எந்த பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா?

எந்த பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா?

வொரு பார்ப்பானும் தங்களைத் தமிழன் என்று கருதுவதில்லை. அவர்கள் ஆரியர்கள், தமிழர்களை விடச் சிறந்தவர்கள். தமிழ் ஒரு நீச பாசை என்பது தான் கருத்து.எந்த இணையத் தளத்துக்குப் போனாலும் பார்ப்பான்கள் புத்திசாலித் தனமாக தமிழர்களை ஏமாற்றி ஆதிக்கம் செலுத்துவார்கள்.இங்கும் அப்படித்தான்.

பார்ப்பான்களின் தமிழ் வெறுப்பைக் காட்டும் இந்தத் தொடர் கட்டுரைகள் திருமகளால் எழுதப்பட்டுக் கனடாவில் வெளி வந்தவை.(நன்றி: தமிழ்நாதம்)

சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது!

தமிழில் ஒன்றுமில்லை அது சூத்திராள் பேசும் நீச பாஷை வடமொழியே தேவர் பேசும் தேவ பாஷை என்பது ‘அவாள்” மத்தியில் நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது.

‘காஞ்சிகாமகோடி பீடாதிபதியாக இருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த ஆதீனங்களை ஒன்றுபடுத்தி ஒரு பொதுவான சமய அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டார். திருவாவடுதுறை ஆதீனத்துக்கு ஏகப்பட்ட சொத்துகள் இருந்தது. அது போலவே மற்ற ஆதீனங்களுக்கும் வருவாய் இனங்கள் உண்டு. ஆதீனங்களின் வருவாயில் 5 விழுக்காட்டைப் பயன்படுத்தி ஆன்மீகப் பரப்புரை செய்ய வேண்டும் என்பது திட்டம்.

சொன்னபடி மடங்கள் தங்களது வருவாயில் 5 விழுக்காடு பங்கைக் கொடுக்க முன்வரவில்லை. ஆனால் கூட்டம் மட்டும் நடந்தபடி இருந்தது. அதில் மதுரை பெரிய ஆதீனம் ஒரு பிரச்சினையைக் கிளப்பினார்.

‘கோவில்களைக் கட்டியது மன்னர்கள், அதற்கு உதவி செய்தது, உழைப்புக் கொடுத்தது, வியர்வை கொடுத்தது, வீர்யம் கொடுத்தது, கல் சுமந்தது, மண் சுமந்தது எல்லாம் பிராமணர்களா? கல்சுமந்து மண் சுமந்து கோவில் கட்டியவனுக்குச் சாமியைச் சுமக்க, பூசை செய்யத் தடையா?

வடநாட்டில், குறிப்பாக காசியில், கோயிலுக்கு வருகிறவர்கள் எல்லாம் அவரவர் பூசை செய்து போகிறார்கள். அதுபோல இங்கேயும் அனைவரும் பூசை செய்யவேண்டும். மடங்களுக்கான அமைப்பு அதற்கு முன் முயற்சி எடுக்கவேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடைபெறவேண்டும் அதற்கு இந்த அமைப்பு உதவவேண்டும்” என்றெல்லாம் மதுரை ஆதீனம் புதிய கருத்துக்களைப் பேசினார்.

சொன்னதோடு இல்லாமல், தஞ்சாவூர் ஜில்லாவில், கும்பகோணம் சுவாமிமலை இடையே இருக்கிற திருப்புறம்பியம் கோயிலில் குடி கொண்டுள்ள சிவனைப் போலவே வேறொரு விக்ரகத்தைக் கோயிலுக்கு வெளியே வைத்து அதை அனைவரும் பூசிக்க ஏற்பாடும் செய்தார்.

இது மடங்களுக்கான அமைப்பில் சலசலப்பை உண்டு பண்ணியது. ஏற்கெனவே நிதியாதாரம் இல்லாமல் நடைபோட்ட அமைப்பில் மதுரை ஆதீனத்தின் கருத்தை மகாபெரியவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

‘சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது” என்றார் மகா பெரியவர். (அக்னிகோத்திரம் ராமனுஜதாத்தாச்சாரியார் எழுதும் ‘இந்து மதம் எங்கே போகிறது?” – நக்கீரன் 30-03-2005)

இந்தச் சூத்திராள் வெறுப்பும் தமிழ் வெறுப்பும் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க, புூதபரம்பரை பொலிய” வந்துதித்த ஞானசம்பந்தர், நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவைகலந்து, ஊன்கலந்து, உயிர்கலந்து தித்திக்கும் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் போன்ற பிராமணர்கள் மீதும் உமிழப்பட்டது.

மன்னார்குடியில் காஞ்சி சங்கராச்சாரியாரின் து}ண்டுதலின் பெயரில் பாவை (திருவெம்பாவை, திருப்பாவை) மாநாடு நடத்தப்பட்டது. வைணவத்தையும் சைவத்தையும் இணைப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். மாநாடு மேடையில் ஆண்டாள் மாணிக்கவாசகர் சிலைகள் பக்கம் பக்கமாகப் போடப்பட்டிருந்தன. வைணவமும், சைவமும் பக்கத்துப் பக்கத்தில் இருப்பதைப் பார்த்து சிலரது கண்கள் அனல் கக்கின. அந்த அனலை அடக்க முடியாமல் மன்னார்குடி ராஜகோபால் தீட்சிதர் அக்னிகோத்திரம் ராமனுஜதாத்தாச்சாரியாரிடம் ஓடினார்.

‘ஸ்வாமி.. என்ன இப்படிப் பண்ணிட்டேள்?” என மொட்டையாக ஆரம்பித்தார்.

‘எதை எப்படிப் பண்ணிட்டேன்? விவரமா சொல்லுங்கோ” என நான் பதில் உரைத்தேன்.

‘தெரிஞ்சுண்டே கேக்கறேளா?” மறுபடியும் மொட்டை மொழிகளையே பேசினார் ராஜகோபால் தீட்சிதர்.

‘தீட்சிதரே.. என்ன சொல்றீர்? நீர் கேக்கறது எனக்கு முன்கூட்டியே தெரியறதுக்கு நான் என்ன பகவானா?”

தீட்சிதர் அப்போதுதான் தன் உள்ளக் கிடக்கையை உடைத்தார்.

பகவானுக்கே அபச்சாரம் பண்றேளே… ஆண்டாள் யாரு? மாணிக்கவாசகர் யாரு? ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்தச் சூத்திரன் மாணிக்கவாசகன் இருக்கலாமா? இது பகவானுக்கே பாவம் பண்ற மாதிரி ஆகாதா? அந்தச் சங்கராச்சாரி சொன்னா நீர் கேக்கணுமா? ‘(இந்துமதம் எங்கே போகிறது?”- அதிகாரம் 27)

ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்தச் சூத்திரன் மாணிக்கவாசகர் இருக்கலாமா? என தீட்சகர் ஏன் எரிந்து விழ வேண்டும்? அதன் பின்புலத்தில் ஒரு நீண்ட வரலாறே இருக்கிறது.

ஞானசம்பந்தர் சீர்காழியில் கவுணிய கோத்திரத்தில் பிறந்த பிராமணர். தமிழ்நாட்டில் பவுத்தத்தையும் சமணத்தையும் அழித்தொழித்தவர். அதற்கு அவர் கையில் ஏந்திய ஆயுதம் தமிழ் ஆகும்.

சைவத்தோடு தமிழை இணைத்துக் கொண்ட சம்பந்தர் தன்னைத் தமிழ் ஞானசம்பந்தன், முத்தமிழ் ஞானசம்பந்தன், செந்தமிழ்வல்ல ஞானசம்பந்தன், சீரார்தமிழ் ஞானசம்பந்தன், தமிழ்விரகன், தமிழ்கெழு விரகினன், என்று பலவாறு பலமுறை கூறிக் கொண்டார்.

ஞானசம்பந்தர் பாடிய 383 பதிகங்கள் ஒவ்வொன்றிலும் 11 பாடல்கள் இருக்கும். இந்தப் பாடல்கள் பெரும்பாலும் ஒரு சீரான வரிசையில் இருக்கும். எட்டாவது பாடல் கயிலைமலை எடுத்த வாளரக்கன் (இராவணன்) பற்றியதாக இருக்கும். ஒன்பதாவது பாடல் பிரமனும் விட்டுணுவும் தேடியும் அடிமுடி காணாத சிவனைப் போற்றிப் பாடியதாக இருக்கும்.

பத்தாவது பாடல் புறச் சமயங்களான பவுத்தம் (பொதியர்கள்) சமணம் (பிண்டியர்கள்) இரண்டையும் சாடுவதாக இருக்கும். கடைசிப் பாடல் சம்பந்தரே தன்னைத் தமிழ் ஞானசம்பந்தன், முத்தமிழ் ஞானசம்பந்தன், நான்மறை ஞானசம்பந்தன், முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன், மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் என அழைத்துத் தன் தமிழ்செய் மாலை செப்பவல்லார்கள் அறவன் கழல் சேர்வார், பாவம் கெடும், நற்கதி அடைவார்கள் எனப் பாடுவார்.

தமிழ்மொழிக்கு சங்கத்தமிழ், சங்கமலித் தமிழ் என நு}ற்றுக்கணக்கான அடைகளைத் தமது தேவாரப் பதிகங்களில் பதிவு செய்துள்ளார்.

சமயகுரவர்களில் ஒருவரான சுந்தரர் ‘நாளும் இன்னிசையால் தமி;ழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்குலகவர் முன் தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும் தன்மை யாளனை” என சம்பந்தரைச் சிறப்பிக்கிறார். தமிழிசை கேட்கும் ஆவலால் சிவன் ஞானசம்பந்தருக்கு பொற்தாளம் கொடுத்தான் என்கிறார்.

பிற்காலச் சான்றோர்களும் மூவர் தமிழைப் பாராட்டி இருக்கிறார்கள்.

‘தேவரெல்லாம் தொழச்சிவந்த செந்தாள் முக்கண்
செங்கரும்பே! மொழிக்குமொழி தித்திப்பாக
மூவர்சொலும் தமிழ்கேட்கும் திருச்செவிக்கே
மூடனேன் புலம்பிய சொல் முற்றுமோதான்”

எனத் தாயுமானவர் பாடுகிறார்.

பிராமணரான ஞானசம்பந்தன் நீச பாசையான தமிழைப் புகழலாமோ? போற்றலாமோ? கூடாதே, அடாதே, பாவமாச்சே என ஞானசம்பந்தருக்கு எதிராகப் பிராமணர்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.
preethi
Sep 13 2005, 12:19 AM
இடைக்காலத்தில் இருவேறு கருத்துக்கள் தோன்றி வளரலாயின. ஒன்று ஒருவன் அறிஞனாக இருந்தால் அவன் பார்ப்பன குலத்தவனாக இருக்க வேண்டும். மற்றொன்று தமிழில் நு}ல் செய்தால், அது வடமொழியில் இருந்து மொழிபெயர்த்ததாகவோ அல்லது தழுவலாகவோ இருக்கவேண்டும்.

தொல்காப்பியம் எமக்கு இன்று கிடைத்துள்ள நு}ல்களில் காலத்தால் முந்தியது என்பதை எல்லாத் தமிழறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதுமட்டும் அல்லாது தொல்காப்பியம் நீர்மையும் தண்மையும் வண்மையும் தொன்மையும் நிறைந்த தமிழ்மொழியின் எழுத்துச் சொல் இலக்கணத்தையும் தமிழ்மக்களின் வாழ்வியல் இலண்கணத்தையும் (பொருள்) விளக்கும் சிறந்த நு}ல் ஆகும். மொழி, வாழ்வு இரண்டையும் இணைத்து இலக்கணம் சொன்ன சிறப்பு தொல்காப்பியத்துக்கு மட்டுமே உண்டு.

எழுத்ததிகாரம் ஒலி அளவு, உயிர், மெய் என்ற பிரிவுகள், குறில், நெடில். வல்லினம், மெல்லினம், இடையினம், குற்றியலுகரம், குற்றியலிகரம், மொழிமரபு, புணரியல் போன்றவற்றுக்கு இலக்கணம் சொல்கிறது.

சொல்லதிகாரத்தில் தமிழ்ச் சொல்லின் சிறப்பும் திணை பால் முதலிய உயிர்ப்புகுப்பு உயிரியல் பகுப்பு முறையும் கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித்துக் காரணத்தோடு அமைக்கப்பட்டுள்ளன என்பவற்றை விளக்கிக் கூறுகிறது.

பொருளதிகாரம் நிலம் பொழுது, கருப்பொருள், உரிப்பொருள், அகத்திணை, புறத்திணை, களவியல், கற்பியல், பாவின் பண்பு, மெய்ப்பாடு, உவமயியல், மரபியல் பற்றிச் சொல்கிறது.

இவ்வளவு சீரும் சிறப்பும் நிறைந்த நு}லைத் தமிழ்ப் புலவர் ஒருவர் இயற்றி இருப்பாரா? ஒருக்காலும் இருக்காதே! இருக்க முடியாதே! பின் தொல்காப்பியர் எழுதாவிட்டால் யார் அதனை இயற்றி இருப்பார்?

தொல்காப்பியத்தை எழுதியவர் தொல்காப்பியர் அன்று, அதை எழுதியவர் திரணதூமாக்கினி என்பவர், அவரது தந்தையார் பெயர் சமதக்கினி. அதாவது நூலாசிரியர் ஒரு ஆரிய முனிவர்! வடமொழியில் பாணினி எழுதிய பாணினியமே தொல்காப்பியத்துக்கு வழி நூல்.!

தொல்காப்பியர் வரலாறு போலவே திருக்குறளை எழுதிய திருவள்ளுவரது புகழைக் கண்டு மனம் புழுங்கியவர்கள் முதல் குறளில் உள்ள ஆதிபகவன் என்னும் தொடரைப் பயன்படுத்தி திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தவராகவும் காட்டல் வேண்டிக் கட்டுக் கதைகள் கட்டிவிட்டனர்.

திருவள்ளுவர் யாளிதத்தன் என்ற பிராமணனுக்கும் சண்டாளப் பெண்ணுக்கும் பிறந்ததாக ஞானாமிர்தம் (6 ஆம் நூற்றாண்டு) தெரிவிக்கிறது. அதற்குப் பிந்திய கபிலர் அகவல் ‘அருந்தவ முனியும் பகவற்குப் பருவுூர்ப் பெரும் பதிக்கட் பெரும்புலைச்சி ஆதி வயிற்றினில்” பிறந்தார் என்றும் அவரது பெற்றோர் தங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளைப் பிறந்த இடத்திலேயே விட்டு விட்டுப் போய்விடுவதால் ‘தொண்டை மண்டலத்தில் வண்தமி;ழ் மயிலைப் பறையரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தார்” எனக் கூறுகிறது.

மேலும் திருவள்ளுவரையும் திருக்குறளையும் இழித்துப் பழிக்கும் முகமாக திருக்குறள் அறத்துப் பால் இராமாயணம், மகாபாரதம், பராசர சம்கிதை, பாகவதம், இருக்கு வேதம், மனு ஸ்மிருதி போன்ற சாத்திரங்களைத் தழுவியது என்றும் பொருட்பால் சாணக்கியன் இயற்றிய அர்த்த சாஸ்திரம், காமந்தக நீதி, சுக்கிர நீதி, போதாயன ஸ்மிருதி ஆகியவற்றில் இருந்து கடன் வாங்கப்பட்டதென்றும் காமத்துப்பால் வாத்ஸ்யாயனார் வடமொழியில் இயற்றிய காமசூத்திரத்தின் தழுவல் என்றும் வடமொழிப் பற்றாளர்கள் பகர்கிறார்கள்.

வாதஸ்யாயனார் கூறும் பிறன்மனை நயத்தலை திருவள்ளுவர் அறத்துப் பாலில் கண்டிக்கிறார். அப்படியிருக்க வள்ளுவரின் காமப் பால் காமசூத்திரத்தில் இருந்து எப்படி வந்திருக்க முடியும்?

திருக்குறளில் வலியுறுத்தப்படும் அறம் என்ற சொல்லுக்கு விளக்கம் கூற வந்த பரிமேலழகர் தனது உரைப் பாயிரத்தில் ‘அவற்றுள் அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியது ஒழித்தலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.

அவற்றுள், ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்ற, அவற்றிற்கு ஓதிய அறங்களில் வழுவாது ஒழுகுதல்” எனப் பாலில் நஞ்சு கலப்பது போன்று ஆரிய நச்சுக் கருத்துக்களை முதலும் இடையும் முடிவுமாகப் புகுத்தி தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு விளைவித்துள்ளார். திருக்குறளை ஊன்றிப் படிப்பவர்களுக்கு இந்த உண்மை புலப்படும்.
preethi
Sep 13 2005, 02:30 AM
முன்னாளிலே ஐயரெலாம் வேதம் ஓதுவார்
மூன்று மழை பெய்யுமடா மாதம்
இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார் – இவர்
ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான்

பேராசக் காரனடா பார்ப்பான்
பிள்ளைக்குப் பூணூலாம் என்பான்- நம்மைப்
பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்…

பார்ப்பனை ஐயரென்ற காலமும் போச்சே-வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே -பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே -இனி
நல்லார் பெரியரெனும் காலம் வந்ததே -கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே

-மகாகவி பாரதியார்-
preethi
Sep 13 2005, 04:13 AM
[size=12]பார்ப்பான்களைப் பற்றி தமிழ்த் தேசியத்தின் காவலர்அறிஞர் அண்ணாவின் கருத்து.

பார்ப்பனர்களில் ஒரு சாரார் வெகு நாள்களுக்கு முன்னாலேயே இந்த நாட்டிற்குக் குடி வந்திருந்தாலும், இந்த நாட்டிலேயே நிலையாக வாழ்பவர்களா னாலும், இந்த நாட்டுப் பழங்குடி மக்கள் எல்லோ ரையும்விட நாங்கள் மேலானவர்கள் என்று பிரித்துக் காட்டி தனித்து நிற்க வகை செய்து கொண்டி ருக்கிறார்கள்.

இந்தப் பார்ப்பனர்கள் தமிழ் மொழியைத் தங்களது வாழ்க்கை வழிக்காகவும் வசதிக்கு ஆகவும் பேசு கிறவர்களே ஒழிய அம்மொழியில் உள்ள அன்புக் காகவோ, ஆர்வத்திற்கு ஆகவோ பேசுகிறவர்கள் அல்ல. உதாரணம் என்ன வென்றால், இந்தப் பார்ப் பனர்கள் தங்களுடைய வைதீக காரியங்களிலும் தேவாதி பூஜை பிரார்த் தனைகளிலும் தமிழை விலக்கி வைத்திருக்கிறவர்கள்.

“தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின் றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தா லும், தமிழிலே பண்டிதரென பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழி யெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வட மொழியாகிய ஸம்ஸ்கிருதத்தின் மீதுதான்” (திராவிட நாடு’ 2-11-1947) என்கிறார் அறிஞர் அண்ணா.

இவ்வளவுக்குப் பிறகும் பார்ப்பனர்களை தமிழர்கள் என்று எப்படி எடுத்துக் கொள்வது!
preethi
Sep 14 2005, 02:56 AM
user posted image

தமிழ் ஒரு நீசபாஷை; தமிழில் பேசியபின் ஸ்நானம் செய்க! ‘நக்கீரன்’ இதழில் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச் சாரியார் “இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற தொடரை எழுதிக் கொண்டு இருக்கிறார்.

அதன் 25-ஆவது தொடர் (9-3-2005) ஒரு தகவலை வெளியில் கொண்டு வந்துள்ளது.

காஞ்சி சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதியும் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியா ரும் திருவிடை மருதூர் சத்திரத்தில் உரையாடிக் கொண்டு இருக்கிறார்கள். அப்பொழுது சங்கராச்சாரியார் தன் மனக் குறையைத் தாத்தாச்சாரியாரிடம் எடுத்து வைத்தார்.

“ஏன் தாத்தாச்சாரியாரே – நாம எவ்வளவோ சபை நடத்து றோம். உபன்யாஸம் பண்றோம். ஹோமம் பண்றோம். ஆனா, பிராமணாளுக்கும் மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகியிருக்கோ? இல்லியே.. அப்படியானா நம்மகிட்ட தான் ஏதோ தப்பு இருக்கு. இவா ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே…’’ என்ற மகாபெரிய வரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன்.

நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி? ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம் தமிழ்தானே!

ஆழ்வார்களோட பாசுரம். நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை. திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ?’’

திருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்த திட்டத்தை தெரிவித்தபோது அவரது கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.

“இதப்பாரும்… எல்லா கோயில்கள்லயும் திருப்பாவை – திரு வெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச்சேரும். ஏன்னா. நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்றதும் தமிழ். என்ன சொல்றீர்?’’

என மகா பெரியவர் கேட்டபோது சகல ஜனங்கள்மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்கு புலப்பட்டது.

நாங்கள் இப்படி பெரிய திட்டம் பற்றி சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தபோதும், சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை. ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள்.

அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக் கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக்கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.

“ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?’’ என்று மகா பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.

“உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்து கொள்..’ என்றேன். (`நக்கீரன்’ 9-3-2005 பக்கம் 18,19)

இதனைப் புரிந்து கொள்வதற்கு என்ன சிரமம் இருக்கிறது? சங்கராச்சாரியார் தமிழைப் பேசினால். அவர் தீட்டுப்பட்டு விடுவார்; காரணம் தமிழ் நீஷப்பாஷை. தமிழை நீஷப்பாஷையான பிராமணோத்தமர் பேசினால்., அவர் நாக்கினை நீஷப்பாஷை தொட்டு விட்டால், பிர்ம்மாவின் நெற்றியிலே பிறந்தவர் தீட்டுப்பட்டு விட மாட்டாரா?

தமிழைப் பற்றியும் தமிழர்களைப்பற்றியும் பார்ப்பனர்களின் நிலை என்ன என்பதைத் தெரிந்தவர்களுக்கு இது கண்டிப்பாக ஆச்சரியத்தைக் கொடுக்காது.

கோயில் கருவறைக்குள் தமிழன் அர்ச்சகன் ஆனால் சாமி தீட்டாகிவிடும்; தமிழில் வழிபட்டாலும் தீட்டாகி விடும் என்பதுதானே அவர்களின் நிலை.

இந்த உரிமைகளுக்காக நாம் குரல் கொடுக்கும் பொழுதெல்லாம் சங்கராச்சாரியார்கள் பார்ப்பனர் கள் எப்படியெல்லாம் நடந்து கொண்டு வருகிறார்கள் என்பதை நாளும் அனுபவித்துக் கொண்டுதானே வருகிறோம்.

ஆட்சி மொழிக் காவலர் கி.இராமலிங்கனார் அவர் களை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது சைவப் பழமாகக் காட்சி அளிக்கக் கூடியவர்கள்!

ஊராட்சி, நகராட்சி, நகரியம், ஒன்றியம் என்கிற அழகிய சொற்களைத் தமிழுக்குத் தந்த பெருமகன் அவர்.

`உண்மை’ இதழுக்காக (15-12-1980) ஒரு முறை அவரிடம் பேட்டி கண்டே. அந்தப் பேட்டியின் ஒரு பகுதி இதோ:

கேள்வி: சங்கராச்சாரியாரைத் தாங்கள் சந்தித்தது பற்றி ஒரு செய்தி சொல்லப்படுகிறதே. அதன் முழுவிபரம் என்ன என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

கீ. இரா: நான் காஞ்சிபுரத்திலே ‘ரேஷனிங்’ ஆபீசராக இருந்தேன். சங்கராச்சாரி மடத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது. அவர்கள் எப்படியும் அரிசி வாங்கி செலவு செய்து கொள்ளலாம் என்றார்கள். நான் சொன்னேன் ‘அய்யா’ இது நியாயமல்ல. எல்லாருக்கும் ஒரு சட்டம்தான். உங்க மடத்துல உள்ள அத்தனைப்பேருடைய கணக்கைக் கொடுங்க. எத்தனை பேர் இருந்தாலும், அத்தனைபேருக் கும் உண்டு என்றேன். யானை இருக்கு குதிரை இருக்கு என்றார்கள். அதற்கும் உண்டு என்றேன். எல்லாம் சொல்லி யும் அவர்கள் கேட்கவில்லை. வெளியிலே போய்ட்டா… கிராமத்துக்குப்போயிட்டடா நாம் எப்படியும் இருந்து கொள் ளலாம். என்று நினைத்து கிராமத்துக்குப் புறப்படத்தயாராக யிருந்தார்கள். அதற்குமுன் சங்கராச்சாரியார் என்னைப் பார்க்கணும் என்று சொன்னாராம். நரசிம்மய்யர் என்பவர் காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலிலே நிர்வாக அதிகாரியாக இருந்தார். அவர் என்னை வந்து அழைத்தார்.

நான் இந்த வேஷம் கட்டி இருக்கிறேன்… கால் சட்டை மேல் சட்டையோட…. இதோடு அவரை நான் எப்படி பார்க்க முடியும் என்று கேட்டேன். அதெல்லாம் வரலாம் என்றார். சதாரணமாக அவர்களைப்பார்க்கும்போதுமேல
சட்டை யோடு போகமுடியாது…

கேள்வி: காரியம் ஆகணும் என்கிற பொழுது அவர்கள் எதற்கும் தயாரானவர்களாயிற்றே…

கீ.இரா. ஆமாம்….. ஆமாம்…! சரி… நான் வருகிறேன் என்ற ஒப்புக்கொண்டு போனேன். அவரே வண்டி கொண்டு வந்திருந்தார். அதில் தான் போனேன். ஆச்சாரியார் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்தார். அங்கு சென்றேன். இவர் அந்த பக்கம் பிரகாரத்தில் வந்துகிட்டிருக்கிறார்…. அப்பொழுது இந்த நரசிம்மய்யர் என்னைச்சீண்டுகிறார் …. நமஸ்காரம் பண்ணுங்க… நகமஸ்காரம் பண்ணுங்க என்கிறார். விழுந்து கும்பிட சொல்கிறார். நான் ஒன்றும் செய்யவில்லை.

பிரகாரத்தில் ஒரு பக்கத்தில் சுவர் ஓரமாக சங்கராச்சாரியார் நின்று கொண்டார். வலக்கை பக்கமாக நானும் நரசிம்மய்யரும் நின்று கொண்டோம். இடதுகை பக்கம் ஒரு சமஸ்கிருத ஆசிரியர் நின்றார். இவர் கேள்வி கேட்கிறார்: ரேஷனிங் பற்றி அது என்ன இது என்ன என்று கேட்கிறார். கேள்வி கேட்கிறதை சமஸ்கிருதத்தில் கேட்கிறார். அதை சமஸ்கிருத ஆசிரியர் தமிழில் சொல்கிறார் எனக்கு. தமிழிலே பதில் சொல்கிறேன் நான்.

பேச்சு முடிந்து வெளியே வந்தோம். வெளியே வரும் பொழுது அந்த நரசிம்ம அய்யரைக்கேட்டேன்: என்ன அய்யா, அவர்தான் தமிழிலே சொன்னா தெரிஞ்சிக் கிறாரே… பின்னே ஏன் அவர் சமஸ்கிருதத்தில் பேசுகிறார். என்று கேட்டேன் அதற்குச் சொன்னார்….. இதிலே பாருங்கோ…. இந்த பன்னிரெண்டரை மணிக்கெல்லாம் சந்திர மௌலீஸ்வரர் பூஜை இருக்கில்லையா, அதுவரைக்கிலும் எந்த நீசப் பாஷையிலும் பேச மாட்டார் என்றார். எனக்கோ அறைந்துவிடலாமான்னு இருந்தது.

அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாவின் கூற்றும் ஆட்சி மொழிக்காவலர் கீ. இராமலிங்கனார் அவர்களின் தகவலும் ஒத்துப் போவதிலிருந்து தமிழ்மீது சங்கராச்சாரியாருக்கு இருந்த காழ்ப்பு – வெறுப்பு அவர்கள் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் ‘துவேஷம்’ எந்த அளவுக்கு இருந்தது என்பது கனமாகவே விளங்கும்.

ஆண்டாளின் ‘திருப்பாவை’யில் (பாடல் எண் 2) தீக்குறளைச் சென்றோதோம் என்றவர்க்கு விளக்கம் சொன்ன இதே சங்கராச்சாரியார் திருக்குறளைச் சென்று ஓதமாட்டோம் என்றாரா? இல்லையா?

குறளை என்றால் கோள் சொல்லுதல் என்று பொருள். கோள் சொல்லும் தீயதைச் சொல்ல மாட்டோம் என்பதற்கு மாறாக திருக்குறளை ஓதமாட்டோம் என்று சொன்ன காழ்ப்புணர்ச்சிக் காரர்கள் தானே இந்தச் சங்கராச்சாரியார்கள்- பார்ப்பனர்கள்.

பார்ப்பனர்களைக் குறை கூறுவதுதான் பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு, கறுப்புச் சட்டைக் காரர்களுக்கு வேலை என்று குறை கூறுபவர்களின் நாக்கு இதற்கு மேலாவது சுரணை பெற்றால் நல்லது.

பார்ப்பனீயத்தின் வருணாசிரமம் என்பது அங்கு இங்கு எனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதை நாம் இடித்துச் சொன்னால் முகம் சுளிப்பவர்கள் இப்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்?

“சமஸ்கிருத பாஷை பிரம்மத்திற்குச் சமானம். அதாவது பரம் பொருளுக்குச் சமானம். பரம் பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. அதற்கென்று ஒரு குறிப் பிட்ட பகுதியோ, ஒரு தேசமோ கிடையாது. இதைத் தான் “சர்வ வியாபகத்வம்’’ என்பார்கள்.’’

“உலகில் முதன் முதலில் தமிழ்மொழி தோன்றிற்று. அதுவும் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகு தான் சமஸ்கிருதம் வந்தது. அதுவும் கொஞ்ச நூற்றாண்டு களுக்கு முன்புதான் `பாணினி’ என்ற ஒருவர் இந்த சமஸ்கிருதத்திற்கு இலக்கண சாஸ்திரங்களை இயற்றினார். அது முதற்கொண்டுதான் அந்த மொழி யும், பாஷையும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் பாஷா சாஸ்திரம் என்று சொல் லக்கூடிய சாஸ்திரத்தில் சமஸ்கிருதம்தான் பண்டைய காலத்திலிருந்து வந்த ஒரு பாஷை என்று கூறப்பட் டுள்ளது” என்று கூறியவரும் சாட்சாத் அதே சந்திர சேகரேந்திர சரஸ்வதிதான். (ஆதாரம்; `ஞானவழி’ – வானதி பதிப்பக வெளியீடு).

இந்தப் பார்ப்பான்கள் தான் ஈழத்துப் பார்ப்பான்களின் ஆன்மீக குருவும், தலைவரும் ஆகும். GOD SAVE THE TAMILS
preethi
Sep 14 2005, 11:00 PM

அகிலனின் லோககுரு கோவிலில் நுழைய தடா !

அவாளை இவாள் ஒப்புக் கொண்டாலும் இவாளை ஒரு இடத்தில் ஒப்புக் கொள்ளவில்லை. உள்ளே நுழைய விடவேயில்லை. எங்கே? மலையாளத்திலுள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில்!

திறந்த மார்புடன் இடுப்பில் முண்டு கட்டி யாரும் போகலாம், இங்கு! ஏற்கனவே அதே கோலத்தில் இருக்கும் காஞ்சி முனிவரை!!! – கோயிலின் கருவறைக்கே சென்று தானே பூசை செய்யும் தவ சிரேஷ்டிரை – சில இடங்களில் தனக்கே பூசை செய்யச் சொல்லும் பூதேவரை – கோயிலின் படி தாண்டி உள்ளே நுழையாதே என்று கூறி விட்டனர். ஏன்? இவர்தான் சரியான பிரம்மச்சாரியாயிற்றே! விவகாரமே அதிலேதான்!

மனுநூல் (7:34) பிரம்மச்சரியம் முதல் நிலை. இல்லறம் இரண்டாவது. காடுறை வது மூன்றாவது. துறவு நான்காம் நிலை என்கிறது. இதையே வேதங்களும் பிரம்மச்சர்யம், கிருவரஸ்தம், வானப்ரஸ்தம், சந்யாசம் என்கின்றன. முதல் மூன்று நிலைகளிலும் ஒழுகியவன்தான் – கடைப் பிடித்தவன்தான் – துறவு பூணத் தகுதி யுடையவனாகிறான்.

நம்மாள் நிலை வேறு! முதலில் பிரமசர்யம் அடுத்தது “டிரிப்பிள் ஜம்ப்” – நான் காம நிலையான சந்யாசம்! இது வேத விரோதம் என்பது குருவாயூர் வாதம். ஒன்பது துளைகளையும் மூடிக் கொண்டு திரும்பிவிட்டார், லோககுரு!

இந்த நிலையில் கோயிலில் யார் நுழைவது, எப்படி நுழைவது என்பதற்கு விளக்கம் தருகிறார்! பிள்ளையாருக்கே சைக்கிள் இல்லையாம் – பூசாரி புல்லட் கேட்கிறாராம் என்று என் நண்பர் கூறுவார். அதைப்போல குருவாயூரில் இவர் போவதற்கே தடை! தமிழ்நாட்டில் யார் போவது என்று இவர் இலக்கணம் வகுக்கிறார்!

(நன்றி உண்மை)
narathar
Sep 14 2005, 11:45 PM
திரு, நாரதர் அவர்களுக்கு,

இந்திய விசுவாசமுள்ள ஈழத்துப் பார்ப்பான்களை முற்று முழுதாக நம்ம்புவது, புத்திசாலித்தனமானதா, நீங்கள் என்னை விட அரசியலறிவிலும், வயதிலும் முதிர்ந்தவர் போல் தெரிகிறது, தயவு செய்து இதற்குப் பதில் சொல்லுங்கள்.

[/b][/quote]

இந்திய விசுவாசம் உள்ள ஈழத்துப் பார்ப்பனர் என்று கூறுகிறீர்களே,ஈழத்துப் பார்ப்பனர் எத்தனை பேர் அப்படி?இல்லை அவர்களுக்கு மட்டுமா விசுவாசம்,ஏன் சங்கரி,டக்லஸ்,வரதராசப் பெருமாள்,கருணா இவர்கள் எல்லாம் பார்ப்பனரோ? நான் திரும்பத் திரும்ப உங்களுக்குக் கூறுவது இந்தியப் பார்ப்பனீயம் நிறுவனப் படுத்தப்பட்ட அரசியல் அதிகாரம் உள்ள ஒரு வர்க்கம்.ஈழத்துப் பார்ப்பனர் நிறுவனப் படுத்தப் பட்ட அரசியற் சக்தி அல்ல.ஆனால் நான் சொன்ன இராமக்ரிஸ்ன மடாலயம் நிறுவனப் படுத்தப் பட்டது, அதன் பின் இந்திய தாசர்களாக இருப்போர் கொழும்பில் உள்ள ஈழத்துப் பார்ப்பனராகிய வேளாளரே.உங்களுடய வாதத்தின் படி, வேளாளரையும் நாங்க சந்தேகக் கண்ணோட தான் பாக்க வேணும்?

எங்கட போராட்டம் நம்பி இருக்கிறது எங்கட அரசியல்,ஆயுத பலத்தில .எங்கட அரசியற் பலம் இருக்கிறது ஈழத் தமிழர் என்கின்ற எங்கட அடயாளத்தில.அதை உடைக்கத் தான் மத,சாதிய,பிரதேச வேறு பாடுகள் கிளறப் படுகின்றன.இதை விளங்கீனீங்கள் எண்டால் நான் சொல்லுறது உங்களுக்கு விளங்கும். 🙄

மற்றது எனக்கு உங்கள விட வயசு கூட எண்டெல்லாம் கண்டு புடிச்சிருக்கிறியள்,அந்த வித்தயக் கொன்ச்சம் சொன்னா நானும் இங்க கொன்ச்சப் பேரின்ட வயசக் கண்டு பிடிக்கலாம். 😉
narathar
Sep 14 2005, 11:47 PM
சாதீஈஈயம்
பிறை ஆறு.

இதை ஒரு ‘இயம்’ ஆக்கிக் கதைப்பதே சரியா தெரியாது. ஆனால் அவ்வளவு தூரத்துக்கு முக்கியமானதுதான் இது. இங்கே சாதி பற்றிய என் அனுபவங்களைப் பகிர்கிறேன் அவ்வளவே. இது ஆராய்ச்சியோ அறிவுரையோ அன்று என்பதை முதலிற் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஏற்கெனவே தமிழோடு பட்டபாடு போதும். என் அனுபவங்கள் என்று சொல்லிவிட்டதால் நான் சார்ந்த தளத்தை மட்டுமே என்னாற் சொல்ல முடியும். எனவே அந்தத்தளம் இங்கே பலருக்குப் பிடிக்காததாயிருக்கலாம் என்பது எனக்குத் தெரியும்.

யாழ்ப்பாணத்தின் கிராமமொன்றுதான் என் சொந்த ஊர். எனது காலத்தில் சாதி ஒடுக்குமுறையென்பது என் கிராமத்தில் இருந்ததாக நினைவிலில்லை. ஆனால் வேறுபாடுகள் நன்றாகவே இருந்தன. மேல் சாதியென்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்தச் சாதியும் இருந்ததில்லை. (இது என் கிராமத்துக்கு மட்டுமே பொருந்தும். வேறு இடங்கள் பற்றி அந்தச் சின்ன வயசில் எனக்குத் தெரியாது) ஆனால் குறிப்பிட்ட ஆக்கள் வீதியால் வரும்போது காவோலை கட்டி இழுத்து வரவேணும் என்ற நடைமுறை முன்பு இருந்ததாக என் பாட்டன் பரம்பரை சொல்லிக் கேள்விப்பட்டதுண்டு. என் காலத்தில் அது அறவே இருந்ததில்லை. ஏன் தந்தை காலத்திலும் அது இருந்ததில்லையாம்.

எங்கள் கிராமத்தில் எல்லாக் கிணறுமே குடிப்பதற்குப் பாவிப்பதில்லை. சமைப்பதற்குப் பாவித்தாலும், குடிப்பதற்குச் சில குறிப்பிட்ட கிணறுகளையே பாவித்தார்கள். (ஆனால் உண்மையில் எல்லாக் கிணறுமே குடிக்கக் கூடிய தண்ணீருள்ள கிணறுகள் தான். சுவைக்காகத்தான் இப்படி கிணறுக்கு அலைவது. தண்ணீருக்குச் சுவையில்லையென்று விஞ்ஞானம் பேசாதீர்கள். சுவையிருக்கிறது. இது எந்தக் கிணத்துத் தண்ணீரென்று என்னாற் சுவைத்துப்பார்த்துச் சொல்ல முடியும்.) முந்தி தண்ணீர் எடுப்பதில் சாதிச் சண்டைகள் வந்ததாம். ஆனால் என் காலத்தில் எல்லாருமே தண்ணீர் அள்ளினார்கள். குறிப்பாகக் கோயில் கிணறுகள் எந்த நேரமும் எல்லாருக்காகவும் இருக்கும். கோயில் வளவுக் கதவுகள் இரவிற்கூடப் பூட்டப்படுவதில்லை, தண்ணீர் அள்ளுவதற்காக. ஆனால் திருமணங்கள் என்று வரும்போது சாதி நிச்சயமாய்ச் சம்பந்தப்படும்.

தொழில் முறைமூலம் பிரிக்கப்பட்ட சாதி தொடர்ந்து வருவதற்கு மதங்களின் பங்கு அளப்பரியது. இன்னும் சாதியம் வேரூன்றி இருப்பதற்கும் மதங்களின் பங்களிப்பு முக்கியமானது என்பது என் கருத்து. நான் என் ஊரில் சாதி பற்றி அறிந்த கதை இதுதான்:

கரையார், பள்ளர், வேளாளர் என்று சனம் கதைப்பதைக் கேட்டிருக்கிறேன். ஒருநாள் என் தாயிடம் கேட்கிறேன்:
“அம்மா! கரையார், பள்ளர் எண்டா ஆரம்மா?”

என் தாய் எனக்களித்த பதில் இதுதான்.

“செவத்தியார் கோயில்காரர் பள்ளர், தொம்மையப்பர் கோயில்காரர் கரையார், அந்தோனியார் கோயில்காரர் வெள்ளாளர். இப்ப விளங்கீட்டுதோ?”

ஓமெண்டு தலையாட்டினன். தொழில்களைக் குறித்து எனக்கு சாதி சொல்லப்படவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால், ‘அப்ப உதில எந்தத் தொழிலும் செய்யாமல் அரசாங்க வேல மட்டும் பாக்கிற நாங்கள் என்ன சாதி?’ என்று கேட்டிருப்பேன் என்று என்தாய் நினைத்தாளோ தெரியாது.

இப்படித்தான் இந்து மதத்திலுமிருந்தது. சாதிக்கொரு கோவிலை வைத்துக்கொண்டிருக்கிறார்கள
. நல்ல வேளை சாதிக்கொரு புனிதரை அல்லது கடவுளை வைக்கவில்லை. எங்களுரில் வெள்ளாளருக்கு இருக்கும் அந்தோனியார் பக்கத்து ஊரில் கரையாருக்கு. புனிதர்கள் தப்பித்தார்கள். தொழில்கள் மாறி எல்லாரும் தமக்கு வசதிப்பட்ட தொழில்களைச் செய்யத்தொடங்கிய பின்னும், ஏராளமானோர் அரசாங்க வேலையும் தனியார் வியாபார நிறுவனங்களிலும் வேலை செய்யத் தொடங்கிய பின்னும், இன்னும் அந்தத் தொழில்முறைச் சாதி பலமாக உயிரோடிருப்பதற்கு மதங்கள் முக்கிய காரணம்தான். நேரடியாகச் சாதி பற்றிப் பேச முடியாமல் இப்பிடித்தான் எங்களுரில் பேசிக்கொள்வார்கள். எடுத்துக்காட்டாக வேறோரு ஊரிலிருக்கும் ஒரு கரையாரைப் பற்றிப் பேசும்போது,

“அவயள் தொம்மையப்பர் கோயில் ஆக்களெல்லோ.”  எண்டு சொல்லுவினம். ஆனா அந்த ஊரில அப்பிடியொரு கோயிலே இருக்காது. எங்கட ஊர்க் கோயில வச்சே எல்லா இடத்து ஆக்களையும் குறிப்பினம்.

சொந்த ஊரிலயிருந்து 1992 இல இடம்பெயர்ந்து மானிப்பாயில வந்து இருந்தம். ஏராளமான சனம் மானிப்பாய்க்குத்தான் வந்தது. முதல் பள்ளிக்கூடங்களில எல்லாரும் கலந்து ஒண்டாத்தான் ஒரு பிரச்சினையுமில்லாம இருந்தவை. பிறகு அகதி முகாம்கள் அமைக்கப்பட்டன. பிரதானமா மூன்று முகாம்கள். இவற்றில் இரண்டு பெரிய முகாம்கள். அவற்றில் சாதி மதப்பிரச்சினையில்லாமல் எல்லாரும் ஒன்றாகவே இருந்தார்கள். அதில் தனியே ஓர் ஊரைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல் எல்லாரையும் குடியமர்த்தினார்கள். இறுதிவரை பிரச்சினையில்லாமலிருந்தது. ஆனால் மூன்றாவதாக அமைக்கப்பட்ட முகாம் தான் சிக்கலைத் தந்தது. அதில் ஆக முப்பது வரையான குடிசைகள்தான். மிகச் சிறிய முகாம். ஆனால் அவ்வளவு பேரும் ஒரே ஊர் அக்கள். அதாவது என் கிராமத்தவர்கள். அதுவும் ஓரே மதத்தவர், ஆனால் இரு சாதிக்காரர். குடிசைகள் அமைக்கும்போதே பிரச்சினை தொடங்கி விட்டது. குடிசை ஒழுங்குகளை மாற்றித் தருமாறு பிரச்சினை. என்னவென்றால் தாங்கள் எல்லாரும் ஒன்றாக இருக்கப் போவதாக இரு தரப்புமே சொன்னார்கள்.

அந்த முன்று முகாம்களுமே மானிப்பாய் அந்தோனியார் கோவில் பங்கு நிர்வாகத்தின்கீழ்தான் இருந்தன. பங்குத்தந்தை இதை ஒப்பிவில்லை. எல்லாரும் கலந்துதான் இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாயிருந்தார். ஆனால் சில ‘பெரியவர்கள்’
“சுவாமி! உங்களுக்கேன் பிரச்சின. நாளைக்கு இதுகள் தங்களுக்க ஏதும் பிரச்சினப் பட்டா அது உங்களுக்குத்தானே இடைஞ்சல். பேசாம அவயள் சொல்லிற மாதிரியே விட்டிடலாம்.” என்று சொல்லி சம்மதிக்க வைத்தாயிற்று. குடிசை ஒழுங்குகள் மாறின. ஒரே பாதை ஒரே ஒழுங்குமுறை என்று இருந்தும் முகாம் இரண்டாகவே இயங்கியது. திடீரென இடையில் வேலி முளைத்தது. இரண்டு பாதைகள் வந்தன. முகாமுக்கு இரண்டு நிர்வாகம் வந்தது. வெறும் முப்பது குடிசைகளுக்குள் ஊரில் நடந்த அத்தை கூத்துக்களும் நடந்தன. நல்ல வேளை பெரியளவு பிரச்சினைகள் வரவில்லை. மனத்தளவில்தான் அந்தப் பிரச்சனை.

ஆனால் யாழ் இடப்பெயர்வின் பின் வன்னிவந்தபின் இந்த நிலைமைகளில் மாற்றம் வந்தது உண்மை. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் அவர்களை மாற்றிவிட்டதோ என்னவோ. இங்கே சாதிப்பிரச்சினை, வேறுபாடு முற்றாகக் களையப்பட்டதாக நான் சொல்ல வரவில்லை. யாழில் இருந்த நிலைமை நிரம்பவே மாறிவிட்டது. வன்னிக்குள்ளே கூட நிறைய இடப்பெயர்வுகள். இதிலே எதைச் சொந்தம் கொண்டாட முடியும்? அகதிகள் சம்பந்தமாக வேலை செய்தவன் என்ற முறையில் இந்த மாற்றங்களை என்னால் உறுதியாகப் பதிவு செய்ய முடியும். அகதிமுகாம்களில் பல காதல் திருமணங்கள் கூட நடந்ததுண்டு. எதிர்ப்புகள் இருந்தாலும் அதைப்பற்றிக் காதலர்கள் கவலைப்படவில்லை. தமிழீழக் காவல்துறை தான் அவர்களின் நம்பிக்கை. குடும்பம் நடத்தும் பொருளாதார பலம் இருக்கும் பட்சத்திலும் வயது சரியாக இருக்கும் பட்சத்திலும் காதல் கைகூடும். தமிழகத்திலும் இங்கேயும் காவல்துறைக்கு இது ஒரு முக்கிய பணிபோலும்.

ஒருவர் சொன்னார்:

“உவங்கள் ஒரே சாதிக்குள்ள அல்லது மதத்துக்குள்ள காதலெண்டா ஏனோ தானோவெண்டு இருப்பாங்கள். ஆனா சாதிமதம் மாறியெண்டா விழுந்தடிச்சு தலையில தூக்கிவச்சு ஆடுவாங்கள்.”

எனக்கு இந்தக் குற்றச்சாட்டு உண்மையாகப் படவில்லை. அவர்கள் காதலை ஆதரிக்கிறார்களா வரவேற்கிறார்களா என்பதைத் தாண்டி அதை அவர்கள் சாதி மதங்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகப் பார்க்கிறார்கள் என்பது தெளிவு. பல போராளிகளின் திருமண பந்தம் இவற்றைத்தாண்டி நடந்ததால் சொந்த தாய் தந்தையரின் உறவுகூட இல்லாமல் இருப்பதும் நான் கண்டுள்ளேன். புலிகளின் திருமண முறைகூட (திருமணச் சடங்கு) இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. தவிர்க்க முடியாமல்தான் அவற்றிற் கலந்து கொள்கிறார்கள்.

மதங்களின் ஆதிக்கத்தை மக்களிடத்திற் குறைப்பது முக்கியமானது. ஆனால் புலிகளாற்கூட அதைச் சரிவர செய்யமுடியவில்லை. ‘இம்’ என முன் பிரச்சனை வந்துவிடும். (ஆனால் மாவீரரின் வித்துடல் விதைப்பு விடயத்தில் மட்டும் எந்த சமரசத்துக்கும் இடங்கொடாமல் அவர்களால் இருக்க முடிகிறது.) சாதிப்பிரச்சினையும் மதங்களோடு பின்னிப்பிணைந்திருப்பதால் அவைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது என்பது என் அவதானம்.

வன்னியில் வெளிப்படையாக சாதி பற்றிக் கதைத்தாலோ இன்னொருவரைச் சாதிப்பேர் கொண்டு திட்டினாலோ அது பிரச்சினைக்குரிய விசயம்தான். மனத்தில் என்ன இருந்தாலும் வெளிப்படையாகப் பேச முடியாது. இது எந்தளவுக்குப் பயனளிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் குழந்தைகள் சிறுவர்கள் சாதிப்பெயர்களைக் கேட்டும் அதன் வசவுகளைக் கேட்டும் வளரும் சந்தர்ப்பங்கள் குறையும். வன்னியில் இளைய சமுதாயம் எப்படியும் களத்தில் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். எல்லைப் படையாகப் போயிருக்கிறோம். பெரிய தாக்குதல் நேரங்களில் ஆயுதங்கள் கைப்பற்றல், இராணுவ உடல்களை அப்புறப்படுத்தல், காயக்காரரை அப்புறப்படுத்தல், வழங்கல்களைச் செய்தல், உணவுப்பொதிகளை வினியோகித்தல் என நிறையக் களப்பணிகளைச் செய்திருக்கிறோம். இரத்ததானம் நிறைய. இவற்றிலெல்லாம் இளைய சமுதாயத்திடம் வழமையைவிடப் புரிந்துணர்வொன்று அதிகமாய் ஏற்பட்டிருந்தது, குறிப்பாக எல்லைப் படையாகக் கடமைக்குச் செல்லும்போது. நண்பர்கள் வட்டமென்பது மிகமிக விசாலமானது. சாதியைக் கருத்திற்கொள்ளாதது. யாழ்ப்பாணத்தில் இன்றும்கூட நண்பர்கள் வட்டம் சாதியைக் கருத்திற்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

எம்மக்கள் மத்தியில் மதவேறுபாட்டைப் பிரச்சினையாகக் கொள்வதிலும்விட சாதிவேறுபாட்டைப் பிரச்சனையாய்க் கொள்வது சற்று அதிகம்போல் நான் உணர்கிறேன். ஆனால் காலப்போக்கில் இந்தப்பிரச்சனை ஒழியலாம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. என் நம்பிக்கை வன்னிதான். அங்கு ஓரளவுக்கு எல்லாருக்கும் சமமான சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதைக் காணலாம். ஏதோ தம்மாலியன்றவரை புலிகள் சமூகக் கட்டமைப்பைப் பேணுகிறார்கள். முன்பு வன்னியில் பிச்சையெடுக்கும் சிறுவர் சிறுமிகளைக் கண்டிருப்பீர்கள். அது ஒரு கட்டத்தில் பெருகத்தொடங்கியது. ஆனால் இன்று அறவே அந்த நிலையில்லையென்பதை உறுதியாக் கூறுவேன். ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிட்டு நான் வன்னிபற்றிப் பெருமைப்படும் விசயங்களில் இதுவுமொன்று.

அத்தோடு அனைத்துத் தொழில்களுக்கும் இயன்றவரை உரிய அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். சீவல் தொழில் செய்பவர்களுக்கு சங்கம் அமைக்கப் பட்டுள்ளது. அவர்களின் வருமானம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 55 வயதுக்கு மேல் ஒரு சீவல் தொழிலாளிக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தொழிலின்போதான இறப்புக்கு அக்குடும்பத்துக்கு நட்ட ஈடு வழங்கப்படுகிறது. தனிப்பட யாருக்கும் கள் விற்க முடியாது. அது சட்ட விரோதமானது.

இதேபோலவே சிகை அலங்கரிப்புத் தொழிலும். (இந்தப் பெயரில்தான் அவர்கள் இயங்குகிறார்கள்). தனிப்பட யாருக்கும் அவர்களின் வீட்டிற்குப் போய் முடி வெட்ட முடியாது. எந்தக் கொம்பனென்றாலும் சிகை அலங்கரிப்பு நிலையத்துக்குத்தான் (சலூனுக்கு) வந்து வெட்ட வேண்டும். சரியான மருத்துவக் காரணங்களின்றி யாரும் வீட்டிற்குச் சென்று முடிவெட்ட முடியாது. இவை ஓரளவுக்கு ஆண்டான் அடிமை மனோபாவத்தை அல்லது முறையை ஒழிக்கும்.

இன்னும் அவர்கள் செய்ய வேண்டியவை நிறைய. ஆனால் அவர்களால் செய்ய முடியாதவை என்றும் நிறைய உண்டு. எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்தில் ‘மணக்கொடைத் தடைச் சட்டம்’ என்ற பெயரில் தமது நீதித்துறையில் சீதனத் தடைச் சட்டத்தையே கொண்டுவந்தார்கள். அச்சட்டத்தின் கீழ் சில வழக்குகளும் நடந்ததாக அறிகிறேன். இச்சட்டம் பற்றி எங்கள் தமிழர்கள் எந்தவித பிரதிபலிப்பையும் காட்டவில்லை. (அன்ரன் பாலசிங்கம் இச்சட்டத்தை ஆதரித்து எழுதி, பின் அவரே வேறொரு பேரில் விமர்சித்து எழுதி மீண்டும் அதற்கு தன் பெயரில் விளக்கம் கொடுத்து கொஞ்சக்காலம் மினக்கிட்டார். ஆனால் ஒருத்தரும் அந்த விவாதத்தில கலந்துகொள்ளேல.) ஆதரவுமில்லை எதிர்ப்புமில்லை. யாழ் இடப்பெயர்வுடன் வன்னிக்கு வந்த நேரத்தில் புலிகளின் நிர்வாகத் தழம்பல்களுக்கிடையில் இச்சட்டம் செயலிழந்துவிட்டது. இன்றும் செயலிழந்த ஒரு சட்டமாகத்தான் அது இருக்கிறது. இவ்விசயத்தில் அவசரப்பட்டார்களோ என்று தோன்றுகிறது.

இப்போது போர் ஓய்ந்துவிட்ட இந்த நேரத்தில் வன்னியில் மீண்டும் பழய பிரச்சினைகள் தலை தூக்கலாம். அவை எப்படிக் கையாளப்படுகின்றனவோ தெரியவில்லை. நானிருக்கும்வரை பெரிதாக எந்த மாற்றமுமில்லை. சுனாமியின்பின் நிலைமை எப்படியிருக்கிறதென்றும் தெரியவில்லை.

என்பதிவில் யாழ்ப்பாணத்தைத் தாக்கியெழுதியதாக ஒரு பார்வை தென்படலாம். அப்படியன்று. என் அனுபவங்களும் பார்வைகளும்தான் அவை. சில விசயங்கள் எனக்குத் தீராத ஆத்திரத்தை வரவழைப்பவை. சென்ற வருடம் யாழ் போனபோது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி (என்னைப் புலியாக அல்லது வால்பிடியாக நினைத்து, – வன்னியிலிருந்தவனையெல்லாம் அப்பிடித்தான் பார்ப்பார்களோ தெரியாது.)

“டேய் நீதானே அவங்களோட திரிஞ்சனி. உனக்குத் தெரிஞ்சிருக்கும். பொடியளில கரையாரோ வெள்ளாளரோ கூட இருக்கினம்?”
இது. இதுதான் நான் கண்ட யாழ்ப்பாணம். இந்த ஒரு சம்பவத்தை வைத்து நான் யாழ்ப்பாணத்தை எடை போடுவது தவறுதான். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

குறிப்பு: சாதி பற்றிய விடயங்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் பொதுவாக இருந்தாலும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இன்னும் ஈழத்தில் அரசுமுறை அங்கீகாரம் சாதிக்குக் கிடைக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் விரும்பியோ விரும்பாமலோ ஒருவன் தன்னைச் சாதிரீதியில் வெளிப்படுத்தியே ஆகவேண்டும்.

‘தலித்’ என்ற சொல் நான் தமிழகம் சம்பந்தப்பட்டு மட்டுமே கேள்விப்பட்டுள்ளேன். ஈழத்தில் இச்சொற்பாவனை நானறியவில்லை. ஆனால் சிறிரங்கன் பாவிப்பதைப் பார்த்தால் அங்கேயும் இச்சொல் பாவனையிலிருந்திருக்கிறது போலுள்ளது. தெரிந்தவர்கள் சொல்லவும்.

posted by வசந்தன்(Vasanthan
http://vasanthanin.blogspot.com/2005/05/bl…9506576505.html
nallavan
Sep 15 2005, 04:32 AM

பிரீதியின் வாதம் எதைச் சொல்கிறதென்று எனக்கு இன்னும் புரியவில்லை. பார்ப்பனீயம் தமிழுக்கும் தமிழ்த்தேசியத்துக்கும் எதிரானது என்றால் அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் ஈழத்தில் பார்ப்பனர் ஈழவிடுதலைக்கு எதிரானவர்கள் என்கிறார். அதைச் சாடியபோது மழுப்பலாக வேறேதோ கதைக்கிறார்.

ஈழத்தில் பார்ப்பனர் என்ற சொல்லால் யாரையும் குறிப்பிடுவதில்லையென்று சொன்னபோது பிராமணர் என்ற சொல் வடசொல்லாம், அதற்குரிய தமிழ்தான் பார்ப்பனியமாம். சிரிப்புத்தான் வருகிறது பார்பனர் என்றசொல்லைத் தமிழெனும்போது.

முதலில் பிராமணர் யாரும் ஈழப்போராட்டத்தில் பங்குபற்றிவில்லையென்ற தொனியில் விசமத்தனமான பிரச்சாரமொன்றைச் செய்தார். அகிலன் குறிப்பிட்ட போராளியொருவரைச் சொன்னபோது அதை நிரூபிக்கும்படி பெயர் கேட்டார். அதாவது ஒரு பிராமணக்குடும்பத்திலிருந்த ஒருவர்கூட போராட்டதிலீடுபடவில்லையென்று பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தார்.
பிறகு நாலைந்துபேர் அப்பிடி போராடியிருப்பார்கள். அதற்காக பிராமணர்களை நாம் நம்ப முடியாதென்றார்.
இதிலென்ன வேடிக்கையென்றால், ஈழத்தில் பிராமணர்கள் யாரும் தம்மைத் தமிழர்களாகக் கருதுவதில்லையென்கிறார். என்னவொரு விசர்த்தனமான கருத்து. யார் தம்மைத் தமிழரல்லர் என்று சொன்னது?
யாரையாவது அடையாளங்காட்ட முடியுமா?

நான் பிரீதி போன்றவர்களை ஒன்று கேட்கிறேன். பார்ப்பனர் என்பது அடிப்படையில் ஒரு சாதிப்பிரிவு. சரிதானே.
அப்படியானால் வாதிடும் நீங்கள் உங்கள் சாதியைத் தெரிவித்து வாதிடுங்கள். இன்னொரு சாதியைப் பழித்துக் கருத்துரைக்கும் நீங்கள் நிச்சயம் சாதிவெறி பிடித்தவராயிருக்க வேண்டும். மற்றும்படி ‘நான் சாதியற்றவன்’ என்று பறையடித்தால் பார்ப்பனர் எனும் சாதியைப் பழிக்க உங்களுக்கு எந்த அருகதையுமில்லை.
இப்படித்தான் முன்பு இ.பி.ஆர்.எல்.எவ் உக்கு இந்தச் சாதியார்தான் உதவினார்கள். ரெலோவுக்கு இந்தச் சாதிதான் உதிவானர்கள் என்று யாழ்ப்பாணத்தில் சாதிபிரித்துக் கதைத்தார்கள்.
அதுபோலத்தான் இப்போது அடிப்படையில் உண்மையற்ற, விசமத்தனமான கருத்தொன்றை வைத்து மற்றவர்களை பேயனாக்குகிறீர்கள்.

வெளிப்படையாக, ஈழப்போராட்டத்துக்கு எதிராக ஈழத்திலிருந்து கிளம்பியவர்களில் பிராமணர் யார் என்று பாருங்கள். பிராமணரல்லாதவர் யாரென்று பாருங்கள். உண்மை தெரியும்.

அதைவிட்டுவிட்டு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள். பிராமணர்களை தமிழரல்லர் என்று நீங்கள் தான் சொல்லிக்கொண்டு, ஆனால் அவர்கள் சொல்லுவதாக ஒரு விசமத்தனமான பிரச்சாரத்தைச் செய்கிறீர்கள்.
ஒன்றில் உங்களை யாரோ நல்லா மூளைச்சலவை செய்திருக்கிறார்கள். அல்லது நீங்கள் ஒரு விசக்கிருமியாக இருக்க வேண்டும்.
முடிந்தால் தெளிவாக் பதிலளியுங்கள் பார்ப்போம்.
kuruvikal
Sep 15 2005, 04:34 AM
மூளைச் சலவையும் இல்ல விஷக் கிருமியும் இல்ல… நல்லா ஏமாந்திருக்கினம்…அவ்வளவும் தான்…! அது யார் குற்றமோ..?! பாவம் ஐயா…! 😉 tongue.gif laugh.gif
preethi
Sep 15 2005, 04:57 AM
[quote]வெளிப்படையாக, ஈழப்போராட்டத்துக்கு எதிராக ஈழத்திலிருந்து கிளம்பியவர்களில் பிராமணர் யார் என்று பாருங்கள். பிராமணரல்லாதவர் யாரென்று பாருங்கள். உண்மை தெரியும். அதைவிட்டுவிட்டு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள். பிராமணர்களை தமிழரல்லர் என்று நீங்கள் தான் சொல்லிக்கொண்டு, ஆனால் அவர்கள் சொல்லுவதாக ஒரு விசமத்தனமான பிரச்சாரத்தைச் செய்கிறீர்கள். ஒன்றில் உங்களை யாரோ நல்லா மூளைச்சலவை செய்திருக்கிறார்கள். அல்லது நீங்கள் ஒரு விசக்கிருமியாக இருக்க வேண்டும். [/quote]

மூளைச்சலவையுமில்லை, விசக்கிருமியுமில்லை, ஒருவரிடமும் ஏமாறவுமில்லை. எந்தளவுக்குப் பார்ப்பான்கள் தமிழையும், தமிழர்களையும் வெறுக்கிறார்களென்பதைப் பார்ப்பான்களுடன் பழகி, அனுபவத்தில் அறிந்தது தான்.

பிராமணர்கள் தமிழரல்ல என்று நான் சொல்லவில்லை அவர்கள் தான் சொல்கிறார்கள். நான் ஆரம்பத்திலேயே கேட்டேன், யாராவது பார்ப்பானத் தலவர் இந்தியாவிலாவது, இலங்கையிலாவது தாங்கள், தமிழர் அல்லது திராவிடர் என்று சொன்னதை நிரூபிக்கும்படி. பார்ப்பானான அகிலனோ ,அவருடைய ஜால்ரா ‘தலா’ கூட இதைப் பற்றி மூச்சு விடவில்லை, ஏனென்றால் அவர்களுக்கு உண்மை தெரியும்.

நல்லவன் பிராமணர்களிடம் அவர்கள் ஆரியரில்லை, தமிழர்கள் என்று சொன்னால் அவர்களிடம் செருப்படி வாங்குவார். ஆதிசங்கரர் தொடக்கம் இன்றைய சங்கராச்சாரி, ராஜகோபாலாச்சாரி, சோ ராமசாமி, மட்டுமல்ல எங்களுடைய வரைவர் கோயில் ஐயருக்கும் நினைப்பு, தான் தமிழனில்லை ஆரியன் என்பது. நான் முழு உளுந்துக்கு எண்ணை தடவின மாதிரி இருக்கும் பார்ப்பான்களைத் தமிழ்நாட்டில் சந்திதிருக்கிறேன், அவர்கள் கூடத் தாங்கள் ஆரியர் என்று தான் வாதாடினார்கள்.

ஆரியன் எல்லாம் பிராமணரோ, இல்லையோ, பிராமணர் எல்லாம் தங்களை ஆரியராகத் தான் கருதுகிறார்கள் தமிழர்களாக அல்ல. கீழே நான் தருவது “ஐயர் பிராமணர்களின்” உத்தியோகபூர்வ இணையத்தளம் (Official Website), http://www.bharatavarsha.com/iyer.html அதில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

Welcome to the Iyer Heritage Site and the home of the Iyer Heritage Foundation. Here we propose to build an information resource about the history, socio-anthropology, genetics and traditions of the Iyer community of Southern India.

The Iyers constitute one of the last surviving pockets of ancient Indo-Aryan (Vedic) culture. They have retained this Indo-Aryan legacy for over 5000 years. It is interesting that this is the case despite them having lived in the heart of Dravida country for over a thousand years! Perhaps this is due in no small measure to the magnanimity of Dravidian rulers (and indeed the dravidian people themselves) century after century, who not only permitted, but even encouraged Iyers to settle in south India.

We hope that this site will answer some of the questions you may have about Iyers and their background.
preethi
Sep 15 2005, 05:40 AM
Hindu priest shot dead in northern Sri Lanka
Associated Press, Wed September 14, 2005 08:05 EDT . J

AFFNA: Suspected Tamil Tiger rebels shot dead a Hindu priest in northern Sri Lanka Wednesday as he returned to his car after finishing temple rituals, the military said.
Swaminatha Sharma, believed to be aged around 30, was gunned down in Jaffna, about 300 kilometers (185 miles) north of the capital, Colombo.

“We know that he has been killed by the LTTE (Liberation Tigers of Tamil Eelam),” said Military Spokesman Brig. Daya Ratnayake. [b]He said Sharma and his father, also a Hindu priest, were close to the military hierarchy in the area.
Rebel officials could not be contacted immediately for comment.

Tamil Tiger rebels have fought the government military since 1983 to create a separate state for the country’s 3.2 million minority Tamils – mostly Hindus.

The rebels claim Tamils are discriminated against by the majority Sinhalese-dominated state in education and jobs.

More than 65,000 people were killed in the conflict before the two sides agreed to a Norway-brokered cease-fire in 2002.

Peace talks broke down a year later and the truce itself is now undergoing a severe test with frequent violence in the Tamil-majority north and east.

Birundan
Sep 16 2005, 12:38 AM
[quote=narathar]சாதீஈஈயம்
பிறை ஆறு.

இதை ஒரு ‘இயம்’ ஆக்கிக் கதைப்பதே சரியா தெரியாது. ஆனால் அவ்வளவு தூரத்துக்கு முக்கியமானதுதான் இது. இங்கே சாதி பற்றிய என் அனுபவங்களைப் பகிர்கிறேன் அவ்வளவே. இது ஆராய்ச்சியோ அறிவுரையோ அன்று என்பதை முதலிற் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஏற்கெனவே தமிழோடு பட்டபாடு போதும். என் அனுபவங்கள் என்று சொல்லிவிட்டதால் நான் சார்ந்த தளத்தை மட்டுமே என்னாற் சொல்ல முடியும். எனவே அந்தத்தளம் இங்கே பலருக்குப் பிடிக்காததாயிருக்கலாம் என்பது எனக்குத் தெரியும்.

யாழ்ப்பாணத்தின் கிராமமொன்றுதான் என் சொந்த ஊர். எனது காலத்தில் சாதி ஒடுக்குமுறையென்பது என் கிராமத்தில் இருந்ததாக நினைவிலில்லை. ஆனால் வேறுபாடுகள் நன்றாகவே இருந்தன. மேல் சாதியென்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்தச் சாதியும் இருந்ததில்லை. (இது என் கிராமத்துக்கு மட்டுமே பொருந்தும். வேறு இடங்கள் பற்றி அந்தச் சின்ன வயசில் எனக்குத் தெரியாது) ஆனால் குறிப்பிட்ட ஆக்கள் வீதியால் வரும்போது காவோலை கட்டி இழுத்து வரவேணும் என்ற நடைமுறை முன்பு இருந்ததாக என் பாட்டன் பரம்பரை சொல்லிக் கேள்விப்பட்டதுண்டு. என் காலத்தில் அது அறவே இருந்ததில்லை. ஏன் தந்தை காலத்திலும் அது இருந்ததில்லையாம்.

எங்கள் கிராமத்தில் எல்லாக் கிணறுமே குடிப்பதற்குப் பாவிப்பதில்லை. சமைப்பதற்குப் பாவித்தாலும், குடிப்பதற்குச் சில குறிப்பிட்ட கிணறுகளையே பாவித்தார்கள். (ஆனால் உண்மையில் எல்லாக் கிணறுமே குடிக்கக் கூடிய தண்ணீருள்ள கிணறுகள் தான். சுவைக்காகத்தான் இப்படி கிணறுக்கு அலைவது. தண்ணீருக்குச் சுவையில்லையென்று விஞ்ஞானம் பேசாதீர்கள். சுவையிருக்கிறது. இது எந்தக் கிணத்துத் தண்ணீரென்று என்னாற் சுவைத்துப்பார்த்துச் சொல்ல முடியும்.) முந்தி தண்ணீர் எடுப்பதில் சாதிச் சண்டைகள் வந்ததாம். ஆனால் என் காலத்தில் எல்லாருமே தண்ணீர் அள்ளினார்கள். குறிப்பாகக் கோயில் கிணறுகள் எந்த நேரமும் எல்லாருக்காகவும் இருக்கும். கோயில் வளவுக் கதவுகள் இரவிற்கூடப் பூட்டப்படுவதில்லை, தண்ணீர் அள்ளுவதற்காக. ஆனால் திருமணங்கள் என்று வரும்போது சாதி நிச்சயமாய்ச் சம்பந்தப்படும்.

தொழில் முறைமூலம் பிரிக்கப்பட்ட சாதி தொடர்ந்து வருவதற்கு மதங்களின் பங்கு அளப்பரியது. இன்னும் சாதியம் வேரூன்றி இருப்பதற்கும் மதங்களின் பங்களிப்பு முக்கியமானது என்பது என் கருத்து. நான் என் ஊரில் சாதி பற்றி அறிந்த கதை இதுதான்:

கரையார், பள்ளர், வேளாளர் என்று சனம் கதைப்பதைக் கேட்டிருக்கிறேன். ஒருநாள் என் தாயிடம் கேட்கிறேன்:
“அம்மா! கரையார், பள்ளர் எண்டா ஆரம்மா?”
என் தாய் எனக்களித்த பதில் இதுதான்.
“செவத்தியார் கோயில்காரர் பள்ளர், தொம்மையப்பர் கோயில்காரர் கரையார், அந்தோனியார் கோயில்காரர் வெள்ளாளர். இப்ப விளங்கீட்டுதோ?”
ஓமெண்டு தலையாட்டினன். தொழில்களைக் குறித்து எனக்கு சாதி சொல்லப்படவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால், ‘அப்ப உதில எந்தத் தொழிலும் செய்யாமல் அரசாங்க வேல மட்டும் பாக்கிற நாங்கள் என்ன சாதி?’ என்று கேட்டிருப்பேன் என்று என்தாய் நினைத்தாளோ தெரியாது.

இப்படித்தான் இந்து மதத்திலுமிருந்தது. சாதிக்கொரு கோவிலை வைத்துக்கொண்டிருக்கிறார்கள
. நல்ல வேளை சாதிக்கொரு புனிதரை அல்லது கடவுளை வைக்கவில்லை. எங்களுரில் வெள்ளாளருக்கு இருக்கும் அந்தோனியார் பக்கத்து ஊரில் கரையாருக்கு. புனிதர்கள் தப்பித்தார்கள். தொழில்கள் மாறி எல்லாரும் தமக்கு வசதிப்பட்ட தொழில்களைச் செய்யத்தொடங்கிய பின்னும், ஏராளமானோர் அரசாங்க வேலையும் தனியார் வியாபார நிறுவனங்களிலும் வேலை செய்யத் தொடங்கிய பின்னும், இன்னும் அந்தத் தொழில்முறைச் சாதி பலமாக உயிரோடிருப்பதற்கு மதங்கள் முக்கிய காரணம்தான். நேரடியாகச் சாதி பற்றிப் பேச முடியாமல் இப்பிடித்தான் எங்களுரில் பேசிக்கொள்வார்கள். எடுத்துக்காட்டாக வேறோரு ஊரிலிருக்கும் ஒரு கரையாரைப் பற்றிப் பேசும்போது,
“அவயள் தொம்மையப்பர் கோயில் ஆக்களெல்லோ.” எண்டு சொல்லுவினம். ஆனா அந்த ஊரில அப்பிடியொரு கோயிலே இருக்காது. எங்கட ஊர்க் கோயில வச்சே எல்லா இடத்து ஆக்களையும் குறிப்பினம்.

சொந்த ஊரிலயிருந்து 1992 இல இடம்பெயர்ந்து மானிப்பாயில வந்து இருந்தம். ஏராளமான சனம் மானிப்பாய்க்குத்தான் வந்தது. முதல் பள்ளிக்கூடங்களில எல்லாரும் கலந்து ஒண்டாத்தான் ஒரு பிரச்சினையுமில்லாம இருந்தவை. பிறகு அகதி முகாம்கள் அமைக்கப்பட்டன. பிரதானமா மூன்று முகாம்கள். இவற்றில் இரண்டு பெரிய முகாம்கள். அவற்றில் சாதி மதப்பிரச்சினையில்லாமல் எல்லாரும் ஒன்றாகவே இருந்தார்கள். அதில் தனியே ஓர் ஊரைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல் எல்லாரையும் குடியமர்த்தினார்கள். இறுதிவரை பிரச்சினையில்லாமலிருந்தது. ஆனால் மூன்றாவதாக அமைக்கப்பட்ட முகாம் தான் சிக்கலைத் தந்தது. அதில் ஆக முப்பது வரையான குடிசைகள்தான். மிகச் சிறிய முகாம். ஆனால் அவ்வளவு பேரும் ஒரே ஊர் அக்கள். அதாவது என் கிராமத்தவர்கள். அதுவும் ஓரே மதத்தவர், ஆனால் இரு சாதிக்காரர். குடிசைகள் அமைக்கும்போதே பிரச்சினை தொடங்கி விட்டது. குடிசை ஒழுங்குகளை மாற்றித் தருமாறு பிரச்சினை. என்னவென்றால் தாங்கள் எல்லாரும் ஒன்றாக இருக்கப் போவதாக இரு தரப்புமே சொன்னார்கள்.

அந்த முன்று முகாம்களுமே மானிப்பாய் அந்தோனியார் கோவில் பங்கு நிர்வாகத்தின்கீழ்தான் இருந்தன. பங்குத்தந்தை இதை ஒப்பிவில்லை. எல்லாரும் கலந்துதான் இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாயிருந்தார். ஆனால் சில ‘பெரியவர்கள்’
“சுவாமி! உங்களுக்கேன் பிரச்சின. நாளைக்கு இதுகள் தங்களுக்க ஏதும் பிரச்சினப் பட்டா அது உங்களுக்குத்தானே இடைஞ்சல். பேசாம அவயள் சொல்லிற மாதிரியே விட்டிடலாம்.”
என்று சொல்லி சம்மதிக்க வைத்தாயிற்று. குடிசை ஒழுங்குகள் மாறின. ஒரே பாதை ஒரே ஒழுங்குமுறை என்று இருந்தும் முகாம் இரண்டாகவே இயங்கியது. திடீரென இடையில் வேலி முளைத்தது. இரண்டு பாதைகள் வந்தன. முகாமுக்கு இரண்டு நிர்வாகம் வந்தது. வெறும் முப்பது குடிசைகளுக்குள் ஊரில் நடந்த அத்தை கூத்துக்களும் நடந்தன. நல்ல வேளை பெரியளவு பிரச்சினைகள் வரவில்லை. மனத்தளவில்தான் அந்தப் பிரச்சனை.

ஆனால் யாழ் இடப்பெயர்வின் பின் வன்னிவந்தபின் இந்த நிலைமைகளில் மாற்றம் வந்தது உண்மை. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் அவர்களை மாற்றிவிட்டதோ என்னவோ. இங்கே சாதிப்பிரச்சினை, வேறுபாடு முற்றாகக் களையப்பட்டதாக நான் சொல்ல வரவில்லை. யாழில் இருந்த நிலைமை நிரம்பவே மாறிவிட்டது. வன்னிக்குள்ளே கூட நிறைய இடப்பெயர்வுகள். இதிலே எதைச் சொந்தம் கொண்டாட முடியும்? அகதிகள் சம்பந்தமாக வேலை செய்தவன் என்ற முறையில் இந்த மாற்றங்களை என்னால் உறுதியாகப் பதிவு செய்ய முடியும். அகதிமுகாம்களில் பல காதல் திருமணங்கள் கூட நடந்ததுண்டு. எதிர்ப்புகள் இருந்தாலும் அதைப்பற்றிக் காதலர்கள் கவலைப்படவில்லை. தமிழீழக் காவல்துறை தான் அவர்களின் நம்பிக்கை. குடும்பம் நடத்தும் பொருளாதார பலம் இருக்கும் பட்சத்திலும் வயது சரியாக இருக்கும் பட்சத்திலும் காதல் கைகூடும். தமிழகத்திலும் இங்கேயும் காவல்துறைக்கு இது ஒரு முக்கிய பணிபோலும்.
ஒருவர் சொன்னார்:

\”உவங்கள் ஒரே சாதிக்குள்ள அல்லது மதத்துக்குள்ள காதலெண்டா ஏனோ தானோவெண்டு இருப்பாங்கள். ஆனா சாதிமதம் மாறியெண்டா விழுந்தடிச்சு தலையில தூக்கிவச்சு ஆடுவாங்கள்.”

எனக்கு இந்தக் குற்றச்சாட்டு உண்மையாகப் படவில்லை. அவர்கள் காதலை ஆதரிக்கிறார்களா வரவேற்கிறார்களா என்பதைத் தாண்டி அதை அவர்கள் சாதி மதங்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகப் பார்க்கிறார்கள் என்பது தெளிவு. பல போராளிகளின் திருமண பந்தம் இவற்றைத்தாண்டி நடந்ததால் சொந்த தாய் தந்தையரின் உறவுகூட இல்லாமல் இருப்பதும் நான் கண்டுள்ளேன். புலிகளின் திருமண முறைகூட (திருமணச் சடங்கு) இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. தவிர்க்க முடியாமல்தான் அவற்றிற் கலந்து கொள்கிறார்கள்.

மதங்களின் ஆதிக்கத்தை மக்களிடத்திற் குறைப்பது முக்கியமானது. ஆனால் புலிகளாற்கூட அதைச் சரிவர செய்யமுடியவில்லை. ‘இம்’ என முன் பிரச்சனை வந்துவிடும். (ஆனால் மாவீரரின் வித்துடல் விதைப்பு விடயத்தில் மட்டும் எந்த சமரசத்துக்கும் இடங்கொடாமல் அவர்களால் இருக்க முடிகிறது.) சாதிப்பிரச்சினையும் மதங்களோடு பின்னிப்பிணைந்திருப்பதால் அவைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது என்பது என் அவதானம்.

வன்னியில் வெளிப்படையாக சாதி பற்றிக் கதைத்தாலோ இன்னொருவரைச் சாதிப்பேர் கொண்டு திட்டினாலோ அது பிரச்சினைக்குரிய விசயம்தான். மனத்தில் என்ன இருந்தாலும் வெளிப்படையாகப் பேச முடியாது. இது எந்தளவுக்குப் பயனளிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் குழந்தைகள் சிறுவர்கள் சாதிப்பெயர்களைக் கேட்டும் அதன் வசவுகளைக் கேட்டும் வளரும் சந்தர்ப்பங்கள் குறையும். வன்னியில் இளைய சமுதாயம் எப்படியும் களத்தில் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். எல்லைப் படையாகப் போயிருக்கிறோம். பெரிய தாக்குதல் நேரங்களில் ஆயுதங்கள் கைப்பற்றல், இராணுவ உடல்களை அப்புறப்படுத்தல், காயக்காரரை அப்புறப்படுத்தல், வழங்கல்களைச் செய்தல், உணவுப்பொதிகளை வினியோகித்தல் என நிறையக் களப்பணிகளைச் செய்திருக்கிறோம். இரத்ததானம் நிறைய. இவற்றிலெல்லாம் இளைய சமுதாயத்திடம் வழமையைவிடப் புரிந்துணர்வொன்று அதிகமாய் ஏற்பட்டிருந்தது, குறிப்பாக எல்லைப் படையாகக் கடமைக்குச் செல்லும்போது. நண்பர்கள் வட்டமென்பது மிகமிக விசாலமானது. சாதியைக் கருத்திற்கொள்ளாதது. யாழ்ப்பாணத்தில் இன்றும்கூட நண்பர்கள் வட்டம் சாதியைக் கருத்திற்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

எம்மக்கள் மத்தியில் மதவேறுபாட்டைப் பிரச்சினையாகக் கொள்வதிலும்விட சாதிவேறுபாட்டைப் பிரச்சனையாய்க் கொள்வது சற்று அதிகம்போல் நான் உணர்கிறேன். ஆனால் காலப்போக்கில் இந்தப்பிரச்சனை ஒழியலாம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. என் நம்பிக்கை வன்னிதான். அங்கு ஓரளவுக்கு எல்லாருக்கும் சமமான சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதைக் காணலாம். ஏதோ தம்மாலியன்றவரை புலிகள் சமூகக் கட்டமைப்பைப் பேணுகிறார்கள். முன்பு வன்னியில் பிச்சையெடுக்கும் சிறுவர் சிறுமிகளைக் கண்டிருப்பீர்கள். அது ஒரு கட்டத்தில் பெருகத்தொடங்கியது. ஆனால் இன்று அறவே அந்த நிலையில்லையென்பதை உறுதியாக் கூறுவேன். ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிட்டு நான் வன்னிபற்றிப் பெருமைப்படும் விசயங்களில் இதுவுமொன்று.

அத்தோடு அனைத்துத் தொழில்களுக்கும் இயன்றவரை உரிய அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். சீவல் தொழில் செய்பவர்களுக்கு சங்கம் அமைக்கப் பட்டுள்ளது. அவர்களின் வருமானம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 55 வயதுக்கு மேல் ஒரு சீவல் தொழிலாளிக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தொழிலின்போதான இறப்புக்கு அக்குடும்பத்துக்கு நட்ட ஈடு வழங்கப்படுகிறது. தனிப்பட யாருக்கும் கள் விற்க முடியாது. அது சட்ட விரோதமானது.

இதேபோலவே சிகை அலங்கரிப்புத் தொழிலும். (இந்தப் பெயரில்தான் அவர்கள் இயங்குகிறார்கள்). தனிப்பட யாருக்கும் அவர்களின் வீட்டிற்குப் போய் முடி வெட்ட முடியாது. எந்தக் கொம்பனென்றாலும் சிகை அலங்கரிப்பு நிலையத்துக்குத்தான் (சலூனுக்கு) வந்து வெட்ட வேண்டும். சரியான மருத்துவக் காரணங்களின்றி யாரும் வீட்டிற்குச் சென்று முடிவெட்ட முடியாது. இவை ஓரளவுக்கு ஆண்டான் அடிமை மனோபாவத்தை அல்லது முறையை ஒழிக்கும்.

இன்னும் அவர்கள் செய்ய வேண்டியவை நிறைய. ஆனால் அவர்களால் செய்ய முடியாதவை என்றும் நிறைய உண்டு. எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்தில் ‘மணக்கொடைத் தடைச் சட்டம்’ என்ற பெயரில் தமது நீதித்துறையில் சீதனத் தடைச் சட்டத்தையே கொண்டுவந்தார்கள். அச்சட்டத்தின் கீழ் சில வழக்குகளும் நடந்ததாக அறிகிறேன். இச்சட்டம் பற்றி எங்கள் தமிழர்கள் எந்தவித பிரதிபலிப்பையும் காட்டவில்லை. (அன்ரன் பாலசிங்கம் இச்சட்டத்தை ஆதரித்து எழுதி, பின் அவரே வேறொரு பேரில் விமர்சித்து எழுதி மீண்டும் அதற்கு தன் பெயரில் விளக்கம் கொடுத்து கொஞ்சக்காலம் மினக்கிட்டார். ஆனால் ஒருத்தரும் அந்த விவாதத்தில கலந்துகொள்ளேல.) ஆதரவுமில்லை எதிர்ப்புமில்லை. யாழ் இடப்பெயர்வுடன் வன்னிக்கு வந்த நேரத்தில் புலிகளின் நிர்வாகத் தழம்பல்களுக்கிடையில் இச்சட்டம் செயலிழந்துவிட்டது. இன்றும் செயலிழந்த ஒரு சட்டமாகத்தான் அது இருக்கிறது. இவ்விசயத்தில் அவசரப்பட்டார்களோ என்று தோன்றுகிறது.

இப்போது போர் ஓய்ந்துவிட்ட இந்த நேரத்தில் வன்னியில் மீண்டும் பழய பிரச்சினைகள் தலை தூக்கலாம். அவை எப்படிக் கையாளப்படுகின்றனவோ தெரியவில்லை. நானிருக்கும்வரை பெரிதாக எந்த மாற்றமுமில்லை. சுனாமியின்பின் நிலைமை எப்படியிருக்கிறதென்றும் தெரியவில்லை.

என்பதிவில் யாழ்ப்பாணத்தைத் தாக்கியெழுதியதாக ஒரு பார்வை தென்படலாம். அப்படியன்று. என் அனுபவங்களும் பார்வைகளும்தான் அவை. சில விசயங்கள் எனக்குத் தீராத ஆத்திரத்தை வரவழைப்பவை. சென்ற வருடம் யாழ் போனபோது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி (என்னைப் புலியாக அல்லது வால்பிடியாக நினைத்து, – வன்னியிலிருந்தவனையெல்லாம் அப்பிடித்தான் பார்ப்பார்களோ தெரியாது.)

“டேய் நீதானே அவங்களோட திரிஞ்சனி. உனக்குத் தெரிஞ்சிருக்கும். பொடியளில கரையாரோ வெள்ளாளரோ கூட இருக்கினம்?”
இது. இதுதான் நான் கண்ட யாழ்ப்பாணம். இந்த ஒரு சம்பவத்தை வைத்து நான் யாழ்ப்பாணத்தை எடை போடுவது தவறுதான். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

குறிப்பு: சாதி பற்றிய விடயங்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் பொதுவாக இருந்தாலும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இன்னும் ஈழத்தில் அரசுமுறை அங்கீகாரம் சாதிக்குக் கிடைக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் விரும்பியோ விரும்பாமலோ ஒருவன் தன்னைச் சாதிரீதியில் வெளிப்படுத்தியே ஆகவேண்டும்.
‘தலித்’ என்ற சொல் நான் தமிழகம் சம்பந்தப்பட்டு மட்டுமே கேள்விப்பட்டுள்ளேன். ஈழத்தில் இச்சொற்பாவனை நானறியவில்லை. ஆனால் சிறிரங்கன் பாவிப்பதைப் பார்த்தால் அங்கேயும் இச்சொல் பாவனையிலிருந்திருக்கிறது போலுள்ளது. தெரிந்தவர்கள் சொல்லவும்.

posted by வசந்தன்(Vasanthan http://vasanthanin.blogspot.com/2005/05/blog-post_111495289506576505.html[/quote]

கோயில்களைவைத்து சாதிபிரிப்பதை இப்பொழுதுதான் நான் கேள்விப்படுகிறேன், எமது ஊரில் தொழிலை வைத்துதான் சாதிபிரித்திருந்தார்கள். இது காலம்காலமாக புரையோடிப்போய் இருக்கும் பிரச்சனை, வெளிப்படையாக சாதி அழியவேண்டும் என்று நினைக்கும் நாங்கள் என்ன செய்கிண்றோம், சமுதாயத்துக்கும், இனசனத்துக்கும் பயந்துகொண்டு உள்ளுக்குள் ஊமைகளாகத்தானே இருக்கிறோம். வருங்காலத்தில் பிள்ளைகள் வாழ்வு பாதிக்கும் என்று வேறுபயம். அதைப்பற்றி வெளிப்படையாக கதைப்பதற்க்குகூட பின் நிற்கிறோம்.
preethi
Sep 17 2005, 01:24 AM
[size=13]களவிதிகளுக்கமைய கருத்து முற்றாக நீக்கப்பட்டுள்ளது.-இராவணன்
kurukaalapoovan
Sep 18 2005, 08:50 AM
அய்யோ அய்யய்யோ இராவாணா இது தகுமோ?? முறையோ??

மாகாகவி பாரதியின் கருத்துக்கள் உங்கள் களவிதிகளுக்கமையவில்லையா? அப்படியானால் உங்களிற்கு களவைத்திருக்க அருகதையே இல்லை!
narathar
Sep 18 2005, 10:04 AM
[quote=preethi][size=13]களவிதிகளுக்கமைய கருத்து முற்றாக நீக்கப்பட்டுள்ளது.-இராவணன்

என்ன கள விதிக்கமய கருத்து நீக்கப்பட்டது என்பதுவும் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதுவும் ஒரு கள விதி அல்லவா?தென்னாட்டுத் தமிழ் மறவரே திருவாய் மலர்ந்தருளுவீர். laugh.gif
Birundan
Sep 18 2005, 12:12 PM
[quote=preethi][size=13]களவிதிகளுக்கமைய கருத்து முற்றாக நீக்கப்பட்டுள்ளது.-இராவணன்

பாரதிக்கே வெட்டா?
இராவணனா கொக்கா, நெற்றிக்கண்னைத்திறப்பினும் குற்றம் குற்றமே,
தனிமனித துவேஷத்தை ஒழிப்போம் சமுதாயத்துக்கு பயன் தரும் நல்ல கருத்துக்களை இங்கு விதைப்போம்.

இராவணண் அண்ணாவிடம் ஒரு கேள்வி? பிரீதி கூறியது போல் நடந்திருந்தால், அதற்கு என்ன பதில் என்று களவிதிகளில் கூறவில்லையே?
Thala
Sep 18 2005, 02:16 PM

அகிலனின் லோககுரு கோவிலில் நுழைய தடா !

அவாளை இவாள் ஒப்புக் கொண்டாலும் இவாளை ஒரு இடத்தில் ஒப்புக் கொள்ளவில்லை. உள்ளே நுழைய விடவேயில்லை. எங்கே? மலையாளத்திலுள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில்!

மேல பிரீதி களவிதிக்கமைவாயாகவா [b]அகிலனின் லோககுரு என்று தலையங்கம் வைதார்… ?
:
preethi
Sep 18 2005, 04:59 PM
ஈழத் தமிழ் உடன்பிறப்புக்களே சிந்தியுங்கள். தமிழ்நாட்டின் ஆலயங்கள் எல்லாம் வெறும் சமய வழிபாட்டுத் தலங்களல்ல, பண்டைத் தமிழரின் கலை, கட்டிட, விஞ்ஞான், தொழில்நுட்பத் திறன்களை உலகுக்கு எடுத்துக் காட்டும் உலகத் தமிழரின் சொத்துக்கள்.

அவையெல்லாம் தமிழை எதிர்க்கும் பிராமணரின் கைகளில் இன்று. அவர்கள் தமிழைக் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது விட்டாலும் கூட, இதை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு சில இந்தியத் தமிழ்ச் சகோதரர்களுக்கு எம் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். ஈழத்தில் அவர்களுக்கு முன்னோட்டியாக தமிழுக்கு ஆலயங்களில் முதலிடம் கொடுக்க வேண்டும், உண்மையாக, ஏன் தமிழைப் பாவிக்கக் கூடாது, இன்னும் பிராமணர்களால், சமஸ்கிருதத்தில் தான் பூசை பண்ண வேண்டுமென்பதற்கு சைவ சித்தாந்தத்தில் ஒரு காரணமுமில்லை. சமஸ்கிருதத்தை மட்டும் பாவிக்க வேண்டுமென்பது பிராமணர்களின் சதி. இதன்மூலம் இந்தத் தொழிலில் தங்களுடைய monopolyயை வைத்திருப்பதற்காக.

நானும் உங்களைப் போல் பிராமணரின் தமிழ் எதிர்ப்பை அறியாமல் தானிருந்தேன்.திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஓரு தமிழ்நாட்டுக் கோயிலில் தமிழ்த் தேவாரத்தைக் கோயிலுக்குள் பாட பிராமணர்கள் எதிர்த்ததை நேரில் பார்த்த அன்று தான் பிராமணர்களை அவதானிக்கத் தொடங்கினேன். நான் ஒரு சைவப்பழமல்ல. இன்னும் முப்பது வயதைத் தாண்டவில்லை.

என்னுடைய அனுபவத்தில் ஈழத்துப் பிராமணரும் தமிழை எதிர்ப்பதில் சளைத்தவர்களல்ல ஆனால் அதை வெளிக் காட்டுவதில்லை. நீங்கள் நான் சொல்வதை நம்பாது விட்டால், நீங்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள கோயில்களில் போய்த் தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்லுங்கள். அவர்கள் முகம் சுழிப்பதைப் பார்க்கலாம்.

எங்கள் தமிழ் முன்னோர்கள் எங்களுக்காக விட்டுச் சென்ற தமிழ்நாட்டுக் கோயில்களை ANTI TAMIL பார்ப்பான்களின் பிடியிலிருந்து விடுவிக்க முயற்சிக்கும் இந்தியத் தமிழ்ச்சகோதரர்களுக்கு நாம் எமது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும், குறைந்தது இணையத்தளங்களிலாவது உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள். தமிழ் மன்னர்களால், தமிழர்களால் இரத்தமும், வியர்வையும் சிந்தப்பட்டுக் கட்டப்பட்ட தமிழரின் ஆலயங்களில் தமிழுக்கு உரிய இடமளிக்கப் பட்டு தமிழ் மீண்டும் கோலோச்ச வேண்டும்.
Thala
Sep 18 2005, 05:52 PM
தமிழன் மண்ணில இருக்கிற மாதிரித்தானே இந்தியா பூராவும் கோயில்கள் இருக்கு… எல்லா இடத்திலயும் ஆகமங்கள் ஒண்டுதான்… தமிழர் தான் காமசூத்திரா சிற்பங்களை வடிவமைத்து இந்தியா பூரா சப்ளை பண்ணினவை கோயிலும் கட்டிக் குடுத்தது தமிழன் தான் எண்டு பிரீதி சொல்லுறா… நாங்க ஆமாப் போடுவம்.
அனிதா
Sep 18 2005, 06:01 PM
[quote=Thala]தமிழன் மண்ணில இருக்கிற மாதிரித்தானே இந்தியா பூராவும் கோயில்கள் இருக்கு… எல்லா இடத்திலயும் ஆகமங்கள் ஒண்டுதான்… தமிழர் தான் காமசூத்திரா சிற்பங்களை வடிவமைத்து இந்தியா பூரா சப்ளை பண்ணினவை கோயிலும் கட்டிக் குடுத்தது தமிழன் தான் எண்டு பிரீதி சொல்லுறா… நாங்க ஆமாப் போடுவம்

kurukaalapoovan
Sep 18 2005, 06:07 PM
எல்லாரும் ஒருக்கா பிரீத்திக்கு ஒரு பெரிய ஓ போடுங்கோ.
அகிலன்
Sep 18 2005, 06:07 PM
சகோதரம்! சகோதரனுக்காக ஆமா போடுறீங்க போல…
அனிதா
Sep 18 2005, 06:14 PM
[quote=அகிலன்]சகோதரம்! சகோதரனுக்காக ஆமா போடுறீங்க போல…

இந்த பக்கத்தில் எனக்கு ஒண்டும் விளங்கயில்லை… சகோதரம் ஆமா போடச்சொன்னார் நானும் ஆமா போட்டுட்டன்…
preethi
Sep 18 2005, 06:46 PM
[quote=Thala]தமிழன் மண்ணில இருக்கிற மாதிரித்தானே இந்தியா பூராவும் கோயில்கள் இருக்கு… எல்லா இடத்திலயும் ஆகமங்கள் ஒண்டுதான்… தமிழர் தான் காமசூத்திரா சிற்பங்களை வடிவமைத்து இந்தியா பூரா சப்ளை பண்ணினவை கோயிலும் கட்டிக் குடுத்தது தமிழன் தான் எண்டு பிரீதி சொல்லுறா[/b]… நாங்க ஆமாப் போடுவம்

தலா, ஒரு திராவிடக் கட்டக் கலையைப் பற்றிக் கொஞ்சம் கூடத் தெரியாத பார்ப்பான் அல்லது பார்ப்பனர்களால் மூளைச்சலவை செய்யப் பட்டவர். தமிழரின் திராவிடக் கட்டக் கலை வேறு, வட இந்தியக் கட்டக் கலை வேறு, நான் தென்னிந்தியக் கோயிலகளுக்கு மட்டுமல்ல, வட இந்தியக் கோயில்களையும் பார்த்திருக்கிறேன்.காமசூத்திரச் சிற்பங்கள் உள்ள கஜிராகோ(Khajuraho) திராவிடக் கட்டிடக் கலையில், தமிழர்களால் கட்டப்பட்டதல்ல. தெரியாத ஒரு விடயத்தைக் கதைப்பது ஆபத்தானது, தலா சொல்வது போல் தமிழ்நாட்டிலுள்ள திராவிடக் கட்டிடக் கலையில் இந்தியாவிலுள்ள எல்லாக் கோயில்களுமில்லை.

[b]ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர்ப் பெரிய கோயில் தான் இந்தியாவிலேயே முழுவதும் கருங்கல்லால் கட்டப் பெற்ற கோயில். The GREAT PYRAMID OF GIZA வுக்கு அடுத்ததாக, 1600 வரை தஞ்சைப் பெரிய கோயில் தான் உலகத்திலேயே உயரமான கட்டிடமாக இருந்தது. ஜேர்மனியின் உலகத்திலே உயரமான உல்ம் (Ulm) தேவாலயம், தஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்பு வெறும் மரத்தால் கட்டப்பட்டது.

தமிழர்களின் கருங்கல் சிற்பக்கலையின் பெருமை தலாவைத் தவிர உலகறியும். ஆகமங்கள் தமிழில் முதலில் இருந்து பிராமணர்களால் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டதை, தேவநேயப்பாவாணர் தெளிவாக விளக்கியுள்ளார்.

தமிழ்நாட்டின் எல்லா ஆலயங்களும் ஆகம முறைப்படி கட்டப்பட்டவையல்ல, உதாரணமாக சோழர்களாலும், பல்லவர்களாலும், மலைகளையும், குன்றுகளையும் குடைந்து கட்டப் பட்ட குடவரைக் கோயில்கள்.

இது தான் KAHAJURAHO விலுள்ள காமசூத்திரக் கோயில், இதைப் பார்த்தால், திராவிடக் கட்டிடக் கலையில் கட்டப்பட்ட தமிழ்நாட்டுக் கோயில்கள் போலவா இருக்கிறது, ஒன்று மட்டும் தெரிகிறது உமக்குத் தமிழ்நாட்டுக் கட்டிடக் கலையும் தெரியாது, வட நாட்டுக் கட்டிடக் கலையும் தெரியாது,
Thala
Sep 18 2005, 07:04 PM
பிரீதி உங்கட சோழர்காலம் பாண்டியன் காலம் என்பது தமிழன் சமணமதத்தை தழுவிய காலமும் சேர்த்து என்பது தெரியுமா அவர்களிடம் நிரந்தர மதம் இருந்ததில்லை .. இந்தக் கோயில்களில எந்த ஆண்பொண் உறவை சித்தரிக்கிறது … வடக்கத்தியக் கோயிலின் கலையை தழுவியதாய் தமிழர் கோயில்கள் இல்லை எண்டு நீர் சொல்லுறதைப் பாத்து சிரிக்கிறதா அழுகிறதா.. laugh.gif laugh.gif

யாழ்ப்பாணத்தமிழனும் மட்டு அம்பாறைத்தமிழனும் ஒரேமாதிரியா தமிழ் பேசுகின்றார்கள்… அப்ப அவர்களில் ஒருபகுதி தமிழன் இல்லை என்பது போலிருக்கிறது உம்முடைய தனிநபர் தாக்குதல்…

தமிழந்தான் கட்டக்கலையில முதலில் சிறந்து விளங்கினான் எண்டு வெளீல சொல்லதையும் முகாலயர்கள் கேட்டா விளுந்து விளுந்து சிரிப்பாங்கள்… laugh.gif laugh.gif

அதோட அறிவுகுறைந்தவனுக்கு விளங்கப்படுத்தலாம் அடி முட்டாளுக்கு.????? ஒண்டும் செய்யேலது..
kurukaalapoovan
Sep 18 2005, 07:19 PM
அடி முட்டாள் என்று தெரிஞ்சாப்பிறகும் அவருக்கு மறுமொழி எழுதுறுவை என்னெண்டு சொல்லலாம் தலா?
Sep 18 2005, 07:33 PM
.[quote]வடக்கத்தியக் கோயிலின் கலையை தழுவியதாய் தமிழர் கோயில்கள் இல்லை எண்டு நீர் சொல்லுறதைப் பாத்து சிரிக்கிறதா அழுகிறதா.. [/quote]

நீர் நன்றாகவே அழும். தலா ஒரு பார்ப்பான் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் அவர்களின் கருத்து தமிழில் ஒன்றும் கிடையாது, எல்லாம் வட மொழியிலிருந்தும், வடநாட்டிலிருந்து வந்தது என்பது தான்.

ஏன் தமிழர் கோயில்களைத் தழுவியதாய் தான் வடக்கத்தியக் கோயில்கள் உள்ளன என்று சொல்லக் கூடாது. அது தான் உண்மையும் கூட. இன்றும் பெருங்கோயில்களுள்ள மாநிலம் தமிழ்நாடு தான். அதனால் தான் தமிழ்நாடு அரசின் சின்னம் கூட கோபுரம்.

தமிழ்நாட்டுக் கோயில்களுடன் ஒப்பிடும் போது வட இந்தியக் கோயில்கள் சிறியவை மட்டுமல்ல, தொன்மை குறைந்தவை. அதை விடக் கோயிலகள் ஒரே மாதிரிக் காட்சியளித்தாலும், திராவிடக் கட்டிடக் கலைக்கும், வட நாட்டுக் கட்டிடிடக் கலைக்கும் பல வேறுபாடுகள் உண்டு.

வட நாட்டுக் கட்டிடக் கலையில் கோபுரச் சிலைகளும், அமைப்பும், அலங்காரமும் முழுவதும் வேறுபட்டவை.

தூண்களின் அமைப்பும், வேலைப்பாடும் வித்தியாசமானவை

வடக்கத்தைக் கோயில்களின் மண்டபங்கள் மிகவும் நெருங்கியவையும், ஒடுங்கியவையும், உயரம் குறைந்தவை.

தமிழ்நாட்டுக் கோயிலக்ளுடன் ஒப்பிடும் போது, வட நாட்டுக் கோயில்கள் மிகவும் சிறியவை, செங்கல்லால் அல்லது red sandstones ஆல் கட்டப்பட்டவை. தமிழர்களைப் போல் உலகிலேயே hardest stone கருங்கல்லை எப்படிக் QUARY பண்ணிவதென்றோ அல்லது 1000 வருடங்களுக்கு முன்பு எப்படி soft iron ஆயுதங்களைக் கொண்டு வெட்டுவதென்றோ அவர்களுக்குத் தெரியவில்லை.

இதை நான் சொல்லவில்லை, கனேடியன் TV யில் தஞ்சாவூர்ப் பெரிய கோயிலையும், ராஜராஜ சோழனையும், திராவிடக் கட்டிடக் கலையையும் பற்றிய நிகழ்ச்சியில் கூறினார்கள்.
preethi
Sep 18 2005, 07:43 PM
தலா ஒரு அடி முட்டாள் மட்டுமல்ல விதண்டாவாதிக்காரன், ஒரு உண்மையான தமிழன் உண்மையை அறிய முயல்வானே தவிர தமிழரைக் கீழே தள்ள மாட்டான்.

அடிமுட்டாள் தலா, 500 வருடங்களான தாஜ்மஹாலை 1000 வருடங்களுக்கு முந்திய தஞ்சைப் பெரிய கோயிலுடன் ஒப்பிட்டு முகலாயரைப் பற்றி உயர்த்திக் கதைக்கிறார். தாஜ்மஹால் கருங்கல்லால் கட்டப் பெற்றதல்ல. புராதன் முறையில் கட்டப் பட்டதல்ல தாஜ்மஹால். தாஜ்மஹாலின் வளைவுகள் இந்தியாவுக்குச் சொந்தமான கட்டிடக் கலையல்ல அது ஐரோப்பியருடைய கட்டிடக் கலை. ஒரு இத்தாலியக் கட்டடிடக் கலஞர் சாஜஹானுக்கு அறிவுரை கொடுத்தார். தெரியாததைப் புலம்புவது ஆபத்து. laugh.gif
kurukaalapoovan
Sep 18 2005, 07:50 PM
முகாலயர் பின்னணி Persia(Land of Aryans) தற்பொழுது ஈரான் என்று அழைக்கப்படும் இடம் அல்லவோ.

Persians தான் பாரசீரர்கள் என அழைப்பார்களா தமிழில்?
narathar
Sep 18 2005, 07:52 PM
சரியப்பா அப்ப இப்படிப் பெரிய கோவில் எல்லாம் கட்டின தமிழ் நாட்டுத் தமிழர் இப்பா யாற்றயோ காலில அல்லோ கிடக்கினம்.பழம் பெருமை பேசி இப்ப என்ன பயன்?
preethi
Sep 18 2005, 07:55 PM
[quote]யாழ்ப்பாணத்தமிழனும் மட்டு அம்பாறைத்தமிழனும் ஒரேமாதிரியா தமிழ் பேசுகின்றார்கள்… அப்ப அவர்களில் ஒருபகுதி தமிழன் இல்லை என்பது போலிருக்கிறது உம்முடைய தனிநபர் தாக்குதல்… [/quote]

[b]Oh my god, தலா இந்தளவு அடிமுட்டாள் என்று நான் நினக்கவேயில்லை. இப்படியென்றால் தலாவின் கருத்து தமிழர்களும், வடநாட்டார், அதாவது வட இந்தியரும் ஒன்றென்பதா? நான் தமிழரின் திராவிடக் கட்டிடக் கலை வட இந்தியாவின் கட்டிடக் கலையிலிருந்து வேறு பட்டதென்று சொல்ல, யாழ்ப்பாணத் தமிழனையும், மட்டு, அம்பாறைத் தமிழனையும் உவமானம் காட்டும் இந்தத் “தமிழனை” நி
kurukaalapoovan
Sep 18 2005, 08:00 PM
பழம் பெருமை பேசி பேசி ஈழத்து பிராமணர் வயித்தில அடிக்கப்போறம். அடிக்கிற அடியில இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில மாற்றம் கொண்டுவரப்போறம்.

இது விளங்காதவை பார்பனர்ராக இருப்பார்கள், அல்லது அவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவராக இருப்பினம் அல்லது பிராமண பெண்களின் தேல்நிறத்தில் மயங்கியவராக இருப்பினம். இதிலை நீங்கள் எங்கை நிக்கிறயள் நாரதா?
Thala
Sep 18 2005, 08:09 PM
[quote=preethi][quote]யாழ்ப்பாணத்தமிழனும் மட்டு அம்பாறைத்தமிழனும் ஒரேமாதிரியா தமிழ் பேசுகின்றார்கள்… அப்ப அவர்களில் ஒருபகுதி தமிழன் இல்லை என்பது போலிருக்கிறது உம்முடைய தனிநபர் தாக்குதல்… [/quote]

[b]Oh my god, தலா இந்தளவு அடிமுட்டாள் என்று நான் நினக்கவேயில்லை. இப்படியென்றால் தலாவின் கருத்து தமிழர்களும், வடநாட்டார், அதாவது வட இந்தியரும் ஒன்றென்பதா? நான் தமிழரின் திராவிடக் கட்டிடக் கலை வட இந்தியாவின் கட்டிடக் கலையிலிருந்து வேறு பட்டதென்று சொல்ல, யாழ்ப்பாணத் தமிழனையும், மட்டு, அம்பாறைத் தமிழனையும் உவமானம் காட்டும் இந்தத் “தமிழனை” நி

ஓ அப்ப சிந்து வெளியில(ஹரப்பா, மெஹஞ்சதரோ)
தமிழ்ழின் தாய் மொழி எழு எழுத்துக்கள் அடங்கிய (5000 வருசம் முற்பட்டது) ஆராட்சியாளர் கண்டெடுத்தது எடுத்தது இன்னும் உமக்கு தெரியாதா???? tongue.gif
அந்தோ பாவம் போய் தமிழ் வரலாறு படியும் மேதாவிதனத்தை விடும்…
Thala
Sep 18 2005, 08:10 PM
[quote=kurukaalapoovan]பழம் பெருமை பேசி பேசி ஈழத்து பிராமணர் வயித்தில அடிக்கப்போறம். அடிக்கிற அடியில இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில மாற்றம் கொண்டுவரப்போறம்.

இது விளங்காதவை பார்பனர்ராக இருப்பார்கள், அல்லது அவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவராக இருப்பினம் அல்லது பிராமண பெண்களின் தேல்நிறத்தில் மயங்கியவராக இருப்பினம். இதிலை நீங்கள் எங்கை நிக்கிறயள் நாரதா?[/quote]

நாரதர் எப்பிடியோ.! இங்க ஒண்டு பாப்பாத்தீட்ட செருப்பால வாங்கீருக்கு tongue.gif tongue.gif
Thala
Sep 18 2005, 08:25 PM
[quote=preethi].[quote]வடக்கத்தியக் கோயிலின் கலையை தழுவியதாய் தமிழர் கோயில்கள் இல்லை எண்டு நீர் சொல்லுறதைப் பாத்து சிரிக்கிறதா அழுகிறதா.. [/quote]

நீர் நன்றாகவே அழும். தலா ஒரு பார்ப்பான் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் அவர்களின் கருத்து தமிழில் ஒன்றும் கிடையாது, எல்லாம் வட மொழியிலிருந்தும், வடநாட்டிலிருந்து வந்தது என்பது தான்.

ஏன் தமிழர் கோயில்களைத் தழுவியதாய் தான் வடக்கத்தியக் கோயில்கள் உள்ளன என்று சொல்லக் கூடாது. அது தான் உண்மையும் கூட. இன்றும் பெருங்கோயில்களுள்ள மாநிலம் தமிழ்நாடு தான். அதனால் தான் தமிழ்நாடு அரசின் சின்னம் கூட கோபுரம்.

தமிழ்நாட்டுக் கோயில்களுடன் ஒப்பிடும் போது வட இந்தியக் கோயில்கள் சிறியவை மட்டுமல்ல, தொன்மை குறைந்தவை. அதை விடக் கோயிலகள் ஒரே மாதிரிக் காட்சியளித்தாலும், திராவிடக் கட்டிடக் கலைக்கும், வட நாட்டுக் கட்டிடிடக் கலைக்கும் பல வேறுபாடுகள் உண்டு.

வட நாட்டுக் கட்டிடக் கலையில் கோபுரச் சிலைகளும், அமைப்பும், அலங்காரமும் முழுவதும் வேறுபட்டவை.

தூண்களின் அமைப்பும், வேலைப்பாடும் வித்தியாசமானவை

வடக்கத்தைக் கோயில்களின் மண்டபங்கள் மிகவும் நெருங்கியவையும், ஒடுங்கியவையும், உயரம் குறைந்தவை.

தமிழ்நாட்டுக் கோயிலக்ளுடன் ஒப்பிடும் போது, வட நாட்டுக் கோயில்கள் மிகவும் சிறியவை, செங்கல்லால் அல்லது red sandstones ஆல் கட்டப்பட்டவை. தமிழர்களைப் போல் உலகிலேயே hardest stone கருங்கல்லை எப்படிக் QUARY பண்ணிவதென்றோ அல்லது 1000 வருடங்களுக்கு முன்பு எப்படி soft iron ஆயுதங்களைக் கொண்டு வெட்டுவதென்றோ அவர்களுக்குத் தெரியவில்லை.

இதை நான் சொல்லவில்லை, கனேடியன் TV யில் தஞ்சாவூர்ப் பெரிய கோயிலையும், ராஜராஜ சோழனையும், திராவிடக் கட்டிடக் கலையையும் பற்றிய நிகழ்ச்சியில் கூறினார்கள்.

ஆகா கதை சுப்பர் எந்தப் படத்திலீங்க இந்த வசனம்??? 🙄 🙄
Thala
Sep 18 2005, 08:30 PM
[quote=preethi]தலா ஒரு அடி முட்டாள் மட்டுமல்ல விதண்டாவாதிக்காரன், ஒரு உண்மையான தமிழன் உண்மையை அறிய முயல்வானே தவிர தமிழரைக் கீழே தள்ள மாட்டான்.

அடிமுட்டாள் தலா, 500 வருடங்களான தாஜ்மஹாலை 1000 வருடங்களுக்கு முந்திய தஞ்சைப் பெரிய கோயிலுடன் ஒப்பிட்டு முகலாயரைப் பற்றி உயர்த்திக் கதைக்கிறார். தாஜ்மஹால் கருங்கல்லால் கட்டப் பெற்றதல்ல. புராதன் முறையில் கட்டப் பட்டதல்ல தாஜ்மஹால். தாஜ்மஹாலின் வளைவுகள் இந்தியாவுக்குச் சொந்தமான கட்டிடக் கலையல்ல அது ஐரோப்பியருடைய கட்டிடக் கலை. ஒரு இத்தாலியக் கட்டடிடக் கலஞர் சாஜஹானுக்கு அறிவுரை கொடுத்தார். தெரியாததைப் புலம்புவது ஆபத்து.

இத்தாலிய அதை அவர் உம்மட்ட சொல்லீட்டாரா??

தஞ்சை பெரிய கோயில்கட்டி 1000 வருசமாட்டுது எண்டு TVல சொன்னவையே அப்ப அது உண்மையாதான் இருக்கும்…

ஓ அப்ப உமக்கு தாஹ்மஹால் மட்டும்தான் தெரியுமா ???அப்ப எகிப்திய பிரமிட்டுக்கள்… ஆலெக்ஸ்சாண்டிரியா எல்லாம் எங்கட தமிழன் தான் கட்டினவையே???? பபிலோன் தொங்கு தோட்டம் கூட அப்பிடியா???

உம்மட கதையைப் பாத்தா இந்து சமயம் குமரிக்கண்டத்தில இருந்து தான் இமயம் போனது போலகிடக்கு…. வரலாற்று ஆசிரியர்கள் செத்தினம்.. எங்கயன படிச்சனீர்….
kurukaalapoovan
Sep 18 2005, 08:48 PM
தலா சும் விதண்டவாதம் பண்ணாதையும். பிரீத்தி சொன்னால் மெத்தச்சரியா இருக்கும். எல்லாமே நாங்கள் திராவிடர்தான் கட்டின்னாங்கள் கண்டு பிடிச்சனாங்கள். இடையிக்கை பார்ப்பனர் கொஞ்சப்பேர் வந்து கெடுத்துப்போட்டினம். இல்லாட்டி இப்ப செவ்வாகிரகத்தில காவடி எடுத்து திருவிளாக் கொண்டாடிக்கொண்டிருப்பம்.

புரட்டாதிச்சனிக்கு சுட்டி கொழுத்த சனி மண்டலத்துக் புட்பக விமானத்தில கொண்டு போயிருப்பம். எல்லாத்தையும் கடவுளின்ரை அவதாரம் இராமர் கெடுத்துப்போட்டார்.
Thala
Sep 18 2005, 08:56 PM
[quote=kurukaalapoovan]தலா சும் விதண்டவாதம் பண்ணாதையும். பிரீத்தி சொன்னால் மெத்தச்சரியா இருக்கும். எல்லாமே நாங்கள் திராவிடர்தான் கட்டின்னாங்கள் கண்டு பிடிச்சனாங்கள். இடையிக்கை பார்ப்பனர் கொஞ்சப்பேர் வந்து கெடுத்துப்போட்டினம். இல்லாட்டி இப்ப செவ்வாகிரகத்தில காவடி எடுத்து திருவிளாக் கொண்டாடிக்கொண்டிருப்பம்.[/quote]

அலகு குத்தி, முடிவெட்டி, பூச்சட்டி தீமிதிப்பு எல்லாம் விட்டுட்டியள்..

கடவுள் அவதார புருசர்கள் சாயிபபா ஆசிரமம்.. பிரேமானந்தாக்கு ஒண்டு.. விஜயக் காந்துக்கு நூறடீல கட்டவுட்.. எல்லாம் கருங்கல்லில கட்டி இருக்கலாம்..

ம்ம்..அந்தக்காலதிலயே நாங்கள் பிளேனில போய் வடக்கத்திய ஆரியை சீதையை (அது ஒராளுக்கு மட்டும் பாப்பாத்தி) பிளேனில கடத்தினாங்கள்.. மற்றது எல்லாம் தூசு.. tongue.gif
sinnakuddy
Sep 18 2005, 08:58 PM
http://www.tamilnation.org/culture/archite…ture/temple.htm http://www.templenet.com/arch.html
sinnakuddy
Sep 18 2005, 08:58 PM
http://www.tamilnation.org/culture/archite…ture/temple.htm http://www.templenet.com/arch.html
narathar
Sep 18 2005, 09:01 PM
என்னெண்டா அங்கேயும் சைவம் தழைத்தோங்கினது,என்னெண்ட இந்த செய்வாய் தோசமும் ஒரு பார்ப்பனச் சதி பாருங்கோ.ப்ரீத்தி உம்ம யாரோ நல்லா உசுப்பேத்தி விட்டிருக்கவேணும் இல்லாட்டி நீரா நல்லா யாரிட்டயோ எமாந்து போனீர். நீர் சொல்லுறது விடயம் சரி ஆனா உதுக்க தமிழர் வெட்டி விளித்திச்சினம் எண்டுறது தான் பிழை.உந்தப் பெரிய கோவில பல பேரின் உழைப் பால கட்டிப் போட்டு கடசியில கட்டினவைக்கோ இல்லாட்டி இந்த அரசருக்கோ கருவறைக்க போகேலுமே?பெரிய கோவிலக் கட்டி என்ன பிரியோசனம்?அங்க வாழ்ந்த மக்கள் அடிமைகளாகத் தானே இருந்திச்சினம்,இப்பவும் இருக்கினம்.
kurukaalapoovan
Sep 18 2005, 09:01 PM
சின்னகுட்டி என்ன செல்லவாறியள் என்டு கொஞ்சம் எழுதுங்கோவன். எல்லாம் இணைப்பா விடுறியள் 😳
Birundan
Sep 18 2005, 09:08 PM
[quote=kurukaalapoovan]சின்னகுட்டி என்ன செல்லவாறியள் என்டு கொஞ்சம் எழுதுங்கோவன். எல்லாம் இணைப்பா விடுறியள் :oops:[/quote]
வடகோயில்களுக்கும், தென் கோயில்களினதும் கட்டட வேறுபாட்டைக்காட்டும் இணைப்புகள்
kurukaalapoovan
Sep 18 2005, 09:13 PM
அப்படி என்ன வேறுபாடு இருக்கப்போகுது? எல்லாம் நாங்கள் தானே கட்டினது. இல்லாட்டி எங்களைப்பாத்து கட்டி இருப்பங்கள்.
Birundan
Sep 18 2005, 09:15 PM
எதற்கும் ஒருக்கால் பார்பது நல்லதுதானே, சின்னக்குட்டிஅப்பு கஸ்டப்பட்டு உங்களுக்கா போட்டிருக்கிறார்
Thala
Sep 18 2005, 09:15 PM
[quote=narathar]என்னெண்டா அங்கேயும் சைவம் தழைத்தோங்கினது,என்னெண்ட இந்த செய்வாய் தோசமும் ஒரு பார்ப்பனச் சதி பாருங்கோ.ப்ரீத்தி உம்ம யாரோ நல்லா உசுப்பேத்தி விட்டிருக்கவேணும் இல்லாட்டி நீரா நல்லா யாரிட்டயோ எமாந்து போனீர். நீர் சொல்லுறது விடயம் சரி ஆனா உதுக்க தமிழர் வெட்டி விளித்திச்சினம் எண்டுறது தான் பிழை.உந்தப் பெரிய கோவில பல பேரின் உழைப் பால கட்டிப் போட்டு கடசியில கட்டினவைக்கோ இல்லாட்டி இந்த அரசருக்கோ கருவறைக்க போகேலுமே?பெரிய கோவிலக் கட்டி என்ன பிரியோசனம்?அங்க வாழ்ந்த மக்கள் அடிமைகளாகத் தானே இருந்திச்சினம்,இப்பவும் இருக்கினம்.[/quote]

நாரதா கோயில்கள் தமிழ்நாட்டில மட்டும் இல்லை கர்நாடகா..ஆந்திரா.. கேரளா.. மாகாராஸ்ரிராவின் பகுதிகள் கூட ஒரேமாதிரித்தான் இருக்கிறது.. வடக்கே அவர்கள் வைனவ, கௌமார, சாக்த்த, கோவில்களின் அமைப்பு மாறுபடுவது இயற்கை ஆனா அது வேறமாதிரி இல்லை. அங்க என்ன பள்ளிவாசல் மாதிரியா கட்டீருக்கினம்???…
kurukaalapoovan
Sep 18 2005, 09:23 PM
இஸ்லாமிய பள்ளிவாசல்களில் கூட சியா சுன்னி பிரிவினருக்கு இடையிலான கலை கலாச்சாரங்களை வெளிப்படுத்துவதை கவனிக்கலாம். சியா தரப்பினர்கள் ஈரன். அவர்களின் பள்ளிவாசல்கள் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

சுன்னி பிரவினரின் பள்ளிவாசல்கள் எளிமையாக இருக்கும்.

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply