நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் (1895 – 1947) மறைந்து 75 ஆவது நிறைவு

நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள்
(1895 – 1947) மறைந்து 75 ஆவது நிறைவு

பேராயர் எஸ். ஜெபநேசன்

சேசு : August 2018

தமிழே யுலகத் தாய்மொழி யென்று
பறையடித் தோதிய பன்மொழிப்புலவன்
சொல்லா ராய்ச்சியும் தொல்லா ராய்ச்சியும்
வல்லவன் பையி வழியே நடப்பேன்
மலையுக தேசமே கலையெனக் கொண்ட
ஞானப்பிரகாச நாவன் இலங்கை
என்றும் போற்றும் எழிலார் வித்தகச்
செல்வனைத் தமிழர் சிந்தித்து நிதம்
புரிக தழிழ்ப்பணி பொலிக நல்லறிவே

-யோகி சுத்தானந்த பாரதியார்-

நல்லூர் ஞனப்பிரகாச சுவாமிகள் 1895ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முப்பதாம் திகதி மானிப்பாயில் பிறந்தார். 1947 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் இருபத்தியிரண்டாம் திகதி யாழ் நல்லூரில் தமது வாழ்வை முடித்துக் கொண்டார்.
இவருடைய குழந்தைப் பருவத்தையும் பிள்ளைப் பருவத்தையும் பார்க்கும் பொழுது சைவசமயம் புரட்டாஸ்தாந்து கிறிஸ்துவம் (அமெரிக்க மிசன்) கத்தோலிக்க சமயம் என்பன அவரை உருவாக்குவதில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன என்று கண்டு கொள்ளலாம்.

சுவாமிகளுடைய தாய்வழிப் பாட்டனார் மானிப்பாயைச் சேர்ந்த காடினார் சிற்றம்பலம். இவர் காடினர் என்ற பெயரைப் பெற்றிருந்தாலும்
கிறிஸ்தவரல்லர். மானிப்பாயின் பழம்பெரும் சைவக் குடும்பமொன்றைச் சேர்ந்தவர். இவர் தமது மூத்த மகளான தங்கமுத்து சாமிநாதபிள்ளை என்ற ஆசிரியப் பெருந்தகைக்கு மணம் முடித்துக் கொடுத்தார். சாமிநாதபிள்ளையைப்பற்றி ஞானப்பிரகாசரின் வாழ்கை வரலாற்றை எழுதியவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.1
;.
சைவப்பழமாகிய சாமிநாதபிள்ளை தன்னுடைய தனயன் பிற்காலத்தில் செய்யவிருக்கும் அரும்பணிகளைக் கண்டு ஆச்சரியமடைந்தவரைப்
போல பெருமூச்சு விடுகின்றார். சாமிநாதபிள்ளை தமது மகனுக்கு வைத்தியலிங்கம் என்று பெயரிட்டார். ஆனால் வைத்தியலிங்கம் ஒரு வயதாக இருக்கும் பொழுதே சாமிநாதபிள்ளை மறைந்து விட்டார்.
தந்தையின் மரணத்திற்குப் பின்பு வைத்தியலிங்கம் நாற்பது நாட்கள் காய்சலினால் பீடிக்கப்பட்டு வருந்தினார். அமெரிக்க மிசன்
பாடசாலைகளிற் கற்றிருந்த தங்கமுத்து பைபிளிலிருந்து யோபு என்ற பகுதியை வாசித்து கண்ணீர்விட்டு வேண்டுதல் செய்தார்.
“கடவுளே என் குழந்தை இப் பேராபத்தான வருத்தத்திலிருந்த தவறுமானால் உமது சேவைக்கே இந்தப் பாலகனை அர்ப்பணம் செய்கின்றேன். உமது திருவேதத்தை பரப்பும் ஒரு போதகராக இவனை ஏற்றுக்கொள்ளும்”என்று மன்றாடினார்.
வைத்தியலிங்கம் சுகமடைந்தார். தங்கமுத்து கைம்பெண்ணாகவிருப்பதை அவரின் தகப்பனார் காடினர் சிற்றம்பலம் விரும்பவில்லை. தங்கமுத்துவுக்கும் அச்சுவேலியைச் சேர்ந்த சந்தியாப்பிள்ளை தம்பிமுத்துப் பிள்ளைக்கும் திருமணம் நடைபெற்றது. தம்பிமுத்துப்பிள்ளை
கத்தோலிக் திருச்சபையின் முக்கியமான அடியார்களில் ஒருவர். கத்தோலிக்க நூல்களைப் படிப்பதோடு அமையாது “சன்மார்க்க போதினி” என்ற மாதாந்தப் பத்திரிகையையும் நாற்பத்தேழு வருடங்களாக நடத்தியவர்.
ஞானப்பிரகாசரின் கல்விமிசன் ஆரம்ப பாடசாலை மானிப்பாய் மெமோரியல் பாடசாலை யாழ் பத்திரிசியார் கல்லூரி என்பனவற்றில் தொடர்ந்தது. படிப்பு முடிந்ததும் புகையிரதப் பகுதியில் நியமனம் பெற்று நாவலப்பிட்டியில் பணியாற்றத் தொடங்கினார்.
இக்கால கட்டத்திலேதான் கிறஸ்தவ துறவியாகி இறைவனுக்கும் மக்களிற்கும் தொண்டாற்ற வேண்டுமெனற எண்ணம் அவர் உள்ளத்தில் தோன்றலாயிற்று. அவரின் முடிவு சிறிய தகப்பனாராகிய தம்பிமுத்துப்பிள்ளைக்கு பேரிடியாகவிருந்தது. அவர் ஞானப்பிரகாசர்
தமது அச்சுபணியையும் பத்திரிகைப் பணியையும் தொடர்ந்து செய்வார் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். ஞானப்பிரகாசர் தனது முடிவை
மாற்றிக் கொள்ளவில்லை. . புனித மாட்டீனார் குருத்துவ பள்ளியில் பயின்று 1901ஆம் ஆண்டு தனது 26 வயதிலே குருவாக அபிசேகம்
பண்ணப்பட்டார்.
இதற்குப் பின்பு மொழியாராய்சி வரலாற்று ஆராய்ச்சி மதப்பிரசாரம் எனப் பலவற்றில் அரியசாதனை படைத்தார். இவை ஒவ்வொன்றிற்கும் அவர் ஆற்றிய பணிகள் மகோன்னத மானவை. இந்தப் பணிகளே சுவாமி ஞானப்பிரகாசரை இலங்கையின் ஒப்பாரும் மிக்காருமற்ற பேரறிஞனாகவும் காட்டி நிற்கின்றன.
மொழியாராய்ச்சி
பேராசிரியர் வி.செல்வநாயகம் ‘தமிழர்க்குச் செய்த தொண்டிலே ஞானப்பிரகாசர் செய்த தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சியே மிகமிகச்
சிறந்ததென்று குறிப்பிடலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஞனப்பிரகசர் தமது சொந்த முயற்சியினால் இருபதுக்கு மேற்பட்ட மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார். சமஸ்கிருதம் பாளி, சிங்களம், தெலுங்கு மலையாளம், ஹிந்தி, போர்த்துக்கேயம், ஆங்கிலம், இலத்தீன், ஜெர்மன் முதலிய மொழிகளைக் கற்று அவற்றோடு தமிழை ஒப்பிட்டு ஆராய்ந்தார். இதன் மூலமாக பல வியப்ப10ட்டும் உண்மைகளை வெளிக்கொணர்ந்தார்.
அவருடைய கருத்து தமிழே உலகத்தின் தாய்மொழி என்பதாகும். இதற்கு சான்றாக பண்டைய மொழிகளில் தமிழ்ச் சொற்கள் விரவியிருப்பதனைக் காண்பித்தார். மேலும் அ,இ,உ, எ என்னும் நான்கு எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டே தமிழிலுள்ள எல்லாச்
சொற்களும் பிறந்தன என்று எடுத்துரைத்தார்.
தமிழ் மக்களுக்கு அவர் அளித்த இன்னொரு பெருங்கொடை அவரை உருவாக்கி அளித்த சொற்பிறப்பு – ஒப்பியல் தமிழ் அகராதி (etymological and comparative Lexicon of Tamil Language). ஆனால் இந்த நூல் முற்றுப்பெற முன்னரே அவர் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்.
சொற்பிறப்பு அடிப்படையில் அவருடைய விளக்கத்தைப் பின்வரும் பதங்களில் காணலாம்.
அப்போஸ்தலன் – As Appostalan n(Port. apostolo fr, Ger, apo – stella to end away) Chr Apostle – கிறிஸ்து நாதரின் தலைமைச் சீடர்களில் ஒருவன்.
அப்பர் – -appar m (pl from appan) (1) onorofic for father பிதாவுக்கு மரியாதைப் பெயர். Thirunavukkarasu Nayanmar இயற்றிய மூவருள் ஒருவர்.
(3) Ram – He goat
ஆணாடு – தொல்க பொ 602
4.male monkey ஆண் குரங்கு – சஸ்டி உரை
வரலாற்று ஆராய்ச்சி
பேராசிரியர் சி.பத்மநாதன் சுவாமி ஞானப்பிரகாசர் இலங்கையில் தோன்றிய தமிழ் அறிஞர்களில் ஒப்புயரற்ற அறிவாற்றிலும் புலமையும் கொண்டவர் என்று குறிப்பிடுகின்றார்.
மேலும் இவருடைய வரலாற்றுப் புலமைக்கும் ஆற்றலுக்கும் இரண்டு காரணங்கள் இருந்தன என்று கூறுகின்றார். . முதலாவது
குருத்துவப் பணயில் அவர் பெற்றிருந் பயிற்சி. இரண்டாவது அக்காலத்தில் நிலவிய கீழைத்தேய கல்வி ஆர்வம். குருத்துவக் கல்லூ
ரியிலே வரலாற்றை நன்க கற்றுக் கொள்ள சுவாமி ஞானப்பிரகாசருக்கு வாய்புக் கிட்டியது. கிறிஸ்தவ திருச்சபை வரலாற்றிற்கு
முக்கியத்துவம் கொடுத்தது ஐரோபாவின் மத்திய காலத்திலே திருச்சபை வரலாறுகள் நன்கு எழுதப்பட்டு வந்தன. இதனைப் போலவே 19 ஆம் நூற்றாண்டில் கிளர்ந்தெழுந்த கீழைத்தேய கல்வி ஆர்வம் ஞானப்பிரகாசனை தகை சார்ந்த வரலாற்றாளராக்கியது. கீழைத் தேய கல்வி
ஆர்வலர்கள் (ORIENTALISTS) தென்னாசியாவின் கலை கலாசாரம் எனப் பலவற்றைத் துருவித் துருவி ஆராய்ந்தனர்.
சுவாமி ஞானப்பிரகாசர் வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டமைக்கு அவர் தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் கொண்டிருந்த பற்று முக்கியமான காரணமாகும். ஆனால் அவருடைய நூல்களிலே காழ்ப்பையோ, பக்கச் சார்பையோ காண முடியாது. அவருடைய நேர்மையான பதிவுகளுக்கு பின்வருவனவற்றை உதாரணமாகக் காட்டலாம்.
இடப் பெயர்களின் வரலாறு என்ற நூலில் நாராந்தனையை நாராந்தெனிய என்ற சிஙகளப்பெயருடன் தோன்றியது என்கிறார். அதாவது தோடம்பழத்தோட்டம். அவ்வாறே கொய்யாத்தோட்டம் பேரதெனியா என்கிற சிங்களக் பெயரினால் உருவாகியது என்கிறார்.
மாவிட்டபுரத்தை மகாவட்டபேர (பெரிய ஆலமரவிகாரை) என்று கூறுகின்றார். தொல்புரம் சுளிபுரம் என்பன பழைய கிராமம் தொல்பேத சுளிபேத என்ற விகாரைகள் இருந்த இடமென்றும் கூறியுள்ளார். கம என்ற கிராமத்தை உணர்தும் சொல் மல்லாகம் சுன்னாகம் கொடிகாமம் பண்ணாகம்
என்ற கிராமத்தை உணரர்த்தும் சொல் மல்லாகம் சுன்னாகம் கொடிகாமம் பண்ணாகம் என்று தோன்றியவை. வில, சிட்டி, ஆல என்ற
இறுதிபெற்ற பல சிங்களப் பெயர்களே என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். வட இலங்கையிலுள்ள பல பெயர்ச் சொற்கள் சிங்களச் சொற்களின்
சிதைவுகளே இவற்றை சுவாமிஞானப்பிரகாசர் ஒளிவு மறைவின்றி எடுத்துக் கூறுகின்றார்.
அவருடைய ஏனைய முக்கியமான நூல்கள் யாழ்ப்பண இராச்சியத்தின் வரலாறு தமிழ், சிங்களம், பாளி போர்த்துக்கேஸ ஆங்கிலம்
முதலிய மொழிகளிலே கிடைக்கப் பெற்ற சான்றுகளைக் கொண்டு உள்ளூரில் நிலவிய மரபுகளைக் கொண்டே எழுதப்பட்டவை. வையா
பாடல் என்ற கவிதை நூலை மயில்வாகனப் புலவர் எழுதினார். இதனை வையா வசனம் என்று உரைநடையில் வழங்கினார் சுவாமி
ஞானப்பிரகாசர்.

‘In Jaffna you may work other miracles but not the one of dissipating the unchristian atmosphere
of caste which may be said to permeate the very being of the Tamil man such is the tyranny of
pre judice nurtured trough centuries and millenniums ’

டிக்குறிப்பு
1 அமுத – நெஞ்சே நினை – வி;துவான் ச. அடைக்கல முத்து பக்கம் 10
2 மேற்படி பக்கம் 11
3 பேரசிரியர் சி.பத்மநாதன் Jaffna College Miscellany
Centenary publication – October 1879 பக்கம் 104-109
4 அழகரசன் அடிகள் கலாநிதி வே.அன்ரனி ராஜன் – சுவாமி ஞானப்பிரகாசர் சிந்தனைகளையும் பணியும்
பக்கம் 36 – 1981 மே 22ல் சுவாமி ஞனப்பிகாசர் நினைவு முத்திரையை வெளியிட்ட போது நடத்தப்பட்ட
கருத்தங்கலில் வாசிக்கப் பெற்ற கட்டடுரைகள்.
‘ஐn துயககயெ லழர அயல றழசம ழவாநச அசையஉடநள டிரவ ழெவ வாந ழநெ ழக னளைளipயவiபெ வாந ரnஉhசளைவயைn யவஅழளிhநசந
ழக உயளவந றாiஉh அயல டிந ளயனை வழ pநசஅநயவந வாந எநசல டிநiபெ ழக வாந வுயஅடை அயn ளரஉh ளை வாந வலசயnலெ ழக
pசந தரனiஉந ரெசவரசநன வசழரபா உநவெரசநைள யனெ அடைடநnnரைஅள ’
5 மேற்கோள் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply