பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’:

பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’: நூற்றாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினின் 14 அறிவிப்புகள்

mk-stalin-announcements-for-bharathi-death-anniversaryபிரதிநிதித்துவப் படம்
பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமையைப் போற்றும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 10) வெளியிட்ட அறிக்கை: “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா அவன் பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா அதைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா’ – என்று கவிமணி தேசிக விநாயகம் பாடினார்.
இப்படிக் கவிமணிகளையே பாடவைத்த பெரும்புலவன் பாரதியின் பெருமையைப் போற்றும் அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன். கடந்த ஆகஸ்ட் 15-ம் நாள் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு உரையாற்றும்போது, மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டது, அவர் மறைந்த ஆண்டின் நூற்றாண்டு என்று இந்த ஆண்டைக் குறிப்பிட்டுக் காட்டினேன். நூறாண்டுகள் கழித்து மட்டுமன்று, ஆயிரமாண்டுகள் கழித்தும் உயிரோட்டமுள்ள கவிதைகளை, பாடல்களைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு விட்டுச் சென்றவர்தான் மகாகவி என்று போற்றப்பட்ட பாரதியார்.
‘பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை! குவிக்கும் கவிதைக் குயில்! இந் நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா; காடு கமழும் கற்பூரச் சொற்கோ; கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் திறம் பாட வந்த மறவன்; புதிய
அறம் பாட வந்த அறிஞன்; நாட்டில் படரும் சாதிப் படைக்கு மருந்து! மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்; அயலார் எதிர்ப்புக்கு அணையா விளக்கவன்;
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்’ – என்று மகாகவியை வர்ணித்து எழுதியவர் தான் பாரதிதாசன். தேசப் பற்று – தெய்வப் பற்று – தமிழ்ப் பற்று – மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர்தான் பாரதியார். நாட்டு விடுதலைக்காகப் போராடியவராக மட்டுமே இருந்திருந்தால் அதற்காக மட்டுமே அவர் நினைவுகூரப்பட்டிருப்பார். அதையும் தாண்டி சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் எழுதியதால்தான் பாரதியார் கவிதை வரிகளாய் உலவி வருகிறார். பாரதியார் வரகவியா, மகாகவியா, தேசியக் கவியா என்று விவாதம் நடந்து கொண்டிருந்த காலத்தில், 1947-ம் ஆண்டே பாரதியாரை ‘மக்கள் கவி’ என்று எழுதவும் பேசவும் தொடங்கியவர் அண்ணா.
ஒரு பக்கம் நிலப்பிரபுத்துவம் – இன்னொரு பக்கம் சனாதனம் – இந்த இரண்டுக்கும் இடையில் இருந்து புதுயுகத்தைப் படைக்க நினைத்தவர் பாரதி என்று அண்ணா எழுதினார். அதனால்தான் திமுக அரசு அமைந்து, தலைவர் கருணாநிதி முதல்வரானபோது எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவில்லம் ஆக்கினார். அன்றைய அமைச்சர் சி.பா. ஆதித்தனார் தலைமையில் 12.5.1973 அன்று நடந்த விழாவில் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக, பாரதியார் நினைவைப் போற்றும் வகையில், அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

1. பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைப்பிடிக்கப்படும். இதனையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி ‘பாரதி இளங்கவிஞர் விருது’ மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்.

2. பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். 3. மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்துள்ளனர். அவர்களில் முக்கியப் பங்காற்றிய பாரதி ஆய்வாளர்களான, மறைந்த பெ. தூரன், ரா.அ. பத்மநாபன், தொ. மு. சி. ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவர்தம் குடும்பத்தாருக்கும் மற்றும் மூத்த ஆய்வாளர் சீனி. விசுவநாதனுக்கும், பேராசிரியர் ய. மணிகண்டனுக்கும், தலா மூன்று லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டுச் சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும். 4. பாரதியின் உருவச் சிலைகள், உருவம் பொறித்த கலைப்பொருட்களைப் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். 5. பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் தேடித் தொகுக்கப்பட்டு, அவை வடிவம் மாறாமல் செம்பதிப்பாக வெளியிடப்படும். பாரதியின் வாழ்வை சிறுவர்கள் அறியும் வண்ணம் சித்திரக்கதை நூலாகவும், பாரதியாரின் சிறந்த நூறு பாடல்களைத் தேர்வு செய்து தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியர்களின் வண்ண ஓவியங்களுடன் நூல் ஒன்றாகவும் வெளியிடப்படும். மேலும், பாரதியாரின் படைப்புகள் மற்றும் பாரதியார் குறித்த முக்கிய ஆய்வு நூல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிப்படும்.
6. பாரதியாரின் நூல்கள் மற்றும் அவரைப் பற்றிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் தொகுத்து, எட்டையபுரம் மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லங்களிலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும், மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திலும் வைப்பதற்கு ‘பாரதியியல்’ என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும். 7. உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் ‘பாரெங்கும் பாரதி’ என்ற தலைப்பில் நடத்தப்படும். 8. திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் பாடல்கள் மட்டுமே இடம்பெறும் இசைக்கச்சேரி ‘திரையில் பாரதி’ என்ற நிகழ்வாக நேரு உள்விளையாட்டு அரங்கில் கரோனா தொற்றுப் பரவல் முழுமையாக ஓய்ந்த பிறகு நடத்தப்படும். 9. பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டுக்கு, சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சியொன்று செய்தித்துறையின் சார்பில் நடத்தப்படும்.
10. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும். 11. உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பாராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும். 12. பாரதியார் படைப்புகளைக் குறும்படம் மற்றும் நாடக வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி அவற்றை நவீன ஊடகங்களின் வழியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 13. பாரதியாரின் உணர்வுமிக்க பாடல் வரிகளைப் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் எழுதியும் வரைந்தும் பரப்பப்படும்.
14. பெண் கல்வியையும், பெண்களிடம் துணிச்சலையும் வலியுறுத்திய மகாகவி பாரதியின் பெயர், ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படவுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவுக்கு ‘மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா’ எனப் பெயர் சூட்டப்படும். எழுத்தும் தெய்வம் – எழுதுகோலும் தெய்வம் என வாழ்ந்து புதுநெறி காட்டிய புலவன் பாரதியைப் போற்றுவோம்”. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
https://www.hindutamil.in/news/tamilnadu/714685-mk-stalin-announcements-for-bharathi-death-anniversary-10.html

‘‘உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் இந்தியா: பாரதி பெயரில் காசி பல்கலையில் தமிழ் இருக்கை’’-  பிரதமர் மோடி
subramania-bharati-chair-on-tamil-studies-to-be-set-up-in-faculty-of-arts-at-banaras-hindu-university
புதுடெல்லி
உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என பிரதமர் மோடி கூறினார். சமூகத்தில் பின்தங்கியவர்களின் கல்வி மற்றும் சமூக மாற்றத்துக்கும், மேம்பாட்டுக்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கியும் சர்தார்தாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. அகமதாபாத்தில் ஏற்படுத்தப்பட்ட சர்தார்தாம் பவனில், மாணவர்களுக்கு நவீன வசதிகள் உள்ளன. தி கன்யா சத்திராலயா, 2000 மாணவிகளுக்கான விடுதி வசதிகளை பொருளாதார அளவுகோலை பொருட்படுத்தாமல் அளிக்கிறது. சர்தார்தாம் பவன் மற்றும் சர்தார்தாம் 2வது பெண்கள் விடுதி பூமி பூஜையை, பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
— Narendra Modi (@narendramodi) September 11, 2021 நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ‘‘உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி இருக்கை நிறுவப்படும். இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பயன்பெறுவர்’’ எனக் கூறினார். https://www.hindutamil.in/news/india/714737-subramania-bharati-chair-on-tamil-studies-to-be-set-up-in-faculty-of-arts-at-banaras-hindu-university-1.html
மகாகவி பாரதியாரின் நினைவு  நூற்றாண்டு  மலர் வெளியீடு https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2021/sep/11/dinamanis-bharathiyar-death-centenary-special-souvenir-release-3697384.html
பாரதியின் 100வது நினைவு தினம் அரசு சார்பில் முப்பெரும் விழா: ஆளுநர்
  செப் 12, 2021
 பாரதியின் 100வது நினைவு தினம் அரசு சார்பில் முப்பெரும் விழா: கவர்னர்
Share
 

புதுச்சேரி : ”பாரதியாரின் நினைவு நுாற்றாண்டை முன்னிட்டு இளைஞர்கள், கவிஞர்கள், தேசபக்தர்களை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2842948&Print=1

பாரதியாருக்கு ஒரு ஆண்டு முழுக்க விழா எடுக்கும் புதுச்சேரி அரசு!

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம் புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. துணைநிலை ஆளுநர் மாளிகை அருகே உள்ள பாரதியாரின் திருவுருவ சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, ‘தமிழகத்தில் பாரதியார் நினைவு தினம் அரசு விழாவாக கொண்டாடப்படுவது குறித்த கேள்விக்கு, புதுச்சேரியில் வ.உ.சி 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா, மகாகவி பாரதியார் 100-வது நினைவு ஆண்டு, நாட்டின் 75 வது சுதந்திர தின விழா ஆகிய முப்பெரும் விழாவை கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.

பாரதியாரின் நினைவை போற்றும் வகையில் இந்த ஓராண்டு முழுவதும் பாரதியாரின் நூற்றாண்டு விழா பல்வேறு நிகழ்ச்சிகளாக கொண்டாடப்பட உள்ளன. இளைஞர்கள், தேசபக்தர்கள் மற்றும் கவிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விழா நடத்தப்படும். பாராதியாரை பற்றி இளைஞர்களிடம் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். தொடர்ந்து பாஜக, திமுக உள்ளிட்ட கட்சி பிரமுகர்களும், தமிழறிஞர்களும், கவிஞர்களும் பாரதியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

https://tamil.samayam.com/latest-news/puducherry/puducherry-governor-tamilisai-soundararajan-said-bharathiyar-centenary-memorial-day-will-be-celebrated-this-whole-year/articleshow/86113912.cms

பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’: நூற்றாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினின் 14 அறிவிப்புகள்
mk-stalin-announcements-for-bharathi-death-anniversary
பிரதிநிதித்துவப் படம்

பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமையைப் போற்றும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 10) வெளியிட்ட அறிக்கை:

“பாட்டுக்கொரு புலவன் பாரதியடா அவன் பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா அதைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா’ – என்று கவிமணி தேசிக விநாயகம் பாடினார்.

இப்படிக் கவிமணிகளையே பாடவைத்த பெரும்புலவன் பாரதியின் பெருமையைப் போற்றும் அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.

கடந்த ஆகஸ்ட் 15-ம் நாள் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு உரையாற்றும்போது, மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டது, அவர் மறைந்த ஆண்டின் நூற்றாண்டு என்று இந்த ஆண்டைக் குறிப்பிட்டுக் காட்டினேன். நூறாண்டுகள் கழித்து மட்டுமன்று, ஆயிரமாண்டுகள் கழித்தும் உயிரோட்டமுள்ள கவிதைகளை, பாடல்களைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு விட்டுச் சென்றவர்தான் மகாகவி என்று போற்றப்பட்ட பாரதியார்.

‘பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை! குவிக்கும் கவிதைக் குயில்! இந் நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா; காடு கமழும் கற்பூரச் சொற்கோ; கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் திறம் பாட வந்த மறவன்; புதிய அறம் பாட வந்த அறிஞன்; நாட்டில் படரும் சாதிப் படைக்கு மருந்து! மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்; அயலார் எதிர்ப்புக்கு அணையா விளக்கவன்; என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்’

– என்று மகாகவியை வர்ணித்து எழுதியவர் தான் பாரதிதாசன்.

தேசப் பற்று – தெய்வப் பற்று – தமிழ்ப் பற்று – மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர்தான் பாரதியார். நாட்டு விடுதலைக்காகப் போராடியவராக மட்டுமே இருந்திருந்தால் அதற்காக மட்டுமே அவர் நினைவு கூரப்பட்டிருப்பார். அதையும் தாண்டி சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் எழுதியதால்தான் பாரதியார் கவிதை வரிகளாய் உலவி வருகிறார்.

