உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவு நாள்

  • உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவு நாள்
  • 26697007_1611893298858252_170335167_n.jp

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை சம்பவத்தின் 44 ஆவது நினைவுதினம் இன்று காலை யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி, கஜதீபன், நாடாளுமன்ற உறுப்பினா் சித்தாா்தன்,  மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனா்.

1974ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில்
ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, அங்கு பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.

இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டுள்ளது.

26754242_1611893295524919_1847979469_n.j26755357_1611893308858251_1539464390_n.j

மொழியோடு புரிந்த போர்!

 

Tamil_conference_memorial.jpg?resize=720

தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி, தமிழை வளர்க்கவும் வளம்படுத்தவும் தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டது. 26ஆவது சர்வதேச உலகக் கீழைத்தேயக் கல்வி மாநாட்டின்போதே இதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. தனிநாயகம் அடிகளாரும், வ.ஐ. சுப்பிரமணியமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தனர். 1964 ஜனவரி ஏழாம் திகதி உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் முதல் சந்திப்பு டில்லியில் இடம்பெற்றது.

முதலாவது உலகத் தமிழாராச்சி மாநாடு மலேசியாவிலும் இராண்டாவது உலகத் தமிழாராச்சி மாநாடு தமிழகத்திலும் மூன்றாவது மாநாடு பிரான்சிலும் நடைபெற்றது. பிரான்சில் நடைபெற்ற மாநாட்டில் நான்காவது மாநாட்டை ஈழத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாணத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி நான்காவது உலகத் தமிழாராச்சி மாநாடு 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் 9ஆம் திகதிவரை இடம்பெற்றது. தவத்திரு தனிநாயகம் அடிகளாரினால் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வைபவ ரீதியாக நிகழ்வு தொடங்கப்பட்டது.

சைவமும் தமிழழும் தழைத்தோங்கிய ஈழத்தில், இஸ்லாமியத் தமிழ், கிறீஸ்வதத் தமிழ் இலக்கியங்களால் செழுமை பெற்ற ஈழத்தில், தனித்துவமான பண்பாடும் பாரம்பரியமும் தொன்மையும் மிக்க ஈழத்தில், உலகத் தமிழராயச்சி மாநாடு பெரும் எழுச்சியாய் நடந்தது. யாழ் நகரமே பாரம்பரிய பண்பாட்டின் கோலத்தின் காட்சியில் இருந்தது. தாம் பேசும் மொழிக்கு தமிழர்கள் விழா எடுத்தனர். ஈழத்தில் இன ஒடுக்குமுறைக்கான கருவியாக துப்பாக்கிள் மாத்திரமின்றி மொழியும் பிரயோகிக்கப்பட்டது. 1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது மொழி ஒடுக்குமுறைக்காகவே என்பது வரலாறு.

ஈழத் தீவில் தமிழ் மக்களின் அறிவையும் மொழியையும் ஒடுக்கவே தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. உலகத் தமிழராயச்சி மாநாடு என்பது உலகளவில் தமிழ் மொழி குறித்த ஆராயச்சி தொடர்பானது. ஆனால் அம் மாநாட்டை கண்ணுற்ற அன்றைய அரசு, ஈழத் தமிழ் இனத்தின்மீது இனவெறி வன்முறை கொண்டு தாக்கியது. அதுவரை காலமும் ஈழத்தில் தமிழ் மக்கள் தமது அடையாளத்தின் பொருட்டு, எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்களோ, அப்படியே இம் மாநாட்டில் கலந்து கொண்டவர்களையும் படுகொலை செய்து உலகத் தமிழாராச்சி போன்ற பண்பாட்டு செயல்களுக்கு ஈழ மக்களுக்கு உரிமையில்லை என்று காட்ட முற்பட்டது.

இந்தப் படுகொலையின் பின்னணியில் ஆக்கிரமிப்பு அரசியலே இருந்தது. உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் அரசியல் தலையீடுகள், நோக்கங்கள் அற்ற வகையிலேயே இடம்பெற்று வந்தது. யாழில் இடம்பெறும் மாநாட்டிற்கு அன்றைய பிரதமர் சிறிவோ பண்டார நாயக்காவை அழைக்க வேண்டும் என்று தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக்கான கிளையில் உள்ள சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பெரும்பான்மையானவர்கள் அதை மறுத்துள்ளனர். இதனால் சிறிமாவுக்கு ஆதரவானவர்கள் கிளையிலிருந்து விலகி மாநாட்டை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

தமிழாராய்ச்சி மன்றத்தின் அகிலத் தலைவர் மாநாட்டை நடத்துதலே மரபாக இருந்தது. இந்த நிலையில் கிளையை விட்டு சிறிமா ஆதரவாளர்கள் விலகினர். இதையடுத்து பேராசிரியர் சு. வித்தியானந்தன் இலங்கை கிளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். கட்டடக்கலை விற்பன்னர்களாகிய துரைாஜாவும், கோபாலபிள்ளை மகா தேவாவும் செயலாளர், பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார்கள். தன்னை விருந்தினராக அழைக்காமை காரணமாக சிறிமாவோ அரசு மாநாட்டை குழப்பத் தொடங்கியது. இதனையடுத்து அரச பாடசாலை மண்டபங்கள் மறுக்கப்பட்டன. அத்துடன் அப்போது மேயராக இருந்த சிறிமாவின் ஆதரவாளர் அல்பிரட் துரையப்பா யாழ் திறந்த வெளியரங்களில் நிகழ்வுகளை நடத்தவும் அனுமதி தர மறுத்தார்.

இந்த மாநாட்டை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்று நினைத்த சிறிமா அரசு, மாநாடு தொடர்பான செய்திகளை இருட்டடிப்பு செய்தது. ஆனால் இலங்கைத் தீவில் உள்ள தமிழ் திரைமாளிகளில் மாநாடு குறித்த செய்திகள் திரையிடப்பட்டன. இதனால் செய்தி பரவலை அரசால் தடுக்க முடியவில்லை. அத்துடன் உலக நாடுகளில் இருந்து வந்த தமிழ் அறிஞர்களை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பியது அரசு. சர்வதேச தமிழ் அறிஞர்கள் திருப்பி அனுப்பட்ட செய்திகள் இலங்கை அரசின் ஜனநாயக மறுப்புக் கோர முகத்தை உலகிற்கு அம்பலம் செய்தது.

இலங்கை அரசின் அடக்குமுறைகளைத் தாண்டி, மாநாடு தனியாகம் அடிகளாரால் வைபவ ரீதியாக தொடங்கப்பட்டது. இதற்காக அவர் பல அச்சுறுத்தல்களை, சவால்களை எதிர்கொண்டார். மாநாட்டு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும், றிமர் மண்டத்திலும் நடக்க, கலை நிகழ்ச்சிகள் யாழ் திறந்தவெளி அரங்கிலும் நடைபெற்றன. யாழ் சுண்டுக்குளி மகளீர் கல்லூரியில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி இடம்பெற்றது. ஆறு நாட்களாக யாழ்ப்பாணமே தமிழ் மொழிப் பண்பாட்டுக் கோலத்தில் மிளிர்ந்தது. மக்கள் எழுச்சியாய் திரண்டனர். இதனை கண்ணுற்ற சிங்கள அரசுக்கு பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

தமிழ் கிராமங்கள் எங்கும் தமிழ் பண்பாட்டை வலியுறுத்தும் அலங்கார ஊர்திப் பவனிகள் இடம்பெற்றன. இறுதிநாளன்று முத்திரைச் சந்தியை கடந்து வந்த ஊர்தி பவனியை இலங்கை காவல்துறையினர் மறித்தபோது அந்த இடத்திலேயே அமர்ந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கண்ணுற்ற பொலிஸார் போராட்டத்திற்குப் பணிந்தனர். தம்மால் தடுக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் அலங்கார ஊர்திப் பவனியை செல்ல அனுமதித்தனர். எனினும் அதற்கான பலி வாழங்கலுக்காக காத்திருந்தனர்.

இந்த நிலையில் மாநாட்டில் கலந்துகொண்ட சர்வசேத அறிஞர்களை வழி அனுப்பும் நிகழ்வு ஜனவரி 10 அன்று யாழ் திறந்தவெளி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வை நடத்த சிறிமாவின் ஆதரவாளர் அல்பிரட் துரையப்பா மறுத்தமை காரணமாக யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது.வழியனுப்ப சுமார் 50ஆயிரம் பேர் வந்திருந்தனர். மண்டபம் நிரம்பிய நிலையில் வெளியிலும் மக்கள் திரண்டு இருந்தனர். பாதையை விட்டு வெளியில் புல் தரையிலிருந்து மக்கள் நிகழ்வை பார்வையிட்டனர். பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

இந்த நேரத்தில்தான் அங்கு வந்த ஸ்ரீலங்காப் பொலிஸார் ஏற்கனவே திட்டமிட்டபடி வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். தம்மை புறக்கணித்தமை மற்றும் தமிழ் நிலத்தின் பண்பாட்டு எழுச்சி கண்டு சிங்கள அரசு பெரும் இனவெறியில் இருந்தது. இதனால் இந்த நிகழ்வில் எப்படியாவது வன்முறையை தோற்றுவிப்பதற்காகவே அனுராதபுரத்திலிருந்து கலகம் அடக்கும் பொலிஸார் என்ற வன்முறைக் குழு கொண்டுவரப்ட்டது. இந்த நிலையில்தான் யாழ். காவல்துறை அதிபர் சந்திரசேகர தலைமையில் மாநாட்டிற்கு வந்திருந்த அப்பாவிப் பொதுமக்களை பொலிஸார் கடுமையாக தாக்கினர்.

குண்டாந்தடியடிப் பிரயோகம், அளவற்ற கண்ணீர் குண்டுப் புகைப்பிரயோகம் என்பன நிகழ்த்தப்பட்டதுடன், துப்பாக்கிப் பிரயோகங்களும் நிகழ்த்தப்பட்டன. துப்பாக்கிப் பிரயோகங்களால் மின்கம்பிகள் அறுந்து வீழந்தன. குறி பார்த்துச் சுட்ட மின் கம்பிகள் வீழ்ந்ததில் ஒன்பதுபேர் அந்த இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டனர். பெண்களும் வயது முதிர்ந்தவர்களுமாக பல நூற்றுக் கணக்கானவர்கள் நெரிசலில் சிக்கி காயமுற்றனர். அலை கடலென மக்கள் திரண்டு மாநாட்டிற்காக விழாக்கோலம் பூண்ட யாழ் நகரம் அழுகுரலும் கண்ணீருமாய் காட்சி அளித்தது.

இந்த வன்முறைகள் உலக அளவில் இலங்கை அரசின் கொடிய இன ஒடுக்கல் முகத்தை அம்பலம் செய்தது. இதனால் விசாரணை குழு ஒன்றை அரசு அமைத்தது. ஆனால் ஸ்ரீலங்கா பொலிஸார் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவும் இல்லை. தமிழ் மக்களுக்கு இடம்பெறும் அநீதிகளுக்கு சம்பிரதாயபூர்வ விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு நீதி மறுக்கப்பவடுதுபோல தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளுக்கும் நீதி மறுக்கப்பட்டது. ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சங்களின் மனதில் ஆறாத வடுவாக இந்தப் படுகொலை நிலைத்தது.

1974ஆம் ஆண்டு தைமாசம் ஒரு கறுப்பு மாதமானது. அந்த வருடம் எவருடைய வீட்டிலும் பொங்கல் இடம்பெறவில்லையாம். தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளின் மூலம், சிங்கள இன வெறி அரசு தமிழ் மக்களை அவர்களின் மொழி சார்ந்த ஒரு பாரம்பரிய நிகழ்வொன்றை நடத்த அனுமதியாது என்ற கோர ஒடுக்குமுறை குணாம்சத்தை உலகிற்கு எடுத்துக் கூறியது. இலங்கை அரசு தமிழ் மக்களை அரசியல் ரீதியாக ஒடுக்குவதற்கும் அப்பால், மொழி, பண்பாட்டு ரீதியாகவும் தீவிரமாக ஒடுக்குகிறது என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியது. பிற்காலத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கான பின்னணிக் காரணங்களில் ஒன்றாக இப் படுகொலை குறித்த வடுவும் இடம்பெற்றது.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://globaltamilnews.net/2018/60570/

  • திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்!!
1452317881.jpg

திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்!!

ஒன்­பது தமி­ழர்­க­ளது உயிர்­க­ளைக் காவு கொண்ட நான்­கா­வது உல­கத் தமி­ழா­ராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் துன்­பி­யல் சம்­ப­வம் இடம்­பெற்று இன்­று­டன் 44 ஆண்­டு­கள் கழிந்து போய்­விட்­டுள்­ளன. 1974ஆம் ஆண்­டுக் காலத்­தி­லி­ருந்து, முள்­ளி­வாய்க்­கால் இறு­திப்­போர் முடி­வ­டை­யும் வரை­யில், எதிர்­கா­லத்­தில் தமி­ழர்­க­ளுக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்­கான திட்­ட­மிட்­ட­தொரு படு­கொ­லைக்கு ஆரம்­பக் குறி­யீட்டை ஆரம்­பித்து வைத்து காலஞ்­சென்ற தலைமை அமைச்­சர் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க தலைமையிலான அரசு உறு­தி­யெ­டுத்த நாள்­தான் அந்­தத் துன்­பி­யல் சம்­ப­வம் இடம்­பெற்ற ஜன­வரி பத்­தாம் நாளா­கும்.

யாழ்ப்­பா­ணம் முதன்மை வீதி, வீர­சிங்­கம் மண்­ட­பத்­துக்கு முன்­பா­க­வுள்ள யாழ் முற்றவௌி யில் நான்­கா­வது தமி­ழா­ராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்ட வேளை உயி­ரி­ழந்த ஒன்­பது தமி­ழர்­க­ளின் நினை­வுச் சின்­னம், அதன் அடை­யா­ள­மாக இன்­றும் எழுந்து நிற்­பது, இன்­ன­மும் அந்த கொடிய இர­வைத் தமி­ழர்­கள் தம் மனதுகளில் எக்­கா­ல­மும் நினை­வு­ ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கா­க­வே­யா­கும்.

44 ஆண்­டு­கள் கடந்துவிட்­ட­ நி­லை­யில், அந்த மாநாட்­டில் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட படு­கொலை நிகழ்­வா­னது தமி­ழர்­கள் மத்­தி­யில் பல உண்­மை­களை உணர்த்­தி­யி­ருக்­கின்­றது. தமி­ழர்­கள் தமி­ழர்­க­ளாக வாழவே கூடாது. மாநாடு நடத்­து­வ­தற்­கும், தமி்ழை ஆய்வு செய்­வ­தற்­கும் தமி­ழர்­க­ளுக்கு உரி­மை­யில்லை என்ற அந்­தப் பேரி­ன­வா­தச் சிந்­த­னை­யு­டன் தமிழ்­மக்­க­ளுக்­கெ­தி­ரான ஒடுக்கு முறை ந­ட­வ­டிக்­கை­கள் இன்­ன­மும் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளில் நீண்டு செல்­கின்­றன.

இன்­றைய இளம் தலை­மு­றை­யி­னர் நான்­கா­வது உல­கத்­த­மி­ழா­ராய்ச்சி மாநாட்டுச்­சம்­ப­வங்­கள் பற்றி பெரி­தாக எது­வும் தெரிந்து கொண்­டி­ருப்­ப­தா­கத் தோன்­ற­வில்லை. அவர்­கள் அது குறித்­துக் கொஞ்­ச­மே­னும் அறிந்து கொள்ள முய­லா­த­தும் மிக­வும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மா­கும். நான்­கா­வது உல­கத் தமி­ழா­ராய்ச்சி மாநாட்­டின் பின்­னர் அத்­த­கை­ய­தோர் மாநாடு இலங்­கை­யில் இடம்­பெ­றா­ம­லி­ருப்­ப­தும் தமிழ்­மக்­க­ளுக்கு ஒரு தலைக்­கு­னிவு போன்றே உள்­ளது. சம்­பந்­தப்­பட்ட அமைப்பு நிறு­வ­னத்­தி­ன­ரும் இது குறித்து கருத்­தில் கொள்ள வேண்­டி­யது அவ­சி­யம்.

ஈழத்­த­மி­ழி­னம் தனது மொழி­யு­ரிமை, ஆட்­சி­யு­ரிமை, நில­வு­ரிமை போன்­ற­வற்றை அடை­யவே கடந்த 70 ஆண்­டு­க­ளாக போரா­டி­வ­ரு­கின்­றது. தமிழ்­மக்­கள் சம அந்­தஸ்­தோ­டும், சுய­மதிப்போடும் வாழக்­கூ­டாது. தமிழ் மொழியை வளர்க்­கக்­கூ­டாது என்­பவை மட்­டு­மன்றி, தமிழ்­மொ­ழியை ஆய்­வுக்­கு­ட­ப­டுத்­து­வது, தமி­ழர்­கள் தங்­க­ளைத்­தாங்­களே ஆண்­ட­ வ­ர­லா­றுக­ளை­யும், கலை பண்­பா­டு­க­ளை­யும் எடுத்­துச் சொல்­லு­கி்ன்ற விட­யங்­கள் சிங்­கள அர­சு­க­ளுக்கு இன்­று­வரை வேப்­பங்­கா­யா­கக் கசக்­கு­மொன்று,

சிங்­க­ள­வர்­க­ளா­கப் பரி­ணா­மம் செய்­யப்­பட்ட கரை­யோ­ரப் பிர­தே­ச தமி­ழர்­கள்

தமிழ் தமி­ழராக இருக்­கக் கூடாது. தமி­ழன் தமி­ழோடு உற­வா­டக் கூடாது என்ற நிலைப்­பா­டும் ஆரம்­ப­கா­லத்­தி­லேயே இருந்­த­மை­யி­னால் தான், நீர்­கொ­ழும்பு, புத்­த­ளம், சிலா­பம் போன்ற பிர­தே­சங்­க­ளில் வாழ்ந்த தமிழ் மக்­களை சிங்­க­ள­வர்­க­ளாக மாற்றி அவர்­க­ளின் பேச்சு வழுக்­கி­லி­ருந்த தமிழ்­மொ­ழி­யைச்­சி­தைத்து, அம்­மொ­ழியை மறக்க வைத்து, அந்த இடங்­க­ளெல்­லாம் சிங்­க­ளப் பிர­தே­சங்­க­ளாக மாற்றி சிங்­கள மொழிக்குச் சொந்­தக்­கா­ரர்­க­ளா­கவே வாழு­கின்ற நிலையை நாட்டை ஆண்ட ஐக்­கிய தேசி­யக்­கட்சி அர­சும், சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி அர­சும், திட்­ட­மிட்டு உரு­வாக்கி வைத்­தன. இவை வர­லாற்­றுப்­ப­தி­வு­க­ளா­கும். மூன்று மாவட்­டங்­க­ளும் முழு­மை­யா­கவே சிங்­கள மயப்­ப­டுத்­தப்­பட்­டுள் ளன.

பல ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தமிழ்­மொ­ழிக்கு மாநாடு நடத்­தப்­ப­டல்­வேண்­டும். தமிழ்­மொ­ழி­யின் பெரு­மை­களை உல­க­றி­யச் செய்­தல் வேண்­டும். தமி­ழன் தமி­ழ­னாக வாழ்­வ­தற்கு தமிழ் மாநாடு வழி சமைக்­க­வேண்­டும் என்ற எண்­ணங்­கள், சிந்­த­னை­கள் கொண்ட தமி­ழ­றி­ஞர்­கள், புல­வர்­கள், தமிழ் ஆய்­வா­ளர்­கள் ஒன்று சேர்த்து உரு­வாக்­கிய அமைப்­பான உல­கத்­த­மி­ழா­ராய்ச்சி மன்­றம், தனது நான்­கா­வது மாநாட்டை யாழ்ப்­பா­ணத்­தில் நடத்த வேண்­டு­மென்ற விருப்­பத்தை தெரி­வித்­தி­ருந்­தது. இதற்­கான அனு­ம­தியை சிறி­மாவோ அரசு முத­லில் மறுத்­தி­ருந்­தது. கொழும்­பில் நடத்­து­வ­தையே அரசு விரும்­பி­யி­ருந்­தா­லும், மன்­றத்­தி­னர் மறுத்­து­வி­டவே, அதற்­கான கார­ணங்­களை அர­சுக்கு விளக்­கி­யி­ருந்­தா­லும், விருப்­ப­மில்­லாத நிலை­யில் யாழ்ப்­பா­ணத்­தில் நடத்­து­வ­தற்கு அனு­ம­தியை வழங்­கி­யி­ருந்­தது.

திட்­ட­மிட்­ட­படி நான்­கா­வது உல­கத்­த­மி­ழா­ராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு, ஜன­வரி மாதம் 4ஆம் திகதி காலை வேளை­யில் கோலாகல­மாக ஆரம்­ப­மாகி, யாழ் மாந­க­ரம்­களை கட்டி நிற்க, வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் தேம­து­ரத் தமிழோசை உல­க­மெ­லாம் பரவ வழி­செய்­வோம் என்ற பலத்த கோஷம் எட்­டுத்­திக்­கி­லும் ஒலிக்க, மங்­கள இசை­மு­ழங்க, தமி­ழன்னை ஆசி வ­ழங்க ஆரம்­ப­மா­கி­ய­மா­நாடு, ஜன­வரி மாதம் 10 ஆம் திக­தி­வரை இடம் பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றது.

யாழ்ப்­பா­ணம் முழு­வ­தும், தமி­ழர்­கள் இலங்­கையை ஆட்சி செய்த தமிழ்­மன் னர்­களது உருவங்களை உணர்­வு ­பூர்­வ­மாகக் காட்­சிப்­ப­டுத்தி தமி­ழர்­கள் ஆண்ட இனம், தமி­ழர்­க­ளுக்­கான அர­சு­கள் கொடி­யோ­டும், முடி­யோ­டும், ஆண்ட வர­லா­று­க­ளை­யும் எடுத்­தி­யம்­பி­ய­மா­நா­டாக மேலும் மேலும் எழுச்­சி­யாக நடந்து கொண்­டி­ருக்க, யாழ். மா­வட்­டத்­தி­லி­ருந்து மட்­டு­மன்றி, பிற­ மா­வட்­டங்­க­ளி­லி­ருந்­தும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் பெரு­ம­ள­வில் வீர­சிங்கம் மண்­ட­பத்தை நோக்கித் திரண்­ட­ப­டி­ இ­ருந்­த­னர்.

தமி­ழா­ராய்ச்சி மாநாடு  குறித்து இறும்­பூது எய்­திய ஈழத் தமி­ழர்­கள்

தமி­ழர்­க­ளால் பெரு­மைப்­பட்ட தமி­ழா­ராய்ச்சி மாநாடு, அறி­ஞர்­க­ளின் பேச்­சுக்­கள், புல­வர்­க­ளின் கவி­தை­கள், பட்­டி­மன்­றங்­கள், ஆய்­வு­கள், பர­த­நாட்­டி­யம் என இயல், இசை, நாட­கங்­கள் என்ற வரி­சை­யில் ஏழு நாள்­வ­ரை­யில் நடந்து கொண்­டி­ருந்­தமை கண்டு உல­கத்­த­மி­ழர்­களே உல­கத்­தில் செம்மை மொழி, முதன்­மொ­ழி­யாம் எம் தமிழ் மொழி, மொழி­க­ளுக்­கெல்­லாம் மூத்­த­மொழி என்ற பெரு­மை­யும் இறும் பூதும் எய்தினர்.

ஏழு நாள்­க­ளாக யாழ் மாந­க­ரம் இந்­திர லோக­மா­கவே காட்­சி­ய­ளித்­துக்­கொண்­டி­ருந்­தது. தமிழை வளர்த்த தமிழ்ப்­பு­ல­வர்­கள், பெரி­யோர்­க­ளின் திரு­வு­ரு­வச் சிலைகள் மேலும் நக­ரைச் செழு­மைப்­ப­டுத்­தி­யி­ருந்­தன. இடை­யி­டையே பொலி­சா­ரின் இடை­யூ­று­கள், நெருக்­க­டி­க­ளும் தலை­தூக்­கி­யி­ருந்த நிலை­யி­லும், மக்­களோ எவற்­றை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் தமிழ் மக்­கள் மண்­ணில் தமி­ழ­ராய் நடக்­கின்­றோம், மொழி­யின் மூச்­சாய் இருக்­கின்­றோம் என்ற நிமிர்­வு­டன் மாநாட்­டின் இறுதி நாளான ஜன­வரி பத்­தாம் நாள் நிகழ்­வு­க­ளில் கலந்து கொண்­டி­ட­வேண்­டும். தமி­ழ­கத்­தின் தமி­ழ­றி­ஞ­ரான முக­ம­து­வின் தேனி­னும் இனி­மை­யான பேச்­சைக் கேட்­டு­விட வேண்­டு­மென்ற பேரா­வ­லோடு 50ஆயிரத்துக்கும் மேற்­பட்­டோர் வீர­சிங்­கம் மண்­ட­பம் முன் ஆறு­ம­ணி­யி­லி­ருந்து திரண்­டி­ருக்க இறு­தி­நாள் நிகழ்­வு­கள் இரவு ஏழு­ம­ணி­ய­ள­வில் ஆரம்­ப­மா­கின.

நைனா­மு­கம்­ம­து­வின் பேச்சு ஆரம்­ப­மா­னது. கூடி­யி­ருந்த மக்­கள் அவ­ர­து­பேச்­சில் மயங்­கிக் கட்­டுண்­ட­னர். அந்­த­வே­ளை­யில் எவ­ருமே எதிர்­பா­ரா­த­வி­தத்­தில் திடீ­ரென பொலி­ஸார் தங்­க­ளது ஜீப் வண்­டி­களில் மக்­களை ஊட­றுத்து வர முயன்ற வேளை, மக்­களோ அதற்கு இடம் கொடுக்­க­வி­ரும்­பா­து­அப்­ப­டியே வீதி­யின் நடு­வி­லும், வீதி ஓரங்­க­ளி­லும்­அ­மர்ந்­தி­ருக்க பொலி­சார் அந்த அவ­ம­திப்­பால் தங்­க­ளது ஆத்­திர உணர்­வை­யும், மூர்க்­கத்­த­னத்­தை ­யும் காட்ட முனைந்­த­னர்.

அர­சி­னது அடி­வ­ரு­டி­யா­கச்­செ­யற்­பட்ட அப்­போ­தைய யாழ்ப்­பாண நக­ர­பிதா, அல்­பி­ரட்­து­ரை­யப்­பா­வும் பின்­பு­லத்­தி­லி­ருந்து செயற்­பட, பொலி­சா­ரின் அரா­ஜக நட­வ­டிக்­கை­கள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன.

பொலி­ஸா­ரால் திட்­ட­மிட்டு ஆரம்­பிக்­கப்­பட்ட குழப்­பம்

மாநாட்­டைக் குழப்­பு­வது, மக்­க­ளைத்­தாக்­கு­வது, உயி­ரி।­ழப்பை ஏற்­ப­டுத்­து­வது, யாழ்.மா­ந­க­ரத்தை இரு­ளில் மூழ்க விட்டு மக்­க­ளைத் த­விக்க வைப்­பது போன்ற திட்­ட­மிட்ட சதிச்­செ­யல்­க­ளோடு பொலி­சா­ரின் அத்­து­மீ­றல்­கள் ஆரம்­ப­மா­கின. கண்­ணீர்ப்­புகை, துப்­பாக்­கிச் சூடுகளுக்கு மத்­தி­யில் தமிழ்­மக்­க­ளின் அவ­லக்­கு­ரல்­களே அவ்­வி­ட­மெங்­கும் ஓங்கி ஒலித்­தன.

புல்­லுக்­கு­ளம் பகு­தி­யில் உயர் அழுத்­தம் கொண்ட மின்­கம்­பி­களை நோக்கி பொலி­சார் மேற்­கொண்ட துப்­பாக்­கிச் சூட்டில் மின்­சா­ரக்­கம்­பி­கள் அறுந்து நிலத்­தில் வீழ்ந்­த­தில் அவ்­வி­டத்­தில் ஒன்­பது தமி­ழர்­கள் உயி­ரி­ழக்க நேரிட்­டது. பொலி­சா­ரின் அட்­டூ­ழி­யங்­கள் தொட­ரு­கின்­றன. யாழ்­மா­ந­க­ர ப­கு­தி­க­ளில் பொலி­சார் குவிக்­கப்­ப­டு­ கின்­ற­னர். தொடர்ந்து அச்­சம் நில­வு­ கின்­றது. தமி­ழர்­க­ளின் உயிர்­க­ளைப் பறிக்­க­வேண்­டும், தமி­ழுக்­கும் , தமி­ழர்­க­ளின் உணர்­வு­க­ளுக்­கும் சாவு மணி அடிக்­க­வேண்­டும் என்ற இன­வா­தம், தமி­ழா­ராய்ச்சி மாநாட்­டின் இறு­தி­நா­ளின் போது வெளிப்­பட்­டது .

அது அன்­றி­ரவு நிரூ­ப­ண­மா­கி­யது. நான்­கா­வது உல­கத்­த­மி­ழா­ராய்ச்சி மாநாட்­டின் ஊடாக தமி­ழி­னம் ஒன்­று­பட்­டு­விட்­டது. விடு­த­லை­வேட்­கை­யும் பீறிட்­டெ­ ழு­கின்ற வேளை­யில் 42 தமிழ் இளை­ஞர்­கள் அர­சி­னால் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்­பட்­டமை குறித்த சம்பவம் அர­சி­னால் தமி­ழர்­க­ளது தலை­நி­மிர்­வைப் பொறுக்க முடி­யாது கட்­ட­விழ்த்து விடப்­பட்­ட­தொரு சதி­ யா­கும் என்பதை நிரூபித்தது.

போராட்ட உணர்­வு­களை இப்­ப­டி­யான அட்­டூ­ழி­யச் சம்­ப­வங்­க­ளு­டாக ஆரம்­பத்­தி­லேயே முற்­றாக அழித்து விட­ வேண்­டும் என்ற நய­வஞ்­சக நோக்­கில்­தான், ஒன்­பது தமி­ழர்­க­ளைக் காவு கொண்­ட­தன் மூலம் நான்­கா­வது உல­கத் தமி­ழா­ராய்ச்சி மாநாட்­டின் இறுதி நாள் நிகழ்­வு­கள் திட்­ட­மிட்டு க் குழப்­பப்­பட்டன.

தமி­ழர் இளை­ஞர்­க­ளி­டையே சிங்கள ஆட்­சி­யா­ளர்­கள் குறித்த வெறுப்­பு­ தலை­தூக்­கக் கார­ண­மாய் அமைந்த சம்­ப­வம்

இறுதி நாளில் இடம் பெற்ற பொலி­சா­ரின் அரா­ஜ­கச் சம்­ப­வங்­கள் இளை­ஞர்­க­ளின் விடு­த­லை­வேட்­கையை அதி­க­ரிக்­கச்­செய்­தன. 44 ஆண்­டு­கள் கால வர­லாற்­றில், ஈழத்­த­மி­ழி­னம் பட்ட அவ­லங்­க­ளும், சொத்­த­ழி­வு­க­ளும், பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உயி­ரி­ழப்­பு­க­ளும், இடப்­பெ­யர்­வு­க­ளும், இடம்­பெ­று­வ­தற்கு நான்­கா­வது உல­கத்­த­மி­ழா­ராய்ச்சி மாநாட்­டில் பொலி­சாரை ஏவி­விட்டு நடத்­தப்­பட்ட வன்­மு­றை­க­ளும், படு­கொ­லை­க­ளும் தான் காரணமா­கின. தமி­ழர்­களை அழிப்­ப­தற்­கும், தமி­ழ் உணர்வு­களை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கும் பிள்­ளை­யார் சுழி­போட்டு வைத்­தது அந்­தத் தமி­ழா­ராய்ச்சி மாநாட்­டுப் படு­கொ­லைச்­சம்­ப­வமே.

மாநாட்டு நிகழ்­வு­களைக் கண்­டு­க­ளிக்­க ­வெ­னத் திரண்­டி­ருந்த தமிழ் உணர்வு கொண்ட ஏறக்­கு­றைய 50 ஆயி­ரம் பேர் வரை­யி­லான தமிழ் மக்­க­ளில் ஒன்பது உயிர்­கள் திட்­ட­மிட்­டுக்­காவு கொள்­ளப்­பட்­ட­மையே, தாம் தனித்­த­வ­மா­ன­தொரு தேசிய இன­மாக வாழ வேண்­டு­மென்ற எண்­ணத்­தைத் தமிழ் மக்­க­ளி­டையே உரு­வாக்கி வைக்­கக் கார­ண­மா­கி­யது.
பொலி­சா­ரி­னது அந்­தத்­திட்­ட­மிட்ட செயற்­பாடு தொடர்­பாக விசா­ர­ணை­ கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்ட போதி­லும், அந்த வேளைய சிறி­மாவோ அம்­மை­யா­ரின் தலை­மை­யி­லான அரசு அதற்கு இனங்­க­வில்லை. ஆயி­னும் சுதந்­தி­ர­மான விதத்­தில் நிறு­வப்­பட்ட விசா­ர­ணைக்­குழு, சம்­ப­வத்­துக்­கான முழுப்­பொ­றுப்­பை­யும் பொலி­சார் மீது சுமத்­தித் தனது அறிக்­கையை வௌியிட்­டி­ருந்­தது.

குறித்த அந்­தத் தமி­ழா­ராய்ச்சி மாநாட்­டின்­போது உயிர்­நீத்த ஒன்­பது தமி­ழர்­க­ளது நினை­வாக யாழ் வீர­சிங்­கம் மண்­ட­பத்­துக்கு முன்­பாக நிறு­வப்­பட்ட நினை­வுத் தூண்­கள் கூட அசா­தா­ர­ண­மான சூழல் நில­விய கால கட்­ட­மொன்­றில் இடித்­த­ழிக்­கப்­பட்­டன, ஆயி­னும் மீண்­டும் அதே இடத்­தில் அத்­த­கைய நினை­வுத்­தூண்­கள் எழுப்­பப்­பட்டு, தமிழ் உணர்­வா­ளர்­க­ளால் வரு­டா­வ­ரு­டம் ஜன­வரி பத்­தாம் நாளில் உயி­ரி­ழந்­த­வர்­கள் தொடர்­பான நினைவு கூரல் இடம் பெற்று வரு­கின்­றது.
ஈழத்­த­மி­ழர்­க­ளின் பல துய­ரச்­சம்­ப­வங் களில் வர­லாற்று ரீதி­யில் முக்­கி­யத்­து­ வம் பெற்ற நான்­கா­வது உல­கத்­த­மி­ழா­ராய்ச்சி மாநாட்­டுப் படு­கொ­லை­க­ளும் ஒன்­றா­கும்

https://newuthayan.com/story/61855.html

About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply