சந்திரிகாவின் தீர்வுப் பொதியும் …புதிய அரசியல்

சந்திரிகாவின் தீர்வுப் பொதியும் …புதிய அரசியல் கலாச்சாரத்திற்கான அறைகூவலும்…நண்பர் Yoga Valavan Thiya ன் பார்வையில்…

நண்பர் Ruthirakumar Jeyaratnam அவர்களின் கேள்வி:- 

“சந்திரிகா கொண்டு வந்த அரசியல் தீர்வுப் பொதி ஒரு “பொக்கிசம்” என்ற வகையில் தற்காலத்தில் கருத்துக்கள் விதைக்கப்பட்டு வருகிறது. இனப்பிரச்சினை என்பது இதுவரை இலங்கையில் மாத்திரம் ஏற்படவேயில்லை அதே போன்று இனங்களுக்கிடையில் ஏற்படக் கூடிய பிரச்சினையை அரசியல் முறைமைகளுக்கூடாக முன்னேற்பாடாக தவிர்த்துக் கொண்ட நாடுகளுடன் ஒப்பீடு செய்து “சந்திரிகாவின் தீர்வுப் பொதி” எத்தகைய சாதக பாதகங்களைக் கொண்டிருந்தது என்பதை விளக்க முடியுமா?”

நண்பர் Yoga Valavan THIYA ன் பதில்:- 

“பகுதி 1 :- இங்கு Stanislus Celestine ன் பதிவுக்கு நான் எழுதிய பின்னூட்டத்தின் பிரதான தொனிப்பொருள் இனப்பிரச்சினை தீர்வுக்கு யார் உளமார உழைத்தார்கள் என்பதேயாகும். நானும் Stanislus Celestine ம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களாக இருந்திருக்கிறோம். இன்றும் விமர்சனங்களுடன் ஆதரவாளர்களாக இருக்கின்றோம். TNA ஐ விமர்சிக்க எம் இருவருக்கும் அத்தனை உரிமையும் இருக்கின்றது. நாம் ஆதரித்த அமைப்பை விமர்சிப்பது என்பது எம்மை நாமே சுயவிமர்சனம் செய்வது போலாகும் . 

இனப்பிரச்சனை தீர்வுக்கு மைதிரி ரணில் சம்மந்தன் ஆகிய மூவரும் உளமார உழைக்கவில்லை பம்மாத்து பண்ணுகிறார்கள் என குற்றம் சாட்டி சந்திரிக்கா உளமார உழைத்தார் என குறிப்பிட்டிருந்தேன். நான் தீர்வு பொதியின் நல்லது கெட்டது என்ற விடயத்துக்குள் போகவில்லை. 1994 ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா நான் பிரபாகரனுடன் பேசுவேன் இனப்பிரச்சினையை தீர்ப்பேன் என்று சிங்கள மக்களிடம் கூறியே வாக்கு கேட்டார். வரலாற்றில் என்றும் இல்லாதவாறு 65 % மக்கள் அவருக்கு வாக்களித்தனர். பதவிக்கு வந்த உடனேயே தனது இராணுவ அதிகாரிகளைக் குற்றம் சாட்டினார். இராணுவதளபாட கொள்வனவுக்காக கமிசன் பெறும் இராணுவ அதிகாரிகளே யுத்தத்தை தொடர வேண்டும் என்று கூறுகின்றார்கள் எனக் கூறினார். புலிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கினார், நீலன் திருச்செல்வத்தை உள்ளடக்கி இனபிரச்சனைக்குத் தீர்வாக ” தீர்வு பொதி “ஒன்றை உருவாக்கினார். அது இலங்கையை பிராந்தியங்களாக பிரித்து அதிகாரங்களை பிரித்தளித்தலை அடிப்படையாக கொண்டது. சாராம்சம் 13 திருத்த சட்டத்தை விட மேலானது அப்போது இணைந்திருந்த வட கிழக்கு மாகாணங்கள் ஒருபிராந்திய ( தமிழர் பிராந்திய ) அலகாக கொள்ளப்படும். இந்த தீர்வுத்திட்டத்தை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காக ” சுதுநிலமே ” ( வெண்தாமரை இயக்கம் ) ஒன்றை உருவாக்கி சிங்கள தமிழ்மக்கள் மத்தியில் கடுமையாக பிரச்சாரம் செய்தார். இவை அனைத்தையும் பதவிக்கு வந்து ஒருவருட காலத்துக்குள் செய்தார். இனப்பிரச்சனை முதலில் தீர்கப்படவேண்டும் அதுவே இலங்கையின் பொருளாதா வளர்சிக்கு உதவும் என உணர்ந்து அதில் உளமார அதிக அக்கறை செலுத்தினார். 

அவர் பிரதமராக பதவி ஏற்றது ஆகஸ்ட் 1994. அக்டோபர் 13 ல் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்தையை தொடங்கினார். 1994 நவம்பர் ஜனாதிபதி தேர்தல் அமைதிப் பேச்சுக்கள் நடைபெற்ற காலத்திலேயே இடம்பெற்றன. 65 % வாக்குகளை பெற்று ஜனாதிபதியானார். 
ஆனால் விடுதலை பு் புலிகளுடனான பேச்சுவார்த்தை 1995 ஏப்பிரல் 19 ல் முடிவுக்கு வந்தது. சிங்கள மக்களின் அமோக ஆதரவை பெற்ற ஒருவருக்கு ஒத்துழைத்து யுத்தத்தை நிறுத்தி தொடர்ந்து சிக்கல்களுக்கிடையேயும் பேச்சுவார்தையை தொடரவேண்டும் என்ற will power பிரபாகரனிடம் இருக்கவில்லை. அவரது will power எப்படியும் தனிநாட்டை பெறுவது என்பதில்தான் இருந்தது. பேச்சுவார்தையை தம்மை பலப்படுத்துவதற்கான கால நீடிப்பாகவே அவர் பயன் படுத்திக் கொண்டார். அது எவ்வளவு தூரம் பூகோள அரசியலில் சாத்தியம் யுத்தத்தை தொடர்வதில் மக்களுக்கு ஏற்பட போகும் இழப்புகள் பற்றி எல்லாம் அவர் யோசிக்கவில்லை.”

“பகுதி :- 2 அமைதி பேச்சுவார்தை முறிவடைந்தமை தொடர்சியான புலிகளின் தாக்குதல் சந்திரிக்காவை எந்த இராணுவ அதிகாரிகளை லஞ்சம் பெறுவதற்காக யுத்தத்தை நடாத்துவதற்கு முற்படுகின்றனர் என்று குற்றம் சாட்டினாரோ அவர்களின் ஆலோசனையைப் பெறத்தள்ளப்பட்டது 
1995 அக்டோபர் மாதம் 13 ம் திகதி புலிகள் வசம் இருந்த யாழ்பாணத்தை கைப்பற்றுவதற்கு சந்திரிக்கா உத்தரவிட்டார். 1995 டிசம்பர் 5 ம் திகதி யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதற்கான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. புலிகள் வன்னி பெருநிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டனர். அன்று இழந்த யாழ்பாணத்தை இறுதிவரை புலிகளால் மீளக் கைப்பற்ற முடியவில்லை. 

யாழ்பாணத்தை கைப்பற்றிய பின்னர் சந்திரிக்கா தன்னை முழுமையான சிங்கள இனவாதியாகவே காட்டிக்கொண்டார் இதையே புலிகளும் விரும்பினர். தமிழ் அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் புறந்தள்ளி தனது கட்சியே யாழ்பாணத்தில் மக்களின் அமோக ஆதரவை பெற்றுவிடமுடியும் என்ற நம்பிக்கையே யாழ்பாண வெற்றிக்கு பின்பு அவரிடம் காணப்பட்டது. பேச்சுவார்தை மூலமான நடைமுறைக்கு சாத்தியமான தீர்வைப் பெறுவதற்கு ஒத்துளைக்காத புலிகளை தோற்கடித்து, தமிழ் அரசியல் கட்சிகளின் ஒத்துளைப்பு இன்றித் தானும் தனது கட்சியும் இனப்பிரச்சினையை தீர்துவிடமுடியும் என்று நம்பினார். யாழ்பாணத்தைக்் கைப்பற்றியமை, 2009 ல் மகிந்தவுக்கு ஏற்பட்டது போன்ற வெற்றி போதையையும் மமதையும் அவருக்கு கொடுத்தது 

 ஆனால் அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பாகவும் அதனை சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்துவது தொடர்பாகவும் தொடர்ந்தும் உழைத்தார் இதில் அவருடன் துணை நின்ற நீலன் திருச்செல்வம் 1999 ஜூலை 29ம் திகதி புலிகளால் படு கொலை செய்யப்பட்டார்.  

2000 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்வு பொதியை உள்ளடக்கிய அரசியலமைப்பு தீர்வுத்திட்டம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்காக விவாதத்துக்கு விடப்பட்டு சில வாக்குகள் வித்தியாசத்தில் யு என்பி யாலும் ஜேவிபியாலும் தோற்கடிக்கப்பட்டது. 

TULF அச்சட்ட திருத்தத்துக்கு ஆதரிக்கவில்லை. உயிர்பயமே முக்கிய காரணம் அவர்களது பாராளுமன்ற உறுப்பினர் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களால் எப்படி பயமின்றி ஆதரவளிக்க முடியும் ? புலிகளின் கொலை மிரட்டலையும் மீறி ஆதரவளிக்க கூடிய தற்துணிவும் political will ம் அவர்களிடம் இருக்கும் என்பதை எதிர்பார்க முடியாது. அதே சமயம் புலிகளின் இராணுவ வெற்றிகளை பார்த்து அவர்கள் தனிநாட்டை பெற்றுவிடுவார்கள் என்ற குருட்டுத்தனமான நம்பிக்கையும் அவர்களுக்கு இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.”

“பகுதி :- 3 இனப்பிரச்சினை தீர்வுக்கான நல்ல ஒரு சந்நர்பம் தூரநோக்கற்ற தமிழ்தலைமைகளால் தவறவிடப்பட்டது. 

சரி தற்போது உள்ள நிலமைக்கு வருவோம் மைத்திரி பதவி ஏற்று இரண்டு வருடங்கள் முடிந்து விட்டது. சம்மந்தர் எதிர்கட்சித் தலைவராக பதவி ஏற்று 1 1/2 வருடங்கள் முடிந்துவிட்டது. தீர்வு தொடர்பாக இவர்களால் உருப்படியாக எதையாவது கூறக்கூடிய நிலையில் உள்ளரனா ? சிங்கள மக்களிடம் ஒரு பேச்சு தமிழ்மக்களிடம் ஒரு பேச்சு என இரு இனமக்களையும் ஏமாற்றிக் கொண்டே காலம் கழிக்கின்றார்கள். 

கடந்த டிசம்பர் 9ம் திகதி அரசியலமைப்பு திருத்தத்துக்கான வழிகாட்டும் குழுவின் ( steering committee) இடைகால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது ஆனால் ஜேவிபி தனது கட்சிக்குள் முதலில் விவாதிக்க வேண்டும் எனவும் அதனால் ஐனவரி மாதத்துக்கு பிற்போடப்பட்டது. பின்பு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தனது கட்சிக்குள் விவாதிக்க வேண்டும் என காலம் குறிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2017 சுதந்திரதினமும் முடிந்து விட்டது அவ் விவாதம் பற்றி எச் செய்தியும் இல்லை. 

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் வழிகாட்டும் குழுவின் ( steering committee) இடைக்கால அறிக்கையை தமது கட்சிக்குள் விவாதிக்க வேண்டும் என்று SLFP யும் JVP யும் கால அஅவகாசம் கேட்கின்றனர் . ஆனால் இதுபற்றி TNA யோ குறைந்த பட்சம் தமிழரசுக்கட்சியோ தனக்குள் விவாதிக்கின்றதா என்றால், அதற்கான எந்த ஏற்பாடும் இல்லை. மாவைக்கு கூட அதில் என்ன இருக்கின்றது என்று தெரியாது. சம்மந்தனுக்கும் சுமந்திரனுக்கும் மட்டுமே அதில் என்ன உள்ளது என்று தெரியும். அவர்கள் இருவரையும் TNA கூட்டமைப்பு கட்சிகளும் தமிழரசுக்கட்யும் தமிழ்மக்களும் தம்மை நம்பவேண்டும் என்று அவர்கள் இருவரும் எதிர்பார்கின்றனர். இது என்ன வகையான ஜனநாயகம் ? பிரபாகரனும் பாலசிங்கமும் பறுவாயில்லை போல் தெரிகிறது. குறைந்த பட்சம் பத்திரிகையாளர் மாநாடுமூலமாவது பேச்சுவார்தை பற்றிய விபரங்களை வெளிப்படுத்தினர். 

முத்தாய்ப்பாக மைதிரி ரணில் சம்மந்தன் கூட்டு எந்த தீர்வையும் கொடுக்கப் போவதில்லை. அவர்களுக்கு political will இல்லை. அவர்களது பேச்சும் செயலும் காலத்தை கடந்திக்கொண்டு தொடர்ந்து பதவியில் இருப்பதே. தங்களது சுயத்தை தொலைத்த அரசியல் தீர்கதரிசனமற்ற செயற்பாடுகளின் தோல்விக்கு மகிந்தவை குற்றம் சாட்டப் போகிறார்கள் அதற்கான முன்னோட்டமே , அரசியலமைப்பு திருத்தத்துக்கு மகிந்தவின் ஆதரவு தேவை என்ற சம்பந்தனின் சமீபத்திய அறிக்கையாகும். 

தமிழ்மக்கள் சம்மந்தன் சுமந்திரன் தலைமையை நிராகரித்து, இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக புதிய அனுகு முறையையும் செயற்திட்டத்தையும் வகுக்க வேண்டும் 

தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்காக போராடுகின்றன அதே உக்கிரத்துடன் சிங்கள மக்களினதும் சோனகளினதும் உரிமையை பாதுகாக்கவும், இலங்கையின் சுயாதிபத்தியத்தையும் ஒருமையையும் பாதுகாப்பதற்கும் போராடுவோம் என தமிழ் அரசியல் கட்சிகளும்

சிங்கள மக்களின் உரிமையையும் இலங்கையின் சுயாதிபத்தியத்தையும் ஒற்றுமையையும் பாதுகாக்க போராடும் அதே உக்கிரத்துடன் தமிழ் மக்களுக்கும் சோனகர்களுக்கும் உரிமைகள் வழங்க போராடுவோம் என சிங்கள அரசியல் கட்சிகளும் கூறும் புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக வேண்டும் 

இதனை கூறுவதற்கு தற்போதைய எந்த சிங்கள தமிழ் சோனக அரசியல் கட்சிகளுக்கும் தில்லும் அரசியல் திடசங்கற்பமும் இல்லை,”

Ruthirakumar Jeyaratnam கேள்வி:- மிக அண்மையில் சந்திரிகா ஒரு ஊடகத்திற்கு, “பிரபாகரனும், விடுதலைப் புலிகளும் இல்லாத நிலையில் தமிழ் மக்கள் அதிகம் எதிர்பார்க்க முடியாது” என ஏன் கூறினார் அவர் “அதிகம்” என்று எதனைக் குறிப்பிடுகிறார்??? எனத் தெளிவுபடுத்தவும்.

Yoga VALAVAN THIYA ன் பதில்:- 

Ruthirakumar Jayaratnam எனது இப்பதிவின் நோக்கம் சந்திரிக்கா அம்மையாரை நியாயப்படுத்துவதோ பிரபாகரனை சிறுமைப்படுத்துவதோ அல்ல மாறாக சம்மந்தன் சுமந்திரன் அன் கோ வையும் மைதிரி ரணில் கூட்டையும் அம்பலப்படுத்துவதே. அதனூடாக இவர்களினூடாக எந்த பிரச்சினையையும் தீர்கமுடியாது மாற்று தலைமை பற்றி சிந்திக்க வேண்டும் தமிழ்மக்கள் பேரவையையும் எழுக தமிழையும் பலப்படுத்த வேண்டும் மேலும் தமிழ்மக்கள் பேரவையினர் களயதார்தத்துக்கு ஏற்ப புதிய மூலோபாயத்தையும் தந்திரோபாயங்களையும் பற்றி சிந்திக்க தூண்டுவதே நீங்கள் குறிப்பிடுபிடுபவை பற்றி விவாதிக்க இது தளம் அல்ல என்பது எனது தாழ்மையான கருத்து. அது எனது பதிவின் நோக்கத்தை திசை திரும்பிவிடும்.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நீங்கள் கேட்ட அத்தனை ஆவணங்களையும் பாராளுமன்றத்தில் இருந்தும் ஜனாதிபதி செயலகத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.  
ஒரு விடயத்தை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். பிரபாகரன் தலைமையில் நடந்த ஆயுதப் போராட்டம் வெற்றி பெறவில்லை. அவரால் சம்மந்தன்

தலைமையில் உருவாக்கப்பட்ட த. தே கூட்டமைப்பின் செயற்திறன் அற்று இருக்கின்றது. அவரது 2008 ம் ஆண்டு மாவீரர் தின உரையில், புலம்பெயர் சமூகத்திடம் போராட்டத்தை குறிப்பிட்டு இருந்தார் ஆனால் புலம்பெயர்ந்த சமூக புலி ஆதரவாளர்களோ சொத்து சண்டையிலும் இலங்கை அரசின் புலனாய்வு பிரிவின் சதிகளிலும் சிக்கிச் சிதறுண்டு சின்னாபின்னமாகி போய் இருக்கின்றனர். எனவே அவரது அணிசேர்கையின் அரசியல் நடை முறை கோட்பாட்டிலும் தந்திரோபாயங்களில் ஏதோ கோளாறு இருந்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டேயாகவேண்டும். பிரபாகரனும் பலம் பலவீனங்கள், ஆசா பாசங்கள் உள்ள ஒரு மனிதரை போன்றவர்தான். நீங்கள் எல்லோரும் அவர் எல்லாம் வல்லவர் கடவுளுக்கு சமமானவர் என்ற ஒரு மாயபிம்பத்தை உருவாக்கி விட்டு, ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்த பின்பும் அந்த பிம்பத்தை விட்டு வெளியே வரமுடியாதல், அவரது தவறுகளுக்கு எல்லாம் நியாயம் கற்பிக்க முற்படுகின்ற போது உண்மையை உணரமறுக்கின்றீர்கள். அதே சமயம் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் மீதும் மீண்டும் ஒரு பிம்பத்தை கட்ட முற்படுகின்றீர்கள் இதுவும் மிக அபாயகரமானது. ஒரு அமைப்பில் தனி நபரின் பாத்திரம் மட்டும்படுத்தப்பட்டதாகும் அமைப்பின் கொள்கைகளும் அமைப்புபே அதி உச்சமாக முக்கியப்படுத்தப்பட வேண்டும். அடுத்து மாற்று கருத்து உள்ளவரை துரோகி என்று கூறுவதை நிறுத்துங்கள். அப்படி முத்திரை குத்துதல் குறிப்பிட்ட நபர் அல்லது அவரை சார்ந்தவர்கள்

நிலமையை உணர்ந்து மனம்மாறி உங்கள் கொள்கையின் வழியின்பால் வருவதற்கான கதவை அடைத்து விடுகின்றது. கள யதார்தத்துக்கு ஏற்ப என்ன செய்ய வேண்டும் என்பதே தற்போது முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய கேள்வியாகும். அதிலேயே நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் . நீங்கள் கேள்விக்குட்படுத்திய விடயங்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில் வேறு தளத்தில் விவாதிக்கலாம். சம்மந்தன் சுமந்திரனின், மைதிரி – ரணில் அரசின் அரசியல் வங்குரோத்து தனங்கள் தொடர்பாக விவாதிக்க தயாராக இருக்கிறேன்

கேள்வி:- 1. மாற்றுக்கருத்துக் கொண்ட ஒருவரை துரோகி என நான் எங்குமே குறிப்பிடவில்லை அப்பிடிக் குறிப்பிட்ட ஒரு இடத்தைக் குறிப்பிடுங்கள்.

