துணிவுடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு 

துணிவுடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு 

Tue, 02/01/2018

துணிவுடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர்­கள் மிகுந்த விழிப்­பு­டன் செய­லாற்ற வேண்­டி­ய­தொரு கால­கட்­டம் தற்­போது உரு­வா­கி­யுள்­ளது. கூட்­ட­மைப்பை அடி­யோடு வேர­றுத்து விடு­கின்ற செயற்­பா­டு­கள் தீவி­ர­மாக இடம்­பெற்்று வரு­கின்ற இந்த வேளை­யில் கூட்­ட­மைப்­பி­னா் விழிப் பு­டன் செய­லாற்­று­வது ஆவ­சி­ய­மாகி விட்­டது.

தனக்கு எதி­ரான சக்­தி­களை இனம் காணத்­த­வ­றிய கூட்­ட­மைப்பு

வடக்கு மாகாண சபை­யில் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரா­கத் தமி­ழ­ர­சுக்­கட்சி தீர்­மா­ன­மொன்­றைக் கொண்டு வந்­த­போதே தனக்கு எதி­ரான சக்­தி­க­ளைக் கூட்­ட­மைப்பு இனம் கண்­டி­ருக்க வேண்­டும். ஆனால் அதில் தவ­றி­ழைத்து விட்­டது. தற்­போது உள்ளூ­ராட்­சித்­தேர்­தல் இடம்­பெ­றப்­போ­கும் நிலை­யில் எதி­ர­ணி­யி­னர் பகி­ரங்­க­மா­கச் சவால் விடுத்து நிற்­கின்­ற­னர்.

முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் அடுத்து இடம் பெறப்­போ­கும் மாகா­ண­ச­பைத்­தேர்­த­லில் உத­ ய­ சூ­ரி­யன் சின்­னத்­தில் போட்­டி­யி­டப்­போ­வ­தாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சிவ­சக்தி ஆனந்­தன் கூறி­ய­தாக ஊட­கங்­க­ளில் செய்தி வௌியா­கி­யுள்­ளது.

விக்­னேஸ்­வ­ரன் இதை மறுத்­தா­லும், இந்­தச் செய்தி வௌியா­ன­தற்கு ஒரி­ரண்டு தினங்­க­ ளுக்கு முன்­னா்­தான் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யின் தலை­மைக்கு எதி­ராக அவர் கருத்­துக் கூறி­யி­ருந்­தார். தாம் எந்­தக் கட்­சி­யை­யும் சார்ந்­த­வா் அல்­ல­வெ­ன­வும், தமது கருத்­து­டன் ஒத்­துப்­போ­கக் கூடி­ய­வர்­கள் பேர­வை­யில் உள்­ள­தா­க­வும் அவர் தொிவித்­தி­ருந்­தார்.

விக்­னேஸ்­வ­ர­னின் மன­நிலை அப்­போதே தௌிவா­கத் தெரிந்து விட்­டது. அவர் என்ன செய்­யப் போகின்­றார் என்­ப­தும் புரிந்­து­விட்­டது.

கட்­சித்­தொண்­டா்­க­ளது  உணா்­வு­க­ளுக்கு தமி­ழ­ர­சுக்­கட்சி மதிப்­ப­ளிக்க வேண்­டும்

கூட்­ட­மைப்­பில் பிர­தான இடத்தை இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்சி வசிக்­கின்­றது. அந்­தக் கட்­சிக்கு ஏரா­ள­மான தொண்­டர்­க­ளும் உள்­ள­னர். கடந்த மாகா­ண­சபை மற்­றும் நாடா­ளு­மன்­றத்­தேர்­தல்­க­ளில் கூட்­ட­மைப்பு பெற்ற மகத்­தான வெற்­றிக்கு இவர்­க­ளது செயற்­பா­டு­களே பிர­தான கார­ண­மெ­னக் கூற முடி­யும். ஆகவே இந்­தத் தொண்­டர்­க­ளின் உணர்­வு­க­ளைத் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யின் தலைமை மதித்து நடந்­து­கொள்ள வேண்­டும். கடந்த மாகா­ண­ச­பைத் தேர்­த­லின்­போது வேட்­பா­ளர்­க­ள் தெரி­வில் தமி­ழ­ர­சுக்­கட்சி தவ­றி­ழைத்து விட்­ட­தா­கப் பர­வ­லான குற்­றச்­சாட்­டுக்­கள் எழுந்­தன.

சமு­தா­யத்­தில் மதிக்­கப்­ப­டா­த­வர்­க­ளும், ஒழுக்க விழு­மி­யங்­க­ ளைக் கடைப்­பி­டிக்­கா­த­வர்­க­ளும், வேட்­பா­ளர்­க­ளாக நிறுத்­தப்­பட்­ட­தாக குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன . கட்­சித் தலை­மை­யு­டன் நெருக்­க­மாக உள்­ள­வர்­க­ளுக்கு மட­டுமே வேட்­பா­ளர் தெரி­வில் முக்­கி­யத்­து­வம் வழங்­கப்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. நேர்­மை­யும், தகு­தி­யும் உள்­ள­வர்­க­ளுக்கு மட்­டுமே இடம் வழங்­கப்­ப­டு­தல் வேண்­டு்ம். இனி­வ­ரும் கால­கட்­டம் கூட்­ட­மைப்­பைப் பொறுத்­த­வ­ரை­யில் கடி­ன­மா­ன­தா­கவே அமை­யப் போகின்­றது .முன்­னர் போன்று எதிர்ப்­பில்­லாத வெற்­றி­களை அத­னால் ஈட்­டிக்­கொள்ள முடி­யாது.

அந்த அள­வுக்கு கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­கள் வியூ­கம் வகுத்துக்­கொண்டு களத்­தில் குதித்­துள்­ள ­னர். இதை முறி­ய­டிப்­ப­தற்­கு­ரிய இரா­ஜ­தந்­தி­ரத்தை கூட்­ட­மைப்பு வகுத்­துச் செயற்­பட வேண்­டும்.கூட்­ட­மைப்­பு­டன் ஒட்­டிக்­கொண்­டி­ருக்­கின்ற பச்­சோந்­தி­க­ளை­யும், புல்­லு­ரு­வி­க­ள­யும் களை­யெ­டுத்­த­விட வேண்­டும்.அவ்­வி­தம் செய்­யாது விட்­டால் கூட­வே­யி­ருந்து குழி­தோண்டி விடு­கின்ற செயற்­பா­டு­கள் கச்­சி­த­மாக நி।றை­வேற்­றப்­பட்டு விடும்.

மாகா­ண­ச­பைத் தோ்தலுக்­கான முன்­னா­யத்­தங்­கள் கூட்­ட­மைப்­புக்கு அவ­சி­யம்

மேலும் உள்­ளூ­ராட்­சித்­தேர்­த­லு­டன் ஓய்ந்­து­வி­டாது, மாகா­ண­ச­பைத்­தேர்­த­லுக்­கான ஆயத்­தங்­க­ளி­லும் கூட்­ட­மைப்­பின் தலைமை உட­ன­டிக் க­வ­னம் செலுத்­து­தல் வேண்­டும். விக்­னேஸ்­வ­ரன் எதி­ர­ணி­யின் சார்­பில் போட்­டி­யி­டு­வது அநே­க­மாக உறு­தி­யாகி விட்­டது.

இந்த நிலை­யில் அவ­ரைத் துருப்­புச் சீட்­டா­கப் பயன்­ப­டுத்தி மாகா­ண­ச­பை­யின் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­று­வ­தற்­குக் காத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு ஒரு பலத்த அடி­யைக் கொடுக்க வேண்­டி­யது கூட்­ட­மைப்­பின் பிர­தான கட­மை­யா­கும். எதி­ர­ணி­யி­னர் மீண்­டும் தலை தூக்­கா­த­வாறு இந்த அடி அமைந்­தி­ருத்­தல் வேண்­டும்.

சில ஊட­கங்­கள் கூட்­ட­மைப்­பை­ யும், தமி­ழ­ர­சுக்­கட்­சி­யை­யும் தவ­றா­கச் சித்­த­ரித்­துச் செய்தி வௌியி­டு­வ­தைத் தமது பிர­தான தொழி­லா­கத் கொண்­டுள்­ளன. செய்­தி­க­ளைச் சுதந்­தி­ ர­மாக வௌியி­டு­கின்ற பூரண உரிமை ஊட­கங்­க­ளுக்கு உண்டு. ஆனால் உண்­மை­க­ளைத் திரித்­தும், தவ­றா­க­வும் வௌியி­டு­வதை எந்த வகை­யி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது .பத்­தி­ரிகா தர்­மத்தை மீறு­ப­வர்­க ­ளை­யும் குற்­ற­வா­ளி­க­ளின் பட்­டி­ய­லில் சேர்த்­துக் கொள்ள வேண்­டும்.

இதே­வேளை கூட்­ட­மைப்­பின் தலைமை துணி­வு­டன் உறு­தி­யான முடி­வு­களை எடுப்­ப­தில் தவறி விடு­வ­தா­கப் பர­வ­லா­கக் குற்­றச்­சாட்­டுக்­கள் எழுந்­துள்­ளன. எந்த விட­ய­மாக இருந்­தா­லும் துணி­வு­டன் உறு­தி­யான முடி­வு­களை மேற்­கொள்­வது தலை­மை­யொன்­றின் முக்­கிய பணி­யா­கும். புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னி­டம் இது நிறை­யவே காணப்­பட்­டது. இத­னால் பல வெற்­றி­க­ளை­யும் அவர் ஈட்­டிக்­கொண்­டார்.

இந்­தியா மற்­றும் வேறு பல நாடு­க­ளின் சதி­கா­ர­ண­மா­கப் புலி­கள் இறு­திப்­போ­ரில் தோல்­வி­யைத் தழு­விக்­கொண்­டமை தெரிந்த தொன்றே. ஆகவே கால நிலை­யைப் புரிந்து கொண்டு கூட்­ட­ மைப்­பின் தலைமை விழிப்­பு­ ட­னும், துணி­வு­ட­னும், உறுதி­யா­க­வும் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­யம். அது­தான் எதிர்ப்­புக்­க­ளைக் கடந்து கூட்­ட­மைப்பு கரை சேர உத­வும். காலத்­தின் கட்­டா­ய­மும் இது­வே.

http://newuthayan.com/story/59830.html

Categories: merge-rssyarl-category
About editor 2979 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply