இணங்கிச் செயற்பட்டதனால்தான் இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது

இணங்கிச் செயற்பட்டதனால்தான் இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது

தயாளன்

சம்பந்தனுடைய காலத்தில் தீர்வு வரவேண்டும் என்று நாங்கள் நினைக்கின்றோம். ஆனால் அதற்காகவேண்டிய அவருடைய காலத்தில் தீர்வு வரவேண்டும் என்று மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை பெற்றுக் கொடுத்தால் போது, நான் என்னுடைய காலத்தில் பெற்றுக் கொடுத்துவிடவேண்டும் என்று நினைக்கின்ற தலைவர் அல்ல அவர் என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் டெலோ கட்சித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல்கள் நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமானபோது அவர் மேற்கண்டவாற தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,Image result for அடைக்கலநாதன் எம்பி

உள்ளூராட்சித் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் எதிராளியாகப் பார்ப்பது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைத்தான். தென்னிலங்கையில் நடைபெறும் விடயங்களை விமர்சிப்பது குறைவாகவே உள்ளது. ஆனால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்கு தென்னிலங்கையிலும் வடக்குக் கிழக்கிலும் பல  கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்புத்தான் தேசியத்திற்காக தன் இனம் சார்ந்த மொழி சார்ந்த பிரச்சினைகளை கொண்டுசெல்கின்ற கட்சியாகவுள்ளது.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு யாரையும் விமர்ச்சிப்பது இல்லை இதனால்தான் எம்மீது விமர்சனம் வருகின்றது.காய்கின்ற மரத்திற்குத் தான் கல் எறி விழுகின்றது. எங்கள் மீதான விமர்சனத்தினை நாங்கள் பார்த்து அதனைத் திருத்துகின்ற வழியைத்தான் நாங்கள் செய்து வருகின்றோம்.

உள்ளூராட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில் பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் இடைக்கால அறிக்கை பற்றியும் ஐ.நா. பற்றியும் எழுதியுள்ளார்கள். எங்கு எதனைச் சொல்லுவது என்றே தெரியாது நிற்கின்றார்கள். புதிய அரசியலமைப்புத் தொடர்பில் ஒரு இடைக்கால அறிக்கையே வந்துள்ளது. இடைக்கால அறிக்கையையே ஒன்றுமில்லை ஒன்றும் நடக்கவில்லை என்று கூறுகின்றார்கள்.

புதிய அரசியலமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தெ ளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி புதிய தலைமையை உருவாக்கவேண்டுமென்றெல்லாம் கதைக்கின்றார்கள். இவையே சுவரொட்டியில் கூடக் காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது உள்ளூர் ஆட்சியே. எமது பிரதேசங்களை எமது வட்டாரங்களை அபிவிருத்தி செய்வதே. இதனைப் புரியாதவர்கள்தான் இன்று தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். இதனால் இவ்வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.Image result for அடைக்கலநாதன் எம்பி

பெரும் ஆயுதப் போராட்டத்தை மௌனிக்கச்  செய்த சர்வதேசம் சர்வாதிகாரம் செய்த மகிந்த ராஜபக்ஷவை மாற்றியமைத்த சர்வதேசத்திடம் நாங்கள் சில விடயங்களை கேட்பதற்குச் செல்வதாயின் புதிய அரசியலமைப்பை  நாங்கள் குழப்பாத வகையில் அல்லது எங்களால் குழப்பமில்லாத வகையில் நடந்து கொள்ளவேண்டும். அவ்வாறு செல்லவதன் மூலமே எமக்கு சரியான தீர்வு கிடைக்காது விட்டால் சர்வதேசத்திடம் நியாயத்தைக் கேட்கமுடியும்.

மக்களுடைய அபிலாஷைகளைத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எந்த இடத்திலும் அடைமானம் வைத்து செயற்படவில்லை. இதற்காகத்தான் ஒரு சில நடவடிக்கைகளை அரசாங்கத்துடன் இணங்கிச் செய்து வருகின்றோம். இதற்காக அரசாங்கத்தின் அடிவருடிகளாக நாங்கள் இருக்கவில்லை. இணங்கிச் செயற்பட்டதனால்தான் இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. இவை எமது மக்களின் நியாயத்தை கேட்கின்ற சந்தர்ப்பங்களே தவிர காட்டிக்கொடுப்பதல்ல.

எங்களைச் சுற்றி எங்களைத் தோற்கடிப்பதற்கு வடக்குக் கிழக்கிலும் தென்னிலங்கையிலும் நடைபெற்று வருகின்றது. இதுஒரு துர்ப்பாக்கிய நிலையாகும். நாங்கள் ஒற்றுமையின் பலத்தை காண்பிக்கவேண்டும். சர்வதேசமும் எங்களைத்தான் பார்க்கின்றது. சம்பந்தர் ஐயாவை விமர்சனம்செய்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது. மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக யாருடனும் நேருக்கு நேர் நின்ற பேசக் கூடியவர். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய தலைவர்களுக்கும் இது பற்றித் தெரியும். அவருடைய காலத்தில் தீர்வு வரவேண்டும் என்று நாங்கள் நினைக்கின்றோம். ஆனால் அதற்காகவேண்டிய அவருடைய காலத்தில் தீர்வு வரவேண்டும் என்று மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை பெற்றுக் கொடுத்தால் போதும்  நான் என்னுடைய காலத்தில் பெற்றுக் கொடுத்துவிடவேண்டும் என்று நினைக்கின்ற தலைவர் அல்ல அவர்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தன் பாதையைில் சரியாகச் செல்கின்றது. உண்மை என்றும் வெல்லும். காலதாமதமானாலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எங்கு நிற்கின்றது என்பது புரியும் உணர்வார்கள் என்றார்.


 

 

 

 

Be the first to comment

Leave a Reply