பெண்ணுரிமைக்காகப் போராடியதால் அவர் “பெரியார்”

பெண்ணுரிமைக்காகப் போராடியதால் அவர் “பெரியார்”

பகுத்தறிவுப் பகலவன் எனப் போற்றப்படும் தந்தை பெரியார் மறைந்து 47 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் இன்னும் அவருடைய சித்தாந்த எதிரிகளால் கூட அவரை மறக்கமுடியவில்லை. அவ்வப்போது அவரது சிலையை சேதப்படுத்தி உள்ளுக்குள் மகிழ்ந்து கொள்கிறார்கள்.
அதேநேரம் கடவுள் நம்பிக்கை கொண்ட பெரும்பான்மை தமிழக மக்கள் இன்னும் பெரியாரை கொண்டாடி மகிழ்கிறார்கள். ஏன்? வெறும் கடவுள் மறுப்பு மட்டுமே அவரது கொள்கையா என்றால் கிடையவே கிடையாது.

1879 செப்டம்பர் 17-ந் தேதி ஈரோட்டில் வெங்கடப்ப நாயக்கர்-
சின்னத்தாயம்மை தம்பதிக்கு மகனாகப்பிறந்த ஈ.வெ.ராமசாமியான அவர், அதிகம் படிக்கவில்லை. ஆனால் சமுதாயத்தை நன்கு கற்று உணர்ந்தார். சாதியால் மதத்தால் மக்கள் அடிமைப்படுத்தப்படுவதைக் கண்டு கொதித்து எழுந்தார். அவரது வாழ்வு முழுக்க முழுக்க அறச்சீற்றத்தின் விளைவால் எழுந்த போராட்டங்களிலேயே கழிந்தது.

“தேர்தல் பாதை திருடர் பாதை”

காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்திருந்த அவர், ஒரு கட்டத்தில் அதுவும் சாதி ஆதிக்கத்தால் கட்டமைக்கப்பட்டது கண்டு வெளியேறி, நீதிக்கட்சியில் பணியாற்றி, 1944-ல் திராவிடர் கழகத்தை தொடங்கினார். ‘தேர்தல் பாதை, திருடர்கள் பாதை” என பகிரங்கமாக குறிப்பிட்ட அவர், இறுதி வரை பகுத்தறிவு பிரசாரத்திலேயே கவனம் செலுத்தினார். (அவரது திராவிடர் கழகம் இன்று வரை தேர்தலில் போட்டியிடுவதில்லை).

‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு”,
‘நானே எது சொன்னாலும், அதை அப்படியே ஏற்கவேண்டாம். உன் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து முடிவு எடு”

என்று அடிக்கடி சொல்லி வந்தார். சாதியக்கொடுமை ஒழியவேண்டும், பெண்ணடிமைத்தனம் கூடவே கூடாது என முழங்கி வந்தார்.

முதன்முதலில் தான் வகித்த ஈரோடு நகராட்சித்தலைவர் பதவி உள்பட 29 பதவிகளை துறந்து பதவிகள் ஏதுமின்றி 60 ஆண்டுகளுக்கு மேலாய், தனது 94 ஆம் வயதுவரை மக்கள் பணியில் ஈடுபட்டவர்.

  • செல்வக் குடும்பத்தில் பிறந்தும் (1900 ஆம் ஆண்டுகளிலேயே சுமார் 25 கோடிகளுக்கு பெரியார் அதிபதி) சமூகத்தின் அடித்தட்டு மக்களின் துயரங்களை சிந்தித்து அதற்காக தன் ஆயுளை செலவிட்டு இறுதியில் தன் சொத்துக்களை
    மக்களுக்கே விட்டுச் சென்றார்.
  • அக்காலத்திலேயே விதவை மறுமணத்தை ஆதரித்தவர், பெண் கல்வியை வலியுறுத்தியவர், பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கவேண்டும் என்று சொன்னவர். பெண்களுக்காகப் போராடியதால் பெண்களே அவருக்கு அளித்த பட்டம் தான் ‘பெரியார்” பட்டம்.
    ‘அரசியல் எதிரியின் மகளுக்கு மறுமணம் செய்து வைத்த பெரியார்”
  • பெரியாருக்கு நேரெதிர் சித்தாந்தம் கொண்ட தலைவர், ராஜாஜி. அவருடைய மகள் லட்சுமி, குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டு அந்த குழந்தைக் கணவன் ஐந்தே மாதத்தில் இறந்து அந்த பெண் குழந்தை லட்சுமி விதவையாகி,
    பள்ளிக்கூட படிப்பு நிறுத்தப்பட்டு, மொட்டையடிக்கப்பட்டு மூலையில் அமர்த்தப்பட்டாள். இது, தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பரான பெரியாரின் பார்வையில் படுகிறது. ராஜாஜியை பெரியார் திட்டுகிறார். பின்பு மகாத்மா
    காந்தியாரை பெரியார் சந்தித்து, அவர் மகன் தேவதாசை லட்சுமிக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்கிறார். ராஜாஜியின் அறிவுக்கு உதிக்காத இந்த மறுமணம் பெரியபெண்
    ணுரிமைக்காகப் போராடியதால் அவர் “பெரியார்”
    hரால் நடத்தி வைக்கப்பட்டது.
  • மனிதன் அனைவரும் சமம் அவனுக்குள் மேல்
    சாதி, கீழ் சாதி என்ற பிரிவினை இருக்கக்
    கூடாது என சாதிக்கொடுமையை கடுமையாக
    எதிர்த்தவர், பெரியார்.
  • சாதிகள் மதத்தினால் தான் தோன்றுகின்றன
    என்று சொல்லி, மதத்தை தூக்கி எறிந்தவர்.
    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும்
    என்று போராடியவர்.
  • சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும்
    சொல்லி, மதங்கள் மனிதர்களை மூடனாக்குகின்றன
    என்று கொந்தளித்ததால் தான் இன்றும் ஒரு
    சாராரின் விமர்சனம் பெரியார் மீது தொடருகிறது.
  • ‘பக்தி வந்தால் புத்தி போய் விடும், புத்தி
    வந்தால் பக்தி போய் விடும்” என தத்துவம் பேசியவர், அவர்.
  • பெண்ணுரிமைப் போராளியான பெரியார், பெண்களை அடிமைப்படுத்தும் தேவதாசி முறையை ஒழிக்க அரும்பாடுபட்டவர். ‘பெண் ஏன் அடிமையானாள்?”
    என்று அவர் எழுதிய புத்தகம் இன்றைய இளையதலைமுறை பெண்களாலும் விரும்பி வாசிக்கப்படுகிறது.
    கடவுள் மறுப்புக்கு பெரியாரின் விளக்கம்
  • ‘நீ உணரும் பசியை நானும் உணர்கிறேன், அதனால் பசி இருக்கிறது என ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நீ உணரும் கடவுளை என்னால் உணர முடியவில்லை அதனால் கடவுளை மறுக்கிறேன்” என கடவுள் மறுப்புக்கு விளக்கம் சொன்னவர்.
  • தமிழ் எழுத்து சீர்திருத்தம் கொண்டுவந்தவர், முதன்முதலாக திருக்குறள் மாநாடு நடத்தி, பொதுமக்களிடம் திருக்குறளை கொண்டுபோய் சேர்த்தவர்.
  • தெலுங்கு, சமஸ்கிருத சங்கீதத்துக்கு எதிராக தமிழிசைக்கு மேடை அமைத்து ஆதரவளித்தவர், தந்தை பெரியார்.
  • இந்தி மொழித் திணிப்பை கடுமையாக எதிர்த்தவர். 1937 ஆம் ஆண்டில் அதற்காக பல போராட்டங்களை செய்து, சிறைக்கு சென்றவர். தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கியவர் தந்தை பெரியார்.
  • இந்தியா முழுவதும் சமூக, கல்வி, வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்ட பெரும்பான்மையான இந்து மக்கள் தங்களின் உரிமையான இடஒதுக்கீட்டை சட்டப்படி பெற வழிவகுத்தவர் தந்தை பெரியார். இந்தியா சுதந்திரம்
    அடைந்தவுடன், இடஒதுக்கீட்டிற்கு அரசியல் சட்ட ரீதியில் தடை வந்தபோது, கடுமையான போராட்டங்களை நடத்தி, இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில், முதல் திருத்தமாக, இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான சட்டத்தை கொண்டுவர வழிவகுத்தவர், பெரியார். அவர் பிறந்து 141 ஆண்டுகள் (17-09-1879); மறைந்து 47 ஆண்டுகள் (24-12-1973). ஆனால் சாதி, சமய ஏற்றத்தாழ்வுகள், ஆதிக்கசக்திகள் ஒழியும் வரை அவர் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார்.
About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

1 Comment

  1. “…..படிப்பு நிறுத்தப்பட்டு, மொட்டையடிக்கப்பட்டு மூலையில் அமர்த்தப்பட்டாள். இது, தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பரான பெரியாரின் பார்வையில் படுகிறது. ராஜாஜியை பெரியார் திட்டுகிறார். பின்பு மகாத்மா
    காந்தியாரை பெரியார் சந்தித்து, அவர் மகன் தேவதாசை லட்சுமிக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்கிறார். ராஜாஜியின் அறிவுக்கு உதிக்காத இந்த மறுமணம் பெரியபெண்
    ணுரிமைக்காகப் போராடியதால் அவர் “பெரியார்”….”

    மேலே கூறியுள்ள கருத்திற்கு, Google செய்து பார்த்தும் எந்த இடத்திலும் அதற்கான ஆதாரம் இல்லை. தங்களிடம் இருந்தால் அந்தப் பதிவில் சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply