மயிலிட்டியில் மீளக் குடியேறியுள்ள 550 குடும்பங்களுக்கு ரூ.15 கோடி உதவி

மயிலிட்டியில் மீளக் குடியேறியுள்ள 550 குடும்பங்களுக்கு ரூ.15 கோடி உதவி

14.11.2017

மயிலிட்டித் துறைமுகச் சூழலில் அண்மையில் மீளக் குடியமர்ந்த சுமார் 550 குடும்பங்களின் வாழ்வாதார வசதிகளை அடுத்த ஓராண்டுக்குள் நேரடியாக மேம்படுத்தும் திட்டத்துக்கு நோர்வே பத்து லட்சம் அமெரிக்க டொலர்களை (சுமார் 15 கோடி ரூபாவை) உதவியாக வழங்கும்.Image result for Mailaddy village in Jaffna

இதற்கான ஒப்பந்தத்தில் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கை இயக்குநர் ஜோன் சொரன்சென் மற்றும் இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் தோர்ப்ஜோன் கவுஸ்டட்தர் ஆகியோர் ஒப்பமிட்டனர்.

நோர்வேத் தூதரகத்தின் மூத்த  ஆலோசகர் வித்தியா பெரேரா, ஐநா அபிவிருத்தித் திட்டத்தின் நாட்டிற்கான உதவி இயக்குநர் இராஜேந்திர குமார் கணேrராஜா ஆகியோரும் இந் நிகμவில் பங்குபற்றினர்.

About editor 1252 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist

Be the first to comment

Leave a Reply