பாரதியார் வரகவியா, மகாகவியா, தேசியக் கவியா என்று விவாதம் நடந்து கொண்டிருந்த காலத்தில், 1947-ம் ஆண்டே பாரதியாரை ‘மக்கள் கவி’ என்று எழுதவும் பேசவும் தொடங்கியவர் அண்ணா.

ஒரு பக்கம் நிலப்பிரபுத்துவம் – இன்னொரு பக்கம் சனாதனம் – இந்த இரண்டுக்கும் இடையில் இருந்து புதுயுகத்தைப் படைக்க நினைத்தவர் பாரதி என்று அண்ணா எழுதினார்.

அதனால்தான் திமுக அரசு அமைந்து, தலைவர் கருணாநிதி முதல்வரானபோது எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவில்லம் ஆக்கினார். அன்றைய அமைச்சர் சி.பா. ஆதித்தனார் தலைமையில் 12.5.1973 அன்று நடந்த விழாவில் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, பாரதியார் நினைவைப் போற்றும் வகையில், அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

1. பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைப்பிடிக்கப்படும். இதனையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி ‘பாரதி இளங்கவிஞர் விருது’ மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்.

2. பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

3. மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்துள்ளனர். அவர்களில் முக்கியப் பங்காற்றிய பாரதி ஆய்வாளர்களான, மறைந்த பெ. தூரன், ரா.அ. பத்மநாபன், தொ. மு. சி. ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவர்தம் குடும்பத்தாருக்கும் மற்றும் மூத்த ஆய்வாளர் சீனி. விசுவநாதனுக்கும், பேராசிரியர் ய. மணிகண்டனுக்கும், தலா மூன்று லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டுச் சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்.

4. பாரதியின் உருவச் சிலைகள், உருவம் பொறித்த கலைப்பொருட்களைப் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

5. பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் தேடித் தொகுக்கப்பட்டு, அவை வடிவம் மாறாமல் செம்பதிப்பாக வெளியிடப்படும். பாரதியின் வாழ்வை சிறுவர்கள் அறியும் வண்ணம் சித்திரக்கதை நூலாகவும், பாரதியாரின் சிறந்த நூறு பாடல்களைத் தேர்வு செய்து தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியர்களின் வண்ண ஓவியங்களுடன் நூல் ஒன்றாகவும் வெளியிடப்படும். மேலும், பாரதியாரின் படைப்புகள் மற்றும் பாரதியார் குறித்த முக்கிய ஆய்வு நூல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிப்படும்.

6. பாரதியாரின் நூல்கள் மற்றும் அவரைப் பற்றிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் தொகுத்து, எட்டையபுரம் மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லங்களிலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும், மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திலும் வைப்பதற்கு ‘பாரதியியல்’ என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.

7. உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் ‘பாரெங்கும் பாரதி’ என்ற தலைப்பில் நடத்தப்படும்.

8. திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் பாடல்கள் மட்டுமே இடம்பெறும் இசைக்கச்சேரி ‘திரையில் பாரதி’ என்ற நிகழ்வாக நேரு உள்விளையாட்டு அரங்கில் கரோனா தொற்றுப் பரவல் முழுமையாக ஓய்ந்த பிறகு நடத்தப்படும்.

9. பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டுக்கு, சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சியொன்று செய்தித்துறையின் சார்பில் நடத்தப்படும்.

10. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்.

11. உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பாராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.

12. பாரதியார் படைப்புகளைக் குறும்படம் மற்றும் நாடக வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி அவற்றை நவீன ஊடகங்களின் வழியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

13. பாரதியாரின் உணர்வுமிக்க பாடல் வரிகளைப் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் எழுதியும் வரைந்தும் பரப்பப்படும்.

14. பெண் கல்வியையும், பெண்களிடம் துணிச்சலையும் வலியுறுத்திய மகாகவி பாரதியின் பெயர், ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படவுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவுக்கு ‘மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா’ எனப் பெயர் சூட்டப்படும்.

எழுத்தும் தெய்வம் – எழுதுகோலும் தெய்வம் என வாழ்ந்து புதுநெறி காட்டிய புலவன் பாரதியைப் போற்றுவோம்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாரதியின் வரிகள் எழுச்சியையும், உணர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடியவை – முதல்வர் ஸ்டாலின்
By: சலன்ராஜ் |
12 Sep 2021

வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பாரதி சுடரை ஏற்றி வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பாரதியார் மறைந்தாலும், அவரது கவிதை வரிகள் மறையாது. மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். அத்தைகைய வலிமை பாரதியின் படைப்புகளுக்கு உண்டு. அச்சம் தவிர், உடலினை உறுதி செய், ஏறுபோல் நட, கொடுமையை எதிர்த்து நில், தெய்வம் நீ என்று உணர் – என்ற அவரின் புதிய ஆத்திச்சூடி வரிகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் எழுச்சியையும், உணர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடியவை.

அதனால் தான், பாரதியை ‘மக்கள் கவிஞர்’ என்று அறிஞர் அண்ணா 1947-ஆம் ஆண்டில் மகுடம் சூட்டி எழுதினார். நாட்டுக்கு கேடு தரும் பாதையை அனைத்தையும் விரட்டி, புதிய சமூகத்தை அமைக்கும் பாரதியின் பாதையை போற்றுவோம் என்று அண்ணா எழுதினார். எட்டயப்புரத்தில் வாழ்ந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி நினைவில்லமாக அறிவித்து பெருமை சேர்த்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. 1973-ல் பாரதியின் இல்லத்தை வரலாற்று சின்னமாக அறிவித்து திறந்து வைத்தார் தலைவர்  கருணாநிதி” என்று தெரிவித்தரர்.

முன்னதாக, மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது.

பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’: நூற்றாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினின் 14 அறிவிப்புகள்
mk-stalin-announcements-for-bharathi-death-anniversary
பிரதிநிதித்துவப் படம்

பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமையைப் போற்றும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 10) வெளியிட்ட அறிக்கை:

“பாட்டுக்கொரு புலவன் பாரதியடா

அவன் பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா

அதைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா’

– என்று கவிமணி தேசிக விநாயகம் பாடினார்.

இப்படிக் கவிமணிகளையே பாடவைத்த பெரும்புலவன் பாரதியின் பெருமையைப் போற்றும் அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.

கடந்த ஆகஸ்ட் 15-ம் நாள் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு உரையாற்றும்போது, மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டது, அவர் மறைந்த ஆண்டின் நூற்றாண்டு என்று இந்த ஆண்டைக் குறிப்பிட்டுக் காட்டினேன். நூறாண்டுகள் கழித்து மட்டுமன்று, ஆயிரமாண்டுகள் கழித்தும் உயிரோட்டமுள்ள கவிதைகளை, பாடல்களைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு விட்டுச் சென்றவர்தான் மகாகவி என்று போற்றப்பட்ட பாரதியார்.

‘பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு

செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!

குவிக்கும் கவிதைக் குயில்! இந் நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா;

காடு கமழும் கற்பூரச் சொற்கோ;

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்

திறம் பாட வந்த மறவன்; புதிய

அறம் பாட வந்த அறிஞன்; நாட்டில்

படரும் சாதிப் படைக்கு மருந்து!

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்;

அயலார் எதிர்ப்புக்கு அணையா விளக்கவன்;

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்’

– என்று மகாகவியை வர்ணித்து எழுதியவர் தான் பாரதிதாசன்.

தேசப் பற்று – தெய்வப் பற்று – தமிழ்ப் பற்று – மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர்தான் பாரதியார். நாட்டு விடுதலைக்காகப் போராடியவராக மட்டுமே இருந்திருந்தால் அதற்காக மட்டுமே அவர் நினைவுகூரப்பட்டிருப்பார். அதையும் தாண்டி சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் எழுதியதால்தான் பாரதியார் கவிதை வரிகளாய் உலவி வருகிறார்.

பாரதியார் வரகவியா, மகாகவியா, தேசியக் கவியா என்று விவாதம் நடந்து கொண்டிருந்த காலத்தில், 1947-ம் ஆண்டே பாரதியாரை ‘மக்கள் கவி’ என்று எழுதவும் பேசவும் தொடங்கியவர் அண்ணா.

ஒரு பக்கம் நிலப்பிரபுத்துவம் – இன்னொரு பக்கம் சனாதனம் – இந்த இரண்டுக்கும் இடையில் இருந்து புதுயுகத்தைப் படைக்க நினைத்தவர் பாரதி என்று அண்ணா எழுதினார்.

அதனால்தான் திமுக அரசு அமைந்து, தலைவர் கருணாநிதி முதல்வரானபோது எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவில்லம் ஆக்கினார். அன்றைய அமைச்சர் சி.பா. ஆதித்தனார் தலைமையில் 12.5.1973 அன்று நடந்த விழாவில் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, பாரதியார் நினைவைப் போற்றும் வகையில், அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

1. பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைப்பிடிக்கப்படும். இதனையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி ‘பாரதி இளங்கவிஞர் விருது’ மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்.

2. பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

3. மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்துள்ளனர். அவர்களில் முக்கியப் பங்காற்றிய பாரதி ஆய்வாளர்களான, மறைந்த பெ. தூரன், ரா.அ. பத்மநாபன், தொ. மு. சி. ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவர்தம் குடும்பத்தாருக்கும் மற்றும் மூத்த ஆய்வாளர் சீனி. விசுவநாதனுக்கும், பேராசிரியர் ய. மணிகண்டனுக்கும், தலா மூன்று லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டுச் சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்.

4. பாரதியின் உருவச் சிலைகள், உருவம் பொறித்த கலைப்பொருட்களைப் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

5. பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் தேடித் தொகுக்கப்பட்டு, அவை வடிவம் மாறாமல் செம்பதிப்பாக வெளியிடப்படும். பாரதியின் வாழ்வை சிறுவர்கள் அறியும் வண்ணம் சித்திரக்கதை நூலாகவும், பாரதியாரின் சிறந்த நூறு பாடல்களைத் தேர்வு செய்து தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியர்களின் வண்ண ஓவியங்களுடன் நூல் ஒன்றாகவும் வெளியிடப்படும். மேலும், பாரதியாரின் படைப்புகள் மற்றும் பாரதியார் குறித்த முக்கிய ஆய்வு நூல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிப்படும்.

6. பாரதியாரின் நூல்கள் மற்றும் அவரைப் பற்றிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் தொகுத்து, எட்டையபுரம் மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லங்களிலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும், மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திலும் வைப்பதற்கு ‘பாரதியியல்’ என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.

7. உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் ‘பாரெங்கும் பாரதி’ என்ற தலைப்பில் நடத்தப்படும்.

8. திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் பாடல்கள் மட்டுமே இடம்பெறும் இசைக்கச்சேரி ‘திரையில் பாரதி’ என்ற நிகழ்வாக நேரு உள்விளையாட்டு அரங்கில் கரோனா தொற்றுப் பரவல் முழுமையாக ஓய்ந்த பிறகு நடத்தப்படும்.

9. பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டுக்கு, சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சியொன்று செய்தித்துறையின் சார்பில் நடத்தப்படும்.

10. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்.

11. உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பாராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.

12. பாரதியார் படைப்புகளைக் குறும்படம் மற்றும் நாடக வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி அவற்றை நவீன ஊடகங்களின் வழியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

13. பாரதியாரின் உணர்வுமிக்க பாடல் வரிகளைப் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் எழுதியும் வரைந்தும் பரப்பப்படும்.

14. பெண் கல்வியையும், பெண்களிடம் துணிச்சலையும் வலியுறுத்திய மகாகவி பாரதியின் பெயர், ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படவுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவுக்கு ‘மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா’ எனப் பெயர் சூட்டப்படும்.

எழுத்தும் தெய்வம் – எழுதுகோலும் தெய்வம் என வாழ்ந்து புதுநெறி காட்டிய புலவன் பாரதியைப் போற்றுவோம்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply