பொய் கூறுகின்றவர்கள் மக்களை மடையர்களாக ஆக்கப் புறப்பட்டு தாங்களே மடையர்களாக ஆக்கப்படுவார்கள்…

பொய் கூறுகின்றவர்கள் மக்களை மடையர்களாக ஆக்கப் புறப்பட்டு தாங்களே மடையர்களாக ஆக்கப்படுவார்கள்…

(பா.உ ஞானமுத்து சிறிநேசன்)

இந்த வடிகட்டிய பொய்களை இன்னும் இன்னும் கூறி அவர்களின் அரசியல் தராதரத்தைக் குறைத்துக் கொள்ளாமல் உண்மைகளைக் கூற வேண்டும். பொய் கூறுகின்றவர்கள் மக்களை மடையர்களாக ஆக்கப் புறப்பட்டு தாங்களே மடையர்களாக ஆக்கப்படுவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

அண்மையில் பூதாகாரமாகியுள்ள 02 கோடி ரூபா விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெImage result for (பா.உ ஞானமுத்து சிறிநேசன்)ரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஒரு புரளியொன்றை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சொல்லிக் கொண்டிருக்கின்றார். அது புரளி என்று சொல்வதை விட வடிகட்டிய பொய்யாகக் கூடச் சொல்ல முடியும். நடந்த விடயம் என்னவென்றால் அரசாங்கத்தின் சார்பான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு விசேட நிதியங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. இது ஆளுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமின்றி அமைப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. அமைப்பாளர்களுக்குக் கூட வழங்கப்பட்ட இந்த 02 கோடி ரூபா விசேட அபிவிருத்தி நிதியம் எதிர்க்கட்சியில் இருந்த எங்களுக்கு வழங்கப்படவில்லை. இது ஒரு சங்கடமான விடயமாகக் கருதப்பட்டது. இந்த வேளையில் நாங்கள் பாராளுமன்றத்திற்குச் சென்ற போது இக்கருத்து பலவாறாக பேசப்பட்டது.

அதனடிப்படையில் யுத்தத்தால் பாதிக்கபட்ட மக்களைக் கொண்ட மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் எங்களுடைய மக்களுக்கும் எதையாவது செய்து விட வேண்டும். அவர்கள் கோரி நிற்கின்ற அபிவிருத்தியில் எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பகின்றவர்கள் நாங்கள். உரிமை என்கின்ற விடயத்தை உரத்த குரலில் கோரிக் கொண்டிருக்கும் அதே வேளை மக்களுக்கக் கிடைக்க வேண்டிய அபிவிருத்தி என்ற விடயத்திலும் நாங்கள் அக்கறையாக இருக்கின்றோம். அந்த அடிப்படையில் தான் எமது மக்களின் சார்பாக ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைப்பாளர்களுக்கும் கொடுக்கின்ற விசேட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டினை எதிர்க்கட்சிக்கும் தரவேண்டும் என்று நாங்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தோம். பாராளுமன்றத்தில் குரல் கொடுத்ததோடு நின்று விடாமல் இந்த விடயத்தை பிரதமரின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். இந்த விடயத்தில் அவர் சற்று தாமதமான அல்லது சங்கடமான கருத்தினை வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் அதனை விட்டுக் கொடுக்கவில்லை. ஏனெனில் மக்களின் வரிப்பணத்தில் க ணிசமான நிதி திரப்படுகின்றது. எமது மக்களும் வரி செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். வரிப்பணத்தின் மூலமாகக் கிடைக்கப் பெறுகின்ற அரச நிதி எமது மக்களுக்கான அபிவிருத்திக்குக் கிடைக்காமல் இருப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம். அந்த அடிப்படையில் தான் பிரதமரிடம் எமது பிரதேசத்திற்கும் அபிவிருத்திக்கான விசேட நிதி வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விலியுறுத்திக் கேட்டிருந்தோம்.

அந்த வலியுறுத்தலின் காரணாக பதினைந்து கருத்திட்டங்களுக்கான முன்மொழிவுகளை பிரதமரின் காரியாலத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டது. அந்த வேளை நாங்கள் எமது பிரதேச மக்களிடம், பாடசாலை அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், அமைப்புகள், விளையாட்டுக் கழகங்களுடன் தொடர்பு கொண்டு திட்டங்களை அனுப்பி வைத்தோம். அதன் விளைவாக மாவட்ட செயலாளருக்கு அந்த திட்டங்களை உடன் செய்து முடிக்குமாறு அவசர பணிப்புரை விடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் உரிய பிரதேச செயலகங்களுடன் தொடர்பு கொண்டு உரிய அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றியிருந்தார். பத்து நாட்களுக்குள் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்குச் சென்றடைந்திருக்கின்றது. இதில் விளையாட்டுக் கழகங்கள், வீதிகள், பாடசாலைகள் போன்றவற்றில் அபிவிருத்திகள் நடைபெற்றிருக்கின்றன.இந்த நிதி கிடைத்தமையையிட்டு மக்களும் அதிக சந்தோசமடைந்திருக்கின்றார்கள்.

இந்த நிலையில் சிவசக்தி ஆனந்தன் இந்த நிதியத்தை எப்படியாவது கேட்டு மாவட்ட செயலகங்களுக்கு அனுப்புவதை விட்டுவிட்டு பதினைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் தான் இந்த அபிவிருத்திக்குரிய நிதியினை ஒதுக்கிடு செய்யப்பெற்றார்கள் என்பதை மறுதலித்துவிட்டு இதனை ஒரு கைலஞ்சம் என்று சொல்லுவதென்பது அநாகரிகமான, சிந்தனையற்ற செயற்பாடாகத் தான் கருத முடியும். இவர் நினைத்திருந்தால் வவுனியா மாவட்டத்தில் எத்தனையோ பிரதேசங்கள், வீதிகள், பாடசாலைகள், கழகங்கள், அமைப்புகள், பல்வேறு இடங்கள் அபிவிருத்தி இல்லாமல் பழமையான நிலையில் காணப்படுகின்றன. அதனைப் பெற்று அந்த மக்களுக்குக் கொடுப்பதை விடுத்து விட்டு கஷ்டப்பட்டு போராடி அந்த நிதியதை மாவட்டச் செயலகங்களுக்குப் பெற்று அபிவிருத்தி செய்தவர்கள் மீது குறைசொல்வதென்பது ஒரு பிற்போக்கான கருத்தாகத்தான் இருக்க முடியும்.

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வடிகட்டிய, அபாண்டமான பொய்களைச் சொல்வதென்பது மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது. மக்களை முட்டாள்களாகக் கணித்து பொய்களைக் கூறினால் அந்தப் பொய்களை நாங்கள் உடைத்து மக்களுக்கு சரியானவற்றைச் சொல்ல முடியும். மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பிய அந்த செயற்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்ட பின்பும் கூட அந்த 02 கோடி ரூபா நிதி மாவட்ட செயலகங்களுக்கு இன்னும் சேரப்படாத நிலைமையே காணப்படுகின்றது.Image result for (பா.உ ஞானமுத்து சிறிநேசன்)

இந்த நிலைiயில் அந்தப் பணத்தை நாங்கள் கைலஞ்சமாகப் பெற்றுக் கொண்டோம் என்று கூறுகின்ற அந்தச் செயற்பாடு என்பது மிகவும் அயாக்கியத்தனமானது என்றே கருதுகின்றேன். சுரேஸ் பிறேமச்சந்திரனோ அல்லது சிவசக்தி ஆனந்தனோ தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவதூறுகளையும், அநியாயமான கருத்துக்களையும் அவ்வப்போது கூறிக் கொண்டு செல்வதென்பது ஏற்றுக் கொள்ள முடியாது. நிச்சயமாக மக்கள் இதனை விளங்கிக் கொள்வார்கள்.

இது தொடர்பில் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் தொடர்பு கொள்கின்ற போது உண்மையான விடயத்தை விளங்கிக் கொள்ளலாம். அரசியல்வாதிகள் சிலவேளைகளில் மதியற்றவர்களாக இருந்தாலும் கூட மக்கள் மதியுள்ளவர்களாகத் தான் இருக்கின்றார்கள். பொய்களைக் கண்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். பொய் வாய்க்குப் போசனமும் கிட்டாது என்று சொல்லுவார்கள். பொய் கூறுகின்றவர்கள் மக்களை மடையர்களாக ஆக்கப் புறப்பட்டு தாங்களே மடையர்களாக ஆக்கப்படுவார்கள். இந்த வடிகட்டிய பொய்களை இன்னும் இன்னும் கூறி அவர்களின் அரசியல் தராதரத்தைக் குறைத்துக் கொள்ளாமல் உண்மைகளைக் கூற வேண்டும். மாவட்ட செயலகங்களுடாக அபிவிருத்திக்காகக் கொடுக்கப்பட்ட நிதியினை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சமாகக் கொடுக்கப்பட்ட நிதி என்று பஞ்சமாபாதகப் பொய்யினைக் கூறுகின்றார்கள். இதற்குரிய தண்டனையாக தேர்தலில் அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதையும் கூட இந்த இடத்தில் நான் ஆணித்தரமாகவும் வெளிப்படையாகவும் கூறிக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.


 

About editor 2979 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

1 Comment

  1. ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது மெய்யாகிவிடும் என்பது நாசி இட்லரின் அமைச்சரவையில் பரப்புரை அமைச்சராக இருந்த கோபலஸ் அவர்களின் கோட்பாடு. அவரைத்தான் சிவசக்தி ஆனந்தன் பின்பற்றுகிறார். ததேகூ நா.உறுப்பினர்கள் கடந்த யூலை- ஒகஸ்ட் மாதங்களில் தங்களது தொகுதிகளுக்குத் தேவையான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இரண்டு கோடி ரூபா தேவையென்று பிரதமரிடம் விண்ணப்பித்திருந்தார்கள்.மேலும் அந்தத் திட்டங்களில் விரபரங்களை பிரதமர் அலுவலகத்திடம் கொடுத்திருந்தார்கள். அதன் அடிப்படையிலேயே இந்த நிதி மாவட்ட செயலகத்துக்கு ஒதுக்கப்பட்டது. தனக்கு இந்த 2 கோடி கிடைக்கவில்லை என்று சிவசக்தி ஆனந்தன் பிரதமரிடம் முறையிட்ட போது “நீங்கள் திட்டங்கள் பற்றிய முன்மொழிவுகளை (Proposals) தரவில்லை அதனால் உங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார். எனவே சிவசக்தி ஆனந்தன் தனது கையாலாகத்தனத்தால் தனது தொகுதிக்குக் கிடைக்க வேண்டிய ரூபா 2 கோடியை கோட்டைவிட்டுவிட்டார். தனது இயலாமையை மறைக்க இந்த ரூபா 2 கோடி ததேகூ நா.உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட இலஞ்சம் எனக் கூக்குரல் இடுகிறார். வேலிக்கு ஓணான் சாட்சி சொன்னது போல அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடியிருக்கும் பிறேமச்சந்திரன் வழிமொழிகிறார். நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இந்த இரண்டு பேருக்கும் இவர்களது இபிஎல்ஆார்எவ் அமைப்புக்கும் செமபாடம் படிப்பிப்பார்கள் என நம்புகிறேன்.

Leave a Reply