2.திரு.க.வி.விக்கினேஸ்வரனை மீண்டும் ஒரு விம்பத்தைக் கட்ட முயலவில்லை. நீங்களே சம்பந்தன், சுமந்திரனின் ஏமாற்றுதல்களை ஏற்றுக் கொள்கிறீர்கள், மாற்றான தலைமை பற்றிச் சிந்திக்க வேண்டுமென்கிறீர்கள், கள யதார்த்தத்திற்கு ஏற்ப பயணிக்க வேண்டுமென்கிறீர்கள். இந்த மூன்று விடயங்களினாலும் அவர் மீது இயல்பாக சாய்ந்து கொள்ள முடிகிறதே தவிர இன்று வரை நம்பிக்கை பிறக்கவில்லை. அதே போன்று எனது ஆணித்தரமான கருத்து ஒன்றை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாயின் சிங்களவர்களின் அகங்காரத்தை உடைத்தெறியக் கூடிய ஒரு வலு உள்ளிருந்தோ அல்லது மூன்றாவது சக்தி வெளியிருந்தோ பிரயோகிக்கப்பட்டாலே தவிர ஒரு கொப்பிப் பேப்பரில் கூட எதுவும் அவர்கள் எழுதித் தரத் தயாரில்லை. அந்த வகையில் தமிழர்களுடைய ஒரு பேரம்பேசும் சக்தியாகப் புலிகள் இருந்தார்கள். பல தனித்துவங்களையும் கொண்டிருந்தார்கள் 2009 க்குப் பின்னர் அத் தனித்துவங்களைப் பேணிக் கொள்ளும் வழியை கண்டறியாமை ஒரு மிகப்பெரிய தவறு அதற்குரிய சில காரணிகள் அறிவேன் ஆனால் சமூக ஊடகத்தில் பலரும் விமர்சிப்பதைப் பார்க்கச் சில சந்தர்ப்பங்களில் சிரிப்பு வருவதும் “குருடர்கள் யானை பார்த்த கதை” யையே ஞாபகப்படுத்துகிறது.

Yoga Valavan Thiya பதில்:- 

Ruthirakumar Jayaratnam மாற்று கருத்து கொண்டவர்களை துரோகி என்று நீங்கள் சொன்னீர்கள் என்ற அர்த்தத்தில் அதனை சொல்லவில்லை, பொதுவாக விடுதலைபுலி ஆதரவாளர்களையே அப்படி குறிப்பிட்டேன். அவ்வார்தையில் மயக்கம் இருக்குமாயின் அதனை திருத்தி விடுகிறேன். இந்த விளக்கமே விக்கினேஸ்வரனை சுற்றி உருவாக்கப்படும் பிம்பம் சம்மந்தபட்ட கருத்துக்கும் பொருந்தும். நாம் திரும்ப திரும்ப விடுதலை புலிகளின் கடந்த கால சரி பிழைகள் தொடர்பான விவாத்த்தைக்குள் போக கூடாது. விடுதலைப்புலிகளின் ஆயுதபலம் பேரம் பேசும் பலமாக இருந்தது உண்மையே அதனாலேயே 13 திருத்த சட்டம் பிராந்தியங்களின் ஒன்றியமாக உயர்ந்ததும் பின்னர் நோர்வே உடன்படிக்கையாக உயர்ந்து வந்தமையும். 

2009 ன் பின்னர் புலிகளிடம் இருந்த ஆயுதபல பேரம் பேசும் சக்தியை, மக்கள் சக்தியாக மாற்றுவதற்கு த தே கூட்டமைப்பு தவறிவிட்டது. 2009 ல் இருந்தே த தே கூட்டமைப்பை பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியாக்கி அதனை ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போன்ற மாபெரும் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்சியாக த தே கூட்டமைப்பு பங்காளிகட்சிகளால் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் தமிழரசுக்கட்சி அதற்கு சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு தமிழரசுக் கட்சியை பலப்படுத்துவதிலேயே ஈடுபட்டு வந்தது. தமிழரசுக்கட்சியை கூட மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கான தொலைநோக்கும் செயற்திறனும் அற்று 80 களுக்கு முன் இருந்த கனவான் அரசியல் செய்யும் போக்கிலேயே அது தொடர்கின்றது. 2015 ல் ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் தமிழ்மக்களின் வாக்குகளை சர்வதேசத்தின் துணையுடன் பேரம் பேசும் பலமாக பயன்படுத்த ஒரு அரிய சந்தர்ப்பம் வந்தது அதனையும் சுமந்திரனும் சம்மந்தனும் கோட்டை விட்டார்கள். இது பற்றி விரிவாக பின்னர் ஒரு பதிவையிடுகின்றேன். 

இலங்கையில் தமிழர்கள் நின்மதியாக வாழவேண்டுமானால் 
சிங்களவர்களின் அகங்காரத்தை உடைத்தெறிய கூடிய வலு உள்ளிருந்தோ அல்லது மூன்றாவது சக்தி வெளியிருந்தோ பிரயோகிக்கப் பட வேண்டும் என்று கூறியிருக்கின்றீர்கள் //  

உங்களின் இக் கூற்றில் முழுமையாக உடன்படாவிட்டாலும் பகுதியாக உடன்படுகின்றேன். சிங்கள பெளத்த மேலாதிக்கவாதிகள், சிங்கள கடும் போக்காளர்கள் என்ற வார்த்தை பிரயோகமே சரியாக இருக்கும், அவர்களின் அகங்காரத்தை உடைப்பதற்கு நியாயமான சிங்கள மக்களுடன் இனைந்து செயற்படுவதற்கான தந்துரோபாயத்தை தமிழ்தலைமை (புதிய தலைமை ) உருவாக்க வேண்டும்.

இங்கு உள்ள்ளிருக்கும் வலு என்பது பரந்துபட்ட மக்கள் இயக்கமும் போராட்டமும் ஆகும் மூன்றாவது சக்தி என்ற விடயத்தில் 
சர்வதேசம் எதையும் பெற்றுத்தராது. அது தனது பிராந்திய நலனுக்காக தமிழர் பிரச்சனையை பயன்படுத்தும் தனது தேவை முடிந்தவுடன் தமிழர் பிரச்சனையை அம்போ என்று கைவிட்டுவிடும். தமிழர் தலைமைகள் சரவதேசத்தின் நகர்வுகளை, தனது சொந்த மூலோபாய நடவடிக்கையை பலப்படுத்த ஒரு supportive ஆக எடுக்க முடியுமே தவிர, சர்வதேசத்தின் நகர்வை மூலோபாயமாக எடுக்க முடியாது.

