அரசு அபிவிருத்திக்கு வழங்கிய நிதியை  இலஞ்சம் எனத் திரிக்கும் சிவசக்தி ஆனந்தன்!

அரசு அபிவிருத்திக்கு வழங்கிய நிதியை  இலஞ்சம் எனத் திரிக்கும் சிவசக்தி ஆனந்தன்!

அரசிடம் இருந்து ததேகூ நா.உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கிவிட்டார்கள், அதனை அவர்கள் தங்கள் சட்டைப் பைக்குள் போட்டுவிட்டார்கள் என்ற ஒரு படு பொய் ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதனைத் தொடக்கி வைத்தவர் சிவசக்தி ஆனந்தன். அவருக்கு பக்க வாத்தியம் வாசிப்பவர் பிறேமச்சந்திரன். வேலிக்கு ஓணான் சாட்சி சொன்ன கதையாக ஆமாம் இலஞ்சம் வாங்கியது உண்மைதான் என்கிறார் பிறேமச்சந்திரன். 2015 இல் நடந்த தேர்தலின் போது இ்ப்படியான விசர்க் கதைகளை மேடையில் பேசியதால்தான் அந்தத் தேர்தலில் 7 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டு தோல்வி அடைந்தார்.
பின்னர் வெறுமனே 29,906 வாக்ககுளை மட்டும் பெற்ற அவர் தனக்கு தேசியப்பட்டியலில் இருந்து நா. உறுப்பினர் பதவி வேண்டும் என்று கேட்டார். அவரைவிட ஆறாவது இடத்துக்கு வந்த தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் அருந்தவபாலனுக்கு 42,925 வாக்குகள் கிடைத்திருக்கிறதே, அவரை விட்டுவிட்டு உமக்கு எப்படி தேசியப் பட்டியல் நா.உறுப்பினர் பதவி தர முடியும் எனக் கேட்டதற்கு தான் ஒரு கட்சியின் தலைவர் என்றார்! இதுதான் அவரது அரசியல் யோக்கியதை.
இப்போது போர்க்காலத்தில் சிங்கள இராணுவம் வி.புலிகளின் பிரதேசத்தில் நகருவதற்கு குறுக்குப் பாதைகள் சொல்லிக் கொடுத்த .ஆனந்தசங்கரியோடு கூட்டு வைத்துக் கொண்டு உள்ளாட்சி தேர்தலில் அவரது கட்சி போட்டியிடுகிறது. ஏன் தனது கட்சியில் அதன் சின்னத்தில் போட்டியிடவில்லை? இன்று இபிஎல்ஆர்எவ் கட்சி தேய்ந்து ஒற்றை நாடாளுமன்ற உறுப்பினரோடு நிற்கிறது. அடுத்த தேர்தலில் அந்த ஒற்றை உறுப்பினரும் காணாமல் போய்விடுவார்.
ததேகூ நா.உறுப்பினர்களுக்கு அரசு நேரடியாக நிதி கொடுக்கவில்லை. தொகுதி மேம்பாட்டுக்கு 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை அரசாங்க அதிபர்தான் செலவழிப்பார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அனுமதிக்கப்பட்ட 2 கோடி ஒதுக்கீட்டில் மாவட்ட செயலகம் ஊடாக மேற்கொண்ட பணி விபரத்தில்  மாவை. சேனாதிராஜாவினால் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் பற்றிய  விபரம்  பின்வருமாறு.
(1) தெல்லிப்பளை ப.நோ.கூ.சங்கம் 5 லட்சம் ,
(2) அளவெட்டி , மல்லாகம் ப.நோ.கூ.சங்கம் 5 லட்சம் ,
(3) தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலை 15 லட்சம்,
(4) அளவெட்டி தெற்கு கிராம செயலகம் 10 லட்சம்,
(5) அளவெட்டி மேற்கு கிராமச் செயலகம் 10 லட்சம்,
(6)  அளவெட்டி மகாஜன ச.ச.நிலையம் 15 லட்சம்,
(7)  தையிட்டி பராசக்தி ச.ச.நிலையம் 10 லட்சம்,
(8)  அதேபோன்று மாவிட்டபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம் 15 லட்சம் ,
(9) மாவிட்டபுரம் முத்துமாரி அம்மன் ஆலயம் 15 லட்சம் ரூபா,
(10)நகுலேஸ்வரம் இலந்தகலட்டி வீதி , கருகம்பானை பொது நோக்கு மண்டபம் , குரும்பசிட்டி வளர்மதி ச.ச.நிலையம் மாவிட்டபுரம் பரா சக்தி ச.ச. நிலையம் , தந்தை செல்வாபுரம் கலைவாணி ச.ச.நிலையம் , பலாலி கிழக்கு முன்பள்ளி ஆகிய ஆறு அமைப்புகளிற்கும் 15 இலட்சம் விகிதம் 90 லட்சம் ரூபா
(11)வலி.வடக்கு இளைஞர் கழகங்களிற்கான விளையாட்டு உபகரணங்களிற்காக 10 லட்சம்,
(12) மாவிட்டபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம் 15 லட்சம்,
(13)  மாவிட்டபுரம் முத்துமாரி அம்மன் ஆலயம் 15 லட்சம் ரூபா;
(14) தெல்லிப்பளை ப.நோ.கூ.சங்கம் 5 லட்சம்,
(15) அளவெட்டி , மல்லாகம் ப.நோ.கூ.சங்கம் 5 லட்சம்,
(16) தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலை 15 லட்சம்,
(17) அளவெட்டி தெற்கு கிராமச் செயலகம் 10 லட்சம்,
(18)  அளவெட்டி மேற்கு கிராமச் செயலகம் 10 லட்சம்,
(19) அளவெட்டி மகாஜன ச.ச.நிலையம் 15 லட்சம்,
(20)  தையிட்டி பராசக்தி ச.ச.நிலையம் 10 லட்சம்.
(21) நகுலேஸ்வரம் இலந்தகலட்டி வீதி , கருகம்பானை பொது நோக்கு மண்டபம் , குரும்பசிட்டி வளர்மதி ச.ச.நிலையம் மாவிட்டபுரம் பரா சக்தி ச.ச. நிலையம் , தந்தை செல்வாபுரம் கலைவாணி ச.ச.நிலையம் , பலாலி கிழக்கு முன்பள்ளி ஆகிய ஆறு அமைப்புகளிற்கும் 15 லட்சம் விகிதம் 90 லட்சம் ரூபாவும்
(22) வலி.வடக்கு இளைஞர் கழகங்களிற்கான விளையாட்டு உபகரணங்களிற்காக 10 லட்சம் என மொத்தமாக இரண்டு கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது என
நாடாளுமன்ற உறுப்பினர் எழுத்தில் கொடுத்துள்ளார்.
இதே போன்று வன்னி தேர்தல் மாவட்ட நா.உ. சிறிஸ்கந்தராசா, யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட நா.உ. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 2 கோ ரூபாவை எப்படி பல்வேறு நிறுவனங்களுக்குக் கொடுத்த விபரத்தைத் தந்துள்ளார்கள்.
ஆனால் வன்னியின் எச்சங்களால் நடத்தப்படும் வானொலி (ஐபிசி) செய்தி ஏடுகள் (காலைக்கதிர்) என்ன சொல்கின்றன? சிவ சக்தி ஆனந்தனை மேற்கோள் காட்டி இந்தப் பணம் ததேகூ நா.உ க்கு அரசினால் இலஞ்சமாகக் கொடுக்கப்பட்ட பணம் என்கின்றன.
பிரதமர் இந்த நிதியை தனது பைக்குள் இருந்து கொடுக்கவில்லை. மக்களது வரிப்பணத்தில் இருந்துதான் ஒதுக்கினார். தமிழ்மக்களால் கொடுக்கப்படும் வரிப்பணமும் இதில் அடங்கும்.
இது தொடர்பாக சிவசக்தி ஆனந்தன் பிரதமர் இரணில் விக்கிரமசிங்காவிடம் கேட்ட போது  நிதி ஒதுக்குமாறு கேட்காததாலேயே அவருக்கு நிதி வழங்கப்பட வில்லை எனப் பிரதமர்  பதில் அளித்துள்ளார்.  சிவசக்தி ஆனந்தன் புத்திசாலி என்றால் அவர் பிரதமருடன் மீண்டும்  பேசி இந்த  நிதி ஒதுக்கீட்டை பெற்றுத்  தனது தொகுதிமக்களுக்கு கொடுக்க வேண்டும். பாவம் வன்னி மக்கள்.
நக்கீரன்

 

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply