யாழில் மஹிந்தரின் கயிறு!

யாழில் மஹிந்தரின் கயிறு!

தமது பதவியை இழந்த பின்னர் முதல் தடவையாக நேற்று யாழ்ப்பாணம் வந்து திரும்பியிருக்கின்றார் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனைத் தலைவருமான மஹிந்த ராஜபக்சா.

நாட்டின் உயர் பதவியில் இருந்து தேர்தல் மூலம் “தொபுகடீர்’ என வீழ்ந்த மஹிந்த ராஜபக்r, அத்தோல்வி தந்த படிப்பினை காரணமாகத் திருந்தியிருப்பரோ – தமது போக்கில் மாற்றத்தைக் கடைப் பிடிப்பாரோ – என்றெல்லாம் தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அவர் மாறவேயில்லை. அதே மேலாதிக்கச் சிந்தனையுடைய சிங்கள, பெளத்த அரசியல்வாதி தாம் என்பதை தமது யாழ். விஜயத்தின் போது நிரூபித்துச் சென்றிருக்கின்றார் அவர்.

முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல, நேற்று யாழ்ப்பாணத்தில் அவர் ஆற்றிய உரை அவரின் மனநிலைப் போக்கைத் தோலுரித்துக் காட்டத் தவறவில்லை. யுத்தம் முடிவுற்ற பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வுக்காகத் தாம் தமிழர் தரப்போடு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு – சமரசப் பேச்சு நடத்தத் தயாராக இருந்தார் என்றும் – அதற்காக அழைப்பு விட்டுத் தாம் காத்திருந்த போதும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பேச வராதமையால் அந்த முயற்சி கைகூடாமல் போயிற்று என்றும், முழு அரசியல் புளுகு மூடையை யாழ்ப்பாணத்திற்கு வந்து அவர் அவிழ்த்து விட்டிருக்கின்றார். அவர் யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்கள் அரசியல் அறிவு குறைந்தவர்களோ அல்லது நடந்த விடயங்களை விரைவில் மறந்து விடும் அறிவிலிகள் என்றோ நினைத்து விட்டார் போலும்.

2011 ஜனவரி 10 ஆம் திகதி தொடக்கம் 2012 ஜனவரி 18 ஆம் திகதி வரை மொத்தம் பதினெட்டு சுற்றுப் பேச்சுக்களை ஜனாபதி மஹிந்த ராஜபக்rவின் அரசுத் தரப்புடன் நடத்தியவர்கள் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்புப் பிரதிநிதிகள்.

இந்தப் பேச்சுகளின் முதல் மூன்று சுற்றுகளின்போதே இனப் பிரச்சினைத் தீர்வுக்கான தமது பக்க யோசனைத் திட்டத்தைப் பகுதி பகுதியாக வழங்கி முழுமைப்படுத்தியிருந்தனர் கூட்டமைப்பினர். அது தொடர்பில் அரசின் பதிலையும் – முடிவையும் – கூட்டமைப்பினர் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
அதன் பின்னர் ஐந்து மாதங்களாக ஏழு சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றன. ஆனால் கூட்டமைப்புக் கொடுத்த தீர்வுத் திட்ட யோசனைக்கு மஹிந்த அரசு பதிலும் தரவில்லை, பிரதிபலிப்பும் காட்டவில்லை. அதனால் வெறுத்துப் போன கூட்டமைப்பினர் வேறு வழியின்றி அந்தப் பேச்சு முயற்சியில் இருந்து வெளியேறினர். மீண்டும் 2011 ஒக்ரோபரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சா – கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் சந்திப்பு இடம்பெற்றது. கூட்டமைப்பின் தீர்வுத் திட்ட யோசனைக்கு அரசு தரப்பு பதில்
தரா விட்டாலும் முன்னைய சமாதான முயற்சிகள் தொடர்பான ஐந்து ஆவணங்களின் அடிப்படையில் சமாதானப் பேச்சுக் களைத் தொடர அந்தச் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.

2011 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 16 ஆம் திகதி முதல் மீண்டும் அமைதி பேச்சுக்களை மஹிந்த அரசுடன் கூட்டமைப்பு ஆரம்பித்தது. மங்கள முனசிங்க தலைமையிலான குழுவின் முன்னைய அறிக்கை, ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சிக்கான ஆவணங்கள், ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்சா நியமித்த நிபுணர் குழு அறிக்கை, அந்த நிபுணர் குழுவின் ஸ்தாபிதக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்சா ஆற்றிய உரையின் தொகுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்பேச்சுக்களைத் தொடரத் தீர்மானிக்கப்பட்டது.

பேச்சுக்கான பன்னிரண்டு தலைப்புகளும் முடிவுசெய்யப்பட்டன. இப்போது நல்லாட்சி அரசுடன் புதிய அரசமைப்பு முயற்சி கள் தொடர்பில் இறுதி செய்யப்பட்ட பன்னிரண்டு தலைப்புகளுமே அப்போதும் வகுக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில் தொடர்ந்த பேச்சுக்களில் காணி தொடர்பான அதிகாரப்பகிர்வு
விடயத்தில் சில தீர்மானங்கள், முடிவுகள் கூட எட்டப்பட்டன. இந்தப் பேச்சுக்களின் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தப் பேச்சுக்களின் ஒவ்வொரு சுற்றின் போதும் கூட்டத்தின்  அறிக்கை தயார் செய்யப்பட்டு, அடுத்த கூட்டத்தின் ஆரம்பத்தில் முன்னைய கூட்ட அறிக்கை வாசித்துப் பதிவு செய்யப்பட்டது. அந்தப் பதிவுகள் இந்தக் கூட்டங்களுக்கான ஆதாரங்களாக இன்னும் உள்ளன.

கடைசியாக 18 ஆவது கூட்டத்தை 2012 ஜனவரி 16, 17, 18 ஆம் திகதிகளில் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்துவது என அதற்கு முந்திய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பேச்சுக்கான பன்னிரண்டு தலைப்புகளும் முடிவுசெய்யப்பட்டன. இப்போது நல்லாட்சி அரசுடன் புதிய அரசமைப்பு முயற்சி கள் தொடர்பில் இறுதி செய்யப்பட்ட பன்னிரண்டு தலைப்புகளுமே அப்போதும் வகுக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில் தொடர்ந்த பேச்சுக்களில் காணி தொடர்பான அதிகாரப்பகிர்வு விடயத்தில் சில தீர்மானங்கள், முடிவுகள் கூட எட்டப்பட்டன.

இந்தப் பேச்சுக்களின் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தப் பேச்சுக்களின் ஒவ்வொரு சுற்றின் போதும் கூட்டத்தின் அறிக்கை தயார் செய்யப்பட்டு, அடுத்த கூட்டத்தின் ஆரம்பத்தில் முன்னைய கூட்ட அறிக்கை வாசித்துப் பதிவு செய்யப்பட்டது. அந்தப் பதிவுகள் இந்தக் கூட்டங்களுக்கான ஆதாரங்களாக
இன்னும் உள்ளன.

கடைசியாக 18 ஆவது கூட்டத்தை 2012 ஜனவரி 16, 17, 18 ஆம் திகதிகளில் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்துவது என அதற்கு முந்திய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அந்த மூன்று நாள்களும் உரிய நேரத்தில் கூட்டத்துக்குச் சென்று தமிழ்க் கூட்டமைப்பினர் காத்திருந்தனர். ஆனால், அரசு தரப்புப் பிரதிநிதிகள் வரவேயில்லை.

இதுதான் கடந்த காலத்தில் மஹிந்த அரசுடன் கூட்டமைப்பினர் நடத்திய அமைதிப் பேச்சுக்களின் சுருக்கச் சரித்திரம்.

பேச்சுக்குத் தனது அரசுத் தரப்புப் பிரதிநிதிகளை அனுப்பா மல் கூட்டமைப்பினரை உதாசீனப்படுத்தி, திமிர்த்தனத்துடன் நடந்து கொண்டது மஹிந்த அரசு.
அப்போது, அப்படி நடந்து கொண்ட அரசின் தலைவர் இப்போது யாழ்ப்பாணத்துக்கு வந்து, தாம் கூட்டமைப்புடன் தீர்வுக்கான சமரசரப் பேச்சு நடத்துவதற்கு அழைப்பு விடுத்துக் காத்திருந்தார் என்றும், கூட்டமைப்பினர்தான் பேச்சுக்கு வரவேயில்லை என்றும் இங்கு வந்து “ரீல்’ விடுகின்றமை, யாழ்ப்பாண மக்
களை ஏமாளிகளாகக் கருதும் நடவடிக்கையன்றி வேறில்லை.

தமிழர்கள் மீது கொடூர யுத்தம் ஒன்றை அவிழ்த்து விட்டு இலங்கைத் தமிழினத்தின் ஆன்மாவில் நீங்காத வடுவாக பெரும் ரணகளத்தை ஏற்படுத்திய ஒரு சிங்களத் தலைவர், தாம் தமது அந்தப் பேரினவாத நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை – மாறப் போவதில்லை என்பதையே இந்த உண்மைக்கு மாறான விடயங்கள் அடங்கிய உரை மூலம் குறிப்புணர்த்திச் சென்றிருக்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது. (காலைக்கதிர் ஆசிரிய தலையங்கம்)

About editor 2979 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

1 Comment

  1. 2015 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் மகிந்த இராசபக்சா தோற்றுப் போனார். தனது ஊருக்குத் திரும்பிய மகிந்தாவை அவரது ஆதரவாளர்கள் சென்று சந்திக்கிறார்கள். அப்போது தான் தேர்தலில் தோல்வி அடையவில்லை. பெரும்பான்மை சிங்கள -பவுத்த வாக்காளர்கள் எனக்குத்தான் வாக்களித்தார்கள். நான் தோற்றதற்கு வட – கிழக்கில் உள்ள தமிழ்வாக்கு வாங்கி எனக்கு எதிராக வாக்களித்தது. அதனால்தான் நான் தோற்றுப்போனேன் என்றார்.
    2014 நொவெம்பரில் சனாதிபதி தேர்தல் பரப்புரைக்கு சென்ற போது முல்லை மாவட்டம் மணல் ஆறு ( வெலிஓயா) இல் குடியமர்த்தப்பட்ட 3,000 சிங்களக் குடும்பங்களுக்கு காணி உரிமைப்பத்திரங்களை வழங்கினார்ஃ பின் நடந்த கூட்டத்தில் கொச்சைத் தமிழில் “நான் சிங்களவன். இந்த நாடு சிங்களநாடு. நீங்கள் தமிழர்கள். நாங்கள் சிங்களவர்கள் சொல்வதைத்தான் தமிழர்கள் கேட்க வேண்டும்” என்று பேசினார்.
    சனாதிபதியாக இருந்த காலத்தில் திருத்தச் சட்டம் 13ஏ யை நீக்க யோசனை செய்தார். எதிர்ப்புக் காரணமாக அதனைக் கைவிட்டார். அவரது தம்பியும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய இராசபக்சா வடக்கில் தேசிய குடிமக்கள் விழுக்காட்டுப் போல (75 விழுக்காடு சிங்களவர்) சிங்களவர்களை குடியேற்ற வேண்டும் என்றார்.
    மகிந்தா ஒரு அதிதீவிர சிங்கள – பவுத்த வெறியர். அவர் யாழ்ப்பாணம் வந்து போவதும் அவருக்கு மாலை மரியாதை செய்யப்படுவதும் அவரது கட்சியில் தமிழர்கள் போட்டியிடுவது வெட்கக் கேட்டு.
    வடக்கில் இனிப்பாகப் பேசும் மகிந்த இராசபக்சா தெற்கில் என்ன பேசுகிறார்?
    தமிழர்களுக்கு உச்ச அதிகாரம் வழங்கி நாட்டைத் துண்டாடச் சதி!

    தமிழர்களுக்கு அதியுச்ச அதிகாரத்தை வழங்கி நாட்டைப் பிளவு படுத்தும் சதித்திட்டத்தை இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது என்று குற்றஞ்சாட்டினார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச.
    அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அனைவரையும் தம்முடன் கைகோர்க்குமாறும் அவர் அறைகூவல் விடுத்தார். இந்த அரசை வீழ்த்தும் போராட்டத்துக்குத் தலைமை தாங்க தாம் தயார் எனவும் முழக்கமிட்டார்.
    சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி யின் மக்கள் சந்திப்பு கோமாகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்த தாவது:
    நாம் வென்று கொடுத்த சுதந்திரத்தை மூன்று ஆண்டுகளில் அரசு நாசமாக்கியுள்ளது. வெளிநாடுகளுக்கு நிலங்களை விற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எமது வளங்களைத் தாரை வார்த்தும் வரும் பணத்திலேயே அரசு தனது செலவுகளைப் பார்த்துக்கொள்கின்றது. நாம் மோசடிகளைச் செய்தோம், களவுகளை செய்தோம், மக்களின் சொத்துக்களைச் சூரையாடினோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நபர்கள் எம் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு ஆதாரத்தையும் வெளிப்படுத்த முடியாது தடுமாறி வருகின்றனர். மாறாக இவர்கள் பட்டப்பகலில் கொள்ளையடித்து வருகின்றனர்.
    புதிய அரசமைப்பை உருவாக்கி நாட்டைத் துண்டாடும் சதித்திட்டமம் முன்னெடுக்கபட்டு வருகின்றது. வடக்கு கிழக்கு இணைப்பு, அவர்களுக்கு அதியுச்ச அதிகாரங்கள் என்று அனைத்தையும் வழங்கி இந்த நாட்டைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
    இந்த நாடு பிளவுபட வேண்டுமா அல்லது இணைந்து செயற்பட வேண்டுமா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்கவேண்டும். இந்த நாடு பிளவுபடுவதை விரும்பாத சகலரும் தேர்தலில் எம்முடன் கைகோருங்கள்.
    சிறிலங்கா பொது மக்கள் முன்னணி மக்களின் ஆதரவை பெற்று வருகின்ற நிலையில் எமது மக்கள் எதனை விரும்புகின்றனரோ அதையே நாமும் செய்ய வேண்டும். மக்கள் விரும்பாத எதையும் நாம் முன்னெடுக்கத் தயாராக இல்லை. மக்களுக்காகத் தலைமை தாங்க நாம் தயாராகவே உள்ளோம். இம்முறை தேர்தலில் மக்கள் ஆதரவை பெற்று எமது பலத்தினை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இருந்தே உறுதிப்படுத்துவோம்.

    தமிழர்களுக்கு அதியுச்ச அதிகாரத்தை வழங்கி நாட்டைப் பிளவு படுத்தும் சதித்திட்டத்தை இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது என்று குற்றஞ்சாட்டினார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச.
    அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அனைவரையும் தம்முடன் கைகோர்க்குமாறும் அவர் அறைகூவல் விடுத்தார். இந்த அரசை வீழ்த்தும் போராட்டத்துக்குத் தலைமை தாங்க தாம் தயார் எனவும் முழக்கமிட்டார்.
    சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி யின் மக்கள் சந்திப்பு கோமாகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்த தாவது:
    நாம் வென்று கொடுத்த சுதந்திரத்தை மூன்று ஆண்டுகளில் அரசு நாசமாக்கியுள்ளது. வெளிநாடுகளுக்கு நிலங்களை விற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எமது வளங்களைத் தாரை வார்த்தும் வரும் பணத்திலேயே அரசு தனது செலவுகளைப் பார்த்துக்கொள்கின்றது. நாம் மோசடிகளைச் செய்தோம், களவுகளை செய்தோம், மக்களின் சொத்துக்களைச் சூரையாடினோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நபர்கள் எம் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு ஆதாரத்தையும் வெளிப்படுத்த முடியாது தடுமாறி வருகின்றனர். மாறாக இவர்கள் பட்டப்பகலில் கொள்ளையடித்து வருகின்றனர்.
    புதிய அரசமைப்பை உருவாக்கி நாட்டைத் துண்டாடும் சதித்திட்டமம் முன்னெடுக்கபட்டு வருகின்றது. வடக்கு கிழக்கு இணைப்பு, அவர்களுக்கு அதியுச்ச அதிகாரங்கள் என்று அனைத்தையும் வழங்கி இந்த நாட்டைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
    இந்த நாடு பிளவுபட வேண்டுமா அல்லது இணைந்து செயற்பட வேண்டுமா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்கவேண்டும். இந்த நாடு பிளவுபடுவதை விரும்பாத சகலரும் தேர்தலில் எம்முடன் கைகோருங்கள்.
    சிறிலங்கா பொது மக்கள் முன்னணி மக்களின் ஆதரவை பெற்று வருகின்ற நிலையில் எமது மக்கள் எதனை விரும்புகின்றனரோ அதையே நாமும் செய்ய வேண்டும். மக்கள் விரும்பாத எதையும் நாம் முன்னெடுக்கத் தயாராக இல்லை. மக்களுக்காகத் தலைமை தாங்க நாம் தயாராகவே உள்ளோம். இம்முறை தேர்தலில் மக்கள் ஆதரவை பெற்று எமது பலத்தினை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இருந்தே உறுதிப்படுத்துவோம் என்றார்.

Leave a Reply