்‌ மீண்டும்‌ நெறியில்‌ நிலைபெறச்‌ செய்வான்‌ நற்காட்சியாளன்‌. அறத்தின்‌ மேல்‌ உள்ள அன்பு காரணமாக அப்படிச்‌

செய்வான்‌.

  1. திருக்குறள்‌, 21) 2, ர ‘த்தின கரண்டக சிராவகாசார உரை, 16;
    அருங்கலச்செப்பு 49
    இந்தக்‌ குறை தன்னிடத்திலேயும்‌ தோன்றலாம்‌. அப்போது
    பரீஷகத்தையும்‌ உபசர்கத்தையும்‌ பொறுத்து வெற்றி கண்ட மகா
    புருஷர்களுடைய வரலாறுகளை நினைவுகூர்ந்து தன்னை அந்நெறியில்‌
    நிலைநிறுத்திக்‌ கொள்ள வேணடும்‌.
    அளவளாவல்‌
  2. ஏற்ற வகையின்‌ அறத்துள்ளார்க்‌ கண்டுவத்தல்‌
    சாற்றிய வச்சளத்தின்‌ மாண்பு.
    இது அளவளாவல்‌ உறுப்பு இலக்கணம்‌ கூறுகிறது.
    (ப-ரை அறத்து-மெய்ந்நெறியில்‌, உள்ளார்‌ – உள்ளவரை, கண்டு-எதிர்‌
    காணும்‌ போது, ஏற்ற வகையில்‌-தக்கவாறு, உவத்தல்‌-மகிழ்தல்‌, சாற்றியநற்காட்சியின்‌ உறுப்பாகக்‌ கூறிய, வச்சளத்தின்‌- அளவளாவலின்‌, மாண்பு-
    பெருமை ஆகும்‌, எ-று.
    (க-ரை அறத்துள்ளாரை எதிர்கொள்ளும்‌ போது தக்கவாறு மகிழ்தல்‌
    நற்காட்சியது “வாத்ஸல்ய’ உறுப்பு என்பதாம்‌.
    (வி-ரை ‘அறத்துக்கு அளவ்ளா’ என்றார்‌ ஏழாம்‌ உறுப்பை (அ.செ: 19.
    அள்வளாவுதல்‌ – அளவு * அளாவுதல்‌. மனம்‌ கலத்தல்‌, நெருங்கி மகிழ்தல்‌
    என்பதாம்‌. ‘அளவளாவு இல்லாதான்‌’ என்றார்‌ தேவர்‌. மெய்ந்நெறியில்‌
    உள்ளார்‌ ஒருவரை ஒருவர்‌ காணும்போது நெஞ்சு கலந்து மகிழ்வர்‌ என்பதாம்‌.
    இதனை ‘வாத்ஸல்யம்‌’ என்பர்‌ வட மொழியில்‌, வச்சளம்‌-பாகதமொழி” ஸோ
    வச்சள பாவ ஜுதோ ஸம்மாதிட்டீ’ என்பார்‌ ஆசாரியர்‌ குந்த குந்தர்‌. மிக்க
    அன்புகூர்தல்‌ என்பது பொருள்‌. இந்த அன்புக்கு ‘கன்று கண்ட கறவை’ என
    உவமை கூறுவர்‌.
    மெய்ந்நெறியில்‌ உள்ளார்‌ பல படிநிலையினர்‌ ஆதலால்‌ அவர்களைத்‌
    தக்கவாறு எதிர்கொண்டு மகிழ்தல்‌ வேண்டும்‌ என்பார்‌ ‘ஏற்ற வகையின்‌’

என்றார்‌. ஏற்றவகையாவது கை கூப்புதல்‌, எதிர்‌ எழுதல்‌, இன்மொழி

  1. புருஷார்த்தசித்தி, 28; 2. திருக்குறள்‌, 523, 8, சமயசாரம்‌, 235.
    அருங்கலச்செப்பு 50
    apse, Ness, soarawd, gro YsRwer sqse0,’ இதுபோன்ற
    தக்க செயல்களைச்‌ செய்தல்‌ ஆகும்‌. இல்லற நெறியில்‌ இருப்போருக்கு
    வரும்‌ அற இடையூறுகளை நீக்குதலும்‌ வாத்ஸல்யம்‌ ஆகும்‌.
  2. அறத்தின்‌ பெருமையை யார்க்கும்‌ உரைத்தல்‌
    அறத்தை விளக்குதல்‌ நற்கு.
    (ப-ரை! யார்க்கும்‌-அறியாமையுடைய அனைவருக்கும்‌.
    அறத்தின்‌-மெய்ந்நெறியின்‌, பெருமையை-சிறப்பை, நற்கு-நன்றாக
    உரைத்தல்‌-எடுத்து விளக்குதல்‌, அறத்தை விளக்கல்‌-அறநெறியை
    விளங்கச்‌ செய்தல்‌ உறுப்பாம்‌.எ – று.
    (க-ரை! அறநியாமையுடையார்க்கு மெய்ந்நெறியை நன்றாக
    விளக்கிக்‌ காட்டி அவ்‌ அறியாமையை நீக்குதல்‌ அறம்‌ விளக்கல்‌ உறுப்பு
    என்பதாம்‌.
    (வி-ரை! அறத்தை விளக்குதல்‌ உறுப்பின்‌ நோக்கம்‌
    அஞ்ஞானத்தை நீக்கி உண்மை நெறியை அறியச்‌ செய்தலாம்‌.
    தற்காலத்தே உண்மையான தேவன்‌, குரு, நூல்‌ தொடர்பாக
    பொதுமக்களிடம்‌ அறியாமை காணப்படுகிறது. விருப்பு, வெறுப்பு,
    காமம்‌ முதலான உடைய தேவப்‌ பிறவியினர்‌ பூஜிக்கப்படுகின்றனர்‌.
    அப்பூஜையால்‌ உதவி பெறலாம்‌ என நம்புகின்றனர்‌. இந்த நம்பிக்கை ஜிநர்‌ அருளிய வினை கொள்கைக்கு முரணானது; அவர்‌ கொள்கைக்கு
    எதிரானது, அதே போன்று பகவானுடைய நிர்வாண படிமைக்கு விரோதம்‌. காட்டுகின்றனர்‌. நிர்வாணமாக உள்ள பற்றற்ற துறவியர்‌ நாடு நகரங்களில்‌ அறப்‌ பயணம்‌ ஆதல்‌ எதிர்க்கப்படுகிறது. அபிஷேகம்‌ பூஜை, ஜப, தப விதிகளில்‌ அறியாமை காணப்படுகிறது. இது போன்ற அறியாமை இருளை நற்காட்சியாளன்‌ தன்‌ ஆற்றலுக்கு ஏற்ப நீக்க முயல்வான்‌. அது அவன்‌ பண்பாகும்‌; அறப்‌ பெருமையில்‌ அவனுக்குள்ள

உறுதியான ஈடுபாடு ஆகும்‌,

  1. ரத்ன கரண்டக சிராவகாசாரம்‌ உரை, 17.
    அருங்கலச்செப்பு st
    மற்றொன்றையும்‌ நினைவில்‌ கொள்ள வேண்டும்‌. ஜிந பகவான்‌
    அருளிய அற நெறிக்குக்‌ குற்றம்‌ வரும்‌ வகையில்‌ பழக்க வழக்க
    அடிப்படையில்‌ அல்லது வேறு அடிப்படையில்‌ எந்த ஒரு அற எதிரான
    ஒழுக்கமும்‌ நற்காட்சியாளனிடம்‌ இராது. அவனது அற வாழ்வே பிறரை
    ஜிந அறத்தின்பால்‌ ஈர்க்கும்‌. அவன்‌ மும்மணியின்‌ ஒளியினால்‌ தன்‌
    ஆன்மாவை விளங்கச்‌ செய்கிறான்‌. தானம்‌, தபம்‌, ஜிந பூஜை. வித்தை
    முதலானவைகளால்‌ ஜிந தரும பெருமையை ஓங்கச்‌ செய்கிறான்‌.
    ‘யார்க்கும்‌’ என்ற சொல்லாட்சியால்‌ அறியாமை எங்கிருந்தாலும்‌
    அதனை அகற்ற வேண்டும்‌ என்ற கருத்துப்‌ பெறப்படுகிறது. எல்லா
    உயிர்களும்‌ செந்நெறியில்‌ சிறக்க வேண்டும்‌ என்பதே இதன்‌ கருத்தாகும்‌.
    அதனால்தான்‌ தீர்த்தங்கர நாம வினை கட்டுதற்கு அறம்‌ விளக்கலும்‌ ஒரு
    காரணமாகக்‌ காட்டப்பட்டிருக்கிறது.
    நற்கு “ நன்கு. நன்றாக என்னும்‌ பொருளில்‌ வந்த எச்சம்‌. ‘அது
    நற்கு.அறிந்தனை யாயின்‌’ என ஆண்டுள்ளமை காண்க.”
    இந்த எட்டு உறுப்புகளும்‌ வடமொழியில்‌ முறையே நிச்சங்கை,
    நிஷ்காங்கைஷ, நிர்விசிகித்ஸை, அமூட திருஷ்டித்வம்‌, உபகூஹனம்‌,
    ஸ்திதிகரணம்‌, வாத்ஸல்யம்‌, தர்ம அல்லது மார்க்க பிரபாவனை என
    “வழங்கும்‌.
    | எடுத்துக்காட்டுகள்‌ }
    25 அஞ்சன சோரன்‌ அனந்த மதிஉலகில்‌
    வஞ்சமில்‌ ஒத்தா யணன்‌.

இது எடுத்துக்காட்டு வரலாறு சுட்டுகிறது.
(பொ-ள்‌ உலகில்‌ – இந்த உலகத்தில்‌, அஞ்சன சோரன்‌ – ஐயமின்மை
உறுப்புக்கு அஞ்சன சோரன்‌ வரலாறும்‌. அனந்த மதி – அவா இன்மை
உறுப்புக்கு அனந்த மதியின்‌ வரலாறும்‌, வஞ்சம்‌ இல்‌ – உவர்ப்பு இன்மை
உறுப்புக்கு கபடமில்லாத, ஒத்தாயணன்‌ – ஒத்தாயணன்‌ வரலாறும்‌

(சொல்லப்பெறும்‌? ௪ – று.

  1. புருஷார்த்த ஸித்தி, 2 புறநானூறு, 34.
    அருங்கலச்செப்பு 52
    (a – ரை! அஞ்சன சோரன்‌, அனந்தமதி, ஒத்தாயணன்‌ வரலாறுகள்‌ முறையே
    ஐயமின்மை, அவா இன்மை, உவர்ப்பு இன்மை, உறுப்புகளுக்கு
    எடுத்துக்காட்டுகளாகக்‌ கூறப்படும்‌ என்பதாம்‌.
    (வி-ரை! வரலாறுகளைக்‌ கூறாது பெயர்களை மட்டும்‌ மூன்று
    குறள்களில்‌ சுட்டியுள்ளார்‌. எனவே, நிகழ்ந்த வரலாறு காலம்‌ காலமாக செவி
    வழியாகக்‌ கேட்கப்பட்டு வருகிறது என்பதனை உய்த்துணரமுடிகிறது.
  2. அஞ்சன சோரன்‌ வரலாறு
    மகத தேசத்து இராஜகிரஹம்‌ நகரில்‌ ஜினதத்தன்‌ என்ற செல்வந்தர்‌ தன்‌
    தபச்‌ சிறப்பால்‌ வித்யுத்பிரமன்‌ என்ற தேவனால்‌ பாராட்டப்பட்டு
    ஆகாசகாமினி வித்தையையும்‌ அதனைச்‌ சாதிக்க வேண்டிய
    முறையினையும்‌ கற்றுக்‌ கொண்டார்‌. அவ்‌ வித்தையினால்‌ நாள்‌ தோறும்‌
    மேரு முதலிய பெரு மலைகளில்‌ உள்ள இயற்கை ஜிநாலயங்களுக்குச்‌
    சென்று தரிசித்து வந்தார்‌.
    அவ்வூரில்‌ சோமதத்தன்‌ என்பான்‌ பூ விற்பவன்‌ ஒருவன்‌ இருந்தான்‌.
    அவன்‌ ஜிந தத்தரை நெருங்கித்‌ தானும்‌ அவரைப்போல அந்த இடங்களைத்‌
    தரிசிக்க விரும்புவதால்‌ தனக்கு அவ்‌ வித்தையைக்‌ கற்றுத்தர வேண்டினான்‌.
    அவரும்‌ அவ்வாறே அவ்‌ வித்தையைச்‌ சாதிக்கும்‌ முறையைக்‌ கூறினார்‌.
    அவ்‌ வித்தையைச்‌ சாதிக்க எண்ணி சோமதத்தனும்‌ தேய்பிறை
    சதுர்தசியில்‌ உபவாசமிருந்து, அன்று இரவு அவ்வூர்‌ சுடுகாட்டில்‌ இருந்த
    பெரிய ஆலமரத்தின்‌ கிழக்குப்‌ பக்க கிளையில்‌ 108 கால்களை உடைய
    உறியினை அமைத்து, அதன்‌ கீழ்‌ தரையில்‌ பல கூரிய ஆயுதங்களை
    கூர்ப்பக்கம்‌ மேல்‌ நோக்கி நிற்கும்படி நட்டு வைத்து, ஒவ்வொரு தடவையும்‌ பஞ்ச மந்திரம்‌ கூறி ஒவ்வொரு காலாய்‌ அறுக்கத்‌ தொடங்கினான்‌.
    அவ்வளவில்‌ கீழே இருந்த கூரிய ஆயுதங்கள்‌ அவன்‌ கண்ணில்படவே அவன்‌ அச்சமுற்று ஜிநதத்தன்‌ வார்த்தையில்‌ ஐயம்‌ கொண்டான்‌. ஒருகால்‌ அது பொய்யாயின்‌ கீழே ஆயுதம்‌ மேல்‌ விழுந்து தான்‌ இறக்க நேரிடலாம்‌ என நினைத்தான்‌. பிறகு கொஞ்ச நேரம்‌ பொய்யாக இருக்காது என்று நினைப்பான்‌. இப்படி உறியின்‌ மேல்‌ ஏறுவதும்‌ இறங்குவதுமாக சஞ்சலத்துடன்‌ இருந்தான்‌.
    அருங்கலச்செப்பு 53
    அது சமயம்‌, அரச காவலாட்களால்‌ துரத்தப்பட்டு அச்சத்துடன்‌ அங்கு
    ஓடி வந்த அஞ்சன சோரன்‌ என்ற திருடன்‌ அதனைக்‌ கண்ணுற்று
    சோமதத்தனை உசாவினான்‌. அவனும்‌ தான்‌ கேட்ட வித்தை சாதனை பற்றி
    அவனிடம்‌ கூறினான்‌. அவன்‌ அந்த வார்த்தையில்‌ நம்பிக்கையுடைய
    வனாய்‌ உறியின்‌ மேல்‌ ஏறி அச்சம்‌ இல்லாமல்‌ முறையாக மந்திரங்களைக்‌
    கூறி ஒவ்வொரு காலாய்‌ அறுத்தான்‌. எல்லா கால்களையும்‌ அறுத்து அவன்‌
    கீழே விழப்போகும்‌ சமயம்‌ ஆகாசகாமினி தோன்றி அவனைக்‌ காப்பாற்றி,
    அவன்‌ வேண்டிக்‌ கொண்டபடி, ஜினதத்தர்‌ இருந்த சுதர்சன மேரு மலையில்‌
    கொண்டு சேர்த்தது. அவரிடம்‌ தான்‌ வந்த வரலாற்றைக்‌ கூறி தனக்கு மேலும்‌
    உபதேசம்‌ கூற வேண்டும்‌ என்றான்‌. அவனை அங்கு இருந்த சாரண
    முனிவரிடம்‌ அனுப்பினார்‌. அவரிடம்‌ சென்று அறம்‌ கேட்டு தீக்ஷை ஏற்று
    தபம்‌ செய்து வினைகளைக்‌ கெடுத்து மோக்ஷம்‌ அடைந்தான்‌.
    ஜிந வசனத்தில்‌ ஐயமற்ற தன்மையினால்‌ அஞ்சன சோரன்‌ முக்தி
    அடைந்தான்‌ ; ஐயம்‌ கொண்ட தன்மையினால்‌ சோமதத்தன்‌ ஏதும்‌ பெறாது
    போனான்‌.
  3. அனந்தமதி வரலாறு
    அங்க தேசத்து சம்பாபுரியில்‌ பிரியதத்தன்‌ என்பான்‌ ஸ்ரீ தர்ம கீர்த்தி
    முனிவரிடம்‌ ஆஷ்டான்ஹிக காலத்தில்‌ பிரமசரியம்‌ விரதம்‌ ஏற்றார்‌.
    அப்போது விளையாட்டாக தன்‌ மகள்‌ அனந்தமதிக்கும்‌ அந்த விரதத்தினைத்‌
    தரச்செய்தார்‌. அவரும்‌ கால வரம்பு கூறாது விரதம்‌ தந்துவிட்டார்‌. பின்‌
    அனந்த மதி தக்க வயதினை அடைந்ததுல்‌ அவளுக்கு மணம்‌ முடிக்க
    எண்ணினார்‌ தந்‌ைத, ஆனால்‌, அவள்‌ தான்‌ பிரமசரிய விரதம்‌ ஏற்றுக்‌
    கொண்டதால்‌, மணம்‌ செய்துகொள்ள இயலாது என்று கூறி தான்‌
    கன்னியாகவே இருந்துவிட்டாள்‌.
    ஒரு நாள்‌ அவள்‌ பூங்காவில்‌ விளையாடிக்‌ கொண்டிருந்த போது
    அவ்வழியே ஆகாயத்தில்‌ தன்‌ மனைவியுடன்‌ விமானத்தில்‌ சென்று
    கொண்டு இருந்த குண்டல மண்டிதன்‌ என்ற வித்யாதரன்‌ அவளைப்‌ பார்த்து
    மயங்கி அவளை அடைய விரும்பினான்‌. தன்‌ மனைவியை வீட்டில்‌
    விட்டுவிட்டு விரைந்து வந்து அனந்தமதியை வலிந்து தன்‌ விமானத்தில்‌
    ஏற்றிச்‌ சென்றான்‌. அவனைத்‌ தேடிக்கொண்டு அவன்‌ மனைவி வந்தாள்‌.
    அவளைக்‌ கண்ட வித்யாதரன்‌ அனந்தமதியை மெல்ல கீழே விழும்படி
    விட்டுவிட்டு தன்‌ மனைவியை அழைத்துக்கொண்டு தனது இருப்பிடம்‌
    சென்றான்‌.
    அருங்கலச்செப்பு 54
    அனந்தமதி அங்கே ஒரு காட்டில்‌ இறங்கிப்‌ பீமன்‌ என்னும்‌ ஒரு
    வேடனிடம்‌ சிக்கினாள்‌. அவன்‌ காம வேட்கையால்‌ அவளை அடைய
    விரும்பி நெருங்கினான்‌. அனந்தமதியின்‌ சீலச்‌ சிறப்பால்‌ அங்கு வன
    தேவதை தோன்றி அவனை இம்சித்தது. அனந்தமதி அவளிடமிருந்து தப்பி
    புஷ்கரன்‌ என்ற வணிகனிடம்‌ அகப்பட்டாள்‌. அவனும்‌ அவளை மனைவி
    ஆகும்படி வற்புறுத்தினான்‌. ஆனால்‌ அவள்‌ அவனை தன்‌ விரத பலத்தால்‌
    ஒதுக்கிவிட்டாள்‌. அவன்‌ அவளை காமசேனை என்றும்‌ வேசியிடம்‌
    ஒப்படைத்தான்‌. அவ்வேசி அவளைத்‌ தன்‌ தொழிலில்‌ ஈடுபட
    துன்புறுத்தினாள்‌.௮வளை அவ்வூர்‌ அரசன்‌ சிம்மசேனனிடம்‌ அனுப்பினாள்‌.
    அவன்‌ காமத்துடன்‌ அவளை நெருங்கிய போது அவளுடைய சீலச்‌
    சிறப்பால்‌ அவ்வூர்‌ தேவதை அங்குத்‌ தோன்றி அரசனைத்‌ துன்புறுத்தியது.
    அதனால்‌ அரசன்‌ அவளை நகருக்கு வெளியே விட்டுவிட்டான்‌. பிறகு பல
    இடங்களில்‌ அலைந்து கடைசியில்‌ கமலஸ்ரீ என்றும்‌ சிராவகியிடம்‌
    சேர்ந்தாள்‌.
    அவ்வளவில்‌ பிரியதத்தன்‌ தன்‌ மகள்‌ அனந்தமதியின்‌ பிரிவினால்‌
    வருந்தித்‌ எங்கு தேடியும்‌ அவளைக்‌ காணாது தீர்த்த யாத்திரை
    மேற்கொண்டான்‌. அப்படி வருபவன்‌ கடைசியில்‌ அவ்வீட்டினுக்கே வந்து
    சேர்ந்தான்‌. மறுநாள்‌ காலை ஜிநாலயம்‌ சென்று பூஜை முடித்து திரும்புகையில்‌
    அவ்வீட்டு வாசலில்‌ அனந்தமதியால்‌ போடப்பட்ட கோலத்தினைக்கண்டு
    மகள்‌ நினைவால்‌ துன்புற்று நின்றான்‌ அக்கோலம்‌ இட்ட பெண்ணைத்‌ தான்‌
    காண வேண்டும்‌ என்றான்‌. அனந்தமதி அவன்‌ எதிரில்‌ அழைக்கப்பட
    தந்தையும்‌ மகளும்‌ ஒருவரை ஒருவர்‌ பார்த்து ஆனந்த பரவசம்‌ாயினர்‌.
    பிறகு சில நாள்‌ சென்றதும்‌, தன்‌ தந்தையின்‌ இசைவு பெற்று அனந்தமதி ஜிந தீகைஷ ஏற்று தவத்தினைச்‌ செய்து பெண்‌ பிறவியைவிட்டு சகஸ்ரார கல்பத்தில்‌ தேவன்‌ ஆயினாள்‌.
    I. ஒத்தாயணன்‌ வரலாறு
    _ ஒரு சமயம்‌ செளதர்ம இந்திரன்‌ சபையில்‌ நற்காட்சி பற்றி புகழ்ந்துரைக்கப்பட்டது. அப்போது அங்க தேசத்து ரெளரகபுர நகர அரசன்‌ ஒத்தாயணனும்‌ அவன்‌ அரசி பிரபாவதி தேவியும்‌ அருவருப்பு உவர்ப்பு இன்மை குணத்திற்கு உதாரணமாகக்‌ கூறப்பட்டார்கள்‌. அதனை சோதிக்க எண்ணி வசுதேவன்‌ என்ற ஒரு தேவன்‌ மிகவும்‌ துர்நாற்றம்‌ உள்ள தொழுநோயினால்‌ பீடிக்கப்பட்ட ஒரு முனிவனைப்‌ போல்‌ தன்‌ உருவை
    அருங்கலச்செப்பு 55
    மாற்றிக்‌ கொண்டு அவ்வரசன்‌ அரண்மனைக்கு எதிரில்‌ சென்று
    கொண்டிருந்தான்‌. முனிவரைக்‌ கண்டதும்‌ அரசன்‌ எதிர்கொண்டு அழைத்து
    பக்தி விநயத்துடன்‌ உபசரித்து விதிப்படி ஆகார தானத்தைச்‌ செய்தான்‌.
    முனிவன்‌ அதை உண்டதும்‌ தன்‌ மாய சக்தியினால்‌ மிக்க
    துர்நாற்றத்தோடு கூடிய வாந்தியை எடுத்தான்‌. அந்த துர்நாற்றத்தைப்‌
    பொறுக்க முடியாமல்‌ அங்கிருந்தவர்‌ எல்லாம்‌ ஓடினர்‌. அரசனும்‌ அரசியும்‌
    மட்டும்‌ அங்கிருந்து அம்முனிவன்‌ உடம்பில்‌ வழிந்த வாந்தியை அலம்பிச்‌
    சுத்தம்‌ செய்தார்கள்‌.
    “அந்தோ! நோயுற்ற உடம்புக்கு ஒவ்வாத உணவைக்‌
    கொடுத்துவிட்டோமே” என்று அவர்கள்‌ பரிதவித்து தங்களைத்‌ தாங்களே
    நிந்தித்துக்‌ கொண்டனர்‌. அதனைக்‌ கண்ட முனிவன்‌ தன்‌ சுய ரூபத்தில்‌
    தோன்றித்‌ தன்‌ வரலாற்றினைத்‌ தெரிவித்து அரச தம்பதிகளைப்‌ பூஜித்துப்‌
    புகழ்ந்து சென்றான்‌.
    பிறகு ஒத்தாயண அரசன்‌ ஸ்ரீ மகாவீரர்‌ பகவான்‌ திருவடியில்‌ தீகைஷ
    ஏற்று தபம்‌ செய்து மோக்ஷம்‌ அடைந்தான்‌. அரசியும்‌ தீக்ஷை ஏற்று தன்‌ தபச்‌
    சிறப்பால்‌ பெண்‌ பிறவியை ஒழித்து பிரம்ம சொர்கத்தில்‌ தேவன்‌ ஆயினாள்‌.
    26 இரேவதையாரும்‌ சிநேந்திர பத்தரும்‌
    தோவகையின்‌ பாரிசரும்‌ சொல்‌.
    இதுவும்‌ அது.
    (பொ-ள்‌) இரேவதையாரும்‌ – மயக்கு இன்மை உறுப்புக்கு
    இரேவதையார்‌ வரலாறும்‌, சிநேந்திரபத்தரும்‌ – அறப்பழி நீக்கல்‌ உறுப்புக்கு
    சிநேந்திரபத்தர்‌ வரலாறும்‌, தோ வகையின்‌ பாரிசரும்‌ – அழிந்தாரைத்தாங்கல்‌
    உறுப்புக்கு குற்றமில்லா பாரிஷேணகுமாரர்‌ வரலாறும்‌, சொல்‌ –
    எடுத்துக்காட்டுகளாகச்‌ சொல்லப்பெறும்‌. எ-று.
    (க-ரை மயக்கு இன்மை, அறப்பழிநீக்கல்‌, அழிந்தாரைத்தாங்கல்‌
    என்னும்‌ இம்மூன்று உறுப்புகளுக்கும்‌ முறையே இராணி இரேவதையார்‌,
    சிநேந்திர பத்தர்‌, பாரிசேணகுமாரர்‌ வரலாறுகள்‌ எடுத்துக்காட்டுகளாம்‌
    என்பதாம்‌.
    அருங்கலச்செப்பு 56
    (வி-ரை? தோம்‌ வகை. என்பது தோவகை என விகாரத்தல்‌
    தொக்குநின்றது. ‘தோமறு கடிஞையும்‌’ என ஆளுதல்‌ காண்க. தோம்‌ – குற்றம்‌.
  4. இரேவதியார்‌ வரலாறு
    வெள்ளியம்‌ பெருமலையின்‌ தென்கோடி மேககூட நகருக்கு
    சந்திரபிரபன்‌ அரசன்‌. அவன்‌ தன்‌ மகன்‌ சந்திரசேகரனிடம்‌ அரசு ஆட்சியை
    ஒப்படைத்துவிட்டுத்‌ தெற்கு மதுரையில்‌ இருந்த முனிகுப்த ஆசாரியர்‌
    என்பவரிடம்‌ சுல்லகர்‌ தீக்ஷை ஏற்றாள்‌. ஒரு சமயம்‌ அவர்‌ உத்தர மதுரைக்குச்‌
    செல்ல எண்ணி குருவிடம்‌ அனுமதி பெற்றார்‌. புறப்படும்‌ முன்‌ அவ்விடத்தில்‌
    யாருக்கேனும்‌ செய்தி ஏதேனும்‌ சொல்லவேண்டுமா என குருவிடம்‌
    கேட்டார்‌. அதற்கு குரு அவ்விடத்தில்‌ உள்ள சுவ்ரத முனிவருக்கு தன்‌
    வந்தனையையும்‌, அரசன்‌ வருணசேனனுக்கும்‌ அவன்‌ மனைவி
    இரேவதைக்கும்‌ தன்‌ ஆசீர்வாதத்தையும்‌ கூறச்சொன்னார்‌. மீண்டும்‌ மீண்டும்‌
    கேட்ட பிறகும்‌ குரு இதனையே சொன்னார்‌. பதினோரு அங்கங்களையும்‌
    அறிந்த பவ்யசேன முனிவர்‌ அங்கிருந்தார்‌. அவரைப்பற்றி குரு ஏதும்‌
    கூறவில்லை. இதற்கு ஏதேனும்‌ காரணம்‌ இருக்கவேண்டும்‌ என
    எண்ணிக்கொண்டு சுல்லகர்‌ அங்கிருந்து புறப்பட்டார்‌.
    வித்தியாதரரான சுல்லகர்‌ தன்‌ விந்தையினால்‌ உத்தர மதுரையை
    விரைவாக அடைந்து சுவ்ரத ஆசாரியரிடம்‌ தன்‌ குருவின்‌ நமஸ்காரத்தைக்‌
    கூறிவிட்டு பவ்யசேனரிடம்‌ வந்தார்‌; வணங்கினார்‌. முனிவர்‌ செருக்குடன்‌
    மெளனமாக இருந்தார்‌. அவர்‌ செளசத்திற்குச்‌ செல்லும்‌ போது கமண்டலத்தை
    எடுத்துக்கொண்டு பின்னே சென்றார்‌. கமண்டலத்தில்‌ இருந்த நீரைக்‌
    கொட்டிவிட்டு வித்தியாதரரான சுல்லகர்‌ தன்‌ வித்தையினால்‌ அங்கு ஒரு
    புல்தரையைத்‌ தோன்றச்‌ செய்தார்‌. முனிவர்‌ மலம்‌ கழித்துவிட்டு,
    கமண்டலத்தில்‌ நீர்‌ இல்லாமையால்‌, புல்தரை மீது நடந்து சென்று குளத்தில்‌
    கால்‌ கழுவிக்‌ கொண்டார்‌. இச்செயல்களைக்‌ கண்ட சுல்லகர்‌ இம்‌ முனிவர்‌
    பெயரைக்கூட தம்‌ குரு குறிப்பிடாமைக்குக்‌ காரணம்‌ புரிந்தது. அவர்‌ மித்யா
    த்ருஷ்டி என்று அறிந்து அவருக்கு அபவ்ய சேனன்‌ எனப்‌ பெயரைச்‌ சூட்டிச்‌
    சென்றார்‌.
    பிறகு அடுத்த நாள்‌ தன்‌ வித்தையால்‌ கிழக்கு திசையில்‌ பூநூல்‌
    முதலான உடைய, தேவர்‌ வணங்குவது போன்ற தோற்றம்‌உடைய
    பிரம்மாவைக்‌

காட்டினார்‌. பல்வியசேனர்‌ முதலானவர்கள்‌ எல்லாம்‌

  1. சிலம்பு, 10-98
    அருங்கலச்செப்பு 57
    அதனைக்‌ காணச்‌ சென்றனர்‌. இரேவதையார்‌ செல்லவில்லை.
    பிறகு தெற்கு திசையில்‌ கருடன்‌ மீது நான்கு புஜங்களோடு சங்கு
    முதலியன உடைய நாராயணன்‌ உருவைக்‌ காட்டினார்‌. மேற்கு திசையில்‌
    காளை மீது சடாமுடி, பார்வதியுடன்‌ கூடிய சங்கரரை காட்டினார்‌. வடக்கு
    திசையில்‌ சமவசரணத்தில்‌ எட்டு பிராதிஹார்யங்களோடு கூடி இருக்கும்‌
    தீர்த்தங்கரரைக்காட்டினார்‌. அங்கெல்லாம்‌ மக்கள்‌ சென்றனர்‌. ஆனால்‌
    இரேவதை மட்டும்‌ செல்லவில்லை ‘அவர்கள்‌ எல்லாம்‌ முன்பு இருந்தவர்கள்‌.
    இப்போது இங்கு வரக்‌, காரணம்‌ இல்லை’ என்று கூறி இவை எல்லாம்‌
    மாயவித்தை என்றாள்‌. _
    பிறகு நோயுடைய சுல்லகர்‌ போலச்‌ சென்று அரண்மனைவாசலில்‌
    மூர்ச்சையாகி விழுந்தார்‌. இதனை அறிந்த இரேவதையார்‌ பரிவுடன்‌
    எடுத்துவரச்‌ செய்த, சுவஸ்தப்படுத்தி, விதிப்படி ஆஹார தானம்‌ செய்தாள்‌.
    அதனை உண்டு மாயாவி துர்கந்த முள்ள வாந்தியினை எடுத்தான்‌
    இரேவதையார்‌ சுத்தப்படுத்தி, ‘என்ன தவறு செய்தேன்‌! ஏற்காத உணவைத்‌
    தந்துவிட்டேனே’ என்று மனம்‌ நொந்து தன்னை நிந்தித்துக்‌ கொண்டாள்‌.
    உடனே மாயா வித்தியாதர சுல்லகர்‌ தன்‌ உருவை வெளிக்காட்டி தன்‌
    வரலாற்றை எல்லாம்‌ சொல்லி தன்‌ குரு கூறிய ஆசீர்‌ வசனத்தையும்‌ கூறி
    அவளைப்‌ பாராட்டிவிட்டுச்‌ சென்றார்‌. அரசன்‌ வருணன்‌ பிறகு தீக்ஷை ஏற்று
    தவம்‌ செய்து மாகேந்திர சொர்க்க தேவனாயினான்‌. இராணி இரேவதையும்‌
    தீக்ஷை ஏற்று தபம்‌ செய்து பிரம்ம சொர்க்கத்தில்‌ தேவன்‌ ஆனாள்‌.
    இரேவதை உண்மையான தேவ சாத்திரகுரு பக்தியில்‌ மயக்கு
    இல்லாமல்‌ திடமான நம்பிக்கையோடு இருந்தமையால்‌ அவள்‌ வரலாறு
    நினைவு கூரப்படுகிறது.
  2. ஜிநேந்திர பத்தர்‌ வரலாறு
    செளராட்டிர தேச பாடலிபுத்திர நகர அரசன்‌ யசோதரன்‌: அவன்‌
    மனைவி ஸுஸீமா. அவர்கள்‌ மகன்‌ சுவீரன்‌ அவன்‌ ஏழு வியசனங்களில்‌
    வீழ்ந்து தன்னை ஒத்தாரோடு சுற்றித்‌ திரிந்து வந்தான்‌. அவனுக்கு நான்கு பேர்‌
    நண்பர்கள்‌.
    கிழக்கு கெளட.தேச தாம்ரலிப்த நகரில்‌ வசித்த மிக்கச்‌ செல்வந்தரான
    அருங்கலச்செப்பு 58
    ஜிநேந்திர பக்தர்‌ தம்‌ ஏழடுக்கு மாளிகையின்‌ மேல்‌ தளத்தில்‌ ஸ்ரீ பார்சுவ
    தீர்த்தங்கர பரம தேவரின்‌ பிம்பத்தை நிறுவி அதன்‌ முக்குடையின்‌ உச்சியில்‌
    விலைமதிப்பில்லாத வைடூரிய இரத்தினம்‌ ஒன்றைப்‌ பதித்து வைத்து நன்கு
    காத்து வந்தான்‌. இதனைக்‌ கேள்வியுற்ற சுவீரன்‌ தான்‌ அந்த அருமணியை
    அடையும்‌ ஆசையால்‌ அதனைக்‌ களவாடி வரும்‌ ஆற்றல்‌ தன்‌
    நண்பர்களுள்‌ யாருக்காவது உண்டா என்று கேட்டான்‌. களவாடுதலில்‌ தேர்ச்சி
    பெற்ற சூர்பன்‌ என்பவன்‌ இந்த மணியை என்ன இந்திரனுடைய முடியில்‌
    உள்ள மணியையே கொண்டு வருவேன்‌ என்று தொடை தட்டினான்‌.
    அவனையே அக்காரியத்திற்கு அனுப்பினான்‌. அவனும்‌ பதினோராம்‌ நிலை
    சிராவகன்‌ போலவேடம்‌ பூண்டு தாம்ரலிப்த நகரை அடைந்தான்‌. சிறந்த
    காயகிலேசத்தால்‌ தான்‌ பெரிய தவமுடையவன்‌ போல்‌ காட்டி புகழும்‌
    ஈட்டினான்‌: ஜினேந்திர பத்தரும்‌ அவனைத்‌ தரிசித்து தக்கவாறு வணங்கி தன்‌
    மாளிகைக்கு அழைத்து வந்து ஜிநபிம்ப தரிசனம்‌ செய்யவைத்தான்‌. பிறகு
    வேண்டா விருப்பத்தோடு அங்கே இருப்பதாக மாயமாக ஒப்புக்கொண்டு
    தங்கினான்‌.
    பின்பு ஒரு நாள்‌ செல்வந்தர்‌ வாணிபம்‌ காரணமாக கடல்‌ யாத்திரை
    செல்ல வீட்டை விட்டுப்‌ புறப்பட்டுச்‌ சென்றார்‌. நகருக்கு வெளியே அன்று இரவு தங்கி இருந்தார்‌. இவ்வளவில்‌ செல்வந்தர்‌ கப்பல்‌ ஏறிச்‌ சென்று இருப்பார்‌ என நினைத்து சூர்பன்‌ நடு இரவில்‌ வைடூரிய மணியை திருடிக்கொண்டு புறப்பட்டான்‌. ஆனால்‌ அதன்‌ ஒளி வீச்சு கண்டு காவலர்கள்‌ அவனை மடக்கிப்‌ பிடித்து ஜினேந்திர பத்தர்‌ முன்கொண்டுவந்து நிறுத்தி, மணி திருடிய செய்தியைச்‌ சொன்னார்கள்‌. தப்ப வழியறியாத சூர்பன்‌ தன்னைக்‌ காப்பாற்றும்படி அவரை வேண்டினான்‌. உண்மை அறிந்த அவர்‌ இவனைக்‌ காட்டிக்‌ கொடுத்தல்‌ ஜிந நெறிக்கு ஊறாகும்‌ என்று எண்ணி, மணியை நானே எடுத்து வரச்‌ சொன்னேன்‌. இம்‌ மகானை திருடன்‌ என்று கூறுவது தவறு’ எனக்‌ கூறி காவலர்களைப்‌ போகவிட்டன்‌. சூர்பனுக்கும்‌ அறவுரை கூறிபோகவிட்டான்‌.
    இப்படி அற்த்துக்கு யாரேனும்‌ தன்‌ அறியாமை காரணமாக அல்லது ஆற்றல்‌ குறைவு காரணமாக பிழை செய்தால்‌ அதனை வெளிப்படுத்தாது மறைத்துவைக்க வேண்டும்‌ என்பதாம்‌.
    8, பாரிஷேணார்‌ வரலாறு :
    மகத தேசத்து இராஜகிரக நகர அரசன்‌ சிரேணிகள்‌ அவன்‌ தேவி

அருங்கலச்செப்பு 60
27 வச்சிர மாழுனியும்‌ வளர்பெரு விண்ணுவும்‌
நிச்சயம்‌ எட்டும்‌ உரை.
இதுவும்‌ அது.
(பொ-ள்‌) வச்சிர மாமுனியும்‌ – அறம்‌ விளக்குதல்‌ உறுப்புக்கு
வச்சிரகுமார மாமுனி வரலாறும்‌, வளர்பெரு – அளவளாவுதல்‌ உறுப்புக்கு
விகுர்வணையடைய, விண்ணுவும்‌ – விஷ்ணுமுனிவர்‌ வரலாறும்‌, என, எட்டு

  • எட்டு வரலாறுகளும்‌, நிச்சயம்‌ – உண்மையான வரலாறுகளாக, உரை –
    உரைக்கப்படும்‌.
    (க-றை அறம்‌ விளக்குதல்‌ மற்றும்‌ அளவளாவுதல்‌ உறுப்புகளுக்கு
    முறையே வச்சிரகுமார மாமுனிவர்‌ வரலாறும்‌, விஷ்ணு முனிவர்‌ வரலாறும்‌
    எடுத்துக்காட்டுகளாகும்‌. இந்த எட்டு வரலாறுகளும்‌ நடந்த வரலாறுகள்‌
    என்பதாம்‌. ்‌
    (வி-ரை வளர்பெரு – அதாவது பேருரு. விஷ்ணுமுனிவர்‌ பெற்றிருந்த
    விகுர்வணை ஆற்றலைக்‌ குறிப்பாகச்‌ சுட்டியது; இனி மிகுந்த புகழையுடைய
    எனினும்‌ அமையும்‌. நிச்சயம்‌ – எட்டு உறுப்புகளுக்கும்‌ எடுத்துக்‌ கூறப்பட்ட
    வரலாறுகள்‌ நடந்த மெய்‌ வரலாறுகள்‌ என்பதனை உணர்த்திற்று. நிச்சயம்‌ –
    மெய்‌.
  1. வச்சிரகுமார முனிவர்‌ வரலாறு :
    அத்தினாபுரத்தில்‌ சோமாதத்தன்‌ என்றொரு புரோகிதன்‌ இருந்தான்‌.
    அவன்‌ சிறந்த வித்தைகளை உடையவன்‌. அவன்‌ தன்‌ மாமனாகிய சுபூதி
    வசித்த அஹிசந்திரபுரம்‌ என்ற நகருக்குச்‌ சென்று தன்‌ வித்தைகளால்‌ அந்‌ நகர அரசனை மகிழச்‌ செய்தான்‌. மன்னன்‌ அவனை அமைச்சனாக்கினான்‌.
    சுபூதியும்‌ அவனுக்குத்‌ தன்‌ மகள்‌ யக்ஞதத்தையை மணம்‌ முடித்து வைத்தான்‌.
    சிறிது காலம்‌ சென்று யக்ஞதத்தை கருவுற்றாள்‌. அப்போது அவள்‌ ஒரு மாங்கனியை உண்ண விரும்பினாள்‌. அதற்காக அவன்‌ மாங்கனி தேடிச்‌ சென்றான்‌. ஒரு மரத்தில்‌ இருந்த மாங்கனியைப்‌ பநித்துத்‌ தன்‌ ஆள்‌ வழி மனைவிக்கு அனுப்பினான்‌. பின்னர்‌ அவன்‌ அம்‌ மரத்தடியில்‌ தங்கி இருந்த சுமத்திரர்‌ என்ற முனிவரிடம்‌ அறம்‌ கேட்டு ஜின தீகைஷி பெற்று நாபிகிரி என்று மிடத்தில்‌ தங்கி தவம்‌ செய்து வந்தான்‌.
    அருங்கலச்செப்பு 61
    சில நாள்களில்‌ ஓர்‌ ஆண்‌ மகனைப்‌ பெற்ற யக்ஞதத்தை தன்‌ கணவன்‌ முனியானதைக்‌ கேட்டு கடும்‌ கோபம்‌ கொண்டு தான்‌ பெற்ற அக்‌ குழந்தையை எடுத்துச்‌ சென்று சோமதத்தர்‌ முனிவர்‌ முன்னே போட்டுவிட்டு
    அவரைப்‌ பலவாறு நிந்தித்து வீடு திரும்பினாள்‌. இது நிற்க.
    விஜயார்த்த மலை அமராவதி நகரில்‌ திவாகர தேவன்‌ என்னும்‌ ஒரு
    வித்தியாதரன்‌ அரசு செய்து வந்தான்‌. அவனுக்குப்‌ புரந்தரன்‌ என்றோர்‌ தம்பி
    இருந்தான்‌. அவன்‌ அரசைக்‌ கைப்பற்றிக்‌ கொண்டு அண்ணனை நாடுவிட்டு
    ஓடச்‌ செய்தான்‌. அதனால்‌ திவாகர தேவன்‌ தன்‌ வினையை நொந்து
    மனைவி ஜயஸ்ரீயுடன்‌ பல இடங்களில்‌ சற்றித்‌ திரிந்து வந்தான்‌. அப்போது
    பல முனிவர்களைத்‌ தரிசித்து வந்தான்‌. அதுசமயம்‌ தவத்தில்‌
    இருந்த சோமதத்த முனிவரை வணங்கி அவர்‌ தவத்தைக்‌ கலைக்காது அவர்‌
    முன்னே கிடந்த குழந்தையை எடுத்துச்‌ சென்றான்‌. கனகபுரம்‌ என்ற
    ஊருக்குச்‌ சென்று அக்குழந்தையுடன்‌ அங்கு வசித்து வந்தான்‌. குழந்தைக்கு வச்சிரகுமாரன்‌ எனப்பெயரிட்டு மனைவியோடு வளர்த்து வந்தான்‌.
    குமாரனும்‌ வளர்ந்து கண்டோர்‌ காமுறும்‌ காளையானான்‌.
    அப்போது, கருடவேகன்‌ என்னும்‌ வித்தியாதரனுக்கும்‌ காங்கவதி
    என்னும்‌ அவன்‌ மனைவிக்கும்‌ பிறந்த மதனவேகை என்பவள்‌ பிரக்ஞப்தி
    என்னும்‌ வித்தையைச்‌ சாதிக்க எண்ணிப்‌ பக்கத்தில்‌ இருந்த ஏமந்த மலையில்‌
    கடும்‌ தவம்‌ இயற்றினாள்‌. அப்போது காற்றினால்‌ அலைக்கப்பட்ட இலந்தை
    முள்‌ அவள்‌ கண்ணில்‌ பட்டுத்‌ தொல்லைத்‌ தந்ததால்‌ அவள்‌ வித்தையைச்‌
    சாதிக்க இயலாது தடுமாறி நின்றாள்‌, அது சமயம்‌ தற்செயலாக அங்கு வந்த
    வச்சிரகுமாரன்‌ அம்முள்ளை மெல்ல விலக்கிவிட அவள்‌ தன்‌ வித்தையைச்‌
    சாதித்து முடித்தாள்‌. பின்பு அவள்‌ தனக்கு உதவி செய்த அவனையே
    கணவனாக வேண்டி விதிப்படி மணந்து கொண்டாள்‌.
    பிறகு வஜ்ரகுமாரன்‌ தன்‌ மனைவி சாதித்த வித்தையின்‌ உதவியால்‌
    அமராவதி சென்று, புரந்தரனைப்‌ போரில்வென்று, தன்‌ வளர்ப்புப்‌
    பெற்றோர்களை ஆட்சியில்‌ அமர்த்தினான்‌. ஒருநாள்‌ ஜயஸ்ரீ அவனை
    ‘அன்னியன்‌ பிள்ளை’ எனத்‌ தூற்ற அவன்‌. வருத்தம்‌ கொண்டு திவாகர
    தேவனிடம்‌ தன்‌ பிறப்பின்‌ உண்மை பற்றிக்‌ கேட்டான்‌. அவன்‌ தானறிந்த
    செய்திகளைக்‌ கூறினான்‌. பிறகு இருவரும்‌ உண்மை அறிய க்ஷத்திரிய
    குகையில்‌ தவம்‌ செய்யும்‌ சோமதத்த முனிவரிடம்‌ சென்று உண்மை
    கேட்டனர்‌. அவரும்‌ உண்மையைக்‌ கூறி குமாரனைத்‌ தீக்ஷை கொள்ளும்படி
    போதிக்க அவனும்‌ முனியாகி அவருடன்‌ தங்கினான்‌.
    அருங்கலச்செப்பு 62
    அப்போது மதுரையில்‌ பூதிகாந்தன்‌ என்னும்‌ அரசனும்‌ அவன்‌ தேவி
    ஊர்மிளை என்பவளும்‌ அரசாண்டிருந்தனர்‌. அந்நகரில்‌ சாகரதத்தன்‌,
    சமுத்திரதத்தை என்னும்‌ ஏழை தம்பதியருக்குத்‌ தரித்திரை என்பவள்‌
    மகளாகப்‌ பிறந்து குழந்தைப்‌ பருவத்திலேயே பெற்றோரை இழந்து,
    அனாதை ஆகி, பிச்சை எடுத்து பிழைக்கலானாள்‌. அப்போது அங்கு வந்த
    சாரண முனிவர்கள்‌ இருவர்‌ அவளைக்‌ காண, அதில்‌ ஒருவர்‌, ‘இவள்‌ முன்‌
    வினைப்‌ பயனை அனுபவிக்கிறாள்‌’ எனக்‌ கூற, மற்றவர்‌ “இவள்‌ இவ்வூர்‌
    அரசனுக்கு அரசியாவாள்‌’ எனக்‌ கூறினார்‌. அவர்கள்‌, இவ்வாறு பேசுவதைக்‌
    கேட்ட புத்த சந்நியாசனி ஒருத்தி, ஜின முனிவர்‌ சொல்‌ பொய்க்காது நடக்கும்‌’
    என எண்ணி அப்பெண்ணைத்‌ தான்‌ அழைத்துச்‌ சென்று, புத்த மடத்தில்‌
    சேர்த்து, ஊணும்‌ உடையும்‌ உதவ காப்பாற்றி வந்தாள்‌. தரித்திரையும்‌ வளர்ந்து
    மட்டற்ற, அழகினையுடைய மங்கையானாள்‌. அவள்‌ ஒரு நாள்‌ புத்த மடத்தின்‌
    உப்பரிகையில்‌ உலவும்‌ போது வீதியில்‌ உலா வந்த அரசன்‌ பூதிகாந்தன்‌
    அவளைக்‌ கண்டு மோகமுற்று அவளைத்‌ தனக்கு மணம்‌ முடிக்க
    வேண்டினான்‌. அப்புத்த சந்நியாசிநியும்‌, “நீ புத்த மதத்தில்‌ சேர்ந்தாள்‌
    அவளை மணக்கலாம்‌’ என்றாள்‌. அரசனும்‌ அம்‌ மதத்தில்‌ சேர்ந்தான்‌
    அவளை விதிப்படி மணந்து தன்‌ பட்டராணி ஆக்கினான்‌.
    இவ்வாறாக, ஊர்மிளை ஒவ்வொரு பங்குனி மாதமும்‌ நந்தீஸ்வர
    ஆஷ்டானிக பருவத்தில்‌ ஜிந பகவானுக்கு தேர்விழா செய்யும்‌ தன்‌
    வழக்கப்படி அந்த ஆண்டும்‌ அரசன்‌ ஆணை பெற்று, அதனை நடத்த
    முற்பட்டான்‌. அப்போது தரித்திரை தானும்‌ புத்த பகவானுக்கு அது போன்ற
    விழா செய்யக்‌ கருதி அரசனிடம்‌ இசைவு பெற்றாள்‌. ஜிநபகவான்‌ தேருக்கு
    முன்‌ புத்த பகவான்‌ தேரைச்‌ செலுத்த திட்டமிட்டாள்‌. இதனைக்‌ கண்ட ஊர்மிளை ‘என்‌ தேர்‌ முன்‌ செல்லாதவரை நான்‌ உணவு உண்பதில்லை’ என நியமம்‌ செய்து கொண்டு, க்ஷத்திரிய குகையில்‌ தவம்‌ செய்து கொண்டிருந்த சோமதத்த முனிவரிடம்‌ சென்று முறையிட்டாள்‌. அதனைக்‌ கேட்டுக்‌ கொண்டிருந்த வச்சிர குமாரமுனி அப்போது தன்னைக்‌ காணவந்திருந்த தன்னை வளர்த்த வித்தியதரனான திவாகர தேவனிடம்‌ ‘ஜிந அற விளக்கம்‌’ நிமித்தமாக ஊர்மிளைக்கு உதவச்‌ சொன்னார்‌.
    வித்தியாதரன்‌ தன்‌ வித்தை ஆற்றலால்‌ உடனே அந்த புத்த தேரை ஒடித்து நாசப்‌ படுத்தி ஜிந பகவான்‌ தேரை ஆகாய வழியே ஊர்‌ வலம்‌ வரச்‌ செய்தான்‌. இதனைக்‌ கண்ட அரசன்‌ முதலானோர்‌ வியப்படைந்து ஜிந அறத்தின்‌ பெருமை அறிந்து புகழ்ந்தனர்‌; தரித்திரையும்‌ புகழ்ந்து அவர்களுடன்‌ ஜிந தருமத்தை ஏற்றாள்‌.
    அருங்கலச்செப்பு 63
    ஜிந அறத்தை விளங்கச்‌ செய்வதும்‌ நற்காட்சியுடையார்‌ இயல்பாகும்‌
    என்பது இவ்‌ வரலாற்றால்‌ அறியலாம்‌.
  2. விஷ்ணு முனிவர்‌ கதை:
    அவந்தி நாட்டு உஜ்ஜயினி நகர அரசன்‌ ஸ்ரீ வர்மன்‌. அவனுக்கு பலி,
    பிரஹஸ்பதி பிரஹ்லாதன்‌, நமுச்சி என நான்கு அமைச்சர்கள்‌ இருந்தனர்‌.
    ஒருநாள்‌ எல்லா நூல்களையும்‌ கற்ற அவதி ஞான முடைய அகம்பனாசாரியர்‌
    தம்‌ எழுநூறு முனிவர்களுடன்‌ அந்நகர உபவனத்தில்‌ வந்து தங்கினார்‌.
    அப்போது ஆசாரியர்‌ முனிவர்களிடம்‌ ‘அரசரே வந்தாலும்‌ ஒருவரும்‌
    ஒன்றும்‌ பேசுதல்‌ கூடாது. பேசினால்‌ நம்‌ சங்கத்திற்கு அனர்த்தம்‌ நேரிடும்‌’
    என முன்கூட்டி எச்சரித்தார்‌.
    ஸ்ரீ வர்மா அரசன்‌ முனிவர்கள்‌ எழுந்தருளி இருக்கும்‌ செய்தி அறிந்து
    தன்‌ அமைச்சர்‌ நால்வருடன்‌ சென்று அவர்கள்‌ திருவடிகளில்‌ விழுந்து
    வணங்கினார்‌. முனிவர்கள்‌ முன்‌ எச்சரித்தப்படி ஆசியும்‌ வழங்காது
    அமைதியாக இருந்தனர்‌. ‘முனிவர்கள்‌ பற்றற்றவர்கள்‌; தியானத்தில்‌
    இருப்பதால்‌ பேசாது இருந்தனர்‌” என அரசர்‌ நினைத்துக்‌ கொண்டு
    திரும்பினார்‌. ஆனால்‌, அமைச்சர்கள்‌ இவர்கள்‌ ஒன்றும்‌ தெரியாத
    கடாமாடுகள்‌. மூர்க்கர்கள்‌. அதனால்‌ கபடமாக மெளனம்‌ எடுத்தவர்கள்‌
    போல்‌ இருக்கின்றனர்‌’ என்று நிந்தித்துச்‌ சென்றனர்‌. திரும்பும்‌ வழியில்‌
    நகருக்குள்‌ சென்று திரும்பி வரும்‌ ஸ்ரீ சுருதசாகர முனிவரைப்‌ பார்த்தனர்‌.
    இதோ ஒரு கடாமாடு வயிறு புடைக்கத்‌ தின்று திரும்பி வருகிறது’ என்று
    ஏளனம்‌ பேசினர்‌. முனிவர்‌ அந்த அமைச்சர்களை வாதுக்கு இழுத்து
    ஸ்யாத்வாத முறையில்‌ வெற்றி கொண்டார்‌. சங்கத்துக்கு வந்து ஆசாரியரிடம்‌
    நடந்தவற்றைக்‌ கூறினார்‌. அவர்‌, ‘அந்தோ! உன்னால்‌ முனி சங்கம்‌ அழியக்‌
    கூடிய நிலைக்கு வந்துவிட்டது. அதனால்‌ நீர்‌ அமைச்சர்களை எந்த இடத்தில்‌
    வாதிட்டீரோ அதே இடத்தில்‌ இன்றிரவு காயோத்ஸர்கமாய்‌ தியானத்தில்‌
    இருந்தால்‌ சங்கம்‌ தப்பிக்கும்‌’ என்றார்‌. முனிவரும்‌ அவ்வாறு அங்குச்‌ சென்று .
    தியானத்தில்‌ இருந்தார்‌. வாதில்‌ தோற்ற அமைச்சர்கள்‌ முனிவர்களை ஒழிக்க
    அன்றிரவு கத்தியுடன்‌ வந்தனர்‌. வரும்‌ வழியில்‌ தியானத்தில்‌ இருக்கும்‌
    முனிவரைக்‌ கண்டு அவரைக்‌ கொல்ல நால்வரும்‌ கத்தியை ஓங்கினார்கள்‌.
    “ அவ்வளவில்‌ ஓங்கிய கைகள்‌ முனிவருடைய தவ வலிமை அறிந்த நகர
    தேவதையால்‌ ஓங்கியவாறே ஸ்தம்பித்து நின்றுவிட்டன. மறுநாள்‌ காலை
    மக்கள்‌ இந்தக்‌ காட்சியைக்‌ கண்டு அரசனுக்குத்‌ தெரிவித்தனர்‌. அரசன்‌
    அங்கு வந்து அமைச்சர்கள்‌ மீது கடும்‌ கோபம்‌ கொண்டு அவர்களைக்‌
    கொல்ல நினைத்தான்‌. ஆனால்‌ பரம்பரையாக அரசுக்கு சேவை செய்பவர்‌
    என்பதால்‌ கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதைமேல்‌ ஏற்றி நாடு
    கடத்திவிட்டான்‌.
    அருங்கலச்செப்பு 64
    இனி, குருஜாங்கல நாட்டு அஸ்தினாபுரத்தில்‌ மகாபத்மன்‌ என்ற அரசன்‌
    அரசு செய்தான்‌. அவன்‌ மனைவி லக்ஷ்மிமதி. அவர்களுக்கு பத்மன்‌, விஷ்ணு
    என்று மகன்கள்‌ இருவர்‌. பத்மனுக்கு அரசு ஆட்சியை ஒப்படைத்து விட்டு
    விஷ்ணுவுடன்‌ அரசன்‌ தவத்தை மேற்கொண்டான்‌. அப்போது பலி முதலான
    அமைச்சர்கள்‌ பத்மராஜனிடம்‌ அமைச்சர்‌ ஆனார்கள்‌. அக்காலத்தே
    கும்பரபுரம்‌ என்னும்‌ வலிவான கோட்டையுடைய அரசன்‌ சிம்மபலன்‌
    பத்மராஜனுக்கு மிகுந்த தொல்லை தந்தான்‌. அரசன்‌ அதனால்‌ பெரும்‌ கவலை
    கொண்டான்‌. அரசன்‌ கவலை அறிந்த அமைச்சன்‌ பலி அரசன்‌ அனுமதி
    பெற்றுச்‌ சென்று சிம்மபமாலனை கைது செய்து வந்தான்‌. தன்‌ புத்தி கூர்மையால்‌.
    இதனால்‌ மகிழ்ச்சி அடைந்த அரசன்‌ அவனுக்கு வேண்டுவதை தருவதாகக்‌
    கூறினான்‌. அதற்கு அமைச்சன்‌ தான்‌ வேண்டும்போது பெற்றுக்‌ கொள்வதாகக்‌
    கூறிவிட்டான்‌.
    இப்படி இருக்கும்‌ போது அகம்பனாசாரியர்‌ தம்‌ எழுநூறு
    முனிவர்களுடன்‌ அந்நகருக்கு வந்தார்‌. அதனை அறிந்த பலி பழைய
    துவேஷம்‌ காரணமாக அவர்களைக்‌ கொல்ல நினைத்தான்‌. முன்‌ வாக்குக்‌
    கொடுத்தபடி பத்மராஜனிடம்‌ தனக்கு ஏழு நாள்களுக்கு ஆட்சி பொறுப்பு
    வேண்டும்‌ என்று கேட்டான்‌. அரசனும்‌ அவ்வாறு கொடுத்து விட்டு அந்தப்புரம்‌
    சென்று விட்டான்‌. அவ்வளவில்‌ பலி யாகத்தை செய்ய முற்ப்பட்டான்‌.
    முனிவர்களைச்‌ சுற்றி வேலி இட்டு விலங்குகளை உள்ளே போட்டு யாகத்தைத்‌
    தொடங்கினான்‌. முனிவர்கள்‌ சலனமின்றி உறுதியாக தியானத்தில்‌ நின்றனர்‌.
    இதே சமயம்‌, மிதிலாபுரிக்குப்‌ பக்கத்தில்‌ பர்வத குகையில்‌ தவம்‌ செய்து
    கொண்டிருந்த ஸ்ரீ சுருதசாகரசந்திர ஆசாரியர்‌ தம்‌ குகையை விட்டு வெளியில்‌
    வந்து ஆகாயத்தை நோக்க திருவோன நக்ஷத்திரம்‌ சலிப்பதைக்‌ கண்டு தம்‌
    அவதி ஞானத்தால்‌ முனிவர்களுக்கு ஏற்படும்‌ துன்பத்தை எண்ணி
    பிரலாபித்தார்‌. அதனைப்‌ பக்கத்திலிருந்த புஷ்பதந்தன்‌ என்னும்‌ வித்யாதர
    உயர்ந்த சிராவக விரதன்‌ கேட்டறிந்து அவர்களைத்‌ தப்புவிக்க வழியுண்டோ
    எனக்‌ கேட்டார்‌. அதற்கு அவர்‌ தரணி பூஷணம்‌ என்னும்‌ மலையில்‌ தவம்‌
    செய்யும்‌ விக்ரியாரித்தியுடைய விஷ்ணு முனிவர்‌ நிவர்த்திக்க முடியும்‌ என்றார்‌.
    உடனே வித்யாதரன்‌ தன்‌ வித்தையினால்‌ விஷ்ணு முனிவரை அடைந்து
    வணங்கி செய்தியை விளக்கினான்‌. விஷ்ணு முனிவரும்‌ தம்‌ கையை நீட்டிப்‌
    பார்க்க அது நெருந்தூரம்‌ நீளுவதைக்‌ கண்டு தனக்கு ரித்தி இருப்பதை அறிந்து உடனே வான்‌ வழி பத்மராஜனிடம்‌ சென்று முனிவர்களுக்கு துன்பம்‌
    உண்டாக்கலாமா?எனக்‌ கேட்க, தான்‌ பலிக்கு ஆட்சியை ஒப்படை ததுஸ்ளதைக்‌
    கூறித்‌ துக்கப்பட்டான்‌.
    அருங்கலச்செப்பு 65
    இதனை அறிந்த விஷ்ணு முனிவர்‌ வாமன ரூபத்தை அடைந்து ஒரு
    பிராமணனாக உருமாறி பலி அரசனிடம்‌ மூன்று அடி மண்‌ கேட்டார்‌.
    பிராமணருடைய வேத உச்சரிப்பில்‌ மகிழ்ந்த பலி என்ன வேண்டுமானாலும்‌
    கேட்கலாம்‌ என்றான்‌. தனக்கு மூன்றடி மன்‌ போதும்‌ என்று கூறிவிட்டார்‌.
    பிறகு அவர்‌ விரும்பியபடி தாரை வார்த்துக்‌ கொடுத்தான்‌; அதனை ஏற்ற
    விஷ்ணு முனிவர்‌ தம்‌ விக்ரியா சக்தியால்‌ மேருவில்‌ ஒரு அடியையும்‌,
    மானுஷோத்திர மலை மீது மற்றொரு அடியையும்‌ வைத்து மூன்றாவது அடி
    மண்‌ எங்கு என்று கேட்டார்‌ பலியிடம்‌. பலி முதலானோர்‌ அதனைக்‌ கண்டு
    அஞுசி நடுங்கி அவரிடம்‌ சரணடைந்தனர்‌. அமைச்சர்கள்‌ முனிவர்களை
    துன்பத்திலிருந்து விடுவித்து அவர்களை வணங்கி மன்னிப்புக்‌ கேட்டனர்‌.
    பிறகு ஜின தருமத்தில்‌ சேர்ந்து சிராவக நெறியை ஏற்றனர்‌.
    உறுப்பிகளின்‌ இன்றியமையாமை ]
  3. உறுப்பின்‌ குறையின்‌ பயனின்று காட்சி
    மறுப்பாட்டின்‌ மந்திரமே போன்று.

இது மேலே கூறிய எட்டு உறுப்புகளின்‌ இன்றியமையாமையை
உணர்த்திற்று.
(பொ-ள்‌) காட்சி-நற்காட்சி, உறுப்பின்‌ – மேலே கூறிய எட்டு
உறுப்புகளில்‌, குறையின்‌ – குறைவுபடுமாயின்‌, மறுப்பாட்டின்‌ – குற்றம்பட்ட.
மந்திரம்‌ – மந்திரம்‌,போன்று – போல,பயனின்று – பயனில்லாதுபோகும்‌.எ-று
(க-ரை! குறையோடு கூடிய மந்திரம்‌ வேண்டிய பயனைத்‌ தராதது
போல உறுப்புகளில்‌ குறைவுபட்ட நற்காட்சியம்‌ பயன்‌ தராது என்பதாம்‌.
(வி-ரை! நற்காட்சிக்குப்‌ பயனாவது பிறப்பு முதலான உடைய
பிறவியைக்‌ கெடுத்து சித்தநிலையைத்‌ தருவதாகும்‌. எப்படி மந்திரத்தில்‌
மாத்திரை முதலான குறையும்‌ போது அதனால்‌ நஞ்சு முதலானவற்றை நீக்க
முடியாதோ அதே போன்று நற்காட்சியும்‌ உறுப்புகளில்‌ குறைவுபடுமாயின்‌
பிறவித்‌ தொடர்பை அறுக்க ஆற்றல்‌ இல்லாது போகும்‌. எட்டு
உறுப்புகளோடு கூடிய நற்காட்சியே பிறவியை அறுக்கும்‌ ஆற்றல்‌ உடையது
என்பது கருத்தாகும்‌. மாத்திரை குறைந்த மந்திரம்‌ உடலில்‌ ஏறிய நஞ்சினை
நீக்காதவாறு போல உறுப்பு குறைந்த காட்சி பிறவித்‌ தொடர்ச்சியை
அறுக்காது என ஆசாரியர்‌ சுமந்த பத்திரர்‌ ரத்னகரண்டக சிராவக ஆசாரத்தில்‌
குறிப்பிடுகிறார்‌.
அருங்கலச்செப்பு 66
29 மூவகை மூடமும்‌ எட்டு மயங்களும்‌
தோவகையில்‌ காட்சியார்க்கு இல்‌.
இது நற்காட்சியர்‌ தன்மை கூறுகிறது.
(ப – ரை தோவகை இல்‌ – குற்ற மில்லாத, காட்சியார்க்கு – நல்‌
நம்பிக்கை உடையவர்க்கு, மூவகை – மூன்று வகைப்படும, மூடமும்‌ –
மூடத்தன்மையும்‌, எட்டு – எட்டு வகைப்படும்‌, மயங்களும்‌ –
மதங்களும்‌, இல்‌ – இல்லை, எ-று.
(க – ரை! நல்‌ நம்பிக்கையாளருக்கு மூன்று மூடத்தனமும்‌ எட்டு
செருக்குகளும்‌ இல்லை என்பதாம்‌.
(வி – ரை! தோம்‌ வகை என்பது தோவகை ஆயிற்று. தோம்‌ –
குற்றம்‌. செய்யுள்‌ விகாரம்‌. மயம்‌ – செருக்கு. “எண்மயத்து’ என்றார்‌
பிறரும்‌.” எட்டு உறுப்புகளுடையது நல்‌ நம்பிக்கை என்று மேலே
கூறினார்‌. அந்நம்பிக்கையாளரிடம்‌ இல்லாத தன்மைகள்‌ மூன்று
மூடத்தனங்களும்‌ எட்டு

செருக்குகளும்‌ என்றார்‌ இங்கே.
உலக மூடம்‌
——/,
30 வரைப்பாய்தல்‌ தீப்புகுதல்‌ ஆறாடல்‌ இன்ன
உரைப்பின்‌ உலக மயக்கு.
இது நிறுத்த முறையில்‌ உலக மூடம்‌ இன்னது என்று கூறுகிறது.
(ப – ரை! உலக மயக்கு – உலக மூடத்தனமாவது, உரைப்பின்‌ –
இத்‌ தன்மையது எனச்‌ சொல்லுமிடத்து, வரைபாய்தல்‌ – மலையிலிருந்து
விழுந்து இறத்தலும்‌, தீப்புகுதல்‌ – நெருப்பில்‌ செல்லுதலும்‌, ஆறு – ஆறு, கடல்‌ போன்ற நீர்‌ நிலைகளில்‌, ஆடல்‌ – முழுக்காடுதலும்‌, இன்ன

  • இவை போன்ற பிறவும்‌ ஆகும்‌, எ-று.
    (க – ரை மலை ஏறி விழுந்து இறத்தல்‌, நெருப்பில்‌ செல்லுதல்‌, நீர்‌ நிலைகளில்‌ முழுகி எழுதல்‌ போன்றன செய்தல்‌ உலக மூடம்‌ என்பதாம்‌.
    3 தீல கேசி, 122,
    அருங்கலச்செப்பு 67
    (வி – ரை குருட்டு நம்பிக்கையை உலக மூடம்‌ என்றார்‌. உலகத்தார்‌
    செய்தலைப்‌ பார்த்துத்‌ தானும்‌ எண்ணிப்பாராது செய்தல்‌ உலக மூடம்‌
    என்பதாம்‌. தேவ மூடம்‌, பாஷாண்டி மூடம்‌ போல ஒரு வரையறை
    இன்மையால்‌ பிற மூடத்தனங்களை உலக மூடம்‌ என்று தொகுத்தனர்‌
    போலும்‌. ‘இன்ன’ என்ற சொல்‌ வழி அவை வரம்பின்றி கிடக்கின்றன எனப்‌
    பெற வைத்தார்‌.
    உலகத்தில்‌ பிறப்பு, இறப்பு, மறு பிறவி, புண்ணியம்‌, பாபம்‌ இவை
    முதலானவற்றின்‌ உண்மை இயல்பை அறியாதவர்கள்‌ மெய்யறியாதவர்கள்‌
    எனப்படுவர்‌. அவர்கள்‌ மிகுந்த எண்ணிக்கையில்‌ காணப்படுவதால்‌
    அவர்கள்‌ செய்கின்ற செயல்களைப்‌ பார்த்துப்‌ பார்த்துப்‌ பிறரும்‌ நகல்‌
    செய்வர்‌. கங்கை யமுனை நதிகளில்‌ குளித்தால்‌ பாபம்‌ தீரும்‌ என்றும்‌, கடலில்‌
    மூழ்குதல்‌ புண்ணியம்‌ என்றும்‌, தீப்‌ புகுதல்‌ உடன்‌ கட்டை ஏறுதல்‌ மலை ஏறி
    விழுதல்‌ முதலானவை புண்ணியம்‌ என்றும்‌ அதனால்‌ தேவ வாழ்வு மோக்ஷம்‌
    போன்றன கிடைக்கும்‌ என்றும்‌ பலவாறான கற்பனைகளைக்‌ கற்பித்துக்‌
    கொண்டு செய்வர்‌. அது போன்ற செயல்களில்‌ நல்‌ நம்பிக்கையர்‌ ஈடு படாது
    இருப்பர்‌ என்பதாம்‌.
    மாமாங்கம்‌ ஆடல்‌ மணல்குவித்தல்‌ கல்லிடுதல்‌
    தாமோங்கு உயர்வரைமேற்‌ சாவீழ்தல்‌ – காமம்‌ கொண்டு
    ஆடோடு எருமை அறுத்தல்‌ இவை உலக
    மூடம்‌ என்‌ உணரல்‌ பாற்று
    என்று கூறுதலும்‌ அறிக. “
    மயக்கு “ மயங்கு ; முதல்‌ நிலை திரிந்த தொழிற்பெயர்‌. மயக்கு-
    மூடம்‌ அதாவது பிழைபட. உணர்தல்‌. வரைப்பாய்தல்‌-ஒற்று எதுகை நோக்கி
    மிகுந்தது, செய்யுள்‌ விகாரம்‌.
    34 வாழ்விப்பர்‌ தேவர்‌ எனமயங்கி வாழ்த்துதல்‌
    பாழ்பட்ட தெய்வ மயக்கு.

இது நிறுத்த முறையில்‌ தேவ மூடம்‌ இன்னது என்று கூறுகிறது.

  1. அறநெறிச்சாரம்‌ 15.
    அருங்கலச்செப்பு ட 88
    (ப – ரை வாழ்விப்பர்‌ – வேண்டியன தந்து வாழச்‌ செய்வார்‌, என –
    என்று, மயங்கி – பிழையாக எண்ணி, தேவர்‌ – தேவர்களை, வாழ்த்துதல்‌ –
    வழிபடுதல்‌, பாழ்பட்ட – கேட்டினைச்‌ செய்யும்‌, தெய்வ மயக்கு – தேவ
    மூடத்தன மாகும்‌.
    (க-ரை தேவர்களை வழிப்ட்டால்‌ அவர்கள்‌ வேண்டிய உலகச்‌
    சுகங்களைத்‌ தந்து வாழச்‌ செய்வர்‌ என நம்பி அவர்களை வழிபடுதல்‌ தேவ
    மூடத்தனம்‌ ஆகும்‌ என்பதாம்‌.
    (வி-ரை உலகத்தார்‌ உலக சுகங்களை (புலனின்பங்களைப்‌! பெறும்‌
    பெரு விருப்பம்‌ உடையவர்கள்‌. அதற்காக அவர்கள்‌ சரி, தவறு, முதலான
    நெறி முறைகளைப்‌ பார்ப்பதில்லை. எப்படியாவது சுகம்‌ (புலனின்பம்‌ பெற
    வேண்டும்‌ அவ்வளவே. தங்கள்‌ விருப்பத்தை நிறைவேற்ற தேவர்களும்‌
    உதவி செய்வர்‌ என எதிர்பார்க்கின்றனர்‌. எனவே எந்தத்தேவதையானாலும்‌
    பரவாயில்லை வழிபடுவர்‌. கையூட்டுத்‌ தந்து அரசாங்கத்தில்‌ தமக்கு
    வேண்டுவன செய்து கொள்ள விரும்பும்‌ நெறியற்றவன்‌ போல தேவி
    தேவர்களைப்‌ பக்தியோடு வழிபட்டுப்‌ புலனின்பங்களைப்‌ பெற
    விரும்புகின்றனர்‌ மக்கள்‌, ஆனால்‌ நற்காட்சியாளன்‌ அப்படிச்‌
    செய்வதில்லை. ஏனெனில்‌, எந்தத்‌ தேவதையும்‌ கொடுக்கவும்‌ முடியாது,
    எந்தத்‌ தேவதையும்‌ எடுக்கவும்‌ முடியாது என்பதனை அவன்‌ அறிவான்‌.
    அதுமட்டு மன்று. உலக இன்பங்கள்‌ வேண்டி அவன்‌ வழிபடுவதும்‌ இல்லை.
    அவன்‌ ஆன்ம நன்மை வேண்டியே உண்மையான தேவ குரு நூலுக்கு
    வழிபாடு செய்கிறான்‌. அவர்கள்‌ அருளிய நெறியைக்‌ குறியாக வைத்துச்‌
    செல்லுகிறான்‌.
    மேலும்‌ புண்ணிய பாபம்‌ பற்றி அவன்‌ அறிந்து இருக்கிறான்‌. இந்த
    உலக இன்பங்கள்‌ இருப்பதும்‌ இல்லாமல்‌ போவதும்‌ அவரவர்‌ செய்த
    புண்ணிய பாப வினைகளின்‌ விளைவு என்று அவன்‌ தெரிந்து இருக்கிறான்‌. ஆசாரியர்‌ கார்த்திகேயர்‌ அருளுகிறார்‌.”
    பத்தீயேம்‌ புஜ்ஜமாணோ விந்தர தேவோ வி தேதி ஜதி wel தோ கிம்‌ தம்மே கீரதி ஏவம்‌ சிந்தேயி ஸத்திட்டீ!| ்‌

“பக்தியோடு கூடி பூஜை செய்தால்‌ வியந்தர தேவி தேவர்கள்‌ செல்வம்‌

  1. கார்த்திகேயானுபிரேகை, 320;
    அருங்கலச்செப்பு 69
    தருவார்‌ எனில்‌ பிறகு தருமம்‌ செய்ய வேண்டும்‌ என்பதற்கு என்ன தேவை
    இருக்கிறது?” என்று நற்காட்சியாளன்‌ எண்ணுகிறான்‌.”
    ணய கோ வி தேதி லச்சி ண கோ வி ஜீவஸ்ஸ குணதி உவயாரம்‌ |
    உவயாரம்‌ அவயாரம்‌ கம்மம்‌ பி ஸுஹாஸாகம்‌ குணதி (|
    “உயிர்களுக்கு யாரும்‌ செல்வம்‌ தருவது மில்லை; யாரும்‌
    உதவுவதுமில்லை. அவரவர்‌ செய்த சுப அசுப வினைகளே அவரவர்களுக்கு
    உபகாரமோ அபகாரமோ செய்கின்றன என்று நற்காட்சியாளன்‌
    எண்ணுகிறான்‌” !
    “தேவர்‌’ எனப்‌ பொதுவாகக்‌ குறிப்பிட்டுள்ளதால்‌ ஜினேந்திர
    பகவானையும்‌ உள்ளடக்கிக்‌ கொண்டார்‌ எனக்‌ கருதுதல்‌ வேண்டும்‌.
    ஏனெனில்‌, ஜினேந்திர பகவான்‌ முதலானவர்களுக்கு நற்காட்சியாளன்‌
    வினைகளை அழிக்க வேண்டும்‌ எனும்‌ பாவனையுடன்தான்‌ பக்தி
    முதலியன செய்கிறான்‌: உலக இன்பங்கள்‌ வேண்டி செய்வது இல்லை,
    அதனால்தான்‌ உலகச்‌ சுகம்‌ வேண்டி ஜினேந்திர பகவானுக்குப்‌ பூஜை
    முதலியன செய்யப்படுமானால்‌ நற்காட்சிக்கு அது தோஷம்‌ என்று அவன்‌
    கருதுகிறான்‌. அப்படிப்‌ பட்டவன்‌ விருப்பு வெறுப்புடைய தேவ
    தேவியர்களுக்குப்‌ பூஜை முதலியன செய்வான்‌ என்பது நிகழமுடியாது.
    அதனால்தான்‌ ஆசாரியர்‌ சோம தேவர்‌
    தேவம்‌ ஜகத்த்ரயீநேத்ரம்‌ வ்யந்தராத்யாச்ச தேவதா; |
    ஸமம்‌ பூஜா விதானே ஷு பச்யன்‌ தூரம்‌ வ்ரஜேதத :1!
    “மூவுலகை காண்பதற்குக்‌ கண்போல விளங்கும்‌ அரஹந்த
    பகவாளையும்‌ வியந்தர முதலான தேவர்களையும்‌ பூஜையில்‌ (வழிபாட்டில்‌)
    ஸமமாகப்‌ பார்க்கின்றவன்‌ மிகக்‌ கீழே போவான்‌ அதாவது நரகம்‌ போவான்‌”
    என்று அருளியுள்ளார்‌” வீதராக பகவானையும்‌ பூஜிக்கலாம்‌ தேவப்‌
    பிறவியினரையும்‌ பூஜிக்கலாம்‌ என்று கருதுவோர்‌ என்ன நிலையை :
    அடைவார்கள்‌ என ஆசாரிய தேவர்‌ அருளியுள்ளார்‌. இதற்குக்‌ காரணம்‌
    என்ன வெனில்‌, உலக இன்பங்களை எப்படியாவது பெற வேண்டும்‌ என்னும்‌
  2. கார்த்திகேயானுபிரேகைஷி; 819; 2. திருநூற்றந்தாதி, 96. 3. ரத்னகரண்டக
    சிராவகாசர உரை மேற்கோள்‌, 23
    அருங்கலச்செப்பு 70
    தீவிர இன்ப வேட்கை உணர்வே அடித்தளமாக அமைகிறது அந்தப்‌
    பூஜைக்கு. இதனை ஆகம மொழியில்‌ சொல்ல வேண்டும்‌ என்றால்‌
    ‘பரிக்ரஹம்‌’ என்பர்‌. ஆசாரியர்‌ உமாசுவாமியும்‌, “பஹ்வாரம்ப பரிக்ரஹத்வம்‌
    நாரகஸ்யாயுஷ: என்று குறிப்பர்‌, நரக ஆயுள்‌ பந்தத்திற்குக்‌ காரணம்‌ உலகச்‌
    சுகங்களைத்தேடும்‌ பேராவல்தான – பற்றுகள்தாம்‌.’ என்கிறார்‌.
    நற்காட்சியாளன்‌ தான்‌ முன்பு செய்த வினைகளுக்கு ஏற்பவே தனக்கு
    இப்போது சுப, அசுப பயன்கள்‌ கிடைக்கின்றன; எவரும்‌ கொடுப்பதாலோ
    எடுப்பதாலோ வருவது அன்று” என மிக உறுதியான நம்பிக்கையோடு
    இருக்கிறான£ அதனால்தான்‌ அவன்‌ குரு, தேவர்களை வழிபட்டுத்‌ தன்‌
    விருப்பத்தை நிறைவேற்ற விரும்புவதில்லை.
    சாஸன தேவர்களைப்‌ பூஜித்தால்‌ தவறு இல்லை என்று கருதலாமா
    எனச்‌ சிலர்‌ ஐயம்‌ எழுப்புகின்றனர்‌. பரம ஆகமத்தில்‌ சாஸன தேவர்களைப்‌
    பற்றிக்‌ குறிக்கப்பட்டுள்ளது. பிரதிஷ்டை. முதலான .பெருவிழாக்களில்‌
    அவர்களுக்குச்‌ சன்மானம்‌ அளிக்கப்படுகிறது என்பதே உண்மை. அவர்கள்‌ –
    பகவானைப்‌ போல நாள்‌ வழிபாட்டுக்கு உரியவர்கள்‌ என்றோ தனி ஆலயம்‌
    கட்டி பூஜை செய்து வழிபடவேண்டியவர்கள்‌ என்றோ ஆகமங்களில்‌
    குறிப்புகள்‌ இல்லை; ஏனெனில்‌ அவர்கள்‌ நற்காட்சியாளரால்‌ வழிபடத்தக்க
    குணச்‌ சிறப்புகளை உடையவர்களும்‌ அல்லர்‌; வழிபட்டால்‌ வந்து உதவக்‌
    கூடியவர்களும்‌ அல்லர்‌. அவர்களைப்‌ போன்றவர்களை வழிபடுவதும்‌
    தெய்வ மூடத்தனம்‌ என இந்நூலாசிரியரே அடுத்துக்‌ கூறுகிறார்‌.
    பாழ்‌-கேடு, பட்ட-செய்த; கேட்டினைச்‌ செய்த எனப்‌ பொருளாகிறது;
    பாழ்படும்‌ என்பது பாழ்பட்ட என வந்தது கால வழுவமைதி. இத்தகைய
    வழிபாடு விரைந்து கேட்டினைச்‌ செய்யும்‌ என்பதால்‌ பட்ட என்ற இறந்த
    காலத்தில்‌ குறிப்பிட்டு கேட்டின்‌ விரைவினைச்‌ சுட்டினார்‌ எனக்‌ கொள்ள
    வேண்டும்‌.” மயக்கு – மயங்கு – முதல்நிலை திரிந்த தொழிற்பெயர்‌. மயங்குதல்‌
  • பிழைபட உணர்தல்‌.
    வழிபாட்டின்‌ குறிக்கோள்‌ உலக இன்ப வேண்டலாக இருத்தல்‌ கூடாது
    எனக்‌

கூறினார்‌ இக்‌ குறள்‌ வழி.

  1. தத்வார்த்த சூத்திரம்‌, 6/15; 2. சா.மாயிக பாடம்‌, 31; 2, நன்னூல்‌, பொது 84,
    அருங்கலச்செப்பு 7)
    32 மயக்கார்வம்‌ செற்ற முடையாரை ஏத்தல்‌
    துயக்குடைத்‌ தெய்வ மயக்கு.
    இதுவும்‌ அது.
    (ப.- ரை மயக்கம்‌-மெய்யறியாமையும்‌, ஆர்வம்‌-ஆசையும்‌, செற்றம்‌-
    வெறுப்பும்‌, உடையாரை-உடைய தேவர்களை, ஏத்தல்‌-போற்றி வழிபடுதல்‌,
    துயக்குடை-வினை கட்டுக்கு ஏதுவான, தெய்வ மயக்கு-தேவ
    மூடத்தனமாகும்‌,
    (க-ரை! மெய்யறியாமை, ஆசை, வெறுப்புடைய தேவர்களை
    வழிபடுதல்‌ தீவினைக்‌ கட்டுக்கு ஏதுவான தேவ மூடமாகும்‌ என்பதாம்‌.
    (வி-ரை மயக்கம்‌-தத்துவங்களை உள்ளவாறு அறியாது பிழையாக
    உணரும்‌ மித்யாத்துவம்‌; இதனை தர்சன மோஹனீயம்‌ என்பர்‌ ஆகமத்தில்‌.
    ஆர்வம்‌, செற்றம்‌ முறையே ராக, துவேசம்‌ எனப்படும்‌: இவை சாரித்திர
    மோஹனீயம்‌ ஆகும்‌. குணத்தால்‌ உயர்ந்து நின்றவர்களே வாழிபாட்டுக்கு
    உரியவர்கள்‌. ஏனெனில்‌, வழிபாட்டின்‌ பயன்‌ வினைகளை அழித்து உண்மை
    குணங்களால்‌ உயர்ந்து நிற்றலே ஆகும்‌.
    சேர்ந்தவரைத்தன்‌ நிலைக்கு உயர வைப்பதே அருக வழிபாட்டின்‌
    விளைவு என்பதனை,
    நினைத்தனை யாயினும்‌ வாழ்த்தினை யாயினும்‌ நீயுநெஞ்சே
    தினைத்துணை நல்லறம்‌ செய்தனை யாயினும்‌ சேர்ந்தவரைப்‌
    பினைத்தனை வந்தனை செய்யவொட்டாப்‌ பிண்டி யார்க்கரிதோ
    உனைத்‌ தனையே ஒக்க இத்தனை நாளில்‌ உயர்த்துகையே !
    எனக்‌ காட்டுவர்‌ அவிரோதி ஆழ்வார்‌. நற்காட்சியாளன்‌ இதில்‌ உறுதிப்பாடு
    உடையவன்‌. அதனால்‌ அவன்‌ பிறவி சுழற்சிக்கு ஏதுவான காம வெகுளி
    மயக்கங்களுடையாரை வழிபடமாட்டான்‌. அப்படி வழிபட்டால்‌ வினை
    பந்தத்திற்குக்‌ காரணமாகும்‌ என்று அறிந்துள்ளான்‌. துயக்கு-கட்டு: உடை-
    உடைய; துயக்குடை – கட்டினையுடைய; கட்டு இங்கே வினைக்கட்டு
    ஆகும்‌. பிறவியில்‌ இருப்பவரை வழிபடுவதால்‌ தாமும்‌ பிறவிக்‌ கட்டுக்கு
    இலக்காவர்‌ என்பதாம்‌. முன்‌ குறளில்‌ புலன்‌ சுகம்‌ வேண்டி வழிபடுதல்‌
  2. திருநூற்றந்தாதி, 85
    அருங்கலச்செப்பு 72
    கேட்டினைத்‌ தரும்‌ என்றார்‌. இக்‌ குறளில்‌ குணம்‌ இல்லாதவரை
    வழிபடுவதால்‌ வரும்‌ கேடு பிறவி சுழற்சி எனத்‌ தெளிவு செய்தார்‌.
    தேவப்‌ பிறவியினர்‌ விருப்பு வெறுப்புகள்‌ (கசாயம்‌) உடையவர்கள்‌
    ஆதலால்‌ அவர்கள்‌ வழிபாட்டுக்கு உரியவர்கள்‌ அல்லர்‌ என்பது இதனால்‌
    விளங்கும்‌. அதே போன்று கணவன்‌ மனைவியாக உள்ள பிற தேவர்களும்‌
    விருப்பு வெறுப்புகளை உடைய பிறரும்‌ வழிபாட்டுக்கு உரியவர்‌ அல்லர்‌
    என்பதும்‌ விளங்கும்‌. நற்காட்சியாளன்‌ தேவ மூடத்தனம்‌ செய்யான்‌ என்பது
    கருத்து.
  3. மாசுண்ட மார்க்கத்து நின்றாரைப்‌ பூசித்தல்‌
    பாசண்டி மூடம்‌ எனல்‌.
    இது நிறத்த முறையில்‌ பாசண்டிமூடம்‌ இன்னது எனக்‌ கூறுகிறது,
    (ப-ரை மாசுண்ட – குற்றமுடைய, மார்க்கத்து – நெறியில்‌, நின்றாரை
    நிற்கின்றவர்களை, பூசித்தல்‌ – வணங்குதல்‌ அல்லது வழிபடுதல்‌, பாசண்டி
    மூடம்‌ – குரு மூடம்‌, எனல்‌ – எனப்படும்‌, எ.று.
    (க-ரை! மித்யா நெறியில்‌ இருப்பாரை குருவாக ஏற்றுப்‌ போற்றுதல்‌
    பாசண்டி மூடம்‌ எனப்படும்‌ என்பதாம்‌. ்‌
    (வி-றை மாசுண்ட நெறி – மித்யா நெறி; மோக்ஷ நெறிக்கு எதிரானது; பிறவிக்குக்‌ காரண மானது. உண்மையான தேவன்‌ அருளிய மோக்ஷ நெறியில்‌ தானும்‌ ஒழுகி பிறரையும்‌ ஒழுக வைப்பதால்‌ குரு பயனுடையவர்‌ ஆகிறார்‌. ஆனால்‌, மோக்ஷ நெறி இன்னது என்று அறியாது, வேடம்‌ மட்டும்‌ குருவேடம்‌ தரித்து, வண்டி வாகனம்‌, ஆள்‌, பணம்‌, பொன்‌, வெள்ளி, ஆரம்பம்‌, முதலான கொண்டு பிறவி நெறியில்‌ இருந்து தானே பாபத்தை ஈட்டிக்கொண்டிருப்பவரை, இல்வாழ்வான்‌ போன்று திருமண ஏற்பாடு முதலான பாப நிகழ்ச்சிகளில்‌ ஈடுபடுபவரை, குரு என்று எப்படி ஏற்பது? விவேகம்‌ இல்லாமல்‌ இந்த வேடதாரிகளைப்‌ பூஜிப்பது, புகழ்வது, வந்தனை செய்வது முதலான எல்லாம்‌ பாசண்டி மூடம்‌ எனப்படும்‌. நற்காட்சியாளன்‌ அவர்களை வணங்க மாட்டான்‌, மனங்கொண்டு வாழ்த்த மாட்டான்‌.
    அருங்கலச்செப்பு 75
    ஏகம்‌ ஜிநஸ்ஸ ரூவம்‌ பீயம்‌ உக்கிட்ட ஸாவயாணம்‌ து !
    அவரிட்டியான தயியம்‌ சவுத்த புண லிங்க தம்ஸணாம்‌ ணத்தி 1!
    ‘ஜிநர்‌ உருவான நிர்வாண தோற்றம்‌, ஐலகர்‌, சுல்லகர்‌, ஆர்யிகை
    சுல்லகியர்‌ இவர்களே ஜிநர்‌ நெறியில்‌ உள்ள துறவியர்‌; நான்காவது தோற்றம்‌
    இல்லை’ என ஆசாரியர்‌ குந்தகுந்தர்‌ அருளியுள்ளார்‌.!’ அவர்களைத்‌ தவிர
    வேறு வேடதாரிகளை நற்காட்சியாளன்‌ ஏற்பதில்லை / போற்றுவதில்லை.
    34 பிறப்புக்‌ குலம்வலி செல்வம்‌ வனப்புச்‌
    சிறப்புத்‌ தவமுணர்வோடு எட்டு.
    இது எட்டு மதங்களின்‌ வகை கூறகிறது.
    (ப-றை பிறப்பு – தாய்‌ வழி (ஜாதி, குலம்‌ – தந்‌ைத வழி, வலி – வலிமை,
    செல்வம்‌ – சொத்து, வனப்பு – அழகு, சிறப்பு – பெருமை, தவம்‌ – தபம்‌,
    உணர்வோடு – ஞானத்தோடு எட்டு – எட்டாகும்‌.
    (க-ரை! ஜாதி முதலான எட்டு மதங்களுக்குக்‌ காரணமாகும்‌.
    (வி-ரை ஜிந ஆகமத்தில்‌ ஜாதி, குலம்‌ என வேறு வேறாகக்‌
    கருதப்பட்டுள்ளன. தாய்வழி குலம்‌ ஜாதி என்றும்‌, தந்தை வழி குலம்‌ குலம்‌
    என்றும்‌ கருதப்பட்டுள்ளது. எனவே செருக்குக்குக்‌ காரணம்‌ எட்டாக
    எண்ணப்பட்டுள்ளன. பிறர்‌ ஜாதி குலங்களை ஒன்றாகக்‌ கருதுவதால்‌ மதம்‌
    ஏழு என எண்ணியுள்ளனர்‌.
    35 இவற்றால்‌ பெரியேம்யாம்‌ என்றே எழுந்தே
    இகழ்க்கில்‌ இறக்கும்‌ அறம்‌.
    இது மதத்தின்‌ விளைவு கூறுகிறது.
    (ப-றை இவற்றால்‌ – மேற்கூறிய எட்டின்‌ நிமித்தமாக, யாம்‌ – நாம்‌,

பெரியேம்‌ – பெருமைக்கு உரியவர்கள்‌, என்றே – என்று எண்ணி, எழுந்தே
% தர்சன பாகுடம்‌, 18
அருங்கலச்செப்பு 74
செருக்குற்றே, இகழ்க்கில்‌ – பிறரைத்‌ தாழ்த்தி இகழ்ந்தால்‌, அவர்களுக்கு,
அறம்‌ – நற்காட்சி, இறக்கும்‌ – அழியும்‌, எ-று.
(க-ரை சாதி முதலான எட்டின்‌ நிமித்தமாக ஒருவன்‌ செருக்குற்றுப்‌
பிறரைத்‌ தாழ்த்திப்‌ பார்ப்பானானால்‌ அவனிடம்‌ உள்ள நற்காட்சி அழியும்‌
என்பதாம்‌.
(வி-ரை! அறம்‌ ஆன்மாவின்‌ குணமாகும்‌. மும்மணியை அறம்‌
என்றார்‌ நூலாசிரியர்‌’. குணம்‌ எப்போதும்‌ பொருளைவிட்டுப்‌ பிரிவதில்லை.
அதனால்‌ ஒருவரை இகழும்‌ போது அவருடைய குணத்தை இகழ்ந்தது
ஆகிறது. அதனால்‌ தாள்‌ எந்தக்‌ குணத்தைப்‌ போற்றுகிறானோ அந்தக்‌
குணத்தையே இகழ்ந்தது ஆகிறது. எனவே நற்காட்சியாளன்‌ பிறரை
எப்போதும்‌ இகழ்ச்சியோடு பார்க்க மாட்டான்‌; ஏனெனில்‌ அவன்‌
குணங்களில்‌ – அறத்தில்‌ மிகுந்த ஈடுபாடு உடையவன்‌.
எழுதல்‌ – மனம்‌ கிளர்தல்‌, சிறப்புணர்வு கொள்ளுதல்‌. அதனையே
செருக்கு என்றார்‌.
[( ந்ற்காட்சியின்‌ இறப்பு _}
36 அறம்‌ உண்டேல்‌ யாவரும்‌ எள்ளப்‌ படாஅர்‌
பிறகுணத்தால்‌ என்ன பயன்‌?

இது நற்காட்சியின்‌ சிறப்புக்‌ கூறுகிறது.
(ப-ரை! அறம்‌-நற்காட்சி, உண்டேல்‌- உண்டாகி இருக்குமானால்‌,
யாவரும்‌ – எவரும்‌, எள்ளப்படாஅர்‌ – இகழ்தலைப்‌ பெறார்‌, பிற குணத்தால்‌

  • நற்காட்சி தவிர பிற குணங்கள்‌ இருப்பதால்‌, என்ன பயன்‌ – என்ன பயன்‌
    உண்டு? ஒன்று மில்லை எ-று.
    (க-ரை நற்காட்சியுடையாரை அனைவரும்‌ போற்றுவர்‌; அது தவிர பிற

குணங்கள்‌ இருப்பதால்‌ என்ன பயன்‌? ஒன்றுமில்லை.

  1. அருங்கலச்செப்பு 2;
    அருங்கலச்செப்பு 75
    … (வி-ரை பிற குணமாவன ஜாதி முதலான சிறப்புகள்‌. அவை எல்லாம்‌
    இருந்தும்‌ நற்காட்சி இல்லை என்றால்‌ அச்சிறப்புகளால்‌ அடையும்‌ பயன்‌
    ஏதுமில்லை. மாறாக அவற்றால்‌ செருக்குற்றுக்‌ கீழ்நிலை அடைவார்கள்‌.
    நற்காட்சிக்கு முன்னே பிற சிறப்புகள்‌ மதிப்பில்லாதன: புகழ்ச்சி பெறாதன
    என்பதாம்‌.
    37 பறையன்‌ மகனெனினும்‌ காட்சி உடையான்‌
    இறைவன்‌ என உணரல்‌ பாற்று.
    இதுவும்‌ அது.
    (ப-ரை பறையன்‌ மகன்‌ – நீச குலத்தில்‌ பிறந்தவன்‌, எனினும்‌”
    என்றாலும்‌, காட்சியுடையான்‌-நல்நம்பிக்கை உடையவன்‌, இறைவன்‌ –
    பெருமை அடைந்தவன்‌, என-என்று, உணரல்பாற்று-உணரத்தகும்‌
    பான்மையது.
    (க-ரை கீழ்க்‌ குலத்தில்‌ தோன்றியவன்‌ ஆனாலும்‌ காட்சியுடையவன்‌
    ஆனால்‌ பெருமையுடையவனாகக்‌ கருதப்படுவான்‌ என்பதாம்‌.
    (வி-ரை! ஆன்மாவின்‌ நம்பிக்கை குணத்தின்‌ தூய மாறுகை நற்காட்சி
    இந்த நற்காட்சி நான்கு கதியிலும்‌ மனமுடைய பர்யாப்தி அடைந்த
    பவ்வியனுக்கு உண்டாக முடியும்‌. இது உண்டாவதற்கு கதி, ஜாதி, குலம்‌
    முதலான கட்டுப்பாடுகள்‌ இல்லை. யாருக்கு நற்காட்சி தோன்றி விடுகிறதோ
    அவர்‌ முடிவற்ற பிறவித்‌ தொடர்பை முடிவுக்குக்‌ கொண்டு வந்து விடுகிறார்‌.
    இறை நிலையை அடைந்து விடுகிறார்‌. அதனால்‌ நற்காட்சியுடையார்‌ நீச்ச
    குலத்தில்‌ பிறந்திருந்தாலும்‌ பெருமைக்‌ குரியவரே, போற்றுதலுக்கு
    உரியவரே!
    பறையன்‌-சாண்டாளன்‌; குறிப்பிட்ட ஒரு குலத்தைக்‌ குறிக்காமல்‌ நீச்ச
    நிலையைக்‌ குறித்து நின்றது. நற்காட்சி அடைந்த பிறகே இறைநிலை
    அடையப்படுகிறது. அதனால்‌ நற்காட்சி அடைந்தவனை பெருமை
    உடையவன்‌ எனக்‌ கருதுக என்றார்‌.
    ‘நீறு பூத்த நெருப்பு’ உவமை காட்டுகிறார்‌ ஆசாரியர்‌ ஸமந்தபத்திரர்‌.
    நெருப்பு நீற்றில்‌ மறைந்து கிடப்பது போல கீழ்க்குல நீற்றில்‌ காட்சியுடைய
    அருங்கலச்செப்பு : 76
    உயிர்‌ மறைந்து கிடக்கிறது என்று காட்டுகிறார்‌.’ அவருக்கும்‌ அதுவே
    கருத்து.
    கடவுளுக்கு ஒப்பானவர்‌ என்று கூறுவாரும்‌ உளர்‌.
    38 தேவனும்‌ நாயாகும்‌ தீக்காட்சி யால்நாயும்‌
    தேவனாம்‌ நற்காட்சி யால்‌.
    இதுவும்‌ அது.
    (ப-றை! நற்காட்சியால்‌ – நல்‌ நம்பிக்கையால்‌, நாயும்‌ -நாய்‌ பிறவியாக
    இருந்தாலும்‌. தேவனாம்‌ – தேவனாகச்‌ சென்று பிறக்க முடியம்‌; தீக்‌ காட்சியால்‌
  • பொய்‌ நம்பிக்கையால்‌, தேவனும்‌ – தேவப்‌ பிறவியில்‌ பிறந்தவனாயினும்‌,
    நாயாகும்‌ – நாய்‌ போன்ற விலங்கு கதியில்‌ பிறப்பான்‌. ௪ – று.
    (க-றை நல்‌ நம்பிக்கையால்‌ விலங்குகூட தேவனாகச்‌ சென்று பிறக்கும்‌
    தீய நம்பிக்கையால்‌ தேவனும்‌ விலங்காகப்‌ பிறப்பான்‌ என்பதாம்‌.
    (வி-ரை! நற்காட்சியின்‌ சிறப்பைக்‌ காட்ட பல வரலாறுகள்‌ பிரதமானு
    யோகத்தில்‌ கூறப்பட்டுள்ளன. ஜீவ்கசாமி உரைத்த பஞ்சமந்திரம்‌ கேட்டு நாய்‌
    சுதர்ஸன யக்ஷனாயிற்று; பார்சுவநாதர்‌ உரைத்த பஞ்சமந்திரம்‌ கேட்டு நாக- நாகினி தரணேந்திரன்‌ பத்மாவதி ஆயின; பஞ்ச மந்திரம்‌ கேட்ட ஓர்‌ எருதும்‌
    தேவனாயிற்று. தருமத்தின்‌ பெருமை உவமை இல்லாதது.
    இங்கே காட்டப்பட்டுள்ள எடுத்துக்காட்டு பஞ்ச மந்திரத்தின்‌ பெருமையைக்‌ கூறவந்த வரலாறு. பஞ்ச மந்திரத்தின்‌ நம்பிக்கையை இங்கே நல்‌ காட்சியின்‌ நம்பிக்கையாகக்‌ காட்டப்பட்டுள்ளது. கரணானுயோக அடிப்படையில்‌ நற்காட்சி அடைந்தவன்‌ கீழ்‌ முத்‌ தேவராகச்‌ சென்று பிறப்பதில்லை என்பதனை நினைவில்‌ கொள்ள வேண்டும்‌. இதே டோன்று, தேவப்பிறவியில்‌ மரணம்‌ அடைய ஆறு மாதம்‌ இருக்கும்‌ போது தேவனுடைய மாலை வாடுகிறது. அப்போது தீக்காட்சியுடைய தேவன்‌ ஆர்த்த தியானத்தால்‌ விலங்கு ஆயுளைக்‌ கட்டிக்‌ கொண்டு விலங்காக வந்து

பிறக்கிறான்‌.

  1. ரத்ன கரண்டக சிராவகாசாரம்‌, 28
    அருங்கலச்செப்பு 77
    கீழ்‌ முத்தேவர்களும்‌ செளதர்ம ஈசான கல்ப தேவர்களும்‌ ஒரு
    பொறியுடைய பிறவி வரை வந்து பிறக்க முடியும்‌ தீக்காட்சியால்‌;
    பஞ்சேந்திரிய விலங்கு 12ம்‌ சொர்கம்‌ வரை சென்று பிறக்க முடியும்‌.
    39 அவ்விநயம்‌ ஆறும்‌ அகன்றது நற்காட்சி
    செவ்விதின்‌ காப்பார்‌ இடை.
    இது நற்காட்சியர்‌ விலக்க வேண்டியது கூறுகிறது.
    (ப-றை நற்காட்சி-நல்‌ நம்பிக்கையை, செவ்விதின்‌-செம்மையாக,
    காப்பார்‌ இடை-காப்பாற்றுவார்‌ இடத்து, அவிநயம்‌-அவிநயங்கள்‌ ஆறும்‌”
    ஆறும்‌, அகன்றது-நீங்கியதாகும்‌ எ-று.
    (க-ரை! நற்காட்சியைப்‌ போற்றிப்‌ பாதுகாப்பவரிடம்‌ ஆறு
    அவிநயங்களும்‌ அகன்று போகும்‌ என்பதாம்‌.
    (வி-ரை ‘செவ்விதின்‌ காப்பார்‌’ என்றதால்‌ நற்காட்சியைப்‌ பெற்றவர்‌
    அதன்‌ பெருமை அறிந்து போற்றுவார்‌ என்பது பெறப்பட்டது. தனது
    நம்பிக்கைக்கு மாசு வரும்‌ வணக்கங்களைச்‌ செய்யார்‌ என்பதாம்‌. விநயம்‌-
    பணிவு, வணக்கம்‌, ‘அவ்விநயம்‌’ எதுகை நோக்கித்‌ தோன்றிய விரித்தல்‌
    விகாரம்‌.
    40 நல்லறத்தின்‌ தீர்ந்த வணக்கத்தை நல்லோர்கள்‌
    சொல்வர்‌ அவிநயம்‌ என்று.
    இது அவிநயம்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
    (ப-ரை! நல்லோர்கள்‌-அறவோர்கள்‌, நல்லறத்தின்‌-தூய அற
    நெறியிலிருந்து, தீர்ந்த-விலகிய, வணக்கத்தை-பணிவை, அவிநயம்‌-
    அவிநயம்‌, என்ற – என்று, சொல்வர்‌ – கூறுவர்‌. எ-று.
    (க-ரை மோக்ஷ நெறிக்கு இசைய செல்லாதாரைப்‌ பணிந்து இருத்தல்‌
    அவிநயம்‌ என்று அறவோர்‌ கூறுவர்‌ என்பதாம்‌.
    அருங்கலச்செப்பு 78
    (வி-ரை) விநயம்‌ – பணிவு அவிதயம்‌ – பணிவு அல்லாதது
    நற்காட்சியாளன்‌ அறத்திடத்தும்‌ அறமுடையார்‌ இடத்தும்‌ பணிவு
    உடையவன்‌. அவன்‌ அது இல்லாதாரை வணங்கான்‌. ஐந்து
    மித்தியாத்துவங்களுள்‌ விநய மித்தியாத்துவம்‌ ஒன்று. மித்தியாத்துவம்‌ நீங்கிய
    போது விநய மித்தியாத்துவமும்‌ நீங்கிப்போகிறது. அதனால்‌ அவன்‌ அற
    வழிப்படும்‌ வணக்கத்தை மட்டுமே செய்வான்‌. வணங்குதற்குத்‌ தகுதி அற்ற
    இடத்தில்‌ அவன்‌ வணங்குதலைச்‌ செய்யான்‌.
    41 மிச்சை இலிங்கியர்‌ நூல்‌ தெய்வம்‌ அவாவினோடு
    அச்சம்‌ உலோபிதத்தோடு ஆறு,
    இது அவிநயத்தின்‌ வகை கூறுகிறது.
    (ப-ரை அவாவிளனோடு – அவாவினாலும்‌, அச்சம்‌ – அச்சத்தாலும்‌,
    உலோபிதத்தோடு – உலோபத்தாலும்‌, மிச்சை இலிங்கியர்‌ – மித்தியா தவசி
    மற்றும்‌ அவர்‌ சேவகர்களையும்‌, மிச்சை நூல்‌ – மித்திய நூல்களையும்‌ மற்றும்‌
    அந்‌ நூலேற்றவரையும்‌, மிச்சை தெய்வம்‌ – மித்தியா தெய்வம்‌ மற்றும்‌
    அதனை வணங்குபவர்களையும்‌ வணங்குதல்‌, ஆறு-ஆறு அவிநயங்கள்‌
    ஆகும்‌ எ-று.
    (க-ரை மித்தியா தவசி, அவர்‌ பக்தர்‌, மித்தியா நூல்‌, அதனை நம்புபவர்‌,
    மித்தியா தெய்வம்‌, அதனை வணங்குபவர்‌ என இந்த அறுவரையும்‌ அவா
    முதலான காரணமாக பணிதல்‌ அவிநயம்‌ என்பதாம்‌.
    (வி-ரை அவிநயம்‌ ஆறு என்றார்‌ மேலே. அந்த ஆறு எவை என
    இதில்‌ கூறினார்‌. இதனை ‘அநாயதனம்‌’ என்றும்‌ கூறுவர்‌. குதேவன்‌, குகுரு, குசாத்திரம்‌ மற்றும்‌ இம்‌ மூன்றையும்‌ நம்புபவர்‌ என இவ்வாறும்‌ அநாயதனம்‌ எனப்படும்‌.’ பிரபா சந்திரர்‌ மித்யா தரிசனம்‌, மித்யாஞானம்‌, மித்யா சாரித்திரம்‌ மற்றும்‌ இம்‌ மூன்றையும்‌ நம்புபவர்‌ அதாவது மித்தியா திருஷ்டி, மித்தியா ஞானி, மித்தியா சாரத்திரவான்‌ என ஆறும்‌ அநாயதனம்‌ என்றார்‌. அஸர்வக்ஞன்‌, அவன்‌ ஆலயம்‌, அஸர்வக்ஞ ஞானம்‌, அதனை உடையவன்‌, அதன்‌ வழி செல்லும்‌ ஒழுக்கம்‌. அவ்வொழுக்கம்‌ உடையவன்‌ என ஆறு அநாயதனம்‌ என்பர்‌. இப்படி ஆகமங்களில்‌ விளக்கம்‌ காணப்படுவதால்‌ இக்குறளுக்கு அதற்கு இசைய பொருள்‌ காணப்பட்டது. இந்த அவிநயம்‌ தோன்ற காரணங்கள்‌ பலவாக அமையக்கூடும்‌. அந்த எண்ணிக்கையைத்‌ தொகுத்துக்‌ கொண்டு குதேவன்‌ முதலான மூன்றோடு பெருக்க அவிநயம்‌ ஆறு

எனக்காணல்‌ பொருந்துவதாக இல்லை. இந்த அவிநயம்‌ தோன்ற அவர்‌,

  1. சாரித்திர பாகுடம்‌, 6/34.
    அருங்கலச்செப்பு 79
    அச்சம்‌, உலோபிதம்‌ என மூன்று காரணம்‌ காட்டினார்‌. அச்சம்‌, ஆசை, நட்பு,
    உலோபம்‌ என நான்கு காரணங்களைக்‌ கூறுகிறார்‌ ஆசாரியர்‌ சமந்தபத்திரர்‌.’
    அறநெறிச்சாரமும்‌ இந்நான்கையே கூறுகிறது” எனவே அவிநயத்திற்கான
    காரணங்கள்‌ பலவாக அமைவதால்‌ அவிநயமும்‌ பல வகையினதாக ஆக
    முடியும்‌. ஆனால்‌ நூல்கள்‌ ஆறு என்று வரையறுத்து இருப்பதால்‌ குதேவன்‌
    முதலான மூன்றோடு அவற்றின்‌ உபாசகர்‌ மூவரையும்‌ சேர்த்து ஆறு எனக்‌
    கொள்ளலே பொருந்தும்‌. குதேவர்‌ முதலான மூன்று மட்டு மல்ல அம்‌
    மூன்றின்‌ உபாசகர்களோடும்‌ நற்காட்சியாளன்‌ தொடர்பு கொள்ளாள்‌ என்பது
    கருத்து. ‘குபத கொடுந்தேவர்‌, அவர்‌ மானிடர்‌” எனத்‌ திருநூற்றந்தாதி
    குறிப்பிடுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்‌. *
    அரசு முதலானவற்றால்‌ தோன்றுவது அச்சம்‌; வரவேண்டிய
    பொருளுக்கு விருப்பம்‌ கொள்ளுதல்‌ ஆசை; உலோபிதம்‌ என்றது பற்று.
    நிகழ்கால பொருள்‌ தொடர்புகாரணமாகத்‌ தோன்றும்‌ மிகு ஆர்வம்‌
    மிச்சை-பாகதச்சொல்‌ திரிபு. இலிங்கி-இலங்கத்தை- அடையாளத்தை
    உடையவர்‌. இங்கு போலித்‌ துறவியரைக்‌ குறித்தது.
    42 இவ்வாறு நோக்கி வணங்கார்‌ அவிநயம்‌
    எவ்வாறும்‌ நீங்கல்‌ அரிது.
    இது அவிநயம்‌ நீக்கும்‌ வழி கூறுகிறது.
    (ப-ரை இவ்வாறு-இங்குக்‌ கூறப்பட்ட ஆறுவகையையும்‌, நோக்கி-
    நுட்பமாக அறிந்து, வணங்கார்‌-வணங்காதவரது, அவிநயம்‌-அவிநயமானது,
    எவ்வாறும்‌-எந்த வகையிலும்‌, நீங்கல்‌-நீங்குதல்‌, அரிது-அரிதாகும்‌. எ-று.
    (க-ரை வணக்கத்திற்கு உரியாரை அறிந்து வணங்காதவரது அவிநயம்‌
    எந்த உபாயத்தாலும்‌ நீங்குதல்‌ இல்லை.
    (வி-ரை) அவிநயம்‌ நற்காட்சியாளனிடம்‌ இல்லாத ஒன்று. அவன்‌
    வணங்கத்‌ தக்கவர்‌ யார்‌ வணங்கத்‌ தகாதவர்‌ யார்‌ எனத்‌ தெரிந்து
    கொண்டிருக்கிறான்‌, ஏனெனில்‌ விநய மித்யாத்துவம்‌ அவனிடம்‌ இல்லை.

நோக்கு-அறிவு கூர்மையைக்‌ குறித்து நின்றது. போலிகளை அடையாளம்‌
1.ரத்னகரண்டக சீராவக ஆசாரம்‌, 3072 அறதெறிச்சாரம்‌; 3 திருநூற்றந்தாதி,06.
அருங்கலச்செப்பு

80
கண்டு நீக்கும்‌ அறிவு கூரமை வேண்டும்‌ என்பது கருத்து. உடல்‌ உறுப்புகளுள்‌
தலை மிகச்‌ சிறந்த உறுப்பு. அது எங்கே பணிதல்‌ வேண்டும்‌ எங்கே பணிதல்‌
கூடாது என்பதில்‌ தெளிவும்‌ உறுதிப்பாடும்‌ வேண்டும்‌. அச்சம்‌, உலோபம்‌,
நட்பு, உலகியல்‌, மரபு அல்லது பரம்பரை வழக்கம்‌ முதலான காரணமாக
வணங்கத்‌ தகாதவரை வணங்குதல்‌ நிகழலாம்‌. அப்படிச்‌ செய்வோரிடம்‌
அவிநயம்‌ நீங்காது. அவிநயம்‌ நீங்கவில்லை எனில்‌ நற்காட்சி இல்லை என்று
பொருள்‌. அங்கே விநய மித்தியாத்துவம்‌ இருக்கிறது என்பதாம்‌.
பெற்றோரிடம்‌, பெரியோரிடம்‌ காட்டப்படும்‌ விநயம்‌ இங்குக்‌
கருதப்பட வில்லை. அது உலகியல்‌ உபசாரம்‌. இங்கு மோக்ஷ நெறி, அதில்‌
போலிகள்‌ காணப்படுவதால்‌ அவர்களைக்‌ கண்டு விலக வேண்டும்‌
என்பதாம்‌. அவர்களை வணங்குதல்‌, புகழ்தல்‌ விநய மித்தியாத்துவம்‌ ஆகும்‌.
நற்காட்சியாளனிடம்‌ அது இல்லை.
அரிது-இன்மைப்‌ பொருள்‌ குறிப்புடையது. குதேவாதி வணக்கத்தை
அறியாதவர்‌ அவிநயத்தை நீக்க முடியாது என்பது கருத்து. ‘
பிணங்கோம்‌ எவரொடும்‌ பேரோம்‌ சிநனறம்‌ பேர்படைத்தும்‌
குணம்கோடிய குபதக்‌ கொடுந்தேவர்‌ தம்கோ யில்கண்டால்‌
வணங்கோம்‌ மனம்கொண்டு வாழ்த்துகிலோம்‌ அவர்‌ மானிடரோடு
இணங்கோம்‌ எழுமையும்‌ என்கடவோம்‌ அவ்விரு வினைக்கே!
என்றார்‌ அவிரோதி ஆழ்வார்‌’.
43 காட்சி விசேடம்‌ உணர்வும்‌ ஒழுக்கமும்‌
மாட்சி அதனில்‌ பெறும்‌.
இது நற்காட்சியின்‌ இன்றியமையாமையைக்‌ கூறுகிறது.
(ப-ரை! காட்சி – நம்பிக்கை, விசேடம்‌ அதனில்‌ – சிறப்பினால்‌ உணர்வும்‌ – அறிவும்‌, ஒழுக்கமும்‌ – ஒழுக்கமும்‌, மாட்சி – சிறப்பை, பெறும்‌-
அடையும்‌, எ -று.
(க-ரை நம்பிக்கை சிறப்பால்‌ அறிவும்‌ ஒழுக்கமும்‌ சிறப்படைகிறது.

என்பதாம்‌.
1 திருநூற்றந்தாதி, 66
அருங்கலச்செப்பு 91
(வி-ரை அறிவும்‌ ஒழுக்கமும்‌ சிறப்பு அடைதல்‌ நற்காட்சி தோன்றிய
பிறகே அமைகிறது. நற்காட்சி இல்லாமல்‌ பதினோரு அங்கம்‌ ஒன்பது பூர்வம்‌
அறிவும்‌, மகாவிரத ஒழுக்கமும்‌ நல்லறிவு நல்லொழுக்கம்‌ எனும்‌ சிறப்பைப்‌
பெறுவதில்லை. எப்படி கடலைக்‌ கடக்க பயன்படும்‌ படகு படகோட்டியின்‌
ஆளுகைக்கு உட்பட்டதோ அதே போன்று பிறவிக்‌ கடலைக்‌ கடக்க உதவும்‌
மோக்ஷநெறி படகு நற்காட்சி படகோட்டியின்‌ ஆளுகைக்கு உட்பட்டது
என்று ஆசாரியர்‌ சமந்தபத்திரர்‌ அருளுகிறார்‌!
44 நற்காட்சி இல்லார்‌ உணர்வும்‌ ஒழுக்கமும்‌
aban gpa கெடும்‌.
இதுவும்‌ அது.
(பாரை நற்காட்சி-நல்நம்பிக்கை, இல்லார்‌-இல்லாரது, உணர்வும்‌-
அறிவும்‌, ஒழுக்கமும்‌-ஒழுக்கமும்‌, ஒற்கா-தளர்ந்து, ஒசிந்து-முரிந்து, கெடும்‌ “அழியும்‌ எ-று.
(க-ரை நற்காட்சி இல்லாதாரிடம்‌ உள்ள அறிவும்‌ ஒழுக்கமும்‌ தளர்ந்து
முரிந்து கெடும்‌ என்பதாம்‌.
(வி-ரை! நற்காட்சியினாலேயே அறிவு நல்லறிவாகவும்‌ ஒழுக்கம்‌
நல்லொழுக்க மாகவும்‌ சிறப்புப்‌ பெறுகின்றன. நற்காட்சி இல்லாமல்‌ பதினோரு
அங்கமும்‌ ஒன்பது பூர்வமும்‌ ௮றிந்த அகன்ற அறிவானாலும்‌ அது மித்தியா
ஞானம்‌ என்றே கூறப்படுகிறது. ஐந்து மகா விரதங்களை ஏற்று நடந்தாலும்‌
அவ்வொழுக்கம்‌ மித்யா ஒழுக்கம்‌ என்றே கூறப்படுகிறது. அப்படிப்பட்ட
அறிவையும்‌ ஒழுக்கத்தையும்‌ இந்த உயிர்‌ அனந்தம்‌ முறை அடைந்து
இருக்கிறது. அதனால்‌ அது மோக்ஷ சுகத்தை அடையாமல்‌ பிறவியில்‌
விழுந்து உழல்கிறது. ருத்ரர்களுடைய வரலாறு இங்கு நினைக்கத்‌ தக்கது.
45 துச்சிலேல்‌ பண்டியும்‌ இல்லை சுவரிலேல்‌
சித்திரமும்‌ இல்லதே போன்று.

இதுவும்‌ அது.
] ரத்ன கரண்டக சிராவகாசாரம்‌, 3)
அருங்கலச்செப்பு 82
(ப-ரை! அச்சு இலேல்‌ – அச்சு இல்லாதுபோனால்‌, பண்டியும்‌ –
வண்டியும்‌ இல்லை, சுவர்‌ இலேல்‌-சுவர்‌ இல்லாதுபோனால்‌, சித்திரமும்‌-
ஓவியமும்‌, இல்லதே-இல்லை, போன்று-அதுபோல நற்காட்சி இல்லை எனில்‌
நல்‌அறிவும்‌ இல்லை, நல்லொழுக்கமும்‌ இல்லை. எ-று
(க-ரை அச்சு இல்லாமல்‌ வண்டி அமையாது, சுவர்‌ இல்லாமல்‌ சித்திரம்‌
அமையாது. அதேபோன்று நற்காட்சி இல்லாமல்‌ நல்லறிவும்‌
நல்லொழுக்கமும்‌ அமையா என்பதாம்‌.
(வி-ரை) நற்காட்சி முதலாயின அதிகாரத்தால்‌ வருவிக்கப்பட்டன.
46 காட்சியோடு ஒப்பதுயாம்‌ காணோம்‌ வையத்து
மாட்சி உடையது உயிர்க்கு.
இதுவும்‌ அது.
(ப-ரை வையத்து-இவ்வுலகில்‌, உயிர்க்கு-உயிர்களுக்கு,
மாட்சியுடையது-பெருமையுடையது, காட்சியோடு-நற்காட்சியோடு, ஒப்பது-
நிகராக, யாம்‌ காணோம்‌-வேறொன்றை யாம்‌ காண்போம்‌ இல்லை. (எ-று!
(க-ரை உலகில்‌ உயிர்க்குப்பெருமையுடையது நற்காட்சியே. அதற்கு
நிகராக வேறொன்றை யாம்‌ காணவில்லை என்பதாம்‌.
(வி-றை ‘யாம்‌’ என ஆசாரியர்‌ தம்மை இங்கு முன்னிலைப்படுத்திக்‌
கொண்டதால்‌ நற்காட்சியின்‌ முதன்மை உறுதிப்படுகிறது. நற்காட்சி இல்லாமல்‌
மோக்ஷ நெறி இல்லை.
நற்காட்சியின்‌ பயன்‌
47 விரதம்‌ இலர்‌எனினும்‌ காட்சி உடையார்‌
நரகம்‌ புகுதல்‌ இலர்‌.
இது நற்காட்சியின்‌ பயன்‌ கூறுகிறது.
(ப-றை காட்சி-நல்நம்பிக்கை, உடையார்‌-உடையவர்‌, விரதம்‌-அணு
விரதம்‌, மகா விரதங்கள்‌, இலர்‌ எனினும்‌-இல்லாதவர்‌ என்றாலும்‌, நரகம்‌-
அருங்கலச்செப்பு 83
நரகப்‌ பிறவியில்‌, புகுதல்‌ இலர்‌-செல்லுதல்‌ lent, ergy.
(க-ரை விரதங்கள்‌ பெறாது நல்‌ நம்பிக்கை மட்டும்‌ பெற்றிருந்தாலும்‌
அற்த உயிர்‌ நரகப்‌ பிறவியில்‌ பிறப்பதில்லை என்பதாம்‌.
(வி-ரை! ஆயுள்‌ பந்தம்‌ ஆகிவிடுமானால்‌ அது விடுபடுவதில்லை
என்பது நியமம்‌. அதனால்‌, நற்காட்சி பெறும்‌ முன்பே ஓர்‌ உயிர்‌ நரக
ஆயுளைக்‌ கட்டிக்கொண்டு இருக்குமானால்‌ அது நியமமாக நரகம்‌ போகும்‌.
ஆனால்‌ முதல்‌ நரகத்தைத்‌ தாண்டிச்‌ செல்லாது. நற்காட்சி பெற்ற பிறகு நரக
ஆயுளைக்‌ கட்டுவதில்லை.
48 கலங்கலில்‌ காட்சி உடையார்‌ உலகில்‌
விலங்காய்ப்‌ பிறத்தல்‌ இலர்‌.
இதுவும்‌ அது.
(ப-ரை) கலங்கல்‌ இல்‌-உறுதியான, காட்சி-நல்நம்பிக்கை, உடையார்‌-
உடையவர்‌, உலகில்‌-உலகத்தில்‌, விலங்காய்‌-விலங்காகப்‌, பிறத்தல்‌ இலர்‌ –
பிறத்தலைப்‌ பெறார்‌.
(க-றை நற்காட்சியில்‌ உறுதி உடையவர்‌ உலகில்‌ விலங்கு கதியில்‌
பிறப்பது இல்லை.
(வி-ரை! நற்காட்சி பெறும்‌ முன்‌ ஓர்‌ உயிர்‌ விலங்கு கதி ஆயுளைக்‌
கட்டிக்‌ கொண்டிருந்தால்‌ நியமமாக அது விலங்குப்‌ பிறவியில்தான்‌ சென்று
பிறக்கும்‌. ஆனால்‌ போகபூமியில்‌ விலங்காகச்‌ சென்று பிறக்கும்‌. கர்ம பூமி
விலங்காகப்‌ பிறக்காது. பிறகு அங்கிருந்து தேவப்‌ பிறவியில்‌ சென்று
பிறக்கும்‌. நற்காட்சி பெற்ற பிறகு ஆயுள்‌ கட்டுமானால்‌ விலங்கு ஆயுளைக்‌
கட்டுவதில்லை.
7
49 பெண்டிர்‌ நபுஞ்சகர்‌ ஆகார்‌ பிழைப்பின்றிக்‌
கொண்ட நற்காட்சி யவர்‌
இதுவும்‌ அது.
(ப-றை பிழைப்பு இன்றி-குற்றம்‌ இல்லாமல்‌, கொண்ட – பெற்ற,
அருங்கலச்செப்பு 94
நற்காட்சியவர்‌-நற்காட்சியுடையவர்‌, பெண்டிர்‌-பெண்ணாக, நபுஞ்சகர்‌-
அலியாக, ஆகார்‌-பிறப்பது இலர்‌. ௭ – று.
(க-றை! நற்காட்சி பெற்றவர்‌ பெண்ணாக, அலியாக பிறப்பது இலர்‌
என்பதாம்‌.
(வி-ரை) நற்காட்சி பெற்ற பிறகு ஓர்‌ உயிர்‌ பெண்ணாகவோ,
அலியாகவோ பிறப்பது இல்லை. நற்காட்சி பெறும்‌ முன்‌ பெண்வேதம்‌ கட்டி
இருந்தால்‌ நற்காட்சி பெற்ற பிறகு அது ஆண்வேதமாக மாறிவிடும்‌. அதே
போன்று அலி வேதம்‌ முன்னர்‌ கட்டி இருந்து பிறகு நற்காட்சி பெற்றால்‌ அந்த
அலி வேதமும்‌ ஆண்வேதமாக மாறிவிடும்‌.
50 இழிகுலத்து என்றும்‌ பிறவார்‌ இறைவன்‌
பழியறு காட்சி யவர்‌.
இதுவும்‌ அது.
(பரை இறைவன்‌-தலைமகன்‌ அருளிய, பழியறு-குற்றம்‌ இல்லாத
காட்சியவர்‌-நல்காட்சி உடையவர்‌, என்றும்‌-எப்போதும்‌, இழிகுலத்து-நீச்ச
குலத்தில்‌, பிறவார்‌-பிறக்க மாட்டர்கள்‌ எ-று.
(க-ரை அருகன்‌ அருளிய குற்றம்‌ இல்லாத நல்காட்சியுடையவர்‌ கீழ்க்‌
குலத்தில்‌ என்றும்‌ பிறப்பது இலர்‌. நற்குலத்திலேயே பிறப்பர்‌ என்பதாம்‌.
51 உறுப்பில்‌ பிறர்பழிப்ப என்றும்‌ பிறவார்‌
மறுப்பாடில்‌ காட்சி யவர்‌.
இதுவும்‌ அது.
(ப-ரை மறுப்பாடில்‌-குற்றம்‌ இல்லாத, காட்சியவர்‌-நற்காட்சி
உடையவர்‌, என்றும்‌-எப்போதும்‌, பிறர்‌ பழிப்ப-பிறர்‌ இகழத்தக்க, உறுப்பில்‌-
குறையுடை உறுப்புகளோடு, பிறவார்‌-பிறத்தல்‌ இலர்‌.
(க-ரை குற்றம்‌ இல்லாத நற்காட்சியுடையவர்‌ உறுப்புக்குறைபாடு
உள்ளவர்களாக பிறத்தல்‌ இலர்‌ என்பதாம்‌.
அருங்கலச்செப்பு 85
52 குறுவாழ்க்கை நோயோடு நல்குரவு கூடப்‌
பெறுவாழ்க்கை யுள்பிறத்தல்‌ இல்‌.
இதுவும்‌ அது.
(ப-ரை குறுவாழ்க்கை-குறுகிய ஆயுளையுடைய பிறவியிலும்‌ —
நோயோடு-உடல்‌ பிணியோடு, நல்குரவுகூட-வறுமையும்‌, பெறுவாழ்க்கையுள்‌
பெறுகின்ற வாழ்க்கையுள்ளும்‌, பிறத்தல்‌-பிறப்பது, இல்‌-இல்லை. ௪ – று.
(க-றை நற்காட்சியுடையவர்‌ குறுகிய ஆயுளையுடைய பிறவியிலும்‌,
உடல்‌ பிணியோடு வறுமையும்‌ கூடிய வாழ்க்கையுள்ளும்‌ பிறப்பது இலர்‌
என்பதாம்‌.
(வி-ரை குறுவாழ்க்கை-ஆயுள்‌ குறுகிய வாழ்க்கை அதாவது அல்ப
ஆயுள்‌ உடைய வாழ்க்கை. அந்தர்‌ முழுத்தநேரம்‌ முதலாக குறைந்த ஆயுள்‌
உடைய பிறவி க்ஷுத்ர பவம்‌ பஆகும்‌. அப்பிறவிகளில்‌ நற்காட்சியுடையார்‌
பிறப்பது இலர்‌. நல்குரவு கூட-வறுமையும்‌; உடல்‌ பிணியோடு வறுமையும்‌
சேர்ந்த வாழ்வு என்று பொருள்‌.
நல்குரவு என்னும்‌ இடும்பையுள்‌ பல்குரைத்‌
துன்பங்கள்‌ சென்று படும்‌.
‘வறுமைத்‌ துன்பத்துள்‌ பல துன்பங்களும்‌ வந்து விளையும்‌’ என்றார்‌
தேவரும்‌. ‘ பல துன்பங்களுக்கு ஊற்றுக்‌ கண்ணாக விளங்கும்‌ வறுமையில்‌
நற்காட்சியர்‌ பிறத்தல்‌ இலர்‌ என்பதாம்‌. கூட என்பது உம்மைப்‌ பொருளில்‌ வந்த
இடைச்சொல்‌. நற்காட்சியுடையவர்‌ என்பது அதிகாரத்தால்‌ வருவிக்கப்பட்டது.
53 அரசர்‌ இளவரசர்‌ செட்டியரும்‌ ஆவர்‌
புரைதீர்ந்த காட்சி யவர்‌.
இதுவும்‌ அது.
(பறை புரைதீர்ந்த-குற்றம்‌ இல்லாத, காட்சியவர்‌-நற்காட்சியுடையவர்‌,
1 திருக்குறள்‌, 1048, 2 :பிரியமொடு பகையாளிகூட உறவாகுவன்‌” என
ஆட்சிகாண்க (குமரேச சதகம்‌ 67)
அருங்கலச்செப்பு 86
அரசர்‌-பேரரசர்களாகவும்‌, இளவரசர்‌-சிற்றரசர்களாகவும்‌, செட்டியரும்‌-
செல்வந்தராகவும்‌, ஆவர்‌-ஆவார்கள்‌ (பிறப்பார்கள்‌! ௪ – று.
(க-ரை நற்காட்சியுடையவர்‌ நலம்‌ பல உடைய அரசர்‌. இளவரசர்‌,
செட்டியர்‌ போன்ற செழிப்பான குலத்தில்‌ பிறப்பர்‌ என்பதாம்‌.
(வி-ரை மனிதருக்கு சக்கரவர்த்தி பதவி மிக உயர்ந்த பதவியாகும்‌.
அப்பதவி நற்காட்சி உடையவருக்கே கிடைக்கிறது. அத்தகைய பதவியே
கிடைக்கும்‌ போது இளவரசர்‌, செட்டி போன்ற பதவிகள்‌ மிக எளிதாக
கிடைக்கும்‌ என்பதாம்‌. இளவரசர்‌ – சிற்றரசர்கள்‌ என்று பொருள்‌
கொள்ளப்பட்டது. இள-சிறு; இளம்பசி போல கொள்க. செட்டி “ சேட்டி;
பாகதச்‌ சொல்‌ திரிபு. ‘முட்டில்‌ வாழ்க்கைச்‌ செட்டியர்‌ பெருமகன்‌’ என்ற
இடத்து வளமான வாழ்வுடையர்‌ என்று சுட்டுதல்‌ காண்க”
54 மூவகைக்‌ கீழ்த்தேவர்‌ ஆகார்‌; முகடுயர்வர்‌
தோவகையில்‌ காட்சி யவர்‌.
இதுவும்‌ அது.
(ப-ரை! தோவகை இல்‌-குற்றம்‌ இல்லாத, காட்சியவர்‌-நற்காட்சி
உடையவர்‌, மூவகை-மூன்று வகைப்படும்‌, கீழ்த்தேவர்‌-கீழ்‌ நிலைத்‌
தேவர்களாக, ஆகார்‌ – பிறக்க மாட்டார்கள்‌, முகடு உயர்வர்‌-மேலான கல்பாதி
தேவர்களாகவே பிறப்பர்‌.
(க-ரை! நற்காட்சியுடையவர்‌ கீழான மூன்றுவகை தேவர்களாகப்‌
பிறக்கமாட்டார்கள்‌; கல்பவாசி முதலான தேவர்களாகவே பிறப்பர்‌.
(வி-ரை! தேவர்கள்‌ பவண, வியந்தர, சோதிட, வைமானிகர்‌ என
நால்வகைப்படுவர்‌. இவர்களுள்‌ பவணர்‌, வியந்தரர்‌, சோதிடர்‌ மூவரும்‌ கீழ்‌
முத்தேவர்‌ எனப்படுவர்‌. நற்காட்சியுடையவர்‌ இந்தத்‌ தேவர்களாகப்‌ பிறப்பது
இலர்‌. நற்காட்சி பெறும்‌ முன்‌ தேவ ஆயுளைக்‌ கட்டி பிறகு நற்காட்சியைப்‌ பெற்றால்‌ அந்த உயிர்‌ வைமானிக தேவனாகவே பிறக்கும்‌. கீழ்‌ முத்தேவனாகப்‌ பிறத்தல்‌ இல்லை. விரதத்தோடு கூடிய நற்காட்சியாளன்‌
ரித்திகளை உடைய வைமாளிக தேவனாகவே பிறப்பான்‌.
1 பெருங்கதை, இலாவாண 2 /126,
அருங்கலச்செப்பு 87
தேவ ஆயுள்‌ தவிர மற்ற கதி ஆயுளைக்‌ கட்டிக்கொண்ட உயிர்‌
அந்தப்‌ பிறவியில்‌ அணுவிரதமும்‌ ஏற்பதில்லை, மகாவிரதமும்‌ ஏற்பதில்லை.
இது ஆகம நியமம்‌, அதே போன்று அணுவிரத மகாவிரத காலத்தில்‌
ஆயுளைக்‌ கட்டுமானால்‌ தேவ ஆயுள்‌ பந்தமே கட்டும்‌. இது ஆகம நியமம்‌.
ஆனால்‌ நற்காட்சி அடைவதற்கு அந்த நியமங்கள்‌ இல்லை. ஏனெனில்‌, எந்த
கதி ஆயுள்‌ கட்டினாலும்‌ பிறகு நற்காட்சி பெற முடியும்‌.
முகடு-மேல்நிலை; இங்கே கல்பவாசி முதலான மேலான வைமானிக
தேவர்களைக்‌ குறித்தது அவர்கள்‌ மேலே இருப்பதால்‌.
55 விச்சா தரரும்‌ பலதேவரும்‌ ஆவர்‌
பொச்சாப்பில்‌ காட்சி யவர்‌.
இதுவும்‌ அது.
(ப-ரை) பொச்சாப்பில்‌-குற்றம்‌ இல்லாத, காட்சியவர்‌-
நற்காட்சியுடையவர்‌, விச்சாதரரும்‌-வித்தியாதரராகவும்‌, பலதேவரும்‌-பல
தேவர்களாகவும்‌, ஆவர்‌-ஆவார்கள்‌ (பிறப்பார்கள்‌! எ-று.
(க-றை நற்காட்சியுடையவர்‌ வித்தியாதரராகவும்‌ பல தேவர்களாகவும்‌
பிறப்பர்‌ என்பதாம்‌.
(வி-ரை? வித்தியாதரர்‌-வித்தையுடையவர்கள்‌. வித்தை மூன்று வகை;
ஜாதி வித்தை, குலவித்தை, தபவித்தை, வித்தியாதரர்‌ இம்‌ மூன்று
வித்தைகளை அடையக்‌ கூடியவர்‌. விஜயார்த்த மலையில்‌ வசிப்பவர்கள்‌
இங்கே எப்போதும்‌ நாலாம்‌ காலம்‌ போலவே இருக்கும்‌.
பலதேவர்கள்‌ ஒன்பது பேர்‌. மிகச்‌ சிறந்த வைபவங்களை
உடையவர்கள்‌. வாசுதேவருக்கு மூத்தவர்‌. நிதானசல்லியம்‌ இல்லாதவர்‌. தம்‌
ஆயுள்‌ முடிந்து சொர்கமோ மோக்ஷமோ போவார்‌. ராமர்‌ பலதேவர்‌. இது
போன்ற பெரும்‌ பதவிகளையும்‌ நற்காட்சியாளர்‌ அடைவர்‌ என்பது கருத்து.
56 முச்சக்‌ கரத்தோடு சித்தியும்‌ எய்துவர்‌
நச்சறு காட்சி யவர்‌.
இதுவும்‌ அது.
அருங்கலச்செப்பு 98
(ப-ரை! நச்சறு – ஆசையை அழிக்கும்‌, காட்சியவர்‌. நற்காட்சி
உடையவர்‌. முச்சக்கரத்தோடு-தேவேந்திர, நரேந்திர, அருக பதவிகளோடு,
சித்தியும்‌-மோக்ஷத்தினையும்‌, எய்துவர்‌ – அடைவர்‌.
(க-றை நற்காட்சி உடையவர்‌, தேவேந்திர, நரேந்திர, அருக பதவிகளை
அடைந்து கடைசியில்‌ மோக்ஷத்தினையும்‌ அடைவர்‌ என்பதாம்‌.
(வி-ரை நற்காட்சி உடைய மனிதன்‌ திகம்பர தீக்ஷை ஏற்று தபம்‌ செய்து
அப்பிறவியில்‌ மோக்ஷம்‌ அடையாத நிலை தோன்றும்‌ போது தேவ உலகில்‌
இந்திரனாகப்‌ பிறந்து தேவ தேவியரோடு சுகம்‌ அனுபவிக்கிறான்‌. அதே
போல 14 இரத்தினங்களையும்‌ 9 நிதிகளையும்‌ உடைய சக்கரவர்த்தி யாகவும்‌
வந்து பிறக்கிறான்‌. பிறகு தபம்‌ செய்து தேவேந்திரனாகப்‌ பிறக்கிறான்‌.
இதுபோன்ற போக வைபவங்களை அனுபவித்துப்‌ பிறகு வந்து அருக
பதவியையும்‌ அடைந்து மோக்ஷ சுகத்தையும்‌ அடை கிறான்‌ நற்காட்சியாளன்‌.
நற்காட்சியின்‌ சிறப்பையும்‌, நற்காட்சி பெறுவதால்‌ விளையும்‌
நன்மைகளையும்‌ பலவாறாக விளக்கி விட்டு மோக்ஷத்தைத்‌ தருவதும்‌
அதுவே என்று இக்குறளில்‌ கூறி நற்காட்சி அதிகாரத்தை முடித்துள்ளார்‌.
இப்படி நற்காட்சி ராக நிலையில்‌ அற்புத வைபவங்களுக்கும்‌ வீதராக
நிலையில்‌ மோக்ஷத்திற்கும்‌ காரணமாக அமைகிறது.

  1. நல்ஞான அதிகாரம்‌
    57 பொருள்நின்ற பெற்றியைப்‌ பொய்யின்று உணர்தல்‌
    மருளறு நன்ஞான மாண்பு.
    இது நல்‌ அறிவின்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
    (ப-ரை பொருள்‌ – உயிர்‌ முதலான பொருள்கள்‌, நின்ற – உலகில்‌
    நிலைபெற்றுள்ள, பெற்றியை-இயல்பை, பொய்யின்று-தவறு இல்லாமல்‌,
    உணர்தல்‌-உள்ளவாறு உணர்தல்‌, மருளறு-மயக்கம்‌ இல்லாத, நல்ஞானம்‌ –
    நல்லறிவின்‌, மாண்பு-சிறப்பாகும்‌. எ-று.
    (க-ரை) உலகத்து உள்ள உயிர்‌ முதலான பொருள்களின்‌ இயல்பை
    அருங்கலச்செப்பு 89
    உள்ளவாறு உணர்தல்‌ நல்லறிவின்‌ சிறப்பாகும்‌ என்பதாம்‌.
    (வி-ரை! உயிர்‌ முதலான தத்துவங்களை ஐயம்‌, திரிபு, மயக்கம்‌ இன்றி
    அறிதலே நல்ஞானம்‌ என்று கூறப்படுகிறது. இதுவே மோக்ஷ நெறியில்‌
    பயனுடையது. இந்த ஞானம்‌ மதி, சுருதம்‌, அவதி, மனப்பர்யயம்‌ கேவலம்‌
    என்று ஐந்து வகையாகக்‌ கூறப்படுகிறது. இவற்றுள்‌ இங்கே சுருத ஞானம்‌-
    ‘பாவ சுருத’ ஞானமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்‌. ஏனெனில்‌, இந்‌ நூல்‌
    சரணானுயோகம்‌. சரணானுயோகத்தில்‌ புத்திபூர்வகமாக செய்யப்படும்‌
    முயற்சி பற்றியே முதன்மையாகப்‌ பேசப்படுகிறது. அம்‌ முயற்சி
    உண்மையான நூல்கள்‌ வழி பாவ சுருத ஞானம்‌ பெறவே முனைப்புக்‌
    காட்டுகிறது. அவதி, மனப்பர்யய, கேவல ஞானங்கள்‌ புத்தி பூர்வக
    முயற்சியால்‌ பெறப்படுவன அல்ல, தடையாக உள்ள ஆவரண வினைகள்‌
    நீங்குவதால்‌ தாமே வெளிப்படுவன அவை. மதிஞானமோ சுருத ஞான
    துணை இல்லாமல்‌ மோக்ஷ நெறியை அடைய உதவுவது இல்லை. அதனால்‌,
    பாவசுருத ஞானமே புத்தி பூர்வகமான முயற்சியால்‌ பெறப்படுகிறது. பாவ
    சுருத ஞானம்‌ திரவிய சுருதத்தைச்‌ சார்ந்து விளக்கம்‌ பெறுகிறது. எனவே
    திரவிய சுருதத்தை அறிந்து கொள்ளுதலில்‌ மனிதர்‌ முயற்சி அமைகிறது.
    ஸ்யாத்வாத அடிப்படையில்‌ பொருள்‌ இயல்பை விளக்கும்‌ நூல்களே இங்கு
    திரவிய சுருதம்‌ என்று குறிக்கப்படுகின்றன. ஏனெனில்‌ ஸ்யாத்வாத
    அடிப்படையில்‌ இல்லாத நூல்கள்‌ வழி உண்மை ஞானத்தைப்‌ பெற முடியாது.
    58 சரிதம்‌ புராணம்‌ அருத்தக்‌ கியானம்‌
    அரிதின்‌ உரைப்பது நூல்‌.
    இது பிரத மானுயோகத்தின்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
    (ப-றை சரிதம்‌-சரிதம்‌ வழியாகவும்‌, புராணம்‌-புராணம்‌ வழியாகவும்‌,
    அரிதின்‌-அருமையாக, அருத்தக்கியானம்‌-பரமார்த்த பொருள்‌ விளக்கத்தை,
    உரைப்பது -சொல்லுவது, நூல்‌-பிரதமானுயோக நூலாகும்‌. எ-று.
    (க-ரை! பிரதமானுயோகம்‌ சரிதம்‌ வழியாகவும்‌ புராணம்‌ வழியாகவும்‌
    பரமார்த்த பொருளை விளக்குவது ஆகும்‌ என்பதாம்‌.
    (வி-ரை! பாவ சுருத ஞானத்திற்கு ஆதாரமாக இருக்கும்‌ திரவிய
    சுருதம்‌ (நூல்‌) பிரதமானுயோகம்‌, கரணானுயோகம்‌, சரணானுயோகம்‌,

அருங்கலச்செப்பு 91
யுக மாற்றம்‌-கால மாற்றங்கள்‌; அது நிமித்தமாகத்‌ தோன்றும்‌ நில, சூழல்‌ முதலான வேறுபாடுகள்‌.
60 இல்லறம்‌ ஏனைத்‌ துறவறம்‌ என்றிவற்றைப்‌
புல்ல உரைப்பது நூல்‌
இது சரணானுயோகத்தின்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
(ப-ரை இல்லறம்‌-இல்‌ ஒழுக்கம்‌, ஏனை-மற்றதான, துறவறம்‌-துறவு
ஒழுக்கம்‌, என்று-என, இவற்றை-இவ்‌ ஒழுக்கங்களை புல்ல-பொருந்தும்படி,
உரைப்பது-உரைப்பது, நூல்‌-சரணானுயோக நூலாம்‌. எ.று.
(க-ரை இல்லொழுக்கத்தையும்‌ துறவு ஒழுக்கத்தையும்‌ உரைப்பது
சரணானுயோகம்‌ என்பதாம்‌.
(வி-ரை இல்‌ வாழ்வார்‌ மற்றும்‌ துறவியர்‌ ஒழுக்கம்‌ எப்படித்‌
தோன்றுகிறது, எப்படி வளருகிறது. எப்படிப்‌ பாதுகாக்கப்படுகிறது என்பன
பற்றிக்‌ கூறும்‌ நூல்‌ சரணானுயோகம்‌ எனப்படுகிறது.
61 கட்டொடு வீடும்‌ உயிரும்‌ பிறபொருளும்‌
முட்டின்றிச்‌ சொல்லுவது நால்‌.
இது திரவியானுயோக.இலக்கணம்‌ கூறுகிறது.
(ப-ரை உயிரும்‌-உயிர்ப்பொருளையும்‌, பிறபொருளும்‌-உயிரல்லா
பிறபொருளையும்‌, கட்டொடு-வினைகள்‌ கட்டுதலோடு, வீடும்‌-
அவ்வினைகள்‌ விடுபடுவதும்‌ (ஆகிய இவைபற்றி,, முட்டின்றி-குறைவு
இல்லாமல்‌, சொல்லுவது-சொல்லுவது, நூல்‌-திரவியானு யோக மாகும்‌ எ-று.
(க-ரை உயிர்‌, உயிரல்லன, கட்டு, வீடுபேறு முதலானவற்றை உரைப்பது
திரவியானுயோகம்‌ என்பதாம்‌.
(வி-றை ஐந்து அத்திகாயம்‌, ஆறுபொருள்‌, ஏழு தத்துவம்‌, ஒன்பது
பதார்த்தங்களை விளக்கும்‌ நூல்‌ திரவியானுயோகம்‌ என்பதாம்‌. உயிர்‌.
புற்கலம்‌, தன்மம்‌, அதன்மம்‌, ஆகாயம்‌ இவை ஐந்தும்‌ அத்திகாயங்கள்‌. உயிர்‌,
அருங்கலச்செப்பு 92
புற்கலம்‌, தன்மம்‌, அதன்மம்‌, காலம்‌, ஆகாயம்‌ இவ்வாறும்‌ பொருள்கள்‌.
உயிர்‌, உயிரல்லன, ஊற்று, கட்டு, செறிப்பு, உதிர்ப்பு, வீடு இவை ஏழும்‌
தத்துவங்கள்‌. இவற்றோடு புண்ணியம்‌, பாபம்‌ கூட்ட ஒன்பது பதார்த்தங்கள்‌.
நல்ஞானம்‌ இந்த நான்கு அனுயோகங்களையும்‌ அறிகிறது. அதாவது
நல்ஞானத்திற்கு இந்த நான்கும்‌ அறியப்படும்‌ பொருளாம்‌.
பிரதமானுயாகம்‌ : மஹாபுராணம்‌, உத்தர புராணம்‌, ஸ்ரீபுராணம்‌,
ஜீவக சிந்தமணி, மேருமந்தரபுராணம்‌.
கரணானுயோகம்‌ : திரிலோகசாரம்‌, கோமட்டஸாரம்‌, ஷட்‌ கண்ட
ஆகமம்‌, கரதலலோகாணி.
சரணானுயோகம்‌ : சாகார தர்மாமிருதம்‌,மூலாசாரம்‌.அருங்கலச்செப்பு
ரத்னகரண்டக சிராவகாசாரம்‌.
திரவியானுயோகம்‌ : ஸமயஸாரம்‌, பிரவசனசாரம்‌, நியமசாரம்‌;
தத்துவார்த்த சூத்திரம்‌, பதார்த்தசாரம்‌. இவை
நான்கு அனுயோகங்களுக்கும்‌ சில
எடுத்துக்காட்டு நூல்கள்‌.
3 நல்லொழுக்க அதிகாரம்‌
62 காட்சியுடையார்‌ வினைவரும்‌ வாயிலின்‌
மீட்சியா நல்லொழுக்கு நன்று.
இது நல்லொழுக்கத்தின்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
(ப-ரை வினைவரும்‌-வினைகள்‌ வருவதற்கு ஏதுவான, வாயிலின்‌- வாயிலிலிருந்து, நன்று-நன்றாக, மீட்சி-மீளுதல்‌, காட்சியுடையார்‌- நற்காட்சியுடையருக்கு, நல்லொழுக்கு-நல்லொழுக்கம்‌, ஆம்‌-ஆகும்‌, எ-று.
காரை வினை வருவதற்கு ஏதுவான ராக துவேஷங்களிலிருந்து மீளுதல்‌ நற்காட்சியருக்கு நல்லொழுக்கம்‌ ஆகும்‌ என்பதாம்‌.
அருங்கவச்செப்பு 93
(வி-ரை மோக வினையில்‌ இரண்டு பிரிவுகள்‌ உள்ளன: தர்சன
மோகம்‌; 2 சாரித்திர மோகம்‌. தரிசன மோக உதயத்தால்‌ உயிர்‌ உடல்‌ முதலான
பிற பொருளைத்‌ தானாகக்‌ கருதுகிறது. சாரித்திர மோக உதயத்தால்‌ பிற
பொருளைத்‌ தனதாகக்‌ கருதுகிறது. இந்த மோகம்‌ எனும்‌ மித்தியாத்துவம்‌
இருள்‌ போன்றது. இருளில்‌ கண்‌ எதனையும்‌ பார்க்க முடிவதில்லை. அதே
போல்‌ மித்தியாத்துவ இருளில்‌ உண்மையான நம்பிக்கையை காண
முடிவதில்லை. மித்தியாத்துவ இருள்‌ நீங்கியவுடன்‌ நற்காட்சி தோன்றுகிறது;
ஞானமும்‌ நல்ஞானமாக மாறிவிடுகிறது. நற்காட்சி தோன்றியவுடன்‌ பிற
பொருள்‌ சுகத்திற்குக்‌ காரணமில்லை என்ற நம்பிக்கை வருகிறது. அந்த
நம்பிக்கையால்‌ பிறபொருள்‌ மீது உள்ள நான்‌ புத்தி (அகங்காரம்‌)
அழிந்துபோகிறது. உடன்‌ நல்ஞானம்‌ இருப்பதால்‌ சுகத்தின்‌ வதியை
நாடுகிறது. இப்படி நற்காட்சி நல்ஞானம்‌ அடையப்பட்ட பிறகு பிற பொருள்‌
மீது உள்ள ‘எனது’ (மமகாரம்‌) என்னும்‌ புத்தி விலகுகிறது. அதனால்‌ ராக
துவேஷமும்‌ விலகுகிறது. அவையே வினையின்‌ வாயிலாகும்‌. அவை
விலகுவதால்‌ நல்லொழுக்கம்‌ எளிதாகத்‌ தோன்றுகிறது. அதாவது, ராக
துவேஷம்‌ விலகுவதே சாரித்திரம்‌. இங்கே வினைவரும்‌ வாயில்‌ என்றது ராக
துவேஷம்‌ என்று கொள்ளவேண்டும்‌. ஆசாரியர்‌ ஸமந்த பத்திரரும்‌
‘ராகத்வேஷ நிவ்ருத்தயை சரணம்‌ பிரதிபத்யதே'” என்று கூறி ராக
துவேஷத்தை விலக்குவது சாரித்திரம்‌ என்கிறார்‌.
மீட்சியாம்‌ என்பது மீட்சியா என நின்றது செய்யுள்‌ விகாரம்‌.
நல்லொழுக்கு-முதனிலை திரிந்த தொழிற்‌ பெயர்‌.
63 குறைந்ததூஉம்‌ முற்ற நிறைந்ததூஉ மாக
அறைந்தார்‌ ஒழுக்கம்‌ இரண்டு.
இது நல்லொழுக்கத்தின்‌ வகை கூறுகிறது.
(ப-றை ஒழுக்கம்‌-நல்லொழுக்கம்‌, குறைந்ததூஉம்‌-குறைநிலையதும்‌,
நிறைந்ததூஉம்‌-நிறைநிலையதும்‌, ஆக-ஆக. இரண்டு-இரண்டுவகைப்படும்‌
என, அறைந்தார்‌-அருளினார்‌. எ -று.
(க-ரை நல்லொழுக்கம்‌ அணுவிரதம்‌, மகாவிரதம்‌ என

இருவகைப்படும்‌ என அருளினார்‌.
1 ரத்னகரண்டக சிராவகாசாரம்‌, 3/1.
அருங்கலச்செப்பு 94
(வி-ரை! ஆன்மாவின்‌ சாரித்ர குணத்தைக்‌ கெடுக்கும்‌ சாரித்திர
மோகனளீய வினைக்கு இரண்டு பிரகிருதிகள்‌ உள்ளன.
1 அப்ரத்யாக்யானாவரண குரோதம்‌, மானம்‌, மாயை, லோபம்‌;
2 பிரத்யாக்யான குரோத மான மாயை லோபம்‌. அப்ரத்யாக்யானம்‌ அணு
விரதத்தைக்‌ கெடுக்கிறது: பிரத்யாக்யானம்‌ மகா விரதத்தைக்‌ கெடுக்கிறது.
நற்காட்சியுடைய ஒருவருக்கு அப்ரத்யாக்யானாவரணம்‌
க்ஷ்யோபசமமாக இருக்கும்‌ போது இம்சை முதலான பாபங்களில்‌ கொஞ்சம்‌
தியாகம்‌ ஏற்படுகிறது. அதுவே குறைந்த ஒழுக்கம்‌ அதாவது அணுவிரதம்‌
எனப்படுகிறது. ஒருவருக்கு பிரத்யாக்யானாவரணம்‌ க்ஷ்யோப சமமாக
இருக்கும்‌ போது இம்சை முதலான பாபங்களில்‌ முழுதுமாக தியாகம்‌
ஏற்படுகிறது. அதுவே நிறைந்த ஒழுக்கம்‌ அதாவது மகாவிதரம்‌
எனப்படுகிறது.
64 நிறைந்தது இருடிகட்கு ஆகு மனையார்க்கு
ஒழிந்தது; மூன்று வகைத்து.
இது ஒழுக்கத்துக்கு உரியாரைக்‌ கூறுகிறது.
(ப-ரை! நிறைந்தது-நிறைந்த ஒழுக்கம்‌, இருடிகட்கு-முனிவர்களுக்கு,
ஆகும்‌-உரித்தாகும்‌; ஒழிந்தது-நின்றது அதாவது குறைந்த ஒழுக்கம்‌,
மனையார்க்கு-இல்வாழ்வார்க்கு, ஆகும்‌-ஆகும்‌. மூன்று வகைத்து-அது
மூன்று வகைப்படும்‌, எ-று.
… கறை நிறைந்த ஒழுக்கம்‌ முனிவர்களுக்கும்‌ குறைந்த ஒழுக்கம்‌
இல்வாழ்வார்க்கும்‌ உரியன; குறைந்த ஒழுக்கம்‌ மூன்று வகைப்படும்‌
என்பதாம்‌.
(வி-றை குறைந்த ஒழுக்கம்‌-அணுவிரதம்‌; பற்றுகளோடு கூடிய
இல்வாழ்வாரிடம்‌ அது காணப்படுவது; நிறைந்த ஒழுக்கம்‌- மகாவிரதம்‌ அகப்புற பற்றுகள்‌ இல்லாத முனிவரிடம்‌ அது காணப்படுவது.
65 அணுவதம்‌ ஐந்தும்‌ குணவதம்‌ மூன்றும்‌
உணர்நான்கு சிக்கா வதம்‌.
நிறுத்த முறையில்‌ இது குறைந்த ஒழுக்கத்தின்‌ வகை கூறுகிறது.

அருங்கலச்செப்பு 96
முடியாது. இது போல பிறவற்றையும்‌ கொள்க.
பொருளை வரைதல்‌ எனில்‌ பொருளை வரம்பு கட்டுதல்‌ என்று
பொருள்‌. இத்தனை பொருள்‌ பயன்படுத்துதல்‌ என்று அளவிடுதல்‌
வரைதலாகும்‌. பிற நான்கையும்‌ விலக்கவேண்டும்‌ என்பதும்‌ இதனால்‌
பெறப்பட்டது. பெரிய கொலை முதலானவற்றை விலக்க வேண்டும்‌. பெரிய
என்பதனை கொலை முதலான நான்கோடும்‌ சேர்க்க. அதனால்தான்‌
களவொடு என ஓடு கொடுத்துப்‌ பிரித்துப்‌ பொருள்‌ வரைதலை தனி
ஆக்கினார்‌.
கொல்லாமை
67 இயங்குயிர்‌ கொல்லாமை ஏவாமை ஆகும்‌
பெருங்கொலையின்‌ மீட்சி-எனல்‌.
இது கொல்லாமையின்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
(ப-றை இயங்குயிர்‌-இருபொறி உயிர்‌ முதலான இடம்பெயரும்‌
உயிர்களை, கொல்லாமை-தான்‌ கொல்லாது இருத்தலும்‌, ஏவாமை-கொல்ல
பிறரை ஏவாது இருத்தலும்‌-பெருங்கொலையின்‌-பெரும்கொலை
செய்தலினின்றும்‌, மீட்சி-மீளுதல்‌, ஆகும்‌-ஆகும்‌, எனல்‌-என்று கூறப்படும்‌.
(க-ரை இரு பொறி உயிர்‌ முதலான இடம்‌ விட்டு இடம்‌ பெயரும்‌
உயிர்களைத்‌ தானும்‌ கொல்லாது பிறரைக்‌ கொண்டும்‌ கொல்லாது இருத்தல்‌
பெருங்கொலை தியாகம்‌ எனும்‌ அகிம்சை அணுவிரத மாகும்‌.
(வி-ரை செயல்கள்‌ மூன்று வகையில்‌ நிகழ முடியும்‌. தானே செய்தல்‌;
பிறரைக்‌ கொண்டு செய்வித்தல்‌; பிறர்‌ செய்வதனை உடன்படுதல்‌. இம்மூன்றையும்‌ செய்தல்‌, செய்வித்தல்‌, உடன்படுதல்‌ என்பர்‌. ஏவாமை
என்றதால்‌ உடன்படுதலும்‌ பெறப்பட்டது. இம்‌ மூன்று வகையாலும்‌ இயங்கு
உயிர்‌ கொலையைத்‌ தவிர்க்க வேண்டும்‌ என்பதாம்‌.
இந்தக்‌ கொலை அதாவது இம்சை நான்கு வகைப்படும்‌. சங்கற்ப இம்சை, ஆரம்ப இம்சை, உத்யோக இம்சை, விரோதி இம்சை, கொல்லுதல்‌ குறிப்போடு செய்தல்‌ சங்கற்ப இம்சை. வீட்டு காரியங்களில்‌ ஏற்படும்‌ இம்சை
அருங்கலச்செப்பு 7
ஆரம்ப (தொடக்க இம்சை; தொழிலில்‌ ஏற்படும்‌ இம்சை உத்யமி அல்லது
உத்யோக இம்சை; பகைவனிடம்‌ தப்பிக்கச்‌ செய்யும்‌ இம்சை விரோதி (பகை! ,
இம்சை. இந்த நான்கு இம்சையில்‌ அணு விரதி சங்கற்ப இம்சை மட்டும்‌
தியாகம்‌ செய்கிறான்‌. மற்ற மூன்றினை தியாகம்‌ செய்வதில்லை. ( அ)
68 அறுத்தல்‌ அலைத்தல்‌ அடைத்தலோடு ஆர்த்தல்‌
இறப்பப்‌ பொறை இறப்போர்‌ ஐந்து.

இது கொல்லாமைக்கு அதிசாரம்‌ கூறுகிறது.
(ப-ரை) அறுத்தல்‌-உறுப்புகளை அறுத்தல்‌, அலைத்தல்‌-
தடிமுதலானவற்றால்‌ துன்புறுத்துதல்‌, அடைத்தல்‌-தீவனம்‌ முதலாயின
தராமல்‌ அடைத்துவைத்தல்‌, ஆர்த்தல்‌-துன்புறுதல்‌ போல பிணைத்து
வைத்தல்‌, இறப்பப்‌ பொறை – மிகுதியான பளு ஏற்றுதல்‌, ஐந்து இறப்பு-இவை
ஐந்தும்‌ அதிசாரம்‌ ஆகும்‌.
(க-ரை உறுப்புகளை அறுத்தல்‌, தடி மூதலானவற்றால்‌ துன்புறுத்தல்‌,
அடைத்துவைத்தல்‌, பிணைத்து வைத்தல்‌, அதிக சுமை ஏற்றுதல்‌ இவை
ஐந்தும்‌ கொல்லாமை விரதத்திற்கு அதிசாரம்‌ என்பதாம்‌.
(வி-ரை! இறப்பு-முறைமை கடந்த ஒழுக்கம்‌. எனவே அது
விரதத்துக்கு குறை ஆகிறது. இந்த இறப்பு ஒன்பது வகையில்‌ நிகழலாம்‌.
மனம்‌, மொழி, மெய்‌. செய்தல்‌, செய்வித்தல்‌, உடன்படுதல்‌ இவற்றைப்‌
பெருக்க 63 ஒன்பதாகும்‌. இந்த ஒன்பதின்‌ வழியும்‌ மீறல்‌ நிகழுமாயின்‌ அது
அனாசாரம்‌ எனப்படும்‌. எனவே விரதத்துக்கு சிறுகுறை வருதல்‌ அதிசாரம்‌
ஆகும்‌. அதனை தவிர்த்தல்‌ வேண்டும்‌.
। பொய்யாமை
69 பாவம்‌ பொருந்துவன சொல்லாமை ஏவாமை
ஆகும்‌ இரண்டாம்‌ வதம்‌.
இது பொய்யாமையின்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
(ப-ரை இரண்டாம்‌ வதம்‌ – இரண்டாவது விரதமான பொய்யாமை
அருங்கலச்செப்பு 598
என்பது, பாவம்‌-இம்சை, பொருந்துவன-பொருந்தக்கூடிய சொற்களை,
சொல்லாமை-தானும்‌ சொல்லாமலும்‌, ஏவாமை-பிறரைக்‌ கொண்டு
சொல்வித்தலும்‌ இல்லாமை, ஆகும்‌ – ஆகும்‌. எ-று.
(க-ரை) பிற உயிர்களுக்கு இம்சை தரக்கூடிய சொற்களை
சொல்லாமலும்‌ சொல்விக்காமலும்‌, உடன்படாமலும்‌ இருத்தல்‌ பொய்யாமை
அணுவிரதமாகும்‌.
(வி-ரை ஏவாமை என்றதால்‌ உடன்படாமையும்‌ பெறப்பட்டது.
தனக்கும்‌ பிறருக்கும்‌ தண்டனைக்கு ஏதுவான பொய்களைச்‌ சொல்லாமல்‌
இருத்தல்‌, ‘இவன்‌ அயோக்கியன்‌” போன்ற உண்மைகளையும்‌ பேசாது
இருத்தல்‌ வேண்டும்‌.
70 குறளை மறைவிரி இல்லடை வெளவல்‌
புறவுரை பொய்யோலை கேடு.
இது பொய்யாமைக்கு அதிசாரம்‌ கூறுகிறது.
(ப-ரை குறளை-கோள்‌ சொல்லுதல்‌, மறைவிரி-மறைவாகப்‌
பேசப்பட்டனவற்றை வெளிப்படுத்துதல்‌, இல்லடை வெளவல்‌-தன்னிடம்‌
அடைக்கலமாக தந்த பொருளைக்‌ கவர்ந்து கொள்ளுதல்‌, புறவுரை-
உண்மைக்குப்‌ புறம்பாக உரைத்தல்‌, பொய்யோலை-மபொய்க்கடிதம்‌ எழுதுதல்‌
என இவ்வைந்தும்‌, கேடு-பொய்யாமைக்கு கேடு தருவன -அதிசாரம்‌ ஆகும்‌.
(க-ரை கோள்‌ கூறுதல்‌, மறைப்பேச்சை வெளிப்படுத்துதல்‌, தன்னிடம்‌
வந்த அடைக்கலப்‌ பொருளைக்‌ கவர்தல்‌, பொய்‌ உபதேசம்‌, பொய்க்கடிதம்‌
எழுதுதல்‌ இவை ஐந்தும்‌ பொய்யாமைக்கு அதிசார மாகும்‌ என்பதாம்‌.
(வி-ரை! பொய்‌ சொல்லுவதற்கு இரண்டு முதன்மையான காரணங்கள்‌
: ஒன்று கசாயம்‌ மற்றொன்று அஞ்ஞானம்‌. அதனால்‌ கோபம்‌, லோபம்‌, பயம்‌, ஹாஸ்யம்‌ இவற்றை விடுவதால்‌ கசாயம்‌ நிமித்தமாகத்‌ தோன்றும்‌ பொய்‌ நிகழாது. ஆசாரியர்‌ பரம்பரையில்‌ வரும்‌ ஆகமத்தில்‌ சொல்லப்பட்டதை
ஒட்டி பேசினால்‌ அஞ்ஞானம்‌ நிமித்தமாக வரும்‌ பொய்‌ நிகழாது. அதனால்‌
அருங்கலச்செப்பு 99
ஆகமங்களை நன்கு பயில வேண்டும்‌. நன்கு பயின்றால்‌ அஞ்ஞானம்‌ நிமித்தமாகத்‌ தோன்றும்‌ பொய்‌ நிகழாது. அதனால்தான்‌ தத்துவார்த்த
சூத்திரகாரர்‌, “க்ரோதலோப பீருத்வ ஹாஸ்ய ப்ரத்யாக்யானான்யனுவீசி
பாஷணம்‌ ௪ பஞ்ச” என்றார்‌! ஏவாமை என்றதால்‌ உடன்படாது இருத்தலும்‌
பெறப்பட்டது.
| துருடாமை
741 கொடாதது கொள்ளாமை ஏவாமை ஆகும்‌
கொடாதது கொள்ளா வதம்‌.

இது திருடாமையின்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
(ப-ரை கொடாதது-பொருளுக்கு உரியவர்‌ கொடுக்காமல்‌
கொள்ளாமை-பொருளைத்‌ தான்‌ எடுக்காது இருத்தல்‌, ஏவாமை-பிறரை ஏவி’
எடுக்காது இருத்தல்‌, கொடாதது கொள்ளா-திருடாமை, வதம்‌-விரதம்‌,
ஆகும்‌-ஆகும்‌. எ-று.
(க-ரை பிறர்‌ பொருளை உரியவர்‌ கொடாத போது தான்‌ எடுக்காது
இருத்தலும்‌, பிறரைக்‌ கொண்டு எடுக்காமல்‌ இருத்தலும்‌ திருடாமை விரதம்‌
என்பதாம்‌.
(வி-ரை) அடைக்கலமாக வந்த பொருளை, கீழே கிடந்த பொருளை,
மறந்துவிட்ட பொருளை, பொருளுக்குரியவர்‌ தராமல்‌ தான்‌ எடுத்தல்‌ கூடாது.
ஏவாமை என்றதால்‌ உடன்படாமையும்‌ பெறப்பட்டது. 1 அதினால்‌]

  1. குறைவு, நிறைகோடல்‌, கொள்ளைக்‌ கவர்தல்‌
    மறைய விராதல்‌ இறப்பு.
    இது திருடாமைக்கு அதிசாரம்‌ கூறுகிறது.

(ப-றை குறைவு -அளவு குறைத்து தருதல்‌, நிறை கோடல்‌-அளவுக்கு

  1. தத்வார்த்த சூத்திரம்‌, 7/5
    அருங்கலச்செப்ப 100
    அதிகமாகப்‌ பெறுதல்‌, கொள்ளை கவர்தல்‌-அநியாயமாக பெறுதல்‌, மறைய
    விராதல்‌-கலப்படம்‌ செய்தல்‌, இறப்பு-அதிசாரமாகும்‌. ௪ – று.
    (க-ரை! குறைத்து அளந்து கொடுத்தலும்‌, அளவு மிகுத்து வாங்குதலும்‌, அறியாயமாகப்‌ பெறுதலும்‌ திருடாமைக்கு அதிசார மாகும்‌.
  2. கள்ளரொடு கூடல்‌ கள்ளர்‌ கொணர்பொருளை
    உள்ளினர்‌ கோடலோடு ஐந்து
    இதுவும்‌ அது.
    (ப-ரை கள்ளரொடு கூடல்‌-திருடரோடு சேர்தல்‌, கள்ளர்‌-திருடர்‌,
    கொணர்‌ பொருளை-திருடி வந்த பொருளை, உள்ளினர்‌-விலை குறைவாக
    உள்ளது என எண்ணியவராக, கோடலோடு-பெறுதலோடு, ஐந்து-
    அதிசாரங்கள்‌ ஐந்தாகும்‌. எ – று.
    (க-ரை! திருடரோடு சேர்தலும்‌, திருடர்‌ கொணர்ந்த பொருளைப்‌
    பெறுதலும்‌ என ஐந்து அதிசாரங்கள்‌ திருடாமைக்கு என்பதாம்‌. இந்த இரண்டு
    குறளில்‌ ஐந்து அதிசாரங்களைக்‌ கூறியுள்ளார்‌. எனவே இறப்பு ஐந்து எனக்‌
    கொண்டு கூட்டுக.
    74 விதித்த வழியின்றிக்‌ காமம்‌ நுகர்தல்‌
    மதிப்பின்மை நான்காம்‌ வதம்‌.
    இது ஏகதேச பிரமசரியம்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
    (பாரை விதித்த வழியின்றி-விதிமுறைப்படி மணந்த வழி அன்றி வேறு வழிகளில்‌, காமம்‌ நுகர்தல்‌-பிற பெண்களைச்‌ சேரும்‌, மதிப்பிள்மை – கருத்து இல்லாமை, நான்காம்‌ வதம்‌- நான்காவதாக எண்ணப்பட்ட ஏகதேச பிரமசரிய விரதம்‌ ஆகும்‌. எ-று.
    (க-றை பிற பெண்களைச்‌ சேருதலைக்‌ கருதாது தான்‌ விதிமுறைப்படி மணந்து கொண்ட பெண்களோடு இன்பம்‌ துய்த்தல்‌ குனறந்த பிரமசரியம்‌ என்பதாம்‌.
    அருங்கலச்செப்பு 101
    (வி-ரை மதிப்பு-கருத்து, மதிப்பு இன்மை-கருத்து இல்லாமை.
    ‘மண்ணுலகாளு மதிப்பை யொழித்தே’ என்ற ஆட்சியைக்‌ காண்க. பிற
    பெண்டிரோடு சேரும்‌ கருத்து இல்லாமையும்‌ விதிமுறை வழி வந்தவளிடத்து
    காமம்‌ நுகர்தலும்‌ குறைந்த (ஏகதே௫ பிரமசரியம்‌ என்பதாம்‌. அரச தண்டனை
    முதலான அச்சம்‌ காரணமாக இல்லாமல்‌ பாபம்‌ என்று மனத்தளவில்‌ கருதி
    விலக்கு வதால்‌ மதிப்பு இன்மை என்றார்‌.
    மணம்‌ கொள்ளும்‌ முறை தேச கால நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும்‌
    என்பதால்‌ விதித்த வழி-வகுத்த வழி என்றார்‌
    “கற்பெனப்‌ படுவது கரணமொடு புணரக்‌
    -கொளற்குரி மரபின்‌ கிழவன்‌ கிழத்தியைக்‌
    கொடைக்குரி மரபினோர்‌ கொடுப்பக்கொள்‌ வதுவே’
    என்றார்‌ தொல்காப்பியர்‌.”
  3. அனங்க விளையாட்டு வேட்கை மிகுதி
    மனங்கொள்‌ விலாரிளைக்‌ கேடு
    இது பிரமசரியத்திற்கு அதிசாரம்‌ கூறுகிறது.
    (ப-ரை அனங்க விளையாட்டு-புணர்ச்சிக்குரிய உறுப்பு அல்லாத
    உறுப்புகளில்‌ விளையாடுதலும்‌, வேட்கை மிகுதி-வரம்புகடந்த காம உணர்வு
    கொள்ளுதலும்‌, மனங்கொள்விலார்‌ இணை-மனம்‌ஒன்றாத பரத்தையர்‌
    தொடர்பும்‌, கேடு-குறைந்த பிரமசரியத்திற்கு அதிசாரம்‌ ஆம்‌ ௪.று.
    (க-ரை காமசேவைக்கு உரிமை இல்லாத உறுப்புகளில்‌ விளையாடுதல்‌,
    வரம்பு கடந்த காம உணர்வு, பரத்தையர்‌ தொடர்பு பிரமசரியத்துக்கு கேடு
    தருவன.
    (வி-ரை!அங்கம்‌-உறுப்பு,அனங்கம்‌-உறுப்புஅன்மை
    மனங்கொள்விலார்‌-மனங்கொள்ளாது காசு முதலான பிற காரணங்களுக்குக்‌
    கூடும்‌ பரத்தையர்‌.
    1 பிரமோத்தரகாண்டம்‌, 8/99; 2 தொல்காப்பியம்‌ கற்பியல்‌
    அருங்கலச்செப்பு 102
    76 பிறர்மனை கோடல்‌ பிறர்க்குச்‌ செல்வாளை
    திறவதில்‌ கோடலோடு ஐந்து.
    இதுவும்‌ அது.
    (ப-றை பிறர்மனைகோடல்‌-பிறர்மனைவியைக்‌ கைக்கொள்ளுதல்‌,
    பிறர்க்குச்‌ செல்வாளை-பிறருக்கு உரியாளாகச்‌ செல்லுமவளை, திறவதில்‌-
    வல்லமையால்‌, கோடலோடு-கொள்ளுதலோடு. ஐந்து-அதிசாரங்கள்‌
    ஐந்தாகும்‌, ௪.று.
    (க-ரை பிறன்மனை விரும்புதல்‌ பிறர்க்குரியாளகச்‌ செல்பவனை
    வலிந்து கொள்ளுதலோடு அதிசாரங்கள்‌ ஐந்தாகும்‌ என்பதாம்‌.
    77 பொருள்‌ வரைந்து ஆசைச்‌ சுருக்கியே ஏவாமை
    இருள்தீர்ந்தார்க்கு ஐந்தாம்‌ வதம்‌.
    இது மிகுபொருள்‌ விரும்பாமைக்கு இலக்கணம்‌ கூறுகிறது.
    (ப-ரை! இருள்‌ தீர்ந்தார்க்கு-*மித்யா’ இருள்‌ நீங்கிப்போன
    நற்காட்சியாளருக்கு, ஐந்தாம்‌ வதம்‌-ஐந்தாவது அணுவிரதமாவது, ஆசை
    சுருக்கி-பொருள்‌ மேல்‌ செல்லும்‌ ஆசையைச்‌ சுருக்கி, பொருள்வரைந்து-
    பொருள்களுக்கு வரம்புகட்டி, ஏவாமை-பிறரை ஏவிப்பொருள்‌ சேர்க்காமை
    ஆகும்‌. எ-று.
    க-ரை ஆசை சுருக்கிப்‌ பொருள்களுக்கு வரம்பு கட்டி பிறரைக்‌ கொண்டு பொருளைப்‌ பெருக்காமல்‌ இருத்தல்‌ ஐந்தாம்‌ அணுவிரதம்‌ என்பதாம்‌.
    (வி-ரை ‘எனது’ என்று பிற பொருளை ஏற்றலே பொருள்‌ ஈட்டத்திற்கு அடிப்படை உணர்வு. தனது அல்லாத ஒன்றை தனதாகக்‌ கருதுவது மித்யாத்வம்‌ ஆகும்‌. நற்காட்சியாளனிடம்‌ அந்த உணர்வு இல்லை. அதனால்‌ அவன்‌ பொருளைச்‌ சேர்ப்பதில்‌ ஆர்வம்‌ கொள்ளுதல்‌ இல்லை. இது முற்றுமாக முனி நிலையில்‌ தோன்றுவது. அணு விரத நிலையில்‌ உள்ள சிராவகன்‌ பொருள்‌ இயல்பு அறிந்து இருப்பதால்‌ அந்த நிலையில்‌ தன்னிடம்‌ உள்ள பொருள்களுக்கு வரம்பு கட்டித்தன்‌ ஆசை உணர்வைச்‌ சுருக்குகிறான்‌.
    அருங்கலச்செப்பு 103
    அதனால்‌ ஆசை சுருக்கி என்றார்‌. ஆசை சுருக்கப்படுவதாலேயே பொருள்‌
    அளவு படுத்தப்படுகிறது என்பது கருத்து.
    78 இயக்கமோடு ஈட்டம்‌ பெருக்கலும்‌ லோபம்‌
    வியப்புமிகைக்‌ கோடலோடு ஐந்து.
    இது மிகுபொருள்‌ விரும்பாமைக்கு அதிசாரம்‌ கூறுகிறது.
    (ப-ரை! இயக்கமோடு(பெருக்கல்‌!-விலங்குகள்‌ பயணத்தை
    கூட்டுதலும்‌, ஈட்டம்‌ (பெருக்கலும்‌! – பொருள்களை அதிகம்‌ சேர்த்தலும்‌,
    லோபம்‌ (பெருக்கலும்‌!-அதிக லோபமும்‌, வியப்பு-பிறர்‌ ஆக்கம்‌ கண்டு
    வியப்படைதலும்‌, மிகைகோடல்‌-தேவைக்கு மிகுதியாக செயல்‌
    மேற்கொள்ளுதலும்‌ என, ஐந்து-ஐந்து அதிசாரங்கள்‌ ஆகும்‌. எ -று.
    (க-ரை! விலங்குகள்‌ செல்லும்‌ தூரத்தை அதிகப்படுத்துதலும்‌,
    பொருள்களை அதிகமாகச்‌ சேர்த்து வைத்தலும்‌, லோபத்தை பெருக்குதலும்‌,
    வியப்பு-பிறர்‌ பொருள்‌ ஆக்கம்‌ கண்டு வியப்படைதலும்‌, தேவைக்கு
    அதிகமாக செயல்‌ மேற்கொள்ளுதலும்‌ என இவ்வைந்தும்‌ மிகுபொருள்‌
    விரும்பாமைக்கு அதிசாரம்‌ ஆகும்‌.
    79 ஐயைந்து இறப்பிகந்த ஐந்து வதங்களும்‌ செய்யும்‌ சுவர்க்கச்‌ சுகம்‌
    இது அணுவிரதங்களின்‌ பயன்‌ கூறுகிறது.
    (ப-ரை ஐயைந்து-இருபத்தைந்து, இறப்பு-அதிசாரங்கள்‌, இகந்த
    நீங்கிய, ஐந்து வதங்களும்‌ ஐந்து அணுவிரதங்களும்‌, சுவர்க்கச்‌ சுகம்‌-தேவ
    வாழ்வை, செய்யும்‌-கொடுக்கும்‌ ௪.று.
    (க-ரை! 25 அதிசாரங்கள்‌ இல்லாமல்‌ ஐந்து அணுவிரதங்களை
    நோற்போர்‌ தேவ வாழ்வை அடைவர்‌ என்பதாம்‌.
    (வி-ரை! அணுவிரதம்‌ ஏற்பவர்‌ இரண்டு வகைப்படுவர்‌. எதிர்பவ
    ஆயுள்‌ கட்டியவர்‌, எதிர்பவஆயுள்‌ கட்டாதவர்‌. அணுவிரதம்‌ ஏற்பதற்கு முன்‌
    அருங்கலச்செப்ப 104.
    எதிர்‌ ஆயுளைக்‌ கட்டிவிட்டவர்‌ எதிர்பவ ஆயுள்‌ கட்டியவர்‌. அணுவிரத
    காலத்தில்‌ ஆயுள்‌ கட்டுபவர்‌ எதிர்பவ ஆயுள்‌ கட்டாதவர்‌. இருவருமே
    தேவனாகப்‌ பிறப்பர்‌. ஏனெனில்‌. தேவ ஆயுள்‌ தவிர வேறு ஆயுளைக்‌ கட்டிக்‌
    கொண்டவர்‌ அந்தப்‌ பிறவியில்‌ அணுவிரதமோ மகாவிரதமோ ஏற்க
    முடியாது என்பது ஆகம நியமம்‌. அணுவிரத காலத்தில்‌ எதிர்பவ ஆயுளைக்‌
    கட்ட நேர்ந்தால்‌ தேவ ஆயுளையே கட்டுவர்‌ என்பதும்‌ நியமம்‌. தேவ
    ஆயுளில்‌ வைமானிக தேவ ஆயுளையே கட்டுவர்‌. அணுவிரதம்‌ ஏற்கும்‌
    முன்‌ கீழ்‌ முத்தேவர்‌ ஆயுள்‌ கட்டி இருந்தாலும்‌ அணுவிரதம்‌ ஏற்ற பிறகு
    அந்த ஆயுள்‌ வைமானிக தேவ ஆயுளாக மாறிவிடும்‌. அணுவிரதம்‌
    உடையவர்‌ பதினாறாவது கல்பம்‌ வரையே செல்லமுடியும்‌; அதற்கு மேல்‌
    செல்ல முனி பதவி ஏற்க வேண்டும்‌.
    டூ எடுத்துக்காட்டு வரலாறுகள்‌ ]
    80 சட்டித்‌ தனதேவன்‌ பாரீசன்‌ நீலியும்‌
    பெற்றார்‌ சயனும்‌ சிறப்பு

இது விரதங்களால்‌ சிறப்படைந்தவர்‌ பெயர்‌ கூறுகிறது.
(ப-றை சட்டி-சட்டிப்‌ புலையனும்‌, தனதேவன்‌-தனதேவனும்‌, பாரீசன்‌-
பாரிஷேண குமாரனும்‌. நீலி-நீலி நங்கையும்‌, சயனும்‌-ஜய குமாரனும்‌,
சிறப்புப்‌ பெற்றார்‌ – தாங்கள்‌ ஏற்ற அணுவிரதங்களால்‌ சிறப்பு அடைந்தனர்‌
எ-று,
(கறை சட்டிப்‌ புலையன்‌ முதலான ஐவரும்‌ அணுவிரதங்களால்‌ சிறப்பு
அடைந்தவர்கள்‌ என்பதாம்‌.
(வி-ரை கொல்லாமையினால்‌ சட்டிப்‌ புலையனும்‌, பொய்‌ சொல்லாமையால்‌ தனதேவனும்‌, களவு செய்யாமையால்‌ பாரிஷேண குமாரனும்‌, பிரமசரியத்தால்‌ நீலி நங்கையும்‌, மிகு பொருள்‌ விரும்பாமையால்‌
ஜய குமாரனும்‌ சிறப்பு அடைந்த வரலாறுகளை ஆகமங்கள்‌ கூறுகின்றன.
( சட்டிப்புலையன்‌ வரலாறு ]
சுரம்ய தேசத்தில்‌ பெளதனபுரத்தில்‌ மகாபலன்‌ என்பவன்‌ அரசன்‌ ஆண்டு வந்தான்‌. அப்போது ஆட்டானிக பருவத்தில்‌ எட்டு நாளும்‌ தன்‌

அருங்கலச்செப்பு 104…
நாட்டில்‌ யாரும்‌ உயிர்க்கொலை செய்தல்‌ கூடாது என்று பறை
அறைவித்தான்‌. ஆனால்‌ அவ்வரசன்‌ மகன்‌ பலகுமாரன்‌ புலால்‌
உண்பவன்‌. அவன்‌ மறைவாக ஆடு ஒன்றைக்‌ கொன்று புலால்‌ உணவு
செய்வித்து உண்டான்‌. இதனை மறைவாகப்‌ பார்த்திருந்த
தோட்டக்காரன்‌ தன்‌ மனைவியிடம்‌ சொன்னான்‌. ஒற்றுகேட்ட ஒற்றர்கள்‌
இதனை அரசனிடம்‌ கூற அரசன்‌ விசாரித்து, தன்‌ ஆணையை மீறியை
மகனை தூக்கிலிடும்படி ஆணையிட்டான்‌. சேவகர்கள்‌ பலகுமாரனை
கொலைக்களத்திற்கு இட்டுச்‌ சென்றனர்‌.
கொலையாளியாகிய யமபாலனை அழைத்துவர சேவகர்‌ சிலர்‌
சென்றனர்‌. அவர்கள்‌ வருவதைப்‌ பார்த்த யமபாலன்‌ வீட்டில்‌ மறைந்து
கொண்டு தான்‌ வெளியூருக்குப்‌ போய்விட்டதாக அவர்களிடம்‌
கூறும்படி தன்‌ மனைவியிடம்‌ கூறினான்‌. அவர்கள்‌ வந்த போது
அவளும்‌ அப்படியே கூறினாள்‌. “அந்தோ! இன்று தானா
போகவேண்டும்‌. அரச குமாரனைக்‌ கொல்ல வேண்டும்‌. கொன்றால்‌
அவன்‌ மேலுள்ள விலை உயர்ந்த ஆடை. அணிகள்‌ கிடைத்திருக்குமே’
என்று சேவகர்‌ கூறினர்‌. அதனைக்‌ கேட்ட. மனைவிக்கு பொருளாசை
வந்தது. ‘அவர்‌ வெளியூருக்குத்தான்‌ சென்றுள்ளார்‌ என்ன செய்வது?”
என்று வாயால்‌ கூறி கை ஜாடையால்‌ உள்ளே இருப்பதைக்‌ காட்டினாள்‌.
குறிப்பைப்‌ புரிந்தகொண்ட சேவகர்கள்‌ உள்ளே நுழைந்து
யமபாலனை இழுத்துச்‌ சென்று அரசன்‌ முன்‌ நிறுத்திச்‌ செய்தியைச்‌
சொன்னார்கள்‌. ்‌
அரசன்‌ விசாரித்தான்‌. பமபாலன்‌ அரசனிடம்‌, “ஒரு சமயம்‌ பாம்பு
கடித்து நான்‌ மூர்ச்சையானேன்‌. நான்‌ இறந்துவிட்டதாகக்‌ கருதி.
சுற்றத்தார்கள்‌ என்னை சுடுகாட்டிற்கு எடுத்துச்‌ சென்றனர்‌. அப்போது
சர்வெளஷதி ரித்தி பெற்ற ஒரு முனிவர்‌ அங்கு இருந்தார்‌. அவர்‌ மேல்‌
பட்ட காற்று என்மேல்‌ படவே நான்‌ மூர்ச்சைத்‌ தெளிந்து எழுந்து
அவரைப்‌ பணிந்து அவரிடம்‌ அறம்‌ கேட்டேன்‌. சதுர்தசி அன்று
உயிர்க்கொலை செய்வதில்லை என்று அவரிடம்‌ விரதம்‌ ஏற்றேன்‌.
இன்று சதுர்தசி நாள்‌. அதனால்‌ நான்‌ உயிர்க்கொலை செய்ய
உடன்படேன்‌’ என்றான்‌. ஆனால்‌ அரசனோ கோபமுற்றுத்‌ தன்‌
மகனையும்‌ புலையனையும்‌ பிணைத்து முதலைகள்‌ நிறைந்த குளத்தில்‌.
போடச்‌ சொன்னான்‌. “ஏற்ற விரதத்தை விடுவதைக்‌ காட்டிலும்‌
அருங்கலச்செப்பு 106
இறப்பதே நன்று’ என்று நினைத்து அமைதியாக இருந்தான்‌. அரசன்‌
ஆணைப்படி இருவரையும்‌ கட்டி குளத்தில்‌ தள்ளினர்‌. அவ்வளவில்‌
யமபாலனுடைய விரத மகிமையால்‌ அங்கு ஜலதேவதை தோன்றி,
குளத்தின்‌ நடுவே ஒரு மண்டபம்‌ அமைத்து அதில்‌ இரத்தினங்கள்‌
இழைத்த அரியணையில்‌ அவனை அமரச்‌ செய்து துந்துபி முழங்கி
வாழ்த்திப்‌ பூஜித்தது. அதனைக்‌ கேள்வியுற்ற அரசன்‌ பயந்து தன்னை
நிந்தத்தவனாய்‌ அங்கு வந்து அவனை வணங்கி பிழை பொறுக்க
வேண்டினான்‌. பிறகு தன்‌ குடையின்‌ கீழ்‌ அரியணையில்‌ அமரச்‌
செய்து, சிறப்புகள்‌ செய்து சிறந்த மனிதன்‌ எனறு போற்றினான்‌.
இவ்‌ வரலாறு அகிம்சா விரதத்தின்‌ பெருமையைக்‌ காட்டுகிறது.
இ தனதேவன்‌ வரலாறு ]
ஜம்பூ த்வீப பூர்வ விதேஹ புஷ்கலாவதி தேச புண்டரீகினி நகரில்‌
தனதேவன்‌ ஜிநதேவன்‌ என்ற இரண்டு வணிகர்கள்‌ இருந்தனர்‌.
அவர்களுள்‌ தனதேவன்‌ உண்மை பேசுபவன்‌. ஒரு சமயம்‌ இருவரும்‌,
“கிடைக்கும்‌ லாபத்தைச்‌ சமமாகப்‌ பங்கிட்டுக்‌ கொள்வது” எனத்‌
தமக்குள்‌ நிர்ணயம்‌ செய்துகொண்டு வியாபாரம்‌ செய்ய வெளிநாடு
சென்றனர்‌. நல்‌ வினைப்‌ பயனால்‌ அங்கு ஏராளமான லாபத்தைச்‌
சம்பாதித்து க்ஷேமமாகத்‌ தங்கள்‌ நகருக்குத்‌ திரும்பி வந்து சேர்ந்தனர்‌.
பின்‌ தனதேவன்‌ லாபத்தில்‌ பாதியைத்‌ தனக்குக்‌ கொடுக்கும்படி ஜின
தேவனைக்‌ கேட்டான்‌. அவன்‌ கொஞ்சம்‌ தர முடியும்‌ என்றான்‌. எனவே
பூசல்‌ எழுந்தது. தனதேவன்‌ பெரியோர்களிடத்தும்‌ பிறகு அரசனிடமூம்‌
தன்‌ வழக்கை எடுத்துச்‌ சென்றாள்‌. அரசன்‌ விசாரித்தான்‌. சான்று ஏதும்‌
இல்லாமையால்‌, ஜினதேவன்‌, ‘நான்‌ விரும்பும்‌ ஒரு பகுதியைக்‌
கொடுப்பதாகக்‌ கூறினேனேயல்லாது பாதி கொடுப்பதாகக்‌ கூற
வில்லை” என்றான்‌. அரசன்‌ ஆட்சி நியமப்படி அவர்கள்‌ இருவர்‌ கையிலும்‌ நெருப்பு வைக்கச்‌ சொன்னான்‌, ஸத்ய விரத மகிமையால்‌
நெருப்பு தனதேவனைச்‌ சுடவில்லை.

மற்றவனைச்‌ சுட்டது. உண்மையை அறிந்து சொத்துக்கள்‌
முழுவதையும்‌ தனதேவனுக்குக்‌ கொடுக்க ஆணையிட்டான்‌.
தனதேவனை எல்லோரும்‌ புகழ்ந்தனர்‌. அரசனும்‌ புகழ்ந்தான்‌.
அருங்கலச்செப்பு 107
| பாரிக்ஷேணே குமாரன்‌ வரலாறு ]
இவர்‌ கதை ஏற்கெனவே ஸ்திதிகரண (அழிந்தாரை தாங்கல்‌ உறுப்புக்கு
எடுத்துக்‌ காட்டாகத்‌ தரப்பட்டுள்ளது. திருடாமைக்கும்‌ அதனையே எடுத்துக்‌
காட்டாக எடுத்துக்கொள்க. ்‌
நீலி நங்கை வரலாறு
இலாட தேசத்தில்‌ பிரகுகச்சம்‌ என்னும்‌ நகரில்‌ வசுபாலன்‌ என்னும்‌
அரசன்‌ ஆண்டு வந்தான்‌. அந்‌ நகரில்‌ ஜினதத்தன்‌ என்னும்‌ வைசியனுக்கும்‌
அவன்‌ மனைவி ஜினதத்தை என்பவளுக்கும்‌ நீலி என்ற மகள்‌ இருந்தாள்‌.
அவள்‌ மிக அழகுடையவளாக இருந்தாள்‌. அதே நகரில்‌ சமுத்திரதத்தன்‌
என்பானுக்கும்‌ அவன்‌ மனைவி சாகரதத்தை என்பவளுக்கும்‌ சாகரதத்தன்‌
என்றொரு மகன்‌ இருந்தான்‌.

ஒரு சமயம்‌ நீலி மிக்க ஒப்பனைகளுடன்‌ ஜிநாலயத்தில்‌ ஒரு
மகாபூஜை செய்துவிட்டு காயோத்ஸர்க்கமாக தியானத்தில்‌ நின்றிருந்தாள்‌.
அப்போது அங்கு நண்பர்களுடன்‌ வந்திருந்த சாகரதத்தன்‌ அவளழகில்‌
மயங்கி ‘இவள்‌ என்ன தேவ மகளோ?’ என வியந்து கேட்டான்‌. அவள்‌
ஜினதத்தன்‌ மகள்‌’ என்று நண்பர்கள்‌ கூறினர்‌. அவளை மணக்கும்‌
இச்சையுடன்‌ வீடு திரும்பி தன்‌ ஆசையைப்‌ பெற்றோருக்குச்‌ சொன்னான்‌.
“ஜைனர்‌ அல்லாதார்கு தன்‌ மகளை அவன்‌ தரான்‌’ எனத்‌ தந்‌ைத கூறினார்‌.
பிறகு தந்தையும்‌ மகனும்‌ தாங்கள்‌ ஜைனர்கள்‌ என்ற ஏமாற்றி
பெண்ணை மணம்‌ முடித்துக்‌ கொண்டனர்‌. திருமணத்திற்குப்‌ பிறகு புத்த
மதத்தினராக ஆகிவிட்டனர்‌. நீலியைத்‌ தாய்‌ வீட்டுக்கு அனுப்பக்கூட
மறுத்து விட்டனர்‌. இதைக்‌ கேள்விப்பட்ட ஜினதத்தன்‌ தான்‌ ஏமாற்றப்பட்டது
அறிந்து தனக்கு மகளே இல்லை என்று கூறிக்கொண்டான்‌. நீலியோ தனி
வீட்டில்‌ இருந்து கொண்டு ஜிந மத ஒழுக்கங்களோடு வாழ்ந்து வந்தாள்‌.
இப்படி இருக்கும்‌ போது புத்த துறவியரைப்‌ பார்ப்பதால்‌, அவர்களது
தொடர்பால்‌, உரையால்‌, தருமத்தால்‌ அவள்‌ புத்தமதத்திற்கு மாறி விடுவாள்‌
எனக்‌ கருதி புத்த துறவிகளை வரவேற்று உபசரிக்க செய்தனர்‌. அவர்கள்‌
அருங்கலச்செப்பு 108
ஞானிகள்‌. அவர்களுக்கு உணவு தந்து உபசரிக்க வேண்டும்‌ என்றனர்‌. ஒரு
நாள்‌ அவள்‌ புத்த துறவியரை வர வழைத்து அவர்களுக்கு உணவு
படைத்தாள்‌. அவர்களுக்குத்‌ தெரியாமல்‌ அவர்கள்‌ செருப்புகளில்‌
ஒவ்வொன்றை எடுத்துக்‌ துண்டு துண்டாக நறுக்கி உணவுடன்‌ கலந்து
வைத்தாள்‌. உணவு உண்ட பின்‌ அவர்கள்‌ வெளியில்‌ போகத்‌ தங்கள்‌
செருப்புகளைப்‌ பார்க்க அவை காணாது தேடலானார்கள்‌. அப்போது நீலி
தங்கள்‌ ஞான திருஷ்டியால்‌ செருப்பு எங்கு இருக்கிறது என்று கண்டு
கொள்ளலாமே’ என்றாள்‌. அத்தகு ஞானம்‌ தங்களுக்கு இல்லை என்றனர்‌.
அப்படியானால்‌, ‘வாந்தி எடுங்கள்‌. உங்கள்‌ வயிற்றிலிருந்து அவை வரும்‌’
என்றாள்‌. அவர்கள்‌ வாந்தி எடுத்தனர்‌. செருப்பு துண்டுகள்‌ வந்து விழுந்தன.
இந்‌ நிகழ்ச்சியால்‌ வீட்டில்‌ உள்ளோர்‌ அவள்‌ மீது மிகுந்த துவேஷம்‌
கொண்டனர்‌.
பிறகு சாகரதத்தன்‌ சகோதரி நீலிக்குப்‌ பர புருஷன்‌ தொடர்பு உண்டு
என்று பொய்‌ வதந்தி கூறினாள்‌. இதை அறிந்த நீலி, ஜினபபவனம்‌ அடைந்து,
‘பழி நீங்கினால்‌ அல்லது நான்‌ உணவு கொள்ளேன்‌’ என நியமம்‌ எடுத்துக்‌
கொண்டாள்‌. அப்போது நகர தேவதை தோன்றி, “நான்‌ உன்‌ பழியை
நீக்குவேன்‌ நீ இப்படி உயிரை விடவேண்டும்‌’ எனக்‌ கூறி அரசன்‌ கனவிலும்‌
‘உன்‌ நகர கதவுகள்‌ மூடப்பட்டு இருக்கும்‌. அவை பெரும்சீலமுடைய ஒரு
பெண்ணின்‌ இடது கால்‌ பட்டால்‌ மட்டும்‌ திறக்கும்‌’ எனக்‌ கூறிச்‌ சென்றது.
மறுநாள்‌ கதவுகள்‌ திறக்கப்படாமல்‌ போகவே அரசன்‌ நகரப்‌ பெண்களை
வரவழித்து அவர்கள்‌ கால்‌-படும்படிச்‌ செய்தான்‌. ஒருவராலும்‌ அவை
திறக்கப்படாமல்‌ போகவும்‌, நீலியின்‌ இடதுகால்‌ பட்ட அளவில்‌ அவை
திறந்து கொண்டன. அதனைக்‌ கண்ட அரசன்‌ முதலானோர்‌ மகிழ்ந்து
நீவியைப்‌ புகழ்ந்து போற்றினர்‌.”
Nn
ஜயகுமாரன்‌ வரலாறு J
அ அ அப
்‌ குருஜாங்கல தேசத்து அஸ்தினாபுரத்து ஆரசன்‌ சோமப்பிரபன்‌
என்பவனுக்கு ஐயகுமாரன்‌ என்றொரு மகன்‌ இருந்தான்‌. அவன்‌ மிகுபொருள்‌ விரும்பா விரதம்‌ ஏற்று இருந்தான்‌. தன்‌ மனை, வி சுலோசனாவோடு மட்டும்‌ உறவு வைத்திருந்தான்‌. அவர்கள்‌ இருவரும்‌ ஒரு சமயம்‌ பூர்வபவ ஞானம்‌ உடையவர்களாகி, பல வித்தைகளின்‌ உதவியால்‌, பூர்வ பவத்தில்‌ தாங்கள்‌ இருந்த இரண்ய வர்மா, பிரபாவதி பம்‌ கொண்டு மேரு முதலிய மலைகளில்‌

அருங்கவச்செப்பு 199
உள்ள இயற்கை ஜிநாலயங்களைத்‌ தரிசித்து வந்தார்கள்‌. அப்போது அவர்கள்‌
கைலாச மலையில்‌ பரதனால்‌ நிறுவப்பட்ட 24 தீர்த்தங்கரர்‌ பிம்பங்களைத்‌
தரிசித்தனர்‌, பூஜித்தனர்‌.
அதுபோது செளதர்ம இந்திர சபையில்‌ ‘மிகு பொருள்‌ விரும்பாமை
விரதத்தில்‌ ஜயகுமாரனே சிறந்தவன்‌’ எனப்பேசப்பட்டது. அதனைச்‌ சோதிக்க
இரவிப்பிரபன்‌ என்ற தேவன்‌ மிக அழகுடைய பெண்‌ உருவம்‌ கொண்டு பிற
பெண்களுடன்‌ ஜயகுமாரன்‌ முன்‌ தோன்றி, ‘நான்‌ சுலோசனை சுயம்வர
சமயத்தில்‌ உன்னோடு போட்டியிட்ட நமிவித்யாதரனுடைய மனைவி
ஆவேன்‌. அவனை வெறுத்து வந்துள்ளேன்‌. என்னிடம்‌ பல வித்தைகள்‌
உள்ளன. என்னை ஏற்றுக்‌ கொள்ளுங்கள்‌ அதனால்‌ உங்களுக்கு
வித்தைகளும்‌ அரசும்‌ கிடைக்கும்‌’ என்றாள்‌. அதற்கு ஜயகுமாரன்‌,
“பெண்ணே! அப்படிச்‌ சொல்லாதே பிறபெண்கள்‌ எனக்குத்‌ தாய்‌
போன்றவர்கள்‌’ என்றான்‌. பிறகு அவள்‌ பல காம சேஷ்டைகளைச்‌ செய்து
தொல்லை தந்தாள்‌. ஆனால்‌ ஜயகுமாரன்‌ தன்‌ நிலையில்‌ தளராது நின்றான்‌.
அதனைக்‌ கண்ட தேவன்‌ தன்‌ சுய உருவில்‌ தோன்றி தன்‌ வரலாற்றைக்‌ கூறி
ஆடை

அணிகளால்‌ பாராட்டிவிட்டு தன்‌ இருப்பிடம்‌ திரும்பினான்‌
(விரத

மின்மையால்‌ கேடு அடைந்தவர்கள்‌ ]

  1. தனசிரி சத்தியன்‌ தாபதன்‌ காப்பான்‌
    நனைதாடி வெண்ணெய்‌ உரை.
    இது விரதம்‌ இன்மையால்‌ கேடு அடைந்தார்‌ பெயர்‌ கூறுகிறது.
    (ப-ரை தனசிரி-தனசிரியும்‌, சத்தியன்‌-சத்தியகோஷணும்‌, தாபதன்‌-
    உறித்தாபஸனும்‌, காப்பான்‌-தளவரனும்‌, நனைதாடி வெண்ணெய்‌-தாடி
    வெண்ணெய்க்காரனும்‌, உரை-ஆகமத்தில்‌ உரைக்கப்பட்டனர்‌. ௪ – று.
    (க-ரை! தனசிரி முதலான ஐவர்‌ வரலாறு அணுவிரதங்கள்‌
    ஏற்காமையால்‌ கேடு அடைந்தனர்‌ என ஆகமத்தில்‌ உரைக்கப்பட்டனர்‌
    என்பதாம்‌.
    (வி-றை தனசிரி கொலைக்‌ குற்றத்தாலும்‌, சத்திய கோஷன்‌ பொய்க்‌
    குற்றத்தாலும்‌, உறித்தாபசன்‌ திருட்டுக்‌ குற்றத்தாலும்‌, தளவரன்‌ காமக்‌
    அருங்கலச்செப்பு. . 110
    குற்றத்தாலும்‌, வெண்ணெய்த்தாடிக்காரன்‌ பேராசைக்‌ குற்றத்தாலும்‌ கேடு
    அடைந்தவர்கள்‌ ஆவர்‌.
    “வெண்ணெய்‌ நனை தாடி’ எனக்‌ கூட்டுக. வெண்ணெயில்‌ நனைத்த
    தாடி அதாவது தாடி வெண்ணெய்க்காரன்‌.
    தனிரி வரலாறு
    இலாட தேசத்தில்‌ குருகச்சம்‌ என்னும்‌ நகரில்‌ லோகபாலன்‌ அரசு
    செலுத்திவந்தான்‌. அப்போது அந்‌ நகரில்‌ தனபாலன்‌ என்ற வைசியனும்‌
    தனசிரி என்னும்‌ அவன்‌ மனைவியும்‌ இருந்தனர்‌. தனசிரி எப்போதும்‌ ஜீவ
    வதையில்‌ இருந்தாள்‌. ஜீவ இம்சையிலிருந்து அவள்‌ விலக ஏதும்‌ விரதம்‌
    எடுக்க வில்லை. அவளுக்கு சுந்தரி என்ற மகளும்‌ குணபாலன்‌ என்ற மகனும்‌
    இருந்தனர்‌. இவ்விருவரும்‌ பிறப்பதற்கு முன்பே தனபாலனால்‌ எடுத்து
    வளர்க்கப்பட்ட குண்டலன்‌ என்ற ஒரு வாலிபனும்‌ இருந்தான்‌. தனபாலன்‌
    இறந்த பிறகு தனசிரி குண்டலனுடன்‌ காம உறவு கொண்டு இருந்தாள்‌.
    சூணபாலனுக்கு இது தெரிய வந்தது. இவ்வளவில்‌ தனசிரி குண்டலனை
    அழைத்து, ‘குணபாலன்‌ நம்‌ நடத்தையில்‌ ஐயம்‌ கொண்டு வெறுப்பில்‌
    உள்ளான்‌. அவனால்‌ நமக்குத்‌ தொல்லைகள்‌ வரலாம்‌. ஆகையால்‌ நாளை
    அவனை மாடுகளுடன்‌ காட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்‌. அங்கே அவனை
    நீ கொன்றுவிடு, பிறகு நாம்‌ சுகமாக இருக்கலாம்‌’ என்றாள்‌. இதனை
    ஒற்றுக்கேட்ட சுந்தரி குணபாலனிடம்‌ கூறி எச்சரித்தாள்‌.
    மறுநாள்‌ தனசிரி கூறியபடி குணபாலன்‌ மாடுகளை ஓட்டிச்‌ சென்று
    காட்டில்‌ மேயவிட்டு அங்குக்‌ கிடந்த ஒரு கட்டையின்‌ மேல்‌ தன்‌ வேஷ்டியை
    மூடி ஆள்‌ படுத்திருப்பது போல செய்துவிட்டு தான்‌ மறைந்து இருந்தான்‌. அங்கு வந்த குண்டலன்‌ குணபாலன்‌ படுத்து இருக்கிறான்‌ என்று கருதி
    அக்கட்டையைத்‌ தன்‌ கைவாளால்‌ வெட்டினான்‌. திடீரென்று குணபாலன்‌
    பாய்ந்து அவன்‌ கத்தியைப்‌ பிடுங்கி அவனை வெட்டிவிட்டு அக்கத்தியுடன்‌
    வீடு திரும்பினான்‌. அவனைக்‌ கண்டதும்‌ தனசிரி ‘குண்டலன்‌ எங்கே?’ என்றாள்‌. “இக்‌ கத்தியைக்‌ கேள்‌’ என்று ரத்தம்‌ தோய்ந்த கத்தியைக்‌ காட்டினான்‌. குண்டலனை இவன்‌ வெட்டிவிட்டான்‌ என அறிந்து சட்டென அக்‌ கத்தியைப்‌ பிடுங்கி குணபாலனை வெட்டிவிட்டாள்‌. உடனே சுந்தரி அங்கிருந்த உலக்கையை எடுத்து ஓங்கி தாயின்‌ மண்டையில்‌ அடித்தாள்‌.
    அருங்கலச்செப்பு in
    இந்தக்‌ கலவரத்தில்‌ அங்கே வந்த சேவகர்கள்‌ அவர்களை இழுத்துப்‌ போய்‌
    அரசனிடம்‌ நடந்ததைக்‌ கூறினார்கள்‌. அரசனும்‌ நன்கு விசாரித்து
    தனசிரிக்குக்‌ கடும்‌ தண்டனை விதித்தான்‌. அவள்‌ இகழப்பட்டு பலத்‌
    துன்பங்களை அனுபவித்துத்‌ துர்கததியை அடைந்தாள்‌.
    ( சத்தியகோஷன்‌ வரலாறு ]
    ஜம்பூ த்வீப பரத க்ஷேத்திர சிம்மபுர நகர அரசன்‌ சிம்மசேனனிடம்‌
    ஸ்ரீபூதி என்னும்‌ பிராமணன்‌ இருந்தான்‌. அவன்‌ தன்‌ பூணூலில்‌ கத்திரிகோல்‌
    தொங்கவிட்டு இருந்தான்‌. தான்‌ பொய்‌ பேசினால்‌ தன்‌ நாக்கை கத்திரியால்‌
    கத்திரித்துக்‌ கொள்ளுவதாகச்‌ சொல்லித்‌ திரிந்து வந்தான்‌. இப்படிக்‌ கபடமாக
    வாழ்ந்து வந்தபோது அவனுக்கு சத்தியகோஷன்‌ என்னும்‌ பெயர்‌
    வழங்கலாயிற்று.

அப்படி இருக்கும்‌ போது பத்மஷண்டபுரம்‌ என்ற நகரத்திலிருந்து
பத்ரமித்திரன்‌ என்ற வணிகன்‌ இரத்தின தீவு முதலிய தீவுகளுக்குச்‌ சென்று
மிக்க பொருளை ஈட்டிக்‌ கொண்டு திரும்பி வரும்‌ வழியில்‌ சிம்மபுரத்தை
அடைந்தான்‌. அந்த நகரம்‌ அவனுக்கு மிகவும்‌ பிடித்து இருந்ததால்‌
அங்கேயே வசிக்க எண்ணினான்‌. தன்‌ உற்றார்‌ உறவினர்களை அங்கு
அழைத்து வந்துவிட உத்தேசித்தான்‌. அப்போது தன்னிடமுள்ள
விலையுயர்ந்த ரத்தினங்கள்‌ உள்ள செப்பினை சத்தியகோஷனிடம்‌
இரகசியமாய்க்‌ கொடுத்துவிட்டுத்‌ தன்‌ ஊருக்குச்‌ சென்றான்‌. அங்கிருந்து
உற்றார்களை அழைத்து வந்ததும்‌ வணிகள்‌ சத்திய கோஷனிடம்‌ சென்று தன்‌
செப்பினைக்‌ கேட்டான்‌. சத்திய கோஷனோ அப்பொருளைத்‌ தான்‌ அடைய
விரும்பி அவ்வணிகளிடம்‌ ‘நீ என்ன பைத்தியக்காரனா? நான்‌ உன்னைப்‌
பார்த்ததே இல்லையே’ என்றான்‌. பிறகு மிரட்டி விரட்டிவிட்டான்‌.
பத்திரமித்தன்‌ அரசனிடம்‌ முறையிட்டான்‌. அரசன்‌ சத்திய கோஷனை
விசாரிக்க அவனும்‌ தான்‌ அவனைக்‌ கண்டதே இல்லை என்றான்‌. அவன்‌
பைத்தியம்‌ என அரசன்‌ நம்பும்படி கூறினான்‌. அதற்கு மேல்‌ அரசன்‌ ஒன்றும்‌
செய்யாதுவிட்டான்‌. ஆனால்‌, அவ்வணிகன்‌ நாள்தோறும்‌ கண்ட இடங்களில்‌
கூறினான்‌. பிறகு அரண்மனை எதிரில்‌ உள்ள ஒரு மரத்தின்மேல்‌ நின்று
எல்லோரும்‌ கேட்கும்படி சத்தியகோஷன்‌ செய்கையை உரத்தக்‌
கூவிக்கொண்டே இருந்தான்‌. அதனை கேட்ட அரசி இராமதத்தா தேவி
அருங்கலச்செப்பு 112
“இவன்‌ உன்மத்தனாயின்‌ கண்ட கண்ட விஷயங்களை கண்டபடி உளறுவான்‌.
ஆனால்‌ இவனோ ஓரே செய்தியை முன்பின்‌ மாறாது ஒரே விதமாய்க்‌
கூறகிறான்‌. இவன்‌ பைத்தியனாக இருக்க முடியாது’ எனக்‌ கருதி அவளைத்‌
தன்‌ எதிரில்‌ வரவழித்து எல்லாவற்றையும்‌ விசாரித்து உண்மையைக்‌
கண்டுபிடிக்க முடிவு செய்தாள்‌. அதன்பிறகு அரசனிடம்‌ இசைவுபெற்று
சத்தியகோஷனுடன்‌ சூதாடி அவனைத்‌ தோற்கடித்து அவன்‌ மோதிரம்‌,
பூணூல்‌ முதலியவற்றைப்‌ பெற்றாள்‌. அவற்றை அவன்‌ அறியாமல்‌ நிபுணமதி
என்பவளிடம்‌ கொடுத்து பாண்டாகாரியிடம்‌ அனுப்பி, அவற்றைக்‌ காட்டி,
பத்திரமித்திரனுடைய இரத்தின செப்பினை சத்திய கோஷன்‌ வாங்கிவரச்‌
சொன்னதாகக்‌ கூறச்‌ செய்தாள்‌. அவளும்‌ அப்படியே சென்று தன்‌
சாமர்த்தியத்தினால்‌ பண்டாகாரியை ஏமாற்றி அச்‌ செப்பினை வாங்கிவந்து
அரசியிடம்‌ கொடுத்தாள்‌. அரசியும்‌ அதனை அரசனிடம்‌ சேர்த்தாள்‌.
அதனைக்‌ கண்ட அரசன்‌ மிகவும்‌ கோபம்கொண்டு சத்தியகோஷனுக்குக்‌
கடுமையான தண்டனைகளைக்‌ கொடுத்து, அவன்‌ சொத்துக்களையும்‌
பறிமுதல்‌ செய்து அவனையும்‌ நாட்டைவிட்டு ஓட்டினான்‌.
பின்பு அரசன்‌ பல இரத்தின செப்புகளுடன்‌ சேர்த்து அவன்‌
செப்பினையும்‌ வைத்து பத்திரமித்திரனை அழைத்து அவன்‌ செப்பை
எடுத்துக்‌ கொள்ளும்படிக்‌ கூறினான்‌. வணிகனும்‌ அவற்றுள்‌
தன்னுடையதையே தேடி எடுத்தான்‌. அரசன்‌ மகிழ்ந்து அவனுக்குப்‌ பல
பரிசுகளையும்‌ செட்டிபட்டத்தையும்‌ தந்தான்‌. சத்தியகோஷனோ சத்தியம்‌
இல்லாமையால்‌ பல துன்பங்களை அனுபவித்து மரணம்‌ அடைந்து அரசன்‌
கருவூலத்தில்‌ அகந்தன்‌ என்னும்‌ பாம்பாகப்‌ பிறந்தான்‌. அங்கு மரணம்‌ அடைந்து பல பிறவிகளில்‌ உழன்றான்‌-நீண்ட பல பிறவிகளை
அனுபவித்தான்‌.
[ உறித்தாபஸன்‌ வரலாறு இ|
வத்ஸ தேசத்தில்‌ கெளசம்பி என்னும்‌ நகரில்‌ சிம்மரதன்‌ என்னும்‌ அரசன்‌ ஆண்டு வந்தான்‌. அரசியின்‌ பெயர்‌ விஜயா. அந்நகரில்‌ ஒரு திருடன்‌ பிறருடைய பூமியைக்கூட மிதிப்பதில்லை என்று கூறி ஒர்‌ ஆலமரத்தில்‌ உறியொன்றைக்‌ கட்டி அதிலிருந்து தவம்‌ செய்வது போல பகல்‌ முழுதும்‌ நடித்து இரவு நடுநிசியில்‌ நகருள்‌ சென்று பொருளைத்‌ திருடிவந்து ஓரிடத்தில்‌ புதைத்து வைத்துக்‌ கொண்டிருந்தான்‌.

அருங்கலச்செப்பு ng
நகரில்‌ திருட்டு அதிகமாவதைக்‌ கேள்வியுற்ற அரசன்‌ காவலர்‌
தலைவனை அழைத்து, இன்று முதல்‌ ஏழு நாளைக்குள்‌ அந்தத்திருடனை நீ
கண்டுபிடிக்கவில்லை என்றால்‌ உன்‌ தலை அறுக்கப்படும்‌ என்று ஆணை
இட்டான்‌.

அப்படியே அவன்‌ முயற்சித்தும்‌ திருட்டை கண்டுபிடிக்க
முடியவில்லை; மிகவும்‌ கவலை கொண்டான்‌. அப்போது ஒரு பிராமணன்‌
அங்கு வந்து அன்னம்‌ இடுமாறு கேட்டான்‌. அப்போது தளவரன்‌, “பிராமண!
என்‌ உயிர்‌ போக இருக்கிறது. நீயோ அன்னம்‌ கேட்கிறாய்‌’ என்றான்‌. பிறகு
பிராமணன்‌ அவனிடம்‌ நிகழ்ந்த வரலாறுகளைக்‌ கேட்டான்‌. பிறகு
பிராமணன்‌, *இங்கு யாராவது கொஞ்சம்‌ கூட ஆசையில்லை என்று
சொல்லக்கூடியவர்‌ இருக்கின்றனரா?” என்று கேட்டான்‌. தளவரன்‌
உறித்தாபாஸனை பற்றிக்‌ கூறி அவன்‌ மீது ஐயம்‌ இல்லை என்றான்‌.
அப்போது பிராமணன்‌ தன்‌ கதையைக்‌ கேட்கும்படி கூறினான்‌.
1) “என்‌ மனைவி பிற ஆடவர்‌ தன்மேல்‌ படக்கூடாது என்ற
கொள்கையினால்‌ தன்‌ பிள்ளைக்குப்‌ பால்‌ கொடுக்கும்‌ போது கூட
பிள்ளையின்‌ உடல்‌ தன்மேல்‌ படாதபடிச்‌ சேலையால்‌ தன்‌ உடம்பை
மூடிக்கொள்வாள்‌. இவ்வித மாயச்‌ செய்கையைக்‌ கண்ட நான்‌, இவள்‌ மிக்க
பதிவிரதை என்றே நம்பி இருந்தேன்‌. ஆனால்‌ அவள்‌ என்னை ஏமாற்றி ஒரு
நாள்‌ இரவில்‌ ஓர்‌ இடையனுடன்‌ தொடர்பு பட்டிருந்ததை நான்‌ நேரில்‌ கண்டு-
வெறுப்படைந்து சந்நியாசியானேன்‌. “
2 அப்போது என்னிடம்‌ இருந்த திரவத்தை ஒரு பொன்‌ கம்பியாகச்‌
செய்து அதை ஒரு கைத்தடியில்‌ அடக்கம்‌ செய்து ஊன்றுகோலாக
உபயோகித்து வந்தேன்‌. சிறிது நாளில்‌ என்னோடு ஒரு பிரமசாரி வாலிபன்‌
வந்து சேர்ந்தான்‌. அவனை நான்‌ நம்பவில்லை. அதனால்‌ கைத்தடியை நான்‌
பாதுகாப்பாக வைத்தேன்‌. அதனைப்‌ பார்த்த அவன்‌ அதற்குள்‌ ஏதோ இருக்க
வேண்டும்‌ என்று முடிவுசெய்து கொண்டு அன்று முதல்‌ தான்‌ பிறர்‌ பொருளை
துரும்புகூட ஆசைப்படாதவன்‌ என்று நான்‌ நம்பும்படி நடந்து வந்தான்‌.
ஒருநாள்‌ ஒரு குயவன்‌ வீட்டில்‌ அவன்‌ படுத்தான்‌. காலையில்‌ அங்கிருந்து
வெகுதூரம்‌ வந்த பிறகு தன்‌ தலைமீது ஒட்டிக்கிடந்த துரும்பைப்‌ பார்த்து
மாயத்துடன்‌ ‘பிறர்‌ தூசு எடுத்துவந்துவிட்டேனே’ என்று கூறி அதனை விட்டு
வர திரும்பிச்‌ சென்றான்‌. பிறகு மாலையில்‌ நான்‌ உணவு முடித்த பிறகுதான்‌
அருங்கலச்செப்பு 4.
வந்தான்‌. அவன்‌ பிச்சைக்குப்‌ போகும்போது இரவில்‌ நாய்‌ ஓட்ட தடியைத்‌
தந்தேன்‌, அவன்‌ புனிதமானவன்‌ என்று கருதி. போனவன்‌ போனவனே.
3 பிறகு நான்‌ ஒரு காட்டின்‌ வழியே செல்லும்போது சில பறவைகள்‌
ஒன்று சேர்ந்து ஒரு கிழப்பறவை சொல்லைக்‌ கேட்டு அதன்‌ அலகைக்‌ கட்டி
விட்டுச்‌ சென்றன. பறவைகள்‌ அப்பால்‌ சென்றதும்‌ கிழப்பறவை அக்கட்டை
தன்‌ கால்களால்‌ கழற்றிவிட்டு பறவைக்‌ குஞ்சுகளை வேண்டிய மட்டும்‌
புசித்துவிட்டுப்‌ பின்‌ பறவைகள்‌ வருவதற்குள்‌ கட்டை முன்‌ போல
மாட்டிக்கொண்டு நல்லது போல நடித்ததைக்‌ கண்டு வியப்படைந்தேன்‌.
கி அப்பால்‌ நான்‌ செல்லும்‌ போது வழியில்‌ அபஸரன்‌ என்ற கள்வன்‌
ஒருவன்‌ தன்‌ தலையில்‌ பெரிய கல்‌ ஒன்றை வைத்துக்கொண்டு பகல்‌
முழுதும்‌ தவம்‌ செய்வதாக நடித்து, இரவு வந்ததும்‌ அவ்‌ வழியே செல்லும்‌
பிரயாணிகளின்‌ தலையில்‌ அக்கல்லைப்‌ போட்டுக்‌ கொன்றுவிட்டு
அவர்களிடம்‌ உள்ள பொருளை அபகரித்து வருவதை நேரில்‌ கண்டு
வியப்படைந்தேன்‌.
அதனால்‌, தாபஸனே கள்வனாக இருக்கலாம்‌. நானே கண்டு
பிடிக்கிறேன்‌” என்றான்‌. அப்படி அந்த பிராமணன்‌ அவ்வுறித்‌ தாபஸன்‌
இருக்கும்‌ இடம்‌ சென்று குருடன்‌ போல நடித்து அங்கேயே தங்கினான்‌.
உறித்தாபாஸன்‌ அவன்‌ எதிரில்‌ வந்து அவனை வெட்டுவது போலும்‌
குத்துவது போலும்‌ கை சாடைகள்‌ காட்டி சோதிக்க அவன்‌ ஒன்றும்‌ தெரியாதது போல நடித்தான்‌. அதனை உண்மை என்று நம்பிய உறித்தாபஸன்‌ அன்றிரவு வழக்கம்‌ போல உறியைவிட்டு இறங்கித்‌ தான்‌ பொருளை ஒளித்து
வைத்திருக்கும்‌ இடத்திற்குச்‌ சென்று பாதுகாப்பு செய்துவிட்டு மறுபடியும்‌ உறியின்‌ மேல்‌ ஏறிக்கொண்டான்‌. இதை எல்லாம்‌ அறிந்துகொண்ட
பிராமணன்‌ மறுநாள்‌ தளவரனிடம்‌ வந்து கூற அவனும்‌ அந்த தாபஸனைப்‌
பிடித்து வந்து அரசன்‌ முன்‌ நிறுத்தினான்‌. அவனுக்கு அரசன்‌ கடுமையான தண்டனைகளை விதிக்க அதனால்‌ அவன்‌ துக்கமடைந்து இறந்து துர்கததியை அடைந்தான்‌. ,
அருங்கலச்செப்பு nS
காப்பான்‌ வரலாறு
ஆஹிீர நாட்டில்‌ நாசிக்ய நகரில்‌ கனகரதன்‌ அரசன்‌ ஆண்டு
வந்தான்‌. அவன்‌ அரசி கனகமாலை. யமதண்டன்‌ என்றொரு காப்பான்‌
(தளவரன்‌! இருந்தான்‌. அவன்‌ ஒழுக்கம்‌ இல்லாதவன்‌. அவன்‌ தாய்‌
மிகவும்‌ அழகுடையவள்‌. அவள்‌ இளமையிலேயே கணவனை இழந்து
விதவையானாள்‌; ஒழுக்கம்‌ கெட்டவளானாள்‌. ஒரு நாள்‌ அவள்‌
மருமகள்‌ சில ஆபரணங்களை அவளிடம்‌ கொடுத்தாள்‌. அதை அவள்‌
அணிந்து கொண்டு தன்‌ கள்ளக்‌ காதலன்‌ குறிப்பிட்ட இடத்துக்குப்‌
போனாள்‌. யம தண்டன்‌ தன்பாட்டில்‌ அங்கு வந்து இருந்தான்‌. அங்கு
இருளில்‌ ஒருவரை ஒருவர்‌ அறியாமல்‌ காம சேவை செய்தனர்‌. பின்பு
அவள்‌ தான்‌ அணிந்திருந்த நகைகளில்‌ ஒன்றை அவனுக்குக்‌
கொடுத்தாள்‌. அவன்‌ அதைக்கொண்டு வந்து தன்‌ மனைவியிடம்‌
“கொடுத்தான்‌. நகையைப்‌ பார்த்த மனைவி, “இது என்‌ நகை மாமியிடம்‌
கொடுத்து வைத்தேனே’ என்றாள்‌. அதைக்‌ கேட்ட தளவரன்‌ தான்‌
சேர்ந்தது தன்‌ தாய்‌ என்று புரிந்தது. இருந்தாலும்‌, மகா பாபியான அவன்‌
அதே செயலை அதே இடத்தில்‌ மீண்டும்‌ செய்து அவள்‌ மீது அடக்க
முடியாத ஆசை கொண்டு தொடர்ந்து அந்த தீயச்‌ செயலில்‌
ஈடுபட்டான்‌. இந்தச்‌ செயல்‌ மனைவிக்குப்‌ பொறுக்க முடியாமல்‌ கோபம்‌
கொண்டு வண்ணாத்தியிடம்‌ கூறிவிட்டாள்‌. வண்ணாத்தி அதனை
பூக்காரிக்குச்‌ சொன்னாள்‌. பூக்காரி அரண்மனைக்குச்‌ சென்ற போது
அரசி, ஊரில்‌ ஏதேனும்‌ அதிசயம்‌ உண்டா?” என்றாள்‌. அப்போது
பூக்காரி தளவரன்‌ செயலைச்‌ சொன்னாள்‌. அரசிவியப்படைந்து
அரசனிடம்‌ கூறினாள்‌. அரசன்‌ ஒற்றர்களை அனுப்பிக்‌ கண்டுபிடித்து
அவ்விருவருக்கும்‌ கடுமையான தண்டனைகளைக்‌ கொடுத்தான்‌. பிறகு
அவர்கள்‌ இறந்து துர்கதியை அடைந்தனர்‌.
( தாடி வெண்ணெய்க்காரன்‌ ]
அயோத்தி நகரில்‌ பவதத்தன்‌ என்ற வணிகன்‌ இருந்தான்‌. அவன்‌
மனைவி தனதத்தை. அவர்கள்‌ மகன்‌ உலுப்த தத்தன்‌. அவன்‌ ஒரு
சமயம்‌ வெளிநாடுகளுக்குச்‌ சென்று பொருள்‌ ஈட்டிக்கொண்டு
வரும்போது திருடர்கள்‌ அவன்‌ பொருளை அபகரித்துக்‌ கொண்டனர்‌.

அருங்கலச்செப்பு 116
அவன்‌ கைச்செலவுக்கும்‌ பணம்‌ இல்லாமல்‌ வழியில்‌ வந்து
கொண்டிருந்தான்‌ ஓரிடத்தில்‌ இடைச்சி ஒருத்தியிடம்‌ மோர்‌ வாங்கிக்‌
குடித்தான்‌. அப்போது அவன்‌ தாடியில்‌ கொஞ்சம்‌ வெண்ணெய்‌ ஒட்டிக்‌
கொண்டது. அதனைத்‌ தொட்டுப்‌ பார்த்து இதைக்‌ கொண்டே
வியாபாரம்‌ செய்யலாம்‌ என்று நினைத்தான்‌. இப்படியே வெண்ணெய்‌
திரட்ட ஆரம்பித்தான்‌. அதனால்‌ அவனுக்கு தாடி நவநீதன்‌ (தாடி
வெண்ணெய்க்காரன்‌) என்ற பெயராயிற்று.
இப்படி நாளடைவில்‌ ஒரு கலய வெண்ணெய்‌ சேர்ந்தது. அது
குளிர்காலம்‌. குடிசைக்கு வெளியில்‌ தீ மூட்டிவிட்டு உள்ளே
படுத்துக்கொண்டு காலை வெளியே நீட்டினான்‌. நெய்க்கலயம்‌ காலுக்குப்‌
பக்கத்தில்‌ இருந்தது. படுத்துக்கொண்டே அவன்‌ கற்பனைகள்‌ செய்தான்‌.
இந்த வெண்ணெய்‌ விற்று வரும்‌ பணத்தால்‌ செல்வந்தன்‌ ஆகலாம்‌. பிறகு
மெல்ல மெல்ல வளர்ந்து லட்சாதிபதி கோட்டீஸ்வரன்‌, அரசன்‌ பேரசன்‌
ஆகலாம்‌. அப்போது ஏழடக்கு மாளிகையில்‌ படுத்திருப்பேன்‌. அழகிய
மனைவியர்‌ கால்‌ அருகே அமர்ந்து காலைப்பிடித்து விடுவர்‌. நான்‌
அப்போது பிடிக்கத்‌ தெரியவில்லை என்று இப்படி உதைப்பேன்‌ என்று
ஓர்‌ உதை உதைத்தான்‌. அவ்வளவில்‌ அவன்‌ கால்‌ கலயத்தில்‌ பட கலயம்‌
நெருப்பில்‌ விழுந்தது. தீப்பெருகி குடிசை எரிந்தது; அவனும்‌ தீயில்‌
வெந்து இறந்தான்‌; துர்கதியை அடைந்தான்‌.
இந்த ஐந்து வரலாறுகள்‌ வழி ஐந்து அணுவிரதங்களைக்‌
கைக்கொள்ளாமையால்‌ வரும்‌ தீமைகள்‌ விளக்கப்பட்டன.
82 கள்ளொடு தேன்புலைசு உண்ணாமை ஐவதமும்‌
தெள்ளுங்கால்‌ மூல குணம்‌.
இது அணுவிரதியின்‌ மூலகுணம்‌ கூறுகிறது.
(ப-ரை மூல குணம்‌-மூல குணம்‌, தெள்ளுங்கால்‌-ஆராயுமிடத்து,
கள்ளொடு-கள்ளுடன்‌, தேன்‌-தேன்‌, புலைசு-புலால்‌, உண்ணாமை-
உண்ணாமையும்‌, ஐவதமும்‌-ஐந்து அணுவதமும்‌ ஆகும்‌. எ-று.
அருங்கலச்செப்பு 117
(க-ரை கள்‌, தேன்‌, புலால்‌ உண்ணாமையும்‌. ஐந்து அணுவிரதமும்‌
சேர்ந்து மூலகுணம்‌ ஆகும்‌ என்றவாறு.
(வி-ரை) மரத்திற்கு வேர்‌ மூலம்‌ ஆவதுபோல்‌ விரதத்திற்கு
மூலம்மாக “அமைவது மூல குணம்‌ ஆகும்‌. மூலகுணம்‌ இல்லாமல்‌
விரதம்‌ அமையாது. முனிவர்களுக்கு 28 மூல குணம்‌; சிராவகர்களுக்கு
எட்டு மூல குணங்கள்‌. நூல்களில்‌ மூல குணம்‌ பற்றிய வருணனைகள்‌
பலவாறாகக்‌ கிடைக்கின்றன. அதனைக்‌ குறிப்பாக உணர்த்த
“தெள்ளுங்கால்‌’ என்றார்‌. துறவியர்‌ மூல குணத்தில்‌ ஐந்து
மகாவிரதங்கள்‌ வருதல்‌ போல்‌ சிராவகர்கள்‌ மூலகுணத்தில்‌ ஐந்து
அணுவிரதங்கள்‌ இடம்‌ பெறுதல்‌ வேண்டும்‌ எனும்‌ கருத்துடையவராக
நூலாசிரியர்‌ உள்ளார்‌ என்று தெரிகிறது. கள்‌ முதலானவை அகிம்சை
அணுவிரதத்தில்‌ அடங்குகிறது. என்றாலும்‌ தெளிவு கருதி வேறு
பிரித்துக்‌ கூறினார்‌ எனலாம்‌.
பண்டிதர்‌ ஆசாதரர்தம்‌ சாகாரதர்மாம்ருதத்தில்‌ எட்டு மூல குணம்‌
குறித்துக்‌ தரும்‌ விவரம்‌ தனிப்பார்வைக்கு உரியது.
கள்‌
புலால்‌
தேன்‌ உண்ணாமை
இரவு உண்ணாமை
ஐந்து உதும்பரம்‌ உண்ணாமை
ஜிந தரிசனம்‌
பிராணிகளிடம்‌ கருணை
ON
வடித்த நீர்‌ குடித்தல்‌.
OOP WD ot
எட்டு மூலகுணங்களை உடையவர்களே தருமஉரையைக்‌ கேட்பதற்கு
பாத்திரமாகிறார்‌. அது மட்டுமன்று அவற்றைக்‌ கைக்கொண்டு ஒழுகும்‌
போதுதான்‌ சிராவகர்‌ எனும்‌ பெயரைப்‌ பெறுகிறார்‌.
தெள்ளுதல்‌-ஆராய்தல்‌; “தெள்ளி அறிந்தவிடத்து’ என ஆளுதல்‌

காண்க’
1 நாலடியார்‌, 580.
அருங்கலச்செப்பு 118
83 வரைப திசைபத்தும்‌ வாழும்‌ அளவும்‌
புரைவில்‌ திசைவிரதம்‌ எண்‌.
இது குண விரதம்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
(ப-ரை வாழும்‌ அளவும்‌ – வாழ்‌ நாள்‌ முழுதும்‌, திசை பத்தும்‌ – பத்துத்‌
திசைகளிலும்‌, வரைப – செல்லும்‌ எல்லையை வரையறுப்பர்‌, புரைவில்‌ –
குற்றம்‌ இல்லாத, திசைவிரதம்‌ – திசைவிரதம்‌ அது, என்‌ – என்று சொல்லுவர்‌,
எ-று.
(க-ரை பத்துத்‌ திசைகளிலும்‌ இத்தனை எல்லைக்கு மேல்‌ செல்லுவது
இல்லை என திசைதோறும்‌ எல்லைகளை வரையறுப்பது திசைவிரதம்‌
என்பதாம்‌.
(வி-ரை குணங்களை வளப்படுத்துவது குணவிரதம்‌ எனப்படுகிறது!
பயிருக்கு வேலி போல எட்டு மூல குணங்களைப்‌ பாதுகாப்பது குண விரதம்‌
என்பதாம்‌. எல்லை வகுத்து வாழ்வதால்‌ அகிம்சை முதலான விரதங்களைச்‌
சிறப்பாக போற்ற முடிகிறது. அதனால்‌ குண விரதத்தில்‌ திசை விரதம்‌
எண்ணப்பட்டுள்ளது.
84 ஆறும்‌ மலையும்‌ கடலும்‌ அடவியும்‌
கூறுப எல்லை அதற்கு.
இது எல்லை இன்னவாறு அமைய வேண்டும்‌ என்று கூறுகிறது.
பறை அதற்கு – அந்தத்‌ திசை விரதத்திற்கு, ஆறும்‌ – ஆற்றையும்‌, மலையும்‌ – மலையையும்‌, கடலும்‌ – கடலையும்‌, அடவியம்‌ – காட்டையும்‌ எல்லை – எல்லையாகக்‌, கூறுப – கூறுவர்‌ ௪ – று.
க-ரை திசை விரதத்திற்கு ஆறு முதலானவற்றை எல்லையாகக்‌

குறிப்பர்‌ என்பதாம்‌.

  1. ரத்ன கரண்டக சிராவகாசாரம்‌ 3 / 21
    அருங்கலச்செப்பு ng
    (வி-ரை திசை விரதத்திற்கு எல்லை குறிக்கும்‌ போது ஆறு முதலான
    இயற்கை இடங்களையே குறிக்க வேண்டும்‌; எல்லை மாநாமல்‌ இருக்கும்‌.
    85 எல்லைப்‌ புறத்தமைந்த பாவம்‌ ஈண்டாமையின்‌
    சொல்லுப மாவதம்‌ என்று.
    இது திசை விரதத்தின்‌ சிறப்புக்‌ கூறுகிறது
    (ப-ரை! எல்லை – வகுத்துக்‌ கொண்ட திசை எல்லைக்கு, புறத்து –
    வெளியே, அமைந்த – அமைந்துள்ள, பாவம்‌ – கொலை முதலான ஐந்து
    வகைப்பாபங்களும்‌, ஈண்டாமையின்‌ – எவ்வகையானும்‌ வந்து
    கூடாமையின்‌, மாவதம்‌ – அவ்‌ எல்லைக்கு வெளியே. அந்த விரதம்‌! மகா
    விரதத்துக்கு, என்று – ஒப்பானது என, சொல்லுப – சொல்லுவர்‌, ௪ – று.
    (க-ரை திசை விரத எல்லைக்கு வெளியே உள்ள பாபங்கள்‌ திசை
    விரதியை எந்த வகையானும்‌ வந்து சேராமையால்‌ அது அங்கு மகா
    விரதத்துக்கு ஒப்பானது என்பதாம்‌.
    (வி-ரை திசை விரதத்தின்‌ பயன்‌ நுட்பமான பாபங்களையும்‌ தடை
    செய்தல்‌ ஆகும்‌. வகுத்துக்‌ கொண்ட எல்லைக்குள்‌ பெரிய பாபங்களைச்‌
    செய்வதில்லை. அங்கே குறைந்த பாபமே நிகழ்கிறது. ஆனால்‌, அவ்‌
    வெல்லைக்கு வெளியே விரதிக்குத்‌ தொடர்பு இல்லைமையால்‌ அந்நிலம்‌
    தொடர்பான நுட்பமான பாபங்களும்‌ அவரைச்‌ சேருவதில்லை. எனவே,
    அந்த எல்லை தாண்டிய நிலத்தைப்‌ பொறுத்தவரை அவர்‌ மகாவிரதிக்கு
    (முனிவருக்கு! ஒப்பானவர்‌ என்பதாம்‌.
    உண்மையில்‌, பரிக்கிரஹமே (பொருள்‌ வேட்கையே ஒரு பெரிய
    பாபமாகும்‌. அதன்‌ காரணமாகவே இம்சை முதலான ஐந்து பாபங்களும்‌
    செய்யப்படுகின்றன. அதனால்‌, பொருள்‌ வேட்கையை மட்டுப்படுத்தும்‌
    போது பிற பாபங்கள்‌ எல்லாம்‌ தாமே குறைந்து போகின்றன. திசை விரதத்தில்‌
    போதல்‌ வருதல்‌ வரையறுக்கப்படுவதால்‌, பொருள்‌ வேட்கைக்கும்‌’ ஒரு
    வரம்பு கட்டப்படுகிறது. திசை விரதத்தின்‌ முதன்மையான நோக்கம்‌
    தொழிலை (பாபத்தை! க்‌ குறைப்பதும்‌ பொருள்‌ வேட்கையை
    மட்டுப்படுத்துவதும்‌ ஆகும்‌. திசை விரதி தான்‌ வகுத்துக்‌ கொண்ட
    எல்லைக்கு வெளியே ஆசையற்று இருப்பதால்‌ மகாவிரதிக்கு ஒப்பானவர்‌
    என்று உபசாரமாகக்‌ கூறப்படுகிறது.
    அருங்கலச்செப்பு 120
    மோகனீ௰ய வினை தர்சன மோகனீயம்‌, சாரித்திர மோகனீயம்‌ என
    இரண்டு வகைப்படும்‌. தர்சன மோகனீயம்‌ நற்காட்சியைக்‌ கெடுப்பது:
    சாரித்திரயோகனீயம்‌ ஒழுக்கத்தைக்‌ கெடுப்பது. சாரித்திர மோகனீயம்‌ கசாய
    வேதனீயம்‌ அகசாய வேதனீயம்‌ என இரண்டாகக்‌ கூறப்படும்‌. காசாய
    வேதளீயம்‌ அனந்தானு பந்தி, அப்ரத்யாதக்யானாவரணம்‌,
    பிரத்யாக்யானாவரணம்‌, சஞ்சுவலனம்‌, குரோதம்‌, மரணம்‌, மாயை லோபம்‌
    பிரிவுகளால்‌ (4 % 4) பதினாறு வகைப்படும்‌. ஹாஸ்யம்‌ (சிரிப்பு), ரதி, அரதி,
    சோகம்‌, பயம்‌, ஜுகுப்சை (அருவருப்பு, பெண்‌, ஆண்‌, அலி வேதம்‌ இவை
    ஒன்பதும்‌ அகசாய வேதனீயம்‌ ஆகும்‌!
    அனந்தானுபந்தி குரோதம்‌ மானம்‌ மாயை லோபம்‌ ஆன்மாவின்‌
    நம்பிக்கை குணத்தைக்‌ கெடுப்பது. அது சாரித்திர மோகனீயத்தைச்‌
    சார்ந்ததாக இருந்தாலும்‌ அது உதயத்தில்‌ இருக்கும்‌ போது நம்பிக்கை குணம்‌
    வெளிப்படுவதில்லை. அதனால்‌ ஆகமத்தில்‌ அதனை நம்பிக்கை
    குணத்தைக்‌ கெடுப்பது என்று கூறப்பட்டுள்ளது.
    அப்ரத்யாக்யானாவரணம்‌ குரோதம்‌ மானம்‌ மாயை லோபம்‌
    உதயத்தில்‌ இருக்கும்‌ போது அணு விரதம்‌ வெளிப்படுவதில்லை.
    பிரத்யாக்யானாவரணம்‌ குரோதம்‌ மானம்‌ மாயை லோபம்‌ உதயத்தில்‌
    இருக்கும்‌ போது சகல சாரித்திரம்‌ (முனி சாரித்திரம்‌! வெளிப்படுவதில்லை.
    சஞ்சுவலன குரோதம்‌ மானம்‌ மாயை லோபம்‌ உதயத்தில்‌ இருக்கும்‌ போது
    ‘யதாக்யாத’ சாரித்திரம்‌ தோன்றுவதில்லை. அதாவது வீதராக வடிவ
    சாரித்திரம்‌ தோன்றுவதில்லை. என்றாலும்‌, அனந்தானுபந்தி முதலான
    கசாயங்களின்‌ மந்த உதய காலத்தில்‌ உயிரிடத்து அணுவிரதம்‌ மகாவிரம்‌ ஏற்கும்‌ பரிணாமம்‌ வரமுடியும்‌. ஆனால்‌ கரணானுயோகம்‌ அதனை அணுவிரத, மகாவிரங்களாக ஏற்பதில்லை. எதிரான வினை உதயம்‌ இல்லாத போது தோன்றும்‌ விரதங்களையே அது விரதமாக ஏற்கும்‌. ஆனால்‌, இங்கே தேச விரதியை மகாவிரதிக்கு ஒப்பாக ஏன்‌ கூறப்பட்டது எனில்‌, பிரத்யாக்யானாவரண குரோத மான மாயை லோபம்‌ மிகவும்‌ மந்த உதயத்தில்‌ இருப்பதால்‌ அதனை உபசாரமாக மகாவிரம்‌ என்றனர்‌ என்று கொள்ள வேண்டும்‌. உண்மையில்‌ மகா விரதி இல்லை.
    தீர்த்த யாத்திரை, பகவான்‌ வாணியைக்‌ கேட்டல்‌ முதலான அறச்‌ செயல்களுக்காக வகுத்துக்‌ கொண்ட எல்லையைத்‌ தாண்டலாம்‌. ஈண்டாமை-

எவ்வகையானும்‌ சேராமை / கூடாமை.

  1. கோமடசாரம்‌ ஜீவகாண்டம்‌ 2895, கர்மகாண்டம்‌,42
    அருங்கலச்செப்பு 121
    86 சிறிய கொலைபொய்‌ களவொடு காமம்‌
    பொருளைத்‌ துறத்தலோடு ஐந்து.
    இது மகாவிரதத்தின்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
    (ப-றை சிறிய – சிறிதான, கொலை – கொலையையும்‌, பொய்‌ –
    பொய்யையும்‌, களவொடு – களவோடு, காமம்‌ – காமத்தையும்‌, பொருளை –
    பொருளையும்‌, துறத்தலோடு – நீக்குதலோடு, ஐந்து – ஐந்தாகும்‌ ௭ – று.
    (க-ரை சிறிய கொலை, பொய்‌, களவு, காமம்‌, பொருளைத்‌ துறத்தல்‌
    மகாவிரதம்‌ ஆகும்‌ என்பதாம்‌.
    (வி-ரை பெரிய கொலை முதலானவற்றை நீக்குதல்‌ அணுவிரதம்‌
    என்றவர்‌ (66) இங்கேசிறிய கொலை முதலானவற்றை நீக்குதல்‌ மகாவிரதம்‌
    என்றார்‌. சிறிய என்றதனால்‌ சூக்ஷ்ம பாபங்களையும்‌ துறத்தல்‌ என்பது
    பெறப்பட்டது. இந்நிலை 6-ம்‌ குணஸ்தானம்‌ முதல்‌ தொடங்குகிறது.
    துறத்தல்‌ என்பதனை கடைநிலை தீபமாகக்‌ கொண்டு
    எல்லாவற்றோடும்‌ கூட்டுக. ஒடு எண்ணுப்‌ பொருளில்‌ வந்த இடைச்‌ சொல்‌.
    87 கொலைமுதலா ஐந்தினையும்‌ முற்றத்‌ துறத்தல்‌
    தலையாய மாவத மாம்‌.
    இதுவும்‌ அது.
    (ப-ரை) கொலை முதலா – கொலை முதலாக எண்ணப்பட்ட,
    ஐந்தினையும்‌-ஐந்து பாபாங்களையும்‌, முற்ற – மன மொழி மெய்களால்‌
    முழுதுமாக, துறத்தல்‌ – விடுதல்‌, தலையாய – மேன்மையான, மாவதம்‌ –
    மகாவிரதம்‌, ஆம்‌ – ஆகும்‌. எ-று.
    (க-ரை கொலை, பொய்‌, திருடுதல்‌. காமம்‌. பொருள்‌ பற்று என
    எண்ணப்பட்ட ஐந்து பாபங்களையும்‌ ஒன்பது வழியாலும்‌ துறத்தல்‌
    மகாவிரதம்‌ என்பதாம்‌.
    அருங்கலச்செப்பு 122
    (வி-ரை! திசை விரதி எல்லைக்குப்‌ புறத்தே மகாவிரதிக்கு
    ஒப்பானவன்‌ என்று உபசாரமாகக்‌ கூறினார்‌. அப்படியாயின்‌
    உண்மையான மகாவிரதி எப்படி இருப்பார்‌ என ஐயம்‌ தோன்றும்‌.
    ஆதலால்‌, இவ்விரண்டு குறள்களில்‌ மகாவிரதியின்‌ உண்மையான
    இலக்கணம்‌ கூறினார்‌.
    இப்பாபங்களைச்‌ செய்தல்‌, செய்வித்தல்‌ உடன்படுதல்‌ என்ற
    மூன்று வகையாலும்‌ மனம்‌, மொழி, செயல்களால்‌ செய்யாது இருத்தல்‌
    என ஒன்பது (3 % 3-9] வழியால்‌ செய்யாது. இருத்தலாம்‌. இதனையே
    முற்றத்‌ துறத்தல்‌ என்றார்‌.
    88 இடம்‌ பெருக்கல்‌ எல்லை மறத்தல்‌ கீழ்‌ மேலோடு
    உடன்‌ இறுத்தல்‌ பக்கம்‌ இறப்பு.
    இது திசை விரத அதிசாரம்‌ கூறுகிறது.
    (ப-ரை இடம்‌ பெருக்கல்‌ – வரையறுத்த எல்லையைப்‌ பெருக்குதல்‌,
    எல்லை மறத்தல்‌ – எல்லையை மறத்தல்‌, கீழ்‌ – ஆழத்திலும்‌, மேலோடு,
    உயரத்திலும்‌, பக்கமுடன்‌ – பக்கத்திலும்‌, இறுத்தல்‌ – எல்லையைத்‌
    தளரவிடுதல்‌ அதாவது மீறுதல்‌, இறப்பு – அதிசாரம்‌ ஆகும்‌, எ-று.
    (க-றை எல்லையை நீட்டுதலும்‌, எல்லையை மறத்தலும்‌, கீழ்‌, மேல்‌,
    பக்க எல்லைகளை மீறுதலும்‌ திசை விரதத்துக்கு அதிசாரம்‌ என்பதாம்‌.
    (வி-ரை) கீழ்‌, மேல்‌, பக்கம்‌ என்றதால்‌ பத்து திசைகளும்‌
    அடக்கப்பட்டன. அத்திசைகளில்‌ வகுத்த எல்லைகளைத்‌ தளர விடுதலை ‘இறுத்தல்‌’ என்றார்‌. கெடுதல்‌ என்றும்‌ கூறலாம்‌. பெருக்கல்‌ என்பது கூட்டுதலை. ஒருதிசையில்‌ வகுத்த எல்லையைக்‌ கூட்டி அதே அளவு வேறு திசையில்‌ குறைத்தல்‌ இங்கே பெருக்குதல்‌ எனக்‌ கூறப்பட்டதாகக்‌ கருதலாம்‌. அளவு என்னவோ மாறவில்லை. ஆனால்‌ லோபம்‌ காரணமாக ஒரு திசையில்‌ குறைத்து வேறொரு திசையில்‌ கூட்டி இருப்பதால்‌ திசை விரதம்‌ எடுத்ததின்‌ நோக்கம்‌ அடிபட்டுப்போகிறது. அதனால்‌ அதிசாரம்‌ அது.
    அருங்கலச்செப்பு 123
    ( அனர்த்த தண்ட விரதம்‌ ]
    69 எல்லை அகத்தும்‌ பயமில மீண்டொழுக்ல்‌
    நல்‌அனத்த தண்ட வதம்‌.
    இது அனர்த்த தண்ட விரத இலக்கணம்‌ கூறுகிறது.

(ப-ரை எல்லை அகத்தும்‌ – வரையறை செய்த்‌ எல்லைக்குள்ளும்‌, பயம்‌
இல – பயனில்லாத்னவற்றிலிருந்து, மீண்டு – விடுபட்டு, ஒழுகல்‌ – நடத்தல்‌, நல்‌

  • நன்மையாகிய, அனத்த தண்ட வதம்‌ – அனர்த்த தண்ட வதம்‌ ஆகும்‌, எ-று.
    (௧- ரை வகுத்துக்‌ கொண்ட எல்லைக்குள்ளும்‌ பயனில்லாதன வற்றைச்‌
    செய்யாது ஒழிதல்‌ அனர்த்த தண்ட வதம்‌ என்பதாம்‌.
    (வி-ரை எல்லை வகுத்துக்‌ கொண்ட தேச விரதி தான்‌ வகுத்துக்‌ கொண்ட
    எல்லைக்குள்ளும்‌ பயனில்லாத செயல்களிலிருந்து விடுபட்டு நிற்பது அனர்த்த
    தண்ட விரதமாகும்‌. அனர்த்தம்‌ – பயனில்லாமை. யோக நிகழ்வு தண்டம்‌. மன
    வசன காய நிகழ்ச்சி தண்டம்‌ என்பதாம்‌. பயனில்லாத செயலில்‌ மனம்‌ மொழி
    உடல்‌ நிகழ்தல்‌ அனர்த்த தண்டம்‌. அதிலிருந்து விடுபடுதல்‌ விரதம்‌. இது
    இரண்டாவது குண விரதம்‌. பயம்‌ “* பலம்‌ * பலா. பயன்‌ என்னும்‌
    பொருளுடையது, அனத்தம்‌ – பாகதச்‌ சொல்‌, அனர்த்தம்‌ – வட சொல்‌.
    90 ஜந்தனத்த தண்ட விரதம்‌ முறையுள்ளிச்‌
    சிந்திக்கச்‌ செய்வன்‌ தெரிந்து.
    இது அனத்த தண்ட விரதத்தின்‌ வகை கூறுகிறது.
    (ப-றை-ஐந்து – ஐந்து வகைப்படும்‌, அனத்த தண்ட விரதம்‌ – அனத்த
    தண்ட விரதத்தை, முறை உள்ளி – முறைமை நினைந்து, தெரிந்து – ஆய்ந்து,
    சிந்தக்க – சிந்திக்கும்‌ படி, செய்வன்‌ – கூறுவன்‌ ௭ – று.
    க-ரை தேச விரதியை ஐந்து வகைப்படும்‌ அனர்த்த தண்ட விரதங்களை
    -பாபங்கள்‌ வரும்‌ முறைமை நினைந்து ஆய்ந்து சிந்திக்க செய்வன்‌ என்பதாம்‌.
    அருங்கலச்செப்பு 124.
    (வி-ரை! தேச விரதி அனர்த்த தண்ட விரதத்தின்‌ சிறப்பை உணர
    வேண்டும்‌ என்பது நூலாசிரியர்‌ அவா. அதனால்‌ ‘செய்வன்‌’ என்றார்‌. முறை
  • மூறைமை; பாபங்கள்‌ வரும்‌ முறைமை; உள்ளி – நினைத்து: தெரிந்து
    ஆய்ந்து; சிந்திக்க – சிந்தனை செய்ய. அனர்த்த தண்ட விரதத்தை மனத்துள்‌
    நினைத்து ஆய்ந்து சிந்திக்க வேண்டும்‌ என்பது கருத்து. பயனில்லாத
    பாபத்திலிருந்து மீளுதலே இதன்‌ பயன்‌ ஆகும்‌.
    91 ஆர்வமொடு செற்றத்தை ஆக்கும்‌ நினைப்புகள்‌
    தீவுறு தீச்சிந்தை யாம்‌.
    இதுவும்‌ அது.
    (ப-ரை ஆர்வமொடு – ஆசையோடு, செற்றத்தை – துவேஷத்தை
    (பகையை, ஆக்கும்‌ – உண்டாக்கும்‌, தீவுறு – தீமையைச்‌ செய்யும்‌,
    நினைப்புகள்‌ – நினைவுகள்‌, தீச்சிந்தையாம்‌ – தீச்சிந்தை அனர்த்த தண்டமாம்‌.
    எ-று.
    (க-றை விருப்பு, வெறுப்பு தீமையை உண்டாக்கும்‌ நினைப்புகள்‌
    தீச்சிந்தை அனர்த்த தண்டம்‌ என்பதாம்‌.
    (வி-ரை தீய நினைப்புகள்‌ ராக துவேஷத்திற்குக்‌ காரணமாகும்‌.
    அல்லது விருப்பு வெறுப்புகளால்‌ தீய நினைப்புகள்‌ தோன்றுகின்றன என்றும்‌
    கூறலாம்‌. பெண்ணாசை முதலான விருப்புகளும்‌, அடித்தல்‌, கொல்லுதால்‌
    முதலான வெறுப்புகளும்‌ தோன்ற காரணமான நினைப்புகள்‌ தீச்‌ சிந்தை –
    பாபத்திற்குக்‌ காரணமான சிந்தை ஆகும்‌ இதனை ‘அபத்தியானம்‌’ என்பர்‌.
    அதிலிருந்து விலகுதல்‌ அபத்தியான அனர்த்த தண்டவிரதம்‌ ஆகும்‌.
    92 சேவாள்‌ விலைகொளல்‌ கூறுதல்‌ கூட்டுதல்‌
    பாபோப தேசம்‌ எனல்‌.
    இதுவும்‌ அது.
    (ப-ரை சே – காளை முதலான விலங்குகள்‌, ஆள்‌ – பணியாட்கள்‌ விலை கொளல்‌ – விலைக்குக்‌ கொள்ளுதலையும்‌, கூட்டுதல்‌ – வழி முறைகளையும்‌, கூறுதல்‌ – சொல்லுதல்‌, பாப உபதேசம்‌ – பாப உபதேசம்‌,
    எனல்‌ – என்று சொல்லப்படும்‌, எ-று.
    அருங்கலச்செப்பு 125
    (க-ரை! காளை, பசு முதலான விலங்குகளையும்‌, வேலை
    ஆட்களையும்‌ குறைந்த விலைக்குப்‌ பெறுவதற்கும்‌, அதற்கான
    வழிமுறைகள்‌ இவை என்றும்‌ கூறுதல்‌ பாப உபதேசம்‌ என்பதாம்‌.
    (வி-ரை பிறருக்கு இவை உரைக்கப்படுவதால்‌ அவை நிமித்தமாக
    வரும்‌ பாபத்தை உரைப்பவன்‌ கட்டிக்‌ கொள்கிறான்‌. அதனால்‌ இப்‌
    பாபத்தினின்றும்‌ விலகி இருக்க வேண்டும்‌ என்பதாம்‌. சே – காளை,
    காளையை மட்டும்‌ குறிக்காமல்‌ விலைபேசப்படும்‌ விலங்குகள்‌
    அத்தனையும்‌ தழுவியதாகக்‌ கொள்ள வேண்டும்‌. இந்த பாப உபதேச
    அனர்த்த தண்டத்தில்‌ இருந்து விலகி நிற்றல்‌ வேண்டும்‌.
    93 பயமின்‌ மரம்‌ குறைத்த லோடுஅகழ்தல்‌ என்ப
    பயமில்‌ பமாதம்‌ எனல்‌
    இதுவும்‌ அது.
    (ப-ரை! பயமில்‌ – பயன்‌ இல்லாமல்‌, மரம்‌ – மரம்‌ முதலானவற்றை
    குறைத்தலோடு – வெட்டுதலோடு, அகழ்தல்‌ – மண்ணை தோண்டுதல்‌
    முதலானவை, பயமில்‌ – பயன்‌ இல்லாத, பமாதம்‌ – பிரமாத சரியை, எனல்‌ –
    எனப்படும்‌. எ-று.
    (க-றை வீணே மரம்‌ முதலானவற்றை வெட்டுதலும்‌, பூமியைத்‌
    தோண்டுதலும்‌ பிரமாத சரியை என்னும்‌ அனர்த்த தண்டமாகும்‌ என்பதாம்‌.
    (வி-ரை! அணுவிரதம்‌ உடைய சிராவகனுக்கு ஓரிந்திரிய வதை
    தியாகம்‌ இல்லை. என்றாலும்‌, ‘வீணாக என்னால்‌ தாவர இம்சை கூடாது’ என்ற
    உணர்வை அவன்‌ எப்போதும்‌ வைத்துக்‌ கொண்டு இருக்க வேண்டும்‌.
    மண்ணைக்‌ கிளறுதல்‌ செடி கொடிகளைப்‌ பறித்தல்‌, அதிக நீரை வீணாக்குதல்‌,
    நெருப்பை அதிக நேரம்‌ எரியவிடுதல்‌, இது முதலான செயல்களைச்‌ செய்தல்‌
    பிரமாத சரியை எனப்படும்‌. பிரமாதம்‌ – அசாக்கிரதை (விழிப்பு இல்லாமை.
    பமாதம்‌ – பாகதச்‌ சொல்‌. இந்தப்‌ பயனில்லாத செயல்களில்‌ இருந்து விலகி
    நிற்றல்‌ பமாத சரியை அனர்த்த தண்டவிரதம்‌ ஆகும்‌.
    94 தீக்கருவி நஞ்சு கயிறு நார்கள்‌
    ஈத்தல்‌ கொலைகொடுத்த லாம்‌.
    இதுவும்‌ அது.
    அருங்கலச்செப்பு 126
    (ப-ரை! தீ – நெருப்பும்‌, கருவி – மண்வெட்டி முதலான ஆரம்ப
    கருவிகளும்‌. நஞ்சு – விஷமும்‌, கயிறு – கயிறும்‌, நார்கள்‌-நார்களும்‌, ஈத்தல்‌-
    அளித்தல்‌, கொலை கொடுத்தலாம்‌-இம்சை தானம்‌ ஆகும்‌ எனப்படும்‌.௪-று
    (க-ரை தீ முதலான இம்சைக்குக்‌ காரணமான பொருள்களைக்‌
    கொடுத்தல்‌ இம்சாதானம்‌ என்னும்‌ அனர்த்த தண்டமாகும்‌ என்பதாம்‌.
    (வி-ரை அணுவிரதி தன்‌ உபயோகத்திற்காக மண்வெட்டி, கொடுவாள்‌
    முதலான கருவிகளை வைத்துக்‌ கொண்டுள்ளான்‌. அவற்றை விழிப்போடு
    அவன்‌ பயன்படுத்துகிறான்‌. ஆனால்‌ பிறர்‌ கேட்கும்‌ போது அவற்றை
    அவன்‌ தருவதில்லை. ஏனெனில்‌, அவர்கள்‌ தவறாக இவற்றைப்‌ பயன்‌
    கொள்ளார்‌ என்பதில்‌ அவனுக்கு நம்பிக்கை இல்லை. இது கொலை
    கொடுத்தல்‌ (இம்சை தான! அனர்த்த தண்ட விரதம்‌ எனப்படும்‌
    வெளியூரார்‌ சமையல்‌ செய்ய நெருப்பு கேட்கும்‌ போது அதனை
    தருதல்‌ இதில்‌ அடங்காது.
    98 மோகத்தை ஈன்று தவமழிக்கும்‌ சொல்கேட்டல்‌
    பாபச்‌ சுருதி எனல்‌.
    இதுவும்‌ அது.
    (ப-ரை மோகத்தை – விருப்பு வெறுப்புகளை, ஈன்று – தந்து, தவம்‌ –
    தான்‌ ஏற்ற நோன்பை, அழிக்கும்‌ – அழியச்‌ செய்யும்‌, சொல்‌ – பாப உரையை
    கேட்டல்‌ – கேட்பது, பாபச்‌ சுருதி – பாபச்‌ சுருதி, எனல்‌ – எனப்படும்‌ ௪ -று.
    (க-றை விருப்பு வெறுப்பு முதலான உணர்வுகளைத்‌ தந்து ஏற்ற விரதங்களை அழிக்கச்செய்யும்‌ பாப உரைகளைக்‌ கேட்டல்‌ பாபச்‌ சுருதி
    அனர்த்த தண்டம்‌ என்பதாம்‌.
    (வி-ரை ‘மோகம்‌’ என்ற்தால்‌ சிந்தனையை மயக்க வல்ல அத்தனை உணர்வுகளையும்‌ கொள்ளுதல்‌ வேண்டும்‌. அவை விருப்பு வெறுப்பு, காமம்‌ முதலாக பல கூறுப்டும்‌. அத்தகைய நூல்களைக்‌ கேட்பதால்‌ தவம்‌ (விரதம்‌ அழியும்‌ என்பதாம்‌. பாபச்சுருதி – பாபநூல்கள்‌. இம்சை, பற்று மித்யாத்வம்‌, விருப்பு, வெறுப்பு, செருக்கு, காமம்‌, இவை போன்ற நல்சிந்தையைக்‌ கெடுக்க
    அருங்கலச்செப்பு 127 வல்ல நூல்களைப்‌ பாப நூல்கள்‌ என்பர்‌. அவற்றைக்‌ கேட்காமல்‌ விலகுதல்‌ பாபச்‌ சுருதி அனர்த்த தண்ட விரதம்‌ என்பதாம்‌.
    ஆசாரியர்‌ சமந்தபத்திரர்‌ பாபஉபதேசம்‌, இம்சதாதானம்‌, அபத்யானம்‌, துஸ்சுருதி, பிரமாதசர்யா எனும்‌ வரிசையில்‌ அனர்த்த தண்டங்களைக்‌ குறிப்பார்‌’ இந்நூலுடையார்‌ வைப்பு முறை வேறாக உள்ளது.
    96 நகையே நினைப்பு மொழியின்மை கூறல்‌
    மிகைநினைவு நோக்கார்‌ செயல்‌.
    இது அனர்த்த தண்ட விரதத்திற்கு அதிசாரம்‌ கூறுகிறது.
    (ப-ரை நகையே – காமப்பேச்சால்‌ நிகழும்‌ பரிகாசம்‌, நினைப்பு –
    பாவனை, மொழி இன்மை – பொருளற்ற சொற்களை, கூறல்‌ – கூறுதல்‌, மிகை
    நினைவு – கூடுதலாகப்‌ பொருளைச்‌ சேர்த்தல்‌ நினைவு, நோக்கார்‌ – பயன்‌
    உண்டா இல்லையா என்று பாராத, செயல்‌ – செயல்‌ இவ்வைந்தும்‌
    அதிசாரமாகும்‌ எ-று
    (க-ரை பரிகாசம்‌, பாவனை, வெற்றுச்‌ சொல்‌, மிகு நினைவு, பயன்‌
    நோக்காத செயல்‌ என இந்த ஐந்து செயல்களும்‌ அனர்த்த தண்ட விரதத்துக்கு
    அதிசாரம்‌ என்பதாம்‌.
    (வி-ரை நகை – விடலைப்‌ பேச்சால்‌ விளைவது; நினைப்பு – பாவனை
  • இங்கே மெய்ப்பாட்டினை – (அங்க சேஷ்டை குறித்து நின்றது. மொழி
    இன்மை கூறல்‌ – பொருள்‌ குறிப்புக்கு மேலே வெற்றுச்‌ சொற்களைக்‌ கூறுதல்‌;
    மிகைநினைவு – தன்‌ பயன்பாட்டுக்கு மிகுதியாக போக உபபோக
    பொருள்களச்‌ சேர்த்தல்‌ நினைவு; நோக்கார்‌ செயல்‌ – செய்கின்ற செயலில்‌
    பயன்‌உண்டா இல்லையா என்று பாராது செய்வோர்‌ செயல்‌.
    97 ஐந்தனத்த தண்ட விரதக்கு இறப்பிவை முந்துணார்ந்து காக்க முறை.
    இதுவும்‌ அது.
  1. ரத்னகரண்டக சிராவகாசாரம்‌, 78.
    அருங்கலச்செப்பு 128
    (பாரை ஐந்தனத்த தண்ட விரதக்கு – ஐந்து வகைப்படும்‌ அனர்த்த
    தண்ட விரதத்திற்கு, இவை – மேலே கூறப்பட்ட இவ்வைந்தும்‌, இறப்பு –
    அதிசாரங்கள்‌ ஆகும்‌; முந்துணர்ந்து – இவற்றை முன்னதாகவே அறிந்து,
    காக்க – வராமல்‌ காத்தல்‌, முறை – முறையாகும்‌. எ-று.
    (க-ரை அனர்த்த தண்ட விரதத்துக்குக்‌ கூறப்படும்‌ அதிசாரங்களை
    முன்னதாக உணர்ந்து அவை வராமல்‌ காத்ததல்‌ முறைமையாகும்‌
    என்பதாம்‌.
    (வி-ரை! பயனற்ற செயல்களை முன்கூட்டியே அறிந்து கைவிடுதல்‌
    நன்று என்பார்‌ “முந்துணர்ந்து ‘ என்றார்‌. அதனால்‌ பயனுடைய செயல்‌
    மட்டுமே செய்தல்‌ வேண்டும்‌ என்பது வலியுறுத்தப்பட்டது. பாபத்திற்கு
    அஞ்சுவோர்‌ பயனில்லாமல்‌ செயல்‌ செய்தல்‌ கூடாது என்பதாம்‌. விரதக்கு
  • அத்துச்‌ சாரியை விகாரத்தால்‌ தொக்கு நின்றது.
    98 போகோப போக பரிமாணம்‌ என்றுரைப்பர்‌
    வாயில்‌ புலன்கள்‌ வரைந்து.
    இது போக உபபோக பரிமாண விரத இலக்கணம்‌ கூறுகிறது.
    (ப-றை வாயில்‌ – ஐம்பொறிகளுக்குரிய, புலன்கள்‌ – புலன்களை வரைந்து – வறையறை செய்து, உரைப்பர்‌ – சொல்லுவர்‌, போக உபபோக
    பரிமாணம்‌ – போக உபபோக வரம்பு, என்று -என, ௪ – று.
    (க-ரை] ஜம்புலனுக்குரிய பொருள்களை வரையறைசெய்தல்‌ போக உபபோக பரிமாணம்‌ என்பர்‌ என்பதாம்‌.
    (வி-ரை பரிக்கிரஹ பரிமாண விரதத்தில்‌ (2-ம்‌ பிரதிமாா போக உபபோக பொருள்களுக்கு வரம்பு செய்யப்படுகிறது. அந்த வரம்பை மேலும்‌ சுருக்கவே போக உபபோக பரிமாண விரதம்‌ ஏற்கப்படுகிறது. ஐம்‌ பொறிகள்‌ வழியாக நுகரப்படும்‌ பொருள்கள்‌ போக, உபபோகப்‌ பொருள்கள்‌ எனக்‌ கூறப்படுகின்றன. புலன்‌ இச்சையை மட்டுப்படுத்தவே இப்‌ பொருள்களைப்‌ பயன்படுத்துவதில்‌ நியமங்கள்‌ ஏற்கப்படுகின்றன.
    அருங்கலச்செப்பு 129
    99 துய்த்துக்‌ கழிப்பன போகம்‌ உபபோகம்‌
    துய்ப்பாம்‌ பெயர்த்தும்‌ எனல்‌,
    இது போக உபபோக பொருள்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
    (பாரை துய்த்து – அனுபவித்து, கழிப்பன – விடப்படுவன, போகம்‌ –
    போகப்‌ பொருள்களாம்‌; பெயர்த்தும்‌ – மீண்டும்‌ மீண்டும்‌, துய்ப்பாம்‌ –
    அனுபவிக்கலாம்‌, எனல்‌ – என்று கருதப்படுவன, உபபோகம்‌ – உபபோகப்‌
    பொருள்களாம்‌ ௭ -று.
    (க-ரை ஒரு முறை அனுபவித்து விடப்படுவன போகப்‌ பொருள்கள்‌:
    மீண்டும்‌ மீண்டும்‌ அனுபவிக்கப்படுவன உபபோகப்‌ பொருள்கள்‌.
    (வி-றை உணவு , தாம்பூலம்‌, மாலை முதலியன போகப்‌ பொருள்கள்‌.
    உடை, படுக்கை, ஆடை முதலியன உபபோகப்‌ பொருள்கள்‌. ஐம்‌ பொறிகள்‌
    வழியாக நுகரப்படுவன இவை. இவை நிமித்தமாகவே இச்சைகள்‌
    தோன்றுகின்றன. இச்சைகளை மட்டுப்படுத்தவே இப்‌ பொருள்களைப்‌
    பயன்படுத்துவதில்‌ நியமங்கள்‌ ஏற்கப்படுகின்றன.
    100 மயக்கம்‌ கொலைஅஞ்சிக்‌ கள்ளு மதுவும்‌
    துயக்கில்‌ துறக்கப்‌ படும்‌.
    இது உண்ணத்தகாதன கூறுகிறது.
    (ப்ரை! மயக்கம்‌ – மயக்கத்தைத்‌ தருவதாலும்‌, கொலை – உயிர்‌
    இம்சையால்‌ பெறப்படுதலானும்‌, அஞ்சி – அவற்றுக்கு நடுங்கி, கள்ளும்‌ –
    கள்ளும்‌, மதுவும்‌ – தேனும்‌, துயக்கில்‌ – சோர்வு இல்லாது, துறக்கப்படும்‌ –
    நீக்கப்படும்‌. ௪ – று.
    (க-றை கள்ளும்‌ தேனும்‌ துறக்கப்படும்‌. ஏனெனில்‌ அவை மயக்கத்தை
    தருவதாலும்‌ கொலையால்‌ பெறப்படுதலானும்‌ என்பதாம்‌.
    (வி-றை அருகன்‌ அறத்தை ஏற்க முதலில்‌ கள்‌, புலால்‌, தேன்‌
    இம்மூன்றையும்‌ நீக்க வேண்டும்‌. இவற்றை நீக்காமல்‌ அருகன்‌ அறத்தை
    ஏற்க முடியாது. தேனீயால்‌ உருவாக்கப்படும்‌ தேன்‌ கூட்டில்‌ அனந்த திரச
    உயிர்கள்‌ உற்பத்தி ஆகின்றன. புலால்‌ திரச உயிர்களின்‌ வாழிடம்‌. அது
    அருங்கலச்செப்பு 130
    பச்சையாக இருந்தாலும்‌ சுடப்பட்டாலும்‌ அனந்த திரச உயிர்கள்‌ அதில்‌
    தோன்றுகின்றன. கள்ளும்‌ அதுபோல திரச உயிர்களின்‌ வாழிடம்‌. இவற்றைப்‌
    பயன்படுத்துவதால்‌ உயிர்க்‌ கொலை நிகழ்கிறது, கள்‌ குடிப்பதால்‌ அறிவு
    திரிகிறது. இவை எப்போதும்‌ உண்ணத்தக்கன அல்ல.
    101 வேப்ப மலரிஞ்சி வெண்ணெய்‌ அதம்பழம்‌
    நீப்பர்‌ இவைபோல்‌ வன.
    இதுவும்‌ அது.
    (ப-றை வேப்ப மலர்‌ – வேப்பம்‌ பூவும்‌, இஞ்சி – பச்சை இஞ்சியும்‌,
    வெண்ணெய்‌ – வெண்ணெயும்‌, அதம்‌ பழம்‌ – அத்திப்‌ பழமும்‌, இவை
    போன்ற உண்ணத்தகாதபிறவற்றையும்‌, நீப்பர்‌-சிராவகர்‌ நீக்கிவிடுவர்‌, எ-று.
    (க-ரை! வேப்பம்பூ, இஞ்சி, வெண்ணெய்‌, அத்திப்பழம்‌ போன்ற
    உண்ணத்தகாதனவற்றை சிராவகர்‌ நீக்கிவிடுவர்‌ என்பதாம்‌.
    (வி-ரை திரச உயிர்கள்‌ வதைபடக்கூடிய பொருள்‌ உண்ணத்தகாததாக
    நீக்கப்பட்டது. ஆனால்‌ அனந்த தாவர உயிர்கள்‌ வதைபடக்கூடிய பச்சை
    இஞ்சி, கிழங்கு வகைகள்‌ முதலானவையும்‌ உண்ணத்தகாதனவே.
    அங்குலத்தின்‌ அயங்கியம்‌ பங்கில்‌ ஒரு பங்கு அளவினை உடைய நிகோத
    உடலில்‌ சித்தர்‌ எண்ணிக்கை மற்றும்‌ கடந்த கால உயிர்கள்‌
    எண்ணிக்கையைக்‌ காட்டிலும்‌ அனந்த மடங்கு உயிர்கள்‌ வாழ்கின்றன.
    நாக்குச்‌ சுவைக்காக இத்தனை உயிர்கள்‌ கொல்லப்படுகின்றன. அத்தகைய
    உயிர்கள்‌ வாழக்கூடிய பொருள்களை இக்‌ குறளில்‌ சுட்டியுள்ளார்‌.
    இங்குக்‌ காட்டப்பட்டுள்ள பெயர்களை இனம்‌ குறித்ததாகக்‌ கொள்ளல்‌ வேண்டும்‌. வேப்பம்பூ என்றதால்‌ எல்லாவகை பூக்களையும்‌ தாழம்பூவையும்‌, இஞ்சி என்றதால்‌ உருளை, கருனை வங்காயம்‌ முதலான எல்லா கிழங்குகளையும்‌ , அதம்‌ பழம்‌ என்றதால்‌ பஞ்ச உதும்பர பழங்களையும்‌ கொள்ள வேண்டும்‌. வெண்ணெயில்‌ அந்தர்‌ முழுத்தத்திற்குமேல்‌ (48 நிமிடத்திற்குமேல்‌) அயங்கியம்‌ திரச உயிர்கள்‌ தோன்றிவிடுகின்றன. அதம்‌ பழம்‌ என்பதற்கு அழுகிய பழம்‌ என்ற பொருளும்‌ உண்டு. அதுவும்‌ உண்ணத்தகாததே. இவை போல்வன என்றதனால்‌ இவை இனம்‌ குறித்த
    பெயராகக்‌ கொள்ளப்பட்டன.
    அருங்கலச்செப்ப 197
    102 இயமங்கள்‌ கால வரையறை இல்லை
    நியமங்கள்‌ அல்லா வதம்‌.
    இது பரிமாணத்திற்கு கால வரம்பு கூறுகிறது.
    (ப-ரை இயமங்கள்‌ – இயம விரதங்கள்‌, கால வரையறை – கால
    வரம்பு; இல்லை – இல்லாதவை: நியமங்கள்‌ – நியம விரதங்கள்‌, அல்லா –
    கால வரம்பு உள்ள, வதம்‌ – விரதமாகும்‌.
    (க-ரை இயம விரதங்கள்‌ வாழ்நாள்‌ முழுதும்‌ ஏற்கப்படுவன; நியம
    விரதம்‌ குறிப்பிட்ட காலம்‌ வரை ஏற்கப்படுவன என்பதாம்‌.
    (வி-ரை பரிமாண விரதங்களில்‌ பொருள்‌ அளவும்‌, கால அளவும்‌
    வரையறுக்கப்படுகின்றன. இந்தக்‌ குறள்‌ காலவரையறை எப்படி ‘
    அமைகிறது என்று கூறுகிறது. சில விரதங்கள்‌ வாழ்நாள்‌ முழுதும்‌
    ஏற்கப்படும்‌. அவை இயம விரதங்கள்‌ எனப்படும்‌. உதாரணம்‌ தேன்‌. கள்‌.
    புலால்‌ உண்ணாமை. சில விரதங்கள்‌ குறிப்பிட்ட காலம்‌ வரை
    எடுக்கப்படும்‌. அவை நியம விரதங்கள்‌. உதாரணம்‌ ரச பரித்தியாகம்‌
    போன்றவை.
    அல்லாத என்பது அல்லா என நின்றது செய்யுள்‌ விகாரம்‌. அல்லாத
  • மாறான. இயமத்திற்கு மாறானது நியமம்‌ என்பது கருத்து.
    103 உடுப்பன, பூண்பன, பூசாந்தும்‌ ஊர்தி
    படுப்ப, பசிய நீராட்டு.
    104 கோலம்‌ இலைகூட நித்த நியமங்கள்‌
    கால வரையறுத்தல்‌ நற்கு.
    இவை நியமத்திற்கு உரிய பொருளைக்‌ கூறுகின்றன.
    (ப-ரை! உடுப்பன – உடையும்‌, பூண்பன – அணியும்‌, பூ – மலரும்‌,
    சாந்தும்‌ – சந்தனமும்‌, ஊர்தி – ஊர்திகளும்‌, படுப்ப – படுக்கையும்‌, பசிய
    நீராட்டு – தண்ணீரில்‌ குளித்தலும்‌, கோலம்‌ – பாக்கு, இலைகூட –
    வெற்றிலையும்‌, நித்தம்‌ – நாள்தோறும்‌, நியமங்கள்‌ – நியமவிரதங்களாக,
    காலம்‌ – காலத்தை, வரையறுத்தல்‌ – வரம்பு செய்தல்‌, நற்கு – நன்மையாம்‌.
    அருங்கலச்செப்பு 132
    க-ரை உடை. முதலாகக்‌ கூறப்பட்டனவற்றை நாள்தோறும்‌
    நியமமாக வரையறுத்துப்‌ பயன்‌ கொள்ள வேண்டும்‌ என்பதாம்‌.
    (வி-றரை இன்று இரண்டு அல்லது மூன்று உடை உடுத்துவன்‌. இன்று
    நகை அணியமாட்டேன்‌ அல்லது இத்தனை அணிவேன்‌ இது போன்று
    ஒவ்வொன்றையும்‌ வரையறை செய்தல்‌ நியம விரதமாகும்‌.
    இக்‌ குறள்கள்‌ குளகம்‌. கூட – உம்மை பொருள்‌ தரும்‌ இடைச்சொல்‌
    705 இன்று பகலிரா இத்திங்கள்‌ இவ்வாண்டைக்கு
    என்று நியமம்‌ செயல்‌
    இது நியமத்திற்குக்‌ கால பேதம்‌ கூறுகிறது.
    (ப-ரை இன்று – இன்று மட்டும்‌, பகல்‌ – பகலில்‌ மட்டும்‌, இரா – இரவில்‌
    மட்டும்‌, இத்திங்கள்‌ – இந்த மாதம்‌ மட்டும்‌, இவ்வாண்டைக்கு – இந்த ஆண்டு
    மட்டும்‌ , என்று – இப்படிக்‌ காலம்‌ குறித்து, நியமம்‌ – நியம விரதம்‌. செயல்‌ –
    செய்யப்படும்‌, – எ-று.
    (க-ரை ஒரு நாள்‌, பகல்‌, இரவு, மாதம்‌, ஆண்டு என காலம்‌ வரையறுத்து
    போக உபபோகப்‌ பொருளைத்‌ தியாகம்‌ செய்தல்‌ நியமவிரதம்‌ என்பதாம்‌.
    106 வேட்கை வழி நினைப்பு துய்ப்பு மிகநடுக்கு
    நோக்குஇன்மை ஐந்தாம்‌ இறப்பு.
    இது அதிசாரம்‌ கூறுகிறது.
    (ப-றை வேட்கை – மிகு விருப்பமும்‌, வழி நினைப்பு – துய்த்த வழியை நினைவுகூர்தலும்‌, துய்ப்பு – துய்க்க விரும்புதலும்‌, மிக நடுக்கு – மிக்க அச்சம்‌, நோக்கின்மை – பயன்‌ நோக்காமை என, இறப்பு – பரிக்கிரஹ பரிமாண விரதத்தின்‌ அதிசாரம்‌, ஐந்தாம்‌ – ஐந்தாகும்‌, – எ-று.
    கரை மிகு விருப்பமும்‌, துய்த்ததனை நினைவுகூர்தலும்‌, துய்க்க விரும்புதலும்‌ மிக அஞ்சுதலும்‌, பயன்‌ நோக்காமையும்‌ என ஐந்தும்‌ அதிசாரங்கள்‌ என்பதாம்‌.
    அருங்கலச்செப்பு 133
    (வி-ரை புலன்‌ ஆசையால்‌ கட்டுப்பாடு மீறுதல்‌ வேட்கை ஆகும்‌.
    புலன்‌ இச்சை வேதனையைத்‌ தீர்த்த பின்பும்‌ மீண்டும்‌ மீண்டும்‌ துய்த்த
    வழியை நினைவு கூருதல்‌ வழி நினைப்பு; புலன்‌ இச்சை வேதனையை தீர்த்த
    பின்னும்‌ மீண்டும்‌ துய்த்தலைக்‌ கருதுதல்‌ துய்ப்பு ஆகும்‌; துய்க்கப்படும்‌
    பொருள்கள்‌ எதிர்காலத்தில்‌ கிடைக்காமல்‌ போகுமோ என்று அஞ்சுதல்‌ மிக
    நடுக்கு எனப்பட்டது. புலன்‌ இச்சை வேதனை தீர்த்தல்‌ என்ற கருத்து இன்றி
    துய்ப்பில்‌ மிகு ஆர்வம்‌ கொள்ளுதல்‌ நோக்கு இன்மை ஆகும்‌. போக
    உபயோகப்‌ பொருள்களைத்‌ துய்ப்பதில்‌ வரம்பு கட்டுதல்‌ புலன்கள்‌
    இச்சையை மட்டுப்படுத்தவே யாகும்‌. அந்தக்‌ கருத்தை மறந்து புலன்‌
    இச்சையை மிகுவிக்கும்‌ நினைவுகளில்‌ நிகழ்தல்‌ அதிசாரம்‌ ஆகும்‌ எனக்‌
    காட்டியுள்ளார்‌; இக்‌ குறளில்‌.
  1. இக்கா வதம்‌
    சாமாயிகம்‌
    107 கட்டு விடுகாறும்‌ எஞ்சாமை ஐம்பாவம்‌
    விட்டொழுகல்‌ சாமா யிகம்‌.
    இது சாமாயிகம்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
    (ப-ரை கட்டு – வரையறுத்துக்‌ கொள்ளும்‌ கட்டு, விடுகாறும்‌ – தளரும்‌
    வரை, எஞ்சாமை – குறைவு இன்றி, ஐம்‌ பாவம்‌ – ஐந்து பாபங்களையும்‌, விட்டு
  • நீக்கிவிட்டு, ஒழுகுதல்‌ – ஒழுகுதல்‌, சாமாயிகம்‌ – சாமாயிகம்‌ என்னும்‌ சிக்ஷா
    விரதமாகும்‌.
    (௧-ரை! வரையறுத்துக்‌ கொண்ட காலம்‌ வரை ஐந்து பாபங்களையும்‌
    நீக்கி ஒழுகுதல்‌ சமாயிகம்‌ என்பதாம்‌.
    (வி-ரை சாமாயிகம்‌ எனில்‌ ஒப்ப உணர்தல்‌; ஒத்த உணர்வு பெறுவது
    என்பதாம்‌. முனிவர்‌ எப்போதும்‌ எல்லாவற்றையும்‌ வேறுபாடு இன்றி ஒத்த
    உணர்வோடு பார்கிறார்‌. ஆனால்‌ இல்லறத்தார்‌ அதுபோல எப்போதும்‌
    இருத்தல்‌ முடியாது. அதனால்‌ இரண்டு அல்லது மூன்று வேளைகளில்‌ 2
    நாழிகை, 4 நாழிகை அல்லது 6 நாழிகை நேரம்‌ எல்லா பாபங்களிலிருந்தும்‌
    விடுபட்டு ஒத்த உணர்வை ஏற்கிறார்‌. சாமயிகம்‌ என்றும்‌ இதனைக்‌
    அருங்கலச்செப்பு 134
    குறிப்பர்‌. சாமாயிக காலத்தில்‌ நடுநிலை உணர்வோடு இருத்தல்‌
    குறிக்கோளாகும்‌. இன்பம்‌ – துன்பம்‌, உறவு – பகை, வருதல்‌ – போதல்‌
    முதலான நிலைகளில்‌ விருப்பு – வெறுப்பு தோன்றாத நிலை அது. அந்த
    சாமாயிக காலத்தில்‌ பஞ்ச பாபங்களிலிருந்து முழுமாக நீங்கி இருத்தல்‌
    வேண்டும்‌.
    கட்டு – முடிச்சு. அடுத்த குறளில்‌ விளக்குகிறார்‌.
    108 கூறை மயிர்முடி முட்டி நிலையிருக்கை
    கூறிய கட்டென்று உணர்‌.
    இது கட்டு இன்னது என்று கூறுகிறது.
    (ப-ரை! கூறை முடி – ஆடை முடிப்பும்‌, மயிர்முடி – குடுமி முடிப்பும்‌,
    முட்டி – கை விரல்கள்‌ மடக்கிய நிலையும்‌, நிலை – நிற்றலும்‌, இருக்கை –
    அமர்ந்து இருத்தலும்‌, கூறிய – மேலே சுட்டிய கட்டு – கட்டுகள்‌, என்று –
    என, உணர்‌ – உணர்தல்‌ வேண்டும்‌.
    காரை ஆடை முடிச்சு, குடுமி முடிச்சு, கைமூடி இருத்தல்‌, நிற்றல்‌ அமர்ந்து இருத்தல்‌ என இவை சாமாயிக நேரத்தைக்‌ காட்டும்‌ கால
    அடையாளங்கள்‌. என்பதாம்‌.
    (வி-ரை சாமாயிகம்‌ செய்ய நேரத்தை வரையறை செய்யும்‌ போது
    ஆடை முடிச்சு அவிழும்‌ வரை என்றோ, குடுமி முடிச்சு அவிழும்‌ வரை என்றோ கைவிரலை மடக்கி இருக்கும்‌ வரை என்றோ, சலனமின்றி நிற்கும்‌
    வரை என்றோ, சலனமின்றி அமரும்‌ வரை என்றோ கால வரம்பினை உறுதி செய்து கொள்வர்‌ அந்த நாள்களில்‌. இதனையே ‘கட்டு விடுகாறும்‌’ என்று முன்‌ கூறி அக்‌ கட்டுகள்‌ வகை இவை என்று இக்‌ குறளில்‌ கூறியுள்ளார்‌.
    காலம்‌ அறிய தற்காலத்தே கடிகாரம்‌ உள்ளது.
    109 ஒரு சிறை இல்லம்‌ பிறவுழி யானும்‌
    மருவுக சாமா யிகம்‌.
    இது சாமாயிக இடத்தின்‌ தன்மை கூறுகிறது
    அருங்கலச்செப்பு 135
    (ப-றை சாமாயிகம்‌ – சாமாயிகத்தை, ஒருசிறை – ஒரு பக்கம்‌, இல்லம்‌
  • வீட்டிலோ, புறவுழியானும்‌ – பிற இடத்திலோ, மருவுக – பொருந்துதல்‌
    வேண்டும்‌ – எ-று.
    (க-ரை) சாமாயிக்த்தை வீடு அல்லது வேறு இட;ததில்‌ தனியான
    இடத்தில்‌ செய்ய வேண்டும்‌ என்பதாம்‌.
    (வி-ரை சாமாயிகத்தை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும்‌. அதனால்‌
    எந்தத்‌ தொல்லையும்‌ இல்லாத ஒதுக்குப்‌ புறமான இடத்தைத்‌ தேர்ந்து தெடுத்துக்‌ கொள்ள வேண்டும்‌. அது வீட்டின்‌ பகுதியாகவும்‌ இருக்கலாம்‌
    அல்லது கோயில்‌ போன்ற பிற இடங்களாகவும்‌ இருக்கலாம்‌. உழி – இடம்‌
    பிற உழி – வேறு இடம்‌; வீடு தவிர வேறு இடமாகவும்‌ இருக்கலாம்‌ இடம்‌
    தேர்ந்தெடுத்த பிறகு சாமாயிகத்தின்‌ இடையில்‌ ஏதேனும்‌ தொல்லை
    ஏற்பட்டால்‌ அதனை உபஸர்கமாக எண்ணிப்‌ பொறுத்துக்‌ கொள்ளவேண்டும்‌.
    110 சேதியம்‌ வந்தனை பட்டினி ஆதியா
    ஓதிய காலம்‌ அதற்கு.
    இது சாமாயிகம்‌ செய்ய சிறப்பான காலம்‌ கூறுகிறது.
    (ப-ரை அதற்கு – அந்த சாமாயிகத்திற்கு, சேதியம்‌ வந்தனை – ஜிந
    மிம்பத்தைத்‌ தரிசிக்கும்‌ பொழுதும்‌, பட்டினி ஆதி – உபவாசும்‌ முதலான
    சிறப்பான காலமும்‌, ஓதிய – ஓதப்பட்ட, காலம்‌ – காலமாகும்‌. ௭ – று.
    (க-ரை! சாமாயிகத்தை தேவ வந்தனை காலத்திலும்‌, உபவாசம்‌
    முதலான சிறப்பான காலங்களிலும்‌ தவறாது செய்ய வேண்டும்‌ என்பதாம்‌.
    (வி-ரை) சாமாயிகம்‌ நாள்தோறும்‌ செய்யப்படுகிறது. அந்தச்‌
    சாமாயிகம்‌ சிறப்பான இடங்களில்‌ அல்லது காலங்களில்‌ செய்யப்படும்‌ போது
    பாவனை இன்னும்‌ சிறப்பு அடைகிறது. அதனால்‌ உபவாசம்‌ போன்ற
    நாள்களிலும்‌, தேவ வந்தனை போன்ற இடங்களிலும்‌ அதனைச்‌ செய்வதால்‌
    நடுநிலை உணர்வு (சமதாபாவனை! மேலும்‌ சிறப்படைகிறது ஆதி
    என்றதனால்‌ வேறு சிறப்பான பருவங்களிலும்‌, தீர்த்தயாத்திரை போன்ற
    சமயங்களிலும்‌ சாமாயிகம்‌ செய்யலாம்‌ உபவாசம்‌ இல்லாது ஒரு வேளை

உண்ணும்‌ பருவங்களிலும்‌ செய்யலாம்‌”.
1, ரத்னகரண்டக சிராவகாசாரம்‌, 3/10.
அருங்கலச்செப்பு 136
சேதியம்‌ – பாகதச்‌ சொல்‌.
111 பெற்ற வகையினால்‌ சாமாயிகம்‌ உவப்பின்‌
முற்ற நிறையும்‌ வதம்‌.
இது சாமாயிக கால நடைமுறை கூறுகிறது.
(ப-ரை பெற்ற – மேலே கூறப்பெற்ற, வகையினால்‌ – காலம்‌, இடம்‌
பாவனைகளால்‌, சாமாயிகம்‌ – சாமாயிகத்தை, உவப்பின்‌ – மனகிழ்ச்சியுடன்‌
செய்யின்‌, வதம்‌ – சாமாயிக விரதம்‌, முற்ற – முழுதும்‌, நிறையும்‌ – நிறைவு
அடையும்‌, – எ-று.
(க-ரை காலம்‌, இடம்‌, பாவனைகளால்‌ மகிழ்ச்சியுடன்‌ சாமாயிகத்தைச்‌
செய்யின்‌ அது முழுதும்‌ தடையின்றி நிறைவு அடையும்‌ என்பதாம்‌.
(வி-ரை சாமாயிகம்‌ செய்யும்‌ போது மனம்‌ மகிழ்ச்சியுடன்‌ இருத்தல்‌
வேண்டும்‌ என்பார்‌ உவப்பின்‌ என்றார்‌. ஆசாரியர்‌ சமந்தபத்திரர்‌ ‘பிரலன்ன சித்தம்‌’ என்பார்‌! சாமாயிகத்தினால்‌ விளையும்‌ பயன்‌ அறிவதால்‌ மகிழ்ச்சியோடு செய்வான்‌ என்பதாம்‌. ஆகமத்தில்‌ கூறப்பட்டுள்ள
விதிமுறைகள்‌ படி சாமாயிகம்‌ செய்தல்‌ வேண்டும்‌ என்பதாம்‌.
712 தனியன்‌ உடன்பிது வேற்றுமை சுற்றம்‌
இனைய நினைக்கப்‌ படும்‌.
இது சாமாயிக காலச்‌ சிந்தனை பற்றி கூறுகிறது.
(ப-ரை தனியன்‌ – நான்‌ தனியானவன்‌, இது உடம்பு – இந்த உடம்பு, சுற்றம்‌ – உறவு, வேற்றுமை – வேற்றுமை உடையன, இனைய – இவை போன்றன, நினைக்கப்படும்‌ – சாமாயிக காலத்தில்‌ சிந்திக்கப்படும்‌.
கறை உயிர்‌ வேறு, உடல்‌, சுற்றம்‌ முதலானவை வேறு வேறு எனச்‌ சாமாயிக காலத்தில்‌ சிந்திக்கப்படும்‌. என்பதாம்‌.
(வி-ரை! கூடும்‌ வாளும்‌ போல” உடலும்‌ உயிரும்‌ தனித்தனியானவை என்பன போன்றவை சிந்திக்கப்படுவதால்‌ உயிர்‌ தத்துவத்தின்‌ சிறப்பு உணரப்படும்‌. அதனால்‌ பிறவி பற்றிய வெறுப்பும்‌, மோக்ஷம்‌ பற்றிய

விருப்பும்‌ தோன்றும்‌.

  1. £.க.சி. 2/9, 2. திருக்கலம்பகம்‌, 76,
    அருங்கலச்செப்பு 137
    118 இறந்ததன்‌ தீமைக்கு இழித்தும்‌ பழித்தும்‌ . மறந்தொழியா மீட்டல்‌ தலை.
    இதுவும்‌ அது.

(ப-றை இறந்ததன்‌ – நடந்துபோன, தீமைக்கு – பாபத்திற்கு, இழித்தும்‌

  • நிந்தித்தும்‌, பழித்தும்‌ – நொந்து கொண்டும்‌, மறந்தொழியா – மறக்காமல்‌,
    மீட்டல்‌ – மீட்டுக்கொள்ளுதல்‌, தலை – ஸாமாயிக பாவனைக்கு உத்தமம்‌
    ஆகும்‌, – எ-று.
    (க-ரை செய்துவிட்ட பாபத்திற்குத்‌ தன்னை நிந்தித்தும்‌ நொந்தும்‌
    மறக்காமல்‌ அப்பாபத்திலிருந்து தன்னை மீட்டுக்‌ கொள்ளுதல்‌ வேண்டும்‌
    என்பதாம்‌.
    (வி-ரை ஸாமாயிகன்‌ -விழிப்பின்மை அல்லது அஞ்ஞானம்‌
    காரணமாகசெய்து விட்ட பாபத்திற்குக்‌ கழுவாய்‌ தேடும்‌ உணர்வு
    உடையவனாக இருத்தல்‌ வேண்டும்‌. அப்பாபம்‌ செய்த தன்னை நிந்தித்தும்‌
    நொந்தும்‌ எதிர்காலத்தில்‌ அது போன்ற பாபங்களில்‌ மனம்‌ முதலான
    செல்லாமல்‌ இருக்க தன்னை மீட்டுக்‌ காத்துக்‌ கொள்ளவேண்டும்‌. அதுவே
    அவனுக்குத்‌ தலையாய பாவனை யாகும்‌. “விநிந்த நாலோசன கர்ஹனை
    ரஹம்‌’ என்பார்‌ அமிதகதி ஆசாரியர்‌.’ “இழித்தும்‌ பழித்தும்‌ நிந்தித்தும்‌
    போக்கிக்‌ கொள்ளிறேன்‌’ என்பதாம்‌.
    114 தீயவை எல்லாம்‌ இனிச்செய்யேன்‌ என்று அடங்கித்‌
    தூ£யவழி நிற்றலும்‌ அற்று.
    இதுவும்‌ அது.
    (ப-ரை! தீயவை எல்லாம்‌ – தீமை தரும்‌ பாபங்கள்‌ எல்லாவற்றையும்‌,
    “இனிச்‌ செய்யேன்‌’ – இனிமேல்‌ செய்யமாட்டேன்‌, என்று- என ஆலோசித்து,
    அடங்கி – தன்‌ தியானத்தில்‌ பொருந்தி, தூயவழி – புலன்‌ இச்சை நீங்கிய
    குற்றமற்ற நெறியில்‌, நிற்றலும்‌ – நிலை பெறுவதும்‌, அற்று – ஸாமாயிகம்‌
    ஆகும்‌, – எ-று.
    (க-றை தீயவைகளை இனிச்‌ செய்தல்‌ இல்லை என அத்தீமைகளை
    ஆலோசித்து நீக்கி ஒருமையுணர்வோடு தூய தியானத்தில்‌ நிற்றலும்‌
    ஸாமாயிகம்‌ ஆகும்‌.
  1. சாமாயி௪ பாடம்‌, 7
    அருங்கலச்செப்பு 138
    (வி-ரை! ஸாமாயிக காலத்தில்‌ தீமை பற்றி ஆலோசிப்பதும்‌
    ஸாமாயிகம்‌ ஆகும்‌ என்றார்‌. ஒவ்வொரு சமயமும்‌ உதயமாகும்‌
    கசாயத்தினால்‌ சாதகனுடைய அகத்திலும்‌ புறத்திலும்‌ குறைபாடுகள்‌
    காணப்படுகின்றன. அறவாழ்வை செம்மைப்படுத்த அவற்றை ஆலோசித்து
    நீக்குதல்‌ இன்றியமையாதது ஆகும்‌. இது குருவோடு ஆலோசித்து
    செய்யப்படும்‌. சாதக நிலையில்‌ உள்ள சிராவகன்‌ அதற்கான பயிற்சியை
    சாமாயிக சிந்தனையில்‌ செய்யலாம்‌ என்பது இங்கு ஆசிரியர்‌ கருத்தாக
    இருக்கலாம்‌. சாமாயிகம்‌ இங்கே சிக்ஷா விரதத்தில்‌ கூறப்பட்டுள்ளது
    என்பதனையும்‌ நினைவு கூர்க.
    115 ஒன்றியும்‌ ஒன்றாதும்‌ தான்செய்த தீவினையை
    நின்று நினைந்திரங்கல்‌ பாற்று.
    இதுவும்‌ அது.
    (ப-ரை! தான்‌ – தான்‌, ஒன்றியும்‌ – தெரிந்தும்‌, ஒன்றாதும்‌ – தெரியாதும்‌,
    செய்த – செய்த, தீவினையை – பாபங்களை, நின்று – எப்போதும்‌
    ஸாமாயிகத்தில்‌, நினைந்து – எண்ணி, இரங்கல்‌ பாற்று – பச்சாதாபப்‌
    படவேண்டும்‌, – எ-று. ்‌
    (க-ரை தான்‌ தெரிந்தோ தெரியாமலோ செய்த பாபங்களை எண்ணிப்‌
    பச்சாதாபப்‌ பட வேண்டும்‌ என்பதாம்‌.
    (வி-ரை! தன்னால்‌ நிகழ்ந்த பாபாங்களை எண்ணிப்‌ பச்சாதாபப்படுதல்‌
    வேண்டும்‌. ஏனெனில்‌ அதனால்‌ மீண்டும்‌ அது போன்ற பாபங்கள்‌ நிகழரீமல்‌
    காத்துக்‌ கொள்ள முடியும்‌. ‘நின்று’ – எப்பொழுதும்‌: ‘நிறைபயன்‌ ஒருங்குடன்‌
    நின்று பெற’என்ற ஆட்சி காண்க’. இரங்குதல்‌ எப்பொழுதும்‌ செய்தல்‌
    வேண்டும்‌ என்பதாம்‌. ்‌
    116 தனக்கும்‌ பிறர்க்கும்‌ உறுதிச்‌ சொல்‌ செய்கை
    மனத்தினில்‌ சிந்திக்கற்‌ பாற்று.
    இதுவும்‌ அது.
    (பறை தனக்கும்‌ – தன்‌ உயிர்க்கும்‌, பிறர்க்கும்‌ – பிற உயிர்களுக்கும்‌
    உறுதி – நன்மையைத்‌ தரும்‌, சொல்‌ – சொற்கள்‌, செய்கை – செயல்கள்‌ பற்றி
  2. பரிபாடல்‌, 16/7
    அருங்கலச்செப்பு 139
    மனத்தினில்‌ – மனத்தில்‌, சிந்திக்கற்பாற்று – ஸாமாயிக காலத்தில்‌ சிந்திக்கத்‌
    தக்கதாம்‌ – எ-று.
    (க-ரை! ஸாமாயிக காலத்தில்‌ தன்னுயிர்க்கும்‌ பிற உயிர்க்கும்‌ நன்மை
    தரவல்ல சிந்தனைகளை மனத்தில்‌ சிந்திக்கலாம்‌ என்பதாம்‌.
    (வி-ரை) உயிருக்கு நன்மை தருவளவே சிந்திக்கப்பட வேண்டும்‌
    என்பார்‌ ‘உறுதி’ என்றார்‌. உறுதி – நன்மை. ‘புத்தேளாவதே உறுதி என்றாள்‌’
    எள வரும்‌ ஆட்சி காண்க’ நன்மையான சொற்கள்‌, நன்மையான செயல்கள்‌
    சிந்திக்கப்பட வேண்டும்‌ என்பதாம்‌ ‘பிறப்பறுத்த உண்னையும்‌ என்னையும்‌
    அன்றி மற்றொன்றும்‌ உள்ளாமல்‌’ எனப்‌ பிறர்‌ வேண்டுதலையும்‌ காண்க.
    117 பிறர்கண்‌ வருத்தமும்‌ சாக்காடும்‌ கேடும்‌
    மறந்தும்‌ நினயாமை நன்று.
    இதுவும்‌ அது.
    (ப-றை பிறர்கண்‌ – பிறரிடத்து. வருத்தமும்‌ – வருத்தத்தையும்‌,
    சாக்காடும்‌ – இறப்பினையும்‌, கேடும்‌ – கேட்டினையும்‌, மறந்தும்‌ – மறந்து
    கூட, நினையாமை – நினையாது இருத்தல்‌, நன்று – நன்மையாகும்‌ – எ – று,
    (க-ரை! மறந்தும்‌ பிறருக்கு வருத்தமும்‌ இறப்பும்‌ கேடும்‌
    வருவனவற்றை நினையாது இருத்தல்‌ நன்மையாம்‌ என்பதாகும்‌.
    (வி-ரை சாமாயிக காலத்திலோ பிற சமயத்திலோ பிறரால்‌ தனக்குத்‌
    தொல்லை நிகழுமானாலும்‌ அவர்கள்‌ வருந்த வேண்டும்‌, இறக்க வேண்டும்‌,
    கேடு அடைய வேண்டும்‌ என்பன முதலான பாபச்சிந்தனைகளை மறந்தும்‌
    எண்ணுதல்‌ கூடாது என்பதாம்‌. அத்தகு நினைவுகள்‌ ‘ஆர்த்த தியானம்‌
    ஆவதால்‌ பாப பந்தத்திற்குக்‌ காரணம்‌ ஆகும்‌.
    118 திருந்தார்‌ பொருள்‌ வரவும்‌ தீயார்‌ தொடர்பும்‌
    பொருந்தாமை சிந்திக்கற்‌ பாற்று.
    இதுவும்‌ அது.
  3. சீவகசிந்தாமணி, 1228 2. திருநூற்றந்தாதி, 12
    அருங்கலச்செப்பு 140
    (ப-றை திருந்தார்‌ – நல்லொழுக்கம்‌ இல்லாதார்‌, பொருள்‌ – (கூறும்‌ அற,
    வரவு – வழியையும்‌, தீயார்‌ – கீழ்‌ மக்கள்‌, தொடர்பும்‌ – தொடர்பினையும்‌ ,
    பொருந்தாமை – சாராது இருத்தல்‌, சிந்திக்கற்பாற்று – எண்ணத்‌ தகுந்தது
    ஆகும்‌. எ -று.
    (க-ரை நல்லொழுக்கம்‌ இல்லாதார்‌ கூறும்‌ அற வழியையும்‌ கீழ்மக்கள்‌
    தொடர்பையும்‌ சாராது இருக்கச்‌ சிந்திக்க வேண்டும்‌ என்பதாம்‌.
    (வி-ரை பொருள்‌ வரவு என்றது ஈண்டு அறவழியைக்‌ குறித்து நின்றது.
    திருந்தார்‌ – நல்‌ஒழுக்கம்‌ இல்லாதவர்‌; எனவே மித்யா ஒழுக்கத்தினர்‌.
    அவர்கள்‌ கூறும்‌ பொருள்‌ வரவு அதாவது அற வரலாறு அல்லது அற வழி
    நன்மை பயக்கக்கூடியது அன்று இம்சையையும்‌ அறம்‌ என்றும்‌ கூறுவர்‌.
    அதனால்‌ அவர்கள்‌ உரையைச்‌ சாருதல்‌ கூடாது என எப்போதும்‌ சிந்திக்க
    வேண்டும்‌. தீயார்‌ என்றது கீழ்‌ மக்களை. அவர்கள்‌ அற வழியில்‌
    இல்லாதவர்கள்‌. அவர்கள்‌ தொடர்பையும்‌ சாருதல்‌ கூடாது என்பதாம்‌.
    இங்குக்‌ கூறப்பட்ட இரண்டு கருத்துக்களும்‌ அசுப தியானத்திற்குக்‌
    காரணமாவதால்‌ அவற்றை நீக்கும்‌ உபாயத்தை சாமாயிக காலத்தில்‌
    சிந்திக்கலாம்‌ என்று ஆசிரியர்‌ கூறுவதாகக்‌ கருதலாம்‌.
    திருந்தார்‌ – நல்லொழுக்கம்‌ இல்லாதார்‌. ‘திருந்தினர்‌ விட்டார்‌
    திருவிணரகம்‌’ என்ற ஆட்சியைக்‌ காண்க. பொருள்‌ – அறம்‌ ‘துறத்தல்‌
    பெருளாமோ’ என்ற ஆட்சி காண்க” வரவு – வழி. ‘குன்றத்தார்‌ கூடல்‌ வரவு’
    என்ற ஆட்சி காண்க” தீயார்‌ – கீழ்மக்கள்‌”.
    இக்‌ குறளுக்கு வேறான பொருளும்‌ கூறுவர்‌.
    119 கூடியவை எல்லாம்‌ பிரிவனவாம்‌ கூடின்மை
    கேடின்மை சிந்திக்கற்‌ பாற்று.
    இதுவும்‌ அது
    (ப-ரை! கூடியவை – வந்து சேருவன, எல்லாம்‌ – அனைத்தும்‌,
    பிரிவனவாம்‌ – பிரியக்‌ கூடியனவேயாம்‌; அதனால்‌, கூடு இன்மை – அவற்றோடு கூடுதலைச்‌ செய்யாத தன்மையையும்‌, கேடின்மை – என்றும்‌
  4. திருமந்திரம்‌ 2239; 2. சீவகசிந்தாமணி 2960; 3. பரிபாடல்‌ 20 / 73; 4. பிங்கல நிகண்டு.
    அருங்கலச்செப்பு 14]
    அழியாத தன்மையையும்‌, சிந்திக்கற்‌ பாற்று – (உடைய உயிர்‌) சிந்திக்கத்தக்கதாம்‌, – ௪ -று.
    (க-ரை! கூடுகின்ற பொருள்கள்‌ எல்லாம்‌ பிரிவனவே. அதனால்‌ தான்‌
    எதனோடும்‌ கூடாது அழியாது நிற்கின்ற உயிர்‌ சிந்திக்கத்‌ தக்க பொருளாம்‌
    என்பதாம்‌.
    (வி-ரை! கூடுவன பிரியும்‌ தன்மையுடையனவே. கூடுதலும்‌ பிரிதலும்‌
    புற்கலத்தின்‌ சிறப்பான இயல்பாகும்‌. உயிரின்‌ போகத்திற்கு வருவன
    அத்தனையும்‌ புற்கலப்‌ பொருள்களே. அதன்‌ இயல்புப்படி அப்‌ பொருள்கள்‌
    சேருகின்றன பிரிகின்றன. அதன்‌ சேர்க்கை பிரிவு தொடர்பாக இந்த உயிர்‌
    விருப்பு வெறுப்பு முதலான கசாயங்களைச்‌ செய்து பிறவியில்‌ உழல்கிறது.
    எனவே அதன்‌ இயல்பை சிந்திக்க வேண்டும்‌ என்று கூறுகிறார்‌. இச்‌
    சிந்தனையால்‌ பிற பொருள்‌ மேல்‌ உள்ள மோகம்‌ அழிந்து நோக்கு தன்‌
    பொருள்‌ மீது – தன்‌ உயிர்‌ மீது – திரும்பும்‌ என்பது கருத்து, அந்த உயிர்‌
    உறையும்‌ வாளும்‌ போல உடலுக்குள்‌ கிடந்தாலும்‌ எதனோடும்‌ கூடுவதும்‌
    இல்லை; அழிவதும்‌ இல்லை. அந்த உயிரைப்‌ பற்றிச்‌ சிந்திக்க வேண்டும்‌.
    சாமாயிகச்‌ சிந்தனையின்‌ சாரம்‌ இதுதான்‌.
    “கேண்மி னமரங்காள்‌ கேடின்றி நிற்பதுயிர்‌
    காண்மின்‌ உடம்பு கவினிளமை – கேண்மையுடன்‌
    வல்லாண்மை செல்வம்‌ என்று இவ்வெல்லாம்‌ வானத்து ,
    வில்லாகும்‌ என்றே விழையன்மின்‌”
    என வரும்‌ அடிகள்‌ இக்கருத்துடையதே’.
    120 நல்லறச்‌ சார்வு நவையற நீக்கலும்‌
    பல்வகையாற்‌ பார்க்கப்‌ படும்‌.
    இதுவும்‌ அது.
    (ப-றை நல்லறம்‌ – ஜிந அறத்தில்‌, சார்வு – சார்ந்து இருத்தலும்‌, நவை –
    குற்றங்களை, அற – முற்றுமாக, நீக்கலும்‌ – நீக்கிக்‌ கொள்ளுதலும்‌,
    பல்வகையால்‌ – பல வகையினாலும்‌ , பார்க்கப்படும்‌ – சிந்திக்கப்படும்‌.
    (க-ரை அறத்தில்‌ ஒழுகுதலும்‌ குறைகளை நீக்குதலும்‌ சிந்திக்கப்படும்‌
    என்பதாம்‌.
    ்‌ 1, திருக்கலம்பகம்‌, 76
    அருங்கலச்செப்பு 142
    (வி-ரை! ஸாமாயிகத்தின்‌ பயன்‌ அற ஒழுக்கத்தில்‌ நிலைத்தல்‌;
    பிறவிக்கு ஏதுவான குற்றங்களை நீக்குதல்‌. நிலைத்தலுக்கும்‌ நீக்கலுக்கும்‌
    என்னென்ன வழி முறைகள்‌ உண்டோ அவை அத்தனையும்‌
    சிந்திக்கப்படும்‌ / தேடப்படும்‌ என்பதாம்‌. 112ம்‌ பாடல்‌ முதல்‌ 120ம்‌ பாடல்‌
    வரை ஸாமாயிக காலத்தில்‌ சிந்திக்கக்‌ கூடிய கருத்துகளைச்‌ சுட்டியுள்ளார்‌.
    இத்தனை பாடல்களை ரத்ன கரண்டக சிராவாகாசரம்‌ கூறவில்லை.
    ‘அடைக்கலம்‌ இல்லாமல்‌ அசுப, அநித்ய, துக்க வடிவ ஜட பிறவியில்‌
    உள்ளேன்‌; மோக்ஷம்‌ இதற்கு முரணாணது, என்று கூறுகிறது அது.”
    121 உள்ளம்‌ மொழி செய்கை தள்ளல்‌ விருப்பின்மை
    உள்ளார்‌ மறத்தல்‌ இறப்பு.
    இது சாமாயிக விரத அதிசாரம்‌ கூறுகிறது.
    (ப-ரை! உள்ளார்‌ – சாமாயிகத்தில்‌ இருக்கிறவர்‌, உள்ளம்‌ (தள்ளல்‌) –
    மனத்‌ தடுமாற்றம்‌, மொழி (தள்ளல்‌) – மொழித்‌ தடுமாற்றம்‌, செய்கை
    . தள்ளல்‌! – செயல்‌ தடுமாற்றம்‌, விருப்பின்மை -ஆர்வம்‌ இல்லாமை,
    மறத்தல்‌ – மறந்து போதல்‌, இறப்பு – இவ்‌ வைந்தும்‌ அதிசாரங்களாம்‌, எ-று
    (கரை மனத்தடுமாற்றம்‌, மொழித்‌ தடுமாற்றம்‌, செயல்‌ தடுமாற்றம்‌;
    ஆர்வம்‌ இல்லாமை, மறத்தல்‌ இவ்வைந்தும்‌ சாமாயிக விரதத்துக்கு
    அதிசாரங்கள்‌ என்பதாம்‌.
    (வி-ரை! உள்ளம்‌ – மனம்‌. அதில்‌ தடுமாற்றம்‌ இரண்டு வகையில்‌
    நிகழலாம்‌. ஒன்று யோகத்தினால்‌, மற்றொன்று கசாயத்தினால்‌ ஆகும்‌.
    மனதில்‌ எளிதாகக்‌ தோன்றும்‌ சலனம்‌ யோகத்தினால்‌ ஏற்படும்‌ தடுமாற்றம்‌.
    விருப்பு வெறுப்பு செய்வதால்‌ தோன்றும்‌ சலனம்‌ கசாயத்தினால்‌ ஏற்படும்‌.
    சலனத்தை நீக்க முயற்சிக்க வேண்டும்‌. அதாவது சாமாயிகத்தில்‌ இருக்கும்‌
    போது விருப்பு வெறுப்பு சிந்தனை கூடாது. பிறகு யோகத்தால்‌ ஏற்படும்‌ சலனத்தைநீக்க முயற்சிக்க வேண்டும்‌. சிந்தனையில்‌ ஒரு முகப்பாடு
    தோன்றும்‌ வகையில்‌ அதனை அமைத்து யோகத்தால்‌ வரும்‌ சலனத்தைத்‌

தவிர்க்கலாம்‌.
1.ரத்னகரண்டகம்‌, 4/4,
அருங்கலச்செப்பு 43
ஒலிப்பில்‌ வரும்‌ தடுமாற்றம்‌ மொழித்‌ தடுமாற்றம்‌. ஆகும்‌.
உடலை அசைத்தல்‌, கொசு முதலியன ஓட்டுதல்‌, இடையில்‌ ஆசனத்தை
மாற்றல்‌ போன்றவை உடல்‌ தடுமாற்றம்‌. கடனே என்று சாமாயிகம்‌
செய்தல்‌ ஆர்வ மின்மை ஆகும்‌. இந்த ஐந்து அதிசாரங்களையும்‌ நீக்கி
சாமாயிகம்‌ செய்தல்‌ வேண்டும்‌. இது முதல்‌ சிக்ஷா விரதம்‌.
போசத உபவாசம்‌
122 உவாட்‌ டமியின்கண்‌ நால்வகை ஊணும்‌
அவாவறுத்தல்‌ போசத மெனல்‌.
இது போசத உபவாச இலக்கணம்‌ கூறுகிறது.
(ப-ரை! உவா – பெளர்ணமி, அமாவாசை, அட்டமி கண்‌ –
அட்டமியில்‌, நால்வகை – நான்கு வகைப்படும்‌. ஊணும்‌ – உணவையும்‌
(உண்ணும்‌), அவா – ஆசையை, அறுத்தல்‌ – நீக்குதல்‌, போசதம்‌ எனல்‌

  • போசத உபவாசம்‌ எனப்படும்‌, எ – று.
    (க-ரை) உவாவிலும்‌ அட்டமியிலும்‌ நான்கு வகை உணவு
    உண்ணுதல்‌ ஆசையை நீக்குதல்‌ போசதம்‌ என்பதாம்‌.
    (வி-ரை நால்வகை உணவு உண்பன, திள்பன, நக்குவன. பருகுவன
    முனி நிலையில்‌ உணவு பெறுவது பிறரைச்‌ சார்ந்து இருப்பதால்‌ அது
    கிடைக்காமலும்‌ போகலாம்‌. அதனால்‌ அதற்கான பயிற்சியை இல்லத்திலே
    செய்யப்படுவதால்‌ இது சிக்ஷா விரதத்தில்‌ கூறப்பட்டுள்ளது. ஜைன
    அறத்தில்‌ அஷ்டமி, சதுர்தசி அனாதி கால பருவ மாகக்‌ கருதப்படுகிறது.
    ஒவ்வொரு மாதத்திலும்‌ இரண்டு அஷ்டமி இரண்டு சதுர்தசிகள்‌
    வருகின்றன. இந்த நான்கு தினங்களிலும்‌ உபவாசம்‌ ஏற்போர்‌ நான்கு
    வகை உணவுகளையும்‌ உண்ணாது விடுகின்றனர்‌. இது வாழ்நாள்‌ முழுதும்‌
    ஏற்கப்படுகின்ற பருவங்கள்‌. இந்த உணவுகள்‌ உண்ணுதல்‌ ஆசையை நீக்க
    வேண்டும்‌ என்று குறித்து இப்பதால்‌ வெறும்‌ பட்டினி உபவாசம்‌ ஆகாது
    என்பது பெறப்படுகிறது. அதனால்‌ மறியல்‌ காலங்களில்‌
    மேற்கொள்ளப்படும்‌ பட்டினி உபவாசமாகாது. போசதம்‌ – பாகதத்‌ சொல்‌
    திரிபு.
    அருங்கலச்செப்பு 144
    123 ஐம்பாவம்‌ ஆரம்பம்‌ நீராட்டுப்‌ பூச்சாந்து
    நம்பற்க பட்டினியின்‌ ஞான்று.
    இது உபவாசத்தில்‌ நிகழும்‌ விதி கூறுகிறது.
    (ப-ரை பட்டினியின்‌ ஞான்று – உபவாச காலத்தில்‌. ஐம்பாவம்‌ – ஐந்து
    பாபங்களையும்‌, ஆரம்பம்‌ – தொழில்களையும்‌, நீராட்டும்‌ – எண்ணெய்‌
    குளியலையும்‌, பூச்‌ சாந்து – பூச்‌ சூடுதல்‌, சந்தனம்‌ பூசுடுதலையும்‌ நம்பற்க –
    விரும்புதல்‌ ஆகாது, – எ-று.
    (க-ரை! உபவாச நாளில்‌ ஐந்து பாபம்‌, தொழில்‌, குளியல்‌, கோலம்‌
    செய்தல்‌ கூடாது என்பதாம்‌.
    (வி-றை ஐம்பாவம்‌ – இம்சை, பொய்‌, திருடு, சீலமின்மை, பரிக்கிரஹம்‌.
    இவற்றை உபவாச தினத்தன்று கை விட வேண்டும்‌. ஆரம்பம்‌ – உழவு, வாள்‌
    வரைவு, வாணிபம்‌, வித்யா, சில்பம்‌ எனும்‌ ஆறுவகைத்‌ தொழிலிலும்‌ இம்சை
    இருப்பதால்‌ கை விட வேண்டும்‌. எரித்தல்‌, புடைத்தல்‌, அரைத்தல்‌,
    மெழுகுதல்‌, இடித்தல்‌ இவ்வைந்தும்‌ சூனை எனப்படும்‌. இவையும்‌ செய்தல்‌
    கூடாது. பஞ்ச பாவம்‌ என்பதனை பஞ்ச சூனை என்று கூறுவாரும்‌ உளர்‌.
    ரத்தின கரண்டகம்‌ கொலை முதலானவற்றையே பஞ்ச பாவமாகக்‌ கூறுகிறது.
    உபவாசத்தின்‌ குறிக்கோள்‌ கசாயம்‌, புலனாசை, உணவு துறத்தலாம்‌.
    வெறும்‌ உணவு மட்டும்‌ விடப்படுமானால்‌ அது உபவாசமாகாது, அதனால்‌ தான்‌ உபவாச நாளன்று என்னென்ன செய்தல்‌ கூடாது என்று நூல்கள்‌ கூறுகின்றன. நீராட்டுக்கு – எண்ணெய்‌ தேய்த்து குளித்தல்‌ பொருளாகக்‌ கூறப்பட்டது. எனெனில்‌ தூய நீரில்‌ குளித்தல்‌ விலக்கப்படவில்லை. குளியல்‌ இல்லாமல்‌ பூஜை முதலான செயல்கள்‌ செய்ய முடியாது. இங்கே கூறியவை தம்‌ இனம்‌ குறித்தனவாகக்‌ கொண்டு ஆசையைத்‌ தூண்டும்‌ இசை, கதை, காட்சி முதலியனவும்‌ தவிர்க்கப்பட வேண்டும்‌ எனக்‌ கொள்ள வேண்டும்‌.
    124 அறவுரை கேட்டல்‌ நினைத்தல்‌ உரைத்தல்‌
    திறவதிற்‌ செய்யப்‌ படும்‌.
    இதுவும்‌ அது.
    (ப-ரை அறவுரை – .பரமாகமத்தைப்‌ படிக்க, கேட்டல்‌ – கேட்டலும்‌ நினைத்தலும்‌ – கேட்டதைச்‌ சிந்தித்தலும்‌, உரைத்தல்‌ – பிறருக்கு அதனை எடுத்து உரைத்தலும்‌. திறவதில்‌ – உறுதியாகச்‌, செய்யப்படும்‌. செய்யத்‌ தக்கதாம்‌, எ-று.
    அருங்கலச்செப்பு 145
    (க-ரை) உபவாச நாளன்று ஆகமம்‌ கேட்டல்‌, சிந்தித்தல்‌, பிறர்க்கு
    உரைத்தல்‌ என இவற்றையே செய்ய வேண்டும்‌ என்பதாம்‌.
    (வி-ரை உபவாசம்‌ செய்பவர்‌ ஆகமங்களைப்‌ படிக்க இயலாதவராக
    இருந்தால்‌ ஆகமங்களை நன்கு அறிந்தவர்களைப்‌ படிக்கச்‌ சொல்லி அறம்‌
    கேட்கலாம்‌. ஆகமத்தில்‌ உள்ளவாறு உரைப்பவரிடமே அறம்‌ கேட்க
    வேண்டும்‌. தானே ஆகமங்களை விளக்கக்‌ கூடியவராக இருந்தால்‌ பிறருக்கு
    அறம்‌ உரைக்கலாம்‌: சோம்பலை வென்று ஞான தியானத்தில்‌ ஆழலாம்‌.
    அநித்தியம்‌, அசரணம்‌, ஸம்ஸாரம்‌, ஏகத்வம்‌, அன்யத்வம்‌. அசுசித்வம்‌.
    ஆஸ்ரவம்‌, ஸம்வரை நிர்ஜரை, உலகம்‌ போதி துர்லபம்‌, தர்மம்‌ எனும்‌
    பன்னிரண்டு அனுபிரேகக்ஷைகளைச்‌ சிந்திக்கலாம்‌; ஸ்வாத்யாயத்தில்‌
    ஆழ்ந்து போகலாம்‌. அல்லது ஆக்ஞா விசயம்‌, அபாய விசவயம்‌, விகபாக
    விசயம்‌, ஸம்ஸ்தான விசயம்‌ எனும்‌ தர்ம தியானத்தில்‌ ஆழ்ந்து போகலாம்‌.
    125 உண்டி மறுத்தல்‌ உபவாசம்‌ போசதம்‌
    உண்டல்‌ ஒருபோது எனல்‌.
    இது போசத உபவாசம்‌ என்பதற்குப்‌ பொருள்‌ கூறுகிறது.
    (ப-றை உண்டி – உணவை, மறுத்தல்‌ – நீக்கி, இருத்தல்‌, உபவாசம்‌ –
    உபவாசம்‌, ஒரு போது – ஒரு வேளை, உண்டல்‌ – உண்ணுதல்‌, போசதம்‌ –
    போசதம்‌, எனல்‌ – என்று சொல்லப்பெறும்‌, – எ-று.
    (க-றை உண்ணாது இருத்தல்‌ உபவாசம்‌, ஒரு வேளை உண்ணுதல்‌
    போசதம்‌ எனப்படும்‌.
    (வி-ரை ‘போசத உபவாசம்‌’ என்ற தொடருக்கு இங்கு விளக்கம்‌
    கூறப்பட்டுள்ளது. உபவாசம்‌ இருக்கும்‌ நாளுக்கு முன்‌ நாளில்‌ ஒரு வேளை
    உண்பர்‌. மதியம்‌ உணவு உண்ட பின்னர்‌ உபவாச நியமம்‌ ஏற்பர்‌. அதனை
    தாரணை” (ஏற்றல்‌! என்பர்‌. அடுத்த நாள்‌ பருவ நாள்‌ அன்று உபவசம்‌
    இருப்பர்‌. மறுநாள்‌ பூஜை முதலான காரியங்களை முடித்துக்‌ கொண்டு உணவு
    உண்பர்‌. அதனை ‘பாரணை’ (முடித்தல்‌) என்பர்‌. முடிக்கின்ற நாளில்‌ ஒரு
    வேளை உணவா இரண்டு வேளை உண்ணலாமா என்பதில்‌ கருத்து
    வேறுபாடு உள்ளது. ஆசாரியர்‌ சமந்தபத்திரர்‌ ‘பாரணை’ நாளில்‌ ஒரு வேளை
    உண்ணுதல்‌ வேண்டும்‌ என்னும்‌ கருத்துடையவர்‌. தற்காலத்தே இந்த போசத
    உபவாசம்‌ மூன்று வகையாகக்‌ காணப்படுகிறது. 1. தாரணையில்‌ இரண்டு
    அருங்கலச்செப்பு 46
    வேளை உண்டபிறகு உபவாச நியமம்‌ ஏற்று மூன்றாம்‌ நாள்‌ காலை முடித்தல்‌
    (% மணி நேர உபவாசம்‌! 2. உபவாச தின காலையில்‌ நியமம்‌ ஏற்று மறு நாள்‌
    காலை முடித்தல்‌ 24 மணி நேர உபவாசம்‌ 3. தாரணையில்‌ ஒரு வேளை
    உண்டு பாரணையில்‌ மதியம்‌ முடித்தல்‌. (48 மணி நேரம்‌! இங்கே ஆசிரியர்‌
    போசதம்‌ எப்போது என்று குறிப்பிட வில்லை. போசதத்தோடு கூடிய
    உபவாசம்‌ போசத உபவாசம்‌ ஆகும்‌. தாரணையிலும்‌ பாரணையிலும்‌ ஒரு
    வேளை உண்ணுதல்‌ போசதம்‌ என்பது ஒரு சாரர்‌ கருத்து. தாரணை அல்லது
    பரரணையில்‌ ஒரு வேளை உண்ணுதல்‌ போசதம்‌ என்பது வேறு சிலர்‌ கருத்து.
    126 போச துபவாசம்‌ என்றுரைப்பர்‌ பட்டினிவிட்டு
    ஆரம்பம்‌ செய்யான்‌ எனில்‌.
    இது உபவாச நாளில்‌ தொழில்‌ செய்யாமையை வலியறுத்துகிறது.
    (புரை பட்டினிவிட்டு – உண்ணாது இருந்து, ஆரம்பம்‌ – தொழில்‌
    (பாபம்‌, செய்யான்‌, எனில்‌ – செய்யாதவனாக இருந்தான்‌ எனில்‌, போசத
    உபவாசம்‌. போசத உபவாசம்‌ என்றுரைப்பர்‌. என்று சொல்லுவர்‌. ௪ – று.
    (க-ரை பட்டினி இருத்தலோடு பாபச்‌ செயலையும்‌ செய்யாது
    இருந்தால்‌ அதனை போசத உபவாசம்‌ என்பர்‌,
    (வி-ரை! உபவாச காலத்தில்‌ பாபம்‌ செய்தல்‌ கூடாது என்று
    ஏற்கெனவே 123ம்‌ பாடலில்‌ கூறப்பட்டுள்ளது. மீண்டும்‌ அதே கருத்து இப்‌
    பாடலில்‌ கூறப்பட்டுள்ளது இது மிகைப்பாடலாகத்‌ தோன்றுகிறது. இது
    ஆயத்தக்கது.
    127 நோக்கித்‌ துடையாது கோடல்‌ மலந்துறத்தல்‌
    சேக்கைப்‌ படுத்தல்‌ இறப்பு.
    இது அதிசாரம்‌ கூறுகிறது.
    ்‌ (ப-ரை! நோக்கி – உற்று நோக்கி, துடையாது – தூய்மை செய்யாது, கோடல்‌ – பொருளைக்‌ கொள்ளுதல்‌, வைத்தல்‌, மலம்‌ துறத்தல்‌ –
    அருங்கலச்செப்பு 47
    மலம்‌ சிறுநீர்‌ கழித்தல்‌, சேக்கைபடுத்தல்‌ – படுக்கை இடத்தில்‌ படுத்தல்‌
    இறப்பு – அதிசார மாகும்‌, -௪ – று.
    (க-ரை! உற்று நோக்கி இடத்தைத்‌ தூய்மை செய்யாது பொருளை
    எடுத்தல்‌, வைத்தல்‌, மலம்‌ சிறுநீர்‌ கழித்தல்‌ படுக்கையில்‌ படுத்தல்‌,
    அதிசாரம்‌ ஆகும்‌. என்பதாம்‌.
    128 கிரியை விருப்புக்‌ கடைப்பிடி இன்மை
    உரிதின்‌ இறப்பிவை ஐந்து.
    இதுவும்‌ அது.
    (ப-ரை கிரியை விருப்பு (இன்மை) – உபவாச காலச்‌ செயல்களில்‌
    ஆர்வம்‌ இல்லாமையும்‌, கடைப்பிடி (இன்மை! – மறந்து போதலும்‌, உரிதின்‌
  • உரிமையாக, இவை ஐந்து – இங்குக்‌ கூறப்பட்ட ஐந்தும்‌, இறப்பு
    அதிசாரமாகும்‌, – எ-று. ்‌
    (க-ரை! உபவாச நாள்‌ செயல்களில்‌ ஆர்வம்‌ இல்லாமை,
    நிகழ்வுகளில்‌ மறதி என இவ்வைந்தும்‌ அதிசாரங்களாகும்‌. என்பதாம்‌.
    (வி-ரை! இவ்‌ விரண்டு குறள்களிலும்‌ ஐந்து அதிசாரங்கள்‌
    கூறப்பட்டுள்ளன. நோக்கி – பார்த்து; உயிர்கள்‌ எவையேனும்‌
    உள்ளனவோ என்று உற்றுப்பார்த்துப்‌ பிறகு பொருளை எடுத்தல்‌
    வேண்டும்‌: வைத்தல்‌ வேண்டும்‌. அதே போன்று மலம்‌ சிறுநீர்‌ கழிக்கும்‌
    இடமும்‌ பார்க்கப்படவேண்டும்‌; படுக்கும்‌ பலகை போன்ற இடங்களும்‌
    பார்க்கப்பட வேண்டும்‌. இவ்வாறு உற்று நோக்காது செய்தல்‌
    அதிசாரமாகும்‌. துடையாது – துடைத்தல்‌ செய்யாது: பொருளை எடுக்கும்‌
    முன்னும்‌ வைக்கும்‌ முன்னும்‌ மெல்லிய துணி கொண்டு துடைக்க
    வேண்டும்‌. மலம்‌ சிறுநீர்‌ கழிக்கும்‌ இடமும்‌ படுக்கையும்‌ அதேபோன்று
    செய்யப்படவேண்டும்‌.
    உபவாசநாளில்‌ அறக்‌ காரியங்களில்‌ ஆர்வம்‌ குறைதல்‌ கூடாது.
    கடனே என்று செய்தல்‌ கூடாது. காரியங்களை மறத்தலும்‌ கூடாது. இந்த
    அதிசாரங்கள்‌ பசி களைப்பு முதலான காரணங்களால்‌ வராமல்‌ பார்த்துக்‌
    கொள்ள வேண்டும்‌ என்பதாம்‌.
    அருங்கலச்செப்பு 148
    போசத உபவாசம இரண்டாவது சிக்ஷா விரதம்‌.
    தேசாவகாகுக விரதம்‌
    129 தேசம்‌ வரைந்தொழுகல்‌ கால வரையறையில்‌
    தேசாவ காசிக மென்‌.
    இது தேசாவகாசிக விரத இலக்கணம்‌ கூறுகிறது.
    (ப-ரை கால வரையறையில்‌ – கால அளவிட்டு, தேசம்‌ – இந்த இடம்‌
    மட்டும்‌ என, வரைந்து – எல்லைச்சுருக்கி, ஒழுகல்‌ – வாழ்தல்‌, தேசாவகாசிகம்‌
  • விரதம்‌, எனல்‌ – எனக்கூறப்பெறும்‌. எ -று.
    (க-ரை கால அளவிட்டு இட எல்லைக்கூறி ஒழுகுதல்‌ தேசாவகாசிகம்‌
    எனப்படும்‌ என்பதாம்‌.
    (வி-ரை! தான்‌ ஏற்கெனவே வகுத்துக்கொண்ட திசை (திக்கு)
    விரதத்துக்குள்‌ இடம்‌ சுருக்கி கால அளவிட்டு ஒழுகுதல்‌ இங்குத்‌ கூறப்பட்டுள்ளது திசை விரதம்‌ வாழ்நாள்‌ முழுதும்‌ ஆகும்‌. நாள்‌ தோறும்‌
    அந்த எல்லைக்குள்‌ செலவு (போக்குவரத்து! இல்லை. அதனால்‌ நாள்‌
    வாழ்க்கையில்‌ அந்த எல்லையைச்‌ சுருக்கி ஒழுகுதல்‌ தேசாவகாசிகம்‌.
    130 மனைச்‌ சேரி ஊர்புலம்‌ ஆறடவி காதம்‌
    இனைய இடம்‌ வரைதல்‌ எண்‌.
    இது அதன்‌ எல்லை கூறுகிறது.
    (ப-ரை மனை – வீடு, சேரி – சேரி, ஊர்‌ – ஊர்‌, புலம்‌ – நிலம்‌, ஆறு –
    நதி, அடவி – காடு, காதம்‌- தூரம்‌, இனைய – இவை போல, இடம்‌ – இடத்தை,
    வரைதல்‌ – வரையறுத்தல்‌, எனல்‌ – எனப்படும்‌. ௭ – று.
    (க-ரை! தேசாவகாசிகத்திற்கு வீடு முதலானவற்றை இட எல்லையாகக்‌
    குறிக்கப்படும்‌ என்பதாம்‌.
    (வி-ரை இன்று இந்த வீடு வரை, சேரிவரை, ஊர்வரை, நிலம்‌ வரை, நதிவரை, காடுவரை, இத்தனை தூரம்‌ வரை செல்லுவேன்‌ என எல்லை வரை அறுத்தலாம்‌. எல்லைக்கு அடையாளமாக இவை குறிக்கப்படும்‌ என்பதுதாம்‌.
    அருங்கலச்செப்பு 149
    131 ஆண்டொடு நாள்திங்‌ களித்தனை என்றுய்த்தல்‌
    காண்தகு கால மதற்கு.
    இது அதற்கு கால எல்லை கூறுகிறது.
    (ப-ரை ஆண்டொடு – ஆண்டுடன்‌, நாள்‌ – நாளும்‌, திங்கள்‌ – மாதமும்‌,
    இத்தனை என்று – இத்தனை என்று, உய்த்தல்‌ – நடத்தல்‌, அதற்கு – அந்த
    தேசாவகாசிகத்திற்கு, காண்தகு – காணப்பட்ட, காலம்‌ – கால மாகும்‌,- எ-று.
    (க-ரை ஆண்டு முதலாகக்‌ கூறப்பட்டவை தேசாவகாசிகத்திற்கு கால
    எல்லை என்பதாம்‌.
    (வி-ரை முன்‌ குறளில்‌ இட எல்லை இன்ன எனக்‌ கூறினார்‌. இங்குக்‌
    கால எல்லை இத்தனை எனக்‌ கூறினார்‌. இத்தனை ஆண்டு, இத்தனை நாள்‌,
    இத்தனை திங்கள்‌ வரை செல்வேன்‌ எனக்‌ காலம்‌ வரையறுத்தல்‌ வேண்டும்‌.
    திக்கு விரதம்‌ வாழ்நாள்‌ முழுதும்‌ ஆகும்‌. தேசாவகாசிகம்‌ இத்தனை எனக்‌
    காலம்‌ குறிப்பதால்‌ நியம விரதமாகும்‌.
    192 எல்லைப்‌ புறத்தமைந்த பாவமீண்‌ டாமையின்‌
    புல்லுக நாளும்‌ புரிந்து.
    இது அதன்‌ பெருமை கூறுகிறது.
    (ப-றை எல்லைப்‌ புறத்து – வகுத்துக்‌ கொண்ட எல்லைக்கு வெளியே,
    அமைந்த – உள்ள, பாபம்‌ – பாபங்கள்‌, ஈண்டாமையின்‌ – தன்னை வந்து
    சேராமையால்‌, புரிந்து – விரும்பி, நாளும்‌ – நாள்தோறும்‌ புல்லுக – பொருந்த
    வேண்டும்‌,- எ-று.
    (க-ரை! தான்‌ வகுத்துக்‌ கொண்ட இட, கால எல்லைகளுக்கு வெளியே
    நடைபெறும்‌ பாபங்கள்‌ தன்னை வந்து சேராமையால்‌, இந்த விரதத்தை
    நாள்தோறும்‌ விரும்பிப்‌ பொருந்த வேண்டும்‌ என்பதாம்‌.
    (வி-ரை! எல்லைக்குப்‌ புறத்தே இந்த விரதம்‌ மகாவிரதத்துக்கு
    ஒப்பானது என்பதாம்‌. 85 – ம்‌ குறளுக்குக்‌ கூறிய விரிவுரையை இங்கும்‌
    பொருத்திக்‌ கொள்ளலாம்‌.
    அருங்கலச்செப்பு 150
    133 கூறல்‌ கொணருதல்‌ ஏவல்‌ உருக்காட்டல்‌
    1பாதொன்றும்‌ விட்டெறிதல்‌ கேடு.
    இது அதற்கு அதிசாரம்‌ கூறுகிறது.
    (ப-ரை கூறல்‌ – கூறுதலும்‌, கொணருதல்‌ – கொண்டுவரச்‌
    செய்தலும்‌, ஏவல்‌ – பிறரை ஏவுதலும்‌, உருக்காட்டல்‌ – தன்‌ உருவைக்‌
    காட்டுதலும்‌, யாதொன்றும்‌ – ஏதேனும்‌ ஒன்றை, விட்டெறிதல்‌ – எறிதலும்‌,
    கேடு – தேசாவகாசிகத்திற்கு அதிசாரம்‌ ஆகும்‌. – எ -று.
    (க-ரை வகுத்துக்‌ கொண்ட எல்லைக்குள்‌ தான்‌ இருந்து கொண்டு
    வெளியில்‌ இருப்போருக்குக்‌ கூறுதலும்‌ பொருளைக்‌ கொண்டு வரச்‌
    செய்தலும்‌, பிறரை ஏலிப்‌ பெறுதலும்‌, தன்‌ உருவைக்‌ காட்டி முடித்தலும்‌,
    ஏதேனும்‌ பொருளை எறிந்து செய்வித்துக்‌ கொள்ளளும்‌ என இவ்வைந்தும்‌
    அதிசாரங்களாம்‌.
    (வி-ரை! விரதம்‌ ஏற்பதின்‌ நோக்கம்‌ ஆசை முதலானவற்றைக்‌
    கட்டுப்படுத்தலே ஆகும்‌. எங்கு அக்‌ கட்டுப்பாடு இல்லையோ அங்கு
    விரதத்தைக்‌ காப்பாற்ற முடியாது – பல குறைகள்‌ வந்து சேரும்‌. அந்தக்‌
    குறைபாடுகளே அதிசாரம்‌ எனப்படுகின்றன. ஆசை முதலான காரணமாக என்னென்ன குறைபாடுகள்‌ தேசாவகாசிக விரதத்தில்‌ நிகழக்கூடாது என்று இங்குக்‌ காட்டப்பட்டுள்ளன. விரதப்படி தான்‌ எல்லையைத்‌ தாண்ட. வில்லை என்றாலும்‌ விரும்பியதை வேறு வழிகளில்‌ பெற முயற்சிப்பதால்‌ இங்கு ஆசை முதலானவை தீவிரம்‌ பெற்றன வாகின்றன. அதனால்‌ பாபபந்தமே வரும்‌; விரதத்தில்‌ பயன்‌ இராது.
    இது மூன்றாவது சிக்ஷ£விரதம்‌.
    734 உண்டி மருந்தோடு உறையுள்‌ உபகரணம்‌
    கொண்டுய்த்தல்‌ நான்காம்‌ வதம்‌.
    அருங்கலச்டசப்பு 151
    இது அதிதி சம்விபாகத்தின்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
    (பரை உண்டி – உணவும்‌, மருந்தோடு – மருந்தும்‌, உறையுள்‌ –
    ஆவாசமும்‌, உபகரணம்‌ – உபகரணங்களும்‌, உய்த்தல்‌ – கொடுத்தல்‌,
    நான்காம்‌ – நான்காவதாகச்‌ சொல்லப்பட்ட, வதம்‌ – அதிதி சம்விபாக விரதம்‌ ஆகும்‌.
    (க-ரை உணவு, மருந்து, ஆவாசம்‌, உபகரணம்‌ இந்நான்கையும்‌
    தானமாகக்‌ கொடுத்தல்‌ அதிதி சம்விபாக விரதம்‌ எனப்படும்‌.
    (வி-ரை! அதிதி – திதி நாள்‌) இல்லாதவர்‌. அதாவது நாள்‌ குறிப்பிட்டு
    வராதவர்‌. எனவே துறவியராயிற்று. அவரே சரியா மார்கமாக வருகின்றவர்‌.
    ஸம்‌ விபாகம்‌ – நல்‌ பங்கிடுதல்‌. எனவே தானமாயிற்று. துறவியருக்கு தானம்‌
    தருதல்‌ அதிதி ஸம்‌ விபாகம்‌. இதனை ‘வையாவிருத்தியம்‌’ என்பார்‌ ஆசாரியர்‌
    சமந்தபத்திரர்‌. இந்நூலுடையாரும்‌ அதே சொல்லை ஆளுகிறார்‌ அடுத்த
    குற்ளில்‌.
    135 தானம்‌ செயல்வையா வச்சம்‌ அறம்‌ நோக்கி
    மானமில்‌ மாதவர்க்கு நற்கு.
    இது விரதத்தின்‌ பெயர்‌ கூறுகிறது.
    (ப-ரை மானமில்‌ – செருக்கு இல்லாத, மாதவர்க்கு – பெருமையுடைய
    தவத்தையுடையவர்களுக்கு, அறம்‌ நோக்கி – அறச்செயலாகக்‌ கருதி, நற்கு
  • விதிமுறையுடன்‌ நன்றாக, தானம்‌ செயல்‌ – தானம்‌ தருதல்‌, வையாவச்சம்‌ –
    வையாவிருத்தியம்‌ ஆகும்‌, – எ -று.
    (௧க-ரை! செருக்கு இல்லாத பெருமையுடைய தவத்தையுடையவருக்கு
    அறச்‌ செயலாகக்‌ கருதி விதிமுறையுடன்‌ தானம்‌ செய்தல்‌ வையாவச்சம்‌
    என்பதாம்‌.
    (வி-ரை! வையாவச்சம்‌ எனில்‌ துன்பம்‌ நீக்குதல்‌ என்பது பொருள்‌.
    இந்தச்‌ சொல்‌ இங்கே தானத்தைக்‌ குறித்து நின்றது. ‘தானச்‌ செயல்‌’ என்று
    ஆசிரியரே ஆண்டுள்ளார்‌. அதிதி சம்விபாகம்‌’ என்ற சொல்லைக்‌ காட்டிலும்‌
    இச்‌ சொல்‌ ஆழமும்‌ அகலமும்‌ உடையதாகக்‌ கருதப்படுகிறது. நால்வகை
    தாளம்‌ மட்டுமே அதிதி சம்விபாகத்தில்‌ அடக்கப்படுகிறது. ஆனால்‌,

வையாவச்சத்தில்‌, தானத்தோடு, துறவியருக்குச்‌ செய்யப்படும்‌ சேவை,

  1. ரத்தின கரண்டகம்‌, 4 / 2!
    அருங்கலச்செப்பு ட ட 182
    பணிவிடை முதலியனவும்‌ அடங்குகின்றன. என்பர்‌. வையாவச்சம்‌ – பாகதச்‌
    சொல்‌, அறம்‌ நோக்கி – அறமாக நோக்கி. தானம்‌ முதலான செய்தல்‌ ஏதோ
    உலகியல்‌ செயல்‌ என்று கருதாமல்‌ அறமாகக்‌ கருதப்பட வேண்டும்‌
    என்பதாம்‌.
    136 இடர்களைதல்‌ உற்றது செய்தலும்‌ ஆங்கே
    படுமெனப்‌ பண்புடை யார்க்கு.
    இதுவும்‌ அது.
    (பொ-ள்‌ பண்புடையார்க்கு – அறப்‌ பண்புடையவர்களுக்கு, இடர்‌
    களைதல்‌ – ஏற்படும்‌ இடையூறுகளை நீக்குதலும்‌, உற்றது – நன்மை
    தருவனவற்றைச்‌, செய்தலும்‌, ஆங்கே படும்‌ – அதன்பாற்படும்‌, என –
    என்பதாம்‌, – எ-று,
    (க-ரை அறவழியில்‌ உள்ளார்க்கு வரும்‌ இடையூறுகளை நீக்குதலும்‌
    நன்மையானவற்றைச்‌ செய்தலும்‌ வையாவச்சமாகும்‌ என்பதாம்‌
    (வி-ரை! பண்புடையார்‌ எனப்‌ பொதுப்படச்‌ சொன்னமையால்‌
    அறவாழ்வில்‌ உள்ள சிராவகர்‌, துறவியர்களைக்‌ கொள்ள வேண்டும்‌.
    ஏனெனில்‌ தானம்‌ முதலானவற்றுக்கு அவர்களே நல்பாத்திரமாக
    இருக்கின்றனர்‌. உற்றது – நன்மையானது. கை, கால்‌ பிடித்து விடுதல்‌ போன்ற வேறு உதவிகள்‌ நன்மை தருதலினால்‌ அவற்றையும்‌ செய்தல்‌ இதன்‌ பாற்படும்‌ என்பதாம்‌. ‘இரவாமை கோடியுறும்‌’ என்ற இடத்து உறுத்தல்‌ நன்மையானது என்ற பொருளில்‌ வந்துள்ளமை காண்க*. ரத்தின கரண்டகத்தாரும்‌ இக்‌ கருத்தினரே.
    வையாவச்சம்‌ ஒரு தபமாக எண்ணப்பட்டுள்ளது. தொண்டு செய்தல்‌ வழி முனிவர்களை அறவழியில்‌ நிலைப்படுத்துதல்‌ என்பது அது. முனி தருமத்தின்‌ பயிற்சியைப்‌ பெறவே சிக்ஷா விரதத்தில்‌ வையாவச்சம்‌ வைக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர்‌ உதவுதல்‌ அடிப்படையிலேயே நான்கு கூறுபடும்‌ முனி சங்கம்‌ அமைகிறது. சுய நலம்‌ இல்லாமல்‌ சேவை செய்தலே வையாவச்சமாகும்‌. ஏதேனும்‌ உலகச்‌ சுகம்‌ நோக்கிச்‌ செய்யப்படுவது அறமாகாது. அங்கு கர்ம நிர்ஜரை ஆகாது.

வையாவச்சத்தின்‌ விளைவு கர்ம நிர்ஜரையும்‌ ஆகும்‌.
1 ரத்தின கரண்டக உரை& 995. ௩ 4799. ஓ. திருக்குறள்‌, 1061
அருங்கலச்செப்பு 153
137 உத்தமற்கு ஒன்பது புண்ணியத்தால்‌ ஈவது
உத்தம தானம்‌ எனல்‌.
இது உத்தம தானம்‌ தரும்‌ முறை கூறுகிறது.
(ப-ரை உத்தமற்கு – நற்காட்சியுடைய முனிவர்களுக்கு, ஒன்பது
புண்ணியத்தால்‌ – ஒன்பது கூறுபடும்‌. புண்ணியத்திற்கு ஏதுவான, பக்தியோடு,
ஈவது – தருதல்‌, உத்தம தானம்‌ – உயர்ந்த தானம்‌, எனல்‌ – எனப்படும்‌.
க-ரை நவதாபக்தியோடு முனிவர்களுக்குக்‌ கொடுக்கப்படுவது
உயர்ந்த தானம்‌ ஆகும்‌ என்பதாம்‌.
(வி-ரை உத்தமன்‌ என்றதனால்‌ நற்காட்சியுடைய முனி என்பதாயிற்று,
எல்லா இம்சைகளிலிருந்து விலகி உயர்ந்த குணங்களோடு விளங்குவதால்‌
முனியை உத்தமன்‌ என்றார்‌. நவ புண்ணியம்‌: 1 எதிர்கொள்ளல்‌, 2 உயர்ந்த
இடத்தில்‌ அமர்த்தல்‌, 3 திருவடிகள்‌ கழுவுதல்‌, 4 அர்ச்சித்தல்‌, 5 வணங்குதல்‌,
6 மனத்‌ தூய்மை, 7 சொல்‌ தூய்மை, 8 உடல்‌ தூய்மை, 9 உணவு தூய்மை
என்பனவாம்‌.
எதிர்கொளல்‌ இடம்‌ நனி காட்டல்‌ கால்கழீஇ
அதிர்பட அருச்சனை அடியின்‌ வீழ்தரல்‌
மதுரநன்‌ மொழியொடு மனமெய்‌ தூயராய்‌
உதிர்க நம்‌ வினை என உண்டி ஏந்தினார்‌
என வரும்‌ பாடலும்‌ காண்க!
தானம்‌ கொடுப்பார்‌ ஏழு குணங்களோடு கூடியவராக இருத்தல்‌
வேண்டும்‌. 1 சிரத்தை, 2 மகிழ்ச்சி, 3 பக்தி, 4 விவேகம்‌, 5 லோபமின்மை, 6
பொறுமை, 7 உண்மை. இவை ஏழும்‌ உடையவராக இருத்தல்‌ வேண்டும்‌
தானம்‌ கொடுப்பவர்‌. ஏற்போன்‌, ஈவோன்‌, ஈயும்‌ முறைமை இம்மூன்றாலும்‌
தானச்‌ சிறப்பு அமையும்‌.
138 உத்தம தானம்‌ தயாதானம்‌ தம்மளவில்‌
வைத்தொழியான்‌ செய்க உவந்து.

இது தானம்‌ செய்ய வேண்டும்‌ என்று கூறுகிறது.

  1. சீவக சிந்தாமனி மேற்கோள்‌ (1125)
    அருங்கலச்செப்பு 184.
    (ப-ரை உத்தம தானம்‌ – மேலே சுட்டிய உத்தம தானத்தையும்‌,
    தயாதானம்‌ – பிற உயிர்களிடம்‌ காட்டப்படும்‌ கருணை தானத்தையும்‌,
    தம்மளவில்‌ – தம்‌ தம்‌ ஆற்றலை, வைத்து – நினைவில்‌ வைத்து, ஒழியான்‌ –
    நீங்காது, உவந்து – மன மகிழ்வுடன்‌, செய்க – செய்தல்‌ வேண்டும்‌. – எ-று.
    (க-ரை உத்தம தானத்தையும்‌ கருணை தானத்தையும்‌ தன்‌ ஆற்றலுக்கு
    இயைந்தவாறு மகிழ்ச்சியுடன்‌ விடாது செய்தல்‌ வேண்டும்‌ என்பதாம்‌.
    (வி-றை உத்தம தானம்‌ – ஸத்பாத்திரங்களுக்குத்‌ தரப்படும்‌ தானமாகும்‌.
    தயாதானம்‌ – பாத்திரம்‌ அல்லாத பிறருக்கு / பிற உயிர்களுக்குச்‌
    செய்யப்படும்‌ தான மாகும்‌. இது அருள்‌ மனத்தானாகி செய்தலாம்‌. பாத்திரம்‌
    அல்லாதார்க்குத்‌ தரப்படும்‌ உதவியைத்‌ தானம்‌ என்றது உபசாரம்‌. இரண்டு
    வகையான தானங்களையும்‌ விட்டு நீங்காது செய்ய வேண்டும்‌ என இக்‌
    குறளில்‌ கூறியுள்ளார்‌, தானம்‌ செய்யும்‌ போது மகிழ்ச்சியோடு செய்தல்‌ வேண்டும்‌.
    139 மனைவாழ்க்கை யால்‌ வந்த பாவம்‌ துடைத்தல்‌
    மனைநீத்தார்க்கு ஈயும்‌ கொடை.
    இது உத்தம தானத்தின்‌ பயன்‌ கூறுகிறது.
    (ப-ரை மளைநீத்தார்க்கு – மனை முதலாள பற்றுகளை விட்டு நீங்கிய
    முனிவர்களுக்கு, ஈயும்‌ – தரப்படும்‌, கொடை – தானம்‌, மனை வாழ்க்கையால்‌ – இல்வாழ்வில்‌ இருந்து செய்யும்‌ தொழில்‌ முதலானவற்றால்‌, வந்த பாவம்‌ –
    வந்த சேர்ந்த பாபங்களை, துடைத்தல்‌ – அழித்தலைச்‌ செய்யும்‌, எ – று.
    (க-ரை முனிவர்களுக்குத்‌ தரப்படும்‌ தானம்‌ இல்வாழ்வில்‌ வரும்‌ பாபங்களை அழியச்‌ செய்கிறது என்பதாம்‌.
    (வி-ரை இம்சையோடு கூடிய வாழ்வு இல்வாழ்வார்‌ வாழ்வாகும்‌. எரித்தல்‌ முதலான வீட்டுச்‌ செயல்களும்‌, உழவு முதலான வெளித்‌ தொழில்களும்‌ இல்‌ வாழ்வாரால்‌ செய்யப்படுகின்றன. இங்கெல்லாம்‌ இம்சை முதலான பாபங்கள்‌ இருப்பதனை எல்லோரும்‌ அறிவர்‌. இப்படிப்‌ பாபங்களைக்‌ கட்டிக்‌ கொண்டாலும்‌, முனி முதலான துறவியர்களுக்கு இல்வாழ்வார்‌ மிகுந்த பாவனையுடன்‌ தானம்‌ வழங்குகின்றனர்‌. அதனால்‌
    அருங்கலச்செப்பு 155
    வந்த புண்ணிய பந்தம்‌ அவரைச்‌ சேர்ந்த பாபங்களை விரைந்து
    அழிக்கிறது. என்பதாம்‌.
    140 தான விடயத்தில்‌ தடுமாற்றம்‌ போந்துணையும்‌
    ஈனமில்‌ இன்பக்‌ கடல்‌.
    இதுவும்‌ அது.
    (ப-ரை/ தடுமாற்றம்‌ – பிறவி, போந்துணையும்‌ – நீங்கும்‌ அளவு
    வரையில்‌, தானவிடயத்தில்‌ – தான காரணத்தால்‌, ஈனமில்‌ – குறைவு
    இல்லாத, கடல்‌ இன்பம்‌ – மிகுதியான இன்பம்‌ ஆகும்‌ .- எ-று.
    (க-ரை! தானத்தினால்‌ பிறவி நீங்கி மோக்ஷம்‌ அடையும்‌ வரை
    மிகுதியான இன்பம்‌ வந்தடையும்‌ என்பதாம்‌.
    (வி-ரை! தானத்தின்‌ பயன்‌ புண்ணிய பந்தமாகும்‌.
    அப்புண்ணியத்தால்‌ தேவப்பிறவி, போக பூமிப்பிறவி கிடைப்பதால்‌ கடல்‌
    இன்பம்‌ என்றார்‌. விடயம்‌ – காரணம்‌. விடயத்தில்‌ – இல்‌ காரணப்பொருளில்‌
    வந்த உருபு மயக்கம்‌. இன்பக்‌ கடல்‌ – கடல்‌ இன்பம்‌ என்று மாற்றிக்‌ கொள்க.
    கடல்‌ – மிகுதி.

(

எடுத்துக்காட்டுகள்‌ ]
141 சிரிசேன்‌ இடபமா சேனையே பன்றி
உரைகோடல்‌ கொண்டை உரை…
இது தானத்தில்‌ சிறந்து நின்றாரைக்‌ கூறுகிறது.

(ப-ரை! சிரிசேன்‌ – ஆஹார தானத்திற்கு ஸ்ரீஷேண அரசனும்‌,
இடபமாசேனை – ஓளஷத தானத்திற்கு விரஷபசேனையும்‌, பன்றி –
ஆவாஸ தானத்திற்குப்‌ பன்றியும்‌, உரைகோடல்‌ – நூல்‌ தானத்திற்கு,
கொண்டை – கெளண்டேசரும்‌, உரை – எடுத்துக்காட்டப்‌ பெறுவர்‌ – ௪- று.
(க-ரை சிரிசேனன்‌, விருஷபசேனை, பன்றி, கெளண்டேசர்‌ வரலாறு
முறையே ஆஹார, ஒளஷத, ஆவாச, சாஸ்த்திர தானங்களுக்கு
எடுத்துக்காட்டுகளாம்‌. என்பது.
அருங்கலச்செப்பு 156
(வி-ரை! நால்வகை தானத்தில்‌ சிறந்து நின்ற நால்வருடைய வரலாறு
இக்குறளில்‌ நிளைவூட்டப்பட்டுள்ளது.
சிரிசேனர்‌ வரலாறு
மலைய நாட்டில்‌ இரத்தின சஞ்சயபுர நகரில்‌ ஸ்ரீ ஷேணார்‌ அரசராகத்‌
இருந்தார்‌. அவருக்கு சிம்ம நந்திதை, அறிந்திதை என இரண்டு
மனைவியரும்‌, இந்திரன்‌, உபேந்திரன்‌ என இரண்டு மகன்களும்‌ இருந்தனர்‌.
அந்நகரில்‌ ஸாத்யகி என்ற பிராமணன்‌ தன்‌ மனைவி ஜம்பு, மகள்‌
சத்தியபாமையுடன்‌ வசித்து வந்தான்‌.
பாடலிபுத்திரத்தில்‌ ருத்திரபட்டன்‌ என்ற பிராமணன்‌ பிள்ளைகள்‌
சிலருக்கு வேத பாடம்‌ கற்பித்துக்‌ கொண்டு இருந்தான்‌. அவனுடைய
தாசியின்‌ மகன்‌ கபிலன்‌ என்பவன்‌ வேதங்களை மறைவாகக்‌ கேட்டிருந்து
மிகத்‌ தேர்ச்சிப்‌ பெற்றான்‌. அதை அறிந்த ருத்ரபட்டன்‌ வெகுண்டு அவனை
நகரில்‌ இருந்து துரத்தி விட்டான்‌.
அவனோ பூணூல்‌ அணிந்து கொண்டு பிராமண கோலத்துடன்‌
இரத்தின சஞ்சய புரம்‌ அடைந்தான்‌. அங்கே அவனுடைய புலமையையும்‌
அழகையும்‌ கண்ட ஸாத்யகி அவனைப்‌ பிராமணன்‌ என்றே நினைத்து
அவனுக்குத்‌ தன்‌ மகளைக்‌ கொடுத்துத்‌ தன்‌ வீட்டிலேய வைத்துக்‌
கொண்டான்‌. ஆனால்‌, சத்தியயாமையோ ரதி காலத்தில்‌ அவனுடைய அசுப
செயல்களைப்‌ பார்த்து அவன்‌ பிராமணனாக இருக்கமாட்டான்‌ என்று கருதி
வருந்தி இருந்தாள்‌.
இப்படி இருக்க ருத்திரபட்டன்‌ தீர்த்த யாத்திரை செய்து கொண்டு இந்த நகருக்கு வந்தான்‌. அவனைக்‌ கண்ட கபிலன்‌ வணங்கித்‌ தன்‌ வீட்டுக்கு
அழைத்து வந்து தன்‌ தகப்பனார்‌ என்று அறிமூகப்படுத்தினான்‌. சில நாள்‌ அவனைத்தன்‌ வீட்டிலேயே தங்க வைத்திருந்தான்‌. அப்போது சத்தியயாமை அவனுக்குச்‌ சிறந்த உணவு அளித்து அன்பளிப்பாக பொன்‌ முதலியன கொடுத்து, ஐயா! இந்த கபிலர்‌ உன்‌ மகனா இல்லையா? அவரிடம்‌ உம்‌ ஒழுக்கங்கள்‌ ஏதும்‌ இல்லையே; எனக்கு உண்மையைச்‌ சொல்ல வேண்டும்‌’ என்றாள்‌. ருத்திரபட்டன்‌ அவளிடம்‌ இரக்கம்‌ கொண்டு அவன்‌ தன்‌ தாசியின்‌ மகன்‌ என்பதை வெளியிட்டான்‌. இனி அவனோடு சேரக்கூடாது என்று கருதி
அருங்கலச்செப்பு 157
அரசி சிம்ம நந்திதையை அடைக்கலமாக அடைந்தாள்‌. அரசியும்‌ அவளைத்‌
தன்‌ மகள்‌ போல காப்பாற்றி வந்தாள்‌.
அப்போது, ஒரு நாள்‌ அங்கு வந்த அர்க்ககீர்த்தி அமிதகதி என்ற இரு ,
சாரண முனிவர்களுக்கு அரசனும்‌ அரசியும்‌ பக்தியுடன்‌ நவதா விதிப்படி
ஆஹார தானம்‌ தந்தனர்‌. அதனால்‌ அவர்கள்‌ போக பூமியில்‌ சென்று
பிறந்தனர்‌. சத்தியயாமையும்‌ அந்த ஆஹார தானத்திற்கு அனுமோதனை
செய்ததால்‌ அதே போக பூமியில்‌ சென்று பிறந்தாள்‌. சிரிசேனர்‌ ஆஹார
தானச்‌ சிறப்பால்‌ பரம்பரையில்‌ சாந்தி நாத தீர்த்தங்கரராகி மோக்ஷம்‌
அடைந்தார்‌. இது ஆஹார தானத்தின்‌ பயனாகும்‌.
| இடபயஷேனை வரலஈறநு ]
ஜனபத நாட்டில்‌ காவேரி நகரில்‌ உத்ரசேனன்‌ அரசனாக இருந்தான்‌.
அந்நகரில்‌ தனபதி செட்டி தன்‌ மனைவி தனசிரி மகள்‌ விரஷபலேல்ன
(இடபஸேனையுடன்‌ வாழ்ந்து வந்தான்‌; விரஷபசேனை தோழி ரூபவதி.

ஒருநாள்‌ விரஷபசேனை குளித்த நீரில்‌ ஒரு நோயுள்ள நாய்‌ விழுந்து
புரள அதன்‌ நோய்‌ நீங்கிவிட்டது. இதனைக்‌ கண்ட தோழி மீண்டும்‌ ஆய
எண்ணி அந்த நீரை பன்னிரண்டு ஆண்டுகளாக கண்‌ தெரியாமல்‌ இருந்த
தன்‌ தாயாருடைய கண்களில்‌ விட அவளும்‌ பார்வை பெற்றாள்‌. அவள்‌
அன்று முதல்‌ அந்த நீரைக்‌ கொண்டு பலருடைய நோய்களைத்‌ தீர்ததாள்‌.
அதனால்‌ அவள்‌ பெயர்‌ நகரமெங்கும்‌ பரவியது.
ஒரு சமயம்‌ அரசன்‌ தன்‌ பகைவனான மேக பிங்களன்‌ என்பவனை
வென்றுவர அமைச்சன்‌ பிங்களன்‌ என்பவனை அனுப்பினான்‌. அவன்‌
அந்தப்‌ பகைவன்‌ நாட்டுக்குச்‌ சென்றதும்‌ நச்சு காய்ச்சலால்‌ தாக்கப்பட்டு
போரிடாது நாடு திரும்பினான்‌. அவனும்‌ ரூபவதி கொடுத்த நீரினால்‌ நலம்‌”
அடைந்தான்‌. பிறகு அரசன்‌ தானே போருக்குச்‌ சென்றான்‌. அவனும்‌
நோய்வாய்ப்பட்டு திரும்ப வேண்டியதாயிற்று. அப்போது ரூபவதி நோய்‌
தீர்க்கும்‌ செய்தி அறிந்து அரசன்‌ அவளை அந்த நீர்‌ கொண்டுவர ஆணை
இட்டான்‌. “மகள்‌ குளித்த நீரை அரசன்‌ தலையில்‌ தெளிக்கலாமா”
எனச்செட்டியிடம்‌ கோட்டாள்‌. ‘பாதகம்‌ இல்லை. செய்‌ அரசன்‌ கேட்டால்‌
உண்மையைச்‌ சொல்லி விடலாம்‌’ என்றான்‌. பிறகு அவளும்‌ நீரைத்‌ தெளிக்க
அருங்கலச்செப்பு 758
அரசன்‌ நலம்‌ பெற்றான்‌. பிறகு அரசன்‌ விவரம்‌ கேட்க ரூபவதியும்‌
விரஷபசேனையின்‌ சிறப்பைக்‌ கூறினாள்‌. அரசன்‌ பிறகு செட்டியை
வரவழித்து விரஷபசேனையைத்‌ தனக்கு மணம்‌ முடித்துத்‌ தரவேண்டும்‌
என்றான்‌. அதற்கு செட்டி, ஒரு ஆட்டானிக சமயத்தில்‌ ஜிநபகவானுக்கு
ஆராதனை அபிஷேகம்‌ செய்து கூட்டில்‌ அடைக்கப்பட்ட
பறவைகளையும்‌, சிறையில்‌ அடைக்கப்பட்ட கைதிகளையும்‌
விடுவித்தால்‌ தன்‌ பெண்ணைத்‌ தருவதாகச்‌ சொன்னான்‌. அரசனும்‌
அப்படியே செய்தான்‌. செட்டியும்‌ மகளை விதிப்படி மணம்‌ செய்து
கொடுத்தான்‌.
கைதிகளை விடுதலை செய்த போது வாரணாசி நகர அரசன்‌
பிரதிவி சந்திரன்‌ விடுதலை பெறாமல்‌ இருந்தான்‌. அதனால்‌ வருந்திய
அவன்‌ மனைவி நாராயணதத்தை என்பவள்‌ தன்‌ கணவனை
விடுவிக்கும்‌ உபாயங்களை யோசித்தாள்‌. தன்‌ நகரில்‌ விரஷபசேனை
பெயரால்‌ ஓர்‌ அன்னசாலை நடத்தினாள்‌. அதனைக்‌ கேள்விப்பட்ட
ரூபவதி அரசியிடம்‌, ‘எனக்குத்‌ தெரியாது எப்போது அன்னசாலை
கட்டினாய்‌?’ என்று கேட்க, தனக்கு ஏதும்‌ தெரியாது. வேறுயாராவது
திறந்து இருக்கலாம்‌’ என்று கூறிவிட்டு அரசனிடம்‌ அதை விசாரிக்கச்‌
சொன்னாள்‌. அரசனும்‌ ஒற்றர்களைக்‌ கொண்டு ஆராய்ந்து உண்மை
அறிந்து உடனே பிரதிவிசந்திரனை விடுதலை செய்தான்‌. விடுதலை
அடைந்த அவன்‌ தான்‌ அந்த அரசனையும்‌ அரசியையும்‌ வணங்குவது
போல ஒரு படத்தை எழுதி அரசனிடம்‌ காட்டி வணங்கினான்‌. அதைக்‌
கண்ட அரசன்‌ மகிழ்ந்து அவனுக்குப்‌ பல பரிசுகளைக்‌ கொடுத்து அங்கு
நடந்தவற்றை மேகபிங்கனிடம்‌ கூறி விட்டுப்‌ போகச்‌ சொன்னான்‌.
அவனும்‌ அவ்வாறே செய்ய மேகபிங்களன்‌ பயந்து தானாக வந்து
அரசனை பணிந்தான்‌. அரசன்‌ மகிழ்ந்து தனக்கு வரும்‌ கொடைப்‌ பொருளில்‌ பாதியை மேகபிங்களனுக்கும்‌ பாதியை
விரஷபசேனைக்கும்‌ தருவதாகக்‌ கூறினான்‌.
ஒரு நாள்‌ தனக்குக்‌ கிடைத்த இரண்டு இரத்தினக்‌ கம்பளங்களில்‌
ஒன்றில்‌ மேகபிங்களன்‌ பெயரை எழுதி அவனிடமும்‌, மற்றொன்றை
விரஸலபசேனை பெயரை எழுதி அவளிடமும்‌ கொடுத்தான்‌, ஒரு முறை மேகபிங்களன்‌ மனைவி அந்த போர்வையைப்‌ போத்துக்‌ கொண்டு ரூபவதி வீட்டுக்கு வந்து விட்டுப்‌ போகும்‌ போது அங்கு இருந்‌
அருங்கலச்செப்பு 159
விரஷபசேனையினுடைய போர்வையைத்‌ தவறாக மாற்றி எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்‌. அதனை கவனியாது மேக
பிங்களன்‌ அதைப்‌ போர்த்துக்கொண்டு அரசனிடம்‌ வர, அரசன்‌
அதைப்பார்த்து ஐயம்‌ கொண்டு கோபம்‌ அடைந்து அவளைக்‌ கடலில்‌
தள்ளும்படி ஆணை இட்டான்‌. அரச காவலர்கள்‌ அவ்வாறே
செய்தனர்‌. இந்தத்‌ தொல்லை நீங்கினால்‌ நான்‌ தவம்‌ மேற்கொள்வேன்‌!
என நியமம்‌ செய்தாள்‌. அவ்வளவில்‌ அங்கு ஜல தேவதை தோன்றி
அவளை ஓர்‌ அரியணையில்‌ அமரச்‌ செய்து சிறப்பித்து வணங்கியது.
அவளுடைய விரதத்தின்‌ பயன்‌ இது. அதைக்‌ கேட்ட அரசன்‌ அங்கு
வந்து மன்னிக்கும்‌ படி அவளை வேண்டினான்‌.
அவள்‌ திரும்பி வரும்போது வழியில்‌ குணதரர்‌ என்னும்‌ அவதி
ஞானியைக்‌ கண்டு வணங்கி தன்‌ முன்‌ பிறவி பற்றிக்‌ கேட்டாள்‌.
அப்போது அவர்‌ தன்‌ அவதி ஞானத்தால்‌, ‘நீ முன்‌ பிறவியில்‌ ஒரு
பார்ப்பனப்‌ பெண்ணாகப்‌ பிறந்து ஒரு சத்திரத்தில்‌ பெருக்கும்‌ தொழில்‌
செய்தாய்‌. அப்போது அங்கு வீற்றிருந்த முனிதத்தர்‌ என்ற முனிவரை,
அவர்‌ பெருமை அறியாது, விலகிப்‌ போகும்படி கூறினாய்‌. தியானத்தில்‌
இருந்த அவர்‌ அதைக்‌ கவனிக்க வில்லை. அதனால்‌ கோபம்‌ கொண்டு,
நீ அவர்‌ தலைமீது குப்பைகளைக்‌ கொட்டிவிட்டுப்‌ போய்‌ விட்டாய்‌.
மறுநாள்‌ அங்கு வந்த அரசன்‌ அதனைக்‌ கண்டு அஞ்சி குப்பைகளை
விலக்கி முனிவரை வணங்கினான்‌. அதைக்‌ கண்ட நீ மிகவும்‌ பயந்து
அவரைப்‌ பல முறை வணங்கி பச்சாதாபம்‌ அடைந்து அவருக்கு
ஒளஷதம்‌ முதலியன கொடுத்து அவர்‌ தொல்லைகளைப்‌ போக்கினாய்‌.
அதனால்‌ நீ இந்தப்‌ பிறவியில்‌ ஸர்வ ஒளஷததித்தியுடைய உடலை
அடைந்தாய்‌’ என்றார்‌. அதனைக்‌ கேட்ட அவள்‌ விரக்தி அடைந்து ஜிந’
தீகைஷி ஏற்றாள்‌. ஒளஷத தானத்தின்‌ பயன்‌ இது.
( கெளண்டேசர்‌ வரலாறு]
குருமரை என்ற ஊரில்‌ கோவிந்தன்‌ என்ற இடையன்‌ இருந்தான்‌.
அவன்‌ மரப்‌ பொந்தில்‌ இருந்த ஆகமத்தைக்‌ கண்டு எடுத்துச்‌ சில நாள்‌
பூஜித்துப்‌ பின்‌ அங்கு வந்த பத்மநந்தி என்ற முனிவரிடம்‌ அதனைச்‌
சமர்ப்பித்தான்‌. அவர்‌ அதை காட்டுக்கு எடுத்துச்‌ சென்று

அருங்கலச்செப்பு . 160
முனிவர்களுடன்‌ வாசித்துவிட்டு அதை அம்மர பொந்திலேயே வைத்து
விட்டுச்‌ சென்றார்‌. மறுபடியும்‌ கோவிந்தன்‌ அதனைக்‌ கண்டு மிக்க
பக்தியுடன்‌ அதனை பூஜித்து வந்தான்‌. பின்‌ மரணம்‌ அடைந்து கிராம
கூடம்‌ என்னும்‌ ஊரில்‌ கெளண்டேசன்‌ என்ற ஒரு வைசியனாகப்‌
பிறந்தான்‌. அப்போது அங்கு வந்த பத்மநந்தி முனிவரைக்‌ கண்டு
ஜாதிஸ்மரணை அடைந்து, தீக்ஷை ஏற்று, மகா தபத்தினைச்‌ செய்து,
எல்லா ஆகமங்களிலும்‌ வல்லவரானார்‌. இது சாஸ்திர தானத்தின்‌
பயனாகும்‌.
பன்றியின்‌ வரலாறு
மாளவ நாட்டில்‌ கடக கிராமத்தில்‌ தேவிலன்‌ என்ற குயவனும்‌
தர்மிலன்‌ என்ற நாவிதனும்‌ சேர்ந்து ஒரு தர்மசாலை கட்டினர்‌. ஒரு நாள்‌
தேவிலன்‌ ஒரு ஜைன முனிவரை அங்கு தங்க வைத்தான்‌. நாவிதன்‌
ஒரு பரிவிராஜகனை அழைத்து வந்து வைத்து முனிவரை
வெளியேற்றிவிட்டான்‌. அவர்‌ வெளியில்‌ ஒரு மரத்தடியில்‌ தங்கி இரவு
முழுதும்‌ குளிரினாலும்‌ கொசுக்‌ கடியினாலும்‌ மிகவும்‌ தொல்லை
அடைந்தார்‌. மறுநாள்‌ அதை கண்ட தேவிலன்‌ கோபமுற்று நாவிதனோடு சண்டையிட்டு இருவரும்‌ மடிந்து குயவன்‌ ஒரு
பன்றியாகவும்‌, நாவிதன்‌ ஒரு புலியாகவும்‌ பிறந்தனர்‌. அப்போது புலியின்‌ குகையில்‌ வந்து தங்கிய குப்தர்‌, திரிகுப்தர்‌ என்ற இரணடு
முனிவர்களைக்‌ கண்டு ஜாதிஸ்மரணை அடைந்து அறம்‌ கேட்டு நியமம்‌ ஏற்றது. புலி மோப்பத்தினால்‌ மனிதர்‌ இருப்பதை அறிந்து அவரைத்‌ தின்ன பாய்ந்தது. உடனே பன்றி அதனை எதிர்த்து சண்டை இட்டது. முனிவரைக்‌ காக்கும்‌ பாவனையுடன்‌ சண்டை இட்டு மடிந்து செளதர்ம்‌ கல்பத்தில்ரித்தியுடைய தேவனாகப்‌ பிறந்தது. முனிவரைத்‌ தின்ன வந்த புலி இறந்து நரகத்தை அடைந்தது தன்‌ தீய பாவளையால்‌. ஆவாசதானத்தினால்‌ பன்றி பயனடைந்தது.
142 பசியதன்‌ மேல்வைத்தல்‌ மூடல்‌ மறைத்தல்‌ புரிவின்மை எஞ்சாமை கேடு,
அருங்கலச்செப்பு 16)
இது அதிசாரம்‌ கூறுகிறது.
(ப-ரை) பசியதன்‌ மேல்‌-பச்சை இலை மேல்‌, வைத்தல்‌-
சூடுபடுத்தப்பட்ட உணவை வைத்தல்‌, மூடல்‌-அவ்‌உணவை பச்சை
இலையால்‌ மூடுதல்‌, மறைத்தல்‌-உணவைத்‌ தராது ஒழிதல்‌, புரிவின்மை-
விருப்பம்‌ இல்லாது இருத்தல்‌, எஞ்சாமை-காலம்‌ கடந்து தருதல்‌, கேடு-
அதிசாரம்‌ ஆகும்‌, எ-று.
(க-ரை) பச்சை இலையில்‌ வைத்தல்‌, பச்சை இலையால்‌ மூடுதல்‌,
பொருளை கொடாது ஒழிதல்‌, விருப்பமின்றி கொடுத்தல்‌, காலம்‌ தவறி
கொடுத்தல்‌ இவை ஐந்தும்‌ அதிசாரம்‌ ஆகும்‌ என்பதாம்‌.
(வி-ரை) நான்கு வகை தானமும்‌ சேவையும்‌ கூறப்பட்டாலும்‌

  • அதிசாரம்‌ “ஆஹார தானத்தை முதன்மையாக வைத்துக்‌
    கூறப்பட்டுள்ளது. முனிவர்‌ ஓரிந்திரிய வதையையும்‌ தியாகம்‌ செய்தவர்‌.
    எனவே அவர்‌ நீர்‌, பழம்‌ முதலான உண்‌, பொருளை அப்படியே ஏற்க
    மாட்டார்‌. சூடு படுத்தப்பட்ட, உலர்ந்த பொருளையே ஏற்பார்‌ பச்சை
    இலை ஓரிந்திரியமாதலால்‌ அதில்‌ வைக்கப்படும்‌ பொருளையோ,
    அதனால்‌ மூடப்படும்‌ பொருளையோ அவர்‌ எடுக்கமாட்டார்‌. எனவே
    அப்படிச்‌ செய்வது அதிசாரம்‌ ஆகும்‌. மறைத்தல்‌-பொருளைக்‌
    கொடாது ஒழிதல்‌ எனப்‌ பொருள்‌ காணப்பட்டுள்ளது. ஏதேனும்‌
    காரணமாக பொருள்‌ கொடுக்கப்படாமல்‌ மறைக்கப்படலாம்‌ அல்லது
    பொருளின்‌ குற்றத்தை மறைத்தும்‌ கொடுக்கலாம்‌. இருவழியாகவும்‌
    இங்கே பொருள்‌ காணலாம்‌. மறைத்தல்‌ என்ற இடத்தில்‌ மறத்தல்‌
    இருந்தால்‌ இன்றும்‌ சிறப்பாக இருக்கும்‌. பொருளை கொடுப்பதற்கு
    மறந்து போதலும்‌ அதிசாரம்‌ என்று ரத்தின கரண்டக சிராவக ஆசாரம்‌
    கூறகிறது. புரிவு-விருப்பம்‌ அன்பு இல்லாமல்‌ கடனே என்று
    கொடுப்பதும்‌ தவறு. எஞ்சாமை-முழுமை: உணவு காலம்‌ முழுதும்‌
    தாண்டித்‌ தருதல்‌.
    143 தேவாதி தேவன்‌ திருவடிக்குப்‌ பூசனை
    ஓவாது செய்க உவந்து.
    அருங்கலச்செப்பு 162
    இது சிராவகன்‌ கடமை கூறகிறது.
    (ப-ரை! தேவாதி தேவன்‌-இந்திரன்‌ முதலான தேவர்களால்‌
    தொழப்படுகின்ற அருக பரமேட்டியது, திருவடிக்கு-திவ்விய பாதங்களுக்கு,
    ஓவாது-நாள்தோறும்‌ இடைவிடாது, உவந்து-மகிழ்ந்து, பூசனை-பூஜையை,
    செய்க-செய்தல்‌ வேண்டும்‌, எ-று.
    (வி-ரை நாள்‌ தோறும்‌ இல்லறத்தார்‌ அவசியம்‌ ஆற்ற வேண்டியன
    ஆறாகும்‌! அவற்றுள்‌ முதன்மையானது பூஜை ஆகும்‌. பூஜையில்‌ மூன்று
    கூறு உண்டு. அவை: பூஜைக்குரியவன்‌, பூஜிப்பவன்‌, பூஜை. போகங்களில்‌
    திளைத்துக்‌ கிடக்கின்ற தேவேந்திரன்‌ போன்றவர்களால்‌ பூஜிக்கப்படுகிற
    காமம்‌ முதலான குற்றங்கள்‌ இல்லாத வீதராக பகவான்‌ அருக பரமேட்டி
    பூஜைக்குரியவர்‌. அக்‌ குற்றங்களை ஓரளவு அழித்து உயரும்‌ பற்றற்ற
    முனிவர்‌, நல்ஞானத்தைத்‌ தரும்‌ உண்மையான ஜிந ஆகமம்‌ இவர்களும்‌
    பூஜைக்கு உரியவர்களே, வேறு யாரும்‌ பூஜைக்கு உரியவர்‌ அல்லர்‌.
    அவரைப்‌ பூஜிக்கும்‌ போது பூஜிப்போர்‌ உள்ளத்தே சுப பாவனை
    வெளிப்படுகிறது. அந்த சுப பாவனை காரணமாக புண்ணிய பந்தம்‌
    கட்டுகிறது. பாபவினையின்‌ அனுபாகம்‌ குறைகிறது, அழிகிறது. அதனால்‌
    சுகம்‌ வருகிறது துக்கம்‌ நீங்குகிறது. காம வாசனை முதலானவுடைய தேவ
    தேவியரைப்‌ பூஜிப்பதால்‌ சுப பாவனை தோன்றாது. மாறாக அசுப பாவனையே இருக்கும்‌. ஏனெனில்‌ அவர்களைப்‌ பூஜிப்பவர்‌ பொருளாசை
    முதலான உலகியல்‌ ஆசை காரணமாகவே பூஜிப்பதால்‌ அங்கே எப்படி சுப பாவனை தோன்ற முடியும்‌? மேலும்‌ இச்சிப்பதால்‌ மட்டுமே சுகம்‌ கிடைக்காது. சுகம்‌ புண்ணியத்தால்‌ விளைவது; இச்சிப்பதால்‌ வருவது அன்று.
    இப்படி பூஜைக்குரியவன்‌ குணங்களை அறிந்து மிகுந்த பக்தி ஈடுபாட்டுடன்‌ பூஜை செய்பவனே பூஜை செய்பவன்‌ ஆவான்‌. அந்தப்‌ பூஜையாலேயே துக்கம்‌ நீங்கும்‌ பயன்‌ விளையும்‌. உவந்து என்ற சொல்லால்‌ பூஜைக்கால மன நிலையைச்‌ சுட்டினார்‌. பூஜிக்கப்படும்‌ குணச்‌ சிறப்பினிடம்‌ தோன்றும்‌ உவகை அது. ‘ஓவாது’ என்பது எப்போதும்‌; இடைவிடாது எனும்‌ பொருளைத்‌ தந்தது. நாள்‌ பூஜையைத்‌ தானே செய்யவேண்டும்‌. வேறொருவர்‌

வழியாகச்‌ செய்வித்தல்‌ கூடாது. “ஏ! பகவன்‌! எப்படி நீ சாந்தியை அடைந்து

  1. தேவபூஜை 2. குர சேவை 3. சுவாத்தியாயம்‌ 4, ஸம்யமம்‌ 5, தவம்‌ 6. தானம்‌.
    அருங்கலச்செப்பு ்‌ 764
    விட்டாயோ அதே டோல சாந்தியை நானும்‌ அடைய வேண்டும்‌. பொன்னோ,
    பொருளோ இந்திராதி பதவிகளோ விரும்பேன்‌. அவற்றை அனந்தமுறை
    அடைந்து அனுபவித்துள்ளேன்‌”. எனும்‌ சுப பாவனை கொண்டே
    நற்காட்சியுடையவன்‌ பூஜை செய்கிறான்‌. அவனுக்கே புண்ணிய பந்தம்‌
    அமைகிறது.
    144 தெய்வச்‌ சிறப்பின்‌ பெருமையைச்‌ சாற்றுமேல்‌
    மையுறு தேரை உரை
    இது பூஜையின்‌ பெருமை கூறகிறது.
    (ய-றை! தெய்வச்சிறப்பின்‌- அருக பரமேட்டிக்குச்‌ செய்யப்படும்‌
    பூசையின்‌, பெருமையை-சிறப்பை, சாற்றுமேல்‌-சொல்லுமிடத்து, மையுறு-
    நீர்வாழ்‌, தேரை-தவளையின்‌ வரலாறு, உரை-உரைக்கப்படும்‌, எ-று.
    (க-ரை! தவளையின்‌ வரலாறு அருக பூசையின்‌ சிறப்பைச்‌ சொல்லும்‌
    . என்பதாம்‌. ்‌
    (வி-ரை தெய்வம்‌-கடவுள்‌ இங்கு அருக தேவனைக்‌ குறித்தது. மை-
    நீர்‌, மையுறு-நீர்வாழ்‌; தேரை-ஒரு தவளை வகை.
    [ தவளையின்‌ வரலாறு
    மகத நாட்டில்‌ இராஜ்கிருகத்தில்‌ அரசன்‌ சிரேணிகன்‌ ஆண்டு வந்தான்‌.
    அந்‌ நகரில்‌ நாகதத்தன்‌ என்ற செட்டி தன்‌ மனைவி பவதத்தையுடன்‌ வாழ்ந்து
    வந்தான்‌. அவன்‌ எப்போதும்‌ மாயையுடையவனாக இருந்தான்‌. அவன்‌
    இறந்து தன்‌ வீட்டு அருகில்‌ உள்ள குளத்தில்‌ தவளையாகப்‌ பிறந்தான்‌. அது
    ஒரு நாள்‌ தன்‌ முன்பவ மனைவியைப்‌ பார்த்து ஜாதி ஸ்மரணை அடைந்து
    பூர்வ அன்பால்‌ அவள்‌ மீது தாவிக்குதித்தது. அதை எத்தனை தடவை
    தள்ளிவிட்டாலும்‌ அது அவளை விடுவதில்லை இதைக்‌ கண்டு அவள்‌
    தனக்கும்‌ அதற்கும்‌ ஏதாவது தொடர்பு இருக்க வேண்டும்‌ என நினைத்தாள்‌.
    அப்போது அங்கிருந்த ஸுவ்ரத முனிவரிடம்‌ அதைப்‌ பற்றிக்‌ கேட்டாள்‌.
    அவர்‌ அவதிஞானி. அவரும்‌ அது முன்‌ பிறவியில்‌ அவள்‌ கணவனாக
    இருந்த உயிர்‌ என்றார்‌. அதனை அறிந்த அவள்‌ தவளையைத்தன்‌ ட்டுக்கு
    எடுத்து வந்து மிகவும்‌ அன்புடன்‌ காப்பாற்றி வந்தாள்‌.
    அருங்கலச்செப்பு 164
    இது நிற்க. ஒரு நாள்‌ வைபார மலையில்‌ ஸ்ரீ வர்த்தமான சுவாமி
    எழுந்தருளி இருப்பதை அறிந்த சிரேணிகன்‌ ஆனந்த முரசு அறைவித்து
    தன்‌ நகர மக்களுடன்‌ சமவசரணம்‌ சென்றான்‌. பவதத்தையும்‌ நகர
    மக்களுடன்‌ சென்றாள்‌. அப்போது அந்த தவளையும்‌ பக்தியுடன்‌
    இலவங்கப்பூ போன்ற ஒரு சிறு பூவை வாயில்‌ கவ்விக்‌ கொண்டு சென்றது.
    ஆனால்‌ போகும்‌ வழியில்‌ ஒரு யானையின்‌ காலில்‌ மிதிபட்டு இறந்தது. பூஜை
    பாவனையால்‌ ஏற்பட்ட புண்ணியத்தால்‌ அது செளதர்ம கல்பத்தில்‌ மகர்த்திக
    தேவனாய்ப்‌ பிறந்தது. அவன்‌ அவதி ஞானத்தால்‌ தன்‌ மூன்‌ பிறவியை
    அறிந்து தன்‌ முடியில்‌ தவளை சின்னத்தை அணிந்துகொண்டு
    சமவசரணத்துக்கு வந்து மகாவீர பிரபுவை தொழுதான்‌. அதனைப்‌ பார்த்த
    சிரேணிகன்‌, கெளதம கணிதரரிடம்‌, இந்தத்‌ தேவன்‌ தன்‌ முடியில்‌ ஏன்‌
    தவளை சின்னத்தை அணிந்துள்ளான்‌’ என்று வணங்கிக்‌ கேட்டான்‌.
    கெளதமர்‌ அதன்‌ முன்‌ பிறவி வரலற்றைக்‌ கூறினார்‌. அதனைக்‌ கேட்ட
    அனைவரும்‌ மகிழ்ந்து பூஜையின்‌ அதிசய உணர்வைப்‌ பெற்றனர்‌.
  2. சல்லேகனை அதிகாரம்‌
    145 இடையூறு ஒழிவில்நோய்‌ மூப்பிவை வந்தால்‌
    கடைதுறத்தல்‌ சல்லே கனை.
    இது சல்லேகனையின்‌ காரணத்தைக்‌ கூறுகிறது.
    (ப-ரை இடையூறு-தடைகள்‌, ஒழிவில்‌-தீரா, நோய்‌-பிணி, மூப்பு- கிழத்தனம்‌, இவை – இவை போல்வன, வந்தால்‌-வந்தால்‌, கடைதுறத்தல்‌- நான்குவகை உணவையும்‌, தொழில்‌ முதலானவற்றையும்‌ துறத்தல்‌, சல்லேகனை-சல்லேகனை ஆகும்‌. ௭-று.
    (க-ரை தடைகள்‌, தீராத பிணி, மூப்பு, இவை போல்வன வந்தால்‌ உணவு, தொழில்களைத்‌ துறத்தல்‌ சல்லேகனை என்பதாம்‌.
    (வி-ரை! தேவராலும்‌, மனிதராலும்‌, விலங்குகளாலும்‌, உயிரற்ற பொருளாலும்‌ இடையூறு வரக்கூடும்‌ அதனை ‘உபளர்க்கம்‌’ என்பர்‌-மூப்பு வயது முதிர்ச்சி காரணமாக உடலில்‌ தோன்றும்‌ தளர்வு, ஒழிவில்‌ நோய்‌-தீராத பிணி. கடை-வினைச்‌ சொல்லின்‌ முன்னெட்டு. துறத்தவின்‌ அவசியத்தைக்‌ குறித்து நின்றது.
    அருங்கலச்செப்பு 165
    உடலை விடுதல்‌ மூன்று நிலையில்‌ நிகழ்கிறது. ஆயுள்‌ முடிந்து”
    மரணம்‌ வரும்‌ போது உடல்‌ விடப்படுகிறது. இதனை ‘மரண விடுப்பு’.
    எனலாம்‌. நஞ்சு, அச்சம்‌, கருவி, பசி, மூச்சு, வேதனை முதலான
    காரணமாக தானே சாகும்போது உடல்‌ விடப்படுகிறது அல்லது விபத்து
    முதலாள எதிர்பாராத காரணங்களால்‌ மரணம்‌ அடையும்‌ போது உடல்‌
    விடப்படுகிறது. இதனை ‘அகால விடுப்பு’ எனலாம்‌. இடையூறுகள்‌
    வரும்போது அதனை நீக்க உபாயம்‌ இல்லாதபோது அறத்தை
    (மும்மணியைக்‌ காத்துக்‌ கொள்ள உடலை விடுதல்‌ ‘காத்தல்‌-விடுப்பு’
    எனப்படுகிறது. வீடு தீப்பற்றும்‌ போது அதனை அணைக்க முதலில்‌
    முயற்சி செய்யப்படுகிறது. தீயை அணைத்தல்‌ இயலாத போது வீட்டில்‌
    உள்ள அரிய பொருளை எடுத்துக்‌ கொண்டு வீட்டை
    விட்டுவிடுகின்றனர்‌. அதே போல இடையூறுகள்‌ வரும்‌ போது அதனை
    முதலில்‌ நீக்க முயற்சிக்கின்றனர்‌. அது இயலாத போது தன்‌ மும்மணி
    தருமத்தைக்‌ காப்பாற்றிக்‌ கொள்ள உடலைத்‌ துறக்கின்றனர்‌. இறப்பினை
    விருப்போடு எதிர்கொள்கின்றனர்‌. இதனையே ஸல்லேகனை என்பர்‌.
    இந்த இறப்பு அறத்தைக்‌ காத்துக்‌ கொள்ளவே எதிர்கொள்ளப்படுகிறது.
    அதனால்‌ தற்கொலை அன்று. தற்கொலையில்‌ உயிர்‌ வதை இருக்கிறது:
    இங்கு உயிர்‌ வதை இல்லை. தற்கொலை இம்சை வடிவம்‌; சல்லேகனை
    மரணம்‌ அகிம்சை வடிவம்‌.
    எல்லாப்‌ படியும்‌ விலக்கப்‌ படாதெரியா
    இல்லம்‌ அழியில்‌ அதனகத்தில்‌-நல்ல
    பொருள்கொண்டு போவான்போல்‌ சாம்போது பற்றற்று
    அருள்கொண்டு போதல்‌ அறம்‌.
    என வரும்‌ மேற்கோள்‌ பாடல்‌ சல்லேகனை ஏற்போனின்‌ மன நிலையை
    விளக்குதலைக்‌ காணலாம்‌.”
    146 இறுவாய்க்கண்‌ நான்கும்‌ பெறுவாம்‌ என்று எண்ணி
    மறுவாய நீக்கப்‌ படும்‌.

இது சல்லேகனை காலத்துச்‌ சிந்தனையைக்‌ கூறுகிறது.

  1. நீலகேசி, 221 மேற்கோள்‌.
    அருங்கலச்செப்பு 166
    (ப-ரை) இறுவாய்க்கண்‌-இறுதியில்‌, நான்கும்‌-அனந்த
    நான்மையும்‌, பெறுவாம்‌-பெறுவோம்‌, என்று-என, எண்ணி-நினைந்து,
    மறுவாய-குற்றமுடையன, நீக்கப்படும்‌-சல்‌லேகளை காலத்தில்‌
    நீக்கப்படும்‌, எ-று.
    (க-ரை! கடைசியில்‌ அனந்த நான்மையும்‌ பெறுவோம்‌ என மனத்துள்‌
    எண்ணிக்கொண்டு சல்லேகளை சமயத்தில்‌ குற்றமான சிந்தனைகளை
    நீக்குவர்‌ என்பதாம்‌.
    (வி-ரை நற்காட்சியுடன்‌ கூடிய ஓருயிர்‌ சல்லேகளை எடுக்கும்‌
    போது குறைந்தது இரண்டு மூன்று பிறவிகளிலோ அதிகமாக ஏழெட்டு
    பிறவிகளிலோ மோக்ஷம்‌ அடைவர்‌. அதனைக்‌ கருத்தில்‌ கொண்டே
    “இறுவாய்‌’ என்று ஆண்டுள்ளார்‌. மறுவாய-விருப்பு வெறுப்பு முதலான
    கசாயங்கள்‌. அவை வரும்‌ குறள்களில்‌ கூறப்படுகின்றன.
    147 பற்றொடு செற்றமே சுற்றம்‌ தொடர்ப்பாடு
    முற்றும்‌ துறக்கப்‌ படும்‌.
    இது சல்லேகனை காலத்தில்‌ செய்யவேண்டுவன கூறுகிறது.
    (ப-ரை) பற்றொடு-அவாவோடு, செற்றமே-துவேஷம்‌, சுற்றம்‌ –
    உறவும்‌, தொடர்ப்பாடு – மனைமுதலான பொருள்‌ தொடர்புகளும்‌,
    முற்றும்‌ – முழுதுமாக, துறக்கப்படும்‌ – விடப்படும்‌. எ-று.
    (க-ரை) விருப்பு வெறுப்பு வடிவான கசாயங்களும்‌, சுற்றம்‌, வீடு
    முதலான பிற தொடர்புகளும்‌ சல்லேகனை காலத்தில்‌ முழுதுமாக
    விலக்கப்படும்‌ என்பதாம்‌.
    (வி-ரை உபகாரப்படும்‌ பொருளிடத்துத்‌ தோன்றும்‌ அன்புணர்வு
    பற்றாகும்‌. உபகாரம்‌ செய்யாத பொருளிடத்துத்‌ தோன்றும்‌ வெறுப்பை செற்ற மாகும்‌. ‘எனது” எனத்‌ தோன்றும்‌ உறவுச்‌ சுற்றமாகும்‌. வீடு மூதலான தொடர்புடையன மேல்‌ தோன்றும்‌ உணர்வு தொடர்ப்பாடு எனப்பட்டது. சல்லேகனை காலத்தில்‌ இவை முழுதுமாகத்‌ துறக்கப்படவேண்டும்‌. அப்போதுதான்‌ நிர்மல நிலை தோன்றும்‌.
    அருங்கலச்செப்பு 167
    148 ஆலோ சனையின்‌ அழிவகற்றி மாதவன்கண்‌
    மீள்வின்றி ஏற்றுக்‌ கொளல்‌
    இதுவும்‌ அது.
    (ப-ரை ஆலோசனையின்‌-ஆலோசனை வழி, அழிவு-பாபத்தை,
    அகற்றி-நீக்கி, மீள்வு இன்றி-நிலைபெற்று, மாதவன்கண்‌ – முனிவரிடத்தில்‌,
    ஏற்றுக்கொளல்‌ – மகாவிரதம்‌ ஏற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. எ-று.
    (க-ரை ஆலோசனை வழி பாபத்தை நீக்கித்‌ தன்‌ நிலையில்‌ நிலை
    பெற்று முனிவரிடத்தில்‌ மகாவிரதம்‌ முதலான விரதங்களை ஏற்றுக்‌ கொள்ள
    வேண்டும்‌ என்பதாம்‌.
    (வி-ரை சல்லேகனை ஏற்போர்‌ எல்லா பாபங்களையும்‌ ஆலோசனை
    செய்தல்‌ வேண்டும்‌. மரணம்‌ அடையும்‌ வரை நிலையாக மகா விரதத்தை
    ஏற்க வேண்டும்‌. மகாவிரதம்‌ ஏற்றல்‌ உயர்ந்த நிலை அதற்கு ஆற்றல்‌ இல்லாத
    போது ஐலகர்‌, சுல்லகர்‌ நிலையினையும்‌ ஏற்கலாம்‌. பொதுவாக “ஏற்றுக்‌
    கொளல்‌’ எனக்‌ குறிப்பிட்டுள்ளார்‌. ஆலோசனை குருவிடமே
    கேட்கவேண்டும்‌. ஆலோசனை பத்துவிதம்‌ என்பர்‌. நூல்‌ வழி அறிக.
    149 கசிவு கலக்கம்‌ அகற்றி மனத்தை
    ஒசியாமல்‌ வைக்க உவந்து.
    இதுவும்‌ அது.
    (ப-ரை கசிவு-வருத்தம்‌, கலக்கம்‌-அச்சம்‌, அகற்றி-நீக்கி, மனத்தை-
    மனத்தை, ஓசியாமல்‌-நிலை குலையாமல்‌, உவந்து-உவகையில்‌ வைக்கமனத்தை வைத்தல்‌ வேண்டும்‌. எ-று.
    (க-ரை சல்லேகனை காலத்தில்‌, வருத்தம்‌, அச்சம்‌ முதலானவற்றை
    நீக்கி, நிலைகுலையாமல்‌ உவகையில்‌ மனத்தை வைத்தல்‌ வேண்டும்‌
    என்பதாம்‌.
    (வி-ரை) சல்லேகனை ஏற்கும்‌ போது தான்‌ இதுநாள்‌ வரை
    விரும்பியவர்களுக்கு அல்லது விரும்பிய பொருளுக்கு என்ன நேருமோ
    அருங்கலச்செப்பு 168
    என்ற வருத்தம்‌ கொள்ளுதல்‌ கூடாது. பசி, தாகம்‌ எடுக்கும்‌ போது
    பொறுப்பேனோ மாட்டேனோ முதலான அச்சமும்‌ வருதல்‌ கூடாது.
    அல்லது ஏழு வகையாகக்‌ கூறப்படும்‌ அச்சமும்‌ தோன்றுதல்‌ கூடாது. கசிவு,
    கலக்கம்‌ இனம்‌ சுட்டியனவாகக்‌ கொண்டு நட்பு, பகை முதலானவையும்‌
    இல்லாமை கொள்ளலாம்‌. ஒசிதல்‌-நிலையில்‌ வளைதல்‌. அது கூடாது
    என்பார்‌ ஒசியாமல்‌ என்றார்‌. ஏற்ற விரத நிலையில்‌ உறுதியாக நிற்றல்‌
    வேண்டும்‌ என்பதாம்‌. மரணத்தை வேண்டி எதிர்கொள்ளும்‌ சல்லேகனை
    சமயத்தில்‌ மனம்‌ மகிழ்ச்சியில்‌ திளைத்தல்‌ வேண்டும்‌ என்பார்‌. “உவந்து
    எனக்‌ குறிப்பிட்டார்‌. அது ஆன்மீய குணங்களை அப்பியசிப்பதால்‌
    ஏற்படும்‌ உணர்வாகும்‌.
    150 ஊணொடு பானம்‌ முறைசுருக்கி ஒர்ந்துணர்ந்து
    மானுடம்பு வைக்கப்‌ படும்‌.
    இது சல்லேகனை கால உணவுகுறைப்பு முறை கூறுகிறது.
    (ப-ரை ஊணொடு – உணவோடு, பானம்‌ – திரவப்பொருளை –
    முறை முறையாக, சுருக்கி – சுருக்கிவந்து, ஓர்ந்து – பாவனையோடு,
    உணர்ந்து -அறிந்து, மானுடம்பு – மனித உடம்பு, வைக்கப்படும்‌ –
    கிடத்தப்படும்‌ , விடப்படும்‌. எ-று.
    (க-ரை உணவையும்‌ பருகுவனவற்றையும்‌ முறையாகக்‌ குறைத்து
    வந்து பாவனையோடு தர்மங்களை அறிந்து, உடலை விடவேண்டும்‌
    என்பதாம்‌.
    (வி-ரை)! எல்லாவகை உணவையும்‌ ஒரே நேரத்தில்‌ விட்டால்‌
    ஆகுலம்‌ தோன்றக்‌ கூடும்‌. அதனால்‌, சல்லேகனை காலத்தில்‌ உணவை விடுவதில்‌ விதி முறை வேண்டும்‌. முதலில்‌ அன்னம்‌ அதாவது சோறு, ரொட்டி, பருப்பு முதலான தானிய உணவை விட வேண்டும்‌. பிறகு பால்‌ போன்ற பசையுள்ள பானம்‌ கொள்ள வேண்டும்‌. பிறகு அதனையும்‌ விட்டு நெய்‌ நீக்கிய மோர்‌ கொள்ள வேண்டும்‌. அப்புறம்‌ அதனையும்‌ விட்டு வெந்நீர்‌ குடிக்க வேண்டும்‌. அதன்‌ பிறகு கடைசியில்‌ அதளையும்‌ விட்டு ஆற்றலுக்கு ஏற்ப 2, 3 நாள்‌ உபவாசம்‌ ஏற்க வேண்டும்‌. பிறகு கடைசியில்‌ மிகவும்‌ விழிப்போடு உடலை விடவேண்டும்‌.
    அருங்கலச்செப்பு 169
    ஓர்ந்து உணர்ந்து என்ற தொடருக்குப்‌ பாவனையோடு தருமங்களை அறிந்து
    கொள்ள வேண்டும்‌ என்பதாம்‌. மானுடம்பு-மனித உடம்பு. ‘மானுடம்பு விடா’
    எனும்‌ ஆட்சி காண்க. !
    151 மந்திரங்கள்‌ ஐந்து மனத்துவரச்‌ சென்றார்கள்‌
    இந்திரற்கும்‌ இந்திரரே எண்‌.
    இது சல்லேகனையில்‌ பஞ்ச மந்திரம்‌ நினைக்கவேண்டும்‌ என்று
    கூறுகிறது.
    (ப-ரை) மந்திரங்கள்‌ ஐந்தும்‌ – பஞ்ச பரமேட்டியின்‌ நமஸ்கார
    மந்திரங்களாகிய பஞ்ச மந்திரங்களை, மனத்துவர – மனத்திலே
    அடையும்படி. சென்றார்கள்‌ – நிகழ்ந்தவர்கள்‌, இந்திரற்கும்‌ – தேவ
    இந்திரற்கும்‌, இந்திரரே – மேலான இந்திரராக அதாவது ஜினேந்திரராம்‌, எண்‌
  • என எண்ணுதல்‌ வேண்டும்‌, ௪-று.
    (க-ரை! பஞ்ச மந்திரத்தில்‌ தன்‌ உபயோகத்தை நிறுத்தியவர்கள்‌
    ஜினேந்திர நிலையை அடைந்தார்கள்‌ என அறிதல்‌ வேண்டும்‌ என்பதாம்‌.
    (வி-ரை! சல்லேகனை காலத்தில்‌ பஞ்ச பரமேட்டி சொரூபம்‌ மனத்தில்‌
    நிலைபெற வேண்டும்‌. அந்த ஒருமுக நிலையே ஜினேந்திர பதவியை
    அடைய வழி வகுக்கும்‌.
    152 சாவொடு வாழ்க்கையை அஞ்சித்தான்‌ மெச்சுதல்‌
    வாழ்வொடு நட்டார்‌ நினைப்பு.
    158 நிதானத்தோடு ஐந்திறப்பும்‌ இன்றி முடித்தார்‌
    பதானம்‌ அறுத்தார்‌ எனல்‌.
    இவை அதிசாரம்‌ கூறுகின்றன.
    (-றை சாவொடு இஞ்சி! – இன்னும்‌ சில நாள்‌ வாழ்ந்தால்‌ நல்லது
    1, மேருமந்தரம்‌, 71 ச
    அருங்கலச்செப்பு 70
    என்று சாவுக்கு அஞ்சுதலும்‌, வாழ்க்கையை (அஞ்சி)- பசி, தாகம்‌ முதலான
    பொறுக்க முடியாத நிலையில்‌ விரைந்து இறத்தல்‌ நல்லது என்று வாழ்தலுக்கு
    அஞ்சுதலும்‌, தான்‌ மெச்சுதல்‌-ஸல்லேகனை ஏற்ற தன்னைப்‌ புகழ்தலும்‌,
    வாழ்வொடு நட்டார்‌-வாழ்நாள்‌ முழுதும்‌ நண்பராக இருந்தவரது, நினைப்பும்‌
  • நினைப்பு கொள்ளுதலும்‌, நிதானத்தோடு – எதிர்காலத்தில்‌ வைபவம்‌
    வேண்டும்‌ என்னும்‌ நிதானத்தோடு, ஐந்து – ஐந்தான, இறப்பும்‌ –
    அதிசாரங்கள்‌, இன்றி, இல்லாமல்‌, முடித்தார்‌ – சல்லேகனையை முடித்தவர்‌-
    பதானம்‌-பிறவி வேரை, அறுத்தார்‌ – அறுத்தார்‌, எனல்‌ – எனப்படுவர்‌. எ-று.
    (க-ரை! சாதலுக்கு அஞ்சுதல்‌, வாழ்தலுக்கு அஞ்சுதல்‌, தன்னைப்‌
    புகழ்தல்‌, நண்பர்‌ நினைப்பு, நிதானம்‌ இவ்வைந்து அதிகாரங்கள்‌ இன்றி
    சல்லேகனையை முடித்தவர்‌ பிறவி மூலத்தை அறுத்தவர்‌ எனப்படுவார்‌.
    என்பதாம்‌.
    (வி-ரை இரண்டு பாட்டும்‌ குளகம்‌. பதானம்‌ – பிரதானம்‌ – என்பதன்‌
    திரிபு. பிரதானம்‌ – முக்கியம்‌. இங்குப்‌ பிறவிக்கு வேர்‌ என்று கொள்ளப்பட்டது.
    அல்லது பிறவியைக்‌ கொடுப்பது என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. பிறவி
    கொடுப்பதனை அறுத்தார்‌ எனப்‌ பொருள்‌ தரும்‌.
    154 அறத்துப்‌ பயனைப்‌ புராண வகையில்‌
    திறத்துள்ளிக்‌ கேட்கப்‌ படும்‌.
    இது அதன்‌ பயன்‌ கூறுகிறது.
    (ப-ரை அறத்து – அறத்தினுடைய, பயனை – பயன்களை, புராண
    வகையில்‌ – புராண வகைப்படும்‌ பிரதமானுயோக நூல்களால்‌, திறத்து – கூறுபாடுபட, உள்ளி – ஆய்ந்து, கேட்கப்படும்‌ – கேட்கப்பட வேண்டும்‌.
    எ-று,
    கோரை அறத்தினால்‌ விளையும்‌ பயன்களைப்‌ பிரதமானுயோக
    நூல்களால்‌ கூறுபாடுபட ஆய்ந்து கேட்டல்‌ வேண்டும்‌ என்பதாம்‌.
    (வி-ரை அதிசாரங்கள்‌ இல்லாமல்‌ சல்லேகனையை முடிப்போர்‌ தாம்‌ ஒழுகிய அறத்தால்‌ என்ன பயன்களை அடைவர்‌ என இக்குறள்‌ முதல்‌ கூறத்‌ தொடங்குகிறார்‌. அறத்தின்‌ பயனாக இரண்டு முதன்மையான விளைவுகள்‌
    அருங்கலச்செப்பு 71
    காணப்படுகின்றன. 1. நீண்ட கால சுக வைபவ அனுபவம்‌ 2. முடிவிலலாத
    ஆனந்த அனுபவம்‌. முன்னது மும்மணி முழுமை அடையாத நிலையில
    விளைவது; பின்னது மும்மணி முழுமையுற்ற நிலையில்‌ விளைவது. இதனை
    முறையே ‘அப்யுதயம்‌’, ‘நிஸ்ஸேரயஸம்‌’ என்பர்‌. இந்தக்‌ கூறுபாடுகளை
    ஆய்ந்து அறிய வேண்டும்‌ என்பார்‌ ‘திறத்து உள்ளி’ என்றார்‌ அறத்தின்‌
    பயனால்‌ இன்னாருக்கு இன்ன இன்ன பயன்கள்‌ கிடைத்தன என
    பிரதமானுயோக நூல்கள்‌ வருணனை செய்கின்றன. அதனால்‌ ‘புராண வகை
    வழி கேட்க வேண்டும்‌ என்றார்‌.
    155 மிறப்பு பிணிமூப்புச்‌ சாக்காடு நான்கும்‌
    அறுத்தல்‌ அறத்தின்‌ பயன்‌.
    இதுவும்‌ அது.
    (ப-ரை பிறப்பு – பிறத்தலையும்‌, பிணி – நோயையும்‌, மூப்பு –
    முதுமையையும்‌, சாக்காடு – இறப்பையும்‌, நான்கும்‌ – இந்நான்கும்‌ உடைய
    பிறவியை, அறுத்தல்‌ – கெடுத்தல்‌, அறத்தின்‌ – அறத்தினது, பயன்‌ –
    பயனாகும்‌. எ-று.
    (க-றை! பிறப்பு முதலான நான்கும்‌ உடைய பிறவியை அறுத்தல்‌
    அதாவது மோக்ஷத்தைத்‌ தருதல்‌ அறத்தின்‌ பயனாகும்‌ என்பதாம்‌.
    (வி-ரை! சல்லேகனையை விதிமுறையுடன்‌ செய்த நற்காட்சியாளர்‌
    அதிக அளவு ஏழெட்டு பிறவிகளில்‌ மோக்ஷம்‌ அடைவார்‌. அதனால்‌.
    சல்லேகளையின்‌ விளைவு மோக்ஷம்‌ எனப்பட்டது.
    156 பரிவு நலிவினொடு அச்சமும்‌ இல்லை
    உருவின்‌ பிறப்பில்‌ லவர்க்கு.
    இதுவும்‌ அது.
    (ப-ரை உருவின்‌ – உருவுடைய, பிறப்பு – பிறப்பு, இல்லவர்க்கு –
    இல்லாதவர்க்கு (மோக்ஷ நிலை அடைந்தவர்க்கு), பரிவு – வருத்தம்‌,
    நலிவினொடு – துன்பத்தோடு, அச்சம்‌ – பயமும்‌, இல்லை – இல்லையாம்‌.
    எ-று.
    அருங்கலச்செப்பு 172
    (க-ரை) மோக்ஷ நிலையில்‌ வருத்தம்‌, துன்பம்‌, பயம்‌ முதலான
    உணர்வுகள்‌ இல்லை என்பதாம்‌.
    (வி-ரை! மேல்‌ குறளில்‌ உடல்‌ தொடர்பு அறுக்கப்படுவதால்‌ உடல்‌
    நிமித்தமான துன்பம்‌ இல்லை என்றார்‌. இக்குறளில்‌ பிறவி உயிரில்‌
    காணப்படும்‌ வருத்தம்‌ முதலான துன்பங்களும்‌ முத்தி நிலை (ஸித்த நிலை
    எய்திய உயிரில்‌ இல்லை என்றார்‌. எனவே சித்த நிலையில்‌ உயிர்‌ துன்பங்கள்‌
    அற்ற நிலையிலேயே – இன்ப நிலையிலேயே – காணப்படுகிறது என்பதாம்‌.
    பரிவு – வருத்தம்‌, “கம்பம்‌ செய்‌ பரிவு நீங்க’ என்றார்‌ திருத்தக்க
    தேவர்‌ ‘ நலிவு – துன்பம்‌; ‘வையகத்து நலிவு கண்டு’ என வரும்‌ ஆட்சி
    காண்க”.
    157 கிட்டமும்‌ காளிதமும்‌ நீக்கிய பொன்போல
    விட்டு விளங்கும்‌ உயிர்‌.
    இதுவும்‌ அது.
    (ப-ரை கிட்டமும்‌ – கிட்டமும்‌, காளிதமும்‌ – களிம்பும்‌, நீக்கிய –
    நீக்கப்பட்ட பொன்போல – பொன்னைப்போல, உயிர்‌ – மோக்ஷநிலை எய்திய
    உயிர்‌, விட்டு – மாசுகளை நீக்கிவிட்டு, விளங்கும்‌ – திகழும்‌, எ-று.
    க-ரை! புடம்போட்டு கிட்டகாளிதங்களை நீக்கிய பொன்‌ ஒளிவிட்டு
    விளங்குதல்‌ போல மோக்ஷம்‌ அடைந்த உயிரும்‌ வினைமாசுகள்‌
    இல்லாமையால்‌ சிறந்து விளங்கும்‌ என்பதாம்‌.
    (வி-ரை சுரங்கத்துப்‌ பொன்னோடு கிட்டமும்‌ காளிதமும்‌ சேர்ந்தே காணப்படுகின்றன. கிட்ட காளிதம்‌ – பொன்னோடு தொடர்புடைய இதர பாஷாணங்களின்‌ குணம்‌. புடம்‌ போடுவதினால்‌ – நெருப்பில்‌ இடுவதினால்‌ பொன்‌ வேறாகவும்‌ கிட்ட காளிதம்‌ வேறாகவும்‌ பிரிக்கப்படுகின்றன. பிறகு என்றும்‌ பொன்‌ தன்‌ சுய ஒளியில்‌ நின்று ஒளிவிடும்‌. அதே போல உயிரும்‌ அனாதிகால வினைகள்‌ தொடர்பினை முற்றுமாக நீக்கி விட்டுத்‌ தன்‌ தூய நிலையை அடையும்‌ போது தன்‌ தூய குணங்களோடு அனந்த காலம்‌ வரை விளங்கும்‌ என்பதாம்‌.
  1. சீவகசிந்தாமணி, 1737; 2. புறப்பொருள்‌ வெண்பாமாலை, 8/4
    அருங்கலச்செப்பு 178
    158 எல்லையில்‌ இன்ப உணர்வு வலிகாட்சி
    புல்லும்‌ வினைவென்‌ றவர்க்கு.
    இதுவும்‌ அது.
    (ப-ரை வினை வென்றவர்க்கு – எட்டு வினைகளை வென்ற சித்த
    பரமேட்டிக்கு, எல்லை இல்‌ – முடிவு இல்லாத, இன்பம்‌ – இன்பமும்‌ உணர்வு
  • அறிவும்‌, வலி – விரியமும்‌, காட்சி – தரிசனமும்‌ – புல்லும்‌ – தோன்றும்‌,
    எ-று.
    (க-ரை எட்டு வினைகளையும்‌ கெடுத்த சித்தருக்கு அனந்த தரிசனம்‌,
    அனந்த ஞானம்‌ அனந்த சுகம்‌. அனந்த வீரியம்‌ தோன்றி நிற்கும்‌
    என்பதாம்‌.
    (வி-ரை! மோக்ஷ வருணனை என்பதால்‌ அனந்த தரிசனம்‌ முதலான
    நான்கோடு அவ்யாபாதத்வம்‌, அருகுலகுத்வம்‌, அதிசூக்கு மத்துவம்‌, அவ
    கஹனத்துவம்‌ என்ற நான்கையும்‌ சேர்த்துக்‌ கொள்ள வேண்டும்‌
    எட்டுவினைகள்‌ அழிவதால்‌ இந்த எட்டு குணங்களும்‌ வெளிப்படுகின்றன.
    இவை ஆன்ம குணங்கள்‌. இவற்றில்‌ ஏற்றத்‌ தாழ்வும்‌ இல்லை; கால வரம்பும்‌
    இல்லை. அனந்த காலம்‌ வரை இருக்கும்‌.
    159 உலக மறியினும்‌ ஒன்றும்‌ மறியார்‌’
    நிலைய நிலைபெற்‌ றவர்‌.
    இதுவும்‌ அது.
    (ப-றை நிலைய நிலை – மாறா நிலையை, பெற்றவர்‌ – எய்திய சித்த
    பரமேட்டிகள்‌, உலகம்‌ – உலகமானது, மறியினும்‌ – கீழ்மேலானாலும்‌, ஒன்று.
    ஒரு பொழுதும்‌, மறியார்‌ – நிலைகுலைய மாட்டார்கள்‌. எ-று.
    (க-ரை! உலகம்‌ கீழ்மேலாகப்‌ புரண்டாலும்‌ சித்த நிலையை
    அடைந்தவர்கள்‌ எப்போதும்‌ நிலைகுலைய மாட்டார்கள்‌ என்பதாம்‌.
    (வி-ரை சித்த பகவான்‌ நிலையிலும்‌ தோற்றம்‌ மறைவு நிலைபேறு
    ண்டு; மாறாத நித்தியம்‌ இல்லை. அர்த்த பரியாய மாற்றம்‌ சமயம்‌ சமயம்‌
    நிற்கிறது ந்த நுட்ப மாற்றம்‌ இங்கே பேசப்படவில்லை. இங்கே பருநிலை
    மாற்றமே பேசப்படுகிறது. கேவல ஞானம்‌ முதலான குணங்களைக்‌ கூட்டவே
    அருங்கலச்செம்பு 74.
    குறைக்கவோ அல்லது சித்த நிலையைக்‌ கெடுத்து மீண்டும்‌ பிறவி
    சுழற்சியைத்‌ தரவோ எந்தச்‌ சக்தியாலும்‌ முடியாது என்பதாம்‌.
    160 மூவுலகத்து உச்சிச்‌ சூளா மணிவிளக்குத்‌
    தோவகையில்‌ சித்தி யவர்‌.
    இதுவும்‌ அது.
    (ப-ரை) தோவகையில்‌ – குற்றங்கள்‌ ஏதும்‌ இல்லாத, சித்தியவர்‌ –
    சித்தர்கள்‌, மூவுலகத்து – மூன்று உலகுக்கு, உச்சி – உச்சியில்‌, சூளாமணி –
    சூளாமணி, விளக்கு – ஒளி போல விளங்குவர்‌, எ-று.
    (க-ரை சித்த பரமேட்டிகள்‌ மூன்று உலகிற்கும்‌ உச்சியாக விளங்கும்‌
    சித்த க்ஷேத்திரத்தில்‌ சூளாமணி ஒளி போல விளங்குவர்‌ என்பதாம்‌.
    (வி-ரை சூளாமணி – முடிமணி, விளக்கு – ஒளியைக்‌ குறித்து நின்றது.
    உலகு புருட ஆகாரம்‌ என்பர்‌. புருடனின்‌ முடியில்‌ சூளாமணி ஒளி விடுதல்‌
    போல உலகத்திற்கு முடியாக விளங்கும்‌ சித்தாலயத்தில்‌ சித்தர்‌ கேவல
    ஞானம்‌ முதலான குணங்களோடு கூடி விளங்குகின்றனர்‌ என்பதாம்‌. முடி
    மணி உயர்ச்சி கருதியும்‌ அருமைப்பாடு கருதியும்‌ காட்டிய உவமையாகும்‌.
    சிராவகர்‌ படிநிலைகள்‌ }
    161 பதினோர்‌ நிலைமையர்‌ சாவகர்‌ என்று
    விதியின்‌ உணரப்‌ படும்‌.

இது சாவகர்‌ படிநிலை எண்ணிக்கை கூறகிறது.
(ப-ரை சாவகர்‌-இல்லறத்தார்‌, விதியின்‌ – ஒழுக்க விதிப்படி, பதினோர்‌ நிலைமையர்‌ – பதினோர்‌ படிநிலையினர்‌, என்று – என்று, உணரப்படும்‌ – அறியப்படும்‌. எ-று.
(க-ரை சாவகர்‌ பதினோரு நிலையினர்‌ என்பதாம்‌.
(வி-ரை குறைந்த ஒழுக்கத்தை இணுவிரதியை உடையவரை சாவகர்‌
அருங்கலச்செப்பு 75
(சிராவகரி என்பர்‌. அப்ரத்யாக்யான கசாயம்‌ உதயம்‌ இலலாமல பிரதயாக்யான
கசாயம்‌ எப்படி எப்படி மந்த உதயத்திற்கு வருகிறதோ அதறகு ஏறறாறபோல
இந்த சாவக படிநிலைகள்‌ உயர்ச்சி பெறுகின்றன. சாவகர்‌ மூன்று
வகைப்படுவர்‌, பாக்ஷிகர்‌, நைஷ்டிகர்‌, சாதகர்‌ என. நற்காட்சியடன்‌ எட்டு
மூலகுணங்களை அப்பியசிப்பவர்‌ பாக்ஷிகர்‌. பதினோரு நிலையை அதிசாரம்‌
இன்றி பரிபாலிப்பவர்‌ தைஷ்டிகர்‌. கடைசியில்‌ சல்லேகனை ஏற்பவர்‌ சாதகர்‌.
தான்‌ ஏற்ற படி நிலை ஒழுக்கத்தோடு கீழ்நிலை ஒழுக்கத்தையும்‌ உடன்‌
வைத்து முறையோடூ ஒழுகுவதால்‌ ‘விதியின்‌’ என்றார்‌. படிநிலை
ஒழுக்கத்திற்கு முறைமை உண்டு என்பது கருத்து.
192 காட்சியில்‌ திண்ணனாய்‌ சீல விரதம்‌ இலான்‌
மாட்சியுறு தரிசன்‌ ஆம்‌
இது தரிசன்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
(புரை காட்சியில்‌ – நற்காட்சியில்‌, திண்ணனாய்‌ – மிகு
உறுதியுடையவனாய்‌, சீல விரதம்‌ இலான்‌ – சீல ஒழுக்கம்‌ இல்லாதவன்‌,
மாட்சியுறு – பெருமையுடைய தரிசனத்தை உடைய, தரிசன்‌ – தரிசன்‌, ஆம்‌ –
ஆகும்‌. எ-று.
(கு-றை நற்காட்சியில்‌ உறுதியோடு நின்று சீல ஒழுக்கம்‌ இல்லாதவன்‌
தரிசன்‌ என்பதாம்‌.
(வி-ரை நற்காட்சியை! அதிசாரம்‌ இல்லாமல்‌ பெற்றிருப்பான்‌. ஆனால்‌
விரதம்‌ இல்லை. சீல விரதம்‌ இல்லாதவன்‌ என்று குறிப்பிடுவதால்‌ எட்டு
மூலகுணங்களை அதிசாரத்தோடு கடைப்பிடிப்பான்‌ என்பதாம்‌. ஏழு
வியசனங்களை அதிசாரம்‌ இல்லாமல்‌ நீக்கி இருப்பான்‌. இவனை ‘பாக்ஷிக
சாவகன்‌ என்பர்‌. அவிரதியும்‌, இந்த பாக்ஷிக சாவகனும்‌ நாலாம்‌ குண
ஸ்தானம்‌ உடையவர்‌. இவரே உடல்‌, போகம்‌ முதலானவற்றில்‌ வெறுப்பு
கொண்டு நியமங்கள்‌ – விரதங்கள்‌ ஏற்க முனைப்புக்‌ காட்டும்‌ போது தேன்‌,
கள்‌, புலால்‌ நீக்கி ஐந்து அணுவிரதங்களை ஏற்பவர்‌ ஆகிறார்‌. பஞ்ச
பரமேட்டியிடம்‌ இடைவிடாத பக்தியுடையவர்‌ Gap எவரையும்‌
வணங்காதவர்‌. இது தரிசன்‌ என்னும்‌ முதல்‌ நிலை. இங்கு இருந்து ஐந்தாம்‌
குண ஸ்தானம்‌ தொடங்குகிறது.
அருங்கலச்செம்பு 186
163 வதம்ஐந்தும்‌ சீலமோர்‌ ஏழும்‌ தரித்தான்‌
விதியால்‌ விரதி எனல்‌.
இது விரதியின்‌ இலக்கணம்‌ கூறுகிறது.

a
(ப-ரை வதம்‌ ஐந்தும்‌ – அணுவிரதங்கள்‌ ஐந்தையும்‌, சீலம்‌ ஓர்‌ ஏழும்‌

  • ஏழு சீல விரதங்களும்‌, விதியால்‌ – உரிய விதியால்‌, தரித்தான்‌ – ஏற்றான்‌,
    விரதி – விரதிகள்‌ எனல்‌ – எனப்படுவான்‌, எ-று.
    (க-ரை! படி நிலைக்குரிய விதிமுறையோடு ஐந்து
    அணுவிரதங்களையும்‌ ஏழு சீல விரதங்களையும்‌ ஏற்றவன்‌ விரதிகன்‌
    எனப்படுவான்‌ என்பதாம்‌.
    (வி-ரை விதியால்‌ என்று குறிப்பிட்டதால்‌ அதிசாரங்கள்‌ இல்லாமலும்‌
    சல்லியங்கள்‌ இல்லாமலும்‌ அணுவிரதங்களையும்‌, சீல விரதங்களையும்‌
    கைக்கொள்வான்‌ என்பது பெறப்பட்டது. சல்லியங்கள்‌ மூன்றாகும்‌. அவை;
    மித்யா சல்லியம்‌, மாயா சல்லியம்‌, நிதான சல்லியம்‌, சல்லியம்‌ இருக்கும்‌
    போது யாரும்‌ விரதி ஆக முடியாது. முதல்‌ படிமையில்‌ சல்லியங்கள்‌
    நீக்கப்படவில்லை. அணுவிரதங்களிலும்‌ அதிசாரங்கள்‌ காணப்படலாம்‌.
    ஆனால்‌ இரண்டாம்‌ நிலையில்‌ அவை இல்லை.
    164 எல்லியும்‌ காலையும்‌ ஏத்தி நியமங்கள்‌
    வல்லியான்‌ சாமாயிகன்‌.
    இது சாமாயிகன்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
    (ப-றை) எல்லியும்‌ – இரவிலும்‌, காலையும்‌ – பகலிலும்‌, ஏத்தி பகவானைத்‌ துதிசெய்து, நியமங்கள்‌ – சாமாயிக நியமங்களை, வல்லியான்‌ செய்ய வல்லவன்‌, சாமாயிகன்‌ – சாமாயிகன்‌. எ-று.
    (க-ரை! சாமாயிக காலத்தில்‌ ஓத வேண்டியவற்றை ஓதி நியமங்களைப்‌ பிழைபடாது செய்ய வல்லவன்‌ சாமாயிகள்‌ என்பதாம்‌.
    அருங்கலச்செப்பு 177
    (வி-ரை இரவும்‌ பகலும்‌ எனக்‌ குறிப்பிட்டதால்‌ மூன்று
    சந்தியாகாலத்தில்‌ சாமாயிகம்‌ செய்தல்‌ வேண்டும்‌ என்பது பெறப்பட்டது.
    “ஏத்தி’ என்பதால்‌ முன்று வேளையும்‌ தேவ வந்தனை செய்ய வேண்டும்‌
    என்பதும்‌ பெறப்பட்டது. மூன்று வேளை வந்தனை செய்ய வேண்டும்‌ என்று
    பிற ஆசாரியர்களும்‌ குறிப்பிடுகின்றனர்‌. ! இது மூன்றாம்‌ படி நிலை.
    பேசாத உபவாசன்‌
    165 ஒருதிங்கள்‌ நால்வகைப்‌ பங்வமே நோன்பு
    புரிபவன்‌ போசத னாம்‌.
    இது போசத உபவாசன்‌ இலக்கணம்‌ கூறுகிறது
    (ப-ரை ஒரு திங்கள்‌ – மாதந்தோறும்‌, நால்வகை – நான்கு, பவ்வமே –
    பருவங்களிலே, நோன்பு – உபவாசம்‌, புரிபவன்‌ – செய்பவன்‌, போசதனாம்‌ –
    போசத உபவாசன்‌. ௪-று.
    (க-ரை! திங்கள்‌ தோறும்‌ நான்கு பருவங்களில்‌ உபவாசம்‌ இருப்பவன்‌
    போசத உபவாசன்‌ என்பதாம்‌.
    (வி-றை பவ்வம்‌ – பாகதமொழி. அஷ்டமி 2, சதுர்தசி 2 என நான்கு
    பருவங்களில்‌ உபவாசம்‌ இருப்பவன்‌ என்று கருத்து. இது நான்காம்‌ படிநிலை.
    அசித்தன்‌
    166 பழம்‌இலை சாயும்‌ பசியத்‌ துறந்தான்‌
    அழிவகன்ற அச்சித்த னாம்‌.
    இது அச்சித்தன்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
    (ப-றை பசிய – பச்சையான, பழம்‌ இலை காயும்‌ – பழம்‌, இலை, காய்‌
    முதலானவற்றைத்‌, துறந்தான்‌ – நீக்கியவன்‌, அழிவு அகன்ற – பாபம்‌ நீக்கிய,
    அச்சித்தனாம்‌ – அச்சித்தன ஆவான்‌. எ-று.
    1, ர. ௧. சிராவகாசாரம்‌ 8/18
    அருங்கலச்செப்பு 78
    (க-ரை பச்சையான காய்‌ கனிகளை நீக்கியவன்‌ அச்சித்தன்‌ என்பதாம்‌.
    (வி-ரை! சித்‌ – உயிர்‌, அசித்‌ – உயிரற்றது. உயிரற்ற அதாவது உலர்ந்த
    அல்லது வேகவைத்த காய்‌ கனிகளை உண்பவன்‌ என்பது கருத்து. இங்கே
    விரதி உண்ணத்தக்க காய்கனிகளை எடுத்துக்‌ கொள்ளவேண்டும்‌. எல்லா காய்‌
    கனிகளையும்‌ அன்று.
    செடியிலிருந்தோ மரத்திலிருந்தோ பறித்துவிட்டால்‌ அதற்கு உயிர்‌
    இல்லை என்று சிலர்‌ கருதுகின்றனர்‌. இது ஆகமத்திற்கு இசைவானது அன்று.
    பழம்‌, இலை முதலாயின தனி உயிருடையன. மரம்‌, செடி வெட்டப்பட்டாலும்‌,
    அவற்றின்‌ இலை, பழங்கள்‌ முதலானவற்றில்‌ உயிர்கள்‌ இருக்கின்றன. இந்த
    நோக்கிலேயே அவை உயிருடையன – ‘சசித்‌! எனப்படுகின்றன” அழிவு –
    உயிர்‌ அழிவு எனவே பாபம்‌ எனப்‌ பொருள்‌ கொள்ளப்பட்டது. இது ஐந்தாம்‌
    படிநிலை.
    இராத்திரி அபுக்தன்‌
    167 இருளின்கண்‌ நால்வகை ஊணும்‌ துறந்தான்‌
    இராத்திரி அபுக்தன்‌ எனல்‌.
    இது இராத்திரி அபுக்தன்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
    (ப-ரை இருளின்கண்‌ – இரவில்‌, நால்வகை – நான்கு வகைப்படும்‌.
    ஊணும்‌ – உணவையும்‌, துறந்தான்‌ – உண்பித்தலை விட்டவன்‌, இராத்திரி
    அபுக்தன்‌ – இராத்திரி அபுக்தன்‌, எனல்‌ – எனச்‌ சொல்லப்பெறுவான்‌. ௪-று.
    (க-ரை நான்கு வகை உணவினை உண்பித்தலை கைவிட்டவன்‌
    இராத்திரி அபுக்தன்‌ என்பதாம்‌.
    (வி-ரை இரவு உண்ணாமை முதல்‌ படிமையிலேயே விடப்படுகிறது.
    நீரும்‌ இரவில்‌ பருகுவதில்லை. அப்படி இருக்க இந்தப்படிமைக்கு என்ன நோக்கம்‌? முதல்‌ நிலையில்‌ தான்‌ மட்டுமே உண்பதில்லை. பிறருக்கு உண்பித்தலைச்‌ செய்தான்‌. ஆனால்‌ இந்தப்‌ படிமையில்‌ தானும்‌ உண்ணாமல்‌
  1. ர, ௧. சி. குறிப்புரை, 5 /20
    அருங்கலச்செப்பு 119
    பிறருக்கும்‌ உண்பித்தல்‌ இல்லை. செய்தல்‌, செய்வித்தல்‌, உடல்‌ படுதல்‌, மனம்‌, வசனம்‌ காயம்‌ என ஒன்பது வகையாலும்‌ இரவு உண்ணாமை
    இங்குப்‌ போற்றப்படுகிறது.
    ஆசாரியர்‌ சிலர்‌ இந்த படிமைக்கு ‘பகல்போக நீக்கம்‌’ எனப்‌
    பெயரிடுகின்றனர்‌. அங்கேயும்‌ மேலே கூறியது போல கருதுதல்‌
    வேண்டும்‌. இது ஆறாம்‌ படிநிலை,
    168 உடம்பினை உள்ளவாறு ஓர்ந்துணர்ந்து காமம்‌
    அடங்கியான்‌ பம்மன்‌ எனல்‌
    இது பிரமசரியன்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
    (ப-ரை) உடம்பினை – உடம்பின்‌ இயல்பினை, உள்ளவாறு –
    உள்ளது உள்ளபடியே, ஓர்ந்து – ஆய்ந்து, உணர்ந்து – அறிந்து, காமம்‌
  • அதன்மேல்‌ காம வேட்கையை, அடங்கியாள்‌ – அடக்கியவன்‌,
    பம்மன்‌ – பிரமசாரி, எனல்‌ – எனப்படுவான்‌. எ-று.
    (க-ரை) உடம்பின்‌ தூய்மையற்ற தன்மையை ஆய்ந்து அறிந்து
    அதன்மேல்‌ செல்லும்‌ காம வேட்கையை விட்டவன்‌ பிரமசாரி
    என்பதாம்‌.
    (வி-ரை! பம்மன்‌ – பாகதச்‌ சொல்‌.
    உடம்பின்‌ இயல்பு அறிந்து என்றதால்‌ உடம்பின்‌
    ஆக்கப்பாட்டில்‌ காணப்படும்‌ அசுசித்தன்மையும்‌, உடம்பு நிகழ்வில்‌
    காணப்படும்‌ அசுசித்தன்மையும்‌ ஆராயப்படவேண்டும்‌ என்பதாம்‌.
    தொடு உணர்ச்சி மட்டும்‌ இதன்‌ கருத்தாகக்‌ கொள்ளக்‌ கூடாது. தொடு
    உணர்ச்சி இங்கே முதன்மையாகக்‌ கூறப்பட்டுள்ளது என்று கொள்ள
    வேண்டும்‌. பிரமசாரி நிலையை நிலைப்படுத்த ஐம்புலன்களும்‌
    அடக்கப்படவேண்டும்‌. தன்‌ ஞானானந்த உயிரில்‌ நோக்கை
    நிலைப்படுத்தலே முதன்மையானது. அதுவே இந்த நிலையின்‌
    குறிக்கோளாகும்‌. இது ஏழாம்‌ படி நிலை.
    அருங்கயச்செப்பு 180
    169 கொலைவரு ஆராம்பம்‌ செய்தலின்‌ மீண்டான்‌
    அலகிலநா ரம்பன்‌ எனல்‌.
    இது அநாரம்பன்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
    (ப-ரை அலகில்‌ – அளவற்று, கொலைவரு – இம்சை வருவதற்கு
    ஏதுவாகிய, ஆரம்பம்‌ – தொழில்களை, செய்தலின்‌ – செய்தலிலிருந்து
    மீண்டான்‌ – விலகியவன்‌, அநாரம்பன்‌ – அநாரம்பன்‌, எனல்‌ – எளப்படுவான்‌.
    எ-று.
    (க-ரை! தொழிலில்‌ வரும்‌ அளவற்ற இம்சைக்கு அஞ்சி அதனை
    விட்டவன்‌ அநாரம்பன்‌ என்பதாம்‌.
    (வி-ரை) ஆரம்பம்‌ என்பது பொருள்களைச்‌ சேர்த்துக்‌ கொள்ள
    மேற்கொள்ளும்‌ வழி முறைகளாகும்‌. அதில்‌ காணப்படுவன எல்லாம்‌
    பாபமே. அதிலிருந்து விடுபடும்‌ நிலையே இது. ஆனால்‌, தானம்‌, பூஜாதி
    செயல்கள்‌ இங்கே நீக்கப்பட வில்லை. ஏனெனில்‌, இவை பாபத்தைக்‌
    கழிக்கும்‌ உபாயங்கள்‌; பாபத்தைச்‌ சேர்க்கும்‌ உபாயங்கள்‌ அல்ல. இந்த
    நிலையின்‌ குறிக்கோள்‌ எங்கே இச்சை உள்ளதோ அதனை விட வேண்டும்‌
    என்பதே. இது எட்டாம்‌ படிநிலை.
    170 இரு தொடர்ப்‌ பாட்டின்கண்‌ ஊக்கம்‌ அறுத்தான்‌
    உரியன்‌ அபரிக்ர கன்‌.
    இது அபரிக்ரகன்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
    (ப-ரை இரு தொடர்ப்பாட்டின்கண்‌ – இரண்டு வகைப்படும்‌
    பற்றுகளிடத்து, ஊக்கம்‌ – ஊக்கத்தை, அறுத்தான்‌ – நீக்கியவன்‌, அபரிக்ரகன்‌ – அபரிக்ரகன்‌, உரியன்‌ – (என்று சொல்ல உரிமையுடையவன்‌, எ-று.
    அருங்கலச்செப்பு 181
    (க-ரை இரண்டு வகை பற்றுகள்‌ மீது செல்லும்‌ ஊக்கத்தை விட்டவன்‌
    அபரிக்ரகன்‌ என்பதாம்‌.
    (வி-ரை! நிலம்‌, வாழிடம்‌, பொன்‌, கூலம்‌, ஆள்‌, விலங்கு, படுக்கை,
    ஊர்தி, ஆடை, ஏனம்‌ இப்பத்தும்‌ புறத்தொடர்புகள்‌ – புறப்பற்றுகள்‌.
    மித்தியாத்துவம்‌, பெண்வேதம்‌, ஆண்வேதம்‌, அலிவேதம்‌, சிரிப்பு, விருப்பு,
    விருப்பின்மை, சோகம்‌, அச்சம்‌, கோபம்‌, மானம்‌, மாயை, உலோபம்‌
    இப்பதினான்கும்‌ அகத்தொடர்புகள்‌ – அகப்பற்றுகள்‌ ‘இரு தொடர்ப்பாட்டின்‌
    நீங்கி’ எனக்‌ குறிப்பர்‌ மேருமந்தரத்தார்‌.’ இந்த 24 பற்றுகள்‌ மீதும்‌ செல்லும்‌
    மனக்கிளர்ச்சியை ‘ஊக்கம்‌’ என்றார்‌. இந்தப்‌ படிநிலையாளர்‌ தன்‌
    பயன்பாட்டுக்கு வேண்டிய ஆடை முதலானவற்றை வைத்துக்‌ கொண்டு
    பிறவற்று மீது தன்‌ உரிமையை விட்டுவிடுகிறார்‌. எனவே தான்‌ தொழில்‌
    முதலியன செய்வதில்லை தன்னிடம்‌ உள்ளதைக்‌ கொண்டு மகிழ்ச்சியோடு
    இருக்கிறார்‌. தன்‌ பார்த்தல்‌ அறிதல்‌ இயல்பில்‌ நிலைப்படுதலே பற்றுகள்‌
    விடுதலின்‌ பயனாம்‌. இது ஒன்பதாம்‌ படி நிலை.
    174 யாதும்‌ உடன்பாடு வாழ்க்கைக்கண்‌ இல்லவன்‌
    மாசில்‌ அனனு மதன்‌.
    இது அனனுமதன்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
    (பறை வாழ்க்கைக்‌ கண்‌ – இல்வாழ்வில்‌, யாதும்‌ உடன்பாடு – எந்த
    உடன்படுதலும்‌, இல்லவன்‌ – இல்லாதவன்‌, மாசு இல்‌ – குற்றம்‌ இல்லாத,
    அனனுமதன்‌ – அனனுமதன்‌ ஆவான்‌, எ-று
    (க-ரை! இல்வாழ்வில்‌ எந்த உலகியல்‌ தொடர்புகளிலும்‌ தன்னை
    உடன்படுத்திக்‌ கொள்ளாதவன்‌ அனனுமதன்‌ ஆவான்‌ என்பதாம்‌.
    (வி-ரை உழவு, வாணிகம்‌, முதலான தொழில்‌, பிற உலகியல்‌ நிகழ்வுகள்‌
    எதிலும்‌ தன்‌ ஒப்புதலைத்‌ தராது இருக்கும்‌ சமான பார்வை உடையவனே
    அனனுமதன்‌ ஆவான்‌. அநாரம்ப நிலையில்‌ புதிய வருவாய்க்குத்‌ தடை
  1. மேருமந்தர புராணம்‌, 411
    அருங்கலச்செப்பு 182
    கட்டப்பட்டது. அபரிக்ரக நிலையில்‌ பொருள்‌ உரிமை விடப்பட்டது. இந்தப்‌
    படிநிலையில்‌ பரிக்ரகம்‌ தொடர்பாக ஒப்புதல்‌ தருதலும்‌ விடப்பட்டது. தன்‌
    வழி முறையினர்‌ செய்வது கண்டு நடுநிலையோடு இருக்கிறான்‌. அவர்கள்‌
    இழப்பு ஊதியம்‌ பற்றி சிந்தனை இல்லை. உணவுக்கு அழைத்தால்‌ போவான்‌.
    ஒரு வேளை உண்ணுகிறான்‌. அறச்‌ செயல்களில்‌ கேட்டால்‌ ஒப்புதல்‌ தரலாம்‌.
    தானே முனைந்து அவற்றில்‌ ஈடுபடுவதில்லை. இது பத்தாம்‌ படிநிலை.
    172 மனைதுறந்து மாதவர்‌ தாளடைந்து நோற்று
    வினையறுப்பான்‌ உத்‌ திட்ட னாம்‌.
    இது உத்திட்டன்‌ இலக்கணம்‌ கூறுகிறது.
    (ப-றை மனை துறந்து – வீடு முதலானப்‌ பற்றுகளைவிட்டு, மாதவர்‌ –
    பெரும்‌ தபமுடைய முனிவர்‌, தாளடைந்து – திருவடிகளில்‌ பணிந்து, நோற்று
  • தீக்ஷை ஏற்று நோற்றலைச்‌ செய்து, வினை – வினைகளை, அறுப்பான்‌ –
    கெடுப்பவன்‌, உத்திட்டனாம்‌ – உத்திட்டன்‌ விரதி ஆவான்‌, எ-று
    (க-ரை வீடு துறந்து முனிவர்‌ தாள்‌ பணிந்து நோற்று வினைகளை
    அறுப்பவன்‌ உத்திட்டன்‌ என்பதாம்‌.
    (வி-ரை! தனக்கு எனக்‌ குறித்த உணவை ஏற்காதவன்‌ உத்திட்ட விரதி
    ஆவான்‌. தற்கால நடைமுறையில்‌ இந்த நிலையினர்‌ சுல்லகர்‌, ஐலகர்‌ என
    இரண்டு வகைப்படுவர்‌. ஐலகர்‌ கோவணம்‌ மட்டும்‌ உடையவர்‌ சுல்லகர்‌
    கோவணத்தோடு கழுத்தளவு நீள வேட்டி வைத்திருப்பார்‌. ஐலகர்‌ மயில்‌ பிஞ்சம்‌ வைத்திருப்பார்‌. சுல்லகரும்‌ பிஞ்சம்‌ வைத்திருக்கிறார்‌. கையால்‌ மயிர்‌
    பறிக்கின்றனர்‌. சுல்லகர்‌ பாத்திரத்தில்‌ உணவு கொள்கிறார்‌. ஐலகர்‌ கையில்‌ உணவு கொள்கிறார்‌. இருவரும்‌ அமர்ந்து உணவு ஏற்கின்றனர்‌. இருவரும்‌ நடந்தே போகின்றனர்‌. இந்த நிலையினர்‌ ஊர்தியில்‌ ஏறுதல்‌ கூடாது.
    முதல்‌ ஆறு படிநிலையினர்‌ கடைநிலை சாவகர்‌; ஏழு முதல்‌ ஒன்பது வரை இடைநிலை சாவகர்‌; பத்தும்‌ பதினொன்றும்‌ தலைநிலை சாவகர்‌. பதினோராம்‌ நிலையுடை பெண்‌ துறவி ஆர்யிகை எனப்படுகிறார்‌. 16 முழ வெள்ளை ஆடை உடுத்துகிறார்‌. பெண்‌ நிலையில்‌ இது உயர்ந்த நிலை
    அருங்கலச்செப்பு 183
    ஆகும்‌. அதனால்‌ உபசாரத்தினால்‌ மகாவிரதி எனக்‌ கருதப்படுகிறார்‌.
    அவருக்குக்‌ கீழ்‌ நிலை சுல்லிகை ஆவார்‌. இவர்‌ 16 முழ சேலையுடன்‌ ஒரு
    துப்பட்டியும்‌ வைத்துள்ளார்‌. இவர்கள்‌ மாற்றுடையும்‌ வைத்துள்ளனர்‌.
    173 முன்னைக்‌ குணத்தொடு தத்தம்‌ குணமுடைமை
    பன்னிய தானம்‌ எனல்‌.
    இது படிநிலையர்‌ ஒழுக்கம்‌ கூறுகிறது.
    (ப-ரை! பன்னிய-மேலே கூறப்பட்ட, தானம்‌ – படிநிலைகளில்‌
    முன்னை கீழ்ப்படி நிலையில்‌ கூறப்பட்ட, குணத்தோடு-குணங்களோடு,
    தத்தம்‌-அந்த அந்தப்படி நிலைக்குக்‌ கூறப்பட்ட, குணமுடைமை-
    குணங்களை உடையவராக இருத்தல்‌ வேண்டும்‌, எனல்‌-என்று கொள்ளல்‌
    வேண்டும்‌, எ-று.
    (க-ரை) அந்த அந்த நிலைக்குரிய ஒழுக்கங்களோடு கீழ்‌ நிலை
    ஒழுக்கமும்‌ உடன்‌ போற்றப்படும்‌ இப்பதினோரு படிநிலைகளிலும்‌
    என்பதாம்‌.
    (வி-ரை கீழ்ப்படி நிலை குணங்களோடு சேர்த்தே அந்த அந்தப்‌
    படிநிலைக்குக்‌ கூறப்பட்ட குணங்களைப்‌ போற்ற வேண்டும்‌. என்பதன்‌
    கருத்து மேல்நிலை ஏற்கும்‌ போது கீழ்‌ நிலையில்‌ செய்த விரத ஒழுக்கங்களை
    கை விடுதல்‌ கூடாது என்பதாம்‌. தானம்‌ “- ஸ்தானம்‌; வடமொழித்திரிபு.
    174 பாவம்‌ பகையொடு சுற்றம்‌ இவைசுருக்கி
    மோவமோடு இன்றி உணர்‌.
    இது நூல்‌ உணரும்‌ விதி கூறுகிறது.
    (பறை பாவம்‌ – பாவச்‌ செயல்கள்‌, பகையொடு-பகை உணர்வோடு,
    சுற்றம்‌ – உறவுகள்‌ இவை – இவற்றை சுருக்கி – குறைத்து, மோவமோடு –
    மயக்கத்தோடு, இன்றி – இல்லாமல்‌, உணர்‌ – நூலை உணர்தல்‌ வேண்டும்‌.
    அருங்கலச்செப்பு 184
    க-ரை பாபச்செயல்‌, பகை, சுற்றம்‌ இவைமேல்‌ செல்லும்‌
    உணர்வுகளைச்‌ சுருக்கி மயக்கம்‌ இல்லாத மன நிலையில்‌ இந்நூலை உணர
    வேண்டும்‌ என்பதாம்‌.
    (வி-ரை பாபம்‌ – மித்தியா தரிசனம்‌, மித்தியாஞானம்‌, மித்தியா
    ஒழுக்கம்‌; பகையுணர்வு, பாசவுணர்வு, மயக்கம்‌ இவை எல்லாம்‌ நீங்கிய
    நிலையிலே இந்நூலை ஓத வேண்டும்‌ என்பதாம்‌.
    *775 அருங்கலச்‌ செப்பினை ஆற்றத்‌ தெளிந்தார்‌
    ஒருங்கு அடையும்‌ மாண்பு திரு.
    இது நூல்‌ கற்றலினால்‌ வரும்‌ பயன்‌ கூறுகிறது.
    (ப-ரை அருங்கலச்‌ செப்பினை – அருங்கலச்‌ செப்பு நூலை, ஆற்ற –
    மிகவும்‌, தெளிந்தார்‌ – தெளிந்தவருக்கு, மாண்பு – பெருமையுடைய, திரு –
    வைபவங்கள்‌ ஒருங்கே – ஒருசேர, அடையும்‌ – வந்து சேரும்‌, எ-று.
    (குரை அருங்கலச்‌ செப்பு நூலை மேலே கூறிய முறையில்‌
    கற்போருக்குப்‌ பெருமையுடைய வைபவங்கள்‌ வந்து சேரும்‌ என்பதாம்‌.
    176 வந்தித்தாய்ந்து ஒதினும்‌ சொல்லினும்‌ கேட்பினம்‌
    வெந்து வினையும்‌ விடும்‌.
    இதுவும்‌ அது.
    (பரை வந்தித்து – வழிபட்டு, ஆய்ந்து – ஆராய்ந்து, ஓதினும்‌ – தான்‌ மனப்பாடம்‌ செய்யினும்‌, சொல்லினும்‌ – பிறர்க்கு எடுத்துக்‌ கூறினாலும்‌, கேட்பினும்‌ – பிறர்‌ சொல்ல தான்‌ கேட்டாலும்‌, வினையும்‌ – அவர்களைப்‌
    பந்தித்துள்ள வினைகளும்‌, வெந்து விடும்‌ – பொசுங்கிவிடும்‌, எ-று.
    . (க-ரை! அருங்கலச்‌ செப்பு நூலை ஆய்ந்து மனப்பாடம்‌ செய்தாலும்‌ பிறர்க்குச்‌ சொன்னாலும்‌, தான்‌ கேட்டாலும்‌, அவர்களுக்கு வினை அழியும்‌

என்பதாம்‌.

  • இது முதல்‌ வரும்‌ குறள்கள்‌ இடைச்செருகலாகக்‌ கருதப்படுகின்றன.
    அருங்கலச்செப்பு 185
    177 தரப்பினில்‌ மீளாக்‌ கடுந்தவம்‌ நீருற்ற
    உப்பினில்‌ மாய்ந்து கெடும்‌.
    இதுவும்‌ அது.
    (ப-ரை) தப்பினில்‌ – அதிசாரங்களில்‌, மீளா – நீங்கிய, கடும்‌ –
    கடுமையான, தவம்‌ – தவத்தால்‌, நீருற்ற – நீரில்‌ பொருந்திய, உப்பினில்‌ –
    உப்பைப்போல, மாய்ந்து – அவன்‌ வினைகள்‌ மறைந்து, கெடும்‌ – அழியும்‌,
    எ-று.
    (க-ரை! நீரில்‌ கரையும்‌ உப்புப்போல அருங்கலச்‌ செப்பில்‌ கூறிய
    ஒழுக்கங்களை அதிசாரம்‌ இல்லாமல்‌ மேற்கொள்வான்‌ வினைகள்‌ மறைந்து
    போகும்‌ என்பதாம்‌.
    178 காமம்‌ வெகுளி மயக்கம்‌ இவைமூன்றின்‌
    நாமம்‌ கெடக்கெடும்‌ நோய்‌.
    (ப-றை காமம்‌ – ஆசை, வெகுளி – கோபம்‌, மயக்கம்‌ – மோகம்‌, இவை
    மூன்றின்‌ – இம்‌ மூன்றினது. நாமம்‌ – பெயர்‌, கெட-கெட்டுவிட, நோய்‌ – பிறவி,
    கெடும்‌ – அழியும்‌, எ-று
    (க-றை காமம்‌ முதலான மூன்றும்‌ அழிந்தால்‌ பிறவியும்‌ அழியும்‌
    என்பதாம்‌. இது திருக்குறள்‌. பா. (360.
    179 முத்தி நெறிகாட்டும்‌ முன்னறியா தார்க்கெல்லாம்‌
    சித்தி அருங்கலச்‌ செப்பு.
    இதுவும்‌ அது.
    (ப-றை சித்தி – வேண்டியன அடையச்‌ செய்யும்‌, அருங்கலச்செப்பு –
    அருங்கலச்‌ செப்பு. முன்னறியாதார்க்‌ கெல்லாம்‌ – முன்பு எப்போதும்‌ கேட்டு
    அறியாத அனைவருக்கும்‌ முத்தி நெறி – வீடுபேற்று நெறியை, காட்டும்‌
    விளக்கும்‌, எ-று.
    அருங்கலச்செப்பு 186
    (க-றை அருங்கலச்‌ செப்பு வீடுபேற்று நெறியை அனைவருக்கும்‌
    உணர்த்த வல்லது என்பதாம்‌.
    180 தீரா வினைதீர்க்கும்‌ சித்திபதம்‌ உண்டாக்கும்‌
    பாராய்‌ அருங்கலச்‌ செப்பு.
    இதுவும்‌ அது.
    (ப-றை அருங்கலச்‌ செப்பு – அருங்கலச்‌ செப்பு என்னும்‌ இந்நூல்‌,
    தீராவினை – நீங்குதற்கு அரிய வினைகளை, தீர்க்கும்‌ – கெடுக்கும்‌; சித்தி
    பதம்‌ – மோக்ஷ நிலையையும்‌, உண்டாக்கும்‌ – உண்டு பண்ணும்‌; பாராய –
    அதனால்‌ இந்நூலை ஆய்ந்து பார்ப்பாயாக, ௪-று.
    (க-ரை) அருங்கலச்‌ செப்பு ஓதுவோர்‌ வினைகெடுத்து முத்தி
    பதவியையும்‌ அடைவர்‌ என்பதாம்‌.
    மங்கலம்‌.
    அருங்கலச்செப்பு மூலமும்‌ சிராவகாசார ஸம்ஸ்கார்‌ உரையும்‌ முற்றும்‌.

TVA_BOK_0011659_அருங்கலச்செப்பு (1).pdf

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply