நிலையான ஒரு தீர்வு கிடைக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் அரசின் பங்காளிகள் ஆகமாட்டோம்

நிலையான ஒரு தீர்வு கிடைக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் அரசின் பங்காளிகள் ஆகமாட்டோம்

கிளிநொச்சி, ஜன.28

தமிழ் மக்களுக்கு நிலையான ஒரு தீர்வு கிடைக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் அரசின் பங்காளிகள் ஆகமாட்டோம். எதிர்க் கட்சியில்
தான் இருப்போம். இவ்வாறு நேற்று உறுதிபடத் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.Image result for இரா சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் பரந்தனில் நடைபெற்றது. இதில் பங்கேற்று
உரையாற்றும்போதே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு,

கூட்டமைப்பு மீது இப்போது பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. – இவ்வாறு நேற்று உறுதிபடத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறு கிறார்கள். நாங்கள் எதிர்க்கட்சியில்தான் இருக்கின்றோம். தொடர்ந்தும் எதிர்க்கட்சியில்தான் இருப்போம். நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஏற்படும் வரை அரசின் பங்காளிகளாக இணையமாட்டோம். அதுதான் தந்தை செல்வாவின் கொள்கை.

பெப்ரவரி 10 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை எதிர்நோக்கவுள்ளோம். இந்தத் தேர்தல் பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகின்றது. நாட்டின் தேசியத் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சா ஆகியோர் இந்தத் தேர்தலில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றார்கள். பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகின்றார்கள்.

நடைபெற்ற ஊழல் விவகாரங்களும் தேர்தல் பிரசாரங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒற்றையாட்சி தொடருமா அல்லது தமிழீழம் மலருமா என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என மஹிந்த ராஜபக்சா தெரிவித்து வருகின்றார். அவர் நினைக்கின்றார் இந்தத் தேர்தலில் தான் கணிசமான ஆசனங்களைப் பெற்றுவிட்டால் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய விடயத்தை இல்லாமல் செய்து விடலாம் என்று. தமிழ் மக்கள் இந்த நாட்டில் சம அந்தஸ்துடன் வாழ்வதற்கான 30 வருடகால ஆயுதப் போராட்டம் 2009 இல் முடிவுக்கு வந்த பின்னர் எமது இராஜதந்திரப் போராட்டம் தொடர்கிறது. பல கருமங்கள் நிறைவேற்றப் பட்டு, சர்வதேச ரீதியான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, எமது பணிகள் தொடர்கின்றன.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்த அரசுக்கு பலவற்றைச் செய்வதற்கு விருப்பம் இருந்தாலும் அவற்றை அவர்கள் மந்தகதியில் செய்து வருகின்றார்கள். காரணம் என்னவென்றால் முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்r சிங்கள மக்கள் மத்தியில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு யுத்த வெற்றியைப் பெற்றுத்தந்த இராணுவ வீரர்களுக்கு இந்த அரசு துரோகம் செய்யபோகின்றது எனத் தெரிவித்து வருகின்றமையால்தான். ஆனாலும் இதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.
அரசுக்குத் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றோம். ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் தீர்வில் எமது மக் களின் இறையாண்மை மதிக்கப்படவேண்டும். தீர்வு
எமது மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை மதிப்பதாக அமையவேண்டும். எமது சமூக, கலாசார விட யங்களில் நாங்கள் அதிகாரத்தை செலுத்துக் கூடிய
வகையில் தீர்வு அமையவேண்டும்.

ராஜபக்சா காலத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ இடம்பெறாத பல விடயங்கள் தற்போது இடம் பெற்று வருகின்றன. எனவே மக்களே! இதுவொரு சாதாரணமான தேர்தல் அல்ல. இதுவொரு முக்கியமான தேர்தல். தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து அமோக வெற்றியைக் கொடுத்தால் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் என்பது வெளிப்படும். மக்கள் ஜனநாயக ரீதியாக உறுதியாக இருக்கின்றார்கள் என்பது வெளிப்படும். நாங்கள் அரசை ஆதரிப்பதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும். இந்த அரசை நாம் ஆதரிக்கின்றோம். நான் மறுக்கவில்லை. இந்த அரசு விழக்கூடாது. இதனை வைத்துச் சில கருமங்களை நாம் நிறைவேற்றவேண்டும்.

இன்றைய ஜனாதிபதியும் பிரதமரும் பல பிரச்சினைகள் இருந்தாலும் தொடர்ந்தும் அரசை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். நடத்தவேண்டிய ஒரு கட்டாயத் தேவை
அவர்களுக்கு இருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்தவேண்டும். வரவு – செலவுத்திட்டத்துக்குச் சாதகமாக வாக்களிக்கின்றோம் ஏன்?

நாடாளுமன்றத்தில் அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கின்றது. அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் முகமாக நாங்கள் ஆதரித்து வாக்களிகின்றோம். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு நிறைவேற்றப் படும்போது அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை யால் நிறைவேற்றப்படவேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசுக்கு இருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசு அடையலாம். அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படலாம் என்பதை அரசுக்கும், நாட்டுக்கும் தெரிவிப்பதற்காக நாங்கள் அரசுக்கு ஆதரவாக செயற்படுகின்றோம். இந்தக் கருமங்களைப் பற்றி நாங்கள் பகிரங்கமாகப் பேசக் கூடாது. ஆனால் சில விமர்சனங்கள் வருகின்றபோது பேசாமலும் இருக்கமுடியாது. அண்மையில் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார். 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சம் வாங்கியிருக்கின்றார்கள் என்று. எமது கட்சியின் பெயரில் நாடாளுமன்ற உறுப்
பினராகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அவ்விதமாக ஓர் அறிக்கையை விடுகின்றமை மிகவும் தரம் குறைந்த செயல் என்று நான் கருதுகிறேன். நாம் செயற்படுகின்ற போது கேவலமான முறையில் செயற்படக்கூடாது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர் கொஞ்சக் காலமாக எங் களுடைய கட்சியின் செயற்பாடுகளிலிருந்து விலகியிருக்கின்றார்.

இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு ஒரு சனியும் ஞாயிறும் அது தொடர்பில் ஆராய்ந்தோம். அதன் இறுதியில் ஒரு தீர்மானம் மேற்
கொண்டோம். இடைக்கால அறிக்கையில் சில முன்நேற்றகரமான கருமங்கள் உள்ளன. பல கருமங்கள் முன்னோக்கிச் செல்லவேண்டியுள்ளன. எனவே இந்த
விவாதத்தில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளாமையால், எங்களுடைய ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்
கள். அவருக்கு நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்ற அனுமதி வழங்குவது இல்லை என்று. இதன் பின்னரேஅவா இவ்வாறு செயல்பட்டு வருகின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு விசேடமாக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள்,
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பெற்றமை போன்றே எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில அபிவிருத்தி முன்மொழிவுகளை
வழங்கி அந்த நிதியை பெற்றார்கள். இது எப்படி இலஞ்சமாக அமைய முடியும்?

இவ்வாறான கருத்துக்கள் மூலம் ஒருவர் தனது தரத்தை குறைத்துக்கொள்ளலாமே தவிர மற்றவர்களின் தரத்தைக் குறைத்துக் கொள்ள முடியாது. அதனை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். அரசினால் பணம் ஒதுக்கப்படுகின்றபோது, குறிப்பிட்ட  வேலைகளுக்காக அதனை எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் பயன்படுத்துகின்றபோது ஏன் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனைப் பயன்படுத்தக் கூடாது? ஒரு நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள் வதற்கு சர்வதேச சமூகத்தின் பார்வையின் கீழ் நாங்கள் நிதானமாக – பக்குவமாகச் – செயற்படுவோம். அவ்வாறு ஒரு தீர்வு நிறைவேறாமல்விட்டால் அது எமது பிழையாக
அமையக் கூடாது. அந்தப் பிழை வேறிடத்தில் இருக்க வேண்டும் – என்றார்.


 

 

Be the first to comment

Leave a Reply