தமிழரசுக்கட்சியின் செயற்திறன்ற்ற தொலை நோக்கற்ற செயற்பாடுகளின் வெளிப்பாடே தமிழ்மக்கள் பேரவையின் தோற்றமாகும் அது பலப்படுத்தப்பட வேண்டும் மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும் அது எவ்வாறு என கிழக்கு எழுக தமிழ் நிகழ்வுக்கு பின்னர் தனியாக ஒரு பதிவிடுகிறேன்

யோகா வளவன் தியா
நன்றி …மகிழ்ச்சி…
Stanislauscelestine.wordpress.com

# Stanislaus Celestine-07.02.2017#AuthorStanislaus celestinePosted onFebruary 7, 2017Leave a commenton சந்திரிகாவின் தீர்வுப் பொதியும் …புதிய அரசியல் கலாச்சாரத்திற்கான அறைகூவலும்…நண்பர் Yoga Valavan Thiya ன் பார்வையில்…

சம்பந்தர், மைத்திரி, ரணில், மகிந்த பற்றி எனது நண்பர் Yoga Valavan Thiya கூறிய கருத்துக்களின் வலிமை காரணமாக அதனை இங்கு மீள்பதிவு செய்கிறேன்…

சம்பந்தர், மைத்திரி, ரணில், மகிந்த பற்றி எனது நண்பர் Yoga Valavan Thiya கூறிய கருத்துக்களின் வலிமை காரணமாக அதனை இங்கு மீள்பதிவு செய்கிறேன்…
“நடைமுறையில் தேசிய அரசாங்கம் என்பது இல்லை. தேசிய அரசாங்கம் என்று சொல்வது பம்மாத்து. வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் இருபெரும் சிங்கள கட்சிகள் இணைந்து ஒரு அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர் இச் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது தேசிய நல்லிணக்க அரசாங்கத்துக்கு நெருக்கடி குடுக்க கூடாது என்பது எல்லாம் மக்களை ஏமாற்றும் பம்மாத்து. 
மைத்திரி – ஜனாதிபதி 

ரணில் – பிரதமர்

சம்மந்தர் – எதிர்கட்சித்தலைவர் இந்த கூட்டு, சீன சார்பு மகிந்தவை அகற்றுவதற்கு மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட கூட்டுச்தி 
மைத்திரி – தனது கட்சிக்கும் விசுவாசமாக இல்லை நாட்டுக்கும் விசுவாசமாக இல்லை ரணில் தன் நாட்டுக்கு விசுவாசமாக இல்லை சம்மந்தர் தன் மக்களுக்கு விசுவாசமாக இல்லை மூவரும் விசுவாசமாக இருப்பது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கே சுயத்தை தொலைத்த இவர்களால் நல்லிணக்கத்தையும் கொடுக்க முடியாது நல்லாட்சியையும் கொடுக்க முடியாது அபிவிருத்தியையும் கொடுக்க முடியாது. இவர்கள் மூவரையும் ஓரணியில் வைத்திருப்பது அமெரிக்கா அங்கு நிலை மாறினால் இங்கு நிலை தடுமாறும் புதிய அரசியல் அமைப்பு சாசனம் என்பது கானல் நீராகவே போகப்போகிறது இலங்கையின் அரசியல் அமைப்பு சாசன திருத்தத்துக்கு உண்மையாகவே உழைத்தவர் சந்திரிக்கா பண்டாரநாயக்காவே. அவர் சுதுநிலமே அமைப்பை உருவாக்கி புதிய அரசியல் அமைப்பு சாசனத்தை சிங்கள மக்களும் தமிழ்மக்களும் ஏற்கப்பண்ணுவதற்கான முன்முயர்சிகளை உளமாரவே முன்னெடுத்தார். அதனை சரியாக பயன்படுத்தாது விட்டமை புலிகள் செய்த முட்டாள் தனம். அன்று உயிருக்கு பயந்து சம்மந்தரும் சந்திரிக்காவின் தீர்வுத் திட்டத்தை ஆதரிக்கவில்லை இன்று சந்திரிக்கா பல் புடுங்கப்பட்ட நிலையில் உள்ளதுடன் மகிந்தவை பழிவாங்க வேண்டும் என்ற வெறியே மேலோங்கியுள்ளது.  
தனது கூட்டமைப்குக்கு உள்ளேயே ஒருங்கிணைந்த செயற்பாட்டை உருவாக்க முடியாத, தானே அரசியலுக்கு கொண்டு வந்த விக்கினேஸ்வரனை தொடர்ந்தும் இணைத்து வைக்க தெரியாத சம்மந்தனா மகிந்தவை சமாதானப்படுத்த போகிறார் இவரா பெளத்த மட பீடங்களை அணுகி சமாதானபடுத்த போகின்றார். 

இவற்றை சாத்தியமாக்குவதற்கு ஒரு political will வேண்டும் அது இவர்கள் மூவரிடமும் இல்லை. மகிந்தவிடம் அது இருந்தது. அந்த political will தான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. இல்லாவிட்டால் இன்றும் தினமும் சராசரியாக 100 பேர் என்னத்துக்கு என்று தெரியாமல் இறந்து கொண்டே இருப்பார்கள். தற்போதைய இலங்கை ஒரு சமூக ஜனநாயக புரட்சிக்கான தேவையை உணர்த்தி நிற்கிறது. இந்த எந்த அரசியல்வாதிகளும் அதனை முன்னெடுக்கப் போவதும் இல்லை மாற்றத்தை கொண்டுவர போவதும் இல்லை. அதற்கான தேவை சிங்கள மக்களை தவிர தமிழ்மக்களுக்கே மிக மிக அவசியமாக உள்ளது ”
“I am proud to say I was born in Ceylon , though there were bad and good”
நன்றி…Yoga Anna…

# Stanislaus celestine- 03.02.2017#AuthorStanislaus celestinePosted onFebruary 3, 2017Leave a commenton சம்பந்தர், மைத்திரி, ரணில், மகிந்த பற்றி எனது நண்பர் Yoga Valavan Thiya கூறிய கருத்துக்களின் வலிமை காரணமாக அதனை இங்கு மீள்பதிவு செய்கிறேன்…

உத்தியோகபூர்வ ( De jurae) எதிர்கட்சி தலைவரும் …நடைமுறை ( De facto) எதிர்கட்சி தலைவரும்…

உத்தியோகபூர்வ ( official) எதிர்கட்சி தலைவரும் …நடைமுறை ( De facto) எதிர்கட்சி தலைவரும்…
நண்பர் ஒருவர் எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் தொடர்பில் வெளிவந்த செய்திக்கு இவ்வாறு பின்னூட்டம் செய்திருந்தார்
“சந்திரிகாவின் முயற்சியை ரணில் எதிர்த்தார். ரணிலின் முயற்சியை சந்திரிகா எதிர்த்தார். 

மகிந்தவை ரணில் எதிர்த்தார்.

இப்போது ரணிலை மகிந்த எதிர்க்கிறார்.

முன்னர் பண்டாரநாயக்காவை JR எதிர்த்தார். டட்லியை சிறிமா எதிர்த்தார் என நினைக்கிறேன் . மிகவும் கவனிக்க வேண்டிய சங்கதி என்னவென்றால் இவர்கள் அனைவரும் எதிர்ப்பதற்கு கூறும் காரணம் ஒன்றாகவே இருக்கிறது . உண்மையில் அவர்கள் எதிரிகள் போல் நடித்து எங்களை ஏமாற்றுகிறார்கள். 

சம்பந்தனுக்கு இது தெரியாதது அல்ல. ஒட்டுமொத்தமாக எங்களை ஏமாற்றுகிறார்கள்.

இல்லையா? ”
எனது நண்பரின் மேற்படி கருத்திற்கு எனது பதில் இதுதான்
“சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராவதற்க முந்திய காலத்தில் நீங்கள் கூறிய சிங்கள எதிர்கட்சி தலைவர்கள் தாம் ஆட்சியைப் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆளும் கட்சி மேற்கொண்ட தீர்வு முயற்சிகளையும் அது தொடர்பான ஏனைய முயற்சிகளையும் எதிர்த்து வந்தனர்…ஆனால் தற்போதய எதிர்க்கட்சி தலைவரான சம்பந்தரால் ஆட்சியை பிடிக்கவும் முடியாது அத்துடன் அது அவருடைய நோக்கமும் இல்லை… உண்மையில் இலங்கையின் நடைமுறை எதிர்க்கட்சி தலைவர் ( De facto opposition leader) மகிந்த ராஜபக்சதான்…மகிந்தவின் ஆதரவு இல்லாமல் தீர்வை பெறுவது நடைமுறையில் சாத்தியம் இல்லை…ஆதலால்தான் சம்பந்தர் மகிந்தவின் ஒத்துழைப்பை வெளிப்படையாக கோருகிறார். அது அவரின் அரசியல் அனுபவத்தை காட்டுவதுடன் அது சரியான அரசியல் நகர்வு என்பதும் எனது கருத்து…”
Stanislauscelestine.wordpress.com
நன்றி…மகிழ்ச்சி…
# Stanislaus celestine- 02.02.2017#AuthorStanislaus celestinePosted onFebruary 2, 2017Leave a commenton உத்தியோகபூர்வ ( De jurae) எதிர்கட்சி தலைவரும் …நடைமுறை ( De facto) எதிர்கட்சி தலைவரும்…

தூரநோக்கற்ற த.தே.கூ ன் குற்றச்சாட்டுக்களும் மதில்மேல் பூனைகளும்…

தூரநோக்கற்ற த.தே.கூ ன் முட்டாள்தனமான குற்றச்சாட்டுக்களும் மதில்மேல் பூனைகளும்…
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை அரசியல் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் புலம்பெயர் தமிழரை சிக்க வைக்கும் விதமாக சில அரசியல் ஆய்வாளர்கள் பதிவுகள் இடுகின்றனர்…இவ் அரசியல் படுகொலை முயற்சி உண்மையா இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை உண்மை கண்டறியப்படவில்லை… 
நிலமை இவ்வாறிருக்கையில் எழுந்தமானமாக புலம்பெயர்ந்த எமது தமிழ் உறவுகளை நோக்கி இவ்விடயம் தொடர்பில் ஆட்காட்டி விரலை நீட்டுவது முட்டாள்தனமானது என்பதுடன் பாரிய அரசியல் பொருளாதார விளைவுகளையும் கொண்டுவரக்கூடியது…அரசியல் தீர்வு சம்மந்தமாக தாம் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் மக்களிற்கு புரியும் விதமாகவோ அல்லது குறைந்தபட்சம் புரியாத விதமாகவோ தெளிவுபடுத்த எதுவித நடவடிக்கையும் எடுக்காத த.தே.கூ ன் தலைமையும், எந்தப்பக்கம் காற்று அடிக்கிறதோ அந்தப் பக்கம் சாயக் காத்துக்கொண்டு, “மதில்மேல் பூனைகளாக” இருக்கும் ஏனைய வடமாகாண சபை உறுப்பினர்களும்தான் இந்த குழறுபடிகளிற்கெல்லாம் காரணம்…
த.தே.கூ தலைமையும் தமிழரசுக் கட்சியை சார்ந்த அரசியல்வாதிகளின் ஏதேச்சதிகாரமான தான்தோன்றித் தனமான செயற்பாடுகளும் தாம் ஐனநாயக ரீதியாக தீர்வை நோக்கி சரியாக போகிறோம்” என்ற அவர்களின் நிலைப்பாட்டை, அவர்கள் மக்கள் முன் எடுத்துச் சென்று தெளிவுபடுத்த தவறியதுமே பேராபத்தை நோக்கி தமிழர்களை இழுத்துச் செல்வகின்றது என்பதை இந்த த.தே.கூ காரர் உணர வேண்டும்….
“காலம் தாமதியாது தீர்வுக்கான பாதை எங்கு செல்கிறது என்பது தொடர்பில் மக்களை விழிப்படைய செய்ய உடனடியாக நடவடிக்கையில் த.தே.கூ இறங்க வேண்டும்” என்ற விடயத்தை த.தே.கூ உணர்ந்து செயற்படுமா என்பதில் சந்தேகம் மட்டும்தான் தொக்கி நிற்கிறது….
நன்றி…மகிழ்ச்சி…
Stanislauscelestine.wordpress.com
# 30.01.2017- Stanislaus 

AuthorStanislaus celestinePosted onJanuary 30, 2017Leave a commenton தூரநோக்கற்ற த.தே.கூ ன் குற்றச்சாட்டுக்களும் மதில்மேல் பூனைகளும்…

அரசியல் படுகொலைக்கான முயற்சியும் அதன் விளைவுகளும்…

அரசியல் படுகொலைக்கான முயற்சியும் அதன் விளைவுகளும்…
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை அரசியல் படுகொலை செய்ய “வறுமையால் வாடும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை” கூலிக்கு பயன்படுத்த வெளிநாட்டில் இருக்கும் சிலர் முயன்றதாக பிரபல “அரசியல் மற்றும் இராணுவ” விடயங்களை அலசி ஆராயும் D.B.S. Jeyaraj இன்றைய கட்டுரையில் பகீர் தகவல் வெளியிட்டுள்ளார்…
இச் செய்தி உண்மையானால் இவ்வாறான அரசியல் படுகொலையின் முயற்சிகள் தொடர்ச்சியான மோசமான அரசியல் விளைவுகளை ( Consequence in sequence) தமிழர் தலைமீது வைக்கும் என்பதை சம்மந்தப்பட்டோர் உணரவேண்டும்…மீண்டும் அவசரகால சட்டம் அமுலாக்கப்படுவதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் முழுப் பிரயோகத்தையும் சட்டத்தை அமுலாக்கும் அரச இயந்திரம் உச்ச அளவில் பயன்படுத்தும்… புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான முன்னாள் விடுதலைப் போராளிகள் மீளவும் இச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்படுவதுடன் அக்கைதுகளிற்கான நியாயமான காரணத்தை சர்வதேச சமூகம் ஏற்க வேண்டிய சூழல் ஏற்படும்…சொந்த இனத்தை சேரந்தவனை கொல்லத் துடிக்கும் “காட்டுமிராண்டிகள்” என தமிழரை உலகம் இழிவாகப் பார்க்கும்…தெற்கில் மகிந்த எழுச்சி அடைவார்…புலிகள் மீள உயிர் பெற்றுவிட்டனர் என கூறி தெற்கில் போலியான எழுச்சியும் அரசியல் மாற்றமும் ஏற்பட்டு மகிந்தவின் கொடுங்கோல் ஆட்சி மீளவும் ஒங்கும்…மெதுவாக வளரும் தமிழரின் பொருளாதார முன்னேற்றம் உடனடியாக பூச்சியத்தை எட்டும்…சர்வதேச விசாரணையும் தடைப்படும்…தமிழருடன் சேரந்து சிங்களவரும் நாசமாகிப் போவர்…சுருக்கமாக சொல்வதானால் நாடு மீண்டும் 30 வருடங்கள் பின்நோக்கிப் போகும்…
உலகெங்கும் வாழும் எமது தமிழ் உறவுகளே…கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டுமே ஒழிய…வன்முறையால் அல்ல என்பதை சம்மந்பட்டோர் உணர வேண்டும் என கோருகின்றேன்…நிற்க…


இந்த D.B.S.Jeyaraj இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவான ஆள் என்றும் பணத்திற்காக “அரசியல்வாதிகளின் அரசியல் நோக்கத்திற்காக புனையப்படும் கதைகளிற்கு மெருகூட்டுபவர்” என்ற குற்றச்சாட்டையும் சிலர் முன்வைக்கின்றனர்…
எது எப்படி இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்காது எமது வருங்கால சந்ததிக்கு பாதுகாப்பான வாழ்க்கைக்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது தமிழராகிய எம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்பதை “உலகத் தமிழர்” அனைவரும் தமது மனதில் நிறுத்தி சிந்திக்க வேண்டும் என சக தமிழனாக கோருகிறேன்…
நன்றி…
Stanislauscelestine.wordpress.com
# Stanislaus Celestine – 28.01.2017#
http://dbsjeyaraj.com/dbsj/archives/51070AuthorStanislaus celestinePosted onJanuary 28, 2017Leave a commenton அரசியல் படுகொலைக்கான முயற்சியும் அதன் விளைவுகளும்…

நல்லூர் கந்தனும் காணாமல் போனவர்களும்…

நல்லூர் கந்தனும் காணாமல் போனவர்களும்…
நல்லூர் கோவில் என்பது தனியே வழிபாட்டுதலம் மட்டுமல்ல… அது இந்து சமய எல்லைக்கு அப்பால்பட்டு அது யாழ்ப்பாணத்த தமிழரின் ஓர் அடையாளம்… அதனால்தான் யாழில் வசிக்கும் இந்து சமயம் அல்லாதவர்களும் யாழ்ப்பாணத்தின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக நல்லூர் கந்தசுவாமி கோவிலை குறிப்பிடுவர்.
நல்லூர் கோவில் வளாகத்தில் தற்காலிக வேலி ஒன்றை முதலில் அடைத்தனர். பின்னர் அந்த தற்காலிக வேலிக்கு உள்ளே கூட பாதணிகள் அணியக்கூடாது என்றனர்… இப்போது கோவில் வளாகத்தில் “காணாமல் போனவர்கள் தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் கவனயீர்ப்பு போராட்டங்கள் அமைதி வழியிலும்கூட நடத்தக்கூடாது” என்ற உள்நோக்குடன் இந்த அறிவிப்பு பலகையை நல்லூர் கோவில் நிர்வாகம் அல்லது அதன் நிர்வாகத்தின் அனுமதியுடன் இவ்வறிவித்தல் வைக்கப்பட்டுள்ளது…இன, சமயம் பாராமல் தன்னை நாடும் அனைவரிற்கும் அருளை வாரி வழங்கும் ” நல்லூர் கந்தன்” இந்த அறிவிப்பு பலகையை ஏற்றுக் கொள்வாரா? காணாமல் போனவரின் கதறலை வெளிப்படுத்த மறுக்கும் நல்லூர் கோவில் நிர்வாகத்தின் செயலை கந்தன் ஏற்றுக் கொள்வாரா? ஒருபோதும் கிடையாது… இவ் அறிவிப்பு பலகையை வைத்தவர்களின் செயல் கண்டனத்திற்குரியது…உரியவர்கள் இவ் விடயத்தை கவனத்தில் எடுத்து இந்த அறிவிப்பு பலகையை அகற்றுவது அவர்கள் மீதான மதிப்பை தக்கவைத்து கொள்ளும்…
Stanislauscelestine.wordpress.com


நன்றி…மகிழ்ச்சி…
26.01.2017AuthorStanislaus celestinePosted onJanuary 26, 2017Leave a commenton நல்லூர் கந்தனும் காணாமல் போனவர்களும்…

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைமைகளும் வைக்கோல் பட்டடை நாய்களும்…

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைமைகளும் வைக்கோல் பட்டடை நாய்களும்…”
நடராஜா ரவிராஜ் கொலை வழக்கும் மேன்முறையீடும்
மேல் நீதிமன்ற குற்றவியல் வழக்கு ஒன்றின் “விடுதலைத் தீர்ப்பிற்கு எதிராக” சட்டமா அதிபர் அல்லது சட்டமா அதிபரின் அனுமதியுடன் பாதிக்கப்பட்ட தரப்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ( Court of Appeal) எதிரிகளை விடுதலை செய்த தீர்ப்பிற்கு எதிராக, அத்தீர்ப்பை தள்ளி வைக்க கோரி ஓர் மனு ஒன்றை தாக்கல் செய்ய 1979 ம் ஆண்டின் 15 ம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டத்தின் பிரிவு 331 ஏற்பாடு செய்கிறது.
“கிழக்கு” பொங்கலும் “கொழும்பு” பொங்கலும்
இங்கு இந்தவகையான மேன்முறையீடு பாதிக்கப்பட்ட தரப்பான ரவிராஜின் மனைவி மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு நேற்றைய தினம் அவ்வழக்கை ஆதரிப்பதற்காக ( Support) திகதி குறித்து நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவ்வழக்கில் பிரசன்னமாகியிருந்திருக்க வேண்டிய பாதிக்கப்பட்ட மனுதாரர் “இலங்கை நீதிதுறையில் நம்பிக்கை இல்லாத காரணத்தால்” பிரசன்னமாகியிருக்காத நிலையிலும் அவ்வழக்கில் ஆஜராகியிருக்க வேண்டிய அல்லது ஆஜராகுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டிய மனுதாரர் தரப்பு சட்டத்தரணி, கிழக்கில் “பொங்கல் விழாவில்” கலந்து கொண்டமையால், யாருமற்ற நிலையில் கூப்பிடப்பட்ட குறித்த மேன்முறையீட்டை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து குறித்த மேன்முறையீட்டிற்கு கொழும்பில் “பொங்கல்” வைத்துவிட்டது. தமிழ் மக்களிற்காக பாடுபட்டு நான்கு குண்டுகள் நெஞ்சில் துளைக்க மாமனிதரான நடராஜா ரவிராஜின் மேன்முறையீட்டு வழக்கிற்காக ஒரு சட்டத்தரணியைகூட ஒழுங்கான முறையில் நியமித்து வாதாட ஏற்பாடுகள் செய்திராத த.தே.கூ ன் தலைமையின் செயலானது கடும் கண்டனத்திற்கு உரியது…நல்ல தலைவனிற்குரிய தலைமைத்துவ பண்புகளைக் கொண்டிராத தமிழரசுக் கட்சி தலைவர் “மாவை சேனாதிராஜா” மற்றும் த.தே.கூ ன் தலைவர் “சம்பந்தர்” இது தொடர்பில் வெட்கித் தலைகுனிய வேண்டும்…நிற்க…
மேன்முறையீடும் சட்டமா அதிபரும்
இத்துடன் ரவிராஜின் கொலைக்கான நியாயம் கோரி நீதி நோக்கிய பயணம் முடிவடைந்து விட்டதா என்றால் அதற்கு பதிலாக இல்லை என்ற ஓரளவு ஆறுதலளிக்கும் பதிலைத் தருவேன். குறித்த மேன்முறையீட்டு மனுவை பாதிக்கப்பட்ட தரப்பு தாக்கல் செய்திருந்த நேரம் சட்டமா அதிபரும் அதே நேரத்தில் இவ்வாறான மனு ஒன்றை court of Appeal ல் தாக்கல் செய்திருக்கிறார். அவ் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அவ்வழக்கு தொடர்பில் இனிமேல்தான் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற வேண்டும். இப்போதய நிலையில் இதை ஓர் ஆறுதலளிக்கும் செய்தியாக கருதிக் கொள்ளலாம்.
ஐக்கிய தமிழ் சட்ட நடவடிக்கை குழுவிற்கான அறைகூவலும் அதனை அலட்சியப் படுத்திய தமிழ்த் தலைமைகளும்
தமிழர் எதிர்நோக்கும் பொதுவான அரசியல் சமூக பிரச்சனைகளை சட்டத்தரணிகளும் சமூக அக்கறை கொண்டவர்களும் ஒன்ற சேர்ந்து இலவசமாக வாதாடியும் போராடியும் தமிழர் இருப்பை தக்க வைப்பதற்காக நான் ” ஐக்கிய தமிழர் சட்ட நடவடிக்கை குழு” ஒன்றை அமைப்பதற்கான அறைகூவலை விட்டிருந்த நிலையில் அது தொடர்பாக உரிய ஆதரவு எனக்கு கிட்டியிருக்கவில்லை. ஆதரவு தந்தவர்களையும் எமது தமிழ் அரசியல்வாதிகள் சிலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் சதி செய்து தடுத்து நிறுத்தியதுதான் எனக்கு பொது முயற்சிக்கு அவர்கள் செய்த பங்களிப்பு. எனது United Tamil Legal Action Group ( UTLAG) முயற்சிக்கு உண்மையில் ஆதரவளித்து அதை உருவாக்க எனக்கு தூணாக இருக்கும் சில நல்ல உள்ளங்களையும் நான் மறக்கவில்லை. எனது பொது முயற்சியான UTLAG ஐ மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற, வடமாகாண, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் நேடியான அல்லது மறைமுகமான ஆதரவு இல்லாமல் அடித்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் எனக்கு சில நடைமுறை சிக்கல்கள் உள்ளது என்ற கசப்பான உண்மையை இவ் இடத்தில் பதிவு செய்கிறேன்.
பதவி மோகமும் சுயநல அரசியலும்
த.தே.கூ ன் தலைமைகள் மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டி ஆதரவாளர்களை அரவணைத்து அவர்களின் கருத்துக்களிற்கும் மதிப்பளித்து ஒன்று சேர்ந்து செயற்படுவதை விட்டுவிட்டு தமக்கு ஆதரவளித்த மக்களை எதிரிகள் போல் நடத்தி தான்தோன்றித்தனமாகவும், சர்வாதிகாரத்தனமாகவும்செயல்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது…தமக்கு ஆதரவளித்த மக்களை அரவணைத்து அரசியல் செய்தால் அவர்கள் தமக்கு அரசியலில் போட்டியாக வந்துவிடுவார்களோ என்ற பயத்தில் செயற்படும் த.தே.கூ தலைமைகளின் செயலைப் பார்க்கும் போது ” தானும் படுக்காது தள்ளியும் படுக்காத வைக்கோல் பட்டடை நாய்கள்” என்ற பழமொழியே எனக்கு ஞாபகம் வருகிறது.
நன்றி… மகிழ்ச்சி…
Stanislauscelestine.wordpress.com
# Stanislaus Celestine – 20.01.2017#AuthorStanislaus celestinePosted onJanuary 20, 2017Leave a commenton தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைமைகளும் வைக்கோல் பட்டடை நாய்களும்…